[{"id":1,"verses":[{"id":1,"translation":"பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்."},{"id":2,"translation":"புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்விற்கே உரியது!"},{"id":3,"translation":"(அவன்,) பேரருளாளன் பேரன்பாளன்;"},{"id":4,"translation":"கூலி (கொடுக்கப்படும் தீர்ப்பு) நாளின் அதிபதி!"},{"id":5,"translation":"(அல்லாஹ்வே!) உன்னையே வணங்குகிறோம். இன்னும் உன்னிடமே உதவி தேடுகிறோம்."},{"id":6,"translation":"(அல்லாஹ்வே!) நீ எங்களை நேரான பாதையில் நேர்வழி நடத்து!"},{"id":7,"translation":"(அது,) நீ அருள்புரிந்தவர்களுடைய பாதை. அவர்கள் (உன்னால்) கோபிக்கப்பட்டவர்களும் அல்லர். வழிகெட்டவர்களும் அல்லர்."}]},{"id":2,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் மீம்."},{"id":2,"translation":"இதுதான் - (ஏக இறைவனாகிய அல்லாஹ், வானவர் ஜிப்ரீல் மூலமாக இறுதி இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது இறக்கிய இறுதி) - வேதமாகும். இதில் அறவே சந்தேகம் இல்லை. (இது,) இறையச்சமுள்ளவர்களுக்கு நேர்வழிகாட்டக் கூடியதாகும்."},{"id":3,"translation":"அவர்கள் (இந்த மார்க்கத்தில் கூறப்பட்ட) மறைவானதை நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் செய்வார்கள்."},{"id":4,"translation":"இன்னும், அவர்கள் உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும் மறுமை (வாழ்க்கை)யை அவர்கள் உறுதி(யாக நம்பிக்கை) கொள்வார்கள்."},{"id":5,"translation":"அவர்கள் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருக்கிறார்கள். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்."},{"id":6,"translation":"நிச்சயமாக எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்."},{"id":7,"translation":"அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களின் செவியின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்களின் பார்வைகள் மீதும் திரையிருக்கிறது. இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) பெரிய தண்டனை உண்டு."},{"id":8,"translation":"இன்னும், “நாங்கள் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை."},{"id":9,"translation":"அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் தங்களைத் தாமே தவிர (பிறரை) ஏமாற்றவில்லை. இன்னும், (இதை) அவர்கள் உணர மாட்டார்கள்."},{"id":10,"translation":"அவர்களின் உள்ளங்களில் ஒரு (சந்தேக) நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் (சந்தேக) நோயை அதிகப்படுத்தினான். இன்னும், அவர்கள் பொய் கூறுபவர்களாக இருக்கின்ற காரணத்தால் துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":11,"translation":"இன்னும், பூமியில் விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) செய்யாதீர்கள் என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “நாங்களெல்லாம் சீர்திருத்தவாதிகள்தான்” என்று கூறுகிறார்கள்."},{"id":12,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் விஷமிகள்.” எனினும், அவர்கள் (அதை) உணர மாட்டார்கள்."},{"id":13,"translation":"இன்னும், “(இந்த தூதரை உண்மையாக பின்பற்றிய) மக்கள் (-நபித்தோழர்கள்) நம்பிக்கை கொண்டது போன்று (நீங்களும்) நம்பிக்கை கொள்ளுங்கள்” என்று அவர்களுக்குக் கூறப்பட்டால், “அறிவீனர்கள் நம்பிக்கை கொண்டது போன்று நாங்கள் நம்பிக்கை கொள்வோமா?” என்று கூறுகிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அவர்கள்தான் அறிவீனர்கள்.” எனினும், அவர்கள் (அதை) அறிய மாட்டார்கள்."},{"id":14,"translation":"இன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களை சந்தித்தால், “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய மனித) ஷைத்தான்களிடம் சென்று (அவர்களுடன்) தனிமையில் இருந்தாலோ, “நிச்சயமாக நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாங்களெல்லாம் (அவர்களை) கேலி செய்பவர்கள்தான்” என்று கூறுகிறார்கள்."},{"id":15,"translation":"அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். இன்னும், அவர்களுடைய அட்டூழியத்தில் அவர்கள் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டுவைக்கிறான்."},{"id":16,"translation":"அவர்கள் எத்தகையோர் என்றால் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டை விலைக்கு வாங்கினார்கள். ஆகவே, அவர்களின் வியாபாரம் இலாபமடையவில்லை. இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை."},{"id":17,"translation":"அவர்களின் உதாரணம் நெருப்பை மூட்டியவர்களின் உதாரணத்தைப் போலாகும். அது, அவர்களைச் சுற்றியுள்ளதை வெளிச்சமாக்கியபோது அல்லாஹ் அவர்களின் ஒளியை போக்கிவிட்டான். இன்னும், அவன் அவர்களை இருள்களில் - அவர்கள் (எதையும்) பார்க்க முடியாதவர்களாக - விட்டுவிட்டான்."},{"id":18,"translation":"(அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள் ஆவார்கள். ஆகவே, அவர்கள் (நேர்வழிக்கு) திரும்ப மாட்டார்கள்."},{"id":19,"translation":"அல்லது, (அவர்களின் உதாரணம்) வானத்திலிருந்து பொழியும் மழையைப் போலாகும். அதில் இருள்களும் இடியும் மின்னலும் இருக்கின்றன. இடி முழக்கங்களால் மரணத்தைப் பயந்து அவர்கள் தங்கள் விரல்களைத் தங்கள் காதுகளில் ஆக்கிக் கொள்கிறார்கள். இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களைச் சூழ்ந்திருக்கிறான்."},{"id":20,"translation":"மின்னல் அவர்களின் பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. அது அவர்களுக்கு வெளிச்சம் தரும்போதெல்லாம் அதில் அவர்கள் நடந்து செல்கிறார்கள். அவர்கள் மீது இருள் சூழ்ந்தால் நின்று விடுகிறார்கள். அல்லாஹ் நாடினால் அவர்களின் செவிப்புலனையும் அவர்களின் பார்வைகளையும் திட்டமாக போக்கிவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":21,"translation":"மக்களே! நீங்கள் (உண்மையான) இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்கு உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தவர்களையும் படைத்த உங்கள் இறைவனை வணங்குங்கள்."},{"id":22,"translation":"அவன் பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் ஆக்கினான். இன்னும், வானத்தி(ன் மேகத்தி)லிருந்து (மழை) நீரை இறக்கினான். ஆக, அதன் மூலம் உங்களுக்கு (பல விதமான) கனிகளிலிருந்து உணவை உற்பத்தி செய்(து கொடுத்)தான். ஆகவே, (இந்த உண்மையை) நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில், அல்லாஹ்விற்கு நிகரானவர்களை (-பொய்யான இணை தெய்வங்களை) ஏற்படுத்தாதீர்கள்."},{"id":23,"translation":"நாம் நம் அடிமை மீது இறக்கிய (வேதத்)தில் (அது இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதில்) நீங்கள் சந்தேகத்தில் இருந்தால், அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ் அல்லாத உங்கள் ஆதரவாளர்களையும் (உங்கள் உதவிக்காக) நீங்கள் அழைத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதை செய்து காட்டுங்கள்)."},{"id":24,"translation":"ஆக, நீங்கள் (அப்படி ஒரு வேதத்தை) உருவாக்கவில்லையென்றால், - நீங்கள் (அப்படி) உருவாக்கவே முடியாது - (நரக) நெருப்பை அஞ்சுங்கள். மக்களும் கற்களும் அதன் எரிபொருள் ஆவார்கள். அது நிராகரிப்பாளர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது."},{"id":25,"translation":"இன்னும் (நபியே!) எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றிலிருந்து (ஏதேனும்) ஒரு கனி உணவாக அவர்களுக்கு வழங்கப்படும்போதெல்லாம் இது, முன்னர் நமக்கு வழங்கப்பட்டதுதான் என்று அவர்கள் கூறுவார்கள். இன்னும் (பார்வைக்கு) ஒரே விதமாகத் தோன்றக்கூடியதாகவே அது (-கனி) அவர்களிடம் கொண்டு வரப்படும். இன்னும், தூய்மையான மனைவிகளும் அவற்றில் அவர்களுக்கு உண்டு. இன்னும், அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”"},{"id":26,"translation":"கொசு இன்னும் (அற்பத்தில்) அதற்கு மேலுள்ளதையும் கூட உதாரணமாக கூறுவதற்கு நிச்சயமாக அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். ஆக, நம்பிக்கையாளர்கள் நிச்சயமாக அது தங்கள் இறைவனிடமிருந்து (கூறப்பட்ட) உண்மைதான் என அறிவார்கள். ஆக, நிராகரிப்பாளர்கள் - அல்லாஹ் இந்த உதாரணத்தின் மூலம் என்ன நாடினான்? என்று - (கேலியாக) கூறுவார்கள். இதன் மூலம் அதிகமானோரை அவன் வழி தவற செய்கிறான். இன்னும், இதன் மூலம் அதிகமானோரை அவன் நேர்வழி நடத்துகிறான். இன்னும், பாவிகளைத் தவிர இதன் மூலம் அவன் வழி தவற செய்ய மாட்டான்."},{"id":27,"translation":"(பாவிகளாகிய) அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை, அது உறுதியாகிவிட்ட பின்னர் முறிக்கிறார்கள். இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என்று அல்லாஹ் ஏவினானோ அதை (-இரத்த உறவை)த் துண்டிக்கிறார்கள். இன்னும், பூமியில் விஷமம் (குழப்பம், கலகம், பாவம்) செய்கிறார்கள். அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்."},{"id":28,"translation":"(நீங்கள்) அல்லாஹ்வை எப்படி நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் இறந்தவர்களாக இருந்தீர்களே! அவன் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்கச் செய்கிறான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். பிறகு, அவனிடமே நீங்கள் (மறுமையில்) திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":29,"translation":"அவன்தான் பூமியிலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பிறகு, வானத்திற்கு மேல் (தனது கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்தான். ஆக, அவற்றை ஏழு வானங்களாக அவன் அமைத்தான். அவன் எல்லாப் பொருளையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":30,"translation":"இன்னும் (நபியே!) “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை படைக்கப்போகிறேன்” என உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக. (அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அதில் விஷமம் செய்து, அதிகமாக இரத்தம் சிந்தக் கூடியவர்களை அதில் நீ படைக்(கப் போ)கிறாயா? நாங்களோ உன்னைப் புகழ்ந்து துதித்து வருகிறோம். இன்னும், உன்னைப் பரிசுத்தப்படுத்துகிறோம்.” (அதற்கு) அவன் கூறினான்: “நீங்கள் அறியாதவற்றை நிச்சயமாக நான் அறிவேன்.”"},{"id":31,"translation":"இன்னும், அவன் எல்லா (பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்பித்தான். பிறகு, அவற்றை அந்த வானவர்களுக்கு முன் சமர்ப்பித்தான். இன்னும், “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள்” என்று கூறினான்."},{"id":32,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நீ மகாத் தூயவன். நீ எங்களுக்குக் கற்பித்தவற்றைத் தவிர எங்களுக்கு அறவே அறிவு இல்லை. நிச்சயமாக நீதான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”"},{"id":33,"translation":"அவன் கூறினான்: “ஆதமே! அவற்றின் பெயர்களை அவர்களுக்கு அறிவிப்பீராக!” ஆக, அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் அறிவித்தபோது, அவன் கூறினான்: “வானங்கள் இன்னும் பூமியில் மறைந்திருப்பவற்றை நிச்சயமாக நான் அறிவேன். இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைத்திருந்ததையும் நான் அறிவேன் என்று உங்களுக்கு நான் கூறவில்லையா?”"},{"id":34,"translation":"இன்னும் (நபியே!) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! ஆக, இப்லீஸைத் தவிர (மற்ற அனைவரும்) சிரம் பணிந்தார்கள். அவன் மறுத்தான். இன்னும், பெருமையடித்தான். இன்னும், நிராகரிப்பாளர்களில் அவன் ஆகிவிட்டான்."},{"id":35,"translation":"இன்னும், நாம் கூறினோம்: “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் தங்கி இருங்கள்! இன்னும் நீங்கள் இருவரும் அதில் நாடிய விதத்தில் தாராளமாக சாப்பிடுங்கள். ஆனால், இந்த மரத்தை நீங்கள் இருவரும் நெருங்காதீர்கள். (அப்படி நெருங்கினால்) அநியாயக்காரர்களில் நீங்கள் இருவரும் ஆகிவிடுவீர்கள்.”"},{"id":36,"translation":"ஆக, ஷைத்தான் அவ்விருவரையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) மாறு செய்ய தூண்டி அதிலிருந்து அகற்றினான். ஆக, அவ்விருவரும் இருந்த (சொர்க்கத்)திலிருந்து அவ்விருவரையும் அவன் வெளியேற்றினான். இன்னும், நாம் கூறினோம்: “நீங்கள் இறங்குங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரியாவீர்கள். இன்னும், உங்களுக்குப் பூமியில் வசிக்குமிடமும் ஒரு காலம் வரை இன்பமும் உண்டு.”"},{"id":37,"translation":"ஆக, ஆதம் (பாவமன்னிப்புத் தேட சில) வாக்கியங்களைத் தம் இறைவனிடமிருந்து பெற்றார். (அவற்றைக் கூறி பாவமன்னிப்புத் தேடினார்.) ஆகவே, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":38,"translation":"நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி நிச்சயமாக வரும். ஆக, எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றினார்களோ அவர்கள் மீது அச்சமில்லை. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்."},{"id":39,"translation":"இன்னும், எவர்கள் நிராகரித்து, நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்.”"},{"id":40,"translation":"இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்கள் மீது நான் அருள் புரிந்த என் அருளை நினைவு கூருங்கள். இன்னும், எனது உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நான் உங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுவேன். இன்னும், என்னையே நீங்கள் பயப்படுங்கள்."},{"id":41,"translation":"இன்னும், உங்களிடமுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாக நான் இறக்கிய (இவ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும் இதை நிராகரிப்பவர்களில் முதலாமவர்களாக நீங்கள் ஆகிவிடாதீர்கள்! இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக (அவற்றில் கூறப்பட்ட சட்டங்களை மறைப்பதற்காக அல்லது, மாற்றுவதற்காக) சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள்! இன்னும், நீங்கள் என்னையே அஞ்சுங்கள்!"},{"id":42,"translation":"இன்னும், உண்மையை பொய்யுடன் கலக்காதீர்கள்! இன்னும், நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் உண்மையை மறைக்காதீர்கள்!"},{"id":43,"translation":"இன்னும், (இஸ்லாமை ஏற்று முஸ்லிம்களுடன்) தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், (தொழுகையில்) குனி(ந்து பணி)பவர்களுடன் (சேர்ந்து) குனி(ந்து பணி)யுங்கள்."},{"id":44,"translation":"நீங்களோ வேதத்தை ஓதுபவர்களாக இருக்கும் நிலையில் உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மக்களுக்கு (மட்டும்) நன்மையை ஏவுகிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?"},{"id":45,"translation":"இன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர."},{"id":46,"translation":"(உள்ளச்சமுடைய) அவர்கள் “நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பார்கள் என்றும் அவனிடமே நிச்சயமாக அவர்கள் திரும்புவார்கள்” என்றும் நம்புவார்கள்."},{"id":47,"translation":"இஸ்ராயீலின் சந்ததிகளே! நான் உங்கள் மீது அருள்புரிந்த என் அருளையும் நிச்சயமாக நான் உலகத்தார்களைவிட உங்களை மேன்மைப்படுத்தியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்."},{"id":48,"translation":"இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்! (அதில்) ஓர் ஆன்மா (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் பலனளிக்காது. இன்னும் அதனிடமிருந்து பரிந்துரை ஏற்கப்படாது. இன்னும் அதனிடமிருந்து மீட்புத் தொகை வாங்கப்படாது. இன்னும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்."},{"id":49,"translation":"இன்னும், ஃபிர்அவ்னுடைய கூட்டத்திடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்களுக்கு தீய தண்டனையால் கடும் சிரமம் (-துன்பம்) தந்தார்கள். உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்தார்கள். இன்னும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழ விட்டார்கள். இன்னும், அதில் - உங்கள் இறைவனிடமிருந்து - ஒரு பெரிய சோதனை இருந்தது."},{"id":50,"translation":"இன்னும், உங்களுக்காக நாம் கடலை பிளந்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, உங்களைக் காப்பாற்றினோம். இன்னும் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரை நாம் மூழ்கடித்தோம்."},{"id":51,"translation":"இன்னும், மூஸாவிற்கு நாம் நாற்பது இரவுகளை வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களோ அநியாயக்காரர்களாக ஆகிவிட்ட நிலையில் - நீங்கள் ஒரு காளைக்கன்றை அவருக்குப் பின்னர் (தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்."},{"id":52,"translation":"பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அதன் பின்னர் உங்களை நாம் மன்னித்தோம்."},{"id":53,"translation":"இன்னும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காக மூஸாவிற்கு வேதத்தையும், பிரித்தறிவிக்கக்கூடிய சட்டத்தையும் நாம் கொடுத்ததை நினைவு கூருங்கள்."},{"id":54,"translation":"இன்னும், மூஸா தன் சமுதாயத்திற்கு, “என் சமுதாயமே! நீங்கள் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டதால் நிச்சயமாக நீங்கள் உங்கள் ஆன்மாக்களுக்கு தீங்கு செய்தீர்கள். எனவே, (பாவத்தை விட்டு விலகி) மன்னிப்புக் கோரி உங்களைப் படைத்தவனின் பக்கம் திரும்புங்கள். இன்னும், உங்க(ளில் காளைக் கன்றை வணங்கியவர்க)ளுடைய உயிர்களைக் கொல்லுங்கள். அது, உங்களைப் படைத்தவனிடம் உங்களுக்குச் சிறந்ததாகும்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆகவே, (நீங்கள் உங்களில் காளைக் கன்றை வணங்கியவர்களைக் கொன்றவுடன் அல்லாஹ்) உங்களை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்."},{"id":55,"translation":"இன்னும் மூஸாவே! “அல்லாஹ்வை நாம் கண்கூடாக காணும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். ஆக, நீங்கள் பார்க்கின்ற நிலையில் பெரும் சப்தம் உங்களைப் பிடித்தது. (நீங்கள் இறந்து விட்டீர்கள்.)"},{"id":56,"translation":"பிறகு, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்கள் மரணத்திற்குப் பின்னர் உங்களை (உயிர்ப்பித்து) நாம் எழுப்பினோம்."},{"id":57,"translation":"இன்னும், உங்கள் மீது மேகத்தை நிழலிடும்படிச் செய்தோம். இன்னும், மன்னு ஸல்வா (உண)வை உங்களுக்கு இறக்கி கொடுத்தோம். நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள். அவர்கள் நமக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், (அவர்கள்) தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்."},{"id":58,"translation":"இன்னும் நாம் (உங்களுக்கு) கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்: நீங்கள் இந்த ஊரில் நுழையுங்கள்! ஆக, அதில் நீங்கள் நாடிய விதத்தில் தாராளமாகப் புசியுங்கள்! (அதன்) வாசலில் தலை குனிந்தவர்களாக நுழையுங்கள்! இன்னும், (எங்கள்) பாவச்சுமை நீங்கட்டும் எனக் கூறுங்கள்! (அப்படி நீங்கள் செய்தால்) உங்கள் குற்றங்களை உங்களுக்கு மன்னிப்போம். இன்னும், நல்லறம் புரிவோருக்கு (நன்மையை மேலும்) அதிகப்படுத்துவோம்."},{"id":59,"translation":"ஆக, (அந்த) அநியாயக்காரர்கள் தங்களுக்கு எது கூறப்பட்டதோ அதை வேறு வார்த்தையாக மாற்றி(க் கூறி)னார்கள். எனவே, அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தால் (அந்த) அநியாயக்காரர்கள் மீது வானத்திலிருந்து நாம் தண்டனையை இறக்கினோம்."},{"id":60,"translation":"இன்னும், மூஸா தனது சமுதாயத்திற்குத் தண்ணீர் தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீர் உம் தடியால் கல்லை அடிப்பீராக!” எனக் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. மக்கள் எல்லாம் தங்களது நீர் அருந்தும் பகுதியை திட்டமாக அறிந்தார்கள். அல்லாஹ் கொடுத்த உணவிலிருந்து புசியுங்கள்! பருகுங்கள். இன்னும், (பூமியில்) விஷமம் (கலகம், குழப்பம், பாவம்) செய்தவர்களாக இருந்த நிலையில் பூமியில் எல்லை மீறி விஷமம் செய்யாதீர்கள்."},{"id":61,"translation":"இன்னும், “மூஸாவே! ஒரே ஓர் உணவை (மட்டும் சாப்பிட்டு வாழ்வதில்) நாங்கள் அறவே பொறுமையாக இருக்க மாட்டோம். ஆகவே, உம் இறைவனிடம் எங்களுக்காக பிரார்த்திப்பீராக. பூமி விளைவிக்கும் அதன் கீரை, அதன் வெள்ளரிக்காய், அதன் கோதுமை, அதன் பருப்பு, அதன் வெங்காயத்தை எங்களுக்காக அவன் வெளியாக்குவான்” என நீங்கள் கூறியதை நினைவு கூருங்கள். “சிறந்ததற்குப் பதிலாகத் தாழ்ந்ததை மாற்றிக் கொள்கிறீர்களா? ஒரு நகரத்தில் இறங்குங்கள். நீங்கள் கேட்டது நிச்சயமாக உங்களுக்கு (அங்கே) உண்டு” என அவர் கூறினார். இன்னும், இழிவும் வீழ்ச்சியும் அவர்கள் மீது விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சார்ந்து விட்டார்கள். அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிப்பவர்களாகவும், நியாயமின்றி நபிமார்களை கொலை செய்பவர்களாகவும் இருந்த காரணத்தினாலாகும். அது, அவர்கள் பாவம் செய்த காரணத்தினாலும், இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறுபவர்களாக இருந்த காரணத்தினாலும் ஆகும்."},{"id":62,"translation":"நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், கிறித்தவர்கள், ஸாபியிகள் - (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு நன்மை செய்தார்களோ, அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடத்தில் உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்."},{"id":63,"translation":"இன்னும், உங்களுக்கு மேல் மலையை உயர்த்தி, உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். “நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்த (தவ்ராத்)தை பலமாகப் (பற்றிப்) பிடியுங்கள். இன்னும், அதில் உள்ளவற்றை நினைவு கூருங்கள்."},{"id":64,"translation":"பிறகு, அதன் பின்னர் புறக்கணித்து விட்டீர்கள். ஆக, உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் அவனின் கருணையும் இல்லையென்றால் நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகியிருப்பீர்கள்."},{"id":65,"translation":"இன்னும், சனிக்கிழமைகளில் உங்களில் (நமது கட்டளைக்கு மாறு செய்து) எல்லை மீறியவர்களை திட்டமாக நீங்கள் அறிவீர்கள். ஆக, சிறுமைப்பட்டவர்களாக குரங்குகளாக ஆகிவிடுங்கள் என அவர்களுக்கு நாம் கூறினோம்."},{"id":66,"translation":"ஆக, அதை (-குரங்குகளாக மாற்றப்பட்டதை) அதற்கு முன்னால் (அவர்கள் செய்த) பாவங்களுக்கும் அதற்கு பின்னால் (வருபவர்கள் செய்கின்ற அது போன்ற) பாவங்களுக்கும் (முன்னுதாரணமான) தண்டனையாகவும், இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் உபதேசமாகவும் ஆக்கினோம்."},{"id":67,"translation":"இன்னும், “ஒரு பசுவை நீங்கள் அறுப்பதற்கு நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகிறான்” என மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதற்கு) அவர்கள், “(மூஸாவே!) நீர் எங்களை கேலியாக எடுத்துக் கொள்கிறீரா?” எனக் கூறினார்கள். “அறிவீனர்களில் நான் ஆகுவதை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்” என அவர் கூறினார்."},{"id":68,"translation":"“எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அ(ந்த மாட்டின் வய)து என்னவென்று எங்களுக்கு அவன் விவரிப்பான்” எனக் கூறினார்கள். “நிச்சயமாக அது கிழடும் அல்லாத, இளங்கன்றும் அல்லாத அதற்கு மத்தியில் நடுத்தரமான ஒரு பசு என நிச்சயமாக அவன் கூறுகிறான். எனவே, நீங்கள் ஏவப்படுவதைச் செய்யுங்கள்” என (மூஸா) கூறினார்."},{"id":69,"translation":"(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அதன் நிறம் என்ன என்று அவன் எங்களுக்கு விவரிப்பான்.” (மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது மஞ்சள் நிறமான பசு. அதன் நிறம் தூய்மையானது (கலப்பற்றது). பார்வையாளர்களை அது மகிழ்விக்கும்” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான்."},{"id":70,"translation":"(மூஸாவின் சமுதாயத்தினர்) கூறினார்கள்: “எங்களுக்காக உம் இறைவனிடம் பிரார்த்திப்பீராக! அது எது (வேலைக்கு பயன்படுத்தப்பட்டதா, இல்லையா)? என எங்களுக்கு அவன் விவரிப்பான். மாடுகள் (பல வகைகளாக இருப்பதால் அவற்றில் எதை நாங்கள் அறுக்க வேண்டும் என்பதில் அவை) எங்களுக்கு குழப்பமாக (சந்தேகமாக) இருக்கின்றன. நிச்சயமாக நாங்கள் அல்லாஹ் நாடினால் திட்டமாக நேர்வழி பெறுவோம்.”"},{"id":71,"translation":"(மூஸா) கூறினார்: “நிச்சயமாக அது நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தப்படாத, (விளை) நிலத்திற்கு நீர் இறைக்காத பசுவாகும். (அது) குறையற்றதாகும். அதில் வடு அறவே இல்லை” என்று அவன் கூறுகிறான்.. “நீர் இப்போதுதான் உண்மையைக் கொண்டு வந்தீர்” என அவர்கள் கூறினார்கள். ஆக, (பல கேள்விகளுக்குப் பின்னர்) அவர்கள் அதை அறுத்தார்கள். ஆனால், (அதை) விரைவாக செய்ய அவர்கள் நெருங்கவில்லை."},{"id":72,"translation":"இன்னும் நீங்கள் ஓர் உயிரைக் கொன்று பிறகு, அ(தை யார் கொன்றார் என்ப)தில் நீங்கள் தர்க்கித்ததை நினைவு கூருங்கள். நீங்கள் மறைத்திருந்ததை அல்லாஹ் வெளியாக்கக் கூடியவன் ஆவான்."},{"id":73,"translation":"ஆக, “அதில் சில (பாகத்)தைக்கொண்டு (இறந்த) அவரை அடியுங்கள்” எனக் கூறினோம். இவ்வாறுதான், இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். இன்னும், நீங்கள் சிந்தித்து புரிவதற்காக தன் அத்தாட்சிகளை அவன் உங்களுக்குக் காண்பிப்பான்."},{"id":74,"translation":"பிறகு, உங்கள் உள்ளங்கள் அதற்குப் பின்னர் இறுகி விட்டன. ஆக, அவை கற்களைப் போல் அல்லது இறுக்கத்தால் (அவற்றைவிட) மிகக் கடினமானவையாக உள்ளன. இன்னும் நிச்சயமாக கற்களில் நதிகள் பீறி(ட்டு ஓ)டக்கூடியவையும் திட்டமாக உண்டு. இன்னும் நிச்சயமாக பிளந்து அதிலிருந்து நீர் வெளியேறக் கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. இன்னும் நிச்சயமாக அல்லாஹ்வுடைய பயத்தால் (மேலிருந்து கிழே உருண்டு) விழக்கூடியதும் திட்டமாக அவற்றில் உண்டு. நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை."},{"id":75,"translation":"உங்களுக்காக அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதை நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? திட்டமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய பேச்சை செவியுறுகிறார்கள். பிறகு, அதை அவர்கள் சிந்தித்து புரிந்த பின்னர் அவர்களோ (தாம் செய்வது பாவம் என்பதை) அறிந்தவர்களாக இருந்த நிலையில் அதை தவறாக மாற்றுகிறார்கள்."},{"id":76,"translation":"இன்னும் அவர்கள் நம்பிக்கையாளர்களைச் சந்தித்தால் “(நாங்களும்) நம்பிக்கை கொள்கிறோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களில் சிலர் (மற்ற) சிலருடன் தனி(மையில் சந்தி)த்து விட்டால் (அந்த சிலர் தங்களை சந்தித்தவர்களிடம்) கூறுகிறார்கள்: “உங்கள் இறைவனுக்கு முன் அதைக் கொண்டு அவர்கள் உங்களிடம் தர்க்கிப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு தெரிவித்ததை அவர்களுக்கு நீங்கள் அறிவிக்கிறீர்களா? நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”"},{"id":77,"translation":"அவர்கள் இரகசியமாகப் பேசுவதையும் வெளிப்படையாக பேசுவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை (அவர்கள்) அறிய மாட்டார்களா?"},{"id":78,"translation":"இன்னும், எழுதப் படிக்கத் தெரியாதவர்களும் அவர்களில் உண்டு. வீண் நம்பிக்கைகளைத் தவிர வேதத்(தில் உள்ள)தை அவர்கள் அறியமாட்டார்கள். இன்னும் அவர்கள் (வீணாகச்) சந்தேகிக்கிறார்களே தவிர (உறுதியான கல்வியறிவு அவர்ளுக்கு) இல்லை."},{"id":79,"translation":"ஆகவே, தங்கள் கரங்களால் (கற்பனையாக) புத்தகத்தை எழுதி, பிறகு அதைக் கொண்டு சொற்பக் கிரயத்தை வாங்குவதற்காக, “இது அல்லாஹ்விடமிருந்து (வந்த வேதமாகும்)” என்று கூறுபவர்களுக்குக் கேடுதான்! ஆக, அவர்களின் கரங்கள் எதை எழுதியதோ அதனால் அவர்களுக்குக் கேடுதான்! இன்னும், அவர்கள் (இதன் மூலம்) எதை சம்பாதிக்கிறார்களோ அதனாலும் அவர்களுக்குக் கேடுதான்!"},{"id":80,"translation":"இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “எண்ணப்பட்ட (சில) நாட்களைத் தவிர, நரக நெருப்பு எங்களை அறவே தீண்டாது.” (அதற்கு நபியே!) நீர் கூறுவீராக: “அல்லாஹ்விடம் (அவ்வாறு ஏதேனும்) ஓர் உடன்படிக்கையை (நீங்கள்) ஏற்படுத்திக் கொண்டீர்களா? (அப்படியெனில்) அல்லாஹ் தன் உறுதிமொழியை அறவே மாற்ற மாட்டான். அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுகிறீர்களா?"},{"id":81,"translation":"அவ்வாறன்று! எவர்கள் தீமையைச் சம்பாதித்து, இன்னும் அவர்களுடைய பாவம் அவர்களைச் சூழ்ந்து கொண்டதோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":82,"translation":"இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்காரியங்களைச் செய்தார்களோ அவர்கள் சொர்க்கவாசிகள் ஆவார்கள்! அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":83,"translation":"இன்னும், (யூதர்களே!) “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை (-உதவி உபகாரம்) செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்” என்று (உங்கள் மூதாதைகளாகிய) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்ற அனைவரும் இந்த ஒப்பந்தத்திலிருந்து) திரும்பிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் (எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை) புறக்கணிப்பவர்கள் ஆவீர்கள்."},{"id":84,"translation":"இன்னும், நீங்கள் உங்கள் (மக்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மக்க)ளை வெளியேற்றாதீர்கள் என்று நாம் உங்களின் உறுதிமொழியை வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களே சாட்சிகளாக இருக்கும் நிலையில் (அதை) ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்தினீர்கள்."},{"id":85,"translation":"(இவ்வாறு ஒப்பந்தத்தை நீங்கள் உறுதிப்படுத்திய) பிறகு, நீங்கள் உங்(கள் மக்)களைக் கொல்கிறீர்கள். இன்னும், உங்களில் ஒரு பிரிவினரை அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றுகிறீர்கள். அவர்களுக்கு எதிராக பாவமாகவும் அநியாயமாகவும் உதவுகிறீர்கள். ஆனால், அவர்கள் கைதிகளாக உங்களிடம் வந்தால் மீட்புத் தொகை கொடுத்து அவர்களை மீட்கிறீர்கள். அவர்களை (அவர்களின் இல்லங்களிலிருந்து) வெளியேற்றுவதோ உங்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நீங்கள் வேதத்தில் சிலவற்றை நம்பிக்கை கொண்டு, சிலவற்றை நிராகரிக்கிறீர்களா? ஆக, உங்களில் அ(த்தகைய காரியத்)தைச் செய்பவர்களின் கூலி இவ்வுலக வாழ்க்கையில் இழிவைத் தவிர (வேறு) இல்லை. மறுமை நாளிலோ, (அவர்கள்) மிகக் கடுமையான தண்டனையின் பக்கம் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை."},{"id":86,"translation":"அவர்கள் எத்தகையோர் என்றால் மறுமைக்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை வாங்கினார்கள். எனவே, அவர்களை விட்டு (நரக) தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்."},{"id":87,"translation":"திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். இன்னும், அவருக்குப் பின்னர் தொடர்ச்சியாக(ப் பல) தூதர்களை அனுப்பினோம். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவிற்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், அவரை (ஜிப்ரீல் எனும்) பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு பலப்படுத்தினோம். ஆக, (நம்) தூதர் எவரும் உங்களிடம் உங்கள் மனங்கள் விரும்பாததை கொண்டு வந்தபோதெல்லாம் நீங்கள் பெருமையடித்(து மறுத்)தீர்களல்லவா? ஆக, (அத்தூதர்களில்) சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள். இன்னும், சிலரைக் கொலை செய்தீர்கள்."},{"id":88,"translation":"இன்னும், “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று (பரிகாசமாக) அவர்கள் கூறினார்கள். மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்தான். ஆக, மிகக் குறைவாகவே அவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்."},{"id":89,"translation":"இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதம் அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்கு வந்தபோது, - அவர்களோ, நிராகரித்தவர்களுக்கு எதிராக (இந்த வேதத்தின் பொருட்டால் அல்லாஹ்விடம்) வெற்றியை தேடுபவர்களாக (இதற்கு) முன்னர் இருந்தார்கள். ஆக, அவர்கள் அறிந்திருந்த (இந்த வேதமான)து அவர்களிடம் (இப்போது) வந்தபோது அதை (அவர்கள்) நிராகரித்தார்கள். ஆக, நிராகரிப்பவர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகுக!"},{"id":90,"translation":"அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியவர் மீது (வேதம் எனும்) தன் அருளை இறக்குவதைப் பற்றி பொறாமைப்பட்டு, அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை அவர்கள் நிராகரித்து, தங்களை எதற்குப் பகரமாக விற்றார்களோ அது (மிகக்) கெட்டதாக இருக்கிறது. (தவ்ராத்தை செயல்படுத்தாததால் அவர்கள் மீதிருந்த அல்லாஹ்வின்) கோபத்திற்கு மேல் (குர்ஆனையும் இந்த நபியையும் நிராகரித்து மேலும் அல்லாஹ்வின்) கோபத்திற்குரியவர்களாக அவர்கள் ஆகிவிட்டார்கள். இன்னும், (முஹம்மத் நபியை) நிராகரிப்பவர்களுக்கு இழிவு தரக்கூடிய தண்டனை உண்டு."},{"id":91,"translation":"இன்னும், “அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் (நபிமார்கள்) மீது இறக்கப்பட்டதை (மட்டுமே) நாங்கள் நம்பிக்கை கொள்வோம்” எனக் கூறுகிறார்கள். அதற்குப் பின்னால் இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை நிராகரிக்கிறார்கள். அதுவோ அவர்களிடமுள்ள (தவ்ராத்)தை உண்மைப்படுத்தக்கூடிய உண்மையா(ன வேதமா)கும். (நபியே!) கூறுவீராக: “(உங்கள் வேதத்தை உண்மையாகவே) நம்பிக்கை கொண்டவர்களாக நீங்கள் இருந்தால் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அல்லாஹ்வுடைய தூதர்களை (இதற்கு) முன்னர் எதற்காகக் கொலை செய்தீர்கள்?”"},{"id":92,"translation":"இன்னும், திட்டவட்டமாக மூஸா தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் வந்தார். பிறகு, அவர் (தனது இறைவன் குறிப்பிட்ட நேரத்தில் அவனை சந்திக்க) சென்றதற்குப் பின்னர் - நீங்களோ அநியாயக்காரர்களாக இருந்த நிலையில் - ஒரு காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டீர்கள்."},{"id":93,"translation":"இன்னும், உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, “உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்” என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் காளைக் கன்றுடைய மோகம் (- அதை வணங்க வேண்டுமென்ற ஆசை) மிகைத்து விட்டது. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது” என்று (நபியே!) கூறுவீராக!"},{"id":94,"translation":"(நபியே!) கூறுவீராக: “(யூதர்களே!) அல்லாஹ்விடம் (சொர்க்கம் என்ற) மறுமை வீடு (மற்ற) மக்களுக்கு அன்றி (விசேஷமாக) உங்களுக்கு மட்டும் என்று இருந்தால், நீங்கள் (உங்கள் கொள்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்.”"},{"id":95,"translation":"ஆனால், அவர்களது கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணத்தால் அதை அவர்கள் ஒருபோதும் அறவே விரும்பவே மாட்டார்கள். இன்னும் அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":96,"translation":"இன்னும் (நபியே! பொதுவாக எல்லா) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (உலக) வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை (-யூதர்களை) நிச்சயமாக நீர் காண்பீர்! அவர்களில் ஒருவர், “அவர் ஆயிரம் ஆண்டு(கள்) உயிரோடு இருக்க வேண்டுமே?” என்று விரும்புவார். அவர் (நீண்ட காலம்) வயது நீட்டிக்கப்படுவது (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து அவரைத் தப்ப வைக்கக்கூடியதில்லை. அல்லாஹ், அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":97,"translation":"(நபியே!) கூறுவீராக: “(உங்களில்) யார் ஜிப்ரீலுக்கு எதிரியாக ஆகிவிட்டார்? ஆக, நிச்சயமாக (ஜிப்ரீலாகிய) அவர் அல்லாஹ்வின் அனுமதியுடன் அதை - அதற்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் - உமது உள்ளத்தின் மீது இறக்கினார்.”"},{"id":98,"translation":"எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய வானவர்களுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகா(யீ)லுக்கும் எதிரிகளாக ஆகிவிட்டார்களோ (அவர்கள் நிராகரிப்பாளர்களாக ஆகிவிட்டார்கள்.) ஆக, நிராகரிப்பாளர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எதிரி ஆவான்."},{"id":99,"translation":"இன்னும், (நபியே!) திட்டவட்டமாக தெளிவான வசனங்களை நாம் உமக்கு இறக்கினோம். ஆனால், அவற்றை நிராகரிக்க மாட்டார்கள், பாவிகளைத் தவிர."},{"id":100,"translation":"இன்னும், அவர்கள் (தங்கள் நபியிடம்) ஓர் உடன்படிக்கை செய்த போதெல்லாம் அவர்களில் ஒரு கூட்டம் அதை (நிறைவேற்றாது) தூக்கி எறியவில்லையா? மாறாக, அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":101,"translation":"இன்னும், அவர்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்தபோது, வேதம் கொடுக்கப்பட்டவர்களில் ஒரு கூட்டம் அல்லாஹ்வுடைய (இந்த) வேதத்தை (நம்பிக்கை கொள்ளாமல் அதை) - அவர்கள் அறியாதது போல் - தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தார்கள்."},{"id":102,"translation":"இன்னும், (யூதர்கள்) ஸுலைமானுடைய ஆட்சியில் ஷைத்தான்கள் ஓதியவற்றைப் பின்பற்றினார்கள். ஸுலைமான் நிராகரிக்கவில்லை. எனினும் ஷைத்தான்கள்தான் நிராகரித்தார்கள். (அவர்கள்) மனிதர்களுக்கு சூனியத்தையும் பாபிலோனில் ஹாரூத், மாரூத் (என்ற இரு) வானவர்களுக்கு இறக்கப்பட்ட (மந்திரத்)தையும் கற்றுக்கொடுத்தார்கள். அவ்விருவானவர்களோ, “நாங்களெல்லாம் ஒரு சோதனையாவோம். ஆகவே. (இதைக் கற்று) நீ நிராகரிக்காதே!” என்று கூறும் வரை (அதை) (யார்) ஒருவருக்கும் கற்றுக் கொடுக்கவில்லை. ஆக, அவர்கள் ஆணுக்கும் அவன் மனைவிக்கும் இடையில் எதன் மூலம் பிரிவினை உண்டாக்குவார்களோ அதை அவ்விரு(வான)வரிடமிருந்து கற்றார்கள். ஆனால், அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர அதன் மூலம் அவர்கள் (யார்) ஒருவருக்கும் தீங்கிழைப்பவர்களாக இல்லை. இன்னும், அவர்களுக்குப் பலனளிக்காததை, அவர்களுக்குத் தீங்கிழைக்கக்கூடிய (மந்திரத்)தை அவர்கள் கற்கிறார்கள். இன்னும், அதை எவர் விலைக்கு வாங்கினாரோ அவருக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதை திட்டவட்டமாக (அவர்கள்) அறிந்திருந்தார்கள். அவர்கள் தங்களை எதற்கு பகரமாக விற்றார்களோ அது திட்டமாக கெட்டதாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!"},{"id":103,"translation":"இன்னும், நிச்சயமாக அவர்கள் (இவ்வேதத்தை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி (சூனியத்தை விட்டு விலகி) இருந்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) கிடைக்கும் சன்மானம் திட்டமாக மிகச் சிறந்ததாகும். (இதை) அவர்கள் அறிந்திருக்க வேண்டுமே!"},{"id":104,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் (நபியை நோக்கி) “ராஇனா” என்று கூறாதீர்கள். மாறாக, “உன்ளுர்னா” என்று கூறுங்கள். (நபியின் கூற்றை கவனமாக) செவியுறுங்கள். நிராகரிப்பாளர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு."},{"id":105,"translation":"(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்கள் இன்னும் இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் (தங்களிடம் உள்ளதை விட) சிறந்தது எதுவும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்படுவதை விரும்ப மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் - தான் நாடுகிறவர்களுக்குத் தனது கருணையை - விசேஷமாக வழங்குகிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்."},{"id":106,"translation":"(நபியே!) நாம் ஒரு வசனத்தை மாற்றினாலும் அல்லது அதை நாம் மறக்கடித்தாலும் அதைவிடச் சிறந்ததை அல்லது அது போன்றதைக் கொண்டு வருவோம். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை நீர் அறியவில்லையா?"},{"id":107,"translation":"(நபியே!) நிச்சயமாக அல்லாஹ், அவனுக்கே வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி உரியது என்பதை நீர் அறியவில்லையா? இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பொறுப்பாளருமில்லை; உதவியாளருமில்லை."},{"id":108,"translation":"(இதற்கு) முன்னர் மூஸாவிடம் கேள்வி கேட்கப்பட்டது போல் உங்கள் தூதரிடம் நீங்கள் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? எவர் (இந்த தூதரையும் அவர் கூறுவதையும்) நம்பிக்கை கொள்வதற்கு பதிலாக (அதை) நிராகரிப்பதை எடுத்துக் கொள்வாரோ அவர் திட்டமாக நேர்வழியிலிருந்து வழிதவறிவிட்டார்."},{"id":109,"translation":"வேதக்காரர்களில் அதிகமானவர்கள் - அவர்களுக்கு உண்மை (இன்னதெனத்) தெளிவானதற்கு பின்னர், அவர்களுடைய உள்ளங்களில் (உங்கள் மீது) உள்ள பொறாமையினால், - “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்கு பின்னர் உங்களை நிராகரிப்பாளர்களாக மாற்ற வேண்டுமே” என்று விரும்புகிறார்கள். ஆக, அல்லாஹ் தனது கட்டளையைக் கொண்டுவருகின்ற வரை (அவர்களை) மன்னித்து விடுங்கள்! இன்னும், புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":110,"translation":"இன்னும், நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள். இன்னும், நீங்கள் நன்மையில் எதை உங்களுக்காக முற்படுத்துவீர்களோ அல்லாஹ்விடம் (மறுமையில்) அதைப் பெறுவீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":111,"translation":"இன்னும், “யார் யூதர்களாக, அல்லது கிறித்தவர்களாக இருக்கிறார்களோ அவர்களைத் தவிர (எவரும்) சொர்க்கத்தில் நுழையவே மாட்டார்” என (அவர்கள்) கூறினார்கள். அவை அவர்களுடைய வீண் நம்பிக்கைகளாகும்! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்.”"},{"id":112,"translation":"அவ்வாறன்று! எவர், தான் நன்மை செய்பவராக இருந்த நிலையில் தனது முகத்தை (முற்றிலும்) அல்லாஹ்விற்குப் பணியவைப்பாரோ, அவருக்கு அவருடைய கூலி அவருடைய இறைவனிடம் (நிறைவாக) உண்டு. இன்னும், அவர்கள் மீது பயமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்."},{"id":113,"translation":"இன்னும், கிறித்தவர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை என யூதர்கள் கூறினார்கள். இன்னும் யூதர்கள் எ(ந்த மார்க்கத்)திலுமில்லை எனக் கிறித்தவர்கள் கூறினார்கள். அவர்களோ (ஒரே) வேதத்தையே ஓதுகிறார்கள். இவ்வாறே இவர்களுடைய கூற்றைப் போன்று (வேதத்தை) அறியாதவர்கள் (யூதர்களும் கிறித்தவர்களும் பின்பற்றுவது மார்க்கமே இல்லை எனக்) கூறினார்கள். ஆக, இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதில் மறுமை நாளன்று அல்லாஹ் இவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான்."},{"id":114,"translation":"இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அவனுடைய பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவை பாழாகுவதில் முயற்சி செய்பவனை விட மகா அநியாயக்காரன் யார்? அவர்களோ பயந்தவர்களாகவே தவிர அவற்றில் நுழைய அவர்களுக்கு அனுமதி இருக்கவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. இன்னும் அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு."},{"id":115,"translation":"இன்னும், கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே உரியன. ஆக, நீங்கள் எங்கெல்லாம் (முகத்தைத்) திருப்பினாலும் அங்கு அல்லாஹ்வுடைய முகம் இருக்கிறது! நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":116,"translation":"அல்லாஹ் “சந்ததியை எடுத்துக் கொண்டான்” என்று கூறுகிறார்கள். - அவனோ மிகப் பரிசுத்தமானவன். - மாறாக, வானங்களிலும் பூமியிலும் உள்ளவை (அனைத்தும்) அவனுக்குரியனவே! எல்லோரும் அவனுக்கு பணிந்தவர்களே."},{"id":117,"translation":"(அவன்) வானங்கள் இன்னும் பூமியை புதுமையாக படைத்தவன். அவன் ஒரு காரியத்தை (செய்வதற்கு) முடிவு செய்தால், அதற்கு அவன் கூறுவதெல்லாம் “ஆகு!” என்றுதான். உடனே, அது ஆகிவிடும்."},{"id":118,"translation":"இன்னும், (வேதத்தை) அறியாதவர்கள், “அல்லாஹ் எங்களுடன் பேச வேண்டாமா? அல்லது, ஒரு வசனம் எங்களுக்கு வரவேண்டாமா?” என்று கூறினார்கள். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் இவர்களின் கூற்றைப் போன்றே கூறினார்கள். இவர்களுடைய உள்ளங்கள் (அனைத்தும்) ஒன்றுக்கொன்று ஒப்பாகி (ஒரே மாதிரி) இருக்கின்றன. (உண்மையை) உறுதியாக நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு வசனங்களை திட்டமாக நாம் தெளிவாக்கி இருக்கிறோம்."},{"id":119,"translation":"(நபியே!) நிச்சயமாக நாம் உம்மை உண்மையான மார்க்கத்துடன் (அதை ஏற்பவர்களுக்கு) நற்செய்தி கூறுபவராகவும், (அதை நிராகரிப்பவர்களை) எச்சரிப்பவராகவும் அனுப்பினோம். இன்னும் நரகவாசிகளைப் பற்றி (நீர்) விசாரிக்கப்படமாட்டீர்."},{"id":120,"translation":"(நபியே!) யூதர்களும் கிறித்தவர்களும் அவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்(றி அவர்களைப் போன்று நீர் மா)றும் வரை உம்மைப் பற்றி அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். “அல்லாஹ் உடைய நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேர்வழியாகும். (ஆகவே, அதையே நான் பின்பற்றுவேன்)” எனக் கூறுவீராக. கல்வி ஞானம் உமக்கு வந்த பின்னர் அவர்களுடைய மன விருப்பங்களை நீர் பின்பற்றினால் அல்லாஹ்விடம் உமக்கு பொறுப்பாளருமில்லை, உதவியாளருமில்லை."},{"id":121,"translation":"(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓது(வதுடன் அதன் பிரகாரம் அவர்கள் செயல்படவும் செய்)கிறார்கள். அவர்கள்தான் அதை (உண்மையாக) நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்."},{"id":122,"translation":"இஸ்ராயீலின் சந்ததிகளே! உங்களுக்கு நான் அருள்புரிந்த என் அருளையும், நிச்சயமாக (அக்கால) உலக மக்களைவிட நான் உங்களை மேன்மையாக்கியதையும் நீங்கள் நினைவு கூருங்கள்."},{"id":123,"translation":"இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள்; (அந்நாளில்) ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவிற்கு எதையும் பலனளிக்காது. இன்னும், அதனிடமிருந்து மீட்புத் தொகை (நஷ்ட ஈடு) ஏதும் ஏற்கப்படாது. இன்னும், பரிந்துரை அதற்குப் பலனளிக்காது. இன்னும், அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்."},{"id":124,"translation":"இன்னும், இப்ராஹீமை அவருடைய இறைவன் (பல) கட்டளைகளைக் கொண்டு சோதித்ததை நினைவு கூர்வாயாக. ஆக, அவற்றை அவர் முழுமையாக நிறைவேற்றினார். (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நான் உம்மை மனிதர்களுக்கு (நேர்வழி காட்டுகிற) தலைவராக ஆக்குகிறேன்.” அவர் கூறினார்: “என் சந்ததிகளிலிருந்தும் (ஆக்கு).” (அதற்கு) அல்லாஹ் கூறினான்: “அநியாயக்காரர்களுக்கு எனது (இந்த) உடன்படிக்கை நிறைவேறாது.”"},{"id":125,"translation":"இன்னும், திரும்பத் திரும்ப வர விரும்பும் இடமாகவும், பாதுகாப்பா(ன இடமா)கவும் கஅபாவை மனிதர்களுக்காக நாம் ஆக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். (அதில்) இப்ராஹீம் நின்ற இடத்தில் தொழுமிடத்தை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும், “(அதை) தவாஃப் சுற்றுபவர்களுக்கும், (அல்லாஹ்வை வணங்க அதில்) தங்கி இருப்பவர்களுக்கும், (தொழுகையில்) குனிபவர்களுக்கும், சிரம் பணிபவர்களுக்கும் என் வீட்டைச் சுத்தமாக வைத்திருங்கள்” என்று இப்ராஹீமுக்கும் இஸ்மாயீலுக்கும் நாம் கட்டளையிட்டோம்."},{"id":126,"translation":"இன்னும், இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வாயாக: “என் இறைவா! (மக்காவாகிய) இதைப் பாதுகாப்பளிக்கக்கூடிய ஒரு நகரமாக ஆக்கு! இன்னும் அங்கு வசிப்பவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டாரோ அவருக்குக் கனி(வகை)களிலிருந்து உணவளி!” (அதற்கு அல்லாஹ்) கூறினான்: “எவர் நிராகரிப்பாரோ அவரை சிறிது (காலம்) சுகமனுபவிக்க வைப்பேன். பிறகு, நரக தண்டனையின் பக்கம் (செல்லும்படி) அவரை நிர்ப்பந்திப்பேன். இன்னும் அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்.”"},{"id":127,"translation":"இன்னும், இப்ராஹீமும் இஸ்மாயீலும் இறை இல்லத்தின் அஸ்திவாரங்களை உயர்த்திய சமயத்தை நினைவு கூர்வாயாக! (அவ்விருவரும் பிரார்த்தனை செய்தார்கள்:) “எங்கள் இறைவா! எங்களிடமிருந்து ஏற்றுக்கொள். நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன்; மிக அறிந்தவன்.”"},{"id":128,"translation":"“எங்கள் இறைவா! எங்களிருவரையும் உனக்கு முழுமையாக பணிந்தவர்களாகவும் எங்கள் சந்ததியிலிருந்தும் உனக்கு முழுமையாக பணிந்து நடக்கின்ற சமுதாயத்தை ஆக்கு! இன்னும், எங்கள் ஹஜ் கிரியைகளின் இடங்களை(யும் அங்கு நாங்கள் செய்ய வேண்டிய அமல்களையும்) எங்களுக்குக் காண்பித்துக் கொடு! இன்னும், எங்களை மன்னித்துவிடு! நிச்சயமாக நீதான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன்.”"},{"id":129,"translation":"இன்னும், “எங்கள் இறைவா! (என் சந்ததிகளாகிய) அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு அனுப்பு! அவர் உனது வேத வசனங்களை அவர்களுக்கு ஓதி காண்பிப்பார். இன்னும், வேதத்தையும் ஞானத்தையும் அவர்களுக்குக் கற்பித்து கொடுப்பார். இன்னும், (தீய குணங்களில் இருந்து) அவர்களைப் பரிசுத்தப்படுத்துவார். நிச்சயமாக நீதான் மிகைத்தவன்; மகா ஞானவான்.”"},{"id":130,"translation":"பெரிய மடையனாக இருப்பவனைத் தவிர இப்ராஹீமுடைய (இஸ்லாம்) மார்க்கத்தை (வேறு) யார் வெறுப்பார்? திட்டவட்டமாக நாம் அவரை இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம். இன்னும், மறுமையில் நிச்சயமாக அவர் நல்லோரில் இருப்பார்."},{"id":131,"translation":"(இப்ராஹீமை நோக்கி) அவருடைய இறைவன், “நீ எனக்குப் பணிந்து (முஸ்லிமாகி)விடு!” என்று அவருக்குக் கூறியபோது, அவர் கூறினார்: “அகிலத்தார்களின் இறைவனுக்கு நான் பணிந்து (முஸ்லிமாகி) விட்டேன்.”"},{"id":132,"translation":"இன்னும், இப்ராஹீமும், யஅகூபும் (அகிலங்களின் இறைவனுக்கு பணிந்து முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற) அ(ந்த உபதேசத்)தையே தமது பிள்ளைகளுக்கு உபதேசித்தார்கள். “என் பிள்ளைகளே! நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்காக (இஸ்லாமிய) மார்க்கத்தை தேர்ந்தெடுத்தான். ஆகவே, ஒருபோதும் நீங்கள் மரணித்து விடாதீர்கள், நீங்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையில் தவிர.”"},{"id":133,"translation":"(யூதர்களே!) யஅகூபுக்கு மரணம் வந்தபோது (நீங்கள் அங்கு) சாட்சிகளாக இருந்தீர்களா? அவர் தமது பிள்ளைகளை நோக்கி, “எனக்குப் பின்னர் யாரை வணங்குவீர்கள்?” எனக் கூறியபோது (அவர்கள்) கூறினார்கள்: “நாம் உமது கடவுளை, இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகிய உமது மூதாதைகளின் கடவுளை - ஒரே ஒரு கடவுளை - வணங்குவோம். நாங்கள் அவனுக்கு - முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.”"},{"id":134,"translation":"அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்"},{"id":135,"translation":"(முஸ்லிம்களை நோக்கி), “நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.”"},{"id":136,"translation":"(நம்பிக்கையாளர்களே!) கூறுங்கள்: “அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களுடைய) சந்ததிகளுக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவு(க்கு)ம், ஈஸாவு(க்கு)ம் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவர் நபியல்ல என்று) பிரி(த்துக் கூறி அவரை நிராகரி)க்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.”"},{"id":137,"translation":"ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் எப்படி நம்பிக்கை கொண்டீர்களோ அது போன்றே அவர்கள் நம்பிக்கை கொண்டால் திட்டமாக அவர்கள் நேர்வழி பெறுவார்கள். அவர்கள் புறக்கணித்தால் அவர்களெல்லாம் வீண் முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடமிருந்து அல்லாஹ் உம்மை பாதுகாப்பான். அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":138,"translation":"(நீங்கள் கூறுவீராக:) “அல்லாஹ்வுடைய மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அல்லாஹ்வை விட மார்க்கத்தால் மிக அழகானவன் யார்? நாங்கள் அவனையே வணங்கக் கூடியவர்கள் ஆவோம்.”"},{"id":139,"translation":"(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் எங்களிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனோ எங்கள் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான்! எங்கள் செயல்கள் (உடைய பலன்) எங்களுக்கு கிடைக்கும். இன்னும் உங்கள் செயல்கள் (உடைய பலன்) உங்களுக்கு கிடைக்கும். நாங்கள் வணக்க வழிபாடுகளை (கலப்பின்றி) அவனுக்கு மட்டும் தூய்மையாக செய்வோம்.”"},{"id":140,"translation":"“நிச்சயமாக இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் (ஆகிய இவர்கள்) இன்னும் (இவர்களுடைய) சந்ததிகள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக இருந்தார்கள்” என நீங்கள் கூறுகிறீர்களா? (நபியே!) நீர் கூறுவீராக: “(இதை) நீங்கள் மிக அறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? (இதைப் பற்றி) தன்னிடத்திலிருக்கும் அல்லாஹ்வின் சாட்சியத்தை மறைத்தவரை விட மகா அநியாயக்காரர் யார்? நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்காதவனாக இல்லை.”"},{"id":141,"translation":"அவர்கள் சென்றுவிட்ட சமுதாயம் ஆவார்கள். இன்னும், அவர்கள் செய்த (செயல்களின் கூலியான)து அவர்களுக்கு கிடைக்கும். இன்னும், நீங்கள் செய்த (செயல்களின் கூலியான)து உங்களுக்கு கிடைக்கும். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் விசாரிக்கப்படமாட்டீர்கள்."},{"id":142,"translation":"“அவர்கள் எந்த கிப்லாவை நோக்கி (தொழுபவர்களாக) இருந்தார்களோ அவர்களின் அந்த கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பியது எது?’’ என (முஸ்லிம்களைப் பற்றி) மக்களில் உள்ள அறிவீனர்கள் கூறுவார்கள். (அதற்கு நபியே! நீர்) கூறுவீராக: “கிழக்கும் மேற்கும் அல்லாஹ்விற்குரியனவே! அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு நேர்வழி காட்டுகிறான்.’’"},{"id":143,"translation":"இன்னும், (நம்பிக்கையாளர்களே!) அவ்வாறுதான், நீங்கள் மக்களுக்கு சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும், உங்களுக்கு தூதர் சாட்சியாளராக இருப்பதற்காகவும் (சிறந்த, நீதமான) நடுநிலைச் சமுதாயமாக உங்களை ஆக்கினோம். தமது குதிங்கால்கள் மீது திரும்பிவிடுவோரிலிருந்து தூதரைப் பின்பற்றுபவர் யார் என்பதை நாம் அறிவதற்காகவே தவிர நீர் (தொழுகையில் முன்னோக்குபவராக) இருந்த (பைத்துல் முகத்தஸ் ஆகிய முதல்) கிப்லாவை (விட்டு உம்மை திருப்பியதை) நாம் ஆக்கவில்லை. அல்லாஹ் எவர்களை நேர்வழி நடத்தினானோ அவர்கள் மீதே தவிர (மற்றவர்களுக்கு) நிச்சயமாக அது பெரிதாகவே (-பாரமாகவே) இருந்தது. உங்கள் நம்பிக்கையை (-முன்னர் நீங்கள் தொழுத தொழுகைகளை) அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மிக இரக்கமுடையவன், மகா கருணையாளன்."},{"id":144,"translation":"(நபியே!) உம் முகம் வானத்தின் பக்கம் பல முறை திரும்புவதை திட்டமாக நாம் காண்கிறோம். ஆகவே, நீர் பிரியப்படுகின்ற ஒரு கிப்லாவிற்கு உம்மை நிச்சயமாக நாம் திருப்புவோம். எனவே, நீர் (தொழுகைக்கு நின்றால்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும் (முஸ்லிம்களே!) நீங்கள் எங்கிருந்தாலும் (தொழும்போது) அதன் பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். நிச்சயமாக வேதம் கொடுக்கப்பட்டவர்கள், - “நிச்சயமாக இது தங்கள் இறைவனிடமிருந்து (வந்துள்ள) உண்மைதான்’’ என - திட்டமாக அறிவார்கள். இன்னும் அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை."},{"id":145,"translation":"இன்னும், (நபியே!) வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் எல்லா அத்தாட்சிகளையும் நீர் கொண்டு வந்தாலும் அவர்கள் (தமது வழிபாட்டில்) உமது கிப்லாவைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களின் கிப்லாவைப் பின்பற்றுபவராக இல்லை. அவர்களிலும் சிலர் சிலரின் கிப்லாவைப் பின்பற்றுபவர்களாக இல்லை. உமக்குக் கல்வி ஞானம் வந்த பின்னர் அவர்களுடைய ஆசைகளை நீர் பின்பற்றினால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்."},{"id":146,"translation":"நாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவதைப் போன்று அதை (-மக்காவில் உள்ள அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் எல்லோருடைய கிப்லா என்பதை) அறிவார்கள். இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர், அவர்கள் அறிந்த நிலையிலேயே (அல்மஸ்ஜிதுல் ஹராம்தான் கிப்லா என்ற) உண்மையை மறைக்கிறார்கள்."},{"id":147,"translation":"இந்த உண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். எனவே, நீர் சந்தேகிப்பவர்களில் ஆகிவிட வேண்டாம்."},{"id":148,"translation":"ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவர் அதை முன்னோக்கக் கூடியவர் ஆவார். ஆக, நீங்கள் நன்மைகளில் (ஒருவரை ஒருவர்) முந்திச் செல்லுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":149,"translation":"இன்னும் (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக! நிச்சயமாக இதுவோ உம் இறைவனிடமிருந்து (வந்த) உண்மையாகும். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை."},{"id":150,"translation":"இன்னும், (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையில்) ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்’ பக்கம் உம் முகத்தைத் திருப்புவீராக. இன்னும், (நம்பிக்கையாளர்களே!) - அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர (மற்ற) மக்களுக்கு உங்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இருக்கக்கூடாது என்பதற்காகவும், என் அருட்கொடையை நான் உங்கள் மீது முழுமைப்படுத்துவதற்காகவும், நீங்கள் நேர்வழி பெறுவதற்காகவும் - நீங்கள் எங்கிருந்தாலும் ‘அல் மஸ்ஜிதுல் ஹராம்‘ பக்கம் உங்கள் முகங்களைத் திருப்புங்கள். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள்! என்னைப் பயப்படுங்கள்."},{"id":151,"translation":"ஒரு தூதரை உங்களுக்கு உங்களிலிருந்து நாம் அனுப்பியதற்காக(வும் என்னைப் பயப்படுங்கள்). அவர் உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிக்கிறார்; உங்களைத் தூய்மைப்படுத்துகிறார்; உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார்; நீங்கள் அறிந்திருக்காதவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறார்."},{"id":152,"translation":"ஆகவே, என்னை நினைவு கூருங்கள்; நான் உங்களை நினைவு கூருவேன். இன்னும் எனக்கு நன்றி செலுத்துங்கள்!; எனக்கு மாறு செய்யாதீர்கள்!"},{"id":153,"translation":"நம்பிக்கையாளர்களே! பொறுமை இன்னும் தொழுகையின் மூலம் உதவி கோருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்."},{"id":154,"translation":"இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் (எதிரிகளால்) கொல்லப்படுபவர்களை இறந்தவர்கள் எனக் கூறாதீர்கள். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள். எனினும், (அதை) நீங்கள் அறியமாட்டீர்கள்."},{"id":155,"translation":"இன்னும், பயத்தினாலும் பசியினாலும், செல்வங்கள், உயிர்கள், விளைச்சல்களுடைய (சிறிது) நஷ்டத்தினாலும் நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே!) பொறுமையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!"},{"id":156,"translation":"அவர்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “நிச்சயமாக நாம் அல்லாஹ்விற்காகவே இருக்கிறோம். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்புகிறவர்கள்’’ எனக் கூறுவார்கள்."},{"id":157,"translation":"அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்புகளும் கருணையும் அவர்கள் மீது இறங்குகின்றன. இன்னும், அவர்கள்தான் நேர்வழிபெற்றவர்கள் ஆவார்கள்."},{"id":158,"translation":"நிச்சயமாக ஸஃபா, மர்வா (மலைகள்) அல்லாஹ்வின் அடையாளங்களில் உள்ளவை ஆகும். ஆகவே, கஅபாவை ஹஜ் அல்லது உம்ரா செய்பவர் அவ்விரண்டையும் சுற்றி வருவது (அவருக்கு நன்மையாகும். அது) அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் நன்மையை உபரியாகச் செய்வாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":159,"translation":"தெளிவான சான்றுகள் இன்னும் நேர்வழியை நாம் இறக்கி, அவற்றை மக்களுக்காக வேதத்தில் நாம் தெளிவுபடுத்திய பின்னர் நிச்சயமாக எவர்கள் அவற்றை மறைக்கிறார்களோ அவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள்."},{"id":160,"translation":"எவர்கள் (தங்கள் தவறுகளிலிருந்து திருந்தினார்களோ), மன்னிப்புக்கோரினார்களோ, (தங்களை) சீர்திருத்திக் கொண்டார்களோ, (தாங்கள் மறைத்த உண்மைகளை மக்களுக்கு) தெளிவுபடுத்தினார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுடைய தவ்பாவை நான் அங்கீகரிப்பேன். நான்தான் தவ்பாவை (-பாவ மன்னிப்புத் தேடியவரின் பிரார்த்தனையை) அதிகம் அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவேன்."},{"id":161,"translation":"நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அவர்கள் நிராகரித்தவர்களாகவே இறந்தார்களோ, அவர்கள் மீது அல்லாஹ் உடைய சாபமும், வானவர்கள்; இன்னும், மக்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும்."},{"id":162,"translation":"அ(ந்த சாபத்)தில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள். (மறுமையில்) அவர்களுக்கு தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்."},{"id":163,"translation":"இன்னும், (மனிதர்களே! நீங்கள் உண்மையில் வணங்கத் தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். பேரருளாளன், பேரன்பாளனாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை."},{"id":164,"translation":"நிச்சயமாக வானங்கள் இன்னும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறுவதிலும், மனிதர்களுக்கு பலன் தருபவற்றை (ஏற்றி)க் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்திலிருந்து அல்லாஹ் (மழை) நீரை இறக்கி, அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிப்பதிலும், கால்நடைகளை எல்லாம் பூமியில் பரப்பியதிலும், காற்றை(ப் பலகோணங்களில்) திருப்பிவிடுவதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையில் கட்டுப்படுத்தப்பட்ட மேகத்திலும் திட்டமாக (பல) அத்தாட்சிகள் சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு இருக்கின்றன."},{"id":165,"translation":"மக்களில் அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு) சமமானவர்களை (-கற்பனை தெய்வங்களை) ஏற்படுத்தியவர்களும் இருக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது அன்பு வைக்கப்படுவது போல் அவர்கள் அவற்றின் மீது அன்பு வைக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் (உண்மையான இறைவனாகிய) அல்லாஹ்வின் மீதுதான் அதிகம் அன்பு வைப்பார்கள். அநியாயக்காரர்கள் (நரக) தண்டனையை (நேருக்கு நேர் கண்ணால்) காணும்போது, (தங்களது இறுதி முடிவு என்ன என்பதை) பார்த்துவிட்டால், “அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; (தாம் வணங்கிய தெய்வங்கள் சக்தி அற்றவை;) தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; (நம்மை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் காப்பாற்ற முடியாது)” என்பதை அவர்கள் புரிந்து கொள்வார்கள்."},{"id":166,"translation":"(மதத் தலைவர்களும் அவர்களை பின்பற்றுபவர்களும் மறுமையில் நரக) தண்டனையைக் கண்கூடாக பார்த்த சமயத்தில் பின்பற்றப்பட்ட (மதத் தலை)வர்களோ (தங்களை) பின்பற்றியவர்களை விட்டு விலகிவிடும்போது; (அவர்கள் எல்லோரும் தங்கள் வெற்றிக்காக நம்பியிருந்த) காரணிகள் (-சிலைகளும் அவற்றுக்கு செய்த வழிபாடுகளும்) அவர்களை விட்டு துண்டித்து (பயனற்று போய்)விடும்போது (“அனைத்து ஆற்றலும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியது; தாம் வணங்கிய தெய்வங்களுக்கு அறவே சக்தி இல்லை; தண்டிப்பதில் அல்லாஹ் கடினமானவன்; அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து நமது தெய்வங்களால் நம்மை காப்பாற்ற முடியாது” என்பதை அவர்கள் எல்லோரும் திட்டமாக புரிந்து கொள்வார்கள்)."},{"id":167,"translation":"இன்னும், பின்பற்றியவர்கள் (அப்போது) கூறுவார்கள்: “(உலகிற்கு ஒருமுறை) திரும்பச் செல்வது நமக்கு சாத்தியமானால் அவர்கள் எங்களைவிட்டு (இப்போது) விலகியதுபோல் நாங்களும் அவர்களைவிட்டு விலகிவிடுவோம்.” இவ்வாறே, அவர்களின் செயல்களை அவர்கள் மீது கடும் துயரங்களாக அமையும்படி அல்லாஹ் அவர்களுக்கு காண்பிப்பான். இன்னும், அவர்கள் (நரக) நெருப்பிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டார்கள்."},{"id":168,"translation":"மக்களே! பூமியிலுள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதையே உண்ணுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரி ஆவான்."},{"id":169,"translation":"அவன் உங்களுக்கு ஏவுவதெல்லாம் தீமையையும், மானக்கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக) கூறுவதையும்தான்."},{"id":170,"translation":"இன்னும், அல்லாஹ் இறக்கியதைப் பின்பற்றுங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால், “(நாங்கள் அதைப் பின்பற்ற மாட்டோம்.) மாறாக, நாங்கள் எங்கள் மூதாதைகளை எதில் (-எந்தக் கொள்கையில்) இருக்கக் கண்டோமோ அதையே பின்பற்றுவோம்” எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாதவர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தாலுமா (அவர்களை இவர்கள் பின்பற்றுவார்கள்)?"},{"id":171,"translation":"நிராகரிப்பாளர்களின் உதாரணம் அழைப்பையும் சப்தத்தையும் தவிர (அறவே எதையும்) கேட்காததைக் கூவி அழைப்பவரின் உதாரணத்தைப் போன்றாகும். (அவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே, அவர்கள் (சத்தியத்தை சிந்தித்து) புரியமாட்டார்கள்."},{"id":172,"translation":"நம்பிக்கையாளர்களே! நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றில் இருந்து உண்ணுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள், அவனையே (நீங்கள்) வணங்குபவர்களாக இருந்தால்."},{"id":173,"translation":"அவன் உங்களுக்கு (ஆகுமானதல்ல என்று) தடுத்ததெல்லாம் (தாமாக) செத்த பிராணிகளும் இரத்தமும், பன்றியின் மாமிசமும், (அறுக்கப்படும்போது) அல்லாஹ் அல்லாதவரின் பெயர் கூறப்பட்டதும்தான். ஆக, எவர் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக இருக்கும் நிலையில் (தடுக்கப்பட்டதை உண்பதற்கு) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ அவர் மீது (அதிலிருந்து அவசியமான அளவு உண்பது) அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":174,"translation":"நிச்சயமாக எவர்கள் வேதத்தில் அல்லாஹ் இறக்கியதை மறைக்கிறார்களோ; இன்னும், அதற்குப் பகரமாக சொற்பத் தொகையை வாங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர (எதையும்) சாப்பிடுவதில்லை. இன்னும், மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும், அவர்களைப் பரிசுத்தமாக்க மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":175,"translation":"அவர்கள் எத்தகையோர் என்றால் (அல்லாஹ்வின்) நேர்வழிக்குப் பதிலாக (ஷைத்தானின்) வழிகேட்டையும், மன்னிப்புக்குப் பதிலாகத் தண்டனையையும் விலைக்கு வாங்கியவர்கள். நரக நெருப்பின் மீது அவர்கள் எவ்வளவு துணிவாக இருக்கிறார்கள்?"},{"id":176,"translation":"அ(வர்கள் நரகத்தில் தண்டனை பெறுவ)து, ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் உண்மையுடன் வேதத்தை இறக்கினான். (ஆனால், அவர்கள் அதில் முரண்பட்டார்கள்.) நிச்சயமாக (இந்த) வேதத்(தை நம்பிக்கை கொள்ளாமல் அ)தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (முஸ்லிம்களுடன்) வெகு தூரமான பகைமையில்தான் இருக்கிறார்கள்."},{"id":177,"translation":"நன்மை என்பது மேற்கு, கிழக்கு நோக்கி உங்கள் முகங்களை நீங்கள் திருப்புவது அல்ல. எனினும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும், வானவர்களையும், வேதத்தையும், நபிமார்களையும் நம்பிக்கை கொண்டவர்கள்; இன்னும் செல்வத்தை அதன் விருப்பம் (தமக்கு) இருப்பதுடன் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசகர்களுக்கும், அடிமைகளுக்கும் கொடுத்தவர்கள்; தொழுகையை நிலைநிறுத்தியவர்கள்; ஸகாத்தைக் கொடுத்தவர்கள்; மேலும், உடன்படிக்கை செய்தால் தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றுபவர்கள்; கொடிய வறுமையிலும், நோயிலும், போர் சமயத்திலும் பொறுமையாக இருப்பவர்கள் ஆகிய இவர்களுடைய செயல்கள்தான் நன்மை ஆகும். அவர்கள் எத்தகையோர் என்றால் (தங்கள் நம்பிக்கையை) உண்மைப்படுத்தினார்கள். இன்னும், அவர்கள்தான் அல்லாஹ்வை அஞ்சக் கூடியவர்கள் ஆவார்கள்!"},{"id":178,"translation":"நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (கொல்லப்பட்ட) சுதந்திரமானவனுக்குப் பதிலாக (கொலையாளியான) சுதந்திரமானவனை, (கொல்லப்பட்ட) அடிமைக்குப் பதிலாக (கொலையாளியான) அடிமையை, (கொல்லப்பட்ட) பெண்ணுக்குப் பதிலாக (கொலையாளியான) பெண்ணைத்தான் (பழிக்குப் பழி கொல்ல வேண்டும்). எவருக்கு, தன் சகோதரனிடமிருந்து (பரிகாரத் தொகையில்) ஏதேனும் மன்னிக்கப்பட்டால், கண்ணியமான முறையில் (அதைப்) பின்பற்றுதல் வேண்டும். நன்றி அறிதலுடன் (மீதமுண்டான பரிகாரத் தொகையை) அவரிடம் நிறைவேற்றுதல் வேண்டும். இது, உங்கள் இறைவனிடமிருந்து (வந்த) சலுகையும் அருளுமாகும். எவர் அதற்குப் பின்னர் எல்லை மீறுவாரோ அவருக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனை உண்டு."},{"id":179,"translation":"இன்னும் பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு. நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயப்பட வேண்டுமே!"},{"id":180,"translation":"உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், (மேலும்) அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அப்போது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நல்ல முறையில் (நீங்கள்) மரண சாசனம் கூறுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அவசியமாகும்."},{"id":181,"translation":"ஆக, எவர் (மரண சாசனம் கூறுபவரிடமிருந்து) அ(வரது மரண சாசனத்)தை செவியுற்றதற்குப் பின்னர், அதை மாற்றுவாரோ அதன் பாவமெல்லாம் மாற்றுகிறவர்கள் மீதே (சாரும்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்."},{"id":182,"translation":"ஆக, எவர் மரண சாசனம் கூறுபவரிடத்தில் அநீதி அல்லது தவறைப் பயந்தாரோ; இன்னும், அவர்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்தாரோ (அவர் செய்ததில்) அவர் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":183,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது - உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று."},{"id":184,"translation":"(ஓர் ஆண்டில் ரமழான் மாதம் என்று) எண்ணப்பட்ட நாட்களில் (நோன்பிருத்தல் கடமையாகும்). ஆக, உங்களில் யார் நோயாளியாக இருப்பாரோ, அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (விடுபட்ட நோன்புகளை) மற்ற நாட்களில் கணக்கிட்டு நோன்பு வைக்கவும். அ(ந்த மாதத்தில் நோன்பு நோற்பதான)து யாருக்கு சிரமமாக இருக்குமோ அவர்கள் கட்டாயம் ஓர் ஏழைக்கு (ஒரு வேளை) உணவளிப்பது (நோன்பை விட்டதற்கு) பரிகாரம் ஆகும். ஆக, எவர் நன்மையான அமலை விருப்பமாக செய்வாரோ அது அவருக்கு நன்மையாகும். ஆனால், நீங்கள் (நோன்பின் நன்மையை) அறிந்தவர்களாக இருந்தால் (சிரமத்தை தாங்கிக் கொண்டு) நோன்பு நோற்பதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் (என்பதை அறிந்து கொள்வீர்கள்)."},{"id":185,"translation":"ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும். இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்)!"},{"id":186,"translation":"இன்னும், என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன்” (எனக் கூறுவீராக!). ஆக, அவர்கள் நேர்வழி பெறுவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளி(த்து கீழ்ப்படிந்து நட)ப்பார்களாக! இன்னும், அவர்கள் என்னையே நம்பிக்கை கொள்வார்களாக!"},{"id":187,"translation":"நோன்புடைய இரவில் நீங்கள் உங்கள் மனைவிகளுடன் உடலுறவு கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடை ஆவர். நீங்கள் அவர்களுக்கு ஆடை ஆவீர்கள். நிச்சயமாக நீங்கள் உங்களை ஏமாற்றுகிறீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் தவ்பாவை அவன் அங்கீகரித்தான். இன்னும், உங்களை விட்டும் முற்றிலும் தவறை போக்கி (மன்னித்து) விட்டான். ஆகவே, இப்போது நீங்கள் அதிகாலையில் கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் உங்களுக்குத் தெளிவாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்கலாம்; அல்லாஹ் உங்களுக்கு விதித்த (குழந்தை பாக்கியத்)தை நீங்கள் தேடலாம்; உண்ணலாம்; பருகலாம். (அதன்) பிறகு, இரவு வரை நோன்பை முழுமையாக்குங்கள். நீங்கள் மஸ்ஜிதுகளில் (இஃதிகாஃப்) தங்கி இருக்கும்போது அவர்களுடன் (-மனைவிகளுடன்) உடலுறவு வைக்காதீர்கள். இவை அல்லாஹ்வுடைய சட்டங்களாகும். ஆகவே, அவற்றை நெருங்காதீர்கள். அல்லாஹ் மனிதர்களுக்கு - அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக - தன் வசனங்களை இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்."},{"id":188,"translation":"இன்னும், உங்களுக்கு மத்தியில் உங்கள் செல்வங்களைத் தவறாக (பாவமாக) உண்ணாதீர்கள் (அனுபவிக்காதீர்கள்). நீங்கள் (செய்வது பாவம் என்று) அறிந்திருந்தும் மக்களுடைய செல்வங்களில் ஒரு பகுதியை தவறாக நீங்கள் உண்பதற்காக (-அனுபவிப்பதற்காக) அவற்றை அதிகாரிகளிடம் (லஞ்சமாக) கொடுக்காதீர்கள்."},{"id":189,"translation":"(நபியே!) அவர்கள் பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவை மக்களு(டைய கொடுக்கல் வாங்கலு)க்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை ஆகும். இன்னும், நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வாசல்கள் வழியாக வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை என்பது யார் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறாரோ அதுதான். ஆகவே, நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்கள் வழியாக வாருங்கள். இன்னும் நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!”"},{"id":190,"translation":"இன்னும் (மக்காவாசிகளில்) உங்களிடம் போர் புரிவோரிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் போர் புரியுங்கள். ஆனால், வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை."},{"id":191,"translation":"இன்னும் (உங்களுடன் போர் செய்யும் மக்காவாசிகளாகிய) அவர்களை நீங்கள் பார்த்த இடத்தில் கொல்லுங்கள். உங்களை அவர்கள் (மக்காவிலிருந்து) வெளியேற்றியவாறே நீங்களும் அவர்களை (மக்காவிலிருந்து) வெளியேற்றுங்கள். இணைவைத்தல் கொலையை விட மிகக் கடுமையானது. (மக்காவில்) புனித மஸ்ஜிதுக்கு அருகில் அவர்களிடம் போர் புரியாதீர்கள், அதில் அவர்கள், உங்களிடம் போர்புரியும் வரை. ஆக, அவர்கள் உங்களிடம் போரிட்டால் அப்போது நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இப்படித்தான் (உங்களிடம் சண்டை செய்கிற அந்த) நிராகரிப்பவர்களின் கூலி இருக்கும்."},{"id":192,"translation":"ஆக, அவர்கள் (உங்களிடம் சண்டை செய்யாமல்) விலகிக் கொண்டால், (நீங்களும் அவர்களை விட்டுவிடுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":193,"translation":"இன்னும், (மக்காவில்) இணைவைத்தல் நீங்கும் வரை, வணக்க வழிபாடு அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போர் புரியுங்கள். ஆக, அவர்கள் (உங்களிடம் சண்டை செய்யாமல்) விலகிக் கொண்டால் அப்போது அறவே தாக்குதல் (நிகழ்த்துவது) இல்லை, அநியாயக்காரர்கள் மீதே தவிர."},{"id":194,"translation":"புனித மாதம் புனித மாதத்திற்கு பதிலாகும். புனிதங்கள் (பாதுகாக்கப்பட வேண்டும். அவை பாழ்படுத்தப்பட்டால்) பழிதீர்க்கப்பட வேண்டும். ஆகவே, யார் உங்களை தாக்குவாரோ, அவர் உங்களை தாக்கியது போன்றே (நீங்களும்) அவரை தாக்குங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":195,"translation":"இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் தர்மம் புரியுங்கள்; உங்கள் கரங்களை அழிவில் போடாதீர்கள்; நல்லறம் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":196,"translation":"இன்னும், நீங்கள் ஹஜ்ஜையும் உம்ராவையும் அல்லாஹ்வுக்காக முழுமையாக்குங்கள். நீங்கள் (மக்காவிற்கு யாத்திரை செல்லும்போது வழியில்) தடுக்கப்பட்டால் (உங்களுக்கு) இலகுவாகக் கிடைக்கின்ற ஒரு பிராணியை பலி கொடுங்கள். அந்த பலிப் பிராணி தன் இடத்தை அடையும் வரை உங்கள் தலை(முடி)களை சிரைக்காதீர்கள். ஆக, உங்களில் எவர் நோயாளியாக இருக்கிறாரோ அல்லது அவருடைய தலையில் அவருக்கு (பேன் அல்லது காயம் போன்ற சிரமம் தரும்) இடையூறு இருந்து, அதனால் அவர் தனது தலையை சிரைத்துவிடுவாரோ அவர் நோன்பு வைத்து; அல்லது, தர்மம் கொடுத்து; அல்லது, பலிப் பிராணியை அறுத்து பரிகாரம் செய்யவும். நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் எவர் உம்ரா செய்துவிட்டு (இஹ்ராமிலிருந்து வெளியேறி) ஹஜ்ஜு(க்கும் இஹ்ராம் கட்டுகின்ற) வரை சுகம் அனுபவிப்பாரோ (அவர் தனக்கு) இலகுவான பலிப் பிராணியை அறுக்கவும். எவர் (பலிப் பிராணியை) பெறவில்லையோ, அவர் ஹஜ்ஜில் மூன்று நாட்களும் நீங்கள் (ஹஜ் முடித்து) திரும்பிய பின் ஏழு நாட்களும் நோன்பு வைக்க வேண்டும். அவை முழுமையான பத்து நாட்களாகும். (ஹஜ் தமத்துஃ செய்கின்ற அனுமதியாகிய) அது எவருடைய குடும்பம் அல் மஸ்ஜிதுல் ஹராமில் (-மக்காவில்) வசிப்பவர்களாக இருக்கவில்லையோ அவருக்குத்தான். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":197,"translation":"ஹஜ்ஜு(க்காக இஹ்ராம் கட்ட வேண்டிய காலம் ஷவ்வால், துல் கஅதா, துல் ஹஜ்ஜுடைய முதல் பத்து நாட்கள் ஆகிய) அறியப்பட்ட மாதங்களாகும். ஆகவே, அவற்றில் எவர் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கினாரோ அவர் ஹஜ்ஜில் (இஹ்ராமில் இருக்கும்போது) தாம்பத்திய உறவு அறவே செய்யக் கூடாது; தீச்சொல் பேசுதல் அறவே கூடாது; தர்க்கம் செய்வது அறவே கூடாது. நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிவான். (பயணத்திற்கு தேவையான உணவு தானியம், பொருளாதாரம் போன்ற) கட்டுச் சாதத்தை (உங்களுடன்) எடுத்துக் கொள்ளுங்கள். ஆக, நிச்சயமாகக் கட்டுச் சாதத்தில் மிகச் சிறந்தது தக்வா - அல்லாஹ்வின் அச்சம்தான். இன்னும். நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் என்னை அஞ்சுங்கள்."},{"id":198,"translation":"நீங்கள் (ஹஜ்ஜில் வியாபாரம் செய்து) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்கள் மீது குற்றமில்லை. ஆக, நீங்கள் அரஃபாவிலிருந்து புறப்பட்டால் ‘அல் மஷ்அருல் ஹராம்’ அருகில் (முஸ்தலிஃபாவில் தங்கி) அல்லாஹ்வை நினைவு கூருங்கள். இன்னும், அவன் உங்களை நேர்வழி நடத்தியதற்காக (தக்பீர் கூறி) அவனை நினைவு கூருங்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் நீங்கள் வழி தவறியவர்களில் இருந்தீர்கள்."},{"id":199,"translation":"பிறகு, (அரஃபாவில் தங்கிவிட்டு) மக்கள் புறப்படுகிற (அந்த) இடத்திலிருந்து புறப்படுங்கள். இன்னும் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":200,"translation":"ஆக, நீங்கள் உங்கள் ஹஜ் கிரியைகளை நிறைவேற்றிவிட்டால், நீங்கள் (மினாவில் தங்கி இருக்கும் நாட்களில் இஸ்லாமிற்கு முன்) உங்கள் மூதாதை(களின் பெயர்)களை (சப்தமிட்டுப் பெருமையாக) நினைவு கூர்ந்ததைப் போல அல்லது (அதைவிட) அதிகமாக அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, “எங்கள் இறைவா! எங்களுக்கு (வேண்டியவற்றை எல்லாம்) இம்மையில் தா!’’ என்று கூறுபவரும் மக்களில் உண்டு. ஆனால், அவருக்கு மறுமையில் யாதொரு நற்பாக்கியமுமில்லை."},{"id":201,"translation":"இன்னும், “எங்கள் இறைவா! எங்களுக்கு இம்மையிலும் அழகியதைத் தா! மறுமையிலும் அழகியதைத் தா! (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்தும் எங்களைப் பாதுகாத்துக்கொள்’’ என்று கூறுபவரும் அவர்களில் உண்டு."},{"id":202,"translation":"அவர்கள் செய்த(ஹஜ் வணக்கத்)திலிருந்து அவர்களுக்கு (நன்மையில் பெரும்) பங்கு உண்டு. அல்லாஹ் (அடியார்களின் அமல்களை) கணக்கிடுவதில் (இன்னும், அவர்களை விசாரணை செய்வதில்) மிக விரைவானவன் ஆவான்."},{"id":203,"translation":"இன்னும், எண்ணப்பட்ட (, , ஆகிய) நாள்களில் அல்லாஹ்வை நினைவு கூருங்கள். ஆக, எவர் இரண்டு நாள்களில் (ஊர் திரும்ப வேண்டும் என்று) அவசரப்பட்டாரோ அவர் மீது அறவே குற்றமில்லை. இன்னும், எவர் (மூன்றாவது நாளும் மினாவில் தங்குவதற்காக) தாமதித்தாரோ அவர் மீதும் அறவே குற்றமில்லை. (அதாவது,) அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு (அவர்கள் இந்த இரண்டில் எதை செய்தாலும் அவர்கள் மீது குற்றமில்லை). அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் (மறுமையில்) அவனிடமே ஒன்று திரட்டப்படுவீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":204,"translation":"இன்னும், (நபியே!) இவ்வுலக வாழ்க்கையைப் பற்றி எவனுடைய பேச்சு உம்மை வியக்க வைக்குமோ அ(த்தகைய)வனும் மக்களில் இருக்கிறான். அவன், தன் உள்ளத்தில் உள்ளவற்றிற்கு (பொய்யாக) அல்லாஹ்வை சாட்சியாக்குவான். அவனோ வாதிப்பதில் மிகக் கடுமையான பேச்சாளன் (மிகவும் பொய்யாகவும் முரட்டுத்தனமாகவும் வாதிடுபவன்.)"},{"id":205,"translation":"இன்னும், அவன் (உம்மை விட்டு) திரும்பிச் சென்றால் பூமியில் அதில் விஷமம் (கலகம், பாவம்) செய்வதற்கும், விளைநிலம் இன்னும் கால்நடைகளை அழிப்பதற்கும் (பெரும் முயற்சி எடுத்து) வேலை செய்கிறான். அல்லாஹ், விஷமத்தை விரும்பமாட்டான்."},{"id":206,"translation":"இன்னும், “அல்லாஹ்வை அஞ்சிக்கொள்’’ என அவனுக்குக் கூறப்பட்டால், (அவனது) கர்வம் அவனை (மேலும்) குற்றம் செய்ய தூண்டுகிறது. ஆகவே, அவனுக்கு (தண்டனையால்) நரகமே போதும். அது மிக கெட்ட தங்குமிடமாகும்."},{"id":207,"translation":"இன்னும், அல்லாஹ்வின் பொருத்தத்தைத் தேடி, (தன் செல்வத்தைக் கொடுத்து) தன் உயிரை (சொர்க்கத்திற்கு பதிலாக அல்லாஹ்விடம்) விற்பவரும் மக்களில் உண்டு. அல்லாஹ் (இத்தகைய) அடியார்கள் மீது மிக இரக்கமுடையவன் ஆவான்."},{"id":208,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாமில் முழுமையாக நுழையுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளை (-அவன் உங்களை அழைக்கும் அவனது பாதைகளை)ப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்."},{"id":209,"translation":"ஆக, தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்த பின்னர் நீங்கள் (இஸ்லாமை விட்டு விலகி) வழிதவறி (வழிகேட்டில்) சென்றால் (அல்லாஹ்விற்கு எவ்வித பாதிப்பும் இல்லை.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":210,"translation":"அல்லாஹ் மேகங்களின் நிழல்களில் அவர்களிடம் வருவதையும் இன்னும் வானவர்கள் வருவதையும் (அவர்களின்) காரியம் முடிக்கப்படுவதையும் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? காரியங்கள் எல்லாம் (முடிவில்) அல்லாஹ்வின் பக்கமே திருப்பப்படும்."},{"id":211,"translation":"(நபியே!) எத்தனை தெளிவான அத்தாட்சிகளை அவர்களுக்குக் கொடுத்தோம் என இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக! எவர் அல்லாஹ்வின் அருட்கொடையை அது தம்மிடம் வந்த பின்னர் மாற்றுவாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரைத்) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்."},{"id":212,"translation":"நிராகரிப்பவர்களுக்கு உலக வாழ்க்கை அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்னும், அவர்கள் நம்பிக்கையாளர்களைப் பரிகசிக்கிறார்கள். அல்லாஹ்வை அஞ்சியவர்கள் மறுமை நாளில் அவர்களுக்கு மேலாக (சொர்க்கத்தில்) இருப்பார்கள். அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு கணக்கின்றி (தன் அருள்களை) வழங்குவான்."},{"id":213,"translation":"(ஆரம்ப காலத்தில்) மக்கள் ஒரே ஒரு சமுதாயமாக (-ஒரே ஒரு கொள்கையுடையவர்களாக) இருந்தனர். (பிறகு, தங்களுக்கு மத்தியில் வேறுபட்டார்கள்.) ஆக, அல்லாஹ் நபிமார்களை நற்செய்தியாளர்களாகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாகவும் (தொடர்ந்து) அனுப்பி வைத்தான். (இஸ்ரவேலருடைய) மக்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு செய்த விஷயங்களில் (இறை வேதம்) தீர்ப்பளிப்பதற்காக அவர்களுடன் உண்மையான (தவ்ராத்) வேதத்தையும் இறக்கினான். தெளிவான சான்றுகள் தங்களுக்கு வந்த பின்னர் தங்களுக்கு மத்தியில் (போட்டி) பொறாமையின் காரணமாக, (தவ்ராத்) வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அ(ந்த வேதத்)தில் தங்களுக்குள் கருத்து வேறுபட்டனர். ஆகவே, அவர்கள் கருத்து வேறுபட்ட உண்மையின் பக்கம் நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் தனது கட்டளையினால் நேர்வழி காட்டினான். அல்லாஹ், தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான்."},{"id":214,"translation":"உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு (வந்த சோதனைகள்) போன்று உங்களுக்கு (சோதனைகள்) வராத நிலையில் நீங்கள் சொர்க்கத்தில் (இலகுவாக) நுழையலாமென்று நினைத்துக் கொண்டீர்களா? அவர்களுக்கு கொடிய வறுமையும் நோயும் ஏற்பட்டன. இன்னும், “அல்லாஹ்வுடைய உதவி எப்போது (வரும்)?‘’ என்று தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் கூறும் வரை அவர்கள் (எதிரிகளால்) அச்சுறுத்தப்பட்டார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “நிச்சயமாக அல்லாஹ்வுடைய உதவி சமீபமானதாகும்.’’"},{"id":215,"translation":"“எதை அவர்கள் தர்மம் புரியவேண்டும்?’’ என்று உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “செல்வத்திலிருந்து நீங்கள் எதைத் தர்மம் செய்தாலும் அது பெற்றோர், உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்களுக்கு செய்யப்பட வேண்டும். நீங்கள் நன்மை எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறி(ந்து உங்களுக்கு அதற்கேற்ப கூலி கொடுப்)பவன் ஆவான்.’’"},{"id":216,"translation":"போர், -அதுவோ உங்களுக்குச் சிரமமானதாக இருக்கும் நிலையில் - உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. நீங்கள் ஒன்றை வெறுக்கலாம், அதுவோ உங்களுக்குச் சிறந்ததாகும். நீங்கள் ஒன்றை விரும்பலாம், அதுவோ உங்களுக்கு தீமையானதாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்."},{"id":217,"translation":"(இந்த) புனித மாதம், அதில் போர் புரிவது பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதில் போர் புரிவது (பாவத்தால்) பெரியதாகும். அல்லாஹ்வுடைய பாதை இன்னும் அல்மஸ்ஜிதுல் ஹராமை விட்டுத் தடுப்பதும், அவனை (-அல்லாஹ்வை) நிராகரிப்பதும், அதில் வசிப்போரை அதிலிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் (புனித மாதத்தில் போர் செய்வதை விட பாவத்தால்) மிகப்பெரியதாகும். (அல்லாஹ்விற்கு) இணைவைப்பது(ம் அவனை நிராகரிப்பதும் பாவத்தால்) கொலையை விட மிகப் பெரியதாகும்.” அவர்களால் முடியுமேயானால் உங்களை உங்கள் மார்க்கத்தை விட்டு அவர்கள் மாற்றிவிடும் வரை உங்களிடம் ஓயாது போர் புரிந்து கொண்டே இருப்பார்கள். உங்களில் எவர்கள் தமது மார்க்கத்தை விட்டு மாறி - அவர்களோ நிராகரிப்பாளர்களாகவே - இறந்துவிட்டால், அவர்களின் (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":218,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ, இன்னும் எவர்கள் ஹிஜ்ரத் செய்து, அல்லாஹ்வுடைய பாதையில் ஜிஹாது செய்தார்களோ அவர்கள் அல்லாஹ்வுடைய கருணையை ஆசை வைக்கிறார்கள். இன்னும் அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":219,"translation":"மது இன்னும் சூதாட்டத்தைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அவ்விரண்டிலும் பெரும் பாவமும், மக்களுக்கு(ச் சில) பலன்களும் உள்ளன. அவ்விரண்டின் பாவம் அவ்விரண்டின் பலனைவிட மிகப் பெரியதாகும்.’’ இன்னும், அவர்கள் எதைத் தர்மம் செய்யவேண்டுமென உம்மிடம் கேட்கிறார்கள். “(உங்கள் தேவைக்குப் போக) மீதமுள்ளதை (தர்மம் செய்யுங்கள்)’’ எனக் கூறுவீராக! நீங்கள் (இம்மை, மறுமையின் காரியத்தில்) சிந்திப்பதற்காக இவ்வாறு அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்."},{"id":220,"translation":"(நீங்கள்) இம்மை, மறுமையி(ன் காரியத்தி)ல் (சிந்திப்பதற்காக அல்லாஹ் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்). இன்னும், அனாதைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவர்களைச் சரியான முறையில் பராமரிப்பது மிக நன்மையாகும்! இன்னும், நீங்கள் (உங்களுடன்) அவர்களைச் சேர்த்துக் கொண்டால் (அது தவறில்லை. காரணம், அவர்கள்) உங்கள் சகோதரர்களே! சரியான முறையில் பராமரிப்பவரிலிருந்து கெடுதி செய்பவர்களை அல்லாஹ் அறிவான். இன்னும், அல்லாஹ் நாடினால் உங்களைச் சிரமப்படுத்தி இருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்.”"},{"id":221,"translation":"இணைவைக்கும் பெண்களை - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - மணக்காதீர்கள். திட்டமாக, நம்பிக்கையாளரான ஓர் அடிமைப்பெண் இணைவைப்பவளைவிடச் சிறந்தவள், (இணைவைக்கும்) அவள் உங்களைக் கவர்ந்தாலும் சரியே! இணைவைக்கும் ஆண்களுக்கு - அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை - நீங்கள் (நம்பிக்கையாளரான பெண்ணை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள். திட்டமாக நம்பிக்கையாளரான ஓர் அடிமை இணைவைப்பவனைவிடச் சிறந்தவர், அவன் உங்களைக் கவர்ந்தாலும் சரியே. (இணைவைக்கும்) அவர்கள் (உங்களை) நரகத்திற்கு அழைக்கிறார்கள். அல்லாஹ்வோ, தன் கட்டளையினால் சொர்க்கம் இன்னும் மன்னிப்பிற்கு (உங்களை) அழைக்கிறான். இன்னும், மக்களுக்குத் தன் வசனங்களை அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக விவரிக்கிறான்."},{"id":222,"translation":"இன்னும், மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அது ஓர் இடையூறாகும். எனவே, மாதவிடாயில் பெண்களிடமிருந்து (-அவர்களுடன் உடலுறவு வைப்பதிலிருந்து) விலகிவிடுங்கள். அவர்கள் சுத்தமாகும் வரை அவர்களுடன் உடலுறவு வைக்காதீர்கள். அவர்கள் (மாதவிடாய் நின்று, குளித்து) முழுமையாக சுத்தமாகிவிட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் வாருங்கள்.’’ நிச்சயமாக அல்லாஹ் பாவத்திலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம் மீளுபவர்கள் மீது அன்பு வைக்கிறான். இன்னும், பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":223,"translation":"உங்கள் மனைவிகள் உங்களுக்கு விளைநிலங்கள் ஆவார்கள். ஆகவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் நாடியவாறு வாருங்கள். இன்னும், உங்களுக்காக (நன்மைகளை) முற்படுத்துங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக நீங்கள் அவனைச் சந்திக்கக் கூடியவர்கள் என்பதை அறியுங்கள். இன்னும், (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக."},{"id":224,"translation":"“நீங்கள் நன்மை செய்ய மாட்டீர்கள்; இன்னும், அல்லாஹ்வை அஞ்சமாட்டீர்கள்; இன்னும் மக்களுக்கு மத்தியில் இணக்கம் ஏற்படுத்த மாட்டீர்கள்” என்று நீங்கள் செய்கின்ற சத்தியங்களுக்கு வலுவாக (-ஆதாரமாக) அல்லாஹ்வை ஆக்காதீர்கள். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":225,"translation":"உங்கள் சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்கமாட்டான். எனினும், உங்கள் உள்ளங்கள் செய்த (உறுதியான சத்தியத்)திற்காக (அதை நீங்கள் நிறைவேற்றவில்லை என்றால்) அவன் உங்களைத் தண்டிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் ஆவான்."},{"id":226,"translation":"தங்கள் மனைவிகளிடம் ஈலா[1] செய்பவர்களுக்கு நான்கு மாதங்கள் எதிர்பார்ப்பதற்கு அனுமதி உண்டு. (அதற்குள்) அவர்கள் (தங்கள் மனைவிகளுடன்) மீண்டுவிட்டால் (அவர்களுக்குள் பிரிவு ஏற்படாது. அவர் செய்த ஈலாவை அல்லாஹ் மன்னித்து விடுவான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.","footnotes":"[1] ஈலா என்றால் மனைவியுடன் உடலுறவு வைக்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதாகும்."},{"id":227,"translation":"இன்னும் அவர்கள் (ஈலாவினால்) விவாகரத்தை உறுதிப்படுத்தினால், (விவாகரத்து ஏற்பட்டுவிடும். அவர்களின் சொல்லை) நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், (அவர்களின் எண்ணங்களை) நன்கறிந்தவன் ஆவான்."},{"id":228,"translation":"விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள், தங்களுக்கு (இத்தா முடிவதற்கு) மூன்று மாதவிடாய்களை எதிர்பார்ப்பார்கள். இன்னும், அவர்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறவர்களாக இருந்தால், அல்லாஹ் அவர்களுடைய கர்ப்பப்பைகளில் படைத்ததை மறைப்பது அவர்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும், அவர்களின் கணவர்கள் (தங்களுக்குள் உள்ள பிரச்சனைகளை) சீர்திருத்த(ம் செய்து சேர்ந்து வாழ) விரும்பினால் அதில் (-தவணைக்குள்) அவர்களை மீட்டுக்கொள்வதற்கு உரிமையுடையவர்கள் ஆவார்கள். (பெண்களாகிய) அவர்கள் மீது கடமைகள் இருப்பது போன்றே அவர்களுக்கு உரிமைகளும் உண்டு. இன்னும், ஆண்களுக்கு அவர்கள் மீது ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":229,"translation":"(மீட்பதற்கு அனுமதியுள்ள) விவாகரத்து இருமுறை (மட்டும்) ஆகும். (அந்த தவணைக்குள்) நல்ல முறையில் (அவளை) தடுத்து (மனைவியாக) வைத்தல் வேண்டும். அல்லது அழகிய முறையில் விட்டுவிடுதல் வேண்டும். (ஆண்களாகிய) நீங்கள் (பெண்களாகிய) அவர்களுக்குக் கொடுத்ததிலிருந்து (-மஹ்ர் தொகை அல்லது மஹ்ர் பொருளிலிருந்து) எதையும் திரும்ப வாங்குவது உங்களுக்கு ஆகுமானதல்ல. (ஆனால், திருமண வாழ்க்கையில் மீண்டும் இணைந்தால்) அல்லாஹ்வின் சட்டங்களை அவ்விருவரும் நிலைநிறுத்த மாட்டார்கள் என்று அவ்விருவரும் பயந்தாலே தவிர. அவ்விருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்தமாட்டார்கள் என (நடுவர்களாகிய) நீங்கள் பயந்தால், அவள் (தனக்கு கொடுக்கப்பட்ட மஹ்ரிலிருந்து) எதை (திரும்ப) கொடுத்து (தன்னை) விடுவிப்பாளோ அதில் அவ்விருவர் மீதும் அறவே குற்றம் இல்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். ஆகவே, இவற்றை மீறாதீர்கள். எவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுகிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள்."},{"id":230,"translation":"பிறகு, (மூன்றாவது தலாக் கூறி) அவளை அவன் விவாகரத்து செய்தால் (அதன்) பிறகு அவள் அவனுக்கு ஆகுமாக மாட்டாள், அவனல்லாத (வேறு) ஒரு கணவனை அவள் மணம் புரியும் வரை. (அப்படி மணம் புரிந்து, பிறகு) அவனும் அவளை விவாகரத்து செய்தால் (அந்த இத்தா முடிந்தவுடன் முதல் கணவரும் இவளும் இந்த) இருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை நிலைநிறுத்துவோம் என்று எண்ணினால் இவ்விருவரும் மீண்டும் திருமணம் செய்வது இவ்விருவர் மீது அறவே குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். அறி(ந்து அமல் செய்)யும் மக்களுக்காக அவற்றை அவன் விவரிக்கிறான்."},{"id":231,"translation":"இன்னும், நீங்கள் பெண்களை விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா முடியும்) தவணையை அடைந்தால் நல்ல முறையில் (மண வாழ்க்கையில்) அவர்களைத் தடுத்துக் கொள்ளுங்கள். அல்லது, (விவாகரத்து செய்து) நல்ல முறையில் விட்டுவிடுங்கள். நீங்கள் தீங்கிழைத்து (அவர்கள் மீது) அநியாயம் செய்வதற்காக அவர்களை (உங்கள் திருமண பந்தத்தில்) தடுத்து வைக்காதீர்கள். எவர் அதைச் செய்வாரோ திட்டமாக அவர் தமக்குத் தாமே தீங்கிழைத்தார். அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுக்காதீர்கள். இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவுகூருங்கள்! இன்னும், உங்கள் மீது அவன் இறக்கிய வேதத்தையும் ஞானத்தையும் நினைவில் வையுங்கள்! அவன் இவற்றின் மூலமாக உங்களுக்கு உபதேசிக்கிறான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்."},{"id":232,"translation":"இன்னும், நீங்கள் பெண்களை (மூன்றுக்கும் குறைவாக) விவாகரத்து செய்து, அவர்கள் தங்கள் (இத்தா) தவணையை (முழுமையாக) அடைந்தால், (அதன் பின்னர் அந்த பெண்களும் அவர்களின் கணவர்களும் மண வாழ்க்கையில் இணைய விரும்பி) அவர்கள் தங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவர் மீது) திருப்தியடைந்தால் அப்போது அந்தப் பெண்களை - அவர்கள் தங்கள் (முந்திய) கணவர்களை மணந்து கொள்வதிலிருந்து - (அவர்களின் பொறுப்பாளர்களாகிய) நீங்கள் தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் இதன் மூலம் உபதேசிக்கப்படுகிறார். இதுதான் உங்களுக்கு மிகத் தூய்மையானதும் மிகப் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்தான் அறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்."},{"id":233,"translation":"எவர் பாலூட்டுவதை முழுமைப்படுத்த விரும்புகிறாரோ அவருக்காக, தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையான ஈராண்டுகள் பாலூட்டுவார்கள். நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப்பதும் ஆடை கொடுப்பதும் எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவர் (-குழந்தையின் உரிமையாளராகிய பிள்ளையின் தந்தை) மீது கடமையாகும். ஓர் ஆத்மா அதன் வசதிக்கு மேல் நிர்ப்பந்திக்கப்படாது. ஒரு தாய் தன் குழந்தைகளுக்காக துன்புறுத்தப்பட மாட்டாள். இன்னும், எவருக்காக குழந்தை பெற்றெடுக்கப்பட்டதோ அவரும் தன் குழந்தைக்காக (துன்புறுத்தப்பட மாட்டார்). அது போன்றே வாரிசுதாரர் மீதும் (கடமையாகும்). அவ்விருவரும் தங்கள் பரஸ்பர திருப்தியுடனும் பரஸ்பர ஆலோசனையுடனும் பால்குடியை நிறுத்த விரும்பினால் அது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு (பிற பெண் மூலம்) பாலூட்டுவதை விரும்பினால், - நீங்கள் கொடுப்பதை நல்ல முறையில் (பாலூட்டும் தாய்க்குரிய கூலியை) ஒப்படைத்தால் - (அது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் என்பதை அறியுங்கள்."},{"id":234,"translation":"இன்னும், உங்களில் எவர்கள் இறப்பார்களோ; இன்னும், மனைவிகளை விட்டுச் செல்வார்களோ அந்த மனைவிமார்கள் நான்கு மாதங்கள், பத்து நாட்கள் தங்களுக்கு (இத்தா முடிவதை) எதிர்பார்(த்து இரு)ப்பார்கள். அவர்கள் தங்கள் (இத்தாவின் இறுதி) தவணையை அடைந்து விட்டால் நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":235,"translation":"இன்னும், அப்பெண்களை திருமணம் பேசுவதற்காக நீங்கள் சூசகமாக எடுத்துக் கூறியதில் அல்லது உங்கள் உள்ளங்களில் மறைத்(து வைத்)ததில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை (மணமுடிக்க) நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். நல்ல கூற்றைக் கூறுவதைத் தவிர (இத்தாவுடைய காலத்தில்) அவர்களுக்கு ரகசியமாக (திருமண) வாக்குறுதி அளிக்காதீர்கள். விதிக்கப்பட்ட சட்டம் (இத்தா) அதன் தவணையை அடையும் வரை (அப்பெண்களுடன்) திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நிச்சயமாக அல்லாஹ் நன்கறிகிறான் என்பதை அறியுங்கள். ஆகவே, அவனைப் பயந்து (அவனுக்கு மாறுசெய்வதைவிட்டு) எச்சரிக்கையாக இருங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் என்பதையும் அறியுங்கள்."},{"id":236,"translation":"பெண்களை - அவர்களை நீங்கள் தொடாமல் (-உடலுறவு வைக்காமல்) இருக்கும்போது; அல்லது, அவர்களுக்கு மஹ்ரை நிர்ணயிக்காமல் இருக்கும்போது - நீங்கள் விவாகரத்து செய்தால் (அது) உங்கள் மீது அறவே குற்றமில்லை. அவர்களுக்கு (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு) நல்ல முறையில் பொருள் கொடுங்கள். (தலாக் செய்த) செல்வந்தர் மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் செய்த) ஏழை மீது அவருடைய (பொருளாதார) அளவு(க்கு)ம் (தலாக் விடப்பட்ட பெண்களுக்கு பொருளை அன்பளிப்பு செய்வது) கடமையாகும். நல்லறம் புரிவோர் மீது (இது) கடமையாகும்."},{"id":237,"translation":"இன்னும், அவர்களுக்கு ஒரு மஹ்ரை நீங்கள் நிர்ணயித்து விட்டிருக்க, அவர்களைத் தொடுவதற்கு (-உடலுறவுக்கு) முன்னதாகவே அவர்களை நீங்கள் விவாகரத்து செய்தால் நீங்கள் நிர்ணயித்ததில் பாதி (அப்பெண்களுக்கு) கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் (-மனைவிகள்) மன்னித்தால் அல்லது எவனுடைய கையில் திருமண ஒப்பந்தம் இருக்கிறதோ அவன் (-கணவன்) மன்னித்தால் தவிர. (மனைவி பாதி மஹ்ரையும் வாங்காமல் விடலாம். அல்லது, கணவன் முழு மஹ்ரையும் கொடுக்கலாம்.) ஆயினும், (ஆண்களாகிய) நீங்கள் மன்னி(த்து முழு மஹ்ரையும் கொடு)ப்பது இறை அச்சத்திற்கு மிக நெருக்கமா(ன செயலா)கும். உங்களுக்கு மத்தியில் (ஒருவர் மற்றவருக்கு) உதவுவதை மறக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":238,"translation":"(எல்லாத்) தொழுகைகளையும், (குறிப்பாக) நடுத்தொழுகையையும் பேணி பாதுகாத்து வழமையாக நிறைவேற்றி வாருங்கள். இன்னும், (தொழுகையில்) அல்லாஹ்விற்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்."},{"id":239,"translation":"ஆக, நீங்கள் (ஓர் இடத்தில் நின்று தொழும்போது எதிரிகள் தாக்குவார்கள் என்று) பயந்தால், அப்போது நடந்தவர்களாக அல்லது வாகனித்தவர்களாக (தொழுங்கள்). நீங்கள் பாதுகாப்புப் பெற்றால் நீங்கள் அறிந்திருக்காதவற்றை அவன் உங்களுக்குக் கற்பித்(து அருள் புரிந்)தது போன்று (தொழுகையிலும் அதற்கு வெளியிலும்) அல்லாஹ்வை (புகழ்ந்து நன்றியுடன்) நினைவு கூருங்கள்."},{"id":240,"translation":"உங்களில் எவர்கள் மரணிக்கிறார்களோ, இன்னும் மனைவிகளை விட்டுச் செல்கிறார்களோ அவர்கள் தங்கள் மனைவிகளுக்கு ஓராண்டு வரை (அவர்களை தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேற்றாமல் இருப்பதற்கும் (அவர்களின் வாழ்வாதாரத்திற்குத் தேவையான) பொருள்களை (-செலவுகளை) வழங்குமாறும் (வாரிசுகளுக்கு) மரண சாசனம் கூறவும். ஆக, அவர்கள் (தாமாகவே) வெளியேறினால், நல்ல முறையில் அவர்கள் தங்களை (மறுமணத்திற்கு) தயார் செய்வதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது(ம் அவர்கள் மீதும்) அறவே குற்றமில்லை. (அவர்கள் செய்தது விரும்பத்தக்க நல்ல செயல்தான்.) அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":241,"translation":"விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் பொருள் உதவி செய்ய வேண்டும். அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அது கடமையாகும்."},{"id":242,"translation":"நீங்கள் சிந்தித்து புரிவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்."},{"id":243,"translation":"(நபியே!) மரணத்தின் பயத்தால் தங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா? அவர்களோ பல ஆயிரங்கள் இருந்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களை நோக்கி, ‘இறந்து விடுங்கள்’ எனக் கூறினான். பிறகு, அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்."},{"id":244,"translation":"இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரியுங்கள். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் என்பதை அறியுங்கள்."},{"id":245,"translation":"அழகிய கடனாக அல்லாஹ்விற்குக் கடன் கொடுப்பவர் யார்? (அல்லாஹ்) அவருக்கு அதைப் பல மடங்குகளாக பெருக்கித் தருவான். அல்லாஹ் (தான் நாடியவருக்கு) சுருக்கியும் கொடுக்கிறான், (தான் நாடியவருக்கு) விசாலமாகவும் கொடுக்கிறான். அவனிடமே (நீங்கள் எல்லோரும்) திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":246,"translation":"(நபியே!) மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளைச் சேர்ந்த (அந்த) பிரமுகர்களை நீர் கவனிக்கவில்லையா? “எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்” என்று தங்களது நபியிடம் அவர்கள் கூறியபோது, “போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?’’ என்று அ(ந்த நபியான)வர் கூறினார். “அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினார்கள். ஆக, போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும் போரை விட்டு) விலகிவிட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":247,"translation":"இன்னும், அவர்களுடைய நபி, “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்’’ என்று அவர்களுக்குக் கூறினார். “எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே’’ என்று (அம்மக்கள்) கூறினார்கள். “நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஏராளமான ஆற்றலை (அபரிமிதமான திறமையை) அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன் மிக அறிந்தவன்’’ என்று (அந்த தூதர்) கூறினார்."},{"id":248,"translation":"இன்னும், “நிச்சயமாக அவருடைய ஆட்சிக்குரிய அத்தாட்சி பேழை உங்களிடம் வருவதாகும். அதில் உங்கள் இறைவனிடமிருந்து ஆறுதலும் மூஸாவின் குடும்பத்தார் மற்றும் ஹாரூனுடைய குடும்பத்தார் விட்டுச் சென்றதிலிருந்து மீதப்பொருட்களும் இருக்கும். அதை வானவர்கள் சுமந்து வருவார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி திட்டமாக உண்டு’’ என்று அவர்களுடைய நபி அவர்களுக்குக் கூறினார்."},{"id":249,"translation":"ஆக, தாலூத் படைகளுடன் புறப்பட்டபோது, அவர் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் ஓர் ஆற்றின் மூலம் உங்களைச் சோதிப்பான். ஆகவே, எவர் அதிலிருந்து குடித்தாரோ அவர் என்னைச் சேர்ந்தவரில்லை. எவர் அதைச் சுவைக்கவில்லையோ நிச்சயமாக அவர் என்னைச் சேர்ந்தவர். தன் கரத்தால் கையளவு நீர் அள்ளி குடித்தவரைத் தவிர. (அந்தளவு குடிப்பது அவர் மீது குற்றமில்லை.)” ஆக, அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும்) அதிலிருந்து (அதிகம்) குடித்தார்கள். அவரும் அவருடன் நம்பிக்கை கொண்ட (கையளவு தண்ணீர் குடித்த)வர்களும் அதைக் கடந்தபோது, (அதிகம் பருகியவர்கள்) ஜாலூத்துடனும் அவனுடைய படைகளுடனும் (போர் புரிய) இன்று எங்களுக்கு அறவே சக்தியில்லை என்று கூறி (போரில் கலந்து கொள்ளாமல் விலகி)னார்கள். எவர்கள், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்பவர்கள் என அறிந்தார்களோ, அவர்கள் கூறினார்கள்: “அதிகமான கூட்டத்தை எத்தனையோ குறைவான கூட்டம் அல்லாஹ்வின் அனுமதியினால் வென்றுள்ளன. அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.’’"},{"id":250,"translation":"இன்னும், அவர்கள் (-தாலூத்தும் அவரின் படையும்) ஜாலூத்திற்கும் அவனுடைய படைகளுக்கும் முன்னால் வந்தபோது, “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்து! இன்னும், நிராகரிப்பாளர்களாகிய மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவு’’ என்று கூறினார்கள்."},{"id":251,"translation":"ஆக, அல்லாஹ்வின் அனுமதியினால் (தாலூத்தின் படையினர்) அவர்களைத் தோற்கடித்தார்கள். தாவூது, ஜாலூத்தை கொன்றார். இன்னும், அல்லாஹ் அவருக்கு ஆட்சியையும் ஞானத்தையும் கொடுத்தான். இன்னும், அவன் தான் நாடியதிலிருந்து அவருக்கு கற்பித்தான். அல்லாஹ் - மக்களை அவர்களில் (உள்ள நல்லோர்) சிலரின் மூலம் (பாவம் செய்த) சிலரை (தண்டனையிலிருந்து) - பாதுகாக்க வில்லையென்றால் இப்பூமி அழிந்திருக்கும். எனினும், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்கள் மீது (பெரும்) அருளுடையவன் ஆவான்."},{"id":252,"translation":"இவை, அல்லாஹ்வுடைய (கண்ணியமான குர்ஆன்) வசனங்களாகும். இவற்றை உமக்கு உண்மையுடன் நாம் ஓதிக் காண்பிக்கிறோம். இன்னும் நிச்சயமாக நீர் (நாம் அனுப்பிய) தூதர்களில் உள்ளவர்தான்."},{"id":253,"translation":"அத்தூதர்கள் - அவர்களில் சிலரை, சிலரைவிட நாம் மேன்மையாக்கினோம். அல்லாஹ் எவருடன் பேசினானோ அ(த்தகைய)வரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், அவர்களில் சிலரைப் பதவிகளால் அவன் உயர்த்தினான். இன்னும், மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம். இன்னும், (ஜிப்ரீல் என்ற) பரிசுத்த ஆத்மாவின் மூலம் அவருக்கு உதவினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின் வந்தவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அவர்கள் (தங்களுக்குள் கொள்கையில்) கருத்து வேறுபாடு கொண்டார்கள். ஆக, அவர்களில் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டவரும் உண்டு. இன்னும், அவர்களில் (அல்லாஹ்வை) நிராகரித்தவரும் உண்டு. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (தங்களுக்குள்) சண்டையிட்டிருக்க மாட்டார்கள். என்றாலும், அல்லாஹ் தான் நாடுவதைச் செய்கிறான்."},{"id":254,"translation":"நம்பிக்கையாளர்களே! ஒரு நாள் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு வழங்கியதிலிருந்து தர்மம் புரியுங்கள். அதில் வியாபாரமும் நட்பும், பரிந்துரையும் இருக்காது. (மறுமை நாளை) நிராகரிப்பவர்கள்தான் (பெரும்) அநியாயக்காரர்கள் ஆவார்கள்."},{"id":255,"translation":"அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் (என்றும்) உயிருள்ளவன், (தன்னில்) நிலையானவன். (படைப்புகளை நிர்வகிப்பவன்.) அவனுக்குள் சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் நிகழாது. (-அவனை சிறு உறக்கமும் பெரும் நித்திரையும் ஆட்கொள்ளாது.) வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குரியனவே. அவனின் அனுமதியுடனே தவிர அவனிடம் (எவருக்கும்) யார் பரிந்துரைப்பார்? அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (எல்லாக் காலத்தையும்) அவன் நன்கறிவான். அவன் நாடியதைத் தவிர அவனுடைய அறிவிலிருந்து எதையும் அவர்கள் சூழ்ந்தறிய மாட்டார்கள். அவனுடைய குர்சிய் - பாதஸ்தலம், வானங்களையும் பூமியையும் விட விசாலமாக (-பெரியதாக) இருக்கிறது. அவ்விரண்டையும் பாதுகாப்பது அவனுக்குச் சிரமமளிக்காது. அவன் மிக உயர்வானவன், மிக மகத்தானவன் ஆவான்."},{"id":256,"translation":"இஸ்லாமில் (இணைவதில்) அறவே நிர்ப்பந்தமில்லை. வழிகேட்டிலிருந்து (விலகி) நேர்வழி மிகத் தெளிவாகி விட்டது. (மௌட்டீகத்திலிருந்து, மூடத்தனத்திலிருந்து விலகி பகுத்தறிவும், அறிவு ஞானமும் மிகத் தெளிவாகிவிட்டன.) ஆக, எவர் ஷைத்தானை நிராகரித்து, அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறாரோ அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப்பிடித்துக் கொண்டார். அறவே, அ(ந்)த (வளையத்தி)ற்குத் துண்டிப்பு இல்லை. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்."},{"id":257,"translation":"அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் உதவியாளன் ஆவான். இருள்களிலிருந்து ஒளியை நோக்கி அவன் அவர்களை வெளியேற்றுகிறான். இன்னும், நிராகரிப்பவர்களோ அவர்களின் உதவியாளர்கள் ஷைத்தான்கள் ஆவார்கள். அவர்கள் அவர்களை ஒளியிலிருந்து இருள்களை நோக்கி வெளியேற்றுகிறார்கள். அவர்கள் (எல்லோரும்) நரகவாசிகள் ஆவார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":258,"translation":"(நபியே!) இப்ராஹீமிடம் அவருடைய இறைவன் விஷயத்தில் தர்க்கித்தவனை நீர் கவனிக்கவில்லையா? அல்லாஹ், அவனுக்கு ஆட்சியைக் கொடுத்ததால் (திமிரில் அவன் இப்படி தர்க்கித்தான்). “என் இறைவன், உயிர்ப்பிக்கிறான். இன்னும் மரணிக்கச் செய்கிறான்’’ என்று இப்ராஹீம் கூறியபோது, அவனோ “நானும் உயிர்ப்பிப்பேன். இன்னும் மரணிக்கச் செய்வேன்’’ என்று கூறினான். இப்ராஹீம் கூறினார்: “நிச்சயமாக அல்லாஹ் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். ஆக, நீ அதை மேற்கிலிருந்து கொண்டு வா.’’ ஆக, (அதற்கு பதில் சொல்ல முடியாமல்) நிராகரித்த(அ)வன் வாயடைத்துப்போனான். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்."},{"id":259,"translation":"அல்லது ஒரு கிராமத்தை - அது (வசிப்பாரற்று) தன் முகடுகள் மீது விழுந்திருக்க - (அதைக்) கடந்து சென்றாரே அவரைப் போன்று ஒருவரை நீர் கவனிக்கவில்லையா? “இ(ந்த கிராமத்)தை, அது இறந்த பின்னர் அல்லாஹ் எவ்வாறு உயிர்ப்பிப்பான்?’’ என்று அவர் கூறினார். ஆக, அல்லாஹ் அவருக்கு நூறு ஆண்டுகள் வரை மரணத்தைக் கொடுத்தான், பிறகு, அவரை அவன் உயிர்ப்பித்தான். அல்லாஹ் கூறினான்: “நீர் எத்தனை (காலம் இங்கே) தங்கினீர்?’’ அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு தங்கினேன்.’’ அல்லாஹ் கூறினான்: “மாறாக! நீர் நூறு ஆண்டுகள் (இங்கு) தங்கினீர். ஆக, உமது உணவையும், உமது பானத்தையும் நீர் பார்ப்பீராக! அவை கெட்டுப் போகவில்லை. இன்னும் உமது கழுதையைப் பார்ப்பீராக!. (அது செத்து மக்கிவிட்டது.) உம்மை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம்). இன்னும், (கழுதையின்) எலும்புகளைப் பார்ப்பீராக, எவ்வாறு அவற்றை அசைத்து (சிலவற்றுக்கு மேல் சிலவற்றை) உயர்த்துகிறோம்; பிறகு அவற்றுக்கு மாமிசத்தைப் போர்த்துகிறோம்!! (இறந்த பிராணியை அல்லாஹ் உயிர்ப்பித்தது) தெளிவாக தெரிந்தபோது, “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் பேராற்றலுடையவன் என்பதை(க் கண்கூடாக) நான் அறிகிறேன்’’ என்று அவர் கூறினார்."},{"id":260,"translation":"இன்னும், இப்ராஹீம் “என் இறைவா! இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிக்கிறாய் என்பதை நீ எனக்குக் காண்பிப்பாயாக!’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(இப்ராஹீமே!) நீர் நம்பிக்கை கொள்ளவில்லையா?’’ எனக் கூறினான். (அல்லாஹ்வே!) அவ்வாறில்லை. “(நான் நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.) எனினும், எனது உள்ளம் நிம்மதி பெறுவதற்காக (அதைக் காண்பிக்கும்படி உன்னிடம் வேண்டுகிறேன்)’’ எனக் கூறினார். பறவைகளில் நான்கைப் பிடித்து, அவற்றை உம்முடன் பழக்குவீராக! பிறகு (அவற்றைப் பல துண்டுகளாக்கி உம்மை சுற்றி உள்ள மலைகளில்) ஒவ்வொரு மலையின் மீதும் அவற்றிலிருந்து ஒரு பகுதியை ஆக்குவீராக! பிறகு, அவற்றை அழைப்பீராக! அவை (உயிர் பெற்று) உம்மிடம் விரைந்து வரும். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் என்பதை அறிந்து கொள்வீராக!” என்று (அல்லாஹ்) கூறினான்."},{"id":261,"translation":"அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களை தர்மம் புரிபவர்களின் உதாரணம், ஏழு கதிர்களை முளைக்க வைத்த ஒரு விதையின் உதாரணத்தைப் போன்றாகும். ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் வந்தன. அல்லாஹ், தான் நாடுபவர்களுக்கு (நற்கூலியை)ப் பன்மடங்காக்குகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":262,"translation":"எவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்தார்களோ, பிறகு தாங்கள் தர்மம் செய்ததை பின்தொடர்ந்து சொல்லிக்காட்டுவதையும் துன்புறுத்துவதையும் செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. இன்னும் அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்."},{"id":263,"translation":"துன்புறுத்தல் பின்தொடர்கிற தர்மத்தை விட, (-ஒருவருக்கு தர்மம் செய்துவிட்டு, பிறகு அவரை துன்புறுத்துவதை விட) நல்ல சொல்லும் மன்னிப்பும் சிறந்ததாகும் (-அழகிய முறையில், “இல்லை” என்று சொல்லி அனுப்பிவிடுவதும் தர்மம் கேட்டவர் மீது கோபிக்காமல் மன்னித்துவிடுவதும் சிறந்த நடைமுறையாகும்). அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் சகிப்பாளன் ஆவான்."},{"id":264,"translation":"நம்பிக்கையாளர்களே! எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், மக்களுக்கு காண்பிப்பதற்காகத் தனது செல்வத்தைத் தர்மம் செய்(து அதன் நன்மையை வீணாக்கிவிடு)கிறாரோ அவரைப் போன்று (நீங்கள் கொடுத்த) உங்கள் தர்மங்க(ளின் நன்மைக)ளை - (அவற்றை) சொல்லிக் காட்டுவதாலும் (தர்மம் பெற்றவரை) துன்புறுத்துவதாலும் - வீணாக்காதீர்கள். (செய்த தர்மத்தின் நன்மையை வீணாக்கிய) அவனின் உதாரணம், ஒரு வழுக்குப்பாறையின் உதாரணத்தைப் போன்றாகும். அதன் மீது மண் (படர்ந்து) இருந்தது. ஆக, அடை மழை அதன் மீது பெய்தது. ஆகவே, அதை(க் கழுவி) வெறும் பாறையாக விட்டுவிட்டது. (இவ்வாறே அவன் செய்த தர்மத்தின் நன்மையை முகஸ்துதியும், சொல்லிக்காட்டுதலும் அழித்துவிடும்.) (இத்தகைய செயலை செய்த) அவர்கள் (தர்மம்) செய்ததில் (நன்மைகள்) எதையும் பெறுவதற்கு ஆற்றல் பெற மாட்டார்கள். (மன முரண்டாக) நிராகரிக்கின்ற மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":265,"translation":"இன்னும், எவர்கள் தங்களது செல்வங்களை அல்லாஹ்வின் திருப்தியைத் தேடியும் தங்கள் உள்ளங்களில் (இறை நம்பிக்கையை) உறுதிப்படுத்துவதற்காகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களின் (தர்மத்திற்கு) உதாரணம், உயர்ந்த பூமி(யாகிய மலை)யிலுள்ள ஒரு தோட்டத்தின் உதாரணத்தைப் போன்றாகும். அ(ந்த தோட்டத்)தை அடைமழை அடைந்தது. ஆகவே, அது இரு மடங்குகளாக தன் பலனைத் தந்தது. ஆக, அதை அடைமழை அடையாவிட்டாலும் சிறு தூறல் அதை அடைவது போதும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":266,"translation":"உங்களில் ஒருவர் - அவருக்கு பேரீச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழ் ஆறுகள் ஓடுகின்றன. அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. இயலாத பலவீனமான குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். ஆக, (இந்த நிலையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அதை அடைந்து, அதுவோ எரித்து (சாம்பலாகி) விடுவதை - விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்."},{"id":267,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்ததிலும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து உற்பத்தி செய்து கொடுத்ததிலும் உள்ள நல்ல பொருள்களில் இருந்து தர்மம் செய்யுங்கள். அதிலிருந்து கெட்டதை தர்மம் செய்ய நாடாதீர்கள். (கெட்டது, உங்களுக்குக் கொடுக்கப்பட்டால்) கண் மூடியவர்களாகவே தவிர நீங்கள் அதை வாங்குபவர்களாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா செல்வந்தன் (எத்தேவையுமற்றவன்), பெரும் புகழாளன் என்பதை அறியுங்கள்."},{"id":268,"translation":"ஷைத்தான் உங்களுக்கு வறுமையை அச்சுறுத்துகிறான். இன்னும், மானக்கேடான (கஞ்சத்தனத்)தை உங்களுக்கு ஏவுகிறான். அல்லாஹ் (உங்கள் தர்மத்திற்கு) தன்னிடமிருந்து மன்னிப்பையும், அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":269,"translation":"அல்லாஹ், தான் நாடியவர்களுக்கு அறிவு ஞானத்தை தருகிறான். எவர் அறிவு ஞானம் தரப்படுகிறாரோ திட்டமாக அதிக நன்மை தரப்பட்டார். நிறைவான அறிவுடையவர்கள் தவிர (யாரும்) உபதேசம் பெறமாட்டார்."},{"id":270,"translation":"இன்னும், தர்மத்தில் எதை நீங்கள் தர்மம் செய்தாலும் அல்லது நேர்ச்சையில் எதை நேர்ச்சை செய்து நிறைவேற்றினாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிவான். இன்னும், அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் யாரும் இல்லை."},{"id":271,"translation":"தர்மங்களை நீங்கள் வெளிப்படுத்தினால் அவை நன்றே. அவற்றை நீங்கள் மறைத்து, அவற்றை ஏழைகளுக்குத் தந்தால் அதுவும் உங்களுக்குச் சிறந்ததுதான். இன்னும், உங்கள் பாவங்களில் (அல்லாஹ் நாடிய) சிலவற்றை உங்களை விட்டு போக்கிவிடுவான். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":272,"translation":"(நபியே! நீர் எவர்களை இஸ்லாமின் பக்கம் அழைக்கிறீர்களோ) அவர்களை நேர்வழி செலுத்துவது உம் மீது கடமை அல்ல. (உம்மீது நேர்வழியின் பக்கம் அழைப்பதுதான் கடமை.) என்றாலும், அல்லாஹ், தான் நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறான். செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாகும். இன்னும், அல்லாஹ்வின் முகத்தை நாடியே தவிர, (புகழுக்காக) நீங்கள் தர்மம் செய்யாதீர்கள். இன்னும், (புகழை நாடாமல்) செல்வத்தில் நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அது உங்களுக்கு முழு (நன்)மையாக நிறைவேற்றப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்."},{"id":273,"translation":"(கல்வி கற்பதற்காக அல்லது ஜிஹாது செய்வதற்காக) அல்லாஹ்வின் பாதையில் முற்றிலும் அடைக்கப்பட்ட ஏழைகளுக்கு (உங்கள் தர்மங்களை கொடுப்பது மிக ஏற்றமானதாகும்). அவர்கள் (செல்வத்தைத் தேடி) பூமியில் பயணிக்க சக்திபெற மாட்டார்கள். அறியாதவர் (அவர்களின்) ஒழுக்கத்தால் (-கையேந்தாமையால்) அவர்களைச் செல்வந்தர்கள் என நினைக்கிறார். (ஆனால்,) நீர் அவர்களை அவர்களின் (முகம் அல்லது ஆடை, அல்லது இருப்பிடத்தின்) அடையாளத்தால் (அவர்கள் தேவையுடையோர் என) அறியலாம். அவர்கள் மக்களிடம் வலியுறுத்தி யாசிக்க மாட்டார்கள். நீங்கள் செல்வத்திலிருந்து எதை தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அ(தையும் அதன் நோக்கத்)தை(யும்) நன்கறிந்தவன் ஆவான்."},{"id":274,"translation":"எவர்கள் தங்கள் செல்வங்களை இரவிலும், பகலிலும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு; அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்."},{"id":275,"translation":"வட்டியைத் தின்பவர்கள் ஷைத்தான் தாக்கி பைத்தியம் பிடித்தவன் எழுவது போன்றே தவிர (மறுமையில்) எழ மாட்டார்கள். அதற்கு காரணம், “வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்’’ என நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கினான்; வட்டியைத் தடை செய்தான். ஆக, யார் தனது இறைவனிடமிருந்து உபதேசம் தனக்கு வந்த பிறகு, (வட்டியை விட்டு) அவர் விலகினால், (வட்டியில்) முன்னர் சென்றது (-வட்டி தடுக்கப்படுவதற்கு முன்னர் அவர் வாங்கிய வட்டி) அவருக்குரியது. அவருடைய காரியம் அல்லாஹ்வின் பக்கம் உள்ளது. (அல்லாஹ் அவரை மன்னிப்பான்.) யார் (உபதேசத்திற்குப் பின்னரும் வட்டியின் பக்கம்) திரும்புவார்களோ அவர்கள் நரகவாசிகள்தான் அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":276,"translation":"அல்லாஹ் வட்டியை அழிப்பான். இன்னும், தர்மங்களை வளர்ப்பான். பெரும் பாவியான மகா நிராகரிப்பாளரான ஒவ்வொருவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்."},{"id":277,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து, தொழுகைகளை நிலைநிறுத்தி, ஸகாத் கொடுத்தார்களோ அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. அவர்கள் மீது பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்."},{"id":278,"translation":"நம்பிக்கையாளர்களே! (உண்மையில்) நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், வட்டியில் மீதமிருப்பதை (வாங்காமல்) விட்டுவிடுங்கள்."},{"id":279,"translation":"ஆக, (அவ்வாறு) நீங்கள் செய்யவில்லையெனில் அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து (உங்கள் மீது நிகழப்போகும்) ஒரு போரை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் (வட்டியிலிருந்து) திருந்தினால், உங்கள் செல்வங்களின் மூலதனம் உங்களுக்கு உண்டு. நீங்கள் (வட்டியைக் கேட்டு பிறருக்கு) அநீதி இழைக்காதீர்கள்; இன்னும், (உங்கள் அசல் தொகையை உங்களுக்கு திருப்பிக் கொடுக்கப்படாமல்) நீங்களும் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்."},{"id":280,"translation":"இன்னும், வறியவர் (கடன் வாங்கி) இருந்தால் வசதி ஏற்படும் வரை (அவருக்கு) அவகாசமளித்தல் வேண்டும். இன்னும், (தர்மத்தின் நன்மையை) நீங்கள் அறிந்திருந்தால் (அதை அந்த வறியவருக்கே) நீங்கள் தர்மம் செய்வது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்."},{"id":281,"translation":"இன்னும், ஒரு நாளை அஞ்சுங்கள். அதில் அல்லாஹ்வின் பக்கம் நீங்கள் திரும்ப கொண்டுவரப்படுவீர்கள். பிறகு, ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அது செய்தது(டைய கூலி) முழுமையாகக் கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":282,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணை வரை (ஒருவர் மற்றவருடன்) கடனுக்கு வியாபாரம் செய்தால் அதை எழுதுங்கள். உங்களுக்கு மத்தியில் எழுதுபவர் நீதமாக எழுதவும். எழுதுபவர் - அல்லாஹ் அவருக்கு (எழுத்தறிவை) கற்பித்துள்ளதால் - எழுத மறுக்க வேண்டாம். ஆக, அவர் எழுதவும்; கடன் வாங்கியவர் வாசகம் கூறவும்; தம் இறைவனான அல்லாஹ்வை அஞ்சவும்; அதில் எதையும் குறைக்க வேண்டாம். ஆக, கடன் வாங்கியவர், விவரமற்றவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் கூற இயலாதவராக இருந்தால், அவருடைய பொறுப்பாளர் நீதமாக வாசகம் கூறவும். இன்னும், உங்கள் ஆண்களில் இரு சாட்சிகளை சாட்சியாக்கத் தேடுங்கள். ஆக, இருவரும் ஆண்களாக இல்லையென்றால் ஓர் ஆண், இரு பெண்கள் (இருக்க வேண்டும்). ஏனெனில், அவ்விருவரில் ஒருத்தி மறந்தால் மற்றவள் அவளுக்கு நினைவூட்டுவாள். சாட்சிகளில் நீங்கள் திருப்தியடைபவர்களிலிருந்து (சாட்சிகளை அமையுங்கள்). இன்னும், சாட்சிகள் (சாட்சி கூற) அழைக்கப்படும் போது அவர்கள் மறுக்க வேண்டாம். (கடன்) சிறிதோ பெரிதோ அதன் தவணை வரை அதை எழுத சோம்பல் படாதீர்கள். இது அல்லாஹ்விடம் மிக நீதமானதாகவும், சாட்சியத்திற்கு அதிகம் உறுதியானதாகவும், (கடன் தொகை அல்லது தவணைப் பற்றி) நீங்கள் சந்தேகிக்காமல் இருக்க மிக நெருக்கமாகவும் இருக்கும். ஆனால், நீங்கள் உங்களுக்கிடையில் அதை ரொக்கமாக நடத்துகிற வியாபாரமாக இருந்தால் தவிர. ஆக, அதை நீங்கள் எழுதாமலிருப்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (கடனுக்கு) வியாபாரம் செய்தால் சாட்சி ஏற்படுத்துங்கள். இன்னும், எழுத்தாளரையும் சாட்சியையும் துன்புறுத்தக் கூடாது. நீங்கள் (துன்புறுத்தும் செயலைச்) செய்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். (மார்க்க சட்டங்களை) அல்லாஹ் உங்களுக்குக் கற்பிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்."},{"id":283,"translation":"இன்னும், நீங்கள் பயணத்தில் இருந்து, (கடன் பத்திரம்) எழுதுபவரை நீங்கள் பெறாவிட்டால் (அதற்கு பகரமாக) அடமானங்களை கைப்பற்றி வைக்க வேண்டும். உங்களில் சிலர் சிலரை நம்பினால், நம்பப்பட்டவர், தம்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை சரியாக நிறைவேற்றவும்! இன்னும் தமது இறைவனான அல்லாஹ்வை அவர் அஞ்சவும்! இன்னும், நீங்கள் சாட்சியத்தை மறைக்காதீர்கள்! யார் அதை மறைப்பாரோ நிச்சயமாக அவருடைய உள்ளம் பாவியாகிவிடும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":284,"translation":"வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியவை ஆகும்! இன்னும், நீங்கள் உங்கள் உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அதற்காக அல்லாஹ் உங்களுக்கு (கணக்கிட்டுக்) கூலி கொடுப்பான். ஆக, அவன் நாடுகிறவரை மன்னிப்பான்; அவன் நாடுகிறவரை தண்டிப்பான். அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":285,"translation":"தூதரும் நம்பிக்கையாளர்களும் தமது இறைவனிடமிருந்து தமக்கு இறக்கப்பட்டதை நம்பிக்கை கொண்டார்கள். (அவர்கள்) எல்லோரும் அல்லாஹ்வையும், அவனுடைய வானவர்களையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்கள். இன்னும், அவர்கள் கூறினார்கள்: “அவனுடைய தூதர்களில் யார் ஒருவருக்கு மத்தியிலும் பிரிவினை காட்டமாட்டோம். இன்னும், நாங்கள் செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! நாங்கள் உன் மன்னிப்பை வேண்டுகிறோம். உன் பக்கமே (எங்கள்) மீளுமிடம் இருக்கிறது.”"},{"id":286,"translation":"அல்லாஹ், ஓர் ஆன்மாவை அதன் வசதிக்கு மேல் (-சக்திக்கு மேல்) சிரமப்படுத்த மாட்டான். அது செய்த நல்லது அதற்கே நன்மையாக இருக்கும். இன்னும், அது செய்த கெட்டது அதற்கே பாதகமாக இருக்கும். எங்கள் இறைவா! நாங்கள் மறந்தால் அல்லது தவறிழைத்தால் எங்களைத் தண்டிக்காதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது நீ அதைச் சுமத்தியது போன்று எங்கள் மீது கடினமான (ஒப்பந்த) சுமையைச் சுமத்தாதே! எங்கள் இறைவா! இன்னும், எங்களுக்கு அறவே ஆற்றல் இல்லாததை எங்களைச் சுமக்க வைக்காதே! இன்னும், எங்களை (பாவங்களை) முற்றிலும் மன்னிப்பாயாக! இன்னும், எங்களுக்கு (எங்கள் குற்றங்களை மறைத்து எங்களை) மன்னித்து விடுவாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீதான் எங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவாய்! ஆகவே நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!"}]},{"id":3,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் மீம்."},{"id":2,"translation":"அல்லாஹ், அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; (அவன் என்றும்) உயிருள்ளவன்; (தன்னில்) நிலையானவன் (படைப்புகளை நிர்வகிப்பவன்)."},{"id":3,"translation":"(நபியே!) (இவ்)வேதத்தை சத்தியத்துடன் உம்மீது அவன் இறக்கினான்; அது, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக்கூடியதாகும். இன்னும், (இதற்கு முன்னர் நபி மூஸாவின் மீது) தவ்ராத்தையும் (நபி ஈஸாவின் மீது) இன்ஜீலையும் இறக்கினான்."},{"id":4,"translation":"இதற்கு முன்னர் (தவ்ராத்தையும் இன்ஜீலையும் இஸ்ராயீலுடைய) மக்களுக்கு நேர்வழி காட்டியாக (இறக்கினான்). இன்னும், (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதத்தை (உம்மீது) இறக்கினான். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடினமான தண்டனையுண்டு. அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்."},{"id":5,"translation":"நிச்சயமாக அல்லாஹ் - அவனைவிட்டு எந்த ஒரு பொருளும் மறைந்துவிட முடியாது. அது பூமியில் இருந்தாலும் சரி, வானத்திலிருந்தாலும் சரி."},{"id":6,"translation":"அவன் கர்ப்பப்பைகளில் தான் நாடியவாறு உங்களை உருவமைக்கிறான்; மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை."},{"id":7,"translation":"(நபியே!) அவன் (இவ்)வேதத்தை உம்மீது இறக்கினான். அதில் பொருள் தெளிவான (முஹ்கம்) வசனங்கள் உள்ளன. அவைதான் வேதத்தின் அடிப்படையாகும். இன்னும், பொருள் தெரிய முடியாத வேறு (முதஷாபிஹ்) வசனங்களும் உள்ளன. ஆக, தங்கள் உள்ளங்களில் கோணல், (சந்தேகம்) உள்ளவர்கள் குழப்பத்தை தேடியும் (மறைக்கப்பட்ட) அதன் விளக்கத்தை தேடியும் அதில் பொருள் தெரியமுடியாதவற்றைப் பின்பற்றுகிறார்கள். அதன் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அறியமாட்டார். கல்வியில் தேர்ச்சியடைந்தவர்களோ, “அதை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். (முஹ்கம், முதஷாபிஹ்) எல்லாம் எங்கள் இறைவனிடமிருந்துதான் (இறக்கப்பட்டவை)’’ என்று கூறுவார்கள். நிறைவான அறிவுடையவர்களைத் தவிர (யாரும்) நல்லுபதேசம் பெறமாட்டார்."},{"id":8,"translation":"“எங்கள் இறைவா! நீ எங்களை நேர்வழி செலுத்திய பின்னர் எங்கள் உள்ளங்களை கோணலாக்கிவிடாதே! இன்னும், உன்னிடமிருந்து (உனது) கருணையை எங்களுக்கு வழங்கு! நிச்சயமாக நீதான் மகா கொடைவள்ளல் ஆவாய்!"},{"id":9,"translation":"“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஒரு நாளில் மக்களை ஒன்று சேர்ப்பாய். அதில் அறவே சந்தேகம் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்கை மீற மாட்டான்.’’"},{"id":10,"translation":"நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய சந்ததிகளும், அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையிலிருந்து) எதையும் அவர்களை விட்டு அறவே தடுக்காது. இன்னும், அவர்கள்தான் நரகத்தின் எரிபொருள்கள் ஆவார்கள்."},{"id":11,"translation":"(இவர்களின் தன்மை) ஃபிர்அவ்னுடைய கூட்டத்தார் இன்னும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் தன்மையைப் போன்றுதான். அவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை தண்டித்தான். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்."},{"id":12,"translation":"(நபியே!) நிராகரிப்பாளர்களுக்கு கூறுவீராக: “(நீங்கள்) வெற்றி கொள்ளப்படுவீர்கள். இன்னும், (நீங்கள் இறந்த பின்னர் மறுமையில்) ஜஹன்னம் (-நரகத்தின்) பக்கம் ஒன்று திரட்டப்படுவீர்கள். அது தங்குமிடத்தால் மிகக் கெட்டது.’’"},{"id":13,"translation":"(பத்ர் போரில்) சந்தித்த இரு கூட்டங்களில் திட்டமாக உங்களுக்கு ஓர் அத்தாட்சி இருந்தது. ஒரு கூட்டம் (நம்பிக்கைக் கொண்டு) அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிகிறது, மற்றொரு கூட்டம் (அல்லாஹ்வை) நிராகரிக்கக்கூடியது. (அதிக எண்ணிக்கையில் இருந்த) இவர்களை அ(ல்லாஹ்வின் பாதையில் போர் புரிப)வர்கள் தங்களைப் போன்று இரு மடங்குகளாக (மட்டும்) கண்ணால் கண்டனர். அல்லாஹ், தான் நாடியவர்களைத் தனது உதவியால் பலப்படுத்துகிறான். (படிப்பினை பெறும்) பார்வையுடையோருக்கு நிச்சயமாக இதில் ஒரு (நல்ல) படிப்பினை திட்டமாக இருக்கிறது."},{"id":14,"translation":"பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம், வெள்ளியின் குவிக்கப்பட்ட (பெரும்) குவியல்கள், அடையாளமிடப்பட்ட (உயர் ரக அழகிய) குதிரைகள், கால்நடைகள், விளைநிலம் ஆகிய ஆசைகளின் விருப்பம் மக்களுக்கு அலங்கரிக்கப்பட்டுள்ளது. இவை (அனைத்தும் அற்ப) உலக வாழ்க்கையின் (சொற்ப) இன்பமாகும்! அல்லாஹ் - அவனிடம்தான் (நிலையான) அழகிய தங்குமிடமுண்டு."},{"id":15,"translation":"(நபியே!) கூறுவீராக: “இவற்றைவிட சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கவா? அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கு தங்கள் இறைவனிடம் சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும் பரிசுத்தமான மனைவிகளும் அல்லாஹ்வின் பொருத்தமும் (அவர்களுக்கு) உண்டு. இன்னும் அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.’’"},{"id":16,"translation":"அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும் (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களை காப்பாற்றுவாயாக!’’"},{"id":17,"translation":"(சொர்க்கத்திற்கு தகுதியான) அவர்கள் பொறுமையாளர்களாக, உண்மையாளர்களாக, (இறைவனுக்கு) பணிந்தவர்களாக, தர்மம் செய்பவர்களாக, இரவின் இறுதிகளில் மன்னிப்புக் கோருபவர்களாக இருப்பார்கள்."},{"id":18,"translation":"நீதத்தை நிலைநிறுத்துபவனாக அல்லாஹ் சாட்சி கூறுகிறான்: “நிச்சயமாக அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை’’ என்று. இன்னும், வானவர்களும் கல்விமான்களும் இதற்கு சாட்சி கூறுகிறார்கள். மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை."},{"id":19,"translation":"நிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் (‘இதுதான் உண்மையான வேதம்’ என்ற) அறிவு அவர்களுக்கு வந்த பின்னரே தவிர (இதில்) மாறுபடவில்லை. ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரை) விசாரிப்பதில் மிக விரைவானவன்."},{"id":20,"translation":"ஆக, (நபியே! இதற்குப் பின்னும்) அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி), நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் எனது முகத்தை அல்லாஹ்விற்கு பணிய வைத்தேன். இன்னும், என்னை பின்பற்றியவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு பணிய வைத்தார்கள். நாங்கள் அனைவரும் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோம்).’’ இன்னும், “வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், (சிலை வணங்கும்) பாமரர்களுக்கும் கூறுவீராக: “நீங்களும் (அவ்வாறே உங்கள் முகங்களை) பணியவைக்கிறீர்களா? (-உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குவீர்களா?)” ஆக, அவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு மட்டும்) பணியவைத்தால் திட்டமாக அவர்கள் நேர்வழி அடைவார்கள். இன்னும், அவர்கள் (இந்த அழைப்பை) புறக்கணித்தால், உம்மீது கடமை எல்லாம் (சத்தியத்தை) எடுத்துச் சொல்வதுதான். அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":21,"translation":"(நபியே!) நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ; இன்னும், நியாயமின்றி இறைத்தூதர்களை கொலை செய்கிறார்களோ; இன்னும், மக்களில் நீதத்தை ஏவுகிறவர்களை கொலை செய்கிறார்களோ அ(த்தகைய)வர்களுக்கு “துன்புறுத்தக்கூடிய தண்டனையைக் கொண்டு” நற்செய்தி கூறுவீராக!"},{"id":22,"translation":"இன்னும், அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய (நற்)செயல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிந்து விட்டன. இன்னும் (மறுமையில்) உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்."},{"id":23,"translation":"(நபியே!) நீர் வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை கவனிக்கவில்லையா? அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் - அது அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பதற்காக - அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் (புறக்கணித்து) விலகி செல்கிறார்கள். அவர்கள் (எப்போதும் சத்தியத்தை) புறக்கணிப்பவர்களே."},{"id":24,"translation":"அதற்கு காரணம், “எண்ணப்படும் (குறிப்பிட்ட) சில நாட்களைத் தவிர (நரக) நெருப்பு எங்களை அறவே தீண்டாது’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் தங்களது மார்க்கத்தில் பொய்களை இட்டுக்கட்டி கூறி வந்தது அவர்களை ஏமாற்றிவிட்டது."},{"id":25,"translation":"ஆக, (நபியே!) அறவே அதில் சந்தேகமில்லாத ஒரு நாளில் நாம் அவர்களை (உயிர்ப்பித்து) ஒன்று சேர்த்தால்; இன்னும், ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்ததற்கு முழுமையாகக் கூலி கொடுக்கப்பட்டால் (அப்போது அவர்களின் நிலைமை) எப்படி (பரிதாபமாக) இருக்கும்? (அந்நாளில்) அவர்கள் (சிறிதும்) அநீதி இழைக்கப்படமாட்டார்கள்."},{"id":26,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம் உரிமையாளனே! நாடியவருக்கு நீ ஆட்சியைக் கொடுக்கிறாய்; நாடியவரிடமிருந்து நீ ஆட்சியை பறிக்கிறாய்; நாடியவர்களை நீ கண்ணியப்படுத்துகிறாய்; நாடியவர்களை நீ இழிவுபடுத்துகிறாய்; நன்மை எல்லாம் உன் கையில்தான் இருக்கிறது; நிச்சயமாக நீ ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்."},{"id":27,"translation":"நீ இரவைப் பகலில் நுழைக்கிறாய்; பகலை இரவில் நுழைக்கிறாய்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை நீ வெளியாக்குகிறாய்; உயிருள்ளதிலிருந்து இறந்ததை நீ வெளியாக்குகிறாய்; நீ நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறாய்.’’"},{"id":28,"translation":"நம்பிக்கையாளர்கள், நம்பிக்கையாளர்களைத் தவிர நிராகரிப்பாளர்களை (தங்களது) பாதுகாவலர்களாக (உதவியாளர்களாக) எடுத்துக்கொள்ள வேண்டாம். எவர் இதைச் செய்வாரோ அவர் அல்லாஹ்வை விட்டும் நீங்கிவிட்டார். (அல்லாஹ்வும் அவரை விட்டு நீங்கிவிட்டான். இன்னும் அவர் அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டு நீங்கியவர் ஆவார்.) நீங்கள் (அவர்களின் ஆதிக்கத்தில் இருந்து, அவர்கள் பெரும்பான்மையாக இருந்து) அவர்களை அதிகம் அஞ்சினால் தவிர. (அப்போது மார்க்க விஷயத்தில் அவர்களுக்கு கீழ்ப்படியாமல், உலக விஷயத்தில் அவர்களுடன் மென்மையாக நடப்பது உங்கள் மீது குற்றமில்லை). இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது."},{"id":29,"translation":"(நபியே!) கூறுவீராக: உங்கள் நெஞ்சங்களிலுள்ளதை நீங்கள் மறைத்தாலும்; அல்லது, அதை வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அதை நன்கறிவான். இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் (அவன்) நன்கறிவான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":30,"translation":"ஒவ்வோர் ஆத்மாவும் நன்மையில் தான் செய்ததையும், தீமையில் தான் செய்ததையும் (தனக்கு முன்) சமர்ப்பிக்கப்பட்டதாக காணும் நாளில், தனக்கு மத்தியிலும், அதற்கு (-தீமைக்கு) மத்தியிலும் நீண்டதூரம் இருக்க வேண்டுமே! என (தீமை செய்த ஆத்மா) விரும்பும். அல்லாஹ், தன்னைப்பற்றி உங்களை எச்சரிக்கிறான். அல்லாஹ் அடியார்கள் மீது மிக இரக்கமுள்ளவன் ஆவான்."},{"id":31,"translation":"(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’"},{"id":32,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விற்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் புறக்கணித்தால் நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்கள் மீது அன்பு வைக்கமாட்டான்.’’"},{"id":33,"translation":"நிச்சயமாக அல்லாஹ், ஆதமையும் நூஹையும் இப்ராஹீமின் குடும்பத்தையும் இம்ரானின் குடும்பத்தையும் அகிலத்தார்களைவிட (தனது தூதுத்துவத்துக்காக) தேர்ந்தெடுத்தான்."},{"id":34,"translation":"ஒரு (சிறந்த) சந்ததியை (அல்லாஹ் தேர்ந்தெடுத்தான்). அதில் சிலர், சிலரைச் சேர்ந்தவர். (அவர்கள் அனைவரின் கொள்கையும் ஒன்றே.) அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":35,"translation":"(நபியே!) இம்ரானுடைய மனைவி, “என் இறைவா! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ள(குழந்)தை(யை இறையாலயத்தில் உன்னை வணங்க) அர்ப்பணிக்கப்பட்டதாக உனக்கு நேர்ச்சை செய்தேன். ஆகவே, (அதை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":36,"translation":"ஆக, (இம்ரானுடைய மனைவி) அவளைப் பெற்றெடுத்தபோது, “என் இறைவா! நிச்சயமாக நான் அவளைப் பெண்ணாக பெற்றெடுத்தேன். - அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் மிக அறிந்தவன். (இந்த) பெண்ணைப் போன்று (அந்த) ஆண் இல்லை. - நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அவளையும், அவளுடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நீ பாதுகாக்க வேண்டுமென நிச்சயமாக நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!’’ எனக் கூறினாள்."},{"id":37,"translation":"ஆகவே, அவளுடைய இறைவன் அவளை (அன்போடு) அழகாக அங்கீகரித்தான். இன்னும், அழகியமுறையில் அவளை வளரச் செய்தான். இன்னும், ஸகரிய்யாவை அவளுக்கு பொறுப்பாளராக்கினான். (அவள் தங்கி இருந்த) மாடத்தில் ஸகரிய்யா அவளிடம் நுழையும்போதெல்லாம், ஓர் உணவை அவளிடம் கண்டார். “மர்யமே! எங்கிருந்து உனக்கு இது (வருகிறது)?’’ எனக் கூறினார். “இது அல்லாஹ்விடமிருந்து (வருகிறது). நிச்சயமாக அல்லாஹ் - தான் நாடுகிறவருக்கு - கணக்கின்றி வழங்குவான்’’ என அவள் கூறினாள்."},{"id":38,"translation":"அவ்விடத்தில் ஸகரிய்யா தன் இறைவனை பிரார்த்தித்தார். “என் இறைவா! உன் புறத்திலிருந்து எனக்கொரு நல்ல (தூய்மையான) சந்ததியை தா! நிச்சயமாக நீ பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன்’’ எனக் கூறினார்."},{"id":39,"translation":"ஆக, அவர் மாடத்தில் நின்று தொழுது கொண்டிருக்க அவரை வானவர்கள் அழைத்தார்கள்: “அல்லாஹ்வின் ஒரு வாக்கியத்தை உண்மைப்படுத்தக் கூடியவராக, தலைவராக, சரீர இன்பத்தைத் துறந்தவராக, நபியாக, நல்லோரில் ஒருவராக இருக்கின்ற யஹ்யா (என்ற ஒரு மக)வைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்’’ (என்று வானவர்கள் கூறினார்கள்)."},{"id":40,"translation":"“என் இறைவா! நானோ முதுமை அடைந்திருக்க, என் மனைவியோ மலடியாக இருக்க, எனக்கு எவ்வாறு குழந்தை கிடைக்கும்” என்று (ஸகரிய்யா) கூறினார். “(அல்லாஹ்வின் கட்டளை) இவ்வாறுதான். அல்லாஹ், தான் நாடியதை செய்வான்” என்று அல்லாஹ் (பதில்) கூறினான்."},{"id":41,"translation":"“என் இறைவா! எனக்கோர் அத்தாட்சியை ஏற்படுத்து!’’ என்று (ஸகரிய்யா) கூறினார். “உமக்கு அத்தாட்சியாவது, சாடையாக தவிர மூன்று நாட்கள் மக்களுடன் நீர் பேசமுடியாமல் இருப்பதாகும். இன்னும், உமது இறைவனை அதிகம் நினைவு கூர்வீராக! மாலையிலும் காலையிலும் (ஸுப்ஹானல்லாஹ் என்று கூறி) அவனைத் துதிப்பீராக!’’ என்று அல்லாஹ் (பதில்) கூறினான்."},{"id":42,"translation":"“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்தான்; உம்மைப் பரிசுத்தப்படுத்தினான்; அகிலத்தார்களின் பெண்களைவிட உம்மைத் தேர்ந்தெடுத்தான்” என்று வானவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":43,"translation":"மர்யமே! உமது இறைவனுக்குப் பணிவீராக! (-நீண்ட நேரம் நின்று தொழுவீராக!) இன்னும், சிரம் பணிவீராக! (தொழுகையில்) குனிபவர்களுடன் குனிவீராக!"},{"id":44,"translation":"(நபியே!) இவை மறைவான செய்திகளிலிருந்து உள்ளவை. இவற்றை உமக்கு வஹ்யி (மூலம்) அறிவிக்கிறோம். அவர்களில் யார் மர்யமை பொறுப்பே(ற்று வள)ர்ப்பார் என்று (அறிய) அவர்கள் தங்கள் எழுதுகோல்களை (ஆற்றில்) எறிந்(து சோதித்)தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை. (இதைப் பற்றி) அவர்கள் தங்களுக்குள் தர்க்கித்தபோதும் நீர் அவர்களிடம் இருக்கவில்லை."},{"id":45,"translation":"“மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து (ஆகுக! என்ற) ஒரு வார்த்தையினால் உமக்கு (ஒரு குழந்தையை கொடுக்க) நற்செய்தி கூறுகிறான். அதன் பெயர் அல் மஸீஹ் ஈஸா இப்னு மர்யம் ஆகும். (அவர்) இந்த உலகத்திலும் மறுமையிலும் கம்பீரமானவராகவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமானவர்களிலும் இருப்பார்’’ என்று வானவர்கள் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக!"},{"id":46,"translation":"இன்னும், “அவர் தொட்டிலில் இருக்கும்போதும், வாலிபராக இருக்கும்போதும் மக்களிடம் பேசுவார். இன்னும், (அவர்) நல்லோரில் உள்ளவர்’’ (என்றும் வானவர்கள் மர்யமிடம் கூறினார்கள்)."},{"id":47,"translation":"“என் இறைவா! ஆடவர் ஒருவரும் என்னைத் தொடாமல் இருக்க, எனக்கு எப்படி குழந்தை ஏற்படும்?’’ என்று (மர்யம்) கூறினார். “(அல்லாஹ்வின் நாட்டம்) இவ்வாறுதான், அல்லாஹ், தான் நாடியதை (நாடியபடி) படைக்கிறான். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அதற்கு அவன் கூறுவதெல்லாம் ‘ஆகுக’ என்றுதான். உடனே (அது) ஆகிவிடும்” என்று அல்லாஹ் கூறினான்."},{"id":48,"translation":"இன்னும், எழுதுவதையும் ஞானத்தையும், தவ்ராத்தையும் இன்ஜீலையும் அவன் அவருக்குக் கற்பிப்பான்."},{"id":49,"translation":"இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா தூதரான பிறகு,) “நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் உருவ அமைப்பைப்போல் படைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியினால் அது பறவையாக ஆகிவிடும். இன்னும், பிறவிக் குருடரையும் வெண் குஷ்டரையும் குணப்படுத்துவேன். இன்னும், மரணித்தோரையும் அல்லாஹ்வின் அனுமதியினால் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் (அடுத்த வேளை) என்ன (உணவை) புசிப்பீர்கள் என்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் என்ன சேமித்து வைக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு அறிவிப்பேன். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக இருக்கிறது” (என்று அவர் கூறினார்)."},{"id":50,"translation":"(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “இன்னும், எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை (நான்) உண்மைப்படுத்துபவராக (இருப்பேன்). இன்னும், உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்.”"},{"id":51,"translation":"(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, நீங்கள் அவனை வணங்குங்கள். இது நேரான வழியாகும்.’’"},{"id":52,"translation":"ஆக, அவர்களில் (பலர் தம்மை) நிராகரிப்பதை ஈஸா உணர்ந்த போது, “அல்லாஹ்விற்காக எனது உதவியாளர்கள் யார்?’’ எனக் கூறினார். (அவருடைய உண்மையான) தோழர்கள், “நாங்கள் அல்லாஹ்வின் (தூதராகிய உமக்கு) உதவியாளர்களாக இருப்போம். நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம். இன்னும், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என (நீர்) சாட்சி அளிப்பீராக’’ என்று கூறினார்கள்."},{"id":53,"translation":"“எங்கள் இறைவா! நீ இறக்கியதை நம்பிக்கை கொண்டோம். இன்னும், இந்தத் தூதரை பின்பற்றினோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் எங்களை(யும் சாட்சியாளர்களாக) பதிவு செய்!’’ (என்று அவர்கள் பிரார்த்தித்தனர்)."},{"id":54,"translation":"அவர்கள் (-யூதர்கள்) சதி செய்தார்கள். அல்லாஹ்வும் சதி செய்தான். அல்லாஹ்வோ, சதி செய்பவர்களில் மிக மேலானவன்."},{"id":55,"translation":"“ஈஸாவே நிச்சயமாக நான் உம்மை (பூமியிலிருந்து) கைப்பற்றுவேன்; உம்மை என் பக்கம் உயர்த்துவேன்; நிராகரிப்பாளர்களிலிருந்து உம்மைப் பரிசுத்தப்படுத்துவேன்; உம்மை (நபியாக ஏற்று) பின்பற்றியவர்களை இறுதிநாள் வரை (உமது நபித்துவத்தை) நிராகரித்தவர்களுக்கு மேலாக ஆக்குவேன்” என அல்லாஹ் கூறிய சமயத்தை (நபியே) நினைவு கூர்வீராக! (நிராகரிப்பாளர்களே!) பிறகு என் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, (ஈஸாவின் விஷயத்தில்) நீங்கள் கருத்து வேறுபாடு செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு மத்தியில் நான் தீர்ப்பளிப்பேன்."},{"id":56,"translation":"ஆக, எவர்கள் (உமது நபித்துவத்தை) நிராகரித்தார்களோ (இன்னும், உமக்கு தகுதி இல்லாததை உம்முடன் இணைத்து பேசினார்களோ) அவர்களை இம்மையிலும் மறுமையிலும் கடினமான தண்டனையால் நான் தண்டிப்பேன். அவர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இருக்க மாட்டார்."},{"id":57,"translation":"ஆக எவர்கள் (உம்மை எப்படி நம்பிக்கை கொள்ள வேண்டுமோ அப்படி) நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களின் (நற்)கூலிகளை அல்லாஹ் அவர்களுக்கு முழுமையாக வழங்குவான். அல்லாஹ் அநியாயக்காரர்கள் மீது அன்பு வைக்கமாட்டான்."},{"id":58,"translation":"(நபியே!) நாம் உமக்கு ஓதிக் காண்பித்த (ஈஸாவைப் பற்றிய உண்மையான சரித்திரங்களாகிய) அவை (அனைத்தும் உமது நபித்துவத்தின்) அத்தாட்சிகளிலிருந்தும் ஞானமிகுந்த (குர்ஆன் என்னும்) அறிவுரையிலிருந்தும் உள்ளவை ஆகும்."},{"id":59,"translation":"நிச்சயமாக அல்லாஹ்விடம் ஈஸாவின் உவமை ஆதமுடைய உவமையைப் போன்றாகும். அவரை மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, ‘ஆகு’ என்று அவரை நோக்கி கூறினான். (உடனே அவர் மனிதனாக) ஆகிவிட்டார்."},{"id":60,"translation":"(நபியே! ஈஸாவைப் பற்றிய இந்த) உண்மை உம் இறைவனிடமிருந்து வந்ததாகும். ஆகவே, (இதை) சந்தேகிப்பவர்களில் நீர் ஆகிவிடாதீர்."},{"id":61,"translation":"ஆக, (நபியே! இதைப்பற்றிய) கல்வி உமக்கு வந்த பின்னர் இதில் யாராவது உம்மிடம் தர்க்கித்தால், (அவர்களை நோக்கி) கூறுவீராக: “வாருங்கள் எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்களையும் அழைப்போம். பிறகு, (அனைவரும் ஒன்றுகூடி) மிகுந்த பயத்தோடும் பணிவோடும் மன்றாடி பிரார்த்திப்போம். இன்னும், பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தை ஆக்குவோம்.’’"},{"id":62,"translation":"நிச்சயமாக இதுதான் உண்மையான வரலாறாகும். (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் இல்லை, அல்லாஹ்வைத் தவிர. இன்னும் நிச்சயமாக அல்லாஹ் - அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":63,"translation":"ஆக, (அவர்கள் இந்த உண்மை வரலாற்றை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் (அத்தகையை) விஷமிகளை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":64,"translation":"(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! எங்கள் மத்தியிலும் உங்கள் மத்தியிலும் (நீதமான) சமமான ஒரு விஷயத்தின் பக்கம் வாருங்கள்! அதாவது: அல்லாஹ்வைத் தவிர (எவரையும் நீங்களும் நாமும்) வணங்கமாட்டோம்; அவனுக்கு எதையும் (நீங்களும் நாமும்) இணையாக்க மாட்டோம்; அல்லாஹ்வைத் தவிர நம்மில் சிலர் சிலரை வணங்கப்படும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளக் கூடாது.’’ (இதுதான் அந்த நீதமான சமமான விஷயம்.) ஆக, அவர்கள் (இதை ஏற்காமல் புறக்கணித்து) விலகி சென்றால், “நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சி சொல்லுங்கள்!’’ என்று நீங்கள் (அவர்களிடம்) கூறிவிடுங்கள்."},{"id":65,"translation":"வேதக்காரர்களே! இப்ராஹீம் விஷயத்தில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். தவ்ராத்தும், இன்ஜீலும் அவருக்கு பின்னரே தவிர இறக்கப்படவில்லை. ஆக, (உண்மை இவ்வளவு தெளிவாக இருந்தும்) நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?"},{"id":66,"translation":"(முன்பு) நீங்களோ உங்களுக்கு எதில் (கொஞ்சம்) அறிவிருந்ததோ அதில் தர்க்கம் செய்தீர்கள். ஆக, உங்களுக்கு எதில் அறவே அறிவில்லையோ அதில் ஏன் தர்க்கம் செய்கிறீர்கள். அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறியமாட்டீர்கள்."},{"id":67,"translation":"இப்ராஹீம் யூதராகவும் இருக்கவில்லை, கிறித்தவராகவும் இருக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் கட்டளையை உறுதியாக பின்பற்றுபவராக (-ஏகத்துவத்தில் மிக உறுதியுடையவராக), முஸ்லிமாக (-அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்தவராக) இருந்தார். இன்னும், இணைவைப்பவர்களில் அவர் இருக்கவில்லை."},{"id":68,"translation":"நிச்சயமாக இப்ராஹீமுக்கு மக்களில் மிக நெருங்கியவர்கள், அவரைப் பின்பற்றியவர்களும், இந்த நபியும், (இந்த நபியை) நம்பிக்கை கொண்டவர்களும்தான். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலன் (இன்னும், உதவியாளன்) ஆவான்."},{"id":69,"translation":"(நம்பிக்கையாளர்களே!) வேதக்காரர்களில் ஒரு கூட்டம் உங்களை வழிகெடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. அவர்கள் தங்களைத் தாமே தவிர (உங்களை) வழிகெடுக்க முடியாது. இன்னும், (இதை) அவர்கள் உணரமாட்டார்கள்."},{"id":70,"translation":"வேதக்காரர்களே! அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்? (நபியின் உண்மைத் தன்மைக்கு) நீங்களே சாட்சியளிக்கிறீர்கள்."},{"id":71,"translation":"வேதக்காரர்களே! ஏன் உண்மையை பொய்யுடன் குழப்புகிறீர்கள்? இன்னும், நீங்கள் அறிந்து கொண்டே உண்மையை ஏன் மறைக்கிறீர்கள்?"},{"id":72,"translation":"இன்னும், வேதக்காரர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்களில் சிலரை நோக்கிக்) கூறினர்: “நீங்கள் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்டதை பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்; அவர்கள் (தங்கள் நம்பிக்கையிலிருந்து) திரும்புவதற்காக அதன் இறுதியில் (அதை) நிராகரித்து விடுங்கள்.”"},{"id":73,"translation":"இன்னும், (அவர்கள் கூறினார்கள்:) “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவரைத் தவிர (முஸ்லிம்களை) நம்பாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம் வேறு) ஒருவருக்கு கொடுக்கப்படும் என்றோ அல்லது (முஸ்லிம்கள் மறுமையில்) உங்கள் இறைவனுக்கு முன்னர் உங்களோடு தர்க்கிப்பார்கள் என்றோ நம்பாதீர்கள்.’’ (இவ்வாறு அவர்கள் கூறினார்கள்). (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் நேர்வழிதான்.” (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. (அவன்) நாடியவருக்கு அதைக் கொடுக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.’’"},{"id":74,"translation":"(அல்லாஹ்) தான் நாடுகிறவரை தன் அருளுக்குச் சொந்தமாக்குகிறான். இன்னும், அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்."},{"id":75,"translation":"வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். (நீர்) ஒரு பொற்குவியலை அவர்களிடம் நம்பி கொடுத்தாலும் (குறைவின்றி) உமக்கு அதை அவர்கள் (திரும்ப) ஒப்படைத்துவிடுவார்கள். இன்னும், அவர்களில் சிலர் இருக்கிறார்கள். ஒரு தீனார் நாணயத்தை நீர் அவர்களிடம் நம்பி ஒப்படைத்தாலும் அதை உமக்கு அவர்கள் (திரும்ப) ஒப்படைக்க மாட்டார்கள், அவர்களிடம் (நீர்) தொடர்ந்து நின்று கொண்டிருந்தால் தவிர. அதற்கு காரணமாவது, “(யூதரல்லாத மற்ற) பாமரர்கள் விஷயத்தில் (நாம் என்ன அநியாயம் செய்தாலும் அது) நம்மீது குற்றமில்லை’’ என்று நிச்சயமாக அவர்கள் கூறியதாகும். இன்னும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்."},{"id":76,"translation":"(குற்றம்) ஏனில்லை. யார் தனது உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றி, அல்லாஹ்வை அஞ்சினாரோ, நிச்சயமாக, அல்லாஹ் தன்னை அஞ்சுபவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":77,"translation":"நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய உடன்படிக்கைக்கு பதிலாகவும் தங்கள் சத்தியங்களுக்கு பதிலாக சொற்ப கிரயத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அறவே (நற்)பாக்கியமில்லை. இன்னும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும், அவர்கள் பக்கம் பார்க்க மாட்டான்; இன்னும், அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":78,"translation":"இன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்(தை ஓதுவ)தில் தங்கள் நாவைக் கோணுகிறார்கள், வேதத்திலுள்ளதுதான் என (நீங்கள்) அதை எண்ணுவதற்காக. ஆனால், அது வேதத்தில் உள்ளதல்ல. இன்னும், “அது அல்லாஹ்விடமிருந்து வந்தது’’ எனக் கூறுகிறார்கள். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் அறிந்தே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்."},{"id":79,"translation":"வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் ஒரு மனிதருக்கு கொடுக்க, பிறகு அவர் மக்களை நோக்கி, “அல்லாஹ்வைத் தவிர்த்து என்னை வணங்குபவர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள்’’ என்று கூறுவதற்கு அவருக்கு அறவே உரிமையில்லை. என்றாலும், (மக்களை நோக்கி கூறியதாவது), “வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக நீங்கள் இருப்பதாலும், (அதை) நீங்கள் கற்பவர்களாக இருப்பதாலும் மக்களை சீர்திருத்தம் செய்கின்ற இறையச்சமுள்ள பொறுப்பாளர்களாக (நல்ல வழிகாட்டிகளாக) ஆகிவிடுங்கள்!’’"},{"id":80,"translation":"இன்னும், “மலக்குகளையும், நபிமார்களையும் வணங்கப்படும் தெய்வங்களாக (நீங்கள்) எடுத்துக் கொள்ளுங்கள்” என்று (அவர்) உங்களை ஏவுவதற்கும் அவருக்கு உரிமை இல்லை. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய பின்னர் நிராகரிப்பை அவர் உங்களுக்கு ஏவுவாரா?"},{"id":81,"translation":"அல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! (அவர்களை நோக்கி) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்கு எப்போது கொடுத்தாலும், (அதற்கு) பிறகு, உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு (இறுதி) தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; இன்னும், நிச்சயமாக அவருக்கு நீங்கள் உதவவேண்டும். (இதனை) நீங்கள் ஏற்கிறீர்களா? இதன் மீது என் உறுதியான உடன்படிக்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?’’ என்று அல்லாஹ் (அந்த தூதர்களிடம்) கூறினான். அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்கிறோம்” எனக் கூறினார்கள். “ஆகவே, (இதற்கு) நீங்களும் சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்’’ என்று அல்லாஹ் கூறினான்."},{"id":82,"translation":"ஆக, எவர் இதற்குப் பின்னர் (புறக்கணித்து) விலகினார்களோ, அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள்."},{"id":83,"translation":"அல்லாஹ்வின் (இஸ்லாம்) மார்க்கம் அல்லாத (வேறு மார்க்கத்)தையா அவர்கள் விரும்புகிறார்கள்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களோ விரும்பியும், நிர்ப்பந்தமாகவும் அவனுக்கே பணிந்தார்கள். இன்னும், (மறுமையில்) அவன் பக்கமே அவர்கள் (அனைவரும்) திரும்ப கொண்டுவரப்படுவார்கள்."},{"id":84,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வையும், எங்கள் மீது இறக்கப்பட்டதையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (இன்னும் அவர்களுடைய) சந்ததிகள் மீது இறக்கப்பட்டதையும்; மூஸா, ஈஸா இன்னும் (அனைத்து) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். இவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவரை நபியல்ல என்று) பிரிக்கமாட்டோம். நாங்கள் அவனுக்கே முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆவோம்."},{"id":85,"translation":"இன்னும், இஸ்லாமல்லாத (மதத்)தை மார்க்கமாக எவர் (பின்பற்ற) விரும்புவாரோ அவரிடமிருந்து (அம்மார்க்கமும் அவரின் நம்பிக்கைகளும் வழிபாடுகளும்) அறவே அங்கீகரிக்கப்படாது. அவரோ மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்."},{"id":86,"translation":"அல்லாஹ் சில மக்களை எவ்வாறு நேர்வழி செலுத்துவான்! அவர்களோ நம்பிக்கை கொண்டு, “நிச்சயமாக இந்த தூதர் உண்மையானவர்” என்று சாட்சி கூறினார்கள். இன்னும், அவர்களிடம் தெளிவான சான்றுகள் வந்தன. ஆனால், அவர்கள் அதற்குப் பின்னர் (மனமுரண்டாக) நிராகரித்தார்கள். அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்."},{"id":87,"translation":"இவர்கள், இவர்களுடைய கூலியாவது: நிச்சயமாக இவர்கள் மீது அல்லாஹ்; இன்னும், வானவர்கள்; இன்னும், மக்கள் ஆகிய அனைவருடைய சாபம் உண்டாகுவதுதான்."},{"id":88,"translation":"அதில் (அவர்கள்) நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை விட்டு தண்டனை இலேசாக்கப்படாது. இன்னும், (தங்கள் குற்றத்திற்கு காரணம் கூறி தப்பிக்க) அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்."},{"id":89,"translation":"எனினும், அதற்குப் பின்னர் (வருத்தப்பட்டு, பாவங்களில் இருந்து திருந்தி,) திரும்பி, மன்னிப்புக் கோரி (தங்களை) சீர்திருத்திக் கொண்டவர்களைத் தவிர. (அல்லாஹ் அவர்களை மன்னிப்பான்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":90,"translation":"நிச்சயமாக எவர்கள் - அவர்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தார்களோ; பிறகு, நிராகரிப்பையே அதிகப்படுத்தினார்களோ - அவர்களுடைய மன்னிப்புக்கோருதல் அறவே அங்கீகரிக்கப்படாது. இன்னும், அவர்கள்தான் வழி கெட்டவர்கள்."},{"id":91,"translation":"நிச்சயமாக எவர்கள் நிராகரித்து, இன்னும் அவர்கள் நிராகரிப்பாளர்களாகவே இருந்த நிலையில் இறந்து விடுகிறார்களோ அவர்களில் ஒருவரிடமிருந்தும் (அவரது குற்றம் மன்னிக்கப்படுவதற்காக) பூமி நிறைய தங்கத்தை அவர் மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அறவே (அது) அங்கீகரிக்கப்படாது. அவர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு. இன்னும், உதவியாளர்களில் ஒருவரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்."},{"id":92,"translation":"நீங்கள் விரும்புகின்ற (செல்வத்)திலிருந்து தர்மம் செய்யும் வரை நன்மையை அறவே அடையமாட்டீர்கள். இன்னும், பொருளில் எதை (நீங்கள்) தர்மம் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":93,"translation":"தவ்ராத் இறக்கப்படுவதற்கு முன்னர் இஸ்ரவேலர்களுக்கு எல்லா உணவும் ஆகுமானதாகவே இருந்தது, இஸ்ராயீல் தன் மீது விலக்கியவற்றைத் தவிர. “(யூதர்களே! நீங்கள்) உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தைக் கொண்டுவாருங்கள்! இன்னும் அதை ஓதுங்கள்!” என்று (நபியே!) கூறுவீராக."},{"id":94,"translation":"ஆக, இதற்குப் பின்னர் எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய்கிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."},{"id":95,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் உண்மை கூறிவிட்டான். ஆகவே, இஸ்லாமிய மார்க்கத்தில் (ஏகத்துவ கொள்கையில்) உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தை நீங்கள் பின்பற்றுங்கள். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.’’"},{"id":96,"translation":"நிச்சயமாக மக்களுக்கு அமைக்கப்பட்ட முதல் இல்லம், (மக்கா என்றழைக்கப்படும்) ‘பக்கா’வில் உள்ளதாகும். அது பாக்கியமிக்கதும் (அதிகமான நன்மைகளை உடையதும்) அகிலத்தார்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் இருக்கிறது."},{"id":97,"translation":"அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (அவற்றில் ஒன்று,) இப்ராஹீம் நின்ற இடம். இன்னும், எவர் அ(ந்த இறை ஆலயத்)தில் நுழைகிறாரோ அவர் அச்சமற்றவராக ஆகிவிடுவார். அல்லாஹ்வுக்காக (அந்த) இல்லத்தை ஹஜ் செய்வது அங்கே சென்றுவர சக்தி பெற்ற மக்கள் மீது கடமையாகும். எவர் நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தார்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் ஆவான்."},{"id":98,"translation":"(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! அல்லாஹ்வின் வசனங்களை ஏன் நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் அல்லாஹ் சாட்சியாளன் ஆவான். (அவற்றை அவன் கண்காணிக்கிறான். ஆகவே, அதற்கேற்ப உங்களுக்கு கூலி கொடுப்பான்.)’’"},{"id":99,"translation":"(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டும் ஏன் தடுக்கிறீர்கள்? அதில் கோணலை (-குறையை)த் தேடுகிறீர்கள், (அதன் உண்மைக்கு) நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் கவனமற்றவனாக இல்லை.’’"},{"id":100,"translation":"நம்பிக்கையாளர்களே! வேதம் கொடுக்கப்பட்டவர்களில் (உள்ள) ஒரு பிரிவினருக்கு (நீங்கள்) கீழ்ப்படிந்தால், நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் உங்களை நிராகரிப்பவர்களாக அவர்கள் மாற்றி விடுவார்கள்."},{"id":101,"translation":"இன்னும், நீங்களோ உங்களுக்கு அல்லாஹ்வின் வசனங்கள் ஓதி காண்பிக்கப்பட, உங்களுடன் அவனுடைய தூதரும் இருக்க, நீங்கள் எவ்வாறு அல்லாஹ்வை நிராகரிப்பீர்கள்? எவர் அல்லாஹ்வைப் பலமாகப் பற்றிக்கொள்கிறாரோ (அவர்) திட்டமாக நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டப்படுவார்."},{"id":102,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை - அவனை அஞ்சவேண்டிய உண்மையான முறையில் - அஞ்சுங்கள். இன்னும், நீங்கள் முஸ்லிம்களாக இருந்தே தவிர இறந்து விடாதீர்கள்."},{"id":103,"translation":"இன்னும், அனைவரும் அல்லாஹ்வின் (வேதம் எனும்) கயிற்றைப் பற்றிப் பிடியுங்கள்; இன்னும், பிரிந்து விடாதீர்கள்; இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள். நீங்கள் எதிரிகளாக இருந்தபோது உங்கள் உள்ளங்களுக்கிடையில் (இஸ்லாமின் மூலம்) அல்லாஹ் இணக்கத்தை ஏற்படுத்தினான். ஆகவே, அவனுடைய அருட்கொடையால் நீங்கள் சகோதரர்களாக ஆகிவிட்டீர்கள். (அதற்கு முன்னர்) நரகக் குழியின் ஓரத்தில் இருந்தீர்கள். ஆக, அதிலிருந்து உங்களை அவன் காப்பாற்றினான். நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்."},{"id":104,"translation":"சிறந்ததின் பக்கம் அழைக்கின்ற, நன்மையை ஏவுகின்ற, பாவத்திலிருந்து தடுக்கின்ற ஒரு குழு உங்களில் இருக்கட்டும். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள்."},{"id":105,"translation":"இன்னும், (நம்பிக்கையாளர்களே!) எவர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னர் (தங்களுக்குள் பல மாறுபட்ட கொள்கை உடைய பிரிவுகளாக) பிரிந்து, கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்களைப் போல் நீங்கள் ஆகிவிடாதீர்கள். இன்னும், அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு."},{"id":106,"translation":"(சில) முகங்கள் வெண்மையாகின்ற, (சில) முகங்கள் கருக்கின்ற நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்). ஆக, முகங்கள் கருத்தவர்கள், - (அவர்களை நோக்கி கூறப்படும்:) “நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் நிராகரித்தீர்களா? ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் தண்டனையை சுவையுங்கள்.’’"},{"id":107,"translation":"ஆக, முகங்கள் வெண்மையானவர்கள் அல்லாஹ்வின் அரு(ள்கள் நிறைந்த சொர்க்கங்க)ளில் இருப்பார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":108,"translation":"(நபியே!) இவை, அல்லாஹ்வின் வசனங்களாகும். அவற்றை உண்மையாகவே உமக்கு நாம் ஓதிக் காண்பிக்கிறோம். அல்லாஹ் அகிலத்தார்களுக்கு சிறிதும் அநியாயத்தை நாடமாட்டான்."},{"id":109,"translation":"இன்னும், வானங்களிலுள்ளவையும் பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன! இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் அனைத்தும் திருப்பப்படும்."},{"id":110,"translation":"(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான்."},{"id":111,"translation":"(நம்பிக்கையாளர்களே! ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. இன்னும், உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களைவிட்டும் அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். பிறகு, (அல்லாஹ்வின் புறத்திலிருந்து) அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்."},{"id":112,"translation":"அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. எனினும், அல்லாஹ்வின் ஒப்பந்தம்; இன்னும், மக்களின் ஒப்பந்தத்தின் மூலமே தவிர அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. இன்னும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை சுமந்துகொண்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. அதற்கு காரணம், “நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்களாக இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்பவர்களாக இருந்ததும் ஆகும். இன்னும், அதற்கு காரணம் அவர்கள் மாறுசெய்ததும், (இறைக் கட்டளையை) மீறுபவர்களாக இருந்ததும் ஆகும்."},{"id":113,"translation":"(வேதம் கொடுக்கப்பட்ட) அவர்கள் (எல்லோரும்) சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் (இஸ்லாமை மார்க்கமாக ஏற்று) இரவு நேரங்களில் சிரம்பணிந்து தொழுதவர்களாக[1] அல்லாஹ்வின் வசனங்களை (தொழுகையில்) ஓதுகிறார்கள்.","footnotes":"[1] காயிமா: நின்று தொழுபவர்கள், நீதமானவர்கள், மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுபவர்கள்."},{"id":114,"translation":"அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறார்கள்; இன்னும், நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறார்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்; இன்னும், நன்மைகளில் விரைகிறார்கள். இவர்கள்தான் நல்லோரில் உள்ளவர்கள்."},{"id":115,"translation":"இன்னும், அவர்கள் நன்மையில் எதைச் செய்தாலும் அதன் நன்மையை அறவே இழக்கமாட்டார்கள். இன்னும், அல்லாஹ் (உண்மையான) இறை அச்சமுள்ளவர்களை நன்கறிந்தவன்."},{"id":116,"translation":"நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களின் செல்வங்களும், அவர்களின் சந்ததிகளும் அல்லாஹ்விடமிருந்து (தண்டனையில்) எதையும் அவர்களை விட்டும் தடுக்காது. இன்னும், அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":117,"translation":"இவ்வுலக வாழ்க்கையில் (இஸ்லாமிற்கு எதிராக அவர்கள்) தர்மம் செய்வதின் உதாரணம், அதில் கடுமையான குளிருள்ள ஒரு காற்றின் உதாரணத்தைப் போலாகும். தங்களுக்குத் தாமே அநீதியிழைத்த கூட்டத்தாரின் விளை நிலத்தை (அக்காற்று) அடைந்து, அதை அழித்தது. அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதியிழைக்கிறார்கள்."},{"id":118,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாத மற்றவர்களில் உற்ற நண்பர்களை (உங்களுக்கு) ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் குறைவு செய்யமாட்டார்கள்; நீங்கள் துன்பப்படுவதை (-சிரமப்படுவதை) அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்களிலிருந்து பகைமை வெளிப்பட்டுவிட்டது. இன்னும், (பகைமையில்) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைப்பதோ (தீமையால் அதைவிட) மிகப் பெரியது. திட்டமாக அத்தாட்சிகளை உங்களுக்கு விவரித்தோம், நீங்கள் புரிபவர்களாக இருந்தால்."},{"id":119,"translation":"நீங்கள் இவர்கள் மீது அன்பு காட்டுகிறீர்கள்! ஆனால், அவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவதில்லை. எல்லா வேதங்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை.) அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுகிறார்கள். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “உங்கள் கோபத்தில் நீங்கள் செத்து மடியுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.’’"},{"id":120,"translation":"உங்களை ஒரு நல்லது அடைந்தால் (அது) அவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இன்னும், உங்களை ஒரு தீங்கு அடைந்தால் அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு சிறிதளவும் தீங்கிழைக்காது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து (அறிந்து)ள்ளான்."},{"id":121,"translation":"இன்னும், (நபியே!) போருக்காக (அதற்கு பொருத்தமான) இடங்களில் நம்பிக்கையாளர்களை நீர் தங்க வைப்பதற்காக உம் குடும்பத்திலிருந்து காலையில் புறப்பட்ட சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":122,"translation":"உங்களில் இரு பிரிவினர் கோழைகளாகி (போரை விட்டு) விலகிவிட நாடிய சமயத்தை நினைவு கூர்வீராக! அல்லாஹ்வோ அவ்விருவரின் பொறுப்பாளன் ஆவான். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே (தவக்குல்) நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்களாக!"},{"id":123,"translation":"பத்(ர் போ)ரில் நீங்கள் குறைவானவர்களாக இருந்த நிலையில், திட்டவட்டமாக அல்லாஹ் உங்களுக்கு உதவினான். ஆகவே, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்."},{"id":124,"translation":"“(வானத்திலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவது உங்களுக்குப் போதுமாகாதா?’’ என நம்பிக்கையாளர்களுக்கு நீர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":125,"translation":"ஆம், போதுமாகிவிடும். நீங்கள் பொறுமையாக இருந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால்; இன்னும், அவர்கள் இதே வேகத்தில் (-இதே நேரத்தில்) உங்களிடம் (போருக்கு) வந்தால், (தங்களைத் தாமே) அடையாளமிட்டுக்கொண்ட ஐயாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவுவான்."},{"id":126,"translation":"இன்னும், உங்களுக்கு நற்செய்தியாகவும், அதன் மூலம் உங்கள் உள்ளங்கள் நிம்மதி அடைவதற்காகவும் தவிர அல்லாஹ் அதை (-வானவர்களை இறக்கிவைப்பதை) ஏற்படுத்தவில்லை. இன்னும் உதவி வராது, மிகைத்தவனும் ஞானவானுமாகிய அல்லாஹ்விடமிருந்தே தவிர."},{"id":127,"translation":"நிராகரிப்பாளர்களில் ஒரு பகுதியை அல்லாஹ் அழிப்பதற்காக; அல்லது, அல்லாஹ் அவர்களை கேவலப்படுத்திவிட, அவர்கள் (தங்கள்) ஆசை நிறைவேறாதவர்களாக திரும்புவதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்)."},{"id":128,"translation":"அல்லது, அவர்க(ளில் மீதமுள்ளவர்க)ளை அல்லாஹ் மன்னிப்பதற்காக; அல்லது, நிச்சயமாக அவர்கள் அநியாயக்காரர்கள் என்பதால் அவர்களை அல்லாஹ் தண்டிப்பதற்காக (அல்லாஹ் உங்களுக்கு உதவினான்). (ஆகவே, இவை) எதிலும் (நபியே) உமக்கு அதிகாரம் ஏதும் இல்லை. (இவை அனைத்தும் அல்லாஹ்விற்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் உள்ளவை ஆகும். அவன் தான் நாடியவர்களுடன் நாடியபடி நடப்பான்.)"},{"id":129,"translation":"இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியவை! அவன், தான் நாடியவர்களை மன்னிப்பான்; இன்னும், தான் நாடியவர்களை தண்டிப்பான். இன்னும், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":130,"translation":"நம்பிக்கையாளர்களே! (வட்டி வாங்காதீர்கள்! அதிலும் குறிப்பாக) வட்டியை இரட்டிப்பாக்கி பன்மடங்குகளாக (வாங்கி) புசிக்காதீர்கள். (-வட்டிக்கு வட்டி வாங்காதீர்கள்!) இன்னும், நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை (எப்போதும்) அஞ்சுங்கள்."},{"id":131,"translation":"இன்னும், நிராகரிப்பாளர்களுக்காக தயார்படுத்தப்பட்ட (நரக) நெருப்பை அஞ்சுங்கள்."},{"id":132,"translation":"இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்விற்கும், (அவனுடைய) தூதருக்கும் (மார்க்க சட்டங்கள் எல்லாவற்றிலும்) கீழ்ப்படியுங்கள்."},{"id":133,"translation":"இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது."},{"id":134,"translation":"அவர்கள், செல்வத்திலும் வறுமையிலும் தர்மம் செய்வார்கள்; இன்னும், கோபத்தை மென்றுவிடுவார்கள்; இன்னும், மக்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":135,"translation":"இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள்."},{"id":136,"translation":"அத்தகையவர்கள் - அவர்களின் கூலி அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கங்களும் ஆகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நல்ல அமல் செய்பவர்களின் கூலி மிக சிறந்ததாக இருக்கும்!"},{"id":137,"translation":"உங்களுக்கு முன்னர் (பாவிகளுடன் அல்லாஹ் நடந்து கொண்ட) பல நடைமுறைகள் (இன்னும் அவர்கள் மீது அல்லாஹ் இறக்கிய பல தண்டனைகள்) சென்றுவிட்டன. ஆகவே, பூமியில் சுற்றுங்கள். இன்னும், பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள்!"},{"id":138,"translation":"(குர்ஆனாகிய) இது (உலக) மக்கள் அனைவருக்கும் ஒரு தெளிவுரையும் நேர்வழிகாட்டியுமாகும். இன்னும், (குறிப்பாக) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு (இது) (பலனளிக்கும்) நல்லுபதேசம் ஆகும்."},{"id":139,"translation":"நீங்கள் துணிவு இழக்காதீர்கள்; கவலைப்படாதீர்கள்; நீங்கள்தான் உயர்ந்தவர்கள் நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால்."},{"id":140,"translation":"உங்களுக்கு காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டால் (நிராகரிப்பவர்களாக இருக்கின்ற அந்த) மக்களுக்கும் அது போன்ற காயம் (-உயிர்ச் சேதம், உடல் சேதம்) ஏற்பட்டுள்ளது. (சோதனைகள் நிறைந்த) அந்த நாள்கள் - அவற்றை மக்களுக்கு மத்தியில் (சில சமயம் அவர்களுக்கும் சில சமயம் உங்களுக்கும்) நாம் சுழற்றுகிறோம். (உண்மையான) நம்பிக்கையாளர்களை அல்லாஹ் (நீங்கள் அறியும்படி வெளிப்படையாக) அறிவதற்காகவும், உங்களில் சிலரை போரில் கொல்லப்படும் தியாகிகளாக அவன் எடுப்பதற்காகவும் (காலங்களை ஒரு சமயம் உங்களுக்கு சாதகமாகவும் ஒரு சமயம் உங்களுக்கு பாதகமாகவும் அல்லாஹ் சுழற்றுகிறான்). (அல்லாஹ்வின் மார்க்கத்தை எதிர்க்கின்ற) அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்க மாட்டான்."},{"id":141,"translation":"இன்னும், நம்பிக்கையாளர்களை சோதி(த்து சுத்த)ப்ப(டுத்துவ)தற்காகவும், நிராகரிப்பாளர்களை அழிப்பதற்காகவும் (அல்லாஹ் காலங்களை சுழற்றுகின்றான்)."},{"id":142,"translation":"பொறுமையாளர்களை அறிவதுடன், உங்களில் (‘ஜிஹாது’) போர் புரிந்தவர்களை அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல், நீங்கள் சொர்க்கத்தில் பிரவேசிக்க நினைத்தீர்களா?"},{"id":143,"translation":"இன்னும், திட்டவட்டமாக, (போரில்) மரணத்தைச் சந்திப்பதற்கு முன்னர் அதை ஆசைப்படுபவர்களாக இருந்தீர்கள். ஆக, (இப்போது) அதை நீங்கள் கண்கூடாக பார்த்தும் விட்டீர்கள்."},{"id":144,"translation":"முஹம்மத் ஒரு தூதரே தவிர (இறைவன்) இல்லை. அவருக்கு முன்னர் (பல) தூதர்கள் (வந்து) சென்றுவிட்டார்கள். அவர் இறந்தால்; அல்லது, கொல்லப்பட்டால் நீங்கள் (மார்க்கத்தை விட்டும்) உங்கள் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவீர்களோ? எவர் தன் குதிங்கால்கள் மீது புரண்டுவிடுவாரோ (அவர்) அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்குசெய்யமுடியாது. நன்றி செலுத்துபவர்களுக்கு அல்லாஹ் (நற்)கூலி வழங்குவான்."},{"id":145,"translation":"இன்னும், எந்த ஓர் ஆன்மாவும் மரணிப்பது சாத்தியம் இல்லை, அல்லாஹ்வின் அனுமதியுடன் காலம் குறிக்கப்பட்ட விதியின் படியே தவிர. இன்னும், எவர் உலகத்தின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், எவர் மறுமையின் நன்மையை நாடுவாரோ அவருக்கு அதிலிருந்து கொடுப்போம். இன்னும், நன்றி செலுத்துபவர்களுக்கு (நற்)கூலி வழங்குவோம்."},{"id":146,"translation":"எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் (சேர்ந்து எதிரிகளிடம்) அதிகமான இறை நேச நல்லடியார்கள் போர் புரிந்தனர். ஆக, அல்லாஹ்வின் பாதையில் தங்களுக்கு ஏற்பட்ட (சிரமத்)தின் காரணமாக (எதிரிகள் முன்) அவர்கள் துணிவு இழக்கவில்லை; இன்னும், பலவீனமடையவில்லை; இன்னும், பணியவில்லை. அல்லாஹ் (இத்தகைய) பொறுமையாளர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":147,"translation":"இன்னும், “எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியத்தில் நாங்கள் வரம்புமீறியதையும் எங்களுக்கு மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இன்னும், நிராகரிக்கும் மக்களுக்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக!’’ என்று கூறியதைத் தவிர அவர்களுடைய கூற்றாக (வேறொன்றும்) இருக்கவில்லை."},{"id":148,"translation":"ஆகவே, அல்லாஹ் அவர்களுக்கு உலகத்தின் நன்மையையும், மறுமையின் அழகான நன்மையையும் கொடுத்தான். அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":149,"translation":"நம்பிக்கையாளர்களே! நிராகரிப்பாளர்களுக்கு நீங்கள் கீழ்ப்படிந்தால் உங்கள் குதிங்கால்கள் மீது உங்களை அவர்கள் (இறை நம்பிக்கையிலிருந்து நிராகரிப்பின் பக்கம்) திருப்பி விடுவார்கள். ஆக, (அப்போது நீங்கள் வழிகெட்டு, இம்மையையும் மறுமையையும் இழந்து) நஷ்டவாளிகளாக திரும்பி விடுவீர்கள்."},{"id":150,"translation":"மாறாக, அல்லாஹ்தான் உங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) ஆவான். இன்னும், உதவியாளர்களில் அவனே (உங்களுக்கு மிகச்) சிறந்தவன் ஆவான்."},{"id":151,"translation":"அல்லாஹ் எதற்கு ஓர் ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு இணையாக்கி வணங்கிய காரணத்தால் அந்த நிராகரிப்பாளர்களுடைய உள்ளங்களில் நாம் திகிலை போடுவோம். இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அநியாயக்காரர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது."},{"id":152,"translation":"(நம்பிக்கையாளர்களே! உஹுத் போரில்) நீங்கள் அவனுடைய அனுமதியுடன் (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை வெட்டி வீழ்த்தியபோது அல்லாஹ் தன் வாக்கை உங்களுக்கு திட்டவட்டமாக உண்மையாக்கினான். இறுதியாக, நீங்கள் கோழையாகி, (தூதருடைய) கட்டளையில் தர்க்கித்து, நீங்கள் விரும்புவதை அவன் உங்களுக்குக் காண்பித்ததற்கு பின்னர் (தூதருக்கு) மாறுசெய்தபோது (அல்லாஹ் தன் உதவியை நிறுத்தினான்). (மலைக் குன்றின் மீது நிறுத்தப்பட்டிருந்த) உங்களில் உலக (செல்வ)த்தை நாடி (நபியின் கட்டளையை மீறி மலையிலிருந்து கீழே இறங்கி)யவரும் உண்டு. இன்னும், உங்களில் மறுமை(யின் நன்மை)யை நாடிய (நபியின் கட்டளைப்படி அங்கேயே இருந்து வீர மரணம் அடைந்த)வரும் உண்டு. பிறகு உங்களைச் சோதிப்பதற்காக (தோற்கடிக்கப்பட இருந்த) அவர்களை விட்டும் உங்களை திருப்பினான். (இன்னும் உங்கள் தவறுக்குப் பின்னர்) திட்டவட்டமாக அவன் உங்களை மன்னித்துவிட்டான். அல்லாஹ், நம்பிக்கையாளர்கள் மீது (எப்போதும் விசேஷமான) அருளுடையவன் ஆவான்."},{"id":153,"translation":"(உஹுத் போரில் அல்லாஹ்வுடைய) தூதர் உங்களுக்கு (படையின் இறுதி(ப் பகுதி)யில் இருந்தவாறு உங்களை அழைக்க, நீங்கள் ஒருவரையும் எதிர்பார்க்காமல் வேகமாக ஓடிய சமயத்தை நினைவு கூருங்கள். (தூதருக்கு நீங்கள் கொடுத்த) துயரத்தின் காரணமாக உங்களுக்கு(ம் தோல்வியின்) துயரத்தையே (அல்லாஹ்) கூலியாக்கினான், காரணம், உங்களுக்கு தவறிவிட்ட வெற்றிக்காகவும்; இன்னும், உங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்காகவும் நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகும். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவன் ஆவான்."},{"id":154,"translation":"பிறகு, துயரத்திற்குப் பின்னர் உங்கள் மீது சிறு நித்திரையை மன நிம்மதிக்காக இறக்கினான். உங்களில் ஒரு வகுப்பாரை அது சூழ்ந்தது. (வேறு) ஒரு வகுப்பாரோ, அவர்களுக்கு அவர்களது ஆன்மாக்கள் அதிக கவலையைத் தந்தன. (இணைவைப்பவர்களின்) மடத்தனமான எண்ணத்தைப் போன்று அல்லாஹ்வைப் பற்றி உண்மை அல்லாததை எண்ணுகிறார்கள். “நமக்கு அதிகாரத்தில் ஏதும் உண்டா?’’ என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக: “நிச்சயமாக எல்லா அதிகாரமும் அல்லாஹ்விற்குரியதே.’’ உமக்கு வெளிப்படுத்தாதவற்றை அவர்கள் தங்களுக்குள் மறைக்கிறார்கள். “அதிகாரத்தில் ஏதும் நமக்கு இருந்திருந்தால், இங்கு கொல்லப்பட்டிருக்க மாட்டோம்” எனக் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்தாலும் எவர்கள் மீது (போரில்) கொல்லப்படுவது விதிக்கப்பட்டுவிட்டதோ அவர்கள் தாங்கள் கொல்லப்படும் இடங்களை நோக்கி வெளியாகி வந்தே தீருவார்கள்.’’ (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களிலுள்ளவற்றைப் பரிசோதிப்பதற்காகவும், உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றைப் பரிசுத்தமாக்குவதற்காகவும் (இவ்வாறு செய்தான்). இன்னும், நெஞ்சங்களில் உள்ளதை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":155,"translation":"இரு கூட்டங்கள் (உஹுதில்) சந்தித்த நாளில் உங்களில் எவர்கள் (போரிலிருந்து) விலகினார்களோ, (அவர்கள் நிராகரிப்பினால் விலகவில்லை. மாறாக) அவர்களை ஷைத்தான் சறுகச் செய்ததெல்லாம் அவர்கள் செய்த சில (தவறான) செயல்களின் காரணமாகத்தான். திட்டவட்டமாக அல்லாஹ் அவர்களை முழுமையாக மன்னித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா சகிப்பாளன் ஆவான்."},{"id":156,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பாளர்களைப் போன்று ஆகிவிடாதீர்கள். அவர்களுடைய (முஃமினான) சகோதரர்கள் பூமியில் பயணித்தால் அல்லது போர்புரிபவர்களாக இருந்தால் அவர்களுக்கு (அந்நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: “அவர்கள் நம்மிடமே இருந்திருந்தால் மரணித்திருக்கவும் மாட்டார்கள்; கொல்லப்பட்டிருக்கவும் மாட்டார்கள்.’’ அவர்களுடைய உள்ளங்களில் இதை (-இந்த நம்பிக்கையை) ஒரு கைசேதமாக ஆக்குவதற்காகவே (அல்லாஹ் இவ்வாறு செய்தான்). அல்லாஹ்தான் வாழவைக்கிறான். இன்னும், மரணிக்க வைக்கிறான். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":157,"translation":"நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டாலும் அல்லது நீங்கள் இறந்தாலும் திட்டமாக அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு கிடைக்கும்) மன்னிப்பும் கருணையும் (இவ்வுலகில்) அ(ந்த இணைவைப்ப)வர்கள் சேகரித்து (சேமித்து) வைக்கின்ற (உலக செல்வத்)தை விட மிகச் சிறந்ததாகும்."},{"id":158,"translation":"இன்னும் நீங்கள் இறந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் திட்டமாக அல்லாஹ்விடமே (மறுமையில்) ஒன்று திரட்டப்படுவீர்கள்."},{"id":159,"translation":"ஆக, (நபியே!) நீர் அல்லாஹ்வின் கருணையினால் அவர்களுக்கு மென்மையானவராக ஆகிவிட்டீர். இன்னும், நீர் கடுகடுப்பானவராகவோ, உள்ளம் கடுமையானவராகவோ இருந்திருந்தால் உமது சுற்றுப்புறத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றிருப்பார்கள். ஆகவே, அவர்களை மன்னிப்பீராக! இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) மன்னிப்புத் தேடுவீராக! இன்னும், காரியங்களில் அவர்களுடன் ஆலோசிப்பீராக! ஆக, நீர் (ஒரு முடிவை) உறுதிசெய்தால் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் (தன் மீது) நம்பிக்கை வை(த்து தன்னை சார்ந்து இரு)ப்பவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":160,"translation":"அல்லாஹ் உங்களுக்கு உதவினால் உங்களை மிகைப்பவர் அறவே இல்லை. இன்னும், அவன் உங்களை கைவிட்டால் அதற்குப் பின்னர் உங்களுக்கு உதவுபவர் யார் (இருக்கிறார்)? ஆகவே, நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பார்களாக!"},{"id":161,"translation":"மோசடி செய்வது ஒரு நபிக்கு அழகல்ல. எவர் மோசடி செய்வாரோ அவர், தான் செய்த மோசடியுடன் மறுமை நாளில் வருவார். பிறகு, ஒவ்வோர் ஆன்மாவு(க்கு)ம் அது செய்ததை முழுமையாக (கணக்கிட்டு கூலி) கொடுக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":162,"translation":"ஆக, யார் (நேர்மையாக நடப்பதில்) அல்லாஹ்வின் விருப்பத்தைப் பின்பற்றினாரோ அவர், யார் (மோசடி செய்து) அல்லாஹ்வின் கோபத்தை சுமந்தாரோ, இன்னும் அவருடைய தங்குமிடம் நரகமாக ஆகிவிட்டதோ அவரைப் போன்று ஆகுவாரா? அ(ந்த நரகமான)து மிக கெட்ட மீளுமிடமாகும்."},{"id":163,"translation":"அவர்கள் அல்லாஹ்விடத்தில் பல தரங்கள் (உடையோர்) ஆவர். அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":164,"translation":"நம்பிக்கையாளர்கள் மீது திட்டமாக அல்லாஹ் அருள் புரிந்தான் - அவர்களிலிருந்தே ஒரு தூதரை அவர்களுக்கு மத்தியில் அனுப்பியபோது. அவர் அவர்களுக்கு அவனுடைய வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார்; இன்னும், அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார்; இன்னும், அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். நிச்சயமாக (அவர்கள் இதற்கு) முன்னர் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்."},{"id":165,"translation":"(நிராகரிப்பாளர்கள் மூலம் உஹுத் போரில்) உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டபோது (‘பத்ர்’ போரில் அவர்களுக்கு) அது போன்று இருமடங்கை நீங்கள் கொடுத்திருக்க, “இ(ந்த சோதனையான)து எங்கிருந்து வந்தது” என்று கூறுகிறீர்களா? (நபியே!) கூறுவீராக: “உங்களிடமிருந்துதான் அது ஏற்பட்டது. (அதற்கு காரணம் நீங்கள்தான்.)” நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":166,"translation":"இன்னும், இரு கூட்டங்களும் (உஹுத் போரில்) சந்தித்த நாளில் உங்களுக்கு எது ஏற்பட்டதோ அது அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் ஏற்பட்டது. (அல்லாஹ்) நம்பிக்கையாளர்களை (நயவஞ்சகக்காரர்களிடமிருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது)."},{"id":167,"translation":"இன்னும், நயவஞ்சகர்களை (நம்பிக்கையாளர்களில் இருந்து பிரித்து வெளிப்படையாக) அறிவதற்காகவும் (இந்த சோதனை உங்களுக்கு ஏற்பட்டது). இன்னும், “வாருங்கள், அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். அல்லது, (அந்த நிராகரிப்பவர்களைத்) தடுங்கள்” என்று அ(ந்த நயவஞ்சகம் உடைய)வர்களுக்கு கூறப்பட்டது. (அதற்கு) “போர் என்று (இதை) நாங்கள் அறிந்திருந்தால் நிச்சயமாக உங்களைப் பின்பற்றி (போருக்கு வந்து) இருப்போம்” என்று கூறினார்கள். அன்றைய தினம் அவர்கள் நம்பிக்கையை விட நிராகரிப்புக்கே மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் உள்ளங்களில் இல்லாததை தங்கள் வாய்களால் கூறுகிறார்கள். இன்னும், அவர்கள் மறைப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான்."},{"id":168,"translation":"அ(ந்த நயவஞ்சகமுடைய)வர்கள் (தங்கள் வீடுகளில்) உட்கார்ந்து கொண்டு, (போரில் கொல்லப்பட்ட) தங்கள் (முஃமினான) சகோதரர்கள் பற்றி, “இவர்கள் எங்களுக்கு கீழ்ப்படிந்திருந்தால் (போரில்) கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்’’ என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களை விட்டும் மரணத்தை (அது உங்களுக்கு வரும்போது) நீங்கள் தடு(த்துப்பாரு)ங்கள்!’’"},{"id":169,"translation":"(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களை இறந்தவர்களாக எண்ணாதீர். மாறாக, (அவர்கள்) உயிருள்ளவர்கள், தங்கள் இறைவனிடம் அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள்."},{"id":170,"translation":"அல்லாஹ் தன் அருளால் அவர்களுக்கு கொடுத்ததினாலும் அவர்கள் மகிழ்ச்சியடைந்தவர்களாக இருப்பார்கள். இன்னும், தங்களுடன் வந்து சேராமல், தங்களுக்குப் பின்னால் (இவ்வுலகில் உயிரோடு தங்கி) இருப்பவர்களினாலும் அவர்கள் மகிழ்ச்சியடைவார்கள், அதாவது, (அவர்களும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டால்) “அவர்கள் மீது ஒரு பயமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்’’ என்று."},{"id":171,"translation":"அல்லாஹ்விடமிருந்து கொடுக்கப்படும் கிருபையினாலும், அருளினாலும், “நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் கூலியை வீணாக்க மாட்டான்’’ என்பதினாலும் அவர்கள் மகிழ்ச்சியாக உற்சாகமாக இருப்பார்கள்."},{"id":172,"translation":"அவர்கள் (-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்) தங்களுக்கு காயமேற்பட்ட பின்னரும் அல்லாஹ்விற்கும் தூதருக்கும் பதிலளித்தார்கள். (அவர்கள் காயங்களுடன் இருந்தபோதும் தூதரின் அழைப்பை ஏற்று போருக்கு சென்றார்கள்.) நல்லறம் புரிந்து, அல்லாஹ்வை அஞ்சிய (அ)வர்களுக்கு மகத்தான கூலி உண்டு."},{"id":173,"translation":"(-அந்த உண்மையான நம்பிக்கையாளர்கள்,) மக்கள் அவர்களுக்கு கூறினர்: “நிச்சயமாக மக்கள் (தங்கள் படைகளையும் ஆயுதங்களையும்) உங்களுக்காக (-உங்களை எதிர்ப்பதற்காக) திட்டமாக ஒன்று சேர்த்துள்ளனர், ஆகவே, அவர்களைப் பயப்படுங்கள்! (அவர்களுடன் போருக்கு சென்று விடாதீர்கள்!)’’ ஆனால், இந்த அச்சுறுத்தலோ அவர்களுக்கு நம்பிக்கையை(த்தான் மேலும்) அதிகப்படுத்தியது. இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன், அவன் சிறந்த பொறுப்பாளன்’’ என்று அவர்கள் (நம்பிக்கையுடன்) கூறினார்கள்."},{"id":174,"translation":"ஆக, அல்லாஹ்வின் கிருபை இன்னும் அருளுடன் அவர்கள் திரும்பினார்கள். அவர்களை ஒரு தீங்கும் அணுகவில்லை. இன்னும் அல்லாஹ்வின் விருப்பத்தை அவர்கள் பின்பற்றினார்கள். அல்லாஹ் (நம்பிக்கையாளர்கள் மீது) மகத்தான அருளுடையவன் ஆவான்."},{"id":175,"translation":"(உங்களை அச்சுறுத்திய) அவனெல்லாம் ஷைத்தான்தான். (அவன்) தன்(னை நம்புகின்ற) நண்பர்களை பயமுறுத்துகிறான். ஆகவே, நீங்கள் (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் அவர்களைப் பயப்படாதீர்கள்; (உங்கள் இறைவனாகிய) என்னைப் பயப்படுங்கள்."},{"id":176,"translation":"இன்னும், (நபியே!) நிராகரிப்பில் விரைபவர்கள் உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். மறுமையில் அறவே நற்பாக்கியத்தை அவர்களுக்கு ஏற்படுத்தாமல் இருக்கவே அல்லாஹ் நாடுகிறான். இன்னும், அவர்களுக்கு மகத்தான தண்டனை உண்டு."},{"id":177,"translation":"நிச்சயமாக, நம்பிக்கைக்குப் பகரமாக நிராகரிப்பை வாங்கியவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் அறவே தீங்கிழைக்க மாட்டார்கள். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":178,"translation":"நிராகரிப்பவர்கள் - “நாம் அவர்க(ளை உடனே தண்டிக்காமல் அவர்க)ளுக்கு அவகாசம் அளிப்பது அவர்களுக்கு நல்லதென்று” - நிச்சயம் எண்ண வேண்டாம். நாம் அவர்களுக்கு அவகாசமளிப்பதெல்லாம், அவர்கள் பாவத்தால் அதிகரிப்பதற்காகவே. இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவர்களுக்குண்டு."},{"id":179,"translation":"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இருக்கின்ற இதே நிலையில் நம்பிக்கையாளர்(களாகிய உங்)களை அல்லாஹ் விட்டுவிடுபவனாக இல்லை. (சோதனையின்) இறுதியாக நல்லவர்களிலிருந்து, தீயவர்களை பிரிப்பான். இன்னும், மறைவானவற்றை அல்லாஹ் உங்களுக்கு அறிவிப்பவனாகவும் இல்லை. எனினும் தன் தூதர்களில் தான் நாடியவர்களை அல்லாஹ் தேர்ந்தெடு(த்து அவருக்கு அறிவி)ப்பான். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கை கொண்டால், அல்லாஹ்வை அஞ்சினால் உங்களுக்கு மகத்தான கூலி (அல்லாஹ்விடம்) உண்டு."},{"id":180,"translation":"இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்ததில் கஞ்சத்தனம் செய்பவர்கள், “அது தங்களுக்கு நல்லது” என்று எண்ண வேண்டாம். மாறாக, அது அவர்களுக்குத் தீமையாகும். அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ (அது மறுமையில் விஷப் பாம்பாக மாற்றப்பட்டு அவர்களின் கழுத்துகளில்) அதை சுற்றப்படுவார்கள். இன்னும், வானங்கள் இன்னும் பூமியின் உரிமை அல்லாஹ்விற்கே உரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":181,"translation":"“நிச்சயமாக அல்லாஹ் ஏழையாவான். இன்னும், நாங்கள் செல்வந்தர்கள்’’ என்று கூறியவர்களுடைய கூற்றை திட்டவட்டமாக அல்லாஹ் செவியுற்றான். அவர்கள் கூறியதையும், நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவுசெய்வோம். இன்னும், “எரித்து பொசுக்கும் தண்டனையை சுவையுங்கள்’’ என்று கூறுவோம்."},{"id":182,"translation":"அதற்கு காரணம், “உங்கள் கரங்கள் முற்படுத்தியதும், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அநீதியிழைப்பவனாக இல்லை என்பதும் ஆகும்.’’"},{"id":183,"translation":"“நெருப்பு அதை சாப்பிடும்படியான ஒரு (குர்பானி) பலியை எங்களிடம் தூதர் எவரும் கொண்டுவருகின்ற வரை நாங்கள் அவரை நம்பிக்கை கொள்ளக்கூடாது என்று அல்லாஹ் எங்களிடம் நிச்சயமாக உடன்படிக்கை செய்திருக்கிறான்’’ என்று அவர்கள் கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “எனக்கு முன்னர் உங்களிடம் பல தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளையும் நீங்கள் கூறியதையும் திட்டமாக கொண்டு வந்தார்கள். ஆகவே, நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை (ஏன் நிராகரித்தீர்கள். இன்னும்,) ஏன் கொலை செய்தீர்கள்?’’"},{"id":184,"translation":"ஆக, (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், உமக்கு முன்னர் தெளிவான அத்தாட்சிகளையும் வேத நூல்களையும் ஒளிவீசுகிற வேதத்தையும் கொண்டு வந்த பல தூதர்களும் திட்டமாக பொய்ப்பிக்கப்பட்டுள்ளார்கள்."},{"id":185,"translation":"ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே. இன்னும், உங்கள் கூலிகளை நீங்கள் முழுமையாக கொடுக்கப்படுவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆக, எவர் (நரக) நெருப்பிலிருந்து தூரமாக்கப்பட்டு சொர்க்கத்தில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவாரோ, (அவர்) திட்டமாக வெற்றி பெற்றார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர (வேறு) இல்லை."},{"id":186,"translation":"(நம்பிக்கையாளர்களே!) உங்கள் செல்வங்களிலும், உங்கள் ஆன்மாக்களிலும் நிச்சயம் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களின் மூலமும், இணைவைத்து வணங்குபவர்களின் மூலமும் அதிகமான வசை மொழியை (-உங்களை சங்கடப்படுத்தும் பேச்சுகளை) நிச்சயம் நீங்கள் செவியுறுவீர்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி) வாழ்ந்தால் நிச்சயமாக அதுதான் உறுதிமிக்க (வீரமிகுந்த, வெற்றிக்குரிய) காரியங்களில் உள்ளதாகும்."},{"id":187,"translation":"அந்த சமயத்தை நினைவு கூருங்கள்: “வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் உறுதிமொழியை அல்லாஹ் வாங்கினான். அதாவது, அ(ந்த வேதத்)தை மக்களுக்கு நிச்சயம் நீங்கள் தெளிவுபடுத்த வேண்டும்; இன்னும், அதை நீங்கள் மறைக்க மாட்டீர்கள்’’ என்று. ஆனால், அவர்கள் அதைத் தங்கள் முதுகுகளுக்குப் பின்னால் எறிந்தனர். இன்னும், அதற்குப் பகரமாகச் சொற்ப கிரயத்தை வாங்கினர். அவர்கள் வாங்குவது மிக கெட்டதாகும். (பதவிக்காகவும் செல்வத்திற்காகவும் வேதத்தில் உள்ள சட்டத்தை மாற்றவும் மறைக்கவும் செய்தனர்.)"},{"id":188,"translation":"(நபியே! செயல்களில்) எவர்கள் அவர்கள் செய்த(தீய)தின் மூலம் மகிழ்ச்சி அடைகிறார்களோ; இன்னும், அவர்கள் செய்யாத (நல்ல)வற்றைக் கொண்டு அவர்கள் புகழப்படுவதை விரும்புகிறார்களோ அத்தகையவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாப்பில் இருப்பதாக நிச்சயம் நீர் எண்ணாதீர்! துன்புறுத்தும் தண்டனை (கண்டிப்பாக) அவர்களுக்கு உண்டு."},{"id":189,"translation":"வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது! இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":190,"translation":"நிச்சயமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் நிறைவான அறிவுடையவர்களுக்கு திட்டமாக அத்தாட்சிகள் உள்ளன."},{"id":191,"translation":"அவர்கள் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், தங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை (துதித்துப் புகழ்ந்து தொழுது) நினைவு கூர்வார்கள். இன்னும், வானங்கள், பூமி படைக்கப்பட்டிருப்பதில் அவர்கள் சிந்திப்பார்கள். (இன்னும், அவர்கள் பிரார்த்திப்பார்கள்:) “எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!”"},{"id":192,"translation":"“எங்கள் இறைவா! நிச்சயமாக நீ எவரை நரக நெருப்பில் நுழைக்கிறாயோ அவரை திட்டமாக இழிவுபடுத்தி விட்டாய். உதவியாளர்கள் யாரும் அநியாயக்காரர்களுக்கு இல்லை.”"},{"id":193,"translation":"“எங்கள் இறைவா! ஓர் அழைப்பாளர், உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்ளுங்கள் என்று நம்பிக்கையின் பக்கம் (எங்களை) அழைப்பதை நிச்சயமாக நாங்கள் செவிமடுத்தோம். ஆகவே, (உன்னையும் அவரையும்) நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! ஆகவே, எங்களுக்கு எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! இன்னும், எங்கள் குற்றங்களை எங்களை விட்டு அகற்றிவிடுவாயாக! இன்னும், (நீ எங்களுக்கு மரணத்தை கொடுக்கும்போது) அப்ரார்[1] என்ற நல்லோருடன் எங்களுக்கு மரணத்தைத் தருவாயாக! (எங்களையும் அவர்களில் சேர்த்து, அவர்களுடன் எங்களை எழுப்புவாயாக!)”","footnotes":"[1] அப்ரார் - அல்லாஹ்விற்கு நன்மை செய்தவர்கள். அதாவது, அல்லாஹ்விற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடந்து, அவனுக்கு (-அவனுடைய மார்க்கத்திற்கும் அவனுடைய அடியார்களுக்கும்) பணிவிடைகள் செய்து, அல்லாஹ்வை திருப்திப்படுத்தி, அல்லாஹ்வின் திருப்தியை பெற்ற நல்லடியார்கள் அப்ரார் ஆவார்கள்."},{"id":194,"translation":"“எங்கள் இறைவா! இன்னும், உன் தூதர்கள் மூலம் எங்களுக்கு நீ வாக்களித்ததை எங்களுக்குத் தருவாயாக! இன்னும், மறுமை நாளில் எங்களை இழிவுபடுத்தாதே! நிச்சயமாக நீ வாக்குறுதியை மீற மாட்டாய்’’ (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)"},{"id":195,"translation":"ஆகவே, “உங்களில் ஆண் அல்லது பெண்களில் (நற்)செயல் செய்பவரின் (நற்)செயலை நிச்சயம் நான் வீணாக்க மாட்டேன். உங்களில் சிலர், சிலரைச் சேர்ந்தவர்கள்தான். ஹிஜ்ரத் சென்றவர்கள், தங்கள் ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள், என் பாதையில் துன்புறுத்தப்பட்டவர்கள், போர் செய்தவர்கள், (அதில்) கொல்லப்பட்டவர்கள், அவர்களுடைய குற்றங்களை அவர்களை விட்டும் நிச்சயம் நான் அகற்றி விடுவேன். அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயம் அவர்களை பிரவேசிக்கச் செய்வேன்.’’ என்று அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு பதிலளி(த்து அவர்களின் பிரார்த்தனைகளை அங்கீகரி)த்தான். அல்லாஹ்விடமிருந்து நற்கூலியாக (இவை அவர்களுக்கு வழங்கப்படும்). இன்னும் அல்லாஹ், அவனிடத்தில்தான் அழகிய நற்கூலி உண்டு."},{"id":196,"translation":"(நபியே!) நிராகரிப்பவர்கள் (ஆடம்பரமாக) நகரங்களில் சுற்றித்திரிவது உம்மை ஒருபோதும் மயக்கிவிட வேண்டாம்."},{"id":197,"translation":"(இது) ஓர் அற்ப இன்பமாகும். பிறகு, அவர்களுடைய தங்குமிடம் ஜஹன்னம் (நரகம்)தான். அது மிக கெட்ட தங்குமிடமாகும்."},{"id":198,"translation":"எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சி (பாவங்களை விட்டு விலகி)யவர்கள், அவர்களுக்கு அல்லாஹ்விடமிருந்து விருந்தோம்பலாக அவற்றின் கீழ் நதிகள் ஓடும் சொர்க்கங்கள் உண்டு. அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அல்லாஹ்விடம் உள்ள (வெகுமதியான)து நல்லடியார்களுக்கு மிகச் சிறந்ததாகும்."},{"id":199,"translation":"இன்னும், வேதக்காரர்களில் அல்லாஹ்விற்கு பணிந்தவர்களாக அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும், அவர்களுக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள், அல்லாஹ்வுடைய வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்க மாட்டார்கள். (வேத வசனங்களை மாற்றி காசுக்காக தவறான சட்டங்களை கூற மாட்டார்கள்.) அவர்கள், அவர்களுடைய கூலி அவர்களுடைய இறைவனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின் செயல்களை) கணக்கெடு(த்து தகுந்த கூலி கொடு)ப்பதில் மிக விரைவானவன்."},{"id":200,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக பொறுமையாக இருங்கள்; இன்னும், (உங்கள் எதிரிகளின் பொறுமையை விட) நீங்கள் அதிகம் பொறுமையாக இருங்கள்; இன்னும், (உங்களிடம் சண்டை செய்கிற எதிரிகளுடன்) போருக்குத் தயாராகுங்கள்; இன்னும், (எல்லா நிலையிலும்) அல்லாஹ்வை அஞ்சுங்கள்!"}]},{"id":4,"verses":[{"id":1,"translation":"மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். (அவன்) உங்களை ஒரே ஓர் ஆன்மாவிலிருந்து படைத்தான். இன்னும், அதிலிருந்து அதனுடைய மனைவியைப் படைத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து அதிகமான ஆண்களையும் பெண்களையும் (இவ்வுலகத்தின் பல பாகங்களில்) பரப்பினான். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் மூலமாகவே உங்களுக்குள் (தேவைகளை ஒருவர் மற்றவரிடம்) கேட்டுக் கொள்கிறீர்கள். இன்னும், இரத்த உறவுகளை முறிப்பதை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பாளனாக இருக்கிறான்."},{"id":2,"translation":"இன்னும், அனாதைகளுக்கு அவர்களுடைய செல்வங்களை கொடுத்துவிடுங்கள். இன்னும், (அதிலுள்ள) உயர்ந்ததை (நீங்கள்) எடுத்துக் கொண்டு அதற்கு பதிலாக (உங்களிடமுள்ள) மட்டமானதை (அவர்களுக்கு) கொடுக்காதீர்கள். இன்னும், அவர்களுடைய செல்வங்களை உங்கள் செல்வங்களுடன் (சேர்த்து) விழுங்காதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது."},{"id":3,"translation":"இன்னும், அனாதை(ப் பெண்களை திருமணம் செய்து, அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்க மாட்டீர்கள் என நீங்கள் பயந்தால், (மற்ற) பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாக; அல்லது, மும்மூன்றாக: அல்லது, நான்கு நான்காக மணம் புரியுங்கள். (பல மனைவிகளுக்கிடையில்) நீதமாக நடக்கமாட்டீர்கள் என பயந்தால் ஒருத்தியை மட்டும் மணம் புரியுங்கள். அல்லது, உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அநீதியிழைக்காமல் இருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும்."},{"id":4,"translation":"இன்னும், பெண்களுக்கு அவர்களுடைய மணக்கொடைகளைக் கட்டாயக் கடமையாக (மனமுவந்து மகிழ்வுடன்) கொடுங்கள். அதிலிருந்து ஒரு சிறிதை உங்களுக்கு (விட்டுக் கொடுக்க) அவர்கள் மனம் விரும்பினால் மகிழ்ச்சியாக, இன்பமாக (அவர்கள் விட்டுக் கொடுத்த) அதை புசியுங்கள்."},{"id":5,"translation":"இன்னும், (அனாதைகளின் பொறுப்பாளர்களே!) உங்களுக்கு வாழ்வாதாரமாக அல்லாஹ் ஆக்கிய உங்கள் (அனாதைகளின்) செல்வங்களை (அவர்களில் யார்) புத்தி குறைவானவர்களாக இருக்கிறார்களோ அவர்களிடம் கொடுக்காதீர்கள். இன்னும், அவற்றில் அவர்களுக்கு நீங்களே உணவளியுங்கள். இன்னும், அவர்களுக்கு ஆடை அணிவியுங்கள். இன்னும், (அவர்கள் தங்கள் செல்வத்தை கேட்டால் செல்வத்தை நிர்வகிக்கும் அறிவுத் திறமை உங்களுக்கு வந்தவுடன் உங்கள் செல்வத்தை உங்களிடம் ஒப்படைக்கிறோம் என்று) நல்ல சொல்லை அவர்களுக்குச் சொல்லுங்கள்!"},{"id":6,"translation":"இன்னும், அனாதைக(ளிடம் அவர்களின் செல்வங்களை கொடுப்பதற்கு முன்னர் அவர்க)ளைச் சோதியுங்கள், இறுதியாக, அவர்கள் திருமண (பருவ)த்தை அடைந்தால் (செல்வத்தை நிர்வகிக்கக்கூடிய) தெளிவான அறிவுத் திறமையையும் அவர்களிடம் நீங்கள் கண்டால், அவர்களுடைய செல்வங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். அவர்கள் பெரியவர்களாகி(த் தங்கள் செல்வங்களை திரும்பப் பெற்று) விடுவார்கள் என்பதற்காக, அளவு கடந்தும் அவசர அவசரமாகவும் அவற்றை சாப்பிடாதீர்கள் (அனுபவித்து அழித்துவிடாதீர்கள்). (அனாதையின் காப்பாளர்களில்) எவர் செல்வந்தராக இருக்கிறாரோ (அனாதையின் செல்வத்திலிருந்து தான் பயனடைவதை) அவர் தவிர்க்கவும். எவர் ஏழையாக இருக்கிறாரோ அவர் (நீதமாக) முறையுடன் (அவசியத்திற்கேற்ப அதிலிருந்து) புசிக்கவும். ஆக, அவர்களுடைய செல்வங்களை நீங்கள் அவர்களிடம் ஒப்படைத்தால் (அப்போது) அவர்களுக்கு முன்னர் சாட்சிகளை வையுங்கள். சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":7,"translation":"பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச் சென்ற(சொத்)திலிருந்து ஆண்களுக்கு பங்குண்டு. (அவ்வாறே) பெற்றோரும் நெருங்கிய உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து பெண்களுக்கு பங்குண்டு. அ(வர்கள் விட்டுச் சென்ற)து, குறைவாக இருந்தாலும் சரி; அல்லது, அதிகமாக இருந்தாலும் சரி. அந்த பங்குகள் எல்லாம் அளவு நிர்ணயம் செய்யப்பட்டவை ஆகும்."},{"id":8,"translation":"இன்னும், பங்கு வைக்கப்படும்போது உறவினர்கள், அனாதைகள், ஏழைகள் (அங்கு) வந்தால், அவர்களுக்கும் அதிலிருந்து (ஏதும் தானமாக) கொடுங்கள். இன்னும், (கொடுக்க முடியவில்லை என்றால்) அவர்களுக்கு (அன்பான) நல்ல சொல்லை சொல்லுங்கள்."},{"id":9,"translation":"(மரண தருவாயில் மரண சாசனம் கூறுபவரிடம் பிரசன்னமாகி இருப்பவர்கள் அவர் தனது சந்ததிகள் அல்லாத மற்ற உறவுகளுக்கும் பிற தர்மங்களுக்கும் அவரது செல்வத்தைக் கொடுக்க தூண்டி, அவரது சந்ததிகளை அவர் செல்வமின்றி விட்டுச்செல்ல நிர்ப்பந்திப்பவர்கள்) தங்கள் மரணத்திற்குப் பின்னர் தாங்கள் பலவீனமான சந்ததியை விட்டுச்சென்றால் எப்படி அவர்கள் மீது (அவர்களுக்கு செல்வங்கள் இல்லாமல் போய்விட்டால் வாழ்க்கையில் சிரமப்படுவார்களே என்று) பயப்படுவார்களோ அப்படியே (மரணத் தருவாயில் உள்ள இவரின் சந்ததிகள் விஷயத்திலும்) பயப்பட வேண்டும். ஆகவே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளட்டும். இன்னும், நேர்மையான சொல்லைச் சொல்லட்டும். (இறப்பவர் தனது மூன்றில் ஒன்றை மட்டுமே வாரிசுகள் அல்லாத உறவுகளுக்கு; இன்னும், நல்ல காரியங்களுக்கு கொடுக்கும்படியும்; மீதமுண்டான சொத்துக்களை சந்ததிகளுக்கு பாதுகாத்து வைக்கும்படியும் மார்க்க முறைப்படி வழிகாட்ட வேண்டும்!)"},{"id":10,"translation":"நிச்சயமாக, எவர்கள் அனாதைகளின் செல்வங்களை அநியாயமாக விழுங்குகிறார்களோ அவர்கள் தங்கள் வயிறுகளில் விழுங்குவதெல்லாம் நெருப்பைத்தான். இன்னும், விரைவில் அவர்கள் நரக ஜுவாலையில் எரிவார்கள்."},{"id":11,"translation":"உங்கள் பிள்ளைகளில் (சொத்து பங்கிடுதல் குறித்து) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான். ஆணுக்கு, இரு பெண்களின் பங்கு போன்று (பாகம்) உண்டு. (ஆண் பிள்ளைகள் இல்லாமல், இரண்டு அல்லது) இரண்டிற்கும் மேலான பெண் (பிள்ளை)களாக இருந்தால் (தாய் தந்தை) விட்டுச் சென்ற(சொத்)தில் மூன்றில் இரண்டு (பங்குகள்) அவர்களுக்கு உண்டு. (ஆண் பிள்ளைகளும் இல்லாமல், பெண் பிள்ளை) ஒருத்தியாக மட்டும் இருந்தால் அவளுக்கு (சொத்தில்) பாதி (பங்கு) உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இருந்தால் அவருடைய தாய், தந்தைக்கு (இறந்தவர்) விட்டுச் சென்ற (சொத்)தில் ஆறில் ஒன்று உண்டு. (இறந்த) அவருக்கு பிள்ளை இல்லாமல் அவருக்கு அவருடைய தாய், தந்தை வாரிசுகளாக ஆகினால் அவருடைய தாய்க்கு மூன்றில் ஒன்று(ம் தந்தைக்கு மீதமுள்ள சொத்து முழுவதும்) உண்டு. (இறந்த) அவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவருடைய தாய்க்கு ஆறில் ஒன்று உண்டு. (ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி மட்டும் இருந்தால் தாய்க்கு மூன்றில் ஒன்று உண்டு.) (இவை அனைத்தும் வஸிய்யத் எனும்) அவர் கூறும் மரண சாசனம், அல்லது (அவருடைய) கடனுக்குப் பின்னர் (கொடுக்கப்படும்). உங்கள் தந்தைகள் இன்னும் உங்கள் ஆண் பிள்ளைகளில் யார் உங்களுக்குப் பலனளிப்பதில் மிக நெருங்கியவர் என்பதை அறியமாட்டீர்கள். (இவை) அல்லாஹ்வின் சட்டமாக(வும் நிர்ணயிக்கப்பட்ட பங்காகவும்) இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":12,"translation":"இன்னும், உங்கள் மனைவிகள் விட்டுச் சென்ற (சொத்)தில் - அவர்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் - உங்களுக்குப் பாதி உண்டு. ஆக, அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றதில் உங்களுக்குக் கால் (பாகம்) உண்டு, அவர்கள் செய்கின்ற மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். இன்னும், உங்களுக்குப் பிள்ளை இல்லையென்றால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் கால் பாகம் (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுக்கு உண்டு. ஆக, உங்களுக்குப் பிள்ளை இருந்தால் நீங்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் எட்டில் ஒன்று (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுக்கு உண்டு, நீங்கள் செய்யும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். இன்னும், (தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய) வாரிசுகள் இல்லாத ஓர் ஆண் அல்லது ஒரு பெண் (மரணித்து) இருந்தால் இன்னும் அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால், அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும் (இறந்தவருடைய சொத்தில்) ஆறில் ஒன்று உண்டு. இதைவிட அதிகமாக அவர்கள் இருந்தால் அவர்கள் மூன்றில் ஒன்றில் (சமமான) பங்குதாரர்கள் ஆவர், செய்யப்படும் மரண சாசனம், அல்லது கடனுக்குப் பின்னர். (இந்தக் கடன், மற்றும் மரண சாசனத்தால் வாரிசுகளில் எவருக்கும் இறந்தவர்) நஷ்டம் ஏற்படுத்தாதவராக இருக்க வேண்டும். (இந்த சட்டங்கள்) அல்லாஹ்விடமிருந்து நல்லுபதேசமாக (உங்களுக்கு கூறப்படுகின்றன). இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன் ஆவான்."},{"id":13,"translation":"இவை, அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அதில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":14,"translation":"இன்னும், எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்வாரோ, அவனுடைய சட்டங்களை மீறுவாரோ அவரை (அல்லாஹ்) நரகத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதில் (அவர்) நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையும் அவருக்கு உண்டு."},{"id":15,"translation":"இன்னும், உங்கள் பெண்களில் மானக்கேடானதை செய்பவர்கள் மீது உங்களிலிருந்து நான்கு நபர்களை சாட்சியாகக் கொண்டு வாருங்கள். அவர்கள் (அதை உண்மைப்படுத்தி) சாட்சியளித்தால் அவர்களுக்கு மரணம் வரும் வரை அல்லது அல்லாஹ் அவர்களுக்கு (வேறு) ஒரு சட்டத்தை ஏற்படுத்தும் வரை அவர்களை வீடுகளில் தடுத்து வையுங்கள்."},{"id":16,"translation":"இன்னும், உங்களிலிருந்து இரு ஆண்கள் அ(ந்த மானக்கேடான குற்றத்)தைச் செய்தால் அவ்விருவரையும் துன்புறுத்துங்கள். ஆக, அவ்விருவரும் திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி (தங்களை) சீர்திருத்திக்கொண்டால் அவர்களைப் புறக்கணித்து (விட்டு)விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை அங்கீகரிப்பவனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":17,"translation":"அல்லாஹ்விடம் தவ்பா அங்கீகரிக்கப்படுவதெல்லாம் அறியாமையினால் பாவத்தைச் செய்து பிறகு அதிசீக்கிரத்தில் (அதிலிருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்புகிறவர்களுக்குத்தான். ஆக, அல்லாஹ் அவர்களது தவ்பாவை அங்கீகரி(த்து அவர்களை மன்னி)ப்பான். இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":18,"translation":"பாவங்களைச் செய்பவர்கள், அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், “இப்போது நிச்சயமாக நான் (அவற்றை விட்டு) திருந்தி (மன்னிப்புக் கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பி) விடுகிறேன்’’ என்று கூறுபவர்களுக்கும், நிராகரிப்பாளர்களாக இறந்து விடுபவர்களுக்கும் தவ்பா - பிழைபொறுப்பு கிடைக்காது. துன்புறுத்தும் தண்டனையை இவர்களுக்காக நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்."},{"id":19,"translation":"நம்பிக்கையாளர்களே! (இறந்தவரின் சொத்துடன் அவரின்) பெண்களை(யும்) பலவந்தமாக நீங்கள் சொந்தம் கொள்வது உங்களுக்கு ஆகுமாகாது. இன்னும், அவர்களுக்கு நீங்கள் கொடுத்ததில் சிலவற்றை நீங்கள் எடுத்துக் கொள்வதற்காக அவர்க(ளுடன் வாழ விருப்பமில்லாமல் அவர்க)ளை தடுத்து வை(த்துகொண்டு அவர்களாக உங்களிடமிருந்து விடுதலையை வேண்டி, நீங்கள் கொடுத்த மஹ்ரை திரும்ப கொடுக்கும்படி செய்வதற்கு அவர்களை நிர்ப்பந்தி)க்காதீர்கள். எனினும், வெளிப்படையான ஒரு மானக்கேடானதை அவர்கள் செய்தால் தவிர. (அப்போது, நீங்கள் கொடுத்த மஹ்ரில் சிலவற்றை நீங்கள் திரும்ப பெற்று அவர்களை விடுவிப்பதற்காக நீங்கள் அவர்களை தடுத்து வைப்பதும் அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதும் கூடும்). இன்னும், (உங்கள் மனைவிகள் ஒழுக்கமானவர்களாக இருந்தால்) அவர்களுடன் நல்ல முறையில் (கண்ணியமாக பரஸ்பர அன்புடன் உரிமைகளையும் கடமைகளையும் பேணி) வாழுங்கள். ஆக, நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் ஒன்றை வெறுக்க, அல்லாஹ் அதில் அதிகமான நன்மையை ஆக்கலாம்."},{"id":20,"translation":"நீங்கள் ஒரு மனைவியின் இடத்தில் (அவளை விவாகரத்து செய்துவிட்டு வேறு) ஒரு மனைவியை மாற்ற நாடினால் (-வேறு ஒரு பெண்ணை மணம் முடிக்க நாடினால்), அவர்களில் (விவாகரத்து செய்யப்படும்) ஒருத்திக்கு (தங்கக்) குவியலைக் கொடுத்திருந்தாலும் அதிலிருந்து எதையும் (திரும்ப) கைப்பற்றாதீர்கள். அதுவோ அபாண்டமாகவும் வெளிப்படையான பாவமாகவும் இருக்கும் நிலையில் அதை நீங்கள் கைப்பற்றுகிறீர்களா?"},{"id":21,"translation":"உங்களில் சிலர் சிலருடன் (அன்போடும் அந்தரங்க வாழ்க்கையில் அன்னியோனியமாகவும் வாழ்ந்து ஒருவர் மற்றவருடன்) கலந்து விட்டிருக்கும் நிலையில்; இன்னும், அப்பெண்கள் உங்களிடம் உறுதியான வாக்குறுதியையும் வாங்கி இருக்கும் நிலையில் அதை எவ்வாறு நீங்கள் (திரும்ப) கைப்பற்றுவீர்கள்?"},{"id":22,"translation":"முன்னர் நடந்த (திருமணத்)தைத் தவிர, (இஸ்லாம் வந்த பின்னர்) உங்கள் தந்தைகள் மணமுடித்தவர்களை நீங்கள் மணமுடிக்காதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதாகவும், வெறுக்கப்பட்டதாகவும் இருக்கிறது, இன்னும் இது கெட்ட பழக்கமாகும்."},{"id":23,"translation":"உங்கள் தாய்மார்களும், உங்கள் மகள்களும், உங்கள் சகோதரிகளும், உங்கள் மாமிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், (உங்கள்) சகோதரனின் மகள்களும், (உங்கள்) சகோதரியின் மகள்களும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், பால் குடி சகோதரிகளும், உங்கள் மனைவிகளின் தாய்மார்களும் நீங்கள் உறவு கொண்டுவிட்ட உங்கள் மனைவிகளிலிருந்து உங்கள் மடிகளில் வளர்க்கப்படுகின்ற (அவர்களின்) பெண் பிள்ளைகளும் உங்களுக்கு (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் அவர்களுடன் உறவு கொண்டிருக்கவில்லையென்றால் (அவர்களை விவாகரத்து செய்தபின் அவர்களின் மகள்களை மணப்பது) உங்கள் மீது குற்றமில்லை. இன்னும், உங்கள் முதுகந்தண்டிலிருந்து (பிறந்த) உங்கள் சொந்த மகன்களின் மனைவிகளும் உங்கள் மீது (நீங்கள் மணம் முடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். இன்னும், இரு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவிகளாக) ஒன்று சேர்ப்பதும் உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு முன்னர் நடந்ததைத் தவிர (அதை அல்லாஹ் மன்னிப்பான்). நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":24,"translation":"பெண்களில் மணமானவர்களும் (உங்கள் மீது தடுக்கப்பட்டுள்ளனர்). (போரில்) உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களைத் தவிர. (அந்த அடிமைகளை நீங்கள் திருமணம் செய்யலாம்.) (இவை) உங்கள் மீது (விதிக்கப்பட்ட) அல்லாஹ்வின் சட்டமாகும். (மேல் விவரிக்கப்பட்ட) இவர்களைத் தவிர உள்ளவர்களை உங்கள் செல்வங்கள் மூலம் (‘மஹ்ர்’ கொடுத்து மணம்புரியத்) தேடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. நீங்களோ ஒழுக்கமுள்ளவர்களாக, சட்டவிரோத உடலுறவில் ஈடுபடாதவர்களாக இருக்கவேண்டும். அவர்களில் எவரிடம் நீங்கள் (மணமுடித்து) சுகம் அனுபவித்தீர்களோ அவர்களுக்கு அவர்களுடைய மஹ்ர்களை கடமையாக கொடுத்து விடுங்கள். கடமையான மஹ்ருக்குப் பின்னர் நீங்கள் உங்களுக்குள் விரும்பி (குறைத்து)க் கொள்வதில் உங்கள் மீது அறவே குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ், நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":25,"translation":"இன்னும், உங்களில் எவர் நம்பிக்கையாளரான, சுதந்திரமான பெண்களை மணம் முடிக்க பொருளாதார சக்தி பெறவில்லையோ, அவர் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிய நம்பிக்கையாளரான உங்கள் அடிமைப் பெண்களிலிருந்து அவர் மணம் புரியலாம். அல்லாஹ் உங்கள் நம்பிக்கையை மிக அறிந்தவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவரே. (அடிமைகளும் சுதந்திரமான நீங்களும் மார்க்கம் இன்னும் மனிதத்தில் சமமானவர்களே. அடிமைப் பெண்களை மணம் முடிப்பதில் எந்த தகுதி குறைவும் இல்லை.) ஆகவே, (அடிமைப் பெண்களை) அவர்களுடைய உரிமையாளரின் அனுமதியுடன் மணமுடியுங்கள்; இன்னும், நல்ல முறையில் அவர்களுடைய மஹ்ர்களைக் கொடுங்கள், (அப்பெண்கள்) பத்தினிகளாக இருக்க வேண்டும்; விபச்சாரிகளாக இல்லாமலும் ரகசிய நண்பர்களை எடுத்துக் கொள்ளாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் (-அடிமைப் பெண்கள்) மணம் முடிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் மானக்கேடான செயலை செய்தால் (குற்றம் செய்த) சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படுகின்ற தண்டனையில் பாதி அவர்கள் மீது நிறைவேற்றப்படும். இது, (-அடிமைகளை மணமுடிப்பது) உங்களில் பாவத்தை பயந்தவருக்கு கொடுக்கப்பட்ட சலுகையாகும். நீங்கள் (சுதந்திரமான பெண்களை மணமுடிக்கும் வரை) பொறுமையாக இருப்பது உங்களுக்கு நல்லதாகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":26,"translation":"அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்குத் தெளிவுபடுத்துவதற்கும், உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்களுடைய (நல்ல) வழிகளில் உங்களை நேர்வழி நடத்துவதற்கும், உங்கள் மீது பிழைபொறுப்பதற்கும் நாடுகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":27,"translation":"இன்னும், அல்லாஹ்வோ உங்களை மன்னிக்க நாடுகிறான். ஆனால், காம ஆசைகளை பின்பற்றுபவர்கள் நீங்கள் (நேர்வழியிலிருந்து விலகி வழிகேடு, இன்னும் மானக் கேடான காரியங்கள் பக்கம்) முழுமையாக சாய்வதையே விரும்புகிறார்கள்."},{"id":28,"translation":"அல்லாஹ் (தன் சட்டங்களை) உங்களுக்கு இலகுவாக்க நாடுகிறான். மனிதன் பலவீனனாக படைக்கப்பட்டுள்ளான்."},{"id":29,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களின் பரஸ்பர விருப்பத்துடன் நடைபெறும் வர்த்தகமாக இருந்தால் தவிர, நீங்கள் உங்கள் செல்வங்களை உங்களுக்கு மத்தியில் தவறான முறையில் புசிக்காதீர்கள். இன்னும், உங்கள் உயிர்களை கொல்லாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":30,"translation":"இன்னும், எவர் அ(ல்லாஹ் தடுத்த)தை எல்லை மீறியும், அநியாயமாகவும் செய்வாரோ அவரை நரக நெருப்பில் எரிப்போம். அது அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது!"},{"id":31,"translation":"உங்களுக்கு தடுக்கப்பட்ட பாவங்களில் பெரும்பாவங்களை விட்டு நீங்கள் விலகினால், உங்களை விட்டும் உங்கள் சிறு பாவங்களை நாம் போக்கிவிடுவோம். இன்னும், உங்களை கண்ணியமான இடத்தில் பிரவேசிக்க வைப்போம்."},{"id":32,"translation":"உங்களில் சிலரை சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கியதை (கண்டு) ஏங்காதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. பெண்களுக்கும் அவர்கள் சம்பாதித்ததிலிருந்து பங்குண்டு. இன்னும், அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்."},{"id":33,"translation":"தாய், தந்தை, நெருங்கிய உறவினர்கள் விட்டுச் சென்ற (சொத்)தில் (அவர்களில்) ஒவ்வொருவருக்கும் வாரிசுகளை நாம் ஏற்படுத்தினோம். இன்னும், எவர்களுடன் பங்காளி உறவை உங்கள் சத்தியங்கள் மூலம் நீங்கள் ஒப்பந்தம் செய்து உறுதி செய்தீர்களோ அவர்களுக்கு (உங்கள் சொத்தில்) அவர்களின் பங்கை கொடுத்து விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் சாட்சியாளனாக இருக்கிறான். (இந்த சட்டம் பிற்காலத்தில் இறக்கப்பட்ட சொத்துரிமை சட்டத்தைக் கொண்டு மாற்றப்பட்டு விட்டது.)"},{"id":34,"translation":"அவர்களில் சிலரை (-பெண்களை) விட சிலரை (-ஆண்களை) அல்லாஹ் மேன்மையாக்கியிருப்பதாலும் (ஆண்கள்) தங்கள் செல்வங்களிலிருந்து (பெண்களுக்கு) செலவு செய்வதாலும் பெண்களை ஆண்கள் நிர்வகிப்பார்கள். ஆகவே, நல்ல பெண்கள் (அல்லாஹ்விற்கும்; பிறகு, கணவனுக்கும்) பணிந்து நடப்பார்கள்; (கணவன்) மறைவில் இருக்கும்போது (பெண்) எதை பாதுகாக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறினானோ அதை (-கணவனின் செல்வத்தையும் தமது கற்பையும்) பாதுகாப்பார்கள். இன்னும், (பெண்களில்) எவர்கள் (உங்கள் கட்டளைக்கு) மாறுசெய்வதை நீங்கள் பயப்படுகிறீர்களோ அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இன்னும், (அவர்கள் திருந்தாவிட்டால்) படுக்கைகளில் அவர்களை அப்புறப்படுத்தி வையுங்கள். இன்னும், (அதிலும் அவர்கள் திருந்தாவிட்டால்) அவர்களை (காயமேற்படாதவாறு) அடியுங்கள். ஆக, அவர்கள் உங்களுக்கு கீழ்ப்படிந்து நடந்தால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) ஏதேனும் ஒரு வழியைத் தேடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாக, மிகப் பெரியவனாக இருக்கிறான்."},{"id":35,"translation":"அந்த (கணவன் மனைவி) இருவருக்குள் பிளவை நீங்கள் பயந்தால் அவனின் உறவினரில் ஒரு நடுவரையும், அவளின் உறவினரில் ஒரு நடுவரையும் அனுப்புங்கள். (நடுவர்களாகிய) அவ்விருவரும் (கணவன் மனைவி இருவருக்குமிடையில் இணக்கம் ஏற்படுத்தி சேர்த்துவைத்து சீர்திருத்தம் செய்வதை) நாடினால் அந்த (கணவன் மனைவி) இருவருக்கிடையில் (நடுவர்களின் பேச்சின் மூலம்) அல்லாஹ் ஒற்றுமையை(யும் இணக்கத்தையும்) ஏற்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்."},{"id":36,"translation":"இன்னும், அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், அவனுக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்கள்; இன்னும், தாய், தந்தைக்கும், உறவினருக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டைவீட்டாருக்கும், அந்நியரான அண்டை வீட்டாருக்கும், அருகில் இருக்கும் நண்பருக்கும், பயணிக்கும், உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கும் கருணையுடன் உதவி செய்யுங்கள். கர்வமுடையவனாக, பெருமையுடையவனாக இருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கமாட்டான்."},{"id":37,"translation":"அவர்கள் கருமித்தனம் செய்கிறார்கள்; இன்னும், மக்களுக்கு கருமித்தனத்தை ஏவுகிறார்கள்; இன்னும், அல்லாஹ் தன் அருளிலிருந்து அவர்களுக்குக் கொடுத்த (செல்வத்)தை மறைக்கிறார்கள். (இத்தகைய நன்றிகெட்ட) நிராகரிப்பாளர்களுக்கு இழிவுபடுத்தும் தண்டனையை நாம் தயார்படுத்தி இருக்கிறோம்."},{"id":38,"translation":"இன்னும், அவர்கள் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே தங்கள் செல்வங்களை தர்மம் செய்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அவர்களுக்கு ஷைத்தான்தான் நண்பன் ஆவான்.) எவருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகிவிட்டானோ அவன் மிகக் கெட்ட நண்பனாக இருக்கிறான்."},{"id":39,"translation":"அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்தால் அவர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டு விடப்போகிறது? அல்லாஹ் அவர்களை நன்கறிந்தவனாக இருக்கிறான்."},{"id":40,"translation":"நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவும் அநியாயம் செய்ய மாட்டான். இன்னும், (அவர்கள் செய்தது) நன்மையாக இருந்தால் அதை பன்மடங்காக்குவான். இன்னும், தன்னிடமிருந்து மகத்தான கூலியையும் கொடுப்பான்."},{"id":41,"translation":"ஆக, (நபியே!) ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியை நாம் கொண்டு வந்தால், இன்னும் உம்மை இவர்கள் மீது சாட்சியாக நாம் கொண்டு வந்தால் (உம்மை நிராகரித்த இவர்களின் நிலைமை) எப்படி இருக்கும்?"},{"id":42,"translation":"(அல்லாஹ்வை) நிராகரித்து, தூதருக்கு மாறு செய்தவர்கள் அவர்களுடன் பூமி சமமாக்கப்பட வேண்டுமே? என்று அந்நாளில் விரும்புவார்கள். (இவர்கள்) அல்லாஹ்விடத்தில் ஒரு செய்தியையும் மறைக்கமாட்டார்கள்."},{"id":43,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் போதையுற்றவர்களாக இருக்கும் போது நீங்கள் கூறுவதை தெளிவாக அறிகின்ற (சுதாரிப்பு நிலைக்கு நீங்கள் வருகின்ற) வரை தொழுகையை நெருங்காதீர்கள். இன்னும், (நீங்கள் பெருந்தொடக்குள்ள) முழுக்காளிகளாக இருக்கும் போதும் நீங்கள் குளிக்கும் வரை (தொழுகையை நெருங்காதீர்கள்). (ஆனால்) நீங்கள் பயணிகளாக இருந்தால் தவிர. இன்னும், நீங்கள் நோயாளிகளாக இருந்தால்; அல்லது, பயணத்தில் இருந்தால்; அல்லது, உங்களில் ஒருவர் மலஜலம் கழித்து வந்தால்; அல்லது, மனைவிகளோடு நீங்கள் உறவு கொண்டால், (அப்போது சுத்தம் செய்ய) நீங்கள் தண்ணீரை பெற வில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். (அந்த மண்ணில் தட்டப்பட்ட கைகள் மூலம்) உங்கள் முகங்களையும் உங்கள் கைகளையும் தடவுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்கள் குற்றங்கள் அனைத்தையும்) முற்றிலும் மன்னிப்பவனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்."},{"id":44,"translation":"(நபியே!) வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை நீர் பார்க்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்குகிறார்கள்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வுடைய) பாதையிலிருந்து வழிதவறுவதை விரும்புகிறார்கள்."},{"id":45,"translation":"உங்கள் எதிரிகளை அல்லாஹ் மிக அறிந்தவன். (உங்களுடைய) பாதுகாவலனாக (இருப்பதற்கு) அல்லாஹ்வே போதுமானவன். இன்னும், பேருதவியாளனாக (இருப்பதற்கு) அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":46,"translation":"யூதர்களில் (சிலர் தவ்ராத்தின்) வசனங்களை அவற்றின் (சரியான) கருத்துகளிலிருந்து புரட்டுகிறார்கள். இன்னும், “(நபியே!) (உமது சொல்லை) செவியுற்றோம். ஆனால், (உமது கட்டளைக்கு) மாறு செய்தோம். நீர் (நாங்கள் சொல்வதை) செவியுறுவீராக! உம்மால் செவியுறமுடியாமல் போகட்டும்!” என்று கூறுகிறார்கள். இன்னும், தங்கள் நாவுகளை வளைத்தும் மார்க்கத்தில் குற்றம் சொல்வதற்காகவும் (உன்ளுர்னா என்று கூறாமல்) “ராயினா” என்று கூறுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் - “நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம்” என்றும், “இஸ்மஃ (-நீர் கேட்பீராக), உன்ளுர்னா (எங்களைப் பார்ப்பீராக)” என்றும் - கூறி இருந்தால் (அது) அவர்களுக்கு மிக நன்றாகவும், மிக நேர்மையானதாகவும் இருந்திருக்கும். எனினும், அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அல்லாஹ் அவர்களைச் சபித்து விட்டான். ஆகவே, (அவர்களில்) சிலரைத் தவிர (அதிகமானவர்கள்) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":47,"translation":"வேதம் கொடுக்கப்பட்டவர்களே! - முகங்களை மாற்றி அவற்றை அவற்றின் பின்புறங்களில் திருப்பிவிடுவதற்கு முன்னர்; அல்லது, சனிக்கிழமையுடையோரை நாம் சபித்ததுபோல் அவர்களை நாம் சபிப்பதற்கு முன்னர் உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாக நாம் இறக்கிய(வேதத்)தை - நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய கட்டளை நிறைவேறியே தீரும்."},{"id":48,"translation":"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அதைத் தவிர மற்றதை அவன், தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணையை ஏற்படுத்துவாரோ அவர் திட்டமாக (அல்லாஹ்வின் மீது) பெரும் பாவத்தை இட்டுக் கட்டிவிட்டார்."},{"id":49,"translation":"(நபியே!) “தங்களை (தாமே உயர்வாக பேசி) பரிசுத்தப்படுத்துபவர்களை (நீர்) கவனிக்கவில்லையா?” மாறாக அல்லாஹ், தான் நாடியவர்களை பரிசுத்தமாக்குகிறான். அவர்களுக்கு (பேரீச்சங் கொட்டையின் சிறிய) வெள்ளை நூலளவும் அநீதி செய்யப்படாது."},{"id":50,"translation":"(நபியே!) பார்ப்பீராக! அல்லாஹ்வின் மீது எவ்வாறு பொய்யை அவர்கள் இட்டுக்கட்டி கூறுகிறார்கள். வெளிப்படையான பாவத்திற்கு இதுவே போதுமாகும்."},{"id":51,"translation":"(நபியே!) வேதத்தில் ஒரு பகுதி கொடுக்கப்பட்டவர்களை (நீர்) கவனிக்கவில்லையா? (அவர்கள்) ஷைத்தானையும், சிலைகளையும் நம்பிக்கை கொள்கிறார்கள். இன்னும், நிராகரிப்பாளர்களை நோக்கி “இவர்கள் நம்பிக்கையாளர்களை விட மார்க்கத்தால் நேர்வழிபெற்றவர்கள்” என்று கூறுகிறார்கள்."},{"id":52,"translation":"இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களை அல்லாஹ் சபித்தான். அல்லாஹ் எவரை சபிப்பானோ அவருக்கு உதவியாளரை (நீர்) காணவே மாட்டீர்."},{"id":53,"translation":"இவர்களுக்கு ஆட்சியில் பங்கு ஏதும் இருக்கிறதா? அவ்வாறிருந்தால் (பேரீச்சங்கொட்டையின் நடுவில் உள்ள ஒரு) கீறல் அளவு(ள்ள பொருளையு)ம் இவர்கள் மக்களுக்கு (தானமாக) கொடுக்க மாட்டார்கள்."},{"id":54,"translation":"அல்லது, மக்கள் மீது (-நபியின் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும்) - அல்லாஹ் அவர்களுக்கு தன் அருளிலிருந்து கொடுத்ததிற்காக - பொறாமைப்படுகிறார்களா? ஆக, திட்டமாக (இதற்கு முன்னர்) இப்ராஹீமுடைய குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். பெரிய ஆட்சியையும் அவர்களுக்குக் கொடுத்தோம்."},{"id":55,"translation":"ஆக, இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொண்டவரும் அவர்களில் இருக்கிறார். இன்னும், இதை புறக்கணித்து விலகி சென்றவரும் அவர்களில் இருக்கிறார். (அவர்களை தண்டிப்பதற்கு) கொழுந்து விட்டெரியும் நெருப்பால் நரகமே போதுமானதாகும்."},{"id":56,"translation":"நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்களை நரக நெருப்பில் நாம் எரிப்போம். அவர்கள் தண்டனையைத் (தொடர்ந்து) சுவைப்பதற்காக அவர்களுடைய தோல்கள் கனிந்து (உருகி) விடும்போதெல்லாம் அவர்களுக்கு அவை அல்லாத (வேறு புதிய) தோல்களை மாற்றுவோம். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":57,"translation":"இன்னும் எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வோம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அவற்றில் பரிசுத்தமான மனைவிகளும் அவர்களுக்கு இருப்பார்கள். இன்னும், (சூடும் குளிரும் இல்லாத) அடர்ந்த நிழலிலும் அவர்களை பிரவேசிக்கச் செய்வோம்."},{"id":58,"translation":"“(ஆட்சியாளர்களே! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட) பொறுப்புகளை அவற்றுக்கு தகுதியானவர்களிடம் நீங்கள் ஒப்படைக்க வேண்டும்; இன்னும், மக்களுக்கிடையில் நீங்கள் தீர்ப்பளித்தால் (பாரபட்சமின்றி) நீதமாக தீர்ப்பளிக்க வேண்டும்” என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். அல்லாஹ் உங்களுக்கு மிக சிறந்ததையே உபதேசிக்கிறான்! நிச்சயமாக அல்லாஹ் செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்."},{"id":59,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், (அல்லாஹ்வுடைய) தூதருக்கும், உங்கள் ஆட்சியாளர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் உங்களுக்குள் ஒரு விஷயத்தில் தகராறுசெய்தால், (மெய்யாகவே) நீங்கள் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டவர்களாயிருந்தால் அதை அல்லாஹ்விடமும் (அவனுடைய) தூதரிடமும் திருப்பிவிடுங்கள். (அவர்களுடைய தீர்ப்பை திருப்தியுடன் ஒப்புக் கொள்ளுங்கள்.) இதுதான் உங்களுக்கு சிறந்ததும், மிக அழகான முடிவும் ஆகும்."},{"id":60,"translation":"(நபியே!) உமக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்ட (வேதங்கள் யா)வற்றையும் நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொண்டனர் என்று வெளி பாசாங்கு செய்பவர்களை நீர் பார்க்கவில்லையா? தீயவனிடமே அவர்கள் தீர்ப்பு கேட்டுச் செல்ல நாடுகிறார்கள். அ(ந்த தீய)வனை புறக்கணிக்க வேண்டுமென்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஷைத்தான் அவர்களை வெகு தூரமான வழிகேட்டில் வழிகெடுக்கவே நாடுகிறான்."},{"id":61,"translation":"இன்னும், “(நீதமான தீர்ப்பை நாடி) அல்லாஹ் இறக்கிய (வேதத்)தின் பக்கமும், (அவனது) தூதரின் பக்கமும் நீங்கள் வாருங்கள். (அந்த தீயவனிடம் செல்லாதீர்கள்.)’’ என்று அவர்களுக்குக் கூறப்பட்டால் அந்நயவஞ்சகர்களை - அவர்கள் உம்மை முற்றிலும் புறக்கணித்து விலகி செல்வதையே - நீர் காண்பீர்."},{"id":62,"translation":"ஆக, (நபியே! தீமைகளில்) அவர்களின் கரங்கள் முன்னர் செய்தவற்றின் காரணமாக அவர்களுக்கு ஒரு சிரமம் ஏற்பட்டால் (அதற்குப் பரிகாரம் தேட முடியாமல்போன அவர்களின் இழி நிலைமை) எவ்வாறு இருந்தது (என்பதை நீர் கவனிப்பீராக)! பிறகு, “(அந்த தீயவனிடம் நாங்கள் சென்றதெல்லாம்) நன்மையையும் ஒற்றுமையையும் நாடியே அன்றி, (வேறொன்றையும்) நாங்கள் நாடவில்லை’’ என்று அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தவர்களாக உம்மிடம் வருகிறார்கள்."},{"id":63,"translation":"இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களின் உள்ளங்களில் இருப்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும் அவர்களுக்கு உபதேசிப்பீராக! இன்னும், அவர்களுடைய உள்ளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் சொல்லை அவர்களுக்கு சொல்வீராக!"},{"id":64,"translation":"நாம் எந்த ஒரு தூதரையும் அனுப்பவில்லை, அல்லாஹ்வுடைய அனுமதியுடன் அவருக்கு (எல்லோரும்) கீழ்ப்படிய வேண்டும் என்பதற்காகவே தவிர. நிச்சயமாக அவர்கள் தங்களுக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோது, உம்மிடம் வந்திருந்து, அவர்களும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி இருந்தால், இன்னும், அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் (அல்லாஹ்விடம் அவர்களுக்காக) பாவமன்னிப்புக் கோரியிருந்தால், தவ்பாவை அங்கீகரிப்பவனாக, பெரும் கருணையாளனாக அல்லாஹ்வை அவர்கள் கண்டிருப்பார்கள்."},{"id":65,"translation":"ஆக, (உண்மை அவ்வாறு) இல்லை. உம் இறைவன் மீது சத்தியமாக! அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்பட்டதில் அவர்கள் உம்மை தீர்ப்பாளராக்கி, பிறகு, நீர் தீர்ப்பளித்ததில் தங்கள் உள்ளங்களில் அறவே அதிருப்தி காணாமல் (-சங்கடத்தை உணராமல்) முழுமையாக (உமது தீர்ப்புக்கு) பணியும் வரை அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகமாட்டார்கள்."},{"id":66,"translation":"இன்னும், “உங்களைக் கொல்லுங்கள், அல்லது, உங்கள் இல்லங்களிலிருந்து வெளியேறுங்கள்” என்று நாம் அவர்கள் மீது விதித்திருந்தால் அவர்களில் சிலரைத் தவிர (பெரும்பாலானவர்கள் இவ்வாறு) செய்திருக்க மாட்டார்கள். நிச்சயமாக அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு மிக நன்றாகவும் (நம்பிக்கையில் அவர்களை) உறுதிப்படுத்துவதில் மிக வலுவானதாகவும் ஆகி இருக்கும்."},{"id":67,"translation":"இன்னும், அப்போது நாம் நம்மிடமிருந்து மகத்தான கூலியை அவர்களுக்கு கொடுத்திருப்போம்."},{"id":68,"translation":"இன்னும், நேரான பாதையில் அவர்களை நேர்வழி நடத்தியிருப்போம்."},{"id":69,"translation":"எவர்கள் அல்லாஹ்விற்கும், தூதருக்கும் கீழ்ப்படிகிறார்களோ அவர்கள் அல்லாஹ் அருள்புரிந்த நபிமார்கள், சத்தியவான்கள், (போரில்) உயிர் நீத்த தியாகிகள், நல்லவர்கள் ஆகியவர்களுடன் (மறுமையில் சொர்க்க பூங்காக்களில்) இருப்பார்கள். இவர்கள் அழகிய தோழர்கள் ஆவார்கள்."},{"id":70,"translation":"இந்த அருள் (உங்களுக்கு) அல்லாஹ்விடமிருந்து வழங்கப்பட்டதாகும். (அனைத்தையும்) நன்கறிந்தவனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":71,"translation":"நம்பிக்கையாளர்களே! (நீங்கள் எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்! இன்னும்,) உங்கள் ஆயுதங்களை (உங்களுடன்) எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஆக, சிறு சிறு கூட்டங்களாக அல்லது அனைவருமாக (உங்கள் எதிரியை எதிர்த்து போரிட) போருக்குப் புறப்படுங்கள்."},{"id":72,"translation":"இன்னும், (போருக்கு செல்லாமல்) பின்தங்கிவிடுபவரும் நிச்சயமாக உங்களில் இருக்கிறார். ஆக, உங்களுக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “திட்டமாக அல்லாஹ் என் மீது அருள் புரிந்தான். ஏனெனில், நான் அவர்களுடன் (போரில்) பிரசன்னமாகி இருக்கவில்லை” என்று கூறுகிறார்."},{"id":73,"translation":"இன்னும், அல்லாஹ்விடமிருந்து ஓர் அருள் உங்களுக்கு கிடைத்தால் “நான் அவர்களுடன் இருந்திருக்க வேண்டுமே? (அவ்வாறு இருந்திருப்பின்) மகத்தான (செல்வ) நற்பேறு பெற்றிருப்பேனே!” என்று - உங்களுக்கிடையிலும் அவனுக்கிடையிலும் எந்த நட்பும் இல்லாததைப் போன்று - நிச்சயமாகக் கூறுகிறான்."},{"id":74,"translation":"ஆக, மறுமைக்காக இவ்வுலக வாழ்க்கையை விற்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும். எவர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவாரோ (அவர்) கொல்லப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் அவருக்கு நாம் மகத்தான கூலியைக் கொடுப்போம்."},{"id":75,"translation":"அல்லாஹ்வுடைய பாதையிலும் (எதிரிகளால் அநீதி இழைக்கப்பட்ட, துன்புறத்தப்படுகிற) ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகிய பலவீனர்களுடைய பாதையிலும் (அவர்களை பாதுகாப்பதற்காக) நீங்கள் போரிடாமல் இருக்க உங்களுக்கென்ன (நேர்ந்தது)? “எங்கள் இறைவா! எங்களை இவ்வூரிலிருந்து வெளியேற்று, இந்த ஊர்வாசிகள் அநியாயக்காரர்கள். எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஒரு பாதுகாவலரை ஏற்படுத்து! எங்களுக்கு உன் புறத்திலிருந்து ஓர் உதவியாளரை ஏற்படுத்து!” என்று (பலவீனமான) அவர்கள் (பிரார்த்தனையில்) கூறுகிறார்கள்."},{"id":76,"translation":"நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். நிராகரிப்பாளர்கள் ஷைத்தானின் பாதையில் போரிடுவார்கள். ஆக, ஷைத்தானுடைய நண்பர்களிடம் நீங்கள் போரிடுங்கள். நிச்சயமாக ஷைத்தானின் சூழ்ச்சி மிக பலவீனமானதாக இருக்கிறது!"},{"id":77,"translation":"“உங்கள் கைகளை (போரிடுவதிலிருந்து) தடுத்துக் கொள்ளுங்கள், தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள்” என்று எவர்களுக்கு கூறப்பட்டதோ அவர்களை நீர் பார்க்கவில்லையா? ஆக, போர் அவர்கள் மீது விதிக்கப்பட்டபோது, அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வை பயப்படுவதைப்போல் அல்லது பயத்தால் (அதைவிட) மிகக் கடுமையாக மக்களைப் பயப்படுகிறார்கள். “எங்கள் இறைவா! ஏன் எங்கள் மீது போரை விதித்தாய்? இன்னும் சமீபமான ஒரு தவணை வரை எங்களை நீ பிற்படுத்தி இருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். (நபியே!) கூறுவீராக: “உலகத்தின் இன்பம் அற்பமானதாகும்! அல்லாஹ்வை அஞ்சியவருக்கு மறுமை மிக மேலானதாகும். (மறுமையில் நீங்கள்) ஒரு நூல் அளவு கூட அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்."},{"id":78,"translation":"நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் உங்களை அடையும், பலமான கோபுரங்களில் நீங்கள் இருந்தாலும் சரியே! இன்னும், அவர்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால், “இது அல்லாஹ்விடமிருந்து (எங்களுக்குக்) கிடைத்தது” எனக் கூறுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால், “(நபியே!) இது உம்மிடமிருந்து (எங்களுக்கு) ஏற்பட்டது” எனக் கூறுகிறார்கள். (நபியே) நீர் கூறுவீராக: “எல்லாம் அல்லாஹ்விடமிருந்தே (ஏற்பட்டன).” ஆக, இந்தக் கூட்டத்தினருக்கு என்ன நேர்ந்தது? ஒரு பேச்சையும் அவர்கள் விரைவாக (இலகுவாக) விளங்குவதில்லையே!"},{"id":79,"translation":"“நன்மை எது உமக்கு ஏற்பட்டதோ, அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. இன்னும், தீமை எது உமக்கு ஏற்பட்டதோ அது உம் புறத்திலிருந்து (உமது பாவத்தினால்) ஏற்பட்டது.” (நபியே!) உம்மை மக்களுக்கு ஒரு தூதராக அனுப்பினோம். (உமது தூதுத்துவத்திற்கு) சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":80,"translation":"எவர் தூதருக்கு கீழ்ப்படிகிறாரோ அவர் திட்டமாக அல்லாஹ்விற்கு கீழ்ப்படிந்தார். எவர்கள் புறக்கணித்தார்களோ அவர்களின் செயல்களை கவனிப்பவராக(வும் அவர்களை விசாரிப்பவராகவும்) நாம் உம்மை அனுப்பவில்லை."},{"id":81,"translation":"“(நபியே! எங்கள்) கீழ்ப்படிதல் (உமக்கு உண்டு - நாங்கள் உமக்கு கீழ்ப்படிந்து நடப்போம்)” என்று கூறுகிறார்கள். ஆக, உம்மிடமிருந்து வெளியேறினால் அவர்களில் ஒரு கூட்டம் நீர் கூறுவதற்கு மாற்றமாக இரவில் சதி ஆலோசனை செய்கிறார்கள். அவர்கள் இரவில் சதி ஆலோசனை செய்வதை அல்லாஹ் பதிவுசெய்கிறான். ஆகவே, (நீர்) அவர்களைப் புறக்கணிப்பீராக! இன்னும், அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக. (உம்மை பாதுகாக்க) அல்லாஹ்வே போதுமான பொறுப்பாளனாக இருக்கிறான்."},{"id":82,"translation":"ஆக, குர்ஆனை அவர்கள் ஆழமாக ஆராய வேண்டாமா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்ததாக இருந்திருந்தால் இதில் பல முரண்பாட்டை அவர்கள் கண்டிருப்பார்கள்."},{"id":83,"translation":"இன்னும், பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய ஒரு செய்தி அவர்களிடம் வந்தால் அதை (உடனே) பரப்புகிறார்கள். அதை தூதரிடமும், அவர்களில் உள்ள ஆட்சியாளர்களிடமும் அவர்கள் எடுத்து சென்றிருந்தால் அவர்களில் அதை புலனாய்வு செய்பவர்கள் அதை சரியாக அறிந்திருப்பார்கள். (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வின் அருளும், அவனுடைய கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்திருந்தால் (உங்களில்) சிலரைத் தவிர (அனைவரும்) ஷைத்தானை பின்பற்றி இருப்பீர்கள்."},{"id":84,"translation":"ஆக, (நபியே!) அல்லாஹ்வின் பாதையில் போரிடுவீராக! நீர் உம்மைத் தவிர (பிறரை) கட்டாயப்படுத்த முடியாது. (இறை கட்டளையை நீர் ஏற்று நடப்பீராக. பிறரை ஏற்று நடக்க வைப்பது உமது கடமையல்ல.) இன்னும், நம்பிக்கையாளர்களை (போருக்கு) தூண்டுவீராக! நிராகரிப்பாளர்களின் வலிமையை (-அவர்களின் தாக்குதலை) அல்லாஹ் தடுத்து விடுவான். அல்லாஹ் வலிமையிலும் (எதிரிகளை தாக்குவதிலும்) மிகக் கடுமையானவன்; இன்னும், (அவர்களை) தண்டிப்பதிலும் மிகக் கடுமையானவன்."},{"id":85,"translation":"எவர் நல்ல சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு பங்கு இருக்கும். இன்னும், எவர் தீய சிபாரிசு செய்வாரோ அவருக்கு அதிலிருந்து ஒரு குற்றம் இருக்கும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்."},{"id":86,"translation":"உங்களுக்கு (ஸலாம்) முகமன் கூறப்பட்டால் அதைவிட மிக அழகியதை முகமனாக கூறுங்கள். அல்லது, அதையே திரும்பக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (உங்களது) ஒவ்வொரு செயலையும் பாதுகாப்பவனாக இருக்கிறான்."},{"id":87,"translation":"அல்லாஹ் அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகம் இல்லை. பேச்சால் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?"},{"id":88,"translation":"ஆக, (நம்பிக்கையாளர்களே!) நயவஞ்சகர்கள் விஷயத்தில் (நீங்கள் முரண்பட்ட) இரு பிரிவினர்களாக இருப்பதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் செய்த (பாவத்)தின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தாழ்த்தினான். அல்லாஹ் வழிகெடுத்தவரை நீங்கள் நேர்வழிப்படுத்த நாடுகிறீர்களா? எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியை அறவே நீர் காணமாட்டீர்!"},{"id":89,"translation":"அவர்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் நிராகரித்து (அவர்களுக்கு) சமமாக நீங்கள் ஆகிவிடுவதை (அவர்கள்) விரும்புகிறார்கள். ஆகவே, அல்லாஹ்வின் பாதையில் அவர்கள் ஹிஜ்ரத் செய்கின்ற வரை அவர்களில் (உங்களுக்கு) பொறுப்பாளர்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (ஹிஜ்ரத் செய்யாமல்) அவர்கள் விலகினால் அவர்களை (சிறைப்) பிடியுங்கள்! (அவர்கள் உங்களை எதிர்த்து சண்டை செய்தால்) அவர்களை நீங்கள் கண்ட இடமெல்லாம் அவர்களைக் கொல்லுங்கள்; (உங்களுக்கு) அவர்களிலிருந்து பொறுப்பாளரையும் உதவியாளரையும் எடுத்துக் கொள்ளாதீர்கள்."},{"id":90,"translation":"உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்த சமுதாயத்திடம் சென்று சேர்ந்தவர்களைத் தவிர; அல்லது, அவர்கள் உங்களிடம் போர்புரிய அல்லது அவர்கள் தங்கள் சமுதாயத்திடம் போர்புரிய அவர்களது (மனம் நாடாமல்) நெஞ்சங்கள் நெருக்கடிக்குள்ளான நிலையில் உங்களிடம் வந்தவர்களைத் தவிர. (அவர்களைக் கொல்லாதீர்கள்; சிறைப் பிடிக்காதீர்கள். ஏனென்றால்,) அல்லாஹ் நாடியிருந்தால் உங்கள் மீது அவர்களைச் சாட்டியிருப்பான். அவர்கள் உங்களிடம் போரிட்டிருப்பார்கள். ஆகவே, (இவர்கள்) உங்களை விட்டு விலகி உங்களிடம் போரிடாமல் உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பித்தால் (அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,) இவர்கள் மீது (போரிட) அல்லாஹ் உங்களுக்கு ஒரு வழியையும் (-தகுந்த காரணம் எதையும்) ஆக்கவில்லை."},{"id":91,"translation":"(இவர்களல்லாத) மற்றவர்களை (நீங்கள்) காண்பீர்கள். அவர்கள் உங்களிடம் பாதுகாப்புப் பெறவும் (உங்கள் எதிரிகளாகிய) தங்கள் சமுதாயத்திடம் பாதுகாப்புப் பெறவும் நாடுகிறார்கள். குழப்பம் விளைவிப்பதற்கு அவர்கள் திருப்பப்படும் போதெல்லாம் அதில் குப்புற விழுந்து விடுகிறார்கள். அவர்கள் உங்களை விட்டு விலகாமலும், உங்கள் முன் சமாதானத்தை சமர்ப்பிக்காமலும், தங்கள் கைகளை (உங்களுக்கு தீங்கு செய்வதிலிருந்து) தடுக்காமலும் இருந்தால், அவர்களை (சிறைப்) பிடியுங்கள். (தப்பிச் செல்பவர்களை) நீங்கள் எங்கு அவர்களைப் பெற்றாலும் அவர்களைக் கொல்லுங்கள். அவர்களுக்கு எதிராக உங்களுக்குத் தெளிவான ஆதாரத்தை நாம் ஆக்கிவிட்டோம்."},{"id":92,"translation":"தவறுதலாகவே தவிர, ஒரு நம்பிக்கையாளரை கொல்வது இன்னொரு நம்பிக்கையாளருக்கு ஆகுமானதல்ல. எவராவது ஒரு நம்பிக்கையாளரை தவறுதலாகக் கொன்றால் (அதற்குப் பரிகாரம்) நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிட வேண்டும்; இன்னும் (இறந்த) அவருடைய குடும்பத்தாரிடம் (அதற்குரிய) நஷ்ட ஈட்டை ஒப்படைக்க வேண்டும். (ஆனால், குடும்பத்தினர் நஷ்ட ஈட்டுத் தொகையை கொலையாளிக்கு) தானமாக்கினால் தவிர. (கொல்லப்பட்ட) அவன் உங்கள் எதிரி சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்து, அவர் நம்பிக்கையாளராகவும் இருந்தால், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை (மட்டும்) உரிமையிடவேண்டும். (கொல்லப்பட்ட) அவர் உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் (சமாதான, நட்பு) உடன்படிக்கை உள்ள சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தால் அவருடைய குடும்பத்தினரிடம் நஷ்டஈடு ஒப்படைக்கப்படும்: இன்னும், நம்பிக்கையாளரான ஓர் அடிமையை உரிமையிடவேண்டும். (நஷ்டஈடு வழங்க) எவர் வசதி பெறவில்லையோ அவர் அல்லாஹ்விடம் மன்னிப்புக்கோரி தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பிருத்தல் வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":93,"translation":"எவர் ஒரு நம்பிக்கையாளரை மனம் நாடியவராக (வேண்டுமென்றே) கொல்வாரோ அவருக்குரிய தண்டனை நரகம்தான். இன்னும், அதில் அவர் நிரந்தரமாக தங்கி இருப்பார். இன்னும், அவர் மீது அல்லாஹ் கோபித்துவிட்டான். இன்னும், அவரைச் சபித்தான். இன்னும், பெரிய தண்டனையையும் அவருக்காக தயார் செய்திருக்கிறான்."},{"id":94,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) நீங்கள் பயணித்தால் (எதிரே இருப்பவர்களைத்) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஸலாம் கூறிய நபரை நோக்கி, உலக வாழ்க்கையின் (அற்ப) செல்வத்தை நீங்கள் தேடியவர்களாக “நீ நம்பிக்கையாளர் இல்லை” என்று கூறாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. (இதற்கு) முன்னர் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். ஆக, அல்லாஹ் உங்கள் மீது அருள்புரிந்(து உங்களை முஸ்லிம்களாக்கி கண்ணியத்தைத் தந்)தான். ஆகவே (வழியில் உங்களை சந்திப்பவரை) தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்."},{"id":95,"translation":"நம்பிக்கையாளர்களில் (போருக்குச் செல்லாமல் வீடுகளில்) தங்கிய உடல் குறையுடையோர் அல்லாதவர்கள் இன்னும் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வுடைய பாதையில் போரிடும் வீரர்கள் (ஆகிய இவர்கள்) சமமாக மாட்டார்கள். தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போரிடும் வீரர்களை (போருக்குச் செல்லாமல்) தங்கியவர்களை விட பதவியால் அல்லாஹ் மேன்மையாக்கினான். அனைவருக்கும் சொர்க்கத்தையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். இன்னும், போரிடும் வீரர்களை மகத்தான கூலியால் (போருக்கு செல்லாமல் வீடுகளில்) தங்கியவர்களை விட அல்லாஹ் மேன்மையாக்கினான்."},{"id":96,"translation":"(போரிடும் வீரர்களுக்கு) தன்னிடமிருந்து (பல) பதவிகளையும், மன்னிப்பையும், கருணையையும் (அல்லாஹ் வழங்குகிறான்). அல்லாஹ், மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":97,"translation":"நிச்சயமாக எவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை வானவர்கள் உயிர்வாங்கினார்களோ, அவர்களிடம் - (“மார்க்கக் கட்டளையை நிறைவேற்றி ஹிஜ்ரத் செய்யாமல்) - நீங்கள் எவ்வாறு (தங்கி) இருந்தீர்கள்?” என்று வானவர்கள் கூற, (அதற்கவர்கள்) “இந்தப் பூமியில் நாங்கள் பலவீனர்களாக இருந்தோம்” என்று (பதில்) கூறினார்கள். (அதற்கு வானவர்கள்) “அல்லாஹ்வின் பூமி விசாலமானதாக இருக்கவில்லையா? நீங்கள் (வசித்த நெருக்கடியான இடத்திலிருந்து) அதில் (பூமியில் வேறு பகுதிக்கு) ஹிஜ்ரத் செய்திருக்க வேண்டாமா?” என்று கூறினார்கள். இத்தகையவர்கள் அவர்களின் ஒதுங்குமிடம் நரகமாகும். அது (மிகக்) கெட்ட மீளுமிடமாகும்!"},{"id":98,"translation":"ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரில் (ஹிஜ்ரத் செய்ய முடியாமல்) பலவீனர்களாக இருந்தவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்பட்டவர்கள்.) இவர்கள் (ஹிஜ்ரத் செல்வதற்கு தேவையான) யுக்திகளை மேற்கொள்ள சக்தி பெறாமல் இருந்தார்கள். இன்னும், இவர்கள், (தப்பித்துச் செல்ல) ஒரு வழியையும் பெறாமல் இருந்தார்கள்."},{"id":99,"translation":"அல்லாஹ் இத்தகையவர்களை மன்னிக்கக்கூடும். அல்லாஹ் (அடியார்களின் குற்றங்களை) முற்றிலும் மன்னிப்பவனாக, (அடியார்களின் பாவங்களை மன்னித்தருளும்) மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்."},{"id":100,"translation":"இன்னும், அல்லாஹ்வுடைய பாதையில் எவர் ஹிஜ்ரத் செய்வாரோ, அவர் பூமியில் பல (வசதியான) வசிக்குமிடங்களையும், (பொருளாதார) வசதியையும் பெறுவார். இன்னும், எவர் தன் இல்லத்திலிருந்து அல்லாஹ் மற்றும் அவன் தூதரின் பக்கம் ஹிஜ்ரத் செய்தவராக வெளியேறுகிறாரோ, பிறகு, அவரை மரணம் அடைகிறதோ அவருடைய கூலி திட்டமாக அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகிறது. அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":101,"translation":"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் பூமியில் பயணித்தால், நிராகரிப்பாளர்கள் உங்களைத் துன்புறுத்துவதை (-உங்களை தாக்குவதை) நீங்கள் பயந்தால், தொழுகையைச் சுருக்குவது உங்கள் மீது குற்றமில்லை. நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் உங்களுக்கு வெளிப்படையான எதிரிகளாக இருக்கிறார்கள்."},{"id":102,"translation":"(நபியே! போரில்) நீர் அவர்களுடன் இருந்து, அவர்களுக்கு நீர் தொழுகையை நிலைநிறுத்தினால் அவர்களில் ஒரு பிரிவு உம்முடன் (தொழ) நிற்கவும். அவர்கள் தங்கள் ஆயுதங்களை (கைகளில்) எடுத்து வைத்துக் கொள்ளவும். ஆக, அவர்கள் (உம்முடன் தொழுது) ஸஜ்தா செய்துவிட்டால் (தொழுகையிலிருந்து விலகி) உங்களுக்குப் பின்னால் இரு(ந்து உங்களை பாதுகா)க்கவும். இன்னும், தொழாமலிருந்த மற்றொரு பிரிவு (தொழுகைக்கு) வரவும். ஆக, உம்முடன் அவர்கள் தொழவும். அவர்களும் தங்கள் தற்காப்புகளையும், தங்கள் (போர்) ஆயுதங்களையும் எடு(த்து தங்களுடன் வைத்திரு)க்கவும். நீங்கள் உங்கள் ஆயுதங்கள் மற்றும் உங்கள் பொருள்களிலிருந்து கவனமற்று இருப்பதையே நிராகரிப்பாளர்கள் விரும்பினர். (அப்படி நீங்கள் கவனமற்று இருந்தால்,) அவர்கள் உடனே உங்கள் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து (தாக்கி) விடுவார்கள். இன்னும், மழையின் காரணமாக உங்களுக்கு சிரமம் இருந்தால்; அல்லது, நீங்கள் நோயாளிகளாக இருந்தால் (தொழும்போது) உங்கள் ஆயுதங்களை (கீழே) வைப்பது உங்கள் மீது குற்றமில்லை. உங்கள் (கேடயம், சிறு கத்தி போன்ற) தற்காப்புகளை (எப்போதும்) எடு(த்து வைத்துக் கொண்டு உஷாராக இரு)ங்கள். நிச்சயமாக அல்லாஹ் இழிவுபடுத்தும் தண்டனையை நிராகரிப்பாளர்களுக்கு ஏற்பாடு செய்திருக்கிறான்."},{"id":103,"translation":"ஆக, நீங்கள் தொழுகையை முடித்தால் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், உங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் (நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும்) அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாக இருங்கள். ஆக, (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) நீங்கள் (பாதுகாப்பு பெற்று) நிம்மதி அடைந்தால் தொழுகையை (முறைப்படி முழுமையாக) நிலைநிறுத்துங்கள். நிச்சயமாகத் தொழுகை நம்பிக்கையாளர்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக இருக்கிறது."},{"id":104,"translation":"(எதிரி) கூட்டத்தைத் தேடி செல்வதில் (நீங்கள் சிறிதும்) சோர்வடையாதீர்கள். நீங்கள் (காயத்தினால்) வலியை உணர்பவர்களாக இருந்தால் நீங்கள் வலியை உணர்வது போன்று நிச்சயமாக அவர்களும் வலியை உணர்கிறார்கள். ஆனால், அவர்கள் ஆதரவு வைக்காத (வெற்றி, நற்கூலி, நன்மைகள் அனைத்)தை(யும்) அல்லாஹ்விடம் நீங்கள் ஆசை வைக்கிறீர்கள். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":105,"translation":"(நபியே!) அல்லாஹ் உமக்கு அறிவித்து கொடுத்ததின் மூலம் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பளிப்பதற்காக உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை நிச்சயமாக நாமே உம்மீது இறக்கினோம். நீர் மோசடிக்காரர்களுக்கு வழக்காடுபவராக (-அவர்களுக்கு பரிந்துரைப்பவராக) இருக்காதீர். (அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி, ஒப்பந்தம் செய்தவராக இருந்தாலும் சரி)"},{"id":106,"translation":"இன்னும், நீர் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":107,"translation":"இன்னும் (மக்களுக்குத் தீங்கிழைத்து) தங்களுக்குத்தாமே மோசடி செய்பவர்கள் சார்பாக நீர் வாதிடாதீர். (அவர்களுக்காக நீர் வழக்காடாதீர்!) பெரும் சதிகாரனாக (மோசடிக்காரனாக), பெரும் பாவியாக இருப்பவன் மீது நிச்சயமாக அல்லாஹ் அன்பு வைக்க மாட்டான்."},{"id":108,"translation":"இவர்கள் (தம் குற்றத்தை) மக்களிடம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், அல்லாஹ்விடம் மறைக்க முயற்சிப்பதில்லை. அல்லாஹ் விரும்பாத பேச்சை இவர்கள் இரவில் சதித்திட்டம் செய்யும்போது அவன் அவர்களுடன் இருந்தான். இன்னும், அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்(தறிந்)தவனாக இருக்கிறான்."},{"id":109,"translation":"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் இவர்கள் சார்பாக இவ்வுலக வாழ்க்கையில் வாதிடுகிறீர்களா? ஆக, மறுமை நாளில் இவர்கள் சார்பாக அல்லாஹ்விடம் யார் வாதிடுவார்? அல்லது, (அல்லாஹ்விடம் தர்க்கம் செய்வதற்கு) இவர்கள் சார்பாக யார் பொறுப்பாளராக இருப்பார்?"},{"id":110,"translation":"இன்னும், எவர், ஒரு தீமையைச் செய்வாரோ; அல்லது, தனக்குத்தானே அநீதி இழைப்பாரோ; பிறகு, அவர் (அதிலிருந்து விலகி, கைசேதப்பட்டு) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரோ அவர் அல்லாஹ்வை மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாகக் காண்பார்."},{"id":111,"translation":"இன்னும், எவர் ஒரு பாவத்தைச் சம்பாதிக்கிறாரோ அவர் அதைச் சம்பாதிப்பதெல்லாம் தனக்கெதிராகத்தான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":112,"translation":"இன்னும், எவர் ஒரு குற்றத்தை அல்லது ஒரு பாவத்தை செய்வாரோ; பிறகு, அதை ஒரு நிரபராதி மீது சுமத்துவாரோ அவர் திட்டமாக அவதூறையும் வெளிப்படையான பாவத்தையும் (தன்மீது) சுமந்து கொண்டார்."},{"id":113,"translation":"(நபியே!) அல்லாஹ்வின் அருளும், அவனின் கருணையும் உம்மீது இல்லாதிருந்தால் உம்மை வழி கெடுத்துவிட அவர்களில் ஒரு பிரிவு திட்டமாக (உள்ளத்தில்) உறுதியாக நாடியிருப்பார்கள். அவர்கள் தங்களையே தவிர (உம்மை) வழி கெடுக்கமாட்டார்கள். அவர்கள் உமக்கு எதையும் தீங்கிழைக்க மாட்டார்கள். அல்லாஹ் இவ்வேதத்தையும், ஞானத்தையும் உம்மீது இறக்கினான். இன்னும், நீர் அறிந்திருக்காதவற்றை உமக்குக் கற்பித்(து கொடுத்)தான். இன்னும், உம்மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாகவே இருக்கிறது."},{"id":114,"translation":"(நபியே!) அவர்களின் இரகசியங்களில் அதிகமானவற்றில் அறவே நன்மை இல்லை, தர்மத்தை; அல்லது, நன்மையை; அல்லது, மக்களுக்கிடையில் சமாதானத்தை ஏவியவர்கள் இரகசியம் பேசுவதில் தவிர. எவர் அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி (மேற்கூறப்பட்ட) அவற்றை செய்வாரோ நாம் அவருக்கு மகத்தான கூலியைத் தருவோம்."},{"id":115,"translation":"இன்னும், எவர் தனக்கு நேரான வழி தெளிவானதன் பின்னர் இத்தூதருக்கு முரண்பட்டு நம்பிக்கையாளர்களின் வழி அல்லாததைப் பின்பற்றுவாரோ அவரை அவர் திரும்பிய வழியிலேயே நாம் திருப்பிவிடுவோம். இன்னும், அவரை நரகத்தில் எரிப்போம். அது கெட்ட மீளுமிடமாகும்."},{"id":116,"translation":"நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைக்கப்படுவதை மன்னிக்க மாட்டான். இன்னும், அது அல்லாததை தான் நாடுபவருக்கு மன்னிப்பான். எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ திட்டமாக அவர் தூரமான வழிகேடாக வழிகெட்டுவிட்டார்."},{"id":117,"translation":"அவர்கள் அவனையன்றி பெண் சிலைகளிடமே தவிர பிரார்த்திப்பதில்லை. இன்னும், (அல்லாஹ்விற்கு) கீழ்ப்படியாத ஷைத்தானிடமே தவிர அவர்கள் பிரார்த்திப்பதில்லை."},{"id":118,"translation":"அல்லாஹ் அவனை சபித்தான். அவன் கூறினான்: “உன் அடியார்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினரை நிச்சயமாக நான் எடுத்துக்கொள்வேன்.”"},{"id":119,"translation":"“இன்னும், நிச்சயம் நான் அவர்களை வழி கெடுப்பேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு வீண் நம்பிக்கைகளை ஊட்டுவேன்; இன்னும், நிச்சயம் அவர்களுக்கு (தீமையை) ஏவுவேன். ஆகவே, (சிலைகளுக்கு நேர்ச்சை செய்யப்பட்ட) கால்நடைகளின் காதுகளை கட்டாயம் அவர்கள் அறுப்பார்கள். இன்னும், நிச்சயம் அவர்களுக்கு ஏவுவேன். ஆகவே, அல்லாஹ்வின் படைப்பு(களின் கோலங்)களை நிச்சயமாக அவர்கள் மாற்றுவார்கள்.” (இவ்வாறு ஷைத்தான் கூறினான்.) எவன் அல்லாஹ்வையன்றி ஷைத்தானை நண்பனாக எடுத்துக் கொள்வானோ அவன் திட்டமாக வெளிப்படையான நஷ்டமடைந்தான்."},{"id":120,"translation":"ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; இன்னும், அவர்களுக்கு வீண் நம்பிக்கை ஊட்டுகிறான். இன்னும், ஷைத்தான் அவர்களுக்கு ஏமாற்றத்தைத் தவிர (உண்மையை) வாக்களிக்க மாட்டான்."},{"id":121,"translation":"அவர்களுடைய ஒதுங்குமிடம் நரகம்தான். இன்னும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து செல்ல) ஒரு ஒதுங்குமிடத்தையும் காணமாட்டார்கள்."},{"id":122,"translation":"எனினும், எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்களை (மறுமையில்) சொர்க்கங்களில் நாம் பிரவேசிக்க செய்வோம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அதில் என்றென்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அல்லாஹ் உண்மையான வாக்குறுதி அளிக்கிறான். சொல்லில் அல்லாஹ்வைவிட மிக உண்மையானவன் யார்?"},{"id":123,"translation":"(நம்பிக்கையாளர்களே! வெற்றி என்பது) உங்கள் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை, வேதக்காரர்களின் விருப்பங்களுக்கு ஏற்பவும் இல்லை. எவன் ஒரு தீமையைச் செய்வானோ அவனுக்கு அதற்கு கூலி கொடுக்கப்படும். இன்னும், அல்லாஹ்வையன்றி தனக்கு ஒரு பாதுகாவலரையோ ஓர் உதவியாளரையோ அவன் காண மாட்டான்."},{"id":124,"translation":"இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளில் இருந்து (முடிந்தளவு) செய்வார்களோ, அவர்கள் ஆண்களோ அல்லது பெண்களோ அவர்கள்தான் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், ஒரு (பேரீத்தங் கொட்டையின்) கீறல் அளவும் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":125,"translation":"யார் அல்லாஹ்விற்கு தன் முகத்தை முற்றிலும் பணியவைப்பாரோ (-அல்லாஹ்வின் மார்க்க சட்டங்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு, அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபடுவாரோ); - அவரோ நற்குணமுடையவராக இருக்கும் நிலையில், - இன்னும், இப்ராஹீமுடைய மார்க்கத்தை (அதில்) உறுதியானவராக (இணைவைத்தலை விட்டு முற்றிலும் விலகியவராக) பின்பற்றுவாரோ அவரை விட மார்க்கத்தால் (-கொள்கையால்) மிக அழகானவர் யார்? இன்னும், அல்லாஹ் இப்ராஹீமை (தனது) உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்."},{"id":126,"translation":"இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்குரியனவே! அல்லாஹ் எல்லாவற்றையும் சூழ்ந்த(றிப)வனாக இருக்கிறான்."},{"id":127,"translation":"(நபியே!) உம்மிடம் பெண்களைப் பற்றி, மார்க்கத் தீர்ப்பு கோருகிறார்கள். (நீர்) கூறுவீராக: “அவர்களைப் பற்றி அல்லாஹ் உங்களுக்குத் தீர்ப்பளிக்கிறான். இன்னும், வேதத்தில் உங்களுக்கு எது ஓதப்படுகிறதோ அதுவும் தீர்ப்பளிக்கிறது. அனாதைப் பெண்கள், அவர்களுக்கு விதிக்கப்பட்டதை நீங்கள் கொடுக்காமல் அவர்களை மணமுடிக்க விரும்புகிறீர்கள், (இது தவறு என்றும்) பலவீனமான சிறுவர்களுக்கு (அவர்களின் உரிமைகளையும் இறந்தவருடைய சொத்தில் அவர்களுக்குரிய பாகங்களையும் சரியாக கொடுக்க வேண்டுமென்றும்), அனாதைகளுக்கு (மஹ்ர் இன்னும் சொத்தில்) நீதத்தை நீங்கள் நிலை நிறுத்த வேண்டும் (என்றும் அல்லாஹ் தீர்ப்பளிக்கிறான்). நீங்கள் நன்மையில் எதைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவனாக இருக்கிறான்.”"},{"id":128,"translation":"ஒரு பெண் தன் கணவனிடமிருந்து வெறுப்பை அல்லது புறக்கணிப்பை பயந்தால், அவ்விருவரு(ம் தங்களு)க்கு மத்தியில் ஒரு சமாதான ஒப்பந்தத்தை செய்வது அவ்விருவர் மீதும் அறவே குற்றமில்லை. சமாதான (ஒப்பந்த)ம் சிறந்ததாகும். (பெண்களின்) ஆன்மாக்கள் (தங்கள் கணவன் விஷயத்தில்) கஞ்சத்தனத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளன. இன்னும், நீங்கள் (உங்கள் மனைவிகளுக்கு) நன்மை செய்தால், (அவர்கள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் இம்மை மறுமை வாழ்க்கையின் நன்மைக்கு அதுதான் மிகச் சிறந்த வழியாகும்.) நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்."},{"id":129,"translation":"நீங்கள் ஆசைப்பட்டாலும் மனைவிகளுக்கிடையில் நீதமாக நடப்பதற்கு அறவே இயலமாட்டீர்கள். ஆகவே, (ஒருத்தியின் பக்கம் மட்டும்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து விடாதீர்கள். அ(ப்படி சாய்ந்து மற்ற)வளை (அந்தரத்தில்) தொங்கவிடப்பட்டவளைப் போன்று விட்டுவிடாதீர்கள்! இன்னும், நீங்கள் சமாதானம் செய்து (உங்கள் ஒழுக்கங்களையும் குணங்களையும் சீர்திருத்திக் கொண்டால்); இன்னும், (மனைவிகள் விஷயத்தில்) அல்லாஹ்வை அஞ்சினால் (உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதுடன் உங்கள் மீது கருணை புரிந்து, மகிழ்ச்சியான வாழ்க்கையை ஏற்படுத்துவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":130,"translation":"இன்னும், (சமாதானம் பலனளிக்காமல் கணவன், மனைவி) இருவரும் பிரிந்து விட்டாலோ அல்லாஹ் தன் (அருட்)கொடையினால் ஒவ்வொருவரையும் நிறைவடையச் செய்வான். அல்லாஹ் விசாலமானவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":131,"translation":"வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், உங்களுக்கும் “அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று திட்டவட்டமாக உபதேசித்தோம். இன்னும், நீங்கள் நிராகரித்தால் (அது அவனுக்கு நஷ்டமில்லை), வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் முற்றிலும் நிறைவானவனாக (எத்தேவையுமற்றவனாக), பெரும் புகழுக்குரியவனாக இருக்கிறான்."},{"id":132,"translation":"இன்னும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வுக்கே உரியன! (படைப்புகளின் காரியங்களுக்கு) பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":133,"translation":"மனிதர்களே! அவன் நாடினால் உங்களை போக்கிவிடுவான் (-அழித்துவிடுவான்). இன்னும், மற்றவர்களைக் கொண்டுவருவான். அல்லாஹ் அதன் மீது பேராற்றலுடையவனாக இருக்கிறான்."},{"id":134,"translation":"இவ்வுலகத்தின் பலனை மட்டும் எவர் நாடுபவராக இருந்தாரோ (அவர் அறிந்து கொள்ளவும்), அல்லாஹ்விடம் உலகம் இன்னும் மறுமையின் பலன் இருக்கிறது. (எனவே இரண்டையும் அவர் நாடட்டும்). அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்."},{"id":135,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நீதத்தை நிலைநிறுத்துபவர்களாக; அல்லாஹ்விற்காக சாட்சி கூறுபவர்களாக இருங்கள்! நீதம் உங்களுக்கு அல்லது பெற்றோருக்கு அல்லது உறவினர்களுக்கு எதிராக இருந்தாலும் சரியே. (யாருக்கு எதிராக சாட்சி கூறப்படுகின்றதோ) அவர் செல்வந்தராக அல்லது ஏழையாக (இருந்தாலும் சரி. ஏனெனில் யாராக) இருந்தாலும் அல்லாஹ்தான் அவர்களுக்கு மிக ஏற்றமானவன். (நீங்கள் அல்ல.) ஆகவே, நீங்கள் நீதி செலுத்துவதில் (உங்கள்) ஆசைகளை பின்பற்றாதீர்கள்! (ஏழை, பணக்காரன், உறவுக்காரன், தூரமானவன், தன் சமூகத்தவன், வேறு சமூகத்தவன் என்று வேறுபாடு பார்க்காதீர்கள்!) நீங்கள் (சாட்சியத்தை) மாற்றினால் அல்லது (சாட்சியத்தை) புறக்கணித்தால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான். (ஆகவே, அதற்குரிய விசாரணை மறுமையில் கண்டிப்பாக உண்டு.)"},{"id":136,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வையும், அவனின் தூதரையும், அவன் தன் தூதர் மீது இறக்கிய வேதத்தையும், (இதற்கு) முன்னர் அவன் இறக்கிய வேதத்தையும் நம்பிக்கை கொள்ளுங்கள். எவர் அல்லாஹ்வையும், அவனின் வானவர்களையும், அவனின் வேதங்களையும், அவனின் தூதர்களையும், மறுமை நாளையும் நிராகரிப்பாரோ அவர், திட்டமாக தூரமான வழிகேடாக வழிகெட்டார்."},{"id":137,"translation":"நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து, பிறகு நம்பிக்கை கொண்டு, பிறகு நிராகரித்து பிறகு நிராகரிப்பை அதிகப்படுத்தினார்களோ (அவர்கள் மரணித்துவிட்டால்) அவர்களை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இன்னும் (தண்டனையிலிருந்து தப்பிக்க) அவர்களுக்கு ஒரு வழியையும் காட்ட மாட்டான்."},{"id":138,"translation":"நயவஞ்சகர்களுக்கு நற்செய்தி கூறுவீராக: “நிச்சயமாக துன்புறுத்துகின்ற தண்டனை அவர்களுக்கு உண்டு” என்று."},{"id":139,"translation":"இவர்கள் நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அவர்களிடம் கண்ணியத்தை தேடுகிறார்களா? நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது."},{"id":140,"translation":"(ஒரு சபையில்) அல்லாஹ்வின் வசனங்கள் நிராகரிக்கப்படுவதையும் கேலி செய்யப்படுவதையும் நீங்கள் செவியுற்றால் (அவ்வாறு செய்யும்) அவர்கள் அது அல்லாத வேறு பேச்சில் ஈடுபடும் வரை அவர்களுடன் உட்காராதீர்கள். (அவ்வாறு உட்கார்ந்தால்) அப்போது நிச்சயமாக நீங்களும் அவர்களைப் போன்றுதான் ஆவீர்கள் என்று அல்லாஹ் உங்கள் மீது வேதத்தில் (சட்டத்தை) இறக்கி விட்டான். நிச்சயமாக அல்லாஹ் நயவஞ்சகர்களையும் நிராகரிப்பவர்களையும் இவர்கள் அனைவரையும் நரகத்தில் ஒன்று சேர்ப்பான்."},{"id":141,"translation":"(நயவஞ்சகமுடைய) இவர்கள் (நம்பிக்கையாளர்களாகிய) உங்களுக்கு (சோதனையை) எதிர்பார்க்கிறார்கள். ஆக, அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒரு வெற்றி (கிடைத்து) இருந்தால், “நாங்களும் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் போரில் உங்களுக்கு கிடைத்த செல்வத்தில் அவர்களுக்கும் பங்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்)கிறார்கள். நிராகரிப்பாளர்களுக்கு ஓர் அளவு (வெற்றி கிடைத்து) இருந்தால் “நாங்கள் (உங்களை வெல்ல ஆற்றல் பெற்றிருந்தும்) உங்களை வெற்றி கொள்ளவில்லையே! இன்னும், உங்களை நம்பிக்கையாளர்களிடமிருந்து பாதுகாக்கவில்லையா?” என்று கூறு(வதுடன் அவர்களின் ஆதரவை எதிர்பார்க்)கிறார்கள். (இப்படியாக இரு முகத்தை காட்டுகிறார்கள். யாருக்கு வெற்றி கிடைக்கிறதோ அவர்கள் பக்கம் சாய்ந்து விடுகிறார்கள்.) ஆக, உங்களுக்கிடையில் அல்லாஹ் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான். நம்பிக்கையாளர்கள் மீது (வெற்றி கொள்ள) நிராகரிப்பாளர்களுக்கு ஒரு வழியையும் அல்லாஹ் அறவே ஆக்கமாட்டான்."},{"id":142,"translation":"நிச்சயமாக நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்றுகிறார்கள் (என்று நினைக்கிறார்கள்). அவனோ அவர்களை ஏமாற்றக் கூடியவன் ஆவான். இன்னும், அவர்கள் தொழுகைக்கு நின்றால் சோம்பேறிகளாக மனிதர்களுக்குக் காண்பித்தவர்களாக (முகஸ்துதியை விரும்பியவர்களாக) நிற்கிறார்கள்; இன்னும், குறைவாகவே தவிர அல்லாஹ்வை அவர்கள் நினைவு கூரமாட்டார்கள்."},{"id":143,"translation":"அவர்கள் அதற்கிடையில் (-ஈமானுக்கும் ஷிர்க்கிற்கும் இடையில்) தடுமாறியவர்களாக இருக்கிறார்கள். (முஸ்லிம்களாகிய) இவர்களுடனும் இல்லை, (காபிர்களாகிய) இவர்களுடனுமில்லை. எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு ஒரு (நல்ல) வழியையும் (நீர்) அறவே காண மாட்டீர்."},{"id":144,"translation":"நம்பிக்கையாளர்களே! நம்பிக்கையாளர்கள் அன்றி நிராகரிப்பாளர்களை (உங்கள் காரியங்களுக்கு) பொறுப்பாளர்களாக ஆக்காதீர்கள். உங்களுக்கு எதிராக அல்லாஹ்விற்கு ஒரு தெளிவான சான்றை நீங்கள் ஆக்கிவிட நாடுகிறீர்களா?"},{"id":145,"translation":"நிச்சயமாக நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகக் கீழ் அடுக்கில் இருப்பார்கள். (நபியே!) அவர்களுக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்."},{"id":146,"translation":"எவர்கள் (தங்கள் நயவஞ்சகத்தை விட்டு) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, அவனிடம்) பாவ மன்னிப்புக் கோரினார்களோ; இன்னும், (தங்கள் நம்பிக்கையையும் செயல்களையும்) சீர்திருத்தம் செய்தார்களோ; இன்னும், அல்லாஹ்வை (-அவனது உடன்படிக்கையை உறுதியாக)ப் பற்றிப்பிடித்தார்களோ; இன்னும், தங்கள் வழிபாட்டை(யும் மார்க்கத்தையும்) அல்லாஹ்விற்கு தூய்மைப்படுத்தினார்களோ அ(த்தகைய)வர்களைத் தவிர. அவர்கள் நம்பிக்கையாளர்களுடன் (சொர்க்கத்தில்) இருப்பார்கள். நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் மகத்தான கூலியைக் கொடுப்பான்."},{"id":147,"translation":"நீங்கள் நன்றி செலுத்தினால், அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டால், உங்களை தண்டனை செய்து அவன் என்ன பலன் அடையப்போகிறான்? அல்லாஹ் நன்றி அறிபவனாக, நன்கறிந்தவனாக இருக்கிறான்."},{"id":148,"translation":"(யாரும்) கெட்டதைப் பகிரங்கப்படுத்தி பேசுவதை அல்லாஹ் விரும்ப மாட்டான், அநீதியிழைக்கப்பட்டவரைத் தவிர. (அவர் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எடுத்து சொல்லலாம்.) அல்லாஹ் நன்கு செவியுறுபவனாக, நன்கறிபவனாக இருக்கிறான்."},{"id":149,"translation":"நன்மையை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது அதை மறைத்தாலும் அல்லது ஒரு கெட்டதை நீங்கள் மன்னித்தாலும் (அது நன்றே). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களின் குற்றங்களை அவர்கள் திருந்தினால்) முற்றிலும் மன்னிப்பவனாக, (அவர்கள் திருந்தவில்லை என்றால் அவர்களை தண்டிக்க) பேராற்றலுடையவனாக இருக்கிறான்."},{"id":150,"translation":"நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நிராகரிக்கிறார்களோ; இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதர்களுக்கும் இடையில் பிரிவினை செய்ய விரும்புகிறார்களோ; இன்னும், (தூதர்களில்) “சிலரை நம்பிக்கை கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” எனக் கூறுகிறார்களோ; இன்னும் அதற்கு மத்தியில் (வெறுக்கத்தக்க) ஒரு பாதையை ஏற்படுத்த நாடுகிறார்களோ,"},{"id":151,"translation":"அ(த்தகைய)வர்கள்தான் உண்மையில் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள். இன்னும், இழிவுபடுத்தும் தண்டனையை நிராகரிப்பாளர்களுக்கு நாம் ஏற்படுத்தி இருக்கிறோம்."},{"id":152,"translation":"இன்னும், எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், அவர்களில் ஒருவருக்கிடையிலும் பிரிவினை செய்யவில்லையோ அவர்களுக்கு அவர்களுடைய (தகுந்த நற்) கூலிகளை அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":153,"translation":"(நபியே!) வேதக்காரர்கள், வானத்திலிருந்து ஒரு வேதத்தை அவர்கள் மீது நீர் இறக்கி தரும்படி உம்மிடம் கேட்கிறார்கள். ஆக, திட்டமாக இதைவிட மிகப் பெரிய (விஷயத்)தை மூஸாவிடம் அவர்கள் கேட்டனர். அதாவது, “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி!” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். ஆக, அதை(யும் நாம் அவர்களுக்கு) மன்னித்தோம். இன்னும், மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்."},{"id":154,"translation":"இன்னும், (அவர்கள் அல்லாஹ்விற்கு கொடுத்த) அவர்களுடைய உறுதிமொழியின் காரணமாக (-(அதை முறித்த காரணத்தால்) மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். இன்னும், “(பைத்துல் முகத்தஸ் உடைய) வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். இன்னும், “சனிக்கிழமையில் (மீன் பிடிக்கக் கூடாது என்ற) கட்டுப்பாட்டை மீறாதீர்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்தோம்."},{"id":155,"translation":"ஆக, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை முறித்ததாலும்; அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் நிராகரித்ததாலும்; நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்ததாலும்; “எங்கள் உள்ளங்கள் திரையிடப்பட்டுள்ளன” என்று அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களைச் சபித்தோம்). மாறாக, அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவற்றின் மீது அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். ஆகவே, (அவர்களில்) சிலரைத் தவிர, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":156,"translation":"இன்னும், அவர்களின் நிராகரிப்பின் காரணமாகவும்; (ஈஸாவின் தாயார்) மர்யமின் மீது அபாண்டமான இட்டுக்கட்டப்பட்ட பொய்யை அவர்கள் கூறியதாலும் (நாம் அவர்களை சபித்தோம்)."},{"id":157,"translation":"இன்னும், “அல்லாஹ்வின் தூதர், மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹை நிச்சயமாக நாம் கொன்றோம்” என்று அவர்கள் கூறியதாலும் (அவர்களைச் சபித்தோம்). அவரை அவர்கள் கொலை செய்யவுமில்லை. இன்னும், அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. எனினும், அவர்களுக்கு (அவரைப் போன்று) ஒருவன் தோற்றமாக்கப்பட்டான். (அவனைதான் அவர்கள் கொன்றார்களே தவிர, ஈஸாவை அல்ல.) இன்னும் நிச்சயமாக அவர் விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் அதில் (பெரிய) சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள். யூகத்தைப் பின்பற்றுவது தவிர அதில் அவர்களுக்கு ஓர் அறிவும் இல்லை. இன்னும், உறுதியாக அவர்கள் அவரைக் கொலை செய்யவே இல்லை."},{"id":158,"translation":"மாறாக, அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்தினான். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":159,"translation":"இன்னும், வேதக்காரர்களில் எவரும் இருக்க மாட்டார், அவர் (-ஈஸா) இறப்பதற்கு முன்னர் நிச்சயமாக அவரை (-ஈஸாவை) நம்பிக்கைக் கொண்டே தவிர. மறுமை நாளில் அவர் (-ஈஸா) அவர்கள் மீது சாட்சி கூறுபவராக இருப்பார் (-தன்னை நிராகரித்தவர்களுக்கு எதிராகவும் தன்னை நம்பிக்கை கொண்டவர்களை உண்மைப்படுத்தியும் சாட்சி கூறுவார்)."},{"id":160,"translation":"ஆக, யூதர்களின் அநியாயத்தின் காரணமாகவும் அல்லாஹ்வின் பாதையை விட்டு அதிகமானவர்களை அவர்கள் தடுத்ததின் காரணமாகவும் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட (சில) நல்லவற்றை அவர்களுக்கு தடுக்கப்பட்டதாக ஆக்கினோம்."},{"id":161,"translation":"இன்னும், அவர்கள் வட்டி வாங்கியதன் காரணமாகவும்; - அவர்களோ அதிலிருந்து தடுக்கப்பட்டிருக்கிறார்கள். - இன்னும், மக்களின் செல்வங்களை அவர்கள் தப்பான வழியில் (தீர்ப்புக்கு லஞ்சம் வாங்கி) சாப்பிட்டதன் காரணமாகவும் (அவர்களை சபித்தோம்). இன்னும், நிராகரிக்கின்ற அவர்களுக்குத் துன்புறுத்தக்கூடிய தண்டனையை தயார் செய்து இருக்கிறோம்."},{"id":162,"translation":"எனினும் (நபியே!) அவர்களில் கல்வியில் தேர்ச்சிபெற்றவர்கள்; இன்னும் (உண்மையான) நம்பிக்கையாளர்கள் (உம்மிடம் மூடர்கள் கேள்வி கேட்டது போன்று கேட்க மாட்டார்கள். மாறாக,) உமக்கு இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் தொழுகையை நிலைநிறுத்துகின்ற வானவர்களையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், ஸகாத்தைக் கொடுப்பவர்கள்; இன்னும், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டவர்கள் (ஆகிய) இவர்கள் எல்லோருக்கும் மகத்தான கூலியைக் கொடுப்போம்."},{"id":163,"translation":"(நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின்னர் (வந்த) நபிமார்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்தது போன்றே உமக்கும் நிச்சயமாக நாம் வஹ்யி அறிவித்தோம். இன்னும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப், (அவர்களுடைய) சந்ததிகள், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸுலைமான் ஆகியவர்களுக்கும் வஹ்யி அறிவித்தோம். இன்னும் தாவூதுக்கு ‘ஸபூர்’ ஐ கொடுத்தோம்."},{"id":164,"translation":"இன்னும் (பல) தூதர்களுக்கும் நாம் வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை முன்னர் உமக்கு விவரித்தோம். இன்னும், பல தூதர்களுக்கு வஹ்யி அறிவித்திருக்கிறோம். அவர்களை உமக்கு நாம் விவரிக்கவில்லை. இன்னும், மூஸாவுடன் அல்லாஹ் நேரடியாக பேசினான்."},{"id":165,"translation":"தூதர்களுக்குப் பின்பு அல்லாஹ்வின் மீது (குற்றம் கூற) மக்களுக்கு ஓர் ஆதாரமும் இல்லாதிருக்க, நற்செய்தி கூறுபவர்களாக, (அச்சமூட்டி) எச்சரிப்பவர்களாக (பல) தூதர்களை (எமது அடியார்களுக்கு தொடர்ந்து நாம் அனுப்பினோம்). இன்னும், அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":166,"translation":"என்றாலும், அல்லாஹ் உம்மீது இறக்கியதற்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகிறான், - “அதை அவனுடைய அறிவு ஞானத்தைக் கொண்டே இறக்கி இருக்கிறான்” என்று. (அவ்வாறே) வானவர்களும் (உமக்கு இறக்கப்பட்ட வேதத்தின் உண்மைக்கு) சாட்சி கூறுகிறார்கள். சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":167,"translation":"நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து (மக்களைத்) தடுத்தார்களோ அவர்கள் வெகுதூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்."},{"id":168,"translation":"நிச்சயமாக, எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும் அநியாயம் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை. இன்னும், (நரகத்தின் வழியைத் தவிர வேறு) வழியை அவர்களுக்கு வழி காட்டுபவனாக இல்லை. (அவர்கள் சொர்க்கப் பாதையில் செல்ல மாட்டார்கள். அவர்கள் மன முரண்டாக நிராகரித்த காரணத்தால் அல்லாஹ் அவர்களை கைவிட்டுவிட்டான்.)"},{"id":169,"translation":"நரகத்தின் வழியைத் தவிர (வேறு வழியை அவர்களுக்கு அல்லாஹ் காட்ட மாட்டான். அ(ந்த நரகத்)தில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். இது (-அவர்களை நரகத்தில் தள்ளுவது) அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது."},{"id":170,"translation":"மக்களே! இத்தூதர் உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்துவிட்டார். ஆகவே, நம்பிக்கை கொள்ளுங்கள். (அது) உங்களுக்கு மிக்க நல்லதாக அமையும். நீங்கள் (அவரை) நிராகரித்தால், (அல்லாஹ்விற்கு ஒன்றும் நஷ்டமில்லை. ஏனெனில்,) வானங்களிலும் பூமியிலுமுள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்கே உரியன! அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":171,"translation":"வேதக்காரர்களே! உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர கூறாதீர்கள். மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ் எல்லாம், அல்லாஹ்வுடைய தூதரும், அவனுடைய (‘குன்’ என்ற) வார்த்தையும், - அ(ந்த வார்த்)தை(யை) மர்யமுக்கு சேர்ப்பித்தான்- அவனிலிருந்து (படைக்கப்பட்ட) ஓர் உயிரும் ஆவார். ஆகவே, அல்லாஹ்வையும், அவனுடைய தூதர்களையும் நம்பிக்கை கொள்ளுங்கள். (கடவுள்) ‘மூவர்’ என்று கூறாதீர்கள். (இக்கூற்றை விட்டு) விலகுங்கள். (அது) உங்களுக்கு மிக நல்லதாகும். நிச்சயமாக அல்லாஹ் மட்டும்தான் (உண்மையில் வணங்கத்தகுதியான) ஒரே ஓர் இறைவன் ஆவான். அவனுக்கு குழந்தை இருப்பதை விட்டு அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":172,"translation":"ஈஸாவும், (அல்லாஹ்விற்கு) நெருக்கமான வானவர்களும் அல்லாஹ்விற்கு அடிமைகளாக இருப்பதை விட்டு அறவே திமிரு (கர்வம்) கொள்ளமாட்டார்கள். எவர்கள் அவனை வணங்குவதை விட்டு திமிரு (கர்வம்) கொள்வார்களோ இன்னும் பெருமையடிப்பாரோ அவர்கள் அனைவரையும் (மறுமையில்) அவன் தன் பக்கம் ஒன்று திரட்டுவான்."},{"id":173,"translation":"ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்தார்களோ அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்கு (முழுமையாக) நிறைவேற்றுவான், இன்னும், தன் அருளிலிருந்து (வேண்டியளவு) அவர்களுக்கு அதிகப்படுத்துவான். ஆக, எவர்கள் திமிருபிடித்து பெருமையடித்தார்களோ அவர்களைத் துன்புறுத்தும் தண்டனையால் அவன் தண்டிப்பான். இன்னும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு (வேறு) பாதுகாவலரையும் உதவியாளரையும் (அங்கு) காண மாட்டார்கள்."},{"id":174,"translation":"மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து (தெளிவான) ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துள்ளது. இன்னும், தெளிவான ஓர் ஒளியை உங்களுக்கு நாம் இறக்கினோம்."},{"id":175,"translation":"ஆக, எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவ(ன் இறக்கிய குர்ஆ)னைப் பலமாகப் பற்றிப் பிடித்தார்களோ அவர்களை தன் புறத்திலிருந்து கருணையிலும், அருளிலும் அவன் பிரவேசிக்க வைப்பான். இன்னும், தன் பக்கம் (வருவதற்கு) நேரான வழியையும் அவர்களுக்கு அவன் வழிகாட்டுவான்."},{"id":176,"translation":"(நபியே!) அவர்கள் உம்மிடம் தீர்ப்பு கேட்கிறார்கள். கூறுவீராக! கலாலா (-தந்தை, பாட்டன், பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாதவர்) பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான். பிள்ளை சந்ததி இல்லாத ஒரு மனிதன் இறந்து அவனுக்கு (ஒரே) ஒரு சகோதரி (மட்டும்) இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச் சென்றதில் பாதி கிடைக்கும். (ஒரு பெண் இறந்து) அவளுக்கு சந்ததி இல்லையென்றால் (அவளுடைய சகோதரன் அவளுடைய அனைத்து சொத்திற்கும்) அவளுக்கு வாரிசாக ஆகிவிடுவான். ஆக, (பிள்ளை இல்லாமல் இறந்தவருக்கு உடன் பிறந்த சகோதரிகள்) இரு பெண்களாக (அல்லது அதை விட அதிகமாக) இருந்தால், (இறந்தவர்) விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு அவ்விருவருக்கும் உண்டு. (இறந்தவருக்கு) உடன் பிறந்தவர்கள் ஆண்களாகவும் பெண்களாகவும் (பல சகோதர சகோதரிகள்) இருந்தால், இரு பெண்களின் பங்கு ஓர் ஆணுக்கு (என்ற அடிப்படையில் சொத்து அவர்களுக்கு மத்தியில் பங்கிடப்படும்). நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக அல்லாஹ் உங்களுக்கு (நீதமான சரியான சட்டங்களை) விவரிக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான். (ஆகவே, அவனது சட்டத்தை ஏற்று திருப்தி பெறுங்கள்!)"}]},{"id":5,"verses":[{"id":1,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் (உங்களுக்குள் செய்த) உடன்படிக்கைகளை நிறைவேற்றுங்கள். உங்களுக்கு (மூன்றாவது வசனத்தில்) ஓதிக்காட்டப்படுபவற்றைத் தவிர (மற்ற) கால்நடைகள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. நீங்களோ இஹ்ராமுடையவர்களாக இருக்கும் நிலையில் வேட்டையாடுவதை ஆகுமாக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்புவதை (உங்களுக்கு) சட்டமாக்குகிறான்."},{"id":2,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் புனித அடையாளங்களையும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) குர்பானியையும், மாலையிடப்பட்ட குர்பானிகளையும், தங்கள் இறைவனிடமிருந்து அருளையும், பொருத்தத்தையும் தேடியவர்களாக புனிதமான (கஅபா) ஆலயத்தை நாடி வருகின்றவர்களையும் (அவமதிப்பதை) ஆகுமாக்காதீர்கள். இன்னும், நீங்கள் இஹ்ராமிலிருந்து நீங்கினால் நீங்கள் வேட்டையாடுங்கள்! (அது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுவிட்டது.) புனிதமான மஸ்ஜிதைவிட்டு அவர்கள் உங்களைத் தடுத்த காரணத்தால் (அந்த) சமுதாயத்தின் (மீது உங்களுக்கு ஏற்பட்ட) துவேஷம் (வெறுப்பு, பகைமை) நீங்கள் (அவர்கள் மீது) எல்லை மீறி நடக்க உங்களைத் தூண்ட வேண்டாம். இன்னும், நன்மைக்கும் இறையச்சத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவுங்கள். இன்னும், பாவத்திற்கும் அநியாயத்திற்கும் ஒருவருக்கொருவர் உதவாதீர்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தண்டிப்பதில் கடுமையானவன்."},{"id":3,"translation":"(தானாக) செத்தது, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவர்களுக்காக (சிலைகள், இறைநேசர்கள், போன்றவர்களுக்காக நேர்ச்சை செய்யப்பட்டு) அவர்களின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை, கழுத்து நெருக்கிச் செத்தது, அடிப்பட்டுச் செத்தது, விழுந்து செத்தது, கொம்பால் குத்தப்பட்டுச் செத்தது, மிருகங்கள் தின்று மீதமிருப்பது ஆகியவை உங்களுக்கு (நீங்கள் உண்பதற்கு) தடுக்கப்பட்டுவிட்டது. (எனினும், மிருகங்கள் வேட்டையாடியதில் உயிரோடிருப்பவற்றில் பிஸ்மில்லாஹ் கூறி) நீங்கள் அறுத்தவற்றைத் தவிர. (பூஜை செய்வதற்காக) நடப்பட்ட (கொடி, ஜண்டா, அடையாள சின்னம், சிலை போன்ற)வற்றுக்காக அறுக்கப்பட்டவை, அம்புகளால் (குறி கேட்டுப்) பாகம் பிரித்துக் கொள்வது (ஆகிய அனைத்தும் உங்களுக்கு) தடுக்கப்பட்டுவிட்டன. இவை பாவங்களாகும். நிராகரிப்பவர்கள் உங்கள் மார்க்கத்தை விட்டு இன்று நம்பிக்கை இழந்தனர். ஆக, அவர்களைப் பயப்படாதீர்கள். என்னைப் பயப்படுங்கள். இன்று உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை நான் முழுமையாக்கினேன். இன்னும், என் அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்தேன். இன்னும், இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக திருப்தியடைந்தேன். ஆக, எவர் பாவத்தின் பக்கம் சாயாதவராக, கடுமையான பசியில் (அனுமதிக்கப்பட்ட உணவின்றி) நிர்ப்பந்தத்திற்கு ஆளானால் (மேல் விலக்கப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை புசிப்பது குற்றமாகாது. ஏனெனில்), நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":4,"translation":"அவர்கள் தங்களுக்கு ஆகுமாக்கப்பட்டது எது என்று உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நல்ல உணவுப் பொருட்கள்; இன்னும், (வேட்டையாடுகின்ற) மிருகங்களில் நீங்கள் கற்றுக் கொடுத்தவை வேட்டையாடியதும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்தவற்றிலிருந்து அவற்றுக்கு நீங்கள் கற்றுக்கொடுங்கள். வேட்டையாட பயிற்சி அளியுங்கள். ஆக, அவை உங்களுக்காக (-உங்களுக்காக வேட்டையாடி) தடுத்துவைத்தவற்றிலிருந்து நீங்கள் புசியுங்கள். (அவற்றை வேட்டையின் மீது ஏவிவிடும் போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள். இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் (அடியார்களின் செயல்களை) கணக்கிடுவதில் மிகத் தீவிரமானவன் ஆவான்."},{"id":5,"translation":"இன்று, நல்ல உணவுப் பொருட்கள் அனைத்தும் உங்களுக்கு ஆகுமாக்கப்பட்டன. வேதம் கொடுக்கப்பட்டவர்களின் புலால் உணவும் உங்களுக்கு ஆகுமானதாகும்! உங்கள் புலால் உணவும் அவர்களுக்கு ஆகுமானதாகும்! ஈமானுடைய பெண்களில் கற்புள்ள பெண்களும், உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் கற்புள்ள பெண்களும் (நீங்கள் திருமணம் முடிக்க உங்களுக்கு) ஆகுமானவர்கள் ஆவார்கள், நீங்கள் அவர்களுடைய மஹ்ர்களை அவர்களுக்கு கொடுத்தால் (நீங்கள் அவர்களை மணமுடிக்கலாம்). நீங்களும் கற்புள்ளவர்களாக இருக்கவேண்டும், சட்டவிரோத (கள்ள) உறவில் ஈடுபடாதவர்களாக, இரகசிய தோழிகளை (உங்களுக்கு) வைக்காதவர்களாக இருக்கவேண்டும். இன்னும், எவர் (இந்த சட்டங்களை) நம்பிக்கைகொள்ள மறுக்கிறாரோ அவருடைய (நற்)செயல் திட்டமாக அழிந்துவிடும். இன்னும், அவர் மறுமையில் நஷ்டவாளிகளில் இருப்பார்."},{"id":6,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்கு நின்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும் கழுவுங்கள், இன்னும், உங்கள் தலைகளில் (நனைந்த கைகளினால்) தடவுங்கள். இன்னும் இரு கணுக்கால்கள் வரை உங்கள் கால்களையும் கழுவுங்கள். இன்னும், நீங்கள் முழுக்காளிகளாக இருந்தால் குளித்து நன்கு சுத்தமாகுங்கள். இன்னும், நீங்கள் நோயாளிகளாக இருந்தால்; அல்லது, பயணத்தில் இருந்தால்; அல்லது, உங்களில் ஒருவர் மலஜலம் கழித்துவிட்டு வந்தால்; அல்லது, நீங்கள் பெண்களுடன் உறவுகொண்டால் (ஆக இந்த சூழ்நிலையில்) தண்ணீரை நீங்கள் பெறவில்லையெனில் சுத்தமான மண்ணை நாடுங்கள். ஆக, அதிலிருந்து உங்கள் முகங்களையும், கைகளையும் தடவுங்கள். உங்கள் மீது சிரமத்தை ஆக்குவதற்கு அல்லாஹ் நாடமாட்டான். எனினும், நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைப் பரிசுத்தமாக்கவும், தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்கவும் நாடுகிறான்."},{"id":7,"translation":"இன்னும், உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருட்கொடையையும், “செவிமடுத்தோம், கீழ்ப்படிந்தோம்” என்று நீங்கள் கூறியபோது அவன் உங்களிடம் உறுதிமொழி வாங்கிய அவனுடைய உறுதிமொழியையும் நினைவு கூருங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":8,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக பொறுப்புகளை மிகச் சரியாக நிறைவேற்றக் கூடியவர்களாக (நீதம், நேர்மையில் மிக உறுதியானவர்களாக), நீதிக்கு சாதகமாக சாட்சி கூறுபவர்களாக இருங்கள். ஒரு சமுதாயத்தின் (மீதுள்ள) துவேஷம் நீங்கள் நீதமாக நடக்காதிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதம் செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிக நெருக்கமானதாகும். இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்."},{"id":9,"translation":"நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்தவர்களுக்கு அல்லாஹ் (மகத்தான வெற்றியை) வாக்களித்தான். அவர்களுக்கு மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு."},{"id":10,"translation":"இன்னும், எவர்கள் நிராகரித்து நம் வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்."},{"id":11,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், ஒரு சமுதாயம் தங்கள் கரங்களை உங்கள் பக்கம் நீட்ட நாடியபோது, அல்லாஹ் அவர்களுடைய கரங்களை உங்களை விட்டுத் தடுத்தான். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்."},{"id":12,"translation":"திட்டமாக அல்லாஹ் இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை வாங்கினான். இன்னும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை நாம் அனுப்பினோம். “நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தினால்; இன்னும் நீங்கள் ஸகாத்தை கொடுத்தால்; இன்னும், நீங்கள் என் தூதர்களை நம்பிக்கை கொண்டால்; இன்னும், அவர்களுக்கு நீங்கள் உதவிபுரிந்தால்; இன்னும், நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுத்தால் நிச்சயமாக உங்கள் பாவங்களை உங்களை விட்டு அகற்றிவிடுவேன். இன்னும், நதிகள் ஓடும் சொர்க்கங்களில் நிச்சயமாக உங்களை பிரவேசிக்க வைப்பேன்’’ என்று அல்லாஹ் கூறினான். ஆகவே, உங்களில் எவர் இதற்குப் பின்னர், நிராகரிப்பாரோ திட்டமாக (அவர்) நேரான வழியில் இருந்து வழி தவறிவிட்டார்."},{"id":13,"translation":"ஆக, அவர்கள் தங்கள் உறுதிமொழியை முறித்த காரணத்தால் அவர்களைச் சபித்தோம்; இன்னும், அவர்களுடைய உள்ளங்களை இறுகியதாக (கடினமானதாக) ஆக்கினோம். அவர்கள் (இறை) வசனங்களை அதன் (உண்மையான) இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) புரட்டுகிறார்கள். இன்னும், அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதில் ஒரு பகுதியை மறந்தார்கள். இன்னும், அவர்களில் சிலரைத் தவிர அவர்களிடம் மோசடியை (நீர்) தொடர்ந்து பார்ப்பவராக இருப்பீர். ஆக, அவர்களை மன்னிப்பீராக; இன்னும், புறக்கணிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நற்பண்பாளர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":14,"translation":"இன்னும், “நிச்சயமாக நாங்கள் கிறித்தவர்கள்’’ எனக் கூறியவர்களிடம் அவர்களுடைய உறுதிமொழியை வாங்கினோம். ஆக, அவர்கள் எதை உபதேசிக்கப்பட்டார்களோ அதிலிருந்து ஒரு பகுதியை அவர்கள் மறந்தார்கள். ஆகவே, மறுமை நாள் வரை அவர்களுக்கு மத்தியில் பகைமையையும் வெறுப்பையும் மூட்டினோம். இன்னும், அவர்கள் செய்து வந்ததற்கு அல்லாஹ் அவர்களுக்கு (மறுமையில் தகுந்த கூலி கொடுப்பதன் மூலம்) அறிவிப்பான்."},{"id":15,"translation":"வேதக்காரர்களே! உங்களிடம் திட்டமாக நம் தூதர் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்திருந்ததில் பலவற்றை (அவர்) உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். இன்னும், பலவற்றை விட்டுவிடுவார். அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவான வேதமும் உங்களிடம் வந்துவிட்டது."},{"id":16,"translation":"அல்லாஹ், தன் பொருத்தத்தைப் பின்பற்றுகிறவர்களை அதன் மூலமாக ஈடேற்றத்திற்குரிய பாதைகளில் நேர்வழி செலுத்துகிறான்; இன்னும், இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் தன் கட்டளைப்படி அவர்களை வெளியேற்றுகிறான்; இன்னும், அவர்களை நேர்வழியின் பக்கம் நேர்வழிகாட்டுகிறான்."},{"id":17,"translation":"நிச்சயமாக அல்லாஹ்வாகிறவன் மர்யமுடைய மகன் மஸீஹ்தான் என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தனர். ஆக, (நபியே!) கூறுவீராக: மர்யமுடைய மகன் மஸீஹையும், அவருடைய தாயையும், பூமியிலுள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் (அதை தடுக்க) யார் அல்லாஹ்விடம் ஒரு சிறிதும் சக்தி பெறுவார்? வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது! அவன் நாடியதை படைக்கிறான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்."},{"id":18,"translation":"இன்னும், யூதர்களும், கிறித்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுக்கு விருப்பமானவர்கள்’’ என்று கூறினர். (நபியே!) கூறுவீராக: “அவ்வாறாயின் உங்கள் குற்றங்களுக்காக அவன் உங்களை ஏன் தண்டிக்கிறான்? மாறாக, நீங்கள் அவன் படைத்த மனிதர்கள் ஆவீர். (அவனுடைய பிள்ளைகளல்ல.) அவன் நாடியவர்களை மன்னிக்கிறான்; இன்னும், அவன் நாடியவர்களை தண்டிக்கிறான். இன்னும், வானங்கள், பூமி இன்னும், அவை இரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது! இன்னும், அவன் பக்கம்தான் மீளுமிடம் இருக்கிறது.”"},{"id":19,"translation":"வேதக்காரர்களே! “நற்செய்தி கூறுபவர், எச்சரிப்பவர் எவரும் எங்களுக்கு வரவில்லை’’ என்று நீங்கள் கூறாதிருக்க தூதர்களின் இடைவெளியில் நம் தூதர் உங்களிடம் வந்துவிட்டார். (அவர் இஸ்லாமை) உங்களுக்கு தெளிவுபடுத்துகிறார். இன்னும், அல்லாஹ், ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":20,"translation":"இன்னும், மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! “என் சமுதாயமே! அல்லாஹ் உங்களில் நபிமார்களை ஏற்படுத்தியபோதும்; இன்னும், உங்களை அரசர்களாக ஆக்கியபோதும்; இன்னும், உலகத்தாரில் ஒருவருக்கும் கொடுக்காதவற்றை உங்களுக்குக் கொடுத்தபோதும் உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள்!"},{"id":21,"translation":"என் சமுதாயமே! அல்லாஹ் உங்களுக்கு விதித்த பரிசுத்தமான பூமியில் நுழையுங்கள். இன்னும், நீங்கள் உங்கள் பின்புறங்களில் (புறமுதுகிட்டு) திரும்பிவிடாதீர்கள். (அப்படி திரும்பினால்) நஷ்டவாளிகளாகத்தான் திரும்புவீர்கள்."},{"id":22,"translation":"(அவர்கள் மூஸாவை நோக்கி) “மூஸாவே! நிச்சயமாக அதில் மிக பலசாலிகளான சமுதாயம் இருக்கிறது. அவர்கள், அதிலிருந்து வெளியேறும் வரை நிச்சயமாக நாங்கள் அதில் நுழையவே மாட்டோம். ஆக, அவர்கள் அதிலிருந்து வெளியேறினால் நிச்சயமாக நாங்கள் (அதில்) நுழைவோம்” என்று கூறினர்."},{"id":23,"translation":"(அல்லாஹ்வை) பயப்படுகின்ற (நல்ல)வர்களில் இருந்து அல்லாஹ் அருள்புரிந்த இருவர் (மற்றவர்களை நோக்கி), “நீங்கள் அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாசலில் நுழையுங்கள். ஆக, அதில் நீங்கள் நுழைந்தால் (மட்டுமே போதும்) நிச்சயமாக நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்!’’ என்று கூறினர்."},{"id":24,"translation":"“மூஸாவே! அவர்கள் அதிலிருக்கும் காலமெல்லாம் நிச்சயமாக நாங்கள் அதில் அறவே நுழைய மாட்டோம். ஆகவே, நீயும், உம் இறைவனும் (அங்கு) சென்று (அவர்களிடம்) போரிடுங்கள். நிச்சயமாக நாங்கள் இங்கேதான் உட்கார்ந்திருப்போம்” என்று அவர்கள் கூறினார்கள்."},{"id":25,"translation":"“என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கும், என் சகோதரருக்கும் தவிர, (மற்றவர்களை கட்டாயப்படுத்த) அதிகாரம் பெறமாட்டேன். ஆகவே, பாவிகளான சமுதாயத்திற்கு மத்தியிலும் எங்களுக்கு மத்தியிலும் நீ தீர்ப்பளித்து விடு!’’ என்று (மூஸா) கூறினார்."},{"id":26,"translation":"“ஆக, நிச்சயமாக அ(ந்த நகரமான)து அவர்கள் மீது தடுக்கப்பட்டுவிட்டது. நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்று அலைவார்கள். ஆகவே, பாவிகளான மக்கள் மீது நீர் கவலைப்படாதீர்!’’ என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்."},{"id":27,"translation":"(நபியே!) ஆதமுடைய இரு மகன்களின் உண்மையான செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. இருவரும் ஒரு குர்பானி (பலி)யைக் கொடுத்தபோது, அவ்விருவரில் ஒருவரிடமிருந்து (குர்பானி) ஏற்றுக் கொள்ளப்பட்டது. மற்றவரிடமிருந்து ஏற்கப்படவில்லை. (ஏற்கப்படாதவர்) “நிச்சயம் நான் உன்னைக் கொல்வேன்’’ என்றார். (ஏற்கப்பட்டவர்) “அல்லாஹ் ஏற்பதெல்லாம் அல்லாஹ்வை அஞ்சுபவர்களிடமிருந்துதான்’’ என்று கூறினார்."},{"id":28,"translation":"“நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.”"},{"id":29,"translation":"“என்(னை நீ கொலை செய்த) பாவத்தையும், உனது (மற்ற) பாவத்தையும் நீ சுமந்து, நீ நரகவாசிகளில் ஒருவனாக ஆகி விடுவதை நிச்சயமாக நான் நாடுகிறேன். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்” (என்று கூறி எச்சரித்தார்.)"},{"id":30,"translation":"ஆக, அவர் தன் சகோதரரை கொலை செய்ய அவருடைய மனம் அவரைத் தூண்டியது. ஆகவே, அவர் அவரைக் கொன்றார். ஆகவே, நஷ்டவாளிகளில் (அவர்) ஆகிவிட்டார்."},{"id":31,"translation":"ஆக, தன் சகோதரரின் சடலத்தை எவ்வாறு அவன் மறைப்பான் என்பதை அவனுக்கு அல்லாஹ் காட்டுவதற்காக (இறந்த இன்னொரு காகத்தை புதைக்க) பூமியை தோண்டுகிற ஒரு காகத்தை அல்லாஹ் அனுப்பினான். அவன், என் நாசமே! (அறிவில்) இந்தக் காகத்தைப் போன்று நான் ஆக முடியாமல் பலவீனமடைந்து விட்டேனா! அப்படி ஆகியிருந்தால் என் சகோதரனின் சடலத்தை மறைத்திருப்பேனே! என்று கூறினான். ஆக, (சதா) வருந்துபவர்களில் அவன் ஆகிவிட்டான்."},{"id":32,"translation":"அதன் காரணமாக, “எவர் பழிக்குப் பழி அல்லாமல் அல்லது பூமியில் விஷமம் (கலகம், குழப்பம், சீர்கேடு) செய்ததற்காக அல்லாமல் (அநியாயமாக) ஓர் உயிரைக் கொன்றாரோ அவர் மக்கள் அனைவரையுமே கொன்றவர் போலாவார். இன்னும், எவர் ஓர் உயிரை வாழவைத்தாரோ அவர் மக்கள் அனைவரையும் வாழவைத்தவர் போலாவார்’’ என்று இஸ்ரவேலர்கள் மீது (சட்டமாக) விதித்தோம். திட்டமாக அவர்களிடம் நம் தூதர்கள் அத்தாட்சிகளுடன் வந்தார்கள். பிறகு, நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் அதன் பின்னர் பூமியில் எல்லை மீறுகிறார்கள் (-அளவு கடந்து பெரும் பாவங்கள் செய்கிறார்கள்)."},{"id":33,"translation":"அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிடுபவர்கள்; இன்னும், பூமியில் குழப்பம்(கலகம், நாசவேலைகள், சீர்கேடுகள்) செய்ய முயல்பவர்களுடைய தண்டனையெல்லாம் அவர்கள் கொல்லப்படுவது; அல்லது, அவர்கள் கழுமரத்தில் அறையப்படுவது; அல்லது அவர்கள் மாறு கை, மாறு கால் வெட்டப்படுவது; அல்லது, அந்த நாட்டில் இருந்து (வேறு நாட்டுக்கு) அவர்கள் கடத்தப்படுவதுதான். இது, அவர்களுக்கு இவ்வுலகத்திலுள்ள இழிவாகும். இன்னும், அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு."},{"id":34,"translation":"எனினும், எவர்கள் (கலகம் செய்த பின்னர் அவர்கள்) மீது நீங்கள் ஆற்றல் பெறுவதற்கு முன்னர் அவர்கள் (மன்னிப்புக் கோரி) திருந்தி (உங்களிடம்) திரும்பிவந்தார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":35,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும் அவனளவில் (உங்களை) நெருக்கமாக்கி வைக்கும் நன்மையைத் தேடுங்கள்! இன்னும், அவனுடைய பாதையில் போரிடுங்கள்!"},{"id":36,"translation":"நிச்சயமாக நிராகரித்தவர்கள் மறுமை நாளின் தண்டனையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்காக, இப்பூமியிலுள்ள அனைத்தும், அத்துடன் அவை போன்றதும் அவர்களுக்கு இருந்து, அவர்கள் அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்தாலும் அவர்களிடமிருந்து (அவை) அங்கீகரிக்கப்படாது. இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":37,"translation":"அவர்கள் நரகத்திலிருந்து வெளியேற விரும்புவார்கள். ஆனால், அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது. இன்னும் நிலையான தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":38,"translation":"இன்னும், எந்த ஆண் திருடுகிறானோ, எந்த பெண் திருடுகிறாளோ அவ்விருவரும் செய்ததற்கு கூலியாக, அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவ்விருவரின் (வலது) கரங்களை (மணிக்கட்டு வரை) வெட்டுங்கள். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":39,"translation":"ஆக, எவர் தனது குற்றத்திற்குப் பின்னர் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி (தன்னைத்) திருத்திக்கொண்டால் நிச்சயமாக அல்லாஹ் அவரை மன்னி(த்து அவருடைய தவ்பாவை அங்கீகரி)ப்பான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":40,"translation":"நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது என்பதை நீர் அறியவில்லையா? அவன், தான் நாடியவர்களை தண்டிப்பான். இன்னும், தான் நாடியவர்களை அவன் மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் ஒவ்வொரு பொருள் மீதும் பேராற்றலுடையவன்."},{"id":41,"translation":"தூதரே! எவர்கள் “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று அவர்களுடைய வாய்களால் கூறி, அவர்களுடைய உள்ளங்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களிலிருந்தும்; இன்னும், யூதர்களிலிருந்தும் நிராகரிப்பில் விரைந்து செல்பவர்கள் உமக்குக் கவலையூட்டவேண்டாம். அவர்கள் பொய்யிற்கே அதிகம் செவி சாய்க்கிறார்கள். (இதுவரை) உம்மிடம் வராத மற்றொரு கூட்டத்தினருக்கே அதிகம் செவி சாய்க்கிறார்கள். (பொய்யையும் பிற மக்களின் ஆதாரமற்ற பேச்சுகளையும் அவர்கள் நம்புகிறார்கள். இன்னும், இறை)வசனங்களை அவற்றின் இடங்களிலிருந்து(ம் கருத்துகளிலிருந்தும்) மாற்றுகிறார்கள். “உங்களுக்கு (இந்த நபியிடமிருந்து) இது கொடுக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள். இன்னும், உங்களுக்கு அது கொடுக்கப்படவில்லையெனில் (விலகி) எச்சரிக்கையாக இருங்கள்’’ என்றும் கூறுகிறார்கள். அல்லாஹ் எவரை சோதிக்க நாடினானோ அவருக்கு அல்லாஹ்விடம் அறவே (நன்மை) ஏதும் (செய்ய) நீர் உரிமை பெறமாட்டீர். அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய உள்ளங்களைப் பரிசுத்தமாக்க அல்லாஹ் நாடவில்லை. இன்னும், அவர்களுக்கு இம்மையில் இழிவுண்டு; இன்னும், அவர்களுக்கு மறுமையில் பெரிய தண்டனை உண்டு."},{"id":42,"translation":"(அவர்கள்) பொய்(யான செய்தி)களுக்குத்தான் அதிகம் செவிசாய்க்கிறார்கள்; தவறான (-பாவமான) வருமானத்தை அதிகம் விழுங்குகிறார்கள். ஆக, (நபியே) அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக; அல்லது, அவர்களைப் புறக்கணிப்பீராக. நீர் அவர்களைப் புறக்கணித்தால் அவர்கள் உமக்கு கொஞ்சமும் கெடுதி செய்யவே முடியாது. இன்னும், நீர் தீர்ப்பளித்தால், அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக. நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துவோர் மீது அன்பு வைக்கிறான்."},{"id":43,"translation":"(நபியே! அவர்கள்) உம்மை எவ்வாறு நீதிபதியாக - தீர்ப்பளிப்பவராக ஆக்குகிறார்கள்? அவர்களிடம் தவ்ராத் இருக்கிறது. அதில், அல்லாஹ்வின் சட்டம் இருக்கிறது. (உம்மிடம் வந்த) பிறகு, அதற்கு பின்னர் (உமது சட்டம் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றால்) அவர்கள் (உம்மை புறக்கணித்து) திரும்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கையாளர்களே இல்லை."},{"id":44,"translation":"நிச்சயமாக நாம் தவ்ராத்தை இறக்கினோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கிறது. (அல்லாஹ்விற்கு) முற்றிலும் பணிந்த நபிமார்கள் அதன் மூலமாக யூதர்களுக்கு தீர்ப்பளிப்பார்கள். இன்னும், குருமார்களும், பண்டிதர்களும் அல்லாஹ்வின் வேதத்தைக் காக்கும்படி பணிக்கப்பட்டவர்களாகவும், அதற்கு சாட்சியாளர்களாகவும் இருந்த காரணத்தால் அவர்களும் அதன் மூலமே தீர்ப்பளிப்பார்கள். ஆக, (பண்டிதர்களே!) மக்களை அஞ்சாதீர்கள்; என்னை அஞ்சுங்கள். இன்னும், என் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப கிரயத்தை வாங்காதீர்கள். எவர் அல்லாஹ் இறக்கியதன் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்."},{"id":45,"translation":"இன்னும், அவர்கள் மீது அ(ந்த தவ்ராத்)தில் சட்டமாக விதித்தோம்: “நிச்சயமாக உயிருக்குப் பதிலாக உயிர், கண்ணுக்குப் பதிலாக கண், மூக்குக்குப் பதிலாக மூக்கு, காதுக்குப் பதிலாக காது, பல்லுக்குப் பதிலாக பல், இன்னும் (ஒருவர் மற்றவருக்கு ஏற்படுத்திய) காயங்கள் (எல்லாம் இவ்வாறுதான்) பழிவாங்கப்படும்” ஆக, எவர் அதை (பழிவாங்குவதை) மன்னிப்பாரோ அது அவருக்கு (அவரின் பாவங்களுக்கு) பரிகாரமாகும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்!"},{"id":46,"translation":"இன்னும், அவர்களுடைய அடிச்சுவடுகளில் அவர்களை பின்தொடர்ந்து மர்யமுடைய மகன் ஈஸாவை (இஸ்ரவேலர்களுக்கு நபியாக) அனுப்பினோம். அவர் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக இருந்தார். இன்னும், அவருக்கு ‘இன்ஜீல்’ஐ கொடுத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. இன்னும் தனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியதாக, நேர்வழியாக, அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு ஓர் உபதேசமாக இன்ஜீலை ஆக்கினோம்."},{"id":47,"translation":"இன்ஜீலுடையவர்கள் அதில் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவும். எவர்கள் அல்லாஹ் இறக்கியதின் மூலம் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள்தான் பாவிகள்."},{"id":48,"translation":"இன்னும், (நபியே!) முற்றிலும் உண்மையுடன் கூடிய இவ்வேதத்தை உமக்கு இறக்கினோம். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதாக, அவற்றைப் பாதுகாக்கக்கூடியதாக இருக்கிறது. ஆகவே, அல்லாஹ் (உமக்கு) இறக்கிய (இவ்வேதத்)தின் மூலமே அவர்களுக்கு மத்தியில் நீ தீர்ப்பளிப்பீராக. உமக்கு வந்த உண்மையை விட்டுவிட்டு அவர்களுடைய மன விருப்பங்களை பின்பற்றாதீர். உங்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு மார்க்கத்தையும், ஒரு வழியையும் ஏற்படுத்தினோம். இன்னும், அல்லாஹ் நாடி இருந்தால் உங்களை ஒரே ஒரு (ஷரீஅத்தை உடைய) சமுதாயமாக ஆக்கியிருப்பான். எனினும், உங்களுக்கு அவன் கொடுத்த (வேதத்)தில் உங்களைச் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்திருக்கிறான்). ஆகவே, நன்மைகளில் போட்டிபோட்டு முந்துங்கள். அல்லாஹ்வின் பக்கமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தீர்களோ அ(ந்த சத்தியத்)தை (அதற்கு கூலி கொடுப்பதன் மூலம் மறுமையில்) உங்களுக்கு அவன் அறிவிப்பான். (உண்மையை பின்பற்றியவர்கள் அல்லாஹ்வின் அருளிலும் பொய்யை பின்பற்றியவர்கள் தண்டனையிலும் இருப்பார்கள்.)"},{"id":49,"translation":"இன்னும், (நபியே!) அல்லாஹ் இறக்கிய (இவ்வேதத்)தின் மூலம் அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பீராக. இன்னும், அவர்களின் மன விருப்பங்களைப் பின்பற்றாதீர். இன்னும், உமக்கு அல்லாஹ் இறக்கியதில் சிலவற்றிலிருந்து உம்மை அவர்கள் திருப்பிவிடுவதை குறித்தும் அவர்களிடம் எச்சரிக்கையுடன் இருப்பீராக. ஆக, அவர்கள் (உம்மை புறக்கணித்து) திரும்பினால் அறிந்து கொள்வீராக “அல்லாஹ் நாடுவதெல்லாம் அவர்களுடைய பாவங்கள் சிலவற்றின் காரணமாக அவர்களை சோதிப்பதைத்தான்.” இன்னும், நிச்சயமாக மனிதர்களில் அதிகமானோர் பாவிகள்தான்."},{"id":50,"translation":"ஆக, அறியாமைக் காலத்தின் சட்டத்தையா அவர்கள் தேடுகிறார்கள்? (அல்லாஹ் உடைய சட்டங்களின் நீதியை சிந்தித்து புரிந்து அவற்றை) உறுதியாக நம்புகிற சமுதாயத்திற்கு அல்லாஹ்வை விட சட்டத்தால் மிக அழகானவன் யார்?"},{"id":51,"translation":"நம்பிக்கையாளர்களே! யூதர்களையும், கிறித்தவர்களையும் நண்பர்களாக ஆக்காதீர்கள். அவர்களில் சிலர் சிலரின் நண்பர்கள் ஆவார்கள். இன்னும், உங்களில் எவர் அவர்களுடன் நட்பு கொள்வாரோ, நிச்சயமாக அவர் அவர்களைச் சார்ந்தவர் ஆவார். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":52,"translation":"ஆக, (நபியே!) தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்கள் அவர்களுடன் (நட்புவைக்க) விரைபவர்களாக இருப்பதைக் காண்பீர்! “ஆபத்து எங்களை அடைவதை பயப்படுகிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆக, அல்லாஹ் தன்னிடமிருந்து (நம்பிக்கையாளர்களுக்கு) வெற்றியை அல்லது (யூதர்களின் தாக்குதலை உங்களை விட்டு தடுக்கும்படியான) வேறு ஒரு காரியத்தை கொண்டு வரலாம். (அது சமயம் அவர்கள்) தங்கள் உள்ளங்களில் மறைத்ததின் மீது துக்கப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்."},{"id":53,"translation":"நிச்சயமாக அவர்கள் உங்களுடன்தான் இருக்கிறார்கள் என்று அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தவர்கள் இவர்கள்தானா? என்று நம்பிக்கையாளர்கள் (நயவஞ்சகர்களைப் பற்றி) கூறுவார்கள். (நயவஞ்சகம் உடைய) அவர்களின் (நல்ல) செயல்கள் அழிந்துவிட்டன. ஆகவே (அவர்கள்) நஷ்டவாளிகளாக ஆகிவிட்டனர்."},{"id":54,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரும் தன் மார்க்கத்தை விட்டும் மாறினால் அல்லாஹ் ஒரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்கள் மீது அன்பு வைப்பான்; அவர்களும் அவன் மீது அன்பு வைப்பார்கள். (அவர்கள்) நம்பிக்கையாளர்களிடம் பணிவானவர்கள்; நிராகரிப்பாளர்களிடம் கண்டிப்பானவர்கள்; அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள். இன்னும், பழிப்பவனின் பழிப்பை பயப்படமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன், தான் நாடியவர்களுக்கு அதைத் தருகிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":55,"translation":"உங்கள் நண்பர்களெல்லாம் அல்லாஹ்வும், அவனுடைய தூதரும், இன்னும் தொழுகையை நிலை நிறுத்துகின்ற, ஸகாத்தை கொடுக்கின்ற நம்பிக்கையாளர்களும்தான். இன்னும், அ(ந்த நம்பிக்கை கொண்ட)வர்கள் (அல்லாஹ்விற்குமுன்) தலைகுனிவார்கள்."},{"id":56,"translation":"இன்னும், எவர் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், நம்பிக்கையாளர்களையும் நேசி(த்து அவர்களுடன் நட்பு வை)க்கிறார்களோ (அவர்கள் அல்லாஹ்வின் படையினர்.) நிச்சயமாக அல்லாஹ்வின் படையினர்தான் வெற்றியாளர்கள்."},{"id":57,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களில் உங்கள் மார்க்கத்தை கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டவர்களையும், நிராகரிப்பவர்களையும் நண்பர்களாக (நேசர்களாக) எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."},{"id":58,"translation":"இன்னும், நீங்கள் தொழுகைக்கு அழைத்தால் அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (சிந்தித்து) புரியாத மக்கள் என்பதாகும்."},{"id":59,"translation":"(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்டதையும், (இதற்கு) முன்னர் இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) எங்களை நீங்கள் வெறுக்கிறீர்களா? நிச்சயமாக உங்களில் அதிகமானவர்கள் பாவிகள்.’’"},{"id":60,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்விடம் தண்டனையால் இதைவிட மிகக் கெட்டவனை நான் உங்களுக்கு அறிவிக்கவா? எவர்களை அல்லாஹ் சபித்தானோ; இன்னும், எவர்கள் மீது கோபித்தானோ; இன்னும், எவர்களில் சிலரைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கினானோ; இன்னும், எவர்கள் ஷைத்தானை வணங்கினார்களோ அவர்கள்தான் தகுதியால் மிகக் கெட்டவர்கள்; இன்னும், நேரான பாதையிலிருந்து மிகவும் வழிதவறியவர்கள் ஆவார்கள்.’’"},{"id":61,"translation":"இன்னும் அவர்கள் உங்களிடம் வந்தால் “நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுகிறார்கள். (எனினும் அவர்கள் உங்களிடம்) நிராகரிப்புடன்தான் திட்டமாக நுழைந்தார்கள். திட்டமாக அதனுடன்தான் வெளியேறினார்கள். இன்னும், அவர்கள் மறைத்துக் கொண்டிருப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்."},{"id":62,"translation":"(நபியே!) அவர்களில் அதிகமானவர்கள் பாவத்திலும், அநியாயத்திலும், தவறான செல்வத்தை விழுங்குவதிலும் விரைபவர்களாக இருப்பதை நீர் காண்பீர்! அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்!"},{"id":63,"translation":"அவர்களுடைய பாவமான பேச்சிலிருந்தும், விலக்கப்பட்டதை (-மக்களின் செல்வங்களை தவறான முறையில்) விழுங்குவதிலிருந்தும், குருமார்களும் பண்டிதர்களும் அவர்களை தடை செய்ய வேண்டாமா? அவர்கள் செய்துகொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்!"},{"id":64,"translation":"“அல்லாஹ்வுடைய கை கட்டப்பட்டிருக்கிறது’’ என்று யூதர்கள் கூறினர். அவர்களுடைய கைகள்தான் கட்டப்பட்டுள்ளன. அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக சபிக்கப்பட்டனர். மாறாக, அவனுடைய இரு கைகள் விரிந்தே இருக்கின்றன. அவன் நாடியவாறு தர்மம் செய்கிறான். உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானோருக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்தும். (நாம்) அவர்களுக்கு மத்தியில் பகைமையையும், வெறுப்பையும் மறுமை நாள் வரை (நிலைத்திருக்கும்படி) ஏற்படுத்தினோம். அவர்கள் போருக்கு நெருப்பை மூட்டும்போதெல்லாம் அல்லாஹ் அதை அணைத்து விட்டான். அவர்கள் பூமியில் கலகம் செய்வதற்காக விரைகிறார்கள். கலகம் செய்பவர்கள் மீது அல்லாஹ் அன்பு வைக்கமாட்டான்."},{"id":65,"translation":"நிச்சயமாக, வேதக்காரர்கள் (இத்தூதரை) நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சி இருந்தால் அவர்களை விட்டும் அவர்களுடைய பாவங்களை நிச்சயமாக நாம் அகற்றிவிடுவோம். இன்னும், இன்பம் நிறைந்த சொர்க்கங்களில் அவர்களை நிச்சயமாக பிரவேசிக்கச் செய்வோம்."},{"id":66,"translation":"இன்னும், தவ்ராத்தையும், இன்ஜீலையும், அவர்களுடைய இறைவனிடமிருந்து அவர்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தையும் அவர்கள் நிலைநிறுத்தி இருந்தால் அவர்களுக்கு மேலிருந்தும், அவர்களுடைய கால்களுக்கு கீழிருந்தும் நிச்சயமாக புசித்திருப்பார்கள். அவர்களில் ஒரு நேர்மையான கூட்டம் இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானோர், அவர்கள் செய்பவை எல்லாம் மிகக் கெட்டவை ஆகும்."},{"id":67,"translation":"தூதரே! உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதை நீர் எடுத்துரைப்பீராக. நீர் (அவ்வாறு) செய்யவில்லையென்றால் அவனுடைய தூதை நீர் எடுத்துரைக்கவில்லை. மக்களிடமிருந்து அல்லாஹ் உம்மைக் காப்பாற்றுவான். நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":68,"translation":"(நபியே!) கூறுவீராக, “வேதக்காரர்களே! தவ்ராத்தையும், இன்ஜீலையும், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும் நீங்கள் நிலைநிறுத்தும் வரை நீங்கள் ஒரு விஷயத்திலும் இல்லை.’’ உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டது அவர்களில் அதிகமானவர்களுக்கு எல்லை மீறுவதையும் நிராகரிப்பையும் நிச்சயமாக அதிகப்படுத்துகிறது. ஆகவே, நிராகரிப்பாளர்களான மக்களைப் பற்றி (நீர்) கவலைப்படாதீர்."},{"id":69,"translation":"நிச்சயமாக நம்பிக்கையாளர்கள், யூதர்கள், சாபியீன்கள், கிறித்தவர்கள் (இவர்களில்) எவர் அல்லாஹ்வையும், இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, நன்மை செய்தாரோ அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்."},{"id":70,"translation":"திட்டமாக இஸ்ரவேலர்களின் உறுதிமொழியை நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் (பல) தூதர்களை அனுப்பினோம். அவர்களுடைய மனம் விரும்பாதவற்றை இறைத் தூதர் ஒருவர் அவர்களிடம் கொண்டு வந்தபோதெல்லாம் அவர்கள் (நமது தூதர்களில்) சிலரை பொய்ப்பித்தனர், இன்னும், சிலரை கொன்றார்கள்."},{"id":71,"translation":"இன்னும், (அவர்களுக்கு) தண்டனை இருக்காது என்று அவர்கள் எண்ணினர். ஆகவே, அவர்கள் குருடாகினர், செவிடாகினர். பிறகு, அல்லாஹ் அவர்களை மன்னித்தான். பிறகும், அவர்களில் அதிகமானோர் குருடாகினர், செவிடாகினர். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":72,"translation":"“நிச்சயமாக அல்லாஹ் மர்யமுடைய மகன் மஸீஹ்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக (அல்லாஹ்வை) நிராகரித்தனர். (ஆனால்) மஸீஹ் கூறினார்: “இஸ்ரவேலர்களே! என் இறைவனும், உங்கள் இறைவனுமான அல்லாஹ்வை வணங்குங்கள், நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கு இணைவைக்கிறாரோ அவர் மீது திட்டமாக, அல்லாஹ் சொர்க்கத்தை தடுத்து விடுகிறான். இன்னும் அவருடைய தங்குமிடம் நரகம்தான். இன்னும் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்களில் எவரும் இல்லை."},{"id":73,"translation":"“நிச்சயமாக அல்லாஹ் - இறைவன் என்பவன் (பிதா, சுதன், பரிசுத்த ஆவி ஆகிய) மூவரில் ஒருவன்தான்’’ என்று கூறியவர்கள் திட்டவட்டமாக நிராகரித்தார்கள். (உண்மையில் வணங்கத் தகுதியான) ஒரே ஒரு இறைவனைத் தவிர இறைவன் (யாரும்) இல்லை. இன்னும், அவர்கள் கூறுவதிலிருந்து அவர்கள் விலகவில்லையெனில் துன்புறுத்தும் தண்டனை நிராகரித்தவர்களை நிச்சயமாக அடையும்."},{"id":74,"translation":"(இவர்கள் இப்பாவத்திலிருந்து) திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்பமாட்டார்களா? இன்னும் அவனிடம் மன்னிப்புக் கோரமாட்டார்களா? அல்லாஹ், மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":75,"translation":"மர்யமின் மகன் மஸீஹ் ஒரு தூதரே தவிர (அவர் இறைவனோ, இறைவனின் மகனோ) இல்லை. இவருக்கு முன்னர் பல தூதர்கள் சென்றுவிட்டனர். அவருடைய தாய் ஒரு மகா உண்மையாளர். அவர்கள் இருவரும் உணவு சாப்பிட்டு வந்தனர். நாம் அத்தாட்சிகளை அவர்களுக்கு எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்று (நபியே!) நீர் கவனிப்பீராக. பிறகு, அவர்கள் எவ்வாறு (சத்தியத்தை விட்டு) திருப்பப்படுகிறார்கள் என்று(ம்) கவனிப்பீராக."},{"id":76,"translation":"“உங்களுக்கு தீங்களிப்பதற்கும் பலனளிப்பதற்கும் சக்தி பெறாதவற்றை அல்லாஹ்வை அன்றி வணங்குகிறீர்களா?’’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன் ஆவான்."},{"id":77,"translation":"(நபியே!) கூறுவீராக: “வேதக்காரர்களே! உண்மைக்கு முரணாக, உங்கள் மார்க்கத்தில் எல்லை மீறாதீர்கள். இன்னும், முன்பு வழிதவறிவிட்ட சமுதாயத்தின் (கெட்ட) பழக்கங்களை பின்பற்றாதீர்கள். அவர்கள் பலரை வழி கெடுத்தனர். இன்னும், நேரான பாதையிலிருந்து (தாங்களும்) வழி தவறினர்.’’"},{"id":78,"translation":"இஸ்ரவேலர்களில் நிராகரித்தவர்கள் தாவூதுடைய நாவினாலும் மர்யமின் மகன் ஈஸாவின் நாவினாலும் சபிக்கப்பட்டனர். அது, அவர்கள் மாறு செய்ததாலும் (இறை சட்டங்களை) மீறுபவர்களாக இருந்ததாலும் ஆகும்."},{"id":79,"translation":"அவர்கள் செய்த தீமையிலிருந்து ஒருவர் மற்றவரை தடுக்காதவர்களாக இருந்தனர். அவர்கள் செய்து கொண்டிருந்தவை திட்டமாக மிகக் கெட்டதாகும்!"},{"id":80,"translation":"(நபியே!) அவர்களில் அதிகமானோர் நிராகரிப்பவர்களிடம் நட்பு வைப்பதை நீர் காண்பீர்! அல்லாஹ் அவர்கள் மீது கோபிக்கும்படியாக அவர்களுக்கு அவர்களுடைய ஆன்மாக்கள் முற்படுத்தியவை மிகக் கெட்டவையாகும். இன்னும், தண்டனையில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":81,"translation":"இன்னும், அவர்கள் அல்லாஹ்வையும், நபியையும் அவருக்கு இறக்கப்பட்டதையும் நம்பிக்கை கொள்பவர்களாக அவர்கள் இருந்திருந்தால் அ(ந்நிராகரிப்ப)வர்களை நண்பர்களாக (தங்களது பொறுப்பாளர்களாக) எடுத்திருக்கமாட்டார்கள். என்றாலும், அவர்களில் அதிகமானோர் பாவிகள் ஆவர்."},{"id":82,"translation":"(நபியே!) மக்களில் யூதர்களையும், இணைவைப்பவர்களையும் நம்பிக்கையாளர்களுக்கு கடுமையான பகைவர்களாக காண்பீர்! இன்னும் நாங்கள் கிறித்தவர்கள் என்று கூறுபவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு அவர்களில் பாசத்தால் மிக நெருங்கியவர்களாக இருப்பதை நிச்சயமாக நீர் காண்பீர்! அதற்குக் காரணமாவது, நிச்சயமாக அவர்களில் குருக்களும், துறவிகளும் இருப்பதும், நிச்சயமாக அவர்கள் அகம்பாவம் கொள்ள மாட்டார்கள் என்பதுமாகும்."},{"id":83,"translation":"இன்னும், இந்த தூதருக்கு இறக்கப்பட்டதை அ(ந்த கிறித்த)வர்கள் செவியுற்றால், உண்மையை அவர்கள் அறிந்த காரணத்தினால் அவர்களின் கண்கள் அவை கண்ணீரால் நிரம்பி வழியக்கூடியதாக இருப்பதை நீர் காண்பீர். “எங்கள் இறைவா! (இத்தூதரையும் இவ்வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, சாட்சியாளர்களுடன் (-முஸ்லிமான இந்த சமுதாயத்துடன்) எங்களை(யும்) பதிவு செய்!’’ என்று அவர்கள் கூறுகிறார்கள்."},{"id":84,"translation":"இன்னும், “அல்லாஹ்வையும் (அவனிடமிருந்து) நமக்கு வந்த சத்தியத்தையும் நாங்கள் நம்பிக்கைகொள்ளாதிருக்கவும், எங்கள் இறைவன் நல்ல மக்களுடன் எங்களை சேர்த்து வைப்பதை நாங்கள் ஆசைப்படாமல் இருப்பதற்கும் எங்களுக்கு என்ன நேர்ந்தது?’’ (என்று கூறுகிறார்கள்)."},{"id":85,"translation":"ஆகவே, அவர்கள் (இவ்வாறு) கூறியதன் காரணமாக, சொர்க்கங்களை அல்லாஹ் அவர்களுக்கு கூலியாக வழங்கினான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இன்னும், இதுதான் (சத்தியத்தை ஏற்று) முஹ்சின்[1] - நல்லறம் புரிபவர்களுடைய கூலியாகும்.","footnotes":"[1] முஹ்சின் என்றால் யார் ஒருவர் அல்லாஹ் ஒருவனை மட்டும் அறவே கலப்பில்லாமல் வணங்கி, அவனுக்கு இணைவைப்பதை விட்டு முற்றிலும் விலகி இருந்து, நபிமார்களையும் அவர்கள் கொண்டு வந்த வேதங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு, அல்லாஹ் கடமையாக்கிய கடமைகளை நிறைவேற்றி, அவன் தடுத்த பாவங்களை விட்டு விலகி இருப்பாரோ அவர் ஆவார்."},{"id":86,"translation":"இன்னும் எவர்கள் (நம் தூதரை) நிராகரித்து, நம் வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள்."},{"id":87,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு ஆகுமாக்கிய நல்ல பொருட்களை ஆகாதவையாக (ஹராமாக) ஆக்காதீர்கள். இன்னும், எல்லை மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ், எல்லை மீறுபவர்களை விரும்ப மாட்டான்."},{"id":88,"translation":"இன்னும், அல்லாஹ் உங்களுக்கு வழங்கியவற்றில் அனுமதிக்கப்பட்ட நல்லதை புசியுங்கள். இன்னும், நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிற அல்லாஹ்வை அஞ்சுங்கள்."},{"id":89,"translation":"உங்கள் சத்தியங்களில் (எண்ணம் இல்லாமல் செய்யப்படும்) வீணான சத்தியத்திற்காக அல்லாஹ் உங்களைத் தண்டிக்க மாட்டான். எனினும், நீங்கள் சத்தியங்களை உறுதிப்படுத்திய (பின்னர் அதை மீறிய)தற்காக உங்களைத் தண்டிப்பான். அதற்குப் பரிகாரமாவது: நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு உணவளிப்பதில் நடுத்தரமானதிலிருந்து பத்து ஏழைகளுக்கு உணவளிப்பது; அல்லது, அவர்களுக்கு ஆடையளிப்பது; அல்லது, ஓர் அடிமையை விடுதலையிடுவதாகும். (இவற்றில் எதையும் நிறைவேற்ற) அவர் வசதி பெறவில்லையெனில் மூன்று நாட்கள் நோன்பிருக்க வேண்டும். இவைதான் நீங்கள் சத்தியம் செய்(து அதை முறித்)தால் (முறிக்கப்பட்ட) உங்கள் சத்தியங்களுக்குரிய பரிகாரமாகும். இன்னும், உங்கள் சத்தியங்களை (முறித்துவிடாமல்) பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்லாஹ் உங்களுக்கு மார்க்க சட்டங்களை கற்பித்தான். ஆகவே, அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ், தன் வசனங்களை இவ்வாறு உங்களுக்கு விவரிக்கிறான்."},{"id":90,"translation":"நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மது, சூது, சிலைகள், அம்புகள் (மூலம் குறி பார்ப்பது) ஷைத்தானுடைய செயல்களை சேர்ந்த அருவருக்கத்தக்க காரியங்களாகும். ஆகவே, நீங்கள் வெற்றிபெறுவதற்காக இவற்றை விட்டு விலகுங்கள்."},{"id":91,"translation":"நிச்சயமாக ஷைத்தான் நாடுவதெல்லாம் மதுவினாலும் சூதாட்டத்தினாலும் உங்களுக்கு மத்தியில் பகைமை; இன்னும், வெறுப்பை தூண்டிவிடுவதையும், அல்லாஹ்வின் ஞாபகத்திலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுப்பதையும்தான். ஆகவே, நீங்கள் (அவற்றிலிருந்து) விலகிவிடுவீர்களா?"},{"id":92,"translation":"இன்னும், அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்; இன்னும், (அவனுடைய) தூதருக்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், (பாவங்களை விட்டு விலகி, ஷைத்தானிடமும் நஃப்ஸிடமும்) எச்சரிக்கையாக இருங்கள். ஆக, நீங்கள் (அறிவுரையை) புறக்கணித்தால் நம் தூதர் மீதுள்ள கடமை எல்லாம் (நம் கட்டளைகளை, உங்களுக்குத்) தெளிவாக எடுத்துரைப்பதுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":93,"translation":"நம்பிக்கை கொண்டு நன்மைகளைச் செய்தவர்கள் மீது குற்றமில்லை, (தடுக்கப்பட்ட உணவை அதன் தடை வருவதற்கு முன்பு) அவர்கள் புசித்ததில், (தடைக்குப் பின்பு அதிலிருந்து) அவர்கள் விலகி, நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்து, பிறகு அல்லாஹ்வை அஞ்சி, நம்பிக்கை கொண்டு, பிறகு, அல்லாஹ்வை அஞ்சி, நல்லறம் செய்தால், (தடுக்கப்பட்டவற்றை அவர்கள் முன்பு புசித்தது மன்னிக்கப்படும்). அல்லாஹ் நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":94,"translation":"நம்பிக்கையாளர்களே! மறைவில் தன்னை யார் பயப்படுகிறார் என்பதை அல்லாஹ் (வெளிப்படையாக) அறிவதற்காக (நீங்கள் இஹ்ராமில் இருக்கும் போது) வேட்டைகளில் உங்கள் கரங்களும், உங்கள் ஈட்டிகளும் அடைந்து விடுகின்ற (அளவிற்கு சமீபமாக இருக்கும்) சில வேட்டைகளைக் கொண்டு நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பான். இதற்குப் பின்பு எவர் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறினாரோ துன்புறுத்தும் தண்டனை அவருக்கு உண்டு."},{"id":95,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் இஹ்ராமு[1] டையவர்களாக இருக்கும்போது வேட்டை(ப் பிராணி)களைக் கொல்லாதீர்கள். உங்களில் எவர் அதை வேண்டுமென்றே கொன்றாரோ அவர் தான் கொன்ற வேட்டைப் பிராணிக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளிலிருந்து எது ஒப்பானதாக இருக்கிறதோ அ(தை பரிகாரமாக அறுத்து குர்பானி கொடுப்பது அவர)து தண்டனையாகும். உங்களில் நேர்மையான இருவர் அதற்கு (-வேட்டையாடப்பட்ட பிராணிக்கு எது சரியாக ஒப்பானதாக இருக்கிறது என்பதற்கு) தீர்ப்பளிப்பார்கள். கஅபாவை அடைகிற பலியாக (-புனித ஹரம் எல்லையை அடைந்து அங்கு அறுக்கப்பட வேண்டும்). அல்லது (அதன் மதிப்பின் அளவிற்கு) ஏழைகளுக்கு உணவளிப்பது பரிகாரமாகும். அல்லது (உணவளிக்க வசதியில்லாதவன்) அதற்குச் சமமான எண்ணிக்கை நோன்பு (நோற்க வேண்டும்). இது அவன் தன் செயலின் கெட்ட முடிவை அனுபவிப்பதற்காக (உள்ள பரிகாரம்) ஆகும். முன் நடந்தவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். எவர் (குற்றத்தின் பக்கம்) மீண்டாரோ அல்லாஹ் அவரை தண்டிப்பான். அல்லாஹ் மிகைத்தவன், தண்டிப்பவன் ஆவான்.","footnotes":"[1] இஹ்ராம் என்பது ஹஜ் அல்லது உம்ராவை நாடி கஅபா செல்லும்போது குறிப்பிட்ட எல்லை வந்தவுடன் லப்பைக் ஓதி தான் ஹஜ் அல்லது உம்ரா வணக்கத்தை செய்யப்போகிறேன் என்று நிய்யத் செய்வதாகும். இதற்கு பின்னர் அந்த ஹஜ் அல்லது உம்ராவை முடிக்கும் வரை சில கட்டுப்பாடுகள் உள்ளன, அவற்றை அவர் கடைப்பிடிக்க வேண்டும். இந்த நிலையை இஹ்ராம் உடைய நிலை என்று கூறப்படும்."},{"id":96,"translation":"(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு பயனுள்ளதாக இருப்பதற்காக கடலில் வேட்டையாடுவதும், அதை புசிப்பதும் (இஹ்ராமிலுள்ள) உங்களுக்கும் (மற்ற) பயணிகளுக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. (எனினும்,) நீங்கள் இஹ்ராமுடையவர்களாக இருக்கும் போதெல்லாம் தரையில் வேட்டையாடுவது உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளது. இன்னும் அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவன் பக்கமே நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்."},{"id":97,"translation":"புனித வீடாகிய கஅபாவை மக்களுக்கு பாதுகாப்பாக அல்லாஹ் ஆக்கினான். இன்னும் புனித மாதத்தையும், (மாலையிடப்படாத) பலியையும், மாலை (இடப்பட்ட பலி)களையும் அல்லாஹ் ஏற்படுத்தினான். அ(வ்வாறு அல்லாஹ் ஏற்படுத்திய)து ஏனெனில், வானங்களிலுள்ளதையும் பூமியிலுள்ளதையும் நிச்சயமாக அல்லாஹ் அறிகிறான் என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும்."},{"id":98,"translation":"நிச்சயமாக அல்லாஹ் (குற்றவாளிகளை) தண்டிப்பதில் கடுமையானவன் என்பதையும்; நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்."},{"id":99,"translation":"தூதர் மீது கடமையில்லை (தூதை) எடுத்துரைப்பதைத் தவிர. இன்னும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்."},{"id":100,"translation":"(நபியே!) கூறுவீராக: “தீமை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்தினாலும், தீயதும் நல்லதும் சமமாகாது. ஆக, நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்.’’"},{"id":101,"translation":"நம்பிக்கையாளர்களே! (நபியிடம்) பல விஷயங்கள் பற்றி (வீணாக) கேள்வி கேட்காதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு வருத்தமளிக்கும். இன்னும், நீங்கள் குர்ஆன் இறக்கப்படும் நேரத்தில் அவற்றைப் பற்றி கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்படும். அவற்றை (வெளிப்படுத்தி உங்களை தண்டிக்காமல்) அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் சகிப்பாளன் ஆவான்."},{"id":102,"translation":"உங்களுக்கு முன்பு சில மக்கள் திட்டமாக அவற்றைப் பற்றி (கேள்வி) கேட்டார்கள். (அவை விவரிக்கப்பட்ட) பிறகு அவர்கள் அவற்றை நிராகரிப்பவர்களாக மாறிவிட்டனர்."},{"id":103,"translation":"பஹீரா,[1] ஸாயிபா,[2] வஸீலா,[3] ஹாம் (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட) இவற்றில் எதையும் அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனினும், நிராகரிப்பவர்கள் அல்லாஹ் மீது பொய்யை கற்பனையாக இட்டுக்கட்டுகிறார்கள். இன்னும் அவர்களில் அதிகமானோர் (உண்மையை சிந்தித்து) புரியமாட்டார்கள்.[4]","footnotes":"[1] பஹீரா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்ற பின்னர் அதன் காதை அறுத்து சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது.\n[2] ஸாயிபா: ஓர் ஒட்டகம் குறிப்பிட்ட வயதை அடைந்த பின்னர் அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவது.\n[3] வஸீலா: தொடர்ந்து பெண் குட்டிகளை ஈன்றெடுக்கும் ஒட்டகத்தை சிலைகளுக்காக நேர்ச்சை செய்வது.\n[4] ஹாம்: ஒரு பெண் ஒட்டகை குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு குட்டிகளை ஈன்றெடுக்க சினை ஆகுவதற்கு காரணமாக இருந்த ஆண் ஒட்டகை. அதை சிலைகளுக்காக நேர்ச்சை செய்து விட்டுவிடுவார்கள்."},{"id":104,"translation":"இன்னும் “அல்லாஹ் இறக்கியதின் பக்கமும், (அவனுடைய) தூதரின் பக்கமும் வாருங்கள்’’ என அவர்களுக்குக் கூறப்பட்டால், “எங்கள் மூதாதைகளை எதன் மீது கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதும்.’’ எனக் கூறுகிறார்கள். அவர்களுடைய மூதாதைகள் எதையும் அறியாமலும், நேர் வழிபெறாமலும் இருந்தாலுமா (அம்மூதாதைகளை இவர்கள் பின்பற்றுவார்கள்)?"},{"id":105,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களை கவனித்து கொள்ளுங்கள் (-உங்கள் மீது கவனம் செலுத்துங்கள்). நீங்கள் நேர்வழி சென்றால் வழிகெட்டவர் உங்களுக்கு தீங்கிழைக்கமாட்டார். உங்கள் அனைவருடைய மீளுமிடமும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது. ஆகவே, (அவன்) நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்."},{"id":106,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களில் ஒருவருக்கு மரணம் சமீபித்தால் (அவர்) மரண சாசனம் கூறும் நேரத்தில் உங்களில் நீதமான இருவர் உங்கள் மத்தியில் சாட்சியாக இருக்க வேண்டும். அல்லது நீங்கள் பூமியில் பயணம் செய்து, (அப்பயணத்தில்) உங்களை மரணம் என்ற சோதனை வந்தடைந்தால் (சாட்சிக்காக முஸ்லிமான இருவர் கிடைக்காவிட்டால் முஸ்லிம்களாகிய) நீங்கள் அல்லாத வேறிருவர் (சாட்சியாக) இருக்க வேண்டும். (சாட்சிகளில், உங்களுக்கு சந்தேகமேற்பட்டால்) அவ்விருவரையும் (அஸர்) தொழுகைக்குப் பின்னர் தடுத்து வையுங்கள். அவ்விருவரும், “அ(ந்த சாட்சி கூறிய)தற்குப் பகரமாக ஒரு தொகையையும் நாங்கள் வாங்கமாட்டோம், அவர் (எங்கள்) உறவினராக இருந்தாலும் சரியே! நாங்கள் அல்லாஹ்விற்காக சாட்சி கூறியதில் எதையும் மறைக்க மாட்டோம். (அவ்வாறு செய்திருந்தால்) அப்போது நிச்சயமாக நாங்கள் பாவிகளில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்வின் மீது (அவ்விருவரும்) சத்தியம் செய்து கூறவேண்டும்."},{"id":107,"translation":"ஆக, (இவ்வாறு அவர்கள் சத்தியம் செய்த பிறகு) நிச்சயமாக அவ்விருவரும் (பொய் கூறி) பாவத்திற்குரியவர்களாகி விட்டனர் என்று கண்டுபிடிக்கப்பட்டால் (இந்த பொய் சாட்சியால் எவருக்கு நஷ்டமேற்பட்டு, சத்தியம் செய்யும்) உரிமை பெற்றவர்களில் (இறந்தவருக்கு) நெருங்கிய வேறு இரு வாரிசுகள் (முன்னர் சத்தியம் செய்த) அவ்விருவருடைய இடத்தில் நின்று கொண்டு “அவ்விருவரின் சாட்சியத்தை விட நிச்சயமாக எங்கள் சாட்சியம்தான் மிக உண்மையானது. நாங்கள் எல்லை மீறவில்லை. அவ்வாறு மீறினால் அப்போது நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவோம்” என்று அவ்விருவரும் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறவேண்டும்."},{"id":108,"translation":"அது (-இரு சாட்சிகளை தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்ய வைப்பது) சாட்சியத்தை அதற்குரிய முறையில் அவர்கள் நிறைவேற்றுவதற்கும்; அல்லது, அவர்களுடைய சத்தியங்களுக்குப் பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், (மார்க்க சட்டங்களுக்கு) செவிசா(ய்த்து, கீழ்ப்படி)யுங்கள். பாவிகளான கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":109,"translation":"அல்லாஹ் தூதர்களை ஒன்று சேர்க்கும் நாளில், “உங்களுக்கு என்ன பதில் கூறப்பட்டது?” என்று (அவர்களிடம்) கூறுவான். “எங்களுக்கு (அதைப் பற்றி) அறவே ஞானமில்லை; நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்” என்று (அவர்கள் பதில்) கூறுவார்கள்."},{"id":110,"translation":"(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி மறுமையில் பின்வருமாறு) கூறும் சமயத்தை நினைவு கூர்வீராக! (அல்லாஹ் கூறுவான்:) மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் மீதும், உம் தாய் மீதும் நான் புரிந்த அருளை நினைவு கூர்வீராக! (ஈஸாவே!) பரிசுத்த ஆத்மாவினால் உம்மை நான் பலப்படுத்திய சமயத்தை நினைவு கூர்வீராக! தொட்டிலி(ல் குழந்தையாக இருந்த சமயத்தி)லும் வாலிபத்திலும் நீர் பேசினீர். இன்னும். எழுதுவதையும் கல்வி ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் நான் உமக்குக் கற்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், நீர் என் அனுமதியினால் களிமண்ணில் பறவையின் உருவத்தைப் போல் படைத்து, அதில் நீர் ஊத, அது என் அனுமதியினால் பறவையாக ஆகும். இன்னும், பிறவிக் குருடனையும், வெண்குஷ்டரையும் என் அனுமதியினால் நீர் சுகமாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், என் அனுமதியினால் நீர் மரணித்தவர்களை (மண்ணறையிலிருந்து உயிருடன்) வெளியாக்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், இஸ்ரவேலர்களை உம்மை விட்டு நான் தடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. நீர் தெளிவான அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தபோது, அவர்களில் இருந்த நிராகரித்தவர்கள், “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான அற்புதம்) இல்லை” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":111,"translation":"இன்னும், என்னையும், என் தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள் என்று (உமது) சிஷ்யர்களுக்கு மனதில் உதிப்பை நான் போட்ட சமயத்தை நினைவு கூர்வீராக! (அதற்கவர்கள்) “நம்பிக்கை கொண்டோம்; இன்னும், நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள்” என்பதற்கு (நீர்) சாட்சி அளிப்பீராக! என்று (உம்மிடம்) கூறினார்கள்."},{"id":112,"translation":"சிஷ்யர்கள் “மர்யமுடைய மகன் ஈஸாவே! உம் இறைவன், வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவுத் தட்டை இறக்குவதற்கு இயலுவானா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! (அதற்கு ஈஸா) “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் அல்லாஹ்வை அஞ்சுங்கள்” என்று கூறினார்."},{"id":113,"translation":"(அதற்கவர்கள்) கூறினார்கள்: “அதிலிருந்து நாங்கள் புசிப்பதற்கும், எங்கள் உள்ளங்கள் திருப்தியடைவதற்கும், நீர் எங்களிடம் திட்டமாக உண்மை கூறினீர் என்று நாங்கள் அறிவதற்கும், சாட்சியாளர்களில் நாங்கள் ஆகிவிடுவதற்கும் விரும்புகிறோம்.”"},{"id":114,"translation":"மர்யமுடைய மகன் ஈஸா கூறினார்: “அல்லாஹ்வே, எங்கள் இறைவா! வானத்திலிருந்து ஓர் உணவுத் தட்டை எங்களுக்கு இறக்கிக் கொடு! எங்களுக்கும், எங்கள் முன் (எங்களோடு சம காலத்தில்) இருப்பவர்களுக்கும், எங்களுக்குப் பின் வருபவர்களுக்கும் அது ஒரு பெருநாளாகவும், உன்னிடமிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும், எங்களுக்கு உணவளி! நீ உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”"},{"id":115,"translation":"அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிக் கொடுப்பேன். ஆக, (அதற்கு) பின்னர் உங்களில் எவர் நிராகரிப்பாரோ, உலக மக்களில் ஒருவரையும் நான் தண்டிக்காத தண்டனையால் நிச்சயம் நான் அவரை தண்டிப்பேன்.”"},{"id":116,"translation":"(நபியே!) அல்லாஹ் (ஈஸாவை நோக்கி) கூறும் அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வை அன்றி என்னையும், என் தாயையும் வணங்கப்படும் (இரு) தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மக்களுக்கு நீர் கூறினீரா?” (அவர்) கூறுவார்: “நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகுதி இல்லாததை நான் கூறுவது எனக்கு ஆகாது. நான் அதை கூறியிருந்தால் திட்டமாக அதை நீ அறிந்திருப்பாய்! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறிய மாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவற்றை மிக மிக அறிந்தவன்.”"},{"id":117,"translation":"“நீ எனக்கு ஏவியதை, அதாவது, என் இறைவனும் உங்கள் இறைவனுமாகிய அல்லாஹ்வை வணங்குங்கள் என்பதைத் தவிர (என்னை வணங்கும்படி) அவர்களுக்கு நான் கூறவில்லை. இன்னும், நான் அவர்களுடன் இருந்த வரை அவர்கள் மீது சாட்சியாளனாக இருந்தேன். ஆக, நீ என்னைக் கைப்பற்றியபோது (-என்னை நீ வானத்தில் உயர்த்திவிட்டபோது) நீதான் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன்.”"},{"id":118,"translation":"“அவர்களை நீ தண்டித்தால் நிச்சயமாக அவர்கள் உன் அடியார்கள்! அவர்களை நீ மன்னித்தால் நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்.”"},{"id":119,"translation":"அல்லாஹ் கூறுவான்: “உண்மையாளர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாள் இதுவாகும். அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் மகிழ்ச்சியடைவான். அவர்களும் அவனைப் பற்றி மகிழ்ச்சி அடைவார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்.”"},{"id":120,"translation":"வானங்கள், பூமி, இன்னும் அவற்றில் உள்ளவற்றின் ஆட்சி அல்லாஹ்விற்குரியதே! அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."}]},{"id":6,"verses":[{"id":1,"translation":"புகழ் (எல்லாம்) வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய; இன்னும், இருள்களையும் ஒளியையும் உண்டாக்கிய அல்லாஹ்விற்குரியதே! (இதற்குப்) பிறகு(ம்), நிராகரிப்பவர்கள் தங்கள் இறைவனுக்கு (பொய்யான தெய்வங்களை வணக்க வழிபாட்டில்) சமமாக்குகிறார்கள்."},{"id":2,"translation":"அவன்தான் உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (உங்கள் மரணத்திற்கு) ஒரு தவணையை விதித்தான். இன்னும், அவனிடம் (மறுமை நிகழ்வதற்கு வேறு ஒரு) குறிப்பிட்ட தவணையும் உண்டு. (இதற்குப்) பிறகு(ம்), நீங்கள் (அல்லாஹ் உங்களை மறுமையில் எழுப்புவான் என்பதில்) சந்தேகிக்கிறீர்கள்."},{"id":3,"translation":"இன்னும், அவன்தான் வானங்களிலும், பூமியிலும் வணங்கப்படுவதற்கு தகுதியான அல்லாஹ் ஆவான். (அவன்) உங்கள் இரகசியத்தையும் உங்கள் பகிரங்கத்தையும் நன்கறிவான். இன்னும், நீங்கள் செய்வதையும் நன்கறிவான்."},{"id":4,"translation":"அவர்களுக்கு தங்கள் இறைவனின் வசனங்களிலிருந்து வசனம் ஏதும் வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணிப்பவர்களாக இருந்தே தவிர."},{"id":5,"translation":"ஆக, அவர்கள் சத்தியத்தை, - அது அவர்களிடம் வந்தபோது - பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அதன் (உண்மை) செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்."},{"id":6,"translation":"அவர்களுக்கு முன்னர் எத்தனையோ சமுதாயத்தை நாம் அழித்தோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமியில் உங்களுக்கு நாம் வசதியளிக்காத அளவு அவர்களுக்கு வசதி அளித்தோம்; இன்னும், அவர்கள் மீது தாரை தாரையாக மழையை அனுப்பினோம்; இன்னும், நதிகளை அவர்களுக்குக் கீழ் ஓடும்படி ஆக்கினோம். ஆக, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களுக்குப் பின்னர் வேறு சமுதாயத்தை உருவாக்கினோம்."},{"id":7,"translation":"ஏடுகளில் (எழுதப்பட்ட) ஒரு வேதத்தையே நாம் உம்மீது இறக்கி, அதை அவர்கள் (உம்மிடமிருந்து) தங்கள் கரங்களால் தொட்டுப் பார்த்தாலும், “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான வேதம்) இல்லை” என்று அந்த நிராகரிப்பாளர்கள் திட்டமாகக் கூறுவார்கள்."},{"id":8,"translation":"இன்னும், “அவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட வேண்டாமா?” என்று அவர்கள் கூறினார்கள். நாம் ஒரு வானவரை இறக்கினால் (அவர்களது) காரியம் முடிக்கப்பட்டு விடும். பிறகு, அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்படாது."},{"id":9,"translation":"இன்னும், (தூதருக்கு துணையாக வானத்திலிருந்து அனுப்பப்படும்) அவரை ஒரு வானவராக நாம் ஆக்கினாலும், (அவரை பூமிக்கு அனுப்பும்போது) அவரை(யும்) (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவராகத்தான் ஆக்குவோம். (ஏனெனில் வானவரை அவருடைய அசல் உருவத்தில், இவர்களால் பார்க்க முடியாது.) இன்னும், அவர்கள் (தங்கள் மீது) எதை குழப்பிக் கொள்கிறார்களோ அதையே அவர்கள் மீது (நாமும்) குழப்பிவிடுவோம். (-மீண்டும் பழைய சந்தேகத்திற்கே அவர்கள் ஆளாகி விடுவர்.)"},{"id":10,"translation":"இன்னும், திட்டவட்டமாக உமக்கு முன்னர் (பல) தூதர்கள் ஏளனம் செய்யப்பட்டனர். ஆக, அவர்களை கேலி செய்தவர்களை அவர்கள் எதை வைத்து ஏளனம் செய்து வந்தார்களோ அது சூழ்ந்து விட்டது."},{"id":11,"translation":"(நபியே!) கூறுவீராக: “நீங்கள் பூமியில் (பல பகுதிகளுக்கு) செல்லுங்கள். பிறகு, பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது? என்று பாருங்கள்”"},{"id":12,"translation":"(நபியே!) கூறுவீராக: “வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாருக்குரியன?” (நபியே நீர்) கூறுவீராக: “(அவை) அல்லாஹ்விற்குரியனவே!” கருணை புரிவதை (அவன்) தன் மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களை மறுமை நாளில் ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமேயில்லை. எவர்கள் தங்களுக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":13,"translation":"இரவிலும், பகலிலும் தங்கி இருப்பவை (-இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும்) அவனுக்குரியனவே! அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":14,"translation":"(நபியே!) கூறுவீராக: “வானங்கள்; இன்னும், பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ் அல்லாதவனையா நான் (எனது) பாதுகாவலனாக எடுத்துக் கொள்வேன்? அவன்தான் உணவளிக்கிறான்; அவனுக்கு உணவளிக்கப்படுவதில்லை.” (மேலும்) கூறுவீராக: “(அல்லாஹ்விற்கு முற்றிலும்) பணிந்தவர்களில் முதலாமவனாக நான் ஆகவேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன். இன்னும், (நபியே) இணைவைப்பவர்களில் நிச்சயம் நீர் ஆகிவிடாதீர்.”"},{"id":15,"translation":"(நபியே!) கூறுவீராக: “என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”"},{"id":16,"translation":"அந்நாளில் எவரை விட்டும் தண்டனை தடுக்கப்படுகிறதோ அவருக்கு நிச்சயமாக (அல்லாஹ்) அருள் புரிந்து விட்டான். இதுதான் தெளிவான வெற்றியாகும்."},{"id":17,"translation":"(நபியே!) அல்லாஹ் உமக்கு ஒரு சிரமத்தைக் கொடுத்தால் அவனைத் தவிர அதை நீக்குபவர் அறவே இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையைக் கொடுத்தால் (அதைத் தடுப்பவருமில்லை), அவன் எல்லாவற்றின் மீது பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":18,"translation":"அவன்தான், தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுடையவன். இன்னும், அவன்தான் மகா ஞானவான், ஆழ்ந்தறிந்தவன்."},{"id":19,"translation":"(நபியே!) கூறுவீராக: “எந்த பொருள் சாட்சியால் மிகப் பெரியது?” (நபியே!) கூறுவீராக: “(சாட்சியால் மிகப் பெரியவன்) அல்லாஹ்தான்! (அவன்) எனக்கும் உங்களுக்குமிடையில் சாட்சியாளன் ஆவான். இன்னும், இந்த குர்ஆன் எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது, இதன் மூலம் உங்களையும், அது யாருக்கு சென்றடைகிறதோ அவரையும் நான் எச்சரிப்பதற்காக. நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான் அதற்கு) சாட்சி கூறமாட்டேன்!” (நபியே நீர்) கூறுவீராக: “அவன் எல்லாம் வணங்கப்படுவதற்கு தகுதியான ஒரே ஓர் இறைவன்தான். (பலர் அல்ல.) இன்னும், நிச்சயமாக நான் நீங்கள் இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து விலகியவன் ஆவேன்.”"},{"id":20,"translation":"(முன்னர்) வேதத்தை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் தங்கள் குழந்தைகளை அறிவதைப் போல் அ(ல்லாஹ் ஒருவன்தான் வணங்கத்தகுதியானவன்; இன்னும் முஹம்மத் நபி உண்மையானவர் என்ப)தை அறிவார்கள். எவர்கள் தங்களுக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டார்களோ அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்."},{"id":21,"translation":"அல்லாஹ்வின் மீது பொய்யை புனைபவனைவிட அல்லது அவனுடைய வசனங்களை பொய்ப்பித்தவனைவிட மகா அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அநியாயக்காரர்கள் (இவ்வுலகிலும்) வெற்றிபெற மாட்டார்கள்."},{"id":22,"translation":"இன்னும், நாம் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் (மறுமை) நாளிலும் (வெற்றி பெற மாட்டார்கள்). பிறகு, இணைவைத்தவர்களை நோக்கி, “(கடவுள்கள் என) நீங்கள் பிதற்றிக்கொண்டிருந்த (நீங்கள் இணைவைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்கள் எங்கே?” என்று கூறுவோம்."},{"id":23,"translation":"பிறகு, “எங்கள் இறைவனாகிய அல்லாஹ் மீது சத்தியமாக நாங்கள் இணைவைப்பவர்களாக இருக்கவில்லை!” என்று அவர்கள் கூறுவதைத் தவிர அவர்களுடைய சோதனை(யில் வேறு பதில் அவர்களிடம்) இருக்காது."},{"id":24,"translation":"அவர்கள் தங்கள் மீதே எவ்வாறு பொய் கூறினர்; இன்னும், அவர்கள் கற்பனையாக புனைந்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு எவ்வாறு மறைந்துவிட்டன என்பதை (நபியே) கவனிப்பீராக!"},{"id":25,"translation":"(நபியே!) உம் பக்கம் செவி சாய்ப்பவரும் அவர்களில் உண்டு. அவர்களுடைய உள்ளங்களில் அதை புரிந்துகொள்வதற்கு தடையாக திரைகளையும், அவர்களுடைய காதுகளில் செவிடையும் ஆக்கினோம். இன்னும், ஒவ்வொரு அத்தாட்சியை அவர்கள் பார்த்தாலும் அதை அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். (நபியே!) முடிவாக, அவர்கள் உம்மிடம் தர்க்கித்தவர்களாக வந்தால் நிராகரித்த (அ)வர்கள், “இவை முன்னோர்களின் கட்டுக்கதைகளைத் தவிர (உண்மையான இறை வேதம்) இல்லை” என்றே கூறுவார்கள்."},{"id":26,"translation":"அவர்கள் இதிலிருந்து (மக்களை) தடுக்கிறார்கள்; இன்னும், அவர்களும் இதை விட்டு தூரமாக செல்கிறார்கள். (அவர்கள்) தங்களையே தவிர அழித்துக் கொள்வதில்லை. ஆனால், (அவர்கள் அதை) உணர மாட்டார்கள்."},{"id":27,"translation":"நரகத்தின் முன் அவர்கள் நிறுத்தப்படும் போது, (நபியே! நீர் அவர்களைப்) பார்த்தால், (அப்போது) அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட வேண்டுமே! இன்னும், எங்கள் இறைவனின் வசனங்களை நாங்கள் பொய்ப்பிக்க மாட்டோமே; இன்னும், நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோமே!”"},{"id":28,"translation":"(நிலைமை அவர்கள் எண்ணியது போன்று அல்ல!) மாறாக, முன்னர் (அவர்கள்) மறைத்திருந்தவை அவர்களுக்கு (முன்னர்) வெளிப்படும். அவர்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால், அவர்கள் எதை விட்டு தடுக்கப்பட்டார்களோ அதற்கே திரும்புவார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்."},{"id":29,"translation":"இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நமது உலக வாழ்க்கையைத் தவிர (வேறு) வாழ்க்கை இல்லை. இன்னும், (இந்த வாழ்க்கைதான் எல்லாம். மரணத்திற்கு பின்னர் வேறு வாழ்க்கைக்காக) நாம் எழுப்பப்பட மாட்டோம்.’’"},{"id":30,"translation":"இன்னும், (அவர்கள்) தங்கள் இறைவனுக்கு முன் நிறுத்தப்படும்போது நீர் (அவர்களைப்) பார்த்தால், (அப்போது இறைவன், விசாரணை நாளாகிய) இது உண்மை இல்லையா? என்று கூறுவான். அவர்கள், “எங்கள் இறைவன் மீது சத்தியமாக! ஏனில்லை (உண்மைதான்)’’ எனக் கூறுவர். “ஆகவே, நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்’’ என்று (இறைவன்) கூறுவான்."},{"id":31,"translation":"அல்லாஹ்வின் சந்திப்பை பொய்ப்பித்தவர்கள் நஷ்டமடைந்து விட்டனர். இறுதியாக, திடீரென அவர்களுக்கு மறுமை வந்தால், “நாங்கள் (நன்மைகளில்) எவற்றில் குறை செய்தோமோ அதனால் நேர்ந்த எங்கள் துக்கமே!’’ என்று கூறுவர். அவர்களுமோ தங்கள் பாவங்களைத் தங்கள் முதுகுகள் மீது சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டதாகும்."},{"id":32,"translation":"உலக வாழ்க்கை இல்லை, விளையாட்டும் கேளிக்கையும் தவிர. அல்லாஹ்வின் அச்சமுள்ளவர்களுக்கு மறுமை வீடுதான் மிக மேலானது. நீங்கள் (இதை சிந்தித்துப்) புரியவேண்டாமா?"},{"id":33,"translation":"(நபியே!) அவர்கள் கூறுவது, நிச்சயமாக உமக்கு கவலையளிக்கிறது என்பதை திட்டமாக நாம் அறிவோம். நிச்சயமாக அவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பதில்லை. எனினும், அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களைத்தான் (பொய்ப்பித்து) மறுக்கிறார்கள்."},{"id":34,"translation":"இன்னும், திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்கள் பொய்ப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்ப்பிக்கப்பட்டதையும் துன்புறுத்தப்பட்டதையும் சகித்து பொறுமையாக இருந்தனர். அல்லாஹ்வின் வாக்குகளை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும், தூதர்களின் செய்தியில் பல உமக்கு திட்டமாக வந்துள்ளன."},{"id":35,"translation":"(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெரி(ய சுமையான)தாக இருந்தால், நீ பூமியில் ஒரு சுரங்கத்தை அல்லது வானத்தில் ஓர் ஏணியைத் தேடிச் சென்று, (அதன் மூலம்) ஓர் அத்தாட்சியை அவர்களுக்குக் கொண்டு வருவதற்கு நீர் சக்தி பெற்றால் அப்படி கொண்டு வருவீராக. இன்னும், அல்லாஹ் நாடினால், அவர்களை நேர்வழியில் ஒன்று சேர்த்திருப்பான். ஆகவே, அறியாதவர்களில் நிச்சயம் ஆகிவிடாதீர்."},{"id":36,"translation":"(உண்மையை) ஏற்றுக் கொள்வதெல்லாம் (அந்த உண்மைக்கு) செவிசாய்ப்பவர்கள்தான். இறந்தவர்களோ - அவர்களை அல்லாஹ் (மறுமையில்) எழுப்புவான். பிறகு, அவனிடமே (அவர்கள் எல்லோரும்) திரும்ப கொண்டு வரப்படுவார்கள்."},{"id":37,"translation":"“(நம் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவருடைய இறைவனிடமிருந்து அவர் மீது இறக்கப்பட வேண்டாமா?’’ என்று (இணைவைப்பாளர்கள்) கூறினர். (நபியே!) கூறுவீராக: ஓர் அத்தாட்சியை இறக்குவதற்கு நிச்சயமாக அல்லாஹ் ஆற்றலுடையவன்தான். எனினும் அவர்களில் அதிகமானோர் அறியமாட்டார்கள்."},{"id":38,"translation":"பூமியில் ஊர்ந்து செல்லக் கூடியதும்; தன் இரு இறக்கைகளால் (வானத்தில்) பறப்பதும் இல்லை, உங்களைப் போன்ற படைப்புகளாகவே தவிர. எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. பிறகு, தங்கள் இறைவனிடம் (அவர்கள் அனைவரும்) ஒன்று திரட்டப்படுவார்கள்."},{"id":39,"translation":"இன்னும், நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்கள், - இருள்களில் (சிக்கிய) செவிடர்கள், ஊமையர்கள் (போல்) ஆவர். அல்லாஹ், தான் நாடியவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடியவர்களை நேரான பாதையில் நடத்துகிறான்."},{"id":40,"translation":"(நபியே!) கூறுவீராக: உங்களுக்கு (நீங்கள் மரணிப்பதற்கு முன்னர்) அல்லாஹ்வின் தண்டனை வந்தால் அல்லது உங்களுக்கு மறுமை வந்தால் அல்லாஹ் அல்லாதவர்களையா நீங்கள் அழைப்பீர்கள்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (இதன் பதிலை) அறிவியுங்கள்."},{"id":41,"translation":"மாறாக! அவனையே அழைப்பீர்கள். அவன் நாடினால் நீங்கள் எதை நீக்குவதற்காக (அவனை) அழைக்கிறீர்களோ (உங்களை விட்டு) அதை அவன் அகற்றுவான். (அப்போது,) நீங்கள் எவற்றை (அல்லாஹ்விற்கு) இணைவைத்து வணங்குகிறீர்களோ அவற்றை மறந்து விடுவீர்கள்."},{"id":42,"translation":"(நபியே!) உமக்கு முன்னர் பல சமுதாயங்களுக்கு (தூதர்களை) திட்டவட்டமாக அனுப்பினோம். (அவர்கள் நிராகரித்து விடவே) அவர்கள் (நமக்கு முன்) பணிவதற்காக வறுமை இன்னும் நோயின் மூலம் அவர்களைப் பிடித்தோம்."},{"id":43,"translation":"ஆக, நம் தண்டனை அவர்களுக்கு வந்தபோது அவர்கள் பணிந்திருக்க வேண்டாமா? எனினும், அவர்களுடைய உள்ளங்கள் இறுகின. இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்ததை ஷைத்தான் அவர்களுக்கு அலங்கரித்தான்."},{"id":44,"translation":"ஆக, அவர்களுக்கு உபதேசிக்கப்பட்டதை அவர்கள் மறந்தபோது (செல்வங்கள்) எல்லாவற்றின் வாசல்களை அவர்களுக்குத் திறந்(து கொடுத்)தோம். முடிவாக, அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட (செல்வத்)தினால் அவர்கள் மகிழ்ச்சியடைந்தபோது அவர்களைத் திடீரென பிடித்தோம். அப்போது, அவர்கள் துக்கப்பட்டு துயரப்பட்டார்கள்."},{"id":45,"translation":"ஆக, அநியாயமிழைத்த கூட்டத்தின் வேர் அறுக்கப்பட்டது. புகழ் (அனைத்தும்) அகிலத்தார்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே உரியதாகும்!"},{"id":46,"translation":"“அல்லாஹ், உங்கள் செவித் திறனையும் உங்கள் பார்வைகளையும் எடுத்தால்; இன்னும், உங்கள் உள்ளங்கள் மீது முத்திரையிட்டால், அல்லாஹ் அல்லாத வேறு இறைவன் யார் இருக்கிறார், அவர் அவற்றை உங்களுக்கு (திரும்ப)க் கொண்டு வருவாரா என்பதை அறிவியுங்கள்?’’ என்று (நபியே!) கூறுவீராக. (இன்னும், நபியே!) நாம் அத்தாட்சிகளை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதை கவனிப்பீராக. (இவ்வளவு தெளிவாக விவரித்த) பிறகும், அவர்கள் புறக்கணிக்கிறார்கள்."},{"id":47,"translation":"(நபியே!) கூறுவீராக: “திடீரென அல்லது வெளிப்படையாக அல்லாஹ்வின் தண்டனை உங்களுக்கு வந்தால் அநியாயக்கார மக்களைத் தவிர (யாரும்) அழிக்கப்படுவார்களா? என்று (எனக்கு) அறிவியுங்கள்!’’"},{"id":48,"translation":"நற்செய்தியாளர்களாக, எச்சரிப்பவர்களாகவே தவிர தூதர்களை நாம் அனுப்புவதில்லை. ஆகவே, எவர்கள் (உண்மையாகவே) நம்பிக்கை கொண்டு (நல்லமல்களை செய்து தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை. இன்னும், அவர்கள் கவலைப் படமாட்டார்கள்."},{"id":49,"translation":"இன்னும், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ, அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்த காரணத்தால் தண்டனை அவர்களை வந்தடையும்."},{"id":50,"translation":"(நபியே!) கூறுவீராக: ”அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் என்னிடம் உள்ளன” என்று நான் உங்களுக்குக் கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிய மாட்டேன். நிச்சயமாக நான் ஒரு வானவர் என்றும் உங்களுக்கு கூறமாட்டேன். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர நான் பின்பற்றமாட்டேன்.’’ (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?’’"},{"id":51,"translation":"இன்னும், (நபியே!) “(மறுமையில்) தங்கள் இறைவனிடம் ஒன்று திரட்டப்படுவோம், அங்கு தங்களுக்கு அவனைத் தவிர பாதுகாவலரும் இல்லை பரிந்துரைப்பவரும் இல்லை’’ என்று பயப்படுபவர்களை இதன் மூலம் எச்சரிப்பீராக, அவர்கள் (அதிகமதிகம்) அல்லாஹ்வை அஞ்சுவதற்காக(வும் பாவங்களை விட்டு விலகுவதற்காகவும்)."},{"id":52,"translation":"இன்னும், (நபியே!) தங்கள் இறைவனை - அவனின் முகத்தை நாடியவர்களாக - காலையிலும் மாலையிலும் பிரார்த்திப்பவர்களை (உங்கள் சபையிலிருந்து) விரட்டாதீர்! (அப்படி நீர் விரட்டினால்) அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்! நீர் அவர்களை விரட்டுவதற்கு அவர்களின் கணக்கிலிருந்து எதுவும் உம் மீதில்லையே. உம் கணக்கிலிருந்து எதுவும் அவர்கள் மீதில்லையே. (உமது செயல்களைப் பற்றி அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். அவர்களின் செயல்களைப் பற்றி நீர் விசாரிக்கப்பட மாட்டீர்.)"},{"id":53,"translation":"இவ்வாறே, அவர்களில் சிலரை சிலர் மூலம் சோதித்தோம். இறுதியில், “எங்களுக்கு மத்தியிலிருந்து (நம்பிக்கை கொண்ட) இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்தான்?’’ என்று அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) கூறுகிறார்கள். நன்றியுள்ளவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?"},{"id":54,"translation":"இன்னும், (நபியே!) நம் வசனங்களை நம்பிக்கை கொள்பவர்கள் உம்மிடம் வந்தால் (அவர்களுக்கு நீர்) கூறுவீராக: “உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! உங்கள் இறைவன் கருணையை தன்மீது கடமையாக்கினான். நிச்சயமாக உங்களில் எவர் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து, பிறகு, அதன் பின்னர் (அதிலிருந்து திருந்தி அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, (தன்னை) சீர்திருத்துவாரோ, (அவரை அல்லாஹ் மன்னிப்பான். ஏனென்றால்,) நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.’’"},{"id":55,"translation":"இவ்வாறுதான், (சத்தியம் தெளிவாகுவதற்காகவும்,) குற்றவாளிகளின் வழி தெளிவாகுவதற்காகவும் (நமது) வசனங்களை விவரிக்கிறோம்."},{"id":56,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர நீங்கள் பிரார்த்திப்பவற்றை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டுள்ளேன்.” (நபியே!) கூறுவீராக: “நான் உங்கள் ஆசைகளை பின்பற்றமாட்டேன். அவ்வாறாயின், நான் வழிதவறிவிடுவேன். இன்னும், நேர்வழி பெற்றவர்களில் நான் இருக்க மாட்டேன்.’’"},{"id":57,"translation":"(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக நான் என் இறைவனின் (தெளிவான) ஓர் அத்தாட்சியின் மீதிருக்கிறேன். அவனை (நீங்கள்) பொய்ப்பித்தீர்கள். நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இல்லை. (எவருக்கும்) அதிகாரம் இல்லை அல்லாஹ்வுக்கே தவிர. (அவன்) உண்மையை விவரிக்கிறான். இன்னும், தீர்ப்பாளர்களில் அவன் மிக மேலானவன்.’’"},{"id":58,"translation":"கூறுவீராக: “நீங்கள் அவசரப்படுவது என்னிடம் இருந்திருந்தால், எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் காரியம் முடிக்கப்பட்டிருக்கும். அல்லாஹ், அநியாயக்காரர்களை மிக அறிந்தவன்.’’"},{"id":59,"translation":"இன்னும், மறைவானவற்றின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவற்றை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார். நிலத்திலும், நீரிலும் உள்ளவற்றை (அவன்) நன்கறிவான். இன்னும், ஓர் இலையும் விழுவதில்லை அதை அவன் அறிந்தே தவிர. பூமியின் (ஆழ்) இருள்களில் உள்ள வித்து, பசுமையானது, உலர்ந்தது ஆகிய எதுவுமில்லை - தெளிவான புத்தகத்தில் (அவை எழுதப்பட்டு) இருந்தே தவிர."},{"id":60,"translation":"இன்னும், இரவில் அவன்தான் உங்க(ள் உயிர்க)ளை கைப்பற்றுகிறான். இன்னும், நீங்கள் பகலில் செய்தவற்றை அவன் அறிகிறான். பிறகு, குறிப்பிட்ட தவணை (முழுமையாக) முடிக்கப்படுவதற்காக அதில் (-காலையில்) உங்களை அவன் எழுப்புகிறான். பிறகு, அவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. பிறகு, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்."},{"id":61,"translation":"அவன்தான் தன் அடியார்கள் மேல் ஆதிக்கமுள்ளவன். இன்னும், உங்கள் மீது (வானவ) காவலர்களையும் அவன் அனுப்புகிறான். இறுதியாக, உங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், நம் (வானவத்) தூதர்கள் அவ(ருடைய உயி)ரை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (தங்கள் பணியில்) குறைவு செய்யமாட்டார்கள்."},{"id":62,"translation":"பிறகு, அவர்களின் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்விடம் மீண்டும் கொண்டு வரப்படுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்: “அவனுக்கே (ஆட்சியும்) அதிகார(மு)ம் உரியது. அவன் கணக்கெடுப்பவர்களில் மிகத் தீவிரமானவன்.’’"},{"id":63,"translation":"“தரை இன்னும் கடலின் இருள்களில் உங்களை யார் பாதுகாப்பான்? எங்களை இதிலிருந்து பாதுகாத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றிசெலுத்துபவர்களில் ஆகிவிடுவோம்” என்று பணிவாகவும் மறைவாகவும் அவனிடமே நீங்கள் பிரார்த்திக்கிறீர்கள்."},{"id":64,"translation":"(நபியே!) கூறுவீராக: “இதிலிருந்தும் இன்னும் எல்லா துன்பங்களிலிருந்தும் அல்லாஹ்தான் உங்களை பாதுகாக்கிறான். (அவன் உங்களை பாதுகாத்த) பிறகு, நீங்கள் (அவனுக்கு) இணைவைக்கிறீர்கள்!’’"},{"id":65,"translation":"(நபியே!) கூறுவீராக: “உங்களுக்கு மேலிருந்து; அல்லது, உங்கள் கால்களுக்குக் கீழிருந்து உங்கள் மீது தண்டனையை அனுப்புவதற்கும்; அல்லது, உங்களைப் பல பிரிவுகளாக (ஆக்கி, பிறகு, உங்களுக்குள் ஒரு பிரிவை இன்னொரு பிரிவுடன் சண்டையில்) கலந்து, உங்களில் சிலருக்கு சிலருடைய வலிமையை (-தாக்குதலை) சுவைக்க வைப்பதற்கும் அவன்தான் சக்தியுள்ளவன்.’’ அவர்கள் விளங்குவதற்காக வசனங்களை எவ்வாறு விவரிக்கிறோம் என்று (நபியே!) கவனிப்பீராக."},{"id":66,"translation":"இதுதான் உண்மையாக இருந்தும், உம் சமுதாயம் இதை பொய்ப்பித்தனர். (நபியே!) கூறுவீராக: “உங்கள் மீது பொறுப்பாளனாக நானில்லை.’’"},{"id":67,"translation":"ஒவ்வொரு செய்திக்கும் (அது) நிகழும் நேரமுண்டு. இன்னும், (நீங்கள் அதை) அறியத்தான் போகிறீர்கள்."},{"id":68,"translation":"(நபியே!) நம் வசனங்களில் (அவற்றை கேலி செய்வதில்) மூழ்குபவர்களைக் கண்டால், அவர்கள் அது அல்லாத (வேறு) பேச்சில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக. ஷைத்தான் உம்மை மறக்கடித்தால், நினைவு வந்த பின்னர் அநியாயக்கார கூட்டத்துடன் அமராதீர்."},{"id":69,"translation":"இன்னும் (வீண் விவாதத்தில் மூழ்கும்) அவர்களுடைய (செயல்களின்) கணக்கிலிருந்து எதுவும் அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீதில்லை. எனினும், அ(வ்வாறு கேலி செய்ப)வர்கள் தவிர்ந்து கொள்வதற்காக உபதேசித்தல் (கடமையாகும்)."},{"id":70,"translation":"இன்னும், (நபியே!) எவர்கள் தங்கள் மார்க்கத்தை விளையாட்டாகவும் கேளிக்கையாகவும் எடுத்துக் கொண்டார்களோ; இன்னும், உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டதோ அவர்களை நீர் விட்டுவிடுவீராக. ஓர் ஆன்மா, தான் செய்ததன் காரணமாக (மறுமையில்) ஆபத்திற்குள்ளாகும் என்பதை இதன் மூலம் நினைவூட்டுவீராக. (அந்நாளில்) பாதுகாவலரோ பரிந்துரையாளரோ, அல்லாஹ்வைத் தவிர அதற்கு இருக்கமாட்டார். அது (தண்டனையிலிருந்து தப்பிக்க) எவ்வளவு ஈடு கொடுத்தாலும் அதனிடமிருந்து அது ஏற்கப்படாது. இவர்கள் எத்தகையோர் என்றால் தாங்கள் செய்ததன் காரணமாகவே ஆபத்திற்குள்ளானார்கள். இவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் கடுமையான கொதி நீரிலிருந்து குடிபானமும் துன்புறுத்தும் தண்டனையும் இவர்களுக்கு உண்டு."},{"id":71,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர எங்களுக்கு பலனளிக்காதவற்றையும் தீங்கிழைக்காதவற்றையும் நாங்கள் அழைப்போமா? ஒருவர், அவரை நேர்வழி பக்கம் அழைக்கின்ற நண்பர்கள் அவருக்கு இருந்த நிலையில், ஷைத்தான்கள் அவரை வழிதவறச் செய்து, அவரோ திகைத்தவராக பூமியில் அலைகிறாரே அவரைப் போல், நாங்கள் - எங்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர் - எங்கள் குதிங்கால்கள் மேல் (வழிகேட்டின் பக்கம்) திரும்பி (குழப்பத்தில் ஆகி) விடுவோமா?’’ (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வின் நேர்வழி, அதுதான் (உண்மையான) நேர்வழியாகும். அகிலத்தார்களின் இறைவனுக்கே நாங்கள் (முற்றிலும்) பணிந்துவிடவேண்டும் என்று கட்டளையிடப்பட்டோம்.’’"},{"id":72,"translation":"இன்னும், “தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும், அவனை அஞ்சுங்கள் என்று நாங்கள் கட்டளை இடப்பட்டுள்ளோம்.” இன்னும், அவன் பக்கம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்."},{"id":73,"translation":"அவன்தான் உண்மையில் வானங்களையும், பூமியையும் படைத்தான். இன்னும், (மறுமை நிகழும்போது வானமும் பூமியும் வேறு வானமாகவும் பூமியாகவும் மாற்றப்படும். அப்போது) ‘ஆகுக!’ என அவன் கூறும் அந்த நாளில் உடனே (அது அவன் நாடியபடி அவை இரண்டும்) ஆகிவிடும்."},{"id":74,"translation":"இப்ராஹீம் தன் தந்தை ஆஸருக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! “நீர் சிலைகளை வணங்கத்தகுதியான தெய்வங்களாக எடுத்துக்கொள்கிறீரா?’’ “நிச்சயமாக நான் உம்மையும் உம் சமுதாயத்தையும் தெளிவான வழிகேட்டில் காண்கிறேன்.’’"},{"id":75,"translation":"இன்னும், (நேர்வழியையும் வழிகேட்டையும் அவருக்கு நாம் காண்பித்து கொடுத்த) இவ்வாறுதான், வானங்கள்; மற்றும், பூமியின் பேராட்சியை இப்ராஹீமுக்கு காண்பித்தோம். ஏனெனில், (அவர் அல்லாஹ்வின் வல்லமையை அறிந்து கொள்வதற்காக.) இன்னும், அவர் உறுதியான நம்பிக்கை உடையவர்களில் ஆகுவதற்காக."},{"id":76,"translation":"ஆக, அவரை இரவு சூழ்ந்தபோது அவர் ஒரு நட்சத்திரத்தைக் கண்டு “இது என் இறைவன்’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது, “மறையக் கூடியவற்றை (இறைவனாக எடுத்துக்கொள்ள நான்) விரும்பமாட்டேன்’’ எனக் கூறினார்."},{"id":77,"translation":"ஆக, உதயமாகிய சந்திரனை அவர் கண்டபோது, “இது என் இறைவன்’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது “என்(னைப் படைத்த எனது உண்மையான) இறைவன் என்னை நேர்வழி படுத்தாவிட்டால் வழிகெட்ட சமுதாயத்தில் நிச்சயமாக நான் ஆகிவிடுவேன்’’ எனக் கூறினார்."},{"id":78,"translation":"ஆக, உதயமாகிய சூரியனைக் கண்டபோது, “இது என் இறைவன், இது மிகப் பெரியது’’ எனக் கூறினார். ஆக, அது மறைந்தபோது, “என் சமுதாயமே! நீங்கள் (உண்மையான இறைவனாகிய அல்லாஹ்விற்கு) இணைவைப்பவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன்’’ என்று கூறினார்."},{"id":79,"translation":"“வானங்களையும் பூமியையும் படைத்தவனின் பக்கம் நிச்சயமாக நான் ஏகத்துவக் கொள்கையில் உறுதியுடையவனாக (அல்லாஹ்வின் பக்கம்) என் முகத்தை திருப்பிவிட்டேன். இன்னும், நான் இணைவைப்பவர்களில் இல்லை.’’ (என்று கூறினார்)"},{"id":80,"translation":"இன்னும், அவரிடம் அவருடைய சமுதாயத்தினர் தர்க்கித்தனர். அவர் கூறினார்: “நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி என்னிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனோ எனக்கு நேர்வழி காட்டிவிட்டான். இன்னும், அவனுக்கு நீங்கள் இணைவைப்பதை நான் பயப்பட மாட்டேன், என் இறைவன் எதையும் நாடினால் தவிர. என் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும் விட விசாலமானவனாக இருக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறவேண்டாமா?’’"},{"id":81,"translation":"“இன்னும், நீங்கள் இணைவைத்தவற்றை எவ்வாறு நான் பயப்படுவேன். உங்களுக்கு அவன் எதற்கு ஆதாரத்தை இறக்கவில்லையோ அதை நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்விற்கு இணையாக்கியதைப் பற்றி நீங்கள் பயப்படுவதில்லை. ஆகவே, இரு பிரிவினரில் (இறைவனின் கோபத்திலிருந்து) பாதுகாப்புப்பெற மிகத் தகுதியுடையவர் யார்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (பதில் கூறுங்கள்).”"},{"id":82,"translation":"எவர்கள் நம்பிக்கை கொண்டு, தங்கள் நம்பிக்கையில் (இணைவைத்தல் எனும்) அநியாயத்தை கலக்கவில்லையோ அவர்களுக்கே (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து) பாதுகாப்பு உண்டு. இன்னும், அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவர்."},{"id":83,"translation":"இன்னும், இவை நம் சான்றாகும். அதை அவருடைய சமுதாயத்திற்கு எதிராக இப்ராஹீமுக்கு கொடுத்தோம். நாம் நாடியவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் மகா ஞானவான், நன்கறிபவன் ஆவான்."},{"id":84,"translation":"இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும் யஅகூபையும் வழங்கினோம். எல்லோரையும் நேர்வழி நடத்தினோம். இதற்கு முன்னர் நூஹையும், அவருடைய சந்ததிகளில் தாவூதையும், ஸுலைமானையும், ஐயூபையும், யூஸுஃபையும், மூஸாவையும், ஹாரூனையும் நாம் நேர்வழி நடத்தினோம். நல்லறம் புரிவோருக்கு இவ்வாறே (நற்)கூலி கொடுக்கிறோம்."},{"id":85,"translation":"இன்னும், ஸகரிய்யாவையும், யஹ்யாவையும், ஈஸாவையும், இல்யாஸையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரும் நல்லோரில் உள்ளவர்களே."},{"id":86,"translation":"இன்னும், இஸ்மாயீலையும், அல்யஸஉவையும், யூனுஸையும், லூத்தையும் (நேர்வழி நடத்தினோம்). (இவர்கள்) எல்லோரையும் அகிலத்தார்களை விட மேன்மைப்படுத்தினோம்."},{"id":87,"translation":"இன்னும், இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (நாம் விரும்பிய பலரை மேன்மைப்படுத்தினோம்). இன்னும் அவர்களை (நபித்துவத்திற்காக) தேர்ந்தெடுத்தோம். இன்னும் அவர்களுக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டினோம்."},{"id":88,"translation":"இதுவே அல்லாஹ்வுடைய நேர்வழியாகும். தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதன் மூலம் நேர்வழி நடத்துகிறான். இன்னும், அவர்கள் (-மேற்கூறப்பட்ட நபிமார்கள்) இணைவைத்தால் அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டு அழிந்துவிடும்."},{"id":89,"translation":"இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம். ஆகவே, அவற்றை (மக்காவாசிகளாகிய) இவர்கள் நிராகரித்தால் அவற்றை நிராகரிப்பவர்களாக இருக்காத ஒரு சமுதாயத்தை (நாம் கொண்டுவருவோம். அவர்களை) அவற்றுக்கு பொறுப்பாளர்களாக ஆக்கி விடுவோம்."},{"id":90,"translation":"(நபியே!) அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை நேர்வழி நடத்தினான். ஆகவே, அவர்களுடைய நேர்வழியையே - அதையே நீர் பின்பற்றுவீராக. “இதற்காக உங்களிடம் ஒரு கூலியையும் நான் கேட்க மாட்டேன். இ(ந்த வேதமான)து இல்லை, அகிலத்தார்களுக்கு ஒரு நல்லுபதேசமாகவே தவிர’’ என்று கூறுவீராக."},{"id":91,"translation":"“மனிதர்கள் மீது (வேதத்தில்) எதையும் அல்லாஹ் இறக்கவில்லை’’ என்று அவர்கள் கூறியபோது அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கு தகுந்தாற்போல் அவர்கள் அறியவில்லை. (நபியே!) கூறுவீராக: “மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் மூஸா கொண்டு வந்த வேதத்தை இறக்கியவன் யார்? அதை நீங்கள் பல ஏடுகளாக ஆக்கி, அவற்(றில் சிலவற்)றை வெளிப்படுத்தினீர்கள், இன்னும் அதிகமானதை மறைத்தும் விடுகிறீர்கள். நீங்களும் உங்கள் மூதாதைகளும் அறியாதவற்றை (நீங்கள்) கற்பிக்கப்பட்டீர்கள்.” (நபியே!) “அல்லாஹ் (அதை இறக்கினான்)’’ என்று நீர் கூறிவிட்டு, அவர்களை அவர்கள் மூழ்குவதிலேயே (-அவர்களின் பொய்யான கேலி பேச்சுகளில்) விளையாடியவர்களாக நீர் விட்டுவிடுவீராக."},{"id":92,"translation":"(நபியே!) இது பாக்கியமிக்க (அதிமான நன்மைகளை உடைய) வேதமாகும். நாம் இதை இறக்கினோம். இது, தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்தக் கூடியதாகும். இன்னும், நீர் (இதன் மூலம்) மக்காவையும் (-மக்கா நகரத்தில் உள்ளவர்களையும்) அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காக (இறக்கினோம்). இன்னும், எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்வார்களோ அவர்கள் இதையும் நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், அவர்கள் தங்கள் தொழுகையை மிகுந்த கவனத்துடன் தொடர்ந்து நிறைவேற்றுவார்கள்."},{"id":93,"translation":"(நபியே!) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவன்; அல்லது, அவனுக்கு எதுவும் வஹ்யி அறிவிக்கப்படாமலிருக்க \"தனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது'' என்று கூறுபவன்; அல்லது, \"அல்லாஹ் இறக்கியதைப் போல் (நானும்) இறக்குவேன்'' என்று கூறுபவன் ஆகிய (இ)வர்களை விட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? (இந்த) அக்கிரமக்காரர்கள் மரண வேதனைகளில் இருக்கும் சமயத்தில் நீர் (அவர்களைப்) பார்த்தால், வானவர்கள் தங்கள் கைகளை நீட்டி, (அவர்களை நோக்கி) \"உங்கள் உயிர்களை வெளியேற்றுங்கள்; நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக்கொண்டிருந்த காரணத்தாலும், நீங்கள் அவனுடைய வசனங்களை மறுத்து பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்று இழிவான வேதனையை கூலி கொடுக்கப்படுவீர்கள்'' (என்று கூறுவார்கள்)."},{"id":94,"translation":"“முதல் முறை நாம் உங்களைப் படைத்தது போல் தனி நபர்களாக நம்மிடம் திட்டமாக வந்துவிட்டீர்கள். நாம் உங்களுக்குக் கொடுத்தவற்றையும் உங்கள் முதுகுகளுக்குப் பின்னால் விட்டுவிட்டீர்கள். உங்களுடன் (நீங்கள் நம்பிக்கொண்டிருந்த) உங்கள் பரிந்துரையாளர்களை நாம் காணவில்லை. நிச்சயமாக, அவர்கள் உங்களுக்கு மத்தியில் (அல்லாஹ்விற்கு) இணையான தெய்வங்கள் என நீங்கள் (அவர்களை) எண்ணினீர்கள். உங்களுக்கு மத்தியில் (இருந்த தொடர்புகள்) அறுந்து, (பரிந்துரையாளர்கள் என) நீங்கள் எண்ணிக்கொண்டிருந்தவை உங்களை விட்டும் தவறிப்போய்விட்டன.’’"},{"id":95,"translation":"நிச்சயமாக அல்லாஹ் வித்துகளையும், (பழங்களின்) கொட்டைகளையும் பிளந்து (செடி கொடிகளை) துளிர்க்கச் செய்பவன்; இறந்ததிலிருந்து உயிருள்ளதை வெளியாக்குகிறான்; இன்னும், உயிருள்ளதிலிருந்து இறந்ததை வெளியாக்குகிறான். அத்தகையவன்தான் அல்லாஹ். ஆகவே, நீங்கள் (அவனை விட்டு வேறு) எங்கு திருப்பப்படுகிறீர்கள்?"},{"id":96,"translation":"(அவனே இருளிலிருந்து) ஒளியை பிளப்பவன்; இன்னும், இரவை அமைதி பெறுவதற்காகவும் சூரியனையும் சந்திரனையும் (நேரம் மற்றும் மாதத்தின்) கணக்கிற்காகவும் ஆக்கினான். இவை மிகைத்தவன், நன்கறிந்தவனின் ஏற்பாடாகும்."},{"id":97,"translation":"இன்னும், நட்சத்திரங்களை உங்களுக்கு அவன்தான் அமைத்தான், நீங்கள் தரையிலும் கடலின் இருள்களிலும் அவற்றின் மூலம் நேர்வழி பெறுவதற்காக. அறிவுள்ள சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக நாம் விவரித்து விட்டோம்."},{"id":98,"translation":"இன்னும், அவன்தான் உங்களை ஒரே ஓர் ஆத்மாவில் இருந்து உருவாக்கினான். ஆக, (ஒவ்வொரு ஆன்மாவிற்கும்) ஒரு தங்குமிடமும் ஒரு ஒப்படைக்கப்படும் இடமும் உண்டு. சிந்தித்து புரிகின்ற சமுதாயத்திற்காக அத்தாட்சிகளை திட்டமாக விவரித்தோம்."},{"id":99,"translation":"இன்னும், அவன்தான் மேகத்திலிருந்து மழையை இறக்குபவன். அதன் மூலம் எல்லா தாவரங்களையும் நாம் உற்பத்தி செய்தோம். (அவ்வாறே) அதிலிருந்து பசுமையானதையும் உற்பத்தி செய்தோம். அதிலிருந்து அடர்ந்த வித்துக்களை (உடைய கதிர்களை)யும் உற்பத்தி செய்கிறோம். பேரீச்ச மரத்தில் அதன் பாளையிலிருந்து (பறிப்பதற்கு) நெருக்கமான பழக்குலைகளும் இருக்கின்றன. திராட்சைகளின் தோட்டங்களையும், (ஒலிவம்) ஆலிவ் பழங்களையும், (பார்வையில்) ஒப்பான, (ருசியில்) ஒப்பாகாத மாதுளைகளையும் (நாமே வெளியாக்குகிறோம்). அவை காய்க்கும்போது அதன் கனிகளையும் இன்னும், அவை பழமாகுவதையும் கவனித்துப் பாருங்கள். நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":100,"translation":"இன்னும், அவர்கள் ஜின்களை அல்லாஹ்விற்கு இணையான தெய்வங்களாக ஆக்கினர். அவனோ அவர்களைப் படைத்திருக்கிறான். இன்னும், அறிவின்றி அவனுக்கு மகன்களையும், மகள்களையும் கற்பனை செய்தனர். அவன் (இந்த கற்பனைகளை விட்டு) மகாத் தூயவன். இன்னும் அ(ந்த இணைவைப்ப)வர்கள் வருணிப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்."},{"id":101,"translation":"(அவன்) வானங்கள் இன்னும் பூமியின் நூதன படைப்பாளன் (-முன்மாதிரி இன்றி அவற்றை படைத்தவன்). அவனுக்கு மனைவி இல்லாமல் இருக்கும்போது அவனுக்கு எவ்வாறு சந்ததி இருக்க முடியும்? இன்னும், அவனோ எல்லாவற்றையும் படைத்தான். (அவனைத் தவிர எல்லாம் படைக்கப்பட்டவையே!) இன்னும், அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்."},{"id":102,"translation":"அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்) எல்லாவற்றின் படைப்பாளன். ஆகவே, அவனை வணங்குங்கள்! இன்னும், அவன் எல்லாவற்றின் மீதும் கண்காணிப்பாளன் ஆவான்."},{"id":103,"translation":"பார்வைகள் அவனை பார்க்க முடியாது. அவன் எல்லா(ருடைய) பார்வைகளை பார்க்கிறான். இன்னும், அவன்தான் மிக நுட்பமானவன்; ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":104,"translation":"உங்கள் இறைவனிடமிருந்து ஆதாரங்கள் உங்களுக்கு வந்துவிட்டன. ஆக, எவர் (அவற்றை) கவனமாக பார்த்தாரோ அது அவருக்குத்தான் நன்மை. எவர் குருடாகி விட்டாரோ (அது) அவருக்குத்தான் கேடாகும். (நீர் அவர்களை நோக்கி) “நான் உங்கள்மீது (ஏற்படுத்தப்பட்ட) காவலனாக இல்லை’’ (என்று நபியே! கூறுவீராக)."},{"id":105,"translation":"(நேர்வழியை நாடுவோர் நேர்வழிபெற நமது) வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம். இன்னும், நீர் படித்தீர் என்று அவர்கள் சொல்வதற்காகவும், அறிகின்ற மக்களுக்கு நாம் அதைத் தெளிவுபடுத்துவதற்காகவும் (நம் வசனங்களை தொடர்ந்து விவரிக்கிறோம்)."},{"id":106,"translation":"(நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை பின்பற்றுவீராக. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. இன்னும் இணைவைத்து வணங்குபவர்களை புறக்கணிப்பீராக!"},{"id":107,"translation":"அல்லாஹ் நாடியிருந்தால் (அவர்கள்) இணைவைத்திருக்க மாட்டார்கள். அவர்கள் மீது காவலராக நாம் உம்மை ஆக்கவில்லை. நீர் அவர்கள் மீது பொறுப்பாளராகவும் இல்லை."},{"id":108,"translation":"(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வை அன்றி எவர்களை அவர்கள் வணங்குகிறார்களோ அவர்களைத் திட்டாதீர்கள். அதனால் அவர்கள் அறிவின்றி வரம்புமீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள். இவ்வாறே, ஒவ்வொரு சமுதாயத்திற்கும் அவர்களுடைய செயல்களை நாம் அலங்கரித்தோம். பிறகு, அவர்களுடைய இறைவனிடமே அவர்களுடைய மீட்சி இருக்கிறது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை (அவன்) அவர்களுக்கு அறிவிப்பான்."},{"id":109,"translation":"(அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சி அவர்களிடம் வந்தால், “நிச்சயமாக அதை நம்பிக்கை கொள்வோம்” என அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தனர். (நபியே!) “அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடமே இருக்கின்றன.’’ என்று கூறுவீராக. (அவர்கள் விரும்பியவாறே) நிச்சயமாக அவை வந்தால், அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள் என்பது (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு தெரியாதா?"},{"id":110,"translation":"இன்னும், முதல் முறையாக அவர்கள் இ(வ்வேதத்)தை நம்பிக்கை கொள்ளாதது போன்றே நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் (இறுதி வரை) புரட்டிவிடுவோம். இன்னும், அவர்களுடைய அட்டூழியத்தில் அவர்கள் (மேலும்) கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக அவர்களை விட்டுவிடுவோம்."},{"id":111,"translation":"(அவர்கள் கோரியபடி) நிச்சயமாக, நாம் அவர்களிடம் வானவர்களை இறக்கினாலும்; இன்னும், இறந்தவர்கள் அவர்களிடம் பேசினாலும்; இன்னும், எல்லாவற்றையும் அவர்களுக்கு முன்னால் கண்ணெதிரே ஒன்று திரட்டினாலும், (அவர்கள்) நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை, அல்லாஹ் நாடினால் தவிர. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்."},{"id":112,"translation":"இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் மனிதர்களிலும், ஜின்களிலுமுள்ள ஷைத்தான்களை நாம் எதிரிகளாக ஆக்கினோம். அவர்களில் சிலர் சிலருக்கு (அவர்களை) ஏமாற்றுவதற்காக அலங்காரமான சொல்லை சொல்லித் தருகிறார்கள். உம் இறைவன் நாடியிருந்தால் அதை அவர்கள் செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களையும் அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதையும் விட்டுவிடுவீராக."},{"id":113,"translation":"இன்னும், மறுமையை நம்பாதவர்களுடைய உள்ளங்கள் அதன் பக்கம் செவிசாய்ப்பதற்காகவும்; இன்னும், அதை அவர்கள் திருப்தி கொள்வதற்காகவும்; இன்னும், அவர்கள் செய்(யும்) ப(ல பாவமான)வற்றை செய்வதற்காகவும் (ஷைத்தான்கள் அவர்களை ஏமாற்றினர்)."},{"id":114,"translation":"“தீர்ப்பாளனாக அல்லாஹ் அல்லாதவரையா நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு மிகத் தெளிவான வேதத்தை இறக்கினான்.’’ (என்று நபியே! கூறுவீராக). இன்னும், (இதற்கு முன்னர்) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்கள், நிச்சயமாக, இது உண்மையில் (உண்மையான ஆதாரங்களுடன்) உம் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டது என்பதை அறிவார்கள். ஆகவே, சந்தேகிப்பவர்களில் ஒருபோதும் ஆகிவிடாதீர்."},{"id":115,"translation":"(நபியே!) உம் இறைவனின் வாக்கு (-வேதம்) உண்மையாலும் நீதத்தாலும் முழுமையானதாக இருக்கிறது. அவனுடைய (வேத) வாக்குகளை மாற்றுபவன் அறவே இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":116,"translation":"இன்னும், இப்பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு நீர் கீழ்ப்படிந்தால் (அவர்கள்) உம்மை அல்லாஹ்வுடைய பாதையிலிருந்து வழிகெடுத்து விடுவார்கள். (அதிகமானோர்) யூகத்தைத் தவிர (உண்மையை) பின்பற்றமாட்டார்கள். இன்னும், கற்பனை செய்பவர்களாகவே (-பொய்யை பின்பற்றுபவர்களாகவே) தவிர (உண்மையை பின்பற்றுபவர்களாக) அவர்கள் இல்லை."},{"id":117,"translation":"(நபியே!) நிச்சயமாக உம் இறைவன், அவனுடைய பாதையிலிருந்து வழிகெடுபவரை மிக அறிந்தவன். இன்னும், அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்."},{"id":118,"translation":"ஆகவே, (அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்பட்டதிலிருந்து புசியுங்கள், நீங்கள் அவனுடைய வசனங்களை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால்."},{"id":119,"translation":"இன்னும் (அறுக்கும்போது) எதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதோ அதிலிருந்து நீங்கள் புசிக்காதிருக்க உங்களுக்கு என்ன ஏற்பட்டது? அவன் உங்கள் மீது தடுத்தவற்றை உங்களுக்கு (இந்த வேதத்தில் :, : ஆகிய வசனங்களில்) விவரித்துவிட்டான் (ஆனால் தடுக்கப்பட்ட) அதன் பக்கம் நீங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டால் தவிர (அப்போது, அதை உண்ணுவது உங்கள் நிர்ப்பந்தத்தின் அளவு உங்களுக்கு ஆகுமாகிவிடும்). நிச்சயமாக அதிகமானோர் கல்வி அறிவின்றி தங்கள் ஆசைகளினால் (மக்களை) வழி கெடுக்கிறார்கள். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன் எல்லை மீறுபவர்களை மிக அறிந்தவன் ஆவான்."},{"id":120,"translation":"(நம்பிக்கையாளர்களே!) பாவத்தில் வெளிப்படையானதையும் அதில் மறைவானதையும் விட்டுவிடுங்கள். நிச்சயமாக பாவத்தை சம்பாதிப்பவர்கள் அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்."},{"id":121,"translation":"இன்னும், (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றிலிருந்து புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பாவமாகும். உங்களிடம் அவர்கள் தர்க்கிப்பதற்காக நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களுக்கு சொல்லித் தருகிறார்கள். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்கள்."},{"id":122,"translation":"எவர் மரணித்தவராக இருந்து, அவரை நாம் உயிர்ப்பித்து, அவர் மக்களுக்கு மத்தியில் நடமாடுவதற்கு ஓர் ஒளியையும் அவருக்கு நாம் ஏற்படுத்தினோமோ அவர், யார் இருள்களில் இருந்து கொண்டு அவற்றிலிருந்து வெளியேறாமல் இருக்கிறாரோ அவரைப் போன்று ஆவாரா? இவ்வாறே நிராகரிப்பவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை அலங்கரிக்கப்பட்டன."},{"id":123,"translation":"இன்னும், இவ்வாறே எல்லா ஊரிலும் தலைவர்களாக அதிலுள்ள பெரிய பாவிகளை ஆக்கினோம், அவற்றில் அவர்கள் சதி செய்வதற்காக. அவர்கள் தங்களுக்குத் தாமே தவிர (மற்றவர்களுக்கு) சதி செய்யமாட்டார்கள். (இதை அவர்கள்) உணர மாட்டார்கள்."},{"id":124,"translation":"இன்னும், அவர்களிடம் ஒரு வசனம் வந்தால் “அல்லாஹ்வுடைய தூதர்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று எங்களுக்கும் கொடுக்கப்படுகின்ற வரை (நாங்கள் அதை) நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்” என்று கூறுகிறார்கள். தன் தூதுத்துவத்தை எங்கு ஏற்படுத்துவது (-யாரை நபியாக - தூதராக ஆக்குவது) என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன் ஆவான். குற்றம் புரிந்தவர்களை அவர்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்த காரணத்தால் அல்லாஹ்விடமிருந்து (அவர்களுக்கு) சிறுமையும் கடுமையான தண்டனையும் வந்தடையும்."},{"id":125,"translation":"ஆக, அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமை ஏற்பதற்கு விரிவாக்குகிறான். எவரை, அவன் வழிகெடுக்க நாடுகிறானோ அவருடைய நெஞ்சை வானத்தில் ஏறுபவனைப் போல் இறுக்கமானதாகவும் சிரமமானதாகவும் ஆக்குவான். இவ்வாறே, நம்பிக்கை கொள்ளாதவர்கள் மீது அல்லாஹ் தண்டனையை ஆக்குவான்."},{"id":126,"translation":"(நபியே!) இது உம் இறைவனின் நேரான பாதையாகும். நல்லுபதேசம் பெறும் மக்களுக்கு (நமது) வசனங்களை திட்டமாக விவரித்து விட்டோம்."},{"id":127,"translation":"அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் தாருஸ் ஸலாம் (-ஈடேற்றமுடைய இல்லம் என்ற சொர்க்கம்) உண்டு. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவன் அவர்களுடைய நேசனும் ஆவான்."},{"id":128,"translation":"இன்னும், அவன் அவர்கள் அனைவரையும் ஒன்று திரட்டும் நாளில், (ஜின்களை நோக்கி) “ஜின்களின் கூட்டமே! நீங்கள் மனிதர்களில் (வழிகேடர்களை) அதிகப்படுத்தி விட்டீர்கள்’’ (என்று கூறுவான்). மனிதர்களில் உள்ள அவர்களின் நண்பர்கள், “எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரினால் பயனடைந்தனர். எங்களுக்கு நீ தவணையளித்த தவணையை அடைந்தோம். (எங்களுக்கு தங்குமிடம் எது?)’’ என்று கூறுவார்கள். (அதற்கு இறைவன்) “நரகம்தான் உங்கள் தங்குமிடம். அதில் (நீங்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள், அல்லாஹ் நாடினால் தவிர.’’ என்று கூறுவான். (நபியே!) நிச்சயமாக உம் இறைவன், ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":129,"translation":"இவ்வாறு, அக்கிரமக்காரர்களில் சிலரை சிலருக்கு நண்பர்களாக ஆக்குவோம், அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக."},{"id":130,"translation":"“ஜின்கள் மற்றும் மனிதர்களின் கூட்டமே! உங்களிலிருந்து தூதர்கள் என் வசனங்களை உங்களுக்கு விவரிப்பவர்களாக; இன்னும், உங்கள் இந்நாளை உங்களுக்கு எச்சரிப்பவர்களாக உங்களிடம் வரவில்லையா?’’ என்று கூறுவான். அதற்கவர்கள், “(எங்கள் இறைவனே!) எங்களுக்கு எதிராக சாட்சியளித்தோம்\" என்று கூறுவார்கள். உலக வாழ்க்கை அவர்களை மயக்கி விட்டது. நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள் என்று அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்."},{"id":131,"translation":"அதற்குக் காரணமாவது, நகரங்களை, - அங்கு வசிப்பவர்கள் கவனமற்றவர்களாக இருக்கும் நிலையில் (அவர்களுடைய ஷிர்க் எனும்) - அநியாயத்தினால் உமது இறைவன் அழிப்பவனாக இல்லை."},{"id":132,"translation":"இன்னும், எல்லோருக்கும் அவர்கள் செய்ததற்கு ஏற்ப (தகுந்த) பதவிகள் உண்டு. அவர்கள் செய்வதை உம் இறைவன் கவனிக்காதவனாக இல்லை."},{"id":133,"translation":"இன்னும், (நபியே!) உம் இறைவன் நிறைவானவன் (-எத்தேவையுமற்றவன்), கருணையுடையவன் ஆவான். (மனிதர்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி, (சென்றுபோன) மற்ற சமுதாயத்தின் சந்ததியிலிருந்து உங்களை உருவாக்கியதைப் போன்று உங்களுக்குப் பின்னர் அவன் தான் நாடியவர்களை உருவாக்குவான்."},{"id":134,"translation":"நிச்சயமாக எதை நீங்கள் வாக்களிக்கப்படுகிறீர்களோ அது வரக்கூடியதே. இன்னும், நீங்கள் (உங்கள் இறைவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக இல்லை. (அவனை விட்டும் நீங்கள் ஒருபோதும் தப்பிக்க முடியாது.)"},{"id":135,"translation":"(நபியே!) கூறுவீராக: “என் சமுதாயமே! உங்கள் போக்கில் (நீங்கள் விரும்புவதை) செய்யுங்கள். நிச்சயமாக நான் (என் இறைவனின் கட்டளைப்படி அவன் ஏவியதை) செய்கிறேன். ஆக, மறுமையின் (நல்ல) முடிவு எவருக்கு இருக்கும் என்பதை (நீங்கள் விரைவில்) அறிவீர்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.’’"},{"id":136,"translation":"இன்னும், அல்லாஹ்விற்கு, - அவன் படைத்த விவசாயத்திலிருந்தும் கால்நடைகளிலிருந்தும் ஒரு பாகத்தை ஆக்கினார்கள். ஆக, தங்கள் கற்பனை எண்ணத்தின்படி, “இது அல்லாஹ்விற்கு என்றும், இன்னும், இது எங்கள் தெய்வங்களுக்கு’’ என்றும் கூறினர். ஆக, எது அவர்களுடைய தெய்வங்களுக்குரியதோ அது அல்லாஹ்வின் (-அல்லாஹ்வுடைய பங்கின்) பக்கம் சேராது. ஆனால், எது அல்லாஹ்விற்குரியதோ அது அவர்களுடைய தெய்வங்களின் (பங்கின்) பக்கம் சேரும்! அவர்கள் (இவ்வாறு) செய்யும் தீர்ப்பு மிகக் கெட்டதாகும்."},{"id":137,"translation":"இவ்வாறே, இணைவைப்பவர்களில் அதிகமானோருக்கு அவர்களை அழிப்பதற்காகவும் அவர்கள் மீது அவர்களுடைய வணக்க வழிபாட்டை குழப்புவதற்காகவும் அவர்களின் குழந்தைகளைக் கொல்வதை அவர்களுடைய ஷைத்தான்கள் அலங்கரித்தன. அல்லாஹ் நாடியிருந்தால் அதை செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) அவர்களை அவர்கள் பொய்யாக புனைந்து பேசுவதுடன் விட்டுவிடுங்கள்."},{"id":138,"translation":"இன்னும், “இவை (சிலைகளுக்காக நேர்ச்சை செய்யப்பட்ட, மனிதர்கள் புசிப்பதற்கு) தடுக்கப்பட்ட கால்நடைகளும் விவசாயமும் ஆகும். நாங்கள் நாடுபவரைத் தவிர (யாரும்) அவற்றைப் புசிக்கமாட்டார்” என்று தங்கள் கற்பனை எண்ணத்தின் படி அவர்கள் கூறினர். இன்னும், பல கால்நடைகள் இருக்கின்றன. அவற்றின் முதுகுகள் தடுக்கப்பட்டன. (-அவற்றின் மீது பயணிப்பதும், சுமையேற்றுவதும் கூடாது.) இன்னும், (பல) கால்நடைகள் இருக்கின்றன. (அவற்றை அறுக்கும்போது) அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டார்கள், (ஆனால், இவ்வாறுதான் அல்லாஹ் கூறினான் என்று) அவன் மீது பொய்யை இட்டுக் கட்டுகிறார்கள். அவர்கள் (அல்லாஹ்வின் மீது) பொய்யை இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததால் அவர்களுக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்."},{"id":139,"translation":"இன்னும், “இந்த கால்நடைகளின் வயிறுகளில் இருப்பது எங்கள் ஆண்களுக்கு மட்டும் உரியது. (அதை அவர்கள் புசிக்கலாம். அது) எங்கள் பெண்களுக்கு தடுக்கப்பட்டது. அது செத்ததாக இருந்தால் அதில் அவர்களும் பங்காளிகள் (-எங்கள் பெண்களும் அதை சாப்பிடலாம்)’’ என்று கூறினர். அவர்களுடைய (இவ்)வர்ணிப்பிற்கு அவன் அவர்களுக்கு(த் தகுந்த) கூலி கொடுப்பான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":140,"translation":"அறிவின்றி (அபத்தமாக) முட்டாள்தனமாக தங்கள் பிள்ளைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ் (அனுமதி) கொடுத்த (நல்ல)வற்றை (தங்கள் மீது) தடுத்தவர்களும் திட்டமாக நஷ்டமடைந்து விட்டனர். (இவ்வாறு) அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுகிறார்கள். (அவர்கள்) திட்டமாக வழிகெட்டு விட்டனர். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை."},{"id":141,"translation":"அவன்தான் கொடிகள் நிறைந்த தோட்டங்கள், கொடிகளற்ற தோட்டங்கள், பேரீச்ச மரங்கள் இன்னும், வித்தியாசமான கனிகளை உடைய விளைச்சலையும், ஆலிவ் பழங்களையும், ஒன்றுக்கொன்று ஒப்பான இன்னும் ஒப்பாகாத மாதுளையையும் உற்பத்தி செய்தான். அவை காய்த்தால் அவற்றின் கனிகளிலிருந்து புசியுங்கள். இன்னும், அவற்றின் அறுவடை நாளில் அவற்றுடைய கடமையை (ஸகாத்தை) கொடுங்கள். இன்னும், விரயம் செய்யாதீர்கள். விரயம் செய்பவர்களை நிச்சயமாக அவன் நேசிக்க மாட்டான்."},{"id":142,"translation":"இன்னும், கால்நடைகளில், சுமக்கத் தகுதியானதையும் சுமக்கத் தகுதியற்றதையும் உற்பத்தி செய்தான். அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய (அனுமதிக்கப்பட்ட)வற்றில் இருந்து புசியுங்கள். இன்னும், ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான்."},{"id":143,"translation":"(நபியே! கால்நடைகளில்) எட்டு ஜோடிகளை (உற்பத்தி செய்தான்). (அவை,) செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரண்டை; இன்னும் வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரண்டை (படைத்தான்). “இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் கல்வியுடன் (கூடிய ஆதாரத்தை) எனக்கு அறிவியுங்கள்” என்று (நபியே) நீர் கூர்வீராக."},{"id":144,"translation":"இன்னும், ஒட்டகையிலும் (ஆண், பெண்) இரண்டை, மாட்டிலும் (ஆண், பெண்) இரண்டை(ப் படைத்தான்). இ(வ்வி)ரு (வகை) ஆண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களையா அல்லது இ(வ்வி)ரு (வகை) பெண்களின் கர்ப்பங்கள் சுமந்தவற்றையா (அல்லாஹ்) தடை செய்தான்? இதை அல்லாஹ் உங்களுக்குக் (கட்டளையிட்டதாகக் கூறுகிறீர்களே, அவ்வாறு அவன்) கட்டளையிட்ட போது நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? (என்று நபியே! கேட்பீராக). ஆக, கல்வி இன்றி மக்களை வழி கெடுப்பதற்காக பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டுபவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி நடத்த மாட்டான்."},{"id":145,"translation":"(நபியே!) கூறுவீராக: “புசிப்பவர் மீது அதைப் புசிக்க தடுக்கப்பட்டதாக எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை, (ஆனால் கால் நடைகளில் தானாக) செத்ததாக; அல்லது, ஓடக்கூடிய இரத்தமாக; அல்லது, பன்றியின் மாமிசமாக; - ஏனெனில், நிச்சயமாக அது அசுத்தமானதாகும். - அல்லது, அல்லாஹ் அல்லாதவருக்காக பாவமான முறையில் (மற்றவர்களின்) பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதாக இருந்தால் தவிர. (இவை அனைத்தும் தடுக்கப்பட்டவையாகும்.) ஆக, யார் பாவத்தை நாடாதவராக, எல்லை மீறாதவராக (இவற்றை உண்ண) நிர்ப்பந்திக்கப்பட்டாரோ (அவர் குற்றவாளியல்ல.) நிச்சயமாக உம் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":146,"translation":"இன்னும், (நபியே!) பிளவுபடாத குளம்புகளை உடைய பிராணிகள் (ஒட்டகம், தீக்கோழி, வாத்து போன்றவை) எல்லாவற்றையும் யூதர்கள் மீது தடை செய்தோம். மாடு இன்னும் ஆட்டிலும் அந்த இரண்டின் கொழுப்புகளை அவர்கள் மீது தடை செய்தோம். அந்த இரண்டின் முதுகுகள் சுமந்துள்ள; அல்லது, சிறு குடல்கள் சுமந்துள்ள; அல்லது எலும்புடன் கலந்துள்ளதைத் தவிர (அந்த கொழுப்புகளை அவர்கள் சாப்பிடலாம்). அ(தன் காரணமாவ)து அவர்களுடைய அழிச்சாட்டியத்தினால் அவர்களுக்கு நாம் (தகுந்த) கூலி கொடுத்தோம். இன்னும், நிச்சயமாக நாம் உண்மையாளர்களே."},{"id":147,"translation":"ஆக, (நபியே!) அவர்கள் உம்மைப் பொய்ப்பித்தால், (அவர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் இறைவன் விசாலமான கருணையுடையவன்; இன்னும், அவனது தண்டனை குற்றவாளிகளான மக்களை விட்டும் திருப்பப்படாது’’"},{"id":148,"translation":"“அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் இணைவைத்திருக்க மாட்டோம்; இன்னும், (அனுமதிக்கப்பட்ட) எதையும் (கூடாது என) நாங்கள் தடை செய்திருக்க மாட்டோம்” என்று இணைவைப்பவர்கள் கூறுகிறார்கள். இவ்வாறே இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் பொய்ப்பித்தார்கள். இறுதியாக, நம் தண்டனையைச் சுவைத்தனர் (-அனுபவித்தனர்). (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: (“நீங்கள் இவ்வாறு செய்வதற்கு) உங்களிடம் (உறுதியான) கல்வி (ஆதாரம்) ஏதும் உண்டா? (அப்படியிருந்தால்) அதை நமக்கு வெளிப்படுத்துங்கள். நீங்கள் வீண் சந்தேகத்தைத் தவிர பின்பற்றுவதில்லை. இன்னும், (பொய்யை) கற்பனை செய்பவர்களாகவே தவிர நீங்கள் இல்லை.’’"},{"id":149,"translation":"(நபியே!) கூறுவீராக: “(மறுக்க முடியாத) முழுமையான ஆதாரம் அல்லாஹ்விற்கே உரியது! ஆக, அவன் (உங்களை கட்டாயப்படுத்தி நேர்வழி நடத்த) நாடியிருந்தால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தியிருப்பான்.’’"},{"id":150,"translation":"(நபியே!) “நிச்சயமாக அல்லாஹ் இதைத் தடை செய்தான் என்று சாட்சி கூறுகின்ற உங்கள் சாட்சிகளை அழைத்து வாருங்கள்’’ என்று கூறுவீராக. ஆக, அவர்கள் (பொய்) சாட்சி கூறினாலும் நீர் அவர்களுடன் சாட்சி கூறாதீர். இன்னும், நம் வசனங்களை பொய்ப்பிப்பவர்களுடைய ஆசைகளையும் இறுதிநாளை நம்பிக்கை கொள்ளாமல், தங்கள் இறைவனுக்கு இணைவைப்பவர்களின் ஆசைகளையும் (நபியே!) நீர் பின்பற்றாதீர்."},{"id":151,"translation":"(நபியே!) கூறுவீராக: “வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது தடை செய்தவற்றை(யும் ஏவியவற்றையும்) நான் (உங்களுக்கு) ஓதுகிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். இன்னும், தாய் தந்தைக்கு உதவி உபகாரம் செய்து அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். இன்னும், வறுமையினால் உங்கள் பிள்ளைகளைக் கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இன்னும், மானக்கேடானவற்றை அவற்றில் வெளிப்படையானது இன்னும் மறைவானதின் பக்கம் நெருங்காதீர்கள். (கொலை செய்யக்கூடாது என்று) அல்லாஹ் தடை செய்த உயிரை நியாயமின்றி (அதற்குரிய உரிமை இன்றி) கொல்லாதீர்கள். இவை, - நீங்கள் சிந்தித்துப் புரிவதற்காக இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசிக்கிறான்."},{"id":152,"translation":"இன்னும், அனாதையின் செல்வ(ம் உங்கள் பராமரிப்பில் இருந்தால் அந்த செல்வ)த்தின் பக்கம் மிக அழகிய வழியில் தவிர நெருங்காதீர்கள். இறுதியாக, அவர் தனது பருவத்தை அடையும்போது (அவருடைய செல்வத்தை அவரிடம் ஒப்படைத்து விடுங்கள்!) இன்னும், அளந்து கொடுப்பதையும் நிறுத்து கொடுப்பதையும் நீதமாக முழுமைப்படுத்தி செய்யுங்கள். ஓர் ஆன்மாவை - அதன் சக்திக்கு உட்பட்டே தவிர - நாம் சிரமப்படுத்துவதில்லை. இன்னும், நீங்கள் (தீர்ப்பு) கூறினால் (அதனால் பாதிக்கப்படுபவர்) உறவினராக இருந்தாலும் நீதமாக (தீர்ப்பு) கூறுங்கள். அல்லாஹ்வின் (பெயர் கூறி நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருடன் செய்யும்) உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். இவை, - நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவே இவற்றின் மூலம் (அல்லாஹ்) உங்களுக்கு உபதேசித்தான்."},{"id":153,"translation":"இன்னும், நிச்சயமாக (இஸ்லாமாகிய) இது என் நேரான பாதை (-மார்க்கம்) ஆகும். ஆக, அதைப் பின்பற்றுங்கள்; இன்னும், (அதைத் தவிர மற்ற) பாதைகளை (-கொள்கைகளைப்) பின்பற்றாதீர்கள். அவை அவனுடைய பாதையிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். இவை, - நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக (அவன்) இவற்றின் மூலம் உங்களுக்கு உபதேசிக்கிறான்."},{"id":154,"translation":"பிறகு, நல்லறம் புரிந்தவர் மீது (அருள்) நிறைவாகுவதற்காகவும் எல்லாவற்றையும் விவரிப்பதற்காகவும் நேர்வழியாக, கருணையாக அமைவதற்காகவும் அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நம்பிக்கை கொள்வதற்காகவும் மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்(து அதன் மூலம் அவருடைய சமுதாய மக்களை உபதேசித்)தோம்."},{"id":155,"translation":"(மனிதர்களே!) இதுவோ பாக்கியமிக்க (அதிமான நன்மைகளை உடைய) வேதமாகும். இதை நாமே இறக்கினோம். ஆகவே, நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக இதைப் பின்பற்றுங்கள். இன்னும் (அல்லாஹ்வை) அஞ்சுங்கள்."},{"id":156,"translation":"(இணைவைப்பவர்களே!) “வேதம் இறக்கப்பட்டதெல்லாம் நமக்கு முன்னர் (சென்ற யூதர்கள், கிறித்தவர்கள் ஆகிய) இரு கூட்டங்கள் மீதுதான். நாங்கள் அவர்க(ள் படித்த வேதங்க)ளின் படிப்பறிவை அறியாதவர்களாகவே நிச்சயமாக இருந்தோம் என்று நீங்கள் கூறாதிருப்பதற்காக (இந்த வேதத்தை உங்களுக்கு இறக்கினோம்)."},{"id":157,"translation":"அல்லது, “நம்மீதும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால் நிச்சயமாக நாம் அவர்களை விட அதிகம் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருப்போம்” என்று நீங்கள் கூறாதிருப்பதற்காகவும் (இந்த வேதத்தை உங்களுக்கு அருளினோம்). ஆக, உங்கள் இறைவனிடமிருந்து, மிகத் தெளிவான சான்றும் நேர்வழியும் கருணையும் உங்களிடம் வந்துவிட்டது. ஆக, அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்து, அவற்றை விட்டு விலகியவனை விட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நம் வசனங்களைவிட்டு (இவ்வாறு) விலகியவர்களுக்கு அவர்கள் (உண்மையைவிட்டு) விலகிக் கொண்டிருந்ததன் காரணமாக கெட்ட தண்டனையை கூலியாகக் கொடுப்போம்."},{"id":158,"translation":"வானவர்கள் அவர்களிடம் (நேரில்) வருவதையோ; அல்லது, உம் இறைவன் வருவதையோ; அல்லது, உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வருவதையோ தவிர அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? உம் இறைவனின் சில அத்தாட்சிகள் வரும் நாளில் அதற்கு முன்னர் நம்பிக்கை கொண்டிருக்காத; அல்லது, தன் நம்பிக்கையில் ஒரு நன்மையையும் செய்திருக்காத ஓர் ஆன்மாவிற்கு அதன் நம்பிக்கை(யும் நன்மையும்) பலனளிக்காது. “(நீங்கள் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிவை) எதிர்பார்க்கிறோம்” என்று (நபியே!) கூறுவீராக."},{"id":159,"translation":"நிச்சயமாக எவர்கள் தங்கள் மார்க்கத்தை (பலவாறாக)ப் பிரித்துக்கொண்டு, (அவர்களும்) பல பிரிவினர்களாக ஆகிவிட்டார்களோ அவர்களுடன் நீர் (எந்த) ஒரு விஷயத்திலும் (கலந்தவராக) இல்லை. (அவர்களது மார்க்கம், அவர்களது வழிபாடு வேறு, உமது மார்க்கம், உமது வழிபாடு வேறு.) அவர்களுடைய காரியமெல்லாம் அல்லாஹ்வின் பக்கம்தான் இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் அவர்களுக்கு அறிவிப்பான்."},{"id":160,"translation":"எவர் ஒரு நன்மையைச் செய்தாரோ அவருக்கு அது போன்ற பத்து நன்மைகள் உண்டு. எவர் ஒரு தீமையைச் செய்தாரோ அது போன்றே (அதன் அளவே) தவிர அவர் கூலி கொடுக்கப்படமாட்டார். இன்னும், (நன்மையைக் குறைத்தோ தீமையைக் கூட்டியோ) அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்."},{"id":161,"translation":"“நிச்சயமாக நான், - என் இறைவன் எனக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டி இருக்கிறான். அது (இவ்வுலக, மறு உலக வாழ்க்கையின் தேவைகளை உள்ளடக்கிய) நிலையான உறுதியான மார்க்கமாகும், இப்ராஹீம் உடைய கொள்கையாகும். (அவர் இஸ்லாமிய மார்க்கத்தில், ஓர் இறையை வணங்குவதில்) மிக உறுதியுடையவர். அவர் இணைவைப்பவர்களில் (ஒரு போதும்) இருக்கவில்லை” என்று (நபியே!) கூறுவீராக."},{"id":162,"translation":"(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் தொழுகையும், என் பலியும் (எனது வணக்க வழிபாடுகளும்), என் வாழ்வும் என் மரணமும் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை.”"},{"id":163,"translation":"“அவனுக்கு இணை அறவே இல்லை; இ(ந்த தூய்மையான ஏகத்துவத்)தையே நான் ஏவப்பட்டுள்ளேன். இன்னும், முஸ்லிம்களில் (-அவனுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களில்) நான் முதலாமவன்.”"},{"id":164,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் அல்லாதவனையா - அவனோ எல்லாவற்றின் இறைவனாக இருக்க - நான் இறைவனாக (எனக்கு)த் தேடுவேன்? (பாவம் செய்கிற) ஒவ்வோர் ஆன்மா(வும்) தனக்கெதிராகவே தவிர (பாவம்) செய்வதில்லை. பாவம் செய்யக்கூடிய ஓர் ஆன்மா மற்றொன்றின் பாவத்தை சுமக்காது. (நீங்கள் இறந்த) பிறகு, உங்கள் இறைவன் பக்கம்தான் உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் கருத்துவேறுபாடு கொண்டிருந்தவற்றில் (உண்மையை) உங்களுக்கு அறிவிப்பான். (சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு செல்லும்போதும் நரகவாசிகள் நரகத்தில் தள்ளப்படும்போதும் உண்மையான வழிபாடு எது பொய்யான வழிபாடு எது என்பதை நீங்கள் அறிவீர்கள்.)"},{"id":165,"translation":"அவன்தான் உங்களை பூமியில் (முன் சென்றவர்களின்) வழிதோன்றல்களாக (பிரதிநிதிகளாக) ஆக்கினான். இன்னும், உங்களுக்கு அவன் கொடுத்தவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக உங்களில் சிலரை சிலருக்கு மேல் பதவிகளில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் தீவிரமானவன். இன்னும், நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."}]},{"id":7,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் மீம் ஸாத்."},{"id":2,"translation":"(நபியே! இது) உம் மீது இறக்கப்பட்ட ஒரு வேதமாகும். ஆக, இதன் மூலம் (நீர் மக்களை) எச்சரிப்பதற்கு உம் இதயத்தில் இதில் நெருக்கடி இருக்க வேண்டாம். இன்னும், (இது) நம்பிக்கை கொண்டவர்களுக்கு ஒரு நல்லுபதேசமாகும்."},{"id":3,"translation":"(உலக மக்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட (இந்த வேதத்)தை பின்பற்றுங்கள். அதைத் தவிர (நீங்களாக ஏற்படுத்திக்கொண்ட, வழிகேட்டின் பக்கமும் சிலைகளை வணங்குவதின் பக்கமும் உங்களை அழைக்கின்ற உங்கள்) பொறுப்பாளர்க(ளின் வழிகாட்டுதல்க)ளை பின்பற்றாதீர்கள். மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுணர்வு (-நல்லுபதேசம்) பெறுகிறீர்கள்."},{"id":4,"translation":"இன்னும், எத்தனையோ நகரங்கள், அவற்றை அழித்தோம். ஆக, அவற்றுக்கு நம் தண்டனை இரவில் அல்லது அவர்கள் பகலில் தூங்கிக் கொண்டிருந்தபோது வந்தது."},{"id":5,"translation":"ஆக, அவர்களுக்கு நம் தண்டனை வந்தபோது அவர்களுடைய கூக்குரல் இருக்கவில்லை, - “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று அவர்கள் கூறியதைத் தவிர."},{"id":6,"translation":"ஆக, எவர்களிடம் (தூதர்கள்) அனுப்பப்பட்டார்களோ அவர்களை நிச்சயம் விசாரிப்போம். இன்னும், (நமது) தூதர்களை நிச்சயம் விசாரிப்போம்."},{"id":7,"translation":"தொடர்ந்து, நிச்சயமாக உறுதியான ஞானத்துடன் அவர்களுக்கு (அவர்கள் செய்ததை) விவரிப்போம். நாம் (அவர்களைவிட்டு எப்போதும்) மறைந்தவர்களாக இருக்கவில்லை."},{"id":8,"translation":"அன்றைய தினம் (செயல்கள்) நிறுக்கப்படுதல் உண்மையே. ஆகவே, எவருடைய (அமல்கள் நிறுக்கப்படும்) நிறுவைகள் கனத்தனவோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்."},{"id":9,"translation":"இன்னும், எவருடைய (நன்மையின்) நிறுவைகள் இலேசானதோ அவர்கள்தான் தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்தவர்கள். காரணம், அவர்கள் நம் வசனங்களுக்கு (கீழ்ப்படியாமல் அவற்றை மறுத்து) அநீதியிழைத்துக் கொண்டிருந்தனர்."},{"id":10,"translation":"திட்டவட்டமாக நாம் உங்களுக்குப் பூமியில் (வசிக்க) இடமளித்தோம். இன்னும், அதில் உங்களுக்கு வாழ்வாதாரங்களை ஏற்படுத்தினோம். (இவ்வாறு இருந்தும்) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்."},{"id":11,"translation":"இன்னும், திட்டவட்டமாக உங்களைப் படைத்தோம். பிறகு, உங்களை வடிவமைத்தோம். பிறகு, “ஆதமுக்கு சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்குக் கூறினோம். ஆக, அவர்கள் சிரம் பணிந்தனர், இப்லீஸைத் தவிர. அவன், சிரம் பணிந்தவர்களில் ஆகவில்லை."},{"id":12,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நான் உனக்குக் கட்டளையிட்டபோது, நீ சிரம் பணியாதிருக்க உன்னைத் (தூண்டி, சிரம்பணிவதிலிருந்து உன்னைத்) தடுத்தது எது?” (இப்லீஸ்) கூறினான்: “நான் அவரைவிட மேலானவன். நீ என்னை நெருப்பால் படைத்தாய். அவரை களிமண்ணால் படைத்தாய்.”"},{"id":13,"translation":"(அல்லாஹ்) கூறினான்: ஆக, “இதிலிருந்து நீ இறங்கிவிடு! இதில் நீ பெருமை கொள்வதற்கு உனக்கு அனுமதியில்லை. ஆக, நீ வெளியேறிவிடு. நிச்சயமாக நீ இழிவானவர்களில் உள்ளவன்.”"},{"id":14,"translation":"(அதற்கு இப்லீஸ்) கூறினான்: “(இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசமளி.”"},{"id":15,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருக்கிறாய்.”"},{"id":16,"translation":"(இப்லீஸ்) கூறினான்: “ஆக, நீ என்னை வழிகெடுத்ததின் காரணமாக அவர்களுக்காக உன் நேரான பாதையில் நிச்சயம் உட்காருவேன்.”"},{"id":17,"translation":"“பிறகு, அவர்களுக்கு முன் புறத்திலிருந்தும், அவர்களுக்கு பின் புறத்திலிருந்தும் அவர்களின் வலது புறத்திலிருந்தும், அவர்களின் இடது புறத்திலிருந்தும் நிச்சயம் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானவர்களை (உனக்கு) நன்றி செலுத்துபவர்களாக நீ காணமாட்டாய்.”"},{"id":18,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நீ இகழப்பட்டவனாக, (கருணையிலிருந்து) விரட்டப்பட்டவனாக இதிலிருந்து வெளியேறு. அவர்களில் உன்னைப் பின்பற்றியவர் (மற்றும் நீ), உங்கள் அனைவராலும் நரகத்தை நிச்சயம் நிரப்புவேன்.”"},{"id":19,"translation":"இன்னும், “ஆதமே! நீரும் உம் மனைவியும் சொர்க்கத்தில் வசித்திருங்கள். நீங்கள் இருவரும் நாடிய இடத்தில் புசியுங்கள். இந்த மரத்தை நெருங்காதீர்கள். அப்படி நெருங்கினால் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்கள்.”"},{"id":20,"translation":"ஆக, அவர்கள் இருவருக்கும் மறைக்கப்பட்டிருந்த அவர்கள் இருவரின் வெட்கத்தலங்களை அவர்கள் இருவருக்கும் வெளிப்படுத்தி காட்டுவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் (மனதில்) ஊசலாட்டத்தை உண்டாக்கினான். “நீங்கள் இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் அல்லது (சொர்க்கத்தில்) நிரந்தரமாக இருப்பவர்களில் ஆகிவிடுவீர்கள் என்பதற்காகவே தவிர இம்மரத்தை விட்டு உங்களிருவரின் இறைவன் உங்களிருவரையும் தடுக்கவில்லை” என்று கூறினான்."},{"id":21,"translation":"இன்னும், “நிச்சயமாக நான் உங்களுக்கு நன்மை நாடுவோரில் உள்ளவன்தான்” என்று அவ்விருவரிடமும் சத்தியமிட்டான்."},{"id":22,"translation":"ஆக, அவர்கள் இருவரையும் ஏமாற்றி தரம் தாழ்த்தினான் (ஷைத்தான்). ஆக, (அந்த) இருவரும் (அம்)மரத்தைச் சுவைத்தபோது, அவர்கள் இருவரின் வெட்கத்தலங்கள் அவர்கள் இருவருக்கும் தெரிந்தன. சொர்க்கத்தின் இலைகளினால் தம் இருவர் மீதும் மூடிக்கொள்ள அவர்கள் இருவரும் முயன்றனர். அவர்கள் இருவரின் இறைவன், “அம்மரத்தை விட்டு நான் உங்கள் இருவரையும் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்கள் இருவருக்கும் வெளிப்படையான எதிரி என்று நான் உங்கள் இருவருக்கும் கூறவில்லையா?” என்று (கூறி) அவர்கள் இருவரையும் அழைத்தான்."},{"id":23,"translation":"(அதற்கு) அவர்கள் இருவரும், “எங்கள் இறைவா! எங்கள் ஆன்மாக்களுக்கு நாங்கள் தீங்கிழைத்தோம். நீ எங்களை மன்னிக்கவில்லையெனில்; நீ எங்களுக்கு கருணை புரியவில்லையெனில் நிச்சயமாக நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்” என்று கூறினர்."},{"id":24,"translation":"அல்லாஹ் கூறினான்: “இறங்கிவிடுங்கள். உங்களில் சிலர் சிலருக்கு எதிரி. உங்களுக்கு பூமியில் தங்குமிடமும், ஒரு காலம் வரை சுகமும் உண்டு.”"},{"id":25,"translation":"அல்லாஹ் கூறினான்: “அதில்தான் (நீங்கள்) வாழ்வீர்கள்; இன்னும், அதில்தான் இறப்பீர்கள்; இன்னும், அதிலிருந்தே எழுப்பப்படுவீர்கள்.”"},{"id":26,"translation":"ஆதமின் சந்ததிகளே! உங்கள் வெட்கத்தலங்களை மறைக்கின்ற ஆடைகளையும் (உங்களை அழகுபடுத்தக் கூடிய) அலங்காரத்தையும் திட்டமாக நாம் உங்களுக்கு படைத்தோம். இறை அச்சத்தின் ஆடை, அதுதான் மிகச் சிறந்தது. இவை, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக (இவற்றை நாம் அவர்களுக்கு விவரிக்கிறோம்)!"},{"id":27,"translation":"ஆதமின் சந்ததிகளே! ஷைத்தான் உங்கள் தாய் தந்தையை, அவ்விருவருடைய வெட்கத்தலங்களை அவ்விருவருக்கும் காண்பிப்பதற்காக அவன் அவ்விருவரை விட்டு அவ்விருவரின் ஆடையை கழட்டியவனாக சொர்க்கத்திலிருந்து வெளியேற்றி (ஏமாற்றி)யது போன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்ய அழகிய வார்த்தைகள் கூறி) உங்களை ஏமாற்றி விடவேண்டாம். நிச்சயமாக அவனும் அவனுடைய இனத்தாரும் நீங்கள் அவர்களைப் பார்க்காதவாறு உங்களைப் பார்க்கிறார்கள். நிச்சயமாக நாம், நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு ஷைத்தான்களை நண்பர்களாக ஆக்கினோம்."},{"id":28,"translation":"இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால், “எங்கள் மூதாதைகளை இதில்தான் (நாங்கள்) கண்டோம். இதை அல்லாஹ்வும் எங்களுக்கு ஏவினான்” என்று கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடானதை ஏவ மாட்டான். அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாதவற்றை கூறுகிறீர்களா?”"},{"id":29,"translation":"(நபியே!) கூறுவீராக: “என் இறைவன் நீதத்தை ஏவினான். இன்னும், எல்லா மஸ்ஜிதிலும் (தொழுகையில் அல்லாஹ்வை நோக்கி) உங்கள் முகங்களை நிறுத்துங்கள். இன்னும், வழிபடுவதை அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனை அழையுங்கள். அவன் உங்களை ஆரம்பமாக படைத்தது போன்று (அவனிடமே) நீங்கள் திரும்புவீர்கள்.”"},{"id":30,"translation":"(உங்களில்) ஒரு பிரிவை அவன் நேர்வழி நடத்தினான். (வேறு) ஒரு பிரிவு, அதன் மீது வழிகேடு உறுதியாகிவிட்டது. (ஏனெனில்,) நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையன்றி ஷைத்தான்களையே (தங்கள்) தோழர்களாக (பாதுகாவலர்களாக, உதவியாளர்களாக) எடுத்துக் கொண்டனர். இன்னும், “நிச்சயமாக அவர்கள் நேர்வழி பெற்றவர்கள்” என எண்ணுகிறார்கள்."},{"id":31,"translation":"ஆதமின் சந்ததிகளே! மஸ்ஜிதுகளுக்கு செல்லும்போது உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள் (- முழுமையான, சுத்தமான ஆடைகளை அணிந்து தொழுகைக்கு செல்லுங்கள்)! இன்னும், (அனுமதிக்கப்பட்டதை மட்டும்) புசியுங்கள்; பருகுங்கள். ஆனால், விரயம் செய்யாதீர்கள் (அனுமதிக்கப்பட்டதை உண்பதிலும் எல்லை மீறாதீர்கள்)! (ஏனென்றால்,) விரயம் செய்பவர்களை நிச்சயம் அவன் நேசிக்க மாட்டான்."},{"id":32,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்திய அலங்காரத்தையும், உணவில் நல்லவற்றையும் யார் தடைசெய்தார்?” “அது இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு (ஆகுமானது) ஆகும். மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டும் அது) பிரத்தியேகமாக இருக்கும்” என்று கூறுவீராக. புரிகின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு விவரிக்கிறோம்."},{"id":33,"translation":"(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன் தடை செய்ததெல்லாம் வெளிப்படையான, மறைவான எல்லா மானக்கேடான காரியங்களையும், பாவத்தையும், நியாயமின்றி (மக்களை) கொடுமைப்படுத்துவதையும், (அல்லாஹ்) எதற்கு ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்விற்கு நீங்கள் இணையாக்குவதையும் மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்) கூறுவதையும்தான் (அல்லாஹ் தடைசெய்தான்).”"},{"id":34,"translation":"இன்னும், எல்லா இனத்தவருக்கும் (அவர்கள் வாழ்வதற்கும், அழிவதற்கும்) ஒரு தவணையுண்டு. அவர்களது (முடிவுக்குரிய) தவணை வந்தால் ஒரு வினாடி பிந்த மாட்டார்கள்; இன்னும், (ஒரு வினாடி) முந்த மாட்டார்கள்."},{"id":35,"translation":"ஆதமின் சந்ததிகளே! (என்) தூதர்கள் உங்களில் இருந்தே நிச்சயமாக உங்களிடம் என் வசனங்களை உங்களுக்கு விவரித்தவர்களாக வந்தால், (அவர்களுக்கு கீழ்ப்படியுங்கள், இன்னும் அவர்கள் கொண்டு வந்ததை பின்பற்றுங்கள்!) எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ, இன்னும், (தங்களை) சீர்திருத்தினார்களோ அவர்கள் மீது பயமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்."},{"id":36,"translation":"இன்னும், எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ, அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவர். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":37,"translation":"ஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட; அல்லது, அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனை விட மிகப்பெரிய அநியாயக்காரன் யார்? விதியில் (எழுதப்பட்ட தண்டனையில்) இவர்களுடைய பாகம் இவர்களை வந்தடையும். இறுதியாக, இவர்களை உயிர் வாங்குபவர்களாக நம் (வானவத்) தூதர்கள் இவர்களிடம் வந்தால், “அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்தித்துக் கொண்டிருந்தீர்களோ அவர்கள் எங்கே?” என்று கூறுவார்கள். “அவர்கள் எங்களை விட்டு மறைந்துவிட்டனர்” என்று (அந்த இணைவைப்பாளர்கள் பதில்) கூறுவார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் நிராகரிப்பவர்களாக(வே) இருந்தனர் என்று அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சியளிப்பார்கள்."},{"id":38,"translation":"“ஜின்களிலும், மனிதர்களிலும் உங்களுக்கு முன்னர் சென்றுவிட்ட (பாவிகளான) கூட்டங்களில் (இணைந்து நீங்களும்) நரகத்தில் நுழையுங்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான். ஒரு கூட்டம் (நரகத்தில்) நுழையும்போதெல்லாம் அது, தன் சக கூட்டத்தை சபிக்கும். இறுதியாக, அதில் அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவர்களில் பின் வந்த கூட்டம் தங்கள் முன்சென்ற கூட்டத்தை சுட்டிக் காண்பித்து, “எங்கள் இறைவா! இவர்கள்தான் எங்களை வழி கெடுத்தனர். எனவே, அவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு தண்டனையைக் கொடு!” என்று கூறும். “(உங்களில்) எல்லோருக்குமே இருமடங்கு (தண்டனை) உண்டு. எனினும், (மற்றவர்களுடைய தண்டனையின் வலியை) நீங்கள் அறியமாட்டீர்கள்” என்று (அல்லாஹ்) கூறுவான்."},{"id":39,"translation":"இன்னும், அவர்களில் முன்சென்ற கூட்டம் அவர்களில் பின்வந்த கூட்டத்திற்கு கூறும்: “(நாங்கள் நம்பிக்கை கொள்ளாதது போன்றே நீங்களும் நம்பிக்கை கொள்ளவில்லை. எங்களைப் பற்றிய செய்திகள் உங்களுக்கு சொல்லப்பட்டும் நீங்கள் படிப்பினை பெறவில்லை.) ஆகவே, “எங்களை விட உங்களுக்கு ஒரு மேன்மையும் இல்லை.” (அப்போது, அல்லாஹ் - அவர்கள் எல்லோரையும் நோக்கி - கூறுவான்:) ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்ததன் காரணமாக (எனது) தண்டனையைச் சுவையுங்கள்.”"},{"id":40,"translation":"நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தார்களோ; இன்னும், அவற்றை விட்டு பெருமையடித்து புறக்கணித்தார்களோ அவர்களுக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்படாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இன்னும், குற்றவாளிகளுக்கு இவ்வாறே நாம் கூலிகொடுப்போம்."},{"id":41,"translation":"நரகத்தில் அவர்களுக்கு (கீழே நெருப்பினால் ஆன) விரிப்பும், அவர்களுக்கு மேலே (நெருப்பினால் ஆன) போர்வைகளும் உண்டு. இன்னும், அநியாயக்காரர்களுக்கு இவ்வாறே நாம் கூலிகொடுப்போம்."},{"id":42,"translation":"ஓர் ஆன்மாவை அதன் சக்திக்குத் தக்கவாறே தவிர (அதன் மீது சட்டங்களை சுமத்தி) சிரமப்படுத்த மாட்டோம். எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ அவர்கள்தான் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":43,"translation":"இன்னும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நீக்கி விடுவோம். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும். “இவற்றை அடைய எங்களுக்கு நேர்வழிகாட்டிய அல்லாஹ்வுக்கே புகழ் (அனைத்தும்) உரியது. இன்னும், அல்லாஹ் எங்களை நேர்வழி நடத்தி இருக்கவில்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். எங்கள் இறைவனின் தூதர்கள் திட்டவட்டமாக உண்மையை கொண்டுவந்தார்கள்” என்று (அவர்கள்) கூறுவார்கள். இன்னும், “நீங்கள் செய்து கொண்டிருந்த அமல்களுக்கு பகரமாக நீங்கள் வாரிசுகளாக ஆக்கப்பட்ட சொர்க்கம் இதுதான்” என்று (நற்செய்தி கூறப்பட்டு அவர்கள்) அழைக்கப்படுவார்கள்."},{"id":44,"translation":"“எங்கள் இறைவன் எங்களுக்கு வாக்களித்ததை நாங்கள் உண்மையாக பெற்றுக் கொண்டோம். ஆக, உங்கள் இறைவன் உங்களுக்கு வாக்களித்ததை உண்மையாக நீங்கள் பெற்றீர்களா?” என்று (கூறி) சொர்க்கவாசிகள் நரகவாசிகளை அழைப்பார்கள். (அதற்கு நரகவாசிகள்) “ஆம்!” என்று கூறுவார்கள். ஆகவே, அவர்களுக்கு மத்தியில் ஓர் அறிவிப்பாளர், “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது நிலவட்டும்” என அறிவிப்பார்!"},{"id":45,"translation":"(அந்த அநியாயக்காரர்கள்) அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பார்கள். இன்னும் அதில் கோணலைத் தேடுவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்."},{"id":46,"translation":"இன்னும், அவ்விருவருக்குமிடையில் ஒரு மதில் இருக்கும். இன்னும், (சொர்க்கத்தின் உயரமான சுவர்களாகிய) சிகரங்கள் மீது (சில) மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் (சொர்க்க, நரகத்தில் உள்ள) ஒவ்வொருவரையும் அவர்களின் முக அடையாளத்தை வைத்து அறிவார்கள். இவர்கள், சொர்க்கவாசிகளை நோக்கி “உங்கள் மீது ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று (கூறி) அழைப்பார்கள். (சிகரத்தில் இருக்கும்) அவர்கள் (இதுவரை) அ(ந்த சொர்க்கத்)தில் நுழையவில்லை. அவர்களோ (அதில் நுழைய) ஆசைப்படுவார்கள்."},{"id":47,"translation":"இன்னும், அவர்களின் பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், “எங்கள் இறைவா! அநியாயக்கார மக்களுடன் எங்களை ஆக்கிவிடாதே!” என்று கூறுவார்கள்."},{"id":48,"translation":"இன்னும், சிகரவாசிகள் சில மனிதர்களை அழைப்பார்கள். (சிகரவாசிகள்) அவர்களை அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறிவார்கள். “உங்கள் சேமிப்பு(களும் உங்கள் கூட்டங்களு)ம், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததும் உங்களுக்குப் பலனளிக்கவில்லை!” என்று கூறுவார்கள்."},{"id":49,"translation":"(சிகரவாசிகளை சுட்டிக் காண்பித்து) “அவர்களை அல்லாஹ் (தன்) கருணையினால் அரவணைக்க மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்தது இவர்கள்தானா?” (என்று பெருமையடித்து மறுத்தவர்களிடம் அல்லாஹ் கேட்பான். பிறகு,) “நீங்கள் சொர்க்கத்தில் நுழையுங்கள். உங்கள் மீது பயமில்லை. நீங்கள் துக்கப்பட மாட்டீர்கள்” (என்று சிகரவாசிகளுக்கு அல்லாஹ் கூறுவான்.)"},{"id":50,"translation":"இன்னும், “(நீங்கள் குடிக்கின்ற) நீரிலிருந்து (கொஞ்சம்) எங்கள் மீது ஊற்றுங்கள்; அல்லது, அல்லாஹ் உங்களுக்கு உணவளித்தவற்றிலிருந்து (கொஞ்சம் உணவளியுங்கள்).” என்று (கூறி) நரகவாசிகள் சொர்க்கவாசிகளை அழைப்பார்கள். “நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்கள் மீது அவ்விரண்டையும் தடைசெய்தான்” என்று (சொர்க்கவாசிகள்) கூறுவார்கள்."},{"id":51,"translation":"(நிராகரித்த) அவர்கள் தங்கள் மார்க்கத்தை கேளிக்கையாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். இன்னும், அவர்களை உலக வாழ்க்கை மயக்கியது. அவர்களுடைய இந்நாளின் சந்திப்பை அவர்கள் மறந்து, நம் வசனங்களை மறுத்துக் கொண்டிருந்த காரணத்தால் இன்று அவர்களை (நாமும்) மறந்துவிடுவோம். (-அவர்களின் அழைப்பை ஏற்காமல் நரகத்தில் அவர்களை அப்படியே விட்டுவிடுவோம்)"},{"id":52,"translation":"இன்னும், நாம் அவர்களிடம் திட்டவட்டமாக ஒரு வேதத்தைக் கொண்டுவந்தோம். நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நேர்வழியாகவும் கருணையாகவும் இருப்பதற்காக (அதிலுள்ள உண்மையை நாம்) அறிந்து அதை விவரித்(து கொடுத்)தோம்."},{"id":53,"translation":"(மக்காவாசிகள்) அதன் முடிவைத் தவிர (வேறு எதையாவது) எதிர்பார்க்கின்றனரா? அதன் முடிவு நாள் வரும் போது முன்னர் அதை மறந்(திருந்)தவர்கள், “எங்கள் இறைவனின் தூதர்கள் உண்மையைக் கொண்டு வந்தார்கள். ஆக, சிபாரிசு செய்பவர்களில் எவரும் எங்களுக்கு உண்டா? அவர்கள் எங்களுக்கு சிபாரிசு செய்வார்களே! அல்லது, நாங்கள் (உலகத்திற்கு) திருப்பி அனுப்பப்பட்டால் (முன்னர்) நாங்கள் செய்து கொண்டிருந்த (கெட்ட)வை அல்லாத (நல்ல காரியத்)தை செய்வோமே!” என்று கூறுவார்கள். (அவர்கள்) தங்களுக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனர். இன்னும், (இவைதான் எங்கள் கடவுள்கள் என்று) அவர்கள் புனைந்து கொண்டிருந்த (சிலைகள்; இன்னும், அவை போன்ற)வை எல்லாம் அவர்களை விட்டு (அந்நாளில்) மறைந்துவிடும்."},{"id":54,"translation":"நிச்சயமாக உங்கள் (காரியங்கள் அனைத்தையும் சீர்ப்படுத்துபவனும், உங்களை நிர்வகிப்பவனுமாகிய உங்கள்) இறைவன் அல்லாஹ்தான் (-எல்லாப் படைப்புகளும் உண்மையில் வணங்குவதற்கு தகுதியானவன்.) அவன்தான் வானங்களையும், பூமியையும், சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் (இவை எல்லாம் அவனுக்கு) பணிந்தவையாக இருக்கும் நிலையில் தனது கட்டளையினால் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். அவனே இரவால் பகலை மூடுகிறான். அது தீவிரமாக அதைத் தேடுகிறது (-பின் தொடர்கிறது). அறிந்து கொள்ளுங்கள் “படைத்தல் இன்னும் (-படைப்புகள் அனைத்தின் மீது) அதிகாரம் செலுத்துதல்” அவனுக்கே உரியன. அகிலங்களின் இறைவனான அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்."},{"id":55,"translation":"தாழ்மையாகவும் மறைவாகவும் உங்கள் இறைவனை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அவன் எல்லை மீறுபவர்களை நேசிக்க மாட்டான்."},{"id":56,"translation":"இன்னும், பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம் ஏற்பட்)ட பின்னர் கலகம் (-குழப்பம், விஷமம்) செய்யாதீர்கள். இன்னும், பயத்துடனும், ஆசையுடனும் அவனை அழைத்து பிரார்த்தனை செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் கருணை நல்லறம் புரிவோருக்கு மிக சமீபமானதாகும்."},{"id":57,"translation":"அவன்தான் தனது (மழை எனும்) கருணைக்கு முன்னர் நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்புகிறான். இறுதியாக, அது கனமான கார்மேகத்தைச் சுமந்தால், (வறண்டு) இறந்(து கிடந்)த பூமியின் பக்கம் அதை நாம் ஓட்டிவருகிறோம். இன்னும் அதிலிருந்து மழையை இறக்குகிறோம். ஆக, அதன் மூலம் எல்லா கனிகளிலிருந்தும் (குறிப்பிட்ட அளவை உங்களுக்காக) வெளியாக்குகிறோம். இவ்வாறே, மரணித்தவர்களையும் (உயிர் கொடுத்து பூமியிலிருந்து) வெளியாக்குவோம். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக (உங்களுக்கு இவற்றை விவரிக்கிறோம்)!"},{"id":58,"translation":"நல்ல பூமி, - அதனுடைய தாவரம் அதன் இறைவனின் அனுமதியினால் (அதிகமாக) உற்பத்தியாகிறது. இன்னும் எது கெட்டுவிட்ட (பூமியாக உள்ள)தோ (அதிலிருந்து) வெகு சொற்பமாகவே தவிர (தாவரங்கள்) உற்பத்தியாகாது. நன்றி செலுத்துகிற மக்களுக்கு இவ்வாறு வசனங்களை நாம் விவரிக்கிறோம்."},{"id":59,"translation":"திட்டவட்டமாக நூஹை அவருடைய சமுதாயத்திற்கு (தூதராக) அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் மீது மகத்தான நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”"},{"id":60,"translation":"அவருடைய சமுதாயத்திலிருந்து முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “(நூஹே!) உம்மை தெளிவான வழிகேட்டில் நிச்சயமாக நாம் காண்கிறோம்.”"},{"id":61,"translation":"(நூஹ்) கூறினார்: “என் சமுதாயமே! என்னிடம் எவ்வித வழிகேடு(ம் தவறும்) இல்லை; எனினும் நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர் ஆவேன்.”"},{"id":62,"translation":"“என் இறைவனின் தூது செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். இன்னும், உங்களுக்கு (நன்மையை நாடி) உபதேசிக்கிறேன். இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் (வஹ்யின் மூலம்) அறிகிறேன்.”"},{"id":63,"translation":"“உங்களிலுள்ள ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து - அவர் உங்களை எச்சரிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும்; இன்னும், நீங்கள் (அல்லாஹ்வினால்) கருணை காட்டப்படுவதற்காகவும் - உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா?”"},{"id":64,"translation":"ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும், அவருடன் கப்பலில் இருந்தோரையும் பாதுகாத்தோம். இன்னும், நம் வசனங்களை பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். நிச்சயமாக அவர்கள் குருடர்களான மக்களாக இருந்தனர்."},{"id":65,"translation":"இன்னும், ‘ஆது’ (சமுதாய மக்களு)க்கு அவர்களுடைய சகோதரர் ஹூதை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. ஆகவே நீங்கள் (அவனை) அஞ்ச வேண்டாமா?”"},{"id":66,"translation":"அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாம் உம்மை மடமையில் காண்கிறோம். இன்னும், நிச்சயமாக நாம் உம்மை பொய்யர்களில் (ஒருவராக) எண்ணுகிறோம்.”"},{"id":67,"translation":"(ஹூது) கூறினார்: “என் சமுதாயமே! மடமை என்னிடம் இல்லை. எனினும், நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) ஒரு தூதர் ஆவேன்.”"},{"id":68,"translation":"“என் இறைவனின் தூது செய்திகளை உங்களுக்கு எடுத்துரைக்கிறேன். நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்பவன், நம்பிக்கைக்குரியவன் ஆவேன்.”"},{"id":69,"translation":"“உங்களை எச்சரிப்பதற்காக உங்களில் ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசம் வந்ததைப் பற்றி நீங்கள் வியப்படைகிறீர்களா? நூஹுடைய சமுதாயத்திற்கு பின்னர் அவன் உங்களை (இந்த பூமியின்) பிரதிநிதிகளாக்கி வைத்து, படைப்பில் உங்களுக்கு விரிவை (ஆற்றலை, வசதியை) அதிகப்படுத்திய சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்!”"},{"id":70,"translation":"(அதற்கு) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் ஒருவனை மட்டும் நாங்கள் வணங்குவதற்காகவும் எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை நாங்கள் விட்டுவிடுவதற்காகவும் நீர் எங்களிடம் வந்தீரா? ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் நீர் எங்களை எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக.”"},{"id":71,"translation":"(ஹூது) கூறினார்: “உங்கள் இறைவனிடமிருந்து தண்டனையும் கோபமும் உங்கள் மீது நிகழ்ந்து விட்டது. நீங்களும் உங்கள் மூதாதைகளும் வைத்த (சிலைகளின்) பெயர்களில் என்னுடன் தர்க்கிக்கிறீர்களா? அதற்கு ஓர் ஆதாரத்தையும் அல்லாஹ் இறக்கவில்லை(யே)! ஆகவே, எதிர்பாருங்கள்; நிச்சயமாக, நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”"},{"id":72,"translation":"ஆக, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் நமது கருணையினால் பாதுகாத்தோம். நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களின் வேரை அறுத்தோம் (அடியோடு அவர்களை அழித்தோம்). அவர்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை."},{"id":73,"translation":"இன்னும் ‘ஸமூது’ (சமுதாயத்தினரு)க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஸாலிஹ்’ ஐ (நபியாக அனுப்பி வைத்தோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடம் இருந்து ஓர் அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்துவிட்டது. இது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக (வந்த) அல்லாஹ்வுடைய ஒட்டகமாகும். ஆகவே, அதை (தொந்தரவு செய்யாமல்) விட்டுவிடுங்கள், அல்லாஹ்வுடைய பூமியில் அது (சுற்றித்திரிந்து) மேயும். அதற்கு அறவே தீங்கு செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் தண்டனை உங்களை வந்தடையும்.”"},{"id":74,"translation":"“இன்னும், ‘ஆது’ க்குப் பின்னர் உங்களை பிரதிநிதிகளாக்கி, பூமியில் உங்களை தங்க வைத்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் அதன் சமவெளிகளில் மாளிகைகளை ஏற்படுத்திக் கொள்கிறீர்கள், மலைகளில் வீடுகளை குடைந்து கொள்கிறீர்கள். ஆகவே, அல்லாஹ்வின் அருட்கொடைகளை நினைவு கூருங்கள்; இன்னும், விஷமிகளாக (மக்களுக்கு கெடுதி செய்பவர்களாக) பூமியில் அளவு கடந்து விஷமம் செய்யாதீர்கள்.”"},{"id":75,"translation":"அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்த முக்கிய பிரமுகர்கள், அவர்களில் பலவீனர்களாக கருதப்பட்ட நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட (தூது)வர் என்று நீங்கள் அறிவீர்களா?” (நம்பிக்கை கொண்டவர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவர் அனுப்பப்பட்டதைக் கொண்டு நம்பிக்கை கொண்டவர்கள் ஆவோம்.”"},{"id":76,"translation":"பெருமையடித்தவர்கள் கூறினார்கள்: “நீங்கள் நம்பிக்கை கொண்டதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்.”"},{"id":77,"translation":"ஆக, (அந்தப்) பெண் ஒட்டகத்தை அறுத்தனர். இன்னும், தங்கள் இறைவனின் கட்டளையை மீறினர். இன்னும், “ஸாலிஹே! நீர் (இறைவனுடைய) தூதர்களில் (ஒருவராக) இருந்தால் நீர் எங்களை அச்சுறுத்துவதை எங்களிடம் கொண்டு வருவீராக!” என்று கூறினர்."},{"id":78,"translation":"ஆகவே பயங்கர சப்தம் அவர்களைப் பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்."},{"id":79,"translation":"பிறகு, (ஸாலிஹ் நபி) அவர்களை விட்டு திரும்பினார். இன்னும், கூறினார்: “என் சமுதாயமே! நான் உங்களுக்கு என் இறைவனின் தூதை திட்டவட்டமாக எடுத்துரைத்தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். எனினும் உபதேசிப்பவர்களை நீங்கள் விரும்புவதில்லை.”"},{"id":80,"translation":"இன்னும், ‘லூத்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் தம் சமுதாயத்தை நோக்கி, “மானக்கேடானதை செய்கிறீர்களா? உலகத்தாரில் ஒருவருமே இதில் உங்களை முந்தவில்லை. (உலகில் எவரும் இதற்கு முன் செய்யாத மானக்கேடான செயலை செய்கிறீர்களா?)” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக."},{"id":81,"translation":"“நிச்சயமாக நீங்கள் பெண்கள் அன்றி ஆண்களிடம் காமத்தை நிறைவேற்ற வருகிறீர்கள். மாறாக, நீங்கள் (பாவத்தில்) எல்லை மீறிய மக்கள்” என்று கூறினார்."},{"id":82,"translation":"“இவர்களை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள்” என்று அவர்கள் கூறியது தவிர அவருடைய சமுதாயத்தினரின் பதில் இருக்கவில்லை. நிச்சயமாக இவர்கள் சுத்தமான மனிதர்கள் (என்று கேலியாக கூறினார்கள்)."},{"id":83,"translation":"ஆக, அவரையும் அவருடைய மனைவியைத் தவிர அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். அவள் (தண்டனையில்) தங்கியவர்களில் ஆகிவிட்டாள்."},{"id":84,"translation":"இன்னும், அவர்கள் மீது (கல்) மழையை பொழியச் செய்தோம். ஆகவே, குற்றவாளிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) கவனிப்பீராக."},{"id":85,"translation":"‘மத்யன்’க்கு அவர்களுடைய சகோதரர் ‘ஷுஐப்’ஐ (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவன் அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக வந்து விட்டது. ஆகவே, அளவையையும் நிறுவையையும் முழுமையாக்குங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறை(த்து கொடு)க்காதீர்கள். இன்னும், பூமியில் அது சீர்திருத்தப்பட்(டு அதில் சமாதானம் ஏற்பட்)ட பின்னர் கலகம் (குழப்பம், சீர்கேடு) செய்யாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தால் (நான் கூறும் உபதேசங்களாகிய) இவை உங்களுக்கு சிறந்ததாகும்.”"},{"id":86,"translation":"“இன்னும், நீங்கள் எல்லாப் பாதையிலும் (மக்களை) அச்சுறுத்தியவர்களாகவும்; அல்லாஹ்வின் பாதையை விட்டு அவனை நம்பிக்கை கொண்டவரை தடுப்பவர்களாகவும்; இன்னும், அதில் கோணலைத் தேடியவர்களாகவும் அமராதீர்கள். இன்னும், நீங்கள் குறைவாக இருந்தபோது அவன் உங்க(ள் எண்ணிக்கைக)ளை அதிகமாக்கிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், கலகம் செய்பவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று கவனியுங்கள்!”"},{"id":87,"translation":"“உங்களில் ஒரு பிரிவினர் நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, (வேறு) ஒரு பிரிவினர் (அதை) நம்பிக்கை கொள்ளாதவர்களாக இருந்தால், - நமக்கு மத்தியில் அல்லாஹ் தீர்ப்பளிக்கின்ற வரை பொறுமையாக இருங்கள். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்.”"},{"id":88,"translation":"அவருடைய சமுதாயத்தில் பெருமையடித்(து நம்பிக்கையை புறக்கணித்)த முக்கிய பிரமுகர்கள், “ஷுஐபே! உம்மையும் உம்முடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நிச்சயம் எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுவோம். அல்லது, நீங்கள் (அனைவரும்) எங்கள் கொள்கைக்கு நிச்சயம் திரும்பிவிட வேண்டும்” என்று கூறினார்கள். “நாங்கள் (அந்த கொள்கையை தவறு என்று தெரிந்து அதை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?” என்று (ஷுஐபு) கூறினார்."},{"id":89,"translation":"“உங்கள் கொள்கைக்கு நாங்கள் திரும்பினால் - அல்லாஹ் எங்களை அதிலிருந்து பாதுகாத்த பின்னர் - நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டி(யவர்களாகி) விடுவோம். இன்னும், எங்கள் இறைவனாகிய அல்லாஹ் நாடியே தவிர நாங்கள் அதில் திரும்புவது எங்களால் முடியாது. எங்கள் இறைவன் ஞானத்தால் எல்லாவற்றையும் விட விசாலமானவன். அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) இருந்தோம். எங்கள் இறைவா! எங்களுக்கிடையிலும் எங்கள் சமுதாயத்திற்கிடையிலும் நியாயமாக தீர்ப்பளி! நீ தீர்ப்பளிப்பவர்களில் மிகச் சிறந்தவன்.”"},{"id":90,"translation":"அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த முக்கிய பிரமுகர்கள் (நம்பிக்கையாளர்களை நோக்கி) “நீங்கள் ஷுஐபைப் பின்பற்றினால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்” என்று கூறினார்கள்."},{"id":91,"translation":"ஆக, அவர்களை (கடும்) நிலநடுக்கம் பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் பூமியில் இறந்தவர்களாக காலையை அடைந்தனர்."},{"id":92,"translation":"ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் (அழிந்துபோய்) அதில் வசிக்காதவர்கள்போல் ஆகி விட்டனர். ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் அவர்கள்தான் நஷ்டவாளிகளாக ஆகிவிட்டார்கள்."},{"id":93,"translation":"ஆக, (ஷுஐப்) அவர்களை விட்டு விலகினார். இன்னும் கூறினார்: “என் சமுதாயமே! என் இறைவனின் தூது செய்திகளை திட்டவட்டமாக உங்களுக்கு எடுத்துரைத்தேன். இன்னும், உங்களுக்கு உபதேசித்தேன். ஆகவே நிராகரிப்பாளர்களான சமுதாயத்தின் மீது எவ்வாறு நான் துக்கப்படுவேன்.”"},{"id":94,"translation":"நாம் எந்த ஒரு நபியையும் ஓர் ஊரில் (வசிக்கும் மக்களுக்கு) அனுப்பவில்லை, - அதில் வசிப்பவர்கள் (அந்த தூதரை நிராகரித்தால் அவர்கள்) பணி(ந்து, திருந்தி நம்மிடம் வரு)வதற்காக வறுமையினாலும், நோயினாலும் அவர்களை நாம் பிடித்தே தவிர."},{"id":95,"translation":"பிறகு, துன்பத்தின் இடத்தில் இன்பத்தை மாற்றினோம். இறுதியாக அவர்கள் (எண்ணிக்கை) அதிகரிக்கவே, “எங்கள் மூதாதைகளை நோயும், சுகமும் (இப்படித்தான்) அடைந்திருக்கிறது” என்று கூறினர். ஆகவே, அவர்கள் உணராமல் இருந்த நிலையில் அவர்களைத் திடீரெனப் பிடித்தோம்."},{"id":96,"translation":"இன்னும், ஊர்வாசிகள் நம்பிக்கை கொண்டு (அல்லாஹ்வை) அஞ்சி இருந்தால், அவர்கள் மீது வானம் இன்னும் பூமியிலிருந்து அருள்வளங்களை திறந்திருப்போம். எனினும், (அவர்களோ நமது தூதர்களைப்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் செய்துகொண்டிருந்ததன் காரணமாக (தண்டனையால்) அவர்களைப் பிடித்தோம்."},{"id":97,"translation":"ஆக, ஊர்வாசிகள், - அவர்களோ தூங்கியவர்களாக இருக்கும்போது நம் தண்டனை அவர்களுக்கு இரவில் வருவதை - அச்சமற்று விட்டார்களா?"},{"id":98,"translation":"அல்லது, ஊர்வாசிகள், - அவர்களோ விளையாடுபவர்களாக இருக்கும்போது நம் தண்டனை அவர்களுக்கு முற்பகலில் வருவதை - அச்சமற்று விட்டார்களா?"},{"id":99,"translation":"ஆக, அல்லாஹ்வின் சூழ்ச்சியை (அவர்கள்) அச்சமற்று விட்டார்களா? அல்லாஹ்வின் சூழ்ச்சியை அச்சமற்று இருக்க மாட்டார்கள், நஷ்டவாளிகளான மக்களைத் தவிர."},{"id":100,"translation":"இன்னும், பூமிக்கு, அதில் (முன்பு) வசித்தவர்களுக்கு பின்னர் வாரிசானவர்களுக்கு - நாம் நாடினால் அவர்களுடைய பாவங்களின் காரணமாக அவர்களை (தண்டனையினால் உடனே) சோதித்திருப்போம் - என்பது தெளிவாகவில்லையா? இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடுவோம். ஆகவே, (இவர்கள் நல்லுபதேசங்களை) செவியுற மாட்டார்கள்."},{"id":101,"translation":"(நபியே!) அந்த ஊர்கள், - அவற்றின் செய்திகளிலிருந்து உமக்கு (எடுத்துக் கூறி) விவரிக்கிறோம். இன்னும், அவர்களுடைய தூதர்கள் திட்டவட்டமாக அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டுவந்தனர். எனினும், முன்னர் அவர்கள் எதை பொய்ப்பித்து விட்டார்களோ அதை (இப்போது) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. இவ்வாறே, நிராகரிப்பாளர்களின் உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிடுகிறான்."},{"id":102,"translation":"இன்னும், அவர்களில் அதிகமானவர்களுக்கு உடன்படிக்கையை எதையும் (பாதுகாக்கும் பண்பு இருப்பதாக) நாம் காணவில்லை. இன்னும், நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்களை பாவிகளாகவே கண்டோம்."},{"id":103,"translation":"பிறகு, அவர்களுக்குப் பின்னர் மூஸாவை நம் அத்தாட்சிகளைக் கொண்டு, ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் அவற்றுக்கு அநீதியிழைத்(து பொய்ப்பித்)தனர். ஆகவே, விஷமிகளின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக."},{"id":104,"translation":"இன்னும், மூஸா கூறினார்: “ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட ஒரு தூதர் ஆவேன்.”"},{"id":105,"translation":"“அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) நான் கூறாமலிருப்பதற்கு (நான்) பேராசை உள்ளவன் (அதற்கு முழுமையான தகுதியுள்ளவன்). உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உங்களிடம் திட்டமாக கொண்டு வந்துவிட்டேன். ஆகவே, இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை.”"},{"id":106,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: “நீர் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருந்தால், நீர் உண்மையாளர்களில் இருந்தால் (எங்களிடம்) அதைக் கொண்டு வாரீர்!”"},{"id":107,"translation":"ஆக, (மூஸா) தன் தடியை எறிந்தார். அப்போது, அது தெளிவான பெரிய பாம்பாக ஆகியது."},{"id":108,"translation":"இன்னும், அவர் தன் கையை (சட்டைப் பையிலிருந்து) வெளியில் எடுத்தார். அப்போது, பார்ப்பவர்களுக்கு அது மிக வெண்மையானதாக மாறி இருந்தது.."},{"id":109,"translation":"ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தின் முக்கிய பிரமுகர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இவர் (மந்திரத்தை) கற்றறிந்த (திறமையான) சூனியக்காரர்.”"},{"id":110,"translation":". “இவர் உங்களை உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (எனக்கு) என்ன யோசனை கூறுகிறீர்கள்?” (என்று ஃபிர்அவ்ன் தனது சபையோரிடம் கேட்டான்)."},{"id":111,"translation":"அவர்கள் கூறினார்கள்: “அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் தவணை கொடு! இன்னும், நகரங்களில் (சூனியக்காரர்களை) ஒன்றுதிரட்டி கொண்டுவருபவர்(களான காவலாளி)களை அனுப்பிவை!”"},{"id":112,"translation":"“அவர்கள் கற்றறிந்த சூனியக்காரர் எல்லோரையும் உம்மிடம் கொண்டு வருவார்கள்.”"},{"id":113,"translation":"சூனியக்காரர்கள் ஃபிர்அவ்னிடம் வந்தனர். இன்னும் கூறினார்கள்: “நாங்களே (மூஸாவை மிகைத்து) வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு (அதற்குரிய) கூலி திட்டமாக உண்டு அல்லவா?”"},{"id":114,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: “ஆம்! (வெகுமதி உண்டு.) இன்னும், நிச்சயமாக நீங்கள் (என் அரசவையில் எனக்கு) நெருக்கமானவர்களில் இருப்பீர்கள்.”"},{"id":115,"translation":"(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “மூஸாவே! (முதலில் தடியை) நீர் எறிகிறீரா? அல்லது நாங்களே (முதலில்) எறிபவர்களாக இருக்கவா?”"},{"id":116,"translation":"“(நீங்கள்) எறியுங்கள்” என்று (மூஸா) கூறினார். ஆக, அவர்கள் எறிந்தபோது மக்களுடைய கண்களை மயக்கினார்கள். இன்னும், அவர்களை திடுக்கிடச் செய்தனர். இன்னும், ஒரு பெரிய சூனியத்தை செய்து காட்டினர்."},{"id":117,"translation":"“நீர் உம் தடியை எறிவீராக” என்று மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம். (அவர் எறியவே) அப்போது அது அவர்கள் போலியாக செய்தவற்றை விழுங்கி விட்டது."},{"id":118,"translation":"ஆக, உண்மை (உறுதியாக) நிகழ்ந்தது. அவர்கள் செய்து கொண்டிருந்த (சூனியமான)து பொய்ப்பித்து விட்டது (-செயலற்றதாக ஆகிவிட்டது)."},{"id":119,"translation":"ஆக, அவர்கள் அங்கே தோற்கடிக்கப்பட்டனர். இன்னும், (ஃபிர்அவ்னும் அவனுடைய மக்களும்) தாழ்ந்தவர்களாக (-சிறுமைப்பட்டவர்களாக இழிவானவர்களாக மைதானத்தை விட்டு) திரும்பினர்."},{"id":120,"translation":"சூனியக்காரர்கள் சிரம் பணிந்தவர்களாக தள்ளப்பட்டனர்."},{"id":121,"translation":"“அகிலத்தார்களின் இறைவனை (நாங்களும்) நம்பிக்கை கொண்டோம்” என்று கூறினார்கள்."},{"id":122,"translation":": ‘‘மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை” (நம்பிக்கை கொண்டோம்)’"},{"id":123,"translation":"ஃபிர்அவ்ன் கூறினான்: “உங்களுக்கு நான் அனுமதியளிப்பதற்கு முன்னர் நீங்கள் அவரை நம்பிக்கை கொண்டீர்கள். நிச்சயமாக இந்த நகரத்தில், அதிலிருந்து அதில் வசிப்போரை வெளியேற்றுவதற்காக நீங்கள் சூழ்ச்சிசெய்த சூழ்ச்சிதான் இது. (இதன் தண்டனையை) விரைவில் அறிவீர்கள்.”"},{"id":124,"translation":"“நிச்சயமாக நான் உங்களை மாறு கை மாறு கால் வெட்டுவேன். பிறகு, உங்கள் அனைவரையும் நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன்.”"},{"id":125,"translation":"(சூனியக்காரர்கள்) கூறினர்: “நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள்.”"},{"id":126,"translation":"“இன்னும், எங்கள் இறைவனின் அத்தாட்சிகளை - அவை எங்களிடம் வந்தபோது - நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காகவே தவிர எங்களை நீ பழிக்கவில்லை.” “எங்கள் இறைவா! எங்கள் மீது பொறுமையை இறக்கு! இன்னும், முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும் பணிந்தவர்களாக) எங்க(ள் உயிர்க)ளை கைப்பற்று!”"},{"id":127,"translation":"ஃபிர்அவ்னுடைய சமுதாயத்திலிருந்து பிரமுகர்கள் “மூஸாவையும் அவருடைய சமுதாயத்தையும் -அவர்கள் பூமியில் விஷமம் செய்வதற்கும் உன்னையும், உன் தெய்வங்களையும் அவர் (புறக்கணித்து) விட்டுவிடுவதற்கும்- நீ விட்டு விடப்போகிறாயா?” என்று கூறினார்கள். அதற்கு (ஃபிர்அவ்ன்) கூறினான்: அவர்களுடைய ஆண் பிள்ளைகளைக் கொன்று குவிப்போம். அவர்களுடைய பெண் (பிள்ளை)களை வாழவிடுவோம். நிச்சயமாக நாம் அவர்களுக்கு மேல் (என்றும்) ஆதிக்கம் வகிப்பவர்கள்.”"},{"id":128,"translation":"மூஸா தன் சமுதாயத்திற்கு கூறினார்: “அல்லாஹ்விடம் உதவிதேடுங்கள்! இன்னும், (உறுதியுடன்) பொறுத்திருங்கள்! நிச்சயமாக பூமி அல்லாஹ்விற்குரியதே. அவன் தன் அடியார்களில் தான் நாடியவர்களை அதற்கு வாரிசாக்குவான். இன்னும், (வெற்றியின் நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுகிறவர்களுக்கே.”"},{"id":129,"translation":"அதற்கு அவர்கள் கூறினார்கள்: “(மூஸாவே!) நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் துன்புறுத்தப்பட்டோம்; இன்னும், நீர் எங்களிடம் வந்த பின்னரும் துன்புறுத்தப்படுகிறோம்.” அதற்கு (மூஸா) கூறினார்: “உங்கள் இறைவன் உங்கள் எதிரிகளை அழித்து, (அவர்களின்) பூமியில் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கக்கூடும். ஆக, நீங்கள் எவ்வாறு (செயல்கள்) செய்கிறீர்கள் (-நடந்து கொள்கிறீர்கள்) என அவன் கவனிப்பான்.”"},{"id":130,"translation":"திட்டவட்டமாக ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரை அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக பஞ்சங்களினாலும் கனிகளில் (இன்னும், தானியங்களில் விளைச்சல்களை) குறைப்பதாலும் பிடித்தோம்."},{"id":131,"translation":"ஆக, அவர்களுக்கு இன்பம் வந்தால் இது எங்களுக்கு (வரவேண்டியதுதான்) என்று கூறுவார்கள். ஒரு துன்பம் அவர்களை அடைந்தால் “மூஸாவையும், அவருடன் உள்ளவர்களையும் துர்ச்சகுணமாக எண்ணுவார்கள்” அறிந்து கொள்ளுங்கள்! “அவர்களுடைய துர்ச்சகுணமெல்லாம் அல்லாஹ்விடம்தான் உள்ளது. (நன்மை, தீமை அனைத்தும் அல்லாஹ்விடமிருந்துதான் நடக்கிறது.) எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (எல்லாம் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கிறது என்பதை) அறியமாட்டார்கள்.”"},{"id":132,"translation":"(ஃபிர்அவ்னின் சமுதாயத்தினர் மூஸாவை நோக்கி) கூறினார்கள்: “நீர் எந்த அத்தாட்சியை எங்களிடம் கொண்டு வந்தாலும், - அதன் மூலம் எங்களை ஏமாற்றுவதற்காக - நாங்கள் உம்மை நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.”"},{"id":133,"translation":"ஆகவே, அவர்கள் மீது புயல் காற்றை, வெட்டுக்கிளிகளை, பேன்களை, தவளைகளை, இரத்தத்தை தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பினோம். ஆக, அவர்கள் பெருமையடித்(து புறக்கணித்)தனர். இன்னும், குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தனர்."},{"id":134,"translation":"அவர்கள் மீது தண்டனை நிகழ்ந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்த பிரகாரம் (அதை நிறைவேற்றக் கோரி) - எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு தண்டனையை நீர் நீக்கினால் உம்மை நிச்சயம் நம்பிக்கை கொள்வோம்; இன்னும், இஸ்ரவேலர்களை உம்முடன் நிச்சயம் அனுப்புவோம்.”"},{"id":135,"translation":"ஆக, ஒரு தவணை(க்குப் பின் மறு தவணை) வரை நாம் அவர்களை விட்டு தண்டனையை நீக்கி, அதை (-அத்தவணையின் இறுதியை) அவர்கள் அடையும்போது அவர்கள் (தங்கள் வாக்குறுதியை) முறித்து விடுகிறார்கள்."},{"id":136,"translation":"ஆகவே, நிச்சயமாக அவர்கள் நம் அத்தாட்சிகளை பொய்ப்பித்ததாலும் அவற்றில் கவனமற்றவர்களாக இருந்ததாலும் அவர்களை பழிவாங்கினோம். ஆக, அவர்களைக் கடலில் மூழ்கடித்தோம்."},{"id":137,"translation":"இன்னும், பலவீனமாகக் கருதப்பட்டுக் கொண்டிருந்த சமுதாயத்தை நாம் அபிவிருத்தி செய்த (ஷாம் தேச) பூமியின் கிழக்குப் பகுதிகளுக்கும், மேற்குப் பகுதிகளுக்கும் வாரிசாக்கினோம். ஆகவே, இஸ்ரவேலர்கள் மீது, - அவர்கள் பொறுமையாக இருந்ததால் - உம் இறைவனின் மிக அழகிய வாக்கு முழுமையடைந்தது. ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் செய்து கொண்டிருந்ததையும் (-விவசாயங்களையும்) அவர்கள் உயரமாக கட்டிக் கொண்டிருந்ததையும் (-மாளிகைகளையும் தரைமட்டமாக) அழித்தோம்."},{"id":138,"translation":"இன்னும், இஸ்ரவேலர்களை கடலைக் கடக்க வைத்தோம். ஆக, தங்கள் சிலைகளுக்கருகில் (அவற்றை வழிபடுவதற்காக) தங்கியிருந்த ஒரு சமுதாயத்தின் அருகில் (அவர்கள்) வந்தனர். (அதை பார்த்துவிட்டு) கூறினார்கள்: “மூஸாவே! வணங்கப்படும் கடவுள்(சிலை)கள் அவர்களுக்கு இருப்பது போல் வணங்கப்படும் ஒரு கடவுளை (-ஒரு சிலையை) எங்களுக்கும் ஏற்படுத்து!” (மூஸா) கூறினார்: “நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வின் கண்ணியத்தை) அறியாத மக்கள் ஆவீர்கள்.”"},{"id":139,"translation":"“நிச்சயமாக இவர்கள் எதில் இருக்கிறார்களோ அது அழிக்கப்பட்டுவிடும். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருப்பவை பொய்யாகும்.”"},{"id":140,"translation":"(மூஸா) கூறினார்: “அல்லாஹ் அல்லாததையா (ஒரு கற்சிலையையா) வணங்கப்படும் ஒரு கடவுளாக இருக்கும்படி நான் உங்களுக்காக தேடிக் கொண்டுவருவேன்? அவனோ உலகத்தார்களைப் பார்க்கிலும் உங்களை மேன்மைப்படுத்தினான்.”"},{"id":141,"translation":"(இஸ்ரவேலர்களே!) கொடிய தண்டனையால் உங்க(ள் மூதாதைக)ளைத் துன்புறுத்திய ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரிடமிருந்து உங்க(ள் மூதாதைக)ளைக் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் உங்கள் மகன்களைக் கொன்று குவிப்பார்கள். இன்னும், உங்கள் பெண்(பிள்ளை)களை வாழவிடுவார்கள். இன்னும், இதில் உங்கள் இறைவனிடமிருந்து பெரிய சோதனை இருந்தது."},{"id":142,"translation":"இன்னும், மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம். இன்னும், அதை பத்து இரவுகளைக் கொண்டு (நாற்பது இரவுகளாக) முழுமைப்படுத்தினோம். ஆகவே, அவருடைய இறைவனின் குறிப்பிட்ட காலம் நாற்பது இரவுகளாக முழுமையடைந்தது. ஹாரூனாகிய தன் சகோதரருக்கு மூஸா கூறினார்: “நீர் என் சமுதாயத்தில் எனக்கு பிரதிநிதியாக இரு! இன்னும், (அவர்களை) சீர்திருத்து! இன்னும், விஷமிகளுடைய பாதையை பின்பற்றாதே!”"},{"id":143,"translation":"இன்னும், நமது (குறித்த இடத்தில்) குறித்த நேரத்திற்கு மூஸா வந்து, அவருடைய இறைவன் அவருடன் பேசியபோது, “என் இறைவா! நீ (உன்னை) எனக்கு காண்பி, உன்னை பார்ப்பேன்” என்று கூறினார். “என்னை நீர் (இவ்வுலகத்தில்) அறவே பார்க்க மாட்டீர். எனினும், மலையைப் பார்ப்பீராக. (எனது ஒளியை அதன் மீது நான் வெளிப்படுத்தும்போது) அது தன் இடத்தில் நிலைத்திருந்தால் நீர் என்னைப் பார்ப்பீர்” என்று (இறைவன்) கூறினான். ஆக, அவருடைய இறைவன் (உடைய ஒளி) அம்மலை மீது வெளிப்பட்டபோது அதை அவன் துகள்களாக்கினான். இன்னும், மூஸா மூர்ச்சையானவராக விழுந்தார். ஆக, அவர் தெளிவு பெற்றபோது, “நீ மிகப் பரிசுத்தமானவன். நான் (உன்னைப் பார்க்கக் கோரிய குற்றத்திலிருந்து விலகி, உன்னிடம் மன்னிப்புக் கோரி) திருந்தி உன் பக்கம் திரும்புகிறேன். உன்னை நம்பிக்கை கொள்பவர்களில் நான் முதலாமவன்” என்று கூறினார்."},{"id":144,"translation":"(இறைவன்) கூறினான்: “மூஸாவே! என் தூதுசெய்திகளுக்கும், நான் பேசுவதற்கும் மக்களைவிட நிச்சயமாக நான் உம்மைத் தேர்ந்தெடுத்தேன். ஆகவே, நான் உமக்கு கொடுத்ததைப் பற்றிப்பிடிப்பீராக. இன்னும், நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவீராக!”"},{"id":145,"translation":"இன்னும், (படைக்கப்பட்ட) ஒவ்வொரு பொருளிலிருந்து (அறிய வேண்டிய படிப்பினையையும்) அறிவுரையையும் (அல்லாஹ்வின் ஏவல், விலக்கல் தொடர்பான) ஒவ்வொன்றின் விளக்கத்தையும் அவருக்கு பலகைகளில் எழுதினோம். ஆகவே, “நீர் இவற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்து, உம் சமுதாயத்தை ஏவுவீராக. அவற்றில் மிக அழகியவற்றை அவர்கள் பற்றிப் பிடிக்கட்டும். பாவிகளின் இல்ல(மாகிய நரக)த்தை உங்க(ளில் யார் எனக்கு மாறு செய்கிறார்களோ அவர்)ளுக்குக் விரைவில் காண்பிப்பேன்.”"},{"id":146,"translation":"நியாயமின்றி பூமியில் பெருமையடிப்பவர்களை என் அத்தாட்சி(களை விட்டும் என் வசனங்)களை விட்டும் திருப்புவேன். அவர்கள் எல்லா அத்தாட்சிகளைப் பார்த்தாலும் அவற்றை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். இன்னும், நேர்வழி, நல்லறிவுடைய பாதையை அவர்கள் பார்த்தால் அதை (தாங்கள் செல்லும்) பாதையாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். இன்னும், வழிகேடு, மௌட்டீகத்துடைய பாதையை அவர்கள் பார்த்தால் அதை (தாங்கள் செல்லும்) பாதையாக எடுத்துக் கொள்வார்கள். அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களைப் பொய்ப்பித்தனர்; இன்னும், அவற்றை விட்டு கவனமற்றவர்களாக (அலட்சியமாக) இருந்தார்கள் என்பதாகும்."},{"id":147,"translation":"இன்னும், எவர்கள் நம் வசனங்களையும், மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அவர்களுடைய (நற்)செயல்கள் பாழாகின. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர (அவர்கள்) கூலி கொடுக்கப்படுவார்களா?"},{"id":148,"translation":"இன்னும், மூஸாவுடைய சமுதாயம் அவருக்குப் பின்னர் தங்கள் நகையிலிருந்து ஒரு காளைக் கன்றை - மாட்டின் சப்தம் அதற்கு இருந்த ஓர் உடலை - (வணங்கப்படும் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். “நிச்சயமாக அது அவர்களுடன் பேசுவதுமில்லை; இன்னும், அவர்களுக்கு (நேரான) பாதையை அது வழிகாட்டுவதுமில்லை என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அவர்கள் அதை (வணங்கப்படும் தெய்வமாக) உறுதியாக எடுத்துக் கொண்டார்கள். இன்னும் அவர்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டனர்."},{"id":149,"translation":"இன்னும், அவர்கள் கைசேதப்பட்டு, அவர்கள் வழிதவறிவிட்டனர் என்பதை அவர்கள் அறிந்தபோது, “எங்கள் இறைவன் எங்களுக்கு கருணை புரியவில்லையென்றால், எங்களை மன்னிக்கவில்லையென்றால் நிச்சயம் நாங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவோம்” என்று கூறினார்கள்."},{"id":150,"translation":"இன்னும், மூஸா கோபித்தவராக, ஆவேசப்பட்டவராக (வருத்தப்பட்டவராக) தன் சமுதாயத்திடம் திரும்பியபோது, “எனக்குப் பின்னர் (என் சமுதாயத்திலும் என் மார்க்கத்திலும்) நான் சென்றதற்குப் பிறகு நீங்கள் செய்தது மிகக் கெட்டதாகும். உங்கள் இறைவனின் கட்டளையை (மீறுவதில்) அவசரப்பட்டீர்களா?” என்று கூறினார். இன்னும், அந்த பலகைகளை எறிந்தார். இன்னும், தன் சகோதரர் (ஹாரூன்) உடைய தலை (முடி)யைப் பிடித்து, அவரைத் தன் பக்கம் இழுத்தார். அப்போது, (ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! நிச்சயமாக (நமது) சமுதாயம் என்னை பலவீனப்படுத்திவிட்டனர். இன்னும், அவர்கள் என்னைக் கொன்றுவிடவும் முற்பட்டனர். ஆகவே, என் மூலம் எதிரிகளை நகைக்கச் செய்யாதீர். இன்னும், அநியாயக்கார மக்களுடன் என்னை சேர்த்துவிடாதீர்.”"},{"id":151,"translation":"(மூஸா) கூறினார்: “என் இறைவா! எனக்கும் என் சகோதரருக்கும் மன்னிப்பு வழங்கு! இன்னும், உன் கருணையில் எங்களை சேர்த்துக்கொள்! இன்னும், நீ கருணையாளர்களில் மகா கருணையாளன்!”"},{"id":152,"translation":"“நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (தெய்வமாக) எடுத்துக் கொண்டார்களோ அவர்களை உலக வாழ்க்கையில் அவர்களின் இறைவனிடமிருந்து கோபமும் இழிவும் வந்தடையும். இன்னும், (பொய்யை) இட்டுக்கட்டுபவர்களுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம்."},{"id":153,"translation":"இன்னும், எவர்கள் தீமைகளை செய்து, பிறகு, அவற்றுக்குப் பின்னர் (வருந்தி) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பி, பாவமன்னிப்புக் கோரினார்களோ; இன்னும், நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள் நிச்சயம் மன்னிக்கப்படுவார்கள். (ஏனெனில்,) நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் பாவமன்னிப்பு கேட்ட)தற்குப் பின்னர் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":154,"translation":"மூஸாவிற்கு கோபம் தணிந்தபோது அவர் அந்த பலகைகளை (கையில்) எடுத்தார். அவற்றில் எழுதப்பட்டதில் “தங்கள் இறைவனை பயப்படுகிறவர்களுக்கு நேர்வழியும் கருணையும் உண்டு.”"},{"id":155,"translation":"இன்னும், மூஸா தன் சமுதாயத்தில் எழுபது ஆடவர்களை நாம் குறிப்பிட்ட நேரத்திற்காக தேர்ந்தெடுத்(து அழைத்து வந்)தார். ஆக, அவர்களை இடிமுழக்கம் பிடித்தபோது, (மூஸா) கூறினார்: “என் இறைவா! நீ நாடியிருந்தால் (இதற்கு) முன்னரே அவர்களையும் என்னையும் அழித்திருப்பாய். எங்களில் அறிவீனர்கள் செய்ததற்காக எங்களை அழிப்பாயா? உன் சோதனையாகவே தவிர இது இல்லை. இதன் மூலம் நீ நாடியவர்களை வழி கெடுக்கிறாய்; இன்னும், நீ நாடியவர்களை நேர்வழி செலுத்துகிறாய். நீதான் எங்கள் பாதுகாவலன். ஆகவே, நீ எங்களுக்கு மன்னிப்பு வழங்கு! இன்னும், எங்களுக்கு கருணை புரி! மன்னிப்பவர்களில் நீ மிகச் சிறந்தவன்.”"},{"id":156,"translation":"“இன்னும், இம்மையிலும் மறுமையிலும் எங்களுக்கு அழகியதை[1] விதிப்பாயாக! நிச்சயமாக நாங்கள் உன் பக்கமே திரும்பினோம்” (அல்லாஹ்) கூறினான்: “என் தண்டனை அதன் மூலம் நான் நாடியவர்களை பிடிப்பேன். இன்னும், என் கருணை ஒவ்வொரு பொருளுக்கும் விசாலமாக இருக்கிறது. ஆக, எவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுகிறார்களோ; இன்னும், ஸகாத்தைக் கொடுப்பார்களோ; இன்னும், எவர்கள் நம் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ அவர்களுக்கு அதை விதிப்பேன்.”","footnotes":"[1] இம்மையில் ஹஸனா என்பது நற்செயல்களையும் மறுமையில் ஹஸனா என்பது இறைமன்னிப்பையும் குறிக்கும்."},{"id":157,"translation":"அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவராகிய, நபியாகிய இத்தூதரை பின்பற்றுவார்கள். தங்களிடமுள்ள தவ்ராத் இன்னும் இன்ஜீலில் அவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதை அவர்கள் காண்பார்கள். அவர்களுக்கு நன்மையை அவர் ஏவுவார்; இன்னும், தீமையை விட்டும் அவர்களைத் தடுப்பார்; இன்னும், நல்லவற்றை அவர்களுக்கு ஆகுமாக்குவார்; இன்னும், கெட்டவற்றை அவர்களுக்கு தடை செய்வார்; இன்னும், அவர்களை விட்டும் அவர்கள் மீதிருந்த அவர்களுடைய (வழிபாட்டின்) கடின சுமையையும் (சிரமமான சட்ட) விலங்குகளையும் அகற்றுவார். ஆகவே, எவர்கள் அவரை நம்பிக்கை கொண்டு, அவரைப் பாதுகாத்து, (பலப்படுத்தி,) அவருக்கு உதவி செய்து, அவருடன் இறக்கப்பட்ட (குர்ஆன் என்ற) ஒளியை பின்பற்றுகிறார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள்."},{"id":158,"translation":"(நபியே!) கூறுவீராக: “மனிதர்களே! நிச்சயமாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதர் ஆவேன். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். ஆகவே, நீங்கள் நேர்வழி பெறுவதற்காக அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள். இன்னும், (நீங்கள் நேர்வழி பெறுவதற்காக) அல்லாஹ்வையும் அவனுடைய வாக்குகளையும் நம்பிக்கை கொள்பவரான, எழுதப் படிக்கத் தெரியாதவரான, நபியான அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவரைப் பின்பற்றுங்கள்!"},{"id":159,"translation":"மூஸாவுடைய சமுதாயத்தில் சத்தியத்தின்படி வழிகாட்டுகிற, இன்னும், அதன்படி நீதி செலுத்துகின்ற ஒரு கூட்டமும் இருக்கிறது."},{"id":160,"translation":"அவர்களைப் பன்னிரண்டு சந்ததிகளாக கூட்டங்களாகப் பிரித்தோம். இன்னும், மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம், - அவருடைய சமுதாயம் அவரிடம் தண்ணீர் கேட்டபோது - “உமது தடியால் கல்லை அடிப்பீராக!” என்று. ஆக, அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுகள் பீறிட்டன. எல்லா மக்களும் தங்கள் நீர் அருந்துமிடத்தை அறிந்து கொண்டார்கள். இன்னும், அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். இன்னும், அவர்கள் மீது ‘மன்னு’ ‘ஸல்வா’வை இறக்கினோம். “உங்களுக்கு நாம் அளித்தவற்றில் நல்லவற்றை உண்ணுங்கள்” (என்று அவர்களுக்கு கூறினோம்). அவர்கள் நமக்கு தீங்கிழைக்கவில்லை. எனினும், (அவர்கள்) தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்."},{"id":161,"translation":"இன்னும், (இஸ்ரவேலர்களாகிய) அவர்களுக்கு கூறப்பட்ட சமயத்தை நினைவு கூருங்கள்: “நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள். இன்னும், நீங்கள் நாடிய இடத்தில் புசியுங்கள். ‘ஹித்ததுன்’ (பாவம் நீங்கட்டும்!) என்று கூறுங்கள். இன்னும், சிரம் தாழ்த்தியவர்களாக (ஊர்) வாசலில் நுழையுங்கள். நாம் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்போம். நல்லறம் புரிவோருக்கு (நற்கூலியை) அதிகப்படுத்துவோம்.”"},{"id":162,"translation":"ஆக, அவர்களில் நிராகரித்தவர்கள், அவர்களுக்கு எது கூறப்பட்டதோ அது அல்லாத ஒரு சொல்லாக மாற்றி(க் கூறி)னர். ஆகவே, அவர்கள் அநியாயம் (-பாவம்) செய்பவர்களாக இருந்ததால் அவர்கள் மீது வானத்திலிருந்து (கடுமையான) தண்டனையை இறக்கினோம்."},{"id":163,"translation":"இன்னும் (நபியே) கடலுக்கருகில் இருந்த ஊர் (மக்களைப்) பற்றி அவர்களிடம் விசாரிப்பீராக. சனிக்கிழமையில் அவர்கள் எல்லை மீறியபோது, அவர்களின் சனிக்கிழமையில் அவர்களுடைய மீன்கள் தலைகளை நீட்டியவையாக அவர்களிடம் வந்தபோது (அவர்களை நாம் சோதித்தோம்). இன்னும் அவர்கள் சனிக் கிழமை அல்லாத (வேறு ஒரு) நாளில் இருக்கும்போது அவர்களிடம் அவை (அந்தளவு அதிகமாக) வருவதில்லை. அவர்கள் (அல்லாஹ்வின்) கட்டளையை மீறுபவர்களாக இருந்த காரணத்தால் இவ்வாறு அவர்களை சோதித்தோம்."},{"id":164,"translation":"இன்னும், “அல்லாஹ் அவர்களை அழிப்பவனாக அல்லது கடுமையான தண்டனையால் அவர்களை தண்டிப்பவனாக உள்ள மக்களுக்கு (நீங்கள்) ஏன் உபதேசிக்கிறீர்கள்?” என்று அவர்களில் ஒரு கூட்டம் கூறியபோது, “உங்கள் இறைவனிடம் (எங்கள்) நியாயத்தை கூறுவதற்காகவும், அவர்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காகவும் (அதிலிருந்து விலகுவதற்காகவும் அவர்களுக்கு உபதேசிக்கிறோம்)” என்று கூறினார்கள்."},{"id":165,"translation":"ஆக, அவர்கள் (தங்களுக்கு) உபதேசிக்கப்பட்டதை மறந்தபோது தீமையை விட்டும் (மக்களை) தடுத்தவர்களைப் பாதுகாத்தோம். இன்னும், பாவம் செய்தவர்களை - அவர்கள் (அல்லாஹ்வின்) கட்டளையை மீறுபவர்களாக இருந்த காரணத்தால் - கடுமையான தண்டனையால் பிடித்தோம்."},{"id":166,"translation":"ஆக, அவர்கள் தங்களுக்கு தடுக்கப்பட்டதை மீறியபோது, “குரங்குகளாக (மக்களை விட்டும் அல்லாஹ்வின் அருளிருந்தும்) விரட்டப்பட்டவர்களாக இழிவானவர்களாக ஆகிவிடுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம்."},{"id":167,"translation":"(நபியே!) இன்னும் கொடிய தண்டனையால் அவர்களை துன்புறுத்துபவர்களை அவர்கள் மீது மறுமை நாள் வரை நிச்சயமாக அவன் அனுப்புவான் என்று உம் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக. நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் மிகத் தீவிரமானவன். இன்னும், நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":168,"translation":"இன்னும், அவர்களை பூமியில் பல பிரிவுகளாகப் பிரித்தோம். அவர்களில் நல்லவர்களும் உண்டு; அவர்களில் மற்ற (பொல்லாத)வர்களும் உண்டு. இன்னும், அவர்கள் (சத்தியத்தின் பக்கம்) திரும்புவதற்காக இன்பங்கள் இன்னும் துன்பங்களால் அவர்களைச் சோதித்(து வந்)தோம்."},{"id":169,"translation":"ஆக, அவர்களுக்குப் பின்னால் சில தீயோர் தோன்றினார்கள். (அவர்கள்) வேதத்திற்கு வாரிசுகளாக ஆகினர். (வேத சட்டங்களை மாற்றி அதற்குப் பகரமாக) இந்த அற்பமான (உலகத்)தின் செல்வத்தை வாங்குகிறார்கள். இன்னும், “எங்களை மன்னிக்கப்படும்” என்றும் கூறுகிறார்கள். இதுபோன்ற (அற்ப) செல்வம் அவர்களுக்கு வந்தால் அதையும் வாங்குவார்கள். அல்லாஹ் மீது உண்மையைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் கூறக்கூடாது என்று அவர்கள் மீது வேதத்தின் உறுதிமொழி எடுக்கப்படவில்லையா? அதிலுள்ளதை (அவர்கள்) படித்து (அறிந்து)ள்ளனர். அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு மறுமை வீடுதான் மிகச் சிறந்ததாகும். நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?"},{"id":170,"translation":"எவர்கள் தொழுகையை நிலைநிறுத்தி, வேதத்தை (கற்றும் கற்பித்தும் செயல் படுத்தியும்) உறுதியாக பற்றிப் பிடிப்பார்களோ அவர்கள் (இத்தகைய) சீர்திருத்தவாதிகளின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்."},{"id":171,"translation":"அவர்களுக்கு மேல் மலையை - அது நிழலிடும் மேகத்தைப் போன்று - பிடுங்கி (நிறுத்தி)ய சமயத்தை நினைவு கூருவீராக. நிச்சயமாக அது அவர்கள் மீது விழுந்துவிடும் என்று எண்ணினர். “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக நாம் உங்களுக்குக் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள்; அதிலுள்ளவற்றை நினைவு கூறுங்கள்” (என்று நாம் அவர்களிடம் வாக்குறுதி எடுத்தோம்)."},{"id":172,"translation":"(நபியே!) இன்னும் உம் இறைவன் ஆதமின் சந்ததிகளில் அவர்களுடைய முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை எடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக. இன்னும், “நான் உங்கள் இறைவனாக இல்லையா?” (என்று வினவி) அவர்களை அவர்களுக்கே சாட்சியாக்கினான். “ஏன் இல்லை, (நீதான் எங்கள் இறைவன் என்று) நாங்கள் சாட்சி கூறினோம்” என்று (அவர்கள்) கூறினர். நிச்சயமாக நாங்கள் இ(ந்த சாட்சியத்)தை விட்டு கவனமற்றவர்களாக இருந்தோம்” என்று மறுமை நாளில் நீங்கள் கூறாமல் இருப்பதற்காக (உங்களுக்கு இறைவன் இதை நினைவூட்டுகிறான்)."},{"id":173,"translation":"அல்லது, இதற்கு முன்னர் இணைவைத்ததெல்லாம் எங்கள் மூதாதைகள்தான். நாங்கள் அவர்களுக்குப் பின்னர் (அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றுகின்ற) சந்ததிகளாக இருக்கிறோம். (அந்த) வீணர்கள் செய்ததற்காக நீ எங்களை அழிப்பாயா?” என்று கூறாதிருப்பதற்காக (இதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம்)."},{"id":174,"translation":"இவ்வாறே, (அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும்) அவர்கள் (பாவங்களை விட்டு) திரும்புவதற்காகவும் (நம்) வசனங்களை விவரிக்கிறோம்."},{"id":175,"translation":"(நபியே!) நாம் நம் அத்தாட்சிகளை யாருக்கு கொடுத்தோமோ அவனுடைய செய்தியை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுவீராக. அவன் அதிலிருந்து கழன்று கொண்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்தான். ஆக, அவன் வழிகெட்டவர்களில் (-மூடர்களில்) ஆகிவிட்டான்."},{"id":176,"translation":"இன்னும், நாம் நாடியிருந்தால் அவற்றின் மூலம் அவனை உயர்த்தியிருப்போம். என்றாலும், நிச்சயமாக அவன் (இந்த) பூமியில் நிரந்தர (சுக)ம் தேடினான். அவன் தன் ஆசையைப் பின்பற்றினான். ஆகவே, அவனுடைய உதாரணம் நாயின் உதாரணத்தைப் போன்றது. நீர், அதைத் துரத்தினாலும் அது நாக்கைத் தொங்கவிடும். நீர் அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் அது நாக்கைத் தொங்கவிடும். இதுவே, நம் வசனங்களைப் பொய்ப்பித்த மக்களின் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்திப்பதற்காக சரித்திரங்களை விவரிப்பீராக."},{"id":177,"translation":"நம் வசனங்களைப் பொய்ப்பித்து, தங்களுக்கு தாமே தீங்கிழைத்துக் கொண்டிருந்த மக்களுடைய உதாரணம் (உதாரணத்தால்) மிகக் கெட்டதாகும்."},{"id":178,"translation":"எவரை அல்லாஹ் நேர்வழி செலுத்துகிறானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். இன்னும், எவர்களை அவன் வழிகெடுக்கிறானோ அவர்கள்தான் நஷ்டவாளிகள்!"},{"id":179,"translation":"மனிதர்களிலும், ஜின்களிலும் அதிகமானோரை நரகத்திற்காக படைத்து விட்டோம். அவர்களுக்கு உள்ளங்கள் உண்டு, அவற்றின் மூலம் சிந்தித்து விளங்க மாட்டார்கள். அவர்களுக்கு கண்கள் உண்டு, அவற்றின் மூலம் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு செவிகள் உண்டு, அவற்றின் மூலம் செவிகொடுத்து கேட்க மாட்டார்கள். அவர்கள் கால்நடைகளைப் போன்றவர்கள். மாறாக, அவர்கள் (அவற்றைவிட) அதிகம் வழிகெட்டவர்கள். அவர்கள்தான் (என் அத்தாட்சிகளை மறந்த) கவனமற்றவர்கள் ஆவர்."},{"id":180,"translation":"அல்லாஹ்விற்கே உரியன மிக அழகிய பெயர்கள். ஆகவே, அவற்றின் மூலம் அவனை அழையுங்கள். இன்னும், அவனுடைய பெயர்களில் தவறிழைப்பவர்களை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலி கொடுக்கப்படுவார்கள்."},{"id":181,"translation":"இன்னும், நாம் படைத்தவர்களில் சத்தியத்தைக் கொண்டு நேர்வழிகாட்டுகின்ற; இன்னும், அதைக் கொண்டே நீதி செலுத்துகின்ற ஒரு கூட்டம் உண்டு."},{"id":182,"translation":"இன்னும், நம் வசனங்களை எவர்கள் பொய்ப்பித்தார்களோ அவர்களை அவர்கள் அறியாத விதத்தில் ஈர்த்து (நமது பிடியில்) சிக்க வைப்போம்."},{"id":183,"translation":"இன்னும், அவர்களுக்கு அவகாசமளிப்பேன். நிச்சயமாக என் சூழ்ச்சி மிக உறுதியானது."},{"id":184,"translation":"இன்னும், அவர்கள் சிந்திக்கவில்லையா? “அவர்களுடைய தோழருக்கு அறவே பைத்தியம் இல்லை. தெளிவான எச்சரிப்பவராகவே தவிர அவரில்லை.”"},{"id":185,"translation":"இன்னும், வானங்கள், பூமியின் பேராட்சியிலும், அல்லாஹ் படைத்த (ஏனைய சிறிய, பெரிய) பொருளிலும், அவர்களுடைய (மரணத்தின்) தவணை நெருங்கி இருக்கக் கூடும் என்பதிலும் அவர்கள் கவனி(த்துப் பார்)க்கவில்லையா? (எச்சரிக்கை நிறைந்த வேறு) எந்த செய்தியைத்தான் அவர்கள் இதற்குப் பின்னர் நம்பிக்கை கொள்வார்கள்?"},{"id":186,"translation":"எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் அறவே இல்லை. இன்னும், அ(த்தகைய)வர்களை அவர்களுடைய அட்டூழியத்தில் கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக (சில காலம் வரை) அவன் விட்டுவைக்கிறான்."},{"id":187,"translation":"(நபியே!) மறுமையைப் பற்றி அது நிகழ்வது எப்போது? என உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: “அதன் அறிவு எல்லாம் என் இறைவனிடம்தான் இருக்கிறது. அதற்குரிய நேரத்தில் அதை அவன்தான் வெளிப்படுத்துவான். அது, வானங்களிலும் பூமியிலும் (யாராலும் அதை அறியமுடியாதவாறு) கனத்து விட்டது (-மறைவாக இருக்கிறது). திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. நிச்சயமாக நீர் அதைப் பற்றி அறிந்தவர் போன்று உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம் இருக்கிறது. என்றாலும், மக்களில் அதிகமானோர் (மறுமையின் அறிவு அல்லாஹ்விடம்தான் இருக்கிறது என்பதை) அறிய மாட்டார்கள்.”"},{"id":188,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எந்த ஒரு பலனுக்கும் (அதை எனக்கு தேடுவதற்கு) இன்னும், எந்த ஒரு கெடுதிக்கும் (அதை என்னை விட்டு அகற்றுவதற்கு) நான் உரிமை பெறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறிபவனாக இருந்திருந்தால் நன்மையை அதிகம் பெற்றிருப்பேன்; இன்னும், தீங்குகள் ஏதும் எனக்கு ஏற்பட்டிருக்காது. (பாவிகளை) எச்சரிப்பவராகவும் நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு நற்செய்தி கூறுபவராகவுமே தவிர நான் இல்லை.”"},{"id":189,"translation":"அவன் ஒரே ஒரு மனிதரிலிருந்து உங்களைப் படைத்தான்; இன்னும், அவர் அவளுடன் நிம்மதியாக வசிப்பதற்காக அவருடைய மனைவியை அவரி(ன் உடம்பி)லிருந்தே உருவாக்கினான். ஆக, அவளை அவர் (தன் உடலால்) மூடிக் கொண்டபோது அவள் இலேசான கர்ப்பமாக கர்ப்பமானாள். அதை(ச் சுமந்து) கொண்டு நடந்தாள். அவள் (கர்ப்பம்) கனத்தபோது அவ்விருவரின் இறைவனான அல்லாஹ்விடம் அவ்விருவரும் பிரார்த்தித்தனர்: “நீ எங்களுக்கு நல்ல குழந்தையைக் கொடுத்தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துவோரில் ஆகிவிடுவோம்.”"},{"id":190,"translation":"ஆக, அவன் அவ்விருவருக்கும் நல்ல குழந்தையைக் கொடுத்தபோது அவ்விருவரும் அவன் கொடுத்ததில் அவனுக்கு இணைகளை ஆக்கினர். (இணைவைப்பவர்களான மக்காவாசிகளாகிய) அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மிக உயர்ந்தவன். (அவனோடு வணங்கப்பட யாருக்கும் எவ்வித தகுதியும் இல்லை.)"},{"id":191,"translation":"எந்த ஒரு பொருளையும் படைக்காதவர்களை (அவனுக்கு) இணையாக்(கி வணங்)குகிறார்களா? (வணங்கப்படும்) அவர்களோ படைக்கப்படுகிறார்கள். (அவர்கள் எதையும் படைக்கவில்லை.)"},{"id":192,"translation":"இன்னும், அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய இயலமாட்டார்கள். இன்னும், தங்களுக்கு தாமே (அவர்கள்) உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்."},{"id":193,"translation":"இன்னும், நீங்கள் அவர்களை (-அந்த சிலைகளை) நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் உங்களை பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைத்தாலும் அல்லது நீங்கள் வாய்மூடியவர்களாக இருந்தாலும் (அவ்விரண்டும்) உங்களுக்கு சமம்தான். (உங்கள் முயற்சிகள் அனைத்தும் வீணானவை ஆகும். ஏனெனில், நீங்கள் அழைப்பவை பார்க்காது, செவியுறாது.)"},{"id":194,"translation":"நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் யாரிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்றே (அல்லாஹ்வின்) அடிமைகள் ஆவார்கள். (நீங்கள் கேட்டதை அவர்கள் உங்களுக்கு கொடுப்பார்கள் என்ற உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களிடம் பிரார்த்தியுங்கள்; அவர்களும் உங்களுக்குப் பதிலளிக்கட்டும் (பார்க்கலாம்)!"},{"id":195,"translation":"(சிலை வணங்கிகளே! நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ) அவர்கள் நடப்பதற்கு அவர்களுக்கு கால்கள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் பிடிப்பதற்கு அவர்களுக்கு கைகள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் பார்ப்பதற்கு அவர்களுக்குக் கண்கள் உள்ளனவா?; அல்லது, அவர்கள் செவியுறுவதற்கு அவர்களுக்கு காதுகள் உள்ளனவா?; (இவையெல்லாம் அவர்களுக்கு இருக்குமாயின் நீங்கள் வணங்கிய) உங்கள் தெய்வங்களிடம் பிரார்த்தித்து, பிறகு எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். ஆக, எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நபியே!) கூறுவீராக."},{"id":196,"translation":"“நிச்சயமாக என் பாதுகாவலன் (இந்த) வேதத்தை இறக்கிய அல்லாஹ்தான். இன்னும், அவன் நல்லவர்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறான்."},{"id":197,"translation":"இன்னும், அவனையன்றி நீங்கள் எவர்களிடம் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கும் உதவி செய்ய இயலமாட்டார்கள்; இன்னும், தங்களுக்கு தாமே உதவி செய்து கொள்ளவும் மாட்டார்கள்."},{"id":198,"translation":"இன்னும், (சிலை வணங்கிகளே!) நீங்கள் (வணங்குகிற) அவர்களை நேர்வழிக்கு அழைத்தால் அவர்கள் (உங்கள் அழைப்பை) செவியுற மாட்டார்கள். (நபியே!) அவர்கள் (-அந்த சிலைகள்) உம்மைப் பார்ப்பவர்களாக நீர் அவர்களைக் காண்கிறீர். ஆனால், அவர்களோ (எதையும்) பார்க்க மாட்டார்கள்."},{"id":199,"translation":"(நபியே!) பெருந்தன்மையை (-மன்னிப்பை) பற்றிப் பிடிப்பீராக. இன்னும் நன்மையை ஏவுவீராக. இன்னும், அறியாதவர்களை புறக்கணிப்பீராக."},{"id":200,"translation":"ஷைத்தானிடமிருந்து (மனக்) குழப்பம் (அல்லது கோபம்) உம்மைக் குழப்பினால் (உம்மை யாரும் கோபமூட்டினால்) அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவீராக. நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":201,"translation":"நிச்சயமாக (அல்லாஹ்வை) அஞ்சியவர்கள், - ஷைத்தானிடமிருந்து ஓர் (தீய) எண்ணம் (அல்லது கோபம்) அவர்களுக்கு ஏற்பட்டால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைவு கூர்வார்கள்; அப்போது, அவர்கள் (தங்களுக்குரிய அல்லாஹ்வின் கட்டளையைப்) பார்த்துக் கொள்கிறார்கள். (-அந்த தீய எண்ணத்தை விட்டு விலகி, இறைவழிபாட்டின் பக்கம் வந்து விடுகிறார்கள்.)"},{"id":202,"translation":"அவர்களுடைய (வழிகெட்ட மனித) சகோதரர்கள் இருக்கிறார்களே, - அவர்களை (ஷைத்தான்கள்) வழிகேட்டில் அதிகப்படுத்துகிறார்கள். பிறகு அவர்கள் (-அந்த மனிதர்கள்) வழிகேட்டில் குறைவு செய்வதில்லை. (வழிகேட்டில் முன்னேறி கொண்டே இருப்பார்கள்.)"},{"id":203,"translation":"(அவர்கள் விரும்புகிற) ஒரு வசனத்தை நீர் அவர்களிடம் கொண்டு வரவில்லையென்றால் “அதை நீர் (உம் இறைவனிடம் கேட்டு) தேர்ந்தெடுத்திருக்க வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத்தான். இவை, உங்கள் இறைவனிடமிருந்து இறக்கப்பட்டுள்ள தெளிவான ஆதாரங்கள் ஆகும்; நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு இது (அல்லாஹ்வின்) நேர்வழியும், கருணையுமாகும்."},{"id":204,"translation":"இன்னும், (தொழுகையில்) குர்ஆன் ஓதப்பட்டால் நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அதற்கு செவிதாழ்த்துங்கள்! இன்னும், வாய் மூடி அமைதியாக இருங்கள்!"},{"id":205,"translation":"(நபியே!) பணிந்தும், பயந்தும், சொல்லில் சப்தமின்றியும் காலையில் இன்னும் மாலையில் உம் இறைவனை உம் மனதில் நினைவு கூர்வீராக! கவனமற்றவர்களில் (-மறதியாளர்களில்) ஆகிவிடாதீர்!"},{"id":206,"translation":"நிச்சயமாக உம் இறைவனிடம் உள்ள (வான)வர்கள் அவனை வணங்குவதை விட்டு பெருமையடிப்பதில்லை; இன்னும், அவர்கள் அவனை துதிக்கிறார்கள்; இன்னும், அவனுக்கே சிரம் பணிகிறார்கள்."}]},{"id":8,"verses":[{"id":1,"translation":"(நபியே!) ‘அன்ஃபால்’ (போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களைப்) பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். கூறுவீராக: வெற்றிப் பொருள்கள், - அல்லாஹ்விற்கும், தூதருக்கும் சொந்தமானவை ஆகும். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், உங்களுக்கு மத்தியில் சீர்திருத்தம் செய்யுங்கள்; இன்னும், நீங்கள் (உண்மையான, உறுதியான) நம்பிக்கையாளர்களாக இருந்தால் (எல்லாக் காரியங்களிலும்) அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்."},{"id":2,"translation":"நம்பிக்கையாளர்கள் எல்லாம், அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும்; இன்னும், அவனுடைய வசனங்கள் அவர்கள் முன் ஓதப்பட்டால் அவை அவர்களுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்; இன்னும், அவர்கள் தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)ப்பார்கள்."},{"id":3,"translation":"அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்."},{"id":4,"translation":"அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள் ஆவார்கள். அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் பல பதவிகளும் மன்னிப்பும் கண்ணியமான உணவும் (குடிபானமும் சிறப்பான வாழ்க்கையும்) உண்டு."},{"id":5,"translation":"(நபியே!) உம் இறைவன் உம் இல்லத்திலிருந்து சத்தியத்துடன் உம்மை வெளியேற்றிய (போ)து (தர்க்கித்தது) போன்றே (எதிரிகளைப் போரில் சந்திப்பதிலும் உம்மிடம் தர்க்கிப்பார்கள்). இன்னும், நம்பிக்கையாளர்களில் நிச்சயமாக சிலர் (உம்முடன் வர) வெறுப்பார்கள்."},{"id":6,"translation":"(போர் அவசியம் என்ற உண்மை) அவர்களுக்கு தெளிவான பின்னர் அவர்கள் (மரணத்தை கண்கூடாக) பார்ப்பவர்களாக இருந்த நிலையில் (அந்த) மரணத்தின் பக்கம் தாங்கள் ஓட்டிச் செல்லப்படுவது போன்று (போர் கடமை என்ற அந்த) உண்மையில் உம்முடன் தர்க்கிக்கிறார்கள்."},{"id":7,"translation":"(நம்பிக்கையாளர்களே! எதிரிகளின்) இரு கூட்டங்களில் ஒன்றை, நிச்சயமாக அது உங்களுக்கு என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்த சமயத்தை நினைவு கூருங்கள். (அவ்விரண்டில்) ஆயுதமுடையது அல்லாததை, “அது உங்களுக்கு ஆகவேண்டும்” என்று விரும்பினீர்கள். அல்லாஹ் தன் வாக்குகளின் மூலம் உண்மையை உண்மைப்படுத்தவும் (நிலைநாட்டவும்), நிராகரிப்பவர்களின் வேரை துண்டித்து விடவும் நாடுகிறான்."},{"id":8,"translation":"குற்றவாளிகள் வெறுத்தாலும் அவன் உண்மையை உண்மைப்படுத்தவும் பொய்யை அழித்துவிடவும் (நாடுகிறான்)."},{"id":9,"translation":"உங்கள் இறைவனிடம் நீங்கள் பாதுகாப்புத்தேடிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, “தொடர்ந்து வரக்கூடிய ஆயிரம் வானவர்களின் மூலம் நிச்சயமாக நான் உங்களுக்கு உதவுவேன்” என்று (அல்லாஹ்) உங்களுக்குப் பதிலளித்தான்."},{"id":10,"translation":"ஒரு நற்செய்தியாகவும் உங்கள் உள்ளங்கள் அதன் மூலம் நிம்மதி பெறுவதற்காகவும் தவிர அதை (-அந்த உதவியை) அல்லாஹ் ஆக்கவில்லை. அல்லாஹ்விடம் இருந்தே தவிர (உங்களுக்கு) உதவி இல்லை. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":11,"translation":"(நம்பிக்கையாளர்களே! நீங்கள்) அச்சமற்றிருப்பதற்காக (அல்லாஹ்) தன் புறத்திலிருந்து சிறு தூக்கத்தை உங்கள் மீது போர்த்திய சமயத்தை நினைவு கூருங்கள். உங்களை அதன் மூலம் (-மழையின் மூலம்) அவன் சுத்தப்படுத்துவதற்காகவும், உங்களை விட்டு ஷைத்தானுடைய அசுத்தத்தைப் போக்குவதற்காகவும், உங்கள் உள்ளங்களை அவன் பலப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் (உங்கள்) பாதங்களை அவன் உறுதிப்படுத்துவதற்காகவும் (அவனே) உங்கள் மீது வானத்திலிருந்து மழையை இறக்கினான் (பொழியச் செய்தான்)."},{"id":12,"translation":"“நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன். ஆகவே நம்பிக்கையாளர்களை உறுதிப்படுத்துங்கள்; நிராகரிப்பவர்களுடைய உள்ளங்களில் திகிலைப் போடுவேன். ஆவே, நீங்கள் அவர்களுடைய கழுத்துகளுக்கு மேல் வெட்டுங்கள்; அவர்களின் ஒவ்வொரு கணுவையும் (மூட்டுகளையும்) வெட்டுங்கள்” என்று (நபியே!) உம் இறைவன் வானவர்களுக்கு வஹ்யி அறிவித்த சமயத்தை நினைவு கூர்வீராக."},{"id":13,"translation":"அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் முரண்பட்டனர் என்பதாகும். எவர் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் முரண்படுவாரோ (அவரை அல்லாஹ் கடுமையாக தண்டிப்பான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்."},{"id":14,"translation":"அது (உங்களுக்கு இவ்வுலக தண்டனையாகும்)! அதை சுவையுங்கள். இன்னும் நிராகரிப்பவர்களுக்கு (மறுமையில்) நிச்சயமாக நரக தண்டனை உண்டு."},{"id":15,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் நிராகரிப்பவர்களை பெரும் படையாக (போரில்) சந்தித்தால் அவர்களுக்கு (உங்கள்) பின்புறங்களை திருப்பாதீர்கள். (-புறமுதுகு காட்டி ஓடாதீர்கள்)"},{"id":16,"translation":"சண்டையிடுவதற்கு ஒதுங்கக் கூடியவராக, அல்லது (தனது) கூட்டத்துடன் சேர்ந்து கொள்பவராக அல்லாமல் எவர் தன் பின்புறத்தை அவர்களுக்கு அந்நாளில் திருப்புவாரோ (-புறமுதுகு காட்டி ஓடுவாரோ) அவர் அல்லாஹ்வின் கோபத்தை சுமந்து கொண்டார். இன்னும், அவருடைய தங்குமிடம் நரகமாகும். அது மீளுமிடத்தால் மிகக் கெட்டதாகும்."},{"id":17,"translation":"ஆக, (நம்பிக்கையாளர்களே! போரில்) நீங்கள் அவர்களைக் கொல்லவில்லை. என்றாலும். அல்லாஹ்தான் அவர்களைக் கொன்றான். இன்னும், (நபியே! எதிரிகள் மீது நீர் மண்ணை) எறிந்தபோது நீர் எறியவில்லை. என்றாலும், நிச்சயமாக அல்லாஹ்தான் எறிந்தான். அதன் மூலம் நம்பிக்கையாளர்களை அழகிய சோதனையாக அவன் சோதிப்பதற்காக (இவ்வாறு செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன் நன்றிந்தவன் ஆவான்."},{"id":18,"translation":"(மேற்கூறப்பட்ட) அவை (அனைத்தும் அல்லாஹ் செய்தவையாகும்). இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களின் சூழ்ச்சியை பலவீனப்படுத்தக் கூடியவன் ஆவான்."},{"id":19,"translation":"(காஃபிர்களே!) நீங்கள் தீர்ப்புத் தேடினால் உங்களுக்கு தீர்ப்பு வந்துவிட்டது. (ஆகவே, விஷமத்திலிருந்து) நீங்கள் விலகினால் அது உங்களுக்கு சிறந்தது. நீங்கள் (விஷமத்தின் பக்கம்) திரும்பினால் (நாமும் நம்பிக்கையாளர்களுக்கு உதவ) திரும்புவோம். உங்கள் கூட்டம் அது அதிகமாக இருந்தாலும் உங்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்காது. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களுடன் இருக்கிறான்."},{"id":20,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் (அவருடைய கூற்றை) செவிமடுப்பவர்களாக இருக்கும் நிலையில் அவரை விட்டு விலகாதீர்கள்."},{"id":21,"translation":"இன்னும், அவர்களோ செவியேற்காதவர்களாக இருக்கும் நிலையில், “செவியுற்றோம்” என்று கூறியவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள்."},{"id":22,"translation":"நிச்சயமாக அல்லாஹ்விடம் ஊர்வனவற்றில் மிகக் கொடூரமானவர்கள் யாரென்றால் சிந்தித்துப் புரியாத ஊமைகளான செவிடர்கள்தான்."},{"id":23,"translation":"இன்னும், அவர்களிடம் ஏதும் நன்மையை அல்லாஹ் அறிந்திருந்தால் (இந்த குர்ஆனை) அவர்கள் செவியுறும்படி செய்திருப்பான். இன்னும், அவன் அவர்களைச் செவியுறச் செய்தாலும் அவர்கள் (அதை) புறக்கணிப்பவர்களாக இருக்கும் நிலையில் விலகி சென்றுவிடுவார்கள்."},{"id":24,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும், (அவனுடைய) தூதருக்கும் - அவர் உங்களுக்கு (உயர்வான) வாழ்க்கையை தரக்கூடியதன் பக்கம் உங்களை அழைத்தால் - பதிலளியுங்கள் (உடனே கீழ்ப்படிந்து நடங்கள்!). இன்னும், “நிச்சயமாக அல்லாஹ் மனிதனுக்கும் அவனுடைய உள்ளத்திற்கும் நடுவில் தடையாகிறான். இன்னும், நிச்சயமாக நீங்கள் அவனிடமே ஒன்றுதிரட்டப்படுவீர்கள்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":25,"translation":"இன்னும், நிச்சயமாக உங்களில் உள்ள அநியாயக்காரர்களை மட்டுமே வந்தடையாத ஒரு தண்டனையை அஞ்சுங்கள். இன்னும், :நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":26,"translation":"இன்னும், நீங்கள் பூமியில் குறைவானவர்களாக, பலவீனர்களாக இருந்தபோது உங்களை மக்கள் தாக்கி (சிதறடித்து) விடுவதை பயந்தவர்களாக இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அவன் உங்களுக்கு ஒதுங்க இடமளித்தான்; இன்னும், தன் உதவியினால் உங்களைப் பலப்படுத்தினான்; இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான்."},{"id":27,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கும், தூதருக்கும் துரோகம் செய்யாதீர்கள். இன்னும், நீங்கள் அறிந்தவர்களாக இருக்கும் நிலையில் உங்கள் (மீது சுமத்தப்பட்ட) பொறுப்புகளுக்கு துரோகம் செய்யாதீர்கள்."},{"id":28,"translation":"இன்னும், “உங்கள் செல்வங்கள், உங்கள் சந்ததிகள் எல்லாம் ஒரு சோதனையாகும்; நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான் மகத்தான கூலி உண்டு” என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":29,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவன் உங்களுக்கு (எதிரிகளின் பொய்யையும் உங்களின் உண்மையை பிரித்தறிவிக்கும்) ஒரு வித்தியாசத்தை (-ஓர் அளவுகோலை) ஏற்படுத்துவான்; இன்னும், உங்களை விட்டு உங்கள் பாவங்களை அகற்றி விடுவான்; இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்."},{"id":30,"translation":"(நபியே!) நிராகரிப்பவர்கள் உம்மைச் சிறைப்படுத்துவதற்கு; அல்லது, அவர்கள் உம்மைக் கொல்வதற்கு; அல்லது, உம்மை வெளியேற்றுவதற்கு உமக்கு சூழ்ச்சி செய்த சமயத்தை நினைவு கூர்வீராக. (அவர்கள்) சூழ்ச்சி செய்கிறார்கள். இன்னும், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான். சூழ்ச்சி செய்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன்."},{"id":31,"translation":"நம் வசனங்கள் (நிராகரிக்கின்ற) அவர்கள் மீது ஓதப்பட்டால், “(நாம் இதை முன்பே) திட்டமாக செவியேற்று விட்டோம். நாம் நாடியிருந்தால் இது போன்று கூறியிருப்போம். முன்னோரின் கட்டுக் கதைகளாகவே தவிர இவை இல்லை” என்று கூறுகிறார்கள்."},{"id":32,"translation":"(நபியே! அந்நிராகரிப்பவர்கள்) “அல்லாஹ்வே! இதுதான் உன்னிடமிருந்து (இறக்கப்பட்ட) உண்மையா(ன வேதமா)க இருக்குமேயானால், எங்கள் மீது வானத்திலிருந்து கல் மழை பொழி! அல்லது துன்புறுத்தும் (ஒரு) தண்டனையை எங்களிடம் கொண்டு வா!” என்று அவர்கள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக."},{"id":33,"translation":"நீர் அவர்களுடன் இருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை தண்டனை செய்பவனாக இல்லை. இன்னும், அவர்கள் மன்னிப்புத் தேடுபவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ் அவர்களை தண்டிப்பவனாக இல்லை."},{"id":34,"translation":"(இவ்விரு காரணங்கள் இல்லாதிருப்பின்) அல்லாஹ் அவர்களை தண்டிக்காமல் இருக்க அவர்களுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்? அவர்களோ (நம்பிக்கையாளர்களை) புனிதமான மஸ்ஜிதை விட்டுத் தடுக்கிறார்கள். அவர்களோ அதன் பொறுப்பாளர்களாக இருக்கவில்லை. அதன் பொறுப்பாளர்கள் இல்லை, இறை அச்சமுள்ளவர்களே தவிர. எனினும், நிச்சயமாக அவர்களில் அதிகமானோர் (இதை) அறிய மாட்டார்கள்."},{"id":35,"translation":"இறை ஆலயம் (கஅபா) அருகில் அவர்களுடைய வழிபாடானது இருக்கவில்லை சீட்டியடிப்பதாகவும், கை தட்டுவதாகவும் தவிர. (ஆகவே) “நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் (இன்று) தண்டனையை சுவையுங்கள்” (என்று மறுமையில் அவர்களுக்கு கூறப்படும்)."},{"id":36,"translation":"நிச்சயமாக, நிராகரிப்பவர்கள் தங்கள் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுப்பதற்கு செலவு செய்கிறார்கள். அவர்கள் (மேலும் இவ்வாறே தொடர்ந்து) அவற்றை செலவு செய்வார்கள். பிறகு, அவை அவர்கள் மீது துக்க(த்திற்கு காரண)மாக மாறிவிடும்! பிறகு, (அவர்கள்) வெற்றி கொள்ளப்படுவார்கள். இன்னும், (இத்தகைய) நிராகரிப்பாளர்கள் நரகத்தின் பக்கமே ஒன்று திரட்டப்படுவார்கள்."},{"id":37,"translation":"இறுதியில், அல்லாஹ் நல்லவர்களிலிருந்து கெட்டவர்களைப் பிரித்துவிடுவான். இன்னும், கெட்டவர்களை (நரக படித்தரங்களில்) அவர்களில் சிலரை சிலர் மீது ஆக்கிவிடுவான். ஆக அவர்கள் அனைவரையும் அவன் ஒன்றிணைத்து, அவர்களை நரகத்தில் ஆக்கிவிடுவான். அவர்கள்தான் நஷ்டவாளிகள்."},{"id":38,"translation":"(நபியே!) நிராகரிப்பவர்களுக்கு கூறுவீராக: “(இனியேனும் அவர்கள் விஷமத்திலிருந்து) விலகிக்கொண்டால் முன்சென்றவை அவர்களுக்கு மன்னிக்கப்படும். இன்னும், (விஷமத்தின் பக்கம் அவர்கள்) மீண்டால் முன்னோரின் வழிமுறை சென்று விட்டது. (அவர்களுக்கு நிகழ்ந்த அதே தண்டனை இவர்களுக்கும் நிகழும்.)"},{"id":39,"translation":"இன்னும், குழப்பம் (-இணைவைத்தல்) இல்லாமல் ஆகி, வழிபாடு எல்லாம் அல்லாஹ்விற்கு மட்டும் ஆகும் வரை அவர்களிடம் போரிடுங்கள். ஆக, (விஷமத்திலிருந்து) அவர்கள் விலகிக்கொண்டால் (அதற்கேற்ப அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்.) நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":40,"translation":"இன்னும், அவர்கள் (இஸ்லாமை ஏற்பதை விட்டு) விலகினால் (அவர்கள் உங்களுக்கு எந்தத் தீங்கையும் செய்துவிட முடியாது. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மவ்லா (தலைவன், பொறுப்பாளன், உரிமையாளன், நிர்வகிப்பவன், எஜமானன், பரிபாலிப்பவன், ஆதரவாளன், அரசன்) என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவன் சிறந்த மவ்லா ஆவான். இன்னும், அவன் சிறந்த உதவியாளன் ஆவான்."},{"id":41,"translation":"“நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களாக இருந்தால், இன்னும், (உண்மை மற்றும் பொய்யிற்கும் நடுவில்) பிரித்தறிவிக்கப்பட்ட நாளில்; (நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய) இரு படைகள் (போரில்) சந்தித்த நாளில் நம் அடியார் மீது நாம் இறக்கியதை நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நிச்சயமாக நீங்கள் (போரில்) வென்ற பொருள் எதுவாக இருந்தாலும் அதில் ஐந்தில் ஒன்று அல்லாஹ்விற்கும், தூதருக்கும், (அவருடைய) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், பயணிகளுக்கும் உரியதாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்.”"},{"id":42,"translation":"நீங்கள் (‘பத்ர்’ போரில் மதீனாவுக்குச்) சமீபமான பள்ளத்தாக்கிலும், அவர்கள் தூரமான பள்ளத்தாக்கிலும் (வர்த்தகர்களாகிய) வாகனக்காரர்கள் உங்களுக்குக் கீழே (உங்களை விட்டு தூரமாக) இருந்த சமயத்தை நினைவு கூருங்கள். நீங்கள் (ஒருவருக்கொருவர்) வாக்குறுதி கொடுத்திருந்தால் குறிப்பிட்ட நேரத்தில் (வந்து சேர முடியாமல்) நீங்கள் தவறிழைத்திருப்பீர்கள். எனினும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும்; அழிபவன் ஆதாரத்துடன் அழிவதற்காகவும்; (தப்பி உயிர்) வாழ்பவன் ஆதாரத்துடன் வாழ்வதற்காகவும் (இவ்வாறு உங்களை அல்லாஹ் போரில் சந்திக்க வைத்தான்). நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":43,"translation":"(நபியே!) அல்லாஹ், உமது கனவில் அவர்களை உமக்கு குறைவாக காண்பித்த சமயத்தை நினைவு கூர்வீராக. உமக்கு அவர்களை அதிகமானவர்களாக காண்பித்திருந்தால் (பிறகு நீர் அதை முஸ்லிம்களுக்கு கூறி இருந்தால் முஸ்லிம்களே) நீங்கள் கோழையாகி இருப்பீர்கள்; இன்னும், (போர் பற்றிய) காரியத்தில் ஒருவருக்கொருவர் (உங்களுக்குள்) தர்க்கித்திருப்பீர்கள். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் (உங்களை) காப்பாற்றினான். நிச்சயமாக அவன், நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":44,"translation":"இன்னும், முடிவு செய்யப்பட்டதாக இருக்கின்ற ஒரு காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காக நீங்கள் (அவர்களை) சந்தித்தபோது உங்கள் கண்களில் உங்களுக்கு அவர்களை குறைவாக காண்பித்து, உங்களை அவர்களுடைய கண்களில் குறைவாக காண்பித்தபோது (சத்தியம் வென்றது, அசத்தியம் தோற்றுப்போனது). இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படுகின்றன."},{"id":45,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் (எதிரிகளின்) ஒரு பிரிவை (போரில்) சந்தித்தால், நீங்கள் வெற்றி பெறுவதற்காக (போர்க்களத்தில்) உறுதியாக இருங்கள். (-போர் நடக்கும் மைதானத்தை விட்டு விலகி ஓடிவிடாதீர்கள்.) இன்னும், அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருங்கள்."},{"id":46,"translation":"இன்னும், அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்; இன்னும், (உங்களுக்குள்) தர்க்கிக்காதீர்கள் (சண்டை சச்சரவு செய்து கொள்ளாதீர்கள்)!. அவ்வாறாயின், நீங்கள் தோற்றுவிடுவீர்கள்; இன்னும், உங்கள் ஆற்றலும் போய்விடும். இன்னும், நீங்கள் பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்."},{"id":47,"translation":"இன்னும், எவர்கள் பெருமைக்காகவும் மக்களுக்குக் காண்பிப்பதற்காகவும் தங்கள் இல்லங்களிலிருந்து புறப்பட்டார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்களோ அவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை சூழ்ந்திருப்பவன் ஆவான்."},{"id":48,"translation":"இன்னும், ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அலங்கரித்து, “மக்களில் இன்று உங்களை வெல்பவர் அறவே இல்லை; இன்னும், உங்களுக்கு நிச்சயமாக நான் துணை ஆவேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். ஆக, இரு பிரிவினர்களும் ஒருவருக்கொருவர் பார்த்தபோது தன் இரு குதிங்கால்கள் மீது (ஷைத்தான்) திரும்பி (ஓடி)னான். இன்னும், “நிச்சயமாக நான் உங்களை விட்டு விலகியவன் ஆவேன். நீங்கள் பார்க்காததை நிச்சயமாக நான் பார்க்கிறேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்; இன்னும், அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன்” என்று கூறினான்."},{"id":49,"translation":"நயவஞ்சகர்களும், தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும், (நம்பிக்கையாளர்களை நோக்கி) “இவர்களை இவர்களுடைய மார்க்கம் மயக்கிவிட்டது” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். எவர் அல்லாஹ் மீது நம்பிக்கை வை(த்து அவனை சார்ந்து இரு)ப்பாரோ (அவரே வெற்றியாளர்.) நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":50,"translation":"(நபியே!) வானவர்கள், நிராகரித்தவர்களை - அவர்களின் முகங்களிலும் முதுகுகளிலும் அடித்தவர்களாக - “எரிக்கக்கூடிய (நரக) தண்டனையை சுவையுங்கள்” (என்று கூறியவர்களாக) - உயிர் கைப்பற்றும்போது நீர் பார்த்தால் (அது ஒரு பயங்கரமான காட்சியாக இருக்கும்)."},{"id":51,"translation":"அதற்குக் காரணம், “உங்கள் கரங்கள் முற்படுத்தியவையும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு அறவே அநீதியிழைப்பவன் இல்லை என்பதும் ஆகும்.”"},{"id":52,"translation":"ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தின் நிலைமையைப் போன்றும்; இன்னும், அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்றும் (இவர்களுடைய நிலைமை இருக்கிறது). அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமையானவன், தண்டிப்பதில் கடுமையானவன்."},{"id":53,"translation":"அதற்குக் காரணமாகும், நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்தின் மீது, தான் அருள்புரிந்த அருட்கொடையை - அவர்கள் தங்களிடம் உள்ளதை மாற்றும் வரை - மாற்றுபவனாக இல்லை என்பதும் இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் (ஆவான். ஆகவே, அடியார்களின் செயல்களுக்கு ஏற்ப கூலி கொடுக்கிறான்) என்பதும் ஆகும்."},{"id":54,"translation":"ஃபிர்அவ்னுடைய சமுதாயம் இன்னும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் நிலைமையைப் போன்று (இவர்களின் நிலைமை இருக்கிறது). அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களுடைய பாவங்களினால் அவர்களை அழித்தோம். இன்னும், ஃபிர்அவ்னுடைய சமுதாயத்தை மூழ்கடித்தோம். இன்னும், (இவர்கள்) எல்லோரும் அநியாயக்காரர்களாக இருந்தனர்."},{"id":55,"translation":"நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் மிருகங்களில் (எல்லாம்) மிகக் கொடியவர்கள், எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்கள்தான். ஆக, அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்."},{"id":56,"translation":"நீர் அவர்களிடம் உடன்படிக்கை செய்தீர்கள். பிறகு, அவர்கள் தங்கள் உடன்படிக்கையை ஒவ்வொரு முறையிலும் முறிக்கிறார்கள். இன்னும், அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவதில்லை."},{"id":57,"translation":"ஆக, போரில் நீர் அவர்களைப் பெற்றுக் கொண்டால் அவர்களை (தண்டிப்பதை)க் கொண்டு அவர்களுக்குப் பின்னுள்ளவர்களை விரட்டியடிப்பீராக, அவர்கள் நல்லறிவு பெறுவதற்காக."},{"id":58,"translation":"இன்னும், (உம்முடன் உடன்படிக்கை செய்த) சமுதாயத்திடமிருந்து மோசடியை நீர் பயந்தால், (அதற்குச்) சமமாக (அந்த ஒப்பந்தத்தை) நீர் அவர்களிடம் எறிந்து விடுவீராக. (அவர்களுடன் செய்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அறிவித்துவிடுவீராக!) நிச்சயமாக அல்லாஹ், மோசடிக்காரர்களை நேசிக்க மாட்டான்."},{"id":59,"translation":"நிராகரித்தவர்கள் தாங்கள் முந்திவிட்டதாக (அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்பித்துவிட்டதாக) ஒருபோதும் எண்ண வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மை) பலவீனப்படுத்த முடியாது."},{"id":60,"translation":"இன்னும், அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்திலிருந்தும், போர் குதிரைகளில் இருந்தும் உங்களுக்கு முடிந்ததை ஏற்பாடு செய்யுங்கள். அதன்மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்கள் எதிரிகளையும் (நீங்கள் அறியாத) அவர்கள் அல்லாத (பகைமையை மறைத்திருக்கும்) மற்றவர்களையும் நீங்கள் அச்சுறுத்த வேண்டும். நீங்கள் அவர்களை அறிய மாட்டீர்கள், அல்லாஹ் அவர்களை அறிவான். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் பொருள்களில் எதை தர்மம் செய்தாலும் அ(தற்குரிய நற்கூலியான)து உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். இன்னும், நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள்."},{"id":61,"translation":"இன்னும், அவர்கள் சமாதானத்திற்கு இணங்கினால், நீர் அதற்கு இணங்குவீராக! அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":62,"translation":"இன்னும், (நபியே!) அவர்கள் உம்மை ஏமாற்ற நாடினால் நிச்சயமாக உமக்குப் போதுமானவன் அல்லாஹ்தான். அவன், தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உம்மை பலப்படுத்தி இருக்கிறான்."},{"id":63,"translation":"இன்னும், அவன் அவர்களுடைய உள்ளங்களுக்கிடையில் (இணக்கத்தை ஏற்படுத்தி) ஒன்றிணைத்தான். பூமியிலுள்ளவை அனைத்தையும் நீர் செலவு செய்தாலும் அவர்களுடைய உள்ளங்களுக்கு மத்தியில் நீர் (இணக்கத்தை ஏற்படுத்தி) ஒன்றிணைத்திருக்க மாட்டீர். என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் ஒன்றிணைத்தான். நிச்சயமாக அவன் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":64,"translation":"நபியே! அல்லாஹ்தான் உமக்கும் உம்மைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கும் போதுமானவன்."},{"id":65,"translation":"நபியே! நம்பிக்கையாளர்களை போருக்குத் தூண்டுவீராக! உங்களில் இருபது பொறுமையாளர்கள் இருந்தால் (அவர்கள் உங்கள் எதிரிகளில்) இருநூறு நபர்களை வெல்வார்கள். உங்களில் (அத்தகைய) நூறு நபர்கள் இருந்தால் நிராகரித்தவர்களில் ஆயிரம் நபர்களை வெல்வார்கள். (அதற்குக்) காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்து விளங்காத மக்கள் ஆவார்கள்."},{"id":66,"translation":"இப்போது அல்லாஹ் உங்களுக்கு (சட்டத்தை) இலகுவாக்கினான். இன்னும், நிச்சயமாக உங்களில் பலவீனம் உள்ளது என்பதை அவன் அறிந்திருக்கிறான். ஆக, உங்களில் நூறு பொறுமையாளர்கள் இருந்தால் (எதிரிகளில்) இருநூறு நபர்களை அவர்கள் வெல்வார்கள். இன்னும், (இத்தகைய) ஆயிரம் நபர்கள் உங்களில் இருந்தால், அல்லாஹ்வின் அனுமதியினால் (எதிரிகளில்) இரண்டாயிரம் நபர்களை அவர்கள் வெல்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்."},{"id":67,"translation":"(பத்ர் போரில் கைது செய்யப்பட்ட எதிரிகளை) இப்பூமியில் கொன்று குவிக்காமல், அவர்களை கைதிகளாக்குவது (பின்னர், பிணைத் தொகை வாங்கி விடுவிப்பது) நபிக்கு ஆகுமானதல்ல. (நபியின் தோழர்களே! நீங்கள்) உலகத்தின் பொருளை நாடுகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமையை நாடுகிறான். அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":68,"translation":"அல்லாஹ்விடமிருந்து (உங்களுக்கு மன்னிப்பு எனும்) விதி முந்தியிருக்கவில்லையெனில் நீங்கள் (கைதிகளிடம் மீட்புத்தொகை) வாங்கியதில் மகத்தான தண்டனை உங்களைப் பிடித்தே இருக்கும்."},{"id":69,"translation":"ஆகவே, நீங்கள் எதை (போரில்) வென்று சொந்தமாக்கினீர்களோ அந்த ஆகுமான நல்லதை புசியுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக, அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":70,"translation":"நபியே! கைதிகளில் உங்கள் கரங்களில் (உங்கள் கட்டுப்பாட்டில்) உள்ளவர்களுக்கு கூறுவீராக: “உங்கள் உள்ளங்களில் நல்ல (எண்ணத்)தை அல்லாஹ் அறிந்தால் உங்களிடமிருந்து எடுக்கப்பட்டதை விட சிறந்ததை உங்களுக்குக் கொடுப்பான். இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்.”"},{"id":71,"translation":"(நபியே!) ஆனால், அவர்கள் உமக்கு மோசடி செய்ய நாடினால் (இதற்கு) முன்னர் அவர்கள் அல்லாஹ்விற்கு(ம்) மோசடி செய்துள்ளனர். ஆகவே, அவர்கள் மீது (அல்லாஹ் உங்களுக்கு) ஆதிக்கமளித்தான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":72,"translation":"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, (தங்கள் ஊரை விட்டு வெளியேறி) ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருள்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தவர்கள்; இன்னும், (இவர்களை) அரவணைத்து, உதவியவர்கள் இவர்கள், - இவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவர். இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு; ஆனால், ஹிஜ்ரத் செல்லவில்லையோ அவர்கள் ஹிஜ்ரத் செல்லும் வரை எந்த ஒரு காரியத்திற்கும் அவர்களுக்காக பொறுப்பேற்பது உங்களுக்கு ஆகுமானதல்ல. இன்னும், மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவிதேடினால் (அவர்களுக்கு) உதவுவது உங்கள் மீது கடமையாகும். (எனினும்,) உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கை உள்ள ஒரு சமுதாயத்திற்கு எதிராக தவிர. (உடன்படிக்கை செய்தவர்களுக்கு எதிராக உதவுவது ஆகுமானதல்ல.) அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":73,"translation":"இன்னும், நிராகரிப்பவர்கள் - அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள். நீங்கள் அதை செய்யவில்லையென்றால் (நம்பிக்கையாளர்களே! நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவவில்லையென்றால்), பூமியில் குழப்பமும் (இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராக) பெரும் கலகமும் ஆகிவிடும்."},{"id":74,"translation":"ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்தார்களோ; இன்னும், (அவர்களை) அரவணைத்து உதவி செய்தார்களோ அவர்கள்தான் உண்மையில் நம்பிக்கையாளர்கள். அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான உணவும் உண்டு."},{"id":75,"translation":"இன்னும், எவர்கள் (இவர்களுக்கு) பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, உங்களுடன் சேர்ந்து (உங்கள் எதிரிகளிடம்) போர் புரிந்தார்களோ அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான். இன்னும், அல்லாஹ்வின் வேதத்தில் இரத்த பந்தங்கள் - அவர்களில் சிலர் சிலருக்கு - நெருக்கமானவர்கள் (-உரிமை உள்ளவர்வர்கள்) ஆவார்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."}]},{"id":9,"verses":[{"id":1,"translation":"அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் நீங்கள் உடன்படிக்கை செய்த இணைவைப்பாளர்களை நோக்கி அறிவிக்கப்படுவதாவது: “(அல்லாஹ்வும் ரஸூலும் இணைவைப்பாளர்களின் உடன்படிக்கையிலிருந்து) விலகி விடுகிறார்கள்” என்று."},{"id":2,"translation":"ஆகவே, (இணைவைப்பவர்களே) “நீங்கள் நான்கு மாதங்கள் பூமியில் (சுதந்திரமாக) சுற்றலாம். இன்னும், “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை இழிவுபடுத்துவான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.”"},{"id":3,"translation":"இன்னும், இணைவைப்பவர்களிலிருந்து நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் விலகியவர்கள் என்று அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரிடமிருந்து, மாபெரும் ஹஜ்ஜுடைய நாளில் (அறிவிக்கப்படும்) அறிவிப்பாகும் இது. ஆகவே, (இணைவைப்பதிலிருந்து) நீங்கள் திருந்தினால் அது உங்களுக்கு மிக நல்லதாகும். நீங்கள் (திருந்தாமல்) விலகினால் நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை பலவீனப்படுத்துபவர்கள் அல்லர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (நபியே!) நிராகரித்தவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை உண்டு என்று நற்செய்தி கூறுவீராக."},{"id":4,"translation":"(எனினும்,) இணைவைப்பவர்களில் எவர்களிடம் நீங்கள் உடன்படிக்கை செய்து, பிறகு அவர்கள் (உடன்படிக்கையின் அம்சங்களில்) எதையும் உங்களுக்கு குறைக்காமலும், உங்களுக்கு எதிராக (எதிரிகளில்) ஒருவருக்கும் உதவாமலும் இருந்தார்களோ அவர்களைத் தவிர. ஆக, அவர்களுக்கு அவர்களின் உடன்படிக்கையை அவர்களுடைய (உடன்படிக்கையின்) தவணை (முடியும்) வரை முழுமைப்படுத்துங்கள். நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":5,"translation":"ஆக, புனித மாதங்கள் முடிந்துவிட்டால் (மக்கா நகரத்தை சேர்ந்த) இணைவைப்பாளர்களை - நீங்கள் அவர்களை எங்கு கண்டாலும் - கொல்லுங்கள்; இன்னும், அவர்களை(ச்சிறைப்) பிடியுங்கள்; இன்னும், அவர்களை முற்றுகையிடுங்கள்; இன்னும், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் (அவர்களை எதிர்பார்த்து) அவர்களுக்காக அமருங்கள். ஆக, அவர்கள் (இணைவைப்பிலிருந்து) திருந்தி, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்தால் அவர்களுடைய வழியை விட்டு விடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன் பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":6,"translation":"இன்னும், (நபியே!) அந்த இணைவைப்பவர்களில் ஒருவர் உம்மிடம் பாதுகாப்புத் தேடினால், அல்லாஹ்வின் பேச்சை அவர் செவியுறும் வரை அவருக்கு பாதுகாப்பு அளிப்பீராக! பிறகு அவரை அவருடைய பாதுகாப்பான இடத்திற்குச் சேர்த்து விடுவீராக! அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அறியாத மக்கள் ஆவார்கள்."},{"id":7,"translation":"அல்லாஹ்விடத்திலும், அவனுடைய தூதரிடத்திலும் இணைவைப்பவர்களுக்கு உடன்படிக்கை எப்படி (நீடித்து) இருக்கும்? (ஆயினும்) புனித மஸ்ஜிதுக்கு அருகில் நீங்கள் உடன்படிக்கை செய்தவர்களைத் தவிர. அவர்கள் உங்களுடன் ஒழுங்காக நேர்மையாக நடக்கும் வரை நீங்களும் அவர்களுடன் ஒழுங்காக நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":8,"translation":"எவ்வாறு (அவர்களை நம்ப முடியும்)? அவர்கள் உங்களை வெற்றி கொண்டால் உங்களுடன் (அவர்களுக்கு இருக்கின்ற வமிச, குடும்ப இரத்த) உறவையும் (அவர்கள் உங்களுடன் செய்த) உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். தங்கள் வாய் (வார்த்தை)களால் உங்களைத் திருப்திப்படுத்துகிறார்கள்; இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் (உங்களை ஏற்க) மறுக்கின்றன. அவர்களில் அதிகமானோர் (சட்டங்களை மீறுகின்ற) பாவிகள் ஆவர்."},{"id":9,"translation":"அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களுக்குப் பகரமாக சொற்ப விலையை வாங்கினார்கள். இன்னும், (மக்களை) அவனுடைய பாதையை விட்டுத் தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகக் கெட்டதாகும்."},{"id":10,"translation":"அவர்கள், நம்பிக்கையாளர்கள் விஷயத்தில் (வமிச, குடும்ப இரத்த) உறவையும் (அவர்கள் உங்களுடன் செய்த) உடன்படிக்கையையும் பொருட்படுத்தமாட்டார்கள். இன்னும், அவர்கள்தான் (உடன்படிக்கைகளை) மீறக் கூடியவர்கள் ஆவார்கள்."},{"id":11,"translation":"ஆக, அவர்கள் (தங்கள் குற்றங்களில் இருந்து) திருந்தி (அல்லாஹ்வின் பக்கம் திரும்பி மன்னிப்புக் கோரி) தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தையும் கொடுத்தால் (அவர்கள்) மார்க்கத்தில் உங்கள் சகோதரர்கள் ஆவார்கள். (தங்களுக்கு விவரிக்கப்படுவதை) அறிந்து கொள்கின்ற மக்களுக்கு நாம் வசனங்களை (இந்த வேதத்தில்) விவரித்து கூறுகிறோம்."},{"id":12,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் உடன்படிக்கைக்குப் பின்னர் தங்கள் சத்தியங்களை முறித்தால்: இன்னும், உங்கள் மார்க்கத்தில் குறை கூறி குத்திப் பேசினால், அவர்கள் (இக்குற்றத்திலிருந்து) விலகிக் கொள்வதற்காக நிராகரிப்புடைய (இத்தகைய) தலைவர்களிடம் போரிடுங்கள். நிச்சயமாக அவர்களுக்கு சத்தியங்கள் அறவே இல்லை. (இவர்கள் தங்கள் சத்தியங்களை மதித்து நடக்க மாட்டார்கள்.)"},{"id":13,"translation":"தங்கள் சத்தியங்களை முறித்து, தூதரை (ஊரைவிட்டு) வெளியேற்றுவதற்கு முடிவெடுத்த மக்களிடம் நீங்கள் போர்புரிய மாட்டீர்களா? அவர்கள்தான் (கலகத்தை) உங்களிடம் முதல் முறையாக ஆரம்பித்தனர். நீங்கள் அவர்களைப் பயப்படுகிறீர்களா? நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் அல்லாஹ்தான் நீங்கள் பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன் ஆவான்."},{"id":14,"translation":"அவர்களிடம் போரிடுங்கள். உங்கள் கரங்களால் அல்லாஹ் அவர்களை தண்டிப்பான்; இன்னும், அவர்களை இழிவுபடுத்துவான்; இன்னும், அவர்களுக்கு எதிராக உங்களுக்கு உதவுவான்; இன்னும், நம்பிக்கை கொண்ட மக்களின் நெஞ்சங்க(ளில் உள்ள மனக் காயங்க)ளை குணப்படுத்துவான்."},{"id":15,"translation":"இன்னும், அவர்களுடைய உள்ளங்களின் கோபத்தைப் போக்குவான்; இன்னும், அல்லாஹ் (அவர்களில்) தான் நாடியவர்களை திருத்தி, (அவர்களை) மன்னிப்பான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":16,"translation":"(நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவர்கள் (மனம் விரும்பி) போர்புரிந்தார்களோ அவர்களையும்; இன்னும், அல்லாஹ், அவனுடைய தூதர், இன்னும் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகிய இவர்கள் அல்லாதவர்களை அந்தரங்க நண்பர்களாக எவர்கள் எடுத்துக் கொள்ளாமல் இருக்கிறார்களோ அவர்களையும் அல்லாஹ் (வெளிப்படையாக) அறியாமல் இருக்கும் நிலையில், நீங்கள் (சோதிக்கப்படாமல்) விட்டுவிடப்படுவீர்கள் என்று எண்ணிக்கொண்டீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்."},{"id":17,"translation":"அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளைப் பரிபாலிப்பதற்கு இணைவைப்பாளர்களுக்கு உரிமை இருக்கவில்லை. (அவர்களுடைய) நிராகரிப்பிற்கு அவர்களே சாட்சி கூறுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய (நற்)செயல்கள் (இவ்வுலகிலேயே) அழிந்துவிடும். இன்னும், (மறுமையில்) நரகத்திலே அவர்கள் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள்."},{"id":18,"translation":"அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளை பராமரிப்ப(தற்கு தகுதி உள்ள)வர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலைநிறுத்தி, ஸகாத்தைக் கொடுத்து, அல்லாஹ்வைத் தவிர (எவரையும்) பயப்படாதவர்கள்தான். இவர்கள்தான் நேர்வழி பெற்றவர்களில் இருப்பார்கள்."},{"id":19,"translation":"ஹஜ் செய்பவர்களுக்கு தண்ணீர் புகட்டுவதையும், புனித மஸ்ஜிதை பராமரிப்பதையும் - அல்லாஹ் இன்னும் இறுதி நாளை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் போர்புரிந்தவர் (உடைய செயலைப்) போன்று - நீங்கள் ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்விடம் (இவர்கள் இருவரும்) சமமாக மாட்டார்கள். அல்லாஹ், அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":20,"translation":"எவர்கள் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் சென்று, அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் போர் புரிந்தார்களோ அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மிக மகத்தானவர்கள் ஆவார்கள். இன்னும், இவர்கள்தான் (சொர்க்கத்தைக் கொண்டு) வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்."},{"id":21,"translation":"அவர்களுடைய இறைவன் தன்னிடமிருந்து (தன்) கருணை; இன்னும், (தனது) பொருத்தம்; இன்னும், சொர்க்கங்களைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுகிறான். அவற்றில் அவர்களுக்கு நிலையான இன்பம் உண்டு."},{"id":22,"translation":"அவற்றில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம் மகத்தான கூலியுண்டு."},{"id":23,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்கள் தந்தைமார்களையும், (உங்கள் தாய்மார்களையும்) உங்கள் சகோதரர்களையும் (உங்கள் சகோதரிகளையும் உங்களுக்கு உற்ற நேசர்களாகவும்) பொறுப்பாளர்களாக(வும்) எடுத்துக் கொள்ளாதீர்கள், - அவர்கள் (இஸ்லாமை ஏற்காமல்) இறைநம்பிக்கையை விட நிராகரிப்பை விரும்பினால். இன்னும், உங்களில் எவர்கள் அவர்களை பொறுப்பாளர்களாக (நேசர்களாக) ஆக்கிக் கொள்வார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."},{"id":24,"translation":"(நபியே! நம்பிக்கையாளர்களை நோக்கி) கூறுவீராக: “உங்கள் தந்தைமார்களும், (உங்கள் தாய்மார்களும்) உங்கள் ஆண் பிள்ளைகளும், (உங்கள் பெண் பிள்ளைகளும்) உங்கள் சகோதரர்களும், (உங்கள் சகோதரிகளும்) உங்கள் மனைவிகளும், (நீங்கள் பெண்களாக இருந்தால் உங்கள் கணவன்மார்களும்) உங்கள் குடும்பமும், நீங்கள் சம்பாதித்த செல்வங்களும், அது மந்தமாகிவிடுமோ என்று நீங்கள் பயப்படும் வர்த்தகமும், நீங்கள் விரும்பும் வீடுகளும் அல்லாஹ்வை விட; இன்னும், அவனுடைய தூதரை விட; இன்னும், அவனுடைய பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு மிக விருப்பமாக இருந்தால் அல்லாஹ் (உங்களிடம்) தன் (தண்டனையின்) கட்டளையைக் கொண்டு வரும் வரை எதிர்பாருங்கள். இன்னும், அல்லாஹ் பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":25,"translation":"அதிகமான போர்க்களங்களிலும் ஹுனைன் போரிலும் அல்லாஹ் உங்களுக்கு திட்டவட்டமாக உதவினான். நீங்கள் (எண்ணிக்கையில்) அதிகமாக இருப்பது உங்களை பெருமைப்படுத்தியபோது (அந்த எண்ணிக்கை) உங்களுக்கு எதையும் பலன் தரவில்லை. இன்னும், பூமி - அது விசாலமாக இருந்தும் உங்களுக்கு நெருக்கடியாகி விட்டது. பிறகு, நீங்கள் புறமுதுகு காட்டியவர்களாக திரும்பி (ஓடி)னீர்கள்."},{"id":26,"translation":"பிறகு, அல்லாஹ் தன் தூதர் மீதும், நம்பிக்கை கொண்டவர்கள் மீதும் தன் (புறத்திலிருந்து) அமைதியை இறக்கினான். இன்னும், சில படைகளை இறக்கினான். அவர்களை நீங்கள் பார்க்கவில்லை. இன்னும், நிராகரித்தவர்களை தண்டித்தான். இதுதான் நிராகரிப்பவர்களின் கூலியாகும்."},{"id":27,"translation":"பிறகு, அதற்குப் பின்னர் அல்லாஹ், தான் நாடியவர்களை திருந்த செய்து அவர்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":28,"translation":"நம்பிக்கையாளர்களே! இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். ஆகவே, அவர்கள் அவர்களுடைய இந்த ஆண்டிற்குப் பின்னர் புனித மஸ்ஜிதை நெருங்கக் கூடாது. வறுமையை நீங்கள் பயந்தால், தனது அருளினால் உங்களை நிறைவாக்குவான் (உங்களுக்கு தேவையான செல்வத்தை வழங்குவான்) அல்லாஹ் நாடினால். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":29,"translation":"வேதம் கொடுக்கப்பட்டவர்களில் எவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்ளாமல், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் தடை செய்தவற்றை தடை செய்யாமல், சத்திய மார்க்கத்தை மார்க்கமாக ஏற்காமல் இருக்கிறார்களோ அவர்களிடம் - அவர்களோ (சிறுமையடைந்தவர்களாக) பணிந்தவர்களாக இருக்கும் நிலையில், உடனே வரியை கொடுக்கும் வரை - நீங்கள் போர் புரியுங்கள்."},{"id":30,"translation":"‘உஸைர்’ அல்லாஹ்வுடைய மகன் என்று யூதர்கள் கூறுகிறார்கள். ‘மஸீஹ்’அல்லாஹ்வுடைய மகன் என்று கிறித்தவர்கள் கூறுகிறார்கள். இது, அவர்களின் வாய்களில் இருந்து வரும் அவர்களின் (கற்பனைக்) கூற்றாகும் (உண்மையில்லை). முன்னர் நிராகரித்தவர்களின் கூற்றுக்கு ஒப்பா(க இவர்களும் பேசு)கிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். அவர்கள் எப்படி (உண்மையை விட்டு வழிகேட்டின் பக்கம்) திருப்பப்படுகிறார்கள்?"},{"id":31,"translation":"இவர்கள் அல்லாஹ்வையன்றி தங்கள் அறிஞர்களையும் தங்கள் துறவிகளையும் மர்யமுடைய மகன் (ஈஸா) மஸீஹையும் கடவுள்களாக எடுத்துக் கொண்டனர். வணக்கத்திற்குரிய ஒரே ஓர் இறைவனை அவர்கள் வணங்குவதற்கே தவிர அவர்கள் ஏவப்படவில்லை. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிகத் தூயவன்."},{"id":32,"translation":"இவர்கள் தங்கள் வாய்களால் (ஊதி) அல்லாஹ்வுடைய ஒளியை அணைப்பதற்கு விரும்புகிறார்கள். நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் அல்லாஹ் தன் ஒளியை முழுமைப்படுத்தியே தீருவான்."},{"id":33,"translation":"அவன், தன் தூதரை நேர்வழியுடனும் உண்மையான மார்க்கத்துடனும் அனுப்பினான், - எல்லா மார்க்கங்களைப் பார்க்கிலும் அதை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே!"},{"id":34,"translation":"நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக யூத, கிறித்தவ அறிஞர்களில் இருந்தும் இன்னும் துறவிகளில் இருந்தும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறாக அனுபவிக்கிறார்கள். இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்துவிட்டு, அவற்றை அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்ய மாட்டார்களோ, துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு என்று நற்செய்தி கூறுவீராக."},{"id":35,"translation":"மறுமை நாளில், அவற்றை (-அந்த தங்கம் வெள்ளிகளை) நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்படும். ஆக, அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளுக்கும், அவர்களுடைய விலாக்களுக்கும், அவர்களுடைய முதுகுகளுக்கும் சூடு போடப்படும். “உங்களுக்காக நீங்கள் சேமித்தவைதான் இவை. ஆகவே, நீங்கள் சேமித்துக் கொண்டிருந்தவற்றை (-அவற்றுக்குரிய தண்டனையை இன்று) சுவையுங்கள்.” (என்று அவர்களுக்கு கூறப்படும்.)"},{"id":36,"translation":"நிச்சயமாக அல்லாஹ்விடம், வானங்களையும், பூமியையும் படைத்த நாளில், அல்லாஹ்வின் விதியில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் புனிதமான நான்கு மாதங்கள் உள்ளன. இதுதான் நேரான மார்க்கமாகும். ஆகவே, அவற்றில் (-அம்மாதங்களில் பாவம் செய்து) உங்களுக்கு தீங்கு இழைக்காதீர்கள். நீங்கள் ஒன்றிணைந்து இணைவைப்பவர்களிடம் போர் புரியுங்கள் அவர்கள் ஒன்றிணைந்து உங்களிடம் போர் புரிவது போன்று. நிச்சயமாக அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":37,"translation":"(புனித மாதங்களை அவற்றின் காலத்திலிருந்து) பிற்படுத்துவதெல்லாம் நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகிறார்கள். ஓர் ஆண்டில் (புனித மாதமாகிய) அதை ஆகுமாக்குகிறார்கள். இன்னும், (வேறு) ஓர் ஆண்டில் அதை (புனிதம் என) தடை செய்து கொள்கிறார்கள். காரணம், அல்லாஹ் தடை செய்த (புனித மாதங்களின்) எண்ணிக்கைக்கு அவர்கள் ஒத்துவந்து, பிறகு, அல்லாஹ் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். அவர்களுடைய தீயச் செயல்கள் அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டன. இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்."},{"id":38,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் (போருக்கு) புறப்படுங்கள் என்று உங்களுக்குக் கூறப்பட்டால் உங்களுக்கு என்ன ஆனது? உலகத்தின் பக்கம் சாய்ந்து விட்டீர்கள்! மறுமையை பார்க்கிலும் உலக வாழ்க்கையைக் கொண்டு திருப்தி அடைந்தீர்களா? உலக வாழ்க்கையின் இன்பம் மறுமையில் அற்பமானதாகவே தவிர இல்லை!"},{"id":39,"translation":"(போருக்கு) நீங்கள் புறப்படாவிட்டால், துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அவன் உங்களை தண்டிப்பான்; இன்னும், உங்களை அன்றி (வேறு) ஒரு சமுதாயத்தை (தனது தீனுக்காக) மாற்றி விடுவான். நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":40,"translation":"நீங்கள் அவருக்கு உதவவில்லையெனில் (அவருக்கு நஷ்டம் இல்லை). இருவரில் ஒருவராக அவர் இருக்கும் நிலையில் நிராகரித்தவர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றியபோது, அவ்விருவரும் குகையில் இருந்தபோது, தன் தோழரை நோக்கி, “நீ கவலைப்படாதே! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்” என்று கூறியபோது அல்லாஹ் அவருக்கு உதவி செய்துவிட்டான். ஆக, அல்லாஹ் அவர் மீது தன் அமைதியை இறக்கினான். இன்னும், நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். நிராகரித்தவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை, ஆற்றலை) மிகத் தாழ்ந்ததாக ஆக்கினான். அல்லாஹ்வின் வார்த்தைதான் (அவனது மார்க்கம், வலிமை) மிக உயர்வானது. அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":41,"translation":"நீங்கள் இலகுவானவர்களாக[1] இருக்கும் நிலையிலும்; இன்னும், கனமானவர்களாக[2] இருக்கும் நிலையிலும் போருக்கு புறப்படுங்கள். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் போரிடுங்கள். நீங்கள் (உபதேசங்களை) அறிபவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்.","footnotes":"[1] இலகுவானவர்கள்: வாலிபர்கள், வாகனிப்பவர்கள், செல்வந்தர்கள்.\n[2] கனமானவர்கள்: வயோதிகர்கள், கால்நடையாக செல்பவர்கள், ஏழைகள்."},{"id":42,"translation":"(நபியே!) அருகில் உள்ள பொருளாகவும் சமீபமான பயணமாகவும் இருந்திருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றி இருப்பார்கள். எனினும், (செல்ல வேண்டிய) எல்லை அவர்களுக்கு தூரமாக இருக்கிறது. இன்னும், “நாங்கள் ஆற்றல் பெற்றிருந்தால் உங்களுடன் வெளியேறி இருப்போம்” என்று அல்லாஹ்வின் மீது அவர்கள் சத்தியம் செய்கிறார்கள். (பொய் சத்தியத்தால் அவர்கள்) தங்களையே அழித்துக் கொள்கிறார்கள். இன்னும், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்பதை அல்லாஹ் அறிவான்."},{"id":43,"translation":"அல்லாஹ் உம்மை மன்னிப்பான்! (அவர்களில்) உண்மை உரைத்தவர்கள் (எவர்கள் என்று) உமக்குத் தெளிவாகின்ற வரை; இன்னும், பொய்யர்களை(யும் அவர்கள் யாரென்று) நீர் அறிகின்ற வரை ஏன் அவர்களுக்கு அனுமதியளித்தீர்?"},{"id":44,"translation":"அல்லாஹ்வையும் இறுதிநாளையும் நம்பிக்கை கொள்பவர்கள் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் (அல்லாஹ்வின் பாதையில்) போரிடுவதிலிருந்து (விலகியிருக்க) உம்மிடம் அனுமதி கோர மாட்டார்கள். இன்னும், அல்லாஹ், தன்னை அஞ்சுபவர்களை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":45,"translation":"உம்மிடம் அனுமதி கோருவதெல்லாம், அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் சந்தேகித்தன. ஆகவே, அவர்கள் தங்கள் சந்தேகத்தில் தடுமாறுகிறார்கள்."},{"id":46,"translation":"இன்னும், அவர்கள் (போருக்காக தங்கள் இல்லங்களிலிருந்து) வெளியேறி செல்வதை நாடியிருந்தால் அதற்கு ஒரு (முறையான) தயாரிப்பை ஏற்பாடு செய்திருப்பார்கள். எனினும், (உம்முடன்) அவர்கள் கிளம்பிவருவதை அல்லாஹ் வெறுத்தான். ஆகவே, (அல்லாஹ்) அவர்களைத் தடுத்து விட்டான். இன்னும், தங்குபவர்களுடன் தங்கிவிடுங்கள் என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது."},{"id":47,"translation":"அவர்கள் உங்களுடன் (போருக்கு) வெளியேறி (வந்து) இருந்தால் தீமையைத் தவிர உங்களுக்கு அதிகப்படுத்தி இருக்க மாட்டார்கள்; இன்னும், உங்களுக்கு குழப்பத்தைத் தேடி உங்களுக்கிடையில் விரைந்(து விஷமத்தனமான வேலை செய்)திருப்பார்கள். இன்னும், அவர்களுக்காக (உளவு பார்க்கும்) ஒற்றர்களும் உங்களுடன் இருக்கிறார்கள். இன்னும், அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்."},{"id":48,"translation":"திட்டவட்டமாக (அவர்கள் இதற்கு) முன்னர் குழப்பத்தைத் தேடியுள்ளனர். இன்னும், காரியங்களை உமக்கு (தலைகீழாய்)ப் புரட்டி(க் காண்பித்த)னர். இறுதியாக (வெற்றி எனும்) சத்தியம் வந்தது. இன்னும், அவர்கள் வெறுப்பவர்களாக இருந்த நிலையில் அல்லாஹ்வின் கட்டளை(யாகிய அவனது மார்க்கம்) வென்றது."},{"id":49,"translation":"இன்னும், (நபியே!) “எனக்கு அனுமதி தருவீராக, என்னைச் சோதிக்காதீர்” என்று கூறுபவரும் அவர்களில் உண்டு. அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சோதனையில்தான் விழுந்தனர். நிச்சயமாக நரகம் நிராகரிப்பவர்களை சூழ்ந்தே உள்ளது."},{"id":50,"translation":"(நபியே!) உமக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் அது அவர்களைத் துக்கப்படுத்துகிறது. இன்னும், உமக்கு ஒரு சோதனை ஏற்பட்டால், “முன்னரே எங்கள் காரியத்தை (எச்சரிக்கையுடன்) நாங்கள் (முடிவு) எடுத்துக் கொண்(டு போருக்கு வராமல் தங்கி விட்)டோம்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; இன்னும், அவர்களோ மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் (உம்மை விட்டு) திரும்பி செல்கிறார்கள்."},{"id":51,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர (எதுவும்) எங்களுக்கு அறவே ஏற்படாது. அவன்தான் எங்கள் மவ்லா ஆவான்.” இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்து இரு)க்கவும்."},{"id":52,"translation":"(நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் இந்த) இரு சிறப்பானவற்றில் ஒன்றைத் தவிர (வேறு எதையும்) எங்களுக்கு எதிர்பார்க்கிறீர்களா? அல்லாஹ், தன்னிடமிருந்து; அல்லது, எங்கள் கரங்களால் ஒரு தண்டனையின் மூலம் உங்களை சோதிப்பதை நாங்கள் உங்களுக்கு எதிர்பார்க்கிறோம். ஆகவே, எதிர்பாருங்கள்! நிச்சயமாக நாங்கள் உங்களுடன் சேர்ந்து எதிர்பார்க்கிறோம்."},{"id":53,"translation":"(நபியே! நயவஞ்சககர்களை நோக்கி) கூறுவீராக: “விருப்பமாக அல்லது வெறுப்பாக தர்மம் செய்யுங்கள். (எப்படி செய்தாலும் உங்கள் தர்மம்) உங்களிடமிருந்து அறவே அங்கீகரிக்கப்படாது. நிச்சயமாக நீங்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுகின்ற) பாவிகளான மக்களாக ஆகிவிட்டீர்கள்.”"},{"id":54,"translation":"நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர்; இன்னும், அவர்கள் சோம்பேறிகளாக இருந்த நிலையில் தவிர தொழுகைக்கு வர மாட்டார்கள்; இன்னும், அவர்கள் வெறுத்தவர்களாக இருந்த நிலையில் தவிர தர்மம் புரிய மாட்டார்கள் ஆகிய இவற்றைத் தவிர அவர்களுடைய தர்மங்கள் அவர்களிடமிருந்து அங்கீகரிக்கப்படுவதற்கு (வேறு எதுவும் காரணம்) அவர்களுக்குத் தடையாக இருக்கவில்லை."},{"id":55,"translation":"ஆகவே, (நபியே!) அவர்களுடைய செல்வங்களும், அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் உலக வாழ்க்கையில் அவர்களை தண்டிப்பதற்கும், இன்னும், அவர்கள் நிராகரிப்பவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிந்து சென்று விடுவதையும்தான்."},{"id":56,"translation":"இன்னும், “நிச்சயமாக அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள்தான்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். ஆனால், அவர்கள் உங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை. என்றாலும், அவர்கள் (உங்களை கண்டு) பயப்படுகின்ற மக்கள் ஆவார்கள்."},{"id":57,"translation":"ஓர் ஒதுங்குமிடத்தை; அல்லது, (மலைக்) குகைகளை; அல்லது, ஒரு சுரங்கத்தை அவர்கள் கண்டால் அவர்களோ விரைந்தவர்களாக அதன் பக்கம் திரும்பி (ஓடி)யிருப்பார்கள்."},{"id":58,"translation":"இன்னும், (நபியே! நீர் கொடுக்கின்ற) தர்மங்களில் உம்மைக் குறை கூறுபவர்களும் அவர்களில் இருக்கின்றனர். ஆக, அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படுவார்களேயானால் திருப்தியடைவார்கள். இன்னும், அவற்றிலிருந்து அவர்கள் கொடுக்கப்படவில்லையென்றால் அப்போது அவர்கள் ஆத்திரப்ப(ட்)டு (உம்மை குறை கூறு)கிறார்கள்."},{"id":59,"translation":"இன்னும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் அவர்களுக்குக் கொடுத்ததை நிச்சயமாக அவர்கள் திருப்தியடைந்திருக்க வேண்டுமே! இன்னும், “அல்லாஹ் எங்களுக்குப் போதுமானவன். அல்லாஹ் தனது அருளிலிருந்து(ம்) இன்னும், அவனுடைய தூதர் (தன் தர்மத்திலிருந்தும்) எங்களுக்குக் கொடுப்பார்கள். நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் பக்கம்தான் ஆசையுள்ளவர்கள்” என்று அவர்கள் கூறி இருக்க வேண்டுமே!"},{"id":60,"translation":"(கடமையான) ஸகாத்துகள் - வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றுக்கு ஊழியம் செய்பவர்களுக்கும், அவர்களின் உள்ளங்கள் (புதிதாக இஸ்லாமுடன்) இணைக்கப்பட்டவர்களுக்கும், அடிமைகளை உரிமையிடுவதற்கும், கடனாளிகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் இருப்பவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். இது அல்லாஹ்விடமிருந்து (விதிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட) கடமையாக இருக்கிறது. இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":61,"translation":"இன்னும், “அவர் (அனைத்தையும் செவியேற்கும்) ஒரு காது” என்று கூறி நபியை இகழ்பவர்களும் அவர்களில் உள்ளனர். (நபியே!) கூறுவீராக: “(அவர்) உங்களுக்கு நல்ல(தை செவியுறுகின்ற) காது ஆவார். அவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறார். இன்னும், நம்பிக்கையாளர்க(ள் கூறும் செய்திக)ளை ஏற்றுக் கொள்கிறார். இன்னும், உங்களில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கருணையாக இருக்கிறார்.” இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் தூதரை இகழ்கிறார்களோ, துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":62,"translation":"அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்துவதற்காக உங்களுக்காக அல்லாஹ் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் (உண்மையான) நம்பிக்கையாளர்களாக இருந்தால், அவர்கள் திருப்திப்படுத்துவதற்கு அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்தான் மிகவும் தகுதியுடையவர்கள்."},{"id":63,"translation":"“நிச்சயமாக எவர் அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் முரண்படுவாரோ அவருக்கு நிச்சயமாக நரகத்தின் நெருப்புதான் உண்டு. அதில் (அவர்) நிரந்தரமானவர்” என்பதை அவர்கள் அறியவில்லையா? இதுதான் பெரிய இழிவாகும்."},{"id":64,"translation":"நயவஞ்சகர்கள், அவர்களைப் பற்றி ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு, அது அவர்களின் உள்ளங்களில் உள்ளவற்றை நம்பிக்கையாளர்களுக்கு அறிவித்துவிடுவதைப் பயப்படுகிறார்கள். (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: “கேலிசெய்து கொள்ளுங்கள். நீங்கள் பயப்படுவதை நிச்சயமாக அல்லாஹ் (நபிக்கு) வெளியாக்குவான்.”"},{"id":65,"translation":"(இதைப் பற்றி) நீர் அவர்களிடம் கேட்டால், “நாங்கள் எல்லாம் (சிரித்து கேலியாக பேசுவதில் கவனமற்று மிகத் தீவிரமாக) மூழ்கி இருந்தோம்; இன்னும், (பேசி) விளையாடிக் கொண்டிருந்தோம்” என்று அவர்கள் நிச்சயம் (பதில்) கூறுவார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வையும், அவனுடைய வசனங்களையும், அவனுடைய தூதரையுமா கேலிசெய்து கொண்டிருந்தீர்கள்?”"},{"id":66,"translation":"நீங்கள் (செய்யும் விஷமத்தனத்திற்கு) சாக்கு போக்கு கூறாதீர்கள். நீங்கள் நம்பிக்கை கொண்டதற்குப் பின்னர் திட்டமாக நிராகரித்து விட்டீர்கள். உங்களில் ஒரு கூட்டத்தை நாம் மன்னித்தால் (மற்ற) ஒரு கூட்டத்தை, - நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்த காரணத்தால் - தண்டிப்போம்."},{"id":67,"translation":"நயவஞ்சகமுடைய ஆண்களும், நயவஞ்சகமுடைய பெண்களும் அவர்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்களே! அவர்கள் தீமையை ஏவுகிறார்கள்; இன்னும், நன்மையை விட்டு தடுக்கிறார்கள்; இன்னும், தங்கள் கரங்களை மூடிக் கொள்கிறார்கள் (கருமித்தனம் செய்கிறார்கள்). அவர்கள் அல்லாஹ்வை மறந்தார்கள். ஆகவே, அவனும் அவர்களை (இறையருள் இன்றி) விட்டுவிட்டான். நிச்சயமாக நயவஞ்சகர்கள்தான் (அல்லாஹ்வின் கட்டளையை மீறுகின்ற) பாவிகள் ஆவார்கள்."},{"id":68,"translation":"நயவஞ்சகமுடைய ஆண்களுக்கும் நயவஞ்சகமுடைய பெண்களுக்கும் (எல்லா) நிராகரிப்பாளர்களுக்கும் நரகத்தின் நெருப்பை அல்லாஹ் வாக்களித்தான். அதில் (அவர்கள்) நிரந்தரமாக தங்குவார்கள். அதுவே, அவர்களுக்குப் போது(மான கூலியாகு)ம். இன்னும், அல்லாஹ் அவர்களைச் சபித்தான். இன்னும், (அங்கு) நிலையான நிரந்தரமான தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":69,"translation":"(நயவஞ்சகர்களே! நீங்கள்) உங்களுக்கு முன்னுள்ளவர்களைப் போன்றே. அவர்கள் உங்களை விட வலிமையால் பலமிகுந்தவர்களாக; செல்வங்களாலும் சந்ததிகளாலும் அதிகமானவர்களாக இருந்தனர். ஆக, (அவர்கள் இவ்வுலகில்) தங்களுக்கு கிடைத்த உலக பங்கை சுகமாக அனுபவித்தார்கள். இன்னும், உங்களுக்கு முன்னுள்ளவர்கள் தங்களது உலக பங்கை (இவ்வுலகில்) சுகமாக அனுபவித்தது போன்று, (நீங்களும்) உங்கள் அதிர்ஷ்டத்தை சுகமாக அனுபவித்தீர்கள். இன்னும், அவர்கள் (அல்லாஹ்வின் மீது பொய் கூறுவதில்) மூழ்கியது போன்றே (நீங்களும்) மூழ்கினீர்கள். அவர்கள், - இம்மையிலும் மறுமையிலும் அவர்களுடைய (நற்)செயல்கள் அழிந்தன. இன்னும், அவர்கள்தான் நஷ்டவாளிகள். (அவ்வாறே நீங்களும் நஷ்டவாளிகள்.)"},{"id":70,"translation":"இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களாகிய நூஹ் (நபி) உடைய சமுதாயம், ஆது சமுதாயம், ஸமூது சமுதாயம், இப்ராஹீம் (நபி) உடைய சமுதாயம், மத்யன் வாசிகள், தலைகீழாகப் புரட்டப்பட்ட ஊர்(வாசி)கள் ஆகியோரின் சரித்திரம் அவர்களுக்கு வரவில்லையா? அவர்களுடைய தூதர்கள் அவர்களிடம் அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அல்லாஹ் அவர்களுக்கு அநீதியிழைப்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி செய்பவர்களாக இருந்தனர்."},{"id":71,"translation":"நம்பிக்கை கொண்ட ஆண்கள், இன்னும், நம்பிக்கை கொண்ட பெண்கள் அவர்களில் சிலர் சிலருக்கு பொறுப்பாளர்கள் ஆவார்கள். அவர்கள், நன்மையை ஏவுகிறார்கள்; இன்னும், தீமையை விட்டு தடுக்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துகிறார்கள்; இன்னும், ஸகாத்தை கொடுக்கிறார்கள்; இன்னும், அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிகிறார்கள். இவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":72,"translation":"நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் சொர்க்கங்களையும், (அத்ன் எனும்) நிலையான சொர்க்கங்களில் நல்ல தங்குமிடங்களையும் அல்லாஹ் வாக்களித்தான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (அவர்கள்) அவற்றில் நிரந்தரமாக தங்குவார்கள். இன்னும், (இவை அனைத்தையும் விட அவர்களுக்கு கிடைக்க இருக்கும்) அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியதாகும். இதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":73,"translation":"நபியே! நிராகரிப்பவர்களிடமும் நயவஞ்சகர்களிடமும் போரிடுவீராக. இன்னும், அவர்களிடம் கடுமை காட்டுவீராக. அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். மீளுமிடத்தால் அது மிகக் கெட்டதாகும்."},{"id":74,"translation":"(தூதருக்கு எதிராக ஏதும்) அவர்கள் கூறவில்லை என்று அல்லாஹ் மீது (நயவஞ்சகர்கள்) சத்தியமிடுன்றனர். இன்னும், திட்டவட்டமாக நிராகரிப்பின் வார்த்தையை அவர்கள் கூறினார்கள். அவர்கள் இஸ்லாமை ஏற்றதற்குப் பின்னர் நிராகரித்தனர். அவர்கள் அடைய முடியாததை (செய்ய) திட்டமிட்டனர். (அதாவது, தூதரை கொல்வதற்கு முயற்சித்தனர்.) அல்லாஹ் தன் அருளினால், இன்னும் அவனுடைய தூதர் (தனது தர்மத்தினால்) இவர்களுக்கு (செல்வத்தை வழங்கி) நிறைவாக்கினார்கள் என்பதற்கே தவிர (வேறு எதற்காகவும்) இவர்கள் (தூதரை) தண்டிக்க (நாட)வில்லை. (அதாவது, அல்லாஹ் இன்னும் அவனுடைய தூதரின் உபகாரத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருப்பதற்குப் பதிலாக நன்றிகெட்டதனமாக தூதரையே கொல்ல நாடினர் நயவஞ்சகர்கள்.) அவர்கள் திருந்தினால் அது அவர்களுக்கே சிறந்ததாக இருக்கும். அவர்கள் (திருந்தாமல்) விலகிச் சென்றால் இம்மையிலும், மறுமையிலும் அவர்களை துன்புறுத்தக்கூடிய தண்டனையால் அல்லாஹ் தண்டிப்பான். இந்த பூமியில் அவர்களுக்கு (எந்த) பாதுகாவலர் எவரும் இல்லை. இன்னும், உதவியாளர் எவரும் இல்லை."},{"id":75,"translation":"இன்னும், “அல்லாஹ் தன் அருளிலிருந்து எங்களுக்குக் கொடுத்தால் நிச்சயமாக நாம் தர்மம் செய்வோம்; இன்னும், நிச்சயமாக நாம் நல்லவர்களில் ஆகிவிடுவோம்” என்று அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்தவர்களும் அவர்களில் உண்டு."},{"id":76,"translation":"ஆக, அவன் தன் அருளிலிருந்து அவர்களுக்கு கொடுத்தபோது, அதில் கஞ்சத்தனம் செய்தனர். இன்னும், (தங்கள் உடன்படிக்கையை நிறைவேற்றாது) விலகிவிட்டனர். அவர்கள் (எப்போதும் தாங்கள் வாக்குறுதிகளை) புறக்கணிப்பவர்களே."},{"id":77,"translation":"ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் தாங்கள் வாக்களித்ததற்கு மாறாக நடந்த காரணத்தினாலும் அவர்கள் பொய் சொல்பவர்களாக இருந்த காரணத்தாலும் அவர்கள் அவனை சந்திக்கின்ற நாள் வரை அவர்களுடைய உள்ளங்களில் அவர்களுக்கு நயவஞ்சகத்தையே முடிவாக (இறுதி வரை) அல்லாஹ் ஆக்கினான்."},{"id":78,"translation":"“நிச்சயமாக அவர்களின் இரகசியத்தையும்; இன்னும், அவர்களின் பேச்சையும் அல்லாஹ் அறிவான் என்பதையும், நிச்சயமாக அல்லாஹ் மறைவானவற்றை மிகமிக அறிந்தவன் என்பதையும்” அவர்கள் அறியவில்லையா?"},{"id":79,"translation":"(நயவஞ்சக்காரர்களான) அவர்கள், உபரியாக தர்மம் செய்கின்ற நம்பிக்கையாளர்களையும் (தர்மம் புரிய) தங்கள் உழைப்பைத் தவிர (செல்வம் எதையும்) பெறாதவர்களையும் (அவர்கள் செய்கின்ற) தர்மங்கள் விஷயத்தில் குறை கூறி குத்திப் பேசுகிறார்கள். இன்னும் அவர்களை கேலி செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களை கேலி செய்கிறான். இன்னும் துன்புறுத்தக்கூடிய தண்டனையும் அவர்களுக்கு உண்டு."},{"id":80,"translation":"(நபியே!) நீர் அவர்களுக்காக மன்னிப்புத் தேடுவீராக! அல்லது அவர்களுக்காக மன்னிப்புத் தேடாதீர்! அவர்களுக்காக நீர் எழுபது முறை மன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். அதற்குக் காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நிராகரித்தனர் என்பதாகும். அல்லாஹ், (தனது கட்டளைகளை மீறுகின்ற) பாவிகளான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான்."},{"id":81,"translation":"பின் தங்கியவர்கள், அல்லாஹ்வின் தூதருக்கு மாறாக(த் தங்கள் வீடுகளில்) தாங்கள் தங்கியதைப் பற்றி மகிழ்ச்சி அடைந்தனர். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போரிடுவதை வெறுத்தனர். இன்னும், (போருக்கு சென்றவர்களை நோக்கி) “வெயிலில் (போருக்குப்) புறப்படாதீர்கள்” என்று கூறினர். (நபியே!) “நரகத்தின் நெருப்பு வெப்பத்தால் மிகக் கடுமையானது” என்று கூறுவீராக. (இதை) அவர்கள் சிந்தித்து விளங்குபவர்களாக இருக்க வேண்டுமே!"},{"id":82,"translation":"ஆக, (இவ்வுலகில்) அவர்கள் குறைவாக சிரித்துக் கொள்ளட்டும். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு (தகுந்த) கூலியாக (மறுமையில்) அதிகமாக அழுது கொள்ளட்டும்! (அவர்கள் இவ்வுலகத்தில் சிரித்தாலும் அது குறைவுதான். மறுமையிலோ அதிகமாக அழப்போகிறார்கள்.)"},{"id":83,"translation":"(நபியே!) ஆக, அல்லாஹ் உம்மை (வெற்றி பெற்றவராக) அவர்களில் ஒரு பிரிவினரிடம் திருப்பினால், அப்போது (அடுத்த போரில் உம்முடன் சேர்ந்து) அவர்கள் வெளியேறுவதற்கு உம்மிடம் அனுமதி கோரினால், (நீர்) கூறுவீராக: “ஒருபோதும் என்னுடன் அறவே புறப்படாதீர்கள். என்னுடன் சேர்ந்து (எந்த) ஒரு எதிரியிடமும் அறவே போரிடாதீர்கள். நிச்சயமாக நீங்கள் முதல் முறை, (போருக்கு வராமல் வீட்டில்) உட்கார்ந்து விடுவதை விரும்பினீர்கள். ஆகவே, (இப்போதும்) பின் தங்கிவிடுபவர்களுடன் உட்கார்ந்து விடுங்கள்.”"},{"id":84,"translation":"(நபியே!) இன்னும், அவர்களில் யார் இறந்துவிட்டாரோ அவருக்கு ஒருபோதும் (ஜனாஸா தொழுகை) தொழாதீர். அவருடைய புதைகுழிக்கு அருகில் நிற்காதீர். நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நிராகரித்தனர். இன்னும், அவர்களோ பாவிகளாக இருக்கும் நிலையில் இறப்பெய்தினர்."},{"id":85,"translation":"இன்னும், அவர்களுடைய செல்வங்களும் அவர்களுடைய பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம். அல்லாஹ் நாடுவதெல்லாம் அவற்றின் மூலம் உலகில் அவர்களை தண்டிப்பதற்கும், அவர்கள் நிராகரித்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுடைய உயிர்கள் பிரிவதையும்தான்."},{"id":86,"translation":"அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளுங்கள்; இன்னும், அவனுடைய தூதருடன் சேர்ந்து (எதிரிகளிடம்) போரிடுங்கள் என்று ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால் அவர்களிலுள்ள செல்வந்தர்கள் உம்மிடம் அனுமதிகோரி, “எங்களை விட்டுவிடுவீராக! (போருக்கு வராமல் வீட்டில்) உட்கார்ந்தவர்களுடன் (நாங்களும்) இருந்துவிடுகிறோம்” என்று கூறுகிறார்கள்."},{"id":87,"translation":"பின் தங்கிய பெண்களுடன் அவர்கள் இருந்துவிடுவதைக் கொண்டு திருப்தியடைந்தனர். இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது முத்திரையிடப்பட்டது. ஆகவே, அவர்கள் சிந்தித்து விளங்க மாட்டார்கள்."},{"id":88,"translation":"எனினும், தூதரும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் (அல்லாஹ்வின் பாதையில்) போரிட்டனர். இன்னும், அவர்களுக்குத்தான் நன்மைகள் உண்டு. இன்னும் அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்."},{"id":89,"translation":"அல்லாஹ், அவர்களுக்காக சொர்க்கங்களை ஏற்படுத்தி இருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் (அவர்கள்) நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":90,"translation":"இன்னும், கிராம அரபிகளில் சாக்கு போக்கு கூறுபவர்கள் அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதற்காக வந்தார்கள். இன்னும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பாதவர்கள் (அனுமதி கோராமல் தங்கள் இல்லங்களில்) உட்கார்ந்து விட்டார்கள். நிராகரித்த இவர்களை துன்புறுத்தும் தண்டனை வந்தடையும்."},{"id":91,"translation":"பலவீனர்கள் மீதும்; இன்னும், நோயாளிகள் மீதும்; இன்னும், (போருக்காக) செலவழிப்பதற்கு வசதி பெறாதவர்கள் மீதும் - அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் நன்மையை நாடினால் (அவர்கள் போரில் கலந்து கொள்ளாமல் இருப்பதில்) - அறவே குற்றம் ஏதுமில்லை. நல்லறம் புரிவோர் மீது குற்றம் கூற வழி ஏதும் இல்லை. அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":92,"translation":"இன்னும், நீர் அவர்களை (வாகனத்தில்) ஏற்றி அனுப்புவதற்காக உம்மிடம் அவர்கள் வந்தால், “உங்களை ஏற்றி அனுப்புவதற்கு நான் (வாகன) வசதி பெற்றிருக்கவில்லையே” என்று நீர் கூறினால், (போருக்கு) செலவு செய்கின்ற வசதியை தாம் பெறாத கவலையினால் அவர்களுடைய கண்கள் கண்ணீரால் பொங்கி வழிய எவர்கள் திரும்பி சென்றார்களோ அவர்கள் மீதும் குற்றம் இல்லை."},{"id":93,"translation":"குற்றம் சுமத்த வழியெல்லாம் எவர்கள், அவர்கள் செல்வந்தர்களாக இருக்கும் நிலையில் உம்மிடம் அனுமதி கோருகிறார்களோ அவர்கள் மீதுதான். பின் தங்கிவிட்ட பெண்களுடன் அவர்கள் இருந்து விடுவதைக் கொண்டு திருப்திபடுகிறார்கள். இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டான். ஆகவே, அவர்கள் (தங்கள் தீய செயலின் கெட்ட பாதிப்பை) அறிய மாட்டார்கள்."},{"id":94,"translation":"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களிடம் திரும்பினால் உங்களிடம் அவர்கள் சாக்கு சொல்வார்கள். (நபியே!) கூறுவீராக: “சாக்கு சொல்லாதீர்கள். நாங்கள் உங்க(ள் சாக்கு)களை நம்ப மாட்டோம். உங்கள் செய்திகளிலிருந்து (சிலவற்றை) அல்லாஹ் எங்களுக்கு அறிவித்து விட்டான். இன்னும், அல்லாஹ் உங்கள் செயல்களைப் பார்ப்பான். இன்னும், அவனுடைய தூதரும் (உங்கள் செயலைப் பார்ப்பார்). பிறகு, மறைவையும் வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)னிடம் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு அறிவிப்பான்.”"},{"id":95,"translation":"நீங்கள் (போரிலிருந்து) அவர்களிடம் திரும்பி சென்றால், நீங்கள் அவர்களைப் புறக்கணித்து விடுவதற்காக உங்களிடம் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்(து பொய் கூறு)வார்கள். ஆகவே, அவர்களைப் புறக்கணித்து விடுங்கள். நிச்சயமாக, அவர்கள் அசுத்தமானவர்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலியாக அவர்களுடைய தங்குமிடம் நரகமாகத்தான் இருக்கும்."},{"id":96,"translation":"அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைவதற்காக உங்களிடம் சத்தியம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி நீங்கள் திருப்தியடைந்தாலும் நிச்சயமாக அல்லாஹ் பாவிகளான (அம்)மக்களைப் பற்றி திருப்தியடையமாட்டான்."},{"id":97,"translation":"கிராம அரபிகள் நிராகரிப்பிலும் நயவஞ்சகத்திலும் மிகக் கடுமையானவர்கள். இன்னும், அல்லாஹ் தன் தூதர் மீது இறக்கியவற்றின் சட்டங்களை அவர்கள் அறியாதவர்கள் என்று சொல்வதற்கு மிகத் தகுதியானவர்கள். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":98,"translation":"இன்னும், கிராம அரபிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் தர்மம் செய்வதை நஷ்டமாக எடுத்துக் கொள்கிறார்கள். இன்னும், உங்களுக்கு (கெட்ட) சுழற்சிகளை (கெடுதிகள் நிகழ்வதை) எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் மீதுதான் தண்டனையின் சுழற்சி (-கெடுதி இறங்க) உள்ளது. அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":99,"translation":"கிராம அரபிகளில் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பிக்கை கொள்கிறார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் தர்மம் புரிவதை அல்லாஹ்விடம் புண்ணியங்களாகவும், தூதரின் பிரார்த்தனைகளை பெறும் வழியாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்: நிச்சயமாக அது அவர்களுக்கு (நன்மை தரும்) புண்ணியமாக இருக்கும். அல்லாஹ் அவர்களைத் தன் கருணையில் பிரவேசிக்கச் செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":100,"translation":"(இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் எப்போதும் (அவர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். இதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":101,"translation":"இன்னும் உங்களைச் சூழவுள்ள கிராம அரபிகளிலும் மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தின் மீது பிடிவாதமாக நிலைத்திருந்து அழிச்சாட்டியம் செய்கிறார்கள். (நபியே! நீர்) அவர்களை அறியமாட்டீர்; நாம்தான் அவர்களை அறிவோம். விரைவில் அவர்களை இருமுறை தண்டிப்போம். பிறகு, (மறுமையில் நரகத்தின்) பெரிய தண்டனையின் பக்கம் (அவர்கள்) மீண்டும் கொண்டு வரப்படுவார்கள்."},{"id":102,"translation":"இன்னும், (நயவஞ்சகர்கள் அல்லாத) மற்றவர்கள் சிலரும் (மதீனாவிலும் அதைச் சுற்றிலும்) இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக் கொண்டனர். நல்ல செயலையும் மற்ற (சில) கெட்ட செயலையும் கலந்(து செய்)தனர். அல்லாஹ் அவர்களை மன்னிக்கக் கூடும். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":103,"translation":"(நபியே!) அவர்களுடைய செல்வங்களிலிருந்து தர்மத்தை எடுப்பீராக. அதன் மூலம் அவர்களை நீர் சுத்தப்படுத்துவீர்; இன்னும், (உயர் பண்புகளுக்கு) அவர்களை உயர்த்துவீர். இன்னும், அவர்களுக்காக (அல்லாஹ்விடம்) பிரார்த்திப்பீராக. நிச்சயமாக உம் பிரார்த்தனை அவர்களுக்கு நிம்மதி தரக்கூடியதாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":104,"translation":"நிச்சயமாக, அல்லாஹ், தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை (-அவர்கள் திருந்துவதையும் மன்னிப்புக் கோருவதையும்) ஏற்றுக் கொள்கிறான்; இன்னும், தர்மங்களை எடுக்கிறான்; இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன் என்பதை அவர்கள் அறியவில்லையா?"},{"id":105,"translation":"(நபியே!) இன்னும், (போருக்கு வராமல் பின்தங்கிவிட்டு, பிறகு மன்னிப்பு கோரியவர்களிடம்) கூறுவீராக: “நீங்கள் (நல்ல அமல்களை அதிகம்) செய்யுங்கள். ஆக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நம்பிக்கையாளர்களும் உங்கள் செயலைப் பார்ப்பார்கள். இன்னும், மறைவையும், வெளிப்படையையும் அறிந்தவ(னாகிய அல்லாஹ்வி)ன் பக்கம் (மறுமையில்) மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை (அவன்) உங்களுக்கு அறிவிப்பான்."},{"id":106,"translation":"இன்னும், அல்லாஹ்வின் உத்தரவிற்காக தள்ளிவைக்கப்பட்ட மற்றவர்கள் சிலர் இருக்கிறார்கள். ஒன்று, (அவர்கள் திருந்தவில்லை என்றால்) அல்லாஹ் அவர்களை தண்டிப்பான். அல்லது, (அவர்கள் திருந்திவிட்டால்) அவன் அவர்களை மன்னிப்பான். இன்னும், அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்."},{"id":107,"translation":"இன்னும், கெடுதல் செய்வதற்காகவும்; நிராகரிப்பிற்காகவும்; நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்படுத்துவதற்காகவும்; இதற்கு முன்னர் அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் போரிட்டவர்(கள் வந்து தங்குவதற்காக அவர்)களை எதிர் பார்த்திருப்பதற்காகவும் ஒரு மஸ்ஜிதை எடுத்துக் கொண்டவர்களும் (மதீனாவிலும் மதீனாவை சுற்றிலும்) இருக்கிறார்கள். இன்னும், “நாங்கள் நன்மையைத் தவிர (கெட்டதை) நாடவில்லை” என்று நிச்சயமாக சத்தியம் அவர்கள் செய்கிறார்கள். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான்."},{"id":108,"translation":"(நபியே!) ஒருபோதும் அ(ந்த மஸ்ஜி)தில் நின்று வணங்காதீர். முதல் நாளிலிருந்தே இறையச்சத்தின் மீது அடித்தளமிடப்பட்ட (உமது அல்லது குபா) மஸ்ஜிதுதான் நீர் நின்று வணங்குவதற்கு மிகத் தகுதியானது. அதில், சில ஆண்கள் இருக்கின்றனர். அவர்கள் அதிகம் பரிசுத்தமாக இருப்பதை விரும்புகின்றனர். அல்லாஹ் மிக பரிசுத்தமானவர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":109,"translation":"அல்லாஹ்வின் அச்சம் இன்னும் (அவனது) பொருத்தத்தின் மீது தமது கட்டிடத்தை அடித்தளமிட்டவர் சிறந்தவரா? அல்லது, சரிந்து விடக்கூடிய ஓடையின் ஓரத்தில் தமது கட்டிடத்திற்கு அடித்தளமிட்டு, அது அவருடன் நரக நெருப்பில் சரிந்துவிட்டதே அவ(ர் சிறந்தவ)ரா?. அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":110,"translation":"அவர்கள் கட்டிய கட்டடம் அவர்களுடைய உள்ளங்களில் சந்தேகமாகவே நீடித்திருக்கும், அவர்களுடைய உள்ளங்கள் துண்டு துண்டானால் தவிர (அது நீங்காது). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான்."},{"id":111,"translation":"நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வார்கள்; ஆக, அவர்கள் (எதிரிகளை) கொல்வார்கள்; இன்னும் (எதிரிகளால்) கொல்லப்படுவார்கள். தவ்ராத்திலும், இன்ஜீலிலும், குர்ஆனிலும் அவன் மீது கடமையான வாக்குறுதியாக இது இருக்கிறது. இன்னும், அல்லாஹ்வைவிட தனது உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுபவர் யார்? ஆகவே, எதற்குப் பகரமாக நீங்கள் (உங்களை) விற்றீர்களோ அந்த உங்கள் விற்பனையைக் கொண்டு மகிழ்ச்சி அடையுங்கள். இதுதான் மகத்தான வெற்றி!"},{"id":112,"translation":"(சொர்க்க பாக்கியம் பெறுகின்ற அவர்கள் பாவத்திலிருந்து) திருந்தியவர்கள்; வணக்கசாலிகள்; அல்லாஹ்வை புகழ்பவர்கள்; நோன்பு நோற்பவர்கள்; (தொழுகையில் பணிவாக அல்லாஹ்விற்கு முன்) குனிபவர்கள், சிரம் பணிபவர்கள்; நன்மையை ஏவக் கூடியவர்கள்; இன்னும், பாவத்தை விட்டுத் தடுக்கக் கூடியவர்கள்; இன்னும், அல்லாஹ்வுடைய சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் ஆவார்கள். (இத்தகைய தன்மைகளை உடைய) நம்பிக்கையாளர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!"},{"id":113,"translation":"நிச்சயமாக நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் தகுந்ததல்ல, இணைவைப்பவர்களுக்காக அவர்கள் பாவமன்னிப்பு கோருவது, அவர்கள் நரகவாசிகள் என்று அவர்களுக்கு தெளிவான பின்னர். அவர்கள் உறவினர்களாக இருந்தாலும் சரி."},{"id":114,"translation":"(நபி) இப்ராஹீம் தன் தந்தைக்காக மன்னிப்புக் கோரியது, அவர் அவருக்கு வாக்களித்த வாக்குறுதியை முன்னிட்டே தவிர (வேறு காரணத்திற்காக) இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ்விற்கு அவர் எதிரி என அவருக்குத் தெளிவானபோது அவரிலிருந்து அவர் விலகிக்கொண்டார். நிச்சயமாக இப்ராஹீம் அதிகம் பிரார்த்திப்பவர், பெரும் சகிப்பாளர்."},{"id":115,"translation":"ஒரு கூட்டத்தினரை, அவர்களை அல்லாஹ் நேர்வழிப்படுத்திய பின்னர், அவர்கள் தவிர்ந்து விலகி இருக்க வேண்டியவற்றை அவன் அவர்களுக்கு விவரிக்கும் வரை அவர்களை அவன் வழிகெட்டவர்கள் என்று முடிவு செய்பவனாக இருக்கவில்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன்."},{"id":116,"translation":"நிச்சயமாக அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது! இன்னும் அவனே உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான். இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை; இன்னும், உதவியாளர் எவரும் இல்லை."},{"id":117,"translation":"நபி; இன்னும், (தபூக் போருடைய) சிரமமான நேரத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகளை அல்லாஹ் திட்டவட்டமாக மன்னித்தான், (தோழர்களாகிய) அவர்களில் ஒரு பிரிவினரின் உள்ளங்கள் வழிதவற நெருங்கிய பின்னர். பிறகு, அவன் அவர்களை மன்னித்தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிகவும் இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன்."},{"id":118,"translation":"இன்னும், (மன்னிப்பு வழங்கப்படாமல்) பிற்படுத்தப்பட்ட மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்). இறுதியாக, பூமி விசாலமாக இருந்தும் (அது) அவர்களுக்கு நெருக்கடியாக ஆகியது. இன்னும், அவர்கள் மீது அவர்களின் ஆன்மாக்கள் நெருக்கடியாக ஆகியது. இன்னும், அல்லாஹ்விடமிருந்து (தப்பித்து) ஒதுங்குமிடம் அவனிடமே தவிர (வேறு எங்கும்) அறவே இல்லை என அவர்கள் உறுதி(யாக அறிந்து) கொண்டனர். பிறகு, அவர்கள் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதற்காக அவர்களை அவன் மன்னித்தான். நிச்சயமாக அல்லாஹ், அவன்தான் (அடியார்களின்) தவ்பாவை அங்கீகரிப்பவன், பெரும் கருணையாளன்."},{"id":119,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், உண்மையாளர்களுடன் இருங்கள்."},{"id":120,"translation":"மதீனாவாசிகள்; இன்னும், அவர்களைச் சுற்றி உள்ள கிராம அரபிகளுக்கு - அவர்கள் அல்லாஹ்வின் தூதரை விட்டு பின் தங்குவதும்; அவருடைய உயிரை விட தங்கள் உயிர்களை நேசிப்பதும் - ஆகுமானதல்ல. அதற்குக் காரணம், அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு தாகமோ, களைப்போ, பசியோ எது ஏற்பட்டாலும்; இன்னும், நிராகரிப்பாளர்களைக் கோபமூட்டுகிற இடத்தை இவர்கள் மிதித்தாலும்; இன்னும், எதிரிகளிடமிருந்து துன்பத்தை அவர்கள் அடைந்தாலும், இவற்றிற்கு பதிலாக அவர்களுக்கு நன்மையான செயல்(கள்) எழுதப்படாமல் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் நல்லறம்புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்."},{"id":121,"translation":"இன்னும் (அல்லாஹ்வின் பாதையில்) சிறிய, பெரிய செலவை அவர்கள் செலவு செய்தாலும் ஒரு பள்ளத்தாக்கை அவர்கள் கடந்து சென்றாலும் அவை அவர்களுக்கு (நன்மைகளாக) பதியப்படாமல் இருக்காது. இறுதியாக, அவர்கள் செய்து கொண்டிருந்ததற்கு மிக அழகிய(சொர்க்கத்)தை அல்லாஹ் அவர்களுக்குக் கூலியாக கொடுப்பான்."},{"id":122,"translation":"நம்பிக்கையாளர்கள் அனைவருமே (நபியை தனியாக விட்டுவிட்டு ஊரிலிருந்து) புறப்படுவது சரியல்ல. மார்க்கத்தில் அவர்கள் ஞானம் பெறுவதற்காகவும் தங்கள் சமுதாயத்திடம் திரும்பும்போது அவர்களை எச்சரிப்பதற்காகவும் உங்களில் ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் ஒரு கூட்டம் (மட்டும் போருக்கு) புறப்பட்டிருக்க வேண்டாமா? (ஊரில் தங்கிய) அவர்கள் (இதன் மூலம்) எச்சரிக்கையாக இருப்பார்கள்."},{"id":123,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களை அடுத்திருக்கின்ற நிராகரிப்பாளர்களிடம் போரிடுங்கள். இன்னும், அவர்கள் உங்களிடம் கடுமையை உணரட்டும். நிச்சயமாக அல்லாஹ் (தன்னை) அஞ்சுபவர்களுடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":124,"translation":"இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், “உங்களில் எவருக்கு இது நம்பிக்கையை அதிகப்படுத்தியது?” என்று கேட்பவர் அவர்களில் இருக்கிறார்கள். ஆக, நம்பிக்கை கொண்டவர்கள் அவர்களோ (இறக்கப்பட்ட அத்தியாயத்தைக் கொண்டு) மகிழ்ச்சியடைந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களுக்கு (இது) நம்பிக்கையை அதிகப்படுத்தியது."},{"id":125,"translation":"ஆக, எவர்களுடைய உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கு அவர்களுடைய அசுத்தத்துடன் ஒரு அசுத்தத்தையே அது அதிகப்படுத்தியது! அவர்களோ நிராகரிப்பாளர்களாக இருக்கும் நிலையில்தான் இறப்பார்கள்."},{"id":126,"translation":"ஒவ்வோர் ஆண்டிலும் ஒரு முறையோ அல்லது இரு முறைகளோ நிச்சயமாக அவர்கள் சோதிக்கப்படுகிறார்கள் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? பிறகும், அவர்கள் திருந்துவதுமில்லை. இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதுமில்லை."},{"id":127,"translation":"இன்னும், ஓர் அத்தியாயம் (புதிதாக) இறக்கப்பட்டால், அவர்களில் சிலர் சிலரை (விரைக்கப்) பார்க்கிறார்களா? “உங்களை யாரும் பார்க்கின்றனரா?” என்று (கேட்டு விட்டு) பின்னர், (அங்கிருந்து) திரும்பி சென்று விடுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் (சத்தியத்தை) அறிய முயற்சிக்காத மக்களாக இருக்கும் காரணத்தால், அல்லாஹ்(வும்) அவர்களுடைய உள்ளங்களை (நம்பிக்கை கொள்வதிலிருந்து) திருப்பி விட்டான்."},{"id":128,"translation":"(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் சிரமப்படுவதை தன் மீது கடினமாக உணரக்கூடிய; உங்கள் மீது அதிக பற்றுடைய; நம்பிக்கையாளர்கள் மீது பெரிதும் இரக்கமுள்ள; அதிகம் கருணையுள்ள தூதர் உங்களிலிருந்தே உங்களிடம் வந்து விட்டார்."},{"id":129,"translation":"(நபியே) ஆக, அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகி சென்றால், “எனக்குப் போதுமானவன் அல்லாஹ்தான்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; அவன் மீதே நான் நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் மகத்தான ‘அர்ஷின்’ அதிபதி” என்று கூறுவீராக!"}]},{"id":10,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் றா. இவை ஞானமிகுந்த வேதத்தின் வசனங்களாகும்."},{"id":2,"translation":"“(நிராகரிக்கின்ற) மனிதர்களை எச்சரிப்பீராக! இன்னும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு – நிச்சயமாக அவர்களுக்கு தங்கள் இறைவனிடத்தில் உயர்வான நற்கூலி உண்டு - என நற்செய்தி கூறுவீராக!’’ என்று அவர்களில் உள்ள ஓர் ஆடவருக்கு நாம் வஹ்யி அறிவித்தது இந்த மனிதர்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? நிச்சயமாக இவர் தெளிவான சூனியக்காரர்தான் என்று (இந்)நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி) கூறினார்கள்."},{"id":3,"translation":"(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் இறைவன், வானங்களையும் பூமியையும் ஆறு நாள்களில் படைத்தவனாகிய அல்லாஹ்தான். பிறகு, (அவன்) ‘அர்ஷ்’ மீது (தன் கண்ணியத்திற்குத் தக்கவாறு) உயர்ந்து விட்டான். (உலகத்தில் நடக்கின்ற) காரியங்களை அவன் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். அவனுடைய அனுமதிக்கு பின்னரே தவிர பரிந்துரைப்பவர் எவரும் இல்லை. அத்தகைய அல்லாஹ்தான் உங்கள் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். ஆக, நீங்கள் (இந்த வேதத்தின் மூலம்) நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?"},{"id":4,"translation":"அவனிடமே உங்கள் அனைவரின் மீளுமிடம் இருக்கிறது. அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையே! நிச்சயமாக அவன் படைப்பை ஆரம்பிக்கிறான். பிறகு, அதை (அழிக்கிறான். பிறகு அதை) மீண்டும் உருவாக்குகிறான், (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டு நற்செயல்களை செய்தவர்களுக்கு நீதமாக அவன் (நற்)கூலி கொடுப்பதற்காக. இன்னும், எவர்கள் நிராகரித்தார்களோ, - அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக, முற்றிலும் சூடேறி கொதிக்கின்ற (சீழ் சலம் போன்ற) குடிபானமும் மிகத் துன்புறுத்தும் தண்டனையும் அவர்களுக்கு உண்டு."},{"id":5,"translation":"அவன்தான் சூரியனை ஒளியாகவும், சந்திரனை வெளிச்சமாகவும் ஆக்கினான். இன்னும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காக அதை (-சந்திரனை பல) தங்குமிடங்களில் நிர்ணயித்தான். உண்மையான காரணத்திற்கே தவிர இவற்றை அல்லாஹ் படைக்கவில்லை. (இவற்றின் மூலம் அல்லாஹ்வின் வல்லமையை) அறி(ய முயற்சிக்)கின்ற சமுதாயத்திற்கு அத்தாட்சிகளை அவன் (இவ்வாறு) விவரிக்கிறான்."},{"id":6,"translation":"நிச்சயமாக இரவு பகல் (ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக) மாறி மாறி வருவதிலும், வானங்கள்; இன்னும், பூமியில் அல்லாஹ் படைத்திருப்பவற்றிலும் அல்லாஹ்வை அஞ்சுகின்ற மக்களுக்கு உறுதியாக (பல) அத்தாட்சிகள் உள்ளன."},{"id":7,"translation":"நிச்சயமாக எவர்கள் நம் சந்திப்பை பயப்படாமல் இருக்கிறார்களோ; இன்னும், இவ்வுலக வாழ்க்கையை விரும்புகிறார்களோ: இன்னும், அதைக் கொண்டு நிம்மதி அடைகிறார்களோ; இன்னும், நம் வசனங்களை எவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்களோ,"},{"id":8,"translation":"அ(த்தகைய)வர்கள், அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான்."},{"id":9,"translation":"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தவர்கள், - அவர்களுடைய இறைவன் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக அவர்களை நேர்வழி செலுத்துவான். அவர்கள் இன்பமிகு சொர்க்கங்களில் இருப்பார்கள். அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடும்."},{"id":10,"translation":"அதில் அவர்களின் பிரார்த்தனையாவது, “அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன்” என்பதாகும். அதில், அவர்களின் முகமன் “ஸலாம்” ஆகும். இன்னும், அவர்களுடைய பிரார்த்தனையின் இறுதியானது, “நிச்சயமாக புகழ் (அனைத்தும்) அகிலங்களின் இறைவன் அல்லாஹ்வுக்கே சொந்தமானது” என்பதாகும்."},{"id":11,"translation":"நன்மையை (கேட்டு) அவர்கள் அவசரப்படுவது போல் அல்லாஹ்வும் மனிதர்களுக்கு (அவர்களின் பாவத்திற்குரிய)த் தீங்கை (-தண்டனையை) விரைவாகக் கொடுத்தால் அவர்களுக்கு அவர்களுடைய தவணைக் காலம் (முன்பே) முடிக்கப்பட்டிருக்கும். ஆகவே, நம் சந்திப்பை பயப்படாதவர்களை, - அவர்களுடைய வழிகேட்டிலேயே கடுமையாக அட்டூழியம் செய்பவர்களாக – விட்டு விடுகிறோம்."},{"id":12,"translation":"இன்னும், மனிதனுக்கு துன்பம் ஏற்பட்டால், அவன் தன் விலாவின் மீது (சாய்ந்தவனாக); அல்லது, உட்கார்ந்தவனாக; அல்லது, நின்றவனாக (அதை நீக்கித் தரும்படி) நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனை விட்டு அவனுடைய துன்பத்தை நாம் நீக்கிவிடும்போது அவன் தனக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு நம்மை அழைக்காதது போன்று சென்று விடுகிறான். எல்லை மீறி(ய பாவி)களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவை இவ்வாறு அலங்கரிக்கப்பட்டன."},{"id":13,"translation":"(மனிதர்களே!) உங்களுக்கு முன்னர் (வாழ்ந்த பல) தலைமுறைகளை அவர்கள் அநியாயம் செய்தபோது திட்டவட்டமாக நாம் அழித்தோம். இன்னும், அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தனர். எனினும், (அவற்றை) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. குற்றம் புரிகின்ற மக்களை இவ்வாறே நாம் தண்டிப்போம்."},{"id":14,"translation":"பிறகு, நீங்கள் எப்படி(ப்பட்ட செயல்கள்) செய்கிறீர்கள் என்று நாம் கவனிப்பதற்காக அவர்களுக்குப் பின்னர் நாம் உங்களை பூமியில் வாரிசுகளாக (முந்திய சமுதாயத்தின் வழித்தோன்றல்களாக) ஆக்கினோம்."},{"id":15,"translation":"இன்னும், (நபியே!) இவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால், நம் சந்திப்பை பயப்படாதவர்கள் - “இது அல்லாத (வேறு) ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரீர்; அல்லது, (எங்கள் விருப்பத்திற்கு ஏற்ப) நீர் அதை மாற்றுவீராக” என்று கூறுகிறார்கள். “என் புறத்திலிருந்து அதை நான் மாற்றுவது என்னால் முடியாது. எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறு எதையும்) நான் பின்பற்ற மாட்டேன். என் இறைவனுக்கு நான் மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளி(ல் நரகத்தி)ன் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று (நபியே!) கூறுவீராக."},{"id":16,"translation":"(மேலும்) கூறுவீராக: “(இதை நான் உங்களுக்கு ஓதிக் காட்டக் கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், நான் இதை உங்களுக்கு ஓதி காண்பித்திருக்கவும் மாட்டேன்; இன்னும், அவன் உங்களுக்கு இதை அறிவித்திருக்கவும் மாட்டான். ஆக, இதற்கு முன்னர் ஒரு (நீண்ட) காலம் உங்களுடன் வசித்துள்ளேன். ஆகவே, நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?”"},{"id":17,"translation":"ஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனைவிட; அல்லது, அவனுடைய வசனங்களைப் பொய்ப்பித்தவனைவிட பெரும் அநியாயக்காரன் யார்? நிச்சயமாக குற்றவாளிகள் வெற்றிபெற மாட்டார்கள்."},{"id":18,"translation":"எது அவர்களுக்கு தீங்கிழைக்காதோ; இன்னும், அவர்களுக்கு பலனளிக்காதோ அதைத்தான் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகிறார்கள். இன்னும், “இவை அல்லாஹ்விடம் எங்களுடைய பரிந்துரையாளர்கள்” என்று கூறுகிறார்கள். (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி,) “வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்விற்கு அவன் அறியாதவற்றை நீங்கள் அறிவிக்கிறீர்களா? அவன் மிகப் பரிசுத்தமானவன்; இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் (தகுதியால்) மிக உயர்ந்தவனாக இருக்கிறான்” என்று கூறுவீராக."},{"id":19,"translation":"மனிதர்கள் (அனைவரும் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும்) ஒரே ஒரு சமுதாயமாகவே தவிர இருக்கவில்லை. பிறகு, (பொறாமையினால் தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொண்டனர். (செயலுக்குரிய கூலி மறுமையில்தான் என்ற) உம் இறைவனின் விதி முந்தி இருக்க வில்லையெனில், (அவர்கள்) கருத்து வேறுபாடு கொள்கின்றவற்றில் அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும்!"},{"id":20,"translation":"இன்னும், “ஓர் அத்தாட்சி அவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து இறக்கப்பட்டிருக்க வேண்டாமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள். (அதற்கு நபியே!) கூறுவீராக! “மறைவானவை எல்லாம் அல்லாஹ்விற்குரியனவே. ஆகவே, நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்.”"},{"id":21,"translation":"இன்னும், மனிதர்களுக்கு அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் கருணையை நாம் சுவைக்க வைத்தால், அப்போது அவர்களுக்கு நம் வசனங்களில் ஒரு சூழ்ச்சி செய்ய (சிந்தனை தோன்றுகிறது). (நபியே!) “அல்லாஹ் சூழ்ச்சி செய்வதில் மிகத் தீவிரமானவன்” என்று கூறுவீராக! நிச்சயமாக நம் (வானவ) தூதர்கள் நீங்கள் சூழ்ச்சி செய்வதைப் பதிவு செய்கிறார்கள்."},{"id":22,"translation":"அவன்தான் உங்களை நிலத்திலும் நீரிலும் பயணிக்க வைக்கிறான். இறுதியாக, நீங்கள் கப்பல்களில் இருக்கும் நிலையில், நல்ல காற்றால் (அந்த கப்பல்கள்) அ(வற்றில் பயணிப்ப)வர்களை சுமந்து செல்கின்றன. இன்னும், அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். (இந்நிலையில்) அவற்றைப் புயல் காற்று வந்தடைந்தன. இன்னும், எல்லா இடத்திலிருந்தும் அவர்களை அலைகள் சூழ்ந்து வந்தன. இன்னும், “நிச்சயமாக தாம் அழிக்கப்பட்டோம்” என்று அவர்கள் எண்ணியபோது, “(அல்லாஹ்வே!) இதிலிருந்து நீ எங்களைப் பாதுகாத்(து கரை சேர்த்)தால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களில் இருப்போம்” என்று அவர்கள் அல்லாஹ்வை - அவனுக்கு (மட்டும்) வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக - அழைக்கிறார்கள்."},{"id":23,"translation":"ஆக, அவன் அவர்களை பாதுகாத்தபோது அவர்கள் பூமியில் உடனே நியாயமின்றி, (பாவம் செய்வதிலும் குழப்பம் செய்வதிலும்) எல்லை மீறுகிறார்கள். மனிதர்களே! உங்கள் எல்லை மீறுதல் எல்லாம் உங்களுக்கே கேடானதாகும். இவ்வுலக வாழ்க்கை சொற்ப இன்பமாகும். பிறகு, நம் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, (அப்போது) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் உங்களுக்கு அறிவிப்போம்."},{"id":24,"translation":"உலக வாழ்க்கையின் உதாரணமெல்லாம் மேகத்திலிருந்து நாம் இறக்கிய (மழை) நீரைப் போன்றுதான். ஆக, மனிதர்களும் கால்நடைகளும் புசிக்கின்ற பூமியின் தாவரம் அ(ந்)த (மழையி)ன் மூலம் முளைத்து, (ஒன்றோடு ஒன்று) கலந்து (அடர்த்தியாக வளர்ந்து) விட்டது. இறுதியாக, (அந்த செடி கொடிகளால்) பூமி அலங்காரமாக காட்சி தந்தது. இன்னும், அதன் உரிமையாளர்கள் (பயிர்களை அறுவடை செய்வதற்காக அங்கு வந்து,) நிச்சயமாக அவர்கள் அவற்றின் மேல் (-அவற்றை அறுவடை செய்ய) ஆற்றல் பெற்றவர்கள் என்று எண்ணியபோது, - (அவற்றை அழிப்பதற்குரிய) நம் கட்டளை இரவில் அல்லது பகலில் அவற்றுக்கு வந்தது. ஆகவே, அவற்றை அவை நேற்றைய தினம் இல்லாததைப் போன்று வேரறுக்கப்பட்டதாக நாம் ஆக்கி விட்டோம். (அல்லாஹ்வின் அத்தாட்சிகளில்) சிந்திக்கின்ற மக்களுக்கு வசனங்களை இவ்வாறு நாம் விவரிக்கிறோம்."},{"id":25,"translation":"ஈடேற்றத்தின் இல்ல(மாகிய சொர்க்க)த்தின் பக்கம் அல்லாஹ் (உங்களை) அழைக்கிறான். இன்னும் அவன் நாடுகிறவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டுகிறான்."},{"id":26,"translation":"(அல்லாஹ்வை அழகிய முறையில் வணங்கி, மார்க்க சட்டங்களை பின்பற்றி வாழ்ந்து) நல்லறம் புரிந்தவர்களுக்கு மிக அழகிய கூலியும் (இறையருளில் இன்னும்) அதிகமும் உண்டு. இன்னும், அவர்களுடைய முகங்களை (எவ்வித) கவலையும் இழிவும் சூழாது. அவர்கள் சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":27,"translation":"இன்னும், தீமைகளை செய்தவர்கள் (அவர்களின்) தீமைக்கு கூலி(யாக) அது போன்ற (தீய)தைக் கொண்டுதான் (கொடுக்கப்படுவார்கள்)! இன்னும், அவர்களை இழிவு சூழ்ந்துவிடும். அல்லாஹ்விடமிருந்து பாதுகாப்பவர் எவரும் அவர்களுக்கு இல்லை. இருண்ட இரவின் ஒரு பல பாகங்களால் அவர்களுடைய முகங்கள் போர்த்தப்பட்டதைப் போன்று (கடும் கருப்பாக) இருக்கும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":28,"translation":"இன்னும், (நபியே!) அவர்கள் அனைவரையும் நாம் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளை நினைவு கூர்வீராக! பிறகு, இணை வைத்தவர்களை நோக்கி, “நீங்களும் (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களும் உங்கள் இடத்திலேயே (தாமதியுங்கள்)” என்று கூறுவோம். ஆக, அவர்களுக்கிடையில் (இருந்த தொடர்பை) நீக்கி விடுவோம். (அப்போது) “நீங்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை” என்று அவர்க(ள் இணை வைத்து வணங்கிய அவர்க)ளுடைய தெய்வங்கள் கூறும்."},{"id":29,"translation":"ஆக, “எங்களுக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன்; உங்கள் வழிபாட்டை நிச்சயம் நாங்கள் அறியாதவர்களாகவே இருந்தோம்” (என்றும் அந்த கற்பனை தெய்வங்கள் கூறும்)."},{"id":30,"translation":"அங்கு (மறுமையில்), ஒவ்வொரு ஆத்மாவும் தான் (உலகத்தில்) முன்னர் செய்தவற்றை நன்கு அறிந்துகொள்ளும். இன்னும், அவர்கள் தங்கள் உண்மையான எஜமானாகிய அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படுவார்கள். (தெய்வங்கள் என்று) அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை (இறுதியாக) அவர்களை விட்டும் மறைந்துவிடும்."},{"id":31,"translation":"(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: “வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு யார் உணவளிக்கிறான்? அல்லது, (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் யார் உரிமை கொள்வான்? இன்னும், இறந்ததிலிருந்து உயிருள்ளதையும்; உயிருள்ளதிலிருந்து இறந்ததையும் யார் உற்பத்தி செய்கிறான்? இன்னும், எல்லா காரியங்களையும் யார் திட்டமிட்டு நிர்வகிக்கிறான்?” ஆக, (அதற்கு பதிலில்), “அல்லாஹ்தான்” என்று கூறுவார்கள். ஆக, நீர் கூறுவீராக: “ஆகவே, நீங்கள் அந்த அல்லாஹ்வை அஞ்சவேண்டாமா?”"},{"id":32,"translation":"ஆக, “அந்த அல்லாஹ்தான் உங்கள் உண்மையான இறைவன். ஆக, (இந்தளவு தெளிவான) உண்மைக்குப் பின்னர் வழிகேட்டைத் தவிர (வேறு) என்ன இருக்கிறது? ஆகவே, நீங்கள் (உண்மையிலிருந்து) எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?”."},{"id":33,"translation":"(அல்லாஹ்விற்கு கீழ்ப்படியாமல்) உண்மையை மீறியவர்கள் மீது, - நிச்சயமாக அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் - என்ற உம் இறைவனின் சொல் அவ்வாறே உறுதியாகி விட்டது."},{"id":34,"translation":"(நபியே!) கூறுவீராக: “படைப்புகளை முதலாவதாக உருவாக்கி, (அவை இறந்த) பிறகு, அவற்றை மீண்டும் உருவாக்குபவன் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்தான் படைப்புகளை முதலாவதாக உருவாக்குகிறான். பிறகு, (அவை இறந்த பின்னர்) அவற்றை மீண்டும் (மறுமையில்) உருவாக்குவான்.” ஆக, (இத்தகைய இறைவனை வணங்குவதிலிருந்து சிலைகளை வணங்குவதன் பக்கம்) நீங்கள் எவ்வாறு திருப்பப்படுகிறீர்கள்?"},{"id":35,"translation":"(நபியே) கூறுவீராக: “சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவர் (யாரும்) உங்கள் தெய்வங்களில் உண்டா?” (நபியே) கூறுவீராக: “அல்லாஹ்தான் சத்தியத்திற்கு நேர்வழி காட்டுகிறான். ஆக, சத்தியத்தின் பக்கம் நேர்வழி காட்டுபவன் பின்பற்றப்படுவதற்கு மிகத் தகுதியானவனா? அல்லது, தான் நேர்வழி காட்டப்பட்டால் தவிர நேர்வழி அடையாதவ(ன் பின்பற்ற தகுதியானவ)னா? ஆக, உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்”"},{"id":36,"translation":"இன்னும், அவர்களில் பெரும்பாலானவர்கள் சந்தேகத்தையே தவிர (வேறு எதையும்) பின்பற்றுவதில்லை. நிச்சயமாக சந்தேகம் உண்மையை விட்டும் ஒரு சிறிதும் பலன்தராது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கறிந்தவன்."},{"id":37,"translation":"இன்னும், இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை. எனினும், இது (வேதங்களில்) தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்தக் கூடியதாகவும், (மார்க்க) சட்டங்களை விவரித்துக் கூறக் கூடியதாகவும் இருக்கிறது. அகிலங்களின் இறைவனிடமிருந்து இ(து இறக்கப்பட்டது என்ப)தில் அறவே சந்தேகமில்லை."},{"id":38,"translation":"“இதை (நம் தூதர்) இட்டுக்கட்டினார்” என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! “ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வையன்றி உங்களுக்கு முடிந்தவர்களை (உங்கள் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்!”"},{"id":39,"translation":"மாறாக, எதைப் பற்றிய அறிவை இவர்கள் சூழ்ந்தறியவில்லையோ அதைப் பொய்ப்பித்தனர். அதன் விளக்கமோ இதுவரை இவர்களுக்கு வரவில்லை. இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அவர்கள் அறியாததை) பொய்ப்பித்தனர். ஆகவே, அநியாயக்காரர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்பதை (நபியே!) கவனிப்பீராக!"},{"id":40,"translation":"இன்னும், இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொள்பவரும் அவர்களில் உண்டு; இன்னும், இதை நம்பிக்கை கொள்ளாதவரும் அவர்களில் உண்டு. இன்னும், உம் இறைவன் விஷமிகளை மிக அறிந்தவன்."},{"id":41,"translation":"(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், “என் செயல் எனக்கு; இன்னும், உங்கள் செயல் உங்களுக்கு; நான் செய்வதிலிருந்து நீங்கள் நீங்கியவர்கள்; இன்னும், நீங்கள் செய்வதிலிருந்து நான் நீங்கியவன்” என்று கூறுவீராக!"},{"id":42,"translation":"இன்னும், அவர்களில் உம் பக்கம் (நீர் கூறும் உண்மைகளை) செவியுறுபவர்களும் உண்டு. (ஆனால், அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.) ஆக, செவிடர்களை, - அவர்கள் சிந்தித்து புரியாதவர்களாக இருந்தாலும் - நீர் கேட்க வைப்பீரா? (அது உம்மால் முடியுமா?)"},{"id":43,"translation":"இன்னும், உம் பக்கம் (உமது தெளிவான அத்தாட்சிகளை கண்களால்) பார்ப்பவரும் அவர்களில் உண்டு. (ஆனால், அவர்கள் அவற்றை நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்.) ஆக, குருடர்களை, - அவர்கள் பார்க்காதவர்களாக இருந்தாலும் - நீர் நேர்வழி செலுத்துவீரா? (அது உம்மால் முடியுமா?)"},{"id":44,"translation":"நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களுக்கு ஒரு சிறிதும் அநீதியிழைக்க மாட்டான். எனினும், மனிதர்கள் தங்களுக்குத் தாமே அநீதியிழைக்கிறார்கள்."},{"id":45,"translation":"இன்னும், அவன் அவர்களை ஒன்று திரட்டும் நாளில், - பகலில் ஒரு (சொற்ப) நேரத்தைத் தவிர (உலகில்) அவர்கள் தங்கி இருக்கவில்லை என்பது போன்று (அவர்களுக்கு) தோன்றும். தங்களுக்குள் (ஒருவரையொருவர்) அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் சந்திப்பைப் பொய்ப்பித்தவர்கள் திட்டமாக நஷ்டமடைந்தார்கள். இன்னும், அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை."},{"id":46,"translation":"(நபியே!) இன்னும், நாம் அவர்களுக்கு வாக்களிக்கும் (தண்டனைகளில்) சிலவற்றை (அவர்கள் மீது இறக்கி உம் வாழ்விலேயே) உமக்குக் காண்பிப்போம்; அல்லது, (அதற்கு முன்) உம்மை உயிர் கைப்பற்றிக் கொள்வோம். ஆக, (எவ்வாறாயினும்) அவர்களுடைய மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது. பிறகு, அவர்கள் செய்தவற்றிற்கு எல்லாம் அல்லாஹ் சாட்சியாளன் ஆவான். (அவர்களின் செயல்கள் அவனுக்கு மறைந்தவை அல்ல. ஆகவே, அவன் அவர்களுக்கு தகுந்த கூலி கொடுப்பான்.)"},{"id":47,"translation":"இன்னும், (சென்று போன) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு தூதர் இருந்தார். ஆக, அவர்களுடைய தூதர் (மறுமையில் அவர்களுக்கு முன்) வரும்போது அவர்களுக்கிடையில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":48,"translation":"இன்னும், (நபியே! உம்மையும் முஃமின்களையும் நோக்கி) “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (தண்டனையின்) இந்த வாக்கு எப்போது (வரும்)?” என்று அவர்கள் கேட்கிறார்கள்."},{"id":49,"translation":"(அதற்கு நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் நாடியதைத் தவிர (எவ்வித) தீமைக்கோ நன்மைக்கோ நான் எனக்கு உரிமை பெறமாட்டேன். ஒவ்வொரு வகுப்பாருக்கும் ஒரு (குறிப்பிட்ட) தவணை உண்டு. அவர்களுடைய தவணை வந்தால் (அதிலிருந்து) சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள்; இன்னும், முந்தவும் மாட்டார்கள்.”"},{"id":50,"translation":"(மேலும்) கூறுவீராக: (இணைவைப்பவர்களே!) “அவனுடைய தண்டனை இரவில்; அல்லது, பகலில் உங்களுக்கு வந்தால் (அதை உங்களால் தடுக்க முடியுமா)? என்பதை எனக்கு நீங்கள் அறிவியுங்கள்.” (நபியே!) (இக்)குற்றவாளிகள் எதை அவசரமாகத் தேடுகிறார்கள்?"},{"id":51,"translation":"(இணைவைப்பாளர்களே!) அங்கே (அந்த தண்டனை உங்களுக்கு) நிகழ்ந்தால் அதை நீங்கள் நம்பிக்கை கொள்வீர்களா? (அப்போது அவர்களை நோக்கி கூறப்படும்:) “இப்போதுதானா (உங்களுக்கு நம்பிக்கை வருகிறது)? நீங்களோ அதை அவசரமாக தேடிக் கொண்டிருந்தீர்கள்!”"},{"id":52,"translation":"பிறகு, அநியாயம் செய்தவர்களை நோக்கி, “நிரந்தரமான தண்டனையை சுவையுங்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்காகவே தவிர நீங்கள் (இப்போது இத்தகைய) கூலி கொடுக்கப்படுகிறீர்களா?” என்று கூறப்படும்."},{"id":53,"translation":"(நபியே!) இன்னும், “அது உண்மைதானா?” என்று அவர்கள் உம்மிடம் செய்தி கேட்கிறார்கள். கூறுவீராக! “ஆம். என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக அது உண்மைதான்! இன்னும், நீங்கள் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்கள் அல்லர்”"},{"id":54,"translation":"இன்னும், அநியாயம் செய்த ஒவ்வோர் ஆன்மாவிற்கும் பூமியில் உள்ளவை (அனைத்தும் சொந்தமாக) இருந்தால் (அந்த ஆன்மா தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) அவற்றை மீட்புத் தொகையாக கொடுத்து தன்னை விடுவித்துவிடும்! இன்னும், அவர்கள் தண்டனையைக் (கண்ணால்) காணும்போது துக்கத்தை மறைத்துக் கொள்வார்கள். இன்னும், அவர்களுக்கு மத்தியில் நீதமாகவே தீர்ப்பளிக்கப்படும்; இன்னும், அவர்கள் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்."},{"id":55,"translation":"வானங்களிலும் பூமியிலும் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்விற்குரியன என்பதை அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானது என்பதை(யும்) அறிந்து கொள்ளுங்கள்! எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (உண்மையை) அறிய (முயற்சிக்க) மாட்டார்கள்."},{"id":56,"translation":"அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்கச் செய்கிறான்; இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":57,"translation":"மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உபதேசமும், நெஞ்சங்களிலுள்ளவற்றை குணப்படுத்தும் மருந்தும் நேர்வழியும், (குறிப்பாக இந்த வேதத்தை பின்பற்றி நடக்கின்ற) நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் (அருளும்) வந்துவிட்டன."},{"id":58,"translation":"(நபியே) கூறுவீராக! “(இந்தக் குர்ஆன்) அல்லாஹ்வின் அருளினாலும் அவனுடைய கருணையினாலும் (உங்களுக்கு) இறக்கப்பட்டிருக்கிறது. ஆகவே, இ(தை நம்பிக்கைக் கொண்டு, இதை பின்பற்றி நடப்ப)தன் மூலமே அவர்கள் மகிழ்ச்சியடையட்டும். இது அவர்கள் சேகரி(த்து சேமித்து வை)க்கின்ற (உலக செல்வத்)தை விட மிக மேலானதாகும்.”"},{"id":59,"translation":"(நபியே!) கூறுவீராக: “(மக்களே) அறிவிப்பீர்களாக, உங்களுக்காக அல்லாஹ் இறக்கிவைத்த உணவில், அதில் சிலவற்றை ஆகாதவை என்றும், சிலவற்றை ஆகுமானவை என்றும் நீங்கள் ஆக்கிக்கொள்கிறீர்களா? அல்லாஹ் (இதற்கு) உங்களுக்கு அனுமதி அளித்தானா? அல்லது, அல்லாஹ்வின் மீது நீங்கள் (இவ்வாறு கற்பனையாக) இட்டுக் கட்டுகிறீர்களா?”"},{"id":60,"translation":"அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களுடைய எண்ணம்தான் மறுமை நாளில் என்ன? (அல்லாஹ் அவர்களுடன் எப்படி நடந்து கொள்வான் என்று எண்ணுகிறார்கள்?) நிச்சயமாக (இந்த உலகத்தில்) அல்லாஹ் மனிதர்கள் எல்லோர் மீதும் அதிக அருளுடையவன். (ஆகவே, அவன் யாரையும் உடனே தண்டிப்பதில்லை.) எனினும், அவர்களில் அதிகமானவர்கள் நன்றி செலுத்தமாட்டார்கள்."},{"id":61,"translation":"(நபியே) நீர் எந்த ஒரு செயலில் இருந்தாலும், இன்னும், (அல்லாஹ்வின் வேதமாகிய) குர்ஆனிலிருந்து நீர் எதை ஓதினாலும், இன்னும், (மக்களே) நீங்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் நீங்கள் அவற்றில் ஈடுபடும் போது உங்கள் மீது சாட்சியாளர்களாக (உங்களை கண்காணித்தவர்களாக) நாம் இருந்தே தவிர அவற்றை நீங்கள் செய்யமாட்டீர்கள். இன்னும், பூமியிலோ வானத்திலோ மிகச் சிறிய ஓர் எறும்பின் கனமளவும் உம் இறைவனை விட்டு மறையாது. இன்னும், இதைவிட சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை, (அவனுடைய) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர."},{"id":62,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்வின் நண்பர்கள், - அவர்கள் மீது ஒரு பயமுமில்லை; இன்னும், அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்."},{"id":63,"translation":"அவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், அவனை அஞ்சுபவர்களாக இருப்பார்கள்."},{"id":64,"translation":"உலக வாழ்க்கையிலும், இன்னும் மறுமை வாழ்க்கையிலும் அவர்களுக்கே நற்செய்தி உண்டு. அல்லாஹ்வுடைய வாக்குகளில் மாற்றம் அறவே இல்லை. இதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":65,"translation":"(நபியே!) இன்னும், அவர்களுடைய (தீய) சொல் உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக கண்ணியம் அனைத்தும் அல்லாஹ்விற்கு உரியன! அவன் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்."},{"id":66,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! வானங்களில் உள்ளவர்களும்; இன்னும், பூமியில் உள்ளவர்களும் நிச்சயமாக அல்லாஹ்விற்குரியவர்களே. அல்லாஹ்வை அன்றி (அவனுக்கு இணையாக கற்பனை செய்யப்பட்ட) தெய்வங்களிடம் பிரார்த்திப்பவர்கள் எதைப் பின்பற்றுகிறார்கள்? சந்தேகத்தைத் தவிர அவர்கள் (உறுதியான உண்மையை) பின்பற்றுவதில்லை. இன்னும், அவர்கள் (வீணான) கற்பனை செய்பவர்களாகவே தவிர (உண்மையான ஆதாரங்களை ஏற்பவர்களாக) இல்லை!"},{"id":67,"translation":"அவன்தான் உங்களுக்கு இரவை, நீங்கள் அதில் சுகம் பெறுவதற்காகவும்; இன்னும், பகலை பார்க்கக்கூடிய (வெளிச்சமுள்ள)தாகவும் ஆக்கினான். (அவனுடைய வசனங்களுக்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் (ஏராளமான) அத்தாட்சிகள் உள்ளன."},{"id":68,"translation":"அல்லாஹ் (தனக்கு) ஒரு குழந்தையை ஏற்படுத்திக் கொண்டான் என்று (சிலர்) கூறுகிறார்கள். அவனோ மிகப் பரிசுத்தமானவன். அவன் (சந்ததிகளை விட்டு) மிகவும் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன. இ(வ்வாறு கூறுவ)தற்கு உங்களிடம் எந்த ஓர் ஆதாரமும் இல்லை. நீங்கள் (ஆதாரத்துடன்) அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாக இட்டுகட்டி) கூறுகிறீர்களா?"},{"id":69,"translation":"(நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”"},{"id":70,"translation":"இவ்வுலகில் (அவர்களுக்கு அற்ப) சுகம் (உண்டு). பிறகு, நம்மிடமே அவர்களுடைய மீளுமிடம் இருக்கிறது. பிறகு, அவர்கள் நிராகரித்துக் கொண்டிருந்ததன் காரணமாக கடினமான தண்டனையை அவர்கள் சுவைக்கும்படி செய்வோம்."},{"id":71,"translation":"(நபியே!) நூஹ் உடைய சரித்திரத்தை அவர்களுக்கு ஓதி காண்பிப்பீராக! அவர் தன் சமுதாயத்தை நோக்கி, “என் சமுதாயமே! (உங்களுடன்) நான் தங்கி இருப்பதும், அல்லாஹ்வின் வசனங்களைக் கொண்டு (உங்களுக்கு) நான் உபதேசிப்பதும் உங்கள் மீது பாரமாக இருந்தால், நான் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். ஆகவே, உங்கள் (விருப்பப்படி) காரியத்தை முடிவு செய்யுங்கள்; இன்னும், (நீங்கள் இணை வைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களையும் (அழைத்துக் கொள்ளுங்கள்). பிறகு, உங்கள் காரியம் உங்களுக்கு மறைவானதாக குழப்பமானதாக ஆகிவிட வேண்டாம். பிறகு, என் மீது (அம்முடிவை) நிறைவேற்றுங்கள். இன்னும், (அதில்) நீங்கள் எனக்கு அவகாசம் அளிக்காதீர்கள்” என்று (நூஹ்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக."},{"id":72,"translation":"“ஆக, நீங்கள் (புறக்கணித்து) விலகினால், (எனக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நான் உங்களிடம் எந்த கூலியையும் கேட்கவில்லை; என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. இன்னும், முஸ்லிம்களில் நான் இருக்க வேண்டுமென கட்டளையிடப்பட்டுள்ளேன்” (என்று நூஹ் கூறினார்)."},{"id":73,"translation":"ஆக, (அம்மக்கள்) அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். இன்னும், அவர்களை வாரிசுகளாக ஆக்கினோம். இன்னும், நம் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களை மூழ்கடித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எவ்வாறு (மோசமாக) இருந்தது என்று கவனிப்பீராக!"},{"id":74,"translation":"பிறகு, அவருக்குப் பின்னர் பல தூதர்களை அவர்களுடைய சமுதாயத்திற்கு அனுப்பினோம். ஆக, அவர்கள் (பல) அத்தாட்சிகளை அவர்களிடம் கொண்டு வந்தார்கள். முன்னர் அவர்க(ளுடைய மூதாதைக)ள் பொய்ப்பித்தவற்றை இவர்களும் நம்பிக்கை கொள்பவர்களாக இருக்கவில்லை. எல்லை மீறியவர்களின் உள்ளங்கள் மீது இவ்வாறே நாம் முத்திரையிடுகிறோம்."},{"id":75,"translation":"பிறகு, இவர்களுக்குப் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்ன் இன்னும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடம் அனுப்பினோம். ஆக, அவர்கள் கர்வம் கொண்டனர். இன்னும், அவர்கள் குற்றம் புரிகின்ற சமுதாயமாக இருந்தனர்."},{"id":76,"translation":"ஆக, அவர்களுக்கு நம்மிடமிருந்து உண்மை வந்தபோது, “நிச்சயமாக இது தெளிவான சூனியம்தான்” என்று கூறினார்கள்."},{"id":77,"translation":"மூஸா கூறினார்: “உண்மையைப் பார்த்து, - அது உங்களிடம் வந்தபோது (-அதை சூனியம் என்று) கூறுகிறீர்களா? சூனியமா இது? சூனியக்காரர்கள் (ஒருபோதும்) வெற்றி பெறமாட்டார்கள்.”"},{"id":78,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்கள் மூதாதையர்களை நாங்கள் எதில் கண்டோமோ அதிலிருந்து எங்களை நீர் திருப்பி விடுவதற்கும், பூமியில் உங்கள் இருவருக்கும் தலைமைத்துவம் (பெருமை, ஆதிக்கம்) ஆகிவிட வேண்டும் என்பதற்காக நீர் எங்களிடம் வந்தீரா? இன்னும், நாங்கள் உங்கள் இருவரையும் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை.”"},{"id":79,"translation":"இன்னும், ஃபிர்அவ்ன் கூறினான்: “(சூனியத்தை) கற்றறிந்த (திறமையான) எல்லா சூனியக்காரர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்!”"},{"id":80,"translation":"ஆக, சூனியக்காரர்கள் வந்தபோது, அவர்களை நோக்கி மூஸா கூறினார்: “நீங்கள் (சூனியம் செய்வதற்காக) எதை எறியக்கூடியவர்களாக இருக்கிறீர்களோ அதை (மைதானத்தில்) எறியுங்கள்!”"},{"id":81,"translation":"ஆக, அவர்கள் எறிந்தபோது, (அவர்களை நோக்கி) மூஸா கூறினார்: “நீங்கள் செய்தவை (அனைத்தும் வெறும்) சூனியம்தான். நிச்சயமாக அல்லாஹ் அவற்றை விரைவில் அழிப்பான். நிச்சயமாக அல்லாஹ் விஷமிகளின் செயலை சீர் செய்ய மாட்டான்.”"},{"id":82,"translation":"இன்னும், “அல்லாஹ் தன் கட்டளைகளைக் கொண்டு உண்மையை நிரூபிப்பான், (அதை) குற்றவாளிகள் வெறுத்தாலும் சரியே!”"},{"id":83,"translation":"ஆக, ஃபிர்அவ்னும், அவனுடைய முக்கிய பிரமுகர்களும் தங்களை துன்புறுத்துவார்கள் என்பதை பயந்து மூஸாவை அவரின் சமுதாயத்திலிருந்து ஒரு (சில) சந்ததியினரைத் தவிர (அதிமானவர்கள்) நம்பிக்கை கொள்ளவில்லை. நிச்சயமாக ஃபிர்அவ்ன் பூமியில் சர்வாதிகாரியாக (கொடுங்கோலனாக) இருந்தான். இன்னும், நிச்சயமாக அவன் (நிராகரிப்பிலும் விஷமத்திலும்) எல்லை மீறி செல்பவர்களில் இருந்தான்."},{"id":84,"translation":"இன்னும், மூஸா கூறினார்: “என் சமுதாயமே! நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால், நீங்கள் (அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் பணிந்து கட்டுப்படக்கூடிய) முஸ்லிம்களாக இருந்தால், அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விடுங்கள்!”"},{"id":85,"translation":"அதற்கு அவர்கள் (பிரார்த்தித்து) கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டோம். எங்கள் இறைவா! அநியாயம் செய்கின்ற சமுதாயத்திற்கு சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! (எங்கள் மீது அவர்களை சாட்டி விடாதே!)”"},{"id":86,"translation":"இன்னும், “நிராகரிக்கின்ற சமுதாயத்திடமிருந்து உன் கருணையினால் எங்களை பாதுகாத்துக்கொள்!”"},{"id":87,"translation":"இன்னும், மூஸாவுக்கும் அவருடைய சகோதரருக்கும் நாம் வஹ்யி அறிவித்தோம்: “நீங்கள் இருவரும் உங்கள் சமுதாயத்திற்காக எகிப்தில் (பல) வீடுகளை அமையுங்கள்! இன்னும், (அந்த) உங்கள் வீடுகளை தொழுமிடங்களாக ஆக்குங்கள்! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு (அல்லாஹ்வின் உதவியும் சொர்க்கமும் உண்டு என்று) நற்செய்தி கூறுவீராக!”"},{"id":88,"translation":"இன்னும், மூஸா கூறினார்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நீ ஃபிர்அவ்னுக்கும், அவனுடைய பிரமுகர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையில் (ஆடம்பர) அலங்காரத்தையும் செல்வங்களையும் கொடுத்தாய். எங்கள் இறைவா! அவர்கள் உன் பாதையில் இருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காக (அவற்றை பயன்படுத்துகிறார்கள்). எங்கள் இறைவா! அவர்களின் பொருள்களை நாசமாக்கு! இன்னும், அவர்களுடைய உள்ளங்களை கடினமாக்கி (அவற்றின் மீது முத்திரையிட்டு) விடு! ஆக, அவர்கள் துன்புறுத்தக்கூடிய தண்டனையை (கண்ணால்) காணும் வரை, நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.”"},{"id":89,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “(மூஸாவே! ஹாரூனே!) உங்கள் இருவரின் பிரார்த்தனை ஏற்கப்பட்டு விட்டது. நீங்கள் இருவரும் (மார்க்கத்திலும் அதன் பக்கம் அழைப்பதிலும்) உறுதியாக இருங்கள்; இன்னும், அறியாதவர்களின் பாதையை நீங்கள் இருவரும் பின்பற்றாதீர்கள்.”"},{"id":90,"translation":"இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகள் கடலைக் கடக்கும்படி செய்தோம். ஆக, ஃபிர்அவ்னும் அவனுடைய இராணுவங்களும் அழிச்சாட்டியமாகவும் (அநியாயம் செய்வதில்) எல்லை மீறியும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்தனர். இறுதியாக, (கடலில்) அவன் மூழ்கியபோது, “நிச்சயமாக இஸ்ராயீலின் சந்ததிகள் நம்பிக்கை கொண்ட (இறை)வனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை என்று நான் நம்பிக்கை கொண்டேன்; இன்னும், நான் முஸ்லிம்களில் ஒருவனாக ஆகிவிட்டேன்” என்று (ஃபிர்அவன்) கூறினான்."},{"id":91,"translation":"“இப்போது தானா (நம்பிக்கை கொள்கிறாய்? இதற்கு) முன்னரோ (அல்லாஹ்விற்கு) மாறு செய்பவனாக இருந்தாய். இன்னும், நீ விஷமிகளில் (ஒருவனாக) இருந்தாய்."},{"id":92,"translation":"ஆக, உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு நீ ஓர் அத்தாட்சியாக ஆகுவதற்காக உன் உடலை நாம் உயர(மான இட)த்தில் வைப்போம்.” நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் நம் அத்தாட்சிகளை அறியாதவர்கள்தான்."},{"id":93,"translation":"திட்டவட்டமாக, இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (வசிப்பதற்கு தகுதியான சிறப்பான) மிக நல்ல இடத்தை அமைத்து கொடுத்தோம்; இன்னும், நல்ல பொருள்களிலிருந்து அவர்களுக்கு உணவு(ம் வாழ்வாதாரமும்) வழங்கினோம். ஆக, (வேதத்தின்) ஞானம் அவர்களிடம் வரும் வரை அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்ளவில்லை. எதில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருக்கிறார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் நிச்சயமாக உம் இறைவன் தீர்ப்பளிப்பான்."},{"id":94,"translation":"ஆக, (நபியே!) நாம் உமக்கு இறக்கிய (வேதத்)தில் நீர் சந்தேகத்தில் இருந்தால் உமக்கு முன்னர் (கொடுக்கப்பட்ட) வேதத்தை படிக்கின்றவர்களிடம் கேட்பீராக! உம் இறைவனிடமிருந்து உண்மை உமக்கு திட்டவட்டமாக வந்துவிட்டது. ஆகவே, சந்தேகப்படுபவர்களில் நீர் அறவே ஆகிவிடாதீர்!"},{"id":95,"translation":"இன்னும், அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்ப்பித்தவர்களில் அறவே நீர் ஆகிவிடாதீர்! அப்படி செய்தால் நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்."},{"id":96,"translation":"நிச்சயமாக எவர்கள் (நிராகரிப்பில் இறப்பார்கள் என்று அவர்கள் மீது) உம் இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":97,"translation":"அத்தாட்சிகள் எல்லாம் அவர்களிடம் வந்தாலும் துன்புறுத்தக்கூடிய தண்டனையை அவர்கள் காணும் வரை (அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்)."},{"id":98,"translation":"ஆக, ஓர் ஊர் (வாசிகள்) நம்பிக்கை கொண்டு அவர்களின் நம்பிக்கை அவர்களுக்கு பலனளித்திருக்கக்கூடாதா! எனினும் ‘யூனுஸ்’ உடைய சமுதாயம், நம்பிக்கை கொண்டபோது உலக வாழ்க்கையில் இழிவான தண்டனையை அவர்களை விட்டு நீக்கினோம். இன்னும், ஒரு காலம் வரை அவர்களுக்கு சுகமான வாழ்வளித்தோம்."},{"id":99,"translation":"உம் இறைவன் நாடினால், பூமியிலுள்ளவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆக, (நபியே!) நீர் மக்களை, - அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதற்காக - நிர்ப்பந்திப்பீரா?"},{"id":100,"translation":"ஓர் ஆன்மாவிற்கு, அது நம்பிக்கை கொள்வது அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர சாத்தியமாகாது. சிந்தித்து புரியாதவர்கள் மீது தண்டனையை அல்லாஹ் ஆக்கிவிடுகிறான்."},{"id":101,"translation":"(நபியே!) கூறுவீராக! “வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை கவனியுங்கள். நம்பிக்கை கொள்ளாத சமுதாயத்திற்கு வசனங்களும், எச்சரிப்பாளர்களும் பலனளிக்க மாட்டார்கள்.”"},{"id":102,"translation":"ஆக, அவர்கள் தங்களுக்கு முன் சென்றவர்களின் நாள்களைப் போன்றதைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் எதிர்பார்க்கின்றனரா? “நீங்கள் (உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பாருங்கள்; நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கிறேன்” என்று (நபியே) கூறுவீராக."},{"id":103,"translation":"பிறகு, நம் தூதர்களையும் நம்பிக்கை கொண்டவர்களையும் நாம் பாதுகா(த்துவிட்டு நிராகரிப்பாளர்களை அழி)ப்போம். இவ்வாறே, (உம்மையும் உம்முடன்) நம்பிக்கை கொண்டவர்களை(யும்) நாம் பாதுகாப்போம். இது நம்மீது கடமையாகும்."},{"id":104,"translation":"(நபியே!) கூறுவீராக! “மக்களே! நீங்கள் என் மார்க்கத்தில் சந்தேகத்தில் இருந்தால், அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகிறீர்களோ அவர்களை நான் வணங்க மாட்டேன். எனினும், உங்கள் உயிரைக் கைப்பற்றுகின்ற (ஆற்றல் உடைய) அல்லாஹ்வைத்தான் வணங்குவேன். இன்னும், நம்பிக்கையாளர்களில் நான் ஆகவேண்டுமென்று கட்டளையிடப்பட்டுள்ளேன்.”"},{"id":105,"translation":"இன்னும், (நபியே!) நீர் ஓர் இறையை வணங்குவதில் உறுதியானவராக (இணைவைப்பை விட்டும் முற்றிலும் விலகியவராக) மார்க்கத்தின் மீது உம் முகத்தை நிலை நிறுத்துவீராக! இன்னும், இணைவைப்பவர்களில் ஒருபோதும் நீர் ஆகிவிடாதீர்!"},{"id":106,"translation":"இன்னும், அல்லாஹ்வை அன்றி உமக்கு பலனளிக்காதவற்றையும் உமக்குத் தீங்களிக்காதவற்றையும் (நபியே!) நீர் அழைக்காதீர்! ஆக, நீர் (அல்லாஹ் அல்லாதவருக்கு வணக்க வழிபாடு) செய்து விட்டால் அப்போது நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவீர்."},{"id":107,"translation":"இன்னும், அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கைக் கொடுத்தால் அதை நீக்குபவர் அவனைத் தவிர அறவே (யாரும்) இல்லை. இன்னும், அவன் உமக்கு ஒரு நன்மையை நாடினால் (உம்மை விட்டும்) அவனுடைய அருளைத் தடுப்பவர் அறவே (யாரும்) இல்லை. அவன் தன் அடியார்களில் தான் நாடுகின்றவர்களுக்கு அதை கொடுக்கிறான். இன்னும், அவன்தான் மகா மன்னிப்பாளன்; பெரும் கருணையாளன்."},{"id":108,"translation":"(நபியே!) கூறுவீராக! “மக்களே! உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான வேதம்) உங்களுக்கு வந்துவிட்டது. ஆக, எவர் (இதை நம்பிக்கைக் கொண்டு) நேர்வழி நடப்பாரோ அவர் நேர்வழி நடப்பதெல்லாம் அவரது நன்மைக்காகவே. இன்னும், எவர் (அதை நம்பிக்கை கொள்ளாமல்) வழிகேட்டில் செல்வாரோ அவர் வழிகேட்டில் செல்வதெல்லாம் அவருக்கு கேடாகத்தான். இன்னும், நான் உங்கள் மீது பொறுப்பாளனாக (உங்களை கண்காணிப்பவனாக) இல்லை.”"},{"id":109,"translation":"(நபியே!) இன்னும், உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதையே நீர் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரை பொறுமையாக (மார்க்கத்திலும் அதன் அழைப்புப் பணியிலும் உறுதியாக) இருப்பீராக! இன்னும், தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக மேலானவன்."}]},{"id":11,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் றா. (இது) ஒரு வேத நூல். மகா ஞானவான், ஆழ்ந்தறிந்தவனிடமிருந்து இதன் வசனங்கள் ஞானத்துடன் உறுதி செய்யப்பட்டன. பிறகு, அவை (நபியவர்களுக்கு ஒவ்வொரு சட்டமாக) தெளிவுபடுத்தப்பட்(டு விவரிக்கப்பட்)டன."},{"id":2,"translation":"“நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு அவனிடமிருந்து (அனுப்பப்பட்ட) எச்சரிப்பாளரும் நற்செய்தியாளரும் ஆவேன்.”"},{"id":3,"translation":"“இன்னும், நிச்சயமாக உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். பிறகு, முற்றிலும் திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள். (அவ்வாறு செய்தால் நீங்கள் உலகத்தில் வாழ்கின்ற) குறிப்பிடப்பட்ட காலம் வரை உங்களுக்கு அழகிய சுகமான வாழ்க்கையை வழங்குவான். இன்னும், மேல் மிச்சமான செல்வமுடையவ(ர் தனது செல்வத்தை தர்மம் செய்யும்போது அவ)ருக்கு (மேலும்) அவருடைய செல்வத்தை (அதிகப்படுத்தி) கொடுப்பான். இன்னும், நீங்கள் புறக்கணித்தால் மாபெரும் (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்.”"},{"id":4,"translation":"“அல்லாஹ்வின் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. இன்னும், அவன் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன்.”"},{"id":5,"translation":"(நபியே!) அறிவீராக! “நிச்சயமாக இவர்கள் அவனிடமிருந்து மறைப்பதற்காக தங்கள் நெஞ்சங்களை திருப்புகிறார்கள். (நபியே!) அறிவீராக! அவர்கள் தங்கள் ஆடைகளால் (தங்களை) மறைத்துக்கொள்ளும் நேரத்தில் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் பகிரங்கப்படுத்துவதையும் அவன் நன்கறிகிறான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிபவன் ஆவான்.”"},{"id":6,"translation":"எந்த ஓர் உயிரினமும் பூமியில் இல்லை அதற்கு உணவளிப்பது அல்லாஹ்வின் மீது (கடமையாக) இருந்தே தவிர. (உலகத்தில்) அவை தங்குமிடத்தையும், (அவை இறந்த பிறகு) அவை அடக்கம் செய்யப்படும் இடத்தையும் அவன் நன்கறிவான். எல்லாம் தெளிவான பதிவேட்டில் (முன்பே பதிவுசெய்யப்பட்டு) உள்ளன."},{"id":7,"translation":"அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்தான். இன்னும், அவனுடைய ‘அர்ஷ்’ நீரின் மீதிருந்தது. உங்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவன் உங்களை சோதிப்பதற்காக (உங்களைப் படைத்தான்). (நபியே) இன்னும், “இறப்பிற்கு பின்னர் நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள்” என்று நீர் கூறினால், “இது தெளிவான சூனியமே தவிர (எதுவும் உண்மை) இல்லை” என்று நிராகரிப்பவர்கள் நிச்சயம் கூறுவார்கள்."},{"id":8,"translation":"இன்னும், அவர்களை விட்டும் தண்டனையை எண்ணப்பட்ட ஒரு காலம் வரை நாம் பிற்படுத்தினால், “அதை எது தடுக்கிறது?” என நிச்சயம் அவர்கள் கூறுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்களிடம் அ(ந்த தண்டனையான)து வரும் நாளில், (அது) அவர்களை விட்டும் அறவே திருப்பப்படாது. இன்னும் அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழ்ந்துவிடும்."},{"id":9,"translation":"இன்னும், நம்மிடமிருந்து ஓர் அருளை மனிதன் சுவைக்கும்படி செய்து, பிறகு, அதை அவனிடமிருந்து நீக்கினால், நிச்சயமாக அவன் நிராசையாளனாக நன்றி கெட்டவனாக ஆகிவிடுகிறான்."},{"id":10,"translation":"இன்னும், அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்கு பின்னர் இன்பத்தை அவன் சுவைக்கும்படி நாம் செய்தால், “என்னை விட்டு தீமைகள் சென்று விட்டன” என்று நிச்சயமாக கூறுவான். நிச்சயமாக அவன் செருக்குடன் மகிழ்பவனாக தற்பெருமை பேசுபவனாக இருக்கிறான்."},{"id":11,"translation":"எவர்கள் பொறுமை(யுடன் மார்க்கத்தில் உறுதி)யாக இருந்து, நன்மைகளைச் செய்தார்களோ அவர்களைத் தவிர. அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு."},{"id":12,"translation":"ஆக, “அவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா? அல்லது அவருடன் ஒரு வானவர் வரவேண்டாமா?” என்று அவர்கள் (உம்மைப் பற்றி) கூறுவதால் உமக்கு வஹ்யி அறிவிக்கப்படுபவற்றில் சிலவற்றை நீர் விடக் கூடியவராக ஆகலாம்; இன்னும், அதன் மூலம் உம் நெஞ்சம் நெருக்கடியுற்றதாக ஆகலாம். (நபியே!) நீரெல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். அல்லாஹ்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பொறுப்பாளன் (கண்காணிப்பாளன்) ஆவான்! (ஆகவே, அவன் தான் நாடியபடி தனது படைப்புகளின் காரியங்களை நிர்வகிக்கிறான்.)"},{"id":13,"translation":"அல்லது, அவர் இதை இட்டுக்கட்டினார் என அவர்கள் கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (உங்களால்) இட்டுக்கட்டப்பட்ட இது போன்ற பத்து அத்தியாயங்களை நீங்கள் கொண்டு வாருங்கள். இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு யாரை (எல்லாம் அழைக்க) இயலுமோ அவர்களை (எல்லாம் உதவிக்கு) அழைத்துக் கொள்ளுங்கள்."},{"id":14,"translation":"ஆக, “(இணைவைப்பாளர்களே! நீங்கள் அழைத்த) அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கவில்லையெனில், (இன்னும், நீங்களும் அவர்களும் இந்த வேதத்தை போன்றதை உருவாக்க முடியவில்லை எனில்) இ(ந்த வேதமான)து இறக்கப்பட்டதெல்லாம் அல்லாஹ்வின் அறிவைக் கொண்டுதான் என்பதையும், அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு மட்டும் பணிந்த) முஸ்லிம்களா(க ஆகிவிடுகிறீர்களா)? (என்று நபியே அவர்களிடம் கூறுவீராக!)"},{"id":15,"translation":"எவர்கள் (தங்களது நற்செயல்களுக்கு கூலியாக மறுமையை நாடாமல்) உலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் விரும்பக்கூடியவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களின் நற்செயல்களுக்கு முழுமையாக கூலி தந்து விடுவோம். இன்னும், அதில் அவர்கள் குறைக்கப்பட மாட்டார்கள்."},{"id":16,"translation":"அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுக்கு (நரக) நெருப்பைத் தவிர மறுமையில் (வேறொன்றும்) இல்லை. இன்னும், அவர்கள் இ(வ்வுலகத்)தில் செய்தவை அழிந்து விடும். இன்னும், அவர்கள் (இவ்வுலகில்) செய்து கொண்டிருந்தவை (அனைத்தும்) வீணானவையே."},{"id":17,"translation":"ஆக, எவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த தெளிவான அத்தாட்சியின் மீது இருக்கிறார்களோ; இன்னும், - அ(ந்த இறை)வன் புறத்திலிருந்து ஒரு சாட்சியாளரும் அதை ஓதிக் கொண்டிருக்கிறாரோ: இன்னும், அதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டியாகவும் அருளாகவும் இருக்கிறதோ - அவர்கள்தான் இ(ந்த வேதத்)தை நம்பிக்கைக் கொள்வார்கள். இன்னும், (ஏனைய) கூட்டங்களிலிருந்து எவர் இதை நிராகரிப்பாரோ நரகம் அவருடைய வாக்களிக்கப்பட்ட இடமாக இருக்கும். ஆகவே, (நபியே! நீர்) இதில் சந்தேகத்தில் இருக்காதீர். நிச்சயமாக இது உம் இறைவனிடமிருந்து வந்த உண்மைதான்! எனினும், மக்களில் அதிகமானோர் (இதை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":18,"translation":"அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவர்களை விட மகா அநியாயக்காரர்கள் யார்? அவர்கள் தங்கள் இறைவன் முன் சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது) “இவர்கள் தங்கள் இறைவன் மீது பொய்யுரைத்தவர்கள்” என்று சாட்சியாளர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் சாபம் அநியாயக்காரர்கள் மீது இறங்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":19,"translation":"அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுக்கிறார்கள். இன்னும், அதில் கோணலைத் தேடுகிறார்கள். இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்."},{"id":20,"translation":"அவர்கள் பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்துபவர்களாக இருக்கவில்லை. இன்னும், அல்லாஹ்வையன்றி அவர்களுக்கு உதவியாளர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தண்டனை பன்மடங்காக்கப்படும். (இவ்வுலகில்) அவர்கள் (உண்மையை) செவியேற்க சக்தி பெற்றவர்களாக இருக்கவில்லை. இன்னும், அவர்கள் (படிப்பினை பெறுகின்ற பார்வையால் இறை அத்தாட்சியைப்) பார்ப்பவர்களாகவும் இருக்கவில்லை."},{"id":21,"translation":"அவர்கள் தங்களுக்குத் தாமே நஷ்டம் விளைவித்தவர்கள். இன்னும், அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை (-அவர்கள் வணங்கிய சிலைகள் இறுதியாக) அவர்களை விட்டு மறைந்துவிடும்."},{"id":22,"translation":"சந்தேகமின்றி நிச்சயமாக அவர்கள்தான் மறுமையில் மகா நஷ்டவாளிகள்."},{"id":23,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைகொண்டு, நற்செயல்களைச் செய்து, தங்கள் இறைவனின் பக்கம் மிக்க பயத்துடனும் பணிவுடனும் திரும்பினார்களோ அவர்கள்தான் சொர்க்கவாசிகள், அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":24,"translation":"(இந்த) இரு பிரிவினரின் உதாரணம் குருடன், செவிடன்; இன்னும், பார்ப்பவன், செவியுறுபவனைப் போன்றாகும். இரு பிரிவினர்களும் சமமாவார்களா? நீங்கள் (இந்த வேதத்தை சிந்தித்து) நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?"},{"id":25,"translation":"திட்டவட்டமாக, நாம் நூஹை அவருடைய மக்களிடம் அனுப்பினோம். (அவர் கூறியதாவது:) “நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.”"},{"id":26,"translation":"“நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள். நிச்சயமாக நான் துன்புறுத்தக்கூடிய நாளின் தண்டனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.”"},{"id":27,"translation":"ஆக, அவருடைய சமுதாயத்தில் நிராகரித்த பிரமுகர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற ஒரு மனிதனாகவே தவிர, உம்மை நாம் (தூதராக) கருதவில்லை. இன்னும், (எங்கள்) வெளிப்படையான அறிவின்படி எங்களில் மிக இழிவானவர்களாக இருப்பவர்களே தவிர (உயர்ந்தவர்கள் எவரும்) உம்மைப் பின்பற்றுவதை நாம் பார்க்கவில்லை. இன்னும், எங்களை விட உங்களுக்கு எவ்வித மேன்மையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக, நாங்கள் உங்களை பொய்யர்களாக கருதுகிறோம்.”"},{"id":28,"translation":"(நூஹ்) கூறினார்: “என் மக்களே! நீங்கள் (எனக்கு) அறிவியுங்கள், என் இறைவனிடமிருந்து (கொடுக்கப்பட்ட) ஒரு தெளிவான அத்தாட்சியின் மீது நான் இருக்கிறேன். இன்னும், அவன் தன்னிடமிருந்து அருளை எனக்கு அளித்திருக்கிறான். ஆக, இவை (எல்லாம்) உங்களுக்கு மறைக்கப்பட்டுவிட்டால், நீங்களும் அவற்றை வெறுப்பவர்களாக இருக்கும் நிலையில் அவற்றை (நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி) உங்களை நாம் நிர்ப்பந்திப்போமா?”"},{"id":29,"translation":"இன்னும், “என் மக்களே! இதற்காக நான் உங்களிடம் எந்த செல்வத்தையும் (கூலியாகக்) கேட்கவில்லை. என் கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. இன்னும், நம்பிக்கை கொண்டவர்களை (என் சபையை விட்டும்) நான் விரட்டுபவனாக இல்லை. நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை (கண்ணியத்துடன்) சந்திப்பார்கள். என்றாலும், நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்கள் என்றே நிச்சயமாக நான் உங்களை காண்கிறேன்.”"},{"id":30,"translation":"“இன்னும், என் மக்களே! நான் அவர்களை விரட்டினால் (அல்லாஹ் என்னைத் தண்டிக்க மாட்டானா? அதுசமயம்) அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?”"},{"id":31,"translation":"இன்னும், “என்னிடம் அல்லாஹ்வின் பொக்கிஷங்கள் உள்ளன என்றும் நான் உங்களுக்கு கூறமாட்டேன். இன்னும், நான் மறைவானவற்றை அறியமாட்டேன். இன்னும், நிச்சயமாக நான் ஒரு வானவன் என்றும் கூறமாட்டேன். இன்னும், உங்கள் கண்கள் இழிவாக மதிக்கின்ற (முஃமினா)வர்களை நோக்கி, அல்லாஹ் அவர்களுக்கு ஒரு நன்மையையும் கொடுக்கவே மாட்டான் என்றும் நான் கூற மாட்டேன். அல்லாஹ், அவர்களின் உள்ளங்களில் உள்ளதை மிக அறிந்தவன். (இதற்கு மாறாக நான் கூறினால்) அப்போது நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் ஆகிவிடுவேன்.”"},{"id":32,"translation":"(நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: “நூஹே! திட்டமாக நீர் எங்களுடன் தர்க்கித்து விட்டீர்; எங்களுடன் தர்க்கத்தை அதிகப்படுத்தியும் விட்டீர். ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால், நீர் எங்களுக்கு வாக்களிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக!”"},{"id":33,"translation":"(அதற்கு நூஹ்) கூறினார்: “அதைக் கொண்டு வருவதெல்லாம் அல்லாஹ்தான். அவன் நாடினால் (அதைக் கொண்டு வருவான்). நீங்கள் (அவனைப்) பலவீனப்படுத்துபவர்களாக (அவனை விட்டும் தப்பிப்பவர்களாக) இல்லை.”"},{"id":34,"translation":"“இன்னும், நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், உங்களை வழிகெடுக்க அல்லாஹ் நாடி இருந்தால் என் நல்லுபதேசம் உங்களுக்கு பலனளிக்காது. அவன்தான் உங்கள் இறைவன்; இன்னும், அவனிடமே நீங்கள் திரும்ப கொண்டு வரப்படுவீர்கள்.”"},{"id":35,"translation":"அல்லது, (நபியே! உம்மைப் பற்றி) “அவர் இ(ந்த வேதத்)தை தானாக இட்டுக்கட்டினார்” என்று கூறுகிறார்களா?” (அவ்வாறாயின்) கூறுவீராக! “நான் அதை இட்டுக்கட்டி இருந்தால் என் குற்றம் என்னையே சாரும். (உங்களை அல்ல.) இன்னும், நீங்கள் புரியும் குற்றங்களை விட்டும் நான் விலகியவன்.”"},{"id":36,"translation":"இன்னும், நூஹ்வுக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது: “நிச்சயமாக (முன்னர்) நம்பிக்கை கொண்டவர்களைத் தவிர, (இனி) உமது மக்களில் (ஒருவரும்) அறவே நம்பிக்கை கொள்ளமாட்டார். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நீர் துயரப்படாதீர்.”"},{"id":37,"translation":"“இன்னும், நம் கண்கள் முன்பாகவும் நமது அறிவிப்பின்படியும் கப்பலை செய்வீராக! இன்னும், அநியாயம் செய்தவர்கள் விஷயத்தில் என்னிடம் (பரிந்து) பேசாதீர்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுபவர்கள்.”"},{"id":38,"translation":"அவர் கப்பலைச் செய்கிறார். அவருக்கு அருகில் அவருடைய மக்களிலிருந்து பிரமுகர்கள் கடந்து சென்றபோதெல்லாம் அவர்கள் அவரை கேலி செய்தனர். (அதற்கு) அவர் கூறினார்: “நீங்கள் (இப்போது) எங்களை கேலி செய்தால், நீங்கள் கேலி செய்வது போன்று (சீக்கிரத்தில்) நிச்சயமாக நாங்கள் உங்களை கேலி செய்வோம்.”"},{"id":39,"translation":"“ஆக, இழிவுபடுத்தும் தண்டனை எவருக்கு வருமோ அவரையும் இன்னும் எவர் மீது நிலையான தண்டனை இறங்குமோ அவரையும் (விரைவில்) நீங்கள் அறிவீர்கள்.”"},{"id":40,"translation":"இறுதியாக, நம் கட்டளை வந்தபோது, இன்னும், அடுப்பும் பொங்கியபோது, நாம் கூறினோம்: “எல்லாவற்றிலிருந்தும் (ஆண், பெண் என) இரண்டு ஜோடிகளையும் எவர் மீது (அவரை அழிப்போம் என்ற) வாக்கு முந்திவிட்டதோ அவரைத் தவிர (மற்ற) உமது குடும்பத்தையும் நம்பிக்கை கொண்டவரையும் அதில் ஏற்றுவீராக!” ஆனால், (வெகு) குறைவானவர்களைத் தவிர (அதிகமானவர்கள்) அவருடன் நம்பிக்கைகொள்ளவில்லை."},{"id":41,"translation":"இன்னும், (நூஹ்) கூறினார்: “இதில் பயணியுங்கள். அது ஓடும்போதும், அது நிறுத்தப்படும்போதும் அல்லாஹ்வின் பெயரால் (அது ஓடுகிறது; இன்னும், நிற்கிறது). நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”"},{"id":42,"translation":"அது, மலைகளைப் போன்று அலை(களுக்கு மத்தி)யில் அவர்களை (சுமந்து)க் கொண்டு சென்றது. இன்னும், (அவரை விட்டு) விலகி ஓர் இடத்திலிருந்த அவரது மகனை கூவி அழைத்தார்: “என் மகனே! எங்களுடன் (இதில்) பயணித்துவிடு! நிராகரிப்பாளர்களுடன் ஆகிவிடாதே!”"},{"id":43,"translation":"(அதற்கவன்) கூறினான்: “(வெள்ள) நீரிலிருந்து என்னைக் காக்கும் ஒரு மலையின் மேல் ஒதுங்குவேன்.” அவர் கூறினார்: “இன்று, அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து பாதுகாப்பவர் அறவே இல்லை, அவன் கருணை காட்டியவரைத் தவிர (யாரும் தப்ப முடியாது)!” ஆனால், (அது சமயம்) அவ்விருவருக்கும் இடையில் அலை குறுக்கிட்டது. ஆக, அவன் (அந்த வெள்ளத்தில்) மூழ்கடிக்கப்பட்டவர்களில் ஆகி விட்டான்."},{"id":44,"translation":"இன்னும், கூறப்பட்டது: “பூமியே! உன் தண்ணீரை விழுங்கு; இன்னும், வானமே! (பொழிவதை) நிறுத்து.” தண்ணீர் வற்றியது. இன்னும், (அவர்களின்) காரிய(மு)ம் முடிக்கப்பட்டது. (அந்த கப்பல்) ‘ஜூதி’ மலையில் தங்கியது. இன்னும், “அநியாயக்கார மக்களுக்கு அழிவுதான்” என்று கூறப்பட்டது."},{"id":45,"translation":"இன்னும், நூஹ் தன் இறைவனை அழைத்தார். ஆக, அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்திலுள்ளவன். இன்னும், நிச்சயமாக உன் வாக்கு உண்மையானதே, இன்னும், நீயே தீர்ப்பளிப்பவர்களில் மகா நீதமான தீர்ப்பாளன்.”"},{"id":46,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நூஹே! அவன் உமது குடும்பத்தைச் சேர்ந்தவன் இல்லை. நிச்சயமாக இ(வ்வாறு கேட்ப)து நல்ல செயல் அல்ல. உமக்கு ஞானமில்லாததை என்னிடம் கேட்காதீர். அறியாதவர்களில் நீர் ஆகுவதிலிருந்து (விலகி இருக்க வேண்டுமென) நிச்சயமாக நான் உமக்கு உபதேசிக்கிறேன்.”"},{"id":47,"translation":"(உடனே நூஹ்) கூறினார்: “என் இறைவா! எனக்கு ஞானமில்லாததை உன்னிடம் நான் கேட்பதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் கோருகிறேன். நீ என்னை மன்னிக்கவில்லையெனில், இன்னும், எனக்கு நீ கருணை காட்டவில்லையெனில் நான் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவேன்.”"},{"id":48,"translation":"(அல்லாஹ்வின் புறத்திலிருந்து) கூறப்பட்டது: “நூஹே! உம்மீதும் உம்முடன் இருக்கின்ற உயிரினங்கள் மீதும் நம் புறத்திலிருந்து ஸலாம் – ஈடேற்றத்துடன், இன்னும், அபிவிருத்திகளுடன் நீர் இறங்குவீராக! இன்னும் (சில) சமுதாயங்கள் வருவார்கள். அவர்களுக்கு (சற்று) சுகமான வாழ்வளிப்போம். பிறகு, அவர்களை நம்மிடமிருந்து துன்புறுத்தக்கூடிய தண்டனை வந்தடையும்.”"},{"id":49,"translation":"(நபியே!) இவை (உமக்கு) மறைவான சரித்திரங்களில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். இதற்கு முன்னர் நீரோ அல்லது உமது மக்களோ இவற்றை அறிந்திருக்கவில்லை. ஆகவே, பொறுமையாக (உறுதியுடன்) இருப்பீராக! நிச்சயமாக (நல்ல) முடிவு அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கே."},{"id":50,"translation":"‘ஆது’ சமுதாயத்திடம் அவர்களுடைய சகோதரர் -ஹூதை- (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (உங்கள் கற்பனைக்கு ஏற்ப இறைவனைப் பற்றி பொய்யை) இட்டுக்கட்டுபவர்களாகவே தவிர இல்லை.."},{"id":51,"translation":"என் மக்களே! (எனது) இ(ந்)த (அழைப்பி)ற்காக நான் உங்களிடத்தில் ஒரு கூலியையும் கேட்கவில்லை. என் கூலி என்னை படைத்தவனின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. சிந்தித்துப் புரியமாட்டீர்களா?"},{"id":52,"translation":"‘‘என் மக்களே! உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள்! பிறகு, (எல்லா பாவங்களை விட்டும்) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கம் திரும்புங்கள்! மழையை உங்களுக்கு தாரை தாரையாக அனுப்புவான். இன்னும், உங்கள் பலத்துடன் (மேலும்) பலத்தை உங்களுக்கு அதிகப்படுத்துவான். இன்னும், (உபதேசங்களை புறக்கணித்த) குற்றவாளிகளாக விலகி சென்று விடாதீர்கள்.”"},{"id":53,"translation":"(மேலும் அந்த மக்கள்) கூறினார்கள்: “ஹூதே! எந்த ஓர் அத்தாட்சியையும் நம்மிடம் நீர் கொண்டு வரவில்லை. இன்னும், உம் சொல்லுக்காக நாங்கள் (வணங்குகின்ற) எங்கள் தெய்வங்களை விட்டுவிடுபவர்களாக இல்லை. இன்னும், நாங்கள் உம்மை நம்பிக்கை கொண்டவர்களாகவும் இல்லை”"},{"id":54,"translation":"‘‘எங்கள் தெய்வங்களில் சில உமக்கு ஒரு தீமையை செய்துவிட்டன என்றே தவிர நாம் கூறமாட்டோம்” (என்றும் அவர்கள் கூறினார்கள். அதற்கு ஹூது) கூறினார்: “நீங்கள் (அவனை அன்றி கற்பனையாக) இணைவைத்து வணங்குபவற்றிலிருந்து நிச்சயமாக நான் விலகியவன் என்பதற்கு நிச்சயமாக நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்; இன்னும், நீங்களும் (அதற்கு) சாட்சியாக இருங்கள்!"},{"id":55,"translation":"அவனை அன்றி (நீங்கள் வணங்கும் அனைத்தையும் விட்டு நான் விலகியவன் ஆவேன்). ஆகவே, அனைவரும் எனக்கு சூழ்ச்சி செய்யுங்கள். பிறகு, எனக்கு (அதில்) அவகாசம் அளிக்காதீர்கள்.’’"},{"id":56,"translation":"“நிச்சயமாக, நான் என் இறைவனும் உங்கள் இறைவனுமான அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து (அவனை சார்ந்து) விட்டேன். உயிரினம் எதுவும் இல்லை, அவன் அதன் நெற்றி முடியை பிடித்தே தவிர. நிச்சயமாக என் இறைவன் (நீதியும் நேர்மையும் மிக்க) நேரான வழியில் இருக்கிறான்.”"},{"id":57,"translation":"ஆக, நீங்கள் விலகினால் (எனக்கொன்றும் நஷ்டமில்லை.) நான் உங்களிடம் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு திட்டமாக எடுத்துரைத்து விட்டேன். இன்னும், (உங்களை அழித்து) நீங்கள் அல்லாத வேறு மக்களை என் இறைவன் தோன்றச் செய்வான்; நீங்கள் அவனுக்கு எதையும் தீங்கிழைக்க முடியாது. நிச்சயமாக என் இறைவன் எல்லாவற்றையும் கண்கானிப்பவன் ஆவான்.”"},{"id":58,"translation":"(அவர்களை தண்டிப்பதற்கான) நம் உத்தரவு வந்தபோது ஹூதையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நம் புறத்திலிருந்து (அவர்களை அடைந்த) அருளினால் பாதுகாத்தோம். இன்னும், கடுமையான தண்டனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்தோம்."},{"id":59,"translation":"இவர்கள்தான் ஆது சமுதாய மக்கள் ஆவர். இவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை மறுத்தார்கள். இன்னும், அவனுடைய தூதர்களுக்கு மாறு செய்தார்கள். இன்னும், பெருமை பிடித்த பிடிவாதக்காரர்கள், கீழ்ப்படியாத முரடர்கள் (ஆகிய தீயோர்) எல்லோருடைய (தீய) கட்டளையை பின்பற்றினார்கள்."},{"id":60,"translation":"இவ்வுலகிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடர்ந்தது. இன்னும், மறுமையிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடரும். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக ஆது சமுதாயம் தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்ளுங்கள்! “ஹூதுடைய சமுதாயமாகிய ஆதுக்கு அழிவுதான்.”"},{"id":61,"translation":"இன்னும், ‘ஸமூது’ (மக்கள்) இடம் அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. அவன்தான் உங்களை பூமியிலிருந்து உருவாக்கினான். இன்னும், அதில் அவன் உங்களை வசிக்க வைத்தான். ஆகவே, நீங்கள் அவனிடம் மன்னிப்புக் கோருங்கள்; பிறகு, (பாவத்திலிருந்து) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் மிகச் சமீபமானவன், பதிலளிப்பவன்.”"},{"id":62,"translation":"அவர்கள் கூறினார்கள்: “ஸாலிஹே! நீர் எங்களில் உயர்ந்த தலைவராக இருந்தீர். எங்கள் மூதாதைகள் வணங்கியதை நாங்கள் வணங்குவதை விட்டும் நீர் எங்களைத் தடுக்கிறீரா? இன்னும், நீர் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீரோ அது பற்றி நிச்சயமாக நாங்கள் மிக ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்."},{"id":63,"translation":"(அதற்கு ஸாலிஹ்) கூறினார்: “என் மக்களே! அறிவியுங்கள்: நான் என் இறைவனிடமிருந்து (நபித்துவத்தின்) தெளிவான அத்தாட்சியில் இருந்தால், இன்னும், அவன் தன்னிடமிருந்து (நபித்துவம் என்ற) அருளை எனக்கு தந்திருந்தால், (இந்த நிலையில் அவனது தூதுத்துவத்தை உங்களுக்கு எடுத்துரைக்காமல்) நான் அவனுக்கு மாறு செய்தால் அல்லாஹ்விடத்தில் எனக்கு யார் உதவுவார்? ஆக, (நான் உங்களுக்கு மாறு செய்வதால் என்னை) நஷ்டவாளி என்று (நீங்கள்) சொல்வதை தவிர (எதையும்) எனக்கு நீங்கள் அதிப்படுத்த மாட்டீர்கள்.”"},{"id":64,"translation":"இன்னும், “என் மக்களே! இது உங்களுக்கு அல்லாஹ்வின் அத்தாட்சியான பெண் ஒட்டகமாகும். ஆகவே, அதை விட்டுவிடுங்கள், அது அல்லாஹ்வின் பூமியில் சாப்பிடட்டும்; இன்னும், அதற்கு எவ்வித கெடுதியும் செய்யாதீர்கள். (அவ்வாறு செய்தால்) அதிசீக்கிரமான தண்டனை உங்களை பிடித்துக் கொள்ளும்.”"},{"id":65,"translation":"ஆக, அவர்கள் அ(ந்த ஒட்டகத்)தை வெட்டினார்கள். ஆகவே, (ஸாலிஹ்) கூறினார்: “மூன்று நாட்கள் உங்கள் ஊரில் சுகமாக இருங்கள். (பிறகு, தண்டனை வரும்.) இது ஒரு பொய்ப்பிக்கப்படமுடியாத வாக்காகும்.”"},{"id":66,"translation":"ஆக, நம் கட்டளை வந்தபோது ஸாலிஹையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளினால் பாதுகாத்தோம். இன்னும், (தண்டனை இறங்கிய) அந்நாளின் இழிவில் இருந்தும் (அவர்களைப் பாதுகாத்தோம்). நிச்சயமாக உம் இறைவன்தான் மிக்க பலமானவன், மிகைத்தவன்."},{"id":67,"translation":"இன்னும், அநீதியிழைத்தவர்களை கடுமையான இடி முழக்கம் பிடித்தது. ஆக, அவர்கள் காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்."},{"id":68,"translation":"அவற்றில் அவர்கள் வசிக்காததைப் போன்று ஆகிவிட்டனர். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக ஸமூது (மக்கள்) தங்கள் இறைவனை நிராகரித்தனர். அறிந்து கொள்ளுங்கள்! ஸமூது (மக்களு)க்கு அழிவு உண்டாகட்டும்."},{"id":69,"translation":"இன்னும், திட்டவட்டமாக நம் (வானவ) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியை கொண்டு வந்தனர். “(உமக்கு) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக” என்று அவர்கள் கூறினார்கள். (அதற்கு இப்ராஹீம்,) (“உங்களுக்கும்) ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!” என்று கூறினார். உடனே தாமதிக்காது சுடப்பட்ட ஒரு கன்றுக்குட்டி(யின் கறி)யைக் கொண்டு வந்தார்."},{"id":70,"translation":"ஆக, அவர்களுடைய கைகள் அதன் பக்கம் செல்லாததை அவர் பார்த்தபோது அவர்களைப் பற்றி சந்தேகித்தார்; இன்னும், அவர்களைப் பற்றிய பயத்தை அவர் (மனதில்) மறைத்தார். “(இப்ராஹீமே) பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய மக்களின் பக்கம் (அம்மக்களை அழிப்பதற்காக) அனுப்பப்பட்டோம்” என்று (அந்த வானவர்கள்) கூறினார்கள்."},{"id":71,"translation":"இன்னும், அவருடைய மனைவி (ஸாரா) நின்றுகொண்டிருந்தாள். ஆக, (வானவர்கள் கூறியதைக் கேட்ட பின்னர் லூத் நபியின் சமுதாயம் அழிக்கப்பட போவதையும், அதை அவர்கள் அறியாமல் இருப்பதையும் நினைத்து) அவள் சிரித்தாள். ஆக, அவளுக்கு (குழைந்தாயாக) இஸ்ஹாக்கையும்; இன்னும், இஸ்ஹாக்கிற்குப் பின்னால் (பேரனாக) யஅகூபையும் (வழங்குவோம் என்று) நற்செய்தி கூறினோம்."},{"id":72,"translation":"அவள் கூறினாள்: “என் துக்கமே! நானுமோ கிழவியாகவும், என் கணவராகிய இவரோ வயோதிகராகவும் இருக்கும் நிலையில் நான் பிள்ளை பெறுவேனா! நிச்சயமாக இது வியப்பான விஷயம்தான்!”"},{"id":73,"translation":"(வானவர்கள்) கூறினார்கள்: “(இப்ராஹீமின் மனைவியே!) அல்லாஹ்வுடைய கட்டளையில் வியப்படைகிறீரா? அல்லாஹ்வின் கருணையும், அவனுடைய அருள்களும் (அபிவிருத்திகளும் இப்ராஹீமுடைய) வீட்டாரே உங்கள் மீது நிலவுக! நிச்சயமாக அவன் மகா புகழாளன், மகா கீர்த்தியாளன்.”"},{"id":74,"translation":"ஆக, இப்ராஹீமை விட்டும் (பயமும்) திடுக்க(மு)ம் சென்றபோது, இன்னும், அவருக்கு நற்செய்தி வந்தபோது, லூத்துடைய மக்கள் விஷயத்தில் நம்மிடம் அவர் தர்க்கித்தார்."},{"id":75,"translation":"நிச்சயமாக இப்ராஹீம் பெரும் சகிப்பாளர், அதிகம் பிரார்த்திப்பவர், (எப்போதும் நம் பக்கமே) திரும்பக் கூடியவர் ஆவார்."},{"id":76,"translation":"இப்ராஹீமே! (தர்க்கம் செய்யாது) இதை விட்டும் புறக்கணிப்பீராக! நிச்சயமாக உம் இறைவனின் கட்டளை வந்து விட்டது. இன்னும், நிச்சயமாக அவர்கள் - தடுக்கமுடியாத தண்டனை அவர்களுக்கு வரும்."},{"id":77,"translation":"இன்னும், நம் தூதர்கள் லூத்திடம் வந்தபோது, அவர்களால் அவர் சங்கடத்திற்குள்ளானார். இன்னும், அவர்களால் அவர் மனம் சுருங்கினார். இன்னும், “இது மிகக் கடுமையான (சோதனை) நாள்” என்று கூறினார்."},{"id":78,"translation":"அவருடைய மக்கள் அவர் பக்கம் விரைந்தவர்களாக அவரிடம் வந்தார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் தீய செயல்களை செய்பவர்களாகவே இருந்தனர். (அப்போது லூத்) கூறினார்: “என் மக்களே! இவர்கள் என் பெண் பிள்ளைகள். அவர்கள் உங்களுக்கு (நீங்கள் மணம் முடிக்க) மிக்க சுத்தமானவர்கள் (-ஒழுக்கமானவர்கள்). ஆகவே, (அவர்களை மணம் முடித்து, சுகமனுபவியுங்கள்!) அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், என் விருந்தினர் விஷயத்தில் என்னை அவமானப்படுத்தாதீர்கள். நல்லறிவுள்ள ஓர் ஆடவர் உங்களில் இல்லையா?”"},{"id":79,"translation":"அவர்கள் கூறினார்கள்: “உம் பெண் பிள்ளைகளிடம் எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை என்பதை திட்டவட்டமாக நீர் அறிந்திருக்கிறீர்; இன்னும், நாங்கள் நாடுவதையும் நிச்சயமாக நீர் நன்கு அறிவீர்.”"},{"id":80,"translation":"அவர் கூறினார்: “எனக்கு உங்களிடம் (சண்டையிட) பலம் இருக்க வேண்டுமே! அல்லது, (உங்களை எதிர்க்க) வலிமையான ஓர் ஆதரவாளரின் பக்கம் நான் ஒதுங்கவேண்டுமே!”"},{"id":81,"translation":"(வானவர்கள்) கூறினார்கள்: “லூத்தே! நிச்சயமாக நாங்கள் உம் இறைவனின் (வானவ) தூதர்கள். (ஆகவே, இவர்கள்) அறவே உம் பக்கம் வந்து சேர மாட்டார்கள். ஆகவே, உம் மனைவியைத் தவிர, (மற்ற) உம் குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வீராக. இன்னும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். அவர்களை அடைகின்ற தண்டனை நிச்சயமாக அவளையும் அடையக்கூடியதே. நிச்சயமாக அவர்களின் (தண்டனை இறங்குவதற்கு) வாக்களிக்கப்பட்ட நேரம் விடியற் காலையாகும். விடியற்காலை சமீபமாக இல்லையா?”"},{"id":82,"translation":"ஆக, (லூத்துடைய சமுதாயத்தை அழிக்க) நம் கட்டளை வந்தபோது, அதன் மேல்புறத்தை அதன் கீழ்ப்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அதன் மீது (நன்கு) இறுக்கமாக்கப்பட்ட சுடப்பட்ட களிமண்ணினால் ஆன கற்களை மழையாகப் பொழிந்தோம்."},{"id":83,"translation":"(அந்த கற்கள்) உம் இறைவனிடம் அடையாளமிடப்பட்டவையாகும். (நாம் இறக்கிய) அ(ந்த தண்டனையான)து அக்கிரமக்காரர்களிலிருந்து தூரமாக இல்லை."},{"id":84,"translation":"இன்னும், ‘மத்யன்’ (வாசிகளு)க்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (தூதராக அனுப்பினோம்). அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. இன்னும், அளவையிலும் நிறுவையிலும் (பொருள்களை) குறைக்காதீர்கள். நிச்சயமாக நான், நல்லதொரு வசதியில் உங்களை காண்கிறேன். நிச்சயமாக நான், சூழ்ந்து விடக்கூடிய ஒரு நாளின் தண்டனையை உங்கள் மீது பயப்படுகிறேன்.”"},{"id":85,"translation":"என் மக்களே! அளவையையும் நிறுவையையும் நீதமாக (அவற்றில் பொருள்களை குறைக்காமல்) முழுமைப்படுத்துங்கள். இன்னும், மக்களுக்கு அவர்களுடைய பொருள்களைக் குறைக்காதீர்கள். இன்னும், நீங்கள் பூமியில் விஷமிகளாக (-மக்களுக்கு கெடுதி விளைவிப்பவர்களாக) இருக்கும் நிலையில் எல்லை மீறி விஷமம் (கலகம், அடாவடித்தனம்) செய்யாதீர்கள்."},{"id":86,"translation":"“நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் (உங்கள் வர்த்தகத்தில்) அல்லாஹ் மீதப்படுத்திய (ஆகுமான லாபமான)து உங்களுக்கு (நீங்கள் மோசடியில் சேமிக்கின்ற செல்வத்தை விட) மிக மேலானதாகும். இன்னும், நான் உங்கள் மீது கண்காணிப்பாளன் அல்ல.”"},{"id":87,"translation":"அவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! எங்கள் மூதாதைகள் வணங்கியவற்றை நாங்கள் விடுவதற்கும்; அல்லது, எங்கள் செல்வங்களில் நாங்கள் நாடுகின்றபடி நாங்கள் (செலவு) செய்வதை நாங்கள் விடுவதற்கும் (பிறகு, நீ கூறுகின்ற மார்க்கத்தை நாம் பின்பற்ற வேண்டும் என்றும்) உம் தொழுகையா உம்மைத் தூண்டுகிறது? நிச்சயமாக நீர்தான் மகா சகிப்பாளரோ, நல்லறிவாளரோ” (அப்படி எண்ணுகிறீரோ) என்று கூறினார்கள்."},{"id":88,"translation":"அவர் கூறினார்: “என் மக்களே! என் இறைவனின் ஒரு தெளிவான அத்தாட்சியில் நான் இருந்தால், இன்னும், அவன் தன்னிடமிருந்து எனக்கு நல்ல (விசாலமான) வாழ்வாதாரத்தை வழங்கி இருந்தால் (நான் அவனுடைய தூது செய்தியிலும் எனது வர்த்தகத்திலும் மோசடி செய்து) அவனுக்கு நன்றி கெட்டத்தனமாக நடப்பது எனக்கு தகுமா? என்று அறிவியுங்கள்! இன்னும், நான் உங்களைத் தடுப்பதில் உங்களுக்கு முரண்பட்டு நடப்பதை நாடவில்லை. (நான் உங்களுக்கு எதை உபதேசிக்கிறேனோ அதன் படி நானும் நடப்பேன்.) நான், என்னால் இயன்ற வரை (உங்களை) சீர்திருத்தம் செய்வதைத் தவிர (எதையும்) நாடமாட்டேன். இன்னும், அல்லாஹ்வைக் கொண்டே தவிர நான் நன்மை செய்வதற்குரிய வாய்ப்பு (எனக்கு) இல்லை. அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) விட்டேன்; இன்னும், அவன் பக்கமே திரும்புகிறேன்."},{"id":89,"translation":"“என் மக்களே! (உங்களுக்கு) என் மீதுள்ள பகைமை நூஹ் உடைய மக்களை; அல்லது, ஹூத் உடைய மக்களை; அல்லது, ஸாலிஹ் உடைய மக்களை அடைந்தது போன்று (ஒரு தண்டனை) உங்களையும் வந்தடைவதற்கு உங்களை நிச்சயம் தூண்ட வேண்டாம். இன்னும், (தலைக்கீழாக புரட்டப்பட்ட) லூத்துடைய மக்களும் உங்களுக்குத் தூரமாக இல்லை."},{"id":90,"translation":"இன்னும், உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். பிறகு, (வருந்தி, பாவங்களை விட்டு) திருந்தி (நன்மைகளை செய்து) அவன் பக்கமே திரும்புங்கள். நிச்சயமாக என் இறைவன் பெரும் கருணையாளன், அதிகம் அன்பு வைப்பவன்.”"},{"id":91,"translation":"அவர்கள் கூறினார்கள்: “ஷுஐபே! நீர் கூறுவதில் பலவற்றை நாம் விளங்க (முடிய)வில்லை. இன்னும், நிச்சயமாக நாம் உம்மை எங்களில் பலவீனராகக் காண்கிறோம். இன்னும், உம் குடும்பத்தார்கள் இல்லாவிடில் உம்மைக் கல் எறிந்தே கொன்றிருப்போம். இன்னும், நீர் நம்மிடம் மதிப்புடையவராகவும் இல்லை.”"},{"id":92,"translation":"அவர் கூறினார்: “என் மக்களே! அல்லாஹ்வை விட என் குடும்பதார்களா உங்களிடம் மதிப்புடையவர்கள்? நீங்கள் அவனை உங்களுக்குப் பின்னால் எறியப்பட்டவனாக எடுத்துக் கொண்டீர்கள். நிச்சயமாக என் இறைவன் நீங்கள் செய்பவற்றைச் சூழ்ந்தறிபவன் ஆவான்.”"},{"id":93,"translation":"“இன்னும், என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்கு ஏற்ப செயல்களை செய்யுங்கள், நிச்சயமாக நான் (என் தகுதிக்கு ஏற்ப) செயல்களை செய்கிறேன். யாருக்கு, - அவரை இழிவுபடுத்தும் - தண்டனை வரும்; இன்னும், யார் பொய்யர் என்பதை (விரைவில்) அறிவீர்கள். இன்னும், எதிர்பார்த்திருங்கள். நிச்சயமாக நான் உங்களுடன் எதிர்பார்ப்பவன் ஆவேன்.”"},{"id":94,"translation":"நம் கட்டளை வந்தபோது ஷுஐபையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் நமது அருளினால் பாதுகாத்தோம். இன்னும், அநியாயம் செய்தவர்களை (பயங்கர) சப்தம் பிடித்தது. ஆக, (அவர்கள்) காலையில் தங்கள் இல்லங்களில் இறந்தவர்களாக ஆகிவிட்டனர்."},{"id":95,"translation":"அவற்றில் அவர்கள் வசிக்காததைப் போல் ஆகிவிட்டனர். ‘ஸமூத்’ அழிந்தது போன்று ‘மத்யன்’ (வாசிகளு)க்கும் அழிவுதான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":96,"translation":"திட்டவட்டமாக நாம் மூஸாவை நம் வசனங்களுடனும் தெளிவான அத்தாட்சியுடனும் அனுப்பினோம்,"},{"id":97,"translation":"ஃபிர்அவ்ன்; இன்னும், அவனுடைய பிரமுகர்களிடம். ஆக, அவர்கள் ஃபிர்அவ்னின் கட்டளையை பின்பற்றினார்கள். ஆனால், ஃபிர்அவ்னுடைய கட்டளையோ நல்லறிவுடையதாக இல்லை."},{"id":98,"translation":"அவன் மறுமை நாளில் தன் மக்களுக்கு (வழிகாட்டியாக) முன் செல்வான். பிறகு, அவர்களை நரகத்தில் சேர்த்து விடுவான். இன்னும், சேரும் இடங்களில் அது கெட்ட சேருமிடமாகும்."},{"id":99,"translation":"இன்னும், இ(ம்மை வாழ்வாகிய இ)திலும் மறுமை நாளிலும் (அல்லாஹ்வின்) சாபம் அவர்களை பின்தொடரும். அது (அவர்களுக்கு) கொடுக்கப்பட்ட மிகக் கெட்ட சன்மானமாகும்."},{"id":100,"translation":"இவை, (நிராகரித்த) ஊர் (வாசி)களின் சரித்திரங்களிலிருந்து உள்ளவை ஆகும். இவற்றை உமக்கு விவரித்துக் கூறுகிறோம். இவற்றில் (மக்கள் எல்லாம் அழிந்து) முகடுகள் இடிந்து சுவர்கள் மட்டும் நிற்கின்ற ஊர்களும் உள்ளன; இன்னும், முற்றிலும் வேர் அறுக்கப்பட்(டு அடியோடு அழிக்கப்பட்)ட ஊர்களும் இருக்கின்றன."},{"id":101,"translation":"இன்னும், நாம் அவர்களுக்கு அநீதி இழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். ஆக, உம் இறைவனின் கட்டளை வந்தபோது அல்லாஹ்வை அன்றி அவர்கள் அழைத்து வணங்குகின்ற அவர்களுடைய தெய்வங்கள் அவர்களுக்கு சிறிதும் பலனளிக்கவில்லை; இன்னும், அவை அவர்களுக்கு அழிவைத் தவிர (எதையும்) அதிகப்படுத்தவில்லை!"},{"id":102,"translation":"இன்னும், ஊர்களை, - அவையோ அநியாயம் செய்பவையாக இருக்கும் நிலையில் - உம் இறைவன் (தண்டனையால்) பிடித்தால், அவனது பிடி இது போன்றுதான் இருக்கும். நிச்சயமாக அவனுடைய பிடி, துன்புறுத்தக் கூடியதாகும்; மிகக் கடுமையானதாகும் ."},{"id":103,"translation":"மறுமையின் தண்டனையைப் பயந்தவருக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அது, மக்கள் அதற்காக ஒன்று சேர்க்கப்படும் நாளாகும். இன்னும், அது (மக்கள் எல்லோரும்) ஆஜாராகும் நாளாகும்."},{"id":104,"translation":"இன்னும், எண்ணப்பட்ட ஒரு தவணைக்காகவே தவிர அதை (-அந்த மறுமை நாளை) நாம் பிற்படுத்த வில்லை."},{"id":105,"translation":"அது வரும் நாளில், அவனுடைய அனுமதி இருந்தாலே தவிர எந்த ஓர் ஆன்மாவும் பேசமுடியாது. ஆக, அவர்களில் துர்ப்பாக்கியவானும் இருப்பார். நற்பாக்கியவானும் இருப்பார்."},{"id":106,"translation":"ஆகவே, துர்ப்பாக்கியமடைந்தவர்கள் நரகத்தில் (எறியப்படுவார்கள்). அதில் அவர்களுக்கு பெரும் கூச்சலும் இறைச்சலும் உண்டு."},{"id":107,"translation":"(நம்பிக்கையாளர்களில் உள்ள பாவிகள் விஷயத்தில்) உம் இறைவன் நாடியதைத் தவிர. (அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக தங்க மாட்டார்கள்.) வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை அதில் அவர்கள் (நிராகரிப்பாளர்கள்) நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுவதை செய்(து முடிப்)பவன் ஆவான்."},{"id":108,"translation":"ஆகவே, (நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்து) நற்பாக்கியம் பெற்றவர்கள் சொர்க்கத்தில் இருப்பார்கள். எனினும், (நம்பிக்கை கொண்டு, ஆனால் பாவங்களை செய்த நம்பிக்கையாளர்கள் விஷயத்தில்) உம் இறைவன் நாடியதைத் தவிர. (அத்தகையவர்கள் தண்டனை அனுபவிப்பதற்காக நரகத்தில் தள்ளப்பட்டு; பிறகு, சொர்க்கம் செல்ல அனுமதிக்கபப்டுவார்கள். பிறகு சொர்க்கம் சென்ற எல்லோரும்) வானங்களும் பூமியும் நிலைத்திருக்கும் வரை முடிவுறாத அருட்கொடையாக அதில் என்றென்றும் தங்கி இருப்பார்கள்."},{"id":109,"translation":"ஆகவே, (நபியே! அந்த சிலைகளின் பிரமாண்டத்தையும் அவற்றுக்கு செய்ப்படுகின்ற ஆடம்பர சடங்குகளையும் பார்த்து) இவர்கள் வணங்குபவற்றில் (ஏதும் உண்மை இருக்குமோ என்று) சந்தேகத்தில் ஆகிவிடாதீர். (இதற்கு) முன்னர் இவர்களுடைய மூதாதைகள் (சிலைகளில்) எதை வணங்கினார்களோ அது போன்றவைகளை தவிர இவர்கள் (புதிதாக எதையும்) வணங்கவில்லை. இவர்களுடைய (தண்டனையின்) பாகம் குறைக்கப்படாமல் நிச்சயமாக நாம் இவர்களுக்கு முழுமையாகக் கொடுப்போம்."},{"id":110,"translation":"திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தைக் கொடுத்தோம். ஆக, (அவர்களுக்குள்) அதில் கருத்து வேறுபாடு கொள்ளப்பட்டது. இன்னும், உம் இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லையெனில் (இம்மையிலேயே) இவர்களுக்கிடையில் (காரியம்) முடிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் உள்ளனர்."},{"id":111,"translation":"நிச்சயமாக உம் இறைவன் எல்லோருக்கும் அ(வர)வர்களுடைய செயல்க(ளுக்குரிய கூலிக)ளை கண்டிப்பாக முழுமையாகக் கொடுப்பான். நிச்சயமாக அவன், அவர்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன்."},{"id":112,"translation":"ஆக, (நபியே!) நீர் ஏவப்பட்டது போன்றே (நேரான வழியில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருப்பீராக! இன்னும், (பாவங்களை விட்டும்) திருந்தி, (நன்மைகளை செய்து) உம்முடன் சேர்ந்து அல்லாஹ்வின் பக்கம் திரும்பியவர்களும் (மார்க்கத்தில் நிரந்தரமாக) நிலையாக, ஒழுங்காக இருக்கவும்! இன்னும், (மார்க்கத்திலும் மக்கள் விஷயங்களிலும்) எல்லை மீறாதீர்கள். நிச்சயமாக அவன் நீங்கள் (அனைவரும்) செய்பவற்றை உற்றுநோக்குபவன் ஆவான்."},{"id":113,"translation":"இன்னும், அநீதி இழைத்தவர்கள் பக்கம் (சிறிதும்) நீங்கள் சாய்ந்து விடாதீர்கள். அவ்வாறாயின் (நரக) நெருப்பு உங்களை பிடித்துக் கொள்ளும். (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு பாதுகாவலர்கள் (எவரும்) உங்களுக்கு இருக்க மாட்டார்கள்; பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்."},{"id":114,"translation":"இன்னும், (நபியே!) பகலின் இரு ஓரங்களிலும் (-காலை, மாலையில்), இரவின் ஒரு பகுதியிலும் (ஆக, ஐந்து நேர) தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கி விடுகின்றன. (அல்லாஹ்வை) நினைவு கூர்பவர்களுக்கு இது ஒரு நல்லுபதேசமாகும்."},{"id":115,"translation":"இன்னும், பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் நல்லறம் புரிபவர்களின் கூலியை வீணாக்க மாட்டான்."},{"id":116,"translation":"ஆக, உங்களுக்கு முன்னர் இருந்த தலைமுறையினர்களில் பூமியில் விஷமத்தை தடுக்கின்ற (அறிவில்) சிறந்தோர் (அதிகம்) இருந்திருக்க வேண்டாமா? எனினும், அவர்களில் நாம் பாதுகாத்த குறைவானவர்கள்தான் (அவ்வாறு செய்தனர்). இன்னும், அநியாயக்காரர்களோ தாங்கள் எதில் ஆடம்பரமான வாழ்க்கை அளிக்கப்பட்டார்களோ அதையே பின்பற்றினார்கள். (-மறுமையை விட உலக வாழ்க்கையையே அதிகம் விரும்பினார்கள்.) இன்னும், அவர்கள் குற்றவாளிகளாகவே இருந்தனர்."},{"id":117,"translation":"ஊர்(வாசி)களை, - அவற்றில் வசிப்போர்(களில் பலர்) சீர்திருத்துபவர்களாக இருக்கும் நிலையில் - உம் இறைவன் அநியாயமாக அழிப்பவனாக இருக்கவில்லை."},{"id":118,"translation":"உம் இறைவன் நாடியிருந்தால் மக்களை (ஒரே மார்க்கமுடைய) ஒரே ஒரு வகுப்பினராக ஆக்கியிருப்பான். அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபட்டவர்களாகவே தொடர்ந்து இருப்பார்கள்."},{"id":119,"translation":"(எனினும், அவர்களில்) உம் இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர. (அவர்கள் அல்லாஹ்வின் நேரிய ஓரே மார்க்கத்தில் நிலைத்திருப்பார்கள். ஒரே மார்க்கத்தில் நிலைத்திருந்து அல்லாஹ்வின்) அ(ருளை பெறுவ)தற்காகத்தான் அவன் அவர்களைப் படைத்தான். “ஜின்கள்; இன்னும், மனிதர்கள் அனைவரிலிருந்தும் நிச்சயமாக நான் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனின் வாக்கு நிறைவேறி விட்டது."},{"id":120,"translation":"இன்னும், தூதர்களின் சரித்திரங்களிலிருந்து உம் உள்ளத்தை எதைக் கொண்டு நாம் உறுதிப்படுத்துவோமோ அவை எல்லாவற்றையும் உமக்கு விவரிக்கிறோம். இன்னும், இவற்றில் உமக்கு உண்மையும், நம்பிக்கையாளர்களுக்கு நல்லுபதேசமும் அறிவுரையும் வந்தன."},{"id":121,"translation":"(நபியே!) நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு கூறுவீராக! “நீங்கள் உங்கள் போக்கில் (உங்களுக்கு விருப்பமான செயல்களை) செய்யுங்கள்; நிச்சயமாக நாங்கள் (எங்கள் போக்கில் எங்கள் இறைவன் கட்டளையிட்டதை) செய்வோம்."},{"id":122,"translation":"இன்னும், (உங்கள் முடிவை) நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நாங்கள் (எங்கள் முடிவை) எதிர்பார்க்கிறோம்."},{"id":123,"translation":"மேலும், வானங்கள் இன்னும் பூமியின் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன! அவனிடமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)ப்பீராக! உம் இறைவன் நீங்கள் செய்பவற்றைப் பற்றி அறியாதவனாக இல்லை."}]},{"id":12,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் றா. இவை தெளிவான வேதத்தின் வசனங்களாகும்."},{"id":2,"translation":"நிச்சயமாக நாம் இ(ந்த வேதத்)தை அரபிமொழியை சேர்ந்த குர்ஆனாக இறக்கினோம்."},{"id":3,"translation":"(நபியே!) இந்த குர்ஆனை உமக்கு நாம் வஹ்யி அறிவித்ததன் வாயிலாக சரித்திரங்களில் மிக அழகானதை உமக்கு விவரிக்கப் போகிறோம். இன்னும், நிச்சயமாக இதற்கு முன்னர் (இந்த சரித்திரத்தை) அறியாதவர்களில் நீர் இருந்தீர்."},{"id":4,"translation":"“என் தந்தையே! நிச்சயமாக நான் பதினொரு நட்சத்திரங்களையும், சூரியனையும், சந்திரனையும் கனவில் கண்டேன். அவை எனக்குச் சிரம் பணியக்கூடியவையாக இருக்கும் நிலையில் அவற்றை நான் கனவில் கண்டேன்” என்று யூஸுஃப் தன் தந்தைக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக."},{"id":5,"translation":"(யூஸுஃபின் தந்தை யஅகூப்) கூறினார்: “என்னருமை மகனே! உன் கனவை உன் சகோதரர்களிடம் விவரிக்காதே. அவர்கள் உனக்கொரு சூழ்ச்சியை சூழ்ச்சி செய்வார்கள். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு மிகத் தெளிவான எதிரியாவான்.”"},{"id":6,"translation":"“இன்னும், இவ்வாறே உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுப்பான். இன்னும், (கனவைப் பற்றிய) பேச்சுகளின் (முடிவான) விளக்கத்திலிருந்து (அவன் நாடியதை) உனக்குக் கற்பிப்பான். உன் மீதும், யஅகூபின் (மற்ற) கிளையார் மீதும் அவன் தன் அருளை முழுமையாக்குவான், முன்னர் உன் இரு பாட்டன்களான இப்ராஹீம், இஸ்ஹாக் மீது அதை முழுமைப்படுத்தியது போன்று. நிச்சயமாக உன் இறைவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”"},{"id":7,"translation":"யூஸுஃப்; இன்னும், அவரது சகோதரர்களில் (அவர்களைப் பற்றி) வினவுகின்றவர்களுக்கு இறை அத்தாட்சிகள் (பல) திட்டவட்டமாக இருக்கின்றன."},{"id":8,"translation":"நாம் ஒரு (பெரும்) கூட்டமாக இருக்கும் நிலையில், திட்டமாக யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கிறார்கள். (இதில்) நிச்சயமாக நம் தந்தை தெளிவான தவறில்தான் இருக்கிறார்” என்று அவர்கள் (தங்களுக்குள்) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக."},{"id":9,"translation":"“யூஸுஃபைக் கொல்லுங்கள். அல்லது, பூமியில் (எங்கேனும்) அவரை எறியுங்கள். (அதன் பின்) உங்கள் தந்தையின் முகம் உங்களுக்கு (மட்டும் என்று) தனிப்பட்டதாக ஆகிவிடும். இதன் பின்னர், நீங்கள் (திருந்தி, பாவமன்னிப்பு கோரி) நல்ல மக்களாக மாறிவிடுவீர்கள்.”"},{"id":10,"translation":"அவர்களில் கூறுபவர் ஒருவர் கூறினார்: “யூஸுஃபை கொல்லாதீர்கள். இன்னும், நீங்கள் (அவருக்கு கெடுதல்) செய்பவர்களாக இருந்தால் கிணற்றின் ஆழத்தில் அவரைப் போ(ட்டு வி)டுங்கள். வழிப்போக்கர்களில் சிலர் அவரை எடுத்துக் கொள்வார்கள்.”"},{"id":11,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்கள் தந்தையே! உமக்கு என்ன நேர்ந்தது? யூஸுஃப் விஷயத்தில் நீர் எங்களை நம்புவதில்லை? இன்னும், நிச்சயமாக நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்கள்தான்.”"},{"id":12,"translation":"“நாளை அவரை எங்களுடன் அனுப்புவீராக. அவர் மகிழ்ச்சியாக இருப்பார்; இன்னும், விளையாடுவார்; இன்னும், நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்.”"},{"id":13,"translation":"அவர் கூறினார்: “நீங்கள் அவரை அழைத்துச் செல்வது எனக்கு கவலையளிக்கிறது. நீங்கள் (விளையாட்டில் இருக்கும்போது) அவரை கவனிக்காதவர்களாக இருக்கும் நிலையில் ஓநாய் அவரை தின்றுவிடுவதை நிச்சயமாக நான்,பயப்படுகிறேன்.”"},{"id":14,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் ஒரு கூட்டமாக இருக்கும் நிலையில் அவரை ஓநாய் தின்றால் நிச்சயமாக நாங்கள் அப்போது நஷ்டவாளிகளாயிற்றே.”"},{"id":15,"translation":"ஆக, அவர்கள் அவரை அழைத்து சென்றபோது, இன்னும், அவரை கிணற்றின் ஆழத்தில் தள்ளிவிட அவர்கள் ஒன்று சேர்ந்து முடிவு செய்தபோது, “அவர்களுடைய இந்த காரியத்தை (பின்னர்) அவர்களுக்கு நிச்சயமாக நீர் அறிவிப்பீர். (இதை இப்போது) அவர்கள் உணர மாட்டார்கள்” என்று அவருக்கு வஹ்யி அறிவித்தோம்."},{"id":16,"translation":"இன்னும், அவர்கள் தம் தந்தையிடம் இரவில் அழுதவர்களாக வந்தனர்."},{"id":17,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக நாங்கள் (அம்பெறிவதிலும் ஓட்டப்பந்தயத்திலும்) போட்டியிட்டவர்களாக சென்று கொண்டிருந்தோம். இன்னும், எங்கள் பொருளுக்கு அருகில் யூஸுஃபை விட்டு வைத்திருந்தோம். ஆக, (அப்போது) அவரை ஓநாய் (அடித்து) தின்று விட்டது. நாங்கள் (அல்லாஹ்விடம்) உண்மையாளர்களாக இருந்தாலும் நீரோ எங்களை நம்பக்கூடியவராக இல்லை(யே).”"},{"id":18,"translation":"இன்னும், அவருடைய சட்டையின் மீது ஒரு பொய்யான இரத்தத்தை (தடவி)க் கொண்டு வந்தனர். (யஅகூப்) கூறினார்: “(அப்படி ஏதும் நடக்கவில்லை.) மாறாக, உங்கள் மனங்கள் ஒரு (தீய) காரியத்தை உங்களுக்கு அலங்கரித்தன. (ஆகவே, அதை நீங்கள் செய்து விட்டீர்கள்.) ஆக, அழகிய பொறுமை (தான் நல்லது). நீங்கள் (யூஸுஃபை பற்றி) என்ன விளக்கம் கூறுகிறீர்களோ அதற்கு அல்லாஹ்விடமே உதவி தேடப்படுகிறது.”"},{"id":19,"translation":"இன்னும், ஒரு பயணக் கூட்டம் (அந்த வழியாக) வந்தது. அவர்கள் தங்களில் தண்ணீர் தேடும் நபரை அனுப்பினார்கள். ஆக, அவர் தனது வாளியை(க் கிணற்றில்) இறக்கினார். (அதைப் பிடித்து யூஸுஃப் மேலே வரவே,) “(எங்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியே! இதோ ஒரு (அழகிய) சிறுவர்! என்று கூறினார். (அவரை) ஒரு வர்த்தகப் பொருளாக (-விற்கப்படும் ஓர் அடிமையாக ஆக்கிக் கொள்ளக் கருதி) அவரை அவர்கள் (தங்களது மற்ற தோழர்களிடம்) மறைத்தார்கள். அல்லாஹ்வோ அவர்கள் செய்வதை நன்கறிந்தவன்."},{"id":20,"translation":"இன்னும், (யூஸுஃபுடைய சகோதரர்கள் மீண்டும் அந்த கிணற்றருகே வந்தனர்.) எண்ணப்பட்ட (சில சொற்ப) திர்ஹம்களுக்கு பகரமாக, குறைவான ஒரு தொகைக்கு அவரை (அடிமையாக அந்த பயணக் கூட்டத்திடம்) விற்றார்கள். இன்னும், அவர் விஷயத்தில் அவர்கள் ஆசையற்றவர்களாக இருந்தனர்."},{"id":21,"translation":"இன்னும், (பயனக்கூட்டம், யூஸுபை எகிப்தியர்களிடம் விற்றுவிட்டார்கள்.) எகிப்தில் அவரை விலைக்கு வாங்கியவர் தனது மனைவியிடம் கூறினார்: “நீ இவரை கண்ணியமான இடத்தில் தங்கவை! அவர் நமக்கு பலனளிக்கலாம்; அல்லது, அவரை நாம் (நமக்கு) ஒரு பிள்ளையாக ஆக்கிக் கொள்ளலாம்.” இன்னும், இவ்வாறுதான் பூமியில் யூஸுஃபுக்கு நாம் ஆதிக்கமளித்தோம். (கனவு பற்றிய) செய்திகளின் விளக்கத்திலிருந்து (நாம் நாடியதை) அவருக்குக் கற்பிப்பதற்காகவும் (எகிப்தின் அரசாங்கத்தை நிர்வகிப்பதற்காகவும் அவருக்கு ஆதிக்கமளித்தோம்). அல்லாஹ், தன் காரியத்தில் மிகைத்தவன். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்."},{"id":22,"translation":"இன்னும், அவர் (தன் வாலிபத்தின்) முழு ஆற்றல்களை அடைந்தபோது, நாம் அவருக்கு ஞானத்தையும், (-ஆழமாக புரிகின்ற திறமையையும்) கல்வியையும் கொடுத்தோம். இன்னும், நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் நாம் கூலி தருவோம்."},{"id":23,"translation":"இன்னும், அவர் எவள் வீட்டில் இருந்தாரோ அவள் (எல்லாக்) கதவுகளையும் மூடிவிட்டு அவரை (தன்) விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்து, “(என்னை நோக்கி) வருவீராக” என்று கூறினாள். (அதற்கு யூஸுஃப்) கூறினார்: “அல்லாஹ்வின் பாதுகாப்பை(க் கோருகிறேன்)! நிச்சயமாக அவர் என் எஜமானர். என்னை அழகிய தங்குமிடத்தில் தங்க வைத்தார். நிச்சயமாக (நன்றி கெட்ட) அநியாயக்காரர்கள் வெற்றி பெற மாட்டார்கள்.”"},{"id":24,"translation":"திட்டவட்டமாக அவள் அவரை நாடினாள்; இன்னும், அவரும் அவளை நாடினார். தன் இறைவனுடைய ஆதாரத்தை அவர் பார்த்திருக்கவில்லையெனில் (அவர் தவறில் விழுந்திருப்பார்). இவ்வாறுதான், கெட்டதையும் மானக்கேடானதையும் அவரை விட்டு நாம் திருப்புவதற்காக (நாம் ஆதாரத்தை காட்டினோம்). நிச்சயமாக, அவர் (நபித்துவத்திற்காக) தூய்மையாக்கப்பட்ட (தேர்ந்தெடுக்கப்பட்ட) நம் அடியார்களில் இருக்கிறார்."},{"id":25,"translation":"இருவரும், வாசலை நோக்கி ஓடினார்கள். அவளோ அவருடைய சட்டையை பின்புறத்திலிருந்து கிழித்தாள். இன்னும், வாசலில் அவளுடைய கணவரை அவர்கள் இருவரும் கண்டனர். (உடனே) அவள் கூறினாள்: “உம் மனைவிக்கு ஒரு கெட்டதை நாடியவனின் தண்டனை, அவன் சிறையில் அடைக்கப்படுவது; அல்லது, (அவனுக்கு) துன்புறுத்தக்கூடிய ஒரு தண்டனை (கொடுக்கப்படுவது) தவிர வேறில்லை.”"},{"id":26,"translation":"(யூஸுஃப் அதை மறுத்தார்.) “அவள்தான் என்னை (பலவந்தமாக) தன் விருப்பத்திற்கு அழைத்தாள்” என்று கூறினார். இன்னும், அவளுடைய குடும்பத்திலிருந்து ஒரு சாட்சியாளர் சாட்சி கூறினார்: அவருடைய சட்டை முன் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டிருந்தால் அவள் உண்மை கூறினாள். அவரோ பொய்யர்களில் இருக்கிறார்."},{"id":27,"translation":"இன்னும், அவருடைய சட்டை பின் புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருந்தால், அவள் பொய் கூறினாள். அவரோ உண்மையாளர்களில் இருக்கிறார்.”"},{"id":28,"translation":"ஆக, அவருடைய சட்டை பின்புறத்திலிருந்து கிழிக்கப்பட்டதாக இருப்பதை (அவளுடைய கணவர்) பார்த்தபோது, “நிச்சயமாக இது (பெண்களாகிய) உங்கள் சதி திட்டத்திலிருந்து உள்ளதாகும். நிச்சயமாக உங்கள் சதி திட்டம் மகத்தானது” என்று கூறினார்."},{"id":29,"translation":"“யூஸுஃபே! நீர் இதை புறக்கணிப்பீராக! (பிறகு தன் மனைவியை நோக்கி) “நீ உன் பாவத்திற்காக மன்னிப்புத் தேடு. நிச்சயமாக நீ தவறிழைத்தவர்களில் இருக்கிறாய்.”"},{"id":30,"translation":"இன்னும், நகரத்திலுள்ள பெண்கள் கூறினார்கள்: “அதிபரின் மனைவி தன் (அடிமையாக இருக்கின்ற) வாலிபனைத் தன் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைக்கிறாள். திட்டமாக அவர் மீது அவள் வைத்த அன்பு அவளது உள்ளத்தின் ஆழத்தில் ஊடுருவி விட்டது! நிச்சயமாக நாம் அவளை தெளிவானதொரு வழிகேட்டில் காண்கிறோம்.”"},{"id":31,"translation":"ஆக, அவர்களின் சூழ்ச்சியை அவள் செவியுற்றபோது, (அப்பெண்களை அழைத்து வர) அவர்களிடம் (ஓர் அழைப்பாளரை) அனுப்பினாள். இன்னும், அவர்களுக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்தாள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் (பழம் இன்னும்) ஒரு கத்தியைக் கொடுத்து, (யூஸுஃபே! அறையிலிருந்து) அவர்கள் முன் வெளியே வருவீராக! எனக் கூறினாள். அவரை அப்பெண்கள் பார்த்தபோது அவரை மிக உயர்வாக எண்ணினர். இன்னும், (பழத்தை அறுப்பதற்கு பதிலாக) தங்கள் கை(விரல்)களை அறுத்தனர். இன்னும், “அல்லாஹ் பாதுகாப்பானாக! இவர் மனிதரே இல்லை! இவர் இல்லை, (அழகான) கண்ணியமான ஒரு வானவராகவே தவிர.”"},{"id":32,"translation":"“நீங்கள் என்னை எவர் விஷயத்தில் பழித்தீர்களோ அவர்தான் இவர். திட்டவட்டமாக நான்தான் அவரை என் விருப்பத்திற்கு (பலவந்தமாக) அழைத்தேன். ஆனால், அவர் (தன்னை) பாதுகாத்துக் கொண்டார். இன்னும், அவருக்கு நான் ஏவுவதை அவர் செய்யவில்லையெனில் நிச்சயமாக அவர் சிறையிலிடப்படுவார், இன்னும், நிச்சயமாக அவர் இழிவானவர்களில் ஆகிவிடுவார்” என்று (அந்த பெண்களிடம் மந்திரியின் மனைவி) கூறினாள்."},{"id":33,"translation":"(யூஸுஃப்) கூறினார்: “என் இறைவா! அவர்கள் என்னை எதற்கு அழைக்கிறார்களோ அதை (செய்வதை) விட (நான்) சிறை(யில் தள்ளப்படுவது) எனக்கு மிக விருப்பமானது. இன்னும், நீ என்னை விட்டும் அவர்களின் சதி திட்டத்தை திருப்பவில்லையெனில் நான் அவர்கள் பக்கம் ஆசைப்பட்டு விடுவேன். இன்னும், அறிவீனர்களில் ஆகிவிடுவேன்.”"},{"id":34,"translation":"ஆக, அவருடைய இறைவன் அவருடைய பிரார்த்த்னையை ஏற்றுக் கொண்டான். ஆகவே, அவர்களின் சதி திட்டத்தை அவரை விட்டும் திருப்பினான். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்."},{"id":35,"translation":"பிறகு, (யூஸுஃப் நிரபராதி என்பதின்) அத்தாட்சிகளை அவர்கள் பார்த்த பின்னரும் (இந்த செய்தி நகரத்தில் பரவி விடக்கூடாது என்பதற்காக) அவர்கள் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நிச்சயமாக அவரை சிறையில் அடைக்கவேண்டும் என (எண்ணம்) அவர்களுக்குத் தோன்றியது."},{"id":36,"translation":"(ஆகவே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நேரத்தில்) இரு வாலிபர்கள் அவருடன் சிறையில் (தங்கள் குற்றங்களுக்காக) நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவன், “நிச்சயமாக நான் மதுவை பிழிவதாக என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். இன்னும், மற்றவனோ, “என் தலை மேல் நான் ரொட்டியைச் சுமக்கும் நிலையில், அதிலிருந்து பறவைகள் புசிப்பதாக நிச்சயமாக நான் என்னை கனவில் பார்த்தேன்” என்று கூறினான். “இதன் விளக்கத்தை எங்களுக்கு அறிவிப்பீராக! நிச்சயமாக நாங்கள் உம்மை நல்லறம் புரிபவர்களில் காண்கிறோம்” (என்று அவ்விருவரும் கூறினார்கள்)."},{"id":37,"translation":"(யூஸுஃப்) கூறினார்: “நீங்கள் (இருவரும்) உணவளிக்கப்படுகிற உணவு உங்கள் இருவரிடம் வராது, அது உங்கள் இருவரிடம் வருவதற்கு முன்னர் அதன் விளக்கத்தை நான் உங்கள் இருவருக்கும் அறிவித்தே தவிர. இது, என் இறைவன் எனக்கு கற்பித்ததிலிருந்து (நான் கூறுவதாகும்). அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத மக்களுடைய மார்க்கத்தை நிச்சயமாக நான் விட்டுவிட்டேன். இன்னும், அவர்களோ மறுமையை நிராகரிக்கிறார்கள்."},{"id":38,"translation":"இன்னும், நான் என் மூதாதைகளாகிய இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் உடைய மார்க்கத்தை பின்பற்றினேன். நாங்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதல்ல. இ(ந்த ஓர் இறை நம்பிக்கையை பின்பற்றுவ)து எங்களுக்கும் (உலக) மக்களுக்கும் கிடைத்த அல்லாஹ்வின் அருளாகும். எனினும், மக்களில் அதிகமானவர்கள், (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்."},{"id":39,"translation":"என் சிறைத் தோழர்களே! (பலவீனமான) பலதரப்பட்ட தெய்வங்கள் மேலானவர்களா? அல்லது, (நிகரற்ற) ஒரே ஒருவனான (அனைவரையும்) அடக்கி ஆளுபவனான அல்லாஹ் மேலானவனா?"},{"id":40,"translation":"நீங்கள் வணங்குவதெல்லாம் நீங்களும் உங்கள் மூதாதைகளும் பெயர் சூட்டிய சிலைகளைத்தான். அல்லாஹ் இவற்றுக்கு எவ்வித ஆதாரத்தையும் இறக்கவில்லை. அதிகாரம் அல்லாஹ்விற்கே தவிர (எவருக்கும்) இல்லை. அவனைத் தவிர (எதையும்) வணங்காதீர்கள் என்று அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதுதான் நேரான மார்க்கம். எனினும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்.”"},{"id":41,"translation":"“என் சிறைத் தோழர்களே! “ஆக, உங்களில் ஒருவன் தன் எஜமானனுக்கு மதுவை புகட்டுவான். ஆக, மற்றவனோ கழுமரத்தில் அறையப்படுவான். அவனுடைய தலையில் பறவைகள் (அமர்ந்து அவனை கொத்தித்) தின்னும். நீங்கள் விளக்கம் கேட்ட காரியம் விதிக்கப்பட்(டு விட்)டது."},{"id":42,"translation":"இன்னும், (யூஸுஃப்) கூறினார்: “அவ்விருவரில் நிச்சயமாக எவர் தப்பிப்பவர் என்று அவர் எண்ணினாரோ அவரிடம், நீ உன் எஜமானனிடம் என்னைப் பற்றி கூறு!” ஆக, (யூஸுஃப்) தன் இறைவனை நினைவு கூர்வதை ஷைத்தான் அவருக்கு மறக்கடித்தான். ஆகவே, அவர் சிறையில் (மேலும்) சில ஆண்டுகள் தங்கினார்."},{"id":43,"translation":"(எகிப்தின்) அரசர் கூறினார்: “கொழுத்த ஏழு பசுக்களை, அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிப்பதாகவும், பசுமையான ஏழு கதிர்களையும் (அவை அல்லாத) காய்ந்த வேறு கதிர்களையும் நிச்சயமாக நான் என் கனவில் கண்டேன். என் (சபை) பிரமுகர்களே! நீங்கள் கனவுக்கு வியாக்கியானம் கூறுபவர்களாக இருந்தீர்களேயானால் என் கனவிற்கு எனக்கு விளக்கம் தாருங்கள்.”"},{"id":44,"translation":"அவர்கள் கூறினார்கள்: “(இவை) பொய்யான (குழம்பிய) கனவுகளாகும். (வீணான) கனவுகளுக்குரிய விளக்கத்தை நாங்கள் அறிந்தவர்களாக இல்லை.”"},{"id":45,"translation":"ஆனால், அவ்விருவரில் தப்பித்தவன் கூறினான்: - அவனோ சில ஆண்டுகளுக்குப் பின்னர் (யூஸுஃபை) அவன் நினைவு படுத்திக் கொண்டான். - “நான் அவருடைய (கனவின்) விளக்கத்தை உங்களுக்கு அறிவிப்பேன். ஆகவே, என்னை (சிறையிலுள்ள யூஸுஃபிடம்) அனுப்பி வையுங்கள்.”"},{"id":46,"translation":"யூஸுஃபே! உண்மையாளரே! (அரசர் கனவில் பார்த்த) கொழுத்த ஏழு பசுக்கள், - அவற்றை இளைத்த ஏழு பசுக்கள் புசிக்கின்றன - அது பற்றியும்; இன்னும், பசுமையான ஏழு கதிர்கள், மற்றும் காய்ந்த வேறு (ஏழு) கதிர்கள் பற்றியும் எங்களுக்கு விளக்கம் தருவீராக! நான் மக்களிடம் திரும்பி செல்லவேண்டும், அவர்கள் (இதன் விளக்கத்தை) அறியவேண்டும்."},{"id":47,"translation":"(யூஸுஃப்) கூறினார்: “வழக்கமாக ஏழு ஆண்டுகள் நீங்கள் விவசாயம் செய்வீர்கள். ஆக, நீங்கள் புசிப்பதற்குத் தேவையான கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அறுவடை செய்ததை அதன் கதிரிலேயே விட்டு விடுங்கள்.”"},{"id":48,"translation":"“பிறகு, அதற்குப் பின்னர், கடினமான (பஞ்சமுடைய) ஏழு (ஆண்டுகள்) வரும். நீங்கள் கதிர்களில் பத்திரப்படுத்தியதில் கொஞ்சத்தைத் தவிர நீங்கள் அவற்றுக்காக முற்படுத்தி (சேமித்து) வைத்திருந்தவற்றை அவை தின்னு (அழித்து விடு)ம்."},{"id":49,"translation":"பிறகு, அதற்குப் பின்னர் ஓர் ஆண்டு வரும். அதில் மக்கள் மழை பொழியப்படுவார்கள். இன்னும், அவர்கள் (ஸைத்தூன், திராட்சை ஆகியவற்றை) பிழி(ந்து எண்ணெயையும் பழரசங்களையும் உற்பத்தி செய்து கொள்)வார்கள்."},{"id":50,"translation":"(இவ்விளக்கத்தை அரசரிடம் அறிவிக்கவே) அரசர் கூறினார்: “(எனது கனவுக்கு விளக்கமளித்த) அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்.” ஆக, (அழைத்துச் செல்ல) தூதர் அவரிடம் வந்தபோது, அவர் (தூதருடன் செல்ல மறுத்து) “நீ உன் எஜமானனிடம் திரும்பிச் செல். தங்கள் கை(விரல்)களை வெட்டிய பெண்களின் (உண்மை) விஷயமென்ன?” என்று அவரைக் கேள். நிச்சயமாக என் இறைவன் அவர்களின் சூழ்ச்சியை நன்கறிந்தவன்” என்று கூறினார்."},{"id":51,"translation":"(அரசர், அப்பெண்களை அழைத்து) “நீங்கள் யூஸுஃபை உங்கள் விருப்பத்திற்கு அழைத்த போது உங்கள் நிலை என்ன?” என்று கேட்டார். “அல்லாஹ் பாதுகாப்பானாக. நாங்கள் அவரிடத்தில் ஒரு தீங்கையும் அறியவில்லை” என்று (அப்பெண்கள்) கூறினார்கள். அதிபரின் மனைவியோ “இப்போது உண்மை வெளிப்பட்டு விட்டது. நான்தான் அவரை (நிர்ப்பந்தமாக) என் விருப்பத்திற்கு அழைத்தேன். இன்னும், நிச்சயமாக அவர் உண்மையாளர்களில் இருக்கிறார்.”"},{"id":52,"translation":"“அது, நிச்சயமாக நான் (என் எஜமானர்) மறைவில் (இருந்த போது) அவருக்கு துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ் மோசடி செய்பவர்களின் சதி திட்டத்தை நல்வழி படுத்தமாட்டான் என்பதற்காகவும்தான் (அந்த பெண்களை விசாரிக்கும்படி நான் கூறினேன் என்று யூஸுஃப் விளக்கம் அளித்தார்).”"},{"id":53,"translation":"“நான், என் ஆன்மா தூய்மையானது என கூற மாட்டேன், என் இறைவன் அருள் புரிந்தாலே தவிர. ஆன்மாக்கள் பாவத்தை அதிகம் தூண்டக்கூடியவையாக இருக்கின்றன. நிச்சயமாக என் இறைவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்” (என்று யூஸுஃப் கூறினார்)."},{"id":54,"translation":"“அவரை என்னிடம் கொண்டு வாருங்கள்! நான் அவரை எனக்கென மட்டும் பிரத்தியேகமாக ஆக்கிக்கொள்வேன்”என்று அரசர் கூறினார். (அரசர்) அவருடன் பேசியபோது, “(யூசுஃபே!) நிச்சயமாக நீர் இன்று நம்மிடம் தகுதியுடையவர், நம்பிக்கையாளர்”என்று கூறினார்."},{"id":55,"translation":"“நாட்டின் கஜானாக்கள் மீது (பொறுப்பாளராக, அவற்றை நிர்வகிப்பவராக) என்னை ஆக்குவீராக. நிச்சயமாக நான் (செல்வத்தை) நன்கு பாதுகாப்பவன், (நிர்வாகத்தை) நன்கறிந்தவன்” என்று (யூஸுஃப்) கூறினார்."},{"id":56,"translation":"இவ்வாறே, யூஸுஃபுக்கு அந்நாட்டில் வசதியளித்தோம். அவர், தான் நாடிய இடத்தில் தங்கிக்கொள்வார். நாம் நாடுகின்றவர்களுக்கு நம் அருளைத் தருகிறோம். இன்னும், நல்லறம் புரிபவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்."},{"id":57,"translation":"நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களாக இருப்பவர்களுக்கு திட்டமாக மறுமையின் கூலிதான் மிக மேலானதாகும்."},{"id":58,"translation":"இன்னும், யூஸுஃபுடைய சகோதரர்கள் (எகிப்துக்கு) வந்தார்கள். மேலும், அவரிடம் நுழைந்தார்கள். ஆக, அவர் அவர்களை அறிந்து கொண்டார். ஆனால், அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்."},{"id":59,"translation":"மேலும், அவர்களுடைய சாமான்களை அவர்களுக்கு (யூஸுஃப்) தயார் செய்து கொடுத்தபோது, “(மறுமுறை நீங்கள் வரும்போது) உங்கள் தந்தை மூலமாக உங்களுக்குள்ள ஒரு சகோதரனை என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் (உங்களுக்கு தேவையானதை) முழுமையாக அளந்து கொடுப்பதையும் விருந்தளிப்பவர்களில் நான் சிறந்தவன் என்பதையும் நீங்கள் கவனிக்கவில்லையா?” என்று கூறினார்."},{"id":60,"translation":"“ஆனால், நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வரவில்லையெனில் உங்களுக்கு என்னிடம் அறவே (உணவு ஏதும்) அளந்து கொடுக்கப்படாது. இன்னும், எனக்கு அருகிலும் வராதீர்கள்” என்று (யூஸுஃப்) கூறினார்."},{"id":61,"translation":"“நாங்கள் அவருடைய தந்தையிடம் அவரை வலியுறுத்தி கேட்போம். இன்னும், நிச்சயமாக நாங்கள் (நீர் கூறியதை) செய்து முடிப்போம்” என்று (யூஸுஃபின் சகோதரர்கள்) கூறினார்கள்."},{"id":62,"translation":"மேலும், (யூஸுஃப்) தன் வாலிபர்களிடம் கூறினார்: “அவர்களுடைய கிரயத்தை அவர்களுடைய மூட்டைகளில் வைத்து விடுங்கள். அவர்கள் தங்கள் குடும்பத்திடம் திரும்பி சென்றால் அதை அவர்கள் அறியவேண்டும், (அதை செலுத்த நம்மிடம்) அவர்கள் திரும்பி வரவேண்டும்” என்று கூறினார்."},{"id":63,"translation":"ஆக, அவர்கள் தம் தந்தையிடம் திரும்பியபோது, “எங்கள் தந்தையே! (குறிப்பிட்ட அளவைவிட அதிகமான உணவு) அளவை எங்களுக்கு (கொடுக்கப்படாமல்) தடுக்கப்பட்டு விட்டது. ஆகவே, எங்கள் சகோதரனையும் எங்களுடன் அனுப்புவீராக. நாங்கள் (அதிக தானியங்களை) அளந்து (வாங்கி) வருவோம். நிச்சயமாக நாங்கள் அவரை பாதுகாப்போம்” என்று கூறினார்கள்."},{"id":64,"translation":"(யஅகூப்) கூறினார்: “முன்னர் இவருடைய சகோதரர் (யூஸுஃப்) விஷயத்தில் நான் உங்களை நம்பியது போன்றே தவிர இவர் விஷயத்தில் நான் உங்களை நம்ப முடியுமா? ஆக, அல்லாஹ்வே மிக மேலான பாதுகாவலன். இன்னும், அவனே அருள் புரிபவர்களில் மிக அதிகம் அருள் புரிபவன்.”"},{"id":65,"translation":"மேலும், அவர்கள் தங்கள் மூட்டையை திறந்தபோது தங்கள் கிரயம் தங்களிடம் திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளதைக் கண்டு, “எங்கள் தந்தையே! நாம் (இதற்கு மேல்) என்ன தேடுகிறோம்? இதோ! நம் கிரய(மு)ம் நம்மிடமே திரும்பக் கொடுக்கப்பட்டுள்ளது. (உணவும் கிடைத்துள்ளது. ஆகவே புன்யாமீனையும் அழைத்துச் செல்ல அனுமதி தருவீராக!) நம் குடும்பத்திற்கு (தேவையான) தானியங்களைக் கொண்டு வருவோம். இன்னும், எங்கள் சகோதரனையும் பாதுகாப்பாக அழைத்து (சென்று, பாதுகாப்பாக அழைத்து) வருவோம். (அவருக்காக) ஓர் ஒட்டகத்தின் அளவையும் அதிகமாக வாங்கிவருவோம். இது (அதிபருக்கு) ஓர் இலகுவான அளவைதான்” என்று கூறினார்கள்."},{"id":66,"translation":"(யஅகூப்) கூறினார்: “உங்களுக்கு அழிவு ஏற்பட்டால் தவிர, நிச்சயமாக அவரை என்னிடம் நீங்கள் கொண்டு வருவீர்கள் என்று அல்லாஹ்வின் (மீது சத்தியம் செய்து) ஓர் உறுதிமொழியை நீங்கள் எனக்கு கொடுக்கும் வரை அவரை உங்களுடன் நான் அனுப்பவே மாட்டேன்” என்று (யஅகூப்) கூறினார். அவர்கள், (அவ்வாறு) அவருக்கு தங்கள் உறுதிமொழியை கொடுக்கவே, “நாம் கூறுவதற்கு அல்லாஹ்வே சாட்சியாளன் ஆவான்” என்று (யஅகூப்) கூறினார்."},{"id":67,"translation":"இன்னும், அவர் கூறினார்: “என் பிள்ளைகளே! (எகிப்தில் நுழையும்போது) ஒரே ஒரு வாசல் வழியாக நுழையாதீர்கள். (தனித் தனியாக) பல்வேறு வாசல்கள் வழியாக நுழையுங்கள். மேலும், அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் நான் உங்களை விட்டும் தடுக்க முடியாது. அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (யாருக்கும்) இல்லை. இன்னும், நான் அவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டேன். ஆக, நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்திரு)க்கவும்.”"},{"id":68,"translation":"அவர்கள் தங்கள் தந்தை கட்டளையிட்ட முறையில் (எகிப்து நகரத்தில்) நுழைந்தபோது, அது யஅகூபுடைய மனதிலிருந்த ஒரு தேவையை அவர் நிறைவேற்றியதைத் தவிர அவர்களை விட்டும் அல்லாஹ்விடமிருந்து (வரக்கூடிய) எதையும் அது தடுப்பதாக இல்லை. மேலும், நிச்சயமாக அவர் நாம் அவருக்கு கல்வி கற்பித்திருந்த காரணத்தால் அறிவு ஞானம் உடையவராக இருந்தார். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் அறியமாட்டார்கள்."},{"id":69,"translation":"மேலும், அவர்கள் யூஸுஃபிடம் நுழைந்தபோது, அவர் தன் சகோதரனை தன் பக்கம் ஒதுக்கி (-தன்னுடன் அணைத்து)க் கொண்டார். இன்னும், “நிச்சயமாக நான்தான் உனது சகோதரன். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி கவலை படாதே! (சங்கடப் படாதே!)” என்று கூறினார்."},{"id":70,"translation":"ஆக, அவர்களுக்கு அவர்களுடைய பொருள்களை அவர் தயார்படுத்தி கொடுத்தபோது தன் சகோதரனின் சுமையில் (அளப்பதற்கு பயன்படுத்தப்படுகின்ற) குவளையை வைத்து விட்டார். பிறகு, ஓர் அறிவிப்பாளர் “ஓ! (தானிய) சுமைகளை ஏற்றி செல்லும் பயணக் கூட்டத்தார்களே! நிச்சயமாக நீங்கள் திருடர்கள்தான்” என்று அறிவித்தார்."},{"id":71,"translation":"இவர்கள், அ(றிவிப்பை செய்த)வர்கள் பக்கம் முன்னோக்கி வந்து, “நீங்கள் எதை இழந்துவிட்டு தேடுகிறீர்கள்?” என்று கூறினார்கள்."},{"id":72,"translation":"“அரசருடைய குவளையை இழக்கிறோம்” என்று அவர்கள் கூறினார்கள். இன்னும், “அதைக் கொண்டு வருபவருக்கு ஓர் ஒட்டகைச் சுமை (அளவு தானியம் வெகுமதியாக) உண்டு. நான் அதற்கு பொறுப்பாளன்” (என்று அவர்களில் ஒருவர் கூறினார்.)"},{"id":73,"translation":"“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் இவ்வூரில் விஷமம் செய்வதற்கு வரவில்லை. இன்னும், நாங்கள் திருடர்களாக இருக்கவில்லை என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்” என்று அவர்கள் கூறினார்கள்."},{"id":74,"translation":"“நீங்கள் (இதில்) பொய்யர்களாக இருந்தால் அ(ந்த பொருளை திருடிய)வரின் தண்டனை என்ன?” என்று கூறினார்கள்."},{"id":75,"translation":"“அவரின் தண்டனையாவது, எவருடைய சுமையில் (அந்த பொருள்) காணப்படுகிறதோ அவரே அதற்குரிய தண்டனையாவார். இவ்வாறுதான் அநியாயக்காரர்களை நாம் தண்டிப்போம்” என்று கூறினார்கள்."},{"id":76,"translation":"ஆக, அவர் தன் சகோதரனின் மூட்டைக்கு முன்பாக அவர்களின் (மற்ற சகோதரர்களின்) மூட்டைகளில் (சோதனையை) ஆரம்பித்தார். பிறகு, தன் சகோதரனின் மூட்டையிலிருந்து அதை வெளியே எடுத்தார். யூஸுஃபுக்கு இப்படித்தான் நாம் காரணத்தை உருவாக்கினோம். அல்லாஹ் நாடினால் தவிர (எகிப்து) அரசரின் சட்டப்படி அவர் தன் சகோதரனை (தன்னுடன்) பிடித்து வைக்க முடிந்தவராக இல்லை. நாம் விரும்புகிறவர்களை பதவிகளால் உயர்த்துகிறோம். இன்னும், கல்வியுடைய ஒவ்வொருவருக்கும் மேல் நன்கறிந்த கல்வியாளர் ஒருவர் இருக்கிறார்."},{"id":77,"translation":"அவர் (அதைத்) திருடினால் (யூஸுஃப் என்ற) அவருடைய ஒரு சகோதரர் முன்னர் (இப்படித்தான்) திருடி இருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள். யூஸுஃப், அதை தன் உள்ளத்தில் மறைத்து கொண்டார். அதை அவர்களுக்கு வெளிப்படுத்தவில்லை. “நீங்கள் மிகவும் தரம் கெட்டவர்கள். நீங்கள் வருணிப்பதை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று (தன் மனதில்) கூறினார்."},{"id":78,"translation":"அவர்கள் கூறினார்கள்: “அதிபரே! அவருக்கு “(கண்ணியத்தில்) பெரியவரான (வயதில்) முதியவரான ஒரு தந்தை இருக்கிறார். ஆகவே, இவருடைய இடத்தில் எங்களில் ஒருவரை பிடித்து வைப்பீராக. நிச்சயமாக நாம் உம்மை நற்குண சீலர்களில் காண்கிறோம்.”"},{"id":79,"translation":"(யூஸுஃப்) கூறினார்: “எவரிடம் நம் பொருளை பெற்றுக் கொண்டோமோ அவரைத் தவிர (யாரையும்) நாம் பிடித்து வைப்பதை விட்டும் அல்லாஹ் (எங்களைப்) பாதுகாப்பானாக! அப்படி செய்தால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிடுவோம்.”"},{"id":80,"translation":"ஆக, (தங்கள் கோரிக்கையை அவர் ஏற்கமாட்டார் என்று) அவரிடம் அவர்கள் நம்பிக்கையிழந்தபோது, அவர்கள் (தங்களுக்குள்) ஆலோசித்தவர்களாக (அவரை விட்டு) விலகி சென்றனர். அவர்களில் (வயதில்) பெரியவர் கூறினார்: “திட்டமாக உங்கள் தந்தை உங்களிடம் அல்லாஹ்வின் (பெயரால்) ஓர் உறுதிமொழியை வாங்கியதையும், இதற்கு முன்னர் நீங்கள் யூஸுஃப் விஷயத்தில் தவறிழைத்ததையும் நீங்கள் அறிந்திருக்கவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதியளிக்கின்ற வரை; அல்லது, அல்லாஹ் எனக்கு தீர்ப்பளிக்கின்ற வரை இந்த பூமியை விட்டு நான் நகர மாட்டேன். தீர்ப்பளிப்பவர்களில் அவன் மிக மேலானவன்.”"},{"id":81,"translation":"நீங்கள் உங்கள் தந்தையிடம் திரும்பிச் சென்று, (அவரிடம்) கூறுங்கள்: “எங்கள் தந்தையே! நிச்சயமாக உம் மகன் திருடிவிட்டார். இன்னும், நாங்கள் அறிந்தபடியே தவிர நாங்கள் (பொய்யாக) சாட்சி பகரவில்லை. மறைவானவற்றை அறிந்தவர்களாக நாங்கள் இருக்கவில்லை.”"},{"id":82,"translation":"“நாங்கள் (தங்கி) இருந்த ஊரையும், நாங்கள் (சென்று) வந்த பயணக் கூட்டத்தையும் நீர் கேட்பீராக. இன்னும், நிச்சயமாக நாங்கள் உண்மையாளர்களே!”"},{"id":83,"translation":"(யஅகூப்) கூறினார்: “மாறாக! உங்கள் ஆன்மாக்கள் ஒரு காரியத்தை அலங்கரித்தன. ஆகவே, அழகிய பொறுமை(யாக எனது பொறுமை இருக்கட்டும்). அல்லாஹ், அவர்கள் அனைவரையும் என்னிடம் கொண்டு வரக்கூடும். நிச்சயமாக அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”"},{"id":84,"translation":"இன்னும், அவர் அவர்களை விட்டு விலகிச் சென்று, “யூஸுஃபின் மீது எனக்குள்ள துயரமே!” என்று கூறினார். இன்னும், அவரது இரு கண்களும் கவலையால் (அழுதழுது) வெளுத்து விட்டன. அவர் (தன் கோபத்தையும் கவலையையும்) அடக்கிக் கொள்பவர்."},{"id":85,"translation":"“அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அழிவை நெருங்கியவராக நீர் ஆகும் வரை; அல்லது, இறந்தவர்களில் நீர் ஆகும் வரை யூஸுஃபை நினைவு கூர்ந்து கொண்டே இருப்பீர் (போலும்)” என்று அவர்கள் கூறினார்கள்."},{"id":86,"translation":"(யஅகூப்) கூறினார்: “என் துக்கத்தையும் என் கவலையையும் நான் முறையிடுவதெல்லாம் அல்லாஹ்விடம்தான். இன்னும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நான் அறிவேன்.”"},{"id":87,"translation":"“என் பிள்ளைகளே! (பூமியின் பல பாகங்களில்) செல்லுங்கள்; இன்னும், யூஸுஃபையும், அவரது சகோதரரையும் நன்கு தேடுங்கள். மேலும், அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காதீர்கள். நிச்சயமாக நிராகரிக்கின்ற மக்களைத் தவிர (எவரும்) அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்க மாட்டார்கள்.”"},{"id":88,"translation":"ஆக, அவர்கள் அவரிடம் நுழைந்தபோது கூறினார்கள்: “அதிபரே! எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் வறுமை ஏற்பட்டுள்ளது. ஓர் அற்பப் பொருளை (கிரயமாக இங்கே) நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ஆகவே, (அதை ஏற்றுக் கொண்டு) எங்களுக்கு (தானியத்தின்) அளவையை முழுமைப்படுத்தி தருவீராக! இன்னும், எங்களுக்கு தர்மம் வழங்குவீராக! நிச்சயமாக அல்லாஹ் தர்மம் செய்வோருக்கு (தகுந்த) கூலி கொடுப்பான்.”"},{"id":89,"translation":"(யூஸுஃப்) கூறினார்: “நீங்கள் அறியாதவர்களாக இருந்தபோது யூஸுஃபுக்கும் அவருடைய சகோதரருக்கும் என்ன (கெடுதிகளை) செய்தீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா (இல்லையா)?”"},{"id":90,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நீர் யூஸுஃபா?” அவர் கூறினார்: “நான் யூஸுஃப்! இன்னும், இவர் என் சகோதரர். திட்டமாக அல்லாஹ் எங்கள் மீது அருள்புரிந்தான். நிச்சயமாக எவர் அல்லாஹ்வை அஞ்சி நடப்பாரோ; இன்னும், (சோதனையில்) பொறுமையாக இருப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அத்தகைய) நற்குண சீலர்களின் கூலியை வீணாக்க மாட்டான்.”"},{"id":91,"translation":"அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ் எங்களைவிட உம்மை மேன்மைப்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாகவே இருந்தோம்.”"},{"id":92,"translation":"(யூஸுஃப்) கூறினார்: “இன்றைய தினம் உங்கள் மீது அறவே பழிப்பில்லை. அல்லாஹ் உங்களை மன்னிப்பான்! கருணையாளர்களில் அவன் மகா கருணையாளன்.”"},{"id":93,"translation":"“நீங்கள் எனது இந்த சட்டையைக் கொண்டு செல்லுங்கள்; மேலும், என் தந்தையின் முகத்தில் அதைப் போடுங்கள். அவர் பார்வையுடையவராக ஆகிவிடுவார். இன்னும், நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.”"},{"id":94,"translation":"(அவர்களின்) பயணக் கூட்டம் (எகிப்திலிருந்து) புறப்படவே, அவர்களின் தந்தை கூறினார்: (“இதோ) யூஸுஃபுடைய வாடையை நிச்சயமாக நான் பெறுகிறேன்; என்னை நீங்கள் அறிவீனனாக ஆக்காமல் (என்னை பழிக்காமல்) இருக்க வேண்டுமே!”"},{"id":95,"translation":"(யஅகூபை சுற்றி இருந்தவர்கள்) கூறினார்கள்: “அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நீர் உம் பழைய தவறில்தான் இருக்கிறீர்.”"},{"id":96,"translation":"ஆக, நற்செய்தியாளர் வந்தபோது, அதை அவருடைய முகத்தில் போட்டார். உடனே, அவர் பார்வையுடையவராக ஆகிவிட்டார். (பிறகு, யஅகூப்) கூறினார்: “நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடம் நிச்சயமாக நான் அறிவேன் என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?”"},{"id":97,"translation":"(யஅகூபிடம் அவரின் பிள்ளைகள்) கூறினார்கள்: “எங்கள் தந்தையே! எங்களுக்கு எங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு பிரார்த்தனை செய்வீராக! நிச்சயமாக நாங்கள் தவறிழைப்பவர்களாக இருந்தோம்.”"},{"id":98,"translation":"(யஅகூப்) கூறினார்: “நான் என் இறைவனிடம் உங்களுக்காக மன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”"},{"id":99,"translation":"ஆக, அவர்கள் யூஸுஃபிடம் (அவரின் சபையில்) நுழைந்தபோது, அவர் தன் பக்கம் தன் பெற்றோரை அரவணைத்தார். இன்னும், “அல்லாஹ்வின் நாட்டப்படி நீங்கள் அச்சமற்றவர்களாக எகிப்தில் நுழையுங்கள்!” என்று கூறினார்."},{"id":100,"translation":"இன்னும், அவர் தன் பெற்றோரை அரச கட்டில் மேல் உயர்த்தி அமரவைத்தார். இன்னும், அவருக்கு (முன்) அவர்கள் சிரம் பணிந்தவர்களாக விழுந்தனர். மேலும், (யூஸுஃப்) கூறினார்: “என் தந்தையே! இது, முன்னர் (நான் கண்ட) என் கனவின் விளக்கமாகும். இன்னும், என் இறைவன் அதை உண்மையாக ஆக்கிவிட்டான். மேலும், சிறையிலிருந்து என்னை அவன் வெளியேற்றியபோதும், எனக்கும் என் சகோதரர்களுக்கு இடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணிய பின்னர், உங்களை கிராமத்திலிருந்து (என்னிடம்) கொண்டு வந்தபோதும் அவன் எனக்கு நன்மை புரிந்திருக்கிறான். நிச்சயமாக என் இறைவன், தான் நாடியதை செய்வதற்கு மகா நுட்பமானவன். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன், மகா ஞானவான்.”"},{"id":101,"translation":"“என் இறைவா! திட்டமாக நீ எனக்கு ஆட்சியை தந்தாய். (கனவு சம்பந்தமான) செய்திகளின் விளக்கத்தை எனக்கு கற்பித்தாய். வானங்களையும் பூமியையும் படைத்தவனே. நீதான் இம்மையிலும் மறுமையிலும் என் பாதுகாவலன். நான் முஸ்லிமாக இருக்கும் நிலையில் என்னை உயிர் கைப்பற்றிக்கொள்! இன்னும், நல்லவர்களுடன் என்னை சேர்த்து விடு!”"},{"id":102,"translation":"(நபியே) இவை, மறைவான செய்திகளில் உள்ளவையாகும். இவற்றை உமக்கு வஹ்யி அறிவிக்கிறோம். மேலும், அவர்கள் (யூஸுஃபை கிணற்றில் எறிவதற்காக) தங்கள் காரியத்தில் ஒருமித்து முடிவெடுத்தபோது நீர் அவர்களிடம் இருக்கவில்லை."},{"id":103,"translation":"மேலும், (நபியே!) நீர் பேராசைப்பட்டாலும் மக்களில் அதிகமானவர்கள் (இந்த வேதத்தை) நம்பிக்கை கொண்டவர்களாக இல்லை."},{"id":104,"translation":"இதற்காக நீர் அவர்களிடம் ஒரு கூலியையும் கேட்பதில்லை. இது, அகிலத்தார்களுக்கு அறிவுரையாகவே தவிர இல்லை."},{"id":105,"translation":"வானங்கள், பூமியில் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, அவர்களோ அவற்றை (பார்த்து படிப்பினை பெறாமல்) புறக்கணித்தவர்களாகவே அவற்றை கடந்து செல்கிறார்கள்."},{"id":106,"translation":"இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள், அவர்களோ (சிலைகளை அல்லாஹ்விற்கு) இணையாக்கியவர்களாக இருந்தே தவிர."},{"id":107,"translation":"ஆக, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து (அவர்களை) சூழ்ந்து கொள்ளக்கூடிய ஒரு தண்டனை அவர்களிடம் வருவதை; அல்லது அவர்கள் அறியாமல் இருக்கும் நிலையில் திடீரென மறுமை அவர்களிடம் வருவதை அவர்கள் அச்சமற்று விட்டனரா?"},{"id":108,"translation":"(நபியே!) கூறுவீராக: “(அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது,) இதுதான் என் பாதையாகும். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்தவர்களாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.”"},{"id":109,"translation":"இன்னும், (நபியே!) உமக்கு முன்னர், ஊர்வாசிகளில் ஆண்களைத் தவிர (பெண்களையோ வானவர்களையோ தூதர்களாக) நாம் அனுப்பவில்லை. நாம் அ(ந்த ஆட)வர்களுக்கு வஹ்யி அறிவிப்போம். ஆக, (வேதத்தை மறுக்கும்) அவர்கள் பூமியில் (பயணம்) செல்லவில்லையா? (அப்படி சென்றால்) அவர்களுக்கு முன்னிருந்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்பதைப் பார்ப்பார்கள். மேலும், மறுமையின் வீடுதான் அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு மிக மேலானதாகும். நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா?"},{"id":110,"translation":"இறுதியாக, (மக்கள் நம்பிக்கை கொள்வார்கள் என்பதிலிருந்து) நம் தூதர்கள் நிராசையடைந்து, இன்னும், நிச்சயமாக அவர்கள் (-தூதர்கள்) பொய்ப்பிக்கப்பட்டனர் (-அல்லாஹ் உடைய உதவி தங்களுக்கு வரும் என்று அவர்கள் கூறியது பொய்யாக ஆகிவிட்டது) என்று மக்கள் எண்ணியபோது, நம் உதவி அவர்களை (-அந்த தூதர்களை) வந்தடைந்தது. ஆக, நாம் நாடுகின்றவர்கள் பாதுகாக்கப்பட்டனர். மேலும், நம் தண்டனை, குற்றவாளிகளான சமுதாயத்தை விட்டு (ஒரு போதும்) திருப்பப்படாது."},{"id":111,"translation":"நிறைவான அறிவுடையவர்களுக்கு இவர்களுடைய சரித்திரங்களில் ஒரு படிப்பினை திட்டவட்டமாக இருக்கிறது. (இது) இட்டுக்கட்டப்படுகின்ற ஒரு செய்தியாக இருக்கவில்லை. எனினும், தனக்கு முன்னுள்ளதை உண்மைப்படுத்துவதாகவும் எல்லாவற்றையும் விவரிப்பதாகவும் நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு (விசேஷமான) ஓர் அருளாகவும் இருக்கிறது."}]},{"id":13,"verses":[{"id":1,"translation":"அலிஃப்; லாம்; மீம்; றா. இவை, (மகத்தான, ஞானமிக்க) வேதத்தின் வசனங்களாகும். (நபியே!) உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதுதான் (உறுதியான) உண்மையாகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளாமல் இருக்கிறார்கள்."},{"id":2,"translation":"அல்லாஹ், வானங்களை தூண்கள் இன்றி உயர்த்தினான். அதை நீங்கள் காண்கிறீர்கள். பிறகு, அர்ஷின் மேல் உயர்ந்து விட்டான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிடப்பட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. எல்லா காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்பவேண்டும் என்பதற்காக வசனங்களை (உங்களுக்கு) விவரிக்கிறான்."},{"id":3,"translation":"அவன்தான் பூமியை விரித்தான்; இன்னும், அதில் மலைகளையும் ஆறுகளையும் ஏற்படுத்தினான். இன்னும், அவற்றில் எல்லாக் கனிகளிலும் இரண்டு ஜோடிகளை ஏற்படுத்தினான். இரவினால் பகலை மூடுகிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும் பல) அத்தாட்சிகள் இதில் இருக்கின்றன."},{"id":4,"translation":"மேலும், பூமியில் ஒன்றுக்கொன்று சமீபமான பகுதிகள் உள்ளன. (ஆனால், அவை தன்மைகளால் மாறுபட்டவை ஆகும்.) இன்னும், திராட்சைகளின் தோட்டங்களும், விவசாய (நில)மும், ஒரே வேரிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரங்கள் முளைக்கின்ற பேரீச்சமும்; இன்னும், ஒரு வேரிலிருந்து ஒரே ஒரு மரம் முளைக்கின்ற பேரீச்சமும் உள்ளன. இவை (அனைத்தும்) ஒரே நீரைக் கொண்டு (நீர்) புகட்டப்படுகின்றன. ஆனால், அவற்றில் சிலவற்றை, சிலவற்றைவிட சுவையில் சிறப்பிக்கிறோம். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு இதில் நிச்சயமாக (இறைவன் ஒருவனே என்பதை உணர்த்தும்) அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":5,"translation":"(நபியே! மக்களில் பலர் அல்லாஹ்வை வணங்காமல், கற் சிலைகளை வணங்குவதைப் பற்றி) நீர் ஆச்சரியப்பட்டால், “நாம் (இறந்து மண்ணோடு) மண்ணாக ஆகிவிட்டால், (அதற்கு பின்னர்) புதியதோர் படைப்பாக நிச்சயமாக நாம் உருவாக்கப்படுவோமா?” என்ற அவர்களுடைய கூற்றோ மிக ஆச்சரியமானதே! இவர்கள்தான் தங்கள் இறைவனை நிராகரித்தவர்கள். மேலும், இவர்களுடைய கழுத்துகளில் அரிகண்டங்கள் இருக்கும். இன்னும், இவர்கள் நரகவாசிகளே! அதில் இவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":6,"translation":"இன்னும், (நபியே!) உம்மிடம் நல்லதற்கு முன்னர் கெட்டதை கேட்டு அவசரப்படுத்துகிறார்கள். மேலும், தண்டனைகள் இவர்களுக்கு முன்னர் (பலருக்கு) வந்து சென்றுள்ளன. நிச்சயமாக உம் இறைவன், மக்களை - அவர்கள் குற்றம் செய்திருந்தபோதும் மன்னிப்பவனாக இருக்கிறான் (அவர்கள் திருந்தி நேர்வழியில் வந்தால்). மேலும், நிச்சயமாக உம் இறைவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் மிகக் கடுமையானவன் ஆவான்."},{"id":7,"translation":"(நபியே!) நிராகரிப்பவர்கள் (உம்மைப் பற்றி), “இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிறபடி) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். மேலும், எல்லா மக்களுக்கும் (அவர்களை நன்மையின் பக்கம்; அல்லது தீமையின் பக்கம் வழி நடத்துகின்ற) ஒரு தலைவர் இருந்திருக்கிறார்."},{"id":8,"translation":"ஒவ்வொரு பெண்ணும் (வயிற்றில்) சுமப்பதையும் கர்ப்பப்பைகள் (குழந்தைகளை ஈன்றெடுக்கும் காலங்கள்) குறைவதையும், அவை அதிகமாவதையும் அல்லாஹ் நன்கறிவான். இன்னும், (இவை அல்லாத) எல்லா காரியங்களும் அவனிடம் (நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவின்படி நடக்கின்றன."},{"id":9,"translation":"(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன்; மிகப் பெரியவன்; மிக உயர்ந்தவன்."},{"id":10,"translation":"உங்களில் (தன்) பேச்சை ரகசியப்படுத்தியவனும்; அதை பகிரங்கப்படுத்தியவனும்; இரவில் (தனது தீமைகளை) மறைத்து செய்பவனாக இருந்துவிட்டு, மேலும், பகலில் (நல்லவனாக) வெளியே வருபவனும் அ(ந்த இறை)வனுக்குச் சமமானவர்களே! (அவன் அவர்கள் அனவைரையும் அவர்களின் எல்லா செயல்களையும் நன்கறிவான்.)"},{"id":11,"translation":"(மனிதனாகிய) அவனுக்கு முன்புறத்திலிருந்தும், அவனுக்குப் பின்புறத்திலிருந்தும் (அவனை பாதுகாப்பதற்காக) பின்தொடரக்கூடியவர்கள் (-ஒரு கூட்டத்திற்கு பின்னர், ஒரு கூட்டம் என்று மாறி மாறி வரக்கூடிய வானவர்கள் அவனுடன்) இருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய (தண்டனை எனும்) கட்டளையிலிருந்து (அல்லாஹ் நாடிய காலம் வரை) அவனை பாதுகாக்கிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் ஒரு சமுதாயத்திடமுள்ளதை மாற்றமாட்டான், அவர்கள் தங்களிடமுள்ளதை மாற்றுகின்ற வரை. மேலும், அல்லாஹ் ஒரு சமுதாயத்திற்கு அழிவை நாடினால், (எவராலும்) அதை தடுப்பது அறவே முடியாது; இன்னும், அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர் எவரும் இல்லை."},{"id":12,"translation":"அவன் உங்க(ளில் பயணத்தில் இருப்பவர்க)ளுக்கு மின்னலை பயமாகவும் (ஊரில் இருப்பவர்களுக்கு மழை வருவதற்குரிய) ஆசையாகவும் காட்டுகிறான். இன்னும், (மழையைச் சுமந்து வரக்கூடிய) கனமான மேகங்களை உருவாக்குகிறான்."},{"id":13,"translation":"மேலும், இடியும் வானவர்களும் அவனுடைய பயத்தால் அவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். அவர்களோ (-அம்மக்களோ) அல்லாஹ்வைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவனே அபாயங்களை (-எரித்து சாம்பலாக்கிவிடும் இடி மின்னல்களை) அனுப்பி, அவற்றைக் கொண்டு அவன் நாடியவர்களை வேரறுக்கிறான். அவனோ (பாவிகளை) பிடிப்பதில் (-தண்டிப்பதால்) மிகக் கடுமையானவன்."},{"id":14,"translation":"(பலன் தரும்) உண்மைப் பிரார்த்தனை அவனுக்கே உரியது. இவர்கள் அவனையன்றி எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் இவர்களுக்கு எதையும் பதில் தரமாட்டார்கள். தண்ணீர் பக்கம் தன் இரு கைகளையும் அது (தானாகவே) தன் வாயை அடைவதற்காக விரிப்பவனைப் போன்றே தவிர (இவர்களின் செயல் இல்லை). அதுவோ (ஒரு போதும்) அதை அடையாது. (சிலைகளை வணங்குகின்ற) நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை வழிகேட்டில் தவிர இல்லை."},{"id":15,"translation":"வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் ஆசையாகவும், நிர்ப்பந்தமாகவும் அல்லாஹ்விற்கே சிரம் பணிகிறார்கள்; இன்னும், காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் அவர்களின் நிழல்களும் அவனுக்கே சிரம் பணிகின்றன."},{"id":16,"translation":"(நபியே!) கூறுவீராக: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” (நபியே!) கூறுவீராக: (அவன்) “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக: “நீங்கள் அவனை அன்றி, (உங்களுக்கு) தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டீர்களா? அவர்கள் தங்களுக்கு தாமே நன்மை செய்வதற்கும் தீங்கு செய்வதற்கும் உரிமைபெற மாட்டார்கள். (நபியே!) கூறுவீராக: “குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? அல்லது, இருள்களும் ஒளியும் சமமாகுமா? அல்லது, அல்லாஹ்விற்கு இணைக(ளாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)ளை அவர்கள் ஏற்படுத்தினார்களே அவை அவனுடைய படைப்பைப் போன்று (எதையும்) படைத்திருக்கின்றனவா? அதனால், படைத்தல் (யார் மூலம் நிகழ்கிறது என்பது) இவர்களுக்கு குழப்பமடைந்து விட்டதா?” (நபியே! இதற்கு பதிலாக நீர்) கூறுவீராக: “அல்லாஹ்தான் எல்லாவற்றின் படைப்பாளன் ஆவான். இன்னும், அவன் (நிகரற்ற) ஒருவன், (அனைவரையும்) அடக்கி ஆளுபவன் ஆவான்.”"},{"id":17,"translation":"அவன் மேகத்திலிருந்து மழையை இறக்கினான். ஓடைகள் அவற்றின் அளவிற்கு (தண்ணீரால் நிரம்பி) ஓடின. ஆக, வெள்ளம், மிதக்கும் நுரைகளை சுமந்(து வந்)தது. மேலும், ஆபரணத்தை அல்லது (உலோகப்) பொருளை (செய்ய) நாடி நெருப்பில் (தங்கம், வெள்ளி, பித்தளை போன்றவற்றை) அவர்கள் பழுக்க வைப்பதிலும் அது போன்ற (அழுக்கு) நுரைகள் உண்டு. இப்படித்தான் சத்தியத்தையும் அசத்தியத்தையும் அல்லாஹ் விவரிக்கிறான். ஆக, நுரையோ வீணானதாக சென்று அழிந்துவிடுகிறது. ஆனால், மனிதனுக்கு எது பலனளிக்கிறதோ அதுவே பூமியில் (நிரந்தரமாக) தங்குகிறது. இவ்வாறே, அல்லாஹ் உவமைகளை விவரிக்கிறான்."},{"id":18,"translation":"தங்கள் இறைவனு(டைய அழைப்பு)க்கு பதிலளித்தவர்களுக்கு மிக அழகிய நற்கூலி உண்டு. மேலும், எவர்கள் அவனு(டைய அழைப்பு)க்குப் பதிலளிக்கவில்லையோ அவர்களிடம் பூமியிலுள்ளவை அனைத்தும்; இன்னும், அதுபோன்றவையும் இருந்திருந்தால், (நரகத்திலிருந்து தப்பிக்க) அதை மீட்புத்தொகையாக கொடுத்து தப்பித்திருப்பார்கள். அவர்களுக்கு கடினமான விசாரணை உண்டு. இன்னும், அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது மிகக் கெட்ட தங்குமிடமாகும்."},{"id":19,"translation":"ஆக, உம் இறைவனிடமிருந்து உமக்கு இறக்கப்பட்டதெல்லாம் உண்மைதான் என்று அறிபவர் (அதை அறியாமல்) குருடராக இருப்பவரைப் போன்று ஆவாரா? (ஆகவே மாட்டார்.) நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான்."},{"id":20,"translation":"அவர்கள் அல்லாஹ்வின் (பெயரால் தங்களுக்குள் செய்த) ஒப்பந்தத்தை நிறைவேற்றுவார்கள். இன்னும், உடன் படிக்கையை முறிக்க மாட்டார்கள்."},{"id":21,"translation":"இன்னும், அவர்கள், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை சேர்ப்பார்கள். இன்னும், அவர்கள், தங்கள் இறைவனை அஞ்சுவார்கள். மேலும், கடினமான விசாரணையைப் பயப்படுவார்கள்."},{"id":22,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் முகத்தை நாடி பொறுமையாக இருப்பார்கள்; மேலும், தொழுகையை நிலைநிறுத்துவார்கள்; இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்வார்கள்; இன்னும், நல்லதைக் கொண்டு கெட்டதைத் தடுப்பார்கள். இ(த்தகைய)வர்கள், இவர்களுக்குத்தான் மறுமையின் அழகிய முடிவுண்டு."},{"id":23,"translation":"(நல்ல முடிவு என்பது,) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அதில் இவர்களும், இவர்களுடைய மூதாதைகளில், இவர்களுடைய மனைவிகளில், இவர்களுடைய சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்களும் பிரவேசிப்பார்கள். ஒவ்வொரு வாசலில் இருந்தும் வானவர்கள் இவர்களிடம் பிரவேசிப்பார்கள்."},{"id":24,"translation":"நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக! ஆக, மறுமையின் அழகிய முடிவு மிகச் சிறந்ததாகும்."},{"id":25,"translation":"மேலும், எவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை அது உறுதியான பின்னர் முறிக்கிறார்களோ; இன்னும், எது சேர்க்கப்பட வேண்டும் என அல்லாஹ் ஏவினானோ அ(ந்த சொந்த பந்தத்)தை துண்டிக்கிறார்களோ; இன்னும், பூமியில் விஷமம் (-கொலை, கொள்ளை, கலகம், பொது சொத்தில் கையாடல், ஊழல்) செய்கிறார்களோ ஆகிய இவர்கள் இவர்களுக்கு சாபம்தான். இன்னும், இவர்களுக்கு (கடுமையான தண்டனைகள் உடைய) மிகக் கெட்ட வீடு உண்டு."},{"id":26,"translation":"அல்லாஹ், தான் நாடுகிறவர்களுக்கு வாழ்க்கை வசதியை விசாலப்படுத்துகிறான். (தான் நாடுகிறவர்களுக்கு அதை) சுருக்கிவிடுகிறான். மேலும், (மறுமையை நிராகரிக்கின்ற) அவர்கள் உலக வாழ்க்கையைக் கொண்டு மகிழ்கிறார்கள். உலக வாழ்க்கையோ மறுமையில் (கிடைக்கும் சுகத்தோடு ஒப்பிடப்படும்போது) ஒரு (சொற்ப) சுகமாகவே தவிர இல்லை."},{"id":27,"translation":"நிராகரித்தவர்கள், “இவர் (-இத்தூதர்) மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் விரும்புகிற) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா?” என்று கூறுகிறார்கள். (நபியே) கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், (நிராகரிப்பிலிருந்து விலகி அவன் பக்கம்) திரும்பியவர்களுக்கு அவனை நோக்கி (வருவதற்கான நேரான பாதையை) வழிகாட்டுகிறான்."},{"id":28,"translation":"(அவர்கள்தான்) நம்பிக்கை கொண்டவர்கள்; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. “அல்லாஹ்வின் நினைவினால் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன” என்பதை அறிந்து கொள்ளுங்கள்."},{"id":29,"translation":"எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களுக்கு மகிழ்ச்சியும் கண்குளிர்ச்சியும் அழகிய மீளுமிடமும் உண்டு."},{"id":30,"translation":"(நபியே! முன்பு தூதர்களை அனுப்பிய) இவ்வாறே, உம்மை (நம் தூதராக) ஒரு சமுதாயத்திடம் அனுப்பினோம். இவர்களுக்கு முன்னரும் பல சமுதாயங்கள் சென்றிருக்கின்றன. நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை இவர்கள் முன் நீர் ஓதி காண்பிப்பதற்காக (உம்மை தூதராக அனுப்பினோம்). ஆனால், இவர்களோ ரஹ்மானை (-பேரருளாளனாகிய அல்லாஹ்வை) நிராகரிக்கிறார்கள். (நபியே) கூறுவீராக: “அவன்தான் என் இறைவன்; அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் மீது நம்பிக்கை வைத்து (அவனை மட்டுமே சார்ந்து) விட்டேன். இன்னும், அவன் பக்கமே என் திரும்புதல் இருக்கிறது.”"},{"id":31,"translation":"(நபியே! முன்னர் இறக்கப்பட்ட) ஒரு வேதம், அதன் மூலம் மலைகள் நகர்த்தப்பட்டிருந்தால்; அல்லது, அதன் மூலம் பூமி துண்டு துண்டாக்கப்பட்டிருந்தால்; அல்லது, அதன் மூலம் மரணித்தவர்கள் பேசவைக்கப்பட்டிருந்தால் (உங்களுக்கு இறக்கப்பட்ட இவ்வேதத்தின் மூலமும் அப்படி செய்யப்பட்டிருக்கும்). மாறாக, அதிகாரம் எல்லாம் அல்லாஹ்விற்குரியதே! ஆகவே, அல்லாஹ் நாடினால் மக்கள் அனைவரையும் நேர்வழிபடுத்தியிருப்பான் என்பதை நம்பிக்கை கொண்டவர்கள் அறியவில்லையா? (மக்காவைச் சேர்ந்த இந்த) நிராகரிப்பாளர்கள் செய்ததின் காரணமாக அவர்களை ஒரு திடுக்கம் அடைந்து கொண்டே இருக்கும். அல்லது, அவர்களின் ஊருக்கு அருகாமையில் நீர் (உம் படையுடன் சென்று) தங்குவீர். இறுதியாக, அல்லாஹ்வின் வாக்குறுதி வரும். (விரைவில் அவர்களை நீர் வெற்றி கொள்வீர்.) நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதியை மாற்றமாட்டான்."},{"id":32,"translation":"மேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்கள் திட்டவட்டமாக கேலி செய்யப்பட்டனர். ஆக, நிராகரித்தவர்களுக்கு (அவர்களது அவகாசத்தை) நீட்டிக்கொடுத்தேன். பிறகு, (என் தண்டனையால்) அவர்களைப் பிடித்தேன். ஆக, என் தண்டனை எப்படி இருந்தது?"},{"id":33,"translation":"ஆக, ஒவ்வோர் ஆன்மாவையும் - அது செய்ததற்கு ஏற்ப - அதை நிர்வகிப்பவன் எவ்வித சக்தியுமற்ற கற்பனை தெய்வங்களுக்கு சமமாவானா? இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை செய்யப்பட்ட தெய்வங்)களை ஏற்படுத்தினர்! (நபியே!) கூறுவீராக! “(நீங்கள் வணங்கும்) அவற்றுக்கு நீங்கள் பெயரிடுங்கள். (அவற்றுக்கு இறைவன் என்று உங்களால் பெயரிட முடியுமா?) அல்லது, பூமியில் அவன் அறியாததை; அல்லது, பொய்யான (வீணான) சொல்லை அவனுக்கு அறிவிக்கிறீர்களா? (அதுவும் முடியாது.)” மாறாக! நிராகரித்தவர்களுக்கு - அவர்களுடைய சூழ்ச்சி - அலங்கரிக்கப்பட்டது. இன்னும், (அவர்கள் நேரான) பாதையிலிருந்து தடுக்கப்பட்டனர். மேலும், எவரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவருக்கு, நேர்வழிகாட்டுபவர் எவரும் இல்லை."},{"id":34,"translation":"அவர்களுக்கு உலக வாழ்க்கையில் தண்டனை உண்டு. இன்னும், (அவர்களுக்கு) மறுமையின் தண்டனைதான் மிகச் சிரமமாக இருக்கும். மேலும், அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இல்லை."},{"id":35,"translation":"(அல்லாஹ்வை) அஞ்சியவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது, அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அதன் உணவுகளும் அதன் நிழலும் (என்றுமே) நிலையானவை. இது (அல்லாஹ்வை) அஞ்சியவர்களின் அழகிய முடிவாகும். மேலும், நிராகரிப்பாளர்களின் முடிவோ நரகம்தான்!"},{"id":36,"translation":"(நபியே!) நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்க(ளில் உம்மை நம்பிக்கை கொண்டவர்க)ள் உமக்கு இறக்கப்பட்டதைக் கொண்டு மகிழ்வார்கள். மேலும், இ(வ்வேதத்)தில் சிலவற்றை மறுப்பவர்களும் (உமக்கு எதிரான) பிரிவுகளில் உண்டு. (நபியே!) கூறுவீராக: “எனக்கு கட்டளையிடப்பட்டதெல்லாம் அல்லாஹ்வை நான் வணங்குவதற்கும் அவனுக்கு நான் இணைவைக்காமல் இருப்பதற்கும்தான்; அவன் பக்கமே நான் (உங்களை) அழைக்கிறேன்; இன்னும், அவன் பக்கமே என் திரும்புமிடம் இருக்கிறது.”"},{"id":37,"translation":"(நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். இன்னும், உமக்கு கல்வி வந்ததற்குப் பின்னர் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றினால், அல்லாஹ்விடமிருந்து உமக்கு உதவியாளரும் இருக்க மாட்டார், இன்னும் பாதுகாவலரும் இருக்க மாட்டார்."},{"id":38,"translation":"மேலும், (நபியே!) உமக்கு முன்னர் (பல) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பி இருக்கிறோம். இன்னும், அவர்களுக்கு மனைவிகளையும் சந்ததியையும் ஏற்படுத்தினோம். மேலும், அல்லாஹ்வின் அனுமதியினால் தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டு வருவது எந்த தூதராலும் முடியாது. ஒவ்வொரு தவணைக்கும் (அது எழுதப்பட்ட) ஒரு நூல் இருக்கிறது."},{"id":39,"translation":"(அதில்) அவன் நாடியதை (தவணை வந்தவுடன் அதை நிகழ்த்தி முடித்து) அழித்து விடுகிறான்; இன்னும், (அவன் நாடியதை தவணை வரும் வரை அதில்) தரிபடுத்தி வைக்கிறான். மேலும், அவனிடம்தான் விதியுனுடைய மூல நூல் இருக்கிறது."},{"id":40,"translation":"(நபியே!) அவர்களுக்கு நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு நிச்சயமாக நாம் காண்பித்தால் (அது நமது நாட்டப்படியே நடந்தது); அல்லது, (அதற்கு முன்பே) நாம் உம்மை உயிர் கைப்பற்றிக் கொண்டால் (அதுவும் நமது நாட்டப்படியே நடந்ததாகும்). உம்மீது (சுமத்தப்பட்ட) கடமை எல்லாம் (இந்த மார்க்கத்தை எல்லோருக்கும்) எடுத்துரைப்பதுதான்! மேலும், விசாரணை செய்வதோ நம்மீது கடமையாக இருக்கிறது. (பாவிகளை நாம் நமது நாட்டப்படிதான் தண்டிப்போம். உமது விருப்பப்படியோ, அவர்களின் விருப்பப்படியோ இல்லை.)"},{"id":41,"translation":"நிச்சயமாக நாம் (அவர்கள் வசிக்கின்ற) பூமியை அதன் ஓரங்களிலிருந்து குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ் (தனது அடியார்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கிறான். அவனுடைய தீர்ப்பைத் தடுப்பவர் யாரும் அறவே இல்லை. மேலும், அவன் (முன்னோர், பின்னோரை) விசாரிப்பதில் மிக தீவிரமானவன்."},{"id":42,"translation":"(நபியே!) இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (தூதர்களுக்கு எதிராக) திட்டமாக சூழ்ச்சி செய்தனர். ஆக, (நிறைவேறுகின்ற) சூழ்ச்சி அனைத்தும் அல்லாஹ்விற்கே உரியதாகும். (அவனது சூழ்ச்சிதான் நிறைவேறும்.) ஒவ்வோர் ஆன்மாவும் செய்வதை அவன் நன்கறிவான். மேலும், எவருக்கு மறுமையின் அழகிய முடிவு உண்டு என்பதை நிராகரிப்பவர்கள் விரைவில் அறிவார்கள்."},{"id":43,"translation":"மேலும், (நபியே!) “நீர் தூதராக இருக்கவில்லை” என்று நிராகரிப்பவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் போதுமான சாட்சியாக இருக்கிறான். இன்னும், வேதத்தின் ஞானம் உள்ளவர்களும் போதுமான சாட்சிகளாக இருக்கின்றனர்.”"}]},{"id":14,"verses":[{"id":1,"translation":":, அலிஃப் லாம் றா. (நபியே!) இது ஒரு வேதம். மக்களை அவர்களுடைய இறைவனின் அனுமதியின்படி இருள்களிலிருந்து ஒளியின் பக்கம்; மிகைத்தவன், மகா புகழாளன் உடைய பாதையின் பக்கம் நீர் வெளியேற்றுவதற்காக இதை உமக்கு இறக்கி தந்தோம்."},{"id":2,"translation":"அல்லாஹ், வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவையாகும். நிராகரிப்பாளர்களுக்கு கடினமான தண்டனையின் கேடு உண்டாகுக!"},{"id":3,"translation":"அவர்கள் மறுமையை விட உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள்; இன்னும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களை) தடுக்கிறார்கள்; மேலும், அதில் கோணலை(யும் குறையையும் உண்டாக்க) தேடுகிறார்கள். அவர்கள் தூரமான வழிகேட்டில் உள்ளனர்."},{"id":4,"translation":"(நபியே!) எந்த ஒரு தூதரையும் அவருடைய மக்களின் மொழியிலேயே தவிர நாம் அனுப்பவில்லை. நோக்கம், அவர் அவர்களுக்கு (மார்க்கத்தை) தெளிவுபடுத்த வேண்டும் என்பதாகும். ஆக, அல்லாஹ், தான் நாடுபவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுபவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்."},{"id":5,"translation":"திட்டவட்டமாக மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் (அவரது மக்களிடம்) நாம் அனுப்பினோம், (மூஸாவே!) “உம் சமுதாயத்தை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் வெளியேற்றுவீராக! இன்னும், அல்லாஹ்வின் அருட்கொடைகளை அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக! மிக பொறுமையாளர், மிக்க நன்றியறிபவர் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":6,"translation":"மூஸா தன் சமுதாயத்திற்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “(என் மக்களே!) உங்கள் மீதுள்ள அல்லாஹ்வின் அருளை நினைவு கூருங்கள், அவன் உங்களை ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரிடமிருந்து காப்பாற்றியபோது (உஙகள் மீது அருள்புரிந்தான்). அவர்களோ கடினமான தண்டனையால் உங்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தார்கள். இன்னும், உங்கள் ஆண் பிள்ளைகளை அறுத்(து கொலை செய்)தார்கள். மேலும், உங்கள் பெண் (பிள்ளை)களை வாழவிட்டார்கள். இதில் உங்கள் இறைவனிடமிருந்து மகத்தான சோதனை (உங்களுக்கு) இருந்தது.”"},{"id":7,"translation":"மேலும், “நீங்கள் நன்றி செலுத்தினால் நிச்சயமாக (என் அருளை) உங்களுக்கு அதிகப்படுத்துவேன்; இன்னும், நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக என் தண்டனை (உங்களுக்கு) கடுமையானதாக இருக்கும்” என்று உங்கள் இறைவன் அறிவித்த சமயத்தை நினைவு கூருங்கள்!"},{"id":8,"translation":"இன்னும், மூஸா கூறினார்: “நீங்களும் பூமியிலுள்ள அனைவரும் நிராகரித்தாலும் (அவனுக்கு ஒரு குறையும் இல்லை. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன் (தேவையற்றவன்), மகா புகழாளன்” (என்று கூறினார்)."},{"id":9,"translation":"உங்களுக்கு முன்னர் இருந்த நூஹ்வுடைய மக்கள்; ஆது மக்கள்; ஸமூது மக்கள்; இன்னும், அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய சரித்திரம் உங்களுக்கு வரவில்லையா? அல்லாஹ்வைத் தவிர (யாரும்) அவர்களை அறியமாட்டார். அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அவர்கள் (கோபத்தால்) தங்கள் கைகளை தங்கள் வாய்களின் பக்கமே திருப்பினர். இன்னும், (தூதர்களை நோக்கி) “நிச்சயமாக நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நாங்கள் நிராகரித்தோம். மேலும், நீங்கள் எங்களை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதில் நிச்சயமாக நாங்கள் ஆழமான சந்தேகத்தில் இருக்கிறோம்” என்று கூறினார்கள்."},{"id":10,"translation":"“வானங்கள் இன்னும் பூமியின் படைப்பாளனாகிய அல்லாஹ்வின் விஷயத்திலா (உங்களுக்கு) சந்தேகம்? அவன் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பதற்கும்; மேலும், ஒரு குறிக்கப்பட்ட காலம் வரை உங்களை (இவ்வுலகத்தில் கண்ணியமாக வாழ) விட்டுவைப்பதற்கும் அவன் உங்களை அழைக்கிறான்” என்று அவர்களுடைய தூதர்கள் (அவர்களிடம்) கூறினார்கள். “எங்களைப் போன்ற (சாதாரண) மனிதர்களாகவே தவிர நீங்கள் இல்லை. எங்கள் மூதாதைகள் வணங்கிக் கொண்டிருந்தவற்றை விட்டு எங்களை நீங்கள் தடுக்க(வா) நாடுகிறீர்கள்(?). ஆகவே, தெளிவான ஆதாரத்தை நம்மிடம் கொண்டு வாருங்கள்” என்று (அம்மக்கள்) கூறினார்கள்."},{"id":11,"translation":"அவர்களுடைய தூதர்கள் அவர்களுக்கு கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நாங்கள் இல்லை. எனினும், அல்லாஹ் தன் அடியார்களில் தான் நாடுபவர் மீது (தனது வஹ்யை இறக்கி) அருள் புரிகிறான். மேலும், அல்லாஹ்வுடைய அனுமதியினாலே தவிர உங்களிடம் ஓர் ஆதாரத்தை நாம் கொண்டு வருவது எங்களுக்கு முடியாது. இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்.”"},{"id":12,"translation":"“இன்னும், நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்காதிருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன்தான் எங்களுக்கு எங்கள் (சரியான) பாதைகளில் நேர்வழி நடத்தினான். மேலும், நீங்கள் எங்களை துன்புறுத்துவதை நிச்சயமாக நாங்கள் பொறுத்துக் கொள்வோம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கட்டும்.”"},{"id":13,"translation":"மேலும், நிராகரித்தவர்கள் தங்கள் தூதர்களிடம், “நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றுவோம்; அல்லது, எங்கள் மார்க்கத்தில் நீங்கள் நிச்சயம் திரும்பி விடவேண்டும்” என்று கூறினார்கள். ஆக, அவர்களுடைய இறைவன், “நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களை அழிப்போம்” என்று அவர்களுக்கு (தூதர்களுக்கு) வஹ்யி அறிவித்தான்."},{"id":14,"translation":"“இன்னும், அவர்களுக்குப் பின்னர் உங்களை (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் வசிக்க செய்வோம். இ(ந்த வாக்கான)து, எவர் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை பயந்தாரோ; இன்னும், என் எச்சரிக்கையை பயந்தாரோ அவருக்காகும்.”"},{"id":15,"translation":"இன்னும், அவர்கள் வெற்றி பெற முயற்சித்தார்கள். (ஆனால்) பிடிவாதக்காரர்கள் வம்பர்கள் எல்லோரும் (இறுதியில்) அழிந்து விட்டனர்."},{"id":16,"translation":"அவனுக்கு முன்னால் (அவன் மரணித்துவிட்டால்) ஜஹன்னம் (-நரகம்) இருக்கும். இன்னும், சீழ் நீரிலிருந்து அவன் நீர் புகட்டப்படுவான்."},{"id":17,"translation":"அதை அவன் மிடறு மிடறாக குடிப்பான். அதை இலகுவாக அவன் குடித்து விடமாட்டான். மேலும், ஒவ்வொரு இடத்திலிருந்தும் மரணம் அவனுக்கு வரும். ஆனால், அவன் இறந்து விடமாட்டான். இன்னும், அவனுக்கு முன்னால் (கடினமான) தண்டனை (அவனை காத்து கொண்டு) இருக்கிறது."},{"id":18,"translation":"தங்கள் இறைவனை நிராகரித்தவர்களுடைய (செயல்களின்) உதாரணம், புயல் காலத்தில் காற்று கடுமையாக அடித்துச் சென்ற சாம்பலைப்போல் அவர்களுடைய அமல்கள் இருக்கின்றன! தாங்கள் செய்ததில் (இருந்து நன்மை) எதையும் (அடைய) அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். இதுதான் (வெகு) தூரமான வழிகேடாகும்."},{"id":19,"translation":"நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்துள்ளான் என்பதை (நபியே!) நீர் கவனிக்கவில்லையா? (மக்களே!) அவன் நாடினால் உங்களைப் போக்கி விடுவான். இன்னும், (உங்களுக்கு பதிலாக) புதியதோர் படைப்பைக் கொண்டு வருவான்."},{"id":20,"translation":"மேலும், இது அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை."},{"id":21,"translation":"மேலும், (மறுமையில்) அல்லாஹ்விற்கு முன் அனைவரும் வெளிப்படுவார்கள். (தலைவர்கள் என) பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களை நோக்கி, “நிச்சயமாக நாங்கள் உங்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து எதையும் நீங்கள் (இப்போது) எங்களை விட்டு தடுப்பீர்களா?” என்று (அவர்களை பின்பற்றிய) பலவீனர்கள் கூறுவார்கள். “(தண்டனையிலிருந்து தப்பிக்க) அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்டினால் நாங்களும் உங்களுக்கு வழிகாட்டுவோம். (தண்டனையைப் பற்றி) நாம் பதட்டப்பட்டால் என்ன? அல்லது, நாம் (அதை சகித்துக் கொண்டு) பொறுமையாக இருந்தால் என்ன? எல்லாம் நமக்கு சமமே. (இதிலிருந்து) தப்புமிடம் நமக்கு அறவே இல்லை!” என்று (தலைவர்கள்) கூறுவார்கள்."},{"id":22,"translation":"மேலும், காரியங்கள் (தீர்ப்புக் கூறி) முடிக்கப்பட்டபோது ஷைத்தான் கூறுவான்: “நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்கை வாக்களித்தான். இன்னும், நான் உங்களுக்கு வாக்களித்தேன். ஆனால், நான் உங்களை வஞ்சித்தேன். இன்னும், உங்கள் மீது எனக்கு அறவே அதிகாரம் ஏதும் இருக்கவில்லை. எனினும், உங்களை (பாவத்தின் பக்கம்) அழைத்தேன்; எனக்கு நீங்கள் பதில் தந்தீர்கள்; ஆகவே, என்னை நிந்திக்காதீர்கள்; உங்களையே நிந்தித்து கொள்ளுங்கள். நான் உங்களுக்கு உதவுபவனாக இல்லை, நீங்களும் எனக்கு உதவுபவர்களாக இல்லை. முன்னரே நீங்கள் என்னை (அல்லாஹ்விற்கு) இணை ஆக்கியதையும் நிச்சயமாக நான் நிராகரித்தேன். நிச்சயமாக அநியாயக்காரர்கள், - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.”"},{"id":23,"translation":"(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களில் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் தங்கள் இறைவனின் அனுமதிப்படி அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அதில் அவர்களின் முகமன் ஸலாம் ஆகும்."},{"id":24,"translation":"(நபியே! ‘கலிமதுத் தவ்ஹீத்’ என்னும்) நல்லதொரு வாக்கியத்திற்கு அல்லாஹ் எவ்வாறு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? அது ஒரு நல்ல மரத்தை போன்றாகும். அ(ந்)த (மரத்தி)ன் வேர் உறுதியானதும்; அதன் கிளை (உயரமாக) வானத்திலும் இருக்கிறது."},{"id":25,"translation":"அது தன் இறைவனின் அனுமதியினால் எல்லாக் காலத்திலும் தன் கனிகளைக் கொடுக்கிறது. மனிதர்களுக்கு, - அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக - அல்லாஹ் உதாரணங்களை விவரிக்கிறான்."},{"id":26,"translation":"(நிராகரிப்பவர்களின்) கெட்ட வாசகத்திற்கு உதாரணம் ஒரு கெட்ட மரத்தை போன்றாகும். அ(ந்த மரமான)து பூமியின் மேலிருந்து அறுபட்டு விட்டது. அதற்கு அறவே நிலைத்தன்மை இல்லை."},{"id":27,"translation":"நம்பிக்கை கொண்டவர்களை உலக வாழ்க்கையிலும் மறுமையிலும், (லாயிலாஹ இல்லல்லாஹ் எனும்) உறுதியான சொல்லைக் கொண்டு அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். இன்னும், அநியாயக்காரர்களை அல்லாஹ் வழிகெடுக்கிறான்; இன்னும், அல்லாஹ், தான் நாடுவதைச் செய்கிறான்."},{"id":28,"translation":"(நபியே!) அல்லாஹ்வின் அருளை நிராகரிப்பாக மாற்றி, தங்கள் சமுதாயத்தை அழிவு இல்லத்தில் தங்கவைத்தவர்களை நீர் பார்க்கவில்லையா?"},{"id":29,"translation":"அதுதான் நரகமாகும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள்; இன்னும், அது தங்குமிடத்தால் மிகக் கெட்டதாகும்."},{"id":30,"translation":"இன்னும், அவர்கள் அல்லாஹ்விற்கு (பல) இணை (தெய்வங்)களை ஏற்படுத்தினர். (அதன்) நோக்கம், அவனுடைய பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதாகும். (நபியே!) கூறுவீராக! “(இவ்வுலகில்) நீங்கள் சுகமனுபவியுங்கள். நிச்சயமாக உங்கள் மீளுமிடம் நரகத்தின் பக்கம்தான்.”"},{"id":31,"translation":"(நபியே! என் மீது) நம்பிக்கைகொண்ட என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தட்டும்; இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் தர்மம் செய்யட்டும் ஒரு நாள் வருவதற்கு முன்னதாக. அந்நாளில் கொடுக்கல் வாங்கலும் நட்பும் இருக்காது.”"},{"id":32,"translation":"அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் படைத்தான்; இன்னும், வானத்தில் இருந்து மழையை இறக்கி, அதன் மூலம் உங்களுக்கு உணவாக கனிகளில் (பலவற்றை) வெளிப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு கப்பலை அவனுடைய கட்டளையினால் கடலில் செல்வதற்காக வசப்படுத்தினான்; இன்னும், உங்களுக்கு ஆறுகளை (நீங்கள் அவற்றிலிருந்து பயனடைவதற்காக) வசப்படுத்தி கொடுத்தான்."},{"id":33,"translation":"இன்னும், (அவன்) உங்களுக்கு சூரியனையும் சந்திரனையும் தொடர்ந்து இயங்கக்கூடியதாக வசப்படுத்தி கொடுத்தான். இன்னும், இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தி கொடுத்தான்."},{"id":34,"translation":"இன்னும், நீங்கள் அவனிடம் கேட்ட எல்லாவற்றிலிருந்தும் உங்களுக்கு அவன் கொடுத்தான். மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க முடியாது! நிச்சயமாக (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாத) மனிதன் மகா அநியாயக்காரன், மிக நன்றி கெட்டவன் ஆவான்."},{"id":35,"translation":"“என் இறைவா! இவ்வூரை பாதுகாப்புமிக்கதாக ஆக்கு! மேலும், என்னையும் என் பிள்ளைகளையும் சிலைகளை நாங்கள் வணங்குவதை விட்டும் தூரமாக்கி வை!” என்று இப்ராஹீம் பிரார்த்தனை செய்ததை நினைவு கூர்வீராக!"},{"id":36,"translation":"“என் இறைவா! நிச்சயமாக இவை மக்களில் பலரை வழி கெடுத்தன. ஆகவே, எவர் என்னைப் பின்பற்றினாரோ நிச்சயமாக அவர் என்னை சேர்ந்தவர்; மேலும், எவர் எனக்கு மாறு செய்தாரோ, நிச்சயமாக நீ மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.”"},{"id":37,"translation":"“எங்கள் இறைவா! நிச்சயமாக நான் என் சந்ததிகளில் சிலரை விளைச்சல் இல்லாத ஒரு பள்ளத்தாக்கில், புனிதமான உன் வீட்டின் அருகில் தங்க வைத்தேன். எங்கள் இறைவா! அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவதற்கு அவர்களுக்கு அருள் புரி! எங்கள் இறைவா! ஆகவே, மக்களின் உள்ளங்களை அவர்கள் பக்கம் ஆசைப்படக்கூடியதாக ஆக்கு! இன்னும், அவர்கள் (உனக்கு) நன்றி செலுத்துவதற்காக கனிகளிலிருந்து அவர்களுக்கு உணவளி!”"},{"id":38,"translation":"“எங்கள் இறைவா! நாங்கள் மறைப்பதையும், நாங்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக நீ நன்கறிவாய். பூமியிலும் வானத்திலும் எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்ததாக இல்லை.”"},{"id":39,"translation":"“வயோதிகத்தில் எனக்கு இஸ்மாயீலையும் இஸ்ஹாக்கையும் வழங்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியதாகும். நிச்சயமாக என் இறைவன் பிரார்த்தனையை நன்கு செவியுறுபவன் ஆவான்.”"},{"id":40,"translation":"“என் இறைவா! என்னை தொழுகையை நிலைநிறுத்துபவனாக ஆக்கு! இன்னும் என் சந்ததிகளிலும் தொழுகையை நிலைநிறுத்துபவர்களை ஏற்படுத்து!. எங்கள் இறைவா! இன்னும், என் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்!”"},{"id":41,"translation":"“எங்கள் இறைவா! விசாரணை நடக்கின்ற நாளில் எனக்கும், என் தாய் தந்தைக்கும், நம்பிக்கையாளர்களுக்கும் மன்னிப்பளி!”"},{"id":42,"translation":"(நபியே!) அக்கிரமக்காரர்கள் செய்வதை கவனிக்காதவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று எண்ணி விடாதீர்! அவன் அவர்களை (தண்டிக்காமல்) தாமதிப்பதெல்லாம் ஒரு நாளுக்காகத்தான். பார்வைகள் அதில் கூர்ந்து விழித்திடும்."},{"id":43,"translation":"(அந்நாளில் அந்த அநியாயக்காரர்கள்) விரைந்தவர்களாக, தங்கள் தலைகளை உயர்த்தியவர்களாக வருவர். அவர்களின் பார்வை அவர்களிடம் திரும்பாது; மேலும், அவர்களுடைய உள்ளங்கள் (பயத்தால்) வெற்றிடமாக ஆகிவிடும்."},{"id":44,"translation":"(நபியே!) மேலும், மக்களை அவர்களுக்கு தண்டனை வரும் ஒரு நாளைப் பற்றி அச்சமூட்டி எச்சரிப்பீராக! ஆக, (அந்நாளில்) அநியாயக்காரர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! சமீபமான ஒரு தவணை (வரும்) வரை எங்களை (இன்னும்) பிற்படுத்து! நாங்கள் உன் அழைப்புக்கு பதிலளிப்போம்; இன்னும், தூதர்களைப் பின்பற்றுவோம்.” (இறைவன் கூறுவான்:) “உங்களுக்கு (உலகத்தில்) அழிவே இல்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்(து மறுமையை நம்பா)திருக்கவில்லையா?”"},{"id":45,"translation":"“இன்னும், நீங்கள் தங்களுக்கு தாமே தீங்கிழைத்தவர்களுடைய வசிப்பிடங்களில் வசித்துக் கொண்டிருந்தீர்கள் அல்லவா? மேலும், நாம் அவர்களுக்கு எப்படி செய்தோம் என்பது உங்களுக்கு தெளிவாக தெரிந்து இருந்தது. இன்னும், உங்களுக்கு உதாரணங்களை விவரித்தோம்.”"},{"id":46,"translation":"மேலும், திட்டமாக அவர்கள் தங்கள் சூழ்ச்சியை செய்(து முடித்)தனர். அல்லாஹ்விடம் அவர்களுடைய சூழ்ச்சி அறியப்பட்டதாக இருக்கிறது. அவர்களுடைய சூழ்ச்சி, அதனால் மலைகள் பெயர்த்துவிடும்படி இருந்தாலும் சரியே! (அல்லாஹ்வின் வல்லமைக்கு முன் அது ஒன்றுமே இல்லை.)"},{"id":47,"translation":"ஆக, (நபியே!) அல்லாஹ் தனது தூதர்களு(க்கு அளித்த அவனு)டைய வாக்கை மீறக்கூடியவன் என்று ஒருபோதும் நீர் நினைத்து விடாதீர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், பழிவாங்குபவன் ஆவான்."},{"id":48,"translation":"பூமி வேறு பூமியாகவும் வானங்களும் (வேறு வானங்களாக) மாற்றப்பட்டு, ஒரே ஒருவனான, அடக்கி ஆளுபவனான அல்லாஹ்விற்கு (முன்) அவர்கள் வெளிப்படும் நாளில் (அவன் அநியாயக்காரர்களிடம் பழிவாங்குவான்)."},{"id":49,"translation":"மேலும், அந்நாளில் குற்றவாளிகளை சங்கிலிகளில் கட்டப்பட்டவர்களாக காண்பீர்."},{"id":50,"translation":"அவர்களுடைய சட்டைகள் தாரினால் ஆனவையாக இருக்கும். இன்னும், அவர்களுடைய முகங்களை நரக நெருப்பு சூழ்ந்து விடும்."},{"id":51,"translation":"ஒவ்வொரு ஆன்மாவுக்கும், - அது செய்தவற்றின் கூலியை அல்லாஹ் கொடுப்பதற்காகவே (மறுமை நாளை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்). நிச்சயமாக அல்லாஹ் (தனது அடியார்களை) விசாரி(த்து கூலி கொடு)ப்பதில் மிகத் தீவிரமானவன்."},{"id":52,"translation":"இ(வ்வேதமான)து, மக்களுக்கு எடுத்துச் சொல்லப்படும் செய்தியாகும். இதன் மூலம் அவர்கள் எச்சரிக்கப்படுவதற்காகவும்; இன்னும், அவன்தான் வணக்கத்திற்குரிய ஒரே இறைவனாக இருக்கிறான் என்பதை அவர்கள் அறிவதற்காகவும்; இன்னும், நிறைவான அறிவுடையவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (இவ்வேதத்தை தன் தூதருக்கு அவன் இறக்கினான்)."}]},{"id":15,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் றா. (நபியே!) இவை, (முந்திய) வேதங்களுடைய; இன்னும், தெளிவான குர்ஆனுடைய வசனங்களாகும்."},{"id":2,"translation":"நிராகரித்தவர்கள், தாங்கள் முஸ்லிம்களாக இருந்திருக்க வேண்டுமே! என்று (மறுமையில்) பெரிதும் ஆசைப்படுவார்கள்."},{"id":3,"translation":"(நபியே!) அவர்களை விடுவீராக! அவர்கள் உண்ணட்டும்; இன்னும், அவர்கள் சுகம் அனுபவிக்கட்டும்; மேலும். அவர்களுடைய ஆசைகள் (மறுமையை விட்டும்) அவர்களை திசை திருப்பட்டும். ஆக, (அவர்கள் தங்களது கெட்ட முடிவை) விரைவில் அறிவார்கள்."},{"id":4,"translation":"எந்த ஓர் ஊரையும் அதற்கென குறிப்பிட்ட ஒரு தவணை இருந்தே தவிர நாம் (உடனே அதை) அழிக்கவில்லை."},{"id":5,"translation":"எந்த ஒரு சமுதாயமும் தங்களது தவணையை முந்தவும் மாட்டார்கள்; பிந்தவும் மாட்டார்கள்."},{"id":6,"translation":"மேலும், (உம்மை நோக்கி) “ஓ அறிவுரை (நிறைந்த குர்ஆன்) இறக்கப்பட்டவரே! நிச்சயமாக நீர் பைத்தியக்காரர்தான்” என்று கூறுகிறார்கள்."},{"id":7,"translation":"“நீர் உண்மையாளர்களில் ஒருவராக இருந்தால், நம்மிடம் (உமக்கு சாட்சிகளாக) வானவர்களை நீர் கொண்டு வரலாமே?”"},{"id":8,"translation":"உண்மை(யான தண்டனை)யைக் கொண்டே தவிர வானவர்களை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம். மேலும், (அப்படி இறக்கி, அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) அப்போது அவர்கள் அவகாசம் கொடுக்கப்பட்டவர்களாக இருக்கமாட்டார்கள்."},{"id":9,"translation":"நிச்சயமாக நாம்தான் இந்த அறிவுரையை (உம்மீது) இறக்கினோம். இன்னும், நிச்சயமாக நாம் அதை பாதுகாப்பவர்கள் ஆவோம்."},{"id":10,"translation":"(நபியே!) உமக்கு முன்பு முன்னோர்களின் (பல) பிரிவுகளில் திட்ட வட்டமாக (பல தூதர்களை) அனுப்பினோம்."},{"id":11,"translation":"அவர்களிடம் எந்த ஒரு (இறைத்) தூதரும் வருவதில்லை, அவரை அவர்கள் கேலி செய்பவர்களாக இருந்தே தவிர."},{"id":12,"translation":"(முன்னர் நாம் எப்படி செய்தோமோ) அதுபோன்றே, அ(ந்த நிராகரிப்பு தனத்)தை (இந்த) குற்றவாளிகளின் உள்ளங்களிலும் புகுத்துகிறோம்."},{"id":13,"translation":"(ஆகவே,) அவர்கள் இவரை நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். மேலும், முன்னோரின் வழிமுறை திட்டமாக சென்றுவிட்டது. (அவர்களைப் போலவே இவர்களும் அழிந்து போவார்கள்.)"},{"id":14,"translation":"அவர்கள் மீது வானத்திலிருந்து ஒரு வாசலை நாம் திறந்து, அதில் பகல் நேரத்தில் அவர்கள் ஏறினாலும்,"},{"id":15,"translation":"அவர்கள் (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். மாறாக), “எங்கள் கண்கள் நிச்சயம் மயக்கப்பட்டு விட்டன; மாறாக, நாங்கள் மந்திரம் செய்யப்பட்ட மக்களாக ஆகிவிட்டோம்” என்றே கூறுவார்கள்."},{"id":16,"translation":"திட்டவட்டமாக வானத்தில் பெரிய நட்சத்திரங்களை அமைத்து, பார்ப்பவர்களுக்கு அதை அலங்கரித்தோம்."},{"id":17,"translation":"இன்னும், விரட்டப்பட்ட எல்லா ஷைத்தான்களை விட்டும் அ(ந்த வானத்)தைப் பாதுகாத்தோம்."},{"id":18,"translation":"எனினும், எவன் ஒட்டுக் கேட்பானோ, அவனை பிரகாசமான எரி நட்சத்திரம் பின் தொடரும்."},{"id":19,"translation":"இன்னும், பூமி - அதை நாம் விரித்தோம்; மேலும், அதில் அசையாத மலைகளை நிறுவினோம்; மேலும், அதில் (நிறுவையில்) நிறுக்கப்படும் (அளவையில் அளக்கப்படும்) எல்லா வகையான உணவுகளையும் முளைக்க வைத்தோம்."},{"id":20,"translation":"இன்னும், அதில் உங்களுக்கும், மேலும், எவர்களுக்கு நீங்கள் உணவளிப்பவர்களாக இல்லையோ அவர்களுக்கும் (நாம்தான்) வாழ்வாதாரங்களை அமைத்(து கொடுத்)தோம்."},{"id":21,"translation":"எப்பொருளும் இல்லை, அதன் பொக்கிஷங்கள் நம்மிடம் இருந்தே தவிர. மேலும், குறிப்பிடப்பட்ட ஓர் அளவிலே தவிர அதை நாம் (பூமிக்கு) இறக்க மாட்டோம்."},{"id":22,"translation":"(மேகத்தை) கருக்கொள்ள வைக்கக்கூடிய காற்றுகளை அனுப்புகிறோம். ஆக, அம்மேகத்திலிருந்து மழை நீரை இறக்கி, அதை உங்களுக்கு நீர் புகட்டுகிறோம். மேலும், அதை நீங்கள் சேகரிப்பவர்களாக இல்லை. (நாமே அதை உங்களுக்காக பூமியில் சேகரித்து வைக்கிறோம்.)"},{"id":23,"translation":"நிச்சயமாக நாம்தான் உயிர் கொடுக்கிறோம்; இன்னும், மரணிக்க வைக்கிறோம். மேலும், நாமே (அனைத்திற்கும்) வாரிசுகள் (-இறுதி உரிமையாளர்கள்) ஆவோம்!"},{"id":24,"translation":"திட்டவட்டமாக உங்களில் முன் சென்றவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்; இன்னும், (உங்களில்) பின் வருபவர்களையும் நாம் அறிந்திருக்கிறோம்."},{"id":25,"translation":"இன்னும், (நபியே!) நிச்சயமாக உம் இறைவன்தான் இவர்களை (எல்லாம் மறுமையில் உயிர்ப்பித்து) ஒன்று திரட்டுவான். நிச்சயமாக அவன் மகா ஞானவான், நன்கறிந்தவன்."},{"id":26,"translation":"மேலும், திட்டவட்டமாக பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைத்தோம்."},{"id":27,"translation":"இன்னும், (மனிதனைப் படைப்பதற்கு) முன்பே ஜின்களைக் கொடிய உஷ்ணமுள்ள நெருப்பிலிருந்து படைத்தோம்."},{"id":28,"translation":"மேலும், (நபியே!) நிச்சயமாக நான், பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து மனிதனைப் படைக்கப்போகிறேன்” என்று உம் இறைவன் வானவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருவீராக!"},{"id":29,"translation":"ஆக, “நான் அவரை செம்மைபடுத்தி, அவரி(ன் உடலி)ல் நான் படைத்த உயிரிலிருந்து ஊதினால் அவருக்கு (முன்) சிரம் பணிந்தவர்களாக விழுங்கள்!” (என்று வானத்தில் உள்ளோருக்கு நாம் கட்டளையிட்டோம்.)"},{"id":30,"translation":"ஆக, (அவ்வாறே) வானவர்கள் எல்லோரும், அனைவரும் சிரம் பணிந்தார்கள்,"},{"id":31,"translation":"இப்லீஸைத் தவிர. சிரம் பணிந்தவர்களுடன் ஆகுவதற்கு அவன் மறுத்(து பிடிவாதம் பிடித்)தான்."},{"id":32,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடன் நீ(யும் சிரம் பணிந்தவனாக) ஆகாமல் இருக்க உனக்கென்ன நேர்ந்தது?”"},{"id":33,"translation":"(இப்லீஸ்) கூறினான்: “பிசுபிசுப்பான களிமண்ணிலிருந்து, (பின்னர் அது காய்ந்தால்) ‘கன் கன்’ என்று சப்தம் வரக்கூடிய (அத்தகைய) களிமண்ணிலிருந்து நீ படைத்த ஒரு மனிதனுக்கு (நெருப்பிலிருந்து படைக்கப்பட்டவனாகிய) நான் சிரம் பணிவது எனக்கு சரி இல்லை. (அது என்னால் முடியாது!)”"},{"id":34,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “ஆக, இதிலிருந்து நீ வெளியேறு. நிச்சயமாக நீ விரட்டப்பட்டவன்.”"},{"id":35,"translation":"“இன்னும், நிச்சயமாக உன் மீது (எனது) சாபம், கூலி (கொடுக்கப்படும்) நாள் வரை உண்டாகட்டும்!”"},{"id":36,"translation":"(இப்லீஸ்) கூறினான்: “ஆக, என் இறைவா! (இறந்தவர்கள்) எழுப்பப்படும் நாள் (வரும்) வரை எனக்கு நீ அவகாசமளி!”"},{"id":37,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “ஆக, நிச்சயமாக நீ அவகாசமளிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டாய்,”"},{"id":38,"translation":"“(தீர்ப்புக்காக) குறிப்பிடப்பட்ட நேரத்தின் (அந்த மறுமை) நாள் (வருகின்ற) வரை.”"},{"id":39,"translation":"(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! என்னை நீ வழிகெடுத்ததன் காரணமாக பூமியில் (அசிங்கமான செயல்களை) அவர்களுக்கு நிச்சயமாக நான் அலங்கரிப்பேன்; இன்னும், நிச்சயமாக அவர்கள் அனைவரையும் நான் வழிகெடு(க்க முயற்சி)ப்பேன்,”"},{"id":40,"translation":"“அவர்களில் (மனத்தூய்மையுடன் உன்னை மட்டும் வணங்குகின்ற) பரிசுத்தமான உன் அடியார்களைத் தவிர.”"},{"id":41,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “இது என் பக்கம் சேர்ப்பிக்கின்ற நேரான வழியாகும்.”"},{"id":42,"translation":"“நிச்சயமாக என் அடியார்கள் - அவர்கள் மீது உனக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. எனினும், உன்னைப் பின்பற்றுகின்ற வழிகெட்டவர்களைத் தவிர. (அவர்களைத்தான் நீ வழிகெடுப்பாய்.)”"},{"id":43,"translation":"“மேலும், நிச்சயமாக நரகம் (வழிகெடுத்தவனாகிய உனக்கும், வழிகெட்டவர்களாகிய) அவர்கள் அனைவருக்கும் வாக்களிக்கப்பட்ட இடமாகும்.”"},{"id":44,"translation":"அதற்கு ஏழு வாசல்கள் உண்டு. ஒவ்வொரு வாசலுக்கும் அவர்களில் (தனியாக) பிரி(த்து ஒது)க்கப்பட்ட ஒரு பிரிவினர் உண்டு."},{"id":45,"translation":"நிச்சயமாக, அல்லாஹ்வை அஞ்சியவர்கள் சொர்க்கங்களிலும் (அவற்றில் உள்ள) நீரருவிகளிலும் இருப்பார்கள்."},{"id":46,"translation":"“நீங்கள், ஸலாம் (என்ற முகமன்) உடன் அச்சமற்றவர்களாக அதில் நுழையுங்கள்!” (என்று அவர்களுக்கு கூறப்படும்)."},{"id":47,"translation":"மேலும், அவர்களுடைய நெஞ்சங்களில் இருந்த குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். (அவர்கள் அங்கு) சகோதரர்களாக, ஒருவர் ஒருவரை முகம் நோக்கியவர்களாக கட்டில்கள் மீது (சாய்ந்து பேசிக்கொண்டு) இருப்பார்கள்."},{"id":48,"translation":"அவர்களுக்கு அதில் சிரமம் ஏதும் ஏற்படாது. இன்னும், அதிலிருந்து அவர்கள் வெளியேற்றப்படுபவர்களாக இல்லை."},{"id":49,"translation":"(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.”"},{"id":50,"translation":"“இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!”"},{"id":51,"translation":"மேலும், (நபியே!) இப்ராஹீமுடைய விருந்தாளிகள் பற்றி அவர்களுக்கு அறிவிப்பீராக."},{"id":52,"translation":"அவர்கள் அவரிடம் நுழைந்த சமயத்தில் (நடந்த நிகழ்வை கூறுவீராக). ஆக, அவர்கள், “ஸலாம்” (ஈடேற்றம் உண்டாகுக!) என்று (முகமன்) கூறினார்கள். (இப்ராஹீம்) கூறினார்: ‘‘நிச்சயமாக நாங்கள் உங்களைப் பற்றி அச்சப்படுகிறோம்.”"},{"id":53,"translation":"அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர். நிச்சயமாக நாம் உமக்கு (மார்க்கத்தை) அதிகம் அறிந்த ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறோம்.”"},{"id":54,"translation":"அவர் கூறினார்: “எனக்கு முதுமை ஏற்பட்டிருக்க, எனக்கு நற்செய்தி கூறுகிறீர்களா? ஆக, எந்த அடிப்படையில் (இப்படி) நற்செய்தி கூறுகிறீர்கள்?”"},{"id":55,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உமக்கு உண்மை(யான செய்தி)யைக் கொண்டு(தான்) நற்செய்தி கூறினோம். ஆகவே, அவநம்பிக்கையாளர்களில் ஆகிவிடாதீர்” என்று கூறினார்கள்."},{"id":56,"translation":"அவர் கூறினார்: “வழிகெட்டவர்களைத் தவிர தன் இறைவனின் அருளில் யார் அவநம்பிக்கை கொள்வார்?”"},{"id":57,"translation":"அவர் கூறினார்: “ஆக, (வானவத்) தூதர்களே! (நீங்கள் அனுப்பப்பட்ட) உங்கள் காரியமென்ன?”"},{"id":58,"translation":"அவர்கள் கூறினார்கள்: “குற்றவாளிகளான மக்களிடம் (அவர்களை அழிக்க) நிச்சயமாக நாங்கள் அனுப்பப்பட்டோம்.”"},{"id":59,"translation":"“(எனினும்,) லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர. நிச்சயமாக நாங்கள் அவர்கள் அனைவரையும் பாதுகாப்போம்.”"},{"id":60,"translation":"“(எனினும்,) அவருடைய மனைவியைத் தவிர. நிச்சயமாக அவள் (அந்தப் பாவிகளுடன் தண்டனையில்) தங்கிவிடுபவர்களில் இருப்பார் என்று (அல்லாஹ்வின் கட்டளையின்படி) நாங்கள் முடிவு செய்தோம்.”"},{"id":61,"translation":"ஆக, (வானவத்) தூதர்கள் லூத்துடைய குடும்பத்தாரிடம் வந்தபோது,"},{"id":62,"translation":"அவர் கூறினார்: “நிச்சயமாக நீங்கள் அறிமுகமற்ற கூட்டமாகும்!”"},{"id":63,"translation":"அவர்கள் கூறினார்கள்: “மாறாக! (உம் மக்களாகிய) இவர்கள் சந்தேகித்துக் கொண்டிருந்ததை (-அல்லாஹ்வின் தண்டனையை) உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்.”"},{"id":64,"translation":"“இன்னும், உம்மிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக நாம் உண்மையாளர்கள்தான்.”"},{"id":65,"translation":"“ஆகவே, (இன்றைய) இரவின் ஒரு பகுதியில் உம் குடும்பத்தினருடன் செல்வீராக; மேலும் நீர் அவர்களுக்குப் பின்னால் (அவர்களை) பின்பற்றி செல்வீராக; மேலும், உங்களில் ஒருவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்; இன்னும், நீங்கள் ஏவப்பட்ட இடத்தை நோக்கி (இதே நிலையில்) சென்று கொண்டே இருங்கள்.”"},{"id":66,"translation":"“நிச்சயமாக இவர்களின் வேர், (இவர்கள்) பொழுது விடிந்தவர்களாக காலையில் இருக்கும்போது துண்டிக்கப்படும்” என்று (அவர்களின்) காரியத்தை முடிவு செய்து அவருக்கு அறிவித்தோம்."},{"id":67,"translation":"மேலும், அந்நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தவர்களாக (லூத் நபியிடம்) வந்தார்கள்."},{"id":68,"translation":"(லூத்) கூறினார்: “நிச்சயமாக இவர்கள் என் விருந்தினர். ஆகவே, (அவர்கள் விஷயத்தில்) என்னை அவமானப்படுத்தாதீர்கள்.”"},{"id":69,"translation":"“மேலும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்; இன்னும், என்னை இழிவு படுத்தாதீர்கள்”"},{"id":70,"translation":"அவர்கள் கூறினார்கள்: “(வேறு ஊர்) மக்களை (விருந்துக்கு அழைப்பதை) விட்டும் நாம் உம்மைத் தடுக்கவில்லையா.”"},{"id":71,"translation":"லூத் கூறினார்: “(இதோ!) இவர்கள் என் (ஊரில் உள்ள) பெண் பிள்ளைகள் ஆவார்கள். நீங்கள் (நான் ஏவுவதை) செய்பவர்களாக இருந்தால் (இவர்களை முறைப்படி திருமணம் செய்து உங்கள் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்).”"},{"id":72,"translation":"(நபியே!) உம் வாழ்க்கையின் மீது சத்தியம்! நிச்சயமாக இவர்கள் (-சிலை வணங்கிகள்) தங்கள் மயக்கத்தில் (வழிகேட்டில் கடுமையாக) தடுமாறுகிறார்கள்."},{"id":73,"translation":"ஆகவே, (லூத் நபியின் ஊர் மக்கள் காலையில் சூரிய) வெளிச்சமடைந்தவர்களாக இருக்கும்போது அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது."},{"id":74,"translation":"ஆக, அதன் மேல் புறத்தை அதன் கீழ்புறமாக (தலைகீழாக) ஆக்கினோம். இன்னும், அவர்கள் மீது கெட்டியான களிமண்ணினால் ஆன கல்லை (மழையாக)ப் பொழிந்தோம்;"},{"id":75,"translation":"படிப்பினை பெறுகின்ற நுண்ணறிவாளர்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் (பல) இருக்கின்றன."},{"id":76,"translation":"இன்னும், நிச்சயமாக அது (அவர்கள் சென்று வருகின்ற) நிலையான, (தெளிவான பார்க்கும்படியான) பாதையில்தான் (அழியாமல் இன்றும்) இருக்கிறது."},{"id":77,"translation":"நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக அதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது."},{"id":78,"translation":"மேலும், நிச்சயமாக (ஷுஐபுடைய மக்களாகிய) அடர்த்தியான தோப்புடையவர்கள் அநியாயக்காரர்களாகவே இருந்தார்கள்."},{"id":79,"translation":"ஆகவே, அவர்களை பழி வாங்கினோம். இன்னும், அவ்விரண்டு (ஊர்களு)ம் தெளிவான பாதையில்தான் உள்ளன."},{"id":80,"translation":"மேலும், (ஹூத் நபியின் சமுதாயமாகிய) ‘ஹிஜ்ர்’வாசிகள் தூதர்களைத் திட்டவட்டமாக பொய்ப்பித்தார்கள்."},{"id":81,"translation":"இன்னும், அவர்களுக்கு நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆனால், அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாக இருந்தனர்."},{"id":82,"translation":"மேலும், அச்சமற்றவர்களாக, மலைகளில் வீடுகளைக் குடைந்து (வாழ்ந்து) கொண்டிருந்தனர்."},{"id":83,"translation":"ஆக, (அவர்கள்) பொழுது விடிந்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை பயங்கரமான சப்தம் பிடித்தது."},{"id":84,"translation":"ஆக, அவர்கள் (தங்களை பாதுகாக்க) செய்து கொண்டிருந்தவை (எதுவும்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை."},{"id":85,"translation":"மேலும், வானங்களையும் பூமியையும், அவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றையும் உண்மையான நோக்கத்திற்காகவே தவிர நாம் படைக்கவில்லை. இன்னும், நிச்சயமாக மறுமை வரக்கூடியதே! ஆகவே, அழகிய புறக்கணிப்பாக (அவர்களை) புறக்கணிப்பீராக."},{"id":86,"translation":"நிச்சயமாக உம் இறைவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன்."},{"id":87,"translation":"இன்னும், (நபியே!) மீண்டும் மீண்டும் ஓதப்படும் ஏழு வசனங்களையும், மகத்துவமிக்க குர்ஆனையும் திட்டவட்டமாக உமக்கு நாம் கொடுத்தோம்."},{"id":88,"translation":"இவர்களில் சில வகையினர்களுக்கு (இவ்வுலகில்) நாம் கொடுத்த சுகபோகங்கள் பக்கம் உம் இரு கண்களையும் கண்டிப்பாக நீட்டாதீர்! (அவற்றின் மீது ஆசைப்படாதீர்!) இன்னும், அவர்கள் மீது கவலைப்படாதீர். இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு உம் புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் மென்மையாக, பணிவுடன் நடப்பீராக!)."},{"id":89,"translation":"இன்னும், “நிச்சயமாக நான்தான் தெளிவான எச்சரிப்பாளன்” என்று கூறுவீராக."},{"id":90,"translation":"(வேதத்தை) பிரித்தவர்கள் மீது நாம் (தண்டனையை) இறக்கியது போன்றே (இந்நிராகரிப்பாளர்கள் மீது தண்டனையை இறக்குவோம்)."},{"id":91,"translation":"அவர்கள் குர்ஆனைப் (பற்றி அது சூனியம், அது கவிதை, அது குறி கூறும் வாசகம் என்று வர்ணித்து அதைப்) பல வகைகளாக ஆக்கினார்கள்."},{"id":92,"translation":"ஆகவே, உம் இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக அவர்கள் அனைவரிடமும் நாம் விசாரிப்போம்,"},{"id":93,"translation":"அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி."},{"id":94,"translation":"ஆகவே, (நபியே!) உமக்கு ஏவப்படுவதை மிகத் தெளிவாக பகிரங்கப்படுத்துவீராக. மேலும், இணைவைப்பவர்களைப் புறக்கணிப்பீராக."},{"id":95,"translation":"(நபியே! உம்மை) கேலிசெய்பவர்களிடமிருந்து நிச்சயமாக நாம் உம்மைப் பாதுகாப்போம்."},{"id":96,"translation":"அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு தெய்வத்தை ஏற்படுத்துகிறார்கள். ஆக, அவர்கள் (தங்கள் முடிவை) விரைவில் அறிவார்கள்."},{"id":97,"translation":"(நபியே!) நிச்சயமாக நீர் (உம்மைப் பற்றி) அவர்கள் (தரக் குறைவாக) கூறுவதால் உம் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிறது என்பதை திட்டவட்டமாக அறிவோம்."},{"id":98,"translation":"ஆகவே, உம் இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! இன்னும், (அவனுக்குச்) சிரம் பணிபவர்களில் ஆகிவிடுவீராக!"},{"id":99,"translation":"மேலும், உங்களுக்கு ‘யகீன்’ - நம்பிக்கை (எனும் மரணம்) வருகின்ற வரை உம் இறைவனை வணங்குவீராக!"}]},{"id":16,"verses":[{"id":1,"translation":"அல்லாஹ்வுடைய கட்டளை வந்தே தீரும்! அதை (உடனே கொண்டுவரும்படி கூறி) நீங்கள் அவசரப்படுத்தாதீர்கள். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் (-சிலை வணங்கிகள்) இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன்."},{"id":2,"translation":"அவன், தன் கட்டளைப்படி (வஹ்யி எனும்) உயிருடன், தன் அடியார்களில் தான் நாடுகின்றவர் மீது வானவர்களை இறக்குகிறான், “நிச்சயமாக என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை; ஆகவே, (என்னை வணங்கி, என்னை மட்டுமே) அஞ்சுங்கள்” என்று (தூதர்களே!) நீங்கள் எச்சரியுங்கள்."},{"id":3,"translation":"அவன் வானங்களையும் பூமியையும் உண்மையான நோக்கத்திற்கே படைத்தான். அவர்கள் இணைவைப்பதை விட்டும் அவன் முற்றிலும் உயர்ந்தவன்."},{"id":4,"translation":"இந்திரியத்திலிருந்து மனிதனைப் படைத்தான். ஆக, அவனோ (இறைவனுக்கு) வெளிப்படையான எதிரியாக இருக்கிறான்."},{"id":5,"translation":"மேலும், கால்நடைகள் - அவற்றை உங்களுக்காகப் படைத்தான். அவற்றில் உங்களுக்கு (குளிருக்கும் வெப்பத்திற்கும் இதமான) ஆடையும் இன்னும், பல பலன்களும் உள்ளன. இன்னும், அவற்றிலிருந்து நீங்கள் புசிக்கிறீர்கள்."},{"id":6,"translation":"இன்னும், நீங்கள் அவற்றை மாலையில் (இருப்பிடங்களுக்கு) ஓட்டி வரும் நேரத்திலும் (காலையில்) மேய்க்க ஓட்டிச் செல்லும் நேரத்திலும் அவற்றில் உங்களுக்கு அழகு(ம் மகிழ்ச்சியும்) இருக்கிறது."},{"id":7,"translation":"மிகுந்த சிரமத்துடனே தவிர நீங்கள் சென்று அடைய முடியாத ஊருக்கு அவை (உங்களையும்) உங்கள் சுமைகளையும் சுமக்கின்றன. நிச்சயமாக உங்கள் இறைவன் பெரும் இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்."},{"id":8,"translation":"குதிரைகளை, கோவேறு கழுதைகளை, கழுதைகளை, அவற்றில் நீங்கள் வாகணிப்பதற்காகவும் (அவை உங்களுக்கு) அலங்காரமாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் படைத்தான்). இன்னும், நீங்கள் அறியாத (பல)வற்றை (அவன் உங்களுக்காக) படைப்பான்."},{"id":9,"translation":"நேர்வழி(யை தெளிவுபடுத்துவது) அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேலும், வழிகளில் (சில) கோணலானதும் இருக்கிறது. இன்னும், அவன் நாடினால் உங்கள் அனைவரையும் நேர்வழி நடத்தி இருப்பான்."},{"id":10,"translation":"அவன் மேகத்திலிருந்து மழை நீரை இறக்குகிறான். அதில் உங்களுக்கு குடிநீர் இருக்கிறது. இன்னும், அதிலிருந்து மரங்கள் (செடி கொடிகள், புற்பூண்டுகள்) முளைக்கின்றன. அவற்றில் (உங்கள் கால்நடைகளை) நீங்கள் மேய்க்கிறீர்கள்."},{"id":11,"translation":"அதன் மூலம் பயிர்களையும், ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரங்களையும், திராட்சைகளையும் இன்னும், எல்லா கனிவர்க்கங்களையும் அவன் உங்களுக்காக முளைக்க வைக்கிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் ஓர் அத்தாட்சி இருக்கிறது."},{"id":12,"translation":"இன்னும், அவன் இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் உங்களுக்கு வசப்படுத்தினான். மேலும், நட்சத்திரங்களும் அவனுடைய கட்டளையினால் (உங்களுக்கு) வசப்படுத்தப்பட்டவையாகும். சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இவற்றில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":13,"translation":"இன்னும், பூமியில் உங்களுக்காக மாறுபட்ட நிறங்களுடன் எவற்றை படைத்தானோ அவற்றையும் உங்களுக்காக வசப்படுத்தினான். நல்லுபதேசம் பெறுகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது."},{"id":14,"translation":"இன்னும், கடலிலிருந்து பசுமையான (மென்மையான) மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காகவும்; இன்னும், நீங்கள் அணிகிற ஆபரணங்களை அதிலிருந்து நீங்கள் வெளியெடுப்பதற்காகவும்; இன்னும், அவனுடைய அருளை நீங்கள் தேடி பயணிப்பதற்காகவும்; இன்னும், (இவற்றை எல்லாம் பெற்றதற்காக அவனுக்கு) நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (உங்களுக்கு) கடலை வசப்படுத்தி கொடுத்தான். இன்னும், அதில் கப்பல்களை – (அலைகளை) பிளந்து செல்பவையாக நீர் பார்க்கிறீர்."},{"id":15,"translation":"இன்னும், பூமியில் - அது உங்களை அசைத்துவிடாமல் இருப்பதற்காக மலைகளை ஊன்றினான். இன்னும், (உங்கள் நீர் தேவைகளுக்காக) நதிகளையும்; இன்னும், நீங்கள் (உங்கள் இலக்குகளை அடைய) சரியான வழியில் செல்வதற்காக பாதைகளையும் அவன் அமைத்(து கொடுத்)தான்."},{"id":16,"translation":"இன்னும், (பகலில் நீங்கள் செல்லும் திசைகளை அறிய மலைகள் போன்ற) பல அடையாளங்களை அமைத்தான். இன்னும், (இரவில் பயணம் செய்யும்போது) அவர்கள் நட்சத்திரங்கள் மூலம் பாதைகளை அறிகிறார்கள்."},{"id":17,"translation":"ஆக, (இவற்றை எல்லாம்) படைப்பவன், (எதையுமே) படைக்காதவன் போல் ஆவானா? (இருவரும் சமமானவர்களா?) ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற வேண்டாமா?"},{"id":18,"translation":"மேலும், அல்லாஹ்வின் அருளை நீங்கள் எண்ணினால் அதை நீங்கள் எண்ணி முடிக்க மாட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்."},{"id":19,"translation":"நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அல்லாஹ் நன்கறிவான்."},{"id":20,"translation":"மேலும், அல்லாஹ்வையன்றி எவர்களை இவர்கள் அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ (மனிதர்களால்) உருவாக்கப்படுகிறார்கள்."},{"id":21,"translation":"(அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுகின்ற இந்த சிலைகள்) இறந்தவர்கள்; உயிருள்ளவர்கள் அல்லர். இன்னும், (தாம்) எப்போது (மறுமையில்) எழுப்பப்படுவோம் என்பதை அவர்கள் அறியமாட்டார்கள்."},{"id":22,"translation":"(நீங்கள் வணங்கத்தகுதியான) உங்கள் இறைவன் ஒரே ஓர் இறைவன்தான். ஆக, எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுடைய உள்ளங்கள் (அந்த உண்மையான இறைவனை) நிராகரிக்கின்றன. இன்னும், அவர்கள் (உண்மையான இறைவனை ஏற்காமல்) பெருமையடிக்கிறார்கள்."},{"id":23,"translation":"நிச்சயமாக உண்மையில் அல்லாஹ் அவர்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான். நிச்சயமாக அவன் பெருமையடிப்பவர்களை நேசிக்கமாட்டான்."},{"id":24,"translation":"“மேலும், உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று அவர்களிடம் கூறப்பட்டால் “முன்னோரின் கட்டுக்கதைகள்” என்று கூறுகிறார்கள்."},{"id":25,"translation":"இதன் காரணமாக, மறுமை நாளில் அவர்கள் தங்கள் (பாவச்)சுமைகளை முழுமையாக சுமப்பார்கள். இன்னும், எவர்களை கல்வியின்றி இவர்கள் வழிகெடுத்தார்களோ அவர்களின் (பாவச்) சுமைகளிலிருந்தும் சுமப்பார்கள். அறிந்து கொள்ளுங்கள்! அவர்கள் சுமப்பது மிகக் கெட்டதாகும்."},{"id":26,"translation":"திட்டமாக இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (இவ்வாறே) சூழ்ச்சி செய்தனர். ஆகவே, அல்லாஹ் அவர்களின் கட்டடத்திற்கு அடித்தளங்களில் இருந்து (தண்டனையை கொண்டு) வந்தான். ஆக, அவர்களுக்கு மேலிருந்து (அவர்கள் எழுப்பிய மாளிகையின்) முகடு அவர்கள் மீது விழுந்தது. இன்னும், அவர்கள் அறியாத விதத்தில் (அல்லாஹ்வின்) தண்டனை அவர்களுக்கு வந்தது."},{"id":27,"translation":"பிறகு, மறுமை நாளில் (அல்லாஹ்) அவர்களை இழிவு படுத்துவான். இன்னும், “நீங்கள் எனக்கு இணைவைத்து வணங்கிய தெய்வங்கள் எங்கே? அவர்கள் விஷயத்தில் நீங்கள் (என்னிடம்) தர்க்கித்துக் கொண்டிருந்தீர்களே!” என்று கூறுவான். கல்வி கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக இன்று இழிவும், தண்டனையும் நிராகரிப்பவர்கள் மீதுதான் (நிகழும்).”"},{"id":28,"translation":"அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைத்தவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை வானவர்கள் உயிர் கைப்பற்றுகிறார்கள். ஆக, (அப்போது அவர்கள்) “தீமை எதையும் நாங்கள் செய்து கொண்டிருக்கவில்லை” (என்று கூறி) முற்றிலும் பணிந்து விடுவார்கள். “அவ்வாறல்ல! நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நன்கறிந்தவன்” (என்று வானவர்கள் பதிலளிப்பார்கள்)."},{"id":29,"translation":"ஆக, “நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள், அதில் நிரந்தரமாக தங்கி விடுங்கள்.” ஆக, பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டதாகும்."},{"id":30,"translation":"இறையச்சம் உள்ளவர்களிடம், “உங்கள் இறைவன் என்ன இறக்கினான்” என்று கூறப்பட்டது. “சிறந்ததை இறக்கினான்” என்று அவர்கள் கூறினார்கள். நல்லறம் புரிந்தவர்களுக்கு இந்த உலகில் அழகியது உண்டு. (அவர்களுக்குரிய) மறுமையின் இல்லமோ (இம்மையை விட அவர்களுக்கு) மிக மேலானதாகும். இன்னும், இறையச்சமுள்ளவர்களின் (மறுமை) இல்லமோ மிகச் சிறந்ததாகும்."},{"id":31,"translation":"அத்ன் (என்னும்) சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றில் அவர்கள் நுழைவார்கள். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்களுக்கு அதில் அவர்கள் நாடுவதெல்லாம் உண்டு. இவ்வாறுதான் அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுக்கு கூலி கொடுக்கிறான்."},{"id":32,"translation":"இறையச்சம் உள்ளவர்களோ நல்லவர்களாக இருக்கும் நிலையில் வானவர்கள் அவர்களை உயிர் கைப்பற்றுகிறார்கள். “ஸலாமுன் அலைக்கும் (உங்களுக்கு ஈடேற்றம் உண்டாகுக!) நீங்கள் (நற்செயல்) செய்து கொண்டிருந்ததின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள்” என்று (வானவர்கள் அவர்களிடம்) கூறுவார்கள்."},{"id":33,"translation":"வானவர்கள் தங்களிடம் வருவதை; அல்லது, உம் இறைவனின் கட்டளை வருவதைத் தவிர அவர்கள் (வேறு எதையும்) எதிர்பார்க்கிறார்களா? இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இவ்வாறே (அநியாயம்) செய்தனர். ஆனால், அல்லாஹ் அவர்களுக்கு தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்."},{"id":34,"translation":"ஆகவே, அவர்கள் செய்தவற்றின் தண்டனைகள் அவர்களை வந்தடைந்தன. இன்னும், அவர்கள் எதை கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களைச் சூழ்ந்து கொண்டது."},{"id":35,"translation":"இணைவைத்தவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் மூதாதைகளும் அவனையன்றி வேறு எதையும் வணங்கியிருக்க மாட்டோம்; இன்னும், அவனுடைய அனுமதி இன்றி எதையும் தடுக்கப்பட்டதாக ஆக்கியிருக்க மாட்டோம்.” இவ்வாறே, இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் (விதண்டாவாதம்) செய்தார்கள். ஆக, தூதர்கள் மீது தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர ஏதும் (பொறுப்பு) உண்டா?"},{"id":36,"translation":"“அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், ஷைத்தானை விட்டும் விலகுங்கள்” என்று (போதிப்பதற்காக) ஒவ்வொரு சமுதாயத்திலும் திட்டவட்டமாக ஒரு தூதரை அனுப்பினோம். ஆக, அல்லாஹ் நேர்வழி காட்டியவர்களும் அவர்களில் உண்டு. இன்னும், வழிகேடு உறுதியாகி விட்டவர்களும் அவர்களில் உண்டு. ஆக, பூமியில் பயணியுங்கள்; இன்னும், (நபிகளைப்) பொய்ப்பித்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பாருங்கள்."},{"id":37,"translation":"(நபியே!) அவர்கள் நேர்வழி காட்டப்படுவதின் மீது நீர் பேராசைப்பட்டாலும், (பிறரை) வழிகெடுப்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். இன்னும், உதவியாளர்கள் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள்."},{"id":38,"translation":"மேலும், “இறந்து போகிறவர்களை அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்ப மாட்டான்” என்று அல்லாஹ்வின் மீது இவர்கள் மிக உறுதியாக சத்தியம் செய்தனர். அவ்வாறன்று, (“இறந்தவர்களை எழுப்புதல்” என்பது) அவன் மீது கடமையான (சத்திய) வாக்காகும்! எனினும், மக்களில் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்."},{"id":39,"translation":"அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொள்கிறார்களோ அதை (அல்லாஹ்) அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும், நிராகரித்தவர்கள் நிச்சயமாக தாம் பொய்யர்களாக இருந்தோம் என்பதை அறிவதற்காகவும் (மறுமையில் அவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்)."},{"id":40,"translation":"நாம் ஒரு பொருளை (உருவாக்க) நாடினால், அதற்கு நாம் (கூறுகிற) கூற்றெல்லாம் “ஆகு!” என்று கூறுவதுதான். (உடனே அது) ஆகிவிடும்."},{"id":41,"translation":"இன்னும், எவர்கள் தங்களுக்கு அநீதியிழைக்கப்பட்ட பின்பு அல்லாஹ்விற்காக(த் தங்கள் ஊரை அல்லது தங்கள் நாட்டை) துறந்து சென்றார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம் இவ்வுலகில் அழகிய (இருப்பிடத்)தை அமை(த்து கொடுத்து அதில் வசிக்க வை)ப்போம். (அவர்களுக்குரிய) மறுமையின் கூலியோ (இதைவிட) மிகப் பெரியது. (இதை எல்லோரும்) அறிந்திருக்க வேண்டுமே!"},{"id":42,"translation":"அவர்கள் (சோதனைகளில்) பொறுமையாக இருந்தார்கள். இன்னும், தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)ப்பார்கள்."},{"id":43,"translation":"(நபியே!) உமக்கு முன்பு நாம் (தூதர்களாக மனித இனத்தை சேர்ந்த) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவிப்போம். ஆகவே, (இவர்களை நோக்கி,) “நீங்கள் (இதை) அறியாதவர்களாக இருந்தால் (உண்மையான இறை வேதத்தின்) ஞானமுடையவர்களைக் கேளுங்கள்” (என்று கூறுவீராக!)."},{"id":44,"translation":"அத்தாட்சிகளையும் வேதங்களையும் கொண்டு (அத்தூதர்களை அனுப்பினோம்). (இந்த) ஞானத்தை (நபியே!) உமக்கு இறக்கினோம், அம்மக்களுக்காக இறக்கப்பட்ட (இந்த ஞானத்)தை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும்; (அந்த ஞானத்தையும் நபியின் விளக்கத்தையும்) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும்!"},{"id":45,"translation":"ஆக, தீமைகளுக்கு சூழ்ச்சி செய்தவர்கள் தங்களை அல்லாஹ் பூமியில் சொருகிவிடுவான் என்பதை; அல்லது, அவர்கள் உணராத விதத்தில் அவர்களுக்கு தண்டனை வரும் என்பதை அச்சமற்று விட்டனரா?"},{"id":46,"translation":"அல்லது, அவர்களது பயணத்தில் அவர்களை அவன் (சோதனையால்) பிடித்து விடுவதை அச்சமற்றுவிட்டனரா? ஆக, அவர்களோ (அவனை) பலவீனப்படுத்துபவர்கள் இல்லை."},{"id":47,"translation":"அல்லது (அவர்களது பூமியையும் செல்வத்தையும்) கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து அவர்களை அவன் பிடித்து விடுவதை அச்சமற்றனரா? ஆக, நிச்சயமாக உங்கள் இறைவன் மகா இரக்கமானவன், பெரும் கருணையாளன். (அதனால்தான் நீங்கள் உடனுக்குடன் தண்டிக்கப்படாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளீர்கள்.)"},{"id":48,"translation":"மேலும், அல்லாஹ் படைத்த ஒரு பொருளையேனும் இவர்கள் கவனித்து பார்க்கவில்லையா? அவற்றின் நிழல்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணிந்தவையாக வலப்புறமாக இன்னும் இடப்புறமாக சாய்கின்றன. மேலும், அவை (அனைத்தும் அவனுக்கு) மிகப் பணிந்தவையாக இருக்கின்றன."},{"id":49,"translation":"வானங்களில் உள்ள, பூமியில் உள்ள எல்லா உயிரினங்களும் வானவர்களும் அல்லாஹ்விற்கு சிரம் பணிகிறார்கள். அவர்களோ (அல்லாஹ்வை வணங்காமல்) பெருமையடிப்பதில்லை."},{"id":50,"translation":"அவர்கள் தங்களுக்கு மேலுள்ள தங்கள் இறைவனைப் பயப்படுகிறார்கள். இன்னும், அவர்கள் தங்களுக்கு கட்டளையிடப்படுவதை (மட்டுமே) செய்கிறார்கள்."},{"id":51,"translation":"இன்னும், அல்லாஹ் கூறுகிறான்: (மனிதர்களே! நீங்கள் வணங்குவதற்கு) இரண்டு கடவுள்களை எடுத்துக் கொள்ளாதீர்கள். (நீங்கள் எவனை வணங்கவேண்டுமோ) அவனெல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். ஆக, என்னையே பயப்படுங்கள்."},{"id":52,"translation":"இன்னும், வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன! மேலும், வணக்க வழிபாடுகள் (நிலையானதாக,) என்றென்றும் அவனுக்கே உரியன. ஆகவே, அல்லாஹ் அல்லாதவற்றையா (தெய்வங்களாக ஆக்கிக்கொண்டு அவற்றை) அஞ்சுகிறீர்கள்?"},{"id":53,"translation":"மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. பிறகு, உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவனிடமே (பிரார்த்தித்து அதை நீக்கக் கோரி) மன்றாடுகிறீர்கள்."},{"id":54,"translation":"பிறகு, அவன் உங்களை விட்டு அந்த துன்பத்தை நீக்கினால், அப்போது உங்களில் ஒரு பிரிவினர் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்."},{"id":55,"translation":"நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றுக்கு நன்றி மறுப்பதற்க்காகவே (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆகவே, (இவ்வுலகில் கொஞ்சம்) சுகமனுபவியுங்கள். நீங்கள் (உங்கள் தீய முடிவை மறுமையில்) அறிவீர்கள்."},{"id":56,"translation":"இன்னும், நாம் அவர்களுக்குக் கொடுத்தவற்றிலிருந்து ஒரு பாகத்தை (எதையும்) அறியாதவர்களுக்காக (-சிலைகளுக்காக) படைக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்ததைப் பற்றி (மறுமையில்) நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்."},{"id":57,"translation":"இன்னும், அல்லாஹ்விற்குப் பெண் பிள்ளைகளையும் அவர்களுக்கோ அவர்கள் விரும்புவதையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள். அவனோ (சந்ததிகளின் தேவையை விட்டு) மிகப் பரிசுத்தமானவன்."},{"id":58,"translation":"மேலும், பெண் குழந்தையைக் கொண்டு அவர்களில் ஒருவனுக்கு நற்செய்தி கூறப்பட்டால் அவனோ துக்கப்பட்டவனாக அவனுடைய முகம் கறுத்ததாக ஆகிவிடுகிறது."},{"id":59,"translation":"தனக்குக் கூறப்பட்ட நற்செய்தியின் தீமையினால், “கேவலத்துடன் அதை வைத்திருப்பதா? அல்லது (உயிருடன்) அதை மண்ணில் புதைப்பதா?” என்று (பிற) மக்களை விட்டு (தனக்கு பிறந்த பெண் பிள்ளையை) மறைந்து கொள்கிறான். அறிந்து கொள்ளுங்கள்: அவர்களின் (இந்த) தீர்ப்பு மிகக் கெட்டதாகும்."},{"id":60,"translation":"மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கே கெட்ட தன்மை உள்ளது. அல்லாஹ்விற்கோ மிக உயர்ந்த தன்மை உண்டு. இன்னும், அவன் மிகைத்தவன், மகா ஞானவான்."},{"id":61,"translation":"மேலும், மக்களை அவர்களுடைய குற்றத்தின் காரணமாக அல்லாஹ் (உடனுக்குடன்) தண்டித்தால் (பூமியில்) ஓர் உயிரினத்தையுமே அவன் விட்டு வைத்திருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிடப்பட்ட தவணை வரை அவர்களைப் பிற்படுத்துகிறான். ஆக, அவர்களுடைய (இறுதி) தவணை வந்தால் ஒரு விநாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்."},{"id":62,"translation":"அவர்கள் வெறுப்பவற்றை அல்லாஹ்விற்கு ஆக்குகிறார்கள். இன்னும், நிச்சயமாக தங்களுக்கு சொர்க்கம் உண்டு என்று அவர்களின் நாவுகள் பொய்யை வர்ணிக்கின்றன. கண்டிப்பாக நிச்சயம் இவர்களுக்கு நரகம்தான்; மேலும், நிச்சயம் இவர்கள் (நரகத்தில் உதவி செய்வோர் யாருமின்றி விட்டு) விடப்படுவார்கள்."},{"id":63,"translation":"(நபியே!) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உமக்கு முன்னர் (பல) சமுதாயங்களுக்கு (நம்) தூதர்களை திட்டவட்டமாக அனுப்பினோம். ஆக, ஷைத்தான் அவர்களுக்கு அவர்களுடைய (தீய) செயல்களை அலங்கரித்தான். ஆகவே, இன்று(ம்) அவர்களுக்கு அவனே நண்பன் ஆவான். இன்னும், (நரகத்தில்) துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":64,"translation":"(நபியே!) இவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அதை நீர் தெளிவுபடுத்துவதற்காக; (மக்கள் எல்லோருக்கும்) நேர்வழியாகவும் நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு அருளாகவும் இருப்பதற்காகவே தவிர உம்மீது இவ்வேதத்தை நாம் இறக்கவில்லை."},{"id":65,"translation":"அல்லாஹ் மேகத்திலிருந்து மழையை இறக்குகிறான்; ஆக, அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிக்கின்றான். (நல்லுபதேசத்திற்கு) செவிசாய்க்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது."},{"id":66,"translation":"இன்னும், நிச்சயமாக (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடைகளில் உங்களுக்கு ஒரு படிப்பினை உண்டு. இரத்தத்திற்கும் சாணத்திற்கும் இடையில் அவற்றின் வயிறுகளிலிருந்து கலப்பற்ற, அருந்துபவர்களுக்கு மதுரமான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம்."},{"id":67,"translation":"இன்னும், பேரீச்சை மரத்தின் கனிகள் இன்னும் திராட்சைகளில் இருந்து போதை தரக்கூடிய பானத்தையும்,[1] நல்ல உணவுகளையும் செய்கிறீர்கள். சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது.","footnotes":"[1] இது மது தடுக்கப்படுவதற்கு முன்பு இறக்கப்பட்ட வசனமாகும். பிறகு, : வது வசனத்தின் மூலம் மது ஹராமாக - தடுக்கப்பட்டதாக ஆக்கப்பட்டது."},{"id":68,"translation":"இன்னும், “மலைகளிலும், மரங்களிலும், அவர்கள் கட்டுகிற (பெட்டிகள் போன்ற)வற்றிலும் கூடுகளை அமைத்துக்கொள்” என்று உம் இறைவன் தேனீக்கு உள்ளுணர்வை ஏற்படுத்தினான்."},{"id":69,"translation":"பிறகு, “ஒவ்வொரு பூக்களிலிருந்தும் புசி! ஆக, உனது இறைவன் (உனக்கு காண்பித்த) சுலபமான வழிகளில் (உன் கூட்டை நோக்கிச்) செல்!” (எனக் கட்டளையிட்டான்). இதனால், அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட பல நிறங்களையுடைய பானம் (தேன்) வெளியேறுகிறது. அதில் மக்களுக்கு நோய் நிவாரணம் உண்டு. சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கிறது."},{"id":70,"translation":"அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு உங்களை உயிர் கைப்பற்றுகிறான். இன்னும், (பலவற்றை) அறிந்திருந்த பின்பு ஒன்றையும் அறியாமல் ஆகுவதற்காக அற்பமான (முதுமை) வயது வரை திருப்பப்படுபவரும் உங்களில் உண்டு. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், பேராற்றலுடையவன்."},{"id":71,"translation":"இன்னும், உங்களில் சிலரைவிட சிலரை வாழ்வாதாரத்தில் அல்லாஹ்தான் மேன்மையாக்கினான். ஆக, இவ்வாறிருந்தும், மேன்மையாக்கப்பட்டவர்கள், தங்கள் வாழ்வாதாரத்(தில் தங்கள் தேவைக்குப் போக இருப்ப)தை தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் மீது திருப்பக் கூடியவர்களாக இல்லை. (அப்படி கொடுத்தால்) அவர்களும் அதில் (இவர்களுக்கு) சமமானவர்களாக ஆகிவிடுவார்கள். (ஆனால், அதை அவர்கள் விரும்புவது இல்லை. அப்படி இருக்க அல்லாஹ்விற்கு மட்டும் இணை தெய்வங்களை எப்படி கற்பனை செய்கிறார்கள்?) அல்லாஹ்வின் அருளையா (அவர்கள்) நிராகரிக்கிறார்கள் (அதில் அல்லாஹ் அல்லாதவர்களை கூட்டாக்குவதன் மூலம்)?"},{"id":72,"translation":"இன்னும், உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை உங்களுக்காக அல்லாஹ் படைத்தான். உங்கள் மனைவிகளிலிருந்து ஆண் பிள்ளைகளையும், பேரன்களையும் உங்களுக்கு படைத்தான். இன்னும், நல்லவற்றிலிருந்து உங்களுக்கு உணவளித்தான். ஆக, (இவ்வாறிருக்க) அவர்கள் (சிலைகள் அல்லது இறை நேசர்கள் குழந்தை பாக்கியம் தருவார்கள் என்று) பொய்யை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் அருட்கொடையை நிராகரிக்கின்றனரா?"},{"id":73,"translation":"இன்னும், இவர்கள் அல்லாஹ்வை அன்றி எவற்றை வணங்குகிறார்கள் என்றால் அவை இவர்களுக்கு வானங்கள் இன்னும் பூமியிலிருந்து எந்த ஒன்றையும் உணவளிக்க உரிமை பெற மாட்டார்கள். இன்னும், அவை (அதற்கு அறவே) ஆற்றல் பெற மாட்டார்கள்."},{"id":74,"translation":"ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் உதாரணங்களை(யும் தன்மைகளையும்) விவரிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் (தன் தன்மையை) அறிவான்; நீங்களோ (அவனது தன்மைகளை அவன் உங்களுக்கு அறிவித்தால் தவிர) அறிய மாட்டீர்கள்."},{"id":75,"translation":"அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். பிறருக்குச் சொந்தமான, ஒன்றையும் (செய்ய) ஆற்றல் பெறாத அடிமை ஒருவர் இருக்கிறார். இன்னும் (வேறு) ஒருவர் இருக்கிறார். அவருக்கு நாம் நம் புறத்திலிருந்து அழகிய வாழ்வாதாரத்தை வழங்கினோம். ஆகவே அவர் அதிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் புரிகிறார். இ(ந்த இரு)வர்கள் சமமாவார்களா? (சமமாக மாட்டார்கள்.) புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறிய மாட்டார்கள்."},{"id":76,"translation":"இன்னும், அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான்: இரு ஆடவர்கள் இருக்கிறார்கள். அவ்விருவரில் ஒருவர் ஊமை. அவர் எதையும் செய்ய சக்தி பெறமாட்டார். இன்னும், அவர் தன் எஜமானர் மீது சுமையாக இருக்கிறார். அவரை அவர் எங்கு (வேலைக்கு) அனுப்பினாலும் ஒரு நன்மையும் அவர் செய்யமாட்டார். இவரும், எவர் தானும் நேரான வழியில் இருந்துகொண்டு (மற்றவர்களுக்கும்) நீதத்தை ஏவுகிறாரோ அவரும் சமமாவார்களா?"},{"id":77,"translation":"வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவை அல்லாஹ்வுக்கே சொந்தம். மறுமையின் காரியம், கண் பார்வை சிமிட்டுவதைப் போல்; அல்லது, (அதைவிட) மிக சமீபமானதாகவே தவிர இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்."},{"id":78,"translation":"ஒன்றையுமே நீங்கள் அறியாதவர்களாக இருக்கின்ற நிலையில் உங்கள் தாய்மார்களின் வயிறுகளிலிருந்து அல்லாஹ்தான் உங்களை வெளிப்படுத்தினான். இன்னும், உங்களுக்குச் செவிகளையும், பார்வைகளையும், உள்ளங்களையும் படைத்தான், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காக!"},{"id":79,"translation":"வானத்தின் ஆகாயத்தில் (பறப்பதற்காகவும் மிதப்பதற்காகவும்) வசப்படுத்தப்பட்டவையாக (மிதக்கின்ற) பறவைகளை அவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (வானத்தில்) அல்லாஹ்வைத் தவிர (எவரும்) தடுத்து வைக்கவில்லை. நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":80,"translation":"அல்லாஹ் உங்கள் வீடுகளில் உங்களுக்கு (வசதியான) தங்குதலை அமைத்தான். இன்னும், கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்கு கூடாரங்களை அமைத்தான். அவற்றை நீங்கள் பயண நாளிலும், நீங்கள் தங்குகின்ற நாளிலும் எளிதாக பயன்படுத்திக்கொள்கிறீர்கள். அவற்றில் (செம்மறியாட்டின்) கம்பளிகள், (ஒட்டகத்தின்) உரோமங்கள் (வெள்ளாட்டின்) முடிகள் ஆகியவற்றிலிருந்து (தேவையான ஆடைகளையும் பல வகையான) பொருள்களையும் (அவற்றின் வியாபாரத்தினால் அதிகமான செல்வத்தையும், உங்கள் மரணம் சமீபிக்கும்) ஒரு காலம் வரை சுகமான பயன்பாட்டையும் உங்களுக்கு அவன் ஏற்படுத்திக் கொடுத்தான்."},{"id":81,"translation":"இன்னும், அல்லாஹ், தான் படைத்திருப்பவற்றில் உங்களுக்கு நிழல்களை அமைத்தான். இன்னும், மலைகளில் உங்களுக்கு குகைகளை அமைத்தான். இன்னும், வெப்பத்திலிருந்து(ம் குளிரிலிருந்தும்) உங்களை பாதுகாக்கக்கூடிய சட்டைகளையும், உங்கள் (எதிரிகளின்) பலமான தாக்குதலை விட்டும் உங்களை பாதுகாக்கக்கூடிய (இரும்பினால் ஆன உருக்கு) சட்டைகளையும் ஏற்படுத்தினான். இவ்வாறுதான், அவன் தன் அருட்கொடையை உங்கள் மீது முழுமையாக்குகிறான், நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் பணிந்து நடப்பதற்காக!"},{"id":82,"translation":"ஆக, (நபியே!) அவர்கள் (உம்மை விட்டு புறக்கணித்து) விலகினால் (கவலைப்படாதீர்.) உம் மீது கடமை எல்லாம் தெளிவாக எடுத்துரைப்பதுதான்."},{"id":83,"translation":"அல்லாஹ்வின் அருட்கொடையை அறிகிறார்கள். பிறகு, அதை நிராகரிக்கிறார்கள். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நன்றி கெட்டவர்கள்."},{"id":84,"translation":"அந்நாளில் ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் (நாம்) ஒரு சாட்சியாளரை எழுப்புவோம். பிறகு, (தூதர்களை) நிராகரித்தவர்களுக்கு (எதுவும் பேச) அனுமதிக்கப்படாது. இன்னும், அவர்கள் (தங்கள் பாவங்களுக்கு) சாக்குபோக்கு சொல்ல (-மன்னிப்பு கேட்க) வைக்கப்பட மாட்டார்கள்."},{"id":85,"translation":"தீங்கிழைத்தவர்கள் (மறுமையில்) தண்டனையைக் கண்டால் (அதைக் குறைக்க காரணம் கூறுவார்கள். ஆனால்), அவர்களை விட்டு (தண்டனை) இலகுவாக்கப்படாது. இன்னும், அவர்கள் (சிறிது நேரம் தண்டனை இன்றி இருக்க) அவகாசமும் அளிக்கப்பட மாட்டார்கள்."},{"id":86,"translation":"இணைவைத்தவர்கள் (அல்லாஹ்விற்கு இணை வைத்து வணங்கிய) தங்களுடைய (கற்பனை) தெய்வங்களை (மறுமையில்) பார்த்தால் (அல்லாஹ்வை நோக்கி), “எங்கள் இறைவா! உன்னையன்றி நாங்கள் அழைத்துக் கொண்டிருந்த எங்கள் தெய்வங்கள் இவைதான்” என்று கூறுவார்கள். ஆனால், அவைகளோ இவர்களை நோக்கி “நிச்சயமாக நீங்கள் பொய்யர்கள்தான், (நாங்கள் தெய்வங்களல்ல)” என்று கூறிவிடும்."},{"id":87,"translation":"இன்னும், அந்நாளில் அவர்கள் அல்லாஹ்விற்கு முன் முற்றிலும் பணிந்து விடுவார்கள். மேலும், (தெய்வங்கள் என்று) இவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டிருந்தவை இவர்களை விட்டும் மறைந்து விடும்."},{"id":88,"translation":"எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், அல்லாஹ்வுடைய பாதையை விட்டு (பிற மக்களை) தடுத்தார்களோ - அவர்களுக்கு, அவர்கள் விஷமம் செய்து கொண்டிருந்த காரணத்தால் தண்டனைக்கு மேல் தண்டனையை அதிகப்படுத்துவோம்."},{"id":89,"translation":"இன்னும், (நபியே!) அந்த நாளை நினைவு கூர்வீராக! அதில் ஒவ்வொரு சமுதாயத்திலும் அவர்களிலிருந்தே அவர்களுக்கு எதிராக ஒரு சாட்சியாளரை நாம் எழுப்புவோம்; இன்னும், (நிராகரித்த) இவர்களுக்கு எதிராக உம்மை சாட்சியாளராக அழைத்து வருவோம். (நபியே!) எல்லாவற்றையும் தெளிவுபடுத்தக்கூடியதாகவும் நேர்வழி காட்டியாகவும் (அதை ஏற்று செயல்படுகின்ற) முஸ்லிம்களுக்கு அருளாகவும் நற்செய்தியாகவும் இவ்வேதத்தை உம்மீது இறக்கினோம்."},{"id":90,"translation":"நிச்சயமாக அல்லாஹ், (நீங்கள்) நீதம் செலுத்துவதற்கும், நல்லறம் புரிவதற்கும், உறவினர்களுக்கு கொடுப்பதற்கும் (உங்களை) ஏவுகிறான். மேலும், மானக்கேடானவை, பாவம், அநியாயம் ஆகியவற்றை விட்டும் அவன் (உங்களைத்) தடுக்கிறான். நீங்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக உங்களுக்கு (இவற்றை) உபதேசிக்கிறான்."},{"id":91,"translation":"இன்னும், நீங்கள் உடன்படிக்கை செய்தால் அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட அந்த) உடன்படிக்கையை முழுமையாக நிறைவேற்றுங்கள். மேலும், சத்தியங்களை - அவற்றை உறுதிபடுத்திய பின்பு - முறிக்காதீர்கள். நீங்களோ அல்லாஹ்வை உங்கள் மீது பொறுப்பாளனாக ஆக்கிவிட்டீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்."},{"id":92,"translation":"இன்னும், எவள் தான் நெய்த கயிறை (அது நெய்யப்பட்டு) உறுதி பெற்ற பின்பு (பல) உதிரிகளாக பிரித்தாளோ அவளைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒரு சமுதாயத்தை விட (வேறு) ஒரு சமுதாயம் பலம் வாய்ந்தவர்களாக இருப்பதற்காக (பலவீனர்களுடன் நீங்கள் செய்த) உங்கள் சத்தியங்களை ஏமாற்றுவதாக, வஞ்சகமாக ஆக்கிவிடுகிறீர்களா?. நிச்சயமாக அல்லாஹ் உங்களை இதன் மூலம் சோதிக்கிறான். நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்தவற்றை மறுமை நாளில் (அவன்) உங்களுக்கு நிச்சயம் தெளிவுபடுத்துவான்."},{"id":93,"translation":"அல்லாஹ் நாடியிருந்தால் (இஸ்லாமைப் பின்பற்றுகிற) ஒரே ஒரு சமுதாயமாக உங்களை ஆக்கியிருப்பான். எனினும், தான் நாடுகின்றவர்களை வழிகெடுக்கிறான். இன்னும், தான் நாடுகின்றவர்களை நேர்வழி செலுத்துகிறான். மேலும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி நிச்சயமாக (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்."},{"id":94,"translation":"உங்கள் சத்தியங்களை உங்களுக்கு மத்தியில் (பிறரை) ஏமாற்றுவதற்காக, (வஞ்சிப்பதற்காக) ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால், இஸ்லாமிய மார்க்கத்தில் உங்கள் கால்) பாதம் அது நிலைபெற்ற பின் (அதிலிருந்து) சருகி (வழிகேட்டில் சென்று) விடும். இன்னும், (சத்தியத்தை முறித்து) அல்லாஹ்வின் பாதையை விட்டும் நீங்கள் தடுத்த காரணத்தால் துன்பத்தை அனுபவிப்பீர்கள். இன்னும், உங்களுக்கு மகத்தானதொரு தண்டனை உண்டு."},{"id":95,"translation":"அல்லாஹ்வின் (பெயரால் செய்யப்பட்ட) உடன்படிக்கைக்குப் பகரமாக (உலகத்தின்) சொற்ப விலையை வாங்காதீர்கள். நீங்கள் (ஒப்பந்தத்தை மீறாமல் இருப்பதன் மூலம் அல்லாஹ்விடம் உங்களுக்கு கிடைக்கும் இம்மை மறுமையின் நன்மையை நீங்கள்) அறிந்தவர்களாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் இருப்பதுதான் உங்களுக்கு மிக மேலானதாகும். (ஆகவே உடன்படிக்கைகளை பேணி நடங்கள்!)"},{"id":96,"translation":"உங்களிடம் உள்ளவை தீர்ந்துவிடும். அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ நிரந்தரமானவையாகும். மேலும், (உடன்படிக்கையை நிறைவேற்றுவதில்) பொறுமையாக(வும் உறுதியாகவும்) இருந்தவர்களுக்கு அவர்களின் கூலியை அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு கொடுப்போம்."},{"id":97,"translation":"ஆண்; அல்லது, பெண்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கும் நிலையில் நல்லதை செய்வார்களோ நிச்சயம் நாம் அவர்களை நல்ல வாழ்க்கை வாழச் செய்வோம். இன்னும், அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிக அழகியதைக் கொண்டு அவர்களின் கூலியை நிச்சயம் அவர்களுக்குக் கொடுப்போம்."},{"id":98,"translation":"ஆக, (நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் கோருவீராக."},{"id":99,"translation":"நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வைத்(து அவனை மட்டுமே சார்ந்த்)திருக்கிறார்களோ அவர்கள் மீது அவனுக்கு (-ஷைத்தானுக்கு) அதிகாரம் எதுவும் இல்லை."},{"id":100,"translation":"நிச்சயமாக அவனுடைய அதிகாரமெல்லாம் அவனுடன் நட்பு வைப்பவர்கள் மீதும் அல்லாஹ்விற்கு இணைவைப்பவர்கள் மீதும்தான்."},{"id":101,"translation":"(நபியே!) நாம் ஒரு வசனத்தின் இடத்தில் மற்றொரு வசனத்தை மாற்றினால், - அல்லாஹ்வோ தான் இறக்குவதை மிக அறிந்தவனாக இருக்கிறான், - இவர்கள் (உம்மை நோக்கி) “நிச்சயமாக நீர் (தானாக இதை) இட்டுக்கட்டுகிறீர்” என்று கூறுகிறார்கள். மாறாக, இவர்களில் அதிகமானவர்கள் (இதன் உண்மையை) அறிய மாட்டார்கள்."},{"id":102,"translation":"(நபியே!) கூறுவீராக: “நம்பிக்கை கொண்டவர்களை உறுதிப்படுத்துவதற்காகவும், (எல்லா மக்களுக்கும்) நேர்வழியாகவும் (குறிப்பாக அதன்படி நடக்கின்ற) முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் இதை உம் இறைவனிடமிருந்து ‘ரூஹுல் குதுஸ்’ (என்ற ஜிப்ரயீல்) உண்மையுடன் இறக்கினார்.”"},{"id":103,"translation":"“அவருக்குக் கற்றுக் கொடுப்பதெல்லாம் (ரோம் நாட்டை சேர்ந்த) மனிதர்தான் (அல்லாஹ் அல்ல)” என்று அவர்கள் கூறுவதை திட்டவட்டமாக அறிவோம். எவர் பக்கம் (இதை) அவர்கள் சேர்க்கிறார்களோ அவருடைய மொழி அரபி அல்லாததாகும். இதுவோ (நாகரிகமான) தெளிவான அரபி மொழியாகும்."},{"id":104,"translation":"நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டார்களோ அவர்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான். இன்னும், துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":105,"translation":"பொய்யை இட்டுக்கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பிக்கை கொள்ளாதவர்கள்தான். இன்னும், அவர்கள்தான் பொய்யர்கள். (நமது நபி அல்ல.)"},{"id":106,"translation":"எவர் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பின்னர், அவனை நிராகரிப்பாரோ, ஆனால் அவர் நிர்ப்பந்திக்கப்பட்டு, அவரது உள்ளமோ நம்பிக்கையில் திருப்தியடைந்த நிலையில் இருப்பவரைத் தவிர - (அவர் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.) எனினும், எவராவது மனதால் நிராகரிப்பை விரும்பினால் அவர்கள் மீது அல்லாஹ்வுடைய கோபம் நிகழும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு."},{"id":107,"translation":"அது, “நிச்சயமாக அவர்கள் மறுமையைவிட உலக வாழ்க்கையை விரும்பினார்கள்; இன்னும், நிராகரிக்கின்ற மக்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்” என்ற காரணத்தினால் ஆகும்."},{"id":108,"translation":"அவர்கள், எத்தகையோர் என்றால் அவர்களின் உள்ளங்கள் மீதும், செவிகள் மீதும், பார்வைகள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டான். இன்னும், அவர்கள்தான் (தங்கள் தீயமுடிவை உணராமல்) கவனமற்று இருப்பவர்கள் ஆவார்கள்."},{"id":109,"translation":"உண்மையில் நிச்சயமாக அவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள்தான்."},{"id":110,"translation":"பிறகு, எவர்கள் தாங்கள் துன்புறுத்தப்பட்ட பின்பு ஹிஜ்ரத் செய்து (தமது தாய் நாட்டை துறந்து), பிறகு போர் புரிந்து, (சோதனைகளில்) பொறுமையாக இருந்தார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன், இவற்றுக்குப் பின்னர் (அவர்களை மன்னித்து கருணை காட்டும்) மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்."},{"id":111,"translation":"ஒவ்வோர் ஆன்மாவும் தன்னைப் பற்றி தானே தர்க்கித்ததாக வருகிற நாளில் (அல்லாஹ் அந்த தியாகிகளை மன்னிப்பான்). மேலும், (அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அது செய்த செயல்களுக்கு முழுமையாக கூலி கொடுக்கப்படும். மேலும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":112,"translation":"ஓர் ஊரை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான். அது, நிம்மதி பெற்றதாக, அச்சமற்றதாக இருந்தது. எல்லா இடங்களிலிருந்தும் தாராளமாக அதன் உணவு (-வாழ்வாதார தேவை) அதற்கு வந்தது. ஆக, (இப்படி இருக்கும் நிலையில்) அது அல்லாஹ்வு(க்கு மாறுசெய்து அவனு)டைய அருட்கொடைகளை நிராகரித்தது. ஆகவே, அ(வ்வூரில் உள்ள)வர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வற்றின் காரணமாக அல்லாஹ் பசி; இன்னும், பயத்தின் ஆடையை அதற்கு (-அந்த ஊர் மக்களுக்கு) சுவைக்கச் செய்தான். (அவர்கள் உடல் மெலிந்தவர்களாக, பயந்து நடுங்கியவர்களாக ஆகிவிட்டனர்.)"},{"id":113,"translation":"இன்னும், அவர்களிலிருந்தே ஒரு தூதர் திட்டவட்டமாக அவர்களிடம் வந்தார். ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கின்ற நிலையில் அவர்களை (அல்லாஹ்வின்) தண்டனைப் பிடித்தது."},{"id":114,"translation":"ஆக, (நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு அளித்தவற்றில் ஆகுமானதை, நல்லதை புசியுங்கள்! மேலும், அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துங்கள்! நீங்கள் அவனையே வணங்குபவர்களாக இருந்தால்."},{"id":115,"translation":"அவன் உங்கள் மீது தடுத்ததெல்லாம் செத்தது, இரத்தம், பன்றியின் மாமிசம், அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டவை ஆகியவையாகும். ஆக, எவர் (அதை) விரும்பியவராக அல்லாமல், (சட்டத்தை) மீறியவராக அல்லாமல் (பசியின் கொடுமையால் மேற் கூறப்பட்ட தடுக்கப்பட்டவற்றில் எதையும் உண்ணவேண்டிய) நிர்ப்பந்தத்திற்குள்ளானாரோ நிச்சயமாக அல்லாஹ் (அவரை மன்னித்து கருணை புரியும்) மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":116,"translation":"மேலும், நீங்கள் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதற்காக உங்கள் நாவுகள் வருணிக்கும் பொய்களின் பிரகாரம் “இது ஹலால் - ஆகுமானதாகும்; இது ஹராம் ஆகாததாகும்” என்று கூறாதீர்கள். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள்."},{"id":117,"translation":"(உலகில் அவர்கள் அனுபவிப்பதோ) ஒரு சொற்ப இன்பமாகும். இன்னும், (மறுமையில்) துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":118,"translation":"(நபியே!) இதற்கு முன்னர் (ம் அத்தியாயம் ம் வசனத்தில்) நாம் உம்மீது விவரித்தவற்றை யூதர்கள் மீது (ஹராம் என்று) தடுத்தோம். நாம் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள்தான் தங்களுக்குத் தாமே தீங்கிழைப்பவர்களாக இருந்தனர்."},{"id":119,"translation":"பிறகு, (தூதரே!) நிச்சயமாக உம் இறைவன், - எவர்கள் அறியாமையின் காரணமாக கெட்டதைச் செய்து, அதற்கு பின்னர் அதிலிருந்து திருந்தி, மன்னிப்புக்கேட்டு, (தங்களை) சீர்படுத்தி கொண்டார்களோ அவர்களுக்கு நிச்சயமாக உம் இறைவன் அ(வர்கள் திருந்திய)தற்குப் பின்னர் (அவர்களை) மன்னிப்பவனாகவும் (அவர்கள் மீது) கருணைபுரிபவனாகவும் இருக்கிறான்."},{"id":120,"translation":"நிச்சயமாக இப்ராஹீம் நன்மையை போதிப்பவராக, அல்லாஹ்விற்கு மிக பணிந்தவராக, இஸ்லாமிய கொள்கையில் உறுதியுடையவராக இருந்தார். இன்னும் அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை."},{"id":121,"translation":"அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக இருந்தார். அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், நேரான பாதையில் அவரை அவன் நேர்வழி செலுத்தினான்."},{"id":122,"translation":"மேலும், இவ்வுலகில் அவருக்கு அழகிய கூலியை கொடுத்தோம். இன்னும், நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் உள்ளவர் ஆவார்."},{"id":123,"translation":"பிறகு, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கின்ற நிலையில் இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுவீராக என்று உமக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை."},{"id":124,"translation":"சனிக்கிழமையை(க் கண்ணியப்படுத்துவது கடமையாக) ஆக்கப்பட்டதெல்லாம், அதில் (தங்கள் நபியிடம்) கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மீதுதான். மேலும், நிச்சயமாக உம் இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கிடையில், அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்."},{"id":125,"translation":"(நபியே!) ஞானம்; இன்னும், அழகிய உபதேசத்தின் மூலம் உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மேலும், மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன், - அவனுடைய பாதையிலிருந்து யார் வழி தவறினாரோ அவரை - மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழிபெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான்."},{"id":126,"translation":"(நம்பிக்கையாளர்களே! உங்களை தாக்கியவர்களை) நீங்கள் தண்டித்தால் (வரம்பு மீறாமல்) நீங்கள் தண்டிக்கப்பட்டது போன்றே தண்டியுங்கள். நீங்கள் பொறு(மையாக இருந்து அவர்களை மன்னி)த்தால் அதுதான் பொறுமையாளர்களுக்கு மிக நல்லது!"},{"id":127,"translation":"(நபியே!) பொறுமையாக இருப்பீராக. மேலும், அல்லாஹ்விற்காகவே தவிர உம் பொறுமை இல்லை. மேலும், அவர்கள் மீது கவலைப்படாதீர்! இன்னும், அவர்கள் சூழ்ச்சி செய்வதைப் பற்றி (மன) நெருக்கடியில் நீர் ஆகிவிடாதீர்."},{"id":128,"translation":"நிச்சயமாக அல்லாஹ் இறையச்சமுள்ளவர்களுடனும், நல்லறம் புரிபவர்களுடனும் இருக்கிறான்."}]},{"id":17,"verses":[{"id":1,"translation":"(மக்காவின்) புனிதமான மஸ்ஜிதிலிருந்து (பைத்துல் முகத்தஸில் உள்ள) அல் மஸ்ஜிதுல் அக்ஸா வரை தன் அடிமை(யாகிய முஹம்மத் நபி)யை இரவில் அழைத்துச் சென்ற (இறை)வன் மிகப் பரிசுத்தமானவன். அ(ந்த மஸ்ஜி)தைச் சுற்றி நாம் அருள் புரிந்தோம். நமது அத்தாட்சிகளிலிருந்து (பலவற்றை) அவருக்கு காண்பிப்பதற்காக அவரை அழைத்து சென்றோம். நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":2,"translation":"இன்னும், மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். மேலும், “நீங்கள் என்னைத் தவிர (எவரையும் உங்கள் தேவைகளுக்கு நீங்கள் பிரார்த்திக்கின்ற) பொறுப்பாளனாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என்று” இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நேர்வழி காட்டக் கூடியதாக அ(ந்த வேதத்)தை ஆக்கினோம்."},{"id":3,"translation":"நூஹ்வுடன் நாம் (கப்பலில்) ஏற்றி பயணிக்க வைத்தவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக (நூஹ் ஆகிய) அவர் (அல்லாஹ்விற்கு) அதிகம் நன்றி செலுத்துகிற அடியாராக இருந்தார்."},{"id":4,"translation":"“நிச்சயமாக பூமியில் இரு முறை நீங்கள் விஷமம் செய்வீர்கள்; இன்னும், (இறைவனுக்கு முன்பாக) நிச்சயமாக நீங்கள் பெரும் ஆணவத்துடன் நடந்து கொள்வீர்கள் (-மக்கள் மீது கொடுங்கோலர்களாக, திமிர் பிடித்தவர்களாக ஆட்சி செய்வீர்கள்) என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு வேதத்தில் அறிவித்தோம்."},{"id":5,"translation":"ஆக, அவ்விரண்டில் முதல் (முறையின்) வாக்கு வந்தபோது கடுமையான பலமு(ம் வீரமும் உ)டைய நமக்குரிய (சில) அடியார்களை உங்கள் மீது அனுப்பினோம். ஆக, அவர்கள் (உங்கள்) வீடுகளுக்கு நடுவில் ஊடுருவிச் சென்றனர். மேலும், (அது) ஒரு நிறைவேற்றப்பட்ட வாக்காக இருந்தது."},{"id":6,"translation":"பிறகு, (நீங்கள் திருந்தி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பியதால்) உங்களுக்கு சாதகமாக அவர்களுக்கு எதிராக தாக்குதலை (வெற்றியை) திருப்பினோம். செல்வங்கள்; இன்னும், ஆண் பிள்ளைகளைக் கொண்டு உங்களுக்கு உதவினோம். இன்னும், (குடும்ப) எண்ணிக்கையில் அதிகமானவர்களாக உங்களை ஆக்கினோம்."},{"id":7,"translation":"நீங்கள் நன்மை செய்தால் (அது) உங்கள் ஆன்மாக்களுக்குத்தான் நன்மை செய்தீர்கள். மேலும், நீங்கள் தீமை செய்தால் அதுவும் அவற்றுக்கே (தீமையாக அமையும்). ஆக, (இரண்டு வாக்குகளில்) மற்றொரு வாக்கு வந்தபோது, (மீண்டும்) உங்கள் முகங்களை அவர்கள் கெடுப்பதற்காகவும் (-தோல்வியினால் உங்கள் முகங்கள் இழிவடைந்து வாடிபோவதற்காகவும்), முதல் முறை மஸ்ஜிதில் அவர்கள் நுழைந்தவாறு (இம்முறையும்) அவர்கள் அதில் நுழைவதற்காகவும், அவர்கள் வெற்றிகொண்ட ஊர்களை எல்லாம் அழித்தொழிப்பதற்காகவும் (அவர்களை மீண்டும் உங்கள் மீது அனுப்பினோம்)."},{"id":8,"translation":"உங்கள் இறைவன் உங்களுக்கு கருணை புரியலாம். இன்னும், நீங்கள் (அழிச்சாட்டியத்தின் பக்கம்) திரும்பினால் நாமும் (உங்களைத் தண்டிக்க) திரும்புவோம். மேலும், நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை விரிப்பாக ஆக்கினோம்."},{"id":9,"translation":"நிச்சயமாக இந்த குர்ஆன் மிகச் சரியான (-மிகவும் நேர்மையான, நீதமான, எல்லோருக்கும் பொருத்தமான) மார்க்கத்தின் பக்கம் நேர்வழி காட்டுகிறது. இன்னும், நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு, “நிச்சயமாக அவர்களுக்கு பெரிய கூலி உண்டு” என்று நற்செய்தி கூறுகிறது."},{"id":10,"translation":"இன்னும், “நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ள வில்லையோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய தண்டனையை தயார் செய்து இருக்கிறோம்” (என்று எச்சரிக்கிறது)."},{"id":11,"translation":"மனிதன், தனது நன்மைக்காக பிரார்த்திப்பதைப் போலவே தீமைக்காக பிரார்த்திக்கிறான். மேலும், மனிதன் (எதிலும்) அவசரக்காரனாக இருக்கிறான்."},{"id":12,"translation":"இரவையும் பகலையும் நாம் இரு அத்தாட்சிகளாக ஆக்கினோம். ஆக, இரவின் அத்தாட்சியை மங்கச்செய்தோம். இன்னும், பகலின் அத்தாட்சியை ஒளிரக்கூடியதாக ஆக்கினோம், உங்கள் இறைவன் புறத்திலிருந்து (வாழ்வாதார) அருளை நீங்கள் தேடுவதற்காகவும் ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்கள் இன்னும் நேரங்களின்) கணக்கையும் நீங்கள் அறிவதற்காகவும் (இப்படி அமைத்தோம்). மேலும், எல்லா விஷயங்களையும் நாம் மிக விரிவாக விவரித்தோம்."},{"id":13,"translation":"இன்னும், ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய செயல்களை (நாம் பதிவு செய்கின்ற ஓர் பதிவேட்டை) அவனுடைய கழுத்தில் இணைத்தோம். இன்னும், அவனுக்கு மறுமை நாளில் (அதை) ஒரு புத்தகமாக வெளிப்படுத்துவோம். அதை அவன் (தனக்கு முன்) விரிக்கப்பட்டதாக சந்திப்பான்."},{"id":14,"translation":"“உன் (அமல்கள் எழுதப்பட்ட) புத்தகத்தை நீ படி! இன்று உன்னை விசாரிக்க நீயே போதுமானவன்."},{"id":15,"translation":"எவர் நேர்வழி செல்வாரோ அவர் நேர்வழி செல்வதெல்லாம் தன் நன்மைக்காகவே. இன்னும், எவர் வழிகெடுவாரோ அவர் வழிகெடுவதெல்லாம் தனக்கெதிராகத்தான். மேலும், பாவியான ஓர் ஆன்மா மற்றோர் ஆன்மாவின் பாவத்திற்கு பொறுப்பாகாது. இன்னும், நாம் ஒரு தூதரை அனுப்பும் வரை (எவரையும்) தண்டிப்பவர்களாக நாம் இருக்கவில்லை."},{"id":16,"translation":"இன்னும், ஓர் ஊரை நாம் அழிக்க நாடினால், அதில் வசதி படைத்தவர்களை (நன்மையைக் கொண்டு) ஏவுவோம். (ஆனால், அவர்கள் நமது கட்டளைக்கு மாறு செய்து) அதில் பாவம் செய்வார்கள். ஆகவே, அதன் மீது நமது (தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிடும். ஆகவே, அதை நாம் முற்றிலும் தரைமட்டமாக்கி (அழித்து) விடுவோம்."},{"id":17,"translation":"மேலும், நூஹுக்குப் பின்னர் எத்தனையோ (பல) தலைமுறைகளை அழித்தோம். இன்னும், தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிந்தவனாக, உற்று நோக்கியவனாக உம் இறைவனே போதுமானவன்."},{"id":18,"translation":"எவர், (அவசரமான) இம்மை (வாழ்க்கை)யை (மட்டும்) நாடுகின்றவராக இருப்பாரோ (அப்படிப்பட்டவர்களில்) நாம் நாடுபவருக்கு (உலக செல்வத்தில்) நாம் நாடுவதை (மட்டும்) அதில் முற்படுத்திக் கொடுப்போம். பிறகு, அவருக்கு நரகத்தை (தங்குமிடமாக) ஆக்குவோம். அவர் இகழப்பட்டவராக, (நம் அருளைவிட்டு) தூரமாக்கப்பட்டவராக (கேவலமாக தள்ளப்பட்டு) அதில் நுழை(ந்து எரிந்து பொசுங்கு)வார்."},{"id":19,"translation":"இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து, மறுமையை நாடி, அதற்குரிய (சரியான) முயற்சிகளை செய்வார்களோ, அத்தகையவர்களுடைய முயற்சி நன்றி செலுத்தப்பட்(டு நற்கூலி கொடுக்கப்பட்)டதாக இருக்கும்."},{"id":20,"translation":"(உலகை விரும்புகிற) இவர்களுக்கும் (மறுமையை விரும்புகிற) இவர்களுக்கும் உம் இறைவனின் கொடையிலிருந்து நாம் கொடுத்து உதவுவோம். மேலும், உம் இறைவனின் கொடை (இவ்வுலகில் எவருக்கும்) தடுக்கப்பட்டதாக இருக்கவில்லை."},{"id":21,"translation":"(நபியே!) அவர்களில் சிலரை விட சிலரை (பொருளாதாரத்தில்) எப்படி மேன்மையாக்கினோம் என்பதை கவனிப்பீராக! மேலும், மறுமை (வாழ்வு)தான் பதவிகளாலும் மிகப் பெரியது; மேன்மையாலும் மிகப் பெரியது."},{"id":22,"translation":"(நபியே!) அல்லாஹ்வுடன் வணங்கப்படுகின்ற வேறு ஓர் இறைவனை ஆக்காதீர். (அவ்வாறு செய்தால்) இகழப்பட்டவராக, கைவிடப்பட்டவராக, முடங்கிவிடுவீர்."},{"id":23,"translation":"மேலும், (நபியே!) உம் இறைவன் (உமக்கும் உமது சமுதாயத்திற்கும்) கட்டளையிடுகிறான்: “அவனைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்காதீர்கள்; இன்னும், பெற்றோருக்கு நல்லுபகாரம் புரியுங்கள்!” (மனிதனே!) உன்னிடம் அவ்விருவர்களில் ஒருவர்; அல்லது, அவர்கள் இருவரும் முதுமையை அடைந்தால் அவ்விருவரையும் (உதாசினப்படுத்தி) ‘ச்சீ’ என்று சொல்லாதே; இன்னும், அவ்விருவரையும் அதட்டாதே; இன்னும், அவ்விருவரிடமும் மிக கண்ணியமாக பேசு."},{"id":24,"translation":"இன்னும், அவர்களுக்கு முன் கருணையுடன் பணிவாக நடந்துகொள்! இன்னும், “என் இறைவா! நான் சிறியவனாக இருக்கும்போது என்னை அவர்கள் வளர்த்தவாறே நீயும் அவ்விருவருக்கும் கருணை புரி!” என்று கூறு!"},{"id":25,"translation":"உங்கள் மனங்களில் உள்ளதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன். நீங்கள் நல்லவர்களாக இருந்தால் நிச்சயமாக அவன், (தன் பக்கம்) முற்றிலுமாக மீளுகிறவர்களை (-அதிகம் நன்மைகளை செய்பவர்களை) பெரிதும் மன்னிப்பவனாக இருக்கிறான்."},{"id":26,"translation":"இன்னும், (மனிதனே! உன்) உறவினருக்கு அவருடைய உரிமையைக் கொடு! ஏழைக்கும் வழிப்போக்கருக்கும் (அவர்களின் உரிமைகளைக்) கொடு! மிதமிஞ்சி (வீணாக) செலவழிக்காதே!"},{"id":27,"translation":"மிதமிஞ்சி செலவழிப்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாக இருக்கிறார்கள். ஷைத்தான் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்."},{"id":28,"translation":"இன்னும், (மனிதனே!) நீ உம் இறைவனிடமிருந்து ஓர் அருளை நாடி, அதை ஆதரவு வைத்தவனாக இருக்கும் நிலையில் (யாராவது உன்னிடம் யாசித்து வரும்போது) அவர்களை நீ புறக்கணித்தால், அவர்களுக்கு மென்மையான சொல்லைச் சொல்! (அவர் மீது கடுகடுக்காதே!)."},{"id":29,"translation":"மேலும், (மனிதனே! தர்மம் செய்யாமல்) உனது கையை உன் கழுத்தில் விலங்கிடப்பட்டதாக ஆக்காதே! (செலவு செய்வதில்) அதை முற்றிலும் விரிக்காதே! அதனால் நீ பழிப்பிற்குரியவராக, (செல்வம் அனைத்தும்) தீர்ந்துபோனவராக தங்கிவிடுவாய்."},{"id":30,"translation":"நிச்சயமாக உம் இறைவன், தான் நாடுகிறவருக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்; இன்னும், (தான் நாடுகிறவருக்கு) அளவாக (சுருக்கி)க் கொடுக்கிறான். நிச்சயமாக அவன், தன் அடியார்களை ஆழ்ந்தறிபவனாக, உற்று நோக்குபவனாக இருக்கிறான்."},{"id":31,"translation":"(மனிதர்களே!) வறுமையைப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள். நாம்தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். நிச்சயமாக அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாக இருக்கிறது."},{"id":32,"translation":"(மனிதர்களே!) விபச்சாரத்தை நெருங்காதீர்கள்! நிச்சயமாக அது மானக்கேடானதாக இருக்கிறது. இன்னும், அது கெட்ட வழியாக இருக்கிறது."},{"id":33,"translation":"மேலும், அல்லாஹ் புனிதமாக்கிய உயிரை உரிமையின்றி கொல்லாதீர்கள். இன்னும், எவர் அநீதி செய்யப்பட்டவராக கொல்லப்பட்டாரோ, (அவருக்காக பழிக்குப் பழி வாங்கும்) அதிகாரத்தை அவருடைய உறவினருக்கு நாம் ஆக்கினோம். ஆகவே, அவர் (-அந்த உறவினர் பழிக்குப்பழி) கொல்வதில் அளவு கடக்க வேண்டாம். நிச்சயமாக அவர் (-கொல்லப்பட்டவரின் உறவினர்) உதவி செய்யப்பட்டவராக இருக்கிறார்.[1]","footnotes":"[1] கொன்றவனை கொன்று பழிதீர்க்க; அல்லது, நஷ்டஈடு பெற கொல்லப்பட்டவரின் வாரிசுகளுக்கு அரசு உதவ வேண்டும்."},{"id":34,"translation":"இன்னும், அனாதையின் செல்வத்தை அவர் தன் வாலிபத்தை அடையும் வரை மிக அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள். மேலும், உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக உடன்படிக்கை (குறித்து மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கிறது."},{"id":35,"translation":"இன்னும், நீங்கள் (பொருள்களை) அளந்(து கொடுத்)தால் (அந்த) அளவையை முழுமையாக்குங்கள்; இன்னும், சரியான (நீதமான) தராசைக் கொண்டு (பொருள்களை) நிறு(த்துக் கொடு)ங்கள். அது மிகச் சிறந்ததும் முடிவால் மிக அழகியதும் ஆகும்."},{"id":36,"translation":"இன்னும், உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதைப் பின் தொடராதே! (அதைச் செய்யாதே). நிச்சயமாக செவி, பார்வை, உள்ளம் ஆகிய இவை எல்லாம் அவற்றைப் பற்றி விசாரிக்கப்படுபவையாக இருக்கின்றன."},{"id":37,"translation":"இன்னும், பூமியில் கர்வம் கொண்டவனாக நடக்காதே. நிச்சயமாக நீ பூமியை அறவே கிழிக்கவும் முடியாது. இன்னும், நீ மலைகளின் உயரத்தை அறவே அடையவும் முடியாது."},{"id":38,"translation":"இவையெல்லாம், இவற்றின் தீமை உமது இறைவனிடம் வெறுக்கப்பட்டதாக இருக்கிறது."},{"id":39,"translation":"(நபியே! நல்லுபதேசங்களில் மேற்கூறப்பட்ட) இவை, உமக்கு உம் இறைவன் வஹ்யி அறிவித்த ஞானத்திலிருந்து உள்ளவையாகும். (நபியே!) மேலும், அல்லாஹ்வுடன், வணங்கப்படும் வேறு ஒருவரை ஆக்காதீர். (அவ்வாறு நீர் செய்தால்) இகழப்பட்டவராக, (இறை அருளை விட்டு) தூரமாக்கப்பட்டவராக நரகில் எறியப்படுவீர்."},{"id":40,"translation":"ஆக, (மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் பிள்ளைகளை சொந்தமாக்கிவிட்டு, (உங்கள் கற்பனை படி தமக்கு) வானவர்களை பெண் பிள்ளைகளாக ஆக்கிக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் பெரிய (அபாண்டமான பொய்யான) கூற்றை கூறுகிறீர்கள்."},{"id":41,"translation":"மேலும், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டவட்டமாக (பல நல்லுபதேசங்களையும் பல வகையான உதாரணங்களையும்) விவரித்தோம். ஆனால், அது அவர்களுக்கு வெறுப்பைத் தவிர அதிகப்படுத்தவில்லை."},{"id":42,"translation":"(நபியே!) கூறுவீராக! அவர்கள் கூறுவது போல் அவனுடன் (வேறு) பல கடவுள்கள் இருந்திருந்தால், அப்போது அர்ஷ்ஷுக்குரிய (உண்மையான இறை)வன் பக்கம் செல்வ(தற்கு; இன்னும், அவனை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவ)தற்கு ஒரு வழியைத் தேடியிருப்பார்கள்."},{"id":43,"translation":"அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், இவர்கள் கூறுவதை விட்டு அவன் மிக மிக உயர்ந்தவன்."},{"id":44,"translation":"ஏழு வானங்களும் பூமியும் அவற்றிலுள்ளவர்களும் அவனைத் துதிக்கிறார்கள். இன்னும், அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. எனினும், (மனிதர்களே) அவர்களின் துதியை நீங்கள் அறிய மாட்டீர்கள். நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, பெரும் மன்னிப்பாளனாக இருக்கிறான்."},{"id":45,"translation":"(நபியே!) நீர் குர்ஆனை ஓதினால் உமக்கு இடையிலும் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களுக்கு இடையிலும் (குர்ஆனை புரிவதிலிருந்து அவர்களை) மறைக்கக் கூடிய ஒரு திரையை (அவர்களின் புறக்கணிப்பினால் அவர்களுக்கு தண்டனையாக) ஆக்கிவிடுவோம்."},{"id":46,"translation":"இன்னும், அவர்களுடைய உள்ளங்கள் மீது அதை அவர்கள் விளங்குவதற்கு (தடையாக) மூடிகளையும் அவர்களுடைய காதுகளில் செவிட்டு தனத்தையும் ஆக்கிவிடுவோம். மேலும், (நபியே!) குர்ஆனில் உம் இறைவன் ஒருவனை மட்டும் (புகழ்ந்து துதித்து) நீர் நினைவு கூர்ந்தால், அவர்கள் (அதை) வெறுத்து தங்கள் பின்புறங்கள் மீது திரும்பி (ஓடி) விடுகிறார்கள்."},{"id":47,"translation":"அவர்கள் உம்மிடம் (இந்த குர்ஆனை) செவியுறும்போது எதற்காக அவர்கள் செவியுறுகிறார்கள் என்பதையும்; இன்னும், அவர்கள் தனித்து பேசும்போதும், “உண்ணவும் குடிக்கவும் செய்யும் (மனித இனத்தைச் சேர்ந்த) ஓர் ஆடவரைத் தவிர (உயர்வான ஒரு வானவரை) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அந்த அநியாயக்காரர்கள் கூறும் போதும் அவர்கள் கூறுவதை நாம் மிக அறிந்தவர்களாக இருக்கிறோம்."},{"id":48,"translation":"(நபியே!) உமக்கு எவ்வாறு (தவறான) தன்மைகளை அவர்கள் விவரிக்கிறார்கள் என்பதை கவனிப்பீராக! ஆக, அவர்கள் வழிகெட்டனர். இன்னும், அவர்கள் (நேர்வழியின் பக்கம் வருவதற்கு) எந்த ஒரு பாதைக்கும் சக்தி பெற மாட்டார்கள்."},{"id":49,"translation":"“இன்னும், நாம் (இறந்து) எலும்புகளாகவும், (மண்ணோடு மண்ணாக) மக்கியவர்களாகவும் ஆகிவிட்டால் புதியதொரு படைப்பாக நிச்சயமாக நாம் எழுப்பப்படுவோமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள்."},{"id":50,"translation":"(நபியே!) கூறுவீராக! நீங்கள் கல்லாகவோ; அல்லது, இரும்பாகவோ ஆகிவிடுங்கள். (ஆனால், அது உங்களால் முடியாது.)"},{"id":51,"translation":"அல்லது, உங்கள் நெஞ்சங்களில் பெரியதாக தோன்றுகின்ற (வேறு) ஒரு படைப்பாக ஆகிவிடுங்கள். (அதுவும் உங்களால் முடியாது.) ஆக, “எங்களை (உயிருள்ள மனிதர்களாக) யார் மீண்டும் உருவாக்குவார்?” என்று அவர்கள் (கேலியாக) கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “உங்களை முதல் முறையாகப் படைத்தவன்தான் (உங்களை மீண்டும் உருவாக்குவான்).” உடனே, (கேலியாக) தங்கள் தலைகளை உம் பக்கம் ஆட்டுவார்கள். பிறகு, “அது (-மறுமை) எப்போது (வரும்)?” என்று கூறுவார்கள். “அது (தூரத்தில் இல்லை) சமீபமாக இருக்கக்கூடும்” என்று கூறுவீராக."},{"id":52,"translation":"உங்களை அவன் அழைக்கிற நாளில், நீங்கள் அவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிந்து, எல்லாப் புகழும் அவனுக்கே என்று பதில் அளிப்பீர்கள். இன்னும், சொற்ப (கால)ம் தவிர நீங்கள் (உலகிலும் மண்ணறையிலும்) தங்கவில்லை என்று (அந்நாளில்) எண்ணுவீர்கள்!"},{"id":53,"translation":"மேலும், (நபியே!) என் அடியார்களுக்கு கூறுவீராக: “அவர்கள் (தங்களுக்குள்) மிக அழகியதை பேசவும். நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் (அவர்கள் பேசும் தீய சொற்களால்) குழப்பம் செய்வான். நிச்சயமாக ஷைத்தான் மனிதனுக்கு தெளிவான எதிரியாக இருக்கிறான்.”"},{"id":54,"translation":"(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களை மிக அறிந்தவன். அவன் நாடினால் உங்கள் மீது கருணை புரிவான்; அல்லது, அவன் நாடினால் உங்களை தண்டிப்பான். (நபியே!) உம்மை அவர்கள் மீது பொறுப்பாளராக (-கண்காணிப்பாளராக) நாம் அனுப்பவில்லை."},{"id":55,"translation":"வானங்களில், இன்னும் பூமியில் உள்ளவர்களை உம் இறைவன் மிக அறிந்தவன். நபிமார்களில் சிலரை சிலர் மீது திட்டவட்டமாக மேன்மைப்படுத்தினோம். இன்னும், (நபி) தாவூதுக்கு ‘ஸபூரை’க் கொடுத்தோம்."},{"id":56,"translation":"(நபியே!) கூறுவீராக! அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று) கூறியவற்றை (உங்கள் துன்பத்தில் உங்களுக்கு உதவுவதற்கு) அழையுங்கள். ஆனால், அவை உங்களை விட்டும் துன்பத்தை நீக்குவதற்கும், (அதை வேறு ஒருவர் பக்கம்) திருப்புவதற்கும் ஆற்றல் பெற மாட்டார்கள்."},{"id":57,"translation":"(தூதர்கள், வானவர்கள், இன்னும் இறைநேசர்களில்) எவர்களை இவர்கள் (தங்கள் தேவைக்காக பிரார்த்தனை செய்து) அழைக்கிறார்களோ, - அவர்களோ தங்கள் இறைவன் பக்கம் தங்களில் மிக நெருங்கியவராக யார் ஆகுவது என்று (ஆர்வப்பட்டு) நன்மையை (அதிகம் செய்வதற்கு வழிகளை)த் தேடுகிறார்கள்; இன்னும், அவனுடைய கருணையை ஆதரவு வைக்கிறார்கள்; இன்னும், அவனுடைய தண்டனையைப் பயப்படுகிறார்கள். நிச்சயமாக உம் இறைவனின் தண்டனை பயத்திற்குரியதாக இருக்கிறது! (ஆகவே, அவர்களிடம் எப்படி இவர்கள் இரட்சிப்பைத் தேடமுடியும்)"},{"id":58,"translation":"(அநியாயக்காரர்களின்) எந்த ஊரும் இல்லை, மறுமை நாளுக்கு முன்பாக நாம் அதை அழிப்பவர்களாக; அல்லது, கடுமையான தண்டனையால் (அதை) தண்டிப்பவர்களாக இருந்தே தவிர. இது விதியில் எழுதப்பட்டதாக இருக்கிறது."},{"id":59,"translation":"முன்னோர் அவற்றை பொய்ப்பித்தனர் என்பதைத் தவிர, அத்தாட்சிகளை நாம் அனுப்பி வைக்க நம்மை தடுக்கவில்லை. மேலும், ‘ஸமூது’க்கு பெண் ஒட்டகத்தை தெளிவான அத்தாட்சியாகக் கொடுத்தோம். ஆனால், அவர்களோ அதற்குத் தீங்கிழைத்தனர். மேலும், பயமுறுத்துவதற்கே தவிர அத்தாட்சிகளை நாம் அனுப்பமாட்டோம்."},{"id":60,"translation":"(நபியே!) “நிச்சயமாக உம் இறைவன் (அறிவாலும் ஆற்றலாலும்) மனிதர்களைச் சூழ்ந்திருக்கிறான்” என்று நாம் உமக்குக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! (எனவே எவரையும் நீர் அஞ்சாமல் மார்க்கத்தை எடுத்துக் கூறுவீராக!). (நபியே!) உமக்கு நாம் (மிஃராஜ் பயணத்தில்) காண்பித்த காட்சியையும் குர்ஆனில் (கூறப்பட்ட) சாபத்திற்குரிய மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. மேலும், அவர்களைப் பயமுறுத்துகிறோம். ஆனால், அது அவர்களுக்கு பெரும் அட்டூழியத்தைத் தவிர அதிகப்படுத்துவதில்லை."},{"id":61,"translation":"மேலும், “ஆதமுக்குச் சிரம் பணியுங்கள்” என வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, இப்லீஸைத் தவிர (அனைவரும்) சிரம் பணிந்தனர். அவன் கூறினான்: “நீ மண்ணிலிருந்து படைத்தவருக்கு நான் சிரம் பணிவேனா?”"},{"id":62,"translation":"(இப்லீஸ்) கூறினான்: “என்னை விட நீ கண்ணியப்படுத்தியவர் இவர்தானா என்று நீ அறிவிப்பாயாக?” (என்று ஏளனம் செய்துவிட்டு கூறினான்:) “நீ என்னை மறுமை நாள் வரை பிற்படுத்தினால், இவருடைய சந்ததிகளை நான் (அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அவர்களை) வழிகெடுத்து விடுவேன். ஆனால், (நீ அருள் புரியும்) குறைவானவர்களைத் தவிர”"},{"id":63,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நீ போய் விடு; ஆக, அவர்களில் உன்னை யார் பின்பற்றினாரோ நிச்சயமாக நரகம்தான் உங்கள் (அனைவரின்) முழுமையான கூலியாக அமையும்."},{"id":64,"translation":"இன்னும், அவர்களில் உனக்கு இயன்றவர்களை உன் சப்தத்தைக் கொண்டு தூண்டிவிடு; இன்னும், உன் குதிரைப் படைகளையும், காலாட்படைகளையும் அவர்கள் மீது ஏவிவிடு; மேலும், (அவர்களுடைய) செல்வங்களிலும் சந்ததிகளிலும் அவர்களுடன் இணைந்து விடு; இன்னும், அவர்களுக்கு வாக்களி. ஆனால், ஏமாற்றுவதற்கே தவிர ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்க மாட்டான்."},{"id":65,"translation":"“நிச்சயமாக என் அடியார்கள் அவர்கள் மீது உனக்கு அதிகாரம் இல்லை” இன்னும், (நபியே! உமக்கு) பொறுப்பாளனாக (-உம்மை பாதுகாப்பவனாக) உம் இறைவனே போதுமானவன்."},{"id":66,"translation":"(மனிதர்களே!) உங்கள் இறைவன் உங்களுக்காக கப்பலைக் கடலில் (அலைகளை கிழித்துக் கொண்டு) செல்லும்படி செய்கிறான், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் தேடுவதற்காக. நிச்சயமாக அவன் உங்கள் மீது பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":67,"translation":"இன்னும், கடலில் உங்களுக்கு துன்பம் ஏற்பட்டால், அவனைத் தவிர நீங்கள் பிரார்த்தித்தவை (அனைத்தும் உங்கள் எண்ணங்களை விட்டு) மறைந்து விடுகின்றன. அவன் உங்களை பாதுகாத்(து கரையில் சேர்ப்பித்)தபோது (அவனை) புறக்கணிக்கிறீர்கள். மனிதன் மகா நன்றி கெட்டவனாக இருக்கிறான்."},{"id":68,"translation":"ஆக, பூமியின் ஓரத்தில் அவன் உங்களை சொருகிவிடுவதை; அல்லது, உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை நீங்கள் அச்சமற்று விட்டீர்களா? பிறகு, (அவ்வாறு நிகழ்ந்து விட்டால்) உங்களுக்கு (-உங்களைப் பாதுகாக்கும்) பொறுப்பாளரை (-பாதுகாவலரை) நீங்கள் காணமாட்டீர்கள்."},{"id":69,"translation":"அல்லது, மற்றொரு முறை உங்களை அவன் அதில் (-கடலில்) மீண்டும் அழைத்து சென்று, (கப்பலை) உடைத்தெரியும் காற்றை உங்கள் மீது அனுப்பி, (முன்பு புரிந்த அருளுக்கு) நீங்கள் நன்றி கெட்ட(த்தனமாக நடந்து கொண்ட)தால் உங்களை அவன் (கடலில்) மூழ்கடித்து விடுவதை நீங்கள் பயமற்று விட்டீர்களா? (அவ்வாறு செய்தால் அதன்) பிறகு, அதனை முன்னிட்டு உங்களுக்காக நம்மிடம் பழிதீர்ப்பவரை நீங்கள் காணமாட்டீர்கள்."},{"id":70,"translation":"திட்டவட்டமாக ஆதமுடைய சந்ததிகளை (-மனிதர்களை) நாம் கண்ணியப்படுத்தினோம். இன்னும், கரையிலும் கடலிலும் அவர்கள் வாகனித்து செல்லும்படி நாம் செய்தோம். இன்னும், நல்ல உணவுகளிலிருந்து நாம் அவர்களுக்கு உணவளித்தோம். இன்னும், நாம் படைத்த அதிகமான படைப்புகளை விட நாம் அவர்களை முற்றிலும் மேன்மைப்படுத்தினோம்."},{"id":71,"translation":"ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் நாம் அழைக்கும் நாளில், எவர் தமது (அமல்கள் எழுதப்பட்ட) புத்தகத்தை தமது வலக்கையில் கொடுக்கப்படுவாரோ அ(த்தகைய)வர்கள் தமது புத்தகத்தை (மகிழ்ச்சியுடன்) வாசிப்பார்கள். மேலும், ஒரு நூல் அளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்."},{"id":72,"translation":"மேலும், எவர் இம்மையில் (நேர்வழி பெறாத) குருடராக இருந்தாரோ அவர் மறுமையிலும் (சொர்க்கப் பாதையில் செல்ல முடியாத) குருடராகவும் பாதையால் மிக வழிகெட்டவராகவும் இருப்பார்."},{"id":73,"translation":"நாம் உமக்கு வஹ்யி அறிவித்ததை விட்டு (வேறு ஒன்றின் பக்கம்) உம்மை அவர்கள் திருப்பிவிட நிச்சயமாக நெருங்கிவிட்டனர், ஏனெனில், நீர் (வஹ்யில் எது அறிவிக்கப்பட்டதோ) அது அல்லாததை (பொய்யாக) நம் மீது இட்டுக் கட்டுவதற்காக. (அப்படி நீ இட்டுக்கட்டி இருந்தால்) அப்போது அவர்கள் உம்மை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டிருப்பார்கள்."},{"id":74,"translation":"மேலும், உம்மை நாம் உறுதிபடுத்தி இருக்காவிட்டால் கொஞ்சம் ஓர் அளவாவது அவர்கள் பக்கம் நீர் சாய்ந்துவிட நெருங்கி இருப்பீர்."},{"id":75,"translation":"(அப்படி நீர் சாய்ந்திருந்தால்) அப்போது இவ்வாழ்கையில் இரு மடங்கு தண்டனையையும் மரணத்திற்குப் பின் இரு மடங்கு தண்டனையையும் நீர் சுவைக்கும்படி செய்திருப்போம். பிறகு, நமக்கு எதிராக உமக்கு உதவக் கூடியவரை காணமாட்டீர்."},{"id":76,"translation":"மேலும், நிச்சயமாக (நபியே! உமது) ஊரிலிருந்து அவர்கள் உம்மை வெளியேற்றுவதற்காக உம்மை அவர்கள் தூண்டி விட (உமக்கு தொந்தரவு தர) நெருங்கிவிட்டார்கள். (அப்படி அவர்கள் செய்திருந்தால்) அப்போது, அவர்கள் உமக்குப் பின்னால் சொற்ப காலமே தவிர வசித்திருக்க மாட்டார்கள்."},{"id":77,"translation":"நம் தூதர்களில் உமக்கு முன்பு நாம் அனுப்பியவர்களின் நடைமுறை(ப்படியே இப்போதும் நடக்கும்). மேலும், நம் நடைமுறையில் மாற்றத்தை நீர் காணமாட்டீர்."},{"id":78,"translation":"(நபியே!) சூரியன் (வானத்தின் நடுவிலிருந்து) சாய்ந்ததிலிருந்து இரவின் இருள் வரை உள்ள தொழுகைகளையும் ஃபஜ்ருடைய தொழுகையையும் நிலை நிறுத்துவீராக. நிச்சயமாக ஃபஜ்ர் உடைய தொழுகை வானவர்கள் கலந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது."},{"id":79,"translation":"இன்னும், இரவில் (கொஞ்சம்) உறங்கி எழுந்து அதை (-குர்ஆனை) ஓதி தொழுவீராக! இது உமக்கு (மட்டும்) உபரியா(ன கடமையா)கும். (மறுமையில்) மகாம் மஹ்மூது எனும் புகழப்பட்ட இடத்தில் உம்மை உம் இறைவன் எழுப்பக் கூடும்."},{"id":80,"translation":"மேலும், (நபியே!) கூறுவீராக: “என் இறைவா! என்னை நல்ல நுழைவிடத்தில் (மதீனாவில்) நுழையவை. நல்ல வெளியேறுமிடத்தில் (மக்காவில்) இருந்து என்னை வெளியேற்று! உதவக்கூடிய ஓர் ஆதாரத்தை உன்னிடமிருந்து எனக்கு ஏற்படுத்து!”"},{"id":81,"translation":"இன்னும், (நபியே!) கூறுவீராக: “உண்மை வந்தது, பொய் அழிந்தது. நிச்சயமாக பொய் அழியக் கூடியதாகவே இருக்கிறது.”"},{"id":82,"translation":"மேலும், நம்பிக்கையாளர்களுக்கு அருளாகவும் நோய் நிவாரணியாகவும் எது இருக்குமோ அதையே குர்ஆனில் நாம் இறக்குகிறோம். இன்னும், அநியாயக்காரர்களுக்கு இது நஷ்டத்தைத் தவிர அதிகப்படுத்தாது."},{"id":83,"translation":"நாம் மனிதனுக்கு அருள் புரிந்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்) அவன் புறக்கணிக்கிறான்; இன்னும், (பாவங்கள் செய்து நம்மை விட்டு) தூரமாகி விடுகிறான். மேலும், அவனை தீங்குகள் அணுகினால் நிராசை அடைந்தவனாக (-இறைவனின் அருள் மீது நம்பிக்கை அற்றவனாக) ஆகிவிடுகிறான்."},{"id":84,"translation":"(நபியே!) கூறுவீராக! ஒவ்வொருவரும் தனது பாதையில் (தனது போக்கில்) செயல்படுகிறார். ஆக, மார்க்கத்தால் மிக நேர்வழி பெற்றவர் யார் என்பதை உங்கள் இறைவன் மிக அறிந்தவன் ஆவான்."},{"id":85,"translation":"மேலும், (நபியே!) ‘ரூஹ்’ பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். “ரூஹ் என் இறைவனின் கட்டளையில் உள்ளதாகும். கல்வியில் சொற்ப அளவே தவிர நீங்கள் கொடுக்கப்படவில்லை” என்று கூறுவீராக!"},{"id":86,"translation":"(நபியே!) நாம் நாடினால், உமக்கு வஹ்யி அறிவித்தவற்றை நிச்சயம் போக்கி விடுவோம். பிறகு, நமக்கு எதிராக அதற்காக உமக்கு (உதவுகின்ற) ஒரு பொறுப்பாளரை (-பாதுகாவலரை) நீர் காண மாட்டீர்."},{"id":87,"translation":"ஆனால், உம் இறைவனுடைய அருள் (காரணமாக அவ்வாறு அவன் செய்யவில்லை). நிச்சயமாக உம்மீது அவனுடைய அருள் மிகப் பெரிதாக இருக்கிறது."},{"id":88,"translation":"(நபியே!) கூறுவீராக! மனிதர்களும் ஜின்களும் இந்த குர்ஆன் போன்ற (ஒரு வேதத்)தைக் கொண்டு வர ஒன்று சேர்ந்தாலும் இது போன்ற (வேதத்)தை அவர்கள் கொண்டு வர மாட்டார்கள், அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளராக இருந்தாலும் சரியே."},{"id":89,"translation":"மேலும், திட்டவட்டமாக இந்த குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் மக்களுக்கு விவரித்தோம். ஆனால், மக்களில் அதிகமானவர்கள் (நம்பிக்கை கொள்ள) மறுத்து, நிரகாரிக்கவே செய்தனர்."},{"id":90,"translation":"மேலும், (நிராகரிப்பாளர்கள்) கூறினார்கள்: (நபியே!) “பூமியில் ஓர் ஊற்றை எங்களுக்காக நீர் பிளந்து (ஓட) விடும் வரை உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்.”"},{"id":91,"translation":"“அல்லது பேரிட்சை மரம்; இன்னும், திராட்சை செடியின் ஒரு தோட்டம் உமக்கு இருந்து, அதற்கு மத்தியில் (பல இடங்களில்) நதிகளை நீர் பிளந்தோடச் செய்கின்ற வரை (உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்).”"},{"id":92,"translation":"“அல்லது நீர் கூறியது போன்று (முறிக்கப்பட்ட) துண்டுகளாக வானத்தை எங்கள் மீது நீர் விழவைக்கின்ற வரை; அல்லது, அல்லாஹ்வையும் வானவர்களையும் கண்முன் நீர் கொண்டுவருகின்ற வரை (உம்மை நாம் நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்).”"},{"id":93,"translation":"“அல்லது, தங்கத்தினால் ஆன ஒரு வீடு உமக்கு இருக்கும் வரை; அல்லது, வானத்தில் நீர் ஏறும் வரை (உம்மை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்), (அப்படி நீர் ஏறிவிட்டாலும்) உமது ஏறுதலுக்காக (மட்டும்) நாம் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம், நாங்கள் படிக்கின்ற ஒரு வேதத்தை எங்கள் மீது நீர் இறக்கி வைக்கும் வரை. (நபியே) கூறுவீராக! “என் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நான் ஒரு மனிதராக, தூதராக தவிர (இதெற்கெல்லாம் சுயமாக ஆற்றல் பெற்றவனாக) இருக்கின்றேனா?”"},{"id":94,"translation":"மனிதர்களுக்கு நேர்வழி வந்தபோது, “ஒரு மனிதரையா தூதராக அல்லாஹ் அனுப்பினான்?” என்று அவர்கள் கூறியதைத் தவிர (அந்த நேர்வழியை) அவர்கள் நம்பிக்கை கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கவில்லை."},{"id":95,"translation":"(நபியே) கூறுவீராக! “பூமியில், நிம்மதியானவர்களாக நடந்து செல்கின்ற (வாழுகின்ற) வானவர்கள் இருந்திருந்தால் வானத்திலிருந்து வானவரையே ஒரு தூதராக அவர்களிடம் இறக்கியிருப்போம்."},{"id":96,"translation":"(நபியே) கூறுவீராக! “எனக்கிடையிலும் உங்களுக்கிடையிலும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிந்தவனாக உற்றுநோக்கியவனாக இருக்கிறான்."},{"id":97,"translation":"அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்துவானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். (அல்லாஹ்) எவரை வழி கெடுப்பானோ அவர்களுக்கு அவனையன்றி உதவியாளர்களை நீர் அறவே காணமாட்டீர். மறுமைநாளில் அவர்களைக் குருடர்களாகவும், ஊமையர்களாகவும், செவிடர்களாகவும் (ஆக்கி அவர்கள்) தங்கள் முகங்கள் மீது (நடந்து வரும்படி செய்து) ஒன்று திரட்டுவோம். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது அனல் தணியும் போதெல்லாம் கொழுந்து விட்டெரியும் நெருப்பை அவர்களுக்கு அதிகப்படுத்துவோம்."},{"id":98,"translation":"இதுதான் அவர்களின் தண்டனை. காரணம், நிச்சயமாக அவர்கள் நம் வசனங்களை நிராகரித்தனர். இன்னும், “நாங்கள் (மரணித்து) எலும்புகளாகவும், (மண்ணோடு மண்ணாக) மக்கியவர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக நாம் புதிய படைப்பாக எழுப்பப்படுவோமா?” என்று கூறினார்கள்."},{"id":99,"translation":"நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவர்கள் போன்றவர்களை படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா? அவர்களுக்கு ஒரு தவணையை அவன் ஏற்படுத்தி இருக்கிறான். அதில் சந்தேகமே இல்லை. அக்கிரமக்காரர்கள் ஏற்காமல் நிராகரிக்கவே செய்தார்கள்!"},{"id":100,"translation":"(நபியே!) கூறுவீராக! என் இறைவனுடைய அருளின் பொக்கிஷங்களை நீங்கள் (உங்களுக்கு) சொந்தமாக்கியவர்களாக இருந்திருந்தால், அப்போது (செல்வத்தை) தர்மம் செய்ய பயந்து (அதை) தடுத்துக் கொண்டிருப்பீர்கள். மனிதன் மகா கஞ்சனாக இருக்கிறான்."},{"id":101,"translation":"மேலும், திட்டவட்டமாக, நாம் மூஸாவிற்கு தெளிவான ஒன்பது அத்தாட்சிகளைக் கொடுத்தோம். ஆக, (நபியே) இஸ்ராயீலின் சந்ததிகளைக் கேட்பீராக, அவர் (மூஸா) அவர்களிடம் வந்தபோது (நடந்தது என்ன? என்று). ஆக, ஃபிர்அவ்ன் அவரை நோக்கி “மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியக்காரராக கருதுகிறேன்” என்று கூறினான்."},{"id":102,"translation":"(மூஸா) கூறினார்: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனைத் தவிர (வேறு எவரும்) தெளிவான அத்தாட்சிகளாக இவற்றை இறக்கி வைக்கவில்லை என்பதை திட்டவட்டமாக நீ அறிந்தாய். ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் உன்னை அழிந்துவிடுபவனாக கருதுகிறேன்”"},{"id":103,"translation":"ஆக, (மூஸா இன்னும் அவரை நம்பிக்கை கொண்ட) இவர்களை (ஃபிர்அவ்ன் தன்) பூமியிலிருந்து விரட்டிவிடுவதற்கு நாடினான். ஆகவே, அவனையும் அவனுடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்."},{"id":104,"translation":"இன்னும், இதன் பின்னர், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு நாம் கூறினோம்: ‘‘நீங்கள் இப்பூமியில் வசியுங்கள். மறுமையின் வாக்குறுதி வந்தால், உங்கள் அனைவரையும் ஒன்றோடு ஒன்று கலந்தவர்களாக நாம் கொண்டு வருவோம்."},{"id":105,"translation":"இன்னும், உண்மையுடன் இ(ந்த வேதத்)தை இறக்கினோம். மேலும், உண்மையுடனேயே இ(ந்த வேதமான)து இறங்கியது. இன்னும், (நபியே!) நற்செய்தி கூறுபவராகவும் (அச்சமூட்டி) எச்சரிப்பவராகவுமே தவிர நாம் உம்மை அனுப்பவில்லை."},{"id":106,"translation":"(நபியே!) குர்ஆனை நாம் தெளிவுபடுத்தி (இறக்கி)னோம், மக்களுக்கு இதை நீர் கவனத்துடன் (தெளிவாக) நிதானமாக ஓதுவதற்காக. இன்னும், இதை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்."},{"id":107,"translation":"(நபியே!) கூறுவீராக! “(மக்களே) நீங்கள் (இதை) நம்பிக்கை கொள்ளுங்கள். அல்லது, நம்பிக்கை கொள்ளாதீர்கள். நிச்சயமாக இதற்கு முன்னர் (முந்திய வேதங்களின் உண்மையான) கல்வி கொடுக்கப்பட்(டு அதன்படி இதை நம்பிக்கை கொண்)டவர்கள், - அவர்கள் மீது (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் (அல்லாஹ்விற்கு) சிரம் பணிந்தவர்களாக தாடைகள் மீது விழுவார்கள்."},{"id":108,"translation":"இன்னும், கூறுவார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன்; நிச்சயமாக எங்கள் இறைவனின் வாக்கு நிறைவேறக்கூடியதாகவே இருக்கிறது.”"},{"id":109,"translation":"இன்னும், அழுதவர்களாக தாடைகள் மீது விழுவார்கள். மேலும் இ(ந்த வேதமான)து அவர்களுக்கு (அல்லாஹ்விற்கு முன்) உள்ளச்சத்தை அதிகப்படுத்துகிறது."},{"id":110,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது, ரஹ்மான் என்று அழையுங்கள்; (அவ்விரு பெயர்களில்) எதை (கூறி) நீங்கள் (அவனை) அழைத்தாலும் அவனுக்கு (இன்னும்) மிக அழகிய (பல) பெயர்கள் உள்ளன.” மேலும், (நபியே!) உமது தொழுகையில் (அதில் ஓதப்படும் குர்ஆனையும் பிரார்த்தனையையும்) மிக சப்தமிட்டு ஓதாதீர்! இன்னும், அதில் மிக மெதுவாகவும் ஓதாதீர்! அதற்கிடையில் (மிதமான) ஒரு வழியைத் தேடுவீராக!"},{"id":111,"translation":"இன்னும், (நபியே!) கூறுவீராக! “புகழனைத்தும் அல்லாஹ்விற்குரியதே! அவன் (யாரையும் தனக்கு) குழந்தையாக எடுக்கவில்லை. மேலும், ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. இன்னும், பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் யாரும் அறவே இல்லை.” மேலும், (நபியே!) அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக!"}]},{"id":18,"verses":[{"id":1,"translation":"தன் அடியார் (முஹம்மது நபி) மீது வேதத்தை இறக்கிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரியன. இன்னும், அ(ந்த வேதத்)தில் அவன் ஒரு குறையையும் ஆக்கவில்லை."},{"id":2,"translation":"அது (முரன்பாடுகள் அற்ற) நேரானதும் நீதமானதுமாகும். (நிராகரிப்பவர்களுக்கு) அவன் புறத்திலிருந்து கடுமையான தண்டனையை அது எச்சரிப்பதற்காகவும் நன்மைகளை செய்கின்ற நம்பிக்கையாளர்களுக்கு - நிச்சயமாக அவர்களுக்கு அழகிய கூலி(யாகிய சொர்க்கம்) உண்டு - என்று நற்செய்தி கூறுவதற்காகவும் (அதை இறக்கினான்)."},{"id":3,"translation":"அ(ந்த சொர்க்கத்)தில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":4,"translation":"இன்னும், அல்லாஹ், (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான் என்று கூறுபவர்களை அது எச்சரிப்பதற்காகவும் (அதை இறக்கினான்)."},{"id":5,"translation":"அவனைப் பற்றி (-அல்லாஹ்வைப் பற்றி) எந்த அறிவும் அவர்களுக்கும் இல்லை, அவர்களுடைய மூதாதைகளுக்கும் இல்லை. அவர்களின் வாய்களிலிருந்து வெளிப்படும் (இந்த) சொல் பெரும் பாவமாக இருக்கிறது. அவர்கள் பொய்யைத் தவிர கூறுவதில்லை. (இறைவனைப் பற்றி இணைவைப்பாளர்கள் பேசுவதெல்லாம் பொய்யாகும்.)"},{"id":6,"translation":"ஆக, (நபியே!) அவர்கள் இந்த குர்ஆனை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக (அவர்கள் மீது) துக்கப்பட்டு (விலகி சென்ற) அவர்களுடைய (காலடி) சுவடுகள் மீதே உம் உயிரை நீர் அழித்துக் கொள்வீரோ!"},{"id":7,"translation":"நிச்சயமாக நாம், பூமியின் மேலுள்ளதை அதற்கு அலங்காரமாக ஆக்கினோம், அவர்களில் யார் செயலால் மிக அழகியவர் என்று அவர்களை நாம் சோதிப்பதற்காக."},{"id":8,"translation":"இன்னும், நிச்சயமாக நாம் அதன் மேலுள்ளவற்றை (காய்ந்துபோன) செடிகொடியற்ற சமமான தரையாக (மண்ணாக) ஆக்கிவிடுவோம்."},{"id":9,"translation":"நிச்சயமாக குகை வாசிகளும் கற்பலகையில் பெயர்கள் எழுதப்பட்டோரும் நம் அத்தாட்சிகளில் ஓர் அற்புதமாக இருக்கிறார்கள் என்று எண்ணுகிறீரா?"},{"id":10,"translation":"அவ்வாலிபர்கள் குகையின் பக்கம் ஒதுங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா உன் புறத்திலிருந்து எங்களுக்கு அருளைத் தா! இன்னும், எங்கள் காரியத்தில் (நாங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று) எங்களுக்கு நல்லறிவை(யும் நல் வழியையும்) ஏற்படுத்திக் கொடு!”"},{"id":11,"translation":"ஆக, எண்ணப்பட்ட (பல) ஆண்டுகள் அக்குகையில் (அவர்கள் தூங்கும்படி) அவர்களுடைய காதுகளின் மீது (வெளி ஓசைகளை தடுக்கக்கூடிய ஒரு திரையை) அமைத்(து அவர்களை நிம்மதியாக தூங்க வைத்)தோம்."},{"id":12,"translation":"பிறகு, இரு பிரிவுகளில் யார் அவர்கள் தங்கிய (கால) எல்லையை மிகச் சரியாக கணக்கிடுபவர் என்று நாம் (மக்களுக்கு தெரியும் விதமாக) அறிவதற்காக நாம் அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம்."},{"id":13,"translation":"நாம் உமக்கு அவர்களின் செய்தியை உண்மையுடன் விவரிக்கிறோம். நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை நம்பிக்கை கொண்ட வாலிபர்கள். இன்னும், அவர்களுக்கு (நம்பிக்கை என்னும்) நேர்வழியை அதிகப்படுத்தினோம்."},{"id":14,"translation":"அவர்கள் (தங்கள் சமுதாயத்தின் முன்) நின்றவர்களாக, “வானங்கள் இன்னும் பூமியின் இறைவனே எங்கள் இறைவன். அவனையன்றி வேறு ஒரு கடவுளை அழைக்கவே மாட்டோம். (அவ்வாறு நாங்கள் வேறு கடவுளை வணங்கி விட்டால்) அப்போது, எல்லை மீறிய பொய்யை திட்டவட்டமாக கூறி விடுவோம்” என்று அவர்கள் கூறியபோது அவர்களுடைய உள்ளங்களை (இறை நம்பிக்கையில்) உறுதிபடுத்தினோம்."},{"id":15,"translation":"“எங்கள் சமுதாயமாகிய இவர்கள், அவனையன்றி பல கடவுள்களை எடுத்துக் கொண்டனர். அவர்கள் விஷயத்தில் (அவை எல்லாம் கடவுள்கள்தான் என்பதை நிரூபிக்க) தெளிவான ஆதாரத்தை அவர்கள் கொண்டு வர வேண்டாமா? ஆக, அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவனை விட மகா தீயவன் யார்?”"},{"id":16,"translation":"(அவர்களில் சிலர் மற்றவர்களை நோக்கி கூறினார்கள்:) “(சிலைகளை வணங்குகின்ற) அவர்களையும் அல்லாஹ்வைத் தவிர அவர்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நீங்கள் விலகி செல்லும்போது (உங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக) குகையின் பக்கம் ஒதுங்குங்கள். உங்கள் இறைவன் உங்களுக்கு தன் அருளிலிருந்து (தேவையான வாழ்வாதாரத்தை) விரிவாக்கி கொடுப்பான். இன்னும் உங்கள் காரியத்தில் இலகுவை உங்களுக்கு ஏற்படுத்துவான்."},{"id":17,"translation":"இன்னும், சூரியன் அது உதிக்கும்போது அவர்களின் குகையை விட்டு வலது பக்கமாக சாய்வதையும் அது மறையும்போது அவர்களை இடது பக்கமாக வெட்டிவி(ட்)டு (கடந்து செல்)வதையும் பார்ப்பீர். அவர்கள் (அக்குகையில் அறை போன்ற) ஒரு விசாலமான பள்ளப்பகுதியில் இருக்கிறார்கள். இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும். எவரை அல்லாஹ் நேர்வழி செலுத்துகிறானோ அவர்தான் நேர்வழி பெற்றவர். இன்னும், எவரை அவன் வழி கெடுப்பானோ அவருக்கு நல்லறிவு புகட்டுகின்ற நண்பனை காணவே மாட்டீர்."},{"id":18,"translation":"இன்னும், அவர்களோ உறங்குபவர்களாக இருக்கும் நிலையில் அவர்களை விழித்திருப்பவர்களாக கருதுவீர். மேலும், (அவர்களின் உடல்களை மண் தின்றுவிடாமல் இருக்க) அவர்களை வலது பக்கமாகவும் இடது பக்கமாகவும் புரட்டுகிறோம். அவர்களுடைய நாயோ தன் இரு குடங்கைகளையும் முற்றத்தில் விரித்து (உட்கார்ந்து)ள்ளது. நீர் அவர்களை எட்டிப்பார்த்தால் அவர்களை விட்டுத் திரும்பி விரண்டு ஓடி இருப்பீர். இன்னும், உமது உள்ளம் அவர்களின் பயத்தால் நிரப்பப்பட்டிருக்கும்."},{"id":19,"translation":"(நீண்ட காலமாகியும் எவ்வித மாற்றமும் அவர்களில் ஏற்படாதவாறு அவர்களை பாதுகாத்த) அவ்வாறே, அவர்கள் தங்களுக்கு மத்தியில் (தாங்கள் தூங்கிய கால அளவைப் பற்றி அவர்களுக்குள்) கேட்டுக் கொள்வதற்காக அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பினோம். “எத்தனை(க் காலம்) தங்கினீர்கள் என்று அவர்களில் ஒருவர் கூறினார். (மற்றவர்கள்) கூறினார்கள்: “ஒரு நாள்; அல்லது, ஒரு நாளின் சில பகுதி தங்கினோம்.”“உங்கள் இறைவன் நீங்கள் தங்கியதை மிக அறிந்தவன். ஆகவே, உங்களில் ஒருவரை உங்கள் வெள்ளி நாணயமாகிய இதைக் கொண்டு பட்டணத்திற்கு அனுப்புங்கள், அவர் அதில் மிக சுத்தமான (-ஹலாலான) உணவை விற்பவர் யார் என்று கவனித்து அவரிடமிருந்து உங்களுக்கு ஓர் உணவைக் கொண்டு வரட்டும். இன்னும், அவர் மதிநுட்பமாக நடக்கட்டும். மேலும், உங்களைப் பற்றி (நகரத்தில் எவர்) ஒருவருக்கும் உணர்த்திவிட வேண்டாம்” என்று(ம்) அவர்கள் கூறினார்கள்."},{"id":20,"translation":"நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால் உங்களை ஏசுவார்கள்; (அல்லது, கொன்று விடுவார்கள்;) அல்லது, உங்களை தங்கள் மார்க்கத்திற்கு திருப்பி விடுவார்கள். அவ்வாறு நடந்துவிட்டால் ஒருபோதும் நீங்கள் வெற்றி பெறவே மாட்டீர்கள்."},{"id":21,"translation":"அவர்கள் தங்களது (மறுமை) விஷயத்தில் தங்களுக்கிடையில் தர்க்கித்த போது, நிச்சயம் அல்லாஹ்வின் வாக்கு உண்மையாகும்; இன்னும், நிச்சயம் மறுமை - அ(து நிகழ்வ)தில் அறவே சந்தேகம் இல்லை என்று அவர்கள் அறிவதற்காக (அக்குகைவாசிகளை எழுப்பிய) அவ்வாறே, அவர்களை (அந்த ஊர் மக்களுக்கு) காண்பித்து கொடுத்தோம். ஆக, அவர்களுக்கருகில் ஒரு கட்டடத்தை எழுப்புங்கள், அவர்களின் இறைவன் அவர்களை மிக அறிந்தவன் என்று (அந்த ஊர் மக்கள்) கூறினார்கள். அவர்களின் விஷயத்தில் மிகைத்தவர்கள் கூறினார்கள்: “நிச்சயம் அவர்களுக்கருகில் ஒரு தொழுமிடத்தை (மஸ்ஜிதை) நாம் ஏற்படுத்துவோம்.”"},{"id":22,"translation":"“(அக்குகைவாசிகள்) மூவர் (இருந்தனர்), அவர்களில் நான்காவதாக அவர்களின் நாய் இருந்தது” என்று (பிற்காலத்தில் சிலர்) கூறுகிறார்கள். இன்னும், (சிலர்) கூறுகிறார்கள்: “(அவர்கள்) ஐவர் (இருந்தனர்), அவர்களில் ஆறாவதாக அவர்களின் நாய் இருந்தது” என்று” (இந்த இரு வகையான கூற்றுகளும்) மறைவான அறிவைப்பற்றி கண்மூடித்தனமாக பேச்சாகும். (சிலர்) கூறுகிறார்கள்: “(அவர்கள்) ஏழு நபர்கள். இன்னும் அவர்களில் எட்டாவதாக அவர்களின் நாய் இருந்தது. (நபியே!) கூறுவீராக! “என் இறைவன் அவர்களின் எண்ணிக்கையை மிக அறிந்தவன். குறைவானவர்களைத் தவிர அவர்களைப் பற்றி அறிய மாட்டார்கள்.” ஆகவே, அவர்களைப் பற்றி வெளிப்படையான விவாதமாகவே தவிர (இவர்களிடம்) விவாதிக்காதீர். இன்னும், இவர்களில் ஒருவரிடமும் அவர்களைப் பற்றி விளக்கம் (எதுவும்) கேட்காதீர்."},{"id":23,"translation":"(நபியே!) ஒரு காரியத்தைப் பற்றி, நிச்சயம் நான் நாளை அதை செய்பவன் என்று அறவே கூறாதீர்!"},{"id":24,"translation":"அல்லாஹ் நாடினால் தவிர (என்று). இன்னும், நீர் மறந்து விட்டால் (பிறகு நினைவு வந்தவுடன்) உம் இறைவனை நினைவு கூர்வீராக! இன்னும், என் இறைவன் இதைவிட மிக சரியான அறிவிற்கு மிக நெருக்கமானதன் பக்கம் எனக்கு அவன் நேர்வழி காட்டக்கூடும் என்று (அவன் மீது நம்பிக்கை வைத்து) கூறுவீராக!"},{"id":25,"translation":"மேலும், (அவர்கள்) தங்கள் குகையில் முன்னூறு ஆண்டுகள் (உறங்கியவர்களாக) தங்கினர். இன்னும், (சிலர் அவர்கள் தங்கிய கால அளவில்) ஒன்பது ஆண்டுகளை அதிகப்படுத்தி (கூறுகின்ற)னர்."},{"id":26,"translation":"(நபியே!) கூறுவீராக! (இன்று வரை) அவர்கள் தங்கிய(மொத்த காலத்)தை அல்லாஹ் (ஒருவன்)தான் மிக அறிந்தவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ள மறைவானவை (-அவற்றைப் பற்றிய அறிவு) அவனுக்கே உரியன. அவன் துல்லியமாகப் பார்ப்பவன், இன்னும் துல்லியமாகக் கேட்பவன். அவர்களுக்கு அவனையன்றி பாதுகாவலன் ஒருவனும் இல்லை. இன்னும், அவன் தனது அதிகாரத்தில் எவ(ர் ஒருவ)ரையும் கூட்டாக்க மாட்டான்."},{"id":27,"translation":"(நபியே! ஒவ்வொரு நாளும்) உம் இறைவனின் வேதத்தில் உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டதை ஓதுவீராக! (அதன்படி செயல்படுவீராக!) அவனுடைய வாக்கியங்களை மாற்றுபவர் அறவே இல்லை. இன்னும், அவனையன்றி அடைக்கலம் பெறுமிடத்தை காணவே மாட்டீர்"},{"id":28,"translation":"மேலும், தங்கள் இறைவனை அவனுடைய முகத்தை நாடியவர்களாக காலையிலும் மாலையிலும் (அவனை தொழுது) பிரார்த்திப்பவர்களுடன் உம்மை தடுத்து (அமர) வைப்பீராக! இன்னும், உலக வாழ்க்கையின் அலங்காரத்தை நீர் விரும்பியவராக அவர்களை விட்டு உம் இரு கண்களும் அகன்றிட வேண்டாம். இன்னும், எவனுடைய உள்ளத்தை நம் நினைவை மறந்ததாக ஆக்கிவிட்டோமோ அவனுக்குக் கீழ்ப்படிந்து விடாதீர்! அவன் தனது (கெட்ட) விருப்பத்தையே பின்பற்றினான். மேலும், அவனுடைய காரியம் எல்லை மீறியதாக (நாசமடைந்ததாக) ஆகிவிட்டது."},{"id":29,"translation":"இன்னும், (நபியே!) உங்கள் இறைவனிடமிருந்து உண்மை(யான இந்த வேதம்) வந்துவிட்டது. விரும்பியவர்கள் (இதை) நம்பிக்கை கொள்ளலாம். விரும்பியவர்கள் (இதை) நிராகரித்து விடலாம். நிச்சயமாக நாம், (இதை நிராகரிக்கின்ற) தீயவர்களுக்கு நரக நெருப்பை தயார்படுத்தியுள்ளோம். அதன் சுவர் அவர்களை சூழ்ந்துள்ளது. மேலும், அவர்கள் இரட்சிப்பை தேடினால் முகங்களை பொசுக்கக்கூடிய முற்றிலும் சூடேறி உருகிப்போன உலோக திரவத்தைப் போன்ற நீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். அது மகா கெட்ட பானமாகும். இன்னும், அது ஒரு தீய ஓய்விடம் ஆகும்."},{"id":30,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ, - (இவ்வாறு) மிக அழகிய செயலை செய்தவர்களின் கூலியை நிச்சயமாக நாம் வீணாக்க மாட்டோம்."},{"id":31,"translation":"அவர்கள், - ‘அத்ன்’ சொர்க்கங்கள் அவர்களுக்கு உண்டு. அவர்களின் (இல்லங்களுக்கு) கீழ் நதிகள் ஓடும். அவற்றில் தங்க வளையல்களினால் அவர்கள் அலங்காரம் செய்யப்படுவார்கள். இன்னும், மென்மையான, தடிப்பமான பட்டு துணிகளிலிருந்து (விரும்பிய) பச்சை நிற ஆடைகளை அவர்கள் அணிவார்கள். அவற்றில், கட்டில்கள் மீது(ள்ள தலையணைகளில்) சாய்ந்தவர்களாக (ஒருவர் மற்றவரிடம் பேசுவார்கள்). இதுவே சிறந்த கூலியாகும். இன்னும், இதுவே அழகிய ஓய்விடமாகும்."},{"id":32,"translation":"மேலும், ஓர் உதாரணத்தை அவர்களுக்கு விவரிப்பீராக! இரு ஆடவர்கள், அவ்விருவரில் ஒருவருக்கு திராட்சைகளினால் நிரம்பிய இரு தோட்டங்களை ஆக்கினோம். இன்னும், அவ்விரண்டை சுற்றியும் (அதிகமான) பேரிட்ச மரங்களை ஏற்படுத்தினோம். மேலும், அவ்விரண்டுக்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் ஆக்கினோம்."},{"id":33,"translation":"அவ்விரு தோட்டங்களும் தத்தமது கனிகளை (நிறைவாக)த் தந்தன. அவற்றில் எதையும் அவை குறைக்கவில்லை. இன்னும், அவ்விரண்டுக்கும் இடையில் ஓர் ஆற்றை பிளந்தோடச் செய்தோம்."},{"id":34,"translation":"மேலும், அவனுக்கு (இவ்விரண்டிலிருந்தும்) கனிகள் (பலவும் இவை தவிர வேறு பல செல்வங்களும்) இருந்தன. ஆக, அவனோ தன் நண்பனை நோக்கி, - அவரிடம் பேசியவனாக – (அல்லாஹ்வை மறுக்கின்ற) நான் உன்னை விட செல்வத்தால் மிக அதிகமானவன், குடும்பத்தால் மிக கண்ணியமுள்ளவன் என்று கூறினான்."},{"id":35,"translation":"அவனோ (இறைவனுக்கு நன்றி செலுத்தாமல்) தனக்குத் தானே தீங்கிழைத்தவனாக தனது தோட்டத்தில் (பெருமையோடு) நுழைந்தான். இது அழியும் என்று ஒருபோதும் நான் எண்ணவில்லை என்று கூறினான்."},{"id":36,"translation":"இன்னும், “மறுமை நிகழும் என்றும் நான் எண்ணவில்லை. நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் இதைவிட சிறந்த (இடத்)தை (எனக்கு) மீளுமிடமாக நிச்சயம் நான் பெறுவேன்.”"},{"id":37,"translation":"அவரது தோழர், - அவரோ அவனிடம் பேசியவராக - அவனுக்கு கூறினார்: “உன்னை (உன் மூல தந்தை ஆதமை) மண்ணிலிருந்தும், பிறகு (உன்னை) இந்திரியத்திலிருந்தும் படைத்து; பிறகு, உன்னை ஓர் ஆடவராக சீரமைத்தானே அப்படிப்பட்ட (இறை)வனை நீ நிராகரிக்கிறாயா?"},{"id":38,"translation":"எனினும், நான் அவ்வாறு செய்யமாட்டேன். அல்லாஹ்வாகிய அவன்தான் என் இறைவன். என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன்.”"},{"id":39,"translation":"மேலும், உன் தோட்டத்தில் நீ நுழைந்தபோது, “இது அல்லாஹ் நாடி (எனக்கு) கிடைத்தது, அல்லாஹ்வைக் கொண்டே தவிர (நமக்கு) அறவே ஆற்றல் இல்லை” என்று நீ கூறியிருக்க வேண்டாமா? நான் உன்னைவிட செல்வத்திலும் சந்ததியிலும் குறைந்தவனாக இருப்பதாக என்னை நீ பார்த்தால்,"},{"id":40,"translation":"ஆக, உன் தோட்டத்தை விட சிறந்ததை என் இறைவன் எனக்குத் தரக்கூடும். இன்னும் அ(ந்)த (உன் தோட்டத்தி)ன் மீது வானத்திலிருந்து அழிவை (இரவில்) அவன் அனுப்பக்கூடும். (அப்போது அத்தோட்டம்) வழுவழுப்பான வெறும் தரையாக காலையில் ஆகிவிடும்."},{"id":41,"translation":"“அல்லது, அதன் தண்ணீர் (பூமியின்) ஆழத்தில் சென்று விடக் கூடும். ஆகவே, அதைத் தேடி (மேலே) கொண்டு வருவதற்கு அறவே நீ இயலமாட்டாய்.”"},{"id":42,"translation":"இன்னும், அவனுடைய கனிகள் (இதர செல்வங்கள்) எல்லாம் அழிந்தன. ஆக, தான் அதில் செலவழித்ததின் மீது (வருத்தப்பட்டு) தன் இரு கைகளையும் அவன் புரட்ட ஆரம்பித்தான். இன்னும், அதன் செடி கொடிகளை விட்டு அ(வனது தோட்டமான)து வெறுமையாகி விட்டது. மேலும், அவன் (மறுமையில்) கூறுவான்: “என் இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்காமல் இருந்திருக்க வேண்டுமே!”"},{"id":43,"translation":"மேலும், அல்லாஹ்வை அன்றி அவனுக்கு உதவுகிற கூட்டம் எதுவும் அவனுக்கு இருக்கவில்லை. இன்னும், அவன் தன்னைத் தானே பாதுகாப்பவனாகவும் இருக்கவில்லை."},{"id":44,"translation":"அந்நேரத்தில் உதவி (நட்பு, அதிகாரம் அனைத்தும்) உண்மையான அல்லாஹ்விற்கே உரியது. அவன் நன்மையாலும் சிறந்தவன், முடிவாலும் சிறந்தவன் ஆவான்."},{"id":45,"translation":"மேலும், (நபியே!) அவர்களுக்கு உலக வாழ்க்கையின் தன்மை மழை நீரைப் போன்றது என்று விவரிப்பீராக! (அதாவது,) அதை வானத்திலிருந்து நாம் இறக்கினோம். பூமியின் தாவரம் அதனுடன் கலந்(து வளர்ந்)தது. (பிறகு சில காலத்தில்) காற்றுகள் அதை அடித்து வீசும்படியான காய்ந்த சருகாக அது மாறி விட்டது. (இது போன்றுதான் இந்த உலக வாழ்க்கையும் ஒன்றுமில்லாமல் ஆகிவிடும்.) மேலும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்."},{"id":46,"translation":"செல்வமும் ஆண்பிள்ளைகளும் உலக வாழ்க்கையின் அலங்காரமாகும். ஆனால், என்றென்றும் நிலையாக இருக்கக்கூடிய நற்செயல்கள்தான் உம் இறைவனிடம் (உங்களுக்கு) நன்மையாலும் சிறந்தவை; இன்னும், ஆசையாலும் சிறந்தவையாகும்."},{"id":47,"translation":"இன்னும், மலைகளை (அவற்றின் இடங்களிலிருந்து) நாம் பெயர்த்துவிடுகின்ற நாளை நினைவு கூர்வீராக! இன்னும், பூமியை - (அதுவோ அதில் உள்ள அனைத்தையும் விட்டு நீங்கி, செடி கொடிகள், மேடு பள்ளம்) எதுவுமின்றி தெளிவாக சமதளமாக பார்ப்பீர். இன்னும், (அந்த மறுமை நாளில்) அவர்களை ஒன்று திரட்டுவோம். ஆக, அவர்களில் ஒருவரையும் (எழுப்பாமல்) விடமாட்டோம்."},{"id":48,"translation":"இன்னும், உம் இறைவன் முன், வரிசையாக (எல்லோரும்) சமர்ப்பிக்கப்படுவார்கள். (அப்போது அவன் கூறுவான்:) “நாம் உங்களை (தாயின் வயிற்றிலிருந்து) முதல் முறைப் படைத்தது போன்றே (இப்போது) எங்களிடம் வந்துவிட்டீர்கள். மாறாக, (உங்களை உயிர்ப்பிப்பதற்கு) வாக்களிக்கப்பட்ட ஒரு நேரத்தை உங்களுக்கு நாம் ஏற்படுத்தவே மாட்டோம் என்று நீங்கள் (உலகில் வாழும்போது) பிதற்றினீர்கள்.”"},{"id":49,"translation":"இன்னும், (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (மக்கள் முன்) வைக்கப்படும். ஆக, குற்றவாளிகளோ அ(ந்த புத்தகத்)தில் உள்ளவற்றினால் பயந்தவர்களாக இருப்பதைப் பார்ப்பீர். இன்னும், எங்கள் நாசமே! இந்த புத்தகத்திற்கு என்ன? (குற்றங்களில்) சிறியதையும் பெரியதையும் அவற்றைக் கணக்கிட்டே தவிர (-அவற்றைப் பதிவு செய்து வைக்காமல்) அது விடவில்லையே! எனக் கூறுவார்கள். அவர்கள் செய்ததை (எல்லாம் அவர்கள் தங்கள் கண்களுக்கு) முன்னால் காண்பார்கள். இன்னும், உம் இறைவன் (யார்) ஒருவருக்கும் (அவரின் நன்மையை குறைத்தோ, பாவத்தை கூட்டியோ) தீங்கிழைக்க மாட்டான்."},{"id":50,"translation":"இன்னும், (நபியே!) ஆதமுக்கு சிரம் பணியுங்கள் என்று வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, அவர்கள் (எல்லோரும்) சிரம் பணிந்தனர், இப்லீஸைத் தவிர. அவன் ஜின்களில் ஒருவனாக இருந்தான். ஆக, அவன் தன் இறைவனின் கட்டளையை மீறினான். ஆக, அவனையும் அவனது சந்ததியையும் என்னையன்றி (உங்கள்) நண்பர்களாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்களோ உங்களுக்கு எதிரிகள் ஆவார்கள். (அல்லாஹ்வின் நட்பை தவிர்த்து விட்டு ஷைத்தானை நண்பனாக மாற்றிய அந்த) தீயவர்களுக்கு அவன் மிக கெட்ட மாற்றமாக இருக்கிறான்."},{"id":51,"translation":"வானங்கள்; இன்னும், பூமியை படைத்ததிலும், (அது மட்டுமா,) அவர்களை படைத்ததிலும் (என் உதவிக்கு) நான் அவர்களை ஆஜராக்கவில்லை. மேலும், வழிகெடுப்பவர்களை (எனக்கு) உதவியாளர்களாக நான் எடுத்துக் கொள்பவனாகவும் இருக்கவில்லை."},{"id":52,"translation":"இன்னும், நீங்கள் பிதற்றிக்கொண்டிருந்த என் இணைகளை (உங்கள் உதவிக்கு) அழையுங்கள் என (இணைவைத்து வணங்கியவர்களை நோக்கி) அவன் கூறுகின்ற நாளை (நபியே! அவர்களுக்கு நினைவு கூர்வீராக). ஆக, அவர்கள் (-இணைவைத்தவர்கள்) அவர்களை (-இணைவைக்கப்பட்ட பொய்யான தெய்வங்களை) அழைப்பார்கள். (ஆனால்) அவர்கள் அவர்களுக்கு பதிலளிக்க மாட்டார்கள். இன்னும், அவர்களுக்கு மத்தியில் ஓர் அழிவிடத்தை (-நரகத்தை) ஆக்குவோம். (அதில் அவர்கள் எல்லோரும் விழுந்து எரிவார்கள்.)"},{"id":53,"translation":"இன்னும், குற்றவாளிகள் நரகத்தை பார்த்து, நிச்சயமாக தாங்கள் அதில் விழக்கூடியவர்கள்தான் என்று உறுதி கொள்வார்கள். மேலும், அ(ந்த நரகத்)தை விட்டு விலகி செல்லுமிடத்தை அவர்கள் (தங்களுக்கு) காண மாட்டார்கள்."},{"id":54,"translation":"இன்னும், இந்த குர்ஆனில் மக்களுக்காக எல்லா உதாரணங்களையும் திட்டவட்டமாக விவரித்து விட்டோம். ஆனால், (நிராகரிக்கின்ற) மனிதன் (ஒரே ஓர் இறைவனை மட்டும் வணங்குவதை எதிர்த்து) மிக அதிகம் வாதிடுபவனாக இருக்கிறான்."},{"id":55,"translation":"இன்னும், மக்களுக்கு நேர்வழி வந்தபோது (அதை ஏற்று) அவர்கள் நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவதை விட்டும் அவர்களைத் தடுக்கவில்லை, முன்னோரின் நடைமுறை அவர்களுக்கு வருவதை; அல்லது, கண்முன் (வெளிப்படையாக, திடீரென) தண்டனை அவர்களுக்கு வருவதை (அவர்கள் எதிர்பார்ப்பதே) தவிர."},{"id":56,"translation":"இன்னும், நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிப்பவர்களாகவுமே தவிர தூதர்களை நாம் அனுப்பமாட்டோம். மாறாக, அசத்தியத்தைக் கொண்டு சத்தியத்தை அழிப்பதற்காக நிராகரித்தவர்கள் அ(ந்த அசத்தியத்)தைக் கொண்டு வாதிடுகிறார்கள். இன்னும், என் வசனங்களையும் அவர்கள் எதைக் கொண்டு எச்சரிக்கப்பட்டார்களோ அதையும் அவர்கள் கேலியாக எடுத்துக் கொண்டனர்."},{"id":57,"translation":"இன்னும், எவர் தன் இறைவனின் வசனங்களைக் கொண்டு அறிவுரை கூறப்பட்டாரோ, இன்னும், அவற்றைப் புறக்கணித்து, தன் இரு கரங்களும் முற்படுத்திய (தீய)வற்றை மறந்தானோ அவனை விட மகா தீயவன் யார்? அ(ந்த சத்தியத்)தை அவர்கள் புரிந்து கொள்வதை தடுக்கின்ற மூடிகளை அவர்களின் உள்ளங்கள் மீதும், அவர்களுடைய காதுகள் மீது கனத்தையும் (-செவிட்டுத் தனத்தையும்) நாம் நிச்சயமாக ஆக்கினோம். மேலும், (நபியே!) நீர் அவர்களை நேர்வழிக்கு அழைத்தால், அப்போதும் அவர்கள் அறவே நேர்வழி பெற மாட்டார்கள்."},{"id":58,"translation":"இன்னும், உம் இறைவன் மகா மன்னிப்பாளன், (நிறைவான) கருணையுடையவன் ஆவான். அவர்கள் செய்தவற்றுக்காக அவன் அவர்களை தண்டித்தால் தண்டனையை அவர்களுக்கு தீவிரப்படுத்தியிருப்பான். மாறாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நேரம் இருக்கிறது. அதிலிருந்து (தப்பிக்க) ஒதுங்குமிடத்தை (அவர்கள்) அறவே பெற மாட்டார்கள்."},{"id":59,"translation":"அந்த ஊர்(வாசி)கள், அவர்கள் தீங்கிழைத்தபோது அவர்களை அழித்தோம். இன்னும், அவர்களின் அழிவிற்காக வாக்களிக்கப்பட்ட ஒரு நேரத்தை நாம் ஆக்கினோம்."},{"id":60,"translation":"இன்னும், மூஸா தன்(னுடன் இருந்த) வாலிபரை நோக்கி “இரு கடல்களும் இணைகின்ற இடத்தை நான் அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது, நீண்டதொரு காலம் நடந்து சென்று கொண்டே இருப்பேன்” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":61,"translation":"ஆக, அவ்விருவரும் அந்த இரண்டு (கடல்களு)ம் இணையும் இடத்தை அடைந்தபோது இருவரும் தங்கள் மீனை மறந்தனர். ஆக, அது கடலில் தன் வழியைச் சுரங்கம் போல் ஆக்கிக் கொண்டது."},{"id":62,"translation":"ஆக, (தாங்கள் தேடிச் சென்ற இடத்தை அறியாமல் அதை) அவ்விருவரும் கடந்து சென்றபோது (மூஸா) தன் வாலிபரை நோக்கி, “நம் உணவை நம்மிடம் கொண்டுவா. திட்டவட்டமாக இந்த நம் பயணத்தில் (அதிக) களைப்பைச் சந்தித்தோம்” என்று கூறினார்."},{"id":63,"translation":"(அந்த வாலிபர் மூஸாவை நோக்கி) அந்த கற்பாறை அருகில் நாம் (ஓய்வுக்காக) ஒதுங்கி (அங்கு தங்கி)ய போது (நடந்த அதிசயத்தை) நீர் பார்த்தீரா? ஆக, நிச்சயமாக நான் (அப்போது அந்த) மீனை(ப் பற்றிக் கூற) மறந்தேன். மேலும், அதைப் பற்றி நான் கூறுவதை எனக்கு மறக்கடிக்கவில்லை, ஷைத்தானைத் தவிர. இன்னும், (அவ்விடத்தில்) கடலில் (செல்ல) ஆச்சரியமான விதத்தில் அது தன் வழியை ஆக்கிக் கொண்டது” என்று கூறினார்."},{"id":64,"translation":"(மூஸா) கூறினார்: “நாம் தேடிக்கொண்டிருந்த (இடமான)து அதுதான்.” ஆக, அவ்விருவரும் (அவ்விடத்தைத்) தேடியவர்களாக தங்கள் (காலடி) சுவடுகள் மீதே (அவற்றை பின்பற்றி வந்த வழியே) திரும்பினார்கள்."},{"id":65,"translation":"ஆக, அவ்விருவரும் (அங்கு வந்தபோது) நம் அடியார்களில் ஓர் அடியாரைக் கண்டார்கள். நம்மிடமிருந்து அவருக்கு (சிறப்பான) கருணையை நாம் கொடுத்திருந்தோம். இன்னும், நம் புறத்திலிருந்து அவருக்கு கல்வி ஞானத்தையும் நாம் கற்பித்திருந்தோம்."},{"id":66,"translation":"மூஸா, அவரை நோக்கி “நீர் கற்பிக்கப்பட்டதிலிருந்து (சில) நல்லறிவை எனக்கு நீர் கற்பிப்பதற்காக நான் உம்மைப் பின்தொடர்ந்து வரலாமா?” என்று கூறினார்."},{"id":67,"translation":"அவர் கூறினார்: “என்னுடன் பொறுமையாக இருக்க நிச்சயமாக நீர் அறவே இயல மாட்டீர்.”"},{"id":68,"translation":"“எதை நீர் ஆழமாக சூழ்ந்தறியவில்லையோ (அதை நான் செய்யும்போது) அதன் மீது எப்படி நீர் பொறுமையாக இருப்பீர்.”"},{"id":69,"translation":"(மூஸா) கூறினார்: “அல்லாஹ் நாடினால் பொறுமையாளனாக என்னைக் காண்பீர். இன்னும், எந்த ஒரு காரியத்திலும் உமக்கு நான் மாறுசெய்ய மாட்டேன்.”"},{"id":70,"translation":"அவர் கூறினார்: “நீர் என்னைப் பின்தொடர்ந்தால் (நான் செய்யும்) எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் என்னிடம் கேள்வி கேட்காதீர், (அது குறித்த) விளக்கத்தை நான் கூற ஆரம்பிக்கும் வரை.”"},{"id":71,"translation":"ஆக, இருவரும் சென்றனர். இறுதியாக, கப்பலில் இருவரும் பயணித்த போது, அவர் அதில் ஓட்டையிட்டார். (உடனே) (மூஸா) கூறினார்: “இதில் உள்ளவர்களை நீர் மூழ்கடிப்பதற்காக அதில் ஓட்டையிட்டீரா? திட்டவட்டமாக மிக (அபாயகரமான) கெட்ட காரியத்தை நீர் செய்தீர்.”"},{"id":72,"translation":"அவர் கூறினார்: “என்னுடன் பொறுமையாக இருப்பதற்கு நிச்சயமாக நீர் இயலவே மாட்டீர் என்று நான் கூறவில்லையா?”"},{"id":73,"translation":"(மூஸா) கூறினார்: “நான் மறந்துவிட்ட காரணத்தால் என்னை நீர் குற்றம் பிடிக்காதீர். இன்னும், (உம்மோடு உள்ள) என் காரியத்தில் சிரமத்திற்கு என்னை கட்டாயப்படுத்தாதீர்”"},{"id":74,"translation":"ஆக. இருவரும் சென்றனர். இறுதியாக, இருவரும் (வழியில்) ஒரு சிறுவனைச் சந்தித்தபோது, ஆக, (அவர்) அவனைக் கொன்று விட்டார். (உடனே, மூஸா) கூறினார்: “ஓர் உயிரைக் கொன்ற குற்றம் (அதனிடம்) இல்லாமல் ஒரு பரிசுத்தமான உயிரைக் கொன்று விட்டீரா? திட்டவட்டமாக நீர் ஒரு மகா கொடிய செயலை செய்து விட்டீர்.”"},{"id":75,"translation":"அவர் கூறினார்: “என்னுடன் பொறுமையாக இருப்பதற்கு நிச்சயமாக நீர் இயலவே மாட்டீர்” என்று நான் உமக்கு கூறவில்லையா?”"},{"id":76,"translation":"(மூஸா) கூறினார்: “இதன் பின்னர் நான் (ஏதாவது) ஒரு விஷயத்தைப் பற்றி உம்மிடம் கேட்டால் என்னை (உம்முடன்) சேர்க்காதீர். (என்னை விடுவதற்குரிய) ஒரு காரணத்தை என்னிடம் திட்டமாக அடைந்தீர்.”"},{"id":77,"translation":"ஆக, இருவரும் (தொடர்ந்து) சென்றனர். இறுதியாக, அவ்விருவரும் ஓர் ஊராரிடம் வரவே அவ்வூராரிடம் அவ்விருவரும் உணவு கேட்டார்கள். ஆக, அவர்கள் அவ்விருவருக்கும் விருந்தளிக்க மறுத்தனர். பிறகு, அங்கு இடிந்து விழுவதற்கு நெருக்கமாக இருந்த ஒரு சுவற்றை அவ்விருவரும் கண்டனர். ஆக, அவர் அதை (செப்பனிட்டு விழாது) நிறுத்தினார். (அதற்கு மூஸா) கூறினார்: “நீர் நாடியிருந்தால் இதற்காக (இந்த ஊராரிடம்) ஒரு கூலியை எடுத்திருக்கலாமே!”"},{"id":78,"translation":"அவர் கூறினார்: எனக்கிடையிலும் உமக்கிடையிலும் இதுவே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும். நீர் பொறுமையாக இருக்க இயலாதவற்றின் விளக்கத்தை உமக்கு விரைவில் அறிவிப்பேன்."},{"id":79,"translation":"ஆக, அக்கப்பல், கடலில் (கூலி) வேலை செய்கிற ஏழைகளுக்கு உரியதாக இருக்கிறது. அதை நான் குறைபடுத்த நாடினேன். (ஏனென்றால், அக்கப்பல் செல்லும் வழியில்) அவர்களுக்கு முன் (தான் காணுகின்ற) எல்லா கப்பல்களையும் அபகரித்து எடுத்துக் கொள்கிற ஓர் (அநியாயக்கார) அரசன் இருக்கிறான். (அவனிடமிருந்து காப்பாற்றவே அதை குறைபடுத்தினேன்.)"},{"id":80,"translation":"ஆக, (கொலை செய்யப்பட்ட) அந்தச் சிறுவன் - அவனுடைய தந்தையும் தாயும் (நல்ல) நம்பிக்கையாளர்களாக இருந்தார்கள். அவன் (வாலிபத்தை அடைந்து) அவ்விருவரையும் அட்டூழியம் செய்வதற்கும், நிராகரிப்பதற்கும் கட்டாயப்படுத்தி விடுவான் என்று நாம் பயந்(து அப்படி செய்)தோம்."},{"id":81,"translation":"(கொல்லப்பட்ட) அ(ந்த சிறு)வனை விட சிறந்த தூய்மையான நல்லவரை, இன்னும் (தாய் தந்தை மீது) அதிக நெருக்கமான கருணையுடையவரை அவ்விருவரின் இறைவன் அவ்விருவருக்கும் பகரமாக கொடுப்பதை நாடினோம்."},{"id":82,"translation":"ஆக, (அந்தச்) சுவரோ (அந்த) நகரத்திலுள்ள இரு அனாதைக் குழந்தைகளுக்குரியதாக இருந்தது. இன்னும், அதற்குக் கீழ் அவ்விருவருக்குரிய புதையல் ஒன்று இருக்கிறது. அவ்விருவரின் தந்தை (மிக) நல்லவராக இருந்தார். ஆகவே, அவ்விருவரும் தங்கள் வாலிபத்தை அடைந்து, தங்கள் புதையலை வெளியே எடுக்க வேண்டும் என்பதை உம் இறைவன் நாடினான். (எனவே, நான் அந்தச் சுவரைச் செப்பனிட்டேன். இது,) உம் இறைவனின் அருளினால் (செய்யப்பட்டது). (மேற்படி நிகழ்ந்த) இவற்றை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. நீர் பொறுமையாக இருப்பதற்கு இயலாதவற்றின் விளக்கம் இதுதான்."},{"id":83,"translation":"(நபியே!) மேலும், துல்கர்னைன் பற்றி (அவர்கள்) உம்மிடம் கேட்கிறார்கள். “அவரைப் பற்றிய நல்லுபதேசத்தை உங்களுக்கு நான் ஓதுவேன்” என்று கூறுவீராக."},{"id":84,"translation":"நிச்சயமாக நாம் அவருக்குப் பூமியில் ஆதிக்கத்தைக் கொடுத்தோம். இன்னும், ஒவ்வொரு பொருளைப் பற்றி (-அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற) அறிவை அவருக்குக் கொடுத்தோம்."},{"id":85,"translation":"ஆக, அவர் (பூமியில்) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்."},{"id":86,"translation":"இறுதியாக, சூரியன் மறையும் இடத்தை (மேற்குத் திசையை) அவர் அடைந்தபோது (கரு நிற) சேறுகள் நிறைந்த கடலில் மறைவதாக அதைக் கண்டார். இன்னும், அதனிடத்தில் (ஒருவகையான) சில மக்களைக் கண்டார். “துல்கர்னைனே! ஒன்று, (இவர்களைத்) தண்டிப்பீர், அல்லது, அவர்களில் ஓர் அழகிய (நடத்)தை(யை) கடைப்பிடி(த்து அவர்களை மன்னி)ப்பீர். (இரண்டும் உமக்கு அனுமதிக்கப்பட்டதே!)” என்று கூறினோம்."},{"id":87,"translation":"(துல் கர்னைன்) கூறினார்: ஆக, எவன் (இணைவைத்து வணங்கியும் என் கட்டளையை மீறியும்) அநியாயம் செய்தானோ அவனை தண்டிப்போம். பிறகு, அவன் தன் இறைவனிடம் மீண்டும் கொண்டு வரப்படுவான். அவன் கொடிய தண்டனையால் அவனை தண்டிப்பான்."},{"id":88,"translation":"“ஆக, எவர் நம்பிக்கை கொண்டு, நற்செயலை செய்தாரோ அவருக்கு (இறைவனிடத்தில்) அழகிய சொர்க்கம் கூலியாக இருக்கிறது. இன்னும், நாம் நம் காரியத்தில் இலகுவானதை அவருக்கு விரைவில் கூறுவோம்.”"},{"id":89,"translation":"பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்."},{"id":90,"translation":"இறுதியாக, அவர் சூரியன் உதிக்குமிடத்தை (கிழக்குத் திசையை) அடைந்தபோது, ஒரு சமுதாயத்தின் மீது அது உதிப்பதாக அதைக் கண்டார். அதற்கு முன்னாலிருந்து (அதன் வெப்பத்திலிருந்து அவர்களை காப்பாற்றும் நிழல் தரும் மலை, மரம், வீடு போன்ற) ஒரு தடுப்பை அவர்களுக்கு நாம் ஆக்கி இருக்கவில்லை."},{"id":91,"translation":"(அவர்களுடைய நிலைமை) அப்படித்தான் (இருந்தது). மேலும், திட்டமாக அதனிடத்தில் இருந்தவற்றை நாம் ஆழமாக சூழ்ந்தறிந்தோம்."},{"id":92,"translation":"பிறகு, அவர் (மற்ற) ஒரு வழியைப் பின்தொடர்ந்(து அதில் ஓர் எல்லையை அடைந்)தார்."},{"id":93,"translation":"இறுதியாக, (அங்கிருந்த) இரு மலைகளுக்கு இடையில் (உள்ள ஓர் இடத்தை) அவர் அடைந்தபோது அவ்விரண்டிற்கும் முன்னால் (பிறருடைய) எந்த பேச்சையும் எளிதில் விளங்கமுடியாத ஒரு சமுதாயத்தைக் கண்டார்."},{"id":94,"translation":"அவர்கள் (சைகையால்) கூறினார்கள்: “துல்கர்னைனே! நிச்சயமாக யஃஜூஜ், மஃஜூஜ் (என்பவர்கள் எங்கள்) பூமியில் (நுழைந்து) விஷமம் செய்கிறார்கள். ஆகவே, எங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் ஒரு தடையை நீர் ஏற்படுத்துவதற்காக ஒரு தொகையை நாங்கள் உமக்கு ஏற்படுத்தி கொடுக்கட்டுமா?”"},{"id":95,"translation":"அவர் கூறினார்: “என் இறைவன் எதில் எனக்கு ஆற்றல் அளித்துள்ளானோ அதுவே (எனக்கு போதுமானதும்) மிக்க மேலானது(ம்) ஆகும். ஆகவே, (உங்கள் உழைப்பு எனும்) வலிமையைக்கொண்டு எனக்கு உதவுங்கள். உங்களுக்கிடையிலும் அவர்களுக்கிடையிலும் பலமான ஒரு தடுப்பை நான் ஏற்படுத்துவேன்.”"},{"id":96,"translation":"“(தேவையான) இரும்பு பாலங்களை என்னிடம் கொண்டு வாருங்கள். இறுதியாக, இரு மலைகளின் உச்சிகளுக்கு அவை சமமாகினால், (அதில் நெருப்பை மூட்ட) ஊதுங்கள்” என்று கூறினார். இறுதியாக, (நீங்கள் ஊதுவது) அவற்றை (பழுத்த) நெருப்பாக ஆக்கிவிட்டால் “என்னிடம் (செம்பைக்) கொண்டு வாருங்கள். (அந்த) செம்பை (உருக்கி) அதன் மீது நான் ஊற்றுவேன்” என்று கூறினார்."},{"id":97,"translation":"“ஆக, அதன் மீது ஏறுவதற்கு அவர்களால் இயலவில்லை. இன்னும், அதைத் துளையிடவும் அவர்களால் இயலவில்லை.”"},{"id":98,"translation":"அவர் கூறினார்: “இது என் இறைவனிடமிருந்து கிடைத்த அருளாகும். ஆக, என் இறைவனின் (யுக முடிவு எனும்) வாக்கு வரும்போது அவன் இதைத் தூள் தூளாக்கிவிடுவான். இன்னும், என் இறைவனின் வாக்கு (முற்றிலும் நிகழக்கூடிய) உண்மையாக இருக்கிறது!”"},{"id":99,"translation":"இன்னும், அந்நாளில் சிலர் சிலருடன் (-ஜின்கள் மனிதர்களுடன்) கலந்துவிடும்படி விட்டுவிடுவோம். (இரண்டாவது முறையாக) சூரில் (எக்காளத்தில்) ஊதப்படும். ஆகவே, (விசாரணைக்காக உயிர் கொடுத்து) அவர்களை நிச்சயமாக ஒன்று சேர்ப்போம்."},{"id":100,"translation":"இன்னும், நிச்சயமாக அந்நாளில் நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தை வெளிப்படுத்துவோம்."},{"id":101,"translation":"அவர்களுடைய கண்கள் என் நல்லுபதேசங்களை (பார்ப்பதை) விட்டு திரைக்குள் இருந்தன. இன்னும், அவர்கள் (நல்லுபதேசங்களைச்) செவியுற இயலாதவர்களாக இருந்தனர்."},{"id":102,"translation":"நிராகரிப்பவர்கள் என்னை அன்றி என் அடியார்களை(த் தங்களுக்கு) பாதுகாவலர்களாக எடுத்துக்கொள்ள எண்ணுகிறார்களா? நிச்சயமாக நாம், நிராகரிப்பவர்களுக்கு தங்குமிடங்களாக நரகத்தை தயார்படுத்தினோம்."},{"id":103,"translation":"(நபியே) கூறுவீராக! “செயல்களால் மிகப் பெரிய நஷ்டவாளிகளை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?”"},{"id":104,"translation":"உலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சிகள் (எல்லாம்) வழிகெட்டு விட்டன. அவர்களோ நிச்சயமாக அவர்கள் நல்ல செயலை செய்கிறார்கள் என்று எண்ணுகிறார்கள்."},{"id":105,"translation":"இவர்கள் எத்தகையோர் என்றால் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்தார்கள். ஆகவே, அவர்களுடைய (நல்ல) செயல்கள் (அனைத்தும்) அழிந்து விட்டன. ஆகவே, அவர்களுக்காக மறுமை நாளில் எவ்வித எடையையும் நிறுத்த மாட்டோம். (அவர்களுக்கு எவ்வித மதிப்பும் மறுமையில் இருக்காது.)"},{"id":106,"translation":"அவர்கள் நிராகரித்ததாலும்; என் வசனங்களையும் என் தூதர்களையும் கேலியாக எடுத்துக் கொண்டதாலும் அவர்களுக்கு தயார் செய்யப்பட்ட அந்த கூலியானது நரகமாகும்."},{"id":107,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு ‘ஃபிர்தவ்ஸ்’ என்னும் சொர்க்கங்கள் தங்குமிடங்களாக இருக்கும்."},{"id":108,"translation":"அவற்றில் அவர்கள் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். அதிலிருந்து (வேறு இடத்திற்கு) மாறுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்."},{"id":109,"translation":"(நபியே!) கூறுவீராக: என் இறைவனின் (ஞானத்தையும் அறிவையும் விவரிக்கும்) வாக்கியங்களுக்கு கடல் (நீர்) மையாக மாறினால், என் இறைவனின் வாக்கியங்கள் தீர்ந்துவிடுவதற்கு முன்னதாகவே கடல் (நீர்) தீர்ந்துவிடும். அது (-அந்த கடல் நீர்) போன்று அதிகம் அதிகமாக நாம் (மைகளை) கொண்டு வந்தாலும் சரியே!"},{"id":110,"translation":"(நபியே) கூறுவீராக: “நிச்சயமாக நானெல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதன்தான், (-நீங்கள் வணங்குவதற்கு தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுகிறது. ஆகவே, எவர் தன் இறைவனின் சந்திப்பை பயப்படுவாரோ அவர் நல்ல செயலைச் செய்யட்டும்! இன்னும், தன் இறைவனை வணங்குவதில் ஒருவரையும் (அவனுக்கு) இணையாக்க வேண்டாம்!”"}]},{"id":19,"verses":[{"id":1,"translation":"காஃப் ஹா யா ஐன் ஸாத்."},{"id":2,"translation":"(இது,) உமது இறைவன் தன் அடியார் ஸகரிய்யாவுக்கு அருள் புரிந்ததை நினைவு கூர்வதாகும்."},{"id":3,"translation":"அவர் தன் இறைவனை மறைவாக அழைத்தபோது,"},{"id":4,"translation":"அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான், எனக்குள் எலும்புகள் பலவீனமடைந்து விட்டன. இன்னும், (என்) தலை நரையால் வெளுத்து விட்டது. (என் இறைவா! உன்னிடம் (நான்) பிரார்த்தித்ததில் துர்பாக்கியவனாக (பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக, நிராசை அடைந்தவனாக) நான் (ஒருபோதும்) ஆகமாட்டேன்."},{"id":5,"translation":"இன்னும், நிச்சயமாக நான் எனக்குப் பின்னால் (எனது உறவினர்கள் மார்க்கப் பணியை சரியாக செய்ய மாட்டார்கள் என்று என்) உறவினர்களைப் பற்றி பயப்படுகிறேன். என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். ஆகவே, எனக்கு உன் புறத்திலிருந்து (எனக்கு) உதவியாக இருக்கும் ஒரு வாரிசைத் தா!"},{"id":6,"translation":"அவர் என(து நபித்துவத்து)க்கும் வாரிசாக இருப்பார். இன்னும், யஅகூபின் கிளையினரு(டைய நபித்துவத்து)க்கும் வாரிசாக இருப்பார். இன்னும், என் இறைவா! அவரை (உன்) பொருத்தத்திற்குரியவராக ஆக்கு!"},{"id":7,"translation":"ஸகரிய்யாவே! நிச்சயமாக நாம் உமக்கு ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு நற்செய்தி தருகிறோம். அதன் பெயர் யஹ்யா ஆகும். இதற்கு முன் அதற்கு ஒப்பானவரை நாம் படைக்கவில்லை. (வேறு யாருக்கும் அந்த பெயரை நாம் சூட்டியதில்லை.)"},{"id":8,"translation":"அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு எப்படி குழந்தை கிடைக்கும்? என் மனைவியோ மலடியாக இருக்கிறாள். நானோ முதுமையின் எல்லையை அடைந்து (முற்றிலும் பலவீனனாக ஆகி)விட்டேன்.”"},{"id":9,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “(அது) அப்படித்தான். அது எனக்கு மிக எளிது. திட்டமாக இதற்கு முன்னர் நீர் ஒரு பொருளாகவே இல்லாதபோது நான் உன்னைப் படைத்திருக்கிறேன் என்று உம் இறைவன் கூறினான்.”"},{"id":10,"translation":"அவர் கூறினார்: “என் இறைவா! எனக்கு ஓர் அத்தாட்சியை ஏற்படுத்து!” அவன் கூறினான்: “நீர் (எவ்வித நோயுமின்றி) சுகமாக இருக்க, மூன்று இரவுகள் மக்களிடம் நீர் பேசாமல் இருப்பதுதான் உமக்கு அத்தாட்சியாகும்.”"},{"id":11,"translation":"ஆக, அவர் தனது மக்களுக்கு முன் தொழுமிடத்திலிருந்து வெளியேறி வந்தார். அவர்களை நோக்கி “காலையிலும் மாலையிலும் (அல்லாஹ்வை) துதியுங்கள்” என்று சைகை காண்பித்தார்."},{"id":12,"translation":"(ஆக, அவருக்கு யஹ்யா என்ற மகன் பிறந்தார். அவர் பேசுகின்ற வயதை அடைந்த போது நாம் அவரை நோக்கி கூறினோம்:) “யஹ்யாவே! (தவ்ராத்) வேதத்தை பலமாகப் பற்றிப் பிடிப்பீராக!” இன்னும், (வேதத்தைப் புரிவதற்கு) ஞானத்தை (அவர்) சிறு குழந்தையாக இருக்கும்போதே அவருக்குக் கொடுத்தோம்."},{"id":13,"translation":"இன்னும், நம்மிடமிருந்து இரக்கத்தையும் தூய்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்). இன்னும், அவர் இறையச்சமுள்ளவராக இருந்தார்."},{"id":14,"translation":"இன்னும், அவர் தன் பெற்றோருக்கு நன்மை புரிபவராக இருந்தார். அவர் முரடராக (பெருமைபிடித்தவராக), மாறுசெய்பவராக இருக்கவில்லை."},{"id":15,"translation":"இன்னும், அவர் பிறந்த நாளிலும் அவர் மரணிக்கின்ற நாளிலும் அவர் உயிர்பெற்றவராக (மீண்டும்) எழுப்பப்படுகின்ற நாளிலும் அவருக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகுக!"},{"id":16,"translation":"இன்னும், இவ்வேதத்தில் மர்யமை நினைவு கூர்வீராக! அவள் கிழக்கே இருக்கின்ற இடத்தில் தன் குடும்பத்தினரை விட்டு ஒதுங்கியபோது,"},{"id":17,"translation":"அவர்களுக்கு முன்புறத்திலிருந்து ஒரு திரையை அவள் ஏற்படுத்திக் கொண்டாள். ஆக, அவளிடம் நமது தூதரை அனுப்பினோம். அவர், அவளுக்கு (முன்) ஒரு முழுமையான மனிதராகத் தோன்றினார்."},{"id":18,"translation":"அவள் கூறினாள்: “நிச்சயமாக நான் உம்மைவிட்டும் ரஹ்மானிடம் பாதுகாவல் தேடுகிறேன். நீர் இறையச்சமுடையவராக இருந்தால் (என்னிடமிருந்து விலகி சென்றுவிடுவீராக!)”"},{"id":19,"translation":"அவர் கூறினார்: “நானெல்லாம் உமது இறைவனின் தூதர்தான் (தீங்கை நாடக்கூடிய மனிதன் அல்ல), பரிசுத்தமான ஒரு குழந்தையை உமக்கு நான் வழங்குவதற்காக (உம்மிடம் வந்திருக்கிறேன்).”"},{"id":20,"translation":"அவள் கூறினாள்: “எனக்கு எப்படி குழந்தை உண்டாகும்? என்னை ஆடவர் எவரும் தொடவில்லையே! நான் ஒரு விபச்சாரியாக இல்லையே!”"},{"id":21,"translation":"அவர் கூறினார்: (அது) அப்படித்தான் நடக்கும். உமது இறைவன் கூறுகிறான், “அது எனக்கு மிக எளிதா(ன காரியமா)கும். அவரை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் நம் புறத்திலிருந்து ஓர் அருளாகவும் நாம் ஆக்குவதற்காக (இவ்வாறு நடைபெறும்). இன்னும், இது முடிவுசெய்யப்பட்ட ஒரு காரியமாக இருக்கிறது.”"},{"id":22,"translation":"ஆக, அவள் அதை (-அக்குழந்தையை) கர்ப்பத்தில் சுமந்தாள். மேலும், அதனுடன் (-அந்த கர்ப்பத்துடன்) தூரமான இடத்திற்கு விலகிச் சென்றாள்."},{"id":23,"translation":"ஆக, (அவளுக்கு) பிரசவ வலி (ஏற்பட்டு அது) அவளை பேரீச்ச மரத்தின் பக்கம் கொண்டு சென்றது. அவள் கூறினாள்: “இதற்கு முன்னர் நான் மரணித்திருக்க வேண்டுமே! இன்னும், முற்றிலும் (மக்களின் சிந்தனையிலிருந்து) மறக்கப்பட்டவளாக நான் (ஆகி) இருக்க வேண்டுமே!”"},{"id":24,"translation":"ஆக, அதனுடைய அடிப்புறத்திலிருந்து அவர் (-ஜிப்ரீல்) அவளை அழைத்தார்: “(மர்யமே!) கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழ் ஓர் நீரோடையை ஏற்படுத்தி இருக்கிறான்.”"},{"id":25,"translation":"“இன்னும், பேரீச்ச மரத்தின் நடுத்தண்டை உம் பக்கம் அசைப்பீராக! அது உம்மீது பழுத்த பழங்களைக் கொட்டும்.”"},{"id":26,"translation":"“ஆக, நீர் (அந்த மரத்திலிருந்து விழும் பழங்களை) புசிப்பீராக! இன்னும், (அந்த நீரோடையிலிருந்து) பருகுவீராக! கண் குளிர்வீராக! ஆக, மனிதர்களில் யாரையும் நீர் பார்த்தால், “நிச்சயமாக நான் ரஹ்மானுக்கு நோன்பை (-பேசாமல் இருப்பதை) நேர்ச்சை செய்துள்ளேன். ஆகவே, இன்று நான் எந்த மனிதனிடமும் அறவே பேசமாட்டேன்” என்று கூறுவீராக!”"},{"id":27,"translation":"ஆக, அதனுடன் அவள் தனது மக்களிடம் அதைச் சுமந்தவளாக வந்தாள். அவர்கள் கூறினார்கள்: “மர்யமே! நீ ஒரு பெரிய (தவறான) காரியத்தைச் செய்து விட்டாய்!”"},{"id":28,"translation":"“ஹாரூனுடைய சகோதரியே! உமது தந்தை கெட்டவராக இருக்கவில்லை. இன்னும், உமது தாயும் நடத்தை கெட்டவளாக இருக்கவில்லை.”"},{"id":29,"translation":"ஆக, அவள் அ(ந்)த (குழந்தையிடம் கேட்கும்படி அத)ன் பக்கம் சைகை காண்பித்தாள். அவர்கள் கூறினார்கள்: “மடியில் குழந்தையாக இருக்கின்றவரிடம் நாங்கள் எப்படி பேசுவோம்!”"},{"id":30,"translation":"அவர் (-ஈஸா) கூறினார்: “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் அடிமையாவேன். அவன் எனக்கு வேதத்தைக் கொடுப்பான்; இன்னும், என்னை நபியாக ஆக்குவான்.”"},{"id":31,"translation":"இன்னும் நான் எங்கிருந்தாலும் என்னை பாக்கியமிக்கவனாக (மக்களுக்கு நன்மையை ஏவி, தீமையை தடுப்பவனாக, நல்லவற்றை கற்பிப்பவனாக, மக்களுக்கு நன்மை செய்பவனாக) ஆக்குவான். இன்னும், நான் உயிருள்ளவனாக இருக்கின்றவரை தொழுகையையும் தர்மத்தையும் (பாவங்களை விட்டு விலகி தூய்மையாக இருப்பதையும்) அவன் எனக்கு கட்டளையிட்டுள்ளான்."},{"id":32,"translation":"இன்னும், என் தாய்க்கு நன்மை செய்பவனாகவும் (என்னை ஆக்கினான்). இன்னும், அவன் என்னை பெருமையடிப்பவனாக (-இறைவனுக்கு கீழ்ப்படியாதவனாக) தீயவனாக ஆக்கவில்லை."},{"id":33,"translation":"நான் பிறந்த நாளிலும் எனக்கு ஸலாம் - ஈடேற்றம் கிடைத்தது. (அவ்வாறே,) நான் மரணிக்கின்ற நாளிலும் நான் உயிருள்ளவனாக எழுப்பப்படுகின்ற நாளிலும் என் மீது ஸலாம் உண்டாகுக!"},{"id":34,"translation":"இவர்தான் மர்யமுடைய மகன் ஈஸா ஆவார். (இந்த) உண்மையான கூற்றையே கூறுங்கள். இவர் விஷயத்தில்தான் அவர்கள் தர்க்கிக்கிறார்கள். (யூதர்கள் கூறுவதுபோன்று அவர் மந்திரவாதியும் அல்ல. கிறித்தவர்கள் கூறுவதுபோன்று அவர் அல்லாஹ்வின் மகனோ, அல்லாஹ்வோ, கடவுள் மூவரில் ஒருவரோ அல்ல. மாறாக அவர் அல்லாஹ்வின் தூதர் ஆவார்.)"},{"id":35,"translation":"(தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொள்வது அல்லாஹ்விற்கு தகுந்ததல்ல. அவன் மகா பரிசுத்தமானவன். அவன் ஒரு காரியத்தை முடிவு செய்தால் அவன் அதற்கு கூறுவதெல்லாம், “ஆகு” என்றுதான். உடனே அது ஆகிவிடும்."},{"id":36,"translation":"இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனை வணங்குங்கள். இது நேரான பாதையாகும்."},{"id":37,"translation":"ஆக, பல பிரிவினர் தங்களுக்கு மத்தியில் (ஈஸா பற்றி) தர்க்கித்தனர். ஆகவே, (அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் வேத அறிவிப்பை) நிராகரிப்பாளர்களுக்குக் கேடுதான் உண்டாகும், மகத்தான நாளை (அவர்கள்) காணும்போது."},{"id":38,"translation":"அவர்கள் நம்மிடம் வருகின்ற நாளில் நன்றாக செவிசாய்ப்பார்கள்; இன்னும், நன்றாக பார்ப்பார்கள். (ஆனால், அவர்கள் செவியுறுவதும் பார்ப்பதும் அன்று அவர்களுக்கு பயனளிக்காது.) எனினும், இன்றைய தினம் அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்."},{"id":39,"translation":"இன்னும், (நபியே! இறுதி) தீர்ப்பு முடிவு செய்யப்படும்போது (அந்த) துயரமான நாளைப் பற்றி அவர்களை எச்சரிப்பீராக! அவர்கள் அறியாமையில் (மறதியில்) இருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":40,"translation":"நிச்சயமாக நாம்தான் பூமிக்கும் அதில் இருப்பவர்களுக்கும் உரிமையாளர்களாக ஆகுவோம். நம்மிடமே அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள்."},{"id":41,"translation":"(நபியே!) இவ்வேதத்தில் இப்ராஹீமை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருக்கிறார்."},{"id":42,"translation":"அவர் தனது தந்தைக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் தந்தையே எது செவியுறாதோ, பார்க்காதோ, உம்மை விட்டு (தீமைகளில்) எதையும் தடுக்காதோ அதை நீர் ஏன் வணங்குகிறீர்?”"},{"id":43,"translation":"“என் தந்தையே! நிச்சயமாக நான் (கூறுவதாவது: அல்லாஹ்வின் புறத்திலிருந்து) உமக்கு வராத கல்வி ஞானம் எனக்கு வந்திருக்கிறது. ஆகவே, என்னைப் பின்பற்றுவீராக. நான் உமக்கு சமமான நேரான பாதையை வழிகாட்டுவேன்.”"},{"id":44,"translation":"“என் தந்தையே! ஷைத்தானை வணங்காதீர்! நிச்சயமாக ஷைத்தானாகிறவன் ரஹ்மானுக்கு மாறுசெய்தவனாக இருக்கிறான்.”"},{"id":45,"translation":"என் தந்தையே! “ரஹ்மானிடமிருந்து தண்டனை உம்மை வந்தடைந்தால் (அதை உம்மை விட்டு ஷைத்தானால் தடுக்க முடியாது. அப்போது) நீர் (அந்த) ஷைத்தானுக்கு (நரகத்தில்) தோழனாக ஆகிவிடுவீர்” என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்."},{"id":46,"translation":"(இப்ராஹீமின் தந்தை) கூறினார்: இப்ராஹீமே! என் தெய்வங்களை நீ வெறுக்கிறாயா? நீ (இவற்றை குறை கூறுவதிலிருந்து) விலகவில்லையெனில் நிச்சயமாக நான் உன்னை மிக அசிங்கமாக ஏசுவேன். (நான் உன்னை ஏசுவதற்கு முன்னர் உன் கண்ணியம்) பாதுகாக்கப்பட்டவராக என்னை விட்டு விலகி சென்றுவிடு!"},{"id":47,"translation":"(இப்ராஹீம்) கூறினார்: “ஸலாமுன் அலைக்க\" (என் புறத்திலிருந்து உமக்கு பாதுகாப்பு உண்டாகுக! இனி நீர் வெறுப்பதைக் கூறமாட்டேன்). உமக்காக என் இறைவனிடம் பாவமன்னிப்புக் கோருவேன். நிச்சயமாக அவன் என் மீது கருணையும் அன்பும் உடையவனாக இருக்கிறான்.”"},{"id":48,"translation":"இன்னும், உங்களையும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றையும் விட்டு நான் விலகி விடுகிறேன். இன்னும், என் இறைவனை நான் (கலப்பற்ற முறையில்) பிரார்த்திப்பேன். என் இறைவனிடம் (நான்) பிரார்த்திப்பதில் நான் துர்பாக்கியவானாக (-நம்பிக்கை அற்றவனாக, பிரார்த்தனை நிராகரிக்கப்பட்டவனாக) ஆகாமல் இருப்பேன்."},{"id":49,"translation":"ஆக, அவர் - அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியதையும் விட்டு விலகியபோது அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். இன்னும், (அவர்களில்) ஒவ்வொருவரையும் நபியாக ஆக்கினோம்."},{"id":50,"translation":"இன்னும், அவர்களுக்கு நமது அருளிலிருந்து வழங்கினோம். உயர்வான உண்மையான நிலையான புகழையும் நாம் அவர்களுக்கு ஏற்படுத்தினோம்."},{"id":51,"translation":"இன்னும், இவ்வேதத்தில் மூஸாவை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருக்கிறார். இன்னும், தூதராக நபியாக இருக்கிறார்."},{"id":52,"translation":"இன்னும், மலையில் (மூஸாவுடைய) வலது பக்கத்திலிருந்து நாம் அவரை அழைத்தோம். நாம் அவரை (நம்முடன்) பேசுகிறவராக நெருக்கமாக்கினோம்."},{"id":53,"translation":"இன்னும், நமது அருளால் அவருடைய சகோதரர் ஹாரூனை அவருக்கு நபியாக வழங்கினோம்."},{"id":54,"translation":"இன்னும், இவ்வேதத்தில் இஸ்மாயீலை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர், வாக்கில் உண்மையாளராக இருந்தார். இன்னும் தூதராக நபியாக இருந்தார்."},{"id":55,"translation":"இன்னும், அவர் தனது குடும்பத்தினருக்கு தொழுகையையும் ஸகாத்தையும் ஏவுகின்றவராக இருந்தார். மேலும், அவர் தன் இறைவனிடம் திருப்திக்குரியவராக இருந்தார்."},{"id":56,"translation":"இன்னும், இவ்வேதத்தில் இத்ரீஸை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் உண்மையாளராக நபியாக இருந்தார்."},{"id":57,"translation":"இன்னும், அவரை உயர்வான இடத்திற்கு மேலே உயர்த்தினோம்."},{"id":58,"translation":"அல்லாஹ் அருள் புரிந்த இந்த நபிமார்கள் ஆதமுடைய சந்ததியிலிருந்தும்; நூஹுடன் நாம் (கப்பலில்) ஏற்றியவர்களிலிருந்தும்; இப்ராஹீமுடைய சந்ததியிலிருந்தும், இஸ்ராயீலுடைய சந்ததியிலிருந்தும்; இன்னும், நாம் எவர்களை நேர்வழியில் செலுத்தினோமோ, தேர்ந்தெடுத்தோமோ அவர்களிலிருந்தும் உள்ளவர்கள் ஆவார்கள். அவர்களுக்கு முன் ரஹ்மானுடைய வசனங்கள் ஓதப்பட்டால் சிரம்பணிந்தவர்களாக அழுதவர்களாக (ஸுஜூதில்) விழுந்து விடுவார்கள்."},{"id":59,"translation":"ஆக, அவர்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் தோன்றினார்கள். அவர்கள் தொழுகையை பாழாக்கினர். இன்னும், காம இச்சைகளுக்கு பின்னால் சென்றனர். ஆகவே, அவர்கள் (நரக நெருப்பில் மிகப் பெரிய) தீமையை சந்திப்பார்கள். (இந்த தீமை என்பது நரகத்தில் மிக மோசமான தண்டனைகள் நிறைந்த ஒரு கிணற்றையோ அல்லது ஒரு பள்ளத்தாக்கையோ குறிக்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.)"},{"id":60,"translation":"(எனினும்,) எவர்கள் (தொழுகையை விடுகின்ற குற்றத்திலிருந்து) திருந்தினார்களோ; இன்னும், நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், நன்மையை செய்தார்களோ அவர்களைத் தவிர. அ(த்தகைய)வர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். இன்னும், அவர்கள் அறவே அநீதி செய்யப்பட மாட்டார்கள்."},{"id":61,"translation":"(அவர்கள்) ‘அத்ன்’ சொர்க்கங்களில் (நுழைவார்கள்). ரஹ்மான் தன் அடியார்களுக்கு மறைவில் (அவற்றை) வாக்களித்துள்ளான். நிச்சயமாக அவனுடைய வாக்கு நிறைவேறக்கூடியதாக இருக்கிறது."},{"id":62,"translation":"அவற்றில் (அழகிய முகமனாகிய) ஸலாமைத் தவிர வீணான பேச்சுகளை செவியுற மாட்டார்கள். இன்னும், அவர்களுக்கு அவற்றில் அவர்களுடைய (விருப்ப) உணவு காலையிலும் மாலையிலும் கிடைக்கும்."},{"id":63,"translation":"இந்த சொர்க்கத்தை நம் அடியார்களில் யார் இறையச்சமுள்ளவராக இருக்கிறாரோ அவருக்கு சொந்தமாக்கி வைப்போம்."},{"id":64,"translation":"இன்னும், (ஜிப்ரீலே! நபி முஹம்மதுக்கு கூறுவீராக!) உமது இறைவனின் உத்தரவின்படியே தவிர நாம் இறங்க மாட்டோம். எங்களுக்கு முன் இருப்பவையும் (-மறுமை காரியங்களும்) எங்களுக்கு பின் இருப்பவையும் (-உலக காரியங்களும்) அவற்றுக்கு மத்தியில் இருக்கின்ற காரியங்களும் அவனுக்கே உரிமையானவை ஆகும். இன்னும், உமது இறைவன் மறதியாளனாக இல்லை."},{"id":65,"translation":"(அவனே) வானங்கள், பூமி இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான். ஆகவே, அவனை வணங்குவீராக! இன்னும், அவனை வணங்குவதில் உறுதியாக (நிரந்தரமாக) இருப்பீராக! அவனுக்கு ஒப்பான ஒருவரை நீர் அறிவீரா!"},{"id":66,"translation":"இன்னும், மனிதன் கூறுகிறான்: “நான் மரணித்து விட்டால் உயிருள்ளவனாக (மீண்டும்) எழுப்பப்படுவேனா!”"},{"id":67,"translation":"“இதற்கு முன்னர் நிச்சயமாக நாம் அவனைப் படைத்ததையும் (நாம் அவனைப் படைப்பதற்கு முன்பு) அவன் எந்த ஒரு பொருளாகவும் இருக்கவில்லை” என்பதையும் அந்த மனிதன் சிந்திக்க வேண்டாமா!"},{"id":68,"translation":"ஆக, உமது இறைவன் மீது சத்தியமாக! நிச்சயமாக நாம் அவர்களையும் ஷைத்தான்களையும் ஒன்று திரட்டுவோம். பிறகு, அவர்கள் முழங்காலிட்டவர்களாக இருக்கும் நிலையில் நரகத்திற்கு அருகில் அவர்களைக் கொண்டுவருவோம்."},{"id":69,"translation":"பிறகு, ஒவ்வொரு பிரிவினரிலிருந்தும் அவர்களில் யார் பாவம் செய்வதில் ரஹ்மானுக்கு கடுமையானவரோ அவரை நாம் கழட்டி (தனியாக) எடுப்போம்."},{"id":70,"translation":"பிறகு, அதில் கடுமையாக தண்டனையை அனுபவிப்பதற்கு மிகவும் தகுதியானவர்களை நாம் மிக அறிந்தவர்கள் ஆவோம்."},{"id":71,"translation":"உங்களில் எல்லோரும் அதன் மீது கடந்து சென்றே ஆக வேண்டும். அது உமது இறைவனிடம் முடிவு செய்யப்பட்ட உறுதியான காரியமாக இருக்கிறது."},{"id":72,"translation":"பிறகு, எவர்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்தார்களோ அவர்களை நாம் (நரகத்தில் விழுந்துவிடாமல்) பாதுகாப்போம். இன்னும், அநியாயக்காரர்களை முழங்காலிட்டவர்களாக அதில் (தள்ளி) விட்டுவிடுவோம்."},{"id":73,"translation":"அவர்களுக்கு முன் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி, “(நம்) இரு பிரிவுகளில் தங்குமிடத்தால் யார் சிறந்தவர், இன்னும், சபையால் யார் மிக அழகானவர்?” என்று (கேலியாக) கூறுகிறார்கள்:"},{"id":74,"translation":"இன்னும், இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்திருக்கிறோம். அவர்கள் (இவர்களை விட வீட்டு பயன்பாட்டுப்) பொருட்களாலும் (செல்வத்தாலும் உடல்) தோற்றத்தாலும் மிக அழகானவர்கள்."},{"id":75,"translation":"(நபியே!) கூறுவீராக: (நம் இரு பிரிவினரில்) யார் வழிகேட்டில் இருக்கிறாரோ அவருக்கு ரஹ்மான் (அதை) நீட்டிவிடட்டும். இறுதியாக, அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை - ஒன்று தண்டனையை; அல்லது, மறுமை நாளை- அவர்கள் (கண்கூடாக) பார்த்தால் யார் தங்குமிடத்தால் மிகக் கெட்டவர், படையால் மிகப் பலவீனமானவர் என்பதை அறிவார்கள்."},{"id":76,"translation":"இன்னும், நேர்வழி நடப்போருக்கு நேர்வழியை அல்லாஹ் அதிகப்படுத்துவான். நிரந்தரமான நன்மைகள்தான் உமது இறைவனிடம் நற்கூலியால் மிகச் சிறந்ததும் முடிவால் மிகச் சிறந்ததும் ஆகும்."},{"id":77,"translation":"எவன் நமது வசனங்களை நிராகரித்தானோ; இன்னும், “நிச்சயமாக நான் செல்வமும் சந்ததியும் கொடுக்கப்படுவேன்” என்று கூறினானோ அவனைப் பற்றி நீர் அறிவிப்பீராக!"},{"id":78,"translation":"(இப்படி அவன் கூறுவதற்கு) அவன் மறைவானதை அறிந்திருக்கிறானா?; அல்லது, ரஹ்மானிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்தி இருக்கிறானா?"},{"id":79,"translation":"அவ்வாறல்ல! அவன் கூறுவதை நாம் பதிவு செய்வோம். இன்னும், (மறுமையில்) அவனுக்கு தண்டனையை அதிகப்படுத்துவோம்."},{"id":80,"translation":"இன்னும், அவன் கூறிய (அவனது செல்வம், சந்ததி ஆகியவற்றை விட்டு அவனை பிரித்துவிட்டு அ)வற்றுக்கு நாம் வாரிசாகி விடுவோம். இன்னும், அவன் நம்மிடம் (மறுமையில் தன்னந்) தனியாக வருவான்."},{"id":81,"translation":"அவர்கள் அல்லாஹ்வை அன்றி பல தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டனர், அவை (அல்லாஹ்வின் தண்டனையை விட்டு தங்களை பாதுகாக்கக்கூடிய) வலிமையாக தங்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்காக."},{"id":82,"translation":"அவ்வாறல்ல! அவை அவர்கள் தம்மை வணங்கியதை நிராகரித்து விடும். இன்னும் அவை அவர்களுக்கு எதிரானவையாக மாறிவிடும்."},{"id":83,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக நாம் ஷைத்தான்களை நிராகரிப்பவர்கள் மீது ஏவி விட்டுள்ளோம். அவை அவர்களை (பாவத்தின் பக்கம்) தூண்டுகின்றன."},{"id":84,"translation":"ஆகவே, அவர்கள் மீது (தண்டனை உடனே இறங்க வேண்டுமென்று) அவசரப்படாதீர். நிச்சயமாக நாம் அவர்களுக்காக (அவர்களுடைய நாட்களையும் அவர்களுடைய செயல்களையும்) எண்ணுகிறோம்."},{"id":85,"translation":"இறையச்சமுள்ளவர்களை ரஹ்மானின் பக்கம் குழுவாக நாம் ஒன்று திரட்டுகின்ற நாளில்,"},{"id":86,"translation":"இன்னும் குற்றவாளிகளை நரகத்தின் பக்கம் அவர்களோ தாகித்தவர்களாக இருக்கும் நிலையில் நாம் ஓட்டிக் கொண்டு வருகின்ற நாளில்,"},{"id":87,"translation":"அவர்கள் (யாருக்கும்) சிபாரிசு செய்ய(வோ யாரிடமிருந்து சிபாரிசு பெறவோ) உரிமை பெறமாட்டார்கள். (எனினும்) ரஹ்மானிடம் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திய (நம்பிக்கையாளர்களான நல்ல)வர்களைத் தவிர."},{"id":88,"translation":"இன்னும், “ரஹ்மான் (தனக்கொரு) குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள்."},{"id":89,"translation":"(இவ்வாறு சொல்வதின் மூலம்) திட்டமாக (மகா மோசமான) பெரிய (பாவமான) ஒரு காரியத்தை செய்து விட்டீர்கள்."},{"id":90,"translation":"இ(ந்)த (சொல்லி)னால் வானங்கள் துண்டு துண்டாகி விடுவதற்கும்; பூமி பிளந்து விடுவதற்கும்; மலைகள் (ஒன்றன் மீது ஒன்று) சரிந்து விழுந்து (நொறுங்கி) விடுவதற்கும் நெருங்கி விட்டன,"},{"id":91,"translation":"அவர்கள் ரஹ்மானுக்கு குழந்தை இருக்கிறது என்று அழைத்ததால்."},{"id":92,"translation":"ஆனால், (தனக்கொரு) குழந்தையை ஏற்படுத்திக் கொள்வது ரஹ்மானுக்கு தகுதியானது அல்ல."},{"id":93,"translation":"வானங்கள்; இன்னும், பூமியில் உள்ள ஒவ்வொருவரும் ரஹ்மானிடம் (பணிந்த) அடிமையாக வருவாரே தவிர (குழந்தையாகவோ அவனுக்கு நிகரானவராகவோ) இல்லை."},{"id":94,"translation":"திட்டவட்டமாக அவன் அவர்களை (தீர்க்கமாக) கணக்கிட்டு விட்டான்; இன்னும், அவர்களை (துல்லியமாக) எண்ணி வைத்திருக்கிறான்."},{"id":95,"translation":"இன்னும், அவர்கள் ஒவ்வொருவரும் மறுமை நாளில் அவனிடம் தனியாகவே வருவார்."},{"id":96,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு ரஹ்மான் (மக்களின் உள்ளங்களில்) அன்பை ஏற்படுத்துவான்."},{"id":97,"translation":"ஆக, இ(ந்த வேதத்)தை உமது நாவில் நாம் இலகுவாக்கியதெல்லாம் இறையச்சமுள்ளவர்களுக்கு நீர் இதன் மூலம் நற்செய்தி கூறுவதற்காகவும்; விதண்டாவாதம் செய்கின்ற மக்களை இதன் மூலம் நீர் எச்சரிப்பதற்காகவும்தான்."},{"id":98,"translation":"இன்னும், இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம். அவர்களில் யாரையும் நீர் (இப்போது) பார்க்கிறீரா? அல்லது, அவர்களுடைய சிறிய சப்தத்தை நீர் கேட்கிறீரா?"}]},{"id":20,"verses":[{"id":1,"translation":"தா ஹா."},{"id":2,"translation":"(நபியே!) நாம் இந்த குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது இறக்கவில்லை,"},{"id":3,"translation":"எனினும், (அல்லாஹ்வை) அஞ்சுகிறவர்களுக்கு ஒரு நினைவூட்டலாக (இதை நாம் இறக்கினோம்)."},{"id":4,"translation":"இது பூமியையும் உயர்ந்த வானங்களையும் படைத்தவனிடமிருந்து இறக்கப்பட்டதாகும்."},{"id":5,"translation":"ரஹ்மான், அர்ஷுக்கு மேல் உயர்ந்து விட்டான்."},{"id":6,"translation":"வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவையும் ஈரமான மண்ணுக்குக் கீழ் உள்ளவையும் அவனுக்கே உரியன."},{"id":7,"translation":"நீர் பேச்சை பகிரங்கப்படுத்தினாலும் (அல்லது மறைத்தாலும்) நிச்சயமாக அவன் இரகசியத்தையும் (அதைவிட) மிக மறைந்ததையும் நன்கறிவான்."},{"id":8,"translation":"அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவனுக்கு மிக அழகிய பெயர்கள் உள்ளன."},{"id":9,"translation":"(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?"},{"id":10,"translation":"அவர் ஒரு நெருப்பைப் பார்த்தபோது (நிகழ்ந்த சம்பவத்தின் செய்தி உமக்கு வந்ததா?). ஆக, அவர் தனது குடும்பத்தினருக்குக் கூறினார்: “(இங்கே) தங்கி இருங்கள்! நிச்சயமாக நான் ஒரு நெருப்பைக் கண்டேன். (நான் அங்கு சென்று) அதிலிருந்து ஒரு சிறிய நெருப்பு கொள்ளியை உங்களிடம் நான் கொண்டு வரலாம். அல்லது, நெருப்பின் அருகில் ஒரு வழிகாட்டியை நான் பெறலாம்."},{"id":11,"translation":"ஆக, அவர் அதனிடம் வந்தபோது (இறைவனின் புறத்திலிருந்து) அழைக்கப்பட்டார், மூஸாவே!"},{"id":12,"translation":"நிச்சயமாக நான்தான் உமது இறைவன். ஆக, உமது செருப்புகளை கழட்டுவீராக! நிச்சயமாக நீர் துவா என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் இருக்கிறீர்."},{"id":13,"translation":"இன்னும், நான் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன். ஆகவே, (உமக்கு) வஹ்யி அறிவிக்கப்படுபவற்றை செவிமடுப்பீராக!"},{"id":14,"translation":"நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக!"},{"id":15,"translation":"நிச்சயமாக மறுமை (உண்மைதான். அது ஒரு நாள்) வரக்கூடியதாகும், - அதை (யாரும் அறியாதவாறு) நான் மறைத்து வைத்திருப்பேன், - ஒவ்வொரு ஆன்மாவும் அது செய்ததற்கு (அங்கு) கூலி கொடுக்கப்படுவதற்காக."},{"id":16,"translation":"ஆக, அதை நம்பிக்கை கொள்ளாமல், தனது மன இச்சையை பின்பற்றியவன் அதை விட்டு உம்மை (தவறான பாதையின் பக்கம்) திருப்பிவிட வேண்டாம், நீர் அழிந்து விடுவீர்."},{"id":17,"translation":"மூஸாவே! உமது வலக்கையில் உள்ள அது என்ன?”"},{"id":18,"translation":"அவர் கூறினார்: அது எனது கைத்தடி. அதன்மீது நான் சாய்ந்து கொள்வேன். இன்னும், அதன் மூலம் என் ஆடுகளுக்கு இலைகளை பறிப்பேன். இன்னும், எனக்கு அதில் மற்ற பல தேவைகளும் உள்ளன."},{"id":19,"translation":"அவன் கூறினான்: மூஸாவே! அதை நீர் எறிவீராக!"},{"id":20,"translation":"ஆக, அதை அவர் எறிந்தார். ஆக, அது விரைந்து ஓடுகின்ற ஒரு பாம்பாக ஆகிவிட்டது."},{"id":21,"translation":"அவன் கூறினான்: அதைப் பிடிப்பீராக! பயப்படாதீர். நாம் அதை அதன் முந்திய தன்மைக்கே திருப்புவோம்."},{"id":22,"translation":"இன்னும், உமது கரத்தை புஜத்தின் கீழ் சேர்த்து வைப்பீராக! (பிறகு நீர் அதை எடுக்கும்போது) அது (எவ்வித) நோயுமின்றி (பனிக்கட்டியைப் போன்று) வெண்மையாக வெளியே வரும். இது மற்றுமோர் அத்தாட்சியாகும்."},{"id":23,"translation":"(மூஸாவே!) நமது பெரிய அத்தாட்சிகளில் இருந்து உமக்கு நாம் காண்பிப்பதற்காக (இவற்றைக் கொடுத்தோம்)."},{"id":24,"translation":"ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் வரம்புமீறி விட்டான்."},{"id":25,"translation":"அவர் கூறினார்: என் இறைவா! எனக்கு என் நெஞ்சை விரிவாக்கு!"},{"id":26,"translation":"இன்னும், என் காரியத்தை எனக்கு இலகுவாக்கு!"},{"id":27,"translation":"இன்னும், கொன்னலை என் நாவிலிருந்து அவிழ்த்துவிடு![1] இயலாமையை போக்கிவிடு!)","footnotes":"[1] (நான் தெளிவாகவும் தொடர்ச்சியாகவும் பேசமுடியாமல் இருக்கும்"},{"id":28,"translation":"அவர்கள் என் பேச்சை (தெளிவாக) புரிந்து கொள்வார்கள்."},{"id":29,"translation":"இன்னும், என் குடும்பத்திலிருந்து எனக்கு ஓர் உதவியாளரை ஏற்படுத்து!"},{"id":30,"translation":"என் சகோதரர் ஹாரூனை (எனக்கு உதவியாளராக ஆக்கி வை)!"},{"id":31,"translation":"அவர் மூலம் எனது முதுகைப் பலப்படுத்து!"},{"id":32,"translation":"இன்னும், எனது (நபித்துவப்) பணியில் அவரை (என்னுடன்) இணைத்துவிடு!"},{"id":33,"translation":"நாங்கள் உன்னை அதிகம் துதிப்பதற்காக,"},{"id":34,"translation":"இன்னும், நாங்கள் உன்னை அதிகம் நினைவு கூர்வதற்காக (என் பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்!)."},{"id":35,"translation":"நிச்சயமாக நீ எங்களை உற்று நோக்கியவனாக இருக்கின்றாய்."},{"id":36,"translation":"அவன் கூறினான்: “மூஸாவே! உமது கோரிக்கையை நீர் கொடுக்கப்பட்டீர்.”"},{"id":37,"translation":"இன்னும், உம்மீது (இது அல்லாத) வேறு ஒரு முறையும் திட்டமாக நான் அருள் புரிந்திருந்தேன்,"},{"id":38,"translation":"அறிவிக்கப்பட வேண்டியவற்றை நாம் உமது தாய்க்கு அறிவித்தபோது."},{"id":39,"translation":"அதாவது: அவரை (நீர் செய்து வைத்திருந்த) பேழையில் போடுவீராக! பிறகு, அதை (நைல்) நதியில் போடுவீராக! நதி அதை கரையில் எறியும். எனது எதிரி, இன்னும் அவரது எதிரி அதை எடுப்பான் (என்று உமது தாய்க்கு அறிவித்தோம்). இன்னும், உம்மீது அன்பை என் புறத்திலிருந்து ஏற்படுத்தினேன். இன்னும், என் கண் பார்வையில் (எனது நாட்டப்படி) நீ (வளர்க்கப்படுவதற்காகவும்) பராமரிக்கப்படுவதற்காக(வும் உம்மீது பிறருக்கு அன்பை ஏற்படுத்தினேன்)."},{"id":40,"translation":"உமது சகோதரி (அந்த பேழையுடன்) நடந்துசென்றபோது, “அவருக்கு பொறுப்பேற்பவரை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” என்று (அந்த பேழையை எடுத்தவர்களிடம்) அவள் கூறினாள். ஆக, (உமது தாய்) கண் குளிர்வதற்காகவும் அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும் உம்மை உமது தாயிடம் நாம் திரும்பக் கொண்டு வந்தோம். இன்னும் நீர் ஓர் உயிரை கொன்று இருந்தீர். ஆக, அந்த துக்கத்திலிருந்து உம்மை நாம் பாதுகாத்தோம். இன்னும் நாம் உம்மை நன்கு சோதித்தோம். ஆக, மத்யன்வாசிகளிடம் பல ஆண்டுகள் நீர் தங்கினீர். பிறகு (உம்மை தூதராக அனுப்புவதற்கு) நிர்ணயிக்கப்பட்ட காலத்தை மூஸாவே! நீர் அடைந்தீர்."},{"id":41,"translation":"இன்னும், நான் எனக்காக உம்மைத் தேர்வு செய்திருக்கிறேன்."},{"id":42,"translation":"நீரும் உமது சகோதரரும் என் அத்தாட்சிகளுடன் (ஃபிர்அவ்னிடம்) செல்வீர்களாக! இன்னும், என்னை நினைவு கூர்வதில் நீங்கள் இருவரும் பலவீனப்பட்டு (பின்தங்கி) விடாதீர்கள்."},{"id":43,"translation":"நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்வீர்களாக! நிச்சயமாக அவன் (நிராகரிப்பில்) எல்லை மீறிவிட்டான்."},{"id":44,"translation":"ஆக, அவனுக்கு (நீர் உபதேசம் செய்யும்போது) மென்மையான சொல்லை நீங்கள் இருவரும் சொல்லுங்கள்! அவன் (உங்கள் உபதேசத்தால்) நல்லறிவு பெறலாம், அல்லது (அல்லாஹ்வை) பயப்படலாம்."},{"id":45,"translation":"(அவ்விருவரும்) கூறினார்கள்: எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் அவன் எங்கள் விஷயத்தில் அவசரப்பட்டு எங்களை தண்டித்துவிடுவதை; அல்லது, அவன் (எங்கள் மீது) எல்லை மீறுவதை (எங்களை கொன்றுவிடுவதை) பயப்படுகிறோம்."},{"id":46,"translation":"(அல்லாஹ்) கூறினான்: நீங்கள் இருவரும் பயப்படாதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் இருவருடன் இருக்கிறேன். நான் செவியுறுகிறேன்; இன்னும், பார்க்கிறேன்."},{"id":47,"translation":"ஆக, அவனிடம் நீங்கள் இருவரும் வாருங்கள்! பிறகு, (அவனிடம்) கூறுங்கள்: நிச்சயமாக நாங்கள் உனது இறைவனின் தூதர்கள் ஆவோம். ஆகவே, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பி விடு! அவர்களைத் தண்டிக்காதே! (துன்புறுத்தாதே!) திட்டமாக உனது இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உன்னிடம் நாங்கள் கொண்டு வந்துள்ளோம். நேர்வழியை பின்பற்றியவருக்கு ஈடேற்றம் உண்டாகுக!"},{"id":48,"translation":"நிச்சயமாக நாங்கள், எங்களுக்கு திட்டமாக வஹ்யி அறிவிக்கப்பட்டுள்ளது: “எவர் பொய்ப்பிப்பாரோ, புறக்கணித்து, திரும்புவாரோ அவர் மீது நிச்சயமாக தண்டனை நிகழும்”"},{"id":49,"translation":"அவன் கூறினான்: “மூஸாவே! உங்கள் இருவரின் இறைவன் யார்?”"},{"id":50,"translation":"(மூஸா) கூறினார்: எவன் ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய படைப்பை (அதுபோன்ற ஒரு ஜோடியை - துணையைக்) கொடுத்து, பிறகு (அதற்கு) வழிகாட்டினானோ அவன்தான் (நாங்கள் வணங்கும்) எங்கள் இறைவன்."},{"id":51,"translation":"அவன் கூறினான்: “ஆக, முந்திய தலைமுறையினர்களின் நிலை என்னவாகும்.”"},{"id":52,"translation":"(மூஸா) கூறினார்: அவர்களைப் பற்றிய ஞானம் என் இறைவனிடம் ஒரு பதிவுப்புத்தகத்தில் (பாதுகாப்பாக) இருக்கிறது. என் இறைவன் தவறிழைக்க மாட்டான். இன்னும், மறக்கமாட்டான்."},{"id":53,"translation":"அவன் எத்தகையவன் என்றால் உங்களுக்கு பூமியை (தொட்டிலாகவும்) விரிப்பாக(வும்) ஆக்கி உங்களுக்கு அதில் (பல) பாதைகளை (அவற்றில் நீங்கள் சென்றுவருவதற்காக) ஏற்படுத்தினான். இன்னும், வானத்திலிருந்து மழையை இறக்கினான். ஆக, அதன் மூலம் பலதரப்பட்ட தாவரங்களிலிருந்து பல வகை(உணவு வகை)களை நாம் உற்பத்தி செய்கிறோம்."},{"id":54,"translation":"(அந்த உணவுகளிலிருந்து நீங்களும்) சாப்பிடுங்கள்! உங்கள் கால்நடைகளையும் மேய்த்துக் கொள்ளுங்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":55,"translation":"அதிலிருந்துதான் உங்களைப் படைத்தோம். இன்னும், அதில்தான் உங்களை திரும்பக் கொண்டுவருவோம். இன்னும், அதிலிருந்துதான் மற்றொரு முறை உங்களை வெளியேற்றுவோம்."},{"id":56,"translation":"அவனுக்கு (நாம் காட்டவேண்டிய) நமது அத்தாட்சிகள் அனைத்தையும் காண்பித்தோம். எனினும், அவன் (அவற்றை) பொய்ப்பித்தான். இன்னும், (அவற்றை) ஏற்க மறுத்தான்."},{"id":57,"translation":"அவன் கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”அவன் கூறினான்: “மூஸாவே! உமது சூனியத்தால் எங்கள் பூமியிலிருந்து எங்களை நீர் வெளியேற்றுவதற்காக எங்களிடம் வந்தீரா?”"},{"id":58,"translation":"ஆக, நிச்சயமாக நாமும் அதுபோன்ற ஒரு சூனியத்தை உம்மிடம் கொண்டு வருவோம். ஆகவே, எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் ஒரு சமமான இடத்தில் (நாம் ஒன்று சேர) குறிப்பிட்ட ஒரு நேரத்தை முடிவு செய்வீராக! நாமும் அதை மீற மாட்டோம். நீயும் அதை மீறக் கூடாது."},{"id":59,"translation":"அவர் கூறினார்: உங்களுக்கு குறிக்கப்பட்ட நேரம் “யவ்முஸ் ஸீனா” (என்ற உங்கள் பெருநாள்) ஆகும். இன்னும், (அந்த நாளில்) மக்கள் முற்பகலில் ஒன்று திரட்டப்பட வேண்டும்!"},{"id":60,"translation":"ஆக, ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்றான். இன்னும், (மூஸாவை தோற்கடிக்க) தனது தந்திர யுக்திகளை ஒன்றிணைத்தான். பிறகு (குறிக்கப்பட்ட நேரத்தில் அந்த இடத்திற்கு சூனியக்காரர்களுடன்) வந்தான்."},{"id":61,"translation":"அவர்களுக்கு மூஸா கூறினார்: “உங்களுக்கு கேடுதான்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள்! அவன் உங்களை (கடுமையான) தண்டனையால் அழித்து விடுவான். (அல்லாஹ்வின் மீது பொய்யை) இட்டுக்கட்டியவன் திட்டமாக நஷ்டமடைந்து விட்டான்.”"},{"id":62,"translation":"ஆக, (மூஸாவை எதிர்த்து சூனியம் செய்வதற்காக அழைத்து வரப்பட்ட) அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் விவாதித்தனர். இன்னும், அவர்கள் இரகசியமாக பேசினர்."},{"id":63,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக இந்த இருவரும் சூனியக்காரர்கள்தான். அவ்விருவரும் தங்கள் சூனியத்தினால் உங்கள் பூமியிலிருந்து உங்களை வெளியேற்றுவதற்கும்; உங்கள் சிறந்த தலைவர்களை அவ்விருவரும் மிகைத்து விடுவதற்கும் நாடுகிறார்கள்.”"},{"id":64,"translation":"“ஆகவே, உங்கள் தந்திர யுக்திகளை உறுதிப்படுத்தி, பிறகு ஓர் அணியாக (அவரை எதிர்க்க) வாருங்கள். இன்றைய தினம் யார் (மற்றவரை) மிகைப்பாரோ அவர் திட்டமாக வெற்றி அடைந்து விட்டார்.”"},{"id":65,"translation":"(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “மூஸாவே! ஒன்று, நீர் (முதலில்) எறிவீராக! அல்லது, எறிபவர்களில் முதலாமவர்களாக நாங்கள் இருக்கிறோம்.”"},{"id":66,"translation":"(மூஸா) கூறினார்: “மாறாக, (முதலாவதாக) நீங்கள் எறியுங்கள்.” ஆக, அ(வர்கள் எறிந்த அ)ப்போது அவர்களுடைய கயிறுகளும் அவர்களுடைய தடிகளும் அவர்களுடைய சூனியத்தால் நிச்சயமாக அவை ஓடுவதாக அவருக்கு தோற்றமளிக்கப்பட்டது."},{"id":67,"translation":"ஆக, மூஸா தனது உள்ளத்தில் பயத்தை உணர்ந்தார்."},{"id":68,"translation":"நாம் கூறினோம்: “பயப்படாதீர்! நிச்சயமாக நீர்தான் மிகைத்தவர் (வெற்றிபெறுபவர்) ஆவீர்."},{"id":69,"translation":"இன்னும், உமது கையில் உள்ளதை நீர் எறிவீராக! அது அவர்கள் செய்ததை (எல்லாம்) விழுங்கி விடும். அவர்கள் செய்ததெல்லாம் ஒரு சூனியக்காரனின் சூழ்ச்சிதான். இன்னும், சூனியக்காரன் எங்கிருந்து வந்தாலும் (அவன் என்னதான் தந்திரம் செய்தாலும்) வெற்றிபெற மாட்டான்."},{"id":70,"translation":"ஆக, (இதை கண்ணுற்ற) சூனியக்காரர்கள் சிரம்பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர். ஹாரூன் இன்னும், மூஸாவுடைய இறைவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று கூறினார்கள்."},{"id":71,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: நான் உங்களுக்கு அனுமதி அளிப்பதற்கு முன்னர் அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்கள் பெரிய(தலை)வர் ஆவார். ஆகவே, நிச்சயமாக நான் உங்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். இன்னும், பேரீச்ச மரத்தின் பலகைகளில் உங்களை நிச்சயமாக கழுமரத்தில் ஏற்றுவேன். இன்னும், தண்டிப்பதில் எங்களில் யார் கடினமானவர், நிரந்தரமானவர் என்பதை நிச்சயமாக நீங்கள் (எல்லோரும்) அறிவீர்கள்."},{"id":72,"translation":"(சூனியக்காரர்கள்) கூறினார்கள்: “தெளிவான அத்தாட்சிகளில் இருந்து எங்களிடம் எது வந்ததோ அதை விடவும்; இன்னும், எங்களைப் படைத்த (இறை)வனை விடவும் உன்னை (பின்பற்றுவதை) நாம் தேர்ந்தெடுக்க மாட்டோம். ஆகவே, நீ எதை (முடிவு) செய்பவனாக இருக்கிறாயோ அதை நீ (முடிவு) செய்! நீ செய்வதெல்லாம் இந்த உலக வாழ்க்கையில்தான். (எங்களது மறுமையை நீ ஒன்றும் செய்துவிட முடியாது.)”"},{"id":73,"translation":"“நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டோம், அவன் எங்களுக்கு எங்கள் பாவங்களையும் சூனியம் செய்வதற்கு நீ எங்களை நிர்ப்பந்தித்ததையும் அவன் மன்னிக்க வேண்டும் என்பதற்காக. அல்லாஹ், (நற்கூலி கொடுப்பதில்) மிகச் சிறந்தவன், (தண்டிப்பதில்) மிக நிரந்தரமானவன்.”"},{"id":74,"translation":"நிச்சயமாக விஷயமாவது, எவன் தன் இறைவனிடம் பாவியாக வருகிறானோ நிச்சயமாக அவனுக்கு நரகம்தான். அதில் அவன் மரணிக்கவும் மாட்டான்; (நிம்மதியாக) வாழவும் மாட்டான்."},{"id":75,"translation":"இன்னும், யார் அவனிடம் நன்மைகளை செய்த நம்பிக்கையாளராக வருவாரோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) மிக உயர்வான தகுதிகள் உண்டு."},{"id":76,"translation":"‘அத்ன்’ எனும் சொர்க்கங்கள் (அவர்களுக்கு உண்டு). அவற்றின் கீழே நதிகள் ஓடும். அவற்றில் அவர்கள் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இன்னும், யார் (இணைவைத்தலை விட்டும் பாவங்களை விட்டும் நீங்கி) பரிசுத்தவானாக இருந்தாரோ அவருக்குரிய நற் கூலியாகும் இது."},{"id":77,"translation":"மூஸாவிற்கு திட்டவட்டமாக நாம் வஹ்யி அறிவித்தோம்: அதாவது, “என் அடியார்(களான இஸ்ரவேலர்)களை இரவில் அழைத்துச் செல்வீராக! ஆக, அவர்களுக்காக கடலில் (ஈரமற்ற) காய்ந்த பாதையை ஏற்படுத்துவீராக! (ஃபிர்அவ்னால் நீங்கள்) பிடிக்கப்படுவதை(யும்) நீர் பயப்பட மாட்டீர்; (கடலில் நீங்கள் மூழ்கிவிடுவதையும்) அஞ்சமாட்டீர்.”"},{"id":78,"translation":"ஃபிர்அவ்ன் தனது படைகளுடன் அவர்களை பின்தொடர்ந்தான். ஆக, அவர்களை கடலில் இருந்து எது சூழ இருந்ததோ அது அவர்களை சூழ்ந்து கொண்(டு அழித்து விட்)டது."},{"id":79,"translation":"ஃபிர்அவ்ன் தன் சமுதாயத்தினரை வழிகெடுத்தான். இன்னும், (அவர்களுக்கு) அவன் நேர்வழி காட்டவில்லை."},{"id":80,"translation":"இஸ்ரவேலர்களே! திட்டமாக உங்கள் எதிரிகளிடமிருந்து உங்களை நாம் பாதுகாத்தோம். இன்னும், தூர் மலையின் வலது பகுதியை (நீங்கள் வந்தடையும்போது அங்கு தவ்ராத் கொடுக்கப்படும் என்று) உங்களுக்கு வாக்களித்தோம். இன்னும், உங்கள் மீது “மன்னு” “ஸல்வா” வை இறக்கினோம்."},{"id":81,"translation":"நாம் உங்களுக்கு வழங்கிய நல்லவற்றிலிருந்து புசியுங்கள். அதில் எல்லை மீறாதீர்கள். (வாழ்வாதாரத்தை தேடுவதிலும் அதை செலவழிப்பதிலும் என் கட்டளையை மீறாதீர்கள்! அப்படி மீறினால்) உங்கள் மீது என் கோபம் இறங்கிவிடும். இன்னும், எவன் மீது என் கோபம் இறங்கிவிடுமோ திட்டமாக அவன் (துர்ப்பாக்கியமடைந்து நரகத்தில்) வீழ்ந்து விடுவான்."},{"id":82,"translation":"இன்னும், (பாவங்களிலிருந்து) யார் திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்மை செய்து பிறகு, நேர்வழி பெற்றாரோ அவரை நிச்சயமாக நான் மிகவும் மன்னிக்கக் கூடியவன் ஆவேன்."},{"id":83,"translation":"மூஸாவே! உமது சமுதாயத்தை விட்டும் உம்மை எது விரைவுபடுத்தியது?"},{"id":84,"translation":"அவர் கூறினார்: அவர்கள் என் அடிச்சுவட்டின் மீது (அதைப் பின்பற்றி எனக்குப் பின்னால் வந்த வண்ணமாக) இருக்கிறார்கள். இன்னும், “நீ (என் மீது) திருப்திபடுவதற்காக (அவர்களுக்கு முன்னால்) உன் பக்கம் நான் விரைந்(து வந்)தேன்.”"},{"id":85,"translation":"(அல்லாஹ்) கூறினான்: நிச்சயமாக நாம் உமக்குப் பின்னர் உமது சமுதாயத்தை திட்டமாக சோதித்தோம். இன்னும், அவர்களை ஸாமிரி வழிகெடுத்தான்."},{"id":86,"translation":"ஆக, மூஸா கோபமுற்றவராக, கவலையடைந்தவராக தனது சமுதாயத்திடம் திரும்பினார். அவர் கூறினார்: “என் சமுதாயமே! உங்கள் இறைவன் உங்களுக்கு அழகிய வாக்கை வாக்களிக்கவில்லையா? (என்னை விட்டுப் பிரிந்த) காலம் உங்களுக்கு தூரமாகிவிட்டதா? அல்லது, உங்கள் மீது உங்கள் இறைவன் புறத்திலிருந்து கோபம் இறங்குவதை நீங்கள் நாடுகிறீர்களா? அதனால் என் (இறைவன் நமக்கு) குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) மாறு செய்தீர்களா?”"},{"id":87,"translation":"அவர்கள் கூறினார்கள்: “உமது குறிப்பிட்ட நேரத்திற்கு (வராமல்) நாங்கள் எங்கள் விருப்பப்படி மாறுசெய்யவில்லை. என்றாலும் நாங்கள் (ஃபிர்அவ்னுடைய) மக்களின் ஆபரணங்களில் இருந்து பல சுமைகளை நாங்கள் சுமக்கும்படி ஏவப்பட்டோம். பிறகு, அவற்றை நாங்கள் (நெருப்பில்) எறிந்தோம். ஆக, அவ்வாறே சாமிரியும் (தன்னிடமுள்ளதை) எறிந்தான்.”"},{"id":88,"translation":"ஆக, அவன் அவர்களுக்கு ஒரு காளைக் கன்றை, அதாவது (காளைக் கன்றின் உருவத்தில் செய்யப்பட்ட உயிரற்ற) ஓர் உடலை உருவாக்கினான். அதற்கு மாட்டின் சத்தம் இருந்தது. ஆக, (இதைப் பார்த்தவர்களில் சிலர்) கூறினார்கள்: “இதுதான் உங்கள் தெய்வமும் மூஸாவுடைய தெய்வமும் ஆகும். ஆனால், அவர் (அதை) மறந்து(விட்டு எங்கோ சென்று) விட்டார்.”"},{"id":89,"translation":"(அவர்களின்) எந்த பேச்சுக்கும் அது பதில் பேசாமல் இருப்பதையும் அவர்களுக்கு அது தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் அது ஆற்றல் பெறாமல் இருப்பதையும் அவர்கள் கவனிக்கவேண்டாமா?"},{"id":90,"translation":"இன்னும், இதற்கு முன்னர் திட்டவட்டமாக ஹாரூன் அவர்களுக்கு கூறினார்: “என் சமுதாயமே! நிச்சயமாக இதன்மூலம் நீங்கள் சோதிக்கப்பட்டுள்ளீர்கள். நிச்சயமாக உங்கள் இறைவன் ரஹ்மான்தான். ஆகவே, என்னைப் பின்பற்றுங்கள். இன்னும், என் கட்டளைக்கு கீழ்ப்படியுங்கள்.”"},{"id":91,"translation":"அவர்கள் கூறினார்கள்: மூஸா எங்களிடம் திரும்புகின்ற வரை நாங்கள் இதை வணங்கியவர்களாகவே நீடித்திருப்போம்."},{"id":92,"translation":"(மூஸா) கூறினார்: ஹாரூனே! அவர்கள் வழிதவறி விட்டார்கள் என்று நீர் அவர்களைப் பார்த்தபோது உம்மை எது தடுத்தது,"},{"id":93,"translation":"நீர் என்னைப் பின்பற்றாமல் இருக்க? ஆக, எனது கட்டளைக்கு நீர் மாறு செய்துவிட்டீரா?"},{"id":94,"translation":"(ஹாரூன்) கூறினார்: “என் தாயின் மகனே! எனது தாடியையும் என் தலை (முடி)யையும் பிடி(த்திழு)க்காதே! “என் கூற்றை நீர் கவனிக்காமல் இஸ்ரவேலர்களுக்கு மத்தியில் பிரிவினை செய்து விட்டாய்!” என்று நீர் கூறிவிடுவதை நிச்சயமாக நான் பயந்தேன்."},{"id":95,"translation":"(மூஸா) கூறினார்: ஆக, ஸாமிரியே! உன் விஷயம்தான் என்ன?"},{"id":96,"translation":"அவன் கூறினான்: “எதை (மக்கள்) பார்க்கவில்லையோ அதை நான் பார்த்தேன். ஆகவே, (மூஸாவை பார்க்க வந்த வானத்) தூதருடைய (குதிரையின்) காலடி சுவட்டிலிருந்து ஒரு பிடி (மண்ணை) எடுத்து, (காளைக் கன்றின் சிலையில்) எறிந்தேன். இப்படித்தான் எனக்கு என் மனம் (இந்த தீய செயலை நான் செய்ய வேண்டும் என்று) அலங்கரித்தது."},{"id":97,"translation":"(மூஸா) கூறினார்: ஆக, நீ சென்று விடு. இவ்வாழ்க்கையில் “லா மிஸாஸ்” (என்னைத்) தொடாதீர் என்று நீ (சதா) சொல்லியவனாக இருப்பதுதான் நிச்சயமாக உனக்கு நிகழும். இன்னும், உமக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் உண்டு. அதை நீ தவறவிடமாட்டாய். நீ எதை வணங்கியவனாக இருந்தாயோ அந்த உனது தெய்வத்தைப் பார். நிச்சயமாக நாம் அதை எரித்து விடுவோம். பிறகு, நிச்சயமாக அதை (-அதன் சாம்பலை) கடலில் பரப்பிவிடுவோம்."},{"id":98,"translation":"உங்கள் வணக்கத்திற்குரிய இறைவன் எல்லாம் அல்லாஹ்தான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் எல்லாவற்றையும் விசாலமாகி அறிகிறான்."},{"id":99,"translation":"இவ்வாறு, முன் சென்றுவிட்டவர்களின் செய்திகளை உமக்கு விவரிக்கிறோம். இன்னும், திட்டமாக உமக்கு நம் புறத்திலிருந்து நல்லுபதேசத்தை கொடுத்தோம்."},{"id":100,"translation":"யார் அதை புறக்கணித்தாரோ நிச்சயமாக அவர் மறுமை நாளில் பாவத்தை சுமப்பார்."},{"id":101,"translation":"அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (அவர்கள் சுமக்கின்ற) பாவம் மறுமை நாளில் மிகக் கெட்ட சுமையாக இருக்கும்."},{"id":102,"translation":"எக்காளத்தில் ஊதப்படும் நாளில் (அவர்கள் தங்கள் பாவ சுமையை சுமப்பார்கள்). இன்னும், அந்நாளில் பாவிகளை, - (அவர்களின்) கண்கள் நீல நீறமானவர்களாக இருக்கின்ற நிலையில் - நாம் எழுப்புவோம்."},{"id":103,"translation":"அவர்கள் தங்களுக்கு மத்தியில், “நீங்கள் பத்து நாட்களே தவிர தங்கவில்லை” என்று மெதுவாகப் பேசுவார்கள்."},{"id":104,"translation":"அவர்களில் அறிவால் முழுமையானவர், “நீங்கள் (உலகத்தில்) ஒரு நாளே தவிர தங்கவில்லை” என்று கூறும்போது அவர்கள் பேசுவதை நாம் நன்கறிந்தவர்கள் ஆவோம்."},{"id":105,"translation":"அவர்கள் மலைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக! “என் இறைவன் அவற்றை தூள் தூளாக ஆக்கி விடுவான்.”"},{"id":106,"translation":"ஆக, அவற்றை சமமான பூமியாக (ஆக்கி) விட்டுவிடுவான்."},{"id":107,"translation":"அவற்றில் கோணலையும் வளைவையும் (மேடு பள்ளத்தையும்) நீர் காணமாட்டீர்."},{"id":108,"translation":"அந்நாளில் அவர்கள் அழைப்பாளரை பின் தொடர்வார்கள். அவரை விட்டு (அவர்கள் எங்கும்) திரும்ப முடியாது. இன்னும், சத்தங்கள் எல்லாம் ரஹ்மானுக்கு முன் அமைதியாகிவிடும். (அங்கு பாதங்களின்) மென்மையான (நடை) சத்தத்தை தவிர நீர் செவிமடுக்க மாட்டீர்."},{"id":109,"translation":"அந்நாளில் ரஹ்மான் எவருக்கு அனுமதித்து அவருடைய பேச்சை அவன் விரும்பினானோ அவரைத் தவிர (பிறருடைய) பரிந்துரை (எவருக்கும்) பலனளிக்காது."},{"id":110,"translation":"அவர்களுக்கு முன் உள்ளதையும் (மறுமையில் நடக்கப் போவதையும்) அவர்களுக்குப் பின்னுள்ளதையும் (உலகில் அவர்கள் செய்த செயல்களையும்) அவன் நன்கறிவான். அவர்கள் அவனை முழுமையாக சூழ்ந்தறிய மாட்டார்கள்."},{"id":111,"translation":"இன்னும், என்றும் உயிருள்ளவன் என்றும் நிலையானவனுக்கு முகங்கள் அடிபணிந்து விட்டன. அநியாயத்தை (-இணைவைப்பதை) சுமந்தவன் திட்டமாக நஷ்டமடைந்தான்."},{"id":112,"translation":"இன்னும், யார், அவரோ நம்பிக்கையாளராக இருக்கும் நிலையில் நன்மைகளை செய்வாரோ அவர் அநியாயத்தையும் (-பிறர் குற்றங்கள் தன்மீது சுமத்தப்படுவதையும்) (தனது நன்மைகள்) குறைக்கப்படுவதையும் பயப்பட மாட்டார்."},{"id":113,"translation":"இவ்வாறே, இ(ந்த வேதத்)தை அரபி மொழியிலான குர்ஆனாக இறக்கினோம். இன்னும், அதில் எச்சரிக்கையை பலவாறாக விவரித்து (கூறி) இருக்கிறோம், அவர்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக; அல்லது அது, அவர்களுக்கு ஒரு நல்ல புத்தியை ஏற்படுத்துவதற்காக."},{"id":114,"translation":"ஆக, உண்மையாளனும் அரசனுமாகிய அல்லாஹ் மிக உயர்ந்தவன். (நபியே!) குர்ஆனில் (ஒரு வசனம் இறக்கப்பட்ட பின்னர்) அதனுடைய (முழு விளக்கம் தொடர்பான) வஹ்யி உமக்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அவசரப்ப(ட்டு பிறருக்கு ஓதி காண்பித்து வி)டாதீர்! இன்னும், கூறுவீராக: “என் இறைவா எனக்கு ஞானத்தை அதிகப்படுத்து!”"},{"id":115,"translation":"திட்டவட்டமாக இதற்கு முன்னர் ஆதமுக்கு நாம் கட்டளையிட்டோம். ஆனால், அவர் (அதை) மறந்து விட்டார். அவரிடம் நாம் (நமது கட்டளையை நிறைவேற்றுவதில்) உறுதியைக் காணவில்லை."},{"id":116,"translation":"இன்னும், “ஆதமுக்கு நீங்கள் சிரம் பணியுங்கள்” என்று வானவர்களுக்கு நாம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! ஆக, இப்லீஸைத் தவிர அவர்கள் சிரம் பணிந்தனர். அவன் மறுத்து விட்டான்."},{"id":117,"translation":"ஆக, நாம் கூறினோம்: “ஆதமே! நிச்சயமாக இவன் உமக்கும் உமது மனைவிக்கும் எதிரி ஆவான். ஆகவே, அவன் உங்கள் இருவரையும் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றிவிடாமல் இருக்கட்டும். (அப்படி நீர் வெளியேறிவிட்டால்) மிகுந்த சிரமப்படுவீர்.”"},{"id":118,"translation":"இ(ந்த சொர்க்கத்)தில் நீர் பசித்திருக்காத, நீர் ஆடையற்றிருக்காத பாக்கியம் நிச்சயமாக உமக்கு உண்டு."},{"id":119,"translation":"இன்னும், நிச்சயமாக நீர் அதில் தாகிக்க மாட்டீர். இன்னும், வெப்பத்தை உணரமாட்டீர்."},{"id":120,"translation":"ஆக, ஷைத்தான் அவருக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தினான். ஆதமே! (சொர்க்கத்தில்) நிரந்தரத்தை தரும் மரத்தையும் (உமக்கு) அழியாத ஆட்சி கிடைப்பதையும் நான் உமக்கு அறிவிக்கவா? என்று கூறினான்."},{"id":121,"translation":"ஆக, அவ்விருவரும் அ(ந்த மரத்)திலிருந்து சாப்பிட்டனர். ஆகவே, அவ்விருவருக்கும் அவ்விருவரின் மறைவிடங்கள் தெரிய வந்தன. இன்னும், சொர்க்கத்தின் இலைகளை அவ்விருவரும் தங்கள் மீது கட்டி (தங்கள் மறைவிடத்தை மறைத்து)க் கொள்வதற்கு முற்பட்டனர். ஆதம், தன் இறைவனுக்கு மாறுசெய்தார். ஆகவே, அவர் வழி தவறிவிட்டார்."},{"id":122,"translation":"(அவர் தன் தவறை உணர்ந்து வருந்தி பாவமன்னிப்பு கோரிய) பிறகு அவருடைய இறைவன் அவரை தேர்ந்தெடுத்தான். ஆக, அவன் அவரை மன்னித்தான். இன்னும், (அவருக்கு பாவமன்னிப்புத் தேடுவதற்கும் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடப்பதற்கும்) நேர்வழி காட்டினான்."},{"id":123,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நீங்கள் இருவரும் (இப்லீஸ் உட்பட) அனைவரும் இதிலிருந்து இறங்குங்கள். உங்களில் சிலர், சிலருக்கு எதிரி ஆவர். ஆக, என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வந்தால் எவர் எனது நேர்வழியை பின்பற்றுவாரோ அவர் வழிதவற மாட்டார். இன்னும், அவர் (மறுமையில்) சிரமப்பட மாட்டார்."},{"id":124,"translation":"இன்னும், எவன் என் அறிவுரையை புறக்கணிப்பானோ நிச்சயமாக அவனுக்கு (மண்ணறையில்) மிக நெருக்கடியான வாழ்க்கைதான் உண்டு. இன்னும், மறுமையில் அவனை குருடனாக நாம் எழுப்புவோம்."},{"id":125,"translation":"அவன் கூறுவான்: “என் இறைவா! என்னை குருடனாக ஏன் எழுப்பினாய், நான் பார்வை உள்ளவனாக இருந்தேனே?”"},{"id":126,"translation":"(அல்லாஹ்) கூறுவான்: “(உனது நிலை) அவ்வாறுதான். (ஏனெனில்,) எனது வசனங்கள் உன்னிடம் வந்தன. ஆக, நீ அவற்றை (பின்பற்றாது) விட்டுவிட்டாய். அவ்வாறே இன்று நீ (நரகத்தில் கடும் தண்டனையை அனுபவிப்பவனாக) விட்டுவிடப்படுவாய்.”"},{"id":127,"translation":"இன்னும், யார் வரம்பு மீறுவாரோ; தன் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்ளமாட்டாரோ அவரை இவ்வாறுதான் தண்டிப்போம். இன்னும், (அவனுக்கு) மறுமையின் தண்டனை மிகக் கடுமையானதும் நிரந்தரமானதும் ஆகும்."},{"id":128,"translation":"ஆக, இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர்களை நாம் அழித்தது அவர்களுக்கு (தங்கள் தவறை) தெளிவுபடுத்தவில்லையா? இவர்கள் (தங்கள் பயணத்தில் அழிவுக்குள்ளான) அவர்களின் இருப்பிடங்களில் செல்கிறார்கள். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":129,"translation":"(ஆதாரத்தை நிலை நிறுத்தாமல் அல்லாஹ் யாரையும் தண்டிக்கமாட்டான் என்ற) வாக்கும் (தண்டனை இறங்குவதற்கு என்று) ஒரு குறிப்பிட்ட தவணையும் உமது இறைவனிடம் முன்னரே முடிவாகி இருக்கவில்லையெனில் கண்டிப்பாக (எல்லை மீறியவர்களுக்கு) அழிவு உடனே ஏற்பட்டிருக்கும்."},{"id":130,"translation":"ஆக, (நபியே!) அவர்கள் கூறுவதை நீர் (பொறுமையுடன்) சகி(த்திரு)ப்பீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் அது மறைவதற்கு முன்னரும் இரவின் நேரங்களிலும் பகலின் ஓரங்களிலும் உமது இறைவனை புகழ்ந்து தொழுவீராக! (இதன் மூலம் இறைவனின் அருள் உமக்கு கிடைக்கப் பெற்று) நீர் திருப்தி பெறுவீர்!"},{"id":131,"translation":"இன்னும், இ(ணைவைப்ப)வர்களில் (இவர்களைப்) போன்ற பலருக்கு உலக வாழ்க்கையின் அலங்காரமாக நாம் கொடுத்த (இவ்வுலக) இன்பத்தின் பக்கம் உமது கண்களை நீர் திருப்பாதீர். நாம் அவர்களை அதில் சோதிப்பதற்காக (கொடுத்தோம்). உமது இறைவனின் அருட்கொடை (உமக்கு) சிறந்ததும் நிலையானதும் ஆகும்."},{"id":132,"translation":"இன்னும், உமது குடும்பத்திற்கு தொழுகையை ஏவுவீராக! இன்னும், அதன்மீது நீர் உறுதியாக இருப்பீராக! நாம் (உமக்கோ மற்றவர்களுக்கோ நீர்) உணவளிக்கும்படி உம்மிடம் கேட்கவில்லை. நாமே உமக்கு உணவளிக்கிறோம். நல்ல முடிவு இறையச்சத்திற்குத்தான்."},{"id":133,"translation":"“இவர் தன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரமாட்டாரா?” என்று (இணைவைப்பவர்கள்) கூறுகிறார்கள். முந்திய வேதங்களில் உள்ளதை தெளிவுப்படுத்தும் (-குர்ஆன் என்னும்) உறுதியான சான்று அவர்களிடம் வரவில்லையா?"},{"id":134,"translation":"இன்னும், இதற்கு முன்னரே ஒரு தண்டனையைக் கொண்டு இவர்களை நாம் அழித்திருந்தால், “எங்கள் இறைவா! எங்களுக்கு ஒரு தூதரை நீ அனுப்பி இருக்கக்கூடாதா? நாங்கள் இழிவடைவதற்கும் கேவலப்படுவதற்கும் முன்னர் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே!” என்று கூறி இருப்பார்கள்."},{"id":135,"translation":"(நபியே!) கூறுவீராக! (நீங்கள்) ஒவ்வொருவரும் (உங்கள் முடிவை) எதிர்பார்ப்பவர்களே! ஆகவே, (இப்போதும் உங்கள் முடிவை) எதிர்பாருங்கள். சமமான (நேரான) பாதை உடையவர்கள் யார்? இன்னும், நேர்வழி பெற்றவர்கள் யார் என்பதை (உங்கள் மரணத்தின்போது) நீங்கள் விரைவில் அறிவீர்கள்."}]},{"id":21,"verses":[{"id":1,"translation":"தா ஹா."},{"id":2,"translation":"அவர்களுடைய இறைவனிடமிருந்து புதிய அறிவுரை ஏதும் அவர்களுக்கு வந்தால் அவர்களோ விளையாடியவர்களாக இருக்கும் நிலையில் அதை செவியுறுகிறார்கள்."},{"id":3,"translation":"அவர்களது உள்ளங்கள் மறதியில் இருக்கின்றன. (இணைவைக்கின்ற) அநியாயக்காரர்கள் (நமது நபியை குறித்து அவர்கள் என்ன சொல்ல வேண்டுமென்று தங்களுக்கு மத்தியில் ஒருமித்து முடிவு செய்த) பேச்சை (வெளியில்) பகிரங்கப்படுத்தி பேசினார்கள். (அதாவது, நபியவர்களை சுட்டிக்காண்பித்து) “இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர வேறில்லை. (மக்களே!) நீங்கள் (இதை) அறிந்துகொண்டே (அவர் ஓதுகிற) சூனியத்தை ஏற்றுக் கொள்கிறீர்களா?” (என்று வெளிப்படையாக கேட்டனர்.)"},{"id":4,"translation":"(நபி) கூறினார்: என் இறைவன் வானத்திலும் பூமியிலும் உள்ள பேச்சுகளை அறிகிறான். அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு அறிபவன்."},{"id":5,"translation":"மாறாக, (அவர்களில் சிலர்) கூறினார்கள்: “(இது) பயமுறுத்துகின்ற கனவுகள்.” (மற்றும் சிலர் கூறினார்கள்:) “மாறாக, (முஹம்மத் இறைவன் மீது) இதை பொய்யாக இட்டுக்கட்டுகிறார்.” (வேறு சிலர் கூறினார்கள்): “மாறாக, இவர் ஒரு கவிஞர்.” “ஆகவே, முதலாமவர்கள் (முந்திய தூதர்கள்) அனுப்பப்பட்டது போன்று அவரும் எங்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வரட்டும்.” (என்று அவர்கள் கூறுகிறார்கள்)."},{"id":6,"translation":"இவர்களுக்கு முன்னர், (அத்தாட்சியைக் கேட்ட) எந்த சமுதாயமும் (அந்த அத்தாட்சி வந்த பின்னர்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களை (எல்லாம்) நாம் அழித்தோம். எனவே, (மக்காவாசிகளாகிய) இவர்கள் (மட்டும்) (நமது அத்தாட்சிகள் அவர்களிடம் வந்தால் அவற்றை அவர்கள்) நம்பிக்கை கொள்வார்களா?"},{"id":7,"translation":"உமக்கு முன்னர் நாம் (மனிதர்களான) ஆடவர்களைத் தவிர (வானவர்களை) தூதர்களாக அனுப்பவில்லை. அ(ந்த ஆட)வர்களுக்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆகவே, (மக்காவாசிகளே) நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் (முந்திய) வேதக்காரர்களிடம் நீங்கள் விசாரியுங்கள்,"},{"id":8,"translation":"நாம் அ(ந்த தூது)வர்களை உணவு சாப்பிடாத உடல்களாக (-வானவர்களாக) ஆக்கவில்லை. இன்னும், அவர்கள் (மரணமில்லாத) நிரந்தரமானவர்களாகவும் இருக்கவில்லை."},{"id":9,"translation":"பிறகு, நாம் அ(ந்த தூது)வர்களுக்கு (நமது) வாக்கை உண்மைப்படுத்தினோம். ஆக, நாம் அ(ந்த தூது)வர்களையும் நாம் நாடியவர்களையும் பாதுகாத்தோம். இன்னும், (நிராகரிப்பில்) எல்லை மீறியவர்களை நாம் அழித்தோம்."},{"id":10,"translation":"திட்டமாக நாம் உங்களுக்கு ஒரு வேதத்தை இறக்கி இருக்கிறோம். அ(தைப் பின்பற்றுவ)தில் உங்கள் கண்ணியம் இருக்கிறது. நீங்கள் சிந்தித்துப் புரிய வேண்டாமா?"},{"id":11,"translation":"தீயவர்களாக இருந்த எத்தனையோ பல ஊர்(வாசி)களை நாம் அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு மக்களை நாம் உருவாக்கினோம்."},{"id":12,"translation":"ஆக, அவர்கள் நமது தண்டனையை உணர்ந்தபோது அப்போது அவர்கள் அதிலிருந்து (தப்பிப்பதற்காக) விரைந்து ஓடினர்."},{"id":13,"translation":"விரைந்து ஓடாதீர்கள். நீங்கள் எதில் பெரும் இன்பம் அனுபவித்து வந்தீர்களோ அதன் பக்கமும் உங்கள் (ஆடம்பரமான) இல்லங்களின் பக்கமும் திரும்புங்கள்! “நீங்கள் (உங்கள் உலக செல்வத்திலிருந்து சிறிது) கேட்கப்படுவீர்கள்” (அதை கொடுத்து நீங்கள் தப்பித்து விடலாம் என்று கேலியாக கூறப்படும்.)"},{"id":14,"translation":"(தண்டனை இறக்கப்பட்ட) அவர்கள் கூறினார்கள்: எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்."},{"id":15,"translation":"ஆக, அதுவே அவர்களது கூப்பாடாக நீடித்திருந்தது. இறுதியாக, அவர்களை (வாளால்) அறுக்கப்பட்டவர்களாக, அழிந்து நாசமடைந்தவர்களாக நாம் ஆக்கிவிட்டோம்."},{"id":16,"translation":"இன்னும், வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் நாம் (வீண் விளையாட்டு) விளையாடுபவர்களாக படைக்கவில்லை."},{"id":17,"translation":"நாம் வேடிக்கையை (-மனைவியை) ஏற்படுத்த நாடி இருந்தால் அதை நம்மிடமிருந்தே ஏற்படுத்திக் கொண்டிருப்போம். (ஆனால், அது நமக்கு தகுதியானதல்ல என்பதால்) நாம் (அப்படி) செய்பவர்களாக இல்லை."},{"id":18,"translation":"மாறாக, நாம் சத்தியத்தை அசத்தியத்தின் மீது எறிகிறோம். அதை உடைத்து விடுகிறது அது. அப்போது அ(ந்த அசத்தியமான)து அழிந்து விடுகிறது. நீங்கள் (உங்கள் இறைவனை தவறாக) வர்ணிக்கின்ற காரணத்தால் உங்களுக்கு அழிவுதான்."},{"id":19,"translation":"வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் அவனுக்கே உரிமையானவர்கள். இன்னும், அவனிடம் இருக்கின்ற (வான)வர்கள் அவனை வணங்குவதற்கு வீம்புபிடிக்க மாட்டார்கள். இன்னும் (அதில்) சோர்வடைய மாட்டார்கள்."},{"id":20,"translation":"அவர்கள் இரவு பகலாக (சடைவில்லாமல் அல்லாஹ்வை) துதிக்கிறார்கள். அவர்கள் பலவீனமடைய மாட்டார்கள்."},{"id":21,"translation":"அ(ல்லாஹ்விற்கு இணைவைக்கின்ற அ)வர்கள், (மரணித்தவர்களை) உயிர்ப்பி(ப்பதற்கு சக்தி இரு)க்கின்ற கடவுள்களையா பூமியில் (வணக்க வழிபாட்டுக்கு) எடுத்துக் கொண்டார்கள்? (அல்லாஹ்வை அன்றி இறந்தவர்களை உயிர்ப்பிப்பவர் யார் இருக்கிறார்?)"},{"id":22,"translation":"(வானம், பூமி) அவை இரண்டிலும் அல்லாஹ்வைத் தவிர (வேறு) கடவுள்கள் இருந்திருந்தால் அவை இரண்டும் சீரழிந்திருக்கும். ஆக, (இணைவைக்கும்) அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அர்ஷுடைய அதிபதியான அல்லாஹ் மகாத்தூயவன்."},{"id":23,"translation":"அவன் செய்வதைப் பற்றி கேள்வி கேட்கப்பட மாட்டான். அவர்கள்தான் கேள்வி கேட்கப்படுவார்கள்."},{"id":24,"translation":"அவ(ன் ஒருவ)னை அன்றி பல கடவுள்களை அவர்கள் எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக: “உங்கள் ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். இது என்னுடன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும்; இன்னும், எனக்கு முன் உள்ளவர்களைப் பற்றிய செய்தியாகும். மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் சத்தியத்தை அறியமாட்டார்கள். ஆகவே, அவர்கள் (சத்தியத்தை) புறக்கணிப்பவர்கள் ஆவார்கள்.”"},{"id":25,"translation":"“நிச்சயமாக விஷயமாவது, என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னையே வணங்குங்கள்.” என்று நாம் வஹ்யி அறிவித்தே தவிர உமக்கு முன்னர் எந்த ஒரு தூதரையும் நாம் அனுப்பவில்லை."},{"id":26,"translation":"“ரஹ்மான் (தனக்கு) ஒரு குழந்தையை எடுத்துக் கொண்டான்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அவன் மகா தூயவன். (அந்த வானவர்கள் அவனுடைய மகள்கள் அல்ல.) மாறாக, அவனுடைய கண்ணியமான அடியார்கள் ஆவார்கள்."},{"id":27,"translation":"அவர்கள் பேச்சில் அவனை முந்தமாட்டார்கள். (எதிர்த்து பேச மாட்டார்கள்.) இன்னும், அவர்கள் அவனுடைய கட்டளையின்படியே செய்கிறார்கள்."},{"id":28,"translation":"அ(ந்த வான)வர்களுக்கு முன் உள்ளதையும் அவர்களுக்குப் பின் உள்ளதையும் அவன் நன்கறிவான். அவன் விரும்பியவர்களுக்கே தவிர அவர்கள் சிபாரிசு செய்யமாட்டார்கள். இன்னும், அவர்கள் அவனுடைய அச்சத்தால் (அவனுக்கு மாறு செய்யாமல்) மிகுந்த எச்சரிக்கையுடன் பயந்தவர்களாக இருப்பார்கள்."},{"id":29,"translation":"இன்னும், அவர்களில் யார் “நிச்சயமாக அவனை அன்றி நான்தான் கடவுள் என்று கூறுவாரோ அவருக்கு நரகத்தையே கூலியாக கொடுப்போம். இவ்வாறுதான், அநியாயக்காரர்களுக்கு கூலி கொடுப்போம்."},{"id":30,"translation":"அவர்கள் அறியவேண்டாமா? “நிச்சயமாக வானங்களும் பூமியும் சேர்ந்து இருந்தன. நாம்தான் அவற்றைப் பிளந்(து பிரித்)தோம். இன்னும் உயிருள்ள எல்லா வஸ்துகளையும் தண்ணீரிலிருந்து உருவாக்கினோம். அவர்கள் (படைத்த இறைவனை) நம்பிக்கை கொள்ளமாட்டார்களா?”"},{"id":31,"translation":"இன்னும், பூமியானது, அவர்களுடன் சாய்ந்து விடாமல் இருப்பதற்காக பூமியில் நாம் மலைகளை ஏற்படுத்தினோம். இன்னும், அவர்கள் (தங்கள் வாழ்வாதாரத்தை நோக்கி) சரியாக செல்வதற்காக அவர்களுக்கு அதில் விசாலமான பாதைகளை ஏற்படுத்தினோம்."},{"id":32,"translation":"இன்னும், வானத்தை பாதுகாக்கப்பட்ட (உயர்த்தப்பட்ட) ஒரு முகடாக நாம் ஆக்கினோம். அவர்களோ அதில் உள்ள (சூரியன், சந்திரன், நட்ச்சத்திரம் போன்ற) அத்தாட்சிகளைப் (பார்த்தும் அவற்றை படைத்த அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) புறக்கணிக்கின்றார்கள்."},{"id":33,"translation":"இன்னும், அவன்தான் இரவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் (ஒரு) சுற்று வட்டத்தில் நீந்துகின்றன."},{"id":34,"translation":"உமக்கு முன்னர் எந்த ஒரு மனிதருக்கும் (இப்பூமியில்) நிரந்தரமான வாழ்க்கையை நாம் ஆக்கவில்லை. ஆகவே, நீர் மரணித்து விட்டால் அவர்கள் (இப்பூமியில்) நிரந்தரமாக வாழ்ந்து விடுவார்களா?"},{"id":35,"translation":"ஒவ்வோர் ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதாகும். துன்பத்தினாலும் இன்பத்தினாலும் உங்களை நாம் நன்கு சோதிப்போம். இன்னும், நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":36,"translation":"(நபியே!) நிராகரிப்பாளர்கள் உம்மைப் பார்த்தால், உம்மை கேலியாக தவிர எடுத்துக் கொள்ளமாட்டார்கள். “இவரா உங்கள் கடவுள்களை விமர்ச்சிக்கிறார்” (என்று தங்களுக்குள் பேசுகிறார்கள்.) அவர்களோ (தங்களை படைத்து பரிபாலிக்கின்ற) ரஹ்மானை (நன்றியுடன்) நினைவு கூர மறுக்கிறார்கள்."},{"id":37,"translation":"மனிதன் விரைவாக படைக்கப்பட்டான். எனது (தண்டனையின்) அத்தாட்சிகளை உங்களுக்கு விரைவில் காண்பிப்போம். ஆகவே, என்னிடம் அவசரப்படாதீர்கள்."},{"id":38,"translation":"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (தண்டனையின்) இந்த வாக்கு எப்போது நிகழும் என அவர்கள் (உங்களிடம்) கூறுகிறார்கள்."},{"id":39,"translation":"நிராகரிப்பாளர்கள் தங்களது முகங்களை விட்டும் தங்களது முதுகுகளை விட்டும் நரக நெருப்பை தடுக்கமாட்டார்களே, இன்னும், அவர்கள் உதவிசெய்யப்பட மாட்டார்களே (அந்த) நேரத்தை அவர்கள் அறிந்து கொண்டால் (அல்லாஹ்வை நிராகரித்திருக்க மாட்டார்கள்)."},{"id":40,"translation":"மாறாக, அ(ந்த நரக நெருப்பான)து அவர்களிடம் திடீரென வரும். ஆக, அது அவர்களை திடுக்கிடச் செய்யும். அவர்கள் (தங்களை விட்டும்) அதை தடுப்பதற்கு இயல மாட்டார்கள். இன்னும், அவர்கள் (மன்னிப்புத் தேட) கால அவகாசம் கொடுக்கப்பட மாட்டார்கள்."},{"id":41,"translation":"உமக்கு முன்னர் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டுள்ளார்கள். ஆக, அவர்களை கேலி செய்தவர்களை அவர்கள் எதைப் பற்றி கேலி செய்தார்களோ அதுவே சூழ்ந்து கொண்டது."},{"id":42,"translation":"(நபியே!) கூறுவீராக! “இரவிலும் பகலிலும் உங்களை ரஹ்மானிடமிருந்து பாதுகாப்பவர் யார் இருக்கிறார்?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் அறிவுரையை (-குர்ஆனை) புறக்கணிக்கிறார்கள்."},{"id":43,"translation":"அல்லது, அவர்களை (நமது தண்டனையிலிருந்து) பாதுகாக்கிற கடவுள்கள் நம்மை அன்றி அவர்களுக்கு உண்டா? (இவர்கள் கடவுள்கள் என்று வணங்கும்) அவர்கள் தங்களுக்கு உதவுவதற்கே இயலமாட்டார்கள். இன்னும் இ(ந்த நிராகரிப்ப)வர்கள் நம்மிடமிருந்து (யார் மூலமாகவும்) பாதுகாக்கப்பட மாட்டார்கள்."},{"id":44,"translation":"மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் (இவ்வுலக வாழ்க்கையில்) சுகமான வாழ்வளித்தோம். இறுதியாக இவர்களுக்கு வாழ்க்கை நீண்டு சென்றது. (நீண்ட காலம் சுகமாக வாழ்வோம் என்று நினைத்தனர்.) நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப்புறங்களிலிருந்து அழித்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? ஆகவே, இவர்கள் (இந்த மக்காவாசிகள் மட்டும் நமது தூதரை) மிகைத்து விடுவார்களா?"},{"id":45,"translation":"(நபியே!) கூறுவீராக: நான் உங்களை எச்சரிப்பதெல்லாம் வஹ்யின் மூலமாகத்தான். இன்னும், செவிடர்களோ அவர்கள் எச்சரிக்கப்படும்போது (நேர்வழியின்) அழைப்புக்கு செவிசாய்க்க மாட்டார்கள்."},{"id":46,"translation":"உமது இறைவனின் தண்டனையிலிருந்து ஒரு பகுதி அவர்களை அடைந்தால், “எங்கள் நாசமே! நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” என்று திட்டமாக கூறுவார்கள்."},{"id":47,"translation":"மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். ஆகவே, எந்த ஓர் ஆன்மாவுக்கும் அறவே அநீதி இழைக்கப்படாது. (அது செய்த செயல்) கடுகின் விதை அளவு இருந்தாலும் அதை(யும் விசாரணைக்கு) நாம் கொண்டு வருவோம். இன்னும், (அவர்களை) விசாரிப்பதற்கு நாமே போதுமானவர்கள்."},{"id":48,"translation":"இறையச்சமுள்ளவர்கள் பயன் பெறுவதற்காக பிரித்தறிவிக்கக்கூடிய (சத்தியத்)தையும் வெளிச்ச(மிக்க வேத)த்தையும் அறிவுரையையும் மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் திட்டவட்டமாக நாம் கொடுத்தோம்."},{"id":49,"translation":"அ(ந்த இறையச்சமுள்ள)வர்கள் தங்கள் இறைவனை மறைவில் (-இவ்வுலக வாழ்க்கையில்) பயப்படுவார்கள். இன்னும், அவர்கள் மறுமையை குறித்து (எச்சரிக்கையுடன்) அச்சப்படுவார்கள்."},{"id":50,"translation":"இது, பாக்கியமிகுந்த (அதிகமான நற்பலன்களை உடைய) ஓர் அறிவுரையாகும். நாம் இதை இறக்கினோம். ஆக, நீங்கள் இதை மறுக்கிறீர்களா?"},{"id":51,"translation":"(மூஸாவிற்கு) முன்னர் இப்ராஹீமுக்கு அவருக்குரிய நேரிய அறிவை திட்டமாக நாம் கொடுத்தோம். இன்னும் நாம் அவரை நன்கறிந்தவர்களாக இருந்தோம்."},{"id":52,"translation":"அவர், தனது தந்தை இன்னும் தனது சமுதாயத்தை நோக்கி, “நீங்கள் இவற்றின் மீது நிலையாக (-பிடிவாதமாக) இருக்கின்ற இந்த உருவ சிலைகள் (உடைய உண்மை நிலைதான்) என்ன?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":53,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்கள் மூதாதைகள் அவற்றை வணங்குபவர்களாக இருப்பதை நாங்கள் கண்டோம்.”"},{"id":54,"translation":"(இப்ராஹீம்) கூறினார்: “திட்டமாக நீங்களும் உங்கள் மூதாதைகளும் தெளிவான வழிகேட்டில் இருக்கிறீர்கள்.”"},{"id":55,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நீர் எங்களிடம் சத்தியத்தைக் கொண்டு வந்தீரா? அல்லது, நீர் (வீண் விளையாட்டு) விளையாடுபவர்களில் உள்ளவரா?”"},{"id":56,"translation":"அவர் கூறினார்: “மாறாக, வானங்கள், இன்னும், பூமியின் இறைவன்தான் உங்கள் இறைவன் ஆவான். (இந்த சிலைகளில் எதுவும் அல்ல.) அவன்தான் அவற்றைப் படைத்தான். இன்னும், நான் இதற்கு சாட்சி கூறுபவர்களில் ஒருவன் ஆவேன்."},{"id":57,"translation":"இன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (என்னிடமிருந்து) திரும்பிச் சென்ற பின்னர் உங்கள் சிலைகளுக்கு நிச்சயமாக நான் சதி திட்டம் செய்(து அவற்றை உடைத்துவிடு)வேன்."},{"id":58,"translation":"ஆக, அவர் அவற்றை (உடைக்கப்பட்ட) சிறுசிறு துண்டுகளாக ஆக்கிவிட்டார், அவர்களுடைய பெரிய சிலையைத் தவிர. அவர்கள் அதனளவில் திரும்ப வருவதற்காக (அதை மட்டும் உடைக்காமல் விட்டுவிட்டார்)."},{"id":59,"translation":"அவர்கள் கூறினார்கள்: எங்கள் கடவுள்களுடன் இப்படி யார் நடந்துகொண்டார்? நிச்சயமாக அவர் அநியாயக்காரர்களில் உள்ளவர் ஆவார்."},{"id":60,"translation":"அவர்கள் கூறினார்கள்: ஒரு வாலிபர் அவற்றை விமர்சிப்பதை நாங்கள் செவியுற்றோம். அவருக்கு இப்ராஹீம் என்று (பெயர்) சொல்லப்படும்."},{"id":61,"translation":"அவர்கள் கூறினார்கள்: ஆக, அவரை மக்களின் கண்களுக்கு முன் கொண்டு வாருங்கள், (அவருக்கு கொடுக்கப்படும் தண்டனையை) அவர்கள் பார்ப்பதற்காக."},{"id":62,"translation":"அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீமே! எங்கள் கடவுள்களை நீர் இப்படி செய்தீரா?"},{"id":63,"translation":"அவர் கூறினார்: மாறாக, இதை அவர்களில் உள்ள இந்த பெரிய சிலைதான் செய்தது. ஆகவே, (உடைக்கப்பட்ட கடவுள்களாகிய) அவர்களிடமே நீங்கள் கேளுங்கள், அவர்கள் பேசக்கூடியவர்களாக இருந்தால்."},{"id":64,"translation":"பிறகு, அவர்கள் தங்க(ளுக்கு)ள் (ஒருவர் மற்றவர்) பக்கம் திரும்பி (கேள்வி கேட்டுக்கொண்ட)னர். மேலும், “நிச்சயமாக (இத்தகைய சிலைகளை வணங்குகிற) நீங்கள்தான் அநியாயக்காரர்கள்” என்று (ஒருவர் மற்றவரை பார்த்துக்) கூறினார்கள்."},{"id":65,"translation":"பிறகு, அவர்கள் தலைகீழாக மாறினர். (திகைத்தனர், பின்னர் இப்ராஹீமுடைய ஆதாரத்தை வைத்தே அவரிடம்) “இவர்கள் பேச மாட்டார்கள் என்பதை நீர் திட்டவட்டமாக அறிவீர்தானே” என்று கூறினார்கள்."},{"id":66,"translation":"அவர் கூறினார்: உங்களுக்கு எதையும் பலனளிக்காத, (எதையும்) தீங்கிழைக்காததையா அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகிறீர்கள்?"},{"id":67,"translation":"உங்களுக்கும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவர்களுக்கும் இழிவுதான். ஆக, நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?"},{"id":68,"translation":"அவர்கள் கூறினார்கள்: அவரை எரித்து விடுங்கள். நீங்கள் (ஏதும் உதவி) செய்பவர்களாக இருந்தால் உங்கள் கடவுள்களுக்கு (இந்த) உதவி(யை) செய்யுங்கள்."},{"id":69,"translation":"(இப்ராஹீமை அவர்கள் நெருப்பில் போட்டபோது) நாம் கூறினோம்: “நெருப்பே! இப்ராஹீமுக்கு குளிர்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் ஆகிவிடு.”"},{"id":70,"translation":"அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களை பெரும் நஷ்டவாளிகளாக ஆக்கிவிட்டோம்."},{"id":71,"translation":"இன்னும், அவரையும் லூத்தையும் அகிலத்தார்களுக்கு நாம் அதில் அருள்வளம் புரிந்த பூமியின் பக்கம் அழைத்து சென்று பாதுகாத்தோம்."},{"id":72,"translation":"இன்னும், நாம் அவருக்கு இஸ்ஹாக்கை வழங்கினோம். இன்னும், (அவருக்கு இஸ்ஹாக்கின் மகனான) யஅகூபை (நம் புறத்திலிருந்து அதிகப்படியான) அருட்கொடையாக வழங்கினோம். இன்னும், (அவர்கள்) அனைவரையும் நல்லவர்களாக ஆக்கினோம்."},{"id":73,"translation":"இன்னும், நமது கட்டளையின்படி நேர்வழிகாட்டுகின்ற தலைவர்களாக நாம் அவர்களை ஆக்கினோம். இன்னும், நன்மைகளை செய்யும்படியும், தொழுகையை நிலை நிறுத்தும்படியும், ஸகாத்தை கொடுக்கும்படியும் நாம் அவர்களுக்கு வஹ்யி அறிவித்தோம். இன்னும், அவர்கள் நம்மை வணங்குபவர்களாக இருந்தார்கள்."},{"id":74,"translation":"இன்னும், லூத்தை நினைவு கூர்வீராக! (மக்களுக்கு மத்தியில்) தீர்ப்பளிக்கின்ற சட்ட ஞானத்தையும் (மார்க்க) கல்வியையும் நாம் அவருக்கு கொடுத்தோம். இன்னும், அசிங்கமான செயல்களை செய்துகொண்டிருந்த ஊரிலிருந்து நாம் அவரை பாதுகாத்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக, பாவிகளாக இருந்தார்கள்."},{"id":75,"translation":"இன்னும், அவரை நமது அருளில் நாம் சேர்த்துக் கொண்டோம். நிச்சயமாக அவர் நல்லவர்களில் உள்ளவர் ஆவார்."},{"id":76,"translation":"இன்னும் நூஹையும் நினைவு கூர்வீராக! அவர் இதற்கு முன்னர் (நம்மை) அழைத்தபோது, நாம் அவருக்கு பதிலளித்து அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெரிய தண்டனையிலிருந்து பாதுகாத்தோம்."},{"id":77,"translation":"இன்னும், நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடமிருந்து (அவரை) நாம் காப்பாற்றி அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் கெட்ட மக்களாக இருந்தனர். ஆகவே, அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்."},{"id":78,"translation":"இன்னும், தாவூதையும் சுலைமானையும் நினைவு கூர்வீராக! அவ்விருவரும் விவசாயத்தின் விளைச்சலில் தீர்ப்பளித்த சமயத்தை நினைவு கூர்வீராக! அதில் (அந்த விளைச்சலில் வேறு) மக்களுடைய ஆடுகள் (இரவில்) நுழைந்த போது (அவை விளைச்சலை மேய்ந்து நாசப்படுத்தி விட்டன). (தாவூது, சுலைமான் மற்றும் அந்தக் கூட்டத்தார் ஆகிய) அவர்களின் தீர்ப்பை நாம் அறிந்தவர்களாக இருந்தோம்."},{"id":79,"translation":"ஆக, அ(ந்த பிரச்சினைக்குரிய சட்டத்)தை நாம் சுலைமானுக்கு புரிய வைத்தோம். இன்னும், (நமது தூதர்கள்) எல்லோருக்கும் ஞானத்தையும் (நீதி தொடர்பான சட்டக்) கல்வியையும் நாம் கொடுத்தோம். இன்னும், தாவூதுடன் மலைகளையும் பறவைகளையும் (அவை அவருடன் சேர்ந்து நம்மை) துதிக்கக்கூடியவையாக அடிபணிய வைத்தோம். இன்னும், (இதை விதியில் முன்பே) நாம் முடிவு செய்தவர்களாக இருந்தோம்."},{"id":80,"translation":"உங்களுக்காக கவச ஆடைகள் (இன்னும் ஆயுதங்கள்) செய்வதை நாம் அவருக்கு கற்றுக் கொடுத்தோம். ஏனெனில், உங்கள் போரில் (எதிரிகளின் தாக்குதலில் இருந்து) அவை உங்களை பாதுகாக்கும். ஆக, நீங்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவீர்களா?"},{"id":81,"translation":"இன்னும், விரைவாக வீசக்கூடிய காற்றை சுலைமானுக்கு நாம் வசப்படுத்தினோம். அவருடைய கட்டளையின்படி நாம் அருள்புரிந்த பூமிக்கு அது (சுலைமானையும் அவருடைய படையையும் சுமந்து) செல்லும். இன்னும், நாம் எல்லாவற்றையும் அறிந்தவர்களாக இருந்தோம்."},{"id":82,"translation":"(கடலில்) அவருக்காக மூழ்கி (முத்து பவளங்களை எடுத்து) வருபவர்களையும் அது அல்லாத வேறு செயலை செய்பவர்களையும் ஷைத்தான்களில் இருந்து நாம் அவருக்கு அடிபணிய வைத்தோம். இன்னும், அவர்களை கண்காணிப்பவர்களாக நாம் இருந்தோம்."},{"id":83,"translation":"இன்னும், அய்யூபை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, “நிச்சயமாக நான் (உனது அடிமை,) எனக்கு நோய் ஏற்பட்டது. நீயோ கருணையாளர்களில் மகா கருணையாளன்! (ஆகவே, எனக்கு சுகமளிப்பாயாக!”)"},{"id":84,"translation":"ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். ஆக, அவருக்கு இருந்த நோயை (அவரை விட்டு) அகற்றினோம். இன்னும், அவருக்கு அவருடைய குடும்பத்தையும் அவர்களுடன் அவர்கள் போன்ற (மற்ற)வர்களையும் அவருக்கு வழங்கினோம், நம் புறத்திலிருந்து (அவர் மீது) கருணையாகவும் வணக்கசாலிகளுக்கு நினைவூட்டலாகவும் இருப்பதற்காக."},{"id":85,"translation":"இன்னும், இஸ்மாயீலையும் இத்ரீஸையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் பொறுமையாளர்களில் உள்ளவர்கள்."},{"id":86,"translation":"இவர்களை நமது அருளில் நாம் பிரவேசிக்க செய்தோம். நிச்சயமாக இவர்கள் (வணக்க வழிபாடுகளை அதிகம் செய்த) நல்லவர்களில் உள்ளவர்கள் ஆவார்கள்."},{"id":87,"translation":"இன்னும், மீனுடையவரை நினைவு கூர்வீராக! அவர் கோபித்தவராக சென்றபோது, நாம் அவருக்கு அறவே நெருக்கடியை கொடுக்க மாட்டோம் என்று எண்ணினார். ஆக, அவர் இருள்களில் இருந்தவராக (என்னை) அழைத்தார், “நிச்சயமாக உன்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. நீ மகா பரிசுத்தமானவன். நிச்சயமாக நான் அநியாயக்காரர்களில் இருக்கிறேன்.”"},{"id":88,"translation":"ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவரை கடும் துக்கத்திலிருந்து நாம் பாதுகாத்தோம். இப்படித்தான் நம்பிக்கையாளர்களை நாம் பாதுகாப்போம்."},{"id":89,"translation":"இன்னும், ஸகரிய்யாவை நினைவு கூர்வீராக! அவர் தன் இறைவனை அழைத்தபோது, என் இறைவா! என்னை (சந்ததி இன்றி) தனி ஒருத்தனாக விட்டுவிடாதே! நீதான் வாரிசுகளில் மிகச் சிறந்தவன்."},{"id":90,"translation":"ஆக, அவருக்கு நாம் பதிலளித்தோம். இன்னும், அவருக்கு யஹ்யாவை (வாரிசாக) வழங்கினோம். இன்னும், (அதற்கு முன்னர்) அவருடைய மனைவியை அவருக்கு சீர்படுத்தினோம். நிச்சயமாக அவர்கள் (எல்லோரும்) நன்மைகளில் விரைபவர்களாகவும் ஆர்வத்துடனும் பயத்துடனும் நம்மை அழைப்பவர்களாகவும் (-வணங்குபவர்களாகவும்) இருந்தனர். இன்னும் அவர்கள் நமக்கு (பயந்து) பணிந்தவர்களாக இருந்தனர்."},{"id":91,"translation":"இன்னும், தனது மறைவிடத்தை பாதுகாத்தவளை (-மர்யமை) நினைவு கூர்வீராக! (நாம் படைத்த) நமது உயிர்களிலிருந்து ஓர் உயிரை அவளில் (-அவளுடைய மேலாடையின் முன்பக்க வழியில்) நாம் ஊதினோம். இன்னும், அவளையும் அவளுடைய மகனையும் அகிலத்தார்களுக்கு ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம்."},{"id":92,"translation":"நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ற வேண்டிய) உங்கள் ஒரே மார்க்கமாகும். நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை (மட்டும் கலப்பற்ற முறையில்) வணங்குங்கள்."},{"id":93,"translation":"இன்னும், அவர்கள் தங்களுக்கு மத்தியில் தங்கள் காரியத்தில் (பல பிரிவுகளாக) பிரிந்து விட்டனர். (அவர்கள்) எல்லோரும் நம்மிடமே திரும்புவார்கள்."},{"id":94,"translation":"ஆக, யார் - அவரோ நம்பிக்கையாளராக இருந்து, - நற்காரியங்களை செய்வாரோ அவருடைய (நல்ல) முயற்சிக்கு மறுப்பு இல்லை. (அவருக்கு கண்டிப்பாக நற்கூலி உண்டு.) இன்னும், நிச்சயமாக நாம் அதை பதிவு செய்(து பாதுகாத்து வரு)கிறோம்."},{"id":95,"translation":"நாம் அழித்த (அந்த) ஊர் (மக்கள்) மீது உறுதியாகி விட்டது, “நிச்சயமாக அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்ப மாட்டார்கள்.” (ஆகவேதான் அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.)"},{"id":96,"translation":"இறுதியாக, யஃஜூஜ் இன்னும் மஃஜூஜ் (உடைய அடைப்பு) திறக்கப்பட்டால், (மறுமை சம்பவித்து விடும்.) அவர்கள் உயரமான எல்லா இடத்திலிருந்தும் விரைந்து வருவார்கள்."},{"id":97,"translation":"இன்னும், (மறுமை நிகழும் என) உண்மையான வாக்கு சமீபமாகிவிடும். அப்போது, நிராகரித்தவர்களின் பார்வைகள் கூர்மையாக (உற்று நோக்கிய வண்ணமாக) இருக்கும். “எங்கள் நாசமே! திட்டமாக நாங்கள் இதை (புறக்கணித்து) விட்டு அலட்சியத்தில் இருந்தோம். அது மட்டுமல்ல, நாங்கள் அநியாயக்காரர்களாக இருந்தோம்” (என்று அந்த நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்)."},{"id":98,"translation":"நிச்சயமாக நீங்களும் அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குபவையும் நரகத்தில் வீசி எறியப்படும் பொருளாவீர்கள். (இறைவனுக்கு மாறுசெய்த) நீங்கள் (எல்லோரும்) அதில் நுழைவீர்கள்."},{"id":99,"translation":"(நாங்கள் வணங்கிய) இவை கடவுள்களாக இருந்திருந்தால் இ(ந்த நரகத்)தில் நுழைந்திருக்க மாட்டார்கள். “(அல்லாஹ்விற்கு இணை கற்பித்த நீங்கள்) எல்லோரும் அதில் நிரந்தரமாக தங்கி விடுவீர்கள்” (என்று அவர்களை நோக்கி கூறப்படும்)."},{"id":100,"translation":"அவர்களுக்கு அதில் கடுமையாக மூச்சு இறைத்தல் உண்டு. இன்னும், அவர்கள் அதில் (பிறரின் சத்தத்தை) செவியுற மாட்டார்கள்."},{"id":101,"translation":"நிச்சயமாக எவர்களுக்கு நம்மிடமிருந்து மிக அழகிய வாக்கு முந்திவிட்டதோ அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து தூரமாக்கப்பட்டு இருப்பார்கள்."},{"id":102,"translation":"அவர்கள் அதன் சத்தத்தை செவியுறமாட்டார்கள். அவர்கள் தங்களது ஆன்மாக்கள் விரும்பிய (இன்பத்)தில் நிரந்தரமாக இருப்பார்கள்."},{"id":103,"translation":"மிகப்பெரிய திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது. இன்னும், “நீங்கள் (சொர்க்கம் செல்வீர்கள் என்று) வாக்களிக்கப்பட்டு கொண்டிருந்த உங்கள் (மகிழ்ச்சியான) நாள் இதுதான்” (என்று கூறி) வானவர்கள் அவர்களை வரவேற்பார்கள்."},{"id":104,"translation":"நூல்களுக்காக ஏடுகள் மடிக்கப்படுவது போன்று வானத்தை நாம் மடிக்கின்ற நாளில் (மறுமையின் திடுக்கம் அவர்களை கவலைக்குள்ளாக்காது). படைப்புகளை முதல் முறையாக நாம் படைத்தது போன்றே அவர்களை மீண்டும் உருவாக்குவோம். இது நம்மீது கடமையான வாக்காகும். நிச்சயமாக நாம் (இதை) செய்(து முடிப்)பவர்களாகவே இருக்கிறோம்."},{"id":105,"translation":"“லவ்ஹுல் மஹ்ஃபூள்” (-விதியின் தாய் நூலில்) எழுதப்பட்டதற்குப் பின்னர். (இறைத்தூதர்கள் மீது இறக்கப்பட்ட) வேதங்களில் திட்டவட்டமாக நாம் எழுதினோம்: “நிச்சயமாக (சொர்க்க) பூமியானது, - அதை எனது நல்லடியார்கள்தான் சொந்தமாக்குவார்கள்.”"},{"id":106,"translation":"நிச்சயமாக (அல்லாஹ்விற்கு இணைவைக்காமல் அவனை மட்டும்) வணங்குகின்ற மக்களுக்கு போதுமான அறிவுரை இ(ந்த வேதத்)தில் இருக்கிறது."},{"id":107,"translation":"(நபியே!) உம்மை அகிலத்தார்களுக்கு ஓர் அருளாகவே தவிர நாம் அனுப்பவில்லை."},{"id":108,"translation":"(நபியே!) நீர் கூறுவீராக! எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதெல்லாம் நிச்சயமாக (வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான். நீங்கள் (அவனுக்கு) முற்றிலும் கட்டுப்பட்டு கீழ்ப்படிந்து நடப்பீர்களா?"},{"id":109,"translation":"அவர்கள் விலகிச் சென்றால் (அவர்களை நோக்கி) நீர் கூறிவிடுவீராக: மிகத் தெளிவாக உங்களுக்கு நான் (அறிவிக்க வேண்டிய அனைத்தையும்) அறிவித்து விட்டேன். (இதற்கு மேல்) நீங்கள் எதை வாக்களிக்கப்பட்டீர்களோ அது சமீபமாக உள்ளதா அல்லது தூரமாக உள்ளதா என்பதை நான் அறியமாட்டேன்."},{"id":110,"translation":"நிச்சயமாக அவன் பேச்சில் வெளிப்படையானதையும் நன்கறிவான். இன்னும், நீங்கள் (உங்கள் உள்ளங்களில்) எதை மறைக்கிறீர்களோ அதையும் அவன் நன்கறிவான்."},{"id":111,"translation":"அ(ல்லாஹ்வின் தண்டனை அல்லது மறுமை தாமதமாகுவ)து உங்களுக்கு சோதனையாகவும் ஒரு (குறிப்பிட்ட) நேரம் வரை (உங்களுக்கு) இன்பமாகவும் இருக்கலாம், நான் (அதை) அறியமாட்டேன்."},{"id":112,"translation":"(அல்லாஹ்வின் தூதர்) கூறினார்: என் இறைவா! உண்மையான தீர்ப்பை (எங்களுக்கு) நீ தீர்ப்பாக வழங்குவாயாக! இன்னும், (அவர் மக்களை நோக்கி கூறினார்:) எங்கள் இறைவன் ரஹ்மான் - பேரருளாளன் ஆவான், நீங்கள் (அவனைப் பற்றி தவறாக) வர்ணிப்பதற்கு எதிராக அவனிடம் உதவி தேடப்படுகிறது."}]},{"id":22,"verses":[{"id":1,"translation":"மக்களுக்கு அவர்களின் விசாரணை (நாள்) நெருங்கி வருகிறது. அவர்களோ மறதியில் இருக்கிறார்கள், (நமது எச்சரிக்கையை) புறக்கணிக்கிறார்கள்."},{"id":2,"translation":"நீங்கள் அதை பார்க்கின்ற நாளில், பாலூட்டுகின்ற ஒவ்வொரு பெண்ணும் தான் பால் கொடுத்ததை (-அந்த குழந்தையை) மறந்து விடுவாள். இன்னும், கர்ப்பம் தரித்த ஒவ்வொரு பெண்ணும் தமது கர்ப்பத்தை (குறை மாதத்தில்) ஈன்று விடுவாள். இன்னும், மக்களை மயக்கமுற்றவர்களாக நீர் பார்ப்பீர். ஆனால், அவர்கள் (மதுவினால்) மயக்கமுற்றவர்கள் அல்லர். என்றாலும், அல்லாஹ்வுடைய தண்டனை மிகக் கடினமானதாகும்."},{"id":3,"translation":"அல்லாஹ்வின் (ஆற்றல்) விஷயத்தில் கல்வியறிவு இன்றி தர்க்கிப்பவனும் மக்களில் இருக்கிறான். (இது விஷயத்தில்) திமிரு பிடித்த எல்லா ஷைத்தான்களையும் அவன் பின்பற்றுகிறான்."},{"id":4,"translation":"அவன் (-ஷைத்தான்) மீது விதிக்கப்பட்டதாவது, யார் அவனை பின்பற்றுகிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழிகெடுப்பான். இன்னும், கொழுந்துவிட்டெரியும் நரக தண்டனையின் பக்கம் அவருக்கு வழிகாட்டுவான்."},{"id":5,"translation":"மக்களே! நீங்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதில் சந்தேகத்தில் இருந்தால், (நாம் கூறும் இதை சிந்தித்துப் பாருங்கள்!) நிச்சயமாக நாம் உங்களை மண்ணிலிருந்து படைத்தோம். பின்னர், இந்திரியத்திலிருந்தும் பின்னர், இரத்தக் கட்டியிலிருந்தும் பின்னர், முழுமையான உருவம் கொடுக்கப்பட்ட, முழுமையான உருவம் கொடுக்கப்படாத சதை துண்டிலிருந்தும் (உங்களை படைத்து உருவாக்கினோம்). (இதை நாம் கூறுவது) ஏனெனில், (நமது ஆற்றலை) உங்களுக்கு விவரிப்பதற்காக ஆகும். (முழு குழந்தையாக பிறக்கவேண்டும் என்று) நாம் நாடியதை கர்ப்பப் பைகளில் குறிப்பிட்ட (முழு) தவணை வரை தங்க வைக்கிறோம். பிறகு, உங்களை குழந்தைகளாக வெளியாக்குகிறோம். பிறகு, நீங்கள் உங்களது (முழு அறிவையும்) வலிமையை(யும்) அடைவதற்காக (உங்களை உயிர் வாழவைக்கிறோம்). இன்னும், (வாலிபத்தை அடைவதற்கு முன்னரே) உயிர் கைப்பற்றப்படுகின்றவரும் உங்களில் உண்டு. இன்னும், தள்ளாத வயது வரை (வாழ்வு அளிக்கப்பட்டு, பின்னர் குழந்தையாக இருந்ததைப் போன்ற பலவீனமான நிலைக்கு) திருப்பப்படுகின்றவரும் உங்களில் உண்டு, இறுதியாக, (வயோதிகத்தில் மனிதன், தான் பலவற்றை) அறிந்திருந்ததற்குப் பின்னர் எதையும் அறியாதவனாக ஆகிவிடுகிறான். இன்னும், பூமி அழிந்து போய்விட்டதாக (-காய்ந்து போனதாக) பார்க்கிறீர். ஆக, அதன்மீது நாம் மழைநீரை இறக்கினால் அது (உயிர்ப் பெற்று தாவரங்களால்) அசைகிறது. இன்னும், (அதிக மழையினால் புற்பூண்டுகளும் விளைச்சல்களும்) உயர்ந்து வளர்கிறது. இன்னும், எல்லா விதமான அழகிய தாவரங்களை அது முளைக்க வைக்கிறது."},{"id":6,"translation":"இ(வ்வாறு அல்லாஹ்வின் வல்லமை விவரிக்கப்பட்ட)து ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்; நிச்சயமாக அவன் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறான்; நிச்சயமாக அவன்தான் எல்லா பொருட்கள் மீதும் பேராற்றல் உள்ளவனாவான்;"},{"id":7,"translation":"இன்னும், நிச்சயமாக மறுமை நிகழும். அதில் அறவே சந்தேகம் இல்லை; மேலும், நிச்சயமாக அல்லாஹ், புதைக்குழிகளில் உள்ளவர்களை எழுப்புவான் (என்பதை நீங்கள் தெளிவாக அறிவதற்காக ஆகும்)."},{"id":8,"translation":"எவ்வித கல்வி அறிவுமில்லாமலும் நேர்வழி இல்லாமலும் (தனது வாதத்தை) வெளிப்படுத்தக்கூடிய (இறை)வேதம் (தன்னிடம்) இல்லாமலும் அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் மனிதர்களில் இருக்கிறார்."},{"id":9,"translation":"(பெருமையுடன்) தனது கழுத்தைத் திருப்பிய(வனாக, இன்னும் புறக்கணித்த)வனாக அல்லாஹ்வின் மார்க்கத்திலிருந்து (நம்பிக்கையாளர்களை) தடுப்பதற்காக (அல்லாஹ்வின் விஷயத்தில் அவன் உங்களிடம் தர்க்கிக்கிறான்). அவனுக்கு இவ்வுலகத்தில் கேவலம் (நிறைந்த தண்டனை) உண்டு. இன்னும், மறுமை நாளில் எரித்து பொசுக்கக்கூடிய தண்டனையை நாம் அவனுக்கு சுவைக்க செய்வோம்."},{"id":10,"translation":"அ(ந்த தண்டனையான)து, உனது கரங்கள் எதை முற்படுத்தியதோ அ(ந்)த (பாவங்களி)ன் காரணத்தினாலும், நிச்சயம் அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயம் செய்பவன் இல்லை என்ற காரணத்தினாலும் ஆகும்."},{"id":11,"translation":"இன்னும், சந்தேகத்துடன் அல்லாஹ்வை வணங்குபவரும் மக்களில் இருக்கிறார். ஆக, அவருக்கு செல்வம் கிடைத்தால் அதனால் அவர் திருப்தியடைகிறார். இன்னும், அவருக்கு சோதனை ஏற்பட்டால் தனது (நிராகரிப்பின்) முகத்தின் மீதே அவர் திரும்பி விடுகிறார். அவர் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டமடைந்து விட்டார். இதுதான் தெளிவான (பெரிய) நஷ்டமாகும்."},{"id":12,"translation":"அவர் (இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகிறார். இன்னும், அவரோ) அல்லாஹ்வை அழைக்காமல், தனக்கு தீங்கிழைக்காததை, தனக்கு நன்மை செய்யாததை (-சிலைகளை) அழைக்கிறார். இதுதான் மிக தூரமான வழிகேடாகும்."},{"id":13,"translation":"யாருடைய நன்மையைவிட அவருடைய தீமைதான் மிக சமீபமாக இருக்கிறதோ அவரைத்தான் அவர் அழைக்கிறார். (சிலைகளை வணங்கக்கூடிய) அவர் (நம்பிக்கையாளருக்கு கொள்கையால்) நிச்சயமாக கெட்ட உறவினர் ஆவார். இன்னும், அவர் நிச்சயமாக கெட்ட தோழர் ஆவார்."},{"id":14,"translation":"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை செய்கிறான்."},{"id":15,"translation":"அல்லாஹ், அவருக்கு (-நபிக்கு) இவ்வுலகிலும் மறு உலகிலும் உதவவே மாட்டான் என்று யார் எண்ணி இருக்கிறானோ அவன் (வீட்டின்) முகட்டில் ஒரு கயிறை தொங்கவிட்டு பிறகு (அதை) துண்டித்து (-தூக்கிட்டு)க் கொள்ளவும். ஆக, (அவனை) எது கோபமூட்டுகிறதோ அதை அவனுடைய (இந்த தூக்கிட்டுக் கொள்ளும்) சூழ்ச்சி நிச்சயமாக போக்கி விடுகிறதா என்று அவன் கவனிக்கட்டும்."},{"id":16,"translation":"இன்னும், (-நமது வல்லமையை மறுத்தவருக்கு நமது அத்தாட்சிகளை விவரித்த) இவ்வாறே இ(ந்த வேதத்)தை (நமது வல்லமையை விவரிக்கிற) தெளிவான அத்தாட்சிகளாக நாம் (நபி முஹம்மதுக்கு) இறக்கினோம். மேலும், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடியவருக்கு நேர்வழி காட்டுகிறான் (என்பதற்காகவும் அல்லாஹ் இந்த குர்ஆனை இறக்கினான்)."},{"id":17,"translation":"நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள், கிறித்தவர்கள், ஸாபியீன்கள், யூதர்கள், மஜூஸிகள் இன்னும், இணைவைத்தவர்கள் (ஆகிய) இவர்களுக்கு மத்தியில் மறுமைநாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். நிச்சயமாக அல்லாஹ் (இவர்களின் செயல்கள்) எல்லாவற்றின் மீதும் சாட்சியாளன் ஆவான். (அவனுக்கு எதுவும் மறைந்ததல்ல)."},{"id":18,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ், வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும் மலைகளும் மரங்களும் கால்நடைகளும் மக்களில் அதிகமானவர்களும் அவனுக்குத்தான் சிரம் பணிகிறார்கள். இன்னும், பலர் (அல்லாஹ்விற்கு சிரம் பணிவதில்லை. ஆகவே) அவர்களுக்கு தண்டனை உறுதியாகி விட்டது. இன்னும், எவரை அல்லாஹ் இழிவுபடுத்தினானோ அவரை கண்ணியப்படுத்துபவர் எவரும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுவதை செய்வான்."},{"id":19,"translation":"(அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர், இன்னும், அவனை நிராகரித்தவர் ஆகிய) இவ்விருவரும் தங்கள் இறைவனின் விஷயத்தில் தர்க்கிக்கிறார்கள். ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்பில் (பழுக்க சூடுகாட்டப்பட்ட செம்பிலிருந்து) ஆடைகள் செய்யப்படும். அவர்களின் தலைகளுக்கு மேலிருந்து கடுமையாக கொதிக்கின்ற சுடு நீர் ஊற்றப்படும்."},{"id":20,"translation":"அதன் மூலம் அவர்களுடைய வயிறுகளில் உள்ளவை (எல்லாம்) உருக்கப்பட்டு விடும். இன்னும், (அவர்களுடைய) தோல்களும் (உருகி விடும்)."},{"id":21,"translation":"அவர்களுக்கு இரும்பு சம்மட்டிகள் (உடைய அடிகள்) உண்டு."},{"id":22,"translation":"(அவர்களுக்கு ஏற்பட்ட துன்பத்தின்) துக்கத்தினால் அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு நாடும்போதெல்லாம் அ(ந்த நரகத்)திலேயே திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், (அவர்களை நோக்கி கூறப்படும்:) பொசுக்கக்கூடிய தண்டனையை சுவையுங்கள்."},{"id":23,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகள் செய்தார்களோ அவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவற்றில் தங்கத்தினாலான வளையல்களும் முத்து (ஆபரணமு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும், அவற்றில் அவர்களது ஆடை பட்டாக இருக்கும்."},{"id":24,"translation":"இன்னும், அவர்கள் (இவ்வுலகில்) நல்ல பேச்சிற்கு வழிகாட்டப்பட்டார்கள். இன்னும், புகழுக்குரியவனின் பாதை(யாகிய இஸ்லாமு)க்கு வழிகாட்டப்பட்டார்கள்."},{"id":25,"translation":"நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையிலிருந்தும் (-அவனது மார்க்கத்திலிருந்தும்) அல்மஸ்ஜிதுல் ஹராம் புனித பள்ளிவாசலிலிருந்தும் (முஃமின்களை) தடுக்கிறார்களோ (அவர்களுக்குக் கடுமையான தண்டனையை சுவைக்க வைப்போம்). அது, (-அல்மஸ்ஜிதுல் ஹராம்) அதில் தங்கி இருப்பவருக்கும் வெளியிலிருந்து வருபவருக்கும் பொதுவான (மஸ்ஜி)தாகும். எவர் அ(ந்த மஸ்ஜி)தில் அநியாயமாக பாவம் செய்ய நாடுவாரோ, துன்புறுத்துகின்ற தண்டனையை நாம் அவருக்கு சுவைக்க செய்வோம்."},{"id":26,"translation":"இன்னும், (நபியே!) இப்ராஹீமுக்கு (கஅபாவாகிய எனது) ஆலயத்தின் இடத்தை நாம் (காண்பித்து கொடுத்து அதில் ஆலயத்தை புதிதாக கட்டி எழுப்ப) அமைத்து கொடுத்த சமயத்தை நினைவு கூர்வீராக! (இப்ராஹீமே!) நீர் எனக்கு எதையும் இணைவைத்து வணங்காதீர்! மேலும், எனது வீட்டை (அதை) தவாஃப் செய்பவர்களுக்காகவும் தொழுகையில் நிற்பவர்களுக்காகவும், குனிபவர்களுக்காகவும், சிரம் பணிபவர்களுக்காகவும் (சிலைகளை விட்டும்) சுத்தமாக வைத்திருப்பீராக!"},{"id":27,"translation":"இன்னும், ஹஜ்ஜுக்காக மக்களுக்கு (மத்தியில்) அறிவிப்(புச் செய்து அவர்களை அழைப்)பீராக! அவர்கள் நடந்தவர்களாக உம்மிடம் வருவார்கள். இன்னும் தூரமான பாதைகளிலிருந்து வருகின்ற மெலிந்த எல்லா (வகையான) வாகனத்தின் மீது (வாகனித்தவர்களாகவும் வருவார்கள்)."},{"id":28,"translation":"அவர்கள் தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும், (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுத்த கால்நடை பிராணிகள் மீது குறிப்பிட்ட (அந்த ஹஜ்ஜுடைய) நாட்களில் (அவற்றை அறுக்கும் போது) அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூர்வதற்காகவும் (அவர்களை ஹஜ்ஜுக்கு அழைப்பீராக!) ஆக, (அல்லாஹ்விற்காக அறுக்கப்பட்ட) அவற்றிலிருந்து புசியுங்கள். இன்னும், வறியவருக்கும் ஏழைக்கும் (அவற்றிலிருந்து) உணவளியுங்கள்."},{"id":29,"translation":"பிறகு, அவர்கள் தங்களது (உடல்களில் இருந்து) அழுக்குகளை நீக்கிக் கொள்ளட்டும். இன்னும், தங்களது நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்ளட்டும். இன்னும், மிகப் பழமையான இறையாலத்தை அவர்கள் தவாஃப் செய்யட்டும்."},{"id":30,"translation":"அவை உங்கள் மீது கடமையாகும். எவர் அல்லாஹ்வுடைய புனிதங்களை (-மக்கா, ஹஜ், உம்ரா இன்னும், அவற்றில் பேணவேண்டிய சட்டங்களை) மதிப்பாரோ அது அவருக்கு அவருடைய இறைவனிடம் மிகச் சிறந்ததாகும். இன்னும், உங்களுக்கு கால்நடைகள் ஆகுமாக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு (இந்தக் குர்ஆனில் ஐந்தாவது அத்தியாயத்தில் மூன்றாவது வசனத்தில் விளக்கமாக) ஓதிக்காட்டப்படுவதைத் தவிர. (அவை உங்களுக்கு தடுக்கப்பட்டவையாகும்.) சிலைகள் எனும் அசுத்தத்தை விட்டு விலகி இருங்கள். இன்னும், பொய்யான பேச்சை விட்டு விலகி இருங்கள்."},{"id":31,"translation":"அல்லாஹ்விற்கு முற்றிலும் பணிந்து கட்டுப்பட்டவர்களாக, அவனுக்கு (எதையும்) இணையாக்காதவர்களாக இருங்கள். இன்னும், எவர் அல்லாஹ்விற்கு இணைவைப்பாரோ அவர் வானத்திலிருந்து கீழே விழுந்து, (அவர் இறந்த) பிறகு பறவைகள் அவரை கொத்தி தின்றதைப் போன்று; அல்லது, காற்று அவரை தூரமான இடத்தில் வீசி எறிந்ததைப் போன்று ஆவார்."},{"id":32,"translation":"இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும்."},{"id":33,"translation":"(அல்லாஹ்வின் புனித அடையாளங்கள், குர்பானி பிராணிகள் ஆகிய) இவற்றில் குறிப்பிட்ட ஒரு காலம்வரை உங்களுக்கு பலன்கள் உள்ளன. பின்னர் அவற்றை அறுப்பதற்குரிய (ஹலாலான) இடம் அல் பைத்துல் அதீக் (-புனித எல்லை) ஆகும்."},{"id":34,"translation":"(உங்களுக்கு முன்சென்ற நம்பிக்கை கொண்ட) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பிராணியை (அல்லாஹ்விற்காக அறுத்து) பலியிடுவதை (வணக்கமாக) நாம் ஆக்கி இருக்கிறோம். அல்லாஹ், அவர்களுக்குக் கொடுத்த கால்நடைகள் மீது (அவற்றை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயரை அவர்கள் நினைவு கூர்வதற்காக (கால் நடைகளை பலியிடுவதை ஏற்படுத்தினோம்). ஆக, நீங்கள் வணங்க வேண்டிய கடவுள், ஒரே ஒரு கடவுள்தான். ஆகவே, அவனுக்கே பணிந்து விடுங்கள். இன்னும், (நபியே! அல்லாஹ்விற்கு) பயந்து பணிந்து கீழ்ப்படிந்தவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!"},{"id":35,"translation":"(அவர்களுக்கு முன்) அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் பயத்தால் நடுங்கும். இன்னும், அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகள் மீது பொறுமையாக இருப்பார்கள். இன்னும், அவர்கள் தொழுகையை நிலைநிறுத்துவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்."},{"id":36,"translation":"கொழுத்த ஒட்டகங்கள், (மற்றும் மாடுகள்,) அவற்றை உங்களுக்கு அல்லாஹ்வின் (மார்க்க) அடையாள சின்னங்களில் நாம் ஆக்கி இருக்கிறோம். அவற்றில் உங்களுக்கு நன்மைகள் உண்டு. ஆகவே, அவை (ஒரு கால் கட்டப்பட்டு, மூன்று கால்கள் மீது) நின்றவையாக இருக்க அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூ(றி அ)றுங்கள். ஆக, (அவை அறுக்கப்பட்ட பின்) அவற்றின் விலாக்கள் (பூமியில்) சாய்ந்து விட்டால் அவற்றிலிருந்து சாப்பிடுங்கள்; இன்னும், யாசிப்பவருக்கும் எதிர்பார்த்து வருபவருக்கும் உணவளியுங்கள். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக இவ்வாறே அவற்றை (-கால்நடைகளை) உங்களுக்கு பணிய வைத்தோம்."},{"id":37,"translation":"அவற்றின் இறைச்சிகள், அவற்றின் இரத்தங்கள் அல்லாஹ்வை அறவே அடையாது. எனினும், இறையச்சம்தான் உங்களிடமிருந்து அவனை அடையும். இவ்வாறுதான், அவன் அவற்றை (அந்த குர்பானி பிராணிகளை) உங்களுக்கு பணிய வைத்தான், அல்லாஹ்வை - அவன் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக - நீங்கள் பெருமைப்படுத்துவதற்காக. இன்னும், (நபியே!) அல்லாஹ்விற்கு அழகிய முறையில் கீழ்ப்படிபவர்களுக்கு (சொர்க்கத்தின்) நற்செய்தி கூறுவீராக!"},{"id":38,"translation":"நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கை கொண்டவர்களை (பாதுகாத்து, அவர்களை) விட்டும் (நிராகரிப்பாளர்களை) தடுத்து விடுவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லா மோசடிக்காரர்களையும் நன்றி கெட்டவர்களையும் நேசிக்க மாட்டான்."},{"id":39,"translation":"சண்டையிடப்படுபவர்களுக்கு - நிச்சயமாக அவர்கள் அநீதியிழைக்கப்பட்டார்கள் என்பதற்காக - (தங்களிடம் சண்டை செய்பவர்களை எதிர்த்து போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்ய பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":40,"translation":"அவர்கள் தங்கள் இல்லங்களிலிருந்து எவ்வித நியாய(மான காரண)மின்றி வெளியேற்றப்பட்டார்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் என்று அவர்கள் கூறியதற்காகவே தவிர (வேறு எதற்காகவும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை). மக்களை - அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு அல்லாஹ் பாதுகாப்பது இல்லை என்றால் துறவிகளின் தங்குமிடங்களும் கிறித்தவ ஆலயங்களும் யூத ஆலயங்களும் அதிகமாக அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்படும் மஸ்ஜிதுகளும் உடைக்கப்பட்டிருக்கும். இன்னும், நிச்சயமாக எவர் அவனுக்கு (அல்லாஹ்விற்கு) உதவுவாரோ அவருக்கு அல்லாஹ் உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான்."},{"id":41,"translation":"(அல்லாஹ்வின் பாதையில் போர்புரிகின்ற) அவர்களுக்கு பூமியில் நாம் இடமளித்தால் (-அதிகாரமளித்தால்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றுவார்கள்; இன்னும், (தங்களது செல்வங்களுக்கு உரிய) ஸகாத்தைக் கொடுப்பார்கள்; இன்னும், (மக்களுக்கு) நன்மையை (தவ்ஹீதை) ஏவுவார்கள்; இன்னும், தீமையிலிருந்து (-ஷிர்க்கிலிருந்து மக்களை) தடுப்பார்கள். எல்லாக் காரியங்களின் முடிவும் அல்லாஹ்வின் பக்கமே இருக்கிறது."},{"id":42,"translation":"(நபியே!) உம்மை இவர்கள் பொய்ப்பித்தால் (அதற்காக கவலைப்படாதீர்.) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் ஆது, இன்னும் ஸமூது சமுதாயத்தினரும் பொய்ப்பித்தார்கள்."},{"id":43,"translation":"இன்னும், இப்ராஹீமுடைய மக்களும் லூத்துடைய மக்களும் (பொய்ப்பித்தனர்)."},{"id":44,"translation":"இன்னும், மத்யன் வாசிகளும் (தங்களது தூதர்களை பொய்ப்பித்தனர்). மூஸாவும் (ஃபிர்அவ்ன் மற்றும் அவனுடைய சமுதாயத்தால்) பொய்ப்பிக்கப்பட்டார். ஆக, (இந்த) நிராகரிப்பாளர்களுக்கு நான் அவகாசம் அளித்தேன். (சிறிது காலத்திற்கு) பிறகு, (தண்டனையைக் கொண்டு) நான் அவர்களைப் பிடித்தேன். ஆகவே, (நான் அவர்களுக்கு கொடுத்த) எனது மறுப்பு (-தண்டனை) எப்படி இருந்தது!"},{"id":45,"translation":"ஆக, எத்தனையோ ஊர்களை அவை அநியாயம் செய்பவையாக இருக்கும் நிலையில் அவற்றை நாம் அழித்தோம். அவை தமது முகடுகள் மீது வீழ்ந்துள்ளன. இன்னும், (பராமரிப்பு இல்லாமல்) விடப்பட்ட எத்தனையோ கிணறுகளையும், சுண்ணாம்புக் கலவைகளைக் கொண்டு கட்டப்பட்ட (உயரமான, நீளமான) மாளிகைகளையும் (அழித்தோம்)."},{"id":46,"translation":"ஆக, அவர்கள் (அழிக்கப்பட்டவர்கள்) பூமியில் பயணம் செய்து பார்க்க மாட்டார்களா? (அப்படி அவர்கள் செய்தால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தால் அவற்றின் மூலம் சிந்தித்து புரிவார்கள். இன்னும், அவர்களுக்கு (நல்லுபதேசத்தை செவியுறும்) காதுகள் இருந்தால் அவர்கள் அவற்றின் மூலம் செவியுறுவார்கள். ஆக, நிச்சயமாக (கண்களின்) பார்வைகள் குருடாகுவதில்லை. எனினும், நெஞ்சங்களில் உள்ள உள்ளங்கள்தான் குருடாகி விடுகின்றன."},{"id":47,"translation":"(நபியே! எச்சரிக்கப்பட்ட) தண்டனையை அவசரமாக வர வேண்டுமென உம்மிடம் கோருகிறார்கள். அல்லாஹ் தனது வாக்கை அறவே மாற்ற மாட்டான். நிச்சயமாக உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் எண்ணக் கூடியவற்றிலிருந்து (உங்கள் நாட்களின் கணக்குப்படி) ஆயிரம் ஆண்டுகளைப் போன்றாகும்."},{"id":48,"translation":"எத்தனையோ ஊர்கள் - அவை அநியாயம் செய்பவையாக இருக்கும் நிலையில் - நான் அவற்றுக்கு அவகாசம் அளித்தேன். பிறகு, அவற்றை (தண்டனையினால்) நான் பிடித்தேன். என் பக்கமே (அனைவரின்) மீளுமிடம் இருக்கிறது."},{"id":49,"translation":"(நபியே!) கூறுவீராக: “மக்களே! நிச்சயமாக நான் எல்லாம் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர்தான்.”"},{"id":50,"translation":"ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ, அவர்களுக்கு பாவமன்னிப்பும் (சொர்க்கத்தில்) கண்ணியமான உணவும் உண்டு."},{"id":51,"translation":"இன்னும், எவர்கள் (நம்மை) மிகைத்துவிட நாடியவர்களாக நமது வசனங்களில் (அவற்றைப் பொய்ப்பிக்க) முயற்சித்தார்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்."},{"id":52,"translation":"உமக்கு முன்னர் எந்த ஒரு ரஸூலையும் நபியையும் நாம் அனுப்பினால், அவர் ஓதும்போது ஷைத்தான் அவர் ஓதுவதில் (தனது கூற்றை நுழைத்துக்) கூறாமல் இருந்ததில்லை. பின்னர், ஷைத்தான் (நபியின் ஓதுதலுக்கு இடையில் நுழைத்துக்) கூறியதை அல்லாஹ் போக்கி விடுவான். பிறகு, அல்லாஹ் தனது வசனங்களை உறுதிப்படுத்துவான். (நபியின் ஓதுதலில் ஷைத்தான் நுழைத்ததை அல்லாஹ் நீக்கி வேதத்தை சுத்தப்படுத்தி விடுவான்.) அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":53,"translation":"முடிவில், ஷைத்தான் கூறுவதை உள்ளங்களில் நோய் உள்ளவர்களுக்கும் உள்ளங்கள் இறுகியவர்களுக்கும் சோதனையாக ஆக்குவான். நிச்சயமாக அநியாயக்காரர்கள் (உண்மையை விட்டு) மிக தூரமான முரண்பாட்டில்தான் இருக்கிறார்கள்."},{"id":54,"translation":"இன்னும், முடிவில் (அல்லாஹ்வின் மார்க்க) அறிவு கொடுக்கப்பட்டவர்கள் நிச்சயமாக இது உமது இறைவன் புறத்திலிருந்து நிகழ்ந்த உண்மைதான் என்று அறிந்து அதை நம்பிக்கை கொண்டு அவர்களுடைய உள்ளங்கள் அதற்கு (-அந்த குர்ஆனுக்கு) பணிந்து விடும். நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நேரான பாதைக்கு வழிகாட்டக் கூடியவன் ஆவான்."},{"id":55,"translation":"நிராகரித்தவர்கள், மறுமை திடீரென அவர்களிடம் வரும் வரை; அல்லது, ஒரு மலட்டு நாளின் (-பத்ர் போரினால் அவர்கள் அனுபவிக்கப் போகும்) தண்டனை அவர்களிடம் வரும் வரை இ(ந்த வேதத்)தில் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருக்கிறார்கள்."},{"id":56,"translation":"அந்நாளில் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவர்களுக்கு மத்தியில் அவன் தீர்ப்பளிப்பான். ஆக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்கள் இன்பமிகு சொர்க்கங்களில் இருப்பார்கள்."},{"id":57,"translation":"எவர்கள் நிராகரித்து நமது வசனங்களை பொய்ப்பித்தனரோ, அவர்களுக்கு - இழிவுதரக்கூடிய தண்டனை உண்டு."},{"id":58,"translation":"இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் “ஹிஜ்ரத்” நாடு துறந்து சென்று, பிறகு (எதிரிகளால்) கொல்லப்பட்டார்களோ; அல்லது, மரணித்து விட்டார்களோ நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு அழகிய உணவைக் கொடுப்பான். நிச்சயமாக அல்லாஹ் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்."},{"id":59,"translation":"நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் திருப்திபடுகின்ற இட(மான இன்பங்கள் நிறைந்த சொர்க்க)த்தில் அவர்களை பிரவேசிக்க செய்வான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், மகா சகிப்பாளன் ஆவான்."},{"id":60,"translation":"அது, (நம்பிக்கையாளர்கள் சொர்க்கம் செல்வது அல்லாஹ்வின் வெகுமதியாகும்). இன்னும், எவர் தான் தண்டிக்கப்பட்டதைப் போன்று (தன்னைத் தண்டித்தவரை) தண்டித்தாரோ, பிறகு, அவர் மீது (மீண்டும்) வன்முறை செய்யப்பட்டதோ நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவுவான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் பிழை பொறுப்பாளன் ஆவான்."},{"id":61,"translation":"அ(நீதி இழைக்கப்பட்டவருக்கு உதவுவது எனக்கு மிக இலகுவான)து, ஏனெனில், (நான் அதற்கு ஆற்றல் உள்ளவன் ஆவேன். இன்னும்) நிச்சயமாக அல்லாஹ்(வின் வல்லமையாவது அவன்) இரவை பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் (அநீதி இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனையை) நன்கு செவியுறுபவன், (அவரின் நிலையை) உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":62,"translation":"அது (-இரவை பகலிலும் பகலை இரவிலும் நுழைப்பது அல்லாஹ்விற்கு மிக எளிதாகும்.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன். (எதையும் படைக்க ஆற்றல் உள்ளவன்). இன்னும், அவனையன்றி அவர்கள் அழைக்கின்றவை பொய்யானவையாகும். (-எதையும் படைப்பதற்கும் உருவாக்குவதற்கும் ஆற்றல் அற்றவை). இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்."},{"id":63,"translation":"நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானத்திலிருந்து மழையை இறக்குகிறான். ஆக, பூமி பசுமையாக மாறுகிறது. நிச்சயமாக அல்லாஹ் மிக்க நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":64,"translation":"வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே சொந்தமானவை. இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மகா செல்வந்தன் (-நிறைவானவன், எத்தேவையுமற்றவன்), பெரும் புகழுக்குரியவன் ஆவான்."},{"id":65,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் பூமியில் உள்ளவற்றை உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான். இன்னும், அவனது கட்டளைப்படி கடலில் செல்லக்கூடிய கப்பல்களையும் (உங்களுக்கு வசப்படுத்தியுள்ளான்). இன்னும், வானத்தை - அது பூமியின் மீது வீழ்ந்து விடாமல் - தடுத்து வைத்திருக்கிறான். அவனுடைய அனுமதி இல்லாமல் அது விழாது. நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது மகா இரக்கமுள்ளவன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":66,"translation":"அவன்தான் உங்களை உயிர்ப்பித்தான். பிறகு, உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு, உங்களை உயிர்ப்பிப்பான். நிச்சயமாக மனிதன் (தன் இறைவனின் அத்தாட்சியை) மிகவும் மறுக்கக் கூடியவன் ஆவான்."},{"id":67,"translation":"ஒவ்வொரு சமுதாயத்திற்கும் நாம் (கால்நடைகளை அறுத்து) பலியிடுவதை ஏற்படுத்தினோம். அவர்கள் அதை பலியிடுவார்கள். ஆகவே, (நபியே!) அவர்கள் உம்மிடம் இந்த விஷயத்தில் (-அறுக்கப்பட்ட பிராணியை சாப்பிடுவதிலும் தானாக செத்த பிராணியை தவிர்த்து விடுவதிலும்) தர்க்கம் செய்ய வேண்டாம். இன்னும், (நபியே!) இறைவனின் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேரான (மிகச் சரியான) வழிகாட்டுதல் மீது இருக்கிறீர்."},{"id":68,"translation":"(நபியே!) அவர்கள் உம்மிடம் (மார்க்க விஷயங்களில்) தர்க்கித்தால், “நீங்கள் செய்வதை அல்லாஹ் மிக அறிந்தவன்” என்று நீர் கூறுவீராக!"},{"id":69,"translation":"நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில் உங்கள் மத்தியில் மறுமை நாளில் அல்லாஹ் தீர்ப்பளிப்பான்."},{"id":70,"translation":"(நபியே!) நிச்சயமாக அல்லாஹ், வானத்திலும் பூமியிலும் உள்ளவற்றை நன்கறிவான் என்பதை நீர் அறியவில்லையா? நிச்சயமாக இவை (அனைத்தும்) ‘லவ்ஹுல் மஹ்பூல்’ எனும் பதிவேட்டில் இருக்கிறது. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக சுலபமானதே!"},{"id":71,"translation":"இன்னும், அல்லாஹ் எதற்கு எந்த ஓர் ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதையும்; இன்னும், அவர்களுக்கு எதைப் பற்றி அறவே எவ்வித அறிவும் இல்லையோ அதையும் அவர்கள் அல்லாஹ்வை அன்றி வணங்குகிறார்கள். (விசாரணை நாளில்) அநியாயக்காரர்களுக்கு உதவுபவர் யாரும் இல்லை."},{"id":72,"translation":"இன்னும், அவர்கள் மீது நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால் நிராகரித்தவர்களுடைய முகங்களில் வெறுப்பை (-முக சுளிப்பை) நீர் பார்ப்பீர்! நமது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதிக் காட்டுபவர்களை கடுமையாகப் பிடித்து (கொன்று) விடுவதற்கு அவர்கள் முயற்சிக்கிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “(சத்தியம் இன்னும் அதன் பக்கம் அழைக்கிற) இவர்களைவிட (அவர்களுக்கு) வெறுப்பானதை நான் உங்களுக்கு அறிவிக்கவா?” அதுதான் நரகமாகும். நிராகரித்தவர்களுக்கு அல்லாஹ் அதை வாக்களித்துள்ளான். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்."},{"id":73,"translation":"மக்களே! ஓர் உதாரணம் (உங்களுக்கு) விவரிக்கப்படுகிறது. ஆக, அதை செவிமடுத்து கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை ஓர் ஈயையும் அறவே படைக்க மாட்டார்கள், அவர்கள் (எல்லோரும்) அதற்கு ஒன்று சேர்ந்தாலும் சரி. இன்னும், அவர்களிடமிருந்து அந்த ஈ எதையும் பறித்தாலும் அதை அதனிடமிருந்து அவர்கள் பாதுகாத்து பிடுங்கவும் மாட்டார்கள். (அவர்களின்) கடவுள்களும் (அவற்றால்) தேடப்படுகின்றதும் (-ஈயும்) பலவீனமானவர்களே!"},{"id":74,"translation":"அவர்கள் அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்குத் தக்கவாறு கண்ணியப்படுத்தவில்லை. நிச்சயமாக அல்லாஹ் மகா வலிமையுடையவன் மிகைத்தவன் ஆவான்."},{"id":75,"translation":"அல்லாஹ் வானவர்களிலிருந்தும் மனிதர்களிலிருந்தும் தூதர்களை தேர்வு செய்கிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":76,"translation":"அவன், அவர்களுக்கு முன்னர் இருந்தவற்றையும் அவர்களுக்கு பின்னர் இருப்பவற்றையும் நன்கறிவான். இன்னும், அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் திருப்பப்படுகின்றன."},{"id":77,"translation":"நம்பிக்கையாளர்களே! (தொழுகையில்) குனியுங்கள்! இன்னும், சிரம்பணியுங்கள்! இன்னும், உங்கள் இறைவனை வணங்குங்கள்! இன்னும், நன்மை செய்யுங்கள்! நீங்கள் (அவற்றின் மூலம்) வெற்றி அடைவதற்காக."},{"id":78,"translation":"அல்லாஹ்வின் பாதையில் (இணை வைப்பவர்களிடம்) முழுமையாக போரிடுங்கள். அவன்தான் உங்களைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், உங்கள் மீது (உங்கள்) மார்க்கத்தில் எவ்வித நெருக்கடியையும் அவன் வைக்கவில்லை. உங்கள் தந்தை இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் பற்றிப் பிடியுங்கள். அவன் இதற்கு முன்னரும் (-முந்தைய வேதங்களிலும்) இதிலும் (-குர்ஆனிலும்) உங்களுக்கு ‘முஸ்லிம்கள்’ என்று பெயர் வைத்தான். காரணம், தூதர் (-முஹம்மத்) உங்கள் மீது சாட்சியாளராக இருப்பதற்காகவும் நீங்கள் மக்கள் மீது சாட்சியாளர்களாக இருப்பதற்காகவும் (அல்லாஹ் உங்களை தேர்ந்தெடுத்து, முஸ்லிம்கள் என்று பெயரிட்டான்). ஆக, தொழுகையை நிலைநிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தைக் கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்வை உறுதியாக பற்றிப்பிடியுங்கள்! அவன்தான் உங்கள் பொறுப்பாளன் ஆவான். ஆக, அவனே சிறந்த பொறுப்பாளன். இன்னும், அவனே சிறந்த உதவியாளன் ஆவான்."}]},{"id":23,"verses":[{"id":1,"translation":"மக்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள். நிச்சயமாக மறுமை (நிகழும்போது பூமி)யின் அதிர்வு மிகப்பெரிய ஒன்றாக இருக்கும்."},{"id":2,"translation":"அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள்."},{"id":3,"translation":"இன்னும், அவர்கள் வீணான விஷயங்களை விட்டு விலகி இருப்பார்கள்."},{"id":4,"translation":"இன்னும், அவர்கள் ஸகாத்தை சரியாக நிறைவேற்றுவார்கள்."},{"id":5,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை (விபச்சாரத்தை விட்டும் ஓரின சேர்க்கையை விட்டும்) பாதுகாப்பார்கள்."},{"id":6,"translation":"தங்கள் மனைவியர்களிடம்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களிடம் தவிர. (ஆகவே, அவர்கள் மற்ற பெண்களிடம் தங்கள் ஆசையை தீர்க்க மாட்டார்கள்.) நிச்சயமாக இ(த்தகைய)வர்கள் பழிக்கப்படுபவர்கள் அல்லர்."},{"id":7,"translation":"ஆக, (தனது மனைவி, அல்லது தனது அடிமைப் பெண் ஆகிய) இவர்கள் அல்லாத பெண்களிடம் யார் (காமத்தை) தேடுவார்களோ அவர்கள்தான் (அல்லாஹ்வின் சட்டத்தை மீறிய) எல்லை மீறிகள் ஆவார்கள்."},{"id":8,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனித்து நடப்பார்கள்."},{"id":9,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் தொழுகைகளை பேணி பாதுகாப்பார்கள்."},{"id":10,"translation":"அவர்கள்தான் (சொர்க்கத்தை) சொந்தமாக்கிக் கொள்பவர்கள்,"},{"id":11,"translation":"‘ஃபிர்தவ்ஸ்’ (என்னும்) சொர்க்கத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்வார்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்."},{"id":12,"translation":"திட்டவட்டமாக களி மண்ணிலிருந்து (படைக்கப்பட்ட முதல் மனிதனின்) இந்திரியத்திலிருந்து மனிதர்களை நாம் படைத்தோம்."},{"id":13,"translation":"பிறகு, அவனை உறுதியான ஒரு தங்குமிடத்தில் (-தாயின் கற்ப அறையில்) ஓர் இந்திரியத் துளியாக நாம் வைத்தோம்."},{"id":14,"translation":"பிறகு, அந்த இந்திரியத் துளியை ஓர் இரத்தக் கட்டியாக (-கருவாக) நாம் ஆக்கினோம். ஆக, அந்த இரத்தக் கட்டியை ஒரு சதைத் துண்டாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த சதைத் துண்டை எலும்புகளாக நாம் ஆக்கினோம். ஆக, அந்த எலும்புகளுக்கு சதையை அணிவித்தோம். பிறகு அவனை (உயிர் ஊதி அதன் மூலம்) வேறு ஒரு (புதிய) படைப்பாக நாம் உருவாக்கினோம். (பொருள்களை) செய்பவர்களில் மிக அழகிய (முறையில்) செய்பவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்."},{"id":15,"translation":"பிறகு, நிச்சயமாக நீங்கள் இதற்குப் பின்னர் மரணித்து விடுவீர்கள்."},{"id":16,"translation":"பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் எழுப்பப்படுவீர்கள்."},{"id":17,"translation":"திட்டவட்டமாக உங்களுக்கு மேல் ஏழு வானங்களை நாம் படைத்தோம். (-அந்த வானங்களுக்கு கீழே உள்ள நமது) படைப்புகளைப் பற்றி நாம் கவனமற்றவர்களாக (மறந்தவர்களாக) இல்லை."},{"id":18,"translation":"இன்னும், வானத்திலிருந்து மழையை (குறிப்பிட்ட) ஓர் அளவிற்கு நாம் இறக்கினோம். ஆக, அதை பூமியில் தங்க வைத்தோம். (நாம் நாடினால்) நிச்சயமாக நாம் அதை (பூமியிலிருந்து) போக்கி விடுவதற்கு ஆற்றலுடையவர்கள்."},{"id":19,"translation":"ஆக, பேரீட்சை மரங்கள்; இன்னும், திராட்சை செடிகளினால் உருவான (பல) தோட்டங்களை அதன் மூலம் உங்களுக்காக நாம் உருவாக்கினோம். உங்களுக்கு அதில் (இன்னும் பலவகையான) அதிகமான பழங்களும் உண்டு. இன்னும், அவற்றிலிருந்து (-அந்த கனிவர்க்கங்களிலிருந்து உணவாகவும்) நீங்கள் சாப்பிடுகிறீர்கள்."},{"id":20,"translation":"இன்னும், ஸினாய் மலையிலிருந்து உற்பத்தி ஆகக்கூடிய ஒரு மரத்தை நாம் படைத்தோம். அது எண்ணையையும் (-அதற்குரிய காயையும்) உண்பவர்களுக்கு ஒரு சுவையான உணவையும் முளைப்பிக்கிறது."},{"id":21,"translation":"நிச்சயமாக கால்நடையில் உங்களுக்கு ஒரு படிப்பினை இருக்கிறது. அவற்றின் வயிற்றிலிருந்து (வெளிவரக்கூடிய பாலை) உங்களுக்கு நாம் புகட்டுகிறோம். இன்னும் அவற்றில் உங்களுக்கு அதிகமான பலன்களும் உள்ளன. இன்னும் அவற்றிலிருந்து (கிடைக்கும் மாமிசத்தையும்) நீங்கள் புசிக்கிறீர்கள்."},{"id":22,"translation":"இன்னும், நீங்கள் அவற்றின் மீதும் கப்பல்கள் மீதும் சுமக்கப்படுகிறீர்கள்."},{"id":23,"translation":"திட்டவட்டமாக நூஹை அவருடைய மக்களிடம் நாம் அனுப்பினோம். ஆக, அவர் கூறினார்: எனது மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. நீங்கள் (அவனுடைய தண்டனையை) அஞ்ச வேண்டாமா?"},{"id":24,"translation":"ஆக, அவருடைய மக்களில் நிராகரித்து கொண்டிருந்த பிரமுகர்கள் கூறினார்கள்: இவர் உங்களைப் போன்ற மனிதரே தவிர இல்லை. அவர் உங்களைப் பார்க்கிலும் மேன்மை அடைய நாடுகிறார். இன்னும், அல்லாஹ் நாடியிருந்தால் வானவர்க(ளுக்கு தூதுத்துவத்தை கொடுத்து அவர்க)ளை (பூமியில் உங்களுக்கு தூதர்களாக) இறக்கி இருப்பான். இதை, எங்கள் முன்னோர்களான மூதாதைகளில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை."},{"id":25,"translation":"அவர் ஓர் ஆடவரே தவிர (அவர் தூதர்) இல்லை. அவருக்கு பைத்தியம் ஏற்பட்டிருக்கிறது. ஆக, ஒரு காலம் வரை (அவருக்கு என்ன நிகழப்போகிறது என பொறுத்திருந்து) எதிர்பார்த்திருங்கள்."},{"id":26,"translation":"அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால் எனக்கு நீ உதவுவாயாக!"},{"id":27,"translation":"ஆக, அவருக்கு நாம் வஹ்யி அறிவித்தோம்: நமது கண்களுக்கு முன்பாகவும் நமது அறிவிப்பின்படியும் நீர் கப்பலை செய்வீராக! ஆக, நமது கட்டளை வந்துவிட்டால்; இன்னும், அடுப்பு பொங்க ஆரம்பித்துவிட்டால் எல்லாவற்றிலிருந்தும் இரண்டு ஜோடிகளையும் உமது குடும்பத்தினரையும் அதில் ஏற்றுவீராக, அவர்களில் எவன் மீது (இறைவனின்) வாக்கு முந்திவிட்டதோ அவனைத் தவிர. (அவனை ஏற்றாதீர்!) இன்னும், அநியாயக்காரர்கள் விஷயத்தில் (அவர்களுக்காக பரிந்து பேசி) என்னிடம் நீர் உரையாடாதீர்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்."},{"id":28,"translation":"ஆக, நீரும் உன்னுடன் இருப்பவரும் கப்பலில் ஏறிவிட்டால் கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அநியாயக்கார மக்களிடமிருந்து அவன் எங்களை பாதுகாத்தான்.”"},{"id":29,"translation":"இன்னும் கூறுவீராக: “என் இறைவா! (உனது) பாக்கியங்கள் நிறைந்த ஓர் இடத்தில் என்னை தங்க வைப்பாயாக! தங்க வைப்பவர்களில் நீ மிகச் சிறந்தவன்.”"},{"id":30,"translation":"நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. நிச்சயமாக நாம் (அவர்களை) சோதிப்பவர்களாக இருந்தோம்."},{"id":31,"translation":"பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு ஒரு தலைமுறையினரை நாம் (புதிதாக) உருவாக்கினோம்."},{"id":32,"translation":"ஆக, அவர்களில் இருந்தே ஒரு தூதரை அவர்களிடம் நாம் அனுப்பினோம். (அவர் கூறினார்:) அல்லாஹ்வை வணங்குங்கள். அவனை அன்றி (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் யாரும் உங்களுக்கில்லை. ஆக, (அவனது தண்டனையை) நீங்கள் அஞ்ச வேண்டாமா?"},{"id":33,"translation":"இன்னும், அவருடைய மக்களில் நிராகரித்துக் கொண்டிருந்த, இன்னும் மறுமையின் சந்திப்பை பொய்யாக்கி கொண்டிருந்த பிரமுகர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் அதிக வசதிகளை கொடுத்திருந்தோம். அவர்கள் கூறினார்கள்: “உங்களைப் போன்ற மனிதரே தவிர இவர் இல்லை. நீங்கள் சாப்பிடுவதிலிருந்து அவர் சாப்பிடுகிறார். இன்னும், நீங்கள் குடிப்பதிலிருந்து அவர் குடிக்கிறார்.”"},{"id":34,"translation":"இன்னும் (அவர்கள் கூறினார்கள்:), “நீங்கள் உங்களைப் போன்ற மனிதருக்கு கீழ்ப்படிந்து நடந்தால் நிச்சயமாக நீங்கள் அப்போது நஷ்டவாளிகள்தான்.”"},{"id":35,"translation":"“நீங்கள் மரணித்து, மண்ணாகவும் (சதையற்ற) எலும்புகளாகவும் ஆகிவிட்டால் (மறுமையில்) நிச்சயமாக நீங்கள் (உயிருடன் பூமியிலிருந்து) வெளியேற்றப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?”"},{"id":36,"translation":"“நீங்கள் எதை வாக்களிக்கப்படுகிறீர்களோ அது வெகு தூரமாக இருக்கிறது! அது வெகு தூரம்!” (அது நடக்கவே நடக்காது என்றும் அவர்கள் கூறினார்கள்)."},{"id":37,"translation":"வாழ்க்கை என்பது நமது உலக வாழ்க்கையைத் தவிர (இதற்கு பின்னர் வேறு வாழ்க்கை) இல்லை. நாம் (சிறிது காலத்திற்கு பின்னர்) இறந்து விடுகிறோம். நாம் (இப்போது) வாழ்கிறோம். (-நம்மில் சிலர் இறந்துவிட புதிதாக சிலர் பிறந்து வாழ்வார்கள். அவ்வளவுதான். நமது மரணத்திற்கு பின்னர்) நாம் எழுப்பப்பட மாட்டோம்."},{"id":38,"translation":"அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிய ஒரு மனிதராகவே தவிர இல்லை. நாங்கள் அவரை நம்பிக்கை கொண்டவர்கள் இல்லை."},{"id":39,"translation":"அவர் கூறினார்: என் இறைவா! அவர்கள் என்னை பொய்ப்பித்து விட்டதால் (அவர்களுக்கு எதிராக) நீ எனக்கு உதவுவாயாக!"},{"id":40,"translation":"(அல்லாஹ்) கூறினான்: வெகு விரைவில் நிச்சயமாக அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்."},{"id":41,"translation":"ஆக, உண்மையில் அவர்களை கடுமையான சத்தம் பிடித்துக் கொண்டது. ஆகவே, அவர்களை (எதற்கும் பயனற்ற) நுரைகளாக (அதைப் போன்று) மாற்றி விட்டோம். ஆக, அநியாயக்கார கூட்டம் அழிந்துபோகும்."},{"id":42,"translation":"பிறகு, அவர்களுக்குப் பின்னர் வேறு (புதிய பல) தலைமுறைகளை நாம் உருவாக்கினோம்."},{"id":43,"translation":"எந்த ஒரு சமுதாயமும் தமது தவணையை முந்தவும் மாட்டார்கள். இன்னும், பிந்தவும் மாட்டார்கள்."},{"id":44,"translation":"பிறகு, நாம் நமது தூதர்களை தொடர்ச்சியாக அனுப்பினோம். ஒரு சமுதாயத்திற்கு, அதன் தூதர் வந்தபோதெல்லாம் அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களில் சிலரை தொடர்ந்து சிலரை அழித்தோம். இன்னும், அவர்க(ளின் செய்திக)ளை (பிற மக்களுக்கு) படிப்பினை நிறைந்த நிகழ்வுகளாக நாம் ஆக்கிவிட்டோம். ஆக, நம்பிக்கை கொள்ளாத மக்கள் அழிந்து போவார்கள்."},{"id":45,"translation":"பிறகு, நாம் மூஸாவையும் அவருடைய சகோதரர் ஹாரூனையும் நமது அத்தாட்சிகளுடனும் தெளிவான ஆதாரத்துடனும் அனுப்பினோம்,"},{"id":46,"translation":"ஃபிர்அவ்னிடமும் அவனுடைய முக்கிய பிரமுகர்களிடமும். ஆக, அவர்கள் பெருமையடித்தனர். இன்னும், அவர்கள் (மக்கள் மீது) ஆதிக்கம் செலுத்தக்கூடிய (எல்லை மீறிய அநியாயக்கார) கூட்டமாக இருந்தனர்."},{"id":47,"translation":"ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற மனித (இனத்தை சேர்ந்த இருவ)ர்களை நாங்கள் நம்பிக்கை கொள்வோமா? அவ்விருவரின் சமுதாயமோ எங்களுக்கு அடிபணிந்தவர்களாக இருக்கிறார்கள்.”"},{"id":48,"translation":"ஆக, அவ்விருவரையும் அவர்கள் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் அழிக்கப்பட்டவர்களில் ஆகிவிட்டனர்."},{"id":49,"translation":"இன்னும், திட்டவட்டமாக மூஸாவிற்கு, – அவ(ருடைய சமுதாயமாகிய இஸ்ரவேல)ர்கள் நேர்வழி பெறுவதற்காக - நாம் வேதத்தைக் கொடுத்தோம்."},{"id":50,"translation":"இன்னும், மர்யமுடைய மகனையும் அவருடைய தாயாரையும் ஓர் அத்தாட்சியாக நாம் ஆக்கினோம். இன்னும், உறுதியான உயரமான சமமான இடத்திற்கும் ஓடுகின்ற நீரூற்றுக்கும் அவ்விருவரை நாம் ஒதுங்க வைத்தோம்."},{"id":51,"translation":"தூதர்களே! நல்லவற்றிலிருந்து சாப்பிடுங்கள். இன்னும், நல்லதை செய்யுங்கள். நீங்கள் செய்வதை நிச்சயமாக நான் நன்கறிந்தவன் ஆவேன்."},{"id":52,"translation":"நிச்சயமாக இதுதான் (நீங்கள் பின்பற்ற வேண்டிய) உங்கள் ஒரே மார்க்கமாகும். இன்னும், நான்தான் உங்கள் இறைவன். ஆகவே, என்னை அஞ்சி நடந்து கொள்ளுங்கள்."},{"id":53,"translation":"ஆக, அவர்கள் தங்களது மார்க்கத்தை தங்களுக்கு மத்தியில் பல வேதங்களாக(வும் பல பிரிவுகளாகவும்) பிரித்துக் கொண்டனர். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு பெருமைப்படுகிறார்கள்."},{"id":54,"translation":"ஆகவே, (நபியே!) அவர்களை அவர்களுடைய வழிகேட்டில் (சிறிது) காலம் வரை விடுவீராக!"},{"id":55,"translation":"(ஏகத்துவக் கொள்கையை பின்பற்றாத) அவர்கள் எண்ணுகிறார்களா?, நாம் அவர்களுக்கு செல்வத்திலிருந்தும் ஆண் பிள்ளைகளிலிருந்தும் எதைக் கொடுக்கிறோமோ,"},{"id":56,"translation":"அது அவர்களுக்கு நாம் நன்மைகளை விரைந்து செய்கிறோம் என்று (எண்ணுகிறார்களா?) மாறாக, அவர்கள் உ(ண்மையை புரிந்து)ணர மாட்டார்கள்."},{"id":57,"translation":"நிச்சயமாக எவர்கள் தங்கள் இறைவனின் பயத்தால் நடுங்கி இருக்கிறார்களோ,"},{"id":58,"translation":"இன்னும், எவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களை நம்பிக்கை கொள்கிறார்களோ,"},{"id":59,"translation":"இன்னும், எவர்கள் தங்கள் இறைவனுக்கு இணைவைக்கவில்லையோ,"},{"id":60,"translation":"இன்னும், எவர்கள் தாங்கள் கொடுக்கும் தர்மத்தை கொடுப்பார்களோ, அவர்களுடைய உள்ளங்களோ நிச்சயம் அவர்கள் தங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் என்று பயந்தவையாக இருக்கும் நிலையில்,"},{"id":61,"translation":"அவர்கள்தான் நன்மைகளில் விரைந்து செல்கிறார்கள். இன்னும், அவர்கள் அவற்றை முந்தி செய்பவர்கள் ஆவார்கள். (ஆகவே, அவர்களுக்காக இறைவனிடம் நற்பாக்கியம் முந்திவிட்டது.)"},{"id":62,"translation":"எந்த ஓர் ஆன்மாவுக்கும் அதன் சக்திக்கு உட்பட்டே தவிர நாம் சிரமம் தருவதில்லை. நம்மிடம் (படைப்புகளுடைய செயல்கள் எழுதப்பட்ட,) சத்தியத்தை பேசுகிற ஒரு புத்தகம் இருக்கிறது. (கூடுதல் குறைவின்றி அடியார்களின் செயலை அது அறிவிக்கும்.) இன்னும், அவர்கள் அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":63,"translation":"மாறாக, அவர்களது உள்ளங்கள் இ(ந்த வேதத்)தை அறியாமல் இருப்பதில் இருக்கின்றன. இன்னும், அவர்களுக்கு அவை அல்லாத (இறை நம்பிக்கையாளர்கள் செய்கின்ற நல்லறங்கள் அல்லாமல்) வேறு (பாவ) செயல்கள் (மட்டுமே) உள்ளன. அவர்கள் அவற்றைத்தான் செய்கிறார்கள். (அவர்கள் நல்லோர் செய்கின்ற நல்லறங்களை செய்ய மாட்டார்கள்.)"},{"id":64,"translation":"இறுதியாக, அவர்களில் (பெரும் பாவிகளாக) இருந்த சுகவாசிகளை (-செல்வமும் பதவியும் உடைய நிராகரிப்பாளர்களை) தண்டனையைக் கொண்டு நாம் பிடித்தால் அப்போது அவர்கள் (உதவி கேட்டு) கதறுகிறார்கள்."},{"id":65,"translation":"இன்றைய தினம் கதறாதீர்கள். நிச்சயமாக நீங்கள் நம்மிடமிருந்து பாதுகாக்கப்பட மாட்டீர்கள்."},{"id":66,"translation":"திட்டமாக எனது வசனங்கள் உங்களுக்கு ஓதி காண்பிக்கப்பட்டு வந்தன. ஆக, நீங்கள் உங்கள் குதிங்கால்கள் மீது பின்னோக்கி செல்பவர்களாக இருந்தீர்கள்."},{"id":67,"translation":"(அவர்கள் செய்கின்ற) அ(ந்)த (தீய, பாவ செயல்களி)னால் பெருமை அடித்தவர்களாக (உம்மை விட்டு திரும்பிச் செல்கிறார்கள்). இரவில் இதைப் (பற்றி கேலியாக) பேசியவர்களாக (குர்ஆன் விஷயத்தில் மக்களிடம்) வீணான (தவறான கருத்)தைக் கூறுகிறார்கள்."},{"id":68,"translation":"ஆக, இந்த குர்ஆனை இவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? அல்லது, முன்னோர்களான இவர்களது மூதாதைகளுக்கு வராத ஒன்று இவர்களிடம் வந்து விட்டதா? (அதனால் அவர்கள் இதை புறக்கணிக்கிறார்களா?)"},{"id":69,"translation":"அல்லது, இவர்கள் தங்களது தூதரை (அவர் உண்மையாளர், நம்பிக்கைக்குரியவர் என்று) அறியவில்லையா? அதனால், அவர்கள் அவரை மறுக்கிறார்களா?"},{"id":70,"translation":"அல்லது, “அவருக்கு பைத்தியம் இருக்கிறது (எனவேதான் இப்படி உளருகிறார்)” என்று இவர்கள் கூறுகின்றனரா? மாறாக, இவர் அவர்களிடம் உண்மையைக் கொண்டு வந்துள்ளார். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள், உண்மையை வெறுக்கிறார்கள்."},{"id":71,"translation":"உண்மையாளன் (-அல்லாஹ்) அவர்களது விருப்பங்களை பின்பற்றி (காரியங்களை நடத்தி)னால் வானங்களும், பூமியும் இன்னும், அவற்றில் உள்ளவர்களும் நாசமடைந்து இருப்பார்கள். மாறாக, அவர்களுக்கு உரிய விளக்கத்தை நாம் அவர்களுக்கு விவரித்துவிட்டோம். ஆனால், அவர்கள் தங்களுக்கு கூறப்பட்ட விளக்கத்தை புறக்கணிக்கிறார்கள்."},{"id":72,"translation":"(இந்த சத்தியத்தை அவர்களுக்கு நீர் போதித்ததற்காக) அவர்களிடம் நீர் கூலி கேட்கிறீரா? (அதனால் அவர்கள் இந்த சத்தியத்தை விட்டு விலகி செல்கிறார்களா?) ஆக, உமது இறைவனின் கூலிதான் மிகச் சிறந்தது. இன்னும், அவன் கொடை வழங்குபவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்."},{"id":73,"translation":"இன்னும், (நபியே!) நிச்சயமாக நீர் அவர்களை நேரான பாதையின் பக்கமே அழைக்கிறீர்."},{"id":74,"translation":"இன்னும், நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் (அந்த நேரான) பாதையை விட்டு விலகிவிடக் கூடியவர்கள்தான்."},{"id":75,"translation":"அவர்கள் மீது நாம் கருணை புரிந்து, அவர்களுக்குள்ள தீங்கை (-பஞ்சத்தை) நாம் நீக்கி விட்டால் அவர்கள் தங்களது வரம்பு மீறுதலில் தறி கெட்டு தடுமாறியவர்களாக அளவுகடந்து பிடிவாதம் பிடித்திருப்பார்கள்."},{"id":76,"translation":"அவர்களை தண்டனையைக் கொண்டு திட்டவட்டமாக நாம் பிடித்தோம். ஆக, அவர்கள் தங்கள் இறைவனுக்கு பணியவில்லை. இன்னும், (அவனுக்கு முன்) பணிந்து மன்றாடவும் இல்லை."},{"id":77,"translation":"இறுதியாக, அவர்கள் மீது கடுமையான தண்டனையின் ஒரு வாசலை நாம் திறந்தால் அப்போது அவர்கள் அதில் (-அந்த தண்டனையில் தங்கள் பாவத்தை நினைத்து) கவலைப்பட்டவர்களாக ஆகிவிடுவார்கள்."},{"id":78,"translation":"இன்னும், அவன்தான் உங்களுக்கு (முதலாவதாக) செவியையும் பார்வையையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே (அவனுக்கு) நன்றி செலுத்துகிறீர்கள்."},{"id":79,"translation":"இன்னும், அவன்தான் உங்களை பூமியில் படைத்தான். அவனிடம்தான் நீங்கள் (மறுமையில் விசாரணைக்காக) ஒன்று திரட்டப்படுவீர்கள்."},{"id":80,"translation":"இன்னும், அவன்தான் உயிர்ப்பிக்கிறான்; இன்னும், மரணிக்க வைக்கிறான். இன்னும், இரவு பகல் மாறிமாறி வருவதும் அவனுடைய செயல்தான். ஆக, நீங்கள் சிந்தித்து புரிய மாட்டீர்களா?"},{"id":81,"translation":"(அவர்கள் அத்தாட்சிகளை சிந்திக்கவில்லை.) மாறாக, (தங்கள்) முன்னோர்கள் கூறியது போன்றே கூறினார்கள்."},{"id":82,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் மரணித்துவிட்டால்; இன்னும், மண்ணாகவும் எலும்புகளாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (உயிருடன் மீண்டும்) எழுப்பப்படுவோமா?"},{"id":83,"translation":"திட்டவட்டமாக எங்களுக்கும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளுக்கும் இது (-இப்படித்தான்) வாக்களிக்கப்பட்டது. (ஆனால், இது நாள் வரை அப்படி ஏதும் நிகழவில்லை. ஆகையால்) இது முன்னோர்களின் கட்டுக் கதைகளாகவே தவிர இல்லை.”"},{"id":84,"translation":"(நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: பூமியும் அதில் உள்ளவர்களும் யாருக்கு உரிமையானவர்கள்? நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் சொல்லுங்கள்)!"},{"id":85,"translation":"அல்லாஹ்விற்கே உரிமையானவர்கள் என்று அவர்கள் கூறுவார்கள். ஆக, (நபியே! அவர்களிடம்) கூறுவீராக! நீங்கள் நல்லறிவு பெற வேண்டாமா?"},{"id":86,"translation":"(நபியே!) கூறுவீராக: ஏழு வானங்களின் இறைவன் யார்? இன்னும், மகத்தான அர்ஷின் இறைவன் யார்?"},{"id":87,"translation":"அவர்கள் கூறுவார்கள்: “(அவை அனைத்தும்) அல்லாஹ்விற்கே உரியவையாகும்.” நீர் கூறுவீராக: ஆக, நீங்கள் (அந்த அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?"},{"id":88,"translation":"(நபியே!) கூறுவீராக: யாருடைய கரத்தில் (பிரபஞ்சம்) எல்லாவற்றின் பேராட்சி இருக்கிறது? இன்னும், அவன் பாதுகாப்பு அளிக்கிறான். அவனுக்கு எதிராக (யாரும் யாருக்கும்) பாதுகாப்பு அளிக்க முடியாது, நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால் (இதற்கு பதில் கூறுங்கள்)."},{"id":89,"translation":"அவர்கள் கூறுவார்கள்: “(அவற்றின் பேராட்சி) அல்லாஹ்விற்கு உரியதே!” (நபியே!) நீர் கூறுவீராக: “ஆக, நீங்கள் (அந்த உண்மையை நம்பிக்கை கொள்வதிலிருந்து) எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்!”"},{"id":90,"translation":"(வானவர்கள் அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள், சிலைகளை வணங்குவது இறைவனை வணங்குவதுதான் என்று இவர்கள் எண்ணுவது போல் அல்ல உண்மை.) மாறாக, நாம் அவர்களுக்கு விரிவாக உண்மையைக் கூறிவிட்டோம். இன்னும் நிச்சயமாக இவர்கள் பொய்யர்கள்தான்."},{"id":91,"translation":"அல்லாஹ் (தனக்கு) குழந்தையை எடுத்துக் கொள்ளவில்லை. இன்னும், (படைப்புகளை அவன் முதலாவதாக படைத்தபோது) அவனுடன் வேறு கடவுள்கள் யாரும் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளும், தான் படைத்ததை (தனியாக) கொண்டு சென்று விடுவார்கள். இன்னும் (தங்களுக்குள் சண்டையிட்டு) சிலர், சிலரை வென்று இருப்பார்கள். (இறைவனைப் பற்றி) அவர்கள் எதை வர்ணிக்கிறார்களோ அதை விட்டு அல்லாஹ் மகா பரிசுத்தமானவன் ஆவான். (ஆக, அவனுக்கு குழந்தையும் இல்லை, பங்காளியும் இல்லை, அவனுடன் வேறு கடவுளும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் இல்லை.)"},{"id":92,"translation":"(அவன்) மறைவையும் வெளிப்படையையும் நன்கறிந்தவன். ஆக, அவர்கள் (அவனுக்கு) எதை இணைவைத்து வணங்குகிறார்களோ அதை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்."},{"id":93,"translation":"(நபியே!) கூறுவீராக: “என் இறைவா! அவர்கள் (தண்டனையில்) எதை எச்சரிக்கப்படுகிறார்களோ அதை நீ எனக்கு காண்பித்தால் (அவர்களுடன் என்னையும் அழித்துவிடாதே)!"},{"id":94,"translation":"ஆக, என் இறைவா! அநியாயக்கார மக்களில் என்னையும் நீ ஆக்கிவிடாதே!"},{"id":95,"translation":"நிச்சயமாக நாம் அவர்களுக்கு எதை எச்சரிக்கிறோமோ அதை நாம் உமக்கு காண்பிப்பதற்கு ஆற்றல் உள்ளவர்கள்தான்."},{"id":96,"translation":"(சகிப்புத் தன்மை என்ற) மிக அழகிய (குணத்)தின் மூலம் (அவர்களின் பகைமை என்ற) கெட்டதை தடுப்பீராக! (அல்லாஹ்வின் விஷயத்திலும் உமது விஷயத்திலும்) அவர்கள் வர்ணிப்பவற்றை நாம் மிக அறிந்தவர்கள் ஆவோம்."},{"id":97,"translation":"(நபியே!) கூறுவீராக! என் இறைவா! ஷைத்தான்கள் (என்னை) நெறிப்பதை விட்டும் (அவர்களின் குழப்பங்களை விட்டும்) உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."},{"id":98,"translation":"இன்னும், என் இறைவா! அவர்கள் என்னிடம் (என் காரியங்களுக்குள்) வந்து கலந்துவிடுவதை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்."},{"id":99,"translation":"இறுதியாக, மரணம் அவர்களில் ஒருவருக்கு வந்தால் அவன் கூறுகிறான்: என் இறைவா! என்னை (உலகத்திற்கு) திருப்பி அனுப்புவாயாக!"},{"id":100,"translation":"(அமல்களில்) நான் விட்டவற்றிலிருந்து (சில) நல்ல அமல்களை(யாவது) நான் செய்வதற்காக (என்னை மீண்டும் உலகத்திற்கு அனுப்புவாயாக! என்று அவன் கூறுவான்). ஒரு போதும் அவ்வாறு அல்ல. (உலகத்திற்கு அவன் அனுப்பப்படவே மாட்டான். என்னை உலகிற்கு அனுப்புவாயாக என்ற பேச்சு) நிச்சயமாக இது ஒரு வீண் பேச்சாகும். அவன் அதைக் கூறிக்கொண்டே இருப்பான். இன்னும், அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை அவர்களுக்கு முன் ஒரு தடை இருக்கிறது. (ஆகையால் அவர்கள் உலகிற்கு திரும்ப முடியாது.)"},{"id":101,"translation":"எக்காளத்தில் (முதல் முறை அல்லது இரண்டாவது முறை) ஊதப்பட்டால் அவர்களுக்கு மத்தியில் அந்நாளில் உறவுகள் அறவே (பலன் தரக்கூடியதாக) இருக்காது. இன்னும், அவர்கள் தங்களுக்குள் (ஒருவர் மற்றவரை) விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்."},{"id":102,"translation":"ஆக, எவரின் (நன்மைகளின்) எடைகள் கனத்தனவோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவார்கள்."},{"id":103,"translation":"இன்னும், எவர்களுடைய (நன்மைகளின்) எடைகள் (கனமற்று) இலகுவாகிவிட்டனவோ அவர்கள்தான் தங்களுக்குத் தாமே நஷ்டம் விளைவித்தவர்கள் ஆவார்கள். அவர்கள் நரகத்தில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":104,"translation":"நரக நெருப்பு அவர்களது முகத்தை பொசுக்கிவிடும். இன்னும், அவர்கள் அதில் உதடுகள் பொசுங்கி பற்கள் வெளியே தெரிந்தவர்களாக இருப்பார்கள்."},{"id":105,"translation":"எனது (குர்ஆனின்) வசனங்கள் (உலகத்தில்) உங்களுக்கு முன் ஓதப்பட்டு வந்தன அல்லவா? ஆனால், நீங்கள் அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டிருந்தீர்கள்."},{"id":106,"translation":"அவர்கள் கூறுவார்கள்: எங்கள் இறைவா! எங்களது துர்பாக்கியம் எங்களை மிகைத்து விட்டது. இன்னும், நாங்கள் வழிகெட்ட மக்களாக இருந்தோம்."},{"id":107,"translation":"எங்கள் இறைவா! எங்களை இ(ந்த நரகத்)திலிருந்து வெளியேற்றிவிடு! ஆக, (பாவங்களின் பக்கம்) நாங்கள் திரும்பச் சென்றால் நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்கள்தான். (அப்போது நீ எங்களை கண்டிப்பாக தண்டிக்கலாம்.)"},{"id":108,"translation":"அவன் கூறுவான்: இ(ந்த நரகத்)தில் நீங்கள் (நிரந்தரமாக) இழிவுடன் தங்கி விடுங்கள். இன்னும், என்னிடம் பேசாதீர்கள்."},{"id":109,"translation":"நிச்சயமாக விஷயமாவது, என் அடியார்களில் ஒரு கூட்டம், “எங்கள் இறைவா! நாங்கள் நம்பிக்கை கொண்டோம். ஆகவே, எங்களை மன்னித்து விடு! இன்னும், எங்கள் மீது கருணை புரி! நீயோ கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்” என்று கூறுபவர்களாக இருந்தார்கள்."},{"id":110,"translation":"ஆக, அவர்களை நீங்கள் கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இறுதியாக, அவர்கள் என் நினைவை உங்களுக்கு மறக்க வைத்து விட்டார்கள். (அவர்களை கேலி செய்வதில் ஈடுபட்டு என்னை நீங்கள் மறந்து விட்டீர்கள்.) இன்னும், நீங்கள் அவர்களைப் பார்த்து (எப்போதும் கேலிசெய்து) சிரித்துக் கொண்டிருந்தீர்கள்."},{"id":111,"translation":"அவர்கள் (உலகத்தில்) பொறுமையாக இருந்த காரணத்தால் இன்றைய தினம் நிச்சயமாக நான் அவர்களுக்கு கூலி கொடுத்தேன், “நிச்சயமாக அவர்கள்தான் (சொர்க்கத்தின்) பாக்கியம் பெற்றவர்கள்” என்று."},{"id":112,"translation":"(அல்லாஹ்) கூறுவான்: பூமியில் நீங்கள் எத்தனை பல ஆண்டுகள் தங்கி இருந்தீர்கள்."},{"id":113,"translation":"அவர்கள் கூறுவார்கள்: ஒரு நாள்; அல்லது, ஒரு நாளில் சில பகுதி தங்கி இருந்தோம். ஆக, (சரியாக) எண்ணக் கூடியவர்களிடம் நீ கேட்பாயாக!"},{"id":114,"translation":"அவன் கூறுவான்: நீங்கள் (பூமியில்) குறைவாகவே தவிர தங்கவில்லை. நீங்கள் (மறுமையில் தங்கப் போகும் காலத்தை) அறிந்திருக்க வேண்டுமே!"},{"id":115,"translation":"நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணாகத்தான் என்றும், நிச்சயமாக நீங்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?"},{"id":116,"translation":"ஆக, அரசனாகிய, உண்மையான இறைவனாகிய, கண்ணியமிக்க அர்ஷுடைய அதிபதியாகிய அல்லாஹ் (இவர்களின் இழிவான வர்ணிப்பை விட்டும்) மிக உயர்ந்தவனாக இருக்கிறான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை."},{"id":117,"translation":"இன்னும், யார் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைப்பாரோ - அதற்கு அவரிடம் அறவே ஆதாரம் இல்லாமல் இருக்க - அவருடைய விசாரணையெல்லாம் அவரது இறைவனிடம்தான். நிச்சயமாக (அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்க மறுக்கின்ற) நிராகரிப்பாளர்கள் வெற்றி பெறமாட்டார்கள்."},{"id":118,"translation":"(நபியே!) கூறுவீராக! என் இறைவா! (என்னை) மன்னிப்பாயாக, இன்னும், (என் மீது) கருணை புரிவாயாக! நீதான் கருணை புரிபவர்களில் மிகச் சிறந்தவன்."}]},{"id":24,"verses":[{"id":1,"translation":"திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்."},{"id":2,"translation":"விபச்சாரி; இன்னும், விபச்சாரன் இவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு பிரம்படி அடியுங்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தில் (அதன் சட்டத்தை நிறைவேற்றும்போது) அந்த இருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் வந்துவிட வேண்டாம், நீங்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால். இன்னும், நம்பிக்கையாளர்களில் ஒரு பெரும் கூட்டம் அவ்விருவரின் தண்டனை (நிறைவேறுகின்ற இடத்து)க்கு ஆஜராகட்டும்."},{"id":3,"translation":"விபச்சாரன், ஒரு விபச்சாரியுடன்; அல்லது, இணைவைப்பவளுடன் தவிர (மற்றவளுடன்) உ(டலு)றவு வைக்க மாட்டான். இன்னும், விபச்சாரியாக இருப்பவள், - அவளுடன் ஒரு விபச்சாரன்; அல்லது, இணைவைப்பவன் ஒருவனைத் தவிர (மற்றவர்) உ(டலு)றவு வைக்க மாட்டான். இது (-விபச்சாரம் செய்வது) நம்பிக்கையாளர்களுக்கு ஹராம் - தடுக்கப்பட்டுள்ளது."},{"id":4,"translation":"எவர்கள் பத்தினிகள் மீது விபச்சார குற்றம் சுமத்துவார்களோ, பிறகு, அவர்கள் (தாங்கள் கூறியதற்கு) நான்கு சாட்சிகளை கொண்டு வரவில்லை என்றால் அவர்களை எண்பது பிரம்படி அடியுங்கள். அவர்களின் சாட்சியத்தை ஒருபோதும் ஏற்காதீர்கள். அவர்கள்தான் பாவிகள் (பொய்யர்கள்) ஆவார்கள்."},{"id":5,"translation":"எவர்கள் அதற்குப் பின்னர் திருந்திவிட்டார்களோ; இன்னும், (தங்களை) சீர்படுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் பாவிகள் அல்லர்.) ஆக, நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":6,"translation":"இன்னும், எவர்கள் தங்களது மனைவிகள் மீது விபச்சார குற்றம் சுமத்துகிறார்களோ; இன்னும், அவர்களிடம் அவர்களைத் தவிர சாட்சிகள் (வேறு) இல்லையோ, ஆக, அவர்களில் ஒருவர், “அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக தான் உண்மை கூறுபவர்களில் உள்ளவன்தான்” என்று நான்கு முறை சாட்சி சொல்ல வேண்டும்."},{"id":7,"translation":"ஐந்தாவது முறை, “நிச்சயமாக அல்லாஹ்வின் சாபம் தன் மீது உண்டாகட்டும், தான் பொய் கூறுபவர்களில் ஒருவனாக இருந்தால்” (என்று கூறவேண்டும்)."},{"id":8,"translation":"இன்னும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நிச்சயமாக (எனது கணவராகிய) அவர் பொய் கூறுபவர்களில் உள்ளவர் என்று நான்கு முறை அவள் சாட்சி சொல்வது அவளை விட்டும் (விபச்சாரத்தின்) தண்டனையை தடுக்கும்."},{"id":9,"translation":"இன்னும், ஐந்தாவது முறை, “அவர் உண்மை கூறுபவர்களில் இருந்தால் தன் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகட்டும்” (என்று அவள் சொல்ல வேண்டும்)."},{"id":10,"translation":"அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை அங்கீகரிப்பவனாகவும் ஞானவானாகவும் இல்லாதிருந்தால் (அவன் உங்களை உடனே தண்டித்திருப்பான்)."},{"id":11,"translation":"நிச்சயமாக (நபியின் மனைவியின் மீது) இட்டுக்கட்டியவர்கள் உங்களில் உள்ள ஒரு குழுவினர்தான். அதை உங்களுக்கு தீமையாக கருதாதீர்கள். மாறாக, அதுவும் உங்களுக்கு ஒரு நன்மைதான். அவர்களில் ஒவ்வொருவருக்கும் - பாவத்தில் அவர் எதை செய்தாரோ - அதனுடைய தண்டனை உண்டு. இன்னும், அவர்களில் யார் அதில் (-இட்டுக்கட்டுவதில்) பெரியதை பொறுப்பெடுத்து செய்தாரோ (-இந்த பழியை அதிகம் பரப்பினாரோ) அவருக்கு பெரிய தண்டனை உண்டு."},{"id":12,"translation":"நீங்கள் அதைக் கேட்டபோது நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களைப் பற்றி (-தங்களில் யார் மீது ஆதாரமின்றி இட்டுக்கட்டப்பட்டதோ அவரைப் பற்றி) நல்லதை எண்ணியிருக்க வேண்டாமா! இன்னும், இது தெளிவான இட்டுக்கட்டப்பட்ட (பொய்யான) செய்தியாகும் என்று சொல்லியிருக்க வேண்டாமா!"},{"id":13,"translation":"அவர்கள் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா! ஆக, அவர்கள் சாட்சிகளைக் கொண்டு வரவில்லை எனில் அவர்கள்தான் அல்லாஹ்விடம் பொய்யர்கள் ஆவார்கள்."},{"id":14,"translation":"இம்மையிலும் மறுமையிலும் உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும் கருணையும் இல்லாதிருந்தால் நீங்கள் எதில் ஈடுபட்டீர்களோ அதன் காரணமாக உங்களுக்கு பெரிய தண்டனை கிடைத்திருக்கும்."},{"id":15,"translation":"ஏனெனில், நீங்கள் உங்கள் நாவுகளால் அதை உங்களுக்குள் (ஒருவர் மற்றவருக்கு) அறிவித்துக் கொண்டீர்கள். இன்னும், உங்களுக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை உங்கள் வாய்களால் கூறுகிறீர்கள். இன்னும், அதை மிக இலகுவாக (-சாதாரணமாக) கருதுகிறீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் மிகப்பெரியதாக இருக்கிறது."},{"id":16,"translation":"இன்னும், அதை நீங்கள் கேள்வியுற்றபோது, “இதை நாங்கள் பேசுவது எங்களுக்கு ஆகுமானதல்ல, அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன், இது பெரிய அபாண்டமான பேச்சாகும்” என்று நீங்கள் சொல்லியிருக்க வேண்டாமா!"},{"id":17,"translation":"நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செயலின் பக்கம் நீங்கள் மீள்வதிலிருந்து (நீங்கள் விலகி இருக்க வேண்டும் என்று) அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கிறான்."},{"id":18,"translation":"இன்னும், அல்லாஹ் உங்களுக்கு (தனது) வசனங்க(ள் வாயிலாக தேவையான மார்க்க சட்டங்க)ளை விவரிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":19,"translation":"நிச்சயமாக (விபச்சாரம், ஆபாசங்கள், பழிபோடுதல் போன்ற) அசிங்கமான செயல்(கள்) நம்பிக்கையாளர்களுக்கிடையில் பரவுவதை எவர்கள் விரும்புவார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் தண்டனை இம்மையிலும் மறுமையிலும் உண்டு. அல்லாஹ்தான் (உங்களுக்கு நன்மை தரும் சட்டங்களை) நன்கறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்."},{"id":20,"translation":"அல்லாஹ்வின் அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால், இன்னும், நிச்சயமாக அல்லாஹ் மிக இரக்கமுள்ளவனாகவும் மகா கருணையுள்ளவனாகவும் இல்லாதிருந்தால் (அல்லாஹ்வின் தண்டனையால் நீங்கள் அழிந்து போயிருப்பீர்கள்)."},{"id":21,"translation":"நம்பிக்கையாளர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள். யார் ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றுவாரோ நிச்சயமாக அ(ந்த ஷைத்தானான)வன் அசிங்கமான செயல்களையும் கெட்டதையும் (தன்னை பின்பற்றுவோருக்கு) ஏவுகிறான். அல்லாஹ்வுடைய அருளும் அவனது கருணையும் உங்கள் மீது இல்லாதிருந்தால் உங்களில் எவரும் ஒரு போதும் தூய்மை அடைந்திருக்க மாட்டார் (-நேர்வழி பெற்றிருக்க மாட்டார்). எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களை பரிசுத்தப்படுத்துகிறான். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":22,"translation":"உங்களில் செல்வமும் வசதியும் உடையவர்கள் தங்கள் உறவினர்களுக்கும் வறியவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் சென்றவர்களுக்கும் தர்மம் கொடுக்க மாட்டோம் என சத்தியம் செய்ய வேண்டாம். (செல்வந்தர்களான) அவர்கள் மன்னிக்கட்டும், பெருந்தன்மையுடன் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களை மன்னிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":23,"translation":"நிச்சயமாக (அசிங்கமான செயலை) அறியாதவர்களான நம்பிக்கை கொண்டவர்களான பத்தினியான பெண்கள் மீது யார் (அவர்கள் செய்யாததை) குற்றம் சுமத்துகிறார்களோ அவர்கள் உலகத்திலும் மறுமையிலும் சபிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களுக்கு பெரிய தண்டனை உண்டு,"},{"id":24,"translation":"அவர்களுக்கு எதிராக அவர்களது நாவுகளும் அவர்களது கரங்களும் அவர்களது கால்களும் அவர்கள் செய்து கொண்டிருந்த செயலுக்கு சாட்சி பகரும் நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்)."},{"id":25,"translation":"அந்நாளில் அல்லாஹ் அவர்களுக்கு அவர்களுடைய உண்மையான கூலியை முழுமையாக தருவான். இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன், தெளிவானவன் என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்."},{"id":26,"translation":"கெட்ட சொற்கள் கெட்டவர்களுக்கு உரியன. கெட்டவர்கள் கெட்ட சொற்களுக்கு உரியவர்கள். இன்னும், நல்ல சொற்கள் நல்லவர்களுக்கு உரியன. நல்லவர்கள் நல்ல சொற்களுக்கு உரியவர்கள். அ(ந்த நல்ல)வர்கள் (பாவிகளாகிய) இவர்கள் சொல்வதிலிருந்து நிரபராதிகள் ஆவார்கள். அவர்களுக்கு மன்னிப்பும் (சொர்க்கம் எனும்) கண்ணியமான அருட்கொடையும் உண்டு."},{"id":27,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்கள் வீடுகள் அல்லாத (பிறருடைய) வீடுகளில் நீங்கள் (அனுமதியின்றி) நுழையாதீர்கள், நீங்கள் அவ்வீட்டார்களுக்கு ஸலாம் கூறி, பேசி அனுமதி பெறுகின்ற வரை (உள்ளே செல்லாதீர்கள்). இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும், நீங்கள் நல்லறிவு பெறவேண்டும் என்பதற்காக."},{"id":28,"translation":"ஆக, அவற்றில் நீங்கள் ஒருவரையும் காணவில்லையெனில், உங்களுக்கு அனுமதி கொடுக்கப்படுகிற வரை அவற்றில் நீங்கள் நுழையாதீர்கள். இன்னும், “திரும்பி விடுங்கள்” என்று உங்களுக்கு சொல்லப்பட்டால் (வீட்டுக்குள் நுழையாமல்) திரும்பி விடுங்கள். அது உங்க(ள் ஆன்மாக்க)ளுக்கு மிக சுத்தமானதாகும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":29,"translation":"உங்கள் பொருள் (மட்டும் வைக்கப்பட்டு) இருக்கிற (யாரும்) வசிக்காத வீடுகளில் நீங்கள் (அனுமதி இன்றி) நுழைவது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் வெளிப்படுத்துவதையும் நீங்கள் மறைப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்."},{"id":30,"translation":"(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு கூறுவீராக: அவர்கள் தங்கள் பார்வைகளை (தங்களுக்கு ஆகாததை பார்ப்பதிலிருந்து) தடுத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் மறைவிடங்களை (பிறர் பார்வைகளிலிருந்தும் பாவத்திலிருந்தும்) பாதுகாத்துக் கொள்ளட்டும். அதுதான் அவர்களுக்கு மிக சுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ், அவர்கள் செய்வதை ஆழ்ந்தறிந்தவன் ஆவான்."},{"id":31,"translation":"இன்னும், (நபியே!) நம்பிக்கையாளர்களான பெண்களுக்கு கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளை தடுத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் அலங்காரங்களை - அதிலிருந்து வெளியில் தெரிபவற்றைத் தவிர (மற்றதை) - வெளிப்படுத்த வேண்டாம்; இன்னும், அவர்கள் தங்கள் முந்தானைகளை தங்கள் (தலைகளுக்கு மேலிருந்து சட்டைகளின்) நெஞ்சுப் பகுதிகள் மீது போர்த்திக் கொள்ளட்டும்; இன்னும், தங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம், தங்கள் கணவர்களுக்கு; அல்லது, தங்கள் தந்தைகளுக்கு; அல்லது, தங்கள் கணவர்களின் தந்தைகளுக்கு; அல்லது, தங்கள் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் கணவர்களின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் சகோதரர்களுக்கு; அல்லது, தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகளுக்கு; அல்லது, தங்கள் (முஸ்லிமான) பெண்களுக்கு; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களுக்கு; அல்லது, ஆண்களில் (பெண்) ஆசையில்லாத பணியாளர்களுக்கு; அல்லது, பெண்களின் மறைவிடங்களை அறியாத சிறுவர்களுக்கு (ஆகிய இவர்களுக்கே)த் தவிர. (கணவனுக்கு மனைவியிடம் எந்த மறைவும் இல்லை. அவரைத் தவிர மேல் கூறப்பட்ட மற்றவர்களுக்கு முன் ஒரு பெண் தனது முகம், குடங்கை, கழுத்துப் பகுதி, பாதம், காதுகள் தெரியும்படி இருந்தால் அவள் மீது குற்றமில்லை.) தங்கள் அலங்காரங்களிலிருந்து அவர்கள் மறைப்பது (மற்றவர்களிடம்) அறியப்படுவதற்காக அவர்கள் தங்கள் கால்(களில் உள்ள சலங்கை கொலுசு)களை பூமியில் தட்டி நடக்கவேண்டாம். இன்னும், நம்பிக்கையாளர்களே! நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி திரும்பி விடுங்கள்."},{"id":32,"translation":"இன்னும், உங்களில் துணை இல்லாதவர்களுக்கும் (-மனைவி இல்லாத ஆண்களுக்கும், கணவன் இல்லாத பெண்களுக்கும்) உங்கள் ஆண் அடிமைகளிலும் உங்கள் பெண் அடிமைகளிலும் உள்ள (ஒழுக்கமான) நல்லவர்களுக்கும் நீங்கள் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் அவர்களை தனது அருளால் (அவர்களுக்கு செல்வத்தை கொடுத்து) நிறைவுறச் செய்வான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":33,"translation":"எவர்கள் திருமணத்திற்கு வசதி பெறவில்லையோ அவர்கள் அல்லாஹ் அவர்களை தன் அருளால் வசதியுள்ளவர்களாக ஆக்கும் வரை ஒழுக்கமாக இருக்கட்டும். இன்னும், உங்கள் வலக் கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களில் உரிமைப் பத்திரம் எழுதி விடுதலை பெற எவர்கள் விரும்புகிறார்களோ அவர்களில் நீங்கள் நன்மையை (-நம்பிக்கையையும் நல்ல குணத்தையும்) அறிந்தால் அவர்களுக்கு உரிமைப் பத்திரம் எழுதிக் கொடுங்கள். இன்னும், (நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு அல்லாஹ் கொடுத்த அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து அவர்களுக்கு கொடு(த்து அவர்கள் விடுதலை பெற உதவு)ங்கள். நீங்கள் உலக வாழ்க்கையின் செல்வத்தை சம்பாதிக்க விரும்பி உங்கள் அடிமை பெண்களை விபச்சாரத்தில் நிர்ப்பந்த(மாக ஈடு)படுத்தாதீர்கள், அந்த அடிமைப் பெண்கள் பத்தினித்தனத்தை விரும்பினால். இன்னும், யார் அந்த அடிமை பெண்களை (விபச்சாரம் செய்ய) நிர்ப்பந்திப்பாரோ நிச்சயமாக அல்லாஹ் அந்த அடிமை பெண்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் அவர்களை மன்னிப்பவன், (அவர்கள் மீது) கருணை காட்டுபவன் ஆவான்."},{"id":34,"translation":"திட்டவட்டமாக உங்களுக்கு தெளிவான வசனங்களையும் உங்களுக்கு முன்னர் (வாழ்ந்து) சென்றவர்களின் உதாரணத்தையும் இறையச்சமுள்ளவர்களுக்கு உபதேசத்தையும் இறக்கி இருக்கிறோம்."},{"id":35,"translation":"அல்லாஹ், வானங்கள் இன்னும் பூமியின் ஒளி (நேர்வழிகாட்டி) ஆவான். (முஃமினுடைய உள்ளத்தில் உள்ள) அவனது (நேர்வழி மற்றும் குர்ஆனுடைய) ஒளியின் தன்மையாவது ஒரு மாடத்தைப் போன்றாகும். அதில் ஒரு விளக்கு உள்ளது. அந்த விளக்கு கண்ணாடியில் உள்ளது. அந்தக் கண்ணாடி மின்னக்கூடிய ஒரு நட்சத்திரத்தைப் போல் உள்ளது. (அந்த விளக்கு,) கிழக்கிலும் அல்லாத மேற்கிலும் அல்லாத (-சூரியன் உதிக்கும் போதும் அது மறையும் போதும் அதன் வெயில் படாத அளவிற்கு இலைகள் அடர்த்தியான) ஆலிவ் என்னும் பாக்கியமான மரத்தில் இருந்து (எடுக்கப்பட்ட எண்ணெயிலிருந்து) எரிக்கப்படுகிறது. அதன் எண்ணெய் ஒளிர ஆரம்பித்து விடுகிறது, அதன் மீது தீ படவில்லை என்றாலும் சரியே. (தீ பட்டால் அது) ஒளிக்கு மேல் ஒளியாக ஆகிவிடுகிறது. அல்லாஹ், தனது (இஸ்லாம் எனும்) ஒளியின் பக்கம் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான். இன்னும், மக்களுக்கு (அவர்கள் நேர்வழி பெறுவதற்காக பல) உதாரணங்களை அல்லாஹ் விவரிக்கிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":36,"translation":"(அந்த விளக்கு) இறை இல்லங்களில் எரிக்கப்படுகிறது. அவை உயர்த்தி கட்டப்படுவதற்கும் அவற்றில் அவனது பெயர் நினைவு கூறப்படுவதற்கும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். அவற்றில் காலையிலும் மாலையிலும் (முஃமினான ஆண்கள்) அவனை துதித்து தொழுகிறார்கள்."},{"id":37,"translation":"(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும்."},{"id":38,"translation":"(அவர்கள் அப்படி அமல் செய்தது ஏனெனில்,) அவர்கள் செய்த மிக அழகிய நன்மைகளுக்கு அல்லாஹ் கூலி வழங்குவதற்காகவும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு மேலும் அதிகப்படுத்துவதற்காகவும் ஆகும். அல்லாஹ் தான் நாடியவருக்கு கணக்கின்றி வழங்குகிறான்."},{"id":39,"translation":"நிராகரிப்பாளர்கள் - அவர்களுடைய செயல்கள் வெட்டவெளியில் இருக்கும் கானல் நீரைப் போலாகும். (தாகித்தவர்) அதை தண்ணீராக எண்ணுகிறார். இறுதியாக, அதனிடம் அவர் வந்தால் அதை அறவே (அங்கு) காணமாட்டார். இன்னும், அல்லாஹ்வைத்தான் அதனிடம் காண்பார். ஆக, அவன் அவருடைய கணக்கை அவருக்கு முழுமையாக நிறைவேற்றுவான். இன்னும், கேள்வி கணக்கு கேட்பதில் அல்லாஹ் மிகத் தீவிரமானவன்."},{"id":40,"translation":"அல்லது, ஆழமான கடலில் உள்ள இருள்களைப் போலாகும் (அவர்களது செயல்கள்). அதை (-அந்த கடலை) அலைக்கு மேல் அலை சூழ்ந்திருக்க, அதற்கு மேல் மேகம் சூழ்ந்திருக்கிறது. (இப்படி) இருள்கள் -அவற்றில் சில, சிலவற்றுக்கு- மேலாக (-கடுமையாக) இருக்கிறது. அவன் தனது கையை வெளியே நீட்டினால் அதை அவனால் பார்க்க முடியாது. அல்லாஹ் யாருக்கு (நேர்வழி எனும்) ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவருக்கு எவ்வித ஒளியும் இல்லை."},{"id":41,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா! நிச்சயமாக அல்லாஹ் - வானத்தில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் வரிசையாக பறக்கின்ற பறவைகளும் அவனை துதிக்கிறார்கள். ஒவ்வொருவரும் அவனைத் தொழுவதையும் அவனைத் துதிப்பதையும் திட்டமாக அறிந்துள்ளனர். அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":42,"translation":"இன்னும், அல்லாஹ்விற்கே வானங்களின் பூமியின் ஆட்சி உரியது. இன்னும், அல்லாஹ்வின் பக்கமே (இறுதி) மீளுதல் இருக்கிறது."},{"id":43,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா!? நிச்சயமாக அல்லாஹ் மேகங்களை (ஓர் இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு) ஓட்டுகிறான். பிறகு, அவற்றுக்கு இடையில் இணை(த்து ஒன்று சேர்)க்கிறான், பிறகு, அவற்றை ஒன்றிணைக்கப்பட்டதாக ஆக்குகிறான். ஆக, அவற்றுக்கு இடையில் இருந்து மழை வெளிவருவதை நீர் பார்க்கிறீர். இன்னும், வானத்திலிருந்து, அதில் உள்ள பனி மலைகளில் இருந்து அவன் (நீரை, ஆலங்கட்டிகளை) இறக்குகிறான். அதன் மூலம் அவன், தான் நாடியவர்களை தண்டிக்கிறான். இன்னும், தான் நாடியவர்களை விட்டும் அவன் அதை திருப்பிவிடுகிறான். அதன் மின்னலின் கடுமையான வெளிச்சம் பார்வைகளை பறித்துவிடவும் நெருங்கி விடுகிறது."},{"id":44,"translation":"அல்லாஹ் இரவையும் பகலையும் (ஒன்றன் பின் ஒன்றை) மாற்றுகிறான். அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் படிப்பினை இருக்கிறது."},{"id":45,"translation":"அல்லாஹ் (இப்பூமியில் உள்ள) எல்லா உயிரினங்களையும் தண்ணீரிலிருந்து படைத்தான். ஆக, தனது வயிற்றின் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. இன்னும், இரண்டு கால்கள் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. இன்னும், நான்கு கால்கள் மீது நடப்பவையும் அவர்களில் உண்டு. அல்லாஹ், தான் நாடியதைப் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":46,"translation":"திட்டவட்டமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கியுள்ளோம். அல்லாஹ், தான் நாடியவருக்கு நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறான்."},{"id":47,"translation":"அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் அல்லாஹ்வையும் தூதரையும் நம்பிக்கை கொண்டோம், இன்னும், (அவர்களுக்கு) கீழ்ப்படிந்தோம்” என்று. பிறகு, அவர்களில் ஒரு பிரிவினர் அதற்குப் பின்னர் (ஈமானை விட்டு) திரும்பி விடுகிறார்கள். அ(த்தகைய)வர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை."},{"id":48,"translation":"அவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதரின் பக்கம் அவர்கள் அழைக்கப்பட்டால், அப்போது அவர்களில் ஒரு பிரிவினர் (தூதரின் தீர்ப்பை) புறக்கணிக்கிறார்கள்."},{"id":49,"translation":"இன்னும், அவர்களுக்கு சாதகமாக சத்தியம் இருந்தால் (தீர்ப்புக்கு) கட்டுப்பட்டவர்களாக அவர் பக்கம் வருகிறார்கள்."},{"id":50,"translation":"அவர்களது உள்ளங்களில் நோய் இருக்கிறதா? அல்லது, அவர்கள் சந்தேகிக்கிறார்களா? அல்லது, அல்லாஹ்வும் அவனது தூதரும் அவர்கள் மீது அநீதியிழைத்து விடுவார்கள் என்று பயப்படுகிறார்களா? மாறாக, அவர்கள்தான் அநியாயக்காரர்கள்."},{"id":51,"translation":"அவர்களுக்கு மத்தியில் தூதர் தீர்ப்பளிப்பதற்காக அல்லாஹ் இன்னும் அவனது தூதர் பக்கம் நம்பிக்கையாளர்கள் அழைக்கப்பட்டால் அப்போது அந்த நம்பிக்கையாளர்களுடைய கூற்றாக இருப்பதெல்லாம், நாங்கள் செவியுற்றோம், கீழ்ப்படிந்தோம் என்று அவர்கள் கூறுவதுதான். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவர்."},{"id":52,"translation":"யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிவாரோ; இன்னும், அல்லாஹ்வை பயப்படுவாரோ; இன்னும், அவனை அஞ்சி நடப்பாரோ அ(த்தகைய)வர்கள்தான் (சொர்க்கத்தின்) நற்பாக்கியம் பெற்றவர்கள்."},{"id":53,"translation":"அவர்கள் அல்லாஹ்வின் மீது உறுதியாக சத்தியம் செய்தனர்: “நீர் அவர்களுக்கு கட்டளையிட்டால் நிச்சயமாக அவர்கள் (போருக்கு) புறப்பட்டு வருவார்கள்” என்று. (நபியே) கூறுவீராக: “நீங்கள் சத்தியமிடாதீர்கள். (உங்கள் கீழ்ப்படிதல் பொய் என்று) அறியப்பட்ட கீழ்ப்படிதலே.” நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":54,"translation":"(நபியே!) கூறுவீராக: அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள். இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள். ஆக, நீங்கள் விலகிச் சென்றால் அவர் மீது கடமையெல்லாம் அவர் மீது சுமத்தப்பட்டதுதான் (-மார்க்கத்தை எடுத்துச் சொல்வதுதான்). உங்கள் மீது கடமையெல்லாம் உங்கள் மீது சுமத்தப்பட்டதுதான் (-தூதருக்கு கீழ்ப்படிவதும் கட்டுப்படுவதும்தான்). இன்னும், நீங்கள் அவருக்கு கீழ்ப்படிந்தால் நீங்கள் நேர் வழிப் பெறுவீர்கள். இன்னும், தூதர் மீது கடமை இல்லை, (மார்க்கத்தை) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர."},{"id":55,"translation":"உங்களில் எவர்கள் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் செய்தார்களோ அவர்களுக்கு அல்லாஹ் வாக்களித்துள்ளான்: அவர்களுக்கு முன்னுள்ளவர்களை (பூமியின்) ஆட்சியாளர்களாக ஆக்கியது போன்று இப்பூமியில் அவர்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான். இன்னும், அவர்களுக்காக அவன் திருப்தியடைந்த அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்கு பலப்படுத்தித் தருவான். அவர்களது பயத்திற்கு பின்னர் நிம்மதியை அவர்களுக்கு மாற்றித்தருவான். அவர்கள் என்னை வணங்குவார்கள், எனக்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள். இதற்குப் பின்னர் யார் நிராகரிப்பார்களோ அவர்கள்தான் பாவிகள்."},{"id":56,"translation":"இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக தொழுகையை நிலை நிறுத்துங்கள். ஸகாத்தை கொடுங்கள். இன்னும் தூதருக்கு கீழ்ப்படியுங்கள்."},{"id":57,"translation":"(நபியே!) நிராகரிப்பாளர்கள் இப்பூமியில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்தி விடுவார்கள் என்று எண்ணி விடாதீர். இன்னும், அவர்களது தங்குமிடம் நரகம்தான். அது கெட்ட மீளுமிடமாகும்."},{"id":58,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களும் உங்களில் பருவத்தை அடையாதவர்களும் மூன்று நேரங்களில் (உங்கள் இல்லங்களில் நுழைய) உங்களிடம் அனுமதி கோரட்டும். அதிகாலை தொழுகைக்கு முன்; இன்னும், மதியத்தில் (நீங்கள் ஓய்வு எடுப்பதற்காக) உங்கள் ஆடைகளை நீங்கள் களைந்துவிடும் நேரத்தில்; இன்னும், இஷா தொழுகைக்கு பின் இவை மூன்றும் உங்களுக்கு மறைவான நேரங்கள் ஆகும். (இந்த நேரங்களில் அவர்கள் உங்களிடம் அனுமதி பெற்று உள்ளே பிரவேசிக்கவும். மற்ற நேரங்களில் அனுமதியின்றி அவர்கள் நுழைவது) உங்கள் மீதும் அவர்கள் மீதும் குற்றமில்லை. உங்களில் சிலர் சிலரிடம் அதிகம் வந்துபோகக் கூடியவர்கள் ஆவார்கள். இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":59,"translation":"உங்களில் குழந்தைக(ளாக இருப்பவர்க)ள் பருவத்தை அடைந்துவிட்டால் அவர்கள் (உங்கள் இல்லங்களில் நுழையும் போது) அனுமதி கோரட்டும் அவர்களுக்கு முன்னர் உள்ள (வயது வந்த)வர்கள் அனுமதி கோரியது போன்று. இவ்வாறு அல்லாஹ் உங்களுக்கு தனது வசனங்களை தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":60,"translation":"பெண்களில் திருமணத்தை ஆசைப்படாத வயது முதிர்ந்தவர்கள் (தங்களது பர்தாவின் மேல் உள்ள) அவர்களின் துப்பட்டாக்களை (அணியாமல்) கழட்டுவதில் அவர்கள் மீது குற்றமில்லை. அவர்கள் அலங்காரங்களுடன் வெளியே வராமல் இருக்க வேண்டும். இன்னும், அவர்கள் பேணுதலாக இரு(ந்து துப்பட்டாக்களை எல்லோர் முன்பும் அணிந்து இரு)ப்பதுதான் அவர்களுக்கு சிறந்ததாகும். அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":61,"translation":"குருடர் மீது குற்றம் இல்லை, ஊனமுற்றவர் மீது குற்றம் இல்லை, நோயாளி மீது குற்றம் இல்லை, உங்கள் மீது குற்றம் இல்லை - நீங்கள் உங்கள் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் தந்தைகளின் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் தாய்மார்களின் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் தந்தையின் சகோதரர்களின் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் மாமிகளின் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் தாய்மாமன்களின் இல்லங்களிலிருந்து; அல்லது, உங்கள் தாயின் சகோதரிகளின் இல்லங்களிலிருந்து; அல்லது, எந்த இல்லத்தின் சாவிகளை நீங்கள் உங்கள் உரிமையில் வைத்திருக்கிறீர்களோ அதிலிருந்து; அல்லது, உங்கள் நண்பனின் இல்லங்களிலிருந்து நீங்கள் உண்பது (உங்கள் மீது குற்றமில்லை). நீங்கள் ஒன்றிணைந்தவர்களாக அல்லது பிரிந்தவர்களாக (தனித்தனியாக) உண்பது உங்கள் மீது குற்றமில்லை. நீங்கள் (உங்களுடைய அல்லது பிறருடைய) இல்லங்களில் நுழைந்தால் உங்களுக்கு -அல்லாஹ்விடமிருந்து (கற்பிக்கப்பட்ட) பாக்கியமான நல்ல முகமனாகிய- ஸலாமை (அங்குள்ள உங்கள் சகோதரர்களுக்கு) சொல்லுங்கள். நீங்கள் சிந்தித்து விளங்குவதற்காக அல்லாஹ் உங்களுக்கு இவ்வாறு வசனங்களை தெளிவுபடுத்துகிறான்."},{"id":62,"translation":"நம்பிக்கையாளர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (அவர்கள் கூறிய எல்லா விஷயங்களிலும்) உண்மைப்படுத்தியவர்கள்தான். இன்னும், அவர்கள் (-தூதருடன் போர், தொழுகை, ஆலோசனை போன்ற) ஒரு பொது காரியத்தில் அவருடன் இருந்தால் அவரிடம் அனுமதி கேட்காமல் (அங்கிருந்து) அவர்கள் செல்லமாட்டார்கள். நிச்சயமாக உங்களிடம் அனுமதி கேட்பவர்கள், அவர்கள்தான் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மைப்படுத்தியர்கள் ஆவார்கள். ஆக, அவர்கள் உம்மிடம் தங்களின் சில காரியத்திற்கு அனுமதி கேட்டால் அவர்களில் நீர் நாடியவருக்கு அனுமதி அளிப்பீராக. இன்னும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக. நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":63,"translation":"(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு மத்தியில் தூதர் (உங்களுக்கு எதிராக) பிரார்த்திப்பதை உங்களில் சிலர் சிலருக்கு (எதிராக) பிரார்த்திப்பது போன்று ஆக்கிவிடாதீர்கள். (அவருடைய பிரார்த்தனை கண்டிப்பாக நிகழ்ந்துவிடும்.) உங்களில் மறைவாக நழுவிச் செல்பவர்களை திட்டமாக அல்லாஹ் நன்கறிவான். ஆக, அவருடைய கட்டளைக்கு மாறுசெய்பவர்கள் (-உள்ளங்கள் இறுகி நிராகரிப்பு என்னும்) குழப்பம் தங்களை அடைந்துவிடுவதை; அல்லது, வலி தரும் (கடுமையான) தண்டனை தங்களை அடைந்துவிடுவதைப் பற்றி உஷாராக (பயந்தவர்களாக) இருக்கட்டும்."},{"id":64,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அல்லாஹ்விற்கே சொந்தமானவையாகும். திட்டமாக நீங்கள் இருக்கும் நிலையை அவன் நன்கறிவான். இன்னும், (நபியின் கட்டளைக்கு மாறுசெய்த) அவர்கள் அந்நாளில் அவனிடம் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படும்போது, ஆக, அவர்கள் செய்ததை அவன் அவர்களுக்கு அறிவிப்பான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."}]},{"id":25,"verses":[{"id":1,"translation":"இது ஓர் அத்தியாயமாகும். இதை நாம் இறக்கினோம். இ(திலுள்ள சட்டங்களை பின்பற்றி நடப்ப)தை நாம் கடமையாக்கினோம். இன்னும், நீங்கள் நல்லறிவு பெறுவதற்காக தெளிவான பல அத்தாட்சிகளை இதில் நாம் இறக்கினோம்."},{"id":2,"translation":"வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் (தனக்கு) குழந்தையை (-சந்ததியை) ஏற்படுத்தவில்லை. இன்னும், ஆட்சியில் அவனுக்கு இணை ஒருவரும் இல்லை. இன்னும், எல்லாவற்றையும் அவனே படைத்தான். அதுமட்டுமல்ல, அவற்றை (எப்படி படைக்க வேண்டுமோ அப்படி) சீராக நிர்ணயம் செய்(து, அவற்றை படைத்)தான்."},{"id":3,"translation":"அ(ந்த இணைவைப்ப)வர்கள் அவனை அன்றி (பல) கடவுள்களை (வழிபாடுகளுக்கு) ஏற்படுத்திக் கொண்டனர். அந்த கடவுள்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களோ (மனிதர்களால்) செய்யப்படுகிறார்கள். இன்னும், அவர்கள் தங்களுக்குத் தாமே தீமை செய்வதற்கும் நன்மை செய்வதற்கும் சக்தி பெற மாட்டார்கள். இன்னும், (பிறரின்) இறப்பிற்கும் வாழ்விற்கும் மீண்டும் உயிர்த்தெழச் செய்வதற்கும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்."},{"id":4,"translation":"நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள்: “இ(ந்த வேதமான)து இட்டுக்கட்டப்பட்டதே தவிர வேறு இல்லை. இன்னும், இவர் (-இந்த தூதர்) இதை இட்டுக்கட்டினார். இவருக்கு மற்ற மக்கள் இதற்கு உதவினர்.” ஆக, திட்டமாக இவர்கள் பெரும் அநியாயத்தையும் பொய்யையும் கூறினார்கள்."},{"id":5,"translation":"இன்னும், கூறினார்கள்: (இந்த குர்ஆன்) முன்னோரின் கட்டுக் கதைகளாகும். அவர் இவற்றை தானாக எழுதிக்கொண்டார். ஆக, இவை காலையிலும் மாலையிலும் அவர் மீது படித்துக்காட்டப்படுகிறது."},{"id":6,"translation":"(நபியே!) கூறுவீராக! வானங்களிலும் பூமியிலும் (உள்ள சர்வ) ரகசியத்தை(யும்) எவன் நன்கறிவானோ அவன்தான் இதை (உம் மீது) இறக்கினான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":7,"translation":"அவர்கள் கூறுகிறார்கள்: “இந்த தூதருக்கு என்ன ஏற்பட்டது!? இவர் உணவு சாப்பிடுகிறார்; இன்னும், கடைத் தெருக்களில் உலாவுகிறார். இவர் மீது ஒரு வானவர் இறக்கப்பட்டு அவர் இவருடன் (மக்களை) எச்சரிப்பவராக இருக்க வேண்டாமா?”"},{"id":8,"translation":"“அல்லது, இவருக்கு ஒரு பொக்கிஷம் இறக்கப்பட வேண்டாமா! அல்லது, இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் புசிக்க வேண்டாமா!” இன்னும் அந்த அநியாயக்காரர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் குடல்கள் உள்ள ஒரு (உணவு சாப்பிடுகிற சாதாரண) மனிதரைத் தவிர (புனிதமான வானவர்களை) நீங்கள் பின்பற்றவில்லை.”"},{"id":9,"translation":"(நபியே!) பார்ப்பீராக! அவர்கள் எப்படி உமக்கு (தவறான) தன்மைகளை எடுத்துக் கூறுகிறார்கள். ஆக, அவர்கள் வழிகெட்டனர். (நேர்வழி பெற) அவர்கள் ஒரு (சரியான) பாதையில் செல்வதற்கு சக்தி பெறமாட்டார்கள்."},{"id":10,"translation":"அவன் (-அல்லாஹ்) மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். அவன் நாடினால் உமக்கு இவற்றைவிட சிறந்ததை - அவற்றை சுற்றி நதிகள் ஓடும் சொர்க்கங்களை- ஏற்படுத்துவான். இன்னும், உமக்கு (அங்கு) மாளிகைகளை ஏற்படுத்துவான்."},{"id":11,"translation":"மாறாக, அவர்கள் உலக முடிவை பொய்ப்பித்தனர். உலக முடிவை பொய்ப்பிப்பவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பை நாம் தயார்படுத்தியுள்ளோம்."},{"id":12,"translation":"அது அவர்களை தூரமான இடத்திலிருந்து பார்த்தால் அதனுடைய (-நெருப்பு பற்றி எரியும் போது வெளிப்படும்) சத்தத்தையும் இரைச்சலையும் அவர்கள் செவியுறுவார்கள்."},{"id":13,"translation":"இன்னும், அவர்கள் அதில் நெருக்கடியான இடத்தில் (சங்கிலிகளால் கைகள் கழுத்துகளுடன்) கட்டப்பட்டவர்களாக போடப்பட்டால் அங்கு, “(எங்கள்) கைசேதமே!” என்று (தங்களின் அழிவையும் நாசத்தையும் கூவி) அழைப்பார்கள். (உலகிற்கு திரும்ப செல்ல வேண்டுமே! அல்லது, தாங்கள் அழிந்து விடவேண்டுமே என்று சத்தமிடுவார்கள்.)"},{"id":14,"translation":"இன்று, கைசேதமே! என ஒரு முறை அழைக்காதீர்கள். கைசேதமே! என்று பல முறை அழையுங்கள்."},{"id":15,"translation":"(நபியே!) நீர் கேட்பீராக! அது (-நரகம்) சிறந்ததா? அல்லது, இறை அச்சமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஜன்னதுல் குல்து (என்ற நிரந்தர சொர்க்கம்) சிறந்ததா? அது அவர்களுக்கு கூலியாகவும் மீளுமிடமாகவும் இருக்கும்."},{"id":16,"translation":"அவர்கள் நாடுவதெல்லாம் அவர்களுக்கு அதில் கிடைக்கும், (அவர்கள் அதில்) நிரந்தரமாக இருப்பார்கள். இது, உமது இறைவன் மீது (அவனது நல்லடியார்களால்) வேண்டப்பட்ட வாக்காக இருக்கிறது."},{"id":17,"translation":"இன்னும், அவன் அவர்களையும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் வணங்கியவர்களையும் ஒன்று திரட்டும் நாளில், “நீங்கள்தான் எனது (இந்த) அடியார்களை வழிகெடுத்தீர்களா? அல்லது அவர்கள் (நேரான) பாதையை விட்டு தாமாக வழிகெட்டனரா?” என்று (இறைவன்) கேட்பான்."},{"id":18,"translation":"அவர்கள் (-வானவர்களும் ஈஸாவும் உஸைரும்) கூறுவார்கள்: “நீ மிகப் பரிசுத்தமானவன். உன்னை அன்றி பாதுகாவலர்களை (தெய்வங்களை) எடுத்துக் கொள்வது எங்களுக்கு தகுதியானதாக (சரியானதாக) இல்லை. எனினும், நீ அவர்களுக்கும் அவர்களுடைய மூதாதைகளுக்கும் (உலகத்தில்) வசதியான வாழ்வளித்தாய். இறுதியாக, அவர்கள் (உனது) அறிவுரையை மறந்தனர். இன்னும், அழிந்து போகும் மக்களாக ஆகிவிட்டனர்.”"},{"id":19,"translation":"ஆக, திட்டமாக அவர்கள் (-வானவர்கள், நபிமார்கள் மற்றும் நல்லவர்கள்) நீங்கள் கூறியதில் உங்களை பொய்ப்பித்து விட்டனர். ஆகவே, நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை உங்களை விட்டு) திருப்பி விடுவதற்கோ (உங்களுக்கு) உதவுவதற்கோ சக்தி பெறமாட்டீர்கள். இன்னும், உங்களில் யார் (அல்லாஹ்விற்கு இணைவைத்து வணங்கி தனக்குத்தானே) அநீதி இழைத்தாரோ அவருக்கு பெரிய தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்."},{"id":20,"translation":"உமக்கு முன்னர் தூதர்களில் எவரையும் நாம் அனுப்பவில்லை, நிச்சயமாக அவர்கள் உணவு உண்பவர்களாக, கடை வீதிகளில் உலாவுபவர்களாக இருந்தே தவிர. இன்னும், உங்களில் சிலரை சிலருக்கு சோதனையாக ஆக்கினோம். நீங்கள் பொறு(மையாக இரு)ப்பீர்களா? மேலும், உமது இறைவன் உற்று நோக்குபவனாக (அனைத்தையும் கூர்ந்து பார்ப்பவனாக) இருக்கிறான். (ஆகவே அவனது பார்வையை விட்டு எதுவும் தவறி விடாது.)"},{"id":21,"translation":"இன்னும், நமது சந்திப்பை ஆசை வைக்காதவர்கள் கூறினார்கள்: “எங்களிடம் வானவர்கள் இறக்கப்பட வேண்டாமா? அல்லது, நாங்கள் எங்கள் இறைவனை பார்க்க வேண்டுமே?” திட்டவட்டமாக அவர்கள் தங்களுக்குள் கர்வம் கொண்டனர். இன்னும், மிகப் பெரிய அளவில் கடுமையாக அழிச்சாட்டியம் செய்தனர்."},{"id":22,"translation":"அவர்கள் வானவர்களை பார்க்கும் நாளில் (அந்த வானவர்கள் கூறுவார்கள்:) இந்நாளில் குற்றவாளிகளுக்கு நற்செய்தி அறவே இல்லை. இன்னும், (வானவர்கள்) கூறுவார்கள்: “நற்செய்தி உங்களுக்கு முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது.”"},{"id":23,"translation":"(அல்லாஹ்வை நிராகரித்த) அவர்கள் செய்த (நற்) செயல்களை நாம் (அவற்றுக்கு கூலி கொடுப்பதற்காக) நாடுவோம். ஆக, அவற்றை பரத்தப்பட்ட புழுதியாக (நன்மைகள் இல்லாமல்) ஆக்கிவிடுவோம்."},{"id":24,"translation":"சொர்க்கவாசிகள் அந்நாளில் தங்குமிடத்தால் மிக சிறந்தவர்கள்; இன்னும், ஓய்வெடுக்கும் இடத்தால் மிக சிறப்பானவர்கள் ஆவார்கள்."},{"id":25,"translation":"இன்னும், வானம் பிளந்து, வெண் மேகம் வெளிப்படும் நாளில்; இன்னும், வானவர்கள் (மஹ்ஷர் மைதானத்திற்கு) இறக்கப்படும் நாளில்,"},{"id":26,"translation":"உண்மையான (உறுதியான) ஆட்சி அந்நாளில் ரஹ்மானிற்கே உரியது. இன்னும், அந்நாள் நிராகரிப்பாளர்களுக்கு மிக சிரமமான நாளாக இருக்கும்."},{"id":27,"translation":"இன்னும், அந்நாளில் அநியாயக்காரன் (-இணைவைத்தவன்) தனது இரு கரங்களையும் கடிப்பான், “நான் தூதருடன் (எனக்கு) ஒரு (நல்ல) வழியை ஏற்படுத்தி (அவரை பின்பற்றி) இருக்க வேண்டுமே!” என்று கூறுவான்."},{"id":28,"translation":"“எனது நாசமே! (என் வழிகேட்டுக்கு காரணமாக இருந்த) இன்னவனை நண்பனாக நான் எடுத்திருக்கக் கூடாதே!”"},{"id":29,"translation":"(குர்ஆன் எனும்) அறிவுரை என்னிடம் வந்த பின்னர் (அதை பின்பற்றவிடாமல்) அதிலிருந்து என்னை அவன் திட்டவட்டமாக வழிகெடுத்து விட்டான். இன்னும், (மறுமையில்) ஷைத்தான் மனிதனை கைவிடுபவனாக இருக்கிறான்."},{"id":30,"translation":"இன்னும், (மறுமையில் நமது) தூதர் கூறுவார்: “என் இறைவா! நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்ட ஒரு பொருளாக எடுத்துக்கொண்டனர்.”"},{"id":31,"translation":"(நபியே! நீர் எதிரிகளால் சிரமப்படுகின்ற) இவ்வாறே, ஒவ்வொரு நபிக்கும் குற்றவாளிகளில் இருந்து எதிரிகளை நாம் ஆக்கினோம். (உமக்கு) நேர்வழி காட்டுவதற்கும் (உமக்கு) உதவுவதற்கும் உமது இறைவனே போதுமானவன் ஆவான்."},{"id":32,"translation":"நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இவர் (-இந்த தூதர்) மீது இந்த குர்ஆன் ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாக இறக்கப்பட வேண்டாமா!” இவ்வாறுதான் (நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம். அது) ஏனெனில், அதன் மூலம் உமது உள்ளத்தை உறுதிப்படுத்துவதற்காக ஆகும். இன்னும், இதை சிறிது சிறிதாக (உமக்கு ஓதிகாண்பித்து அதன் விளக்கத்தையும்) கற்பித்(து கொடுத்)தோம்."},{"id":33,"translation":"(நபியே!) அவர்கள் உமக்கு எந்த ஒரு (கெட்ட) தன்மையையும் கூறமாட்டார்கள், (அதை முறிப்பதற்கு) சத்தியத்தையும் மிக அழகான விளக்கத்தையும் உமக்கு நாம் கூறியே தவிர."},{"id":34,"translation":"எவர்கள் தங்கள் முகங்கள் மீது நரகத்தின் பக்கம் ஒன்று திரட்டப்படுவார்களோ அவர்கள்தான் தங்குமிடத்தால் மிக கெட்டவர்கள்; இன்னும், பாதையால் மிக வழிதவறியவர்கள் ஆவார்கள்."},{"id":35,"translation":"திட்டவட்டமாக மூஸாவுக்கு வேதத்தை கொடுத்தோம். இன்னும், அவருடன் அவரது சகோதரர் ஹாரூனை (அவருக்கு) உதவியாளராக ஆக்கினோம்."},{"id":36,"translation":"ஆக, நாம் கூறினோம்: “நீங்கள் இருவரும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பித்த மக்களிடம் செல்லுங்கள்.” (அம்மக்கள் அவ்விருவரையும் நிராகரித்து விட்டனர்.) ஆகவே, நாம் அவர்களை முற்றிலும் தரை மட்டமாக அழித்து விட்டோம்."},{"id":37,"translation":"இன்னும், நூஹ் உடைய மக்களை, அவர்கள் (நமது) தூதர்களை பொய்ப்பித்தபோது அவர்களை (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடித்தோம். இன்னும், அவர்களை மக்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம். இன்னும், வலி தரும் தண்டனையை அநியாயக்காரர்களுக்கு நாம் தயார்படுத்தி இருக்கிறோம்."},{"id":38,"translation":"இன்னும் ஆது, ஸமூது, கிணறு வாசிகள், இன்னும், இவர்களுக்கிடையில் (வாழ்ந்த) பல தலைமுறையினரை (நாம் தரைமட்டமாக அழித்துள்ளோம்)."},{"id":39,"translation":"இன்னும், (இவர்களில்) ஒவ்வொருவருக்கும் (அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயம் அழிக்கப்பட்ட) உதாரணங்களை நாம் விவரித்தோம். (ஆனால், அவர்கள் திருந்தவில்லை. ஆகவே, அவர்கள்) எல்லோரையும் நாம் அடியோடு அழித்து விட்டோம்."},{"id":40,"translation":"திட்டவட்டமாக மிக மோசமான (கல் மழையால்) மழை பொழியப்பட்ட (லூத் நபியுடைய சமுதாயம் வாழ்ந்த) ஊரின் அருகில் அவர்கள் (சென்று) வந்திருக்கிறார்கள். ஆக, அதை அவர்கள் பார்த்திருக்கவில்லையா? மாறாக, அவர்கள் (மறுமையில்) எழுப்பப்படுவதை எதிர்ப்பார்க்காதவர்களாக (-நம்பாதவர்களாக) இருந்தனர்."},{"id":41,"translation":"அவர்கள் உம்மைப் பார்த்தால் “இவரையா அல்லாஹ் தூதராக அனுப்பினான்?” என்று கூறி உம்மை கேலி செய்யாமல் இருக்க மாட்டார்கள்."},{"id":42,"translation":"“இவர் நமது தெய்வங்களை விட்டு நம்மை நிச்சயமாக வழி கெடுத்திருப்பார், நாம் அவற்றின் மீது உறுதியாக இருந்திருக்கவில்லை என்றால்” (என்றும் அவர்கள் கூறுகின்றனர்). அவர்கள் (நமது) தண்டனையை பார்க்கும் போது, “மார்க்கத்தால் மிகவும் வழிகெட்டவர் யார்” என்று அவர்கள் அறிந்து கொள்வார்கள்."},{"id":43,"translation":"தனது கடவுளாக தனது மனஇச்சையை ஆக்கிக் கொண்டவனை நீர் பார்த்தீரா? அவனுக்கு நீர் பொறுப்பாளராக ஆகுவீரா?"},{"id":44,"translation":"நிச்சயமாக அவர்களில் அதிகமானவர்கள் செவிமடுப்பார்கள்; அல்லது, சிந்தித்துப் புரிவார்கள் என்று நீர் எண்ணுகிறீரா? அவர்கள் கால்நடைகளைப் போன்றே தவிர இல்லை. மாறாக, அவர்கள் (அவற்றைவிட) பாதையால் மிகவும் வழி கெட்டவர்கள் ஆவார்கள்."},{"id":45,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா, உமது இறைவன் எப்படி நிழலை (அதிகாலையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை) நீட்டுகிறான்? அவன் நாடியிருந்தால் அதை (-நிழலை) நிரந்தரமாக (ஒரே இடத்தில் இருக்கும்படி) ஆக்கியிருப்பான். பிறகு, அதற்கு சூரியனை நாம் ஆதாரமாக ஆக்கினோம். (சூரியன் நகர்வதற்கு ஏற்ப அந்த நிழலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறோம்.)"},{"id":46,"translation":"பிறகு, அதை (-நிழலை) நம் பக்கம் (மறைவாகவும் விரைவாகவும்) இலகுவாக(வும்) கைப்பற்றி விடுகிறோம்."},{"id":47,"translation":"இன்னும், அவன்தான் இரவை உங்களுக்கு ஓர் ஆடையாகவும் தூக்கத்தை ஓய்வாகவும் ஆக்கினான். இன்னும், பகலை விழிப்பதற்கும் (உழைத்து வாழ்வாதாரத்தை தேடுவதற்கும்) ஆக்கினான்."},{"id":48,"translation":"அவன்தான் (பல திசைகளிலிருந்து வீசும்) காற்றுகளை (மழை எனும்) தன் அருளுக்கு முன்பாக (மழையின்) நற்செய்தி கூறக்கூடியதாக அனுப்புகிறான். இன்னும், வானத்திலிருந்து மிகவும் சுத்தமான (சுத்தமாக்கக்கூடிய) மழை நீரை நாம் இறக்குகிறோம்.-"},{"id":49,"translation":"அதன்மூலம் இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்பதற்காகவும் நாம் படைத்த படைப்புகளில் பல கால்நடைகளுக்கும் அதிகமான மனிதர்களுக்கும் நாம் அதை புகட்டுவதற்காகவும் (அந்த மழையை பூமியில் பொழிய வைக்கிறோம்)."},{"id":50,"translation":"இன்னும், அதை (-அந்த மழையை) அவர்களுக்கு மத்தியில் நாம் பிரித்(து பரவலாக பல இடங்களில் பொழிய வைத்)தோம், அவர்கள் (அதன் மூலம் என் அருளை சிந்தித்து) நல்லறிவு பெறுவதற்காக. ஆனால், மனிதர்களில் அதிகமானவர்கள் நிராகரிப்பதைத் தவிர (நன்றி செலுத்த) மறுத்து விட்டனர்."},{"id":51,"translation":"இன்னும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும் (தூதர்களில் இருந்து) ஓர் எச்சரிப்பாளரை அனுப்பியிருப்போம். (அதன் மூலம் உமது சுமையை குறைத்து இருப்போம். ஆனால், அப்படி இன்றி உம்மையே உலக மக்கள் எல்லோரையும் எச்சரிக்கின்ற தூதராக ஆக்கியிருக்கிறோம்.)"},{"id":52,"translation":"ஆக, (நபியே!) நிராகரிப்பாளர்களுக்கு கீழ்ப்படியாதீர். இன்னும், இ(ந்த வேதத்தை எடுத்துரைப்ப)தன் மூலம் அவர்களிடம் பெரும் போர் செய்வீராக!"},{"id":53,"translation":"இன்னும், அவன்தான் இரு கடல்களை இணைத்தான். இது மிக்க மதுரமான இனிப்பு நீராகும். இதுவோ மிக்க உவர்ப்பான உப்பு நீராகும். இன்னும், அவ்விரண்டுக்கும் இடையில் ஒரு திரையையும் (அவ்விரண்டும் சேர்ந்து விடுவதை) முற்றிலும் தடுக்கக்கூடிய ஒரு தடுப்பையும் அவன் ஆக்கினான்."},{"id":54,"translation":"இன்னும், அவன்தான் (இந்திரியம் எனும்) நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். ஆக, அவனை இரத்த உறவுகளை உடையவனாகவும் திருமண உறவுகளை உடையவனாகவும் ஆக்கினான். இன்னும் உமது இறைவன் பேராற்றலுடையவனாக இருக்கிறான்."},{"id":55,"translation":"அவர்கள் அல்லாஹ்வை அன்றி (- அவனை வணங்காமல்) தங்களுக்கு எதையும் பலனளிக்காததை, இன்னும், தங்களுக்கு எதையும் தீங்கிழைக்காததை வணங்குகிறார்கள். இன்னும், நிராகரிப்பவன் தன் இறைவனுக்கு எதிராக (ஷைத்தானை) ஆதரிக்கக் கூடியவனாக (சிலைகளுக்கு உதவக்கூடியவனாக) இருக்கிறான்."},{"id":56,"translation":"(நபியே!) நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிப்பவராகவும் தவிர உம்மை (கண்காணிப்பாளராக) நாம் அனுப்பவில்லை."},{"id":57,"translation":"(நபியே!) கூறுவீராக! நான் இதற்காக உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. எனினும், யார் தன் இறைவனிடம் தனக்கு ஒரு பாதையை எடுத்துக்கொள்ள நாடினானோ (அவன் நல்ல வழியில் தனது செல்வத்தை செலவு செய்து இறைவனின் அருளை அடைந்து கொள்ளட்டும்)."},{"id":58,"translation":"(நபியே!) என்றுமே மரணிக்காமல் உயிரோடிருக்கின்ற (இறை)வன் மீது நம்பிக்கை வைப்பீராக! இன்னும், அவனைப் புகழ்ந்து துதிப்பீராக! தன் அடியார்களின் பாவங்களை ஆழ்ந்தறிவதற்கு அவனே போதுமானவன்!"},{"id":59,"translation":"அவன்தான் வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடையில் உள்ள (எல்லா)வற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது உயர்ந்து விட்டான். அவன் மகா கருணையுள்ள பேரருளாளன் ஆவான். ஆக, அவனை நன்கு அறிந்தவனிடம் (அவனைப் பற்றி) கேட்பீராக! (அல்லாஹ்வை அவனே அறிந்தவன். அவனை அன்றி யாரும் சரியாக, முழுமையாக அவனை அறிய முடியாது. ஆகவே, அவன் தன்னைப் பற்றி கூறுவதை நபியே! நீர் நம்பிக்கை கொள்வீராக!)"},{"id":60,"translation":"ரஹ்மானுக்கு (மகா கருணைமிக்க பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு) நீங்கள் சிரம் பணியுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் அவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் என்பவன் யார்? நீர் ஏவக் கூடியவனுக்கு நாங்கள் சிரம் பணிய வேண்டுமா?” என்று. அ(ர்ரஹ்மானாகிய அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் சிரம் பணியுங்கள் என்று சொல்வ)து, அவர்களுக்கு வெறுப்பை அதிகப்படுத்துகிறது."},{"id":61,"translation":"வானங்களில் பெரும் கோட்டைகளை அமைத்தவன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். இன்னும், அவன்தான் அதில் சூரியனையும் ஒளிவீசும் சந்திரனையும் அமைத்தான்."},{"id":62,"translation":"இன்னும், அவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கொன்று) பகரமாக (-ஒன்றுக்கு பின் ஒன்று மாறிவரக்கூடியதாக) அமைத்தான். ஏனெனில், நல்லறிவு பெற நாடுபவர் (இதன் மூலம்) நல்லறிவு பெறுவார்; அல்லது, நன்றி செலுத்த நாடுபவர் நன்றி செலுத்துவார் என்பதற்காக."},{"id":63,"translation":"ரஹ்மானுடைய அடியார்கள் பூமியில் மென்மையாக (அடக்கமாக, பணிவாக, பெருமையின்றி, அக்கிரமம் செய்யாமல்) நடப்பார்கள். இன்னும், அவர்களிடம் அறிவீனர்கள் பேசினால் ஸலாம் கூறி (விலகி சென்று) விடுவார்கள்."},{"id":64,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் இறைவனுக்காக (தொழுகையில்) சிரம் பணிந்தவர்களாகவும் நின்றவர்களாகவும் இரவு கழிப்பார்கள்."},{"id":65,"translation":"இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களை விட்டு ஜஹன்னம் - நரகத்தின் தண்டனையை தூரமாக்கி விடு. நிச்சயமாக அதனுடைய தண்டனை (நிராகரிப்பாளர்களை விட்டும்) நீங்காத ஒன்றாக இருக்கிறது.”"},{"id":66,"translation":"“நிச்சயமாக அது நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் மிக கெட்டது.”"},{"id":67,"translation":"இன்னும், அவர்கள் செலவு செய்தால் வரம்பு மீறமாட்டார்கள், கருமித்தனமும் காட்ட மாட்டார்கள். அவர்கள் செலவழிப்பது அதற்கு மத்தியில் நடுநிலையாக இருக்கும்."},{"id":68,"translation":"இன்னும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைக்க மாட்டார்கள் (-வணங்க மாட்டார்கள்), (கொல்லக்கூடாது என்று) அல்லாஹ் தடுத்த உயிரை கொல்ல மாட்டார்கள் (அதற்குரிய) உரிமை இருந்தாலே தவிர. இன்னும், விபச்சாரம் செய்யமாட்டார்கள். யார் இவற்றை செய்வாரோ அவர் (மறுமையில்) தண்டனையை சந்திப்பார்."},{"id":69,"translation":"அவருக்கு அந்த தண்டனை மறுமை நாளில் பன்மடங்காக ஆக்கப்படும். இன்னும், அவர் அதில் இழிவுபடுத்தப்பட்டவராக நிரந்தரமாக தங்கி விடுவார்."},{"id":70,"translation":"எனினும், எவர்கள் (பாவங்களை விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரி, நம்பிக்கைக் கொண்டு, நன்மையான செயலை செய்வார்களோ அவர்களுடைய தீய செயல்களை நல்ல செயல்களாக அல்லாஹ் மாற்றி விடுவான். (இஸ்லாமில் நுழைவதற்கு முன்பு அவர்கள் செய்த தீமையான காரியங்களுக்குப் பதிலாக நன்மைகளை அவர்கள் செய்யும்படி அவன் அவர்களை மாற்றி விடுகிறான்.) அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":71,"translation":"இன்னும், எவர் (பாவங்களை விட்டு) திருந்தி (அல்லாஹ்விடம்) மன்னிப்புக் கோரி, இன்னும், நன்மை செய்வாரோ நிச்சயமாக அவர், அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பி விடுகிறார்."},{"id":72,"translation":"இன்னும், அவர்கள் (இணைவைத்தல், ஆடல், பாடல், இசை, உண்மைக்கு மாற்றமாக நடத்தல் இன்னும் இதுபோன்ற) பொய்யான செயல்க(ள் நடக்கும் இடங்க)ளில் கலந்துகொள்ள மாட்டார்கள். இன்னும், வீணான செயலுக்கு அருகில் அவர்கள் கடந்து சென்றால் (அதில் ஈடுபடாமல்) கண்ணியவான்களாக கடந்து சென்று விடுவார்கள்."},{"id":73,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களைக் கொண்டு உபதேசம் செய்யப்பட்டார்களேயானால் அவற்றின் மீது செவிடர்களாக, குருடர்களாக விழமாட்டார்கள். (அவற்றைக் கேட்டு உடனே பயன் பெறுவார்கள்.)"},{"id":74,"translation":"இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களுக்கு எங்கள் மனைவிகள் மூலமும், எங்கள் சந்ததிகள் மூலமும் (எங்கள்) கண்களின் குளிர்ச்சியை தருவாயாக! எங்களை இறையச்சமுள்ளவர்களுக்கு இமாம்களாக (-வழிகாட்டிகளாக) ஆக்குவாயாக!”"},{"id":75,"translation":"அவர்கள் பொறுமையாக இருந்ததால் அறை(கள் நிறைந்த உயரமான மாளிகை)களை கூலியாக கொடுக்கப்படுவார்கள். இன்னும், அதில் அவர்களுக்கு முகமன் கூறப்பட்டும் ஸலாம் கூறப்பட்டும் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்."},{"id":76,"translation":"அதில் அவர்கள் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நிரந்தர தங்குமிடத்தாலும் தற்காலிக தங்குமிடத்தாலும் அது மிக அழகானது."},{"id":77,"translation":"(நபியே!) கூறுவீராக! உங்களது (துன்பத்தில் அவனிடம் மட்டும் பிரார்த்திக்கப்படுகின்ற பிரார்த்தனையாக உங்களில் சிலருடைய) பிரார்த்தனை இல்லாதிருந்தால் என் இறைவன் உங்களை ஒரு பொருட்டாகவே கருதி (உங்களுக்கு உதவி) இருக்க மாட்டான். ஆக, திட்டமாக நீங்கள் (தூதரையும் வேதத்தையும்) பொய்ப்பித்தீர்கள். இ(ந்த பொய்ப்பித்தலின் தண்டையான)து உங்களுக்கு கண்டிப்பாக தொடர்ந்து இருக்கும். (இதன் தண்டனையை இம்மையில்; அல்லது, மறுமையில்; அல்லது, ஈருலகிலும் கண்டிப்பாக அனுபவிப்பீர்கள்.)"}]},{"id":26,"verses":[{"id":1,"translation":"தனது அடியார் மீது - அவர் அகிலத்தார்களை எச்சரிப்பவராக இருப்பதற்காக - பிரித்தறிவிக்கும் வேதத்தை இறக்கிய (இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்."},{"id":2,"translation":"இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்."},{"id":3,"translation":"(நபியே!) அவர்கள் நம்பிக்கை கொள்பவர்களாக மாறாததால் உம்மை நீர் அழித்துக் கொள்வீரோ!"},{"id":4,"translation":"நாம் நாடினால் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு அத்தாட்சியை இறக்குவோம். ஆக, அவர்களது கழுத்துகள் அதற்கு பணிந்தவையாக ஆகிவிடும்."},{"id":5,"translation":"ரஹ்மானிடமிருந்து புதிதாக இறக்கப்பட்ட அறிவுரை எதுவும் அவர்களிடம் வந்தால் அதை அவர்கள் புறக்கணிக்காமல் இருப்பதில்லை."},{"id":6,"translation":"ஆக, திட்டமாக இவர்கள் (நமது தூதரையும் அவர் கொண்டு வந்ததையும்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தனரோ அதன் (நிகழ்வதுடைய) செய்திகள் அவர்களிடம் விரைவில் வரும்."},{"id":7,"translation":"பூமியை அவர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? “அதில் நாம் எத்தனை அழகிய தாவர ஜோடிகளை முளைக்க வைத்திருக்கிறோம்” என்று."},{"id":8,"translation":"நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":9,"translation":"இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":10,"translation":"அந்நேரத்தை நினைவு கூருங்கள்! உமது இறைவன் மூஸாவை அழைத்து, நீர் அநியாயக்கார மக்களிடம் வருவீராக! என்று கூறினான்."},{"id":11,"translation":"ஃபிர்அவ்னின் மக்களிடம் (வருவீராக!). அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச வேண்டாமா!"},{"id":12,"translation":"(மூஸா) கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”"},{"id":13,"translation":"“இன்னும், என் நெஞ்சம் நெருக்கடிக்குள்ளாகிவிடும்; என் நாவு பேசாமல் ஆகிவிடும். ஆகவே, நீ ஹாரூனுக்கு (அவர் எனக்கு உதவும்படி) வஹ்யி அனுப்புவாயாக!”"},{"id":14,"translation":"இன்னும், அவர்களுக்கு என் மீது ஒரு குற்றம் இருக்கிறது. ஆகவே. அவர்கள் என்னை கொன்று விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன்."},{"id":15,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “அவ்வாறல்ல! ஆக, நீங்கள் இருவரும் எனது அத்தாட்சிகளை (அவர்களிடம்) கொண்டு செல்லுங்கள். நிச்சயமாக நாம் உங்களுடன் (அனைத்தையும்) செவியேற்பவர்களாக (இன்னும் பார்ப்பவர்களாக) இருக்கிறோம்."},{"id":16,"translation":"ஆக, நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் வாருங்கள்! இன்னும், “நிச்சயமாக நாங்கள் அகிலங்களின் இறைவனுடைய தூதராக இருக்கிறோம்” என்று (அவனிடம்) கூறுங்கள்!"},{"id":17,"translation":"நிச்சயமாக, எங்களுடன் இஸ்ரவேலர்களை அனுப்பிவிடு!"},{"id":18,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: “நாம் உம்மை (நீ) குழந்தையாக (இருந்தபோது) எங்களிடம் வளர்க்கவில்லையா? இன்னும், எங்களுக்கு மத்தியில் உமது வாழ்க்கையில் (பல) ஆண்டுகள் தங்கியிருந்தாய் (அல்லவா)!”"},{"id":19,"translation":"“இன்னும், (மூஸாவே!) நீ உனது (ஒரு கெட்ட) செயலை செய்து விட்டாய். நீ நன்றி கெட்டவர்களில் ஒருவராக இருக்கிறாயே.”"},{"id":20,"translation":"(மூஸா) கூறினார்: (ஆம்,) அ(ந்த கெட்ட காரியத்)தை நான் செய்தேன், அப்போது, நானோ (அல்லாஹ்வின் மார்க்கத்தை) அறியாதவர்களில் (ஒருவனாக) இருந்தேன்."},{"id":21,"translation":"ஆக, உங்களை நான் பயந்தபோது உங்களை விட்டு ஓடிவிட்டேன். ஆக, என் இறைவன் எனக்கு (நபித்துவ) ஞானத்தை வழங்கினான். இன்னும், என்னை இறைத்தூதர்களில் ஒருவராக ஆக்கினான்."},{"id":22,"translation":"இன்னும், அ(ப்படி என்னை நீ வளர்த்த)து நீ என் மீது சொல்லிக் காட்டுகிற ஓர் உபகாரம்தான். அதாவது, நீ (என் சமுதாயமான) இஸ்ரவேலர்களை அடிமையாக்கி வைத்திருக்கிறாய். (ஆனால், என்னை அடிமையாக்கவில்லை. அதற்காக நான் உன்னை சத்தியத்தின் பக்கம் அழைப்பதை விட முடியாது.)"},{"id":23,"translation":"ஃபிர்அவ்ன் கூறினான்: “அகிலங்களின் இறைவன் யார்?”"},{"id":24,"translation":"(மூஸா) கூறினார்: வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன்தான் அகிலங்களின் இறைவன் ஆவான். நீங்கள் (கண்ணால் பார்ப்பதை) உறுதியாக நம்பக்கூடியவர்களாக இருந்தால் (அதுபோன்றே படைப்பாளன் அல்லாஹ்தான். அவனே வணங்கத் தகுதியானவன் என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்.)"},{"id":25,"translation":"அவன் தன்னை சுற்றி உள்ளவர்களிடம் கூறினான்: (இவர் கற்பனையாக கூறுவதை) நீங்கள் செவியுறுகிறீர்களா?"},{"id":26,"translation":"(மூஸா) கூறினார்: அவன்தான் உங்கள் இறைவன், இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவன் ஆவான்."},{"id":27,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: “நிச்சயமாக உங்களிடம் அனுப்பப்பட்ட உங்கள் இந்த தூதர் ஒரு பைத்தியக்காரர் ஆவார்.”"},{"id":28,"translation":"(மூஸா) கூறினார்: (நீங்கள் யாரை வணங்க வேண்டும் என்று நான் உங்களை அழைக்கிறேனோ அவன்தான் சூரியன் உதிக்கும்) கிழக்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும், (சூரியன் மறைகிற) மேற்கு திசை(களில் உள்ள எல்லா நாடுகளு)க்கும் இன்னும் (நாடுகளில்) அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் ஆவான், நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருந்தால் (இதை புரிந்து கொள்வீர்கள்)."},{"id":29,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: “என்னை அன்றி வேறு ஒரு கடவுளை நீர் எடுத்துக் கொண்டால் (எனது சிறையில்) சிறைப்படுத்தப்பட்டவர்களில் உம்மையும் ஆக்கி விடுவேன்.”"},{"id":30,"translation":"(மூஸா) கூறினார்: (அத்தாட்சிகளில்) தெளிவான ஒன்றை உம்மிடம் நான் கொண்டு வந்தாலுமா? (அல்லாஹ்வை நம்பிக்கைகொள்ள மறுப்பாய்!)"},{"id":31,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் (என்னிடம்) அதைக் கொண்டுவாரீர்."},{"id":32,"translation":"ஆக, அவர் தனது கைத்தடியை எறிந்தார். உடனே அது தெளிவான (உண்மையான) பெரிய மலைப் பாம்பாக ஆகிவிட்டது."},{"id":33,"translation":"இன்னும், அவர் தனது கையை (சட்டையின் முன் பக்க துவாரத்திலிருந்து) வெளியே எடுக்க, உடனே அது பார்ப்பவர்களுக்கு (மின்னும்) வெண்மையானதாக ஆகிவிட்டது."},{"id":34,"translation":"அவன், தன்னை சுற்றியுள்ள பிரமுகர்களிடம் கூறினான்: “நிச்சயமாக இவர் (சூனியத்தை) நன்கறிந்த (திறமையான) ஒரு சூனியக்காரர்தான்.”"},{"id":35,"translation":"“இவர் உங்க(ள் அடிமைகளாகிய இஸ்ரவேலர்க)ளை தனது மந்திர சக்தியால் உங்கள் பூமியிலிருந்து வெளியேற்ற நாடுகிறார். ஆகவே, (இவர் விஷயத்தில்) நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?”"},{"id":36,"translation":"(அந்த பிரமுகர்கள்) கூறினார்கள்: “அவருக்கும் அவரது சகோதரருக்கும் நீ அவகாசம் அளி! இன்னும், (எகிப்தின் எல்லா) நகரங்களில் (இருக்கிற சூனியக்காரர்களை) ஒன்றுதிரட்டி அழைத்து வருபவர்களை அனுப்பிவை!”"},{"id":37,"translation":"“(சூனியத்தை) நன்கறிந்த பெரிய சூனியக்காரர்கள் எல்லோரையும் அவர்கள் உன்னிடம் அழைத்து வருவார்கள்.”"},{"id":38,"translation":"ஆக, அறியப்பட்ட ஒரு நாளுடைய குறிப்பிட்ட தவணையில் சூனியக்காரர்கள் ஒன்று சேர்க்கப்பட்டனர்."},{"id":39,"translation":"இன்னும், மக்களுக்கு அறிவிக்கப்பட்டது: “(மூஸாவும் சூனியக்காரர்களும் போட்டியிடும்போது யார் வெற்றியாளர் என்று பார்ப்பதற்கு) நீங்கள் ஒன்று சேருவீர்களா?”"},{"id":40,"translation":"“சூனியக்காரர்களை நாம் பின்பற்றலாம், அவர்கள் வெற்றி பெற்றவர்களாக ஆகிவிட்டால்”"},{"id":41,"translation":"ஆக, சூனியக்காரர்கள் வந்தபோது, அவர்கள் ஃபிர்அவ்னிடம் கூறினார்கள்: “நாங்கள் வெற்றியாளர்களாக ஆகிவிட்டால் நிச்சயமாக எங்களுக்கு கூலி உண்டா?”"},{"id":42,"translation":"அவன் கூறினான்: “ஆம். (கூலி உண்டு)! இன்னும், நிச்சயமாக (உங்களுக்கு பதவிகள் கொடுக்கப்பட்டு) நீங்கள் அப்போது (எனக்கு) மிக நெருக்கமானவர்களில் ஆகிவிடுவீர்கள்.”"},{"id":43,"translation":"அவர்களுக்கு மூஸா கூறினார்: “நீங்கள் எதை எறியப் போகிறீர்களோ அதை (நீங்கள் முதலில்) எறியுங்கள்.”"},{"id":44,"translation":"ஆக, அவர்கள் தங்கள் கயிறுகளையும் தங்கள் தடிகளையும் எறிந்தனர். இன்னும், ஃபிர்அவ்னுடைய கௌரவத்தின் மீது சத்தியமாக! “நிச்சயமாக நாங்கள்தான் வெற்றியாளர்கள்” என்று அவர்கள் கூறினார்கள்."},{"id":45,"translation":"ஆக, மூஸா தனது தடியை எறிந்தார். ஆக, அது உடனே அவர்கள் பொய்யாக வித்தை காட்டிய அனைத்தையும் விழுங்கியது."},{"id":46,"translation":"உடனே, சூனியக்காரர்கள் (நம்பிக்கை கொண்டு) சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்தனர்."},{"id":47,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அகிலங்களின் இறைவனை நம்பிக்கை கொண்டோம்.”"},{"id":48,"translation":"“மூஸா இன்னும் ஹாரூனுடைய இறைவனை (நம்பிக்கை கொண்டோம்).”"},{"id":49,"translation":"(ஃபிர்அவ்ன்) கூறினான்: “அவரை நீங்கள் நம்பிக்கை கொண்டீர்களா - நான் உங்களுக்கு (அது பற்றி) அனுமதி தருவதற்கு முன்? நிச்சயமாக அவர் உங்களுக்கு சூனியத்தை கற்பித்த உங்கள் பெரிய (தலை)வர் ஆவார். ஆகவே, நீங்கள் (நான் உங்களை தண்டிக்கும்போது உங்கள் தவறை) விரைவில் அறிவீர்கள். திட்டமாக நான் உங்கள் கைகளை, உங்கள் கால்களை மாறுகை மாறுகால் வெட்டுவேன். இன்னும், உங்கள் அனைவரையும் கழுமரத்தில் ஏற்றுவேன்.”"},{"id":50,"translation":"அவர்கள் கூறினார்கள்: “பிரச்சனை இல்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்.”"},{"id":51,"translation":"“நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொள்பவர்களில் முதலாமவர்களாக இருப்பதால் எங்கள் இறைவன் எங்கள் குற்றங்களை எங்களுக்கு மன்னிப்பதை நாங்கள் மிகவும் ஆசைப்படுகிறோம்.”"},{"id":52,"translation":"இன்னும், நாம் மூஸாவிற்கு வஹ்யி அறிவித்தோம், அதாவது “எனது அடியார்களை இரவில் அழைத்துச் செல்லுங்கள். நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”"},{"id":53,"translation":"ஆக, (இஸ்ரவேலர்களை தடுப்பதற்காக) ஃபிர்அவ்ன் நகரங்களில் (தனது படைகளை) ஒன்று திரட்டி கொண்டு வருபவர்களை அனுப்பி வைத்தான்."},{"id":54,"translation":"“நிச்சயமாக இவர்கள் குறைவான கூட்டம்தான்.”"},{"id":55,"translation":"“இன்னும், நிச்சயமாக இவர்கள் நமக்கு ஆத்திரமூட்டுகிறார்கள்.”"},{"id":56,"translation":"“இன்னும், நிச்சயமாக நாம் அனைவரும் தயாரிப்புடன் உஷார் நிலையில் இருக்கிறோம்.” (இவ்வாறு, ஃபிர்அவ்ன் கூறி முடித்தான்.)"},{"id":57,"translation":"ஆக, நாம் அவர்களை தோட்டங்கள் இன்னும் ஊற்றுகளில் இருந்து வெளியேற்றினோம்."},{"id":58,"translation":"இன்னும், பொக்கிஷங்களிலிருந்தும் கண்ணியமான இடத்திலிருந்தும் (வெளியேற்றினோம்)."},{"id":59,"translation":"இப்படித்தான் (அவர்களை வெளியேற்றினோம்). இன்னும், அவற்றை இஸ்ரவேலர்களுக்கு சொந்தமாக்கினோம்."},{"id":60,"translation":"ஆக, (ஃபிர்அவ்னின் கூட்டத்தார்) காலைப் பொழுதில் அவர்களைப் பின்தொடர்ந்தனர்."},{"id":61,"translation":"ஆக, இரண்டு படைகளும் ஒருவரை ஒருவர் பார்த்தபோது மூஸாவின் தோழர்கள், “நிச்சயமாக நாங்கள் பிடிக்கப்பட்டோம்” என்று கூறினார்கள்."},{"id":62,"translation":"(மூஸா) கூறினார்: அவ்வாறல்ல. நிச்சயமாக என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு (விரைவில்) வழிகாட்டுவான்."},{"id":63,"translation":"ஆக, “உமது தடியினால் கடலை அடிப்பீராக!” என்று மூஸாவிற்கு நாம் வஹ்யி அறிவித்தோம். ஆக, அது பிளந்தது. ஆக, ஒவ்வொரு பிளவும் பெரிய மலைப் போன்று இருந்தது."},{"id":64,"translation":"இன்னும், அங்கு மற்றவர்களை (-ஃபிர்அவ்னின் கூட்டத்தார்களை கடலுக்கு) நாம் நெருக்கமாக்கினோம்."},{"id":65,"translation":"இன்னும், மூஸாவையும் அவருடன் இருந்தவர்கள் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்."},{"id":66,"translation":"பிறகு, மற்றவர்களை மூழ்கடித்தோம்."},{"id":67,"translation":"நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":68,"translation":"இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":69,"translation":"அவர்களுக்கு இப்ராஹீமுடைய செய்தியை ஓதி காட்டுவீராக!"},{"id":70,"translation":"அவர் தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, நீங்கள் யாரை வணங்குகிறீர்கள்? என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!)"},{"id":71,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் சிலைகளை வணங்குகிறோம். அவற்றை வழிபட்டவர்களாகவே நாங்கள் தொடர்ந்து இருப்போம்.”"},{"id":72,"translation":"அவர் கூறினார்: “நீங்கள் (அவற்றை) அழைக்கும்போது, அவை உங்களுக்கு செவிமடுக்கின்றனவா?”"},{"id":73,"translation":"“அல்லது, (நீங்கள் அவற்றை வணங்கினால் உங்களுக்கு) அவை நன்மை தருமா? அல்லது (நீங்கள் அவற்றை வணங்கவில்லை என்றால் உங்களுக்கு) அவை தீங்கு விளைவிக்குமா?”"},{"id":74,"translation":"அவர்கள் கூறினார்கள்: “அவ்வாறல்ல! எங்கள் மூதாதைகளை அவ்வாறு செய்பவர்களாக கண்டோம். (ஆகவே, நாங்களும் அவற்றை வணங்குகிறோம்.)”"},{"id":75,"translation":"அவர் கூறினார்: “நீங்கள் வணங்கிக் கொண்டு இருக்கின்ற சிலைகள் பற்றி (எனக்கு) சொல்லுங்கள்.”"},{"id":76,"translation":"“நீங்களும் உங்கள் முந்திய மூதாதைகளும் (வணங்குகின்ற சிலைகள் பற்றி சொல்லுங்கள்.)”"},{"id":77,"translation":"“ஏனெனில், நிச்சயமாக அவை எனக்கு எதிரிகள் ஆவார்கள். ஆனால், அகிலங்களின் இறைவனைத் தவிர. (அவன்தான் எனது நேசன், நான் வணங்கும் கடவுள்)”"},{"id":78,"translation":"“அவன்தான் என்னைப் படைத்தான். ஆகவே, அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”"},{"id":79,"translation":"“இன்னும், அவன்தான் எனக்கு உணவளிக்கிறான். இன்னும், எனக்கு நீர் புகட்டுகிறான்.”"},{"id":80,"translation":"“இன்னும், நான் நோயுற்றால் அவன்தான் எனக்கு சுகமளிக்கிறான்.”"},{"id":81,"translation":"“இன்னும், அவன்தான் எனக்கு மரணத்தைத் தருவான். பிறகு, அவன் என்னை உயிர்ப்பிப்பான்.”"},{"id":82,"translation":"“இன்னும், விசாரணை நாளில் என் பாவங்களை எனக்கு அவன் மன்னிக்க வேண்டும் என்று நான் மிகவும் ஆசைப்படுகிறேன்.”"},{"id":83,"translation":"“என் இறைவா! எனக்கு தூதுத்துவ ஞானத்தை வழங்குவாயாக! இன்னும், என்னை நல்லவர்களுடன் சேர்ப்பாயாக!”"},{"id":84,"translation":"“இன்னும், பின்வருவோர்களில் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக!”"},{"id":85,"translation":"“இன்னும், என்னை நயீம் சொர்க்கத்தின் வாரிசுகளில் ஆக்கிவிடுவாயாக!”"},{"id":86,"translation":"“இன்னும், என் தந்தைக்கு மன்னிப்பளிப்பாயாக! நிச்சயமாக அவர் வழி தவறியவர்களில் இருக்கிறார்.”"},{"id":87,"translation":"“இன்னும், மக்கள் எழுப்பப்படும் நாளில் என்னை இழிவுபடுத்தி விடாதே!”"},{"id":88,"translation":"“செல்வமும் ஆண் பிள்ளைகளும் பலனளிக்காத (அந்த மறுமை) நாளில்.”"},{"id":89,"translation":"“எனினும், யார் (சந்தேகமில்லாத) பாதுகாப்பான (நம்பிக்கை உள்ள) உள்ளத்தோடு அல்லாஹ்விடம் வந்தாரோ (அவர் தனது செல்வம் இன்னும் பிள்ளைகள் மூலம் பயன் பெறுவார்).”"},{"id":90,"translation":"இன்னும், சொர்க்கம் இறையச்சம் உள்ளவர்களுக்கு சமீபமாக்கப்படும்."},{"id":91,"translation":"இன்னும், வழிகேடர்களுக்கு நரகம் வெளிப்படுத்தப்படும்."},{"id":92,"translation":"இன்னும், அவர்களிடம் கேட்கப்படும்: “(அல்லாஹ்வை அன்றி) நீங்கள் வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே?”"},{"id":93,"translation":"அல்லாஹ்வை அன்றி, (நீங்கள் வணங்கிய) அவை உங்களுக்கு உதவுமா? அல்லது, தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளுமா?"},{"id":94,"translation":"ஆக, அவையும் (-அந்த சிலைகளும் அவற்றை வணங்கிய) வழிகேடர்களும் ஒருவர் மேல் ஒருவர் அ(ந்த நரகத்)தில் எறியப்படுவார்கள்."},{"id":95,"translation":"இன்னும், இப்லீஸின் இராணுவங்கள் அனைவரும் (அதில் தூக்கி எறியப்படுவார்கள்)."},{"id":96,"translation":"அவர்கள் அதில் தர்க்கித்தவர்களாக கூறுவார்கள்:"},{"id":97,"translation":"“அல்லாஹ்வின் மீது ஆணையாக! நிச்சயமாக நாம் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தோம்,"},{"id":98,"translation":"உங்களை அகிலங்களின் இறைவனுக்கு சமமாக ஆக்கி (வணங்கி)யபோது."},{"id":99,"translation":"எங்களை வழி கெடுக்கவில்லை குற்றவாளிகளைத் தவிர."},{"id":100,"translation":"ஆக, பரிந்துரைப்பவர்களில் யாரும் எங்களுக்கு இல்லை."},{"id":101,"translation":"இன்னும், உற்ற நண்பர்களில் யாரும் (எங்களுக்கு) இல்லை."},{"id":102,"translation":"ஆக, (உலகத்திற்கு) ஒருமுறை திரும்பச்செல்வது எங்களுக்கு முடியுமாயின் நாங்கள் (அங்கு சென்று) நம்பிக்கையாளர்களில் ஆகிவிடுவோம்.”"},{"id":103,"translation":"நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":104,"translation":"இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":105,"translation":"நூஹுடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்."},{"id":106,"translation":"அவர்களது சகோதரராகிய நூஹ் அவர்களுக்கு கூறியபோது, “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்ச மாட்டீர்களா?”"},{"id":107,"translation":"“நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.”"},{"id":108,"translation":"“ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!”"},{"id":109,"translation":"“இன்னும், இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர (மக்களிடம்) என் கூலி இல்லை.”"},{"id":110,"translation":"“ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!”"},{"id":111,"translation":"அவர்கள் கூறினார்கள்: “சாதாரணமானவர்கள் (மட்டும்) உம்மை பின்பற்றி இருக்க, நாம் உம்மை நம்பிக்கை கொள்வோமா?”"},{"id":112,"translation":"அவர் கூறினார்: “அவர்கள் (-நம்பிக்கையாளர்கள்) செய்துகொண்டு இருப்பது பற்றி எனக்கு ஞானம் இல்லை."},{"id":113,"translation":"அவர்களது விசாரணை என் இறைவன் மீதே தவிர (என் மீதோ உங்கள் மீதோ) இல்லை. நீங்கள் (இதை) உணர வேண்டுமே!"},{"id":114,"translation":"நான் நம்பிக்கையாளர்களை (என் சபையை விட்டு) விரட்டக் கூடியவன் இல்லை."},{"id":115,"translation":"நான் தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர இல்லை.”"},{"id":116,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நூஹே! நீர் (எங்களை அழைப்பதைவிட்டு) விலகவில்லை என்றால் நிச்சயமாக நீர் ஏசப்படுபவர்களில் (அல்லது, கொல்லப்படுபவர்களில்) ஆகிவிடுவீர்.”"},{"id":117,"translation":"அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக என் மக்கள் என்னை பொய்ப்பித்து விட்டனர்."},{"id":118,"translation":"ஆகவே, எனக்கும் அவர்களுக்கும் இடையில் நீ தீர்ப்பளி! இன்னும், என்னையும் என்னுடன் இருக்கின்ற நம்பிக்கையாளர்களையும் பாதுகாத்துக்கொள்!”"},{"id":119,"translation":"ஆக, அவரையும் அவருடன் உள்ளவர்களையும் (உயிரிணங்களால்) நிரப்பப்பட்ட கப்பலில் (ஏற்றி) பாதுகாத்தோம்."},{"id":120,"translation":"பிறகு, மீதம் இருந்தவர்களை பின்னர் நாம் அழித்துவிட்டோம்."},{"id":121,"translation":"நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":122,"translation":"இன்னும், நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், பெரும் கருணையாளன் ஆவான்."},{"id":123,"translation":"ஆது சமுதாய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்."},{"id":124,"translation":"அவர்களது சகோதரரான ஹூது அவர்களுக்கு (பின் வருமாறு) கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்துகொள்ள மாட்டீர்களா?"},{"id":125,"translation":"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குறிய தூதர் ஆவேன்."},{"id":126,"translation":"ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!"},{"id":127,"translation":"இன்னும், இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை."},{"id":128,"translation":"உயரமான ஒவ்வோர் இடத்திலும் பிரமாண்டமான கட்டடத்தை வீணாக கட்டுகிறீர்களா?"},{"id":129,"translation":"இன்னும், பெரிய கோட்டைகளை(யும் நீர் துறைகளையும்) நீங்கள் ஏற்படுத்துகிறீர்கள், நீங்கள் நிரந்தரமாக (இந்த உலகத்தில்) இருக்கப்போவதைப் போன்று."},{"id":130,"translation":"இன்னும், நீங்கள் யாரையும் தாக்கினால் கருணையின்றி அநியாயக்காரர்களாக தாக்குகிறீர்கள்."},{"id":131,"translation":"ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!"},{"id":132,"translation":"இன்னும், நீங்கள் அறிந்தவற்றைக் கொண்டு உங்களுக்கு உதவிய (உங்கள் இறை)வனை அஞ்சுங்கள்!"},{"id":133,"translation":"கால்நடைகள்; இன்னும், ஆண் பிள்ளைகள் மூலம் உங்களுக்கு அவன் உதவினான்."},{"id":134,"translation":"இன்னும், தோட்டங்களைக் கொண்டும் ஊற்றுகளைக் கொண்டும் (உதவினான்)."},{"id":135,"translation":"நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய (மறுமை) நாளின் தண்டனையைப் பயப்படுகிறேன்."},{"id":136,"translation":"அவர்கள் கூறினார்கள்: நீர் உபதேசிப்பதும்; அல்லது, உபதேசிக்காமல் இருப்பதும் எங்களுக்கு சமம்தான்."},{"id":137,"translation":"(செயல்களில் நாங்கள் செய்கிற) இவை முன்னோரின் குணமாக (பழக்கமாக, வழிமுறையாக)வே தவிர இல்லை."},{"id":138,"translation":"இன்னும், நாங்கள் (இதற்காக) தண்டிக்கப்படுபவர்களாக இல்லை."},{"id":139,"translation":"ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நாம் அழித்தோம். நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":140,"translation":"நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்."},{"id":141,"translation":"சமூது மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்."},{"id":142,"translation":"அவர்களது சகோதரர் ஸாலிஹ், நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா? என்று அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்!"},{"id":143,"translation":"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்."},{"id":144,"translation":"ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!"},{"id":145,"translation":"இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை."},{"id":146,"translation":"இங்கு (இந்த உலகத்தில்) இருப்பவற்றில் (சுகம் அனுபவித்து) நிம்மதியானவர்களாக இருக்கும்படி நீங்கள் விடப்படுவீர்களா?"},{"id":147,"translation":"தோட்டங்களிலும் ஊற்றுகளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கிவிடுவீர்களா)?"},{"id":148,"translation":"இன்னும், விவசாய விளைச்சல்களிலும் (பழுத்த பழங்களால்) குலைகள் மென்மையாக தொங்கும் பேரீச்ச மரங்க(ள் நிறைந்த தோட்டங்க)ளிலும் (நீங்கள் நிரந்தரமாக தங்கிவிடுவீர்களா)?"},{"id":149,"translation":"இன்னும், நீங்கள் மலைகளில் வீடுகளை மதிநுட்ப மிக்கவர்களாக (நுணுக்கத்துடன் எங்கு எப்படி குடைய வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப) குடைந்து கொள்கிறீர்கள்."},{"id":150,"translation":"ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!"},{"id":151,"translation":"இன்னும், எல்லை மீறியவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படியாதீர்கள்!"},{"id":152,"translation":"அவர்கள் பூமியில் தீமைகளை செய்கிறார்கள். இன்னும், அவர்கள் நல்லது எதையும் செய்வதில்லை."},{"id":153,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நீர் எல்லாம் (உண்பது, குடிப்பதால் நோயுறக்கூடிய) மனிதர்களில் ஒருவர்தான்."},{"id":154,"translation":"(முஹம்மதே!) நீர் எங்களைப் போன்ற மனிதராகவே தவிர இல்லை. ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் (எங்களிடம்) ஓர் அத்தாட்சியைக் கொண்டு வாரீர்."},{"id":155,"translation":"அவர் கூறினார்: “இது ஒரு பெண் ஒட்டகை. இதற்கு நீர் அருந்துவதற்குரிய ஒரு பங்கு (-அளவு) உள்ளது. இன்னும், குறிப்பிட்ட நாளில் உங்களுக்கும் நீர் அருந்துவதற்குரிய பங்கு உள்ளது.”"},{"id":156,"translation":"“இன்னும், அதற்கு தீங்கு செய்து விடாதீர்கள்! உங்களை பெரிய (மறுமை) நாளின் தண்டனை பிடித்துக் கொள்ளும்.”"},{"id":157,"translation":"ஆக, அவர்கள் அதை அறுத்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் கைசேதப்பட்டவர்களாக ஆகிவிட்டனர்."},{"id":158,"translation":"ஆக, அவர்களை தண்டனை பிடித்தது. நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":159,"translation":"நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":160,"translation":"லூத்துடைய மக்கள் தூதர்களை பொய்ப்பித்தனர்."},{"id":161,"translation":"அவர்களது சகோதரர் லூத்து (பின் வருமாறு) அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?"},{"id":162,"translation":"நிச்சயமாக நான் உங்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்."},{"id":163,"translation":"ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!"},{"id":164,"translation":"இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை."},{"id":165,"translation":"படைப்பினங்களில் (பெண்களை விட்டுவிட்டு) ஆண்களிடம் நீங்கள் உறவு வைக்கிறீர்களா?"},{"id":166,"translation":"இன்னும், உங்களுக்கு உங்கள் இறைவன் படைத்த உங்கள் மனைவிகளை விட்டுவிடுகிறீர்கள்! இது மட்டுமல்ல, நீங்கள் எல்லை மீறி பாவம் செய்கிற மக்கள் ஆவீர்கள்.”"},{"id":167,"translation":"அவர்கள் கூறினார்கள்: “லூத்தே! நீர் (எங்களைக் கண்டிப்பதிலிருந்து) விலகவில்லை என்றால் நிச்சயமாக (எங்கள் ஊரிலிருந்து) வெளியேற்றப்பட்டவர்களில் நீர் ஆகிவிடுவீர்.”"},{"id":168,"translation":"அவர் கூறினார்: “நிச்சயமாக நான் உங்கள் (இத்தீய) செயலை வெறுப்பவர்களில் உள்ளவன் ஆவேன்."},{"id":169,"translation":"என் இறைவா! என்னையும் என் குடும்பத்தாரையும் அவர்கள் செய்(யும் பா)வ(த்)திலிருந்து(ம் அதன் தண்டனையிலிருந்தும்) பாதுகாத்துக்கொள்!”"},{"id":170,"translation":"ஆக, அவரையும் அவருடைய குடும்பத்தார் அனைவரையும் நாம் பாதுகாத்தோம்."},{"id":171,"translation":"மிஞ்சியவர்களில் (அவரின் மனைவியான) ஒரு கிழவியைத் தவிர. (அவளும் பின்னர் அழிக்கப்பட்டாள்.)"},{"id":172,"translation":"பிறகு, மற்றவர்களை நாம் (தரை மட்டமாக) அழித்தோம்."},{"id":173,"translation":"இன்னும், அவர்கள் மீது ஒரு மழையை பொழிவித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களுடைய மழை மிக கெட்டதாகும்."},{"id":174,"translation":"நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":175,"translation":"நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":176,"translation":"தோட்டக்காரர்கள் (என்று அறியப்பட்ட மத்யன் வாசிகள்) தூதர்களை பொய்ப்பித்தனர்."},{"id":177,"translation":"அவர்களது சகோதரர் ஷுஐபு (பின் வருமாறு) அவர்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச வேண்டாமா?"},{"id":178,"translation":"நிச்சயமாக நான் உங்களுக்கு நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்."},{"id":179,"translation":"ஆக, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!"},{"id":180,"translation":"இதற்காக நான் உங்களிடம் எவ்வித கூலியையும் கேட்கவில்லை. அகிலங்களின் இறைவனிடமே தவிர என் கூலி (மக்களிடம்) இல்லை."},{"id":181,"translation":"(நீங்கள் அளந்து கொடுக்கும்) அளவையை முழுமைப்படுத்துங்கள். இன்னும், (மக்களுக்கு) நஷ்டம் ஏற்படுத்துபவர்களில் ஆகிவிடாதீர்கள்."},{"id":182,"translation":"இன்னும், நேரான (சரியான, நீதமான) தராசினால் நிறுங்கள்!"},{"id":183,"translation":"இன்னும், (அளந்து அல்லது நிறுத்துக் கொடுக்கும்போது) மக்களுக்கு அவர்களுடைய பொருள்களை குறைக்காதீர்கள்! இன்னும், பூமியில் கலகம் (பாவம்) செய்தவர்களாக கடும் குழப்பம் (தீமை) செய்யாதீர்கள்!"},{"id":184,"translation":"இன்னும், உங்களையும் (உங்களுக்கு) முன்சென்ற சமுதாயத்தினரையும் படைத்தவனை அஞ்சுங்கள்!”"},{"id":185,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நீரெல்லாம் (உண்பது, குடிப்பதால் நோயுறக்கூடிய) மனிதர்களில் ஒருவர்தான்."},{"id":186,"translation":"இன்னும், எங்களைப் போன்ற மனிதராகவே தவிர நீர் இல்லை. நிச்சயமாக பொய்யர்களில் ஒருவராகவே நாங்கள் உம்மைக் கருதுகிறோம்."},{"id":187,"translation":"ஆகவே, நீர் உண்மையாளர்களில் இருந்தால் வானத்தில் இருந்து (துண்டிக்கப்பட்ட) சில துண்டுகளை எங்கள் மீது விழ வைப்பீராக!”"},{"id":188,"translation":"அவர் கூறினார்: “நீங்கள் (சொல்வதையும் செய்வதையும்) என் இறைவன் மிக அறிந்தவன்.”"},{"id":189,"translation":"ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, (அடர்த்தியான நிழலுடைய) மேக நாளின் தண்டனை அவர்களைப் பிடித்தது. நிச்சயமாக அது ஒரு பெரிய நாளின் தண்டனையாக இருந்தது."},{"id":190,"translation":"நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் நம்பிக்கையாளர்களாக இல்லை."},{"id":191,"translation":"நிச்சயமாக உமது இறைவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":192,"translation":"இன்னும், நிச்சயமாக இது அகிலங்களின் இறைவனால் இறக்கப்பட்ட வேதமாகும்."},{"id":193,"translation":"நம்பிக்கைக்குரியவரான ரூஹ் (என்ற ஜிப்ரீல், அல்லாஹ்விடமிருந்து) இதை இறக்கினார்."},{"id":194,"translation":"உமது உள்ளத்தில் (இது இறக்கப்பட்டது), நீர் (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பவர்களில் ஆகவேண்டும் என்பதற்காக."},{"id":195,"translation":"தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டது)."},{"id":196,"translation":"இன்னும், நிச்சயமாக இ(ந்த வேதத்தைப் பற்றிய முன்னறிவிப்பான)து முன்னோர்களுடைய வேதங்களில் கூறப்பட்டுள்ளது."},{"id":197,"translation":"இஸ்ரவேலர்களின் அறிஞர்கள் இதை அறிவதே இவர்களுக்கு ஓர் (போதுமான) அத்தாட்சியாக இல்லையா?"},{"id":198,"translation":"இ(ந்த வேதத்)தை வாயற்ற பிராணிகள் சிலவற்றின் மீது நாம் இறக்கி இருந்தால்,"},{"id":199,"translation":"ஆக, அவை இவர்கள் மீது இதை ஓதி(க் காண்பித்து) இருந்தாலும் இவர்கள் நம்பிக்கை கொண்டவர்களாக ஆகி இருக்க மாட்டார்கள்."},{"id":200,"translation":"இவ்வாறுதான் குற்றவாளிகளின் உள்ளங்களில் நாம் இ(ந்த வேதத்தை நிராகரிப்ப)தை நுழைத்து விட்டோம்."},{"id":201,"translation":"அவர்கள் இதை நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள், வலி தரும் தண்டனையை அவர்கள் பார்க்கின்ற வரை."},{"id":202,"translation":"ஆக, அது அவர்களிடம் திடீரென வரும், அவர்களோ (அதை) உணராதவர்களாக இருக்கும் நிலையில்."},{"id":203,"translation":"ஆக, அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் அவகாசம் அளிக்கப்படுவோமா?” (அப்படி அவகாசம் அளிக்கப்பட்டால் நாங்கள் திருந்தி விடுவோமே.)"},{"id":204,"translation":"ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக கேட்கிறார்களா?"},{"id":205,"translation":"ஆக, (நபியே!) அறிவிப்பீராக! நாம் அவர்களுக்கு (இன்னும்) பல ஆண்டுகள் (வாழ்வதற்கு) சுகமளித்தால்,"},{"id":206,"translation":"பிறகு, அவர்கள் எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அ(ந்த தண்டனையான)து அவர்களிடம் வந்தால்,"},{"id":207,"translation":"அவர்களுக்கு சுகமளிக்கப்பட்டுக் கொண்டிருந்த (வசதியான உலக வாழ்க்கையான)து அவர்களை விட்டும் (தண்டனையை) தடுக்காது."},{"id":208,"translation":"நாம் எந்த ஊரையும் அழித்ததில்லை, எச்சரிப்பாளர்கள் அதற்கு (அனுப்பப்பட்டு) இருந்தே தவிர."},{"id":209,"translation":"இது அறிவுரையாகும். நாம் அநியாயக்காரர்களாக இல்லை."},{"id":210,"translation":"இ(ந்த வேதத்)தை (நபியின் உள்ளத்தில்) ஷைத்தான்கள் இறக்கவில்லை."},{"id":211,"translation":"அது அவர்களுக்குத் தகுதியானதும் இல்லை. இன்னும், (அதற்கு) அவர்கள் சக்தி பெறவும் மாட்டார்கள்."},{"id":212,"translation":"நிச்சயமாக அவர்கள் (வானத்தில் குர்ஆன் வைக்கப்பட்டுள்ள இடத்திலிருந்து அந்த குர்ஆன் ஓதி காட்டப்படும்போது அதை) செவியுறுவதிலிருந்து தூரமாக்கப்பட்டவர்கள். (ஆகவே, அதன் பக்கம் அவர்கள் நெருங்கவே முடியாது.)"},{"id":213,"translation":"ஆக, அல்லாஹுடன் வேறு ஒரு கடவுளை அழைக்காதீர்! அப்படி அழைத்தால் தண்டிக்கப்படுபவர்களில் நீர் ஆகிவிடுவீர்."},{"id":214,"translation":"இன்னும், உமது நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!"},{"id":215,"translation":"இன்னும், உம்மை பின்பற்றிய நம்பிக்கையாளர்களுக்கு உமது புஜத்தை தாழ்த்துவீராக! (அவர்களுடன் பணிவுடன் பழகுவீராக!)"},{"id":216,"translation":"ஆக, (-உமது உறவினர்கள்) உமக்கு மாறு செய்தால், “நிச்சயமாக நான் நீங்கள் செய்வதிலிருந்து நீங்கியவன்” என்று கூறுவீராக!"},{"id":217,"translation":"இன்னும் மிகைத்தவன், மகா கருணையாளன் மீது நம்பிக்கை வைப்பீராக!"},{"id":218,"translation":"அவன்தான் (தொழுகைக்கு) நீர் நிற்கின்றபோது உம்மை பார்க்கிறான்."},{"id":219,"translation":"இன்னும், (உம்மை பின்பற்றி) சிரம் பணி(ந்து தொழு)பவர்களுடன் (ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்கு) நீர் மாறுவதையும் (அவன் பார்க்கிறான்)."},{"id":220,"translation":"நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கு அறிந்தவன் ஆவான். (ஆகவே, அழகிய முறையில் அதில் குர்ஆனை ஓதுவீராக! ஒவ்வொரு ருக்னுகளையும் முழுமையாக செய்வீராக! நாம் உம்மை பார்க்கிறோம் என்பதை நினைவில் வைப்பீராக!)"},{"id":221,"translation":"(மக்களில்) யார் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்று உங்களுக்கு நான் அறிவிக்கவா?"},{"id":222,"translation":"பெரும் பொய்யர்கள், பெரும் பாவிகள் எல்லோர் மீதும் (ஷைத்தான்கள்) இறங்குகிறார்கள்."},{"id":223,"translation":"(திருட்டுத்தனமாக) கேட்டதை (அந்த பாவிகளிடம் ஷைத்தான்கள்) கூறுகிறார்கள். இன்னும் (பாவிகளான) அவர்களில் அதிகமானவர்கள் பொய்யர்கள்."},{"id":224,"translation":"இன்னும் (இணைவைப்பவர்களான, பாவிகளான) கவிஞர்களை (மனிதர்கள் மற்றும் ஜின்களில் உள்ள) வழிகேடர்கள்தான் பின்பற்றுவார்கள்."},{"id":225,"translation":"நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் (-வீண் பேச்சுகளிலும் பொய் கற்பனைகளிலும் திசையின்றி) அலைகிறார்கள்."},{"id":226,"translation":"இன்னும், நிச்சயமாக அவர்கள் தாங்கள் செய்யாததை (செய்ததாக) கூறுகிறார்கள்."},{"id":227,"translation":"(எனினும்,) எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்து, அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்ந்து, தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் (அல்லாஹ்வின் எதிரிகளிடம்) பழிவாங்கினார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் பழிப்புக்கு உரியவர்கள் அல்லர்.) (இணைவைத்து) அநியாயம் செய்தவர்கள் தாங்கள் எந்த திரும்பும் இடத்திற்கு திரும்புவார்கள் என்பதை விரைவில் அறிவார்கள்."}]},{"id":27,"verses":[{"id":1,"translation":"தா, சீம், மீம்."},{"id":2,"translation":"(இது) நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது."},{"id":3,"translation":"அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஸகாத்தை கொடுப்பார்கள், இன்னும், அவர்கள் மறுமையை உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள்."},{"id":4,"translation":"நிச்சயமாக எவர்கள் மறுமையை நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களுக்கு நாம் அவர்களுடைய (தீய) செயல்களை (நல்ல செயல்களாக) அலங்கரித்து விட்டோம். ஆகவே, அவர்கள் (தங்கள் தீமைகளில்) தறிகெட்டு அலைகிறார்கள்."},{"id":5,"translation":"அவர்கள் எத்தகையோர்கள் என்றால் கெட்ட தண்டனை அவர்களுக்கு உண்டு. இன்னும் மறுமையில் அவர்கள்தான் நஷ்டவாளிகள்."},{"id":6,"translation":"நிச்சயமாக நன்கறிந்த மகா ஞானவானிடமிருந்து நீர் இந்த குர்ஆனை (கற்றுக் கொடுக்கப்பட்டு) மனனம் செய்து கொடுக்கப்படுவீர்."},{"id":7,"translation":"அந்த சமயத்தை நினைவு கூர்வீராக! மூஸா தன் குடும்பத்தினருக்கு கூறினார்: “நிச்சயமாக நான் நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை; அல்லது, (அதிலிருந்து) எடுக்கப்பட்ட நெருப்புக் கொள்ளியை நீங்கள் குளிர் காய்வதற்காக உங்களிடம் கொண்டு வருகிறேன்.”"},{"id":8,"translation":"ஆக, அவர் அதனிடம் வந்தபோது, அவர் அழைக்கப்பட்டு “நெருப்பில் (-ஒளியில்) இருப்பவனும் இன்னும் அதை சுற்றி உள்ளவர்களும் புனிதமானவர்கள் என்று நற்செய்தி கூறப்பட்டார். அகிலங்களின் இறைவன் அல்லாஹ் (எல்லா குறைகளை விட்டு) மிக்க பரிசுத்தமானவன்.”"},{"id":9,"translation":"“மூஸாவே! நிச்சயமாக நான்தான் மிகைத்தவனும் மகா ஞானமுடையவனுமாகிய அல்லாஹ் ஆவேன்.”"},{"id":10,"translation":"“உமது தடியைப் போடுவீராக! ஆக, அவர் அதை -அது பாம்பைப் போன்று- நெளிவதாக பார்த்தபோது புறமுதுகிட்டு திரும்பி (ஓடி)னார். அவர் திரும்பி பார்க்கவே இல்லை. மூஸாவே, பயப்படாதீர்! நிச்சயமாக என்னிடம் இறைத்தூதர்கள் பயப்பட மாட்டார்கள்.”"},{"id":11,"translation":"“(எனினும் தூதர்களில்) யார் தவறிழைத்தாரோ அவரைத் தவிர. பிறகு, (தான் செய்த) தீமைக்கு பின்னர் அழகிய செயலை மாற்றி செய்தாரோ அவரை நான் மன்னித்து விடுவேன். ஏனெனில், நிச்சயமாக நான் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன் ஆவேன்.”"},{"id":12,"translation":"“இன்னும், உமது கரத்தை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது எவ்வித குறையுமின்றி மின்னுகின்ற வெண்மையாக - ஃபிர்அவ்னுக்கும் அவனது மக்களுக்கும் நீர் அனுப்பப்பட்ட ஒன்பது அத்தாட்சிகளில் ஒன்றாக - வெளிவரும். நிச்சயமாக அவர்கள் (அகிலங்களின் இறைவனை நிராகரித்த) பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.”"},{"id":13,"translation":"ஆக, (அவர்கள் மிகத்தெளிவாக) பார்க்கும்படியாக நம் அத்தாட்சிகள் அவர்களிடம் வந்தபோது, “இது தெளிவான சூனியம்” என்று கூறினார்கள்."},{"id":14,"translation":"(அவர்களுக்கு அல்லாஹ் ஒன்பது அத்தாட்சிகளை காண்பித்தான்.) அவர்கள் அவற்றை அநியாயமாகவும் பெருமையாகவும் மறுத்தனர். அவர்களுடைய ஆன்மாக்களோ அவற்றை உறுதிகொண்டிருந்தன. ஆக, (இந்த) விஷமிகளின் முடிவு எவ்வாறு ஆகிவிட்டது என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக."},{"id":15,"translation":"திட்டவட்டமாக தாவூதுக்கும் ஸுலைமானுக்கும் (பறவைகளின் மொழி அறிவு மற்றும் பல துறைகளின் சிறப்பான) கல்வி அறிவை நாம் தந்தோம். அவ்விருவரும் கூறினார்கள்: “தனது நம்பிக்கையாளர்களான அடியார்களில் பலரைப் பார்க்கிலும் எங்களை மேன்மைப்படுத்திய அல்லாஹ்விற்கே எல்லா புகழும்.”"},{"id":16,"translation":"தாவூதுக்கு (அவரின் கல்விக்கும் ஆட்சிக்கும் அவரின் மற்ற பிள்ளைகளைப் பார்க்கிலும்) ஸுலைமான் வாரிசாக ஆனார். இன்னும், அவர் கூறினார்: “மக்களே! நாங்கள் பறவைகளின் பேச்சை (-மொழிகளை புரியும் கல்வியை) கற்பிக்கப்பட்டோம். இன்னும், (பல செல்வங்களிலிருந்து எங்களுக்கு தேவையான) எல்லா பொருள்களையும் நாங்கள் வழங்கப்பட்டோம். நிச்சயமாக இதுதான் தெளிவான மேன்மையாகும்."},{"id":17,"translation":"ஸுலைமானுக்கு ஜின்கள், மனிதர்கள் இன்னும் பறவைகளில் இருந்து அவருடைய இராணுவங்கள் ஒன்றுதிரட்டப்பட்டன. ஆக, அவர்கள் (ஒன்றிணைந்து வரிசை ஒழுங்குடன் செல்வதற்காக இடையிடையே) நிறுத்தப்படுவார்கள்."},{"id":18,"translation":"இறுதியாக, (ஒரு பயணத்தில்) எறும்புகளின் ஒரு பள்ளத்தாக்கில் அவர்கள் வந்தபோது ஓர் எறும்பு கூறியது: எறும்புகளே! உங்கள் பொந்துகளுக்குள் நுழைந்து விடுங்கள்! சுலைமானும் அவருடைய இராணுவங்களும் உங்களை (மிதித்து) அழித்து விடவேண்டாம். அவர்களோ (நீங்கள் கீழே இருப்பதையும் அவர்கள் உங்களை மிதிப்பதையும்) உணர மாட்டார்கள்."},{"id":19,"translation":"ஆக, அதன் பேச்சினால் அவர் சிரித்தவராக புன்முறுவல் பூத்தார். இன்னும் கூறினார்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள்புரிந்த உன் அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ எந்த நல்லதைக் கொண்டு திருப்தி அடைவாயோ அதை நான் செய்வதற்கும் எனக்கு நீ உள்ளத்தில் உதிப்பை ஏற்படுத்து! (மனதில் அதற்குண்டான ஆசையையும் உணர்வையும் ஏற்படுத்து!) இன்னும், உன் கருணையால் உன் நல்லடியார்களில் என்னை நுழைத்துவிடு!”"},{"id":20,"translation":"இன்னும், அவர் பறவைகளில் (ஹுத்ஹுத் பறவையைத்) தேடினார். (அது காணவில்லை. அப்போது) எனக்கென்ன ஏற்பட்டது, நான் ஹுத்ஹுதை (ஏன்) காண முடியவில்லை?! அல்லது, அது (இங்கு) வராதவர்களில் இருக்கிறதா? என்று கூறினார்."},{"id":21,"translation":"“நிச்சயமாக நான் அதை கடுமையாக தண்டிப்பேன். அல்லது, அதை நிச்சயமாக நான் அறுத்து விடுவேன். அல்லது அது கண்டிப்பாக தெளிவான ஆதாரத்தை என்னிடம் கொண்டுவர வேண்டும்.”"},{"id":22,"translation":"ஆக, அவர் (ஹுத்ஹுதைப் பற்றி விசாரித்த பின்னர்) சிறிது நேரம்தான் தாமதித்தார். (அதற்குள் ஹுத்ஹுத் அவர் முன் வந்துவிட்டது.) ஆக, அது கூறியது: “(ஸுலைமானே!) நீர் அறியாததை நான் அறிந்து (வந்து)ள்ளேன். இன்னும், ‘சபா’ நாட்டவர்களிடமிருந்து உறுதியான செய்தியை உம்மிடம் கொண்டு வந்திருக்கிறேன்."},{"id":23,"translation":"நிச்சயமாக நான் (அங்கு) ஒரு பெண், அவர்களை ஆட்சி செய்வதைக் கண்டேன். இன்னும், (ஆட்சிக்கு தேவையான) பொருள்கள் எல்லாம் அவள் வழங்கப்பட்டு இருக்கிறாள். இன்னும், அவளுக்கு சொந்தமான ஒரு பெரிய (-விலை உயர்ந்த) அரச கட்டிலும் உள்ளது."},{"id":24,"translation":"இன்னும், அவளையும் அவளுடைய மக்களையும் - அவர்கள் அல்லாஹ்வை அன்றி சூரியனுக்கு சிரம் பணிந்து வணங்குபவர்களாக - கண்டேன். ஷைத்தான் அவர்களுக்கு அவர்களின் (தீய) செயல்களை அலங்கரித்து விட்டான். ஆக, அவர்களை (நேரான) பாதையிலிருந்து அவன் தடுத்து விட்டான். ஆக, (அல்லாஹ்வின் பக்கம்) அவர்கள் நேர்வழி பெறாமல் இருக்கிறார்கள்."},{"id":25,"translation":"வானங்களிலும் பூமியிலும் மறைந்திருப்பவற்றை (-மழை மற்றும் தாவரங்களை) வெளிப்படுத்துகின்றவனும்; இன்னும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அறிகின்றவனுமாகிய அல்லாஹ்விற்கு அவர்கள் சிரம் பணியாமல் இருப்பதற்காக (அவன் அவர்களது கெட்ட செயல்களை அலங்கரித்துக் காட்டினான்)."},{"id":26,"translation":"அல்லாஹ் - மகத்தான அர்ஷுடைய அதிபதியாகிய அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை."},{"id":27,"translation":"(ஸுலைமான்) கூறினார்: “நீ உண்மை கூறினாயா, அல்லது பொய்யர்களில் ஆகிவிட்டாயா? என்று நாம் ஆராய்வோம்."},{"id":28,"translation":"எனது இந்தக் கடிதத்தை எடுத்துச் செல்! ஆக, இதை அவர்கள் முன் நீ போடு! பிறகு, அவர்களை விட்டு விலகி இரு! ஆக, அவர்கள் என்ன பதில் தருகிறார்கள் என்று நீ பார்!”"},{"id":29,"translation":"(ஹுத்ஹுத் கடிதத்தை எடுத்து சென்று அரசியின் முன் போட்டது. அப்போது அந்த அரசி) கூறினாள்: “முக்கிய பிரமுகர்களே! நிச்சயமாக நான், ஒரு கண்ணியமான கடிதம் என்னிடம் அனுப்பப்பட்டுள்ளது.”"},{"id":30,"translation":"நிச்சயமாக அது சுலைமானிடமிருந்து (அனுப்பப்பட்டுள்ளது). நிச்சயமாக (அதில் எழுதப்பட்ட) செய்தியாவது: “பேரருளாளன் பேரன்பாளன் அல்லாஹ்வின் பெயரால் (இதை எழுதுகிறேன்)."},{"id":31,"translation":"அதாவது, என்னிடம் நீங்கள் பெருமை காட்டாதீர்கள்! (முரண்டு பிடித்து கர்வம் கொண்டு என் கட்டளையை மீறி நடக்காதீர்கள்!) என்னிடம் பணிந்தவர்களாக வந்து விடுங்கள்!”"},{"id":32,"translation":"அவள் கூறினாள்: “முக்கிய பிரமுகர்களே! எனது இந்த காரியத்தில் நீங்கள் எனக்கு ஆலோசனை கூறுங்கள். நான் ஒரு காரியத்தை நீங்கள் என்னிடம் ஆஜராகி (அதில் கருத்து கூறுகி)ன்ற வரை முடிவு செய்பவளாக இல்லை.”"},{"id":33,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் (உடல்) பலமுடையவர்கள்; இன்னும், (எதிரிகளை தாக்க தேவையான) கடும் வலிமை உடையவர்கள். ஆனால், முடிவு உன்னிடமே இருக்கிறது. ஆகவே, நீ (முடிவாக கருதுவதை அல்லது) உத்தரவிடுவதை நன்கு யோசி(த்து முடிவெடு)ப்பாயாக!"},{"id":34,"translation":"அவள் கூறினாள்: “நிச்சயமாக மன்னர்கள் ஓர் ஊருக்குள் நுழைந்து விட்டால் அதை சின்னாபின்னப்படுத்தி விடுவார்கள். அந்த ஊர்வாசிகளில் உள்ள கண்ணியவான்களை இழிவானவர்களாக ஆக்கிவிடுவார்கள். (ஆகவே, இவர்களும்) அப்படித்தான் செய்வார்கள்.”"},{"id":35,"translation":"“நிச்சயமாக நான் அவர்களிடம் (என் அரசவை தூதர்களுடன்) ஓர் அன்பளிப்பை அனுப்புகிறேன். (நான் அனுப்பிய அந்த) தூதர்கள் என்ன பதிலை திரும்பக் கொண்டு வருகிறார்கள் என்று பார்க்கிறேன். (அதன் பின்னர் முடிவு செய்கிறேன்.)”"},{"id":36,"translation":"ஆக, (அவளின் தூதர்) சுலைமானிடம் வந்தபோது, (சுலைமான்) கூறினார்: “செல்வத்தை எனக்கு நீங்கள் தருகிறீர்களா? அல்லாஹ் எனக்கு தந்திருப்பது அவன் உங்களுக்கு தந்திருப்பதை விட மிகச் சிறந்ததாகும். மாறாக, நீங்கள் உங்கள் அன்பளிப்பினால் பெருமிதம் அடைவீர்கள். (நான் அதை ஏற்க மாட்டேன்.)”"},{"id":37,"translation":"“நீ அவர்களிடம் திரும்பிப் போ! ஆக, நாம் அவர்களிடம் (பல) இராணுவங்களைக் கொண்டு வருவோம். அவர்களை எதிர்ப்பதற்கு அவ(ளின் வீரர்க)ளுக்கு அறவே வலிமை இருக்காது. இன்னும், நிச்சயமாக அவர்களை அ(வர்களின் நகரத்)திலிருந்து இழிவானவர்களாக நாம் வெளியேற்றுவோம். இன்னும், அவர்கள் சிறுமைப்படுவார்கள்.”"},{"id":38,"translation":"அவர் (தன் அவையோரிடம்) கூறினார்: “முக்கிய பிரமுகர்களே! உங்களில் யார் அவளுடைய அரச கட்டிலை - அவர்கள் என்னிடம் பணிந்தவர்களாக வருவதற்கு முன்னர் - கொண்டு வருவார்.”"},{"id":39,"translation":"ஜின்களில் (கடும் தந்திரமும் வலிமையும் வீரமும் முரட்டுக் குணமும் உடைய) பராக்கிரமசாலி கூறியது: நீர் உமது (இந்த) இடத்திலிருந்து எழுவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன். நிச்சயமாக நான் அதற்கு ஆற்றல் உள்ளவன், (அதில் உள்ள பொருள்களை பாதுகாப்பாக கொண்டு வருவதற்கு நான்) நம்பிக்கைக்குரியவன் ஆவேன்."},{"id":40,"translation":"தன்னிடம் வேதத்தின் ஞானம் இருந்த (மனிதர்) ஒருவர் கூறினார்: “(நீர் தூரமாக ஒன்றை பார்த்த பின்னர்,) உமது பார்வை உன் பக்கம் திரும்புவதற்கு முன்னர் நான் அதை உம்மிடம் கொண்டு வருவேன்.” ஆக, (அவ்வாறே கொண்டு வரப்பட்ட) அதை (-அந்த அரசகட்டிலை) தன்னிடம் (-தனக்கு முன்னால்) முழுமையாக வந்து சேர்ந்து விட்டதை சுலைமான் பார்த்தபோது, (எனது இந்த ஆட்சி, அதிகாரம், படைபலம், அறிவு ஆகிய) இவை என் இறைவனின் அருளினால் கிடைத்ததாகும். நான் நன்றி செலுத்துகிறேனா, அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறேனா என்று அவன் என்னை சோதிப்பதற்காக (இவற்றை எனக்கு தந்துள்ளான்). யார் நன்றி செலுத்துகிறாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் அவருக்குத்தான் நன்மையாகும். யார் நிராகரிப்பாரோ (-நன்றி கெடுவாரோ அவரால் அல்லாஹ்விற்கு எவ்வித குறையும் இல்லை.) ஏனெனில், என் இறைவன் முற்றிலும் தேவை அற்றவன் (-தன்னில் நிறைவானவன், எல்லோருக்கும் கணக்கின்றி கொடுக்கும்) பெரும் தயாளன் ஆவான்."},{"id":41,"translation":"அவர் கூறினார்: “நீங்கள் அவளுக்கு அவளுடைய அரச கட்டிலை மாற்றி விடுங்கள். நாம் பார்ப்போம், அவள் (தனது பொருளை) அறிந்து கொள்கிறாளா? அல்லது அவள் (தமது பொருளை) அறியாதவர்களில் ஆகிவிடுகிறாளா?”"},{"id":42,"translation":"ஆக, அவள் வந்தபோது, “இது உனது அரச கட்டில் போன்றா இருக்கிறது?” என்று கேட்கப்பட்டது. அவள் கூறினாள்: “இது அதைப் போன்றுதான் இருக்கிறது.” (பின்னர் சுலைமான் கூறினார்:) இவளுக்கு முன்னரே நாம் (அல்லாஹ்வைப் பற்றியும் அவனுடைய ஆற்றலைப் பற்றியும்) அறிவு கொடுக்கப்பட்டு இருக்கிறோம். இன்னும், நாம் முஸ்லிம்களாக (அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தவர்களாக) இருக்கிறோம்."},{"id":43,"translation":"அவள் அல்லாஹ்வை அன்றி (சூரியனை) வணங்கிக்கொண்டு இருந்தது (அல்லாஹ்வை அவள் வணங்குவதை விட்டும்) அவளைத் தடுத்து விட்டது. நிச்சயமாக, அவள் நிராகரிக்கின்ற மக்களில் இருந்தாள்."},{"id":44,"translation":"“நீ மாளிகையில் நுழை!” என்று அவளுக்கு கூறப்பட்டது. அவள் அதைப் பார்த்தபோது அதை அலை அடிக்கும் நீராகக் கருதி, தன் இரு கெண்டைக் கால்களை விட்டும் (தன் ஆடையை) அகற்றினாள். (அப்போது சுலைமான்) கூறினார்: “நிச்சயமாக இது (-இந்த மாளிகையின் தரை) கண்ணாடிகளால் சமப்படுத்தப்பட்ட (மொழுவப்பட்ட, உருவாக்கப்பட்ட) மாளிகை(யின் தரை)யாகும்.” அவள், கூறினாள்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கே அநீதி செய்து கொண்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனான அல்லாஹ்விற்கு சுலைமானுடன் சேர்ந்து நானும் (பணிந்து) முஸ்லிமாகி விட்டேன்.”"},{"id":45,"translation":"திட்டவட்டமாக நாம் ஸமூது (மக்களு)க்கு அவர்களுடைய சகோதரர் ஸாலிஹை (நமது தூதராக) அனுப்பினோம், “நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்” (என்று கட்டளையிடுவதற்காக). ஆனால், அவர்களோ தங்களுக்குள் இரண்டு பிரிவுகளாக ஆகி தர்க்கித்துக் கொண்டனர்."},{"id":46,"translation":"(ஸாலிஹ்) கூறினார்: “என் மக்களே! (இறைவனின் அருளாகிய) நன்மைக்கு முன்னதாக (அவனின் தண்டனையாகிய) தீமையை ஏன் அவசரப்படுகிறீர்கள்? நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்விடம் நீங்கள் (எல்லோரும்) பாவமன்னிப்புத் தேடமாட்டீர்களா?”"},{"id":47,"translation":"அவர்கள் கூறினார்கள்: “உம்மாலும் உம்முடன் உள்ளவர்களாலும் நாங்கள் துர்ச்சகுனம் அடைந்தோம்.” அவர் கூறினார்: “(மாறாக) உங்கள் துன்பத்தின் காரணம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. (உங்கள் செயலுக்கு ஏற்ப அவன் உங்களிடம் நடந்து கொள்கிறான்.) மாறாக, நீங்கள் சோதிக்கப்படுகின்ற மக்கள் ஆவீர்கள்.”"},{"id":48,"translation":"அப்பட்டணத்தில் ஒன்பது பேர் இருந்தனர். அவர்கள் (அந்த) பூமியில் கடும் தீமைகளை செய்தனர். அவர்கள் நல்லதை செய்யவில்லை."},{"id":49,"translation":"அவர்கள் தங்களுக்குள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் அவரையும் அவருடைய குடும்பத்தையும் கொன்று விடுவோம். பிறகு, அவருடைய பொறுப்பாளருக்கு, ‘அவ(ரும் அவ)ரது குடும்ப(மு)ம் கொல்லப்பட்ட இடத்திற்கு நாம் பிரசன்னமாகி இருக்கவில்லை, நிச்சயமாக நாங்கள் (இது விஷயத்தில்) உண்மையாளர்கள்’ என்று கூறுவோம்.”"},{"id":50,"translation":"இன்னும், அவர்கள் ஒரு சூழ்ச்சி செய்தனர். இன்னும், நாம் ஒரு சூழ்ச்சி செய்தோம். அவர்களோ (நமது சூழ்ச்சியை) உணராதவர்களாக இருந்தனர்."},{"id":51,"translation":"ஆக, அவர்களுடைய சூழ்ச்சியின் இறுதி முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் பார்ப்பீராக! (அதன் முடிவானது:) நிச்சயமாக நாம் அவர்களையும் அவர்களின் மக்கள் அனைவரையும் (தரைமட்டமாக) அழித்து விட்டோம்."},{"id":52,"translation":"இதோ அவர்கள் செய்த அநியாயத்தால் அவர்க(ள் அழிக்கப்பட்ட பின்னர் அவர்க)ளது வீடுகள் வெறுமையாக இருக்கின்றன. கல்வி ஞானமுள்ள மக்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது."},{"id":53,"translation":"இன்னும், நம்பிக்கை கொண்டவர்களை நாம் பாதுகாத்தோம். அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையை) அஞ்சிக் கொண்டிருந்தனர்."},{"id":54,"translation":"இன்னும், லூத்தையும் (தூதராக நாம் அனுப்பினோம்). அவர் தம் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நீங்கள் மகா அசிங்கமான செயலை செய்கிறீர்கள். (இதன் அசிங்கத்தையும் கேவலத்தையும்) நீங்கள் அறியத்தான் செய்கிறீர்கள்.”"},{"id":55,"translation":"“பெண்களை தவிர்த்துவிட்டு ஆண்களிடமா நீங்கள் (உங்கள் சரீர) இச்சையை தீர்க்கிறீர்கள். மாறாக, நீங்கள் (அல்லாஹ்வின் சட்டத்தை மீறுவதால் நிகழப்போகும் தண்டனையையும்) அறியாத மக்கள் ஆவீர்கள்.”"},{"id":56,"translation":"ஆக, அவருடைய மக்களின் பதிலோ, “லூத்துடைய குடும்பத்தாரை உங்கள் ஊரிலிருந்து வெளியேற்றுங்கள். நிச்சயமாக அவர்கள் சுத்தமாக இருக்கின்ற மனிதர்கள்” என்பதாகவே தவிர இல்லை."},{"id":57,"translation":"ஆக, அவருடைய மனைவியைத் தவிர நாம் அவரையும் அவருடைய குடும்பத்தையும் பாதுகாத்தோம். (ஊரில்) மிஞ்சி இருப்பவர்களில் அவளை (இருக்க வைத்து நமது தண்டனை இறங்கும்போது அவள் அழிக்கப்படவேண்டும் என்று) முடிவு செய்தோம்."},{"id":58,"translation":"இன்னும், அவர்கள் மீது (தண்டனையின்) மழையை பொழிவித்தோம். ஆக, எச்சரிக்கப்பட்டவர்களின் அந்த மழை (தண்டனைக்காக இறக்கப்பட்ட மழைகளிலே) மிகக் கெட்டதாகும்."},{"id":59,"translation":"(நபியே!) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்(களாகிய உம்மீதும் உமது தோழர்)கள் மீதும் ஸலாம் - ஈடேற்றம்- உண்டாகுக! அல்லாஹ் சிறந்தவனா? அல்லது அவர்கள் இணைவைப்பவை (சிறந்தவை)யா? (அல்லாஹ்வை வணங்குவது சிறந்ததா? அல்லது, அவனல்லாத படைப்புகளை வணங்குவது சிறந்ததா?)”"},{"id":60,"translation":"வானங்களையும் பூமியையும் படைத்தவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது எதையும் படைக்க ஆற்றல் இல்லாத சிலைகள் சிறந்தவையா?). அவன் உங்களுக்கு மேகத்திலிருந்து மழையை இறக்கினான். அதன்மூலம் நாம் அழகிய காட்சியுடைய தோட்டங்களை முளைக்க வைத்தோம். (அவன் மழை நீரை இறக்கவில்லை என்றால்) உங்களால் அதன் மரங்களை முளைக்க வைக்க முடியாது. (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்கள் (அல்லாஹ்வுடன் படைப்புகளை) இணைவைக்கின்ற மக்கள் ஆவார்கள்."},{"id":61,"translation":"அல்லது, எவன் பூமியை நிலையானதாக ஆக்கி, அதற்கிடையில் ஆறுகளை ஏற்படுத்தி, அதற்காக (-அது குலுங்காமல் இருப்பதற்காக) பெரும் மலைகளைப் படைத்து, இரு கடல்களுக்கு இடையில் தடுப்பை அமைத்தானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவர்கள் வணங்குவதற்கு சிறந்தவர்களா?) (இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கண்ணியத்தையும் தாங்கள் வணங்கும் பொய்யான தெய்வங்களின் பலவீனத்தையும்) அறியமாட்டார்கள்."},{"id":62,"translation":"அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு - அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு) - பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குவானோ, இன்னும், உங்களை இப்பூமியின் பிரதிநிதிகளாக ஆக்குவானோ (அவனை வணங்குவது சிறந்ததா? அல்லது அழைத்தாலும் கேட்காத, மனிதர்களுக்கு எந்த நன்மையையும் செய்ய சக்தி இல்லாதவற்றை வணங்குவது சிறந்ததா?) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்லாஹ்வின் அத்தாட்சிகளைக் கொண்டு) நீங்கள் மிகக் குறைவாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்."},{"id":63,"translation":"அல்லது, தரை மற்றும் கடலின் இருள்களில் உங்களுக்கு எவன் வழிகாட்டுகிறானோ, இன்னும் தனது அருளுக்கு முன்னர் காற்றுகளை சுபச்செய்தியாக எவன் அனுப்புகிறானோ அவன் (நாம் வணங்குவதற்கு) சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாத சிலைகள் சிறந்தவையா? இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அல்லாஹ் மிக்க உயர்ந்தவன்."},{"id":64,"translation":"அல்லது, எவன் படைப்புகளை முதலில் உருவாக்கி, (பின்னர் அவை அழிந்த) பிறகு அவற்றை மீண்டும் உருவாக்குகிறானோ, இன்னும் மேகத்திலிருந்தும் பூமியிலிருந்தும் உங்களுக்கு எவன் உணவளிக்கிறானோ அவன் சிறந்தவனா? (அல்லது இவற்றில் எதையும் செய்ய சக்தி இல்லாதவை சிறந்தவையா? இத்தகைய) அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (நபியே!) கூறுவீராக: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (வழிபாடுகளுக்கு) ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள்!”"},{"id":65,"translation":"(நபியே!) கூறுவீராக: “அல்லாஹ்வைத் தவிர, வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்கள் மறைவானவற்றை அறியமாட்டார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் எப்போது எழுப்பப்படுவோம் என்பதை உணர மாட்டார்கள்.”"},{"id":66,"translation":"அது மட்டுமா, அவர்களது அறிவு மறுமை விஷயத்தில் மறைந்து விட்டதா? (அவர்கள் தங்கள் அறிவால் மறுமையை புரிய முடியாமல் ஆகிவிட்டனரா?) மாறாக, அவர்கள் அ(ந்த மறுமை விஷயத்)தில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அது மட்டுமல்ல, அவர்கள் அ(ந்த மறுமை விஷயத்)தில் குருடர்கள் ஆவர். (குருடனால் ஒரு பொருளை பார்க்க முடியாதது போல் அவர்களால் மறுமையை அறிய முடியாமல் இருக்கிறார்கள்.)"},{"id":67,"translation":"இன்னும், நிராகரித்தவர்கள் கூறினார்கள்: “நாங்களும் எங்கள் மூதாதைகளும் (இறந்த பின்னர் மண்ணோடு) மண்ணாக மாறிவிட்டாலும் நிச்சயமாக நாங்கள் (பூமியிலிருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவோமா?”"},{"id":68,"translation":"“திட்டவட்டமாக நாங்களும் இதற்கு முன்னர் எங்கள் மூதாதைகளும் இதை வாக்களிக்கப்பட்டோம். (ஆனால், இதுவரை அப்படி நடக்கவில்லையே! ஆகவே,) இது முன்னோர்களின் கட்டுக் கதைகள் அன்றி வேறு இல்லை.”"},{"id":69,"translation":"(நபியே!) கூறுவீராக! “பூமியில் (அழிக்கப்பட்ட மக்களின் ஊர்களுக்கு) செல்வீர்களாக! ஆக, குற்றவாளிகளின் முடிவு எப்படி இருந்தது என்று (சிந்தித்துப்) பார்ப்பீர்களாக!”"},{"id":70,"translation":"அவர்கள் மீது நீர் துக்கப்படாதீர்! இன்னும், அவர்கள் (உமக்கு) சூழ்ச்சி செய்வதால் நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடாதீர்!"},{"id":71,"translation":"அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது நிகழும்?”"},{"id":72,"translation":"(நபியே!) கூறுவீராக: “(தண்டனைகளில்) நீங்கள் அவசரப்படுபவற்றில் சில உங்களுக்கு விரைவில் வரக்கூடும்.”"},{"id":73,"translation":"நிச்சயமாக உமது இறைவன் மக்கள் மீது அருளுடையவன் ஆவான். எனினும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் அருளுக்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்."},{"id":74,"translation":"நிச்சயமாக உமது இறைவன் அவர்களது உள்ளங்கள் மறைப்பதையும் அவர்கள் வெளிப்படுத்துவதையும் நன்கறிவான்."},{"id":75,"translation":"வானத்திலும் பூமியிலும் (மக்களின் பார்வைகளுக்கும் செவிகளுக்கும்) மறைந்த எதுவும் இல்லை, (அது) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர."},{"id":76,"translation":"நிச்சயமாக இந்த குர்ஆன் இஸ்ரவேலர்கள் மீது அவர்கள் கருத்து வேறுபாடு கொள்கின்றவற்றில் பல விஷயங்களை (அவற்றில் எது உண்மை என்று) விவரிக்கிறது."},{"id":77,"translation":"நிச்சயமாக இ(ந்த வேதமான)து நேர்வழியும் நம்பிக்கையாளர்களுக்கு (இறைவனின்) கருணையும் ஆகும்."},{"id":78,"translation":"நிச்சயமாக உமது இறைவன் தனது சட்டத்தின் படி (-தனது ஞானத்தின் படி) அவர்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பான். அவன்தான் மிகைத்தவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":79,"translation":"ஆக, (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை (தவக்குல்) வைப்பீராக! நிச்சயமாக நீர் தெளிவான சத்தியத்தின் மீது இருக்கிறீர்."},{"id":80,"translation":"நிச்சயமாக (உள்ளம்) மரணித்தவர்களை நீர் செவியுறச் செய்யமுடியாது. (செவியில் முத்திரை இடப்பட்ட) செவிடர்களுக்கும் - அவர்கள் புறமுதுகிட்டவர்களாக (-புறக்கணித்தவர்களாக) திரும்பினால் - (இந்த ஏகத்துவ) அழைப்பை நீர் செவியுறச் செய்யமுடியாது."},{"id":81,"translation":"இன்னும், (அல்லாஹ் எவர்களின் கண்களை சத்தியத்தை பார்ப்பதிலிருந்து குருடாக்கி விட்டானோ அந்த) குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து நீர் நேர்வழிபடுத்த முடியாது. நமது வசனங்களை நம்பிக்கை கொள்பவர்களைத் தவிர (பிறரை) நீர் செவியுறச் செய்ய முடியாது. அவர்கள்தான் (நமது கட்டளைகளுக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்கள் ஆவார்கள்."},{"id":82,"translation":"அவர்கள் மீது (இனி அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்ற) நமது வாக்கு உறுதியாக நிகழ்ந்து விட்டால் பூமியிலிருந்து ஒரு மிருகத்தை நாம் அவர்களுக்கு வெளிப்படுத்துவோம். “நிச்சயமாக மக்கள் நமது அத்தாட்சிகளை உறுதி(யாக நம்பிக்கை) கொள்ளாதவர்களாக இருந்தனர்” என்று அவர்களிடம் அது பேசும்."},{"id":83,"translation":"இன்னும், ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் நமது அத்தாட்சிகளை பொய்ப்பிக்கின்றவர்களின் கூட்டத்தை நாம் (மறுமையில்) எழுப்புகிற நாளை நினைவு கூர்வீராக! ஆக, அவர்க(ளில் முன்னோரும் பின்னோரும் ஒன்று சேருவதற்காக அவர்க)ள் (மஹ்ஷர் மைதானத்தில்) தடுத்து நிறுத்தப்படுவார்கள்."},{"id":84,"translation":"இறுதியாக, அவர்கள் (எல்லோரும் மறுமையில் எழுப்பப்பட்டு அல்லாஹ்விடம்) வந்து விடும்போது (அல்லாஹ்) கூறுவான்: “எனது அத்தாட்சிகளை - அவற்றை நீங்கள் முழுமையாக அறியாமல் இருக்கும் நிலையில் - நீங்கள் பொய்ப்பித்தீர்களா? அல்லது, நீங்கள் என்ன செய்து கொண்டு இருந்தீர்கள்?”"},{"id":85,"translation":"இன்னும், அவர்கள் (இம்மையில்) செய்த தீமைகளால் (அல்லாஹ்வின் தண்டனையின்) கூற்று அவர்கள் மீது (மறுமையில்) நிகழ்ந்து விட்டது. ஆகவே, அவர்கள் (விசாரணையின் போது எதிர்த்து) பதில் பேசமாட்டார்கள்."},{"id":86,"translation":"நிச்சயமாக நாம் இரவை -அதில் அவர்கள் ஓய்வு பெறுவதற்காகவும், பகலை (அவர்கள் பொருள் சம்பாதிக்க வசதியாக) வெளிச்சமாகவும் அமைத்திருப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":87,"translation":"இன்னும், எக்காளத்தில் ஊதப்படும் நாளில் வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் (-பயத்தால் நடுங்கி) திடுக்கிடுவார்கள். ஆனால், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. (போரில் கொல்லப்பட்டவர்களைத் தவிர அவர்களுக்கு திடுக்கம் இருக்காது.) இன்னும், எல்லோரும் அவனிடம் பணிந்தவர்களாக வருவார்கள்."},{"id":88,"translation":"(நபியே!) நீர் மலைகளைப் பார்த்து அவற்றை உறுதியாக நிற்பதாகக் கருதுவீர். அவையோ (அந்நாளில்) மேகங்கள் செல்வதைப் போன்று சென்றுகொண்டிருக்கும். (இது,) எல்லாவற்றையும் செம்மையாகச் செய்த அல்லாஹ்வின் செயலாகும். நிச்சயமாக அவன் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":89,"translation":"(லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற) நன்மையை யார் கொண்டு வருவாரோ அவருக்கு அதன் காரணமாக (சொர்க்கமாகிய) சிறந்தது (கூலியாக) உண்டு. இன்னும், அவர்கள் அந்நாளில் திடுக்கத்திலிருந்து பாதுகாப்புப் பெறுவார்கள்."},{"id":90,"translation":"இன்னும், யார் (இணைவைத்தல், பாவம் என்ற) தீமையை கொண்டுவருவாரோ அவர்களுடைய முகங்கள் நரகத்தில் தள்ளப்படும். “நீங்கள் செய்துகொண்டு இருந்ததற்கே தவிர கூலி கொடுக்கப்படுவீர்களா?” (என்று அவர்களிடம் கூறப்படும்.)"},{"id":91,"translation":"(நபியே கூறுவீராக!) நான் கட்டளை இடப்பட்டதெல்லாம், இந்த ஊரின் இறைவனை வணங்குவதற்குத்தான். அவன் அதை புனிதப்படுத்தியுள்ளான். இன்னும், அவனுக்குத்தான் எல்லாப் பொருள்களும் உரிமையானவையாகும். இன்னும், நான் (அவனுக்கு முற்றிலும் பணிந்து, நபி இப்ராஹீமுடைய மார்க்கத்தை பின்பற்றுகிற) முஸ்லிம்களில் ஆகவேண்டும் என்று கட்டளை இடப்பட்டுள்ளேன்."},{"id":92,"translation":"இன்னும், (இந்த) குர்ஆனை நான் (மக்களுக்கு முன்) ஓதுவதற்கும் (கட்டளை இடப்பட்டுள்ளேன்). ஆகவே, யார் (அந்த குர்ஆன் மூலம்) நேர்வழி பெறுகிறாரோ அவர் நேர்வழி பெறுவதெல்லாம் அவரது நன்மைக்காகத்தான். யார் வழி கெடுகிறானோ (அவனுக்கு நபியே நீர் உம்மைப் பற்றி) கூறுவீராக! “நான் எல்லாம் எச்சரிப்பவர்களில் உள்ளவன்தான். (நான் எச்சரித்து விட்டேன். நீங்கள் என்னை பின்பற்றினால் நீங்கள் அடையப்போகும் நன்மை உங்களுக்குத்தான். நீங்கள் என்னை நிராகரித்தால் அதனால் ஏற்படும் தீமை உங்களுக்குத்தான்.)”"},{"id":93,"translation":"இன்னும் (நபியே!) கூறுவீராக: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே. அவன் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிப்பான். அச்சமயம் அவற்றை நீங்கள் (உண்மையென) அறிவீர்கள்.” இன்னும், (நபியே!) உமது இறைவன் (இணைவைப்பவர்களாகிய) நீங்கள் செய்பவற்றை கவனிக்காதவனாக இல்லை. (அவர்கள் ஒரு தவணைக்காகவே விட்டு வைக்கப்படுகிறார்கள். கண்டிப்பாக அவர்களுக்கு அழிவும் உமக்கு வெற்றியும் உண்டு.)"}]},{"id":28,"verses":[{"id":1,"translation":"தா சீன். (இப்போது ஓதிகாட்டப்படும்) இவை இந்த குர்ஆனுடைய இன்னும் தெளிவான வேதத்தின் வசனங்கள் ஆகும்."},{"id":2,"translation":"(உமக்கு இறக்கப்படும் வசனங்களாகிய) இவை, தெளிவான வேதத்தின் வசனங்களாகும்."},{"id":3,"translation":"நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்காக மூஸா இன்னும் ஃபிர்அவ்னின் செய்தியை உண்மையாக நாம் உமக்கு ஓதி காண்பிக்கிறோம்."},{"id":4,"translation":"நிச்சயமாக ஃபிர்அவ்ன் (எகிப்து) பூமியில் (மக்களை அடக்கி ஆண்டு) பெருமையடித்(து வந்)தான். இன்னும், அங்குள்ளவர்களை பல பிரிவுகளாக ஆக்கினான். அவர்களில் ஒரு வகுப்பாரை (-இஸ்ரவேலர்களை) பலவீனப்படுத்தி (அவர்களை துன்புறுத்தி)னான். அவர்களின் ஆண் பிள்ளைகளை அவன் கொல்வான். இன்னும், அவர்களின் பெண் (பிள்ளை)களை வாழவிடுவான். நிச்சயமாக அவன் கெடுதி செய்வோரில் ஒருவனாக இருந்தான்."},{"id":5,"translation":"இன்னும், பூமியில் பலவீனப்படுத்தப்பட்டவர்கள் மீது நாம் அருள்புரிவதற்கும் அவர்களை ஆட்சியாளர்களாக நாம் ஆக்குவதற்கும் (ஃபிர்அவ்னும் அவனுடைய சமுதாயமும் அழிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் பூமிக்கும் சொத்துகளுக்கும்) சொந்தக்காரர்களாக அவர்களை நாம் ஆக்குவதற்கும் நாடினோம்."},{"id":6,"translation":"இன்னும், பூமியில் அவர்களுக்கு நாம் (மக்கள் மீது ஆட்சி செய்கிற) ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதற்கும்; ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் இராணுவங்களுக்கு அவர்கள் (-இஸ்ரவேலர்கள்) மூலமாக அச்சப்பட்டுக் கொண்டிருந்ததை நாம் காண்பிப்பதற்கும் நாடினோம்."},{"id":7,"translation":"இன்னும், மூஸாவின் தாயாருக்கு (மூஸாவை அவர் பெற்றெடுத்த பின்னர்) நாம் உள்ளத்தில் உதிப்பை போட்டோம்: “(குழந்தையாக இருக்கும்) அவருக்கு நீ பாலூட்டு! அவர் மீது (எதிரிகளின் பார்வை பட்டு, அவர்கள் அவரை கொன்றுவிடுவார்கள் என்று) நீ பயந்தால் அவரை கடலில் எறிந்து விடு! பயப்படாதே! கவலைப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உம்மிடம் திரும்பக் கொண்டு வருவோம். இன்னும், அவரை (நமது) தூதர்களில் (ஒருவராக) ஆக்குவோம்.”"},{"id":8,"translation":"ஆக, ஃபிர்அவ்னின் குடும்பத்தினர் அவரைக் கண்டெடுத்தனர். முடிவில் அவர் அவர்களுக்கு எதிரியாகவும் கவலையாகவும் ஆகுவதற்காக இவ்வாறு நிகழ்ந்தது. நிச்சயமாக ஃபிர்அவ்ன், ஹாமான், இன்னும் அவ்விருவரின் ராணுவங்கள் (குற்றம் புரிகின்ற) பாவிகளாக இருந்தனர்."},{"id":9,"translation":"ஃபிர்அவ்னின் மனைவி கூறினாள்: “(இந்தக் குழந்தை) எனக்கும் உனக்கும் கண்குளிர்ச்சியாக இருக்கும். அதைக் கொல்லாதீர்கள்! அது நமக்கு நன்மை தரலாம். அல்லது, அதை நாம் (நமக்கு) பிள்ளையாக வைத்துக் கொள்ளலாம்.” (இவரின் கரத்தினால்தான் தங்களுக்கு அழிவு ஏற்படும் என்பதை அப்போது) அவர்கள் உணரவில்லை."},{"id":10,"translation":"மூஸாவின் தாயாருடைய உள்ளம் (மூஸாவின் நினைவைத் தவிர மற்ற அனைத்திலிருந்தும்) வெற்றிடமாக ஆகிவிட்டது. அவளுடைய உள்ளத்தை நாம் உறுதிப்படுத்தி இருக்கவில்லையெனில் நிச்சயமாக அவள் அவரை (பற்றிய செய்தியை) வெளிப்படுத்தி இருக்கக்கூடும். அவள் நம்பிக்கையாளர்களில் ஆகவேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தோம்)."},{"id":11,"translation":"(-மூஸாவின் தாயார்) அவருடைய சகோதரிக்கு, “நீ அவரைப் பின்தொடர்ந்து செல்” என்று கூறினாள். ஆக, அவள் அவரை (யார் எடுக்கிறார்கள் என்பதை) தூரத்திலிருந்து பார்த்துவிட்டாள். எனினும், அவர்கள் (-ஃபிர்அவ்னின் குடும்பத்தார் அவருடைய சகோதரியாகிய இவள் அவரை கண்காணித்தவளாக பின்தொடர்கிறாள் என்பதை) உணரவில்லை."},{"id":12,"translation":"இன்னும், (அவருடைய தாயார் வருவதற்கு) முன்னர் பாலூட்டுகின்ற தாய்களை (அவர் அவர்களிடமிருந்து பால் அருந்தாமல் இருக்கும்படி) அவர் மீது நாம் தடுத்துவிட்டோம். ஆக, (அவரது சகோதரி) கூறினாள்: “ஒரு வீட்டாரை நான் உங்களுக்கு அறிவிக்கலாமா? அவர்கள் உங்களுக்காக அவரை பொறுப்பேற்று (நன்கு கவனித்து)க் கொள்வார்கள். அவர்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்கள் ஆவர்.”"},{"id":13,"translation":"ஆக, அவரை அவருடைய தாயாரிடம் அவளது கண் குளிர்வதற்காகவும், அவள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை அவள் அறிவதற்காகவும் நாம் திரும்பக் கொண்டுவந்தோம். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறியமாட்டார்கள்."},{"id":14,"translation":"அவர் தனது முழு வலிமையை அடைந்து, அவர் (அறிவு) முதிர்ச்சி பெற்றபோது (முந்திய நபிமார்களின் மார்க்கத்தைப் பற்றிய) ஞானத்தையும் (முந்திய வேதங்கள் பற்றிய) கல்வி அறிவையும் நாம் அவருக்கு தந்தோம். இன்னும், இவ்வாறே நன்மை செய்பவர்களுக்கு நாம் கூலி தருகிறோம்."},{"id":15,"translation":"நகரவாசிகள் கவனமற்று இருந்த நேரத்தில் - மூஸா அந்த நகரத்தில் நுழைந்தார். ஆக, அவர் அ(ந்த நகரத்தின் ஒரு பகு)தி(யி)ல் இரு ஆடவர்களைக் கண்டார். அவ்விருவரும் சண்டை செய்தனர். இவர் அவருடைய பிரிவை சேர்ந்தவர். இன்னும், இவரோ அவருடைய எதிரிகளில் உள்ளவர். இவருடைய பிரிவைச் சேர்ந்தவன் தனது எதிரிகளில் உள்ளவனுக்கு எதிராக அவரிடம் உதவி கேட்டான். ஆக, மூஸா அவனுக்கு குத்து விட்டார். ஆக, அவனை முடித்து விட்டார். (பிறகு தான் செய்த தவறை உணர்ந்து அவர்) கூறினார்: “இது ஷைத்தானின் செயலில் உள்ளதாகும். நிச்சயமாக அவன் வழி கெடுக்கின்ற தெளிவான எதிரி ஆவான்.”"},{"id":16,"translation":"(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் எனக்கு தீங்கு இழைத்துக் கொண்டேன். ஆகவே, என்னை மன்னித்துவிடு.” ஆக, அவன் அவரை மன்னித்தான். நிச்சயமாக அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":17,"translation":"(மேலும்) அவர் கூறினார்: “என் இறைவா! நீ (என்னை மன்னித்து) எனக்கு அருள்புரிந்து விட்டதால், குற்றவாளிகளுக்கு உதவுபவனாக (இனி ஒருக்காலும்) நான் இருக்கவே மாட்டேன்.”"},{"id":18,"translation":"ஆக, அந்த நகரத்தில் பயந்தவராக (செய்திகளை) எதிர் பார்த்தவராக (மறுநாள்) காலையை அவர் அடைந்தார். அப்போது நேற்று அவரிடத்தில் உதவி தேடிய (அவரது இனத்த)வன் (இன்றும் அவரிடம் உதவி தேடியவனாக) அவரை கத்தி அழைத்தான். அவனுக்கு மூஸா கூறினார்: “நிச்சயமாக நீ ஒரு தெளிவான மூடன் ஆவாய்.”"},{"id":19,"translation":"ஆக, அவர்கள் இருவருக்கும் எதிரியாக உள்ளவனை அவர் தண்டிக்க நாடியபோது (அவரை உதவிக்கு அழைத்தவன் மூஸா தன்னை கொல்ல நினைக்கிறார் என்று கருதி) அவன் கூறினான்: “மூஸாவே! நேற்று ஓர் உயிரை நீ கொன்றது போன்று நீ என்னை (இன்று) கொன்றுவிட நாடுகிறாயா? பூமியில் நீ அநியாயக்காரனாக (வன்முறையாளனாக) ஆகுவதைத் தவிர நீ நாடவில்லை. இன்னும், சீர்திருத்தவாதிகளில் நீ ஆகுவதை நீ நாடவில்லை.”"},{"id":20,"translation":"அந்த நகரத்தின் இறுதியிலிருந்து ஓர் ஆடவர் விரைந்தவராக வந்து கூறினார்: “மூஸாவே! (ஃபிர்அவ்னின்) பிரமுகர்கள் உம்மைக் கொல்வதற்கு உமது விஷயத்தில் ஆலோசிக்கிறார்கள். ஆகவே, நீர் வெளியேறிவிடும்! நிச்சயமாக நான் உமக்கு நன்மையை நாடுபவர்களில் இருக்கிறேன்.”"},{"id":21,"translation":"ஆக, அவர் (தனது குற்றத்தின் தண்டனையை) பயந்தவராக (தன்னைத் துரத்தி பிடிக்க வருபவர்களை) கண்காணித்தவராக அதிலிருந்து வெளியேறினார். அவர் கூறினார்: “என் இறைவா! அநியாயக்கார மக்களிடமிருந்து என்னை காப்பாற்று!”"},{"id":22,"translation":"மேலும், அவர் மத்யன் நகரத்தை நோக்கி முன்னேறி சென்றபோது கூறினார்: “என் இறைவன் நேரான பாதையில் என்னை நிச்சயமாக வழி நடத்துவான்.”"},{"id":23,"translation":"அவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற சில மக்களைக் கண்டார். அவர்கள் அல்லாமல் (தங்கள் ஆடுகளை மக்களின் ஆடுகளை விட்டும், அவை அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினார்கள்: “மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளுக்கு நீர் புகட்டிவிட்டு, அவற்றை இங்கிருந்து) வெளியேற்றாதவரை நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட இயலாது. இன்னும், எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார்.”"},{"id":24,"translation":"ஆக, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலி(ல் அமர்ந்து இளைப்பாறுவதற்காக அத)ன் பக்கம் திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளி!)”"},{"id":25,"translation":"ஆக, அவ்விருவரில் ஒருத்தி (தன் முகத்தை மறைத்துக் கொண்டு) வெட்கத்துடன் நடந்து வந்து கூறினாள்: “நீ எங்களுக்காக (எங்கள் கால் நடைகளுக்கு) நீர் புகட்டியதற்குரிய கூலியை உமக்கு தருவதற்காக நிச்சயமாக என் தந்தை உம்மை அழைக்கிறார்.” ஆக, அவர் அவ(ளின் தந்தையா)ரிடம் வந்து, (தனது) சரித்திரத்தை அவருக்கு விவரித்தபோது, (அப்பெண்ணின் தந்தையாகிய) அவர் கூறினார்: “பயப்படாதே! அநியாயக்கார மக்களிடமிருந்து நீ தப்பித்து விட்டாய்.”"},{"id":26,"translation":"அவ்விருவரில் ஒருத்தி கூறினாள்: என் தந்தையே! (நம்மிடம் வேலை செய்ய) அவரை கூலிக்கு அமர்த்துவீராக! நீர் கூலிக்கு அமர்த்துபவர்களில் சிறந்தவர் (யாரென்றால்), பலசாலி, நம்பிக்கையாளர் ஆவார்."},{"id":27,"translation":"அவர் கூறினார்: நீர் எனக்கு எட்டு ஆண்டுகள் (என் கால்நடைகளை மேய்ப்பதை) எனக்குக் கூலியாக (-மஹ்ராக) தரவேண்டும் என்ற நிபந்தனையின்படி நான் எனது இந்த இரண்டு பெண்பிள்ளைகளில் ஒருத்தியை உமக்கு மண முடித்துத்தர விரும்புகிறேன். ஆக, நீர் பத்து ஆண்டுகளாக பூர்த்திசெய்தால் அது உன் புறத்திலிருந்து நீர் செய்யும் உதவியாகும். நான் உன்மீது சிரமம் ஏற்படுத்த விரும்பவில்லை. அல்லாஹ் நாடினால் என்னை நல்லோரில் நீ காண்பாய்."},{"id":28,"translation":"(மூஸா) கூறினார்: “எனக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் நாம் செய்த ஒப்பந்தமாகும் இது. இரண்டு தவணையில் எதை நான் நிறைவேற்றினாலும் (அதைவிட அதிகம் என்னிடம் கேட்டு) என் மீது வரம்பு மீறுதல் கூடாது. இன்னும், நாம் கூறுவதற்கு அல்லாஹ் பொறுப்பாளன் (சாட்சியாளன்) ஆவான்.”"},{"id":29,"translation":"ஆக, மூஸா (அந்த) தவணையை முடித்து, தனது குடும்பத்தினரோடு (புறப்பட்டு) சென்றபோது மலையின் அருகில் நெருப்பைப் பார்த்தார். தனது குடும்பத்தினரிடம் கூறினார்: “நீங்கள் (இங்கேயே) தாமதியுங்கள், நிச்சயமாக நான் ஒரு நெருப்பைப் பார்த்தேன். அதிலிருந்து ஒரு செய்தியை; அல்லது, நீங்கள் குளிர்காய்வதற்காக தீ கொள்ளியை நான் உங்களிடம் கொண்டு வருகிறேன்.”"},{"id":30,"translation":"ஆக, அவர் அதனிடம் (-அந்த நெருப்புக்கு அருகில்) வந்தபோது பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து அந்த மரத்தின் பாக்கியமான இடத்தில் (இவ்வாறு) சப்தமிட்டு அழைக்கப்பட்டார்: அதாவது, “மூஸாவே! நிச்சயமாக (உம்மை அழைக்கிற) நான்தான் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் ஆவேன்.”"},{"id":31,"translation":"“இன்னும், உமது கைத்தடியை எறிவீராக!” ஆக, அது ஒரு பெரிய பாம்பைப் போன்று நெளிவதாக அவர் பார்த்தபோது புறமுதுகிட்டவராக திரும்பி ஓடினார். (பயத்தால்) அவர் (திரும்பி) பார்க்கவில்லை. “மூஸாவே! முன்னே வருவீராக! பயப்படாதீர்! நிச்சயமாக (பயப்படுகின்ற அனைத்திலிருந்தும்) நீர் பாதுகாப்பு பெற்றவர்களில் உள்ளவர்.”"},{"id":32,"translation":"“உமது கையை உமது சட்டைப் பையில் நுழைப்பீராக! அது குறை இன்றி (மின்னும்) வெண்மையாக வெளியேவரும். இன்னும், (பாம்பைப் பார்த்து நீர்) பயந்து விட்டதால் உமது கையை உம்முடன் அணைப்பீராக! (உமக்கு அந்த பயம் போய்விடும்.) ஆக, இவை இரண்டும் உமது இறைவன் புறத்திலிருந்து ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்கள் பக்கம் (நீர் நபியாக செல்வதற்குரிய) இரண்டு அத்தாட்சிகளாகும். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருக்கிறார்கள்.”"},{"id":33,"translation":"அவர் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக நான் அவர்களில் ஓர் உயிரைக் கொன்று இருக்கிறேன். ஆகவே, அவர்கள் என்னை (பழிக்குப்பழி) கொல்வார்கள் என்று நான் பயப்படுகிறேன்.”"},{"id":34,"translation":"இன்னும், “எனது சகோதரர் ஹாரூன் இருக்கிறார். அவர் என்னைவிட தெளிவான நாவன்மை உடையவர். ஆகவே, அவரை என்னுடன் உதவியாளராக அனுப்பு! அவர் என்னை உண்மைப்படுத்துவார். நிச்சயமாக நான் - அவர்கள் என்னை பொய்ப்பிப்பார்கள் என்று - பயப்படுகிறேன்.”"},{"id":35,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “உமது சகோதரரை (உம்முடன் நபியாக அனுப்புவது) கொண்டு உமது புஜத்தை பலப்படுத்துவோம். இன்னும், உம் இருவருக்கும் ஓர் அத்தாட்சியை ஆக்குவோம். ஆகவே, அவர்கள் உங்கள் இருவர் பக்கம் (எந்த தீங்கையும்) சேர்ப்பிக்க முடியாது. நீங்கள் இருவரும் உங்களை பின்பற்றியவர்களும்தான் நமது அத்தாட்சிகளைக் கொண்டு (ஃபிர்அவ்னையும் அவனது கூட்டத்தையும்) மிகைத்தவர்கள் ஆவீர்கள்.”"},{"id":36,"translation":"ஆக, நமது தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் மூஸா வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இது (உம்மால்) இட்டுக்கட்டப்பட்ட சூனியமே தவிர இல்லை. இன்னும், எங்கள் முந்திய மூதாதைகளில் இதைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதில்லை.”"},{"id":37,"translation":"இன்னும், மூஸா கூறினார்: “என் இறைவனிடமிருந்து நேர்வழியை கொண்டுவந்தவரையும் யாருக்கு மறுமையின் (நல்ல) முடிவு ஆகிவிடுமோ அவரையும் அவன் நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக, (நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”"},{"id":38,"translation":"ஃபிர்அவ்ன் கூறினான்: “முக்கிய பிரமுகர்களே! என்னை அன்றி (வேறு) ஒரு கடவுளை உங்களுக்கு நான் அறியமாட்டேன். ஆக, ஹாமானே! குழைத்த களிமண்ணை நெருப்பூட்டி செங்கல்லாக செய். ஆக, முகடுள்ள ஓர் உயரமான கோபுரத்தை எனக்காக உருவாக்கு. நான் மூஸாவின் கடவுளை (வானத்தில்) தேடிப்பார்க்க வேண்டும். இன்னும், நான் அவரை பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறேன்.”"},{"id":39,"translation":"அவனும் அவனுடைய ராணுவங்களும் பூமியில் நியாயமின்றி (சத்தியத்தை ஏற்காமல்) பெருமையடித்தனர். இன்னும், நிச்சயமாக அவர்கள் நம்மிடம் திரும்பக் கொண்டு வரப்பட மாட்டார்கள் என்று நினைத்தனர்."},{"id":40,"translation":"ஆகவே, அவனையும் அவனுடைய ராணுவங்களையும் நாம் ஒன்றிணைத்து அவர்களை கடலில் எறிந்தோம். ஆக, (நபியே!) (நம்பிக்கையற்ற) அநியாயக்காரர்களின் முடிவு எப்படி இருந்தது என்று பார்ப்பீராக."},{"id":41,"translation":"அவர்களை நரகத்தின் பக்கம் அழைக்கிற தலைவர்களாக ஆக்கினோம். மறுமை நாளில் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்."},{"id":42,"translation":"இவ்வுலகத்திலும் மறுமையிலும் தொடர்ச்சியாக சாபம் அவர்களை சேரும்படி செய்தோம். இன்னும், (கடுமையான தண்டனையால்) அவர்கள் இழிவுபடுத்தப்பட்டவர்களில் இருப்பார்கள்."},{"id":43,"translation":"முந்திய தலைமுறையினர்களை நாம் அழித்த பின்னர் மக்களுக்கு ஒளியாகவும் நேர்வழியாகவும் கருணையாகவும் மூஸாவிற்கு நாம் திட்ட வட்டமாக வேதத்தைக் கொடுத்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறவேண்டும் என்பதற்காக."},{"id":44,"translation":"மூஸாவிடம் நாம் (தூதுத்துவத்தையும் பல) சட்டங்களை(யும்) ஒப்படைத்தபோது (மலையின்) மேற்கு பக்கத்தில் (நபியே!) நீர் இருக்கவில்லை. இன்னும், (அந்த இடத்தில் அவருடன்) இருந்தவர்களிலும் நீர் இருக்கவில்லை. (அப்படி இருந்தும் மூஸாவைப் பற்றிய வரலாற்றை நீங்கள் சரியாகக் கூறுகிறீர்கள். ஆகவே, உமது தூதுத்துவத்தை வேதக்காரர்கள் எப்படி மறுக்கிறார்கள்?)"},{"id":45,"translation":"என்றாலும், நாம் பல தலைமுறையினரை (அவருக்குப் பின்) உருவாக்கினோம். ஆக, அவர்களுக்கு காலம் நீண்டு சென்றது. (சில காலம் கழிந்தது. ஆகவே, அவர்கள் அல்லாஹ்விடம் கொடுத்த வாக்கை மறந்தனர்.) இன்னும் (நபியே!) நீர் மத்யன் நகரவாசிகளுடன் தங்கி(யவராகவும்) அவர்கள் மீது நமது வசனங்களை ஓதி காண்பிப்பவராக(வும்) நீர் இல்லை. (இவற்றில் எந்த ஒரு சம்பவத்திலும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.) என்றாலும், (நாம்தான் அவற்றை எல்லாம் செய்தோம். இன்னும், இறுதி நபி வரை தொடர்ந்து) தூதர்களை நாம் அனுப்பக்கூடியவர்களாக இருந்தோம்."},{"id":46,"translation":"(அந்த) மலைக்கு அருகில் நாம் (மூஸாவை) அழைத்தபோது நீர் (அங்கு) இருக்கவில்லை. எனினும், (முந்திய நபிமார்களின் வரலாறுகளை உமக்கு நாம் எடுத்துக்கூறியதும் உம்மை இவர்களுக்கு தூதராக அனுப்பியதும்) உமது இறைவனின் அருளினால் ஆகும். ஏனெனில், ஒரு மக்களை - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக - நீர் எச்சரிக்க வேண்டும். உமக்கு முன்னர் அந்த மக்களுக்கு எச்சரிப்பாளர் எவரும் வரவில்லை."},{"id":47,"translation":"அவர்களின் கரங்கள் முற்படுத்தியதால் அவர்களுக்கு ஒரு சோதனை (தண்டனை ஒன்று) ஏற்பட்டு, பிறகு, எங்கள் இறைவா! நீ எங்களிடம் ஒரு தூதரை அனுப்பி இருக்கக்கூடாதா? ஆக, நாங்கள் உனது வசனங்களை பின்பற்றி இருப்போமே! இன்னும், நம்பிக்கையாளர்களில் நாங்கள் ஆகியிருப்போமே! என்று அவர்கள் கூறாதிருப்பதற்காக (உம்மை அவர்களுக்கு தூதராக அனுப்பினோம். இல்லை என்றால் உம்மை தூதராக அனுப்புவதற்கு முன்னரே நாம் அவர்களை தண்டித்திருப்போம்)."},{"id":48,"translation":"ஆக, நம்மிடமிருந்து சத்திய தூதர் அவர்களுக்கு வந்தபோது, “மூஸாவிற்கு வழங்கப்பட்ட(வேதத்)தை போன்று (ஒரு வேதம் அவருக்கும்) வழங்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று கூறினார்கள். இதற்கு முன்னர் மூஸாவிற்கு வழங்கப்பட்டதை இவர்கள் (-இந்த யூதர்கள்) மறுக்கவில்லையா? (மேலும், அந்த யூதர்கள்) கூறினார்கள்: (மூஸாவின் வேதமும் ஈஸாவின் வேதமும் இவை இரண்டும்) தங்களுக்குள் உதவி செய்த இரண்டு சூனியங்களாகும். இன்னும், (உமக்கு இந்த வேதம் வழங்கப்பட்ட பின்னர்) அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் (இந்த பூமியில் இறக்கப்பட்ட வேதங்கள்) அனைத்தையும் மறுப்பவர்கள் ஆவோம்.”"},{"id":49,"translation":"(நபியே!) கூறுவீராக: “ஆக, (தவ்ராத்தும் இன்ஜீலும் சூனியம் என்று நீங்கள் கூறுவதில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், (தவ்ராத், இன்ஜீல் ஆகிய) இவ்விரண்டை விட மிக்க நேர்வழி காட்டக்கூடிய ஒரு வேதத்தை அல்லாஹ்விடமிருந்து கொண்டு வாருங்கள். நான் அதை பின்பற்றுகிறேன்.”"},{"id":50,"translation":"ஆக, அவர்கள் உமக்கு பதிலளிக்கவில்லை என்றால் (அவர்களைப் பற்றி) நீர் அறிவீராக! “நிச்சயமாக அவர்கள் பின்பற்றுவதெல்லாம் தங்கள் மன விருப்பங்களைத்தான்.” அல்லாஹ்வின் நேர்வழி இன்றி தனது மன விருப்பத்தை பின்பற்றியவனை விட பெரும் வழிகேடன் யார்? நிச்சயமாக அல்லாஹ் (அவனது கட்டளைகளை மீறுகின்ற) அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":51,"translation":"திட்டவட்டமாக அவர்களுக்கு (-குறைஷிகளுக்கும் யூதர்களுக்கும் அவர்களுக்கு முன்னர் நிராகரித்தவர்களுக்கும் இறக்கப்பட்ட தண்டனைகள் பற்றிய) செய்தியை நாம் சேர்ப்பித்தோம், அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக."},{"id":52,"translation":"(குர்ஆனாகிய) இதற்கு முன்னர் நாம் எவர்களுக்கு வேதத்தை கொடுத்தோமோ அவர்க(ளில் உள்ள நல்லவர்க)ள் இ(ந்த வேதத்)தையும் (அதை கொண்டு வந்த தூதரையும் உண்மையில்) நம்பிக்கை கொள்வார்கள்."},{"id":53,"translation":"இன்னும், அவர்களுக்கு முன் (இந்த வேதம்) ஓதப்பட்டால் அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் இதை நம்பிக்கை கொண்டோம். நிச்சயமாக இது எங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையான வேதம்தான். நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னரும் (எங்கள் வேதத்தில் கூறப்பட்ட பிரகாரம் இறுதி நபியையும் இறுதி வேதத்தையும் நம்பிக்கை கொண்ட) முஸ்லிம்களாகவே இருந்தோம்.”"},{"id":54,"translation":"அவர்கள் (முந்திய வேதத்தை பின்பற்றுவதிலும் இந்தத் தூதரை பின்பற்றுவதிலும் உறுதியுடன்) பொறுமையாக இருந்ததால் அவர்கள் தங்கள் (நற்) கூலியை இருமுறை வழங்கப்படுவார்கள். இன்னும், அவர்கள் நன்மையினால் தீமையைத் தடுப்பார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்."},{"id":55,"translation":"இன்னும், அவர்கள் வீணானவற்றை செவியுற்றால் அதை புறக்கணித்து (விலகி சென்று) விடுவார்கள்; எங்களுக்கு எங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்); உங்களுக்கு உங்கள் செயல்கள் (உடைய கூலி கிடைக்கும்); உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும்; (நாங்கள் உங்களுக்கு தொந்தரவு தரமாட்டோம்;) அறியாதவர்களிடம் (பேசுவதையும் தர்க்கிப்பதையும்) நாங்கள் விரும்ப மாட்டோம் என்று கூறுவார்கள்."},{"id":56,"translation":"(நபியே!) நிச்சயமாக நீர் விரும்பிய நபரை நீர் நேர்வழி செலுத்த முடியாது. என்றாலும், அல்லாஹ், எவரை நாடுகிறானோ அவரை நேர்வழி செலுத்துகிறான். இன்னும், அவன்தான் நேர்வழி செல்பவர்களை மிக அறிந்தவன்."},{"id":57,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாம் உம்முடன் நேர்வழியை பின்பற்றினால் எங்கள் பூமியிலிருந்து (உடனே எங்கள் எதிரிகளால்) நாங்கள் வெளியேற்றப்பட்டிருப்போம்.” (இவ்வாறு அவர்கள் சொல்வது பொய்.) நாம் அவர்களுக்காக பாதுகாப்பான புனித தலத்தை ஸ்திரப்படுத்தித் தரவில்லையா? எல்லா வகையான கனிகளும் நம் புறத்திலிருந்து உணவாக அங்கு கொண்டு வரப்படுகின்றன. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் அருட்கொடையின் மதிப்பை) அறியமாட்டார்கள்."},{"id":58,"translation":"எத்தனையோ ஊர்களை நாம் அழித்தோம். அவர்கள் தங்களது (வசதியான) வாழ்க்கையால் எல்லை மீறி நிராகரித்தனர். இதோ அவர்களது இல்லங்கள் அவர்களுக்கு பின்னர் குறைவாகவே தவிர வசிக்கப்படாமல் இருக்கின்றன. நாமே (அனைத்திற்கும்) வாரிசுகளாக (உண்மையான உரிமையாளர்களாக) இருக்கிறோம்."},{"id":59,"translation":"உமது இறைவன் (மக்காவை சுற்றி உள்ள) ஊர்களை அழிப்பவனாக இல்லை, (புனித மக்காவாகிய) அதனுடைய தலைநகரில் அவர்களுக்கு முன் நமது வசனங்களை ஓதிக் காண்பிக்கிற ஒரு தூதரை (-உம்மை) அனுப்புகிற வரை. (பொதுவாக எந்த) ஊர்களை(யும்) நாம் அழிப்பவர்களாக இல்லை, அதில் இருப்பவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும்போதே தவிர."},{"id":60,"translation":"நீங்கள் (உலக) பொருளில் எது கொடுக்கப்பட்டீர்களோ அது இவ்வுலக வாழ்க்கையின் இன்பமும் அதன் அலங்காரமும் ஆகும். (மறுமையில்) அல்லாஹ்விடம் உள்ளதுதான் சிறந்ததும் நிலையானதும் ஆகும். (அதை) நீங்கள் சிந்தித்து புரியமாட்டீர்களா?"},{"id":61,"translation":"ஆக, எவருக்கு நாம் அழகிய வாக்குகளை வாக்களித்து, அவர் அவற்றை (மறுமையில்) அடைவாரோ அ(ந்த நம்பிக்கையாளரான நல்ல)வர் இவ்வுலக வாழ்க்கையின் இன்பத்தை நாம் யாருக்கு கொடுத்து, பிறகு, அவர் மறுமை நாளில் நரகத்தில் தள்ளப்படுவாரோ அ(ந்த நிராகரிப்பாளரான கெட்ட)வரைப் போன்று ஆவாரா?"},{"id":62,"translation":"இன்னும், (இணைவைத்து வணங்கிய) அவர்களை அவன் அழைத்து, (இவை எங்கள் தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்த எனக்கு இணையாக வணங்கப்பட்ட (உங்கள்) தெய்வங்கள் எங்கே? என்று அவன் கேட்கும் நாளில்,"},{"id":63,"translation":"(அல்லாஹ்வின் சாப) வாக்கு உறுதியாகிவிட்டவர்கள் (-ஷைத்தான்கள்) கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நாங்கள் வழிகெடுத்தவர்கள் இவர்கள்தான். நாங்கள் வழிகெட்டது போன்றே இவர்களையும் நாங்கள் வழிகெடுத்தோம். (இப்போது அவர்களை விட்டும்) விலகி உன் பக்கம் நாங்கள் ஒதுங்கி விட்டோம். அவர்கள் எங்களை வணங்கிக் கொண்டிருக்கவில்லை.”"},{"id":64,"translation":"இன்னும், (இணைவைப்பாளர்களை நோக்கி) கூறப்படும்: “(நீங்கள் அல்லாஹ்விற்கு இணைவைத்து வணங்கிய) உங்கள் தெய்வங்களை அழையுங்கள்!” ஆக, அவர்கள் அவற்றை அழைப்பார்கள். ஆனால், அவர்களுக்கு அவை பதில் தரமாட்டா. இன்னும், (அவர்கள் எல்லோரும் தாங்கள் அடையப்போகும்) தண்டனையை (கண்கூடாக)க் காண்பார்கள். “நிச்சயமாக தாங்கள் நேர்வழி பெற்றவர்களாக இருந்திருக்க வேண்டுமே!” (என்று அப்போது ஆசைப்படுவார்கள்!)"},{"id":65,"translation":"இன்னும், அவன் அவர்களை அழைக்கின்ற நாளில், “நீங்கள் தூதர்களுக்கு என்ன பதிலளித்தீர்கள்” என்று அவன் கேட்பான்."},{"id":66,"translation":"ஆக, அந்நாளில் (ஏற்படும் திடுக்கத்தால் அவர்கள் என்ன சொல்ல நினைத்தார்களோ அந்த) செய்திகள் அவர்களுக்கு தெரியாமல் போய் விடும். ஆகவே, அவர்கள் (தங்களுக்குள் ஒருவர் மற்றவரிடம் எதையும்) கேட்டுக்கொள்ள மாட்டார்கள்."},{"id":67,"translation":"ஆக, யார் திருந்தி, மன்னிப்புக் கேட்டு, நம்பிக்கைகொண்டு, நற்செயலை செய்வாரோ, அவர் வெற்றியாளர்களில் ஆகிவிடுவார்."},{"id":68,"translation":"இன்னும், உமது இறைவன் தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், (தான் விரும்பியவர்களை நேர்வழிக்கு) தேர்ந்தெடுக்கிறான். (இணைவைக்கின்ற) அவர்களுக்கு (அல்லாஹ்வின் மீது ஆட்சேபனை செய்ய எந்த) உரிமையும் இல்லை. அல்லாஹ் மகா பரிசுத்தமானவன். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டு அவன் மிக உயர்ந்தவனாக இருக்கிறான்."},{"id":69,"translation":"இன்னும், அவர்களது நெஞ்சங்கள் மறைக்கின்றவற்றையும் அவர்கள் பகிரங்கப்படுத்துபவற்றையும் உமது இறைவன் நன்கறிகிறான்."},{"id":70,"translation":"அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. இவ்வுலகிலும் மறுமையிலும் அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. இன்னும், தீர்ப்பளித்தல் அவனுக்கே உரிமையானது! இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":71,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் உங்கள் மீது இரவை மறுமை நாள் வரை (நீடித்திருக்கும்படி) நிரந்தரமானதாக ஆக்கிவிட்டால் அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் உங்களுக்கு ஒளியைக் கொண்டு வருவார் என்று நீங்கள் அறிவியுங்கள். (இறைவனின் வசனங்களை) செவிமடு(த்து சிந்தி)க்க மாட்டீர்களா?”"},{"id":72,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் உங்கள் மீது பகலை மறுமை நாள் வரை (நீடித்திருக்கும்படி) நிரந்தரமாக ஆக்கிவிட்டால் நீங்கள் ஓய்வு எடுக்கக்கூடிய இரவை உங்களுக்கு அல்லாஹ்வை அன்றி வேறு எந்த கடவுள் கொண்டு வருவார்” என்பதை அறிவியுங்கள்! நீங்கள் (உங்கள் மீது இறை அருளாக இரவு, பகல் மாறி மாறி வருவதை) பார்(த்து அவற்றை செய்பவன்தான் வணங்கத் தகுதியானவன் என்பதை சிந்தி)க்க மாட்டீர்களா?"},{"id":73,"translation":"அவன் தனது கருணையினால் உங்களுக்கு இரவை, - அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்; பகலை, -(அதில் உங்கள் வாழ்வாதாரமாக இருக்கின்ற) அவனுடைய அருளை நீங்கள் தேடுவதற்காகவும்; நீங்கள் (இந்த அருட்கொடைகளுக்காக அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் - ஆக்கினான்."},{"id":74,"translation":"இன்னும், (இணைவைத்து வணங்கிய) அவர்களை அவன் அழைத்து, (இவை எங்கள் தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்த எனக்கு இணையாக வணங்கப்பட்ட தெய்வங்கள் எங்கே? என்று அவன் கேட்கும் நாளை நினைவு கூருங்கள்!"},{"id":75,"translation":"ஒவ்வொரு சமுதாயத்திலிருந்தும் ஒரு சாட்சியாளரை (-அதன் தூதரை) நாம் கொண்டு வருவோம். ஆக, (நீங்கள் இணைவைத்ததற்கு) உங்கள் ஆதாரங்களைக் கொண்டு வாருங்கள் என்று (அந்த சமுதாயத்திடம்) கூறுவோம். ஆக, அவர்கள், “நிச்சயமாக உண்மை(யான ஆதாரம்) அல்லாஹ்விற்கே உரியது” என்று அறிந்து கொள்வார்கள். இன்னும், அவர்கள் பொய்யாக கற்பனை செய்து (வணங்கி) கொண்டிருந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்."},{"id":76,"translation":"நிச்சயமாக காரூன் மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். ஆக, அவன் அவர்கள் மீது அளவு கடந்து அநியாயம் புரிந்தான். அவனுக்கு நாம் (பல) பொக்கிஷங்களிலிருந்து எதை நாம் கொடுத்தோமோ அதன் சாவிகளை பலமுடைய கூட்டத்தினர் சிரமத்தோடு சுமந்து செல்வார்கள். அந்த சமயத்தை நினைவு கூர்வீராக: “அவனுடைய மக்கள் அவனுக்கு (அறிவுரை) கூறினார்கள், (காரூனே!) மகிழ்ச்சியில் மமதை கொள்ளாதே! நிச்சயமாக அல்லாஹ் மகிழ்ச்சியில் மமதை கொள்வோரை நேசிக்க மாட்டான்."},{"id":77,"translation":"இன்னும், அல்லாஹ் உமக்கு வழங்கியவற்றில் மறுமை வீட்டை தேடிக்கொள்! இன்னும், உலகத்திலிருந்து (மறுமைக்கு நீ எடுத்துச் செல்லவேண்டிய) உனது பங்கை மறந்து விடாதே! இன்னும், அல்லாஹ் உனக்கு உபகாரம் செய்தது போன்று நீ (மக்களுக்கு) உபகாரம் செய்! பூமியில் கெடுதியை விரும்பாதே! நிச்சயமாக அல்லாஹ் கெடுதி செய்வோரை நேசிக்க மாட்டான்.”"},{"id":78,"translation":"அவன் கூறினான்: “இதை நான் வழங்கப்பட்டதெல்லாம் என்னிடம் உள்ள அறிவினால்தான்.” இவனுக்கு முன்னர் பல தலைமுறையினர்களில் இவனைவிட எவர்கள் கடுமையான பலமுடையவர்களாகவும் (செல்வங்களை) மிக அதிகமாக சேகரித்தவர்களாகவும் இருந்தார்களோ அவர்களை நிச்சயமாக அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை அவன் அறியவில்லையா? இன்னும், (மறுமை நாளில் நிராகரிப்பாளர்களான) குற்றவாளிகள் தங்கள் குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்படமாட்டார்கள். (அவர்கள் விசாரனையின்றி நரக நெருப்பில் வீசி எறியப்படுவார்கள்.)"},{"id":79,"translation":"ஆக, அவன் தனது அலங்காரத்தில் தனது மக்களுக்கு முன் வெளியில் வந்தான். உலக வாழ்க்கையை விரும்புகின்றவர்கள் (அவனைப் பார்த்து) கூறினார்கள்: “காரூனுக்கு வழங்கப்பட்டது போன்று நமக்கும் (செல்வங்கள்) இருக்க வேண்டுமே! நிச்சயமாக அவன் பெரும் பேருடையவன்.”"},{"id":80,"translation":"இன்னும், கல்வி வழங்கப்பட்டவர்கள் கூறினார்கள்: “உங்களுக்கு நாசம் உண்டாகட்டும்! நம்பிக்கை கொண்டு நன்மை செய்பவருக்கு அல்லாஹ்வின் நற்கூலி மிகச் சிறந்ததாகும்.” இதற்கு (-இந்த வார்த்தையை கூறுவதற்கு) பொறுமையாளர்களைத் தவிர வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள்."},{"id":81,"translation":"ஆக, அவனையும் அவனுடைய இல்லத்தையும் பூமியில் சொருகி விட்டோம். ஆக, அல்லாஹ்வை அன்றி உதவுகின்ற கூட்டம் ஏதும் அவனுக்கு இல்லை. அவன் (தனக்குத்தானே) உதவி செய்துகொள்பவர்களிலும் இல்லை."},{"id":82,"translation":"இன்னும், நேற்று அவனுடைய இடத்தை (-அவனைப் போன்று ஆகவேண்டுமென) ஆசைப்பட்டவர்கள் காலையில் கூறினார்கள்: “நாம் பார்க்கவில்லையா, நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். (தான் நாடியவர்களுக்கு) சுருக்கி விடுகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்கவில்லை என்றால் அவன் நம்மையும் (பூமியில்) சொருகியிருப்பான். நாம் பார்க்கவில்லையா, நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் வெற்றிபெற மாட்டார்கள்.”"},{"id":83,"translation":"(இன்பங்கள் நிறைந்த சொர்க்கமாகிய) அதுதான் மறுமை இல்லமாகும். எவர்கள் பூமியில் அநியாயத்தையோ (அராஜகத்தையோ,) கெடுதியையோ விரும்பவில்லையோ அவர்களுக்கு அதை நாம் ஆக்குவோம். முடிவான நற்பாக்கியம் இறையச்சமுடையவர்களுக்குத்தான் உண்டு."},{"id":84,"translation":"எவர் நன்மைகளை கொண்டு வருவாரோ அவருக்கு அவற்றின் பொருட்டால் நற்கூலி கிடைக்கும். எவர்கள் பாவங்களை கொண்டு வருவார்களோ, ஆக, அந்த பாவங்களைச் செய்தவர்கள் அவர்கள் எதை செய்து கொண்டிருந்தார்களோ அதற்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார்கள்."},{"id":85,"translation":"நிச்சயமாக உம்மீது குர்ஆனை இறக்கியவன் உம்மை (உமது) மீளுமிடத்திற்கு[1] திரும்பக் கொண்டு வருவான். (நபியே!) கூறுவீராக! “நேர்வழியைக் கொண்டு வந்தவரையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவரையும் என் இறைவன் மிக அறிந்தவன்.”","footnotes":"[1] மஆத் - மீளுமிடம் என்றால் மக்கா அல்லது சொர்க்கம் அல்லது இயல்பான இயற்கை மரணம் என்று விளக்கம் கூறப்படுகிறது."},{"id":86,"translation":"(நபியே!) இந்த வேதம் உமக்கு இறக்கப்படுவதை நீர் எதிர்பார்த்திருக்கவில்லை, என்றாலும் உமது இறைவனின் கருணையினால்தான் (உமக்கு இது இறக்கப்பட்டது). ஆகவே, நிராகரிப்பாளர்களுக்கு உதவியாளராக அறவே நீர் ஆகிவிடாதீர்."},{"id":87,"translation":"அல்லாஹ்வின் வசனங்களை (பின்பற்றுவதையும் அவற்றை மக்களுக்கு எடுத்துச் சொல்வதையும்) விட்டு - அவை உமக்கு இறக்கப்பட்டதன் பின்னர் - அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் உம்மை தடுத்து, கெட்ட பாதையின் பக்கம்) உம்மை திருப்பி விடவேண்டாம். உமது இறைவன் பக்கம் (உலக மக்களை எப்போதும்) அழைப்பீராக! இணைவைப்பவர்களில் நீர் ஒருபோதும் ஆகிவிடாதீர்."},{"id":88,"translation":"அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை அழைத்து விடாதீர்! (அவனையன்றி வேறு ஒன்றை வணங்கி விடாதீர்!) அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு ஒரு இறைவன் இல்லவே இல்லை. எல்லாப் பொருள்களும் அழியக்கூடியவையே, அவனது முகத்தைத் தவிர. (முடிவான) தீர்ப்பு அவனுக்கே உரியது. இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."}]},{"id":29,"verses":[{"id":1,"translation":"தா சீம் மீம்."},{"id":2,"translation":"“நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்று அவர்கள் கூறுவதால் அவர்கள் சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள்?” என்று மக்கள் நினைத்துக் கொண்டனரா?"},{"id":3,"translation":"திட்டவட்டமாக நாம் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களை சோதித்தோம். ஆக, அல்லாஹ் நிச்சயமாக உண்மையாளர்களையும் அறிவான். இன்னும், நிச்சயமாக பொய்யர்களையும் அவன் அறிவான்."},{"id":4,"translation":"பாவங்களை செய்பவர்கள் நம்மிடமிருந்து தப்பித்து விடுவார்கள் என்று எண்ணிக் கொண்டார்களா? அவர்கள் தீர்ப்பளிப்பது மிகக் கெட்டதாக இருக்கிறது."},{"id":5,"translation":"யார் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்பியவராக இருப்பாரோ நிச்சயமாக, அல்லாஹ்வின் (அந்த) தவணை வரக்கூடியதுதான் (என்பதை அவர் அறிந்து கொள்ளட்டும்). அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":6,"translation":"யார் (தனது ஆன்மாவின் தீய ஆசைகளுக்கு எதிராகவும் அல்லாஹ்வின் எதிரிகளுக்கு எதிராகவும்) போரிடுவாரோ அவர் போரிடுவதெல்லாம் அவரது நன்மைக்காகவே. நிச்சயமாக, அல்லாஹ் அகிலத்தார்களை விட்டு முற்றிலும் தேவையற்றவன் ஆவான்."},{"id":7,"translation":"இன்னும், எவர்கள் (அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, நன்மைகளைச் செய்தார்களோ - அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை நிச்சயமாக நாம் நீக்கி விடுவோம். இன்னும், அவர்கள் (இணைவைப்பில்) செய்து கொண்டிருந்ததை விட (ஈமான் கொண்டதற்கு பின்னர் அவர்கள் செய்த) மிகச் சிறந்த நன்மைகளுக்கு நாம் அவர்களுக்கு நற்கூலி தருவோம். (இன்னும் இணைவைப்பில் அவர்கள் செய்த பாவங்களையும் மன்னித்துவிடுவோம்.)"},{"id":8,"translation":"மனிதனுக்கு, அவன் தனது பெற்றோரிடம் அழகிய முறையில் நடக்க வேண்டும் என நாம் உபதேசித்தோம். இன்னும், உனக்கு எதைப் பற்றி அறிவு இல்லையோ அதை எனக்கு நீ இணையாக்(கி வணங்)கும்படி அவர்கள் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்கு நீ கீழ்ப்படியாதே! என் பக்கமே உங்கள் (அனைவரின்) மீளுதல் இருக்கிறது. ஆக, நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நான் உங்களுக்கு அறிவிப்பேன்."},{"id":9,"translation":"இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களை நாம் நிச்சயமாக நல்லோரில் (நல்லோர் நுழையுமிடத்தில்) பிரவேசிக்கவைப்போம்."},{"id":10,"translation":"இன்னும், நாங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டோம் என்று கூறுபவர்களும் மக்களில் இருக்கிறார்கள். ஆக, அவர் அல்லாஹ்வின் விஷயத்தில் (-அவனை ஏற்றுக்கொண்டதற்காக) துன்புறுத்தப்பட்டால் மக்களுடைய சோதனையை அல்லாஹ்வின் தண்டனையைப் போன்று ஆக்கிவிடுகிறார். இன்னும், உமது இறைவனிடமிருந்து ஓர் உதவி வந்தால், “நிச்சயமாக நாம் உங்களுடன் இருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். அகிலத்தாரின் நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் மிக அறிந்தவனாக இல்லையா?"},{"id":11,"translation":"இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நம்பிக்கை கொண்டவர்களை நன்கறிவான். இன்னும், நிச்சயமாக நயவஞ்சகர்களை நன்கறிவான்."},{"id":12,"translation":"நம்பிக்கையாளர்களை நோக்கி, “நீங்கள் எங்கள் மார்க்கத்தை பின்பற்றுங்கள்! நாங்கள் உங்கள் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம்” என்று நிராகரித்தவர்கள் கூறினார்கள். அவர்களுடைய (-நம்பிக்கையாளர்களுடைய) தவறுகளில் எதற்கும் அவர்கள் பொறுப்பேற்பவர்கள் அல்லர். நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள்தான்."},{"id":13,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் சுமைகளையும் தங்களது சுமைகளுடன் (தங்களால் வழிகெடுக்கப்பட்டவர்களின்) சுமைகளையும் நிச்சயம் சுமப்பார்கள். இன்னும், அவர்கள் பொய்யை இட்டுக் கட்டிக் கொண்டிருந்தது பற்றி மறுமை நாளில் நிச்சயம் விசாரிக்கப்படுவார்கள்."},{"id":14,"translation":"திட்டவட்டமாக நாம் நூஹை அவரது மக்களிடம் அனுப்பினோம். ஆக, அவர் அவர்களுடன் ஆயிரத்திற்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக தங்கி இருந்தார். ஆக, அவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கும் நிலையில் அவர்களை வெள்ளப்பிரளயம் பிடித்தது."},{"id":15,"translation":"ஆக, அவரையும் (அவருடன்) கப்பலில் இருந்தவர்களையும் நாம் பாதுகாத்தோம். இன்னும், அதை அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்."},{"id":16,"translation":"இன்னும், இப்ராஹீம் அவர் தனது மக்களுக்கு (பின் வருமாறு உபதேசம்) கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! (அவர் கூறினார்:) அல்லாஹ்வை வணங்குங்கள்; இன்னும், அவனை அஞ்சுங்கள். நீங்கள் (உண்மையை) அறிபவர்களாக இருந்தால் இதுதான் உங்களுக்கு சிறந்ததாகும்."},{"id":17,"translation":"அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குவதெல்லாம் சிலைகளைத்தான். இன்னும், (அந்த சிலைகள் பற்றி) பொய்(யான கதை)களை இட்டுக்கட்டுகிறீர்கள். நிச்சயமாக அல்லாஹ்வை அன்றி நீங்கள் எவர்களை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்கள் வாழ்வாதாரத்திற்கு சக்தி பெறமாட்டார்கள். ஆகவே, அல்லாஹ்விடம் வாழ்வாதாரத்தைத் தேடுங்கள். இன்னும், அவனை வணங்குங்கள்; இன்னும், அவனுக்கு நன்றி செலுத்துங்கள். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":18,"translation":"(மனிதர்களே!) நீங்கள் (இந்தத் தூதரை) பொய்ப்பித்தால் உங்களுக்கு முன்னர் பல சமுதாயத்தினர் (தங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களை) திட்டமாக பொய்ப்பித்துள்ளனர். தெளிவாக எடுத்துரைப்பதே தவிர (உங்களை நேர்வழியில் நிர்ப்பந்திப்பது) தூதர் மீது கடமை இல்லை."},{"id":19,"translation":"அல்லாஹ் படைப்புகளை ஆரம்பமாக எப்படி படைத்தான் என்பதை அவர்கள் சிந்தித்துப் பார்க்கவில்லையா? பிறகு (இறந்த பின்னர் மறுமை நிகழும்போது) அவன் அவர்களை மீண்டும் உருவாக்குவான். நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு இலகுவானதாகும்."},{"id":20,"translation":"(நபியே!) கூறுவீராக! நீங்கள் பூமியில் சுற்றுங்கள்! ஆக, (அல்லாஹ்) படைப்புகளை படைப்பதை எப்படி ஆரம்பித்தான் என்று பாருங்கள்! பிறகு, அல்லாஹ் மற்றொரு முறை (அவற்றை) உருவாக்குவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன் ஆவான்."},{"id":21,"translation":"அவன், தான் நாடியவர்களை தண்டிப்பான்; இன்னும், அவன் தான் நாடியவர் மீது கருணை காட்டுவான். இன்னும், அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":22,"translation":"நீங்கள் பூமியில், வானத்தில் (அல்லாஹ்வை) பலவீனப்படுத்தி (அவனை விட்டும் தப்பி)விட முடியாது. இன்னும், அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு ஒரு பாதுகாவலரும் இல்லை, உதவியாளரும் இல்லை."},{"id":23,"translation":"இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளையும் அவனது சந்திப்பையும் நிராகரிக்கிறார்களோ அவர்கள் எனது கருணையிலிருந்து நிராசை அடைந்து விடுவார்கள். இன்னும், கடுமையான வலிமிக்க தண்டனை அவர்களுக்கு நிச்சயம் உண்டு."},{"id":24,"translation":"ஆக, (இப்ராஹீம் தமது மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தபோது) “அவரைக் கொல்லுங்கள்! அல்லது, அவரை எரித்து விடுங்கள்” என்றே தவிர அவருடைய மக்களின் பதில் இல்லை. ஆக, அல்லாஹ் அவரை நெருப்பிலிருந்து பாதுகாத்தான். நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":25,"translation":"இன்னும் (இப்ராஹீம்) கூறினார்: அல்லாஹ்வை அன்றி நீங்கள் (வணங்குவதற்காக) சிலைகளை ஏற்படுத்தியதெல்லாம் இவ்வுலக வாழ்வில் உங்களுக்கு மத்தியில் (சிலைகள் மீது நீங்கள் வைத்துள்ள கண்மூடித்தனமான) அன்பினால்தான். பிறகு, மறுமை நாளில் உங்களில் சிலர் (-வணங்கப்பட்டவர்கள்) சிலரை (வணங்கியவர்களை) மறுத்து விடுவார்கள். இன்னும், உங்களில் சிலர் (-வழிகெட்டவர்கள்) சிலரை (-வழிகெடுத்தவர்களை) சபிப்பார்கள். இன்னும், உங்கள் (அனைவரின்) தங்குமிடம் நரகம்தான். உங்களுக்கு உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்."},{"id":26,"translation":"ஆக, அவரை லூத் நம்பிக்கை கொண்டார். இன்னும், (-இப்ராஹீம்) கூறினார்: நிச்சயமாக நான் (என் ஊரை விட்டு) வெளியேறி என் இறைவனின் பக்கம் (அவன் எனக்கு கட்டளையிட்டபடி ஷாம் தேசம் நோக்கி) செல்கிறேன். நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":27,"translation":"இன்னும், நாம் அவருக்கு (மகனாக) இஸ்ஹாக்கையும் (பேரனாக) யஅகூபையும் வழங்கினோம். இன்னும், அவரது சந்ததிகளில் நாம் நபித்துவத்தையும் வேதங்களையும் ஆக்கினோம். இன்னும், அவருக்கு அவருடைய (பொறுமைக்கான) கூலியை இம்மையில் நாம் கொடுத்தோம். நிச்சயமாக அவர் மறுமையில் நல்லவர்களில் இருப்பார். (அங்கும் அவருக்கு நிறைவான கூலி கிடைக்கும்.)"},{"id":28,"translation":"இன்னும் லூத்தை (தூதராக அனுப்பினோம்). அவர் தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “நிச்சயமாக நீங்கள் மானக்கேடான செயலை செய்கிறீர்கள். அகிலத்தாரில் ஒருவரும் இ(ந்த அசிங்கத்)தை உங்களுக்கு முன் செய்ததில்லை.”"},{"id":29,"translation":"“நிச்சயமாக நீங்கள் ஆண்களிடம் உடலுறவு கொள்கிறீர்களா? பாதைகளை (மக்கள் பயன்படுத்த முடியாமல்) தடுக்கிறீர்கள். உங்கள் சபைகளில் கெட்ட செயலை செய்கிறீர்கள்.” ஆக, அவருடைய மக்களின் பதில் இருக்கவில்லை, “நீர் உண்மையாளர்களில் இருந்தால் அல்லாஹ்வின் தண்டனையை எங்களிடம் கொண்டு வருவீராக” என்று அவர்கள் கூறியதைத் தவிர."},{"id":30,"translation":"அவர் கூறினார்: “என் இறைவா! கெட்ட செயல்களை செய்கிற மக்களுக்கு எதிராக எனக்கு நீ உதவி செய்!”"},{"id":31,"translation":"நமது (வானவத்) தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியுடன் வந்தபோது அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் இந்த ஊரில் வசிப்பவர்களை அழிக்கப் போகிறோம். நிச்சயமாக இதில் வசிப்பவர்கள் தீயவர்களாக இருக்கிறார்கள்.”"},{"id":32,"translation":"(இப்ராஹீம்) கூறினார்: “நிச்சயமாக அதில் (-அவ்வூரில் நபி) லூத் இருக்கிறார்.” அவர்கள் கூறினார்கள்: அதில் உள்ளவர்களை நாங்கள் நன்கறிந்தவர்கள். நிச்சயமாக அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் நாம் பாதுகாப்போம், அவருடைய மனைவியைத் தவிர. அவள் (அழிவில்) தங்கிவிடக் கூடியவர்களில் ஆகிவிடுவாள்."},{"id":33,"translation":"இன்னும், நமது (வானவத்) தூதர்கள் (நபி) லூத்திடம் வந்தபோது அவர் (தம்மிடம் வந்த வானவர்)களினால் கவலைப்பட்டார். இன்னும், அ(ந்த வான)வர்களால் அவர் மன நெருக்கடிக்கு உள்ளானார். (வானவர்கள்) கூறினார்கள்: “பயப்படாதீர்! இன்னும், கவலைப்படாதீர்! நிச்சயமாக நாம் உம்மையும் உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தையும் பாதுகாப்போம். (அழிவில்) தங்கிவிடுபவர்களில் அவள் ஆகிவிடுவாள்.”"},{"id":34,"translation":"நிச்சயமாக நாம் இந்த ஊர்வாசிகள் மீது, அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை) மீறிக்கொண்டு இருந்ததால் வானத்திலிருந்து (கடுமையான) ஒரு தண்டனையை இறக்குவோம்."},{"id":35,"translation":"சிந்தித்து புரிகின்ற மக்களுக்கு திட்டவட்டமாக அதில் தெளிவான ஓர் அத்தாட்சியை நாம் விட்டுவைத்துள்ளோம்."},{"id":36,"translation":"இன்னும், ‘மத்யன்’ நகரவாசிகளுக்கு அவர்களுடைய சகோதரர் ஷுஐபை (நாம் அனுப்பினோம்). ஆக, அவர் கூறினார்: என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்! இன்னும், மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், இந்த பூமியில் கெட்டதை செய்கின்ற தீயவர்களாக அளவு கடந்து அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்."},{"id":37,"translation":"ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்களை நிலநடுக்கம் பிடித்தது. ஆக, அவர்கள் தங்கள் இல்லத்தில் இறந்தவர்களாக காலையில் ஆகிவிட்டனர்."},{"id":38,"translation":"இன்னும், ஆதையும் சமூதையும் நினைவு கூருங்கள்! அவர்களின் தங்குமிடங்களில் இருந்து (அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது) உங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. ஷைத்தான், அவர்களுக்கு அவர்களின் செயல்களை அலங்கரித்தான். ஆக, அவன் அவர்களை (நேரான) பாதையிலிருந்து தடுத்தான். (நேர்வழி எது வழிகேடு எது என்பதில்) அவர்கள் தெளிவானவர்களாக இருந்தனர். (சத்தியத்தை அறிந்த பின்னர் அதை நிராகரித்தனர். வழிகேட்டைத் தெளிவாக அறிந்தும் அதில்தான் சென்றனர்.)"},{"id":39,"translation":"இன்னும் காரூனையும் ஃபிர்அவ்னையும் ஹாமானையும் நினைவு கூருங்கள்! திட்டவட்டமாக அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை மூஸா கொண்டு வந்தார். ஆக, அவர்கள் பூமியில் பெருமையடித்தனர். அவர்கள் (நம்மிடமிருந்து) தப்பி விடுபவர்களாக இல்லை."},{"id":40,"translation":"ஆக, (இவர்களில்) ஒவ்வொருவரையும் அவர்களின் பாவத்தினால் நாம் தண்டித்தோம். எவர்கள் மீது நாம் கல் மழையை அனுப்பினோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், யாரை இடி முழக்கம் பிடித்ததோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், நாம் யாரை பூமியில் சொருகினோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். இன்னும், யாரை நாம் மூழ்கடித்தோமோ அவர்களும் இவர்களில் உள்ளனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்கு தாமே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்."},{"id":41,"translation":"அல்லாஹ்வை அன்றி (சிலைகளையும் இறந்தவர்களையும் தங்களுக்கு) பாதுகாவலர்களாக ஆக்கிக் கொண்டவர்களுக்கு உதாரணம் சிலந்தியின் உதாரணத்தைப் போலாகும். அது (தனக்கு) ஒரு வீட்டை ஏற்படுத்திக் கொண்டது. நிச்சயமாக வீடுகளில் மிக பலவீனமானது சிலந்தியின் வீடே. அவர்கள் (அல்லாஹ்வை அன்றி வணங்குகின்றவற்றின் பலவீனத்தை) அறிந்திருக்க வேண்டுமே!"},{"id":42,"translation":"நிச்சயமாக அல்லாஹ், அவனை அன்றி அவர்கள் எதை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அது எதுவாக இருந்தாலும் அதை அல்லாஹ் நன்கறிவான். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":43,"translation":"இந்த உதாரணங்கள், இவற்றை நாம் மக்களுக்கு விவரிக்கிறோம். அறிஞர்களைத் தவிர (மற்றவர்கள்) இவற்றை சிந்தித்து புரியமாட்டார்கள்."},{"id":44,"translation":"அல்லாஹ், வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காகவே படைத்திருக்கிறான். நம்பிக்கையாளர்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் அத்தாட்சி இருக்கிறது."},{"id":45,"translation":"இந்த வேதத்திலிருந்து உமக்கு வஹ்யில் எது அறிவிக்கப்பட்டதோ அதை ஓதுவீராக! இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவீராக! நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றை விட்டும் தீயகாரியங்களை விட்டும் தடுக்கிறது. அல்லாஹ் (உங்களை) நினைவு கூர்வது (நீங்கள் அவனை நினைவு கூர்வதை விட) மிகப் பெரியதாகும். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்."},{"id":46,"translation":"வேதமுடையவர்களிடம் மிக அழகிய முறையிலேயே தவிர தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களில் எவர்கள் அநியாயக்காரர்களாக இருக்கிறார்களோ அவர்களிடமே தவிர. (அந்த அநியாயக்காரர்கள் உங்களிடம் போர்தொடுத்தால் நீங்களும் அவர்களிடம் போரிடுங்கள்.) இன்னும், நீங்கள் கூறுங்கள்: எங்களுக்கு இறக்கப்பட்டதையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம், எங்கள் கடவுளும் உங்கள் கடவுளும் ஒருவன்தான். நாங்கள் அவனுக்கு கீழ்ப்பணிந்தவர்கள் ஆவோம்."},{"id":47,"translation":"(உமக்கு முன்னர் உள்ள நபிமார்களுக்கு வேதத்தை இறக்கிய) இவ்வாறுதான் உமக்கு(ம்) இவ்வேதத்தை நாம் இறக்கினோம். (இதற்கு முன்) வேதங்களை நாம் எவர்களுக்கு கொடுத்தோமோ அவர்கள் (-இஸ்ரவேலர்களில் பலர்) இ(ந்த வேதத்)தை நம்பிக்கை கொள்வார்கள். இன்னும், இவர்களில் (-மக்காவாசிகளில்) இதை நம்பிக்கை கொள்பவர்களும் இருக்கிறார்கள். நிராகரிப்பாளர்களைத் தவிர (மற்றவர்கள்) நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்."},{"id":48,"translation":"இதற்கு முன் (வேறு) ஒரு வேதத்தை நீர் ஓதுபவராக இருக்கவில்லை. உமது வலக்கரத்தால் அதை எழுதவும் இல்லை. அப்படி இருந்திருந்தால் வீணர்கள் (இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது என்பதில்) நிச்சயமாக சந்தேகம் கொண்டிருப்பார்கள்."},{"id":49,"translation":"மாறாக, இ(ந்த வேதமான)து கல்வி கொடுக்கப்பட்டவர்களின் நெஞ்சங்களில் தெளிவான அத்தாட்சிகளாக இருக்கிறது. இன்னும், நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள் அநியாயக்காரர்களைத் தவிர."},{"id":50,"translation":"இன்னும், அவர்கள் கூறினார்கள்: “இவர் மீது அவருடைய இறைவனிடமிருந்து அத்தாட்சிகள் இறக்கப்பட வேண்டாமா!” (நபியே!) கூறுவீராக! “அத்தாட்சிகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றன. (அவன் நாடியபடி அத்தாட்சியை இறக்குவான்.) நானெல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்.”"},{"id":51,"translation":"(அவர்கள் கேட்கும் அத்தாட்சியை விட) இந்த வேதத்தை நிச்சயமாக நாம் உம்மீது இறக்கி இருப்பது அவர்களுக்கு போதாதா? இது அவர்கள் மீது ஓதி காண்பிக்கப்படுகிறதே! நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் அருளும் அறிவுரையும் இருக்கின்றன."},{"id":52,"translation":"(நபியே!) கூறுவீராக! எனக்கும் உங்களுக்கும் இடையில் சாட்சியால் அல்லாஹ்வே போதுமானவன். வானங்கள் இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். இன்னும், பொய்யை நம்பிக்கை கொண்டவர்களும் அல்லாஹ்வை நிராகரித்தவர்களும் அவர்கள்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்."},{"id":53,"translation":"அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கிறார்கள். (தண்டனைக்கான) தவணை குறிப்பிடப்பட்டதாக இல்லை என்றால் அவர்களுக்கு தண்டனை (உடனே) வந்திருக்கும். அவர்கள் உணராதவர்களாக இருக்கும் நிலையில் நிச்சயமாக அவர்களிடம் அ(ந்த தண்டனையான)து திடீரென வரும்."},{"id":54,"translation":"அவர்கள் உம்மிடம் தண்டனையை அவசரமாகக் கேட்கிறார்கள். (இவ்வுலகத்தின் தண்டனையை விட மறுமையின் தண்டனையாகிய) நரகம் நிச்சயமாக நிராகரிப்பாளர்களை சூழ்ந்து கொள்ளும்."},{"id":55,"translation":"அவர்களுக்கு மேலிருந்தும் அவர்களின் கால்களுக்கு கீழே இருந்தும் (வகை வகையான) தண்டனை அவர்களை மூடிக்கொள்கின்ற நாளில் (அந்த நரகம் அவர்களை சூழ்ந்து இருக்கும்). இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்ததை (-அதன் தண்டனையை) சுவையுங்கள் என்று (இறைவன்) கூறுவான்."},{"id":56,"translation":"நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக எனது பூமி விசாலமானது. ஆகவே, என்னையே (கலப்பற்ற முறையில்) நீங்கள் வணங்குங்கள்!"},{"id":57,"translation":"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைக்கக் கூடியதே! பிறகு, நம்மிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":58,"translation":"இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ – நிச்சயமாக நாம் அவர்களுக்கு சொர்க்கத்தில் பல அறைகளை தயார்படுத்திக் கொடுப்போம். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். அமல் செய்தவர்களின் கூலி மிகச் சிறப்பானதே!"},{"id":59,"translation":"அவர்கள் பொறுமையாக இருந்தனர். இன்னும், தங்கள் இறைவன் மீதே நம்பிக்கை வைத்து (அவனையே சார்ந்து) இருந்தார்கள்."},{"id":60,"translation":"எத்தனையோ கால்நடைகள் தனது உணவை சுமப்பதில்லை. அல்லாஹ்தான் அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். இன்னும், அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":61,"translation":"வானங்களையும் பூமியையும் யார் படைத்தான்? சூரியனையும் சந்திரனையும் (யார் உங்களுக்கு) வசப்படுத்தினான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், “அல்லாஹ்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். ஆக, அவர்கள் எப்படி (அந்த அல்லாஹ்வை வணங்குவதிலிருந்து சிலைகளை வணங்குவதின் பக்கம்) திருப்பப்படுகிறார்கள்."},{"id":62,"translation":"அல்லாஹ், தனது அடியார்களில் தான் நாடியவருக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடுகிற) அவருக்கு (அதை) சுருக்கி விடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":63,"translation":"வானத்திலிருந்து மழையை இறக்கி, அதன் மூலம் பூமியை, அது இறந்து விட்ட பின்னர் உயிர்ப்பிப்பவன் யார் என்று நீர் அவர்களிடம் கேட்டால், “அல்லாஹ்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “புகழ் எல்லாம் அல்லாஹ்விற்கே!” மாறாக, (இறைவன் அல்லாத ஒன்றை வணங்குவது தவறு என்பதை) அவர்களில் அதிகமானவர்கள் சிந்தித்து புரிய மாட்டார்கள்."},{"id":64,"translation":"இவ்வுலக வாழ்க்கை வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் தவிர இல்லை. நிச்சயமாக மறுமை வீடு - அதுதான் நிரந்தரமான (வாழ்க்கையை உடைய)தாகும். அவர்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!"},{"id":65,"translation":"ஆக, அவர்கள் கப்பலில் பயணித்தால் அல்லாஹ்வை - அவனுக்கு மட்டும் வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவர்களாக - அழைக்கிறார்கள். ஆக, அவன் அவர்களை கரைக்கு காப்பாற்றிக் கொண்டு வந்தால் அப்போது அவர்கள் (அவனுக்கு சிலைகளை) இணையாக்குகிறார்கள்."},{"id":66,"translation":"ஏனெனில், (நமது அருட்கொடைகளில்) நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை அவர்கள் நிராகரிப்பதற்காகவும் (பாவங்களைக் கொண்டு) அவர்கள் இன்புறுவதற்காகவும் (அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குகிறார்கள்). ஆக, அவர்கள் (விரைவில் தங்களது கெட்ட முடிவை) அறிவார்கள்."},{"id":67,"translation":"“பாதுகாப்பு அளிக்கின்ற புனிதத்தலத்தை நிச்சயமாக நாம் (அவர்களுக்கு) ஏற்படுத்தினோம்; அவர்களைச் சுற்றி மக்கள் (கொலை கொள்ளையால்) சூறையாடப்படுகிறார்கள்” என்பதை (-மக்காவை சேர்ந்த இணைவைப்பாளர்கள்) பார்க்கவில்லையா? ஆக, அவர்கள் பொய்யை நம்பிக்கை கொள்கின்றனரா? இன்னும், (உண்மையாளனாகிய) அல்லாஹ்வின் அருளை நிராகரிக்கின்றனரா?"},{"id":68,"translation":"அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட; அல்லது, உண்மையை - அது தன்னிடம் வந்தபோது - பொய்ப்பித்தவனை விட மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பாளர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?"},{"id":69,"translation":"எவர்கள் நமக்காக (நமது தீன் உயர்வதற்காக இணைவைப்பாளர்களிடம்) போரிட்டார்களோ - அவர்களுக்கு நாம் நிச்சயமாக நமது (நேரான) பாதைகளை வழிகாட்டுவோம். இன்னும், நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிவோருடன் இருக்கிறான்."}]},{"id":30,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் மீம்."},{"id":2,"translation":"ரோமர்கள் தோற்கடிக்கப்பட்டனர்,"},{"id":3,"translation":"(அவர்கள் தோற்கடிக்கப்பட்டது ஷாம் தேசமாகிய) பூமியின் கீழ்ப் பகுதியில். அவர்கள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் (விரைவில் தங்கள் எதிரிகளை வெற்றிகொண்டு) தோற்கடிப்பார்கள்."},{"id":4,"translation":"சில ஆண்டுகளில் இது நடைபெறும். (இதற்கு) முன்னரும் (இதற்கு) பின்னரும் அல்லாஹ்விற்கே அதிகாரம் உரியது. (ஆகவே, அவன் நாடியவர்களுக்கு வெற்றி அளிக்கிறான்.) இன்னும், அந்நாளில் நம்பிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைவார்கள்."},{"id":5,"translation":"(அந்த மகிழ்ச்சி) அல்லாஹ்வின் உதவியினால் ஆகும். அவன், தான் நாடியவர்களுக்கு உதவுகிறான். அவன் மிகைத்தவன், மகா கருணையாளன்."},{"id":6,"translation":"(இதை) அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். அல்லாஹ் தனது வாக்கை மாற்ற மாட்டான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் வாக்கு உண்மை என்பதை) அறிய மாட்டார்கள்."},{"id":7,"translation":"அவர்கள் இவ்வுலக வாழ்க்கையில் வெளிப்புற (தோற்ற)த்தை அறிவார்கள். அவர்கள் மறுமையைப் பற்றி முற்றிலும் கவனமற்றவர்கள் ஆவார்கள்."},{"id":8,"translation":"அவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இன்னும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்."},{"id":9,"translation":"இவர்கள் பூமியில் பயணிக்க வேண்டாமா? தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்களே! இவர்களை விட ஆற்றலால் அவர்கள் கடுமையானவர்களாக இருந்தார்கள். இன்னும், அவர்கள் பூமியை உழுதார்கள். இன்னும், இவர்கள் அதை செழிப்பாக்கியதைவிட அதிகமாக அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள். இன்னும், அவர்களுடைய இறைத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்."},{"id":10,"translation":"பிறகு, தீமை செய்தவர்களின் முடிவு மிக தீயதாகவே ஆகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை பொய்ப்பித்தனர். இன்னும், அவற்றைக் கேலி செய்பவர்களாக இருந்தனர்."},{"id":11,"translation":"அல்லாஹ்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை இறந்த பின்னர்) அவற்றை மீண்டும் உருவாக்குகிறான். பிறகு, அவனிடமே, நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":12,"translation":"இன்னும், மறுமை நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள் பெரும் சிரமப்படுவார்கள்."},{"id":13,"translation":"அவர்களுக்கு அவர்க(ளை வழிகெடுத்த அவர்க)ளுடைய நண்பர்களில் பரிந்துரையாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இன்னும், அவர்கள் (-வழிகெடுத்தவர்கள்) (தங்களால் வழிகெடுக்கப்பட்ட) தங்களது நண்பர்க(ள் தங்களுக்கு செய்த வழிபாடுக)ளை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுவார்கள்."},{"id":14,"translation":"இன்னும், மறுமை நிகழும் நாளில் - அந்நாளில் அவர்கள் (ஒவ்வொருவரும் தத்தமது அமலுக்குரிய கூலியைப் பெறுவதற்கு) பிரிந்து விடுவார்கள்."},{"id":15,"translation":"ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ, அவர்கள் (சொர்க்கத்தின்) தோட்டத்தில் மகிழ்விக்கப்படுவார்கள்."},{"id":16,"translation":"ஆக, எவர்கள் நிராகரித்தார்களோ, நமது வசனங்களையும் மறுமையின் சந்திப்பையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் (நரக) தண்டனைக்குக் கொண்டு வரப்படுவார்கள்."},{"id":17,"translation":"ஆகவே, நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும் (-சூரியன் மறைந்த பின்னரும்) காலைப் பொழுதை அடையும்போதும் (சூரியன் உதிக்கும் முன்னரும் - மஃரிபு மற்றும் ஃபஜ்ரு தொழுகையை நிறைவேற்றி) அல்லாஹ்வைத் துதியுங்கள்."},{"id":18,"translation":"இன்னும், வானங்களிலும் பூமியிலும் எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. இன்னும், மாலையிலும் நீங்கள் மதியப் பொழுதில் இருக்கும்போதும் (அல்லாஹ்வை தொழுது துதியுங்கள்)."},{"id":19,"translation":"அவன், இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளியாக்குகிறான்; இன்னும், உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளியாக்குகிறான்: இன்னும், பூமியை - அது இறந்த பின்னர் - உயிர்ப்பிக்கிறான். இவ்வாறே நீங்களும் (இறந்த பின்னர் பூமியிலிருந்து மீண்டும் உயிருடன்) வெளியேற்றப்படுவீர்கள்."},{"id":20,"translation":"இன்னும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான், அவன் உங்களை (-உங்கள் மூலப் பிதாவை) மண்ணிலிருந்து படைத்தான். பிறகு, (அவரின் சந்ததிகளாகிய) நீங்களோ மனிதர்களாக (பூமியில் உணவைத்தேடி பல இடங்களுக்கு) பிரிந்து செல்கிறீர்கள்."},{"id":21,"translation":"இன்னும், அவன் உங்களுக்காக உங்களிலிருந்தே (உங்கள்) மனைவிகளை - அவர்களிடம் நீங்கள் அமைதி பெறவேண்டும் என்பதற்காக - படைத்ததும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், உங்க(ள் இரு குடும்பங்க)ளுக்கு மத்தியில் அன்பையும் கருணையையும் அவன் ஏற்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":22,"translation":"இன்னும், வானங்களும் பூமியும் படைக்கப்பட்டிருப்பதும் உங்கள் மொழிகளும் உங்கள் நிறங்களும் வேறுபட்டு இருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். கல்வியாளர்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":23,"translation":"இன்னும், நீங்கள் இரவிலும் பகலிலும் தூங்குவதும்; அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருள் சம்பாதிக்க) தேடுவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். (உபதேசங்களை) செவியேற்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":24,"translation":"இன்னும், அவன் உங்களுக்கு மின்னலை பயமாகவும் ஆசையாகவும் காட்டுவதும்; இன்னும், வானத்திலிருந்து மழையை அவன் இறக்குவதும்; அதன் மூலம் பூமியை - அது மரணித்த பின்னர் - உயிர்ப்பிப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். சிந்தித்து புரிகிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":25,"translation":"இன்னும், வானமும் பூமியும் அவனுடைய கட்டளையின்படி (அவற்றுக்குரிய இடத்தில் நிலையாக) நிற்பது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். பிறகு, அவன் உங்களை பூமியிலிருந்து ஒருமுறை அழைத்தால், அப்போது நீங்கள் (அதிலிருந்து உயிருடன்) வெளியேறுவீர்கள்."},{"id":26,"translation":"இன்னும், வானங்களிலும் பூமியிலும் உள்ளவர்(களை அவனே படைத்தான். ஆகவே அவர்)கள் அவனுக்கே உரியவர்கள். எல்லோரும் அவனுக்கே (வாழ்விலும் சாவிலும் உயிர்த்தெழுவதிலும்) பணிந்து நடக்கிறார்கள். (அவனது விதியை அவர்கள் யாராலும் மீற முடியாது.)"},{"id":27,"translation":"அவன்தான் படைப்புகளை ஆரம்பமாக படைக்கிறான். பிறகு, (அவை அழிந்த பின்னர்) அவன் அவற்றை மீண்டும் படைப்பான். அதுவோ அவனுக்கு மிக இலகுவானதாகும். இன்னும், வானங்களிலும் பூமியிலும் மிக உயர்ந்தத் தன்மைகள் அவனுக்கே உரியன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான்."},{"id":28,"translation":"(இணைவைப்பாளர்களே!) அவன் உங்களுக்கு உங்களிலிருந்தே ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். நாம் உங்களுக்கு (மட்டும் உரிமையாக்கி) கொடுத்த (செல்வத்)தில் உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்களில் (-உங்கள் அடிமைகளில்) யாரும் உங்களுக்கு பங்காளிகளாக இருப்பதும், நீங்கள் (அனைவரும்) அதில் சமமானவர்களாக ஆகிவிடுவதும் முடியுமா? அவர்களை (-உங்களுக்கு நாம் கொடுத்த செல்வத்தில் உங்கள் அடிமைகளை உங்களுடன் சேர்த்துக் கொள்ள) நீங்கள் பயப்படுகிறீர்கள் -(அல்லவா?) நீங்கள் (-சுதந்திரமானவர்கள்) உங்களை - (உங்களில் ஒருவர் மற்றவர் தனது சொத்தில் பங்காளியாக ஆகுவதை) பயப்படுவது போன்று. (சுதந்திரமான பங்காளிகளை பயப்படுவது போல நீங்கள் உங்கள் அடிமைகள் உங்களுடன் பங்காளிகளாக ஆகுவதை பயப்படுகிறீர்கள். யாரையும் கூட்டாக்கிக் கொண்டால் சுதந்திரமாக செயல்பட முடியாதென்று நினைக்கிறீர்கள். அப்படி இருக்க, அல்லாஹ் எப்படி தனது படைப்புகளை தனக்கு உரிமையானவற்றில் கூட்டாக்கிக் கொள்வான்? அவனுடன் கூட்டாகுவதற்கு எந்தத் தகுதியும் யாருக்கும் இல்லையே!) சிந்தித்துப் புரிகிற மக்களுக்கு (நம்) வசனங்களை இவ்வாறு தெளிவாக விவரிக்கிறோம்."},{"id":29,"translation":"மாறாக, அநியாயக்காரர்கள் கல்வி அறிவு இன்றி, தங்கள் மன விருப்பங்களை பின்பற்றுகிறார்கள். ஆக, அல்லாஹ் எவரை வழிக் கெடுத்தானோ அவரை யார் நேர்வழி செலுத்துவார்? இன்னும், உதவியாளர்களில் எவரும் அவர்களுக்கு இல்லை."},{"id":30,"translation":"ஆக, (நபியே!) நீர் இஸ்லாமியக் கொள்கையில் உறுதியுடையவராக இருக்கும் நிலையில் உமது முகத்தை(யும் உமது சமுதாய மக்களுடன் அல்லாஹ்வின்) மார்க்கத்தின் பக்கம் நிலை நிறுத்துவீராக! அல்லாஹ்வுடைய இயற்கை மார்க்கம் அதுதான். அ(ந்த மார்க்கத்)தில்தான் அல்லாஹ் மக்களை இயற்கையாக அமைத்தான். அல்லாஹ்வின் படை(ப்பின் அமை)ப்பை மாற்றக்கூடாது. இதுதான் நிலையான (நீதமான, நேரான) மார்க்கம் ஆகும். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (தங்கள் தவறை) அறிய மாட்டார்கள்."},{"id":31,"translation":"(நீங்கள் அனைவரும்) அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக இருங்கள். இன்னும், அவனை அஞ்சிக் கொள்ளுங்கள். இன்னும், தொழுகையை நிலை நிறுத்துங்கள். இணைவைப்பவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள்."},{"id":32,"translation":"தங்களது மார்க்கத்தை(யும் வழிபாடுகளையும் இறைவன் அல்லாதவர்களுக்காக) பிரித்து பல (கடவுள்களை வணங்கி, பல) பிரிவுகளாக ஆகிவிட்டவர்களில் நீங்கள் ஆகிவிடாதீர்கள். ஒவ்வொரு பிரிவும் தங்களிடம் உள்ளதைக் கொண்டு மகிழ்ச்சியடைகிறார்கள்."},{"id":33,"translation":"இன்னும், மக்களுக்கு ஒரு தீங்கு நேர்ந்தால் தங்கள் இறைவனை - அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவர்களாக - அழைக்கிறார்கள். பிறகு, அவன் தன் புறத்திலிருந்து அவர்களுக்கு (தனது) அருளை சுவைக்க வைத்தால் அப்போது அவர்களில் ஒரு சாரார் தங்கள் (பொய்யான தெய்வங்களை) இறைவனுக்கு இணைவைக்கிறார்கள்."},{"id":34,"translation":"நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றை (-நமது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தாமல்) நிராகரிப்பதற்காக (இவ்வாறு இணைவைக்கிறார்கள்). ஆக, (இணைவைப்போரே! சிறிது காலம்) சுகம் அனுபவியுங்கள்! ஆக, (மறுமையில் உங்கள் முடிவை) நீங்கள் அறிவீர்கள்."},{"id":35,"translation":"(அவர்களின் இணைவைப்புக்கு) அவர்கள் மீது நாம் ஓர் ஆதாரத்தை இறக்கினோமா? அவர்கள் எதை அவனுக்கு இணைவைப்பவர்களாக இருந்தார்களோ அதைப் பற்றி (அது சரி என்று) அ(ந்த ஆதாரமான)து பேசுகிறதா?"},{"id":36,"translation":"இன்னும், மக்களுக்கு நாம் (நமது) அருளை சுவைக்க வைத்தால் அவர்கள் அதனால் மகிழ்ச்சியடைகிறார்கள். இன்னும், அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் அவர்களை ஒரு தீமை அடைந்தால், அப்போது அவர்கள் நிராசையடைந்து விடுகிறார்கள்."},{"id":37,"translation":"இவர்கள் பார்க்க வேண்டாமா? நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவருக்கு உணவை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகிறான். நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":38,"translation":"ஆகவே, உறவினர்கள், வறியவர்கள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்கு அவர்களின் உரிமைகளை கொடுப்பீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இ(வ்வாறு தர்மம் கொடுப்ப)துதான் சிறந்ததாகும். இன்னும், இவர்கள்தான் வெற்றியாளர்கள்."},{"id":39,"translation":"மக்களின் செல்வங்களில் வளர்ச்சி காணுவதற்காக (பிரதிபலனை எதிர்பார்த்து) அன்பளிப்புகளிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ அது அல்லாஹ்விடம் வளர்ச்சி காணாது. அல்லாஹ்வின் முகத்தை நீங்கள் நாடியவர்களாக தர்மங்களிலிருந்து எதை நீங்கள் கொடுத்தீர்களோ (அதுதான் வளர்ச்சி அடையும். அப்படி கொடுக்கின்ற) அவர்கள்தான் (தங்கள் செல்வங்களையும் நன்மைகளையும்) பன்மடங்காக்கிக் கொள்பவர்கள்."},{"id":40,"translation":"அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான். பிறகு, அவன் உங்களுக்கு உணவளித்தான். பிறகு, அவன் உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, அவன் உங்களை உயிர்ப்பிப்பான். இவற்றில் (-இந்தக் காரியங்களில்) எதையும் செய்பவர் உங்கள் தெய்வங்களில் இருக்கிறாரா? (அல்லாஹ்வாகிய) அவனோ மிக பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அவன் மிக உயர்ந்தவன்."},{"id":41,"translation":"தரையிலும் கடலிலும் (நகரங்களிலும் கிராமங்களிலும்) பாவம் பெருகி விட்டது, மக்களின் கரங்கள் செய்தவற்றினால் (அநியாயங்கள் அதிகரித்து விட்டன). இறுதியாக, அவர்கள் செய்தவற்றின் (-அவர்களின் பாவங்களின்) சிலவற்றை (-அதற்குரிய தண்டனையை) அவர்களை சுவைக்க வைப்போம்- அவர்கள் (உண்மையின் பக்கம்) திரும்புவதற்காக."},{"id":42,"translation":"(நபியே! இணைவைப்பவர்களை நோக்கி) கூறுவீராக! பூமியில் பயணியுங்கள். (உங்களுக்கு) முன்னிருந்தவர்களுடைய முடிவு எப்படி இருந்தது என்று பாருங்கள். அ(ழிக்கப்பட்ட அ)வர்களில் அதிகமானவர்கள் இணைவைப்பவர்களாக இருந்தனர்."},{"id":43,"translation":"ஆக, (நபியே!) அதை தடுக்க முடியாத ஒரு நாள் அல்லாஹ்விடமிருந்து வருவதற்கு முன்னர் உமது முகத்தை நேரான மார்க்கத்தின் பக்கம் நிலை நிறுத்துவீராக! அந்நாளில் அவர்கள் (-மக்கள் இரண்டு பிரிவுகளாக) பிரிந்து விடுவார்கள்."},{"id":44,"translation":"யார் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவர் மீதுதான் கேடாக முடியும். இன்னும், எவர்கள் நன்மை செய்வார்களோ அவர்கள் தங்களுக்குத்தான் (சொர்க்கத்தில் சொகுசான) படுக்கைகளை விரித்துக் கொள்கிறார்கள்."},{"id":45,"translation":"இறுதியாக, நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் தன் அருளிலிருந்து கூலி கொடுப்பான். (மேலும், பாவிகளுக்கு தண்டனை கொடுப்பான்). நிச்சயமாக அவன் (தன்னை) நிராகரிப்பாளர்களை நேசிக்க மாட்டான்."},{"id":46,"translation":"இன்னும், காற்றுகளை (-மழையின்) நற்செய்தி தரக்கூடியவையாக அவன் அனுப்புவதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். இன்னும், தனது அருளை (-மழையை) உங்களுக்கு சுவைக்க வைப்பதற்கும்; கப்பல்கள் - அவனுடைய கட்டளையின்படி (கடலில்) – செல்வதற்கும்; அவனது அருளிலிருந்து நீங்கள் (-வாழ்வாதாரத்தை) தேடுவதற்கும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்கும் (அவன் உங்களுக்கு காற்றுகளை அனுப்புகிறான்)."},{"id":47,"translation":"திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை அவர்களுடைய மக்களுக்கு நாம் அனுப்பினோம். ஆக, அவர்களிடம் அவர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்தனர். ஆக, குற்றமிழைத்தவர்களிடம் நாம் பழிவாங்கினோம். இன்னும், (தூதர்களை நம்பிக்கை கொண்டவர்களுக்கு நாம் உதவினோம்.) நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு உதவுவது நம்மீது கடமையாக இருக்கிறது."},{"id":48,"translation":"அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். ஆக, அவை மேகங்களை கிளப்புகின்றன. அவன் அவற்றை வானத்தில் தான் நாடியவாறு பரப்புகிறான். இன்னும், அவற்றை பல துண்டுகளாக அவன் மாற்றுகிறான். ஆக, மழையை - அது அவற்றுக்கு இடையிலிருந்து வெளியேறக்கூடியதாக - பார்க்கிறீர். ஆக, அவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு அதை அருளினால், அப்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்."},{"id":49,"translation":"நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர், அ(ந்த மழையான)து அவர்கள் மீது இறக்கப்படுவதற்கு முன்னர் கவலைப்பட்டவர்களாக (மனச்சோர்வடைந்தவர்களாக, நிராசையடைந்தவர்களாக) இருந்தனர்."},{"id":50,"translation":"ஆக, அல்லாஹ்வுடைய அருளின் அடையாளங்களைப் பார்ப்பீராக! பூமியை - அது மரணித்த பின்னர் - அவன் எப்படி உயிர்ப்பிக்கிறான் (என்பதைக் கவனியுங்கள்)! நிச்சயமாக அவன்தான் இறந்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். அவன் எல்லா பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":51,"translation":"நாம் ஒரு காற்றை அனுப்பி(னால், அது அவர்களது விளைச்சலை அழித்துவிட்ட பின்னர்) அதை (-அந்த விளைச்சலை) அவர்கள் மஞ்சளாக பார்த்தால் அ(து அழிந்த)தற்குப் பின்னர் அவர்கள் (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள்."},{"id":52,"translation":"ஆக, (நபியே!) நிச்சயமாக நீர், (உமது) அழைப்பை இறந்தவர்களுக்கு கேட்கவைக்க முடியாது. இன்னும், செவிடர்களுக்கும் கேட்கவைக்க முடியாது, அவர்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பினால்."},{"id":53,"translation":"இன்னும், குருடர்களை அவர்களின் வழிகேட்டிலிருந்து (மீட்டெடுத்து அவர்களை) நீர் நேர்வழி செலுத்துபவர் அல்லர். நமது வசனங்களை நீர் செவியுறச் செய்ய முடியாது, நம்பிக்கை கொள்பவர்களுக்கே தவிர. ஆக, அவர்கள்தான் (முஸ்லிம்கள் - நமது கட்டளைகளுக்கு) முற்றிலும் கீழ்ப்படிகிறவர்கள்."},{"id":54,"translation":"அல்லாஹ்தான் உங்களை (இந்திரியம் என்ற) பலவீனமான ஒரு பொருளிலிருந்து படைத்தான். பிறகு, பலவீனத்திற்கு பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பிறகு, பலத்திற்கு பின்னர் பலவீனத்தையும் வயோதிகத்தையும் ஏற்படுத்தினான். அவன், தான் நாடுவதை படைக்கிறான். இன்னும், அவன்தான் மிக்க அறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":55,"translation":"மறுமை நாள் நிகழ்கின்ற நாளில் குற்றவாளிகள், “தாங்கள் சில மணி நேரமே அன்றி (மண்ணறையில்) தங்கவில்லை” என்று சத்தியம் செய்வார்கள். இவ்வாறுதான் அவர்கள் (உலகத்தில் வாழும் போதும்) பொய் சொல்பவர்களாக இருந்தார்கள்."},{"id":56,"translation":"கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டவர்கள் கூறுவார்கள்: அல்லாஹ்வின் விதிப்படி நீங்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை திட்டவட்டமாக தங்கி இருந்தீர்கள். இதோ எழுப்பப்படுகின்ற (அந்த) நாள் (வந்து விட்டது). என்றாலும், நீங்கள் (இந்த நாள் உண்மையில் நிகழும் என்பதை) அறியா(மலும் நம்பிக்கை கொள்ளா)தவர்களாக இருந்தீர்கள்."},{"id":57,"translation":"ஆக, அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தம் தெரிவிப்பது பலனளிக்காது. இன்னும், (அல்லாஹ்வை) திருப்திபடுத்துகின்ற செயல்களை செய்யுங்கள் என்றும் அவர்களிடம் கூறப்படாது."},{"id":58,"translation":"இந்தக் குர்ஆனில் எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக மக்களுக்கு விவரித்துள்ளோம். இன்னும், நீர் அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டுவந்தால் திட்டமாக நிராகரித்தவர்கள் கூறுவார்கள்: “(முஹம்மதை நம்பிக்கை கொண்டவர்களே!) நீங்கள் பொய்யர்களே தவிர வேறில்லை”."},{"id":59,"translation":"இவ்வாறுதான், (இந்த வேதத்தின் உண்மையை) அறியாதவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் முத்திரையிடுகிறான்."},{"id":60,"translation":"ஆக, பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாகும்! (மறுமையை) உறுதி கொள்ளாதவர்கள் உம்மை (-உமது பொறுமையை) இலேசாகக் கருதிவிட வேண்டாம். (அப்படி அவர்கள் உமது பொறுமையை இலேசாக பார்த்துவிட்டால் உமது தீனிலிருந்து உம்மை திருப்பிவிட முயற்சிப்பார்கள்.)"}]},{"id":31,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் மீம்."},{"id":2,"translation":"இவை ஞானமிக்க வேதத்தின் வசனங்களாகும்."},{"id":3,"translation":"(இவை) நேர்வழிகாட்டியும் நல்லறம் புரிவோருக்கு (அல்லாஹ்வின்) கருணையும் ஆகும்."},{"id":4,"translation":"அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஸகாத்தைக் கொடுப்பார்கள். இன்னும், அவர்கள்தான் மறுமையை உறுதியாக நம்புவார்கள்."},{"id":5,"translation":"அவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருக்கிறார்கள். இன்னும், அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள்."},{"id":6,"translation":"அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) வழிகெடுப்பதற்காகவும், அதை பரிகாசமாக எடுத்துக் கொள்வதற்காகவும் கல்வி இன்றி வீண் பேச்சை விலைக்கு வாங்குபவன் மக்களில் இருக்கிறான். இத்தகையவர்களுக்கு (அவர்களை) இழிவுபடுத்தும் தண்டனை உண்டு."},{"id":7,"translation":"இன்னும், அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் பெருமையடித்தவனாக திரும்பி விடுகிறான் - அவற்றை அவன் செவியுறாததைப் போன்று, அவனுடைய இரண்டு காதுகளில் மந்தம் இருப்பதைப் போன்று. ஆகவே, வலிமிகுந்த தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்திக் கூறுவீராக!"},{"id":8,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு இன்பமிகுந்த சொர்க்கங்கள் உண்டு."},{"id":9,"translation":"அவற்றில் அவர்கள் நிரந்தரமாக தங்குவார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்காகும். அவன்தான் மிகைத்தவன்; மிகுந்த ஞானவான்."},{"id":10,"translation":"அவன் வானங்களை - நீங்கள் பார்க்கும்படியான தூண்கள் இன்றி படைத்தான். இன்னும், பூமியில் உறுதியான மலைகளை ஏற்படுத்தினான், அது உங்களை சாய்த்துவிடாமல் இருப்பதற்காக. இன்னும், அதில் எல்லா உயிரினங்களையும் பரப்பினான். இன்னும், நாம் மேகத்திலிருந்து மழையை இறக்கினோம். (அதன் மூலம்) அதில் எல்லா வகையான அழகிய தாவரங்களை முளைக்க வைத்தோம்."},{"id":11,"translation":"இவை அல்லாஹ்வின் படைப்புகளாகும். ஆக, அவனல்லாத மற்றவர்கள் எதைப் படைத்தார்கள் என்று எனக்கு நீங்கள் காண்பியுங்கள்! மாறாக, அநியாயக்காரர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்."},{"id":12,"translation":"திட்டவட்டமாக நாம் லுக்மானுக்கு ஞானத்தை வழங்கினோம். அதாவது: நீர் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துவீராக! யார் நன்றி செலுத்துவாரோ அவர் நன்றி செலுத்துவதெல்லாம் தன் நன்மைக்காகத்தான். எவர் நிராகரிப்பாரோ (அவரை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் நிறைவானவன், மிகுந்த புகழாளன்."},{"id":13,"translation":"இன்னும், லுக்மான் தனது மகனாருக்கு - அவர் அவருக்கு உபதேசித்தவராக - கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! என் மகனே! அல்லாஹ்விற்கு இணை வைக்காதே! நிச்சயமாக இணைவைத்தல் மிகப் பெரிய அநியாயமாகும்."},{"id":14,"translation":"இன்னும், மனிதனுக்கு - அவனது பெற்றோருடன் நல்லுறவு பேணும்படி - நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை பலவீனத்துக்கு மேல் பலவீனத்துடன் (-சிரமத்திற்கு மேல் சிரமத்துடன்) சுமந்தாள். அவனுக்கு பால்குடி மறக்க வைப்பது இரண்டு ஆண்டுகளில் ஆகும். அதாவது, நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து! என் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது."},{"id":15,"translation":"இன்னும், உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு நீ இணையாக்குவதற்கு அவர்கள் உன்னை கட்டாயப்படுத்தினால் அவ்விருவருக்கும் நீ கீழ்ப்படியாதே! (ஆனால்) உலக (விஷய)த்தில் அவ்விருவருடன் நல்ல முறையில் பழகுவாயாக! என் பக்கம் திரும்பிய (நல்ல)வர்களின் பாதையை நீ பின்பற்று! பிறகு, என் பக்கம்தான் உங்கள் (அனைவருடைய) மீளுமிடம் இருக்கிறது. ஆக, நீங்கள் செய்துகொண்டிருந்ததை நான் உங்களுக்கு அறிவிப்பேன்."},{"id":16,"translation":"என் மகனே! நிச்சயமாக (நீ செய்கிற) அ(ந்த நன்மை அல்லது; தீமையான)து எள்ளின் விதை அளவு இருந்தாலும், அது ஒரு பாறையில் இருந்தாலும், அல்லது; வானங்களில் இருந்தாலும்; அல்லது, பூமியில் இருந்தாலும் அல்லாஹ் அதைக் கொண்டு வருவான். நிச்சயமாக அல்லாஹ் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":17,"translation":"என் மகனே! தொழுகையை நிலைநிறுத்து! (மக்களுக்கு) நன்மையை ஏவு! தீமையை விட்டும் (மக்களைத்) தடு! உனக்கு ஏற்பட்ட சோதனையில் பொறுமையாக இரு! நிச்சயமாக இவைதான் உறுதிமிக்க (உயர்வான) காரியங்களில் உள்ளவை ஆகும்."},{"id":18,"translation":"இன்னும், மக்க(ள் உன்னிடம் பேசும்போது அவர்க)ளை விட்டும் உனது கன்னத்தை திருப்பிக் கொள்ளாதே! பூமியில் பெருமை பிடித்தவனாக நடக்காதே! நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையவர்கள் தற்பெருமை பேசுபவர்கள் எவரையும் விரும்ப மாட்டான்."},{"id":19,"translation":"இன்னும், (விரைந்து செல்லாமலும் ஊர்ந்து செல்லாமலும்) உனது நடையில் நடுநிலைப் பேணு! (நிதானமாக நட!) இன்னும், (நீ பேசும்போது) உனது குரலை தாழ்த்து! நிச்சயமாக குரல்களில் மிக அருவருப்பானது கழுதைகளின் குரலாகும்."},{"id":20,"translation":"நீங்கள் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் உங்களுக்கு வசப்படுத்தினான். இன்னும், உங்கள் மீது தனது அருட்கொடைகளை வெளிப்படையாகவும் மறைவாகவும் நிறைவாக்கினான். அல்லாஹ்வின் விஷயத்தில் கல்வி இன்றியும் நேர்வழி இன்றியும் பிரகாசமான வேதமின்றியும் தர்க்கம் செய்பவர்கள் மக்களில் இருக்கிறார்கள்."},{"id":21,"translation":"இன்னும், அல்லாஹ் இறக்கியதை பின்பற்றுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால், மாறாக, எங்கள் மூதாதைகளை நாங்கள் எதன் மீது கண்டோமோ அதையே நாங்கள் பின்பற்றுவோம் என்று கூறுகிறார்கள். கொழுந்து விட்டெரியும் நரக தண்டனையின் பக்கம் ஷைத்தான் அவர்களை அழைப்பவனாக இருந்தாலுமா (இவர்கள் ஷைத்தானின் வழிகாட்டலைப் பின்பற்றுவார்கள்)?"},{"id":22,"translation":"இன்னும், எவர் தனது முகத்தை அல்லாஹ்விற்கு முன் - அவரோ நல்லறம் புரிபவராக இருக்கும் நிலையில் – பணிய வைப்பாரோ திட்டமாக அவர் மிக உறுதியான வளையத்தை பற்றிப் பிடித்தார். அல்லாஹ்வின் பக்கம்தான் எல்லா காரியங்களின் முடிவு இருக்கிறது."},{"id":23,"translation":"இன்னும், எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு உம்மை கவலைப்படுத்த வேண்டாம். நம் பக்கம்தான் அ(த்தகைய)வர்களின் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவர்கள் செய்தவற்றை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":24,"translation":"அவர்களுக்கு நாம் கொஞ்ச (கால)ம் சுகமளிப்போம். பிறகு, நாம் கடுமையான முரட்டு தண்டனையின் பக்கம் அவர்களை நிர்ப்பந்தமாக கொண்டு வருவோம்."},{"id":25,"translation":"யார் வானங்களையும் பூமியையும் படைத்தான் என்று அவர்களிடம் நீர் கேட்டால், அல்லாஹ்தான் (படைத்தான்) என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே!” என்று கூறுவீராக! மாறாக, அவர்களில் அதிகமானோர் (படைத்தவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறிய மாட்டார்கள்."},{"id":26,"translation":"வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே சொந்தமானவை. நிச்சயமாக அல்லாஹ்தான் முற்றிலும் நிறைவானவன் (-தேவையற்றவன்), மிகுந்த புகழாளன்."},{"id":27,"translation":"நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள் எல்லாம் எழுது கோல்களாக இருந்து, இன்னும் கடல் - (மையாக மாறி) அதற்குப் பின்னர் ஏழு கடல்களும் அதற்கு மையாக மாறினால், (பின்னர் அல்லாஹ்வின் ஞானங்கள் எழுதப்பட்டால், எழுதுகோல்கள் தேய்ந்துவிடும், கடல் நீரெல்லாம் தீர்ந்துவிடும். ஆனால்,) அல்லாஹ்வின் ஞானங்கள் தீர்ந்துவிடாது. நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":28,"translation":"உங்களை படைப்பதும் (நீங்கள் மரணித்த பின்னர்) உங்களை (உயிருடன்) எழுப்புவதும் ஒரே ஓர் ஆன்மாவைப் (படைப்பதைப்) போன்றே தவிர (எனக்கு சிரமமான காரியம்) இல்லை. நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன்; உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":29,"translation":"நிச்சயமாக அல்லாஹ் பகலில் இரவை நுழைத்து (இரவை சுருக்கி)விடுகிறான்; இரவில் பகலை நுழைத்து (பகலை சுருக்கி)விடுகிறான்; சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான்; எல்லாம் ஒரு குறிப்பிட்ட தவணையின் பக்கம் ஓடுகின்றன என்பதையும் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் (எல்லோரும்) செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் என்பதையும் நீர் கவனிக்கவில்லையா?"},{"id":30,"translation":"அது, (-மேற்கூறப்பட்ட அனைத்தும்) நிச்சயமாக அல்லாஹ்தான் உண்மையானவன்; இன்னும், நிச்சயமாக அவனை அன்றி அவர்கள் அழைப்பவை (-வணங்குபவை) பொய்யானவை; இன்னும், நிச்சயமாக அல்லாஹ்தான் மிக உயர்ந்தவன், மிகப் பெரியவன் என்ற காரணத்தால் ஆகும்."},{"id":31,"translation":"நிச்சயமாக கப்பல்கள் கடலில் அல்லாஹ்வின் அருளினால் ஓடுகின்றன - அவன் தனது (வல்லமையின்) அத்தாட்சிகளை உங்களுக்குக் காண்பிப்பதற்காக (இதை செய்தான்) என்பதை நீர் கவனிக்கவில்லையா? பெரிய பொறுமையாளர்கள், அதிகம் நன்றி செலுத்துபவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":32,"translation":"(பெரும்) நிழல்களைப் போன்ற ஓர் அலை அவர்களை சூழ்ந்துகொண்டால் அல்லாஹ்வை (மட்டும் உதவிக்கு) அழைக்கிறார்கள், - வழிபாடுகளை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக இருக்கும் நிலையில். ஆக, அவர்களை அவன் கரைக்கு காப்பாற்றியபோது அவர்களில் சிலர் (சொல்லால் மட்டும்) நல்லவர்களாக இருக்கிறார்கள். (உள்ளத்தில் நிராகரிப்பை மறைத்துக் கொள்கிறார்கள். மற்றும் அதிகமானவர்களோ வெளிப்படையாக நிராகரிப்புக்கே திரும்பி விடுகிறார்கள்.) வாக்குறுதிகளை அதிகம் மீறக் கூடியவர்கள், நன்றி கெட்டவர்கள் தவிர நமது அத்தாட்சிகளை மறுக்க மாட்டார்கள்."},{"id":33,"translation":"மக்களே! உங்கள் இறைவனை பயந்து கொள்ளுங்கள்! இன்னும், ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள்! (அந்நாளில்) தந்தை, தன் மகனை விட்டும் (தண்டனையை) தடுக்க மாட்டார். பிள்ளையும் தனது தகப்பனை விட்டும் (தண்டனையை) தடுக்கக் கூடியவராக இல்லை. நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது. ஆகவே, உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றிவிட வேண்டாம். இன்னும், ஏமாற்றக் கூடியவன் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்."},{"id":34,"translation":"நிச்சயமாக அல்லாஹ், - அவனிடம்தான் மறுமையைப் பற்றி (அது எப்போது நிகழும் என்ற) அறிவு இருக்கிறது. அவன்தான் மழையை இறக்குகிறான். கர்ப்பப்பைகளில் உள்ளவற்றை அவன் அறிகிறான். ஓர் ஆன்மா நாளை அது என்ன செய்யும் என்பதை அறியாது. ஓர் ஆன்மா அது எந்த பூமியில் மரணிக்கும் என்பதையும் அறியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்."}]},{"id":32,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் மீம்."},{"id":2,"translation":"இது, (முஹம்மத் நபியின் மீது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும். இதில் அறவே சந்தேகம் இல்லை."},{"id":3,"translation":"இதை (முஹம்மத்) இட்டுக் கட்டினார் என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக! இது, உமது இறைவனிடமிருந்து வந்த உண்மையா(ன வேதமா)கும். இதற்கு முன்னர் அவர்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் எவரும் வராத ஒரு சமுதாயத்தை - அவர்கள் நேர்வழி பெறுவதற்காக - நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இவ்வேதம் இறக்கப்பட்டது)."},{"id":4,"translation":"அல்லாஹ்தான் வானங்களையும் பூமியையும் அவ்விரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான். பிறகு, அர்ஷ் மீது உயர்ந்தான். அவனை அன்றி உங்களுக்கு பொறுப்பாளரோ பரிந்துரையாளரோ இல்லை. நீங்கள் நல்லுணர்வு பெறமாட்டீர்களா?"},{"id":5,"translation":"வானத்திலிருந்து பூமி வரை உள்ள (எல்லா) காரியத்தை(யும்) அவன் திட்டமிட்டு நிர்வகிக்கிறான். (பிறகு, ஒரு நாளில் அது பூமியில் இறங்குகிறது.) பிறகு, (அதே) ஒரு நாளில் அது அவன் பக்கம் உயர்கிறது. அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு நீங்கள் எண்ணுகிற(கால அளவின்)படி ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறது."},{"id":6,"translation":"அவன்தான் (உங்கள் பார்வைகளுக்கு) மறைவானதையும் (உங்கள் பார்வைக்கு வெளியில்) தெரிவதையும் அறிந்தவன், மிகைத்தவன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":7,"translation":"தான் படைத்த ஒவ்வொன்றையும் அவன் செம்மையா(க, சீராக, அழகாக உருவா)க்கினான். மனிதன் படைக்கப்படுவதை களிமண்ணிலிருந்து ஆரம்பித்தான்."},{"id":8,"translation":"பிறகு, அவனது சந்ததிகளை (ஆணிடமிருந்து) வெளியேறக்கூடிய நீரிலிருந்து, மென்மையான (இந்திரிய) நீரிலிருந்து உருவாக்கினான்."},{"id":9,"translation":"பிறகு, அவனை சமமாக்கினான் (சீரான, நேர்த்தியான முறையில் உருவமைத்தான்). தான் படைத்த உயிரிலிருந்து அவனுக்குள் ஊதினான். இன்னும், உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் இதயங்களையும் அவன் அமைத்தான். நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்."},{"id":10,"translation":"அவர்கள் கூறுகிறார்கள்: “நாங்கள் (மரணித்தப் பின்னர் புதைக்கப்பட்டு) பூமியில் (மண்ணோடு மண்ணாக) மறைந்து விட்டால், (அதன் பிறகு) நிச்சயமாக நாங்கள் புதிய படைப்பாக (மீண்டும்) படைக்கப்படுவோமா?” மாறாக, அவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள் ஆவார்கள்."},{"id":11,"translation":"(நபியே) கூறுவீராக! உங்களுக்கு நியமிக்கப்பட்ட மலக்குல் மவுத் (-உயிர் வாங்கும் வானவர்) உங்களை உயிர் கைப்பற்றுவார். பிறகு, உங்கள் இறைவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":12,"translation":"குற்றவாளிகள் தங்கள் இறைவனிடம் தங்கள் தலைகளை தாழ்த்தியவர்களாக, எங்கள் இறைவா! நாங்கள் (உனது தண்டனையை கண்கூடாகப்) பார்த்தோம்; இன்னும், (உனது தூதர்களை நீ உண்மைப்படுத்தியதையும்) நாங்கள் செவியுற்றோம். ஆகவே, எங்களை (உலகிற்கு) திரும்ப அனுப்பு! நாங்கள் நற்செயல்களைச் செய்வோம். (நீதான் வணக்கத்திற்குரியவன்; நீ கூறிய மறுமை, சொர்க்கம், நரகம் எல்லாம் உண்மை என்று இப்போது) நிச்சயமாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று கூறுகிற சமயத்தை நீர் பார்த்தால் (அது திடுக்கம் மிகுந்த ஒரு காட்சியாக இருக்கும்)."},{"id":13,"translation":"நாம் நாடியிருந்தால் எல்லா ஆன்மாவிற்கும் அதற்குரிய நேர்வழியை (அதற்கு வலுக்கட்டாயமாக) கொடுத்திருப்போம். எனினும், நிச்சயமாக ஜின்கள் இன்னும் மனிதர்கள் அனைவரிலிருந்தும் (நரகத்திற்குத் தகுதியானவர்களைக் கொண்டு) நரகத்தை நான் நிரப்புவேன் என்ற வாக்கு என்னிடமிருந்து உறுதியாகி விட்டது."},{"id":14,"translation":"ஆக, நீங்கள் உங்கள் இந்த நாளின் சந்திப்பை மறந்த காரணத்தால் (நரக தண்டனையை) சுவையுங்கள்! நிச்சயமாக நாம் உங்களை (நரக தண்டனையில்) விட்டுவிடுவோம். இன்னும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக நிரந்தரமான தண்டனையை சுவையுங்கள்!"},{"id":15,"translation":"நமது வசனங்களை நம்பிக்கைக் கொள்பவர்கள் எல்லாம் எவர்கள் என்றால் அவர்களுக்கு அவற்றின் மூலம் அறிவுரை கூறப்பட்டால் அவர்கள் சிரம் பணிந்தவர்களாக (பூமியில்) விழுந்து விடுவார்கள்; இன்னும், தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிப்பார்கள். அவர்களோ பெருமையடிக்க மாட்டார்கள்."},{"id":16,"translation":"(இரவில் அவர்கள் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருப்பதால்) அவர்களின் விலாக்கள் படுக்கைகளை விட்டு தூரமாக இருக்கும். அவர்கள் தங்கள் இறைவனை பயத்துடனும் ஆசையுடனும் வணங்குவார்கள். இன்னும், நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து தர்மம் செய்வார்கள்."},{"id":17,"translation":"ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குக் கூலியாக அவர்களுக்காக (சொர்க்கத்தில்) மறைத்து வைக்கப்பட்டுள்ள கண்களுக்கு குளிர்ச்சியான (இன்பத்)தை ஓர் ஆன்மாவும் அறியாது."},{"id":18,"translation":"ஆக, நம்பிக்கையாளராக இருப்பவர் பாவியாக இருப்பவரைப் போன்று ஆவாரா? அவர்கள் (இருவரும்) சமமாக மாட்டார்கள்."},{"id":19,"translation":"ஆக, எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததன் காரணமாக “அல்மஃவா” என்னும் சொர்க்கங்கள் விருந்துபசரணையாக கிடைக்கும்."},{"id":20,"translation":"ஆக, எவர்கள் அல்லாஹ்வின் கட்டளையை மீறினார்களோ அவர்களின் தங்குமிடம் நரகமாகும். அதிலிருந்து அவர்கள் வெளியேற நாடும் போதெல்லாம் அதில் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். இன்னும், நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த நரக தண்டனையை (இப்போது) சுவையுங்கள் என்று அவர்களுக்குக் கூறப்படும்."},{"id":21,"translation":"அவர்கள் (நேர்வழியின் பக்கம்) திரும்புவதற்காக மிகப் பெரிய தண்டனைக்கு முன்னர் சிறிய தண்டனையை நிச்சயமாக நாம் அவர்களுக்கு சுவைக்க வைப்போம்."},{"id":22,"translation":"தனது இறைவனின் வசனங்களினால் அறிவுரைக் கூறப்பட்டு, பிறகு அவற்றை புறக்கணித்த ஒருவனை விட பெரிய அநியாயக்காரன் யார்? நிச்சயமாக நாம் குற்றவாளிகளிடம் பழிவாங்குவோம்."},{"id":23,"translation":"திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைத் கொடுத்தோம். ஆகவே, அவரை (விண்ணுலகப் பயணத்தில்) சந்திப்பதில் நீர் சந்தேகத்தில் இருக்க வேண்டாம். அ(ந்த வேதத்)தை இஸ்ரவேலர்களுக்கு நேர்வழியாக நாம் ஆக்கினோம்."},{"id":24,"translation":"அவர்கள் (நமது மார்க்கத்தில்) பொறுமையாக (உறுதியாக) இருந்தபோது நமது கட்டளையின்படி நேர்வழி காட்டுகிற தலைவர்களை அவர்களில் நாம் உருவாக்கினோம். அ(ந்தத் தலை)வர்கள் நமது வசனங்களை உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களாக இருந்தனர்."},{"id":25,"translation":"நிச்சயமாக உமது இறைவன் அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டவர்களாக இருந்தார்களோ அதில் அவர்களுக்கு மத்தியில் மறுமை நாளில் தீர்ப்பளிப்பான்."},{"id":26,"translation":"இ(ந்த மக்காவில் வசிப்ப)வர்களுக்கு முன்னர் தங்கள் வசிப்பிடங்களில் சுற்றித் திரிந்த எத்தனையோ பல தலைமுறையினர்களை நாம் அழித்தது (பாவிகளின் விஷயத்தில் நாம் நடந்துகொள்ளும் விதத்தை) அவர்களுக்கு தெளிவுபடுத்தவில்லையா? நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் செவிசாய்க்க மாட்டார்களா?"},{"id":27,"translation":"நிச்சயமாக நாம் காய்ந்த பூமிக்கு மழை நீரை ஓட்டிவருகிறோம்; அதன் மூலம் அவர்களின் கால்நடைகளும் அவர்களும் சாப்பிடுகிற விளைச்சலை உற்பத்தி செய்கிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (இதை) அவர்கள் கவனித்துப் பார்க்க வேண்டாமா?"},{"id":28,"translation":"இன்னும், அவர்கள் கூறுகிறார்கள்: “(முஹம்மதின் தோழர்களே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (எங்களுக்கு தண்டனை உண்டு என்ற) இந்த தீர்ப்பு எப்போது (நிகழும்)?”"},{"id":29,"translation":"(நபியே!) கூறுவீராக! “தீர்ப்பு (வருகின்ற) நாளில் நிராகரிப்பவர்களுக்கு அவர்களது ஈமான் (-நம்பிக்கை) பலனளிக்காது. இன்னும் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.”"},{"id":30,"translation":"ஆக! (நபியே!) நீர் அவர்களைப் புறக்கணிப்பீராக! (அல்லாஹ்வின் தீர்ப்பை) எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக (நீர் அவர்களுக்கு எச்சரித்ததை) அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்."}]},{"id":33,"verses":[{"id":1,"translation":"அலிஃப் லாம் மீம்."},{"id":2,"translation":"இன்னும், (நபியே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு வஹ்யி எது அறிவிக்கப்படுகிறதோ (அது குர்ஆனாக இருந்தாலும் சரி, அல்லது ஸுன்னாவாக இருந்தாலும் சரி) அதையே பின்பற்றுவீராக! நிச்சயமாக நீங்கள் செய்வதை அல்லாஹ் ஆழ்ந்தறிந்தவனாக இருக்கிறான்."},{"id":3,"translation":"இன்னும், (நபியே!) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்திரு)ப்பீராக! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":4,"translation":"அல்லாஹ் ஒரு மனிதனுக்கு அவனது உடலில் இரு உள்ளங்களை அமைக்கவில்லை. இன்னும், நீங்கள் ளிஹார் செய்த உங்கள் மனைவிகளை உங்கள் தாய்மார்களாக அவன் ஆக்கவில்லை. இன்னும், உங்கள் வளர்ப்பு பிள்ளைகளை உங்கள் சொந்த பிள்ளைகளாக அவன் ஆக்கவில்லை. அது உங்கள் வாய்களால் நீங்கள் கூறுவதாகும். அல்லாஹ் உண்மையை கூறுகிறான். அவன்தான் நல்ல பாதைக்கு வழிகாட்டுகிறான்."},{"id":5,"translation":"அவர்களை அவர்களது தந்தைகளுடன் சேர்த்தே அழையுங்கள்! அதுதான் அல்லாஹ்விடம் மிக நீதமானதாகும். ஆக, நீங்கள் அவர்களின் தந்தைகளை அறியவில்லை என்றால் மார்க்கத்தில் அவர்கள் உங்கள் சகோதரர்கள் (ஆவார்கள் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தால். அப்படி இல்லை என்றால்) அவர்கள் உங்கள் உதவியாளர்கள் ஆவார்கள். நீங்கள் எதில் தவறு செய்தீர்களோ அதில் உங்கள் மீது குற்றம் இல்லை. என்றாலும், எ(ந்த பாவத்)தை உங்கள் உள்ளங்கள் வேண்டுமென்றே செய்ததோ அதுதான் குற்றம் ஆகும். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கிறான்."},{"id":6,"translation":"நம்பிக்கையாளர்களுக்கு அவர்களின் உயிர்களைவிட நபிதான் மிக உரிமையாளர் (மிக நெருக்கமானவர், மிக ஏற்றமானவர்) ஆவார். அவருடைய மனைவிமார்கள் அவர்களுக்கு தாய்மார்கள் ஆவார்கள். இரத்த பந்தங்கள் அல்லாஹ்வின் வேதத்தின் படி அவர்களில் சிலர் சிலருக்கு உரிமையுள்ளவர்கள் ஆவார்கள், (மற்ற) நம்பிக்கையாளர்களையும் முஹாஜிர்களையும் விட. எனினும், உங்கள் (வாரிசு அல்லாத) உங்கள் சொந்தங்களுக்கு நீங்கள் ஏதும் நன்மை செய்தால் தவிர. இது வேதத்தில் எழுதப்பட்டதாக இருக்கிறது."},{"id":7,"translation":"எல்லா நபிமார்களிடமும் (அவர்கள் அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்று) அவர்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! இன்னும், (அதே வாக்குறுதியை) உம்மிடமும் நூஹ், இப்ராஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமும் நாம் வாங்கினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை நாம் வாங்கினோம்."},{"id":8,"translation":"(அல்லாஹ் இந்த வாக்குறுதியை வாங்கியது) ஏனென்றால், உண்மையாளர்களை (-நபிமார்களை) அவர்களின் உண்மையைப் பற்றி (அவர்களின் சமுதாய மக்கள் அவர்களுக்கு என்ன பதில் கூறினார்கள், ஏற்றார்களா, நிராகரித்தார்களா என்று) விசாரிப்பதற்காக ஆகும். நிராகரிப்பாளர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை (அல்லாஹ்) ஏற்படுத்தி இருக்கிறான்."},{"id":9,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்த அருட்கொடையை நினைவு கூருங்கள். பல ராணுவங்கள் (உங்களை தாக்குவதற்கு) உங்களிடம் வந்தபோது அவர்களுக்கு எதிராக காற்றையும் பல ராணுவங்களையும் நாம் அனுப்பினோம். அவர்களை நீங்கள் பார்க்கவில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்கியவனாக இருக்கிறான்."},{"id":10,"translation":"உங்களுக்கு மேல் புறத்திலிருந்தும் உங்களுக்கு கீழ்ப்புறத்திலிருந்தும் உங்களிடம் அவர்கள் வந்த சமயத்தில், இன்னும் பார்வைகள் சொருகி, உள்ளங்கள் தொண்டைகளுக்கு எட்டிய சமயத்தில் (உங்கள் செயல்களை அல்லாஹ் உற்று நோக்கியவனாக இருந்தான்). (நயவஞ்சகர்களே!) நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி பல (தப்பான) எண்ணங்களை எண்ணினீர்கள்."},{"id":11,"translation":"அங்குதான் நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்பட்டார்கள். இன்னும், கடுமையாக அச்சுறுத்தப்பட்டார்கள்."},{"id":12,"translation":"இன்னும், நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் (சந்தேக) நோய் உள்ளவர்களும் “அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (உண்மையான வெற்றியை) வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்."},{"id":13,"translation":"“யஸ்ரிப் வாசிகளே! உங்களுக்கு (இந்த போர் மைதானத்தில் தாக்குப்பிடித்து) தங்குவது அறவே முடியாது. ஆகவே, (உங்கள் இல்லங்களுக்கு) திரும்பி விடுங்கள்” என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய சமயத்தை நினைவு கூருங்கள். இன்னும், அவர்களில் ஒரு பிரிவினர் (போரில் கலந்துகொள்ளாமல் இருக்க) நபியிடம் அனுமதி கேட்கிறார்கள். “நிச்சயமாக எங்கள் இல்லங்கள் பாதுகாப்பு அற்றதாக இருக்கின்றன” என்று கூறுகிறார்கள். ஆனால், அவை பாதுகாப்பு அற்றதாக இல்லை. அவர்கள் (போர்க்களத்தை விட்டு) விரண்டோடுவதைத் தவிர (போர்க்களத்தில் நின்று உறுதியாக போர் செய்வதை) நாடவில்லை."},{"id":14,"translation":"(மதீனாவில் உள்ள) அவர்கள் (-முனாஃபிக்குகள்) மீது அதனுடைய சுற்றுப் புறங்களில் இருந்து (படைகள்) நுழைந்தால், பிறகு குழப்பம் விளைவிக்கும்படி (-நிராகரிப்பையும் இணைவைத்தலையும் செய்யும்படி) அவர்களிடம் கேட்கப்பட்டால் அவர்கள் அதை (உடனே) செய்திருப்பார்கள். (நிராகரிப்பாளர்களின் அழைப்புக்கு பதில் தர) அவர்கள் கொஞ்ச (நேர)மே தவிர தாமதித்திருக்க மாட்டார்கள்."},{"id":15,"translation":"திட்டவட்டமாக இதற்கு முன்னர், “அவர்கள் புறமுதுகிட்டு ஓடமாட்டார்கள்” என்று அவர்கள் அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்திருந்தனர். அல்லாஹ்வின் (பெயர் கூறி இவர்கள் செய்த) ஒப்பந்தம் விசாரிக்கப்படுவதாக இருக்கிறது."},{"id":16,"translation":"(நபியே!) கூறுவீராக! நீங்கள் மரணத்தைவிட்டு அல்லது கொல்லப்படுவதை விட்டு விரண்டோடினால் (நீங்கள்) விரண்டோடுவது உங்களுக்கு அறவே பலனளிக்காது. அப்போதும் (-அப்படி விரண்டோடினாலும்) கொஞ்ச (கால)மே தவிர (இவ்வுலகில் வாழ்வதற்கு) நீங்கள் சுகமளிக்கப்பட மாட்டீர்கள்."},{"id":17,"translation":"(நபியே) கூறுவீராக! அல்லாஹ், உங்களுக்கு ஒரு தீங்கை நாடினால் அல்லாஹ்விடமிருந்து உங்களைப் பாதுகாப்பவர் யார்? அல்லது, அவன் உங்களுக்கு கருணை புரிய நாடினால் (அதை யாரால் தடுத்து நிறுத்த முடியும்?). அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு பொறுப்பாளரையோ உதவியாளரையோ அவர்கள் காணமாட்டார்கள்."},{"id":18,"translation":"உங்களில் (நபியை விட்டு மக்களை) தடுப்பவர்களையும்; தங்கள் சகோதரர்களுக்கு, “எங்களிடம் வந்துவிடுங்கள் (நபியுடன் போருக்கு செல்லாதீர்கள்)” என்று சொல்பவர்களையும் அல்லாஹ் நன்கறிவான். அவர்கள் மிகக் குறைவாகவே தவிர போருக்கு வரமாட்டார்கள்."},{"id":19,"translation":"அவர்கள் உங்கள் விஷயத்தில் (உங்களுக்கு உதவாமல்) மிகக் கருமிகளாக இருக்கிறார்கள். ஆக, (போர் பற்றிய) பயம் (அவர்களுக்கு) வந்தால், மரண (பய)த்தால் மயக்கம் அடைபவனைப் போல் அவர்களது கண்கள் சுழலக்கூடிய நிலையில், உம் பக்கம் அவர்கள் பார்ப்பவர்களாக அவர்களை நீர் காண்பீர். ஆக, (எதிரிகளைப் பற்றி) பயம் சென்றுவிட்டால் செல்வத்தின் மீது பேராசையுடையவர்களாக கூர்மையான நாவுகளினால் (அத்துமீறி) உங்களுக்கு தொந்தரவு தருகிறார்கள் (-உங்களை ஏசுகிறார்கள்). அவர்கள் (உண்மையில்) நம்பிக்கை கொள்ளவில்லை. ஆகவே, அவர்களின் அமல்களை அல்லாஹ் பாழ்ப்படுத்திவிட்டான். இது அல்லாஹ்விற்கு மிக எளிதாக இருக்கிறது."},{"id":20,"translation":"(நயவஞ்சகர்களான) அவர்கள் (முஸ்லிம்கள் மீது போர் தொடுத்து வந்த எதிரி) ராணுவங்கள் (முஸ்லிம்களை அழிக்காமல் தங்கள் ஊர்களுக்கு திரும்ப) செல்லமாட்டார்கள் என்று எண்ணுகிறார்கள். இன்னும், அந்த ராணுவங்கள் (மீண்டும் ஒருமுறை) வந்தால் நிச்சயமாக கிராமவாசிகளுடன் கிராமங்களில் அவர்கள் தங்கி இருந்திருக்க வேண்டுமே என்று ஆசைப்படுகிறார்கள். உங்க(ளுக்கு என்ன ஆனது என்று உங்க)ள் செய்திகளைப் பற்றி அவர்கள் விசாரிக்கிறார்கள். அவர்கள் உங்களுடன் (போருக்கு வந்து) இருந்தாலும் (எதிரிகளிடம்) மிகக் குறைவாகவே தவிர போர் புரிந்திருக்க மாட்டார்கள்."},{"id":21,"translation":"அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு - அல்லாஹ்வையும் மறுமை நாளையும் பயந்தவராக இருப்பவருக்கு - திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், அவர் அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்பவராகவும் இருப்பார்."},{"id":22,"translation":"இன்னும், நம்பிக்கையாளர்கள் (எதிரி) ராணுவங்களைப் பார்த்தபோது, “அல்லாஹ்வும் அவனது தூதரும் எங்களுக்கு வாக்களித்ததாகும் இது; அல்லாஹ்வும் அவனது தூதரும் உண்மை உரைத்தார்கள்” என்று கூறினார்கள். அ(ந்த எதிரி ராணுவங்களின் வருகையான)து, (அல்லாஹ்வின் மீது) நம்பிக்கையையும் (அல்லாஹ்வின் கட்டளைக்கு) கட்டுப்படுதலையும் தவிர அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை."},{"id":23,"translation":"அல்லாஹ்விடம் எதை ஒப்பந்தம் செய்தார்களோ அதை உண்மைப்படுத்திய ஆண்களும் நம்பிக்கையாளர்களில் இருக்கிறார்கள். (வீர மரணம் அடைய வேண்டும் என்ற) தனது நேர்ச்சையை நிறைவேற்றியவரும் அவர்களில் உண்டு. (வீர மரணத்தை) எதிர்பார்த்து இருப்பவரும் அவர்களில் உண்டு. அவர்கள் (தங்கள் ஒப்பந்தத்தை) மாற்றிவிடவில்லை."},{"id":24,"translation":"இறுதியாக, அல்லாஹ் உண்மையாளர்களுக்கு அவர்களின் உண்மைக்கு நற்கூலி தருவான். இன்னும், நயவஞ்சகர்களை அவன் நாடினால் தண்டிப்பான். அல்லது, அவர்கள் திருந்தும்படி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்."},{"id":25,"translation":"இன்னும், நிராகரிப்பாளர்களை அவர்களது கோபத்துடன் அல்லாஹ் திருப்பி விட்டான். அவர்கள் (இந்தப் போரினால்) எந்த நன்மையையும் அடையவில்லை. இன்னும், (நம்பிக்கையாளர்கள் கடுமையாக) சண்டை செய்(து அதிகமான இழப்புகள் அவர்களுக்கு ஏற்படு)வதை விட்டும் நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பாதுகாத்தான். அல்லாஹ் மகா வலிமைமிக்கவனாக, மிகைத்தவனாக இருக்கிறான்."},{"id":26,"translation":"இன்னும், வேதக்காரர்களில் இருந்து அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) உதவியவர்களை அவர்களின் கோட்டைகளில் இருந்து அல்லாஹ் இறக்கினான். இன்னும், அவர்களின் உள்ளங்களில் திகிலை போட்டான். (அவர்களில்) ஒரு பிரிவினரை நீங்கள் கொன்றீர்கள். இன்னும், ஒரு பிரிவினரை சிறைப் பிடித்தீர்கள்."},{"id":27,"translation":"இன்னும், அவர்களின் பூமியையும் அவர்களின் இல்லங்களையும் அவர்களின் செல்வங்களையும் நீங்கள் (உங்கள் பாதங்களால்) மிதிக்காத ஒரு பூமியையும் (அல்லாஹ்) உங்களுக்கு சொந்தமாக்கி கொடுத்தான். அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்."},{"id":28,"translation":"நபியே! உமது மனைவிகளுக்கு சொல்வீராக! “உலக வாழ்க்கையையும் அதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்புகிறவர்களாக இருந்தால் வாருங்கள்! உங்களுக்கு செல்வம் தருகின்றேன்; அழகிய முறையில் உங்களை விட்டு விடுகின்றேன்.”"},{"id":29,"translation":"நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (சொர்க்கமாகிய) மறுமை வீட்டையும் விரும்பக் கூடியவர்களாக இருந்தால் நிச்சயமாக அல்லாஹ் நல்லவர்களாகிய உங்களுக்கு மகத்தான கூலியை தயார்படுத்தி வைத்திருக்கிறான்."},{"id":30,"translation":"நபியின் மனைவிமார்களே! உங்களில் யார் தெளிவான மானக்கேடான செயலை செய்வாரோ அவருக்கு தண்டனை இரு மடங்காக ஆக்கப்படும். அ(வ்வாறு தண்டனை கொடுப்ப)து அல்லாஹ்விற்கு இலகுவானதாக இருக்கிறது."},{"id":31,"translation":"(நபியின் மனைவிகளே!) உங்களில் யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் பணிந்து (கீழ்ப்படிந்து) நடப்பாரோ, இன்னும் (மார்க்கம் கூறிய முறைப்படி) நன்மையை செய்வாரோ அவருக்கு அவரது கூலியை இருமுறை நாம் கொடுப்போம். இன்னும், அவருக்கு கண்ணியமான கூலியை (அவருக்காக) ஏற்படுத்தி வைத்திருக்கிறோம்."},{"id":32,"translation":"நபியின் மனைவிகளே! நீங்கள் (பொதுவான) பெண்களில் ஒருவரைப் போன்று இல்லை, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி (மார்க்கத்தை பின்பற்றி) நடந்தால் (தகுதியால் மிக மேலானவர்களாக இருப்பீர்கள்). ஆகவே, (அந்நிய ஆண்களுடன் குழைந்து) மென்மையாகப் பேசாதீர்கள். அப்படிப் பேசினால் தனது உள்ளத்தில் நோய் உள்ளவன் (உங்கள் மீது) தப்பான ஆசைப்படுவான். ஆகவே, சரியான (முறையான) பேச்சைப் பேசுங்கள்."},{"id":33,"translation":"இன்னும், உங்கள் இல்லங்களில் தங்கியிருங்கள். (அவசிய தேவை இன்றி வெளி இடங்களுக்கு செல்லாதீர்கள்.) முந்திய அறியாமைக் காலத்தில் அலங்காரங்களை வெளிப்படுத்தி(யவர்களாக வெளியே சுற்றி)யது போன்று நீங்கள் அலங்காரங்களை வெளிப்படுத்தாதீர்கள். (முகத்தை திறந்தவர்களாக வெளியே செல்லாதீர்கள்.) இன்னும், தொழுகையை நிலைநிறுத்துங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! (நபியின்) வீட்டார்களே! அல்லாஹ் நாடுவதெல்லாம் உங்களை விட்டும் அசுத்தத்தை (பாவத்தை) போக்குவதற்கும் உங்களை முற்றிலும் சுத்தப்படுத்துவதற்கும்தான்."},{"id":34,"translation":"இன்னும், படிக்கப்பட வேண்டிய அல்லாஹ்வின் வேத வசனங்களையும் (நபியின் சுன்னாவாகிய) ஞானத்தையும் நீங்கள் உங்கள் இல்லங்களில் (படித்து) மனனம் செய்யுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மிக கருணையாளனாக ஆழ்ந்தறிபவனாக இருக்கிறான்."},{"id":35,"translation":"நிச்சயமாக முஸ்லிமான ஆண்கள், முஸ்லிமான பெண்கள், முஃமினான ஆண்கள், முஃமினான பெண்கள், (மார்க்க சட்டங்களுக்கு) கீழ்ப்படிந்து நடக்கும் ஆண்கள், கீழ்ப்படிந்து நடக்கும் பெண்கள், உண்மையான ஆண்கள், உண்மையான பெண்கள், பொறுமையான ஆண்கள், பொறுமையான பெண்கள், உள்ளச்சமுடைய ஆண்கள், உள்ளச்சமுடைய பெண்கள், தர்மம் செய்கிற ஆண்கள், தர்மம் செய்கிற பெண்கள், நோன்பாளியான ஆண்கள், நோன்பாளியான பெண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற ஆண்கள், தங்கள் மறைவிடங்களை பாதுகாக்கிற பெண்கள், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூர்கின்ற ஆண்கள், நினைவு கூர்கின்ற பெண்கள் - இவர்களுக்கு மன்னிப்பையும் மகத்தான கூலியையும் அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்."},{"id":36,"translation":"நம்பிக்கை கொண்ட ஆணுக்கும் நம்பிக்கை கொண்ட பெண்ணுக்கும் தங்களது காரியத்தில் அவர்களுக்கு என்று ஒரு விருப்பம் இருப்பது ஆகுமானதல்ல, அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவுசெய்துவிட்டால். ஆக, யார் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறுசெய்வாரோ அவர் திட்டமாக தெளிவாக வழிகெட்டுவிட்டார்."},{"id":37,"translation":"எவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தானோ; இன்னும், நீர் அருள் புரிந்தீரோ அவரை நோக்கி, “நீ உன் மனைவியை உன்னுடன் வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்!” என்று நீர் கூறிய சமயத்தை நினைவு கூருவீராக! இன்னும், அல்லாஹ் எதை வெளிப்படுத்தக் கூடியவனாக இருக்கிறானோ அதை உமது உள்ளத்தில் நீர் மறைக்கிறீர். இன்னும், மக்களை பயப்படுகிறீர். அல்லாஹ்தான், நீர் அவனை பயப்படுவதற்கு மிகத் தகுதியானவன். ஸைது, அவளிடம் (திருமணத்) தேவையை முடித்து (அவளை விவாகரத்து செய்து) விட்டபோது அவளை உமக்கு நாம் மணமுடித்து வைத்தோம். இது ஏனெனில், நம்பிக்கையாளர்களுக்கு அவர்களது வளர்ப்பு பிள்ளைகளின் மனைவிகள் விஷயத்தில், அவர்களிடம் (-அந்த மனைவிகளிடம்) அவர்கள் (-அந்த வளர்ப்புப் பிள்ளைகள் திருமணத்) தேவையை முடித்து (விவாகரத்து செய்து) விட்டால் அப்போது (அப்பெண்களை வளர்ப்புப் பிள்ளைகளின் தந்தைகள் திருமணம் முடித்துக் கொள்வதில்) சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக ஆகும். அல்லாஹ்வின் காரியம் (கண்டிப்பாக) நடக்கக்கூடியதாக இருக்கிறது."},{"id":38,"translation":"நபியின் மீது, அல்லாஹ் அவருக்கு கடமையாக்கியதை செய்வதில் அறவே குற்றம் இருக்கவில்லை. இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் வழிமுறையை (நபியே! உமக்கும்) வழிமுறையாக ஆக்கப்பட்டது. அல்லாஹ்வின் கட்டளை நிறைவேற்றப்படுகிற தீர்ப்பாக இருக்கிறது."},{"id":39,"translation":"அவர்கள் (-அந்தத் தூதர்கள்) அல்லாஹ்வின் தூதுச் செய்திகளை - சட்டங்களை எடுத்துச் சொல்வார்கள்; இன்னும் அவனை பயப்படுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர ஒருவரையும் பயப்படமாட்டார்கள். (அடியார்கள் அனைவரையும்) விசாரிப்பவனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":40,"translation":"முஹம்மத் உங்கள் ஆண்களில் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. என்றாலும், அவர் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார்களின் இறுதி முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்."},{"id":41,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை மிக அதிகம் நினைவு கூருங்கள்!"},{"id":42,"translation":"இன்னும், அவனை காலையிலும் மாலையிலும் துதியுங்கள். (ஸுப்ஹு, இன்னும் அஸ்ர் தொழுகைகளை நிறைவேற்றுங்கள்.)"},{"id":43,"translation":"அவன் இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் உங்களை வெளியேற்றுவதற்காக உங்கள் மீது விசேஷமாக அருள் புரிகிறான். இன்னும், அவனது வானவர்கள் (உங்களுக்காக அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கிறார்கள். அவன் நம்பிக்கையாளர்கள் மீது மகா கருணையாளனாக இருக்கிறான்."},{"id":44,"translation":"அவர்கள் அவனை சந்திக்கிற நாளில் அவர்களது முகமன் ஸலாம் ஆகும். இன்னும், அவன் அவர்களுக்கு கண்ணியமான கூலியை ஏற்படுத்தி வைத்திருக்கிறான்."},{"id":45,"translation":"நபியே! நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்."},{"id":46,"translation":"இன்னும், அல்லாஹ்வின் பக்கம் அவனது அனுமதிகொண்டு அழைப்பவராகவும் பிரகாசிக்கின்ற விளக்காகவும் (நாம் உம்மை அனுப்பினோம்.)"},{"id":47,"translation":"(நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! “நிச்சயமாக அவர்களுக்கு அல்லாஹ்விடம் மிகப் பெரிய அருள் இருக்கிறது.”"},{"id":48,"translation":"(நபியே!) நிராகரிப்பாளர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர்! அவர்களின் தொந்தரவை (கண்டு கொள்ளாமல்) விட்டுவிடுவீராக! இன்னும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை(த்து அவனை மட்டும் சார்ந்து இரு)ப்பீராக! பொறுப்பாளனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":49,"translation":"நம்பிக்கையாளர்களே! நம்பிக்கைகொண்ட பெண்களை நீங்கள் திருமணம் முடித்தால், பிறகு அவர்களுடன் நீங்கள் உறவு வைப்பதற்கு முன்னர் அவர்களை நீங்கள் விவாகரத்து செய்துவிட்டால் நீங்கள் கணக்கிட வேண்டிய இத்தா – தவணைக் காலம் ஏதும் உங்களுக்கு அவர்கள் மீது (கடமை) இல்லை. ஆக, (நீங்கள் விவாகரத்து செய்யும்போது) அவர்களுக்கு (உங்கள் வசதிக்கு ஏற்ப) செல்வத்தைக் கொடுங்கள்! இன்னும், அழகிய முறையில் அவர்களை விடுவித்து விடுங்கள்."},{"id":50,"translation":"நபியே! நீர் அவர்களுக்கு (மஹ்ர் என்ற) திருமணக் கொடைகளை கொடுத்(து மணமுடித்)த உமது மனைவிகளையும் அல்லாஹ் உமக்கு போரில் கொடுத்த அடிமைப் பெண்களில் உமது வலக்கரம் சொந்தமாக்கியவர்களையும் (-உமக்கு என்று வைத்துக்கொண்ட பெண்களையும்) உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்த உமது தந்தையின் உடன் பிறந்தவர்களின் மகள்களையும் உமது மாமியின் மகள்களையும் உமது தாய் மாமாவின் மகள்களையும் உமது தாயின் உடன்பிறந்த சகோதரிகளின் மகள்களையும் நிச்சயமாக நாம் உமக்கு (நீர் அவர்களை மணமுடிப்பதற்கு) ஆகுமாக்கினோம். இன்னும், ஒரு முஃமினான பெண், தன்னை நபிக்கு அன்பளிப்பு செய்தால், நபியும் அவளை மணமுடிக்க நாடினால் அந்த பெண்ணையும் உமக்கு ஆகுமாக்கினோம். இது (-மஹ்ர் இன்றி மணமுடிப்பது எல்லா) முஃமின்களுக்கும் அன்றி உமக்கு மட்டும் பிரத்தியோகமான சலுகையாகும். அவர்கள் மீது (-நம்பிக்கையாளர்கள் மீது) அவர்களின் மனைவிமார்கள் இன்னும் அவர்களது வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் (-அடிமைப் பெண்கள்) விஷயத்தில் நாம் கடமையாக்கியதை திட்டமாக நாம் அறிவோம். (நபியே!) உமக்கு சிரமம் இருக்கக்கூடாது என்பதற்காக (நாம் மேற்கூறப்பட்ட பெண்களை மணமுடிப்பதையும் தன்னை அன்பளிப்புச் செய்யும் பெண்ணை மஹ்ரின்றி மணமுடிப்பதையும் உமக்கு ஆகுமாக்கினோம்). அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":51,"translation":"(நபியே!) அவர்களில் (-உமது மனைவிகளில்) நீர் நாடுபவரை தள்ளிவைப்பீராக! இன்னும், நீர் நாடுபவரை உம் பக்கம் சேர்த்துக்கொள்வீராக! நீர் நீக்கிவிட்டவர்களில் யாரை நீர் சேர்க்க விரும்பினீரோ அது உம்மீது குற்றம் இல்லை. இது அவர்களின் கண்கள் குளிர்ச்சி அடைவதற்கும் அவர்கள் கவலைப்படாமல் இருப்பதற்கும் நீர் அவர்களுக்கு கொடுத்ததைக்கொண்டு அவர்கள் எல்லோரும் திருப்தி அடைவதற்கும் நெருக்கமான(து இன்னும் சுலபமான)து ஆகும். அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கறிவான். அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா சகிப்பாளனாக இருக்கிறான்."},{"id":52,"translation":"(இந்த அத்தியாயத்தின் ஐம்பதாவது வசனத்தில் கூறப்பட்ட பெண்களுக்கு) பின்னர் (வேறு) பெண்கள் உமக்கு ஆகுமாக மாட்டார்கள். இன்னும், இவர்களுக்கு பதிலாக (வேறு) பெண்களை நீர் மாற்றுவதும் (உமக்கு) ஆகுமானதல்ல, அவர்களின் அழகு உம்மைக் கவர்ந்தாலும் சரியே. உமது வலக்கரம் சொந்தமாக்கிய பெண்களைத் தவிர. (அந்த அடிமைப் பெண்கள் உமக்கு ஆகுமானவர்களே.) அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்."},{"id":53,"translation":"நம்பிக்கையாளர்களே! ஓர் உணவின் பக்கம் உங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டால் தவிர நபியின் வீடுகளுக்குள் நுழையாதீர்கள். (அப்படி அழைக்கப்பட்டாலும் முன் கூட்டியே அங்கு சென்று) அது தயாராவதை எதிர்பார்க்காதவர்களாக இருக்க வேண்டும். என்றாலும், நீங்கள் (விருந்துக்கு) அழைக்கப்பட்டால் (வீட்டினுள்) நுழையுங்கள். நீங்கள் சாப்பிட்டுவிட்டால் (வீட்டிலிருந்து) பிரிந்து (சென்று) விடுங்கள். (உணவு உண்ட பின்னர்) பேச்சை புதிதாக ஆரம்பிக்காதவர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக இது நபிக்கு தொந்தரவு தரக்கூடியதாக இருக்கும். அவர் உங்களிடம் (அதைக் கூற) வெட்கப்படுவார். அல்லாஹ் சத்தியத்திற்கு வெட்கப்படமாட்டான். நீங்கள் அவர்களிடம் (-நபியின் மனைவிகளிடம் ஏதேனும்) ஒரு பொருளைக் கேட்டால் திரைக்குப் பின்னால் இருந்து அவர்களிடம் கேளுங்கள். அதுதான் உங்கள் உள்ளங்களுக்கும் அவர்களின் உள்ளங்களுக்கும் மிகத் தூய்மையானதாகும். அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் தொந்தரவு தருவதும் அவருக்குப் பின்னர் அவருடைய மனைவிகளை நீங்கள் மணமுடிப்பதும் உங்களுக்கு எப்போதும் ஆகுமானதல்ல. நிச்சயமாக இவை அல்லாஹ்விடம் பெரிய பாவமாக இருக்கிறது."},{"id":54,"translation":"நீங்கள் ஒரு விஷயத்தை வெளிப்படுத்தினால்; அல்லது, அதை மறைத்தால் நிச்சயமாக அல்லாஹ் எல்லா விஷயங்களையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்."},{"id":55,"translation":"அவர்கள் மீது (நபியின் மனைவிகள் மீது, முஃமினான பெண்கள் மீது) தங்கள் தந்தைமார்கள், தங்கள் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரர்கள், தங்கள் சகோதரர்களின் ஆண் பிள்ளைகள், தங்கள் சகோதரிகளின் ஆண் பிள்ளைகள், தங்கள் (சமுதாயத்தைச் சேர்ந்த முஃமினான) பெண்கள், தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கியவர்கள் விஷயத்தில் (-அவர்கள் முன் பர்தா அணியாமல் இருப்பதில்) குற்றம் இல்லை. (பெண்களே!) அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கு பார்த்தவனாக இருக்கிறான்."},{"id":56,"translation":"நிச்சயமாக அல்லாஹ்வும் அவனது மலக்குகளும் நபியை வாழ்த்துகிறார்கள். நம்பிக்கையாளர்களே! நீங்களும் அவரை வாழ்த்துங்கள்! இன்னும் ஸலாம் கூறுங்கள்!"},{"id":57,"translation":"நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் தொந்தரவு தருகிறார்களோ அவர்களை இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ் சபிக்கிறான். இன்னும், இழிவுபடுத்துகிற தண்டனையை அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்."},{"id":58,"translation":"எவர்கள் முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அவர்கள் செய்யாத ஒன்றைக் கொண்டு தொந்தரவு தருவார்களோ அவர்கள் அபாண்டமான பழியையும் தெளிவான பாவத்தையும் திட்டமாக (தங்கள் மேல்) சுமந்து கொண்டார்கள்."},{"id":59,"translation":"நபியே! உமது மனைவிமார்களுக்கும் உமது பெண் பிள்ளைகளுக்கும் முஃமின்களின் பெண்(பிள்ளை)களுக்கும் கூறுவீராக, அவர்கள் தங்கள் பர்தாக்களை தங்கள் மீது போர்த்திக்கொள்வார்கள்! இது அவர்கள் (கண்ணியமானவர்கள் என்று) அறியப்படுவதற்கு மிக சுலபமானதாகும். ஆகவே, அவர்கள் தொந்தரவு செய்யப்பட மாட்டார்கள். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக பெரும் கருணையாளனாக இருக்கிறான்."},{"id":60,"translation":"நயவஞ்சகர்களும் தங்கள் உள்ளங்களில் நோய் (விபச்சார ஆசை) உள்ளவர்களும் மதீனாவில் கெட்ட காரியங்களில் ஈடுபடுபவர்களும் (தங்கள் கெட்ட செயல்களிலிருந்து) விலகவில்லை என்றால் அவர்கள் மீது (உம்மை சாட்டிவிட்டு அவர்களை நீர் தண்டிக்க) உம்மை தூண்டிவிடுவோம். பிறகு, அவர்கள் அதில் உம்முடன் குறைவாகவே தவிர வசிக்க மாட்டார்கள்."},{"id":61,"translation":"அவர்கள் சபிக்கப்பட்டவர்கள். அவர்கள் எங்கு காணப்பட்டாலும் அவர்கள் சிறை பிடிக்கப்பட வேண்டும். இன்னும், முற்றிலும் கொல்லப்படவேண்டும்."},{"id":62,"translation":"இதற்கு முன்னர் சென்றவர்களில் அல்லாஹ்வின் நடைமுறைதான் (இவர்கள் விஷயத்திலும்) பின்பற்றப்படும். அல்லாஹ்வின் நடைமுறையில் எவ்வித மாற்றத்தையும் அறவே நீர் காணமாட்டீர்."},{"id":63,"translation":"மக்கள் உம்மிடம் மறுமையைப் பற்றி (அது எப்போது வரும் என்று) கேட்கிறார்கள். (நபியே!) கூறுவீராக! அதன் அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. மறுமை சமீபமாக இருக்கக்கூடும் என்பது உமக்குத் தெரியுமா?"},{"id":64,"translation":"நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பாளர்களை (இவ்வுலகில்) சபித்தான். இன்னும், கொழுந்து விட்டெரியும் நரகத்தை அவர்களுக்கு (மறுமையில்) ஏற்படுத்தினான்."},{"id":65,"translation":"அவர்கள் அதில் எப்போதும் நிரந்தரமாக தங்கிவிடுவார்கள். (தங்களை பாதுகாக்கும்) பொறுப்பாளரையோ உதவியாளரையோ காணமாட்டார்கள்."},{"id":66,"translation":"அவர்களது முகங்கள் நெருப்பில் புரட்டப்படுகின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்விற்கு நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே! இன்னும் (அவனது) ரஸூலுக்கு நாங்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டுமே!”"},{"id":67,"translation":"இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும் எங்கள் பெரியவர்களுக்கும் கீழ்ப்படிந்தோம். ஆக, அவர்கள் எங்களை வழிகெடுத்துவிட்டனர்.”"},{"id":68,"translation":"“எங்கள் இறைவா! இருமடங்கு தண்டனையை அவர்களுக்குக் கொடு! இன்னும், அவர்களை பெரிய சாபத்தால் சபிப்பாயாக!”"},{"id":69,"translation":"நம்பிக்கையாளர்களே! மூஸாவிற்கு தொந்தரவு தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் கூறியதிலிருந்து (-அந்தக் குற்றச்சாட்டுகளில் இருந்து) அல்லாஹ் அவரை நிரபராதியாக்கினான். அவர் அல்லாஹ்விடம் மிக மதிப்பிற்குரியவராக இருந்தார்."},{"id":70,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும், நேர்மையான பேச்சைப் பேசுங்கள்."},{"id":71,"translation":"(அல்லாஹ்) உங்கள் அமல்களை உங்களுக்கு சீர்படுத்துவான். இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் யார் கீழ்ப்படிவாரோ திட்டமாக அவர் மகத்தான வெற்றி பெறுவார்."},{"id":72,"translation":"நிச்சயமாக நாம் அமானிதத்தை (-மார்க்க சட்டங்களை) வானங்கள், பூமி(கள்), இன்னும் மலைகள் மீது சமர்ப்பித்தோம். அவை அதை சுமப்பதற்கு மறுத்துவிட்டன. இன்னும் அவை அதனால் பயந்தன. ஆனால், மனிதன் அதை சுமந்து கொண்டான். நிச்சயமாக அவன் அநியாயக்காரனாக அறியாதவனாக இருக்கிறான்."},{"id":73,"translation":"நயவஞ்சகமுடைய ஆண்களையும், நயவஞ்சகமுடைய பெண்களையும், இணைவைக்கின்ற ஆண்களையும், இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் தண்டனை செய்வதற்காகவும், நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் (அல்லாஹ் தனது கட்டளைகளை மக்களுக்குக் கொடுத்து சோதிக்கிறான்)."}]},{"id":34,"verses":[{"id":1,"translation":"நபியே! அல்லாஹ்வை அஞ்சுவீராக! நிராகரிப்பவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":2,"translation":"பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்திலிருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். அவன்தான் மகா கருணையாளன், மகா மன்னிப்பாளன்."},{"id":3,"translation":"“மறுமை எங்களிடம் (ஒருபோதும்) வராது” என்று நிராகரிப்பாளர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “ஏன் (வராது), மறைவானவற்றை நன்கறிந்தவனாகிய என் இறைவன் மீது சத்தியமாக நிச்சயமாக அது உங்களிடம் வரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு(ள்ள அற்பபொருள் எதுவு)ம் அவனை விட்டும் மறைந்துவிடாது. அதை விட சிறியதும் அதை விட பெரியதும் இல்லை, (அவை அனைத்தும்) தெளிவான பதிவேட்டில் இருந்தே தவிர!”"},{"id":4,"translation":"நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களுக்கு அவன் கூலி கொடுப்பதற்காக (அந்தப் பதிவேட்டில் செயல்கள் பதியப்படுகின்றன). அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான வாழ்க்கையும் (சொர்க்கத்தில்) உண்டு."},{"id":5,"translation":"எவர்கள் நமது வசனங்களில் (அவற்றை) முறியடிப்பதற்காக முயற்சிக்கிறார்களோ அவர்களுக்கு கெட்ட மோசமான தண்டனையின் மிகவும் துன்புறுத்தும் தண்டனை உண்டு."},{"id":6,"translation":"கல்வி கொடுக்கப்பட்டவர்கள், உமது இறைவனிடமிருந்து உமக்கு எது இறக்கப்பட்டதோ அதுதான் சத்தியம் என்றும்; மிகைத்தவன், மகா புகழுக்குரியவனின் பாதைக்கு அது நேர்வழி காட்டுகிறது என்றும் அறிவார்கள்."},{"id":7,"translation":"நிராகரித்தவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் சுக்குநூறாக கிழிக்கப்பட்ட பின்னர் நிச்சயமாக நீங்கள் புதிய படைப்பாக உருவாக்கப்படுவீர்கள் என்று உங்களுக்கு அறிவிக்கிற ஓர் ஆடவரை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கவா?”"},{"id":8,"translation":"“அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுகிறாரா? அல்லது, அவருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறதா?” (என்றும் கூறுகிறார்கள்.) மாறாக, மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள் தண்டனையிலும் தூரமான வழிகேட்டிலும் இருக்கிறார்கள்."},{"id":9,"translation":"ஆக, அவர்கள் தங்களுக்கு முன்னுள்ள; இன்னும், தங்களுக்கு பின்னுள்ள வானத்தையும் பூமியையும் பார்க்கவில்லையா? நாம் நாடினால் அவர்களை பூமியில் சொருகிவிடுவோம். அல்லது, அவர்கள் மீது வானத்தின் துண்டுகளை விழவைப்போம். நிச்சயமாக இதில் (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் ஓர் அத்தாட்சி இருக்கிறது."},{"id":10,"translation":"திட்டவட்டமாக தாவூதுக்கு நம் புறத்தில் இருந்து மேன்மையை(யும் பறவைகளையும்) வழங்கினோம். மலைகளே! பறவைகளே! அவருடன் சேர்ந்து நீங்களும் (அல்லாஹ்வை) துதியுங்கள். இன்னும், அவருக்கு இரும்பை மென்மையாக்கினோம்."},{"id":11,"translation":"உருக்குச் சட்டைகள் செய்வீராக! இன்னும், (சட்டைகளில் உள்ள துவாரங்களுக்கு ஏற்ப) ஆணிகளை அளவாக செய்வீராக! (தாவூதே! தாவூதின் குடும்பத்தாரே!) நன்மையை செய்யுங்கள்! நிச்சயமாக நான் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறேன்."},{"id":12,"translation":"இன்னும், சுலைமானுக்குக் காற்றையும் கட்டுப்படுத்தி தந்தோம். அதன் காலைப் பொழுதும் ஒரு மாதமாகும். அதன் மாலைப்பொழுதும் ஒரு மாதமாகும். அவருக்கு நாம் செம்புடைய சுரங்கத்தை (தண்ணீராக) ஓட வைத்தோம். அவருக்கு முன்னால் அவரது இறைவனின் உத்தரவின்படி வேலை செய்கிற ஜி̀ன்களையும் (அவருக்கு நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம்). அவர்களில் யார் நமது கட்டளையை விட்டு விலகுவாரோ அவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பின் தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்."},{"id":13,"translation":"அவை (-அந்த ஷைத்தான்கள்) அவருக்கு அவர் நாடுகிறபடி தொழுமிடங்களையும் சிலைகளையும் நீர் தொட்டிகளைப் போன்ற பெரிய பாத்திரங்களையும் உறுதியான சட்டிகளையும் செய்வார்கள். தாவூதின் குடும்பத்தார்களே! (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவதற்காக (நன்மைகளை) செய்யுங்கள். என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் குறைவானவர்களே."},{"id":14,"translation":"ஆக, அவருக்கு மரணத்தை நாம் முடிவு செய்(து அவரும் மரணித்)தபோது அவர் மரணம் எய்தியதை அவருடைய தடியை தின்ற கரையானைத் தவிர (வேறு எதுவும்) அவர்களுக்கு அறிவிக்கவில்லை. அவர் கீழே விழுந்தபோது, “தாங்கள் மறைவானவற்றை அறிந்திருந்தால் மிக இழிவான தண்டனையில் தங்கி இருந்திருக்க மாட்டார்கள்” என்று ஜின்களுக்கு தெளிவாக தெரிய வந்தது."},{"id":15,"translation":"ஸபா நகர மக்களுக்கு அவர்களின் தங்குமிடத்தில் ஓர் அத்தாட்சி திட்டவட்டமாக இருக்கிறது. வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் என இரண்டு தோட்டங்கள் (அவர்களுக்கு) இருந்தன. (ஸபா வாசிகளே!) உங்கள் இறைவன் அருளிய உணவை உண்ணுங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! (உங்கள் ஊரும்) நல்ல ஊர். (உங்கள் இறைவனும்) மகா மன்னிப்பாளனாகிய இறைவன் ஆவான்."},{"id":16,"translation":"ஆக, அவர்கள் புறக்கணித்தனர். ஆகவே, அடியோடு அரித்து செல்கிற பெரும் வெள்ளத்தை அவர்கள் மீது அனுப்பினோம். அவர்களின் இரண்டு (நல்ல) தோட்டங்களை (கசப்பான கெட்ட) துர்நாற்றமுள்ள பழங்களையும், காய்க்காத மரங்களையும், மிகக் குறைவான சில இலந்தை மரங்களையும் உடைய இரண்டு தோட்டங்களாக மாற்றிவிட்டோம்."},{"id":17,"translation":"இது, அவர்கள் நிராகரித்த காரணத்தினால் அவர்களுக்கு நாம் (இத்தகைய) கூலி கொடுத்தோம். நிராகரிப்பாளர்களைத் தவிர நாம் தண்டிப்போமா?"},{"id":18,"translation":"அவர்களுக்கு இடையிலும் நாம் அருள்வளம் புரிந்த (ஷாம் தேச) ஊர்களுக்கு இடையிலும் (ஒவ்வொரு ஊராருக்கும்) தெளிவாகத் தெரியும்படியான பல ஊர்களை நாம் ஏற்படுத்தினோம். அவற்றில் பயணத்தை நிர்ணயித்தோம் (ஓர் ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சிரமமின்றி பயணிப்பதை எளிதாக்கினோம்). அவற்றில் பல இரவுகளும் பல பகல்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாக பயணியுங்கள்."},{"id":19,"translation":"ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! (எங்கள் பாதையில் உள்ள ஊர்களை இல்லாமல் ஆக்கி) எங்கள் பயணங்களுக்கு மத்தியில் தூரத்தை ஏற்படுத்து! (அப்போது அதிக பயண சாமான்களோடு செல்லும் எங்களுக்கு ஏனைய மக்களுக்கு மத்தியில் பெருமையாக இருக்கும்.)” அவர்கள் தங்களுக்குத் தாமே அநீதி இழைத்தனர். ஆக, அவர்களை (மக்களுக்கு மத்தியில் பேசப்படுகின்ற) செய்திகளாக்கி விட்டோம். அவர்களை சுக்குநூறாக கிழித்துவிட்டோம். (முற்றிலுமாக பிரித்துவிட்டோம்.) நிச்சயமாக இதில் பொறுமையாளர்களுக்கு, அதிகம் நன்றி செலுத்துபவர்களுக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":20,"translation":"திட்டவட்டமாக இப்லீஸ் அவர்கள் மீது தன் எண்ணத்தை உண்மையாக்கினான். ஆகவே, அவர்கள் அவனை பின்பற்றினர், நம்பிக்கை கொண்ட பிரிவினரைத் தவிர. (நம்பிக்கையாளர்கள் இப்லீஸின் வழியில் செல்ல மாட்டார்கள்.)"},{"id":21,"translation":"அவனுக்கு அவர்கள் மீது அறவே அதிகாரம் இருக்கவில்லை. இருந்தாலும் மறுமையை நம்பிக்கை கொள்பவர்களை அதில் சந்தேகத்தில் இருப்பவர்களிலிருந்து (பிரித்து வெளிப்படையாக) நாம் அறிவதற்காக (இவ்வாறு சோதித்தோம்). உமது இறைவன் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் ஆவான்."},{"id":22,"translation":"(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி (தெய்வங்கள் என்று) நீங்கள் பிதற்றிக் கொண்டிருந்தவர்களை அழையுங்கள்! அவர்கள் வானங்களிலும் பூமியிலும் அணு அளவுக்கும் உரிமை பெறமாட்டார்கள். இன்னும், அவ்விரண்டிலும் அவர்களுக்கு எவ்வித பங்கும் இல்லை. அவர்களில் எவரும் அவனுக்கு உதவியாளராக இல்லை."},{"id":23,"translation":"அவன் எவருக்கு அனுமதி அளித்தானோ அவருக்கே தவிர அவனிடம் சிபாரிசுகள் பலன்தராது. இறுதியாக, அவர்களது உள்ளங்களை விட்டு திடுக்கம் (பயம்) சென்றுவிட்டால் உங்கள் இறைவன் என்ன கூறினான் என்று (சில வானவர்கள்) கேட்பார்கள். உண்மையைத்தான் (கூறினான்) என்று (மற்ற வானவர்கள் பதில்) கூறுவார்கள். அவன்தான் மிக உயர்ந்தவன், மகா பெரியவன்."},{"id":24,"translation":"(நபியே!) கூறுவீராக! வானங்கள் இன்னும் பூமியில் இருந்து யார் உங்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துகிறான்? (நபியே!) “அல்லாஹ்தான்” என்று நீர் கூறுவீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழியில்; அல்லது, தெளிவான வழிகேட்டில் இருக்கிறோமா? அல்லது, நீங்கள் இருக்கிறீர்களா?"},{"id":25,"translation":"(நபியே!) கூறுவீராக! நாங்கள் செய்த குற்றத்தைப் பற்றி நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். நீங்கள் செய்பவற்றைப் பற்றி நாங்கள் விசாரிக்கப்பட மாட்டோம்."},{"id":26,"translation":"(நபியே!) கூறுவீராக! நமது இறைவன் நமக்கு மத்தியில் ஒன்று சேர்ப்பான். பிறகு, நமக்கு மத்தியில் உண்மையான (நீதமான) தீர்ப்பை தீர்ப்பளிப்பான். அவன்தான் மகா நீதமான தீர்ப்பாளன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":27,"translation":"(நபியே!) கூறுவீராக! அவனுடன் (அவனுக்கு சமமாக வணங்கப்படுகின்ற) தெய்வங்களாக நீங்கள் சேர்ப்பித்தவர்கள் பற்றி எனக்கு அறிவியுங்கள். ஒருபோதும் (அவனுக்கு இணைகள் இருக்க) முடியாது. மாறாக, அவன்தான் அல்லாஹ் (-வணங்கத்தகுதியான படைத்து பரிபாலிக்கின்ற இணையற்ற ஒரே ஓர் இறைவன். அவன்தான்) மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":28,"translation":"(நபியே!) மக்கள் அனைவருக்கும் நற்செய்தி சொல்பவராகவும் எச்சரிப்பவராகவும் தவிர நாம் உம்மை அனுப்பவில்லை. என்றாலும் மக்களில் அதிகமானவர்கள் (நீர் உண்மையான தூதர் என்பதை) அறியமாட்டார்கள்."},{"id":29,"translation":"நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இந்த வாக்கு எப்போது (வரும்) என்று (அறிவியுங்கள் என உங்களை நோக்கி இறை மறுப்பாளர்கள்) கூறுகிறார்கள்."},{"id":30,"translation":"(நபியே!) கூறுவீராக! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட ஒரு நாள் இருக்கிறது. அதை விட்டும் நீங்கள் சிறிது நேரம் பிந்தவும் மாட்டீர்கள்; முந்தவும் மாட்டீர்கள்."},{"id":31,"translation":"நிராகரிப்பவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனையும் இதற்கு முன்னுள்ள (வேதத்)தையும் நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” இன்னும், அநியாயக்காரர்கள் தங்கள் இறைவன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களில் சிலர் சிலரிடம் எதிர்த்து (பதில்) பேசுகிற சமயத்தை (நபியே!) நீர் பார்த்தால் (அக்காட்சி மிக பயங்கரமாக இருக்கும்). பெருமை அடித்த (தலை)வர்களுக்கு (அவர்களை பின்பற்றிய) பலவீனர்கள் கூறுவார்கள், “நீங்கள் இல்லை என்றால் நாங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகியிருப்போம்.”"},{"id":32,"translation":"பெருமை அடித்த (தலை)வர்கள் (தங்களைப் பின்பற்றி வழிகெட்ட) பலவீனர்களுக்கு கூறுவார்கள்: “நேர்வழி உங்களிடம் வந்த பின்னர் (அந்த) நேர்வழியை விட்டும் நாங்களா உங்களைத் தடுத்தோம்? மாறாக, நீங்கள்தான் குற்றவாளிகளாக (பெரும் பாவிகளாக) இருந்தீர்கள்.”"},{"id":33,"translation":"பலவீனர்கள் பெருமை அடித்தவர்களுக்குக் கூறுவார்கள்: மாறாக, (இது) இரவிலும் பகலிலும் (நீங்கள் எங்களுக்கு) செய்த சூழ்ச்சியாகும். நாங்கள் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் அவனுக்கு இணை (தெய்வங்)களை நாங்கள் ஏற்படுத்துவதற்கும் நீங்கள் எங்களை ஏவிய சமயத்தை நினைவு கூருங்கள். அவர்கள் (அனைவரும்) தண்டனையை கண்ணால் காணும்போது துக்கத்தை வெளிப்படுத்துவார்கள். நிராகரித்தவர்களின் கழுத்துகளில் சங்கிலி விலங்குகளை நாம் ஆக்குவோம். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கே தவிர அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்களா?"},{"id":34,"translation":"ஓர் ஊரில் (அந்த ஊர் மக்களை) எச்சரிக்கை செய்கின்ற தூதரை நாம் அனுப்பினால், அதன் சுகவாசிகள் நீங்கள் எதைக்கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கிறோம் என்று (அவர்களிடம்) கூறாமல் இருக்க மாட்டார்கள். (-பெரும்பாலான சுகவாசிகள் இறைத்தூதர்களின் மார்க்கத்தை நிராகரித்தே வந்திருக்கிறார்கள்.)"},{"id":35,"translation":"இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் செல்வங்களாலும் பிள்ளைகளாலும் (உங்களை விட இவ்வுலகில்) அதிகமானவர்கள். (இது எங்கள் மீது இவ்வுலகில் இறைவன் செய்த அருள்.) ஆகவே, நாங்கள் (மறுமையிலும்) அறவே தண்டிக்கப்பட மாட்டோம்.”"},{"id":36,"translation":"(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் அவன் நாடுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகத் தருகிறான். இன்னும், (அவன் நாடுபவர்களுக்கு) சுருக்கி கொடுக்கிறான். என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (இதன் தத்துவத்தை) அறியமாட்டார்கள்."},{"id":37,"translation":"உங்கள் செல்வங்கள், உங்கள் பிள்ளைகள் உங்களை எங்களிடம் நெருக்கமாக்கி வைக்கக்கூடியதாக இல்லை. எனினும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்ததற்கு பகரமாக இரு மடங்கு கூலி உண்டு. இன்னும், அவர்கள் (சொர்க்கத்தில் கோபுர) அறைகளில் நிம்மதியாக இருப்பார்கள்."},{"id":38,"translation":"எவர்கள் நமது வசனங்களில் (அவற்றைப் பொய்ப்பித்து, நம்மை) பலவீனப்படுத்த முயல்வார்களோ அவர்கள் (நரக) தண்டனைக்கு கொண்டுவரப்படுவார்கள்."},{"id":39,"translation":"(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக என் இறைவன் தனது அடியார்களில் தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக்குகிறான். இன்னும், (தான் நாடியவருக்கு) சுருக்கி விடுகிறான். நீங்கள் எதை தர்மம் செய்தாலும் அதற்கு அவன் (சிறந்த) பகரத்தை ஏற்படுத்துவான். உணவளிப்பவர்களில் அவன் மிகச் சிறந்தவன்."},{"id":40,"translation":"இன்னும், அவன் அவர்கள் அனைவரையும் (உயிர்பிக்கச் செய்து) ஒன்று திரட்டும் நாளில், பிறகு, அவன் வானவர்களுக்குக் கூறுவான்: “இவர்கள் (இந்த இணைவைப்பாளர்கள்) உங்களை வணங்கிக் கொண்டிருந்தார்களா?”"},{"id":41,"translation":"(வானவர்கள்) கூறுவார்கள்: (அல்லாஹ்வே!) நீ மகா தூயவன். அவர்கள் இன்றி, நீதான் எங்கள் பாதுகாவலன். மாறாக, அவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தனர். அவர்களில் அதிகமானவர்கள் அவர்களைத்தான் (-அந்த ஜின்களைத்தான்) நம்பிக்கை கொண்டவர்கள் ஆவார்கள்."},{"id":42,"translation":"ஆக, இன்றைய தினம் உங்களில் சிலர் சிலருக்கு நன்மை செய்வதற்கோ தீமை செய்வதற்கோ உரிமை பெறமாட்டார். இன்னும், அநியாயக்காரர்களுக்கு நாம் கூறுவோம்: “நீங்கள் பொய்ப்பித்துக்கொண்டிருந்த நரக தண்டனையை சுவையுங்கள்.”"},{"id":43,"translation":"அவர்கள் முன் தெளிவான நமது வசனங்கள் ஓதப்பட்டால், “உங்கள் மூதாதைகள் வணங்கிக்கொண்டிருந்தவற்றை விட்டும் இவர் உங்களைத் தடுக்க நாடுகிற ஓர் ஆடவரே தவிர (உண்மையான நபி) இல்லை” என்று கூறுகிறார்கள். இன்னும், அவர்கள் கூறினார்கள்: “இது (-இந்த வேதம்) இட்டுக்கட்டப்பட்ட பொய்யைத் தவிர (உண்மையான இறைவேதம்) இல்லை.” நிராகரித்தவர்கள் இந்த உண்மையான வேதத்தைப் பற்றி – அது தங்களிடம் சத்தியம் வந்தபோது - கூறினார்கள்: “இது தெளிவான சூனியமே தவிர (உண்மையான வேதம்) இல்லை.”"},{"id":44,"translation":"(இந்த குர்ஆனுக்கு முன்பாக) அவர்கள் படிப்பதற்கு வேதங்களை அவர்களுக்கு நாம் கொடுத்ததில்லை. இன்னும், உமக்கு முன்னர் அவர்களிடம் எச்சரிக்கும் தூதர் எவரையும் நாம் அனுப்பியதில்லை."},{"id":45,"translation":"இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் பொய்ப்பித்தனர். இவர்கள் (நிராகரிக்கின்ற இந்த மக்காவாசிகள்) அவர்களுக்கு (-முன் சென்ற சமுதாயத்திற்கு) நாம் கொடுத்த (செல்வத்)தில் பத்தில் ஒன்றைக் கூட அடையவில்லை. இருந்தும் அவர்கள் (முந்தியக் கால காஃபிர்கள்) எனது தூதர்களை பொய்ப்பித்தனர். எனது மாற்றம் (-நான் அவர்களுக்குச் செய்த அருளை எடுத்துவிட்டு அவர்களுக்குக் கொடுத்த தண்டனை) எப்படி இருந்தது (என்று மக்கா வாசிகளே பாருங்கள்)!"},{"id":46,"translation":"(நபியே!) கூறுவீராக! “நான் உங்களுக்கு உபதேசிப்பதெல்லாம் ஒன்றே ஒன்றைத்தான். (அதாவது) நீங்கள் அல்லாஹ்விற்காக ஒருவர் ஒருவராக, இருவர் இருவராக நில்லுங்கள். (இந்த நபியைப் பற்றி இவர் உண்மையாளரா அல்லது உண்மையாளர் இல்லையா என்று விவாதம் செய்யுங்கள். பிறகு ஒருவர் ஒருவராக தனித்து விடுங்கள்). பிறகு, சிந்தியுங்கள்.” உங்கள் இந்தத் தோழருக்கு பைத்தியம் அறவே இல்லை. கடுமையான தண்டனை (நிகழப் போவதற்)க்கு முன்னர் (அது பற்றி) எச்சரிப்பவராகவே தவிர அவர் இல்லை (என்பதை திட்டமாக அறிந்து கொள்வீர்கள்)."},{"id":47,"translation":"(நபியே!) கூறுவீராக! நான் எதைக் கூலியாக உங்களிடம் கேட்டேனோ அது உங்களுக்கே இருக்கட்டும். (நான் உங்களுக்கு எடுத்துரைத்த அனைத்தும் உங்கள் நன்மைக்காகவே. நான் உங்களிடம் இதற்கு எதையும் கூலியாக கேட்கவில்லை!) எனது கூலி அல்லாஹ்வின் மீதே தவிர (உங்கள் மீது) இல்லை. அவன்தான் (எனது செயல்கள்; இன்னும், உங்கள் செயல்கள்) அனைத்தின் மீதும் சாட்சியாளன் ஆவான்."},{"id":48,"translation":"(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக என் இறைவன் உண்மையான செய்தியை (நபிமார்களுக்கு) இறக்கி வைக்கிறான். அவன் மறைவான விஷயங்கள் அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்.”"},{"id":49,"translation":"(நபியே!) கூறுவீராக! “(குர்ஆன் என்ற) உண்மை வந்துவிட்டது. (இப்லீஸும் அல்லாஹ்வை அன்றி வணங்கப்படுகிற) பொய்யான தெய்வங்கள் புதிதாக படைக்கவும் மாட்டார்கள். (இறந்ததை) மீண்டும் உயிர்ப்பிக்கவும் மாட்டார்கள்.” (அல்லாஹ்வை அன்றி யாருக்கும் படைக்கின்ற சக்தி அறவே இல்லை.)"},{"id":50,"translation":"(நபியே!) கூறுவீராக! நான் வழிகெட்டால் நான் வழிகெடுவதெல்லாம் எனக்குத்தான் தீங்காக அமையும். நான் நேர்வழி பெற்றால் (அது) என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவிக்கின்ற காரணத்தால் ஆகும். (என் இறைவன் எனக்கு வஹ்யி அறிவித்த வேதத்தினால் நான் நேர்வழி பெறுகிறேன்.) நிச்சயமாக அவன் நன்கு செவியுறுபவன், மிக சமீபமானவன் ஆவான்."},{"id":51,"translation":"“(நமது பிடி வரும்போது) அவர்கள் திடுக்கிடுவார்கள். ஆனால், (அவர்கள் அதிலிருந்து) தப்பிக்கவே முடியாது. இன்னும், வெகு சமீபமான இடத்திலிருந்து அவர்கள் பிடிக்கப்பட்டுவிடுவார்கள். (பின்னர் தண்டிக்கப்பட்டு அழிக்கப்படுவார்கள்.)” (நபியே!) இதை நீர் பார்த்தால் (மிக ஆச்சரியமான ஒரு காரியத்தை பார்ப்பீர்.)"},{"id":52,"translation":"அவர்கள் (அல்லாஹ்வின் தண்டனையைப் பார்த்தபோது) அவனை (-அல்லாஹ்வை) நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று கூறுவார்கள். தூரமான இடத்திலிருந்து (-மறுமைக்கு சென்றுவிட்ட அவர்கள் அங்கிருந்துக் கொண்டு தவ்பா - பாவமீட்சியையும் இறை நம்பிக்கையையும்) அடைவது எங்கே அவர்களுக்கு சாத்தியமாகும். (அதாவது உலகத்தில் செய்ய வேண்டியதை மறுமையில் செய்ய ஆசைப்படுகிறார்கள். அங்கே ஆசைப்பட்டு என்ன ஆகப்போகிறது?!)"},{"id":53,"translation":"திட்டமாக (இதற்கு) முன்னர் அவர்கள் இ(ந்த வேதத்)தை மறுத்து விட்டனர். அவர்கள் (சத்தியத்தை விட்டு) வெகு தூரமான இடத்தில் இருந்துகொண்டு கற்பனையாக அதிகம் பேசுகிறார்கள்."},{"id":54,"translation":"இதற்கு முன்னர் அவர்களின் (முந்தைய) கூட்டங்களுக்கு செய்யப்பட்டதைப் போன்று அவர்களுக்கு இடையிலும் அவர்கள் விரும்புவதற்கு இடையிலும் தடுக்கப்பட்டுவிடும். நிச்சயமாக இவர்கள் (உலகில் வாழ்ந்தபோது மறுமையைப் பற்றி) பெரிய சந்தேகத்தில்தான் இருந்தனர்."}]},{"id":35,"verses":[{"id":1,"translation":"எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. மறுமையிலும் அவனுக்கே எல்லாப் புகழும். அவன்தான் மகா ஞானமுடையவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":2,"translation":"அல்லாஹ் மக்களுக்கு (தன்) அருள்களில் இருந்து எதையும் திறந்தால் அதை தடுப்பவர் எவரும் இல்லை. இன்னும், அவன் எதையும் தடுத்து நிறுத்திவிட்டால் அவனுக்குப் பின் அதை அனுப்பித்தருபவர் எவரும் இல்லை. இன்னும், அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":3,"translation":"மக்களே! உங்கள் மீதுள்ள அல்லாஹ்வுடைய அருட்கொடையை நினைவு கூருங்கள். வானங்களில் இருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிக்கிற படைப்பாளன் அல்லாஹ்வை அன்றி யாரும் உண்டா? அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, நீங்கள் எப்படி (அவனை விட்டு) திருப்பப்படுகிறீர்கள்."},{"id":4,"translation":"(நபியே!) அவர்கள் உம்மை பொய்ப்பித்தால், (அது புதிதல்ல.) உமக்கு முன்னரும் பல தூதர்கள் (அக்கால மக்களால்) பொய்ப்பிக்கப்பட்டுள்ளனர். இன்னும், அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படும்."},{"id":5,"translation":"மக்களே! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆகவே, உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட வேண்டாம். (ஷைத்தானாகிய) ஏமாற்றக் கூடியவனும் அல்லாஹ்வின் விஷயத்தில் உங்களை மயக்கிவிட வேண்டாம்."},{"id":6,"translation":"நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு எதிரி ஆவான். ஆகவே, அவனை எதிரியாகவே எடுத்துக்கொள்ளுங்கள்! அவன் தனது கூட்டத்தார்களை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்துவிட்டெரியும் நரகவாசிகளாக ஆகுவதற்காகத்தான்."},{"id":7,"translation":"எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. எவர்கள் நம்பிக்கைகொண்டு, நன்மைகளை செய்தார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு."},{"id":8,"translation":"ஆக, எவர் ஒருவர், அவருக்கு தனது கெட்ட செயல் அலங்கரிக்கப்பட்டு அவர் அதை அழகாக கருதினாரோ (அவர் மீது நீர் கவலைப்படாதீர்.) ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் நாடுகிறவரை வழிகெடுக்கிறான். தான் நாடுகிறவரை நேர்வழிபடுத்துகிறான். ஆகவே, அவர்கள் மீதுள்ள கவலைகளால் உமது உயிர் போய்விட வேண்டாம். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":9,"translation":"அல்லாஹ்தான் காற்றுகளை அனுப்புகிறான். ஆக, அவை மேகத்தை கிளப்புகின்றன. அ(ந்த மேகத்)தை இறந்து போன (-வறண்ட) ஊருக்கு நாம் ஓட்டி வருகிறோம். ஆக, அதன் மூலம் அந்த பூமியை அது இறந்ததற்குப் பின்னர் நாம் உயிர்ப்பிக்கிறோம். இப்படித்தான் (படைப்புகள் மறுமுறை) எழுப்பப்படுவதும் நிகழும்."},{"id":10,"translation":"யார் கண்ணியத்தை நாடுபவராக இருக்கிறாரோ (அவர் அல்லாஹ்விடம் அதைத் தேடட்டும்.) ஏனெனில், அல்லாஹ்விற்குத்தான் கண்ணியம் அனைத்தும் சொந்தமானது. அவன் பக்கம்தான் நல்ல சொற்கள் உயர்கின்றன. இன்னும், நல்ல செயல்கள் அவற்றை உயர்த்துகின்றன. கெட்ட சூழ்ச்சிகளை செய்பவர்கள் - அவர்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி - அது அழிந்து போய்விடும்."},{"id":11,"translation":"அல்லாஹ்தான் உங்களை மண்ணிலிருந்து, பிறகு, இந்திரியத்திலிருந்து படைத்தான். பிறகு, அவன் உங்களை ஜோடிகளாக ஆக்கினான். ஒரு பெண் கர்ப்பமாவதும் இல்லை, அவள் கர்ப்பம் தரிப்பதும் இல்லை அவன் அறிந்தே தவிர. நீண்ட வயது கொடுக்கப்பட்டவருக்கு நீண்ட வயது கொடுக்கப்படுவதில்லை, இன்னும் ஒருவருடைய வயது குறைக்கப்படுவதில்லை (அவை எல்லாம்) பதிவுப் புத்தகத்தில் இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே."},{"id":12,"translation":"இரண்டு கடல்களும் சமமாகாது. இ(தன் நீரான)து மதுரமானதும், சுவையானதும் அதைக் குடிப்பதற்கு இலகுவானதும் ஆகும். (மற்ற) இதுவோ மிகவும் உவர்ப்பானதும் கசப்பானதும் ஆகும். (இவை) எல்லாவற்றிலிருந்தும் நீங்கள் பசுமையான (ருசியான மீன்) இறைச்சியை சாப்பிடுகிறீர்கள்; நீங்கள் அணிகின்ற ஆபரணங்களை (அவற்றிலிருந்து) உற்பத்தி செய்துகொள்கிறீர்கள். அவற்றில் (-அந்தக் கடல்களில்) கப்பல்கள் (தண்ணீரை) கிழித்துச் செல்லக்கூடியதாக பார்க்கிறீர், அவனது அருள்களிலிருந்து நீங்கள் தேடுவதற்காகவும் நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (அந்தக் கப்பல்களில் உங்களை அவன் பயணிக்க வைத்தான்)."},{"id":13,"translation":"இரவை பகலில் நுழைக்கிறான்; பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தினான். எல்லாம் குறிப்பிட்ட தவணையை நோக்கி ஓடுகின்றன. (இவற்றை எல்லாம் படைத்துப் பரிபாலிக்கக்கூடிய) அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனை அன்றி நீங்கள் அழைப்பவர்கள்[1] (-நீங்கள் வணங்குகின்ற உங்கள் தெய்வங்கள்) ஒரு (தானிய கொட்டையின் மீதுள்ள) தொலிக்குக் கூட உரிமை பெற மாட்டார்கள்.","footnotes":"[1] இந்தப் பிரபஞ்சத்தில் எதையும் அவர்கள் படைக்கவில்லை. அவர்களுக்கு சொந்தமானது எதுவும் இல்லை. எதையும் படைப்பதற்கும் படைப்புகளை இயக்குவதற்கும் சக்தியற்ற ஒன்றை எப்படி வணங்குவீர்கள்?"},{"id":14,"translation":"நீங்கள் அவர்களை அழைத்தாலும் அவர்கள் உங்கள் அழைப்பை செவியுற மாட்டார்கள். அப்படியே அவர்கள் செவியுறுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்கு அவர்கள் பதில் தர மாட்டார்கள். இன்னும், மறுமை நாளில் நீங்கள் இணைவைத்ததை மறுத்து விடுவார்கள். ஆழ்ந்தறிபவன் (-அல்லாஹ்வைப்) போன்று உமக்கு (வேறு யாரும் இந்த சிலைகளைப் பற்றி உண்மையான செய்திகளை) அறிவிக்க முடியாது."},{"id":15,"translation":"மக்களே! நீங்கள்தான் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹ் - அவன்தான் முற்றிலும் நிறைவானவன், புகழுக்குரியவன் ஆவான்."},{"id":16,"translation":"அவன் நாடினால் உங்களை அழித்து விடுவான். இன்னும், (வேறு) ஒரு புதிய படைப்பை அவன் கொண்டு வருவான்."},{"id":17,"translation":"அது அல்லாஹ்விற்கு சிரமமானதாக இல்லை."},{"id":18,"translation":"பாவியான ஓர் ஆன்மா மற்றோர் (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பாவச்சுமையுடைய ஓர் ஆன்மா தனது சுமையின் பக்கம் (அதை சுமக்க வேறு ஓர் ஆன்மாவை) அழைத்தால், அதிலிருந்து (-அந்தப் பாவச்சுமையில் இருந்து) எதையும் சுமக்க முடியாது, அ(ழைக்கப்பட்ட ஆன்மாவான)து உறவினராக இருந்தாலும் சரியே (நபியே!) நீர் எச்சரிப்பதெல்லாம் தங்கள் இறைவனை மறைவில் அஞ்சுபவர்களைத்தான். அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். யார் பரிசுத்தம் அடைகிறாரோ அவர் பரிசுத்தம் அடைவதெல்லாம் தனது நன்மைக்காகத்தான். இன்னும் அல்லாஹ்வின் பக்கம்தான் மீளுதல் இருக்கிறது."},{"id":19,"translation":"குருடரும் பார்வையுடையவரும் சமமாக மாட்டார்."},{"id":20,"translation":"இருள்களும் வெளிச்சமும் (சமமாகாது.)"},{"id":21,"translation":"நிழலும் வெயிலும் (சமமாகாது.)"},{"id":22,"translation":"உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவரை செவியுற வைப்பான். மண்ணறையில் உள்ளவர்களை செவியுற வைப்பவராக நீர் இல்லை."},{"id":23,"translation":"நீர் இல்லை அச்சமூட்டி எச்சரிப்பவராகவே தவிர."},{"id":24,"translation":"நிச்சயமாக நாம் உம்மை நற்செய்தி கூறுபவராகவும் அச்சமூட்டி எச்சரிப்பவராகவும் சத்தியத்தைக் கொண்டு அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமும் இல்லை அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர் சென்றிருந்தே தவிர."},{"id":25,"translation":"இவர்கள் உம்மை பொய்ப்பித்தால், திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் (தங்களுக்கு அனுப்பப்பட்டத் தூதர்களை) பொய்ப்பித்துள்ளனர். அவர்களுடையத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் இன்னும் பிரகாசமான வேதங்களையும் கொண்டு வந்தனர்."},{"id":26,"translation":"பிறகு, நிராகரித்தவர்களை நான் தண்டித்தேன். ஆக, (அவர்களுக்கு) நான் ஏற்படுத்திய மாற்றம் (-எனது தண்டனை) எப்படி இருந்தது?"},{"id":27,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா: நிச்சயமாக அல்லாஹ் மேகத்தில் இருந்து மழையை இறக்கினான். அதன் மூலம் பலதரப்பட்ட நிறங்களை உடைய கனிகளை நாம் உற்பத்தி செய்தோம். இன்னும், மலைகளில் வெண்மையான, சிவப்பான, இன்னும், கடும் கருப்பான பாதைகள் உடையவை உள்ளன. அவற்றின் நிறங்கள் பலதரப்பட்டவையாக உள்ளன."},{"id":28,"translation":"மக்களிலும், ஊர்வன விலங்குகளிலும், (-பூமியின் மேல் செல்லக் கூடிய பொதுவான மிருகங்களிலும், ஆடு மாடு ஒட்டகம் குதிரை போன்ற) கால்நடைகளிலும் இவ்வாறே (அவற்றின்) நிறங்கள் மாறுபட்டவை உள்ளன. அல்லாஹ்வை அவனது அடியார்களில் அஞ்சுபவர்கள் எல்லாம் அறிஞர்கள்தான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்."},{"id":29,"translation":"நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை ஓதுகிறார்களோ, இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி, நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து இரகசியமாகவும் வெளிப்படையாகவும் தர்மம் செய்தார்களோ அவர்கள் அறவே அழிந்து போகாத வியாபாரத்தை ஆசைப்படுகிறார்கள்."},{"id":30,"translation":"(அல்லாஹ்) அவர்களுக்கு அவர்களின் கூலிகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் தனது அருளில் இருந்து மேலும் அவன் அவர்களுக்கு அதிகப்படுத்துவதற்கும் (அவர்கள் அந்த நல்லமல்களைச் செய்தார்கள்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்."},{"id":31,"translation":"உமக்கு நாம் வஹ்யி அறிவித்த இந்த வேதம்தான் சத்தியமானதும் தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்தக்கூடியதும் ஆகும். நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":32,"translation":"பிறகு, இந்த வேதத்தை நமது அடியார்களில் நாம் தேர்ந்தெடுத்தவர்களுக்கு (கற்பித்து) கொடுத்தோம். அவர்களில் தனக்குத் தானே தீமை செய்தவரும் இருக்கிறார். அவர்களில் (அமல்களில்) நடுநிலையானவரும் இருக்கிறார். இன்னும், அவர்களில் அல்லாஹ்வின் அனுமதிப்படி நன்மைகளில் முந்தி செல்பவரும் இருக்கிறார். இதுதான் மாபெரும் சிறப்பாகும்."},{"id":33,"translation":"(அவர்கள் பெறப்போகும் சிறப்பு) “அத்ன்” சொர்க்கங்கள் ஆகும். அவர்கள் அவற்றில் நுழைவார்கள்; அவற்றில் தங்கத்தினாலான காப்புகளும் (-வளையல்களும்) முத்து (ஆபரணங்களு)ம் அவர்கள் அணிவிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களின் ஆடைகள் அவற்றில் பட்டுத் துணியாகும்."},{"id":34,"translation":"அவர்கள் கூறுவார்கள்: எங்களை விட்டு கவலையைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். நிச்சயமாக எங்கள் இறைவன் மகா மன்னிப்பாளன், நன்றியுடையவன் ஆவான்."},{"id":35,"translation":"அவன் தனது அருளினால் எங்களை நிரந்தர (இன்பங்கள் நிறைந்த) இல்ல(மான சொர்க்க)த்தில் தங்க வைத்தான். அதில் எங்களுக்கு சோர்வும் ஏற்படாது. அதில் எங்களுக்கு களைப்பும் ஏற்படாது."},{"id":36,"translation":"எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு நரக நெருப்புதான் உண்டு. அவர்களுக்கு (மரணம் நிகழும் என) தீர்ப்பளிக்கப்படாது. அவர்களுக்கு மரணம் இருந்தால்தானே அவர்கள் மரணிப்பதற்கு. இன்னும், அதன் தண்டனை அவர்களை விட்டும் லேசாக்கப்படாது. இப்படித்தான் எல்லா நிராகரிப்பாளர்களுக்கும் நாம் கூலிகொடுப்போம்."},{"id":37,"translation":"இன்னும், “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்” என்று அவர்கள் அ(ந்த நரகத்)தில் கதறுவார்கள். “அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற காலம் வரை நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? இன்னும், உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார் அல்லவா? ஆகவே, (இந்த தண்டனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை” (என்று அவர்களுக்கு பதில் கூறப்படும்)."},{"id":38,"translation":"நிச்சயமாக அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள மறைவானவற்றை நன்கறிந்தவன் ஆவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":39,"translation":"அவன்தான் உங்களை பூமியில் பிரதிநிதிகளாக (ஒரு தலைமுறைக்குப் பின்னர் ஒரு தலைமுறையாக) ஆக்கினான். ஆக, எவர் நிராகரிப்பாரோ அவருடைய நிராகரிப்பு அவருக்குத்தான் தீங்காகும். நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு அவர்களின் இறைவனிடம் கோபத்தைத் தவிர அதிகப்படுத்தாது. இன்னும், நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் நிராகரிப்பு நஷ்டத்தைத் தவிர அதிகப்படுத்தாது."},{"id":40,"translation":"(நபியே!) கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைக்கின்ற (-வணங்குகின்ற) உங்கள் (கற்பனை) தெய்வங்களைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்! பூமியில் அவை எதைப் படைத்தன என்று எனக்குக் காண்பியுங்கள். அல்லது, வானங்களில் (இருக்கும் படைப்புகளில்) அவர்களுக்கு ஏதும் பங்கு உண்டா? அல்லது, (இணைவைத்து வணங்குகின்ற) அவர்களுக்கு நாம் ஒரு வேதத்தைக் கொடுத்து, அவர்கள் அது விஷயத்தில் தெளிவான சான்றின் மீது இருக்கிறார்களா?! மாறாக, அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு ஏமாற்றத்தைத் தவிர வாக்களிப்பதில்லை."},{"id":41,"translation":"நிச்சயமாக அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அவை இரண்டும் (அவற்றின் இடங்களை விட்டு) நீங்கிவிடாமல் தடுத்து வைத்திருக்கிறான். அவை இரண்டும் நீங்கிவிட்டால் அவனுக்குப் பின்னர் எவர் ஒருவரும் அவ்விரண்டையும் தடுத்து வைக்க முடியாது. நிச்சயமாக அவன் மகா சகிப்பாளனாக, மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்."},{"id":42,"translation":"அவர்கள் மிக உறுதியாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தனர்: “அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தால், சமுதாயங்களில் (நேர்வழிபெற்ற) ஒரு சமுதாயத்தை விட மிக அதிகம் நேர்வழி பெற்றவர்களாக நிச்சயமாக அவர்கள் இருந்திருப்பார்கள்” என்று. ஆக, அவர்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வந்தபோது அது அவர்களுக்கு (சத்தியத்தை விட்டு) விலகிச் செல்வதைத் தவிர அதிகப்படுத்தவில்லை."},{"id":43,"translation":"பூமியில் பெருமையடிப்பதையும் தீய சூழ்ச்சி செய்வதையும் தவிர அதிகப்படுத்தவில்லை. தீய சூழ்ச்சி அதை செய்தவர்களைத் தவிர சூழ்ந்துகொள்ளாது. முன் சென்றோரின் வழிமுறையைத் தவிர (வேறு எதையும்) இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? ஆக, அல்லாஹ்வின் வழிமுறையில் அறவே மாற்றத்தை நீர் காணமாட்டீர். இன்னும் அல்லாஹ்வின் வழிமுறையில் நீர் எவ்வித திருப்பத்தையும் காணமாட்டீர்."},{"id":44,"translation":"அவர்கள் பூமியில் பயணிக்க மாட்டார்களா? அப்படிப் பயணித்தால் அவர்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று அவர்கள் பார்ப்பார்களே! அ(க்காலத்தில் இருந்த)வர்கள் இ(க்காலத்தில் இருப்ப)வர்களை விட வலிமையால் பலமிக்கவர்களாக இருந்தனர். வானங்களில், பூமியில் உள்ள எதுவும் அல்லாஹ்வை பலவீனப்படுத்தக்கூடியதாக இருக்கவில்லை. நிச்சயமாக அவன் நன்கறிந்தவனாக, பேராற்றலுடையவனாக இருக்கிறான்."},{"id":45,"translation":"அல்லாஹ் மக்களை அவர்கள் செய்தவற்றுக்காக தண்டிப்பதாக இருந்தால் அதன் மேற்பரப்பில் எந்த ஓர் உயிரினத்தையும் அவன் விட்டிருக்க மாட்டான். எனினும், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை அவன் பிற்படுத்தி வைக்கிறான். ஆக, அவர்களுடைய தவணை வந்துவிட்டால் (அவர்கள் அவனது தண்டனையை விட்டும் தப்பிக்க முடியாது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் தனது அடியார்களை உற்றுநோக்கியவனாக இருக்கிறான்."}]},{"id":36,"verses":[{"id":1,"translation":"எல்லாப் புகழும் வானங்கள் இன்னும் பூமியின் படைப்பாளனாகிய; வானவர்களை (நபிமார்களிடம் அனுப்பப்படுகிற) தூதர்களாகவும் இரண்டு இரண்டு, மூன்று மூன்று, நான்கு நான்கு இறக்கைகளை உடையவர்களாகவும் ஆக்கக் கூடியவனாகிய அல்லாஹ்விற்கே உரியது. அவன் படைப்புகளில் தான் நாடுவதை அதிகப்படுத்துவான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உள்ளவன்."},{"id":2,"translation":"ஞானமிகுந்த குர்ஆன் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"நிச்சயமாக நீர் இறைத்தூதர்களில் இருக்கிறீர்."},{"id":4,"translation":"நேரான பாதையின் மீது இருக்கிறீர்."},{"id":5,"translation":"மிகைத்தவன், மகா கருணையாளன் இறக்கிய வேதமாகும் (இது.)"},{"id":6,"translation":"ஒரு சமுதாயத்தை நீர் எச்சரிப்பதற்காக (உமக்கு இந்த வேதம் அருளப்பட்டது). அவர்களின் மூதாதைகள் (இதற்கு முன்னர் இறைத்தூதர்களால்) எச்சரிக்கப்படவில்லை. ஆகவே, அவர்கள் கவனமற்றவர்களாக இருக்கிறார்கள்."},{"id":7,"translation":"அவர்களில் அதிகமானவர்கள் மீது (அல்லாஹ்வின் தண்டனையின்) வாக்கு திட்டவட்டமாக உறுதியாகிவிட்டது. ஆகவே, அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":8,"translation":"நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகளில் அரிகண்டங்களை ஏற்படுத்தி விட்டோம். அவை (அவர்களின்) தாடைகள் வரை இருக்கின்றன. ஆகவே, அவர்கள் (தங்கள் தலைகளை எப்போதும்) உயர்த்தியவர்களாக இருக்கிறார்கள்."},{"id":9,"translation":"அவர்களுக்கு முன்னர் ஒரு தடுப்பையும் அவர்களுக்கு பின்னர் ஒரு தடுப்பையும் நாம் ஆக்கினோம். ஆகவே, நாம் அவர்க(ளின் பார்வைக)ளை மறைத்து விட்டோம் (-குருடாக்கி விட்டோம்). ஆகவே, அவர்கள் பார்க்கமாட்டார்கள்."},{"id":10,"translation":"நீர் அவர்களை எச்சரித்தாலும் அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு (இரண்டும்) சமம் தான். அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":11,"translation":"நீர் எச்சரிப்ப(து பயன் தருவ)தெல்லாம் இந்த வேதத்தை பின்பற்றி மறைவில் ரஹ்மானை பயந்தவருக்குத்தான். ஆகவே, அவருக்கு மன்னிப்பையும் கண்ணியமான கூலியையும் நற்செய்தி கூறுவீராக!"},{"id":12,"translation":"நிச்சயமாக நாம்தான் இறந்தவர்களை உயிர்ப்பிக்கிறோம். அவர்கள் முன்னர் செய்தவற்றையும் (நன்மைகளின் பக்கம் அவர்கள் செல்லும்போது) அவர்களின் காலடிச் சுவடுகளையும் நாம் பதிவு செய்வோம். எல்லாவற்றையும் நாம் தெளிவான பதிவேட்டில் பதிவு செய்துள்ளோம்."},{"id":13,"translation":"அவர்களுக்கு அந்த ஊர்வாசிகளை உதாரணமாக எடுத்துச் சொல்வீராக! அவர்களிடம் தூதர்கள் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":14,"translation":"அவர்களிடம் நாம் இருவரை அனுப்பியபோது ஆக, அவர்கள் அவ்விருவரையும் பொய்ப்பித்தனர். நாம் மூன்றாவது ஒருவர் மூலமாக (முந்திய இருவரை) பலப்படுத்தினோம். ஆக, (அந்த மூவரும்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் ஆவோம்”."},{"id":15,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்களைப் போன்ற மனிதர்களாகவே தவிர நீங்கள் இல்லை. இன்னும், ரஹ்மான் எதையும் (உங்கள் மீது) இறக்கவில்லை. நீங்கள் பொய் சொல்பவர்களாகவே தவிர இல்லை.”"},{"id":16,"translation":"(தூதர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்கள் பக்கம் அனுப்பப்பட்ட தூதர்கள் என்று எங்கள் இறைவன் நன்கறிவான்.”"},{"id":17,"translation":"தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (உங்களை நிர்ப்பந்திப்பது) எங்கள் மீது கடமை இல்லை."},{"id":18,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் உங்களை துர்ச்சகுனமாக கருதுகின்றோம். நீங்கள் விலகவில்லை என்றால் நிச்சயமாக நாங்கள் உங்களை கல்லால் எறி(ந்து கொன்று விடு)வோம். இன்னும், எங்களிடமிருந்து துன்புறுத்தும் தண்டனை நிச்சயமாக உங்களை வந்தடையும்.”"},{"id":19,"translation":"அவர்கள் கூறினார்கள்: உங்கள் துர்ச்சகுனம் உங்களுடன்தான். நீங்கள் (தெளிவாக அழகிய முறையில்) அறிவுறுத்தப்பட்டாலுமா (இப்படி மூடர்களாக நடப்பீர்கள்)? மாறாக, நீங்கள் வரம்பு மீறுகிற மக்கள் ஆவீர்கள்."},{"id":20,"translation":"பட்டணத்தின் கடைக்கோடியில் இருந்து ஓர் ஆடவர் விரைந்து வந்தார். அவர் கூறினார்: “என் மக்களே! இந்த தூதர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.”"},{"id":21,"translation":"“உங்களிடம் அறவே கூலி கேட்காத (இந்த நல்ல)வர்களை பின்பற்றுங்கள். அவர்கள்தான் நேர்வழி பெற்றவர்கள் ஆவார்கள்.”"},{"id":22,"translation":"என்னைப் படைத்தவனை நான் வணங்காமல் இருப்பதற்கு எனக்கு என்ன நேர்ந்தது? அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":23,"translation":"அவனை அன்றி (வேறு) தெய்வங்களை நான் எடுத்துக் கொள்வேனா! (அந்த) ரஹ்மான் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவற்றின் சிபாரிசு என்னை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது. இன்னும், அவர்கள் என்னை காப்பாற்ற மாட்டார்கள்."},{"id":24,"translation":"அப்போது (-அவற்றைக் கடவுளாக எடுத்துக் கொண்டால்) நிச்சயமாக நான் தெளிவான வழிகேட்டில்தான் சென்று விடுவேன்."},{"id":25,"translation":"நிச்சயமாக நான் உங்கள் இறைவனை நம்பிக்கை கொண்டேன். ஆகவே, எனக்கு செவிசாயுங்கள்!"},{"id":26,"translation":"(அவருக்கு) கூறப்பட்டது: “நீர் சொர்க்கத்தில் நுழைவீராக!” என்று. அவர் கூறினார்: “என் மக்கள் அறிய வேண்டுமே,"},{"id":27,"translation":"எனக்கு என் இறைவன் மன்னிப்பு வழங்கியதையும்; அவன் என்னை கண்ணியமானவர்களில் ஆக்கியதையும்!”"},{"id":28,"translation":"அவருக்குப் பின்னர் அவருடைய மக்கள் மீது வானத்தில் இருந்து ஒரு ராணுவத்தை நாம் இறக்கவில்லை. நாம் (அப்படி) இறக்குபவர்களாகவும் இல்லை."},{"id":29,"translation":"(அந்த தண்டனை) ஒரே ஒரு சத்தமாகவே தவிர இருக்கவில்லை. ஆக, அப்போது அவர்கள் அழிந்து (இறந்து) விட்டார்கள்."},{"id":30,"translation":"அடியார்கள் மீது நிகழ்ந்த துக்கமே! அவர்களிடம் எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் அவரை கேலி செய்பவர்களாக இருந்தே தவிர."},{"id":31,"translation":"“அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறைகளை நாம் அழித்திருக்கிறோம், நிச்சயமாக அவர்கள் தங்கள் பக்கம் திரும்பி வரமாட்டார்கள்” என்பதை அவர்கள் கவனிக்க மாட்டார்களா?"},{"id":32,"translation":"(அவர்கள்) எல்லோரும் நம்மிடம் கண்டிப்பாக கொண்டுவரப்படுவார்கள்."},{"id":33,"translation":"இறந்துபோன (-காய்ந்து போன) பூமி அவர்களுக்கான (நமது வல்லமையை விளக்கும்) ஓர் அத்தாட்சியாகும். அதை நாம் உயிர்ப்பித்தோம். இன்னும், அதிலிருந்து வித்துக்களை வெளியாக்கினோம். ஆக, அதிலிருந்துதான் அவர்கள் (தங்கள் உணவுகளை) சாப்பிடுகிறார்கள்."},{"id":34,"translation":"இன்னும், பேரீச்ச மரங்களையும் திராட்சைகளின் தோட்டங்களையும் அதில் நாம் ஏற்படுத்தினோம்; இன்னும், ஊற்றுக்கண்களை அதில் பிளந்தோடச் செய்தோம்,"},{"id":35,"translation":"அவன் படைத்த கனிகளில் இருந்து அவர்கள் புசிப்பதற்காக. இன்னும், இவற்றை அவர்களின் கரங்கள் செய்யவில்லை. ஆகவே, இவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டாமா?"},{"id":36,"translation":"பூமி முளைக்க வைக்கக்கூடியதிலும் (-தாவரங்களிலும் மனிதர்களாகிய) அவர்களிலும் இன்னும் அவர்கள் அறியாதவற்றிலும் (மாறுபட்ட நிறங்களையும் ருசிகளையும் உடைய) எல்லா வகைகளையும் (ஆண், பெண் ஜோடிகளையும்) படைத்தவன் மிகப் பரிசுத்தமானவன்."},{"id":37,"translation":"இன்னும், இரவும் அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும். அதிலிருந்து பகலை நாம் கழட்டிவிடுகிறோம். அப்போது அவர்கள் (முற்றிலும் இரவின்) இருளில் ஆகிவிடுகிறார்கள்."},{"id":38,"translation":"இன்னும், சூரியன் தனது இருப்பிடத்தை நோக்கி ஓடுகிறது. அது, (அனைத்தையும்) நன்கறிந்தவன் (யாவரையும்) மிகைத்தவனுடைய ஏற்பாடாகும் (-திட்டமிடுதலாகும்)."},{"id":39,"translation":"இன்னும், சந்திரன் - பல தங்குமிடங்களில் தங்கும்படி அதை நாம் திட்டமிட்டோம். இறுதியாக, அது பழைய (காய்ந்த மெலிந்த வலைந்த) பேரீச்சை குலையைப் போல் திரும்பிவிடுகிறது."},{"id":40,"translation":"சூரியன் - சந்திரனை அடைந்து கொள்வது அதற்கு ஆகுமாகாது. இன்னும், இரவு பகலை முந்திவிடாது. (இரவும் பகலும் அவை ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ் குறித்த நேரத்தை அவை முந்தியும் விடாது, பிந்தியும் விடாது.) ஒவ்வொன்றும் ஒரு சுற்றுப் பாதையில் நீந்துகின்றன. (-சுற்றுகின்றன.)"},{"id":41,"translation":"இன்னும், நிச்சயமாக நாம் (மக்களால்) நிரம்பிய கப்பலில் அவர்களின் சந்ததிகளை பயணிக்க வைத்திருப்பதும் அவர்களுக்கு (நமது) அத்தாட்சியாகும்."},{"id":42,"translation":"இன்னும், அதைப் போன்று அவர்கள் வாகனிப்ப(தற்கு தேவையான)தை (-கால தேவைகளுக்கு ஏற்ப பல வகையான சிறிய பெரிய கப்பல்களையும் நிலத்தில் செல்லும் வாகனங்களையும்) நாம் அவர்களுக்கு படைப்போம்."},{"id":43,"translation":"இன்னும், (அவர்கள் கடலில் பயணிக்கும்போது) நாம் நாடினால் அவர்களை மூழ்கடிப்போம். அவர்களுக்கு உதவியாளர் அறவே இருக்க மாட்டார். இன்னும், அவர்கள் பாதுகாக்கப்பட மாட்டார்கள்."},{"id":44,"translation":"எனினும் நமது கருணையினாலும் சில காலம் வரை (அவர்கள்) சுகம் அனுபவிப்பதற்காகவும் (பாவிகளான அவர்களை நாம் கடலில் மூழ்கடிப்பதில்லை)."},{"id":45,"translation":"உங்களுக்கு முன்னுள்ளதையும் (முந்திய சமுதாயத்திற்கு இறக்கப்பட்ட தண்டனையையும்) உங்களுக்கு பின்னுள்ளதையும் (மறுமையின் தண்டனையையும்) நீங்கள் பயந்து கொள்ளுங்கள்! நீங்கள் கருணை காட்டப்படுவீர்கள்! என்று அவர்களுக்கு கூறப்பட்டால் (அவர்களோ அதை புறக்கணித்து சென்று விடுகிறார்கள்.)"},{"id":46,"translation":"அவர்களிடம் அவர்களுடைய இறைவனின் அத்தாட்சிகளில் இருந்து ஓர் அத்தாட்சி வருவதில்லை, அதை அவர்கள் புறக்கணித்தவர்களாக இருந்தே தவிர."},{"id":47,"translation":"அல்லாஹ் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து நீங்கள் தர்மம் செய்யுங்கள் என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிராகரித்தவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கி கூறுகிறார்கள்: “அல்லாஹ் நாடினால் எவருக்கு உணவளித்து விடுவானோ அவருக்கு நாங்கள் உணவளிக்க வேண்டுமா? நீங்கள் தெளிவான தவறிலேயே தவிர (சரியான கருத்தில்) இல்லை.” என்று (முஸ்லிம்களைப் பார்த்து கூறுகிறார்கள்)."},{"id":48,"translation":"இன்னும், “இந்த வாக்கு எப்போது நிகழும், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்” என்று அவர்கள் கூறுகிறார்கள்."},{"id":49,"translation":"ஒரே ஒரு சத்தத்தைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அ(ந்த சத்தமான)து (ஒரு நாள்) அவர்களைப் பிடித்துக் கொள்ளும். (அப்போது) அவர்கள் (உலக காரியங்களைப் பற்றி) தர்க்கித்துக் கொண்டிருப்பார்கள்."},{"id":50,"translation":"ஆக, அவர்கள் மரண சாசனம் கூறுவதற்கு சக்தி பெற மாட்டார்கள். இன்னும், தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பி வர மாட்டார்கள். (அதற்குள் மறுமை நிகழ்ந்துவிடும்)."},{"id":51,"translation":"இன்னும், எக்காளத்தில் ஊதப்படும். அப்போது அவர்கள் புதைக்குழிகளில் இருந்து தங்கள் இறைவன் பக்கம் விரைவாக வெளியேறி வருவார்கள்."},{"id":52,"translation":"(இறை மறுப்பாளர்கள்) கூறுவார்கள்: “எங்கள் நாசமே! யார் எங்களை எங்கள் புதைக்குழியில் இருந்து எழுப்பியது?” (அதற்கு நம்பிக்கையாளர்கள் பதில் கூறுவார்கள்:) “இ(ந்த மறுமை நாளான)து எதை ரஹ்மான் வாக்களித்தானோ, தூதர்கள் உண்மை கூறினார்களோ அதுவாகும்.”"},{"id":53,"translation":"அ(ந்த மறுமை நிகழ்வதான)து ஒரே ஒரு சத்தமாகவே தவிர இருக்காது. ஆக, அப்போது அவர்கள் அனைவரும் நம்மிடம் ஆஜர் படுத்தப்படுவார்கள்."},{"id":54,"translation":"இன்றைய தினம் ஓர் ஆன்மாவிற்கு சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. இன்னும், (அடியார்களே!) நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டீர்கள்."},{"id":55,"translation":"நிச்சயமாக சொர்க்கவாசிகள் இன்று (தங்களுக்கு சுகமளிக்கும்) வேளையில் இன்புற்றவர்களாக இருப்பார்கள்."},{"id":56,"translation":"அவர்களும் அவர்களின் மனைவிகளும் நிழல்களில் கட்டில்கள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்."},{"id":57,"translation":"அவர்களுக்கு அதில் கனிகள் உண்டு. இன்னும், அவர்கள் ஆசைப்படுவதும் அவர்களுக்கு கிடைக்கும்."},{"id":58,"translation":"(உங்கள் மீது) ஸலாம் உண்டாகட்டும் என்று மகா கருணையாளனாகிய இறைவன் புறத்தில் இருந்து கூறப்படும்."},{"id":59,"translation":"குற்றவாளிகளே! இன்றைய தினம் (நல்லவர்களை விட்டும்) நீங்கள் பிரிந்து விடுங்கள்!"},{"id":60,"translation":"ஆதமின் மக்களே! ஷைத்தானை நீங்கள் வணங்காதீர்கள் என்று உங்களுக்கு நான் கட்டளையிடவில்லையா? நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரியாவான்."},{"id":61,"translation":"இன்னும், நிச்சயமாக என்னை வணங்குங்கள்! இதுதான் நேரான பாதையாகும்."},{"id":62,"translation":"இன்னும், அவன் உங்களில் அதிகமான மக்களை திட்டவட்டமாக வழிகெடுத்துள்ளான். நீங்கள் சிந்தித்து புரிபவர்களாக இருக்கவில்லையா?"},{"id":63,"translation":"இதுதான் நீங்கள் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருந்த நரகமாகும்."},{"id":64,"translation":"இன்று அதில் நீங்கள் எரிந்து பொசுங்குங்கள், நீங்கள் நிராகரித்துக்கொண்டிருந்த காரணத்தால்."},{"id":65,"translation":"இன்று நாம் அவர்களின் வாய்கள் மீது முத்திரையிடுவோம். இன்னும், அவர்களின் கரங்கள் நம்மிடம் பேசும். அவர்கள் செய்துகொண்டிருந்ததற்கு அவர்களின் கால்கள் சாட்சி சொல்லும்."},{"id":66,"translation":"நாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடியிருந்தால் அவர்களின் கண்களை குருடாக்கி இருப்போம். ஆக, அவர்கள் பாதை தவறி இருப்பார்கள். ஆக, அவர்கள் எப்படி பார்ப்பார்கள்!"},{"id":67,"translation":"நாம் (அவர்களை இவ்வுலகத்திலேயே தண்டிக்க) நாடி இருந்தால் அவர்களை அவர்களின் இடத்திலேயே உட்கார வைத்து (அவர்களை உருமாற்றி அழித்து) இருப்போம். ஆக, அவர்கள் (முன்னால்) நடப்பதற்கும் ஆற்றல் பெறமாட்டார்கள். (பின்னால்) திரும்பி வரவும் மாட்டார்கள்."},{"id":68,"translation":"நாம் எவருக்கு நீண்ட வயதை கொடுக்கிறோமோ படைப்பில் (-உருவத்தில் பழைய நிலைக்கு) அவரை திருப்பி விடுவோம். (பலமுள்ளவராக இருந்தவரை பலவீனராக மாற்றிவிடுவோம். இதை) அவர்கள் சிந்தித்து புரிய வேண்டாமா?"},{"id":69,"translation":"நாம் அவருக்கு கவிதைகளை கற்றுத்தரவில்லை. அது அவருக்கு தகுதியானதும் இல்லை. இது அறிவுரையும் தெளிவான குர்ஆனும் அன்றி வேறில்லை."},{"id":70,"translation":"(உள்ளத்தால்) உயிருள்ளவராக இருப்பவரை அது எச்சரிப்பதற்காகவும் நிராகரிப்பாளர்கள் மீது (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விடுவதற்காகவும் (இந்த வேதத்தை நாம் அவருக்கு இறக்கினோம்)."},{"id":71,"translation":"நிச்சயமாக நாம் அவர்களுக்கு நமது கரங்கள் செய்தவற்றிலிருந்து கால்நடைகளைப் படைத்ததை அவர்கள் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆக, அவர்கள் அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறார்கள்."},{"id":72,"translation":"இன்னும், நாம் அவற்றை அவர்களுக்கு பணியவைத்தோம். அவற்றில் அவர்களின் வாகனங்களும் உண்டு. இன்னும், அவற்றி(ன் மாமிசங்களி)லிருந்து அவர்கள் புசிக்கிறார்கள்."},{"id":73,"translation":"இன்னும் அவர்களுக்கு இவற்றில் (-கால்நடைகளில் பலவிதமான) பலன்களும் (குறிப்பாக) குடிபானங்களும் உள்ளன. ஆக, (இவற்றை வழங்கிய அல்லாஹ்விற்கு) அவர்கள் நன்றி செலுத்த வேண்டாமா?"},{"id":74,"translation":"(இணைவைக்கின்ற) அவர்கள் உதவி செய்யப்படுவதற்காக அல்லாஹ்வை அன்றி பல கடவுள்களை (சிலைகளை தெய்வங்களாக) ஏற்படுத்திக் கொண்டனர்."},{"id":75,"translation":"(அந்த சிலைகளோ) அவ(ற்றை வணங்குகிறவ)ர்களுக்கு உதவி செய்ய சக்தி பெறமாட்டார்கள். அ(ந்த சிலைகளை வணங்குப)வர்கள் அவர்க(ள் வணங்கும் சிலைக)ளுக்கு முன் தயாராக இருக்கும் இராணுவமாக இரு(ந்து சிலைகளை பாதுகா)க்கிறார்கள்."},{"id":76,"translation":"ஆக, அவர்களின் பேச்சு உம்மை கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் மறைத்து பேசுவதையும் அவர்கள் வெளிப்படுத்தி பேசுவதையும் நன்கறிவோம்."},{"id":77,"translation":"நிச்சயமாக நாம் மனிதனை ஓர் இந்திரியத் துளியில் இருந்து படைத்துள்ளோம் என்பதை அவன் (சிந்தித்து) பார்க்கவில்லையா? ஆனால், அவனோ தெளிவாக தர்க்கம் செய்பவனாக இருக்கிறான்."},{"id":78,"translation":"அவன் நமக்கு ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். தான் படைக்கப்பட்டதை அவன் மறந்துவிட்டான். அவன் கூறுகிறான்: “எலும்புகளை அவை மக்கிப்போன நிலையில் இருக்கும்போது யார் உயிர்ப்பிப்பான்?”"},{"id":79,"translation":"(நபியே!) கூறுவீராக! “அவற்றை முதல் முறை உருவாக்கியவன்தான் அவற்றை (மறுமுறையும்) உயிர்ப்பிப்பான். இன்னும், அவன் எல்லா படைப்புகளையும் நன்கறிந்தவன் ஆவான்.”"},{"id":80,"translation":"அவன், பசுமையான பச்சை மரத்தில் இருந்து உங்களுக்கு நெருப்பை ஏற்படுத்தி இருக்கிறான். ஆக, அப்போது நீங்கள் அதில் நெருப்பை மூட்டிக் கொள்கிறீர்கள்."},{"id":81,"translation":"இன்னும், வானங்களையும் பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்றவர்களை படைப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா? ஏன் இல்லை! அவன்தான் மகா படைப்பாளன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":82,"translation":"அவன் எதையும் நாடினால் அவனது கட்டளை எல்லாம், ‘ஆகு’ என்று அதற்கு அவன் கூறுவதுதான். உடனே அது ஆகிவிடும்."},{"id":83,"translation":"ஆக, எவனுடைய கரத்தில் எல்லா பொருட்களின் பேராட்சி இருக்கிறதோ அவன் மகா பரிசுத்தமானவன். அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."}]},{"id":37,"verses":[{"id":1,"translation":"யா சீன்."},{"id":2,"translation":"கடுமையாக விரட்டுகின்ற (வான)வர்கள் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"வேதத்தை ஓதுபவர்கள் மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"நிச்சயமாக உங்கள் கடவுள் ஒருவன்தான்."},{"id":5,"translation":"(அவன்தான்) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் இறைவன் (-அதிபதி) ஆவான். இன்னும் (அவன்) சூரியன் உதிக்கும் இடங்களையும் (அது மறையும் இடங்களையும் அந்த சூரியனையும்) நிர்வகிப்பவன் ஆவான்."},{"id":6,"translation":"நிச்சயமாக நாம் கீழுள்ள வானத்தை நட்சத்திரங்களின் அலங்காரத்தால் அலங்கரித்துள்ளோம்."},{"id":7,"translation":"இன்னும், (இறைவனுக்கு) அடங்காத எல்லா ஷைத்தான்களிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் (நட்சத்திரங்களால் வானத்தை அலங்கரித்தோம்)."},{"id":8,"translation":"மிக உயர்ந்த (வானவக்) கூட்டத்தினரின் பக்கம் (அவர்களின் பேச்சை) அவர்களால் செவியுற முடியாது. எல்லா பக்கங்களில் இருந்தும் (அந்த ஷைத்தான்கள் வால் நட்சத்திரங்களால்) எறியப்படுவார்கள்."},{"id":9,"translation":"(வானத்தை விட்டு) தடுக்கப்படுவதற்காக (அவர்கள் மீது நட்சத்திரங்கள் எறியப்படும்). இன்னும், அவர்களுக்கு (மறுமையில்) நிரந்தரமான தண்டனை உண்டு."},{"id":10,"translation":"எனினும், (வானவர்களின் பேச்சை) யார் திருட்டுத்தனமாக திருடுகிறாரோ (கள்ளத்தனமாக ஒட்டுக்கேட்க முயற்சிக்கிறாரோ) எரிக்கின்ற நெருப்புக் கங்கு அவரை பின்தொடர்ந்து (அவரை எரித்து)விடும்."},{"id":11,"translation":"ஆக, (மறுமையை மறுக்கின்ற) அவர்கள் படைப்பால் பலமிக்கவர்களா? அல்லது, (வானம் பூமி, வானவர்கள் போன்ற) நமது படைப்புகளா? என்று அவர்களிடம் விளக்கம் கேட்பீராக! நிச்சயமாக நாம் அவர்களை (-மனிதர்களை) பிசுபிசுப்பான (ஒட்டிக்கொள்கின்ற நல்ல) மண்ணிலிருந்து படைத்தோம்."},{"id":12,"translation":"அன்றி, (நபியே! இந்த குர்ஆன் உமக்கு கொடுக்கப்பட்டபோது) நீர் ஆச்சரியப்பட்டீர். இன்னும் அவர்கள் (உம்மையும் இந்த வேதத்தையும்) கேலி செய்தனர்."},{"id":13,"translation":"அவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டால் அறிவுரை பெறமாட்டார்கள்."},{"id":14,"translation":"அவர்கள் (நபியிடம்) ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (தாங்களும் அதை) ஏளனம் கேலி செய்(து அதை கேலி செய்யும்படி பிறரிடமும் கூறு)கிறார்கள்."},{"id":15,"translation":"இன்னும், “தெளிவான சூனியமாகவே தவிர இது இல்லை” என்று கூறுகிறார்கள்."},{"id":16,"translation":"“நாங்கள் இறந்து, எலும்புகளாகவும், (எங்கள் சதைகள்) மண்ணாகவும் மாறிவிட்டால் நிச்சயமாக நாங்கள் (மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?”"},{"id":17,"translation":"“இன்னும், எங்கள் முந்திய முன்னோர்களுமா (எழுப்பப்படுவார்கள்)?” (என்று அவர்கள் கேட்கிறார்கள்.)"},{"id":18,"translation":"“ஆம், (நீங்கள் அனைவரும் எழுப்பப்படுவீர்கள். அப்போது) நீங்கள் மிகவும் சிறுமைப்பட்டவர்களாக இருப்பீர்கள்” என்று கூறுவீராக!"},{"id":19,"translation":"ஆக, (மறுமை நிகழ்வு) அதுவெல்லாம் ஒரே ஒரு பலமான சத்தம்தான். அப்போது அவர்கள் (மறுமையின் காட்சிகளை கண்கூடாகப்) பார்ப்பார்கள்."},{"id":20,"translation":"இன்னும், எங்கள் நாசமே! என்று அவர்கள் கூறுவார்கள். (அப்போது அவர்களுக்குக் கூறப்படும்:) “இதுதான் கூலி கொடுக்கப்படும் நாள்.”"},{"id":21,"translation":"“இதுதான் தீர்ப்பு நாள் ஆகும். இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்.”"},{"id":22,"translation":"அநியாயம் செய்தவர்களையும் அவர்களின் இனத்தவர்களையும் (அவர்களைப் பின்பற்றியவர்களையும் அவர்களைப் போன்று நிராகரித்த மற்றவர்களையும்) இன்னும், அவர்கள் வணங்கி வந்தவர்களையும் ஒன்று திரட்டுங்கள்!"},{"id":23,"translation":"அல்லாஹ்வை அன்றி (அவர்கள் வணங்கியவர்களை கொண்டுவாருங்கள்)! ஆக, அவர்களுக்கு நரகத்தின் பாதையின் பக்கம் வழிகாட்டுங்கள்."},{"id":24,"translation":"இன்னும், அவர்களை நிறுத்துங்கள்! நிச்சயமாக அவர்கள் (நிந்திக்கப்படுவதற்காக) விசாரிக்கப்படுவார்கள்."},{"id":25,"translation":"(இன்னும், அவர்களை நோக்கி நிந்தனையாக கூறப்படும்:) “உங்களுக்கு என்ன நேர்ந்தது நீங்கள் உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யாமல் இருக்கிறீர்கள்?”"},{"id":26,"translation":"மாறாக, அவர்கள் இன்று (அல்லாஹ்வின் கட்டளைக்கு) முற்றிலும் கீழ்ப்படிந்து விடுவார்கள்."},{"id":27,"translation":"இன்னும், அவர்களில் சிலர், சிலரை முன்னோக்கி (தங்களது இறுதி தங்குமிடத்தைப் பற்றி) விசாரித்துக் கொள்வார்கள்."},{"id":28,"translation":"(வழிகெட்டவர்கள் தங்களை வழிகெடுத்த தலைவர்களை நோக்கி) கூறுவார்கள்: “நன்மையை விட்டும் (எங்களை) தடுக்க நீங்கள் எங்களிடம் தொடர்ந்து வந்தீர்கள்.”"},{"id":29,"translation":"(வழிகெடுத்தவர்கள்) கூறுவார்கள்: “(நீங்கள் சொல்வது பொய்!) மாறாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருக்கவில்லை.”"},{"id":30,"translation":"“(உங்களை வழிகெடுக்க) எங்களுக்கு உங்கள் மீது எவ்வித அதிகாரமும் இருக்கவில்லை. மாறாக, நீங்கள் அளவு கடந்து பாவம் செய்யும் மக்களாக இருந்தீர்கள்.”"},{"id":31,"translation":"“ஆகவே, நம் மீது நமது இறைவனுடைய (தண்டனையின்) வாக்கு உறுதியாகி விட்டது. நிச்சயமாக நாம் (தண்டனையை) சுவைப்பவர்கள்தான்.”"},{"id":32,"translation":"“ஆக, நாங்கள் உங்களை வழிகெடுத்தோம். நிச்சயமாக நாங்கள் வழி கெட்டவர்களாகவே இருந்தோம்.”"},{"id":33,"translation":"ஆக, நிச்சயமாக அவர்கள் (வழிகெடுத்தவர்களும் வழிகெட்டவர்களும்) அந்நாளில் தண்டனையில் (ஒன்றாக) கூட்டாகிவிடுவார்கள்."},{"id":34,"translation":"நிச்சயமாக நாம் இப்படித்தான் குற்றவாளிகளுடன் நடந்து கொள்வோம்."},{"id":35,"translation":"“அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை” என்று அவர்களுக்கு கூறப்பட்டால் நிச்சயமாக அவர்கள் (அதை ஏற்றுக் கொள்ளாமல்) பெருமை அடி(த்து புறக்கணி)ப்பவர்களாக இருந்தனர்."},{"id":36,"translation":"இன்னும், “பைத்தியக்காரரான ஒரு கவிஞருக்காக எங்கள் தெய்வங்களை நிச்சயமாக நாங்கள் விட்டுவிடுவோமா?” என்று அவர்கள் கூறுகிறார்கள்."},{"id":37,"translation":"(அவர்கள் கூறுவது போன்றல்ல.) மாறாக, அவர் சத்தியத்தைக் கொண்டு வந்தார். இன்னும், (முன்னர் வந்த) தூதர்களை உண்மைப்படுத்தினார்."},{"id":38,"translation":"(இணைவைப்பாளர்களே!) நிச்சயமாக நீங்கள் துன்புறுத்தும் தண்டனையை சுவைப்பீர்கள்."},{"id":39,"translation":"நீங்கள் எதை செய்துகொண்டிருந்தீர்களோ அதற்கே தவிர நீங்கள் கூலி கொடுக்கப்படமாட்டீர்கள்."},{"id":40,"translation":"அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையை விட்டும் பாதுகாக்கப்படுவார்கள்.)"},{"id":41,"translation":"(ருசியும் மணமும்) அறியப்பட்ட (சிறப்பான) உணவு அவர்களுக்கு உண்டு."},{"id":42,"translation":"பழங்கள் (அவர்களுக்கு உண்டு). இன்னும், அவர்கள் (சொர்க்கத்தில் பலவிதமான சிறப்புகளைக் கொண்டு) கண்ணியப்படுத்தப்படுவார்கள்."},{"id":43,"translation":"இன்பமிகு சொர்க்கங்களில் (இருப்பார்கள்)."},{"id":44,"translation":"கட்டில்கள் மீது ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்தவர்களாக இருப்பார்கள்."},{"id":45,"translation":"மதுரமான தெளிவான நீரைப் போன்ற மதுவினால் நிரம்பிய கிண்ணங்களுடன் அவர்களை சுற்றிவரப்படும்."},{"id":46,"translation":"அந்த மது வெண்மையாக அருந்துபவர்களுக்கு மிக இன்பமானதாக இருக்கும்."},{"id":47,"translation":"அதில் (அறிவைப் போக்கக்கூடிய) போதையும் இருக்காது (தலைவலி, வயிற்று வலி இருக்காது.) இன்னும், அவர்கள் அதனால் மயக்கமுற மாட்டார்கள்."},{"id":48,"translation":"பார்வைகளை தாழ்த்திய கண்ணழகிகள் அவர்களிடம் இருப்பார்கள்."},{"id":49,"translation":"அவர்கள் பாதுகாக்கப்பட்ட (-மறைக்கப்பட்ட தீக்கோழியின்) முட்டையைப் போன்று (-அதன் நிறத்தில்) இருப்பார்கள்."},{"id":50,"translation":"ஆக, அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (நரகவாசிகளைப் பற்றி) விசாரிப்பார்கள்."},{"id":51,"translation":"“நிச்சயமாக எனக்கு ஒரு நண்பன் இருந்தான்” என்று அவர்களில் பேசிய ஒருவர் கூறுவார்."},{"id":52,"translation":"“நிச்சயமாக நீ (தூதர்களை) உண்மைப்படுத்துபவர்களில் உள்ளவனா?” என்று (உலகில் வாழும்போது என்னிடம்) கூறுவான்."},{"id":53,"translation":"“நாம் இறந்துவிட்டால் (பின்னர்) எலும்புகளாகவும் மண்ணாகவும் மாறி விட்டால், நிச்சயமாக நாம் (நமது செயல்களுக்கு) கூலி கொடுக்கப்படு(வதற்காக எழுப்பப்படு)வோமா?” (என்றும் அவன் கூறுவான்)"},{"id":54,"translation":"(அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: “(நரகத்தில் உள்ளவர்களை) நீங்கள் எட்டிப்பார்க்க முடியுமா?” என்று கூறுவார்."},{"id":55,"translation":"ஆக, (அந்த நம்பிக்கையாளர் நரகத்தில்) எட்டிப்பார்ப்பார். அவர் அவனை நரகத்தின் நடுவில் பார்ப்பார்."},{"id":56,"translation":"(அந்த நம்பிக்கையாளர்) கூறுவார்: “அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக நீ என்னை (வழிகேட்டில் தள்ளி) நாசமாக்கி இருப்பாய்.”"},{"id":57,"translation":"“என் இறைவனின் (நேர்வழி எனும்) அருட்கொடை (என்னுடன்) இல்லாதிருந்தால் நானும் (நரகத்தில் தண்டனைக்காக) கொண்டுவரப்பட்டவர்களில் ஆகி இருப்பேன்.”"},{"id":58,"translation":"“ஆக, (இந்த சொர்க்க வாழ்க்கையில்) நாங்கள் மரணிப்பவர்களாக இல்லையே!”"},{"id":59,"translation":"“எங்கள் முதல் மரணத்தைத் தவிர (வேறு மரணம் எங்களுக்கு இல்லை). இன்னும் நாங்கள் தண்டனை செய்யப்படுபவர்களாக இல்லை.”"},{"id":60,"translation":"நிச்சயமாக இதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":61,"translation":"(உலக வாழ்க்கையில்) அமல் செய்பவர்கள் இது போன்ற (சொர்க்க பாக்கியத்தை மறுமையில் அடைவ)தற்காக அமல் செய்யட்டும்."},{"id":62,"translation":"அது (-மேற்கூறப்பட்ட சொர்க்க இன்பங்கள் இறைவனின்) விருந்தோம்பலால் மிகச் சிறந்ததா? அல்லது, ஸக்கூம் என்ற கள்ளி மரமா?"},{"id":63,"translation":"நிச்சயமாக நாம் அதை இணைவைப்பவர்களுக்கு ஒரு சோதனையாக (தண்டனையாக) ஆக்கி இருக்கிறோம்."},{"id":64,"translation":"நிச்சயமாக அது நரகத்தின் அடியில் முளைக்கின்ற ஒரு மரமாகும்."},{"id":65,"translation":"அதன் கனிகள் ஷைத்தான்களின் தலைகளைப் போல் (மிக விகாரமாக) இருக்கும்."},{"id":66,"translation":"ஆக, நிச்சயமாக அவர்கள் அதிலிருந்து சாப்பிடுவார்கள். இன்னும், அதிலிருந்து (தங்கள்) வயிறுகளை நிரப்புவார்கள்."},{"id":67,"translation":"பிறகு, நிச்சயமாக அவர்களுக்கு அதற்கு மேல் கொதி நீர் கலக்கப்பட்ட (அருவருக்கத்தக்க) பானமும் உண்டு."},{"id":68,"translation":"பிறகு, நிச்சயமாக அவர்களின் மீளுமிடம் நரக நெருப்பின் பக்கம்தான் இருக்கும்."},{"id":69,"translation":"நிச்சயமாக இ(ந்த இணைவைப்ப)வர்கள் தங்கள் மூதாதைகளை வழிகெட்டவர்களாக பெற்றார்கள்."},{"id":70,"translation":"ஆக, அவர்களின் அடிச்சுவடுகளில் (கண்மூடித்தனமாக அவர்களை பின்பற்றுவதற்கு) இவர்கள் விரைகிறார்கள்."},{"id":71,"translation":"இவர்களுக்கு முன் முன்னோரில் அதிகமானவர்கள் திட்டவட்டமாக வழி கெட்டுள்ளனர்."},{"id":72,"translation":"திட்டவட்டமாக அவர்களில் அச்சமூட்டி எச்சரிப்பவர்க(ளாகிய நமது தூதர்)ளை நாம் அனுப்பினோம்."},{"id":73,"translation":"ஆகவே, எச்சரிக்கப்பட்டவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே) நீர் பார்ப்பீராக!"},{"id":74,"translation":"எனினும், அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்கள் (தண்டனையில் இருந்து) பாதுகாக்கப்படுவார்கள்."},{"id":75,"translation":"திட்டவட்டமாக (நபி) நூஹ் நம்மை அழைத்தார். ஆக, பதில் தருபவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்."},{"id":76,"translation":"இன்னும், மிகப் பெரிய துக்கத்தில் இருந்து அவரையும் அவரது குடும்பத்தாரையும் பாதுகாத்தோம்."},{"id":77,"translation":"இன்னும், அவரது சந்ததிகளைத்தான் (உலகில்) மீதமானவர்களாக நாம் ஆக்கினோம்."},{"id":78,"translation":"இன்னும், பிற்காலத்தில் வருபவர்களில் அவரைப் பற்றிய நற்பெயரை நாம் ஏற்படுத்தினோம்."},{"id":79,"translation":"உலகத்தார்களில் (யாரும் அவரை பழித்துப் பேசாதவாறு) நூஹுக்கு ஸலாம் உண்டாகட்டும்."},{"id":80,"translation":"நிச்சயமாக நாம் இவ்வாறுதான் நல்லவர்களுக்கு கூலி கொடுப்போம்."},{"id":81,"translation":"நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர் ஆவார்."},{"id":82,"translation":"பிறகு, மற்றவர்களை நாம் மூழ்கடித்தோம்."},{"id":83,"translation":"நிச்சயமாக அவரது கொள்கையை சேர்ந்தவர்களில் உள்ளவர்தான் இப்ராஹீம்."},{"id":84,"translation":"அவர் தனது இறைவனிடம் ஈடேற்றம் பெற்ற உள்ளத்துடன் வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":85,"translation":"தனது தந்தை இன்னும் தனது மக்களை நோக்கி, எதை நீங்கள் வணங்குகிறீர்கள் என்று அவர் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":86,"translation":"அல்லாஹ்வை அன்றி பல பொய்யான தெய்வங்களையா (உங்கள் தேவைகளுக்கும் வழிபாடுகளுக்கும்) நீங்கள் நாடுகிறீர்கள்?"},{"id":87,"translation":"ஆக, அகிலங்களின் இறைவனைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன? (அவன் ஒருவனை மட்டும் வணங்காமல் ஏன் கற்பனையாக பல தெய்வங்களை உருவாக்கினீர்கள்?)"},{"id":88,"translation":"ஆக, அவர் நட்சத்திரங்களின் பக்கம் ஒரு பார்வை பார்த்தார்."},{"id":89,"translation":"தொடர்ந்து அவர் கூறினார், “நிச்சயமாக நான் ஒரு நோயாளி ஆவேன்”."},{"id":90,"translation":"ஆகவே, அவர்கள் முகம் திரும்பியவர்களாக அவரை விட்டு விலகிச் சென்றனர்."},{"id":91,"translation":"ஆக, அவர்களின் தெய்வங்கள் பக்கம் (இப்ராஹீம்) விரைந்தார். ஆக, அவர் (அந்த சிலைகளை நோக்கி) கூறினார்: “நீங்கள் சாப்பிட மாட்டீர்களா?”"},{"id":92,"translation":"“உங்களுக்கு என்ன ஏற்பட்டது? நீங்கள் ஏன் பேசுவதில்லை?”"},{"id":93,"translation":"ஆக, வலக்கரத்தால் அவற்றை அடி(த்து உடை)ப்பதற்காக அவற்றின் மீது பாய்ந்தார்."},{"id":94,"translation":"ஆக, அவர்கள் விரைந்தவர்களாக அவர் பக்கம் முன்னோக்கி வந்தனர்."},{"id":95,"translation":"அவர் கூறினார்: “நீங்கள் (கற்களிலும் கட்டைகளிலும்) எதை செதுக்கி உருவாக்குகிறீர்களோ அதை வணங்குகிறீர்களா?”"},{"id":96,"translation":"“அல்லாஹ்தான் உங்களையும் உங்கள் செயல்களையும் படைக்கிறான்.”"},{"id":97,"translation":"அவர்கள் கூறினார்கள்: “அவருக்கு ஒரு கட்டடத்தைக் கட்டுங்கள். (அதில் விறகுகளை போட்டு நெருப்பு எரியுங்கள்!) ஆக, அந்த எரியும் நெருப்பில் அவரை எறிந்து விடுங்கள்!”"},{"id":98,"translation":"ஆக, அவர்கள் அவருக்கு ஒரு சூழ்ச்சியை நாடினர். ஆக, நாம் அவர்களைத்தான் மிகத் தாழ்ந்தவர்களாக ஆக்கினோம்."},{"id":99,"translation":"இன்னும், அவர் கூறினார்: “நிச்சயமாக நான் என் இறைவனின் பக்கம் செல்கிறேன். அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”"},{"id":100,"translation":"“என் இறைவா! எனக்கு நல்லவர்களில் ஒருவராக இருக்கும் ஒரு குழந்தையைத் தா!”"},{"id":101,"translation":"ஆகவே, மிக சகிப்பாளரான ஒரு குழந்தையைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்."},{"id":102,"translation":"ஆக, (அந்த குழந்தை) அவருடன் உழைக்கின்ற பருவத்தை அடைந்தபோது அவர் கூறினார்: “என் மகனே! நிச்சயமாக நான் உன்னை பலியிடுவதாக கனவில் பார்க்கிறேன். ஆகவே, நீ என்ன கருதுகிறாய் என்று நீ யோசி(த்து சொல்)!” (மகனார்) கூறினார்: “என் தந்தையே! உமக்கு எது ஏவப்படுகிறதோ அதை நீர் நிறைவேற்றுவீராக! இன் ஷா அல்லாஹ் (-அல்லாஹ் நாடினால் அல்லாஹ்வின் தீர்ப்பின் மீது) பொறுமையாக இருப்பவர்களில் ஒருவராக என்னை நீர் காண்பீர்.”"},{"id":103,"translation":"ஆக, அப்போது அவர்கள் இருவரும் (இறைவனின் கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தனர். அவர் அவரை (அவருடைய) கன்னத்தின் மீது கீழே சாய்த்தார்."},{"id":104,"translation":"இன்னும், “இப்ராஹீமே!” என்று நாம் அவரை அழைத்தோம்."},{"id":105,"translation":"“திட்டமாக நீர் கனவை உண்மைப்படுத்தினீர். நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்.”"},{"id":106,"translation":"நிச்சயமாக இதுதான் தெளிவான சோதனையாகும்."},{"id":107,"translation":"இன்னும், மகத்தான ஒரு பலிப்பிராணியைக் கொண்டு அவரை விடுதலை செய்தோம்."},{"id":108,"translation":"இன்னும், பின்னோரில் அவரைப் பற்றி அழகிய பெயரை ஏற்படுத்தினோம்."},{"id":109,"translation":"இப்ராஹீமுக்கு ஸலாம் உண்டாகட்டும்."},{"id":110,"translation":"இப்படித்தான் நல்லவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்."},{"id":111,"translation":"நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்."},{"id":112,"translation":"இன்னும், நல்லவர்களில் ஒருவராகவும் நபியாகவும் இருக்கப்போகின்ற இஸ்ஹாக்கைக் கொண்டு நாம் அவருக்கு நற்செய்தி கூறினோம்."},{"id":113,"translation":"அவருக்கும் இஸ்ஹாக்கிற்கும் அருள் வளம் புரிந்தோம். இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நல்லவரும் இருக்கிறார். தனக்கு தெளிவாக தீங்கிழைத்தவரும் இருக்கிறார்."},{"id":114,"translation":"திட்டவட்டமாக மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் அருள்புரிந்தோம்."},{"id":115,"translation":"அவ்விருவரையும் அவ்விருவரின் மக்களையும் பெரிய துக்கத்தில் இருந்து பாதுகாத்தோம்."},{"id":116,"translation":"இன்னும், அவர்களுக்கு உதவினோம். ஆகவே, அவர்கள்தான் வெற்றியாளர்களாக ஆகிவிட்டார்கள்."},{"id":117,"translation":"இன்னும், அவ்விருவருக்கும் தெளிவான வேதத்தை கொடுத்தோம்."},{"id":118,"translation":"இன்னும், அவ்விருவரையும் நேரான பாதையில் நேர்வழி நடத்தினோம்."},{"id":119,"translation":"இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவ்விருவருக்கும் நற்பெயரை ஏற்படுத்தினோம்."},{"id":120,"translation":"மூஸாவிற்கும் ஹாரூனுக்கும் ஸலாம் உண்டாகட்டும்."},{"id":121,"translation":"நிச்சயமாக நாம் நல்லவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்."},{"id":122,"translation":"நிச்சயமாக அவ்விருவரும் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்கள்."},{"id":123,"translation":"நிச்சயமாக இல்யாஸ் (நமது) தூதர்களில் உள்ளவர்."},{"id":124,"translation":"அவர் தனது மக்களுக்கு, “நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்ச மாட்டீர்களா?” என்று கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":125,"translation":"‘பஅல்’ சிலையை நீங்கள் வணங்குகிறீர்களா? மிக அழகிய படைப்பாளனை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?"},{"id":126,"translation":"உங்கள் இறைவனான, இன்னும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனுமான அல்லாஹ்வை (வணங்குவதை) விட்டுவிடுகிறீர்களா?"},{"id":127,"translation":"ஆக, அவர்கள் அவரை பொய்ப்பித்தனர். ஆகவே, நிச்சயமாக அவர்கள் (நரகத்தில் தண்டனை அனுபவிக்க) கொண்டுவரப்படுவார்கள்."},{"id":128,"translation":"(எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான (இணைவைக்காத) அடியார்களைத் தவிர. (அவர்கள் தண்டனையிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்)."},{"id":129,"translation":"இன்னும், பிற்காலத்தில் வருவோரில் அவருக்கு நற்பெயரை ஏற்படுத்தினோம்."},{"id":130,"translation":"இல்யாஸுக்கு(ம் அவரது மக்களில் அவரை பின்பற்றியவர்களுக்கும்) ஸலாம் உண்டாகட்டும்."},{"id":131,"translation":"நிச்சயமாக நல்லவர்களுக்கு நாம் இப்படித்தான் கூலி கொடுப்போம்."},{"id":132,"translation":"நிச்சயமாக அவர் நம்பிக்கையாளர்களான நமது அடியார்களில் உள்ளவர்."},{"id":133,"translation":"நிச்சயமாக லூத், (நமது) தூதர்களில் ஒருவர்தான்."},{"id":134,"translation":"அவரையும் அவரது குடும்பத்தார் அனைவரையும் நாம் காப்பாற்றிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":135,"translation":"(தண்டனையில்) தங்கி விடுபவர்களில் (ஒருவராக இருந்த அவரது குடும்பத்தைச் சேர்ந்த) ஒரு மூதாட்டியைத் தவிர."},{"id":136,"translation":"(அவரையும் முஃமின்களையும் பாதுகாத்த) பிறகு, மற்றவர்களை நாம் அழித்தோம்."},{"id":137,"translation":"இன்னும், நிச்சயமாக நீங்கள் காலையில் அவர்களை கடந்து செல்கிறீர்கள்."},{"id":138,"translation":"இரவிலும் (அவர்களை கடந்து செல்கிறீர்கள்). (நபியை நிராகரிப்பவர்களே!) நீங்கள் (இந்த வரலாறுகளை) சிந்தித்து புரியமாட்டீர்களா?"},{"id":139,"translation":"நிச்சயமாக யூனுஸ், (நமது) தூதர்களில் உள்ளவர்தான்."},{"id":140,"translation":"(பொருள்களால்) நிரம்பிய கப்பலை நோக்கி அவர் ஓடிய சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":141,"translation":"ஆக, (அவர் சென்ற கப்பல் நின்றுவிடவே) அவர் சீட்டு குலுக்கிப் போட்டார். ஆக, குலுக்கலில் பெயர் எடுக்கப்பட்டவர்களில் அவர் ஆகிவிட்டார். (அவரது பெயர் எழுதப்பட்ட சீட்டு வந்தது.)"},{"id":142,"translation":"ஆக, (அவர் தன்னை கடலில் எறியவே) அவரை திமிங்கலம் விழுங்கியது. அவர் (தனது இறைவனின் கட்டளை இன்றி கடலுக்கு சென்றதால்) பழிப்புக்குரிய செயலை செய்தவர் ஆவார்."},{"id":143,"translation":"ஆக, நிச்சயமாக அவர் அல்லாஹ்வை அதிகம் (தொழுது) துதிப்பவர்களில் இருந்திருக்கவில்லை என்றால்,"},{"id":144,"translation":"அதனுடைய வயிற்றில் (மக்கள் மறுமையில்) எழுப்பப்படுகின்ற நாள் வரை தங்கி இருந்திருப்பார்."},{"id":145,"translation":"ஆக, (அருகிலிருந்த) பெருவெளியில் அவரை எறிந்தோம். அவர் நோயுற்றவராக இருந்தார்."},{"id":146,"translation":"இன்னும், அவருக்கு அருகில் ஒரு சுரைக்காய் செடியை முளைக்க வைத்தோம்."},{"id":147,"translation":"இன்னும், ஒரு இலட்சம் அல்லது அதை விட அதிகமானவர்களுக்கு (தூதராக) அவரை அனுப்பினோம்."},{"id":148,"translation":"ஆக, அவர்கள் நம்பிக்கை கொண்டனர். ஆகவே, நாம் அவர்களுக்கு ஒரு காலம் வரை சுகமளித்தோம்."},{"id":149,"translation":"ஆகவே, (நபியே! நீர்) அவர்களிடம் (-இந்த மக்காவாசிகளிடம்) விளக்கம் கேட்பீராக! உமது இறைவனுக்கு பெண் பிள்ளைகளும், அவர்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?"},{"id":150,"translation":"வானவர்களை பெண்களாகவா நாம் படைத்தோம், அவர்கள் (அதை) பார்த்துக் கொண்டு (அங்கு ஆஜராகி) இருந்தார்களா?"},{"id":151,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்களது பெரும் பொய்யில் ஒன்றாக கூறுகிறார்கள்:"},{"id":152,"translation":"“அல்லாஹ் குழந்தை பெற்றெடுத்தான்” என்று. நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் ஆவர்."},{"id":153,"translation":"ஆண் பிள்ளைகளை விட பெண் பிள்ளைகளை அவன் (தனக்கு) தேர்தெடுத்துக் கொண்டானா?"},{"id":154,"translation":"உங்களுக்கு என்ன நேர்ந்தது? (இவ்வாறு) எப்படி தீர்ப்பளிக்கிறீர்கள்?"},{"id":155,"translation":"ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெற மாட்டீர்களா?"},{"id":156,"translation":"அல்லது, உங்களிடம் தெளிவான ஆதாரம் (ஏதும்) இருக்கிறதா?"},{"id":157,"translation":"ஆக, நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் (கூற்றுக்கு ஆதாரமாக இருக்கின்ற) வேதத்தைக் கொண்டு வாருங்கள்."},{"id":158,"translation":"அவனுக்கும் ஜின்களுக்கும் இடையில் ஓர் உறவை அவர்கள் ஏற்படுத்தினர். நிச்சயமாக அவர்கள் (நரகத்தில்) ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று திட்டவட்டமாக அந்த ஜின்கள் அறிந்து கொண்டனர்."},{"id":159,"translation":"அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன்."},{"id":160,"translation":"(எனினும்,) அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்கள் நரகத்திலிருந்து பாதுகாக்கப்படுவார்கள்.)"},{"id":161,"translation":"ஆக, நிச்சயமாக நீங்களும் நீங்கள் வணங்குகின்றவையும்,"},{"id":162,"translation":"அதன் மூலம் (யாரையும்) நீங்கள் வழி கெடுப்பவர்களாக இல்லை,"},{"id":163,"translation":"யார் நரகத்தில் எரிந்து பொசுங்குவாரோ அவரைத் தவிர. (நரகவாசிகள் என்று முடிவாகிவிட்டவர்களைத்தான் நீங்கள் வழிகெடுக்க முடியும்.)"},{"id":164,"translation":"(வானவர்கள் கூறுவார்கள்:) “எங்களில் (யாரும்) இல்லை அவருக்கு ஒரு குறிப்பிட்ட தகுதி இருந்தே தவிர.”"},{"id":165,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை வணங்குவதற்காக) அணிவகுத்து நிற்பவர்கள்."},{"id":166,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள்தான் (அல்லாஹ்வை) துதித்து தொழுபவர்கள்."},{"id":167,"translation":"நிச்சயமாக (இந்த மக்காவாசிகள்) கூறுபவர்களாக இருந்தனர்:"},{"id":168,"translation":"“நிச்சயமாக முன்னோரிடம் இருந்த வேதம் எங்களிடம் இருந்திருந்தால்,"},{"id":169,"translation":"நாங்களும் அல்லாஹ்வின் பரிசுத்தமான அடியார்களாக ஆகியிருப்போம்.”"},{"id":170,"translation":"ஆக (அது வந்த பின்னர் இப்போது) அவர்கள் அதை நிராகரித்து விட்டனர். (தங்கள் முடிவை) அவர்கள் விரைவில் அறிந்து கொள்வார்கள்."},{"id":171,"translation":"திட்டவட்டமாக நமது வாக்கு தூதர்களான நமது அடியார்களுக்கு முந்திவிட்டது."},{"id":172,"translation":"நிச்சயமாக அவர்கள்தான் உதவப்படுவார்கள்."},{"id":173,"translation":"நிச்சயமாக நமது இராணுவம்தான் வெற்றி பெறுவார்கள்."},{"id":174,"translation":"ஆகவே, (நபியே) அவர்களை விட்டு சிறிது காலம் வரை விலகி இருப்பீராக!"},{"id":175,"translation":"இன்னும், (நபியே!) அவர்களைப் பார்ப்பீராக! (அவர்களுக்கு இறங்கப் போகும் தண்டனையை அவர்கள்) விரைவில் பார்ப்பார்கள்."},{"id":176,"translation":"ஆக, அவர்கள் நமது தண்டனையை அவசரமாக வேண்டுகின்றனரா?"},{"id":177,"translation":"ஆக, அது அவர்களின் முற்றத்தில் (அதிகாலையில்) இறங்கிவிட்டால் எச்சரிக்கப்பட்டவர்களின் (அந்த) அதிகாலை மிக கெட்டதாக இருக்கும்."},{"id":178,"translation":"சிறிது காலம் வரை அவர்களை விட்டு விலகி இருப்பீராக!"},{"id":179,"translation":"இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்ப்பீராக! ஆக, (அவர்களுக்கு இறங்கப் போகின்ற தண்டனையை) விரைவில் அவர்கள் பார்ப்பார்கள்."},{"id":180,"translation":"கண்ணியத்தின் அதிபதியான உமது இறைவன் அவர்கள் வர்ணிப்பதை விட்டும் மிக பரிசுத்தமானவன்."},{"id":181,"translation":"இறைத்தூதர்களுக்கு ஸலாம் உண்டாகுக!"},{"id":182,"translation":"இன்னும், அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கு எல்லாப் புகழும் உரித்தாகுக!"}]},{"id":38,"verses":[{"id":1,"translation":"அணி அணியாக அணிவகுப்பவர்கள் (-வானவர்கள்) மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"மாறாக, நிராகரிப்பவர்கள் பிடிவாதத்திலும் முரண்பாட்டிலும் இருக்கிறார்கள்."},{"id":3,"translation":"இவர்களுக்கு முன்னர் எத்தனையோ பல தலைமுறைகளை நாம் அழித்தோம். ஆக, (நம் தண்டனை வந்தபோது அவர்கள் நம்மிடம் மன்றாடி பிரார்த்தித்து நம்மை) அழைத்தனர். (ஆனால், தண்டனை வந்த) அந்த நேரம் தப்பித்து ஓடுவதற்குரிய நேரம் அல்ல."},{"id":4,"translation":"அவர்களில் இருந்தே ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததால் அவர்கள் ஆச்சரியப்பட்டனர். இன்னும், நிராகரிப்பாளர்கள் (அவரைப் பற்றி,) “இவர் ஒரு சூனியக்காரர், ஒரு பெரும் பொய்யர்” என்று கூறினார்கள்."},{"id":5,"translation":"(இன்னும் அவர்கள் கூறினார்கள்:) “இவர் தெய்வங்களை (எல்லாம்) ஒரே ஒரு தெய்வமாக மாற்றிவிட்டாரா? நிச்சயமாக இது ஒரு ஆச்சரியமான விஷயம்தான்.”"},{"id":6,"translation":"“நீங்கள் சென்று, உங்கள் தெய்வங்களை வழிபடுவதில் உறுதியாக இருங்கள்! நிச்சயமாக (முஹம்மத் கூறுகின்ற) இது (நமக்கு தீமையும் அவருக்கு தலைமைத்துவமும்) நாடப்பட்ட ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது” என்று கூறியவர்களாக அவர்களில் உள்ள பிரமுகர்கள் (ஆலோசனை சபையிலிருந்து கலைந்து) சென்றனர்."},{"id":7,"translation":"(இன்னும், அவர்கள் கூறினார்கள்:) “இதை வேறு மார்க்கத்தில் நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இது கற்பனையாக இட்டுக்கட்டப்பட்டதாகவே தவிர இல்லை.”"},{"id":8,"translation":"“நமக்கு மத்தியில் (-மனிதராக வாழ்கிற) அவர் மீது வேதம் இறக்கப்பட்டதா?” (என்று கேலி செய்தனர்.) மாறாக, அவர்கள் எனது வேதத்தில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். மாறாக, அவர்கள் (இதுவரை) எனது தண்டனையை சுவைக்கவில்லை. (அப்படி சுவைத்திருந்தால் இந்த வேதத்தை உடனே நம்பியிருப்பார்கள்.)"},{"id":9,"translation":"கண்ணியமிக்கவனான, மகா கொடை வள்ளலான உமது இறைவனின் அருளுடைய பொக்கிஷங்கள் அவர்களிடமா இருக்கின்றன?"},{"id":10,"translation":"வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி அவர்களுக்கா இருக்கிறது? அப்படி இருந்தால் அவர்கள் (வானங்களின்) வாசல்களில் மேலே ஏறிவரட்டும்."},{"id":11,"translation":"(இவர்கள் உம்மை பொய்ப்பிக்கின்ற) அந்த விஷயத்தில் பல படைகளில் தோற்கடிக்கப்படும்படியான (பலவீனமான) ஒரு ராணுவம்தான். (இன்னும், இவர்கள் இப்லீஸின் கட்சியைச் சேர்ந்தவர்கள்.)"},{"id":12,"translation":"இவர்களுக்கு முன்னர் நூஹ் உடைய மக்களும் ஆது சமுதாயமும் ஆணிகளை உடைய ஃபிர்அவ்னும் (நபிமார்களை) பொய்ப்பித்தனர்."},{"id":13,"translation":"ஸமூது சமுதாயமும் லூத்துடைய மக்களும் தோட்டமுடையவர்களும் பொய்ப்பித்தனர். அவர்கள்தான் (பாவத்திற்காக ஒன்றுகூடிய) குழுக்கள் ஆவார்கள்."},{"id":14,"translation":"இவர்கள் எல்லோரும் தூதர்களை பொய்ப்பித்தனர். ஆகவே, எனது தண்டனை (அவர்களுக்கு) உறுதியானது."},{"id":15,"translation":"இவர்கள் ஒரே ஒரு சத்தத்தைத் தவிர எதையும் எதிர்பார்க்கவில்லை. அதற்கு (அந்த சத்தத்திற்கு) துண்டிப்பு, இடைவெளி இருக்காது. (அந்த தண்டனை இடைவெளி இல்லாத ஒரே சத்தமாக இருக்கும்.)"},{"id":16,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவா! விசாரணை நாளுக்கு முன்பாக எங்களுக்கு எங்கள் பத்திரத்தை (பங்கை, ஆவணத்தை) தீவிரப்படுத்திக் கொடு.” (மறுமையில் எங்களுக்கு நீ என்ன கொடுக்கப்போகிறாயோ அது நல்லதோ, கெட்டதோ அதை ஒரு பத்திரத்தில் எழுதி உலகத்திலேயே எங்களுக்கு கொடுத்துவிடு.)"},{"id":17,"translation":"(நபியே!) அவர்கள் கூறுவதை சகிப்பீராக! (அல்லாஹ்வின் விஷயத்தில், அல்லாஹ்வை வணங்குவதில்) மிக வலிமை, உறுதி உடைய நமது அடியார் தாவூதை நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் (அல்லாஹ்வை அதிகம் வணங்குவதன் மூலம் அவன் பக்கம்) முற்றிலும் திரும்பக் கூடியவர் ஆவார்."},{"id":18,"translation":"நிச்சயமாக நாம் (அவருக்கு) மலைகளை வசப்படுத்தினோம். அவருடன் மாலையிலும் காலையிலும் அவை (அல்லாஹ்வை) துதிக்கும்."},{"id":19,"translation":"இன்னும் (அவருக்கு முன்பாக) ஒன்று சேர்க்கப்பட்ட பறவைகளையும் (அவருக்கு நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவை எல்லாம் அவருக்கு கீழ்ப்படிந்தவையாக இருந்தன. (எல்லாம் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வை துதிப்பவையாக இருந்தன.)"},{"id":20,"translation":"இன்னும், அவருடைய ஆட்சியை பலப்படுத்தினோம். அவருக்கு ஞானத்தையும் (-நபித்துவத்தையும் சட்ட நுணுக்கத்தையும்) மிகத்தெளிவான, மிக உறுதியான பேச்சையும் கொடுத்தோம்."},{"id":21,"translation":"(நபியே) வழக்காளிகளுடைய செய்தி உம்மிடம் வந்ததா? (தாவூத், அல்லாஹ்வை வணங்கி வந்த) வீட்டின் முன்பக்கமாக அவர்கள் சுவர் ஏறி வந்த சமயத்தை நினைவு கூர்வீராக!"},{"id":22,"translation":"அவர்கள் தாவூத் (நபி) இடம் (திடீரென) நுழைந்த போது அவர் அவர்களைப் பார்த்து திடுக்கிட்டார். அவர்கள் கூறினார்கள்: பயப்படாதீர். நாங்கள் இரு வழக்காளிகள். எங்களில் ஒருவர், (மற்ற) ஒருவர் மீது அநியாயம் செய்தார். ஆகவே! எங்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிப்பீராக! அநீதி இழைத்து விடாதீர். நேரான பாதையின் பக்கம் எங்களுக்கு வழிகாட்டுவீராக!"},{"id":23,"translation":"“நிச்சயமாக இவர் எனது சகோதரர். அவருக்கு தொண்ணூற்றி ஒன்பது ஆடுகள் உள்ளன. எனக்கு ஒரே ஓர் ஆடுதான் உள்ளது. அதை(யும்) எனக்கு தந்துவிடு! என்று அவர் கூறுகிறார். அவர் வாதத்தில் என்னை மிகைத்துவிட்டார்.”"},{"id":24,"translation":"(தாவூத்) கூறினார்: உனது ஆட்டை தனது ஆடுகளுடன் சேர்க்க அவர் (உன்னிடம்) கேட்டதினால் அவர் உனக்கு அநீதி இழைத்துவிட்டார். நிச்சயமாக பங்காளிகளில் அதிகமானவர்கள் - அவர்களில் சிலர், சிலர் மீது அநீதி இழைக்கிறார்கள். (ஆனால்,) நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களைத் தவிர. அவர்கள் மிகக் குறைவானவர்களே! தாவூத், நாம் அவரை சோதித்தோம் என்பதை அறிந்து கொண்டார். ஆகவே, அவர் தன் இறைவனிடம் மன்னிப்புக் கேட்டார். சிரம் பணிந்தவராக (பூமியில்) விழுந்தார். அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்."},{"id":25,"translation":"ஆக, நாம் அவருக்கு அ(ந்த குற்றத்)தை மன்னித்தருளினோம். நிச்சயமாக அவருக்கு நம்மிடம் மிக நெருக்கமும் அழகிய மீளுமிடமும் உண்டு."},{"id":26,"translation":"தாவூதே! நிச்சயமாக நாம் உம்மை இந்த பூமியில் அதிபராக ஆக்கினோம். ஆகவே, மக்களுக்கு மத்தியில் சத்தியத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பீராக! சுய விருப்பத்தை பின்பற்றிவிடாதீர். அது உம்மை அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து வழிகெடுத்துவிடும். நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் இருந்து (மக்களை) வழிகெடுப்பார்களோ - அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு, அவர்கள் விசாரணை நாளை மறந்த காரணத்தால்."},{"id":27,"translation":"வானத்தையும் பூமியையும் அவ்விரண்டுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நாம் வீணாக படைக்கவில்லை. அ(வை நோக்கமின்றி படைக்கப்பட்டன என்ப)து நிராகரிப்பவர்களின் எண்ணமாகும். ஆகவே, நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் நாசம் உண்டாகட்டும்."},{"id":28,"translation":"நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களை பூமியில் கெட்டதை செய்பவர்களைப் போன்று ஆக்குவோமா? அல்லது, இறையச்சம் உள்ளவர்களை பாவிகளைப் போன்று ஆக்குவோமா?"},{"id":29,"translation":"இது, அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய அருள் நிறைந்த) ஒரு வேதமாகும். இதன் வசனங்களை அவர்கள் சிந்திப்பதற்காகவும், அறிவுள்ளவர்கள் (இதன் மூலம்) நல்லுபதேசம் பெறுவதற்காகவும் இதை நாம் உமக்கு இறக்கினோம்."},{"id":30,"translation":"தாவூதுக்கு நாம் சுலைமானை (நல்ல சந்ததியாக) வழங்கினோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் பக்கம் அதிகம் திரும்பக் கூடியவர் ஆவார். (அல்லாஹ்வை அதிகம் நினைப்பவரும் தொழுபவரும் அவனுக்கு அதிகம் கீழ்ப்படிந்து நடப்பவரும் ஆவார்.)"},{"id":31,"translation":"(ஓடும்போது) விரைந்து ஓடக்கூடிய, (நிற்கும்போது மூன்று கால்களின் மீது நின்று, ஒரு காலின் குழம்பை பூமியில் தொட்டு) அமைதியாக நிற்கக்கூடிய குதிரைகள் மாலை நேரத்தில் அவருக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டபோது,"},{"id":32,"translation":"ஆக, அவர் கூறினார்: “என் இறைவனை தொழுவதை விட்டும் (மறக்கும் அளவுக்கு குதிரை) செல்வத்தின் ஆசையை நிச்சயமாக நான் ஆசை வைத்து விட்டேன்.” இறுதியாக, (சூரியன் அது மறையக்கூடிய) திரையில் மறைந்து (-பார்க்க முடியாமல்) விட்டது."},{"id":33,"translation":"அவற்றை என்னிடம் திரும்பக் கொண்டு வாருங்கள். ஆக, (அவற்றின்) கெண்டை கால்களிலும் கழுத்துகளிலும் (அன்புடன்) தடவ ஆரம்பித்தார்."},{"id":34,"translation":"சுலைமானை நாம் திட்டவட்டமாக சோதித்தோம். இன்னும், அவருடைய நாற்காலியில் ஓர் உடலை போட்டோம். பிறகு, அவர் (நம் பக்கம்) திரும்பிவிட்டார்."},{"id":35,"translation":"அவர் கூறினார்: “என் இறைவா! என்னை மன்னிப்பாயாக! இன்னும், எனக்குப் பிறகு வேறு ஒருவருக்கும் தகுதியாகாத ஓர் ஆட்சியை நீ எனக்குத் தா! நிச்சயமாக நீதான் மகா பெரிய கொடைவள்ளல் ஆவாய்.”"},{"id":36,"translation":"ஆகவே, அவருக்கு நாம் காற்றை பணிய வைத்தோம். அவர் விரும்புகின்ற இடத்திற்கு அவருடைய கட்டளைக்கிணங்க அது மென்மையாக வீசும்."},{"id":37,"translation":"இன்னும், எல்லா ஷைத்தான்களையும் (அவருக்கு பணிய வைத்தோம்). அவர்களில் கட்டிட வல்லுனர்கள், முத்துக் குளிப்பவர்கள் இருந்தனர்."},{"id":38,"translation":"(இவர்கள் அனைவரையும்,) இன்னும், சங்கிலிகளில் பிணைக்கப்பட்ட மற்றவர்களையும் (நாம் அவருக்கு பணிய வைத்தோம்)."},{"id":39,"translation":"இது நமது அருட்கொடையாகும். ஆகவே, (இந்த அருளை பிறருக்கு) நீர் கொடுப்பீராக! அல்லது, நீரே வைத்துக்கொள்வீராக! (அது விஷயமாக உம்மிடம்) விசாரணை இருக்காது."},{"id":40,"translation":"நிச்சயமாக அவருக்கு நம்மிடம் நெருக்கமும் அழகிய மீளுமிடமும் இருக்கிறது."},{"id":41,"translation":"இன்னும். நமது அடியார் அய்யூபை நினைவு கூர்வீராக! நிச்சயமாக எனக்கு களைப்பையும் வலியையும் ஷைத்தான் ஏற்படுத்தி விட்டான் என்று அவர் தன் இறைவனை அழைத்(து பிரார்த்தித்)த சமயத்தில்,"},{"id":42,"translation":"(நாம் அவருக்கு கூறினோம்:) “உமது காலால் (பூமியை) உதைப்பீராக! இது குளிர்ந்த நீருடைய குளிக்கின்ற நீரூற்றும் குடிக்கின்ற நீருமாகும்.”"},{"id":43,"translation":"இன்னும், நம் புறத்தில் இருந்து கருணையாகவும் நிறைவான அறிவுடையவர்களுக்கு ஓர் உபதேசமாக இருப்பதற்காகவும் அவருடைய குடும்பத்தாரையும் அவர்களுடன் (குணத்திலும் அழகிலும்) அவர்கள் போன்றவர்களையும் அவருக்கு நாம் (அதிகமாகக்) கொடுத்தோம்."},{"id":44,"translation":"இன்னும், (அவருக்கு கூறினோம்:) “உமது கரத்தால் ஒரு பிடி புல்லை எடுப்பீராக! ஆக, அதன்மூலம் (பூமியில்) அடிப்பீராக! நீர் (செய்த) சத்தியத்தை முறிக்காதீர்!” நிச்சயமாக நாம் அவரை பொறுமையாளராக கண்டோம். அவர் சிறந்த அடியார். நிச்சயமாக அவர் (இன்பத்திலும் துன்பத்திலும் எல்லா நிலையிலும்) அல்லாஹ்வின் பக்கமே திரும்பியவர் ஆவார்."},{"id":45,"translation":"நமது அடியார்களான, (வணக்க வழிபாட்டில்) வலிமைகளும் (அல்லாஹ்வை அறிவதில்) அகப்பார்வையும் உடையவர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரை நினைவு கூர்வீராக!"},{"id":46,"translation":"நிச்சயமாக நாம் “மறுமையை அதிகம் நினைத்தல் (அதற்காக அமல் செய்தல்)” என்ற சிறப்பைக் கொண்டு அவர்களை விசேஷமாக தேர்ந்தெடுத்தோம். (அவர்களும் அல்லாஹ்வை, மறுமையை நினைவு கூர்ந்தவர்களாக இருந்ததுடன் மக்களுக்கும் அதை நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.)"},{"id":47,"translation":"இன்னும், நிச்சயமாக அவர்கள், நம்மிடம் மிகச் சிறந்தவர்களான தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் இருந்தார்கள்."},{"id":48,"translation":"இன்னும், இஸ்மாயீலையும் அல்யசவுவையும் துல்கிஃப்லையும் நினைவு கூர்வீராக! (இவர்கள்) எல்லோரும் மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்."},{"id":49,"translation":"இது ஒரு நினைவூட்டல் (நல்லுபதேசம்) ஆகும். நிச்சயமாக அல்லாஹ்வை அஞ்சியவர்களுக்கு அழகிய மீளுமிடம் (தங்குமிடம்) இருக்கிறது."},{"id":50,"translation":"அத்ன் சொர்க்கங்கள் (அவர்களுக்கு) உண்டு. (அவற்றின்) வாசல்கள் அவர்களுக்காக திறக்கப்பட்டவையாக இருக்கும்."},{"id":51,"translation":"அவற்றில் அவர்கள் (-கட்டில்கள் மீது) சாய்ந்தவர்களாக இருப்பார்கள். அதிகமான பழங்களையும் பானங்களையும் கொண்டுவரும்படி (கூறி தங்கள் பணியாளர்களை) அழைப்பார்கள்."},{"id":52,"translation":"இன்னும், சம வயதுடைய, பார்வைகளை தாழ்த்திய பெண்கள் அவர்களிடம் இருப்பார்கள்."},{"id":53,"translation":"விசாரணை நாளில் (நீங்கள் பெறுவீர்கள் என்று) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டவை இவைதான்."},{"id":54,"translation":"நிச்சயமாக இவை (சொர்க்கவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட) நமது கொடையாகும். இவற்றுக்கு அழிவு, முடிவு அறவே இல்லை. (அல்லாஹ்வின் சொர்க்க அருள்கள் தீர்ந்து போகாதவை.)"},{"id":55,"translation":"(மேற்கூறப்பட்ட) இவை (நல்லவர்களுக்கு உரியதாகும்). ஆனால், நிச்சயமாக எல்லை மீறியவர்களுக்கு (-பாவிகளுக்கு) மிகக் கெட்ட மீளுமிடம்தான் உண்டு."},{"id":56,"translation":"(அதுதான்) நரகம், அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். (அங்கே அவர்களுக்கு விரிப்பு இருக்கும்.) அந்த விரிப்பு (நெருப்பினால் ஆன) மிகக் கெட்ட விரிப்பாகும்."},{"id":57,"translation":"இவை, கொதி நீரும் சீல் சலமும் ஆகும். ஆக, இவற்றை அவர்கள் சுவைக்கட்டும்."},{"id":58,"translation":"இன்னும், தோற்றத்தில் பல வகையான வேறு தண்டனைகளும் (அவர்களுக்கு) உண்டு."},{"id":59,"translation":"இது உங்களுடன் (நரகத்தில்) நுழையக்கூடிய (இன்னொரு) கூட்டமாகும் (என்று பாவிகளின் தலைவர்களுக்கு கூறப்படும். அப்போது அவர்கள் பதில் கூறுவார்கள்:) “அவர்களுக்கு (இங்கு) வசதி உண்டாகாமல் இருக்கட்டும். நிச்சயமாக அவர்கள் நரகத்தில் எரிந்து பொசுங்குவார்கள்.”"},{"id":60,"translation":"(பாவிகள்) கூறுவார்கள்: “மாறாக, நீங்கள்தான் (நாங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்தீர்கள்). உங்களுக்கு இங்கு வசதி கிடைக்காமல் போகட்டும். நீங்கள்தான் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினீர்கள். (எங்கள் பாவங்களுக்கு நீங்கள்தான் காரணம்.)” ஆக, (அவர்களது தங்குமிடம்) மிகக் கெட்ட தங்குமிடமாகும்."},{"id":61,"translation":"(பாவிகள்) கூறுவார்கள்: “எங்கள் இறைவா! யார் இவற்றை எங்களுக்கு முற்படுத்தினாரோ (-எங்களை யார் பாவத்தில் தள்ளினாரோ) அவருக்கு நரகத்தில் இரண்டு மடங்கு தண்டனையை நீ அதிகப்படுத்து.”"},{"id":62,"translation":"இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “கெட்டவர்களில் உள்ளவர்கள் என்று நாங்கள் கருதி வந்த பல மனிதர்களை எங்களால் (இங்கு நரகத்தில்) பார்க்க முடிவதில்லையே!”"},{"id":63,"translation":"(நரகத்தில் நுழையாத) அ(ந்த நல்ல)வர்களை நாங்கள் கேலியாக எடுத்துக் கொண்டோமா? அல்லது, (அவர்கள் இங்கு இருந்தும் அவர்களை நாங்கள் தேடியும் எங்கள்) பார்வைகள் அவர்களைப் பார்க்க முடியாமல் சோர்ந்து விட்டனவா?"},{"id":64,"translation":"நரகவாசிகள் (இவ்வாறு) தங்களுக்குள் தர்க்கிப்பது - நிச்சயமாக இது உண்மையாகும்."},{"id":65,"translation":"(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நான் எல்லாம் ஓர் எச்சரிப்பாளர்தான். ஒரே ஒருவனுமாகிய (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர (வணக்கத்திற்குரிய) இறைவன் யாரும் இல்லை.”"},{"id":66,"translation":"(அவன்,) வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றின் உரிமையாளன், மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் (ஆவான்)."},{"id":67,"translation":"(நபியே!) கூறுவீராக! “இ(ந்த வேதமான)து ஒரு மகத்தான செய்தியாகும்."},{"id":68,"translation":"நீங்கள் இதை புறக்கணிக்கிறீர்கள்.”"},{"id":69,"translation":"மிக உயர்ந்த வானவர்களைப் பற்றி, (ஆதமை அல்லாஹ் படைப்பதற்கு முன்னர் அவர் விஷயமாக) அவர்கள் தர்க்கித்த போது (என்ன கூறினார்கள் என்று) எனக்கு அறவே ஞானம் இல்லை. (அல்லாஹ் எனக்கு அதை கூறிய பின்னர்தான் நான் அதை அறிவேன். ஆகவே, இது தெளிவான ஓர் ஆதாரமாக இல்லையா?)"},{"id":70,"translation":"“நிச்சயமாக நான் எல்லாம் தெளிவான ஓர் எச்சரிப்பாளர்தான்” என்றே தவிர எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவதில்லை."},{"id":71,"translation":"(நபியே!) அந்த சமயத்தை நினைவு கூர்வீராக, உமது இறைவன் வானவர்களை நோக்கி கூறினான்: “நிச்சயமாக நான் களிமண்ணிலிருந்து ஒரு மனிதரை படைக்கப்போகிறேன்”"},{"id":72,"translation":"“ஆக, நான் அவரை செம்மைபடுத்தி, அவரில் நான் படைத்த உயிரை ஊதினால் (வானவர்களே!) நீங்கள் அவருக்கு முன் சிரம் பணிந்தவர்களாக விழுந்து விடுங்கள்!”"},{"id":73,"translation":"ஆக, வானவர்கள், அவர்கள் ஒவ்வொருவரும், அவர்கள் அனைவரும் சிரம் பணிந்தனர்."},{"id":74,"translation":"இப்லீஸைத் தவிர. அவன் பெருமை அடித்தான். இன்னும், நிராகரிப்பவர்களில் ஆகிவிட்டான்."},{"id":75,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “இப்லீஸே! நான் எனது இரு கரத்தால் படைத்தவருக்கு நீ ஸஜ்தா செய்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? நீ பெருமையடிக்கிறாயா? (இதற்கு முன் நீ பெருமையடித்ததில்லையே!) அல்லது, (இதற்கு முன்னரும்) நீ பெருமையடிப்பவர்களில்தான் இருந்தாயா?”"},{"id":76,"translation":"(ஷைத்தான்) கூறினான்: “நான் அவரை விட சிறந்தவன். நீ என்னை நெருப்பில் இருந்து படைத்தாய். இன்னும், அவரை மண்ணிலிருந்து படைத்தாய்.”"},{"id":77,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நீ இ(ந்த சொர்க்கத்)திலிருந்து வெளியேறி விடு! ஆக, நிச்சயமாக நீ சபிக்கப்பட்டவன் ஆவாய்.”"},{"id":78,"translation":"“இன்னும், நிச்சயமாக கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாள் வரை உன் மீது என் சாபம் உண்டாகட்டும்.”"},{"id":79,"translation":"(இப்லீஸ்) கூறினான்: “என் இறைவா! ஆக, அவர்கள் எழுப்பப்படுகின்ற நாள் வரை எனக்கு அவகாசம் அளி!”"},{"id":80,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “நிச்சயமாக நீ, அவகாசமளிக்கப்பட்டவர்களில் இருப்பாய்.”"},{"id":81,"translation":"“(மறுமைக்கான) அறியப்பட்ட நேரத்தின் நாள் வரும் வரை (உனக்கு அவகாசம் அளிக்கப்படும்).”"},{"id":82,"translation":"(இப்லீஸ்) கூறினான்: “ஆக, உனது கண்ணியத்தின் மீது சத்தியமாக அவர்கள் அனைவரையும் நிச்சயமாக நான் வழிகெடுப்பேன்.”"},{"id":83,"translation":"“அவர்களில் உனது பரிசுத்தமான அடியார்களைத் தவிர. (அவர்களை வழிகெடுக்க என்னால் முடியாது.)”"},{"id":84,"translation":"(அல்லாஹ்) கூறினான்: “ஆக, (இதுதான் என்னிடமிருந்து வந்த) உண்மையாகும். நான் உண்மையைத்தான் கூறுவேன்.”"},{"id":85,"translation":"“உன்னாலும் அவர்களில் உன்னை பின்பற்றியவர்களாலும் (உங்கள்) அனைவர்களாலும் நரகத்தை நிரப்புவேன்.”"},{"id":86,"translation":"(நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடம் கூலி எதையும் கேட்கவில்லை. இன்னும், நான் (பொய்யாக) வரட்டு கௌரவம் தேடுபவர்களில் இல்லை.”"},{"id":87,"translation":"(குர்ஆனாகிய) இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர."},{"id":88,"translation":"இதன் செய்தியை (அது உண்மையானது என்று வெளிப்படையாக) சில காலத்திற்குப் பின்னர் நிச்சயம் நீங்கள் அறிவீர்கள்."}]},{"id":39,"verses":[{"id":1,"translation":"ஸாத்! அறிவுரைகள் நிறைந்த அல்குர்ஆன் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"நிச்சயமாக நாம் இந்த வேதத்தை உண்மையுடன் உமக்கு இறக்கினோம். ஆகவே, அல்லாஹ்வை வணங்குவீராக, வணக்க வழிபாடுகளை - தீனை அவனுக்கு முற்றிலும் தூய்மைப்படுத்தியவராக."},{"id":3,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! பரிசுத்தமான வணக்க வழிபாடுகள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. அவனை அன்றி (பல) தெய்வங்களை (தங்களுக்கு) எடுத்துக் கொண்டவர்கள், “நாங்கள் அவர்களை வணங்குவதில்லை, அல்லாஹ்வின் பக்கம் அந்தஸ்தால் எங்களை அவர்கள் நெருக்கமாக்குவதற்காகவே தவிர.” என்று கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு செய்கின்றவற்றில் தீர்ப்பளிப்பான். பொய்யர்களை நிராகரிப்பாளர்களை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்."},{"id":4,"translation":"அல்லாஹ் ஒரு குழந்தையை (தனக்கு) எடுத்துக்கொள்ள நாடினால் அவன் தான் படைத்தவற்றில் இருந்து தான் நாடுவதை தேர்ந்தெடுத்திருப்பான். அவன் மகா பரிசுத்தமானவன். அவன்தான் ஒருவனும் அடக்கி ஆளுகிறவனுமாகிய அல்லாஹ் ஆவான்."},{"id":5,"translation":"அவன் வானங்களை, பூமியை உண்மையான காரணத்திற்காக படைத்தான். பகல் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் அவன் கட்டுப்படுத்தி வைத்துள்ளான். எல்லாம் குறிப்பிட்ட ஒரு தவணையை நோக்கி ஓடுகின்றன. அறிந்துகொள்ளுங்கள்! அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன்."},{"id":6,"translation":"அவன் உங்களை ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து படைத்தான். பிறகு, அதில் இருந்து அதன் ஜோடியை படைத்தான். இன்னும், அவன் உங்களுக்காக கால்நடைகளில் எட்டு ஜோடிகளை உருவாக்கினான். அவன் உங்களை உங்கள் தாய்மார்களின் வயிற்றில் (-தாயின் வயிறு, கருவறை, நஞ்சுக்கொடி ஆகிய) மூன்று இருள்களில் ஒரு படைப்புக்குப் பின்னர் இன்னொரு படைப்பாக படைக்கிறான். அவன்தான் உங்கள் இறைவனாகிய அல்லாஹ் ஆவான். அவனுக்கே ஆட்சி அனைத்தும் உரியது. அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை விட்டு வேறு ஒன்றை வணங்குவதற்காக திசைத்) திருப்பப்படுகிறீர்கள்."},{"id":7,"translation":"நீங்கள் நிராகரித்தால் நிச்சயமாக அல்லாஹ் உங்களை விட்டும் முற்றிலும் தேவையற்றவன் - (எல்லா வகையிலும் அவன்) நிறைவானவன். அவன் தனது அடியார்களுக்கு நிராகரிப்பை விரும்ப மாட்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் உங்களுக்கு அதை விரும்புவான். பாவியான ஓர் ஆன்மா இன்னொரு (பாவியான) ஆன்மாவின் பாவத்தை சுமக்காது. பிறகு, உங்கள் இறைவன் பக்கமே உங்கள் மீளுமிடம் இருக்கிறது. ஆக, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":8,"translation":"மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் தன் இறைவனை அவன் பக்கம் முற்றிலும் திரும்பியவனாக அழைத்து பிரார்த்திக்கிறான். பிறகு, (இறைவன்) தன் புறத்திலிருந்து அவனுக்கு ஓர் அருளை வழங்கினால் இதற்கு முன்னர் அவனிடம் பிரார்த்திப்பவனாக இருந்ததை அவன் மறந்து விடுகிறான். இன்னும், அல்லாஹ்விற்கு இணை(யாக கற்பனை தெய்வங்)களை ஏற்படுத்துகிறான், அவனுடைய பாதையை விட்டு (மக்களை) வழிகெடுப்பதற்காக (இவ்வாறு செய்கிறான்). (நபியே!) கூறுவீராக! “நீ உனது நிராகரிப்பைக் கொண்டு சிறிது (காலம்) சுகமடைந்துகொள்! நிச்சயமாக நீ நரகவாசிகளில் ஒருவன்தான்.”"},{"id":9,"translation":"யார் மறுமையை பயந்து, தன் இறைவனின் அருளை ஆசை வைத்து, இரவு நேரங்களில் சிரம் பணிந்தவராகவும் நின்றவராகவும் அல்லாஹ்வை வணங்குவாரோ அவர் அல்லாஹ்வை நிராகரிப்பவருக்கு சமமாவாரா? (நபியே!) கூறுவீராக! “(அல்லாஹ்வை வணங்கி அவனுக்கு கீழ்ப்படிவதில் உள்ள நன்மையை) அறிந்தவர்களும் (அதை) அறியாதவர்களும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவதெல்லாம் நிறைவான அறிவுடையவர்கள்தான்.”"},{"id":10,"translation":"(நபியே நான் என் அடியார்களுக்கு கட்டளையிடுவதாக) கூறுவீராக! “நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! இவ்வுலகில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மை (-சொர்க்கம்) உண்டு. இன்னும் அல்லாஹ்வின் பூமி விசாலமானதாகும். பொறுமையாளர்களுக்கு அவர்களது கூலி (மறுமையில்) வழங்கப்படுவதெல்லாம் கணக்கின்றிதான். (முடிவுறாத நற்பாக்கியங்களை அவர்கள் அனுபவிப்பார்கள்.)”"},{"id":11,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், மார்க்கத்தை - வணக்க வழிபாடுகளை அவனுக்கு (மட்டும்) நான் தூய்மையாக செய்ய வேண்டும்” என்று நிச்சயமாக நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்."},{"id":12,"translation":"இன்னும், “முஸ்லிம்களில் முதலாமவனாக நான் இருக்க வேண்டும்” என்றும் நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்."},{"id":13,"translation":"(நபியே!) கூறுவீராக! “நான் என் இறைவனுக்கு மாறுசெய்தால் மகத்தான (மறுமை) நாளின் தண்டனையை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”"},{"id":14,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வைத்தான் நான் வணங்குவேன், அவனுக்கு (மட்டும்) என் மார்க்கத்தை - வணக்க வழிபாட்டை தூய்மைப்படுத்தியவனாக இருக்கும் நிலையில்.”"},{"id":15,"translation":"ஆக, அவனை அன்றி நீங்கள் விரும்பியவர்களை நீங்கள் வணங்குங்கள். (நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நஷ்டவாளிகள் (யாரென்றால்) தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் மறுமையில் நஷ்டமிழைத்தவர்கள்தான்.” அறிந்து கொள்ளுங்கள்! “இதுதான் மிகத்தெளிவான நஷ்டமாகும்.”"},{"id":16,"translation":"அவர்களுக்கு அவர்களின் மேலிருந்து நரகத்தின் நிழல்கள் (அடுக்கடுக்காக நரகத்தின் புகைகளும் ஜுவாலைகளும் இருக்கும்.) இன்னும் அவர்களுக்கு கீழிருந்து (நரகத்தின்) நிழல்கள் உண்டு. இ(ந்த தண்டனையான)து - இதன் மூலம் அல்லாஹ் தனது அடியார்களை பயமுறுத்துகிறான். என் அடியார்களே! என்னை அஞ்சுங்கள்! (நரக நெருப்பு அவர்களை அடர்த்தியாக சூழ்ந்துவிடும்.)"},{"id":17,"translation":"இன்னும், எவர்கள் தாகூத்துகளை (-ஷைத்தான்கள், சிலைகள், தாம் வணங்கப்படுவதை விரும்புகின்ற தலைவர்கள், குருக்கள் ஆகிய) இவர்களை வணங்குவதை விட்டு விலகி, அல்லாஹ்வின் பக்கம் திரும்பினார்களோ அவர்களுக்குத்தான் (சொர்க்கத்தின்) நற்செய்தி உண்டு. ஆகவே, என் அடியார்களுக்கு நற்செய்தி சொல்வீராக!."},{"id":18,"translation":"அவர்கள் உண்மையான பேச்சுகளை செவியுறுவார்கள். பின்னர், அவற்றில் மிக அழகானதை பின்பற்றுவார்கள். அவர்கள், எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டினான். இன்னும் அவர்கள்தான் அறிவாளிகள்."},{"id":19,"translation":"ஆக, எவர் மீது தண்டனையின் வாக்கு உறுதியாகிவிட்டதோ அவரை; இன்னும், நரகத்தில் எவர் இருப்பாரோ அவரை (நபியே) நீர் பாதுகாப்பீரா? (உம்மால் அவர்களை பாதுகாக்க முடியாது)?"},{"id":20,"translation":"எனினும், எவர்கள் தங்கள் இறைவனை அஞ்சினார்களோ அவர்களுக்கு (சொர்க்கத்தில் கோபுரங்களில்) அறைகள் உண்டு. அவற்றுக்குமேல் (-அந்த அறைகளுக்கு மேல் இன்னும் பல) அறைகள் கட்டப்பட்டிருக்கும். அவற்றைச் சுற்றி நதிகள் ஓடும். இது அல்லாஹ் வாக்களித்த வாக்காகும். அல்லாஹ் (தனது) வாக்கை (ஒருபோதும்) மாற்றமாட்டான்."},{"id":21,"translation":"(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் வானத்தில் இருந்து மழையை இறக்கினான். அதை பூமியில் பல ஊற்றுகளாக ஓடவைத்தான். பிறகு, அதன் நிறங்கள் மாறுபட்ட விளைச்சல்களை அதன் மூலம் அவன் உற்பத்தி செய்கிறான். பிறகு, அது காய்ந்து விடுகிறது. அதை மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு அதை அவன் காய்ந்த சருகுகளாக ஆக்கிவிடுகிறான். நிறைவான அறிவுடையவர்களுக்கு நிச்சயமாக இதில் ஓர் உபதேசம் இருக்கிறது."},{"id":22,"translation":"அல்லாஹ் எவருடைய நெஞ்சை இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றுவதற்கு விரிவாக்கிவிடுவானோ, அவர் தன் இறைவனின் (நேர்வழி என்ற) வெளிச்சத்தில் இருப்பார். அத்தகையவர் உள்ளம் இறுகியவருக்கு சமமாவாரோ? அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இறுகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்."},{"id":23,"translation":"அல்லாஹ் மிக அழகிய பேச்சை - பலமுறை ஓதப்படுகின்ற, ஒன்றுக்கொன்று ஒப்பான - ஒரு வேதமாக இறக்கினான். தங்கள் இறைவனை பயப்படுபவர்களின் தோல்கள் அ(தை அவர்கள் ஓதுவ)தன் மூலம் சிலிர்க்கின்றன. பிறகு, அவர்களின் தோல்களும் அவர்களின் உள்ளங்களும் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் திரும்பி மென்மையாகி (அமைதி பெறுகி)ன்றன. இதுதான் அல்லாஹ்வின் நேர்வழியாகும். தான் நாடியவர்களை அவன் இதன்மூலம் நேர்வழி செலுத்துகிறான். அல்லாஹ் எவரை வழிகெடுக்கிறானோ அவரை நேர்வழிபடுத்துபவர் யாரும் இல்லை."},{"id":24,"translation":"தனது முகத்தால் மறுமை நாளில் நிகழப்போகும் கெட்ட தண்டனையை தவிர்த்துக் கொள்பவன் கைகள் விலங்கிடப்பட்டு நரகத்தில் தலைகீழாக எறியப்படுபவனைப் போன்று ஆவாரா? இன்னும், (அந்த நாளில்) அநியாயக்காரர்களுக்கு கூறப்படும்: “நீங்கள் செய்துகொண்டிருந்ததை (-அதற்குரிய தண்டனையை இப்போது) சுவையுங்கள்!”"},{"id":25,"translation":"இவர்களுக்கு முன்னர் உள்ளவர்களும் (தூதர்களையும் வேதங்களையும்) பொய்ப்பித்தனர். ஆகவே, அவர்கள் உணராத விதத்தில் (அல்லாஹ்விடமிருந்து) அவர்களுக்கு தண்டனை வந்தது."},{"id":26,"translation":"ஆக, அல்லாஹ் அவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் கேவலத்தை சுவைக்க வைப்பான். (மறுமையிலும் தண்டனையை சுவைக்க வைப்பான்.) நிச்சயமாக மறுமையின் தண்டனை மிகப் பெரியது, அவர்கள் (இதை) அறிந்திருக்க வேண்டுமே!"},{"id":27,"translation":"இந்த குர்ஆனில் மக்களுக்கு எல்லா உதாரணங்களையும் நாம் திட்டவட்டமாக விவரித்தோம், அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காக."},{"id":28,"translation":"குழப்பமும், கோணலும் இல்லாத, அரபி மொழி குர்ஆனாக (நாம் இதை ஆக்கினோம்), அவர்கள் (இதை படித்து, உணர்ந்து அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக."},{"id":29,"translation":"அல்லாஹ் ஓர் உதாரணத்தை விவரிக்கிறான். ஒரு மனிதன் இருக்கிறான். அவன் விஷயத்தில் (தங்களுக்குள்) பிணங்கிக் கொள்கின்ற பல பங்குதாரர்கள் இருக்கிறார்கள். (இது இணைவைப்பவனுக்கான உதாரணமாகும்.) (வேறு) ஒரு சரியான மனிதர் இருக்கிறார். அவர் ஒரு மனிதருக்கு மட்டும் உரிமையானவர். (இது நம்பிக்கையாளருக்கான உதாரணமாகும்.) இந்த இரண்டு நபர்களும் தன்மையால் சமமாவார்களா? எல்லாப்புகழும் அல்லாஹ்விற்கே. மாறாக, அவர்களில் அதிகமானவர்கள் (தங்கள் வழிகேட்டை) அறியமாட்டார்கள்."},{"id":30,"translation":"நிச்சயமாக நீரும் மரணிப்பவரே! இன்னும், நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்கள்தான்."},{"id":31,"translation":"பிறகு, நிச்சயமாக நீங்கள் மறுமை நாளில் உங்கள் இறைவனிடம் (உங்களுக்குள்) தர்க்கித்துக் கொள்வீர்கள்."},{"id":32,"translation":"ஆக, அல்லாஹ்வின் மீது பொய் சொல்பவனை விடவும் உண்மையை - அது அவனிடம் வந்தபோது - பொய்ப்பித்தவனை விடவும் மகா அநியாயக்காரன் யார்? நிராகரிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (கண்டிப்பாக அங்குதான் அவர்களின் தங்குமிடம் இருக்கிறது.)"},{"id":33,"translation":"எவர் உண்மையைக் கொண்டு வந்தாரோ இன்னும் எவர் அதை உண்மை என்று ஏற்றாரோ அவர்கள்தான் இறையச்சம் உள்ளவர்கள்."},{"id":34,"translation":"அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் அவர்கள் நாடக்கூடியதெல்லாம் கிடைக்கும். இதுதான் நல்லவர்களின் வெகுமதியாகும்."},{"id":35,"translation":"அவர்கள் செய்த கெட்ட செயல்களை அவர்களை விட்டும் அல்லாஹ் போக்கிவிடுவதற்காகவும் அவர்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளுக்கு பகரமாக அவர்களுக்கு அவர்களின் கூலிகளை அல்லாஹ் கொடுப்பதற்காகவும் (இத்தகைய அழகிய முறையில் அல்லாஹ் அவர்களுடன் நடந்து கொள்வான்)."},{"id":36,"translation":"அல்லாஹ் தனது அடியானுக்கு போதுமானவனாக இல்லையா? அவர்கள் உம்மை அவன் அல்லாதவர்களைக் கொண்டு (-அந்த சிலைகள் உமக்கு தீங்கு செய்துவிடும் என்று) பயமுறுத்துகிறார்கள். யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை."},{"id":37,"translation":"இன்னும், யாரை அல்லாஹ் நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அல்லாஹ் மிகைத்தவனாக பழி தீர்ப்பவனாக இல்லையா?"},{"id":38,"translation":"(நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று? அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவை (-வணங்குபவை)ப் பற்றி நீங்கள் அறிவியுங்கள்! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடினால் அவை அவனது தீங்கை (என்னை விட்டு) நீக்கிவிடக்கூடியவையா? அல்லது, அவன் எனக்கு ஓர் அருளை நாடினால் அவை அவனது அருளை (என்னை விட்டும்) தடுத்துவிடக்கூடியவையா?” (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். நம்பிக்கை வைப்பவர்கள் அவன் மீது மட்டுமே நம்பிக்கை வைக்கவும்.”"},{"id":39,"translation":"(நபியே!) கூறுவீராக! “என் மக்களே! நீங்கள் உங்கள் தகுதிக்குத் தக்கவாறு அமல் செய்யுங்கள்! நிச்சயமாக நானும் (என் தகுதிக்குத் தக்கவாறு) அமல் செய்கிறேன். ஆக, நீங்கள் (உங்கள் கெட்ட முடிவை) விரைவில் அறிவீர்கள்.”"},{"id":40,"translation":"எவருக்கு, அவரை இழிவுபடுத்துகின்ற தண்டனை வரும், இன்னும், எவர் மீது நிரந்தரமான தண்டனை இறங்கும் (என்பதை நீங்கள் அறிவீர்கள்)."},{"id":41,"translation":"நிச்சயமாக நாம் மக்களுக்காக உம்மீது இந்த வேதத்தை சத்தியத்துடன் இறக்கினோம். ஆக, யார் நேர்வழி செல்கிறாரோ அவர் தனது (ஆன்மாவின்) நன்மைக்காகத்தான் நேர்வழி செல்கிறார். யார் வழிகெடுகிறாரோ அவர் வழி கெடுவதெல்லாம் அதற்கு (-தனது ஆன்மாவிற்கு) பாதகமாகத்தான். (நபியே!) நீர் அவர்கள் மீது கண்காணிப்பவராக (-அவர்களை நிர்ப்பந்திப்பவராக) இல்லை."},{"id":42,"translation":"அல்லாஹ்தான் உயிர்களை அவை மரணிக்கும் நேரத்தில் உயிர் கைப்பற்றுகிறான். இன்னும், (அவ்வாறே இது வரை) இறந்து போகாத உயிர்களையும் அவற்றின் தூக்கத்தில் அவன்தான் உயிர் கைப்பற்றுகிறான். (தூங்கும்போது) மரணத்தை எதன் மீது விதித்து விட்டானோ அதை (-அதனுடைய உயிரை தூக்கத்திலேயே) அவன் தடுத்துக் கொள்கிறான். (மரணம் விதிக்கப்படாத) மற்றொன்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (-அதனுடைய மரண நேரம் வரை இவ்வுலகில் உயிர்வாழ) அவன் விட்டு வைக்கிறான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":43,"translation":"(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை அன்றி (அல்லாஹ்விடம் தங்களுக்கு) பரிந்துரை செய்பவர்களை எடுத்துக் கொண்டார்களா? (நபியே!) கூறுவீராக! “அவர்கள் (-அந்த தெய்வங்கள்) எதற்கும் சக்தியற்றவர்களாகவும் சிந்தித்து புரியாதவர்களாகவும் இருந்தாலுமா (நீங்கள் அவர்களை பரிந்துரையாளர்களாக எடுத்துக்கொள்வீர்கள்)?”"},{"id":44,"translation":"(நபியே) கூறுவீராக! சிபாரிசுகள் அனைத்தும் அல்லாஹ்விற்கே சொந்தமாகும். வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியன. பிறகு, அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":45,"translation":"அல்லாஹ் ஒருவன் மட்டும் நினைவு கூரப்பட்டால் மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்களின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன (அதை வெறுக்கின்றன). அவனை அன்றி மற்றவர்கள் நினைவு கூரப்பட்டால் அப்போது அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்."},{"id":46,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்வே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! நீதான் உனது அடியார்களுக்கு மத்தியில் அவர்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த விஷயங்களில் தீர்ப்பளிப்பாய்.”"},{"id":47,"translation":"நிச்சயமாக பூமியில் உள்ள அனைத்தும் அதனுடன் அது போன்றதும் அநியாயம் செய்தவர்களுக்கு சொந்தமாக இருந்தால் மறுமை நாளில், கெட்ட தண்டனையில் இருந்து (தப்பித்துக்கொள்ள) அதை அவர்கள் பிணைத் தொகையாக கொடுத்து (தங்களை விடுவித்து) கொண்டிருப்பார்கள். இன்னும், அவர்கள் எண்ணிப் பார்த்திருக்காத (அவர்களுடைய) விஷயங்கள் எல்லாம் அல்லாஹ்விடம் (மறுமை நாளில்) அவர்களுக்கு முன் வெளிப்படும்."},{"id":48,"translation":"இன்னும், அவர்கள் செய்தவற்றின் தீமைகள் அவர்களுக்கு முன் (மறுமையில்) வெளிப்படும். இன்னும், அவர்கள் எதைப் பற்றி கேலி செய்து கொண்டிருந்தார்களோ அது அவர்களை சூழ்ந்து கொள்ளும்."},{"id":49,"translation":"ஆக, மனிதனுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவன் நம்மிடம் பிரார்த்திக்கிறான். பிறகு, நாம் அவனுக்கு நம்மிடமிருந்து ஒரு அருட்கொடையை வழங்கினால், அவன் கூறுகிறான்: “இது எனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம் (நான் அதற்கு தகுதியானவன் என்ற அல்லாஹ் உடைய) அறிவின்படிதான். (அவன் கூறுவது போன்றல்ல.) மாறாக, (அவனுக்கு) அது ஒரு சோதனையாகும். என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (செல்வம் கொடுக்கப்பட்டதன் நோக்கத்தை) அறியமாட்டார்கள்."},{"id":50,"translation":"திட்டமாக இவர்களுக்கு முன்னுள்ளவர்களும் இதைச் சொல்லி இருக்கிறார்கள். ஆக, அவர்கள் செய்து கொண்டிருந்தவை அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை."},{"id":51,"translation":"ஆக, அவர்கள் செய்ததின் தீங்குகள் (-தண்டனைகள்) அவர்களை அடைந்தன. (அவ்வாறே) இவர்களில் எவர்கள் அநியாயம் செய்தார்களோ அவர்களையும் அவர்கள் செய்தவற்றின் தீங்குகள் (-தண்டனைகள்) விரைவில் அடையும். இன்னும், அவர்கள் (நம்மை விட்டும்) தப்பிக்க மாட்டார்கள்."},{"id":52,"translation":"“நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுபவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாகக் கொடுக்கிறான். (தான் நாடுபவர்களுக்கு) சுருக்கமாகக் கொடுக்கிறான்” என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":53,"translation":"(நபியே!) கூறுவீராக! (பாவங்கள் செய்து) தங்கள் ஆன்மாக்கள் மீது எல்லை மீறிய என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். (நீங்கள் வருந்தி, திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் உங்களது) எல்லாப் பாவங்களையும் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்."},{"id":54,"translation":"இன்னும், உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால்) பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்."},{"id":55,"translation":"இன்னும், நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் திடீரென உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர், உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்ட மிக அழகிய (வேதத்தை; இன்னும், நபியின் மூலம் வழங்கப்பட்ட சுன்னா என்ற அழகிய ஞானத்)தை நீங்கள் (உறுதியாக) பின்பற்றுங்கள்,"},{"id":56,"translation":"“அல்லாஹ்வின் விஷயங்களில் நான் குறைசெய்து விட்டதால் எனக்கு நேர்ந்த துக்கமே! நிச்சயமாக நான் கேலி செய்பவர்களில்தான் இருந்தேன்” என்று எந்த ஓர் ஆன்மாவும் சொல்லாமல் இருப்பதற்காக (இந்த உலகத்தில் நீங்கள் வாழும்போதே அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)"},{"id":57,"translation":"அல்லது, “நிச்சயமாக அல்லாஹ் எனக்கு நேர்வழிகாட்டி இருந்தால் நானும் இறையச்சமுள்ளவர்களில் ஆகி இருப்பேனே” என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்வதற்கு முன்பாகவே (நீங்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)"},{"id":58,"translation":"அல்லது, “அந்த ஆன்மா தண்டனையை கண்ணால் பார்க்கும் நேரத்தில் நிச்சயமாக எனக்கு (உலகத்திற்கு) திரும்பி வரமுடிந்தால் நானும் நல்லவர்களில் ஆகி விடுவேன்” என்று (எந்த ஓர் ஆன்மாவும்) சொல்வதற்கு முன்பாகவே (நீங்கள் அவனுக்கு கீழ்ப்படிந்து விடுங்கள்!)"},{"id":59,"translation":"இல்லை, திட்டமாக உன்னிடம் எனது வசனங்கள் வந்தன. ஆக, நீ அவற்றை பொய்ப்பித்தாய், (அவற்றை ஏற்காமல்) பெருமை அடித்தாய், நிராகரிப்பவர்களில் நீ ஆகி இருந்தாய்."},{"id":60,"translation":"இன்னும் மறுமை நாளில் அல்லாஹ்வின் மீது பொய்யுரைத்தவர்களை - அவர்களின் முகங்கள் கருப்பாக இருப்பதை - (நபியே!) நீர் பார்ப்பீர். (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) பெருமை அடிப்பவர்களுக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா? (கண்டிப்பாக அவர்களின் நிலையான தங்குமிடம் நரகம்தான்.)"},{"id":61,"translation":"இன்னும், அல்லாஹ்வை அஞ்சியவர்களை அவர்களின் நல்லமல்களின் காரணத்தால் அல்லாஹ் (நரகத்திலிருந்து) பாதுகாப்பான். அவர்களை தீங்குகள் அணுகாது. இன்னும், அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்."},{"id":62,"translation":"அல்லாஹ்தான் எல்லாவற்றுக்கும் படைப்பாளன் ஆவான். அவன்தான் எல்லாவற்றையும் (கண்காணித்து) பாதுகாப்பவன் ஆவான்."},{"id":63,"translation":"அவனுக்கே வானங்கள், இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் உரியன. எவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நிராகரித்தார்களோ அவர்கள்தான் உண்மையான நஷ்டவாளிகள் ஆவார்கள்."},{"id":64,"translation":"(நபியே) கூறுவீராக! ஆக, அறிவீனர்களே! அல்லாஹ் அல்லாதவர்களையா நான் வணங்க வேண்டும் என்று எனக்கு நீங்கள் ஏவுகிறீர்கள்?"},{"id":65,"translation":"திட்டவட்டமாக உமக்கும் உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் வஹ்யி அறிவிக்கப்பட்ட(தாவ)து: “நீர் இணைவைத்தால் உமது அமல்கள் நாசமாகிவிடும். இன்னும், நீர் நஷ்டவாளிகளில் ஆகிவிடுவீர்.”"},{"id":66,"translation":"(படைப்புகளை வணங்காமல்) மாறாக, (யாவரையும் படைத்தவனாகிய) அல்லாஹ்வை (மட்டுமே) நீர் வணங்குவீராக! இன்னும், (அவனுக்கு) நன்றி செலுத்துவோரில் நீர் ஆகிவிடுவீராக!"},{"id":67,"translation":"(இணைவைப்பவர்கள்) அல்லாஹ்வை கண்ணியப்படுத்த வேண்டிய முறையில் கண்ணியப்படுத்தவில்லை. பூமி அனைத்தும் மறுமை நாளில் அவனது கைப்பிடியில் இருக்கும். வானங்கள் (அனைத்தும்) அவனது வலக்கையில் சுருட்டப்பட்டதாக இருக்கும். அவன் மிகப் பரிசுத்தமானவன். இன்னும், அவர்கள் இணைவைப்பதை விட்டு அவன் மிக உயர்ந்தவன்."},{"id":68,"translation":"எக்காளத்தில் ஊதப்படும். ஆக, வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் இறந்து விடுவார்கள், அல்லாஹ் நாடியவர்களைத் தவிர. பிறகு, அதில் மற்றொரு முறை ஊதப்படும். அப்போது அவர்கள் (உயிர்பெற்று எழுந்து தங்களுக்கு நிகழப்போவதை) பார்த்தவர்களாக நின்றுகொண்டிருப்பார்கள்."},{"id":69,"translation":"(மறுமை நாளில் இறைவன் வரும்போது) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (செயல்கள் பதியப்பட்ட) புத்தகம் (முன்னால்) வைக்கப்படும். நபிமார்கள், ஷஹீதுகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களுக்கு மத்தியில் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":70,"translation":"ஒவ்வோர் ஆன்மாவுக்கும் அது செய்தவற்றுக்கு முழுமையாக கூலி கொடுக்கப்படும். அவன் அவர்கள் செய்கின்ற அனைத்தையும் மிக அறிந்தவன் ஆவான்."},{"id":71,"translation":"நிராகரித்தவர்கள் கூட்டம் கூட்டமாக நரகத்தின் பக்கம் ஓட்டிக் கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அதற்கருகில் வந்தவுடன் அதன் வாசல்கள் (திடீரென) திறக்கப்படும். இன்னும், அதன் காவலாளிகள் அவர்களிடம் கூறுவார்கள்: “உங்களில் இருந்தே உங்களுக்கு தூதர்கள் வரவில்லையா? அவர்கள் உங்களுக்கு உங்கள் இறைவனின் வசனங்களை ஓதிக் காட்டினார்களே. இன்னும், நீங்கள் சந்திக்கவேண்டிய இந்த நாளைப் பற்றி உங்களை எச்சரித்தார்களே.” (நிராகரிப்பாளர்களாகிய) அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை. (தூதர்களும் அழைப்பாளர்களும் வந்தார்கள். நாங்கள்தான் அவர்களை நிராகரித்தோம். அல்லாஹ் கருணையாளன்தான்.) எனினும், நிராகரிப்பவர்கள் மீது (அல்லாஹ் உடைய) தண்டனையின் வாக்கு உறுதியாகி விட்டது.”"},{"id":72,"translation":"(அவர்களுக்கு) கூறப்படும்: “நீங்கள் நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்! அதில் நிரந்தரமாகத் தங்கிவிடுவீர்கள். ஆக, (அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாமல்) பெருமையடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டதாக இருக்கும்.”"},{"id":73,"translation":"இன்னும், தங்கள் இறைவனை அஞ்சியவர்கள் கூட்டம் கூட்டமாக சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். இறுதியாக, அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுக்கு (உள்ளே நுழைவதற்கு அனுமதி வழங்கப்படும். இன்னும்) அதன் வாசல்கள் திறக்கப்படும். மேலும், அதன் காவலாளிகள் கூறுவார்கள்: “உங்களுக்கு ஸலாம் - ஈடேற்றம் உண்டாகட்டும். நீங்கள் (செயலாலும் குணத்தாலும்) நல்லவர்களாக இருந்தீர்கள். ஆகவே, இ(ந்த சொர்க்கத்)தில் - நீங்கள் நிரந்தரமானவர்களாக இருக்கும் நிலையில் - நுழையுங்கள்!”"},{"id":74,"translation":"அவர்கள் கூறுவார்கள்: “எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன்தான் தனது வாக்கை எங்களுக்கு உண்மையாக்கினான். இன்னும், இந்த (சொர்க்க) பூமியை எங்களுக்கு சொந்தமாக்கித் தந்தான். இந்த சொர்க்கத்தில் நாங்கள் நாடிய இடத்தில் நாங்கள் தங்குவோம். ஆக, (அல்லாஹ்வின் கட்டளைப்படி) நல்லமல் செய்வோரின் கூலி மிகச் சிறந்ததாகும்.”"},{"id":75,"translation":"(நபியே!) வானவர்கள் அர்ஷை சுற்றிலும் சூழ்ந்திருப்பவர்களாக இருப்பதை நீர் பார்ப்பீர். அவர்கள் தங்கள் இறைவனின் புகழை துதிப்பார்கள். இன்னும், அவர்களுக்கு மத்தியில் சத்தியமான முறையில் (மிக நீதமாக) தீர்ப்பளிக்கப்படும். இன்னும், அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று கூறப்படும்."}]},{"id":40,"verses":[{"id":1,"translation":"மிகைத்தவனும் மகா ஞானவானுமான அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது)."},{"id":2,"translation":"மிகைத்தவனும் நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது)."},{"id":3,"translation":"(அவன்) பாவங்களை மன்னிப்பவன், (அடியார்கள் பாவங்களைவிட்டு விலகி) திருந்தி மன்னிப்புக் கோருதலை அங்கீகரிப்பவன், (திருந்தாத பாவிகளை) தண்டிப்பதில் கடுமையானவன், (நல்லவர்கள் மீது) அருளுடையவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் பக்கமே மீளுதல் இருக்கிறது."},{"id":4,"translation":"நிராகரித்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் விவாதம் செய்ய மாட்டார்கள். ஆகவே, (நபியே) நகரங்களில் அவர்கள் (சுகமாக) சுற்றித்திரிவது உம்மை மயக்கிவிட வேண்டாம்."},{"id":5,"translation":"இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் அவர்களுக்குப் பின்னர் வந்த (ஆது, ஸமூது, ஃபிர்அவ்ன் இன்னும் பல) குழுக்களும் (தூதர்களை) பொய்ப்பித்தனர். எல்லா சமுதாயத்தினரும் தங்களது தூதரை தண்டிப்பதற்கு(ம் கொல்வதற்கும்) உறுதிபூண்டார்கள். இன்னும், அசத்தியத்தைக் கொண்டு (சத்தியத்தில்) தர்க்கம் செய்தனர், அதன் மூலம் சத்தியத்தை அழிப்பதற்காக. ஆகவே, நான் அவர்களை (எனது தண்டனையைக் கொண்டு) பிடித்தேன். ஆக, எனது தண்டனை எப்படி இருந்தது?"},{"id":6,"translation":"இவ்வாறுதான் நிராகரித்தவர்கள் மீது – “நிச்சயமாக அவர்கள் நரகவாசிகள்” என்று - உமது இறைவனின் வாக்கு உறுதியாகிவிட்டது."},{"id":7,"translation":"அர்ஷை சுமப்பவர்களும் அதைச் சுற்றி இருப்பவர்களும் தங்கள் இறைவனின் புகழை துதிக்கிறார்கள். இன்னும், அவனை நம்பிக்கை கொள்கிறார்கள். மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்காக பாவமன்னிப்புக் கோருகிறார்கள், “எங்கள் இறைவா! எல்லாவற்றையும் நீ கருணையாலும் கல்வியாலும் விசாலமடைந்து இருக்கின்றாய். ஆகவே, (இணைவைப்பு, நிராகரிப்பு, இன்னும் பாவங்களை விட்டு) திருந்தி, உன் பக்கம் திரும்பி, உனது மார்க்கத்தை பின்பற்றியவர்களை நீ மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் தண்டனையை விட்டு பாதுகாப்பாயாக!”"},{"id":8,"translation":"எங்கள் இறைவா! இன்னும் அவர்களை அத்ன் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக! அதை நீ அவர்களுக்கு வாக்களித்திருக்கிறாய். இன்னும், அவர்களின் பெற்றோர்கள், அவர்களின் மனைவிகள், அவர்களின் சந்ததிகளில் நல்லவர்களாக இருந்தவர்கள் அனைவரையும் (சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வாயாக)! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான்."},{"id":9,"translation":"இன்னும், அவர்களை தீமைகளிலிருந்து (தண்டனைகளிலிருந்து) பாதுகாப்பாயாக! அன்றைய தினம் எவரை நீ தண்டனைகளிலிருந்து பாதுகாப்பாயோ திட்டமாக அவர் மீது நீ கருணை புரிந்துவிட்டாய். அதுதான் மகத்தான நற்பாக்கியமாகும்."},{"id":10,"translation":"நிச்சயமாக நிராகரிப்பவர்கள் (நரகத்தில்) சப்தமிட்டு அழைக்கப்படுவார்கள்: “நீங்கள் உங்களை கோபிப்பதை விட அல்லாஹ் (உங்களை) கோபிப்பது மிகப் பெரியதாகும். நீங்கள் நம்பிக்கை கொள்வதற்கு அழைக்கப்பட்டபோது (அதை) நிராகரித்தீர்கள்.”"},{"id":11,"translation":"அவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! நீ எங்களுக்கு இருமுறை மரணத்தைக் கொடுத்தாய். இன்னும், இருமுறை எங்களுக்கு வாழ்க்கையைக் கொடுத்தாய். ஆக, நாங்கள் எங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டோம். ஆகவே, (நரகத்தில் இருந்து) வெளியேறுவதற்கு ஏதேனும் வழி உண்டா?”"},{"id":12,"translation":"இது ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், அவன் ஒருவன் மட்டும் அழைக்கப்பட்டால் நீங்கள் (அவனை ஏற்காமல்) நிராகரித்தீர்கள். அவனுக்கு இணைவைத்து வணங்கப்பட்டால் (அவனை) நம்பிக்கை கொள்கிறீர்கள். ஆக, எல்லா அதிகாரமும் (ஆட்சியும்) மிக உயர்ந்தவனும் மிகப் பெரியவனுமாகிய அல்லாஹ்வுக்கே உரியது. (அப்படியிருக்க அவனல்லாதவர்களை எப்படி வணங்க முடியும்.)"},{"id":13,"translation":"அவன்தான் தனது அத்தாட்சிகளை உங்களுக்கு காண்பிக்கிறான். இன்னும், வானத்திலிருந்து உங்களுக்கு உணவை (-வாழ்வாதாரத்தின் மூலதனமாகிய மழையை) இறக்குகிறான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புகிறவர்களைத் தவிர (இதன் மூலம்) நல்லுபதேசம் பெற மாட்டார்கள்."},{"id":14,"translation":"ஆகவே, அல்லாஹ்வை - அவனுக்கு மார்க்கத்தை (-வழிபாடுகளை) பரிசுத்தமாக்கியவர்களாக - அழையுங்கள்! (இணைவைக்கின்ற) நிராகரிப்பாளர்கள் (அதை) வெறுத்தாலும் சரியே!"},{"id":15,"translation":"அவன் (அடியார்களின்) அந்தஸ்துகளை உயர்த்தக் கூடியவன், அர்ஷுடையவன். தனது அடியார்களில் தான் நாடியவர் மீது தனது கட்டளைகளை உள்ளடக்கிய வஹ்யை இறக்குவான் (உலகத்தார் எல்லோரும்) சந்திக்கின்ற (மறுமை) நாளைப் பற்றி (மக்களை) அவர் எச்சரிப்பதற்காக."},{"id":16,"translation":"அந்நாளில் அவர்கள் (கப்ருகளில் இருந்து) வெளிப்பட்டு நிற்பார்கள். அவர்களில் எதுவும் அல்லாஹ்வின் முன்னால் மறைந்துவிடாது. “இன்று ஆட்சி யாருக்கு உரியது?” (என்று அவன் கேட்பான். பதில் அளிப்பவர் யாரும் இருக்க மாட்டார். அவனே பதில் அளிப்பான்:) “(நிகரற்ற) ஒருவனாகிய, (அனைவரையும்) அடக்கி ஆளுகிறவனாகிய அல்லாஹ்விற்கே உரியது ஆட்சி அனைத்தும்.”"},{"id":17,"translation":"இன்று எல்லா ஆன்மாவுக்கும் அவை செய்ததற்கு பதிலாக கூலி கொடுக்கப்படும். இன்று (யார் மீதும்) அறவே அநியாயம் இருக்காது. நிச்சயமாக அல்லாஹ் விசாரிப்பதில் மிக விரைவானவன் ஆவான்."},{"id":18,"translation":"இன்னும், நெருங்கி வரக்கூடிய (மறுமை) நாளைப் பற்றி அவர்களை நீர் எச்சரிப்பீராக! உள்ளங்கள் (பயத்தால்) தொண்டைகளுக்கு அருகில் வந்துவிடும்போது அவர்கள் துக்கம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அந்த அநியாயக்காரர்களுக்கு நண்பர் எவரும் இருக்கமாட்டார். (பரிந்துரை) ஏற்றுக்கொள்ளப்படும்படியான பரிந்துரையாளரும் இருக்க மாட்டார்."},{"id":19,"translation":"கண்களின் மோசடிகளையும் நெஞ்சங்கள் மறைப்பதையும் அவன் நன்கறிவான்."},{"id":20,"translation":"இன்னும், அல்லாஹ் உண்மையை (நீதமான தீர்ப்பை)த்தான் தீர்ப்பளிக்கிறான். அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ (-வணங்குகிறார்களோ) அவர்கள் எதையும் தீர்ப்பளிக்க மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":21,"translation":"இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட (உடல்) வலிமையால் மிக பலசாலிகளாகவும் பூமியில் (-மாடமாளிகைகள், தொழிற்சாலைகள் போன்ற) அடையாளங்களால் மிக அதிகமானவர்களாகவும் இருந்தார்கள். ஆக, அவர்களின் பாவங்களினால் அல்லாஹ் அவர்களை தண்டித்தான். அல்லாஹ்விடமிருந்து அவர்களை பாதுகாப்பவர் எவரும் இருக்கவில்லை."},{"id":22,"translation":"அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் - அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்து கொண்டிருந்தார்கள். ஆக, அவர்கள் நிராகரித்தார்கள். ஆகவே, அல்லாஹ் அவர்களை தண்டித்தான். நிச்சயமாக அவன் வலிமை மிக்கவன், தண்டிப்பதில் கடுமையானவன்."},{"id":23,"translation":"திட்டவட்டமாக மூஸாவை நமது அத்தாட்சிகளுடன் இன்னும் தெளிவான ஆதாரத்துடன் அனுப்பினோம்,"},{"id":24,"translation":"ஃபிர்அவ்ன், ஹாமான் இன்னும் காரூனிடம் (மூஸாவை அனுப்பினோம்). ஆக, அவர்கள் (அவரை) சூனியக்காரர், பெரும் பொய்யர் என்று கூறினார்கள்."},{"id":25,"translation":"ஆக, அவர் நம்மிடமிருந்து சத்தியத்தை அவர்களிடம் கொண்டுவந்தபோது அவர்கள் கூறினார்கள்: “இவருடன் நம்பிக்கை கொண்டவர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று விடுங்கள்! அவர்களின் பெண்(பிள்ளை)களை வாழவிடுங்கள்!” (இத்தகைய அநியாயம் செய்கிற) நிராகரிப்பவர்களின் சூழ்ச்சிகள் (எல்லாம்) வழிகேட்டில் தவிர இல்லை."},{"id":26,"translation":"இன்னும், ஃபிர்அவ்ன் கூறினான்: “என்னை விடுங்கள், நான் மூஸாவை கொன்று விடுகிறேன். அவர் தன் இறைவனை (உதவிக்கு) அழைக்கட்டும். அவர் உங்கள் மார்க்கத்தை மாற்றிவிடுவார்; அல்லது, இந்த பூமியில் குழப்பத்தை உருவாக்கி விடுவார் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.”"},{"id":27,"translation":"மூஸா கூறினார்: “நிச்சயமாக நான் எனது இறைவனிடம், இன்னும் உங்கள் இறைவனிடம் விசாரணை நாளை நம்பிக்கை கொள்ளாமல் பெருமை அடிக்கிற எல்லோரை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.”"},{"id":28,"translation":"ஃபிர்அவ்னுடைய குடும்பத்தாரில் உள்ள நம்பிக்கை கொண்ட ஓர் ஆடவர் தனது நம்பிக்கையை மறைத்தவராகக் கூறினார்: “ஒரு மனிதரை - அல்லாஹ்தான் என் இறைவன் என்று அவர் கூறியதற்காக - நீங்கள் கொல்கிறீர்களா? அவர் திட்டமாக தெளிவான அத்தாட்சிகளை உங்கள் இறைவனிடமிருந்து உங்களிடம் கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய்யராக இருந்தால் அவருடைய பொய் அவருக்குத்தான் கேடாக அமையும். அவர் உண்மையாளராக இருந்தால் அவர் எச்சரிக்கின்ற சில (தண்டனை) உங்களை வந்தடையும். நிச்சயமாக எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் பெரும் பொய்யராகவும் இருக்கிறாரோ அவரை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்.”"},{"id":29,"translation":"“எனது மக்களே! உங்களுக்கு ஆட்சி இன்று இருக்கிறது. நீங்கள் பூமியில் மிகைத்திருக்கிறீர்கள். அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து - அது நம்மிடம் வந்தால் - யார் நமக்கு உதவுவார்?” (இவ்வாறு அவர் கூறினார்.) (அதற்கு) ஃபிர்அவ்ன் கூறினான்: “நான் (நல்லதாகக்) கருதுவதைத் தவிர உங்களுக்கு நான் காண்பிக்க மாட்டேன். இன்னும், நேரான பாதையைத் தவிர உங்களுக்கு நான் வழிகாட்ட மாட்டேன்.”"},{"id":30,"translation":"இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (நபிமார்களுக்கு எதிராக ஒன்றுகூடிய) குழுக்களுடைய (தண்டனை) நாளை போன்றதை (-அது போன்ற ஒரு தண்டனை உடைய நாள் வருவதை)ப் பயப்படுகிறேன்.”"},{"id":31,"translation":"நூஹுடைய மக்கள், ஆது, ஸமூது, இன்னும் அவர்களுக்குப் பின்னர் வந்தவர்களுடைய வழமையைப் போன்றுதான் (உங்கள் வழமையும் இருக்கிறது. ஆகவே, அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்). அல்லாஹ் அடியார்களுக்கு அநியாயத்தை நாடுகிறவனாக இல்லை."},{"id":32,"translation":"“இன்னும், என் மக்களே! நிச்சயமாக நான் உங்கள் மீது (மக்கள் ஒருவரை ஒருவர்) கூவி அழைக்கின்ற (மறுமை) நாளைப் பயப்படுகிறேன்.”"},{"id":33,"translation":"அந்நாளில் நீங்கள் புறமுதுகிட்டவர்களாக திரும்பி ஓடுவீர்கள். அல்லாஹ்விடமிருந்து (உங்களை) பாதுகாப்பவர் எவரும் இருக்க மாட்டார். யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாரும் இல்லை."},{"id":34,"translation":"திட்டவட்டமாக இதற்கு முன்னர் உங்களிடம் (பல) தெளிவான அத்தாட்சிகளுடன் யூஸுஃப் வந்தார். ஆக, அவர் உங்களிடம் எதைக் கொண்டுவந்தாரோ அதில் நீங்கள் சந்தேகத்தில்தான் தொடர்ந்து இருந்தீர்கள். இறுதியாக, அவர் இறந்துவிட்டபோது அவருக்கு பின்னர் ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பவே மாட்டான் என்று கூறினீர்கள். இவ்வாறுதான், எவர் எல்லை மீறி பாவம் செய்பவராகவும் சந்தேகம் கொள்பவராகவும் இருப்பாரோ அவரை அல்லாஹ் வழிகெடுப்பான்."},{"id":35,"translation":"இவர்கள் தங்களுக்கு வந்த ஆதாரமின்றி அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்கள். அல்லாஹ்விடமும் நம்பிக்கையாளர்களிடமும் (இவர்களது செயல்) மிகப் பெரிய கோபத்திற்குரியது. இவ்வாறுதான் பெருமை அடிப்பவர்கள், அநியாயக்காரர்கள் எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் முத்திரை இடுகிறான்."},{"id":36,"translation":"ஃபிர்அவ்ன் கூறினான்: “ஹாமானே! எனக்காக ஒரு (பெரிய, உயரமான) கோபுரத்தைக் கட்டு. நான் அந்த வாசல்களுக்கு சென்றடைய வேண்டும்.”"},{"id":37,"translation":"“(அதாவது,) வானங்களின் வாசல்களுக்கு (நான் சென்றடைய வேண்டும்). அப்படி ஏறிவிட்டால் நான் மூஸாவின் கடவுளை எட்டிப்பார்த்துவிடுவேன். இன்னும், நிச்சயமாக நான் அவரை பொய்யராகவே கருதுகிறேன்.” இவ்வாறுதான், ஃபிர்அவ்னுக்கு அவனது தீய செயல் அலங்காரமாக்கப்பட்டது. இன்னும், அவன் நேரான பாதையை விட்டு தடுக்கப்பட்டான். ஃபிர்அவ்னின் சூழ்ச்சி அழிவில் தவிர இல்லை."},{"id":38,"translation":"இன்னும், நம்பிக்கை கொண்டவர் கூறினார்: “என் மக்களே! என்னை பின்பற்றுங்கள்! நான் உங்களுக்கு நேரான பாதையை வழிகாட்டுகிறேன்.”"},{"id":39,"translation":"“என் மக்களே! இந்த உலக வாழ்க்கை எல்லாம் அற்ப இன்பம்தான். நிச்சயமாக மறுமைதான் நிரந்தரமான இல்லமாகும்.”"},{"id":40,"translation":"“யார் ஒரு தீமையை செய்வாரோ அவர் அது போன்றதே தவிர கூலி கொடுக்கப்பட மாட்டார். ஆண்கள் அல்லது பெண்களில் யார் ஒருவர் அவர் நம்பிக்கையாளராக இருக்கின்ற நிலையில் நன்மையை செய்வாரோ அவர்கள் சொர்க்கத்தில் பிரவேசிப்பார்கள். அதில் அவர்கள் கணக்கின்றி (உணவு, குடிபானம், இன்னும் பலவிதமான) அருட்கொடைகள் வழங்கப்படுவார்கள்.”"},{"id":41,"translation":"“என் மக்களே! எனக்கு என்ன நேர்ந்தது (நீங்கள் நரகத்தை விட்டு) பாதுகாப்பு பெறுவதற்கு நான் உங்களை அழைக்கிறேன். நீங்களோ என்னை நரகத்தின் பக்கம் அழைக்கிறீர்கள்.”"},{"id":42,"translation":"“நான் அல்லாஹ்வை நிராகரிப்பதற்கும் எனக்கு அறிவில்லாத ஒன்றை அவனுக்கு நான் இணைவைப்பதற்கும் நீங்கள் என்னை அழைக்கிறீர்கள். நானோ உங்களை மிகைத்தவனின் பக்கம், மகா மன்னிப்பாளனின் பக்கம் அழைக்கிறேன்.”"},{"id":43,"translation":"“கண்டிப்பாக, நீங்கள் என்னை எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அதற்கு இவ்வுலகத்திலும் மறுமையிலும் (அங்கீகரிக்கப்பட்ட) பிரார்த்தனை ஏதும் இல்லை. (-நீங்கள் கேட்கிற எந்த பிரார்த்தனையும் அது செவியுறாது, செவியுறவும் முடியாது.) நிச்சயமாக நாம் திருப்பப்படுவது அல்லாஹ்வின் பக்கம்தான், நிச்சயமாக எல்லை மீறி பாவம் செய்பவர்கள்தான் நரகவாசிகள்.”"},{"id":44,"translation":"“ஆக, நான் உங்களுக்கு கூறுவதை நீங்கள் விரைவில் நினைவு கூர்வீர்கள். என் காரியத்தை நான் அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.”"},{"id":45,"translation":"ஆக, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளை விட்டு அல்லாஹ் அவரை பாதுகாத்தான். இன்னும், ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனை சூழ்ந்துகொண்டது."},{"id":46,"translation":"நரகம், அதில் காலையிலும் மாலையிலும் அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். (இது அவர்களுக்கு மண்ணறையில் நடக்கும் தண்டனையாகும்.) இன்னும், மறுமை நிகழ்கின்ற நாளிலோ, “ஃபிர்அவ்னின் குடும்பத்தார்களை கடுமையான தண்டனையில் புகுத்துங்கள்!” (என்று சொல்லப்படும்)."},{"id":47,"translation":"இன்னும், அவர்கள் நரகத்தில் ஒருவருக்கொருவர் வாய்ச் சண்டை செய்யும்போது, (வழிகெட்ட) பலவீனர்கள் பெருமை அடித்த (தங்கள் தலை)வர்களை நோக்கி கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் உங்களைப் பின்பற்றுபவர்களாக இருந்தோம். ஆகவே, நரகத்திலிருந்து ஒரு பகுதி (சிறிது தண்டனை)யை நீங்கள் எங்களை விட்டு தடுப்பீர்களா?”"},{"id":48,"translation":"பெருமை அடித்த (தலை)வர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாம் எல்லோரும் அதில்தான் தங்கி இருப்போம். நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு மத்தியில் (இறுதி) தீர்ப்பளித்துவிட்டான்.”"},{"id":49,"translation":"நரகத்தில் உள்ளவர்கள் நரகத்தின் காவலாளிகளுக்குக் கூறுவார்கள்: “உங்கள் இறைவனை அழையுங்கள்! அவன் எங்களை விட்டும் ஒரு நாளாவது தண்டனையை இலகுவாக்குவான்.”"},{"id":50,"translation":"(அந்த காவலாளிகள்) கூறுவார்கள்: “தெளிவான அத்தாட்சிகளுடன் உங்களிடம் உங்கள் தூதர்கள் வந்திருக்கவில்லையா?” அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “ஏன் இல்லை! (கண்டிப்பாக வந்தார்கள்.)” அவர்கள் கூறுவார்கள்: “(உங்கள் அனைவருக்காகவும்) நீங்கள் பிரார்த்தனை கேளுங்கள்!” காஃபிர்கள் – நிராகரிப்பாளர்களின் பிரார்த்தனை (எந்த பலனுமளிக்காது. ஏனெனில், அவர்களின் பிரார்த்தனை) வீணான வழிகேட்டில்தான் இருக்கிறது."},{"id":51,"translation":"நிச்சயமாக நாம் நமது தூதர்களுக்கும் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் இவ்வுலக வாழ்க்கையிலும் சாட்சிகள் (சாட்சி சொல்ல) நிற்கின்ற (மறுமை) நாளிலும் உதவுவோம்."},{"id":52,"translation":"அந்நாளில் அநியாயக்காரர்களுக்கு அவர்கள் வருத்தங்கள் தெரிவிப்பது பலனளிக்காது. அவர்களுக்கு சாபம்தான் உண்டாகும். இன்னும், அவர்களுக்கு (தங்குமிடம் தண்டனைகள் நிறைந்த நரகமாகிய) கெட்ட இல்லமாகும்."},{"id":53,"translation":"திட்டவட்டமாக நாம் மூஸாவிற்கு நேர்வழியைக் கொடுத்தோம். இன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளை அந்த வேதத்திற்கு வாரிசுகளாக ஆக்கினோம்."},{"id":54,"translation":"(அந்த வேதம்) நேர்வழிகாட்டியும் நிறைவான அறிவுடையவர்களுக்கு நல்லுபதேசமும் ஆகும்."},{"id":55,"translation":"ஆக, (சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! இன்னும், உமது பாவங்களுக்காக மன்னிப்புக் கேட்பீராக! இன்னும், மாலையிலும் காலையிலும் உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக!"},{"id":56,"translation":"நிச்சயமாக எவர்கள் தங்களிடம் எவ்வித ஆதாரமும் வராமல் இருக்க அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் தர்க்கம் செய்கிறார்களோ, அவர்களின் உள்ளங்களில் பெருமையைத் தவிர இல்லை. அவர்கள் அந்த பெருமையை அடையவும் முடியாது. ஆகவே, அல்லாஹ்விடம் நீர் பாதுகாப்புத் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்."},{"id":57,"translation":"மனிதர்களை படைப்பதைவிட வானங்களையும் பூமியையும் படைப்பதுதான் மிகப் பெரியது. என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (எல்லா படைப்புகளையும் படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் என்பதை) அறியமாட்டார்கள்."},{"id":58,"translation":"குருடரும் பார்வையுள்ளவரும் சமமாக மாட்டார்கள். நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களும் கெட்டவர்களும் சமமாக மாட்டார்கள். நீங்கள் மிகக் குறைவாகத்தான் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்."},{"id":59,"translation":"நிச்சயமாக மறுமை வந்தே தீரும். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் மனிதர்களில் அதிகமானவர்கள் (அதை) நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்."},{"id":60,"translation":"இன்னும், உங்கள் இறைவன் கூறுகிறான்: “என்னிடம் பிரார்த்தியுங்கள்! நான் உங்களுக்கு (உங்கள் பிரார்த்தனையை) அங்கீகரிப்பேன். நிச்சயமாக எனது வணக்க வழிபாடுகளை விட்டு பெருமை அடிப்பவர்கள் சிறுமைப்பட்டவர்களாக விரைவில் நரகத்தில் நுழைவார்கள்.”"},{"id":61,"translation":"அல்லாஹ்தான் உங்களுக்கு இரவை - அதில் நீங்கள் ஓய்வு எடுப்பதற்காகவும்; - இன்னும், பகலை வெளிச்சமுள்ளதாகவும் ஆக்கினான். நிச்சயமாக அல்லாஹ் மக்கள் மீது அருளுடையவன் ஆவான். என்றாலும், மனிதர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்த மாட்டார்கள்."},{"id":62,"translation":"(இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் உங்கள் இறைவன், எல்லாவற்றையும் படைத்தவன். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆக, நீங்கள் எவ்வாறு (அவனை வணங்குவதிலிருந்து) திருப்பப்படுகிறீர்கள்."},{"id":63,"translation":"இவ்வாறுதான் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுத்துக் கொண்டிருந்தவர்கள் (அல்லாஹ்வை வணங்குவதை விட்டு) திருப்பப்படுகிறார்கள்."},{"id":64,"translation":"அல்லாஹ்தான் உங்களுக்கு பூமியை (நீங்கள்) வசிப்பதற்கு வசதியாகவும் வானத்தை ஒரு கட்டிடமாகவும் அமைத்தான். இன்னும், அவன்தான் உங்களை உருவமைத்தான். ஆக, (மனிதர்களாகிய) உங்கள் உருவங்களை (ஏனைய படைப்புகளை பார்க்கிலும்) அழகாக்கினான். இன்னும், நல்ல உணவுகளில் இருந்து உங்களுக்கு உணவளித்தான். (இவற்றை எல்லாம் செய்த) அந்த அல்லாஹ்தான் (நீங்கள் வணங்கவேண்டிய) உங்கள் இறைவன் ஆவான். ஆக, அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான்."},{"id":65,"translation":"அவன்தான் என்றும் உயிரோடு இருப்பவன். (வணங்கத்தகுதியான) இறைவன் அவனைத் தவிர அறவே இல்லை. ஆகவே, மார்க்கத்தை (-வழிபாடுகளை) அவனுக்கு தூய்மைப்படுத்தியவர்களாக அவனிடமே நீங்கள் பிரார்த்தியுங்கள்! அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரியது."},{"id":66,"translation":"(நபியே) நீர் கூறுவீராக! “என் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகள் வந்துவிட்டபோது, அல்லாஹ்வை அன்றி நீங்கள் அழைப்பவர்களை நான் வணங்குவதற்கு நிச்சயமாக நான் தடுக்கப்பட்டு விட்டேன். இன்னும், அகிலங்களின் இறைவனுக்கு நான் முற்றிலும் பணிந்து நடக்கவேண்டும் என்று நான் கட்டளை இடப்பட்டுள்ளேன்.”"},{"id":67,"translation":"அவன்தான் உங்களை (முதன் முதலில்) மண்ணிலிருந்தும்; பிறகு, இந்திரியத்திலிருந்தும்; பிறகு, இரத்தக் கட்டியிலிருந்தும் படைத்தான். பிறகு, அவன் உங்களை குழந்தைகளாக வெளிக்கொண்டு வருகிறான். பிறகு, நீங்கள் உங்கள் (வாலிபத்தின்) வலிமையை அடைவதற்காகவும்; பிறகு, நீங்கள் வயோதிகர்களாக ஆகுவதற்காகவும் (அவன் உங்களுக்கு ஆயுள் காலத்தை நீட்டுகிறான்). இதற்கு முன்னர் உங்களில் உயிர் கைப்பற்றப்படுபவரும் உண்டு. இன்னும், ஒரு குறிப்பிட்ட தவணையை நீங்கள் அடைவதற்காகவும் நீங்கள் சிந்தித்து புரிவதற்காகவும் (அவன் உங்களை இவ்வாறு படைத்தது மட்டுமல்லாமல், தான் படைத்த விதத்தையும் உங்களுக்கு விவரிக்கிறான்)."},{"id":68,"translation":"அவன்தான் உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான். ஆக, அவன் ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால் அவன் அதற்கு கூறுவதெல்லாம், “ஆகு” என்றுதான். உடனே அது ஆகிவிடும்."},{"id":69,"translation":"(நபியே!) அல்லாஹ்வின் வசனங்களில் தர்க்கம் செய்பவர்களை - அவர்கள் எவ்வாறு (சத்தியத்தில் இருந்து) திருப்பப்படுகிறார்கள் என்று - நீர் பார்க்கவில்லையா?"},{"id":70,"translation":"எவர்கள் வேதத்தையும் நமது தூதர்களை நாம் எதைக் கொண்டு அனுப்பினோமோ அதையும் பொய்ப்பித்தார்களோ அவர்கள் விரைவில் (அல்லாஹ்வின் தண்டனையை) அறிந்து கொள்வார்கள்."},{"id":71,"translation":"அப்போது, இரும்பு வளையங்களும் சங்கிலிகளும் அவர்களின் (கைகள், கால்கள் இன்னும்) கழுத்துகளில் போடப்பட்டு (நரகத்தை நோக்கி) இழுக்கப்படுவார்கள்."},{"id":72,"translation":"கொதிக்கின்ற நீரில் (அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்). பிறகு நரக நெருப்பில் அவர்கள் எரிக்கப்படுவார்கள்."},{"id":73,"translation":"பிறகு, நீங்கள் இணைவைத்து வணங்கிக் கொண்டிருந்தவை எங்கே? என்று அவர்களிடம் கூறப்படும்."},{"id":74,"translation":"அல்லாஹ்வை அன்றி (நீங்கள் அவர்களை வணங்கினீர்களே!) அவர்கள் கூறுவார்கள்: “அவை எங்களை விட்டும் தவறிவிட்டன. மாறாக, இதற்கு முன்னர் நாங்கள் எதையும் வணங்குபவர்களாக இருக்கவில்லையே!” (என்றும் பொய் கூறுவார்கள்). இவ்வாறுதான், அல்லாஹ் நிராகரிப்பாளர்களை வழிகெடுக்கிறான்."},{"id":75,"translation":"இது (-அல்லாஹ் உங்களை தண்டிப்பது ஏனெனில்), பூமியில் அநியாயத்தை (பாவங்களை)க் கொண்டு நீங்கள் (அளவு கடந்து) மகிழ்ச்சி அடைபவர்களாக இருந்த காரணத்தாலும்; மமதையும் ஆணவமும் கொள்பவர்களாக நீங்கள் இருந்த காரணத்தாலும் ஆகும்."},{"id":76,"translation":"நரகத்தின் வாசல்களில் நீங்கள் நுழையுங்கள்! அதில் நிரந்தரமானவர்களாக தங்கிவிடுங்கள். ஆக, பெருமை அடிப்பவர்களின் தங்குமிடம் மிகக் கெட்டது."},{"id":77,"translation":"ஆகவே, (நபியே! சகிப்புடன் மன உறுதியுடன்) பொறுமையாக இருப்பீராக! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே! ஆக, ஒன்று, அவர்களை நாம் எச்சரித்தவற்றில் சிலவற்றை உமக்கு காண்பிப்போம். அல்லது, (அதற்கு முன்னர்) உம்மை உயிர் கைப்பற்றுவோம். ஆக, (பின்னர்) நம் பக்கம்தான் அவர்கள் திரும்பக் கொண்டு வரப்படுவார்கள். (அப்போது அவர்களை தண்டிப்போம்.)"},{"id":78,"translation":"திட்டவட்டமாக உமக்கு முன்னர் பல தூதர்களை நாம் அனுப்பினோம். அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரித்தோம். இன்னும், அவர்களில் சிலரை(ப் பற்றிய வரலாறுகளை) நாம் உமக்கு விவரிக்கவில்லை. அல்லாஹ்வின் அனுமதி கொண்டே தவிர ஓர் அத்தாட்சியைக் கொண்டுவருவது எந்த ஒரு தூதருக்கும் சாத்தியமானது அல்ல. ஆக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டால் நீதமாக தீர்ப்பளிக்கப்படும். அப்போது பொய்யர்கள் நஷ்டமடைவார்கள்."},{"id":79,"translation":"அல்லாஹ்தான் உங்களுக்காக கால்நடைகளை, - அவற்றில் (சிலவற்றின் மீது) நீங்கள் வாகனிப்பதற்காக - படைத்தான். இன்னும், அவற்றில் (சிலவற்றின் மாமிசங்களை) நீங்கள் புசிக்கிறீர்கள்."},{"id":80,"translation":"இன்னும், உங்களுக்கு அவற்றில் பல பலன்கள் உள்ளன. இன்னும், உங்கள் நெஞ்சங்களில் உள்ள ஓர் ஆசையை அதன் மூலம் நீங்கள் அடைவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த கால்நடைகளைப் படைத்தான்). இன்னும், அவற்றின் மீதும் கப்பலின் மீதும் நீங்கள் சுமந்து செல்லப்படுகிறீர்கள். (-நீங்கள் அவற்றில் பயணம் செய்கிறீர்கள்.)"},{"id":81,"translation":"இன்னும், அவன் உங்களுக்கு தனது அத்தாட்சிகளைக் காண்பிக்கிறான். ஆக, அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் எதை நீங்கள் மறுப்பீர்கள்?."},{"id":82,"translation":"ஆக, இவர்கள் பூமியில் சுற்றுப் பயணம் செய்யவில்லையா? (அப்படி செய்திருந்தால்) தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்த்திருப்பார்களே! அவர்கள் இவர்களை விட அதிகமாகவும், வலிமையால் மிக பலசாலிகளாகவும், பூமியில் அடையாளங்களால் (தொழிற்சாலைகள் இன்னும் மாட மாளிகைகளால்) அதிகமாகவும் இருந்தனர். ஆனால், அவர்கள் செய்து கொண்டிருந்தது (-அவர்களின் பலமான கோட்டைகள்) அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையை) தடுக்கவில்லை."},{"id":83,"translation":"ஆக, அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தபோது, அவர்கள் தங்களிடம் இருந்த கல்வித் திறமைகளைக் கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ல்லாஹ்வின் தண்டனையான)து அவர்களை சூழ்ந்துவிட்டது."},{"id":84,"translation":"ஆக, அவர்கள் நமது தண்டனை (இறங்கிய சமயத்தில் நமது வலிமை)யைப் பார்த்தபோது “நாங்கள் அல்லாஹ்வை - அவன் ஒருவனை மட்டும் - நம்பிக்கை கொண்டோம்; இன்னும், நாங்கள் எதை (அல்லாஹ்விற்கு) இணைவைப்பவர்களாக இருந்தோமோ அதை நிராகரித்து விட்டோம்” என்று கூறினார்கள்."},{"id":85,"translation":"ஆக, அவர்கள் நமது தண்டனையைப் பார்த்தபோது அவர்கள் நம்பிக்கை கொண்டது அவர்களுக்கு பலன் தரக்கூடியதாக இருக்கவில்லை. அவனது அடியார்கள் விஷயத்தில் அல்லாஹ்வின் நடைமுறை எது (முன்னர்) சென்றதோ அதே நடைமுறைதான் (இவர்களுடனும் பின்பற்றப்படும்). அப்போது நிராகரிப்பாளர்கள் நிச்சயம் நஷ்டமடைவார்கள்."}]},{"id":41,"verses":[{"id":1,"translation":"ஹா மீம்."},{"id":2,"translation":"பேரருளாளன் பேரன்பாளனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது)."},{"id":3,"translation":"(இது) அரபி மொழியில் உள்ள (போற்றத் தகுந்த) குர்ஆன் என்னும் வேதமாகும். (அரபி மொழியை) அறிகின்ற மக்களுக்காக (அரபி மொழியில்) இதன் வசனங்கள் விவரிக்கப்பட்டன."},{"id":4,"translation":"(இந்த வேதம்) நற்செய்தி கூறக்கூடியதும், அச்சமூட்டி எச்சரிக்கக் கூடியதும் ஆகும். ஆக, அவர்களில் அதிகமானோர் (இதை) புறக்கணித்தனர். ஆக, அவர்கள் (இதன் நல்லுபதேசங்களை) செவியுறுவதில்லை."},{"id":5,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கிறீரோ அதில் இருந்து (எங்களைத் தடுக்கக்கூடிய) திரைகளில்தான் எங்கள் உள்ளங்கள் இருக்கின்றன. இன்னும், எங்கள் செவிகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. எங்களுக்கு மத்தியிலும் உமக்கு மத்தியிலும் (உமது உபதேசத்தை நாங்கள் செவியுறாமல் எங்களை தடுக்கக்கூடிய) ஒரு திரையும் இருக்கிறது. ஆகவே, நீர் (விரும்பியதை) செய்வீராக! நிச்சயமாக நாங்கள் (விரும்புவதை நாங்கள்) செய்வோம்.”"},{"id":6,"translation":"(நபியே) கூறுவீராக! “நான் எல்லாம் உங்களைப் போன்ற ஒரு மனிதர்தான். எனக்கு வஹ்யி அறிவிக்கப்படுவது என்னவென்றால்: “(நீங்கள் வணங்கத் தகுதியான) உங்கள் கடவுள் எல்லாம் ஒரே ஒரு கடவுள்தான்.” ஆகவே, அவன் பக்கம் (உங்களை சேர்த்துவைக்கின்ற நேரான பாதையில்) நீங்கள் நேர்வழி செல்லுங்கள்! இன்னும், அவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! இணைவைப்பவர்களுக்கு நாசம்தான்.”"},{"id":7,"translation":"அவர்கள் (செல்வங்களில் அவற்றுக்குரிய) ஸகாத்தை கொடுப்பதில்லை. இன்னும், அவர்கள் மறுமையை நிராகரிக்கிறார்கள்."},{"id":8,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தார்களோ - அவர்களுக்கு முடிவுறாத வெகுமதிகள் உண்டு."},{"id":9,"translation":"(நபியே!) கூறுவீராக! “பூமியை இரண்டு நாள்களில் படைத்தவனை நீங்கள் நிராகரிக்கிறீர்களா? இன்னும், அவனுக்கு இணைகளை ஏற்படுத்துகிறீர்களா? அவன் அகிலங்களின் இறைவன் ஆவான்.”"},{"id":10,"translation":"இன்னும், அவன் அதில் அதற்கு மேலாக மலைகளை ஏற்படுத்தினான். அதில், அருள்வளம் (-அபிவிருத்தி) செய்தான். அதன் உணவுகளை அதில் திட்டமிட்டு நிர்ணயித்தான். (இவை எல்லாம் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய பூரணமான) நான்கு நாட்களில் முடிந்தன. (பூமியையும் அதில் உள்ள படைப்புகளைப் பற்றியும்) விசாரிப்பவர்களுக்கு சரியான பதிலாக (இதைச் சொல்லுங்கள்)."},{"id":11,"translation":"பிறகு, அவன் வானத்திற்கு மேல் உயர்ந்தான். அது (தண்ணீரில் இருந்து வெளியேறும்) ஓர் ஆவியாக இருந்தது. ஆக, (அந்த ஆவியை ஒரு வானமாக அவன் ஆக்கினான். அந்த ஒரு வானத்தில் இருந்து ஏழு வானங்களைப் படைத்தான்.) அவன் அதற்கும் (-வானத்திற்கும்) பூமிக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் விருப்பத்துடன் அல்லது வெறுப்புடன் வாருங்கள் (-என் கட்டளைக்கு பணிந்து நடங்கள்! உங்களுக்குள் படைக்கப்பட்டதை வெளிப்படுத்துங்கள்.)!” அவை இரண்டும் கூறின: “நாங்கள் விருப்பமுள்ளவர்களாகவே வந்தோம் (உனக்கு கீழ்ப்படிந்து உனது கட்டளையை ஏற்று நடப்போம்.” ஆகவே, சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் இன்னும் அதனுள் அல்லாஹ் படைத்த மற்ற படைப்புகளையும் வானம் வெளிப்படுத்தியது. மலை, செடிகொடி, நதி, கடல், ஊர், கிராமம், பாலைவனம், காடுகள் என தன்னில் உள்ளவற்றை பூமி வெளிப்படுத்தியது.)"},{"id":12,"translation":"ஆக, அவன் அவற்றை ஏழு வானங்களாக (வியாழன், வெள்ளி ஆகிய) இரண்டு நாட்களில் (படைத்து) முடித்தான். இன்னும், ஒவ்வொரு வானத்திலும் அதன் காரியத்தையும் அவன் அறிவித்தான். கீழ் வானத்தை (நட்சத்திரங்கள் என்னும்) விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். இன்னும் (ஷைத்தான்கள் வானத்தின் பக்கம் ஏறுவதிலிருந்து வானப் பாதைகளை) பாதுகாப்பதற்காகவும் (நாம் நட்சத்திரங்களை அமைத்தோம்). இது, நன்கறிந்தவனுடைய, மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்."},{"id":13,"translation":"ஆக, அவர்கள் புறக்கணித்தால் (நபியே!) நீர் கூறுவீராக! “ஆது, ஸமூது உடைய பேரழிவைப் போன்ற ஒரு பேரழிவை நான் உங்களுக்கு எச்சரிக்கிறேன்.”"},{"id":14,"translation":"அவர்களிடம் தூதர்கள் அவர்களுக்கு முன்னிருந்தும் அவர்களுக்கு பின்னிருந்தும் (ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து) வந்தார்கள். (இன்னும் அவர்கள் கூறினார்கள்:) “அல்லாஹ்வைத் தவிர (யாரையும் எதையும்) வணங்காதீர்கள்!” (இணைவைப்பாளர்கள்) கூறினார்கள்: “எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் (எங்களை நேர்வழிபடுத்த) வானவர்களை இறக்கி இருப்பான். ஆகவே, நீங்கள் எதைக் கொண்டு அனுப்பப்பட்டீர்களோ அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்பவர்கள் ஆவோம்.”"},{"id":15,"translation":"ஆக, ஆது சமுதாயம் பூமியில் அநியாயமாக பெருமை அடித்தனர். இன்னும், “எங்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலிகள் யார்” என்று கூறினார்கள். நிச்சயமாக அவர்களைப் படைத்த அல்லாஹ் அவர்களை விட ஆற்றல் மிகுந்த பலசாலியாவான் என்பதை இவர்கள் கவனிக்கவில்லையா? அவர்கள் நமது வசனங்களை மறுப்பவர்களாக இருந்தனர்."},{"id":16,"translation":"ஆகவே, கேவலமான தண்டனையை இவ்வுலகில் அவர்களுக்கு நாம் சுவைக்க வைப்பதற்காக, அவர்கள் மீது கடும் குளிர் காற்றை துரதிர்ஷ்டமான (தீமைகள் நிறைந்த) நாட்களில் நாம் அனுப்பினோம். மறுமையின் தண்டனையோ (அவர்களுக்கு) மிக கேவலமானது. (அங்கு) அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்."},{"id":17,"translation":"ஆக, ஸமூது சமுதாயம், நாம் அவர்களுக்கு நேர்வழிகாட்டினோம். ஆனால், அவர்கள் நேர்வழியை விட (வழிகேடான) குருட்டுத் தனத்தைத்தான் அதிகம் விரும்பினார்கள். ஆகவே, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றின் காரணமாக அவர்களை இழிவான தண்டனையின் பேரழிவு பிடித்தது."},{"id":18,"translation":"(அல்லாஹ்வை) நம்பிக்கை கொண்டு, (அவனை) அஞ்சுபவர்களாக இருந்தவர்களை நாம் பாதுகாத்(து தண்டனையில் இருந்து தப்பிக்க வைத்)தோம்."},{"id":19,"translation":"அல்லாஹ்வின் எதிரிகள் நரகத்தின் பக்கம் ஒன்று திரட்டப்படுகின்ற நாளில், ஆக அவர்கள் (அனைவரும் முன்னோர் பின்னோர் எல்லாம் ஒரே இடத்தில் ஒன்று சேர்வதற்காக) நிறுத்தி வைக்கப்படுவார்கள்."},{"id":20,"translation":"இறுதியாக, அவர்கள் அதற்கருகில் வரும்போது அவர்களுடைய செவியும் அவர்களுடைய பார்வைகளும் அவர்களுடைய தோல்களும் அவர்கள் செய்துகொண்டிருந்ததைப் பற்றி அவர்களுக்கு எதிராகவே சாட்சி கூறும்."},{"id":21,"translation":"இன்னும், அவர்கள் தங்களுடைய தோல்களிடம், “எங்களுக்கு எதிராக ஏன் சாட்சி கூறினீர்கள்” என்று கூறுவார்கள். அதற்கு அவை கூறும்: “எல்லாவற்றையும் பேசவைத்த அல்லாஹ்தான் எங்களையும் (இன்று) பேச வைத்தான்.” (மனிதர்களே!) அவன்தான் உங்களை முதல் முறையாகப் படைத்தான். இன்னும் அவன் பக்கம்தான் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":22,"translation":"உங்களுக்கு எதிராக உங்கள் செவியும் உங்கள் பார்வைகளும் உங்கள் தோல்களும் சாட்சி கூறிவிடும் என்பதற்காக நீங்கள் (உங்கள் செயல்களை) மறைப்பவர்களாக இருக்கவில்லை. (ஏனெனில் உங்களுக்கு மறுமை நம்பிக்கை இல்லை. இன்னும், உங்கள் செயல்களை மறைக்கவும் உங்களால் முடியாது.) என்றாலும், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதில் அதிகமானதை அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணினீர்கள்."},{"id":23,"translation":"உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய அந்த உங்கள் எண்ணம்தான் உங்களை நாசமாக்கியது. ஆகவே, நீங்கள் நஷ்டவாளிகளில் ஆகிவிட்டீர்கள்."},{"id":24,"translation":"ஆக, அவர்கள் பொறுமையாக இருந்தாலும், (பொறுமையாக இல்லை என்றாலும்,) நரகம்தான் அவர்களுக்கு தங்குமிடமாகும். அவர்கள் (அல்லாஹ்வின்) பொருத்தத்தை தேடினாலும் அவர்கள் (அல்லாஹ்வின்) பொருத்தம் பெற்றவர்களில் ஆக மாட்டார்கள்."},{"id":25,"translation":"இன்னும், (நிராகரிப்பாளர்களாகிய) அவர்களுக்கு சில நண்பர்களை நாம் இலகுவாக அமைத்துக் கொடுத்தோம். ஆக, அவர்களுக்கு முன்னுள்ளதையும் அவர்களுக்கு பின்னுள்ளதையும் அந்த நண்பர்கள் அலங்கரித்துக் காட்டினார்கள். இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின்கள் மற்றும் மனிதர்களில் உள்ள (பாவிகளான) சமுதாயங்களுக்கு விதிக்கப்பட்ட அதே விதி (-அதே தண்டனை) இவர்கள் மீதும் உறுதியாகிவிட்டது. நிச்சயமாக இவர்கள் நஷ்டவாளிகளாக இருக்கிறார்கள்."},{"id":26,"translation":"நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனை நீங்கள் செவியுறாதீர்கள் (அதை ஏற்காதீர்கள்), இன்னும், அதில் (-அது ஓதப்படும்போது பிறர் கேட்க முடியாதவாறு) கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்துங்கள்! (அவரை ஓதவிடாமல் செய்ய வேண்டும், பிறரை கேட்கவிடாமல் செய்ய வேண்டும் என்ற உங்கள் நோக்கத்தில்) நீங்கள் வெற்றி பெறுவதற்காக.”"},{"id":27,"translation":"ஆகவே, நிராகரித்தவர்களுக்கு கடுமையான தண்டனையை நிச்சயமாக சுவைக்க வைப்போம். இன்னும், நிச்சயமாக, அவர்கள் செய்து கொண்டிருந்த மிகக் கெட்ட செயலுக்கு (தகுந்த) கூலியை அவர்களுக்கு கொடுப்போம்."},{"id":28,"translation":"இதுதான் அல்லாஹ்வின் எதிரிகளுக்குரிய நரகம் என்ற கூலியாகும். அதில் அவர்களுக்கு நிரந்தரமாக தங்கும் இல்லம் உண்டு, நமது வசனங்களை அவர்கள் மறுப்பவர்களாக இருந்ததற்குக் கூலியாக."},{"id":29,"translation":"நிராகரிப்பவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! ஜின் மற்றும் மனிதர்களில் எங்களை வழிகெடுத்தவர்களை எங்களுக்குக் காண்பித்துக் கொடு! அவர்கள் (- வழிகெடுத்த அந்த இரு கூட்டங்களும்) மிகக் கீழ்த்தரமானவர்களில் ஆகிவிடுவதற்காக அவர்களை நாங்கள் எங்கள் பாதங்களுக்குக் கீழ் ஆக்கி (மிதித்து) விடுகிறோம்.”"},{"id":30,"translation":"நிச்சயமாக எவர்கள், “(நாங்கள் வணங்கத்தகுதியான) எங்கள் இறைவன், அல்லாஹ்தான்” என்று கூறி; பிறகு, (அதில்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது வானவர்கள் இறங்குவார்கள். (அந்த வானவர்கள் நம்பிக்கையாளர்களை நோக்கிக் கூறுவார்கள்:) “நீங்கள் பயப்படாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! நீங்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த சொர்க்கத்தைக் கொண்டு நற்செய்தி பெறுங்கள்!”"},{"id":31,"translation":"“நாங்கள் இந்த உலக வாழ்க்கையிலும் மறுமையிலும் உங்கள் நேசர்கள் ஆவோம். அ(ந்த சொர்க்கத்)தில் உங்கள் மனங்கள் விரும்புவதும் உங்களுக்கு உண்டு. இன்னும், அதில் நீங்கள் (வாய்விட்டு) கேட்பதும் உங்களுக்கு உண்டு.”"},{"id":32,"translation":"“(இவை எல்லாம்) மகா மன்னிப்பாளன், மகா கருணையாளனிடமிருந்து விருந்தோம்பலாக (உங்களுக்கு வழங்கப்படும்).”"},{"id":33,"translation":"யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்?"},{"id":34,"translation":"நன்மையும் தீமையும் சமமாகாது. மிக அழகியதைக் கொண்டு (தீமையை) தடுப்பீராக! அப்போது உமக்கும் எவர் ஒருவருக்கும் இடையில் பகைமை இருக்கிறதோ அவர் ஓர் நெருக்கமான உறவுக்காரரைப்போல் ஆகிவிடுவார்."},{"id":35,"translation":"இ(ந்த குணத்)தை பொறுமையாளர்கள் தவிர கொடுக்கப்பட மாட்டார்கள். இன்னும், பெரும் பாக்கியம் உடையவர்கள் தவிர இ(ந்த குணத்)தை கொடுக்கப்பட மாட்டார்கள்."},{"id":36,"translation":"நிச்சயமாக ஷைத்தானிடமிருந்து ஏதாவது தீய எண்ணம் (உமது எதிரியை பழிவாங்கும்படி) உம்மைத் தூண்டினால் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுவீராக! நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":37,"translation":"இரவு, பகல், சூரியன், சந்திரன் அனைத்தும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நீங்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் சிரம் பணியாதீர்கள்! இவற்றைப் படைத்த அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள் நீங்கள் அ(ந்த உண்மையான இறை)வனை வணங்குபவர்களாக இருந்தால்."},{"id":38,"translation":"ஆக, அவர்கள் பெருமையடித்து விலகினால் (நீர் கவலைப்படாதீர்), உமது இறைவனிடம் இருக்கின்ற(வான)வர்கள் அவனை இரவிலும் பகலிலும் துதிக்கிறார்கள். இன்னும், அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்."},{"id":39,"translation":"இன்னும், நிச்சயமாக நீர் பூமியை காய்ந்ததாக பார்க்கிறீர். பிறகு, அதன் மீது நாம் (மழை) நீரை இறக்கினால் அது செழிப்படைந்து நன்கு வளர்கிறது. இது, அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதுதான். நிச்சயமாக அதை உயிர்ப்பித்தவன்தான் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பவன் ஆவான். நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":40,"translation":"நிச்சயமாக நமது வசனங்களில் (குழப்பம் செய்து சத்தியத்தை விட்டு) தடம் புரளுகிறவர்கள் நம்மிடம் மறைந்துவிட மாட்டார்கள். ஆக, யார் நரகத்தில் போடப்படுபவரோ அவர் சிறந்தவரா? அல்லது, மறுமை நாளில் பாதுகாப்பு பெற்றவராக வருகிறவரா? நீங்கள் நாடியதை செய்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறவன் ஆவான்."},{"id":41,"translation":"நிச்சயமாக எவர்கள் இந்த வேதத்தை - அது அவர்களிடம் வந்தபோது - நிராகரித்தார்களோ (அவர்கள் தண்டனைக்கு உரியவர்களே.) நிச்சயமாக இது மிக கண்ணியமான வேதமாகும்."},{"id":42,"translation":"அதற்கு முன்னிருந்தும் அதற்குப் பின்னிருந்தும் பொய்யர்கள் அதனிடம் வரமாட்டார்கள். (பொய்யர்கள் யாராலும் அதில் இல்லாததை அதில் சேர்க்கவும் முடியாது, அதில் உள்ளதை அதில் இருந்து எடுக்கவும் முடியாது.) மகா ஞானவான், மகா புகழுக்குரியவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும் (இது)."},{"id":43,"translation":"உமக்கு முன்னர் (அனுப்பப்பட்ட) தூதர்களுக்கு திட்டமாக எது சொல்லப்பட்டதோ அதைத் தவிர (வேறு ஏதும்) உமக்கு சொல்லப்படாது. நிச்சயமாக உமது இறைவன் மன்னிப்புடையவன், வலி தருகின்ற தண்டனை கொடுப்பவன் ஆவான்."},{"id":44,"translation":"அரபி அல்லாத மொழியில் உள்ள குர்ஆனாக இதை நாம் ஆக்கி இருந்தால், “இதன் வசனங்கள் (அரபி மொழியில்) விவரிக்கப்பட்டிருக்க வேண்டாமா? (இந்த குர்ஆன்) அரபி அல்லாத ஒரு மொழியா! (இது இறக்கப்பட்டவரின் மொழியோ) அரபி ஆயிற்றே” என்று கூறியிருப்பார்கள். (நபியே!) கூறுவீராக! “இது (-இந்த குர்ஆன் அதை) நம்பிக்கை கொண்டவர்களுக்கு (அவர்கள் எந்த மொழி உடையவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு) நேர்வழியும் நிவாரணமும் ஆகும்.” இன்னும், எவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லையோ அவர்களின் காதுகளில் செவிட்டுத்தனம் இருக்கிறது. (அவர்கள் படிப்பினை பெறும் நோக்கத்துடன் இதை செவியுற மாட்டார்கள்.) அது அவர்கள் (உடைய உள்ளங்கள்) மீது மறைந்திருக்கிறது. (ஆகவே, அவர்களுடைய உள்ளங்களால் அதை புரிய முடியாது. இந்த வேதத்தை நிராகரிக்கும்) அவர்கள் மிக தூரமான இடத்தில் இருந்து அழைக்கப்படுகிறார்கள் (போலும். ஆகவேதான் இந்த வேதத்தின் சத்தியத்தை அவர்களால் புரிய முடியவில்லை போலும்)."},{"id":45,"translation":"திட்டவட்டமாக மூஸாவிற்கு நாம் வேதத்தைக் கொடுத்தோம். ஆக, அதில் முரண்பாடு செய்யப்பட்டது. உமது இறைவனிடமிருந்து ஒரு வாக்கு முந்தியிருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். இன்னும், நிச்சயமாக அவர்கள் இ(ந்த வேதத்)தில் மிக ஆழமான சந்தேகத்தில்தான் இருக்கிறார்கள்."},{"id":46,"translation":"யார் நல்லதை செய்வாரோ அது அவருக்குத்தான் நன்மையாகும். இன்னும், யார் கெட்டதை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். உமது இறைவன் அடியார்களுக்கு சிறிதும் அநியாயம் செய்பவனாக இல்லை."},{"id":47,"translation":"மறுமையைப் பற்றிய அறிவு அவன் பக்கமே திருப்பப்படுகிறது. (அவனை அன்றி மறுமை நிகழப்போவதை யாரும் அறியமாட்டார்.) அவனது ஞானமில்லாமல் பழங்களில் எதுவும் அவற்றின் பாலைகளில் இருந்து வெளிவருவதில்லை, பெண்களில் எவரும் கர்ப்பமடைவதுமில்லை, அவர்கள் குழந்தை பெற்றெடுப்பதுமில்லை. இன்னும், “எனக்கு இணையாக்கப்பட்ட தெய்வங்கள் எங்கே?” என்று அவன் அவர்களை அழைக்கின்ற நாளில் அவர்கள் கூறுவார்கள்: “(இன்றைய தினம்) எங்களில் யாரும் (உனக்கு இணை உள்ளது என) சாட்சி சொல்பவர் இல்லை என்று நாங்கள் உனக்கு அறிவித்து விட்டோம்.”"},{"id":48,"translation":"இன்னும், இதற்கு முன்னர் அவர்கள் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவை அவர்களை விட்டும் மறைந்து விடும். இன்னும், தப்பிப்பதற்குரிய இடம் எதுவும் தங்களுக்கு இல்லை என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்."},{"id":49,"translation":"மனிதன் நன்மைக்காகப் பிரார்த்திப்பதில் சடைவடைய மாட்டான். (ஆனால்) அவனுக்கு தீமைகள் நிகழ்ந்தால் அவன் நிராசை அடைந்தவனாக, நம்பிக்கை இழந்தவனாக ஆகிவிடுகிறான்."},{"id":50,"translation":"அவனுக்கு நிகழ்ந்த தீங்குக்குப் பின்னர் நம் புறத்தில் இருந்து ஓர் அருளை நாம் அவனுக்கு சுவைக்க வைத்தால் (அதற்கு நன்றி செலுத்தாமல்,) “இது எனக்குரியது (-என் தகுதியினால், என் திறமையினால் எனக்கு கிடைத்தது), மறுமை நிகழும் எனவும் நான் எண்ணவில்லை, நான் என் இறைவனிடம் திரும்பக் கொண்டுவரப்பட்டாலும் நிச்சயமாக எனக்கு அவனிடம் சொர்க்கம்தான் உண்டு” என்று நிச்சயமாக அவன் கூறுகிறான். ஆக, நிராகரித்தவர்களுக்கு அவர்கள் செய்ததை நாம் நிச்சயமாக அறிவிப்போம். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்."},{"id":51,"translation":"மனிதன் மீது நாம் அருள் புரிந்தால் (அதற்கு அவன் நன்றி செலுத்தாமல் நம்மை விட்டு) புறக்கணித்து செல்கிறான். இன்னும், (நமக்கு கீழ்ப்படிவதை விட்டு விலகி) முற்றிலும் தூரமாகி விடுகிறான். அவனுக்கு தீங்கு நிகழ்ந்தால் (நம்மிடம்) மிக அதிகமான பிரார்த்தனை செய்பவனாக ஆகிவிடுகிறான்."},{"id":52,"translation":"(நபியே! அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக! “நீங்கள் எனக்கு அறிவியுங்கள்! இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதாக இருந்து பிறகு, நீங்கள் அதை நிராகரித்து (உண்மைக்கு வெகு தூரம் முரண்பட்டு, வழிகேட்டில் சென்று)விட்டால், வெகு தூரமான முரண்பாட்டில் இருப்பவனை விட மிகப் பெரிய வழிகேடன் யார் இருக்க முடியும்?”"},{"id":53,"translation":"நாம் நமது அத்தாட்சிகளை (அவர்கள் வசிக்கின்ற பூமியின்) பல பகுதிகளிலும் (-மக்காவைச் சுற்றியுள்ள நாடுகளிலும்) அவர்க(ளுடைய உயிர்க)ளிலும் அவர்களுக்கு நாம் விரைவில் காண்பிப்போம். இறுதியாக, நிச்சயமாக இதுதான் உண்மை என்று அவர்களுக்கு தெளிவாகிவிடும். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கு பார்ப்பவனாக இருக்கிறான் என்பது (இந்த வேதத்தை நிராகரிப்பவர்களை தண்டிப்பதற்கும்; இதை நம்பிக்கை கொண்டவர்களை இரட்சிப்பதற்கும்) உமது இறைவனுக்கு போதாதா?"},{"id":54,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பதில் சந்தேகத்தில் இருக்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் (தனது அறிவாலும் ஆற்றலாலும்) சூழ்ந்திருக்கிறான்."}]},{"id":42,"verses":[{"id":1,"translation":"ஹா மீம்."},{"id":2,"translation":"அய்ன் சீன் காஃப்."},{"id":3,"translation":"இவ்வாறுதான் மிகைத்தவனும் மகா ஞானவானுமாகிய அல்லாஹ் உமக்கு வஹ்யி அறிவிக்கிறான். இன்னும், உமக்கு முன்னுள்ளவர்களுக்கும் இவ்வாறுதான் வஹ்யி அறிவிக்கப்பட்டது."},{"id":4,"translation":"வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்குத்தான் சொந்தமானவை ஆகும். அவன்தான் மிக உயர்ந்தவன், மிக மகத்தானவன்."},{"id":5,"translation":"அவற்றுக்கு (-ஏழு பூமிகளுக்கு) மேல் உள்ள வானங்கள் (அல்லாஹ்வின் அச்சத்தால்) பிளந்து தெரித்து விடுவதற்கு நெருங்கி விடுகின்றன. வானவர்கள் தங்கள் இறைவனைப் புகழ்ந்து துதிக்கிறார்கள். இன்னும் பூமியில் உள்ளவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்கிறார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்."},{"id":6,"translation":"அவனை அன்றி எவர்கள் பாதுகாவலர்களை (பிற தெய்வங்களை) எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் மீது அல்லாஹ்தான் கண்காணிப்பவன் ஆவான். (நபியே!) நீர் அவர்கள் மீது பொறுப்பாளர் இல்லை. (ஆகவே, அல்லாஹ் அவர்களின் செயல்களைப் பதிவு செய்து அவற்றுக்கு ஏற்ப அவர்களுக்கு கூலி வழங்குவான்.)"},{"id":7,"translation":"இவ்வாறுதான் உமக்கு அரபி மொழியில் உள்ள குர்ஆனை நாம் வஹ்யி அறிவித்தோம், நீர் மக்காவாசிகளையும் அதைச் சுற்றி உள்ளவர்களையும் எச்சரிப்பதற்காகவும் (மனிதர்கள் எல்லோரும் ஒன்று சேர்க்கப்படும்) மறுமை நாளைப் பற்றி எச்சரிப்பதற்காகவும். அ(ந்த மறுமை நாள் நிகழப்போவ)தில் அறவே சந்தேகம் இல்லை. ஒரு பிரிவு சொர்க்கத்தில் இருப்பார்கள். ஒரு பிரிவு நரகத்தில் இருப்பார்கள்."},{"id":8,"translation":"அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களை (அவர்கள் அனைவரையும்) ஒரே ஒரு மார்க்கமுடையவர்களாக ஆக்கியிருப்பான். என்றாலும் அவன், தான் நாடியவர்களை தனது அருளில் நுழைக்கிறான். அநியாயக்காரர்களோ - அவர்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை; இன்னும், உதவியாளர் எவரும் இல்லை."},{"id":9,"translation":"அவனை அன்றி அவர்கள் பாதுகாவலர்களை எடுத்துக்கொண்டார்களா? ஆக, அல்லாஹ்தான் (உண்மையான) பாதுகாவலன். அவன்தான் இறந்தவர்களை உயிர்ப்பிப்பான். இன்னும், அவன் எல்லா பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":10,"translation":"எந்த ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்படுகிறீர்களோ அதன் இறுதி தீர்ப்பு அல்லாஹ்வின் பக்கம்தான் உள்ளது. அந்த அல்லாஹ்தான் என் இறைவன் ஆவான். அவன் மீதே நான் நம்பிக்கை வைத்துள்ளேன். அவன் பக்கமே நான் முற்றிலும் திரும்புகிறேன்."},{"id":11,"translation":"அவன்தான், வானங்களையும் பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களில் இருந்தே ஜோடிகளையும் இன்னும், கால்நடைகளில் ஜோடிகளையும் அவன் ஏற்படுத்தினான். இ(ப்படி ஜோடியாக ஏற்படுத்திய)தில் அவன் உங்களை அதிகமாக படை(த்து வாழவை)க்கிறான். அவனைப் போன்று எதுவும் இல்லை. அவன்தான் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":12,"translation":"வானங்கள் இன்னும் பூமியி(லுள்ள பொக்கிஷங்களி)ன் சாவிகள் அவனுக்கே உரியன. அவன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான்; இன்னும், (தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை) சுருக்குகிறான். நிச்சயமாக அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":13,"translation":"அவன் நூஹுக்கு எதை உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சட்டமாக்கினான். உமக்கு நாம் எதை வஹ்யி அறிவித்தோமோ, இன்னும் இப்ராஹீம், மூஸா, ஈஸாவிற்கு எதை நாம் உபதேசித்தோமோ அது, “இந்த மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள்! அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!” என்பதாகும். இணைவைப்பவர்களுக்கு நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது மிக பாரமாக ஆகிவிட்டது. அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுக்கிறான். (தன் பக்கம்) திரும்பக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் (நெருங்குவதற்குரிய) நேர்வழி காட்டுகிறான்."},{"id":14,"translation":"தங்களிடம் கல்வி வந்ததன் பின்னரே தவிர அவர்கள் (தங்களுக்குள்) பல பிரிவுகளாக பிரியவில்லை. (அவர்கள் அவ்வாறு பிரிந்தது) தங்களுக்கு மத்தியில் இருந்த பொறாமையினால்தான். ஒரு குறிப்பிட்ட தவணை(யாகிய மறுமை நாள் வரும்) வரை (அவன் தனது தண்டனையை உங்களுக்கு பிற்படுத்துவான் என்ற) ஒரு வாக்கு உமது இறைவன் புறத்தில் இருந்து முன் சென்று இருக்கவில்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். (அவர்களது கதை முடிக்கப்பட்டிருக்கும்.) நிச்சயமாக, இவர்களுக்குப் பின்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அதில்பெரிய சந்தேகத்தில் இருக்கிறார்கள்."},{"id":15,"translation":"ஆக, இதன் பக்கமே (-உமக்கும் நூஹுக்கும் மற்ற நபிமார்களுக்கும் நாம் எதை மார்க்கமாக அமைத்தோமோ அந்த மார்க்கத்தின் பக்கமே) நீர் அழைப்பீராக! நீர் கட்டளையிடப்பட்டது போன்றே (உமக்கு கொடுக்கப்பட்ட கட்டளைகளில்) நீர் நிலையாக நீடித்து உறுதியாக இருப்பீராக! அவர்களின் (-இந்த சத்திய மார்க்கத்தில் சந்தேகித்தவர்களின்) மனவிருப்பங்களை நீர் பின்பற்றாதீர்! இன்னும், நீர் கூறுவீராக! “அல்லாஹ் இறக்கிய வேதங்களை நான் நம்பிக்கை கொண்டேன். உங்களுக்கு மத்தியில் நீதமாக நடக்க வேண்டும் என்று நான் பணிக்கப்பட்டுள்ளேன். அல்லாஹ்தான் எங்கள் இறைவன், இன்னும் உங்கள் இறைவன் ஆவான். எங்களுக்கு எங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). உங்களுக்கு உங்கள் அமல்கள் (உடைய கூலி கிடைக்கும்). நமக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் தர்க்கம் வேண்டாம். அல்லாஹ்தான் (நம்மை) ஒன்று சேர்(த்து நமக்கு மத்தியில் தீர்ப்பளி)ப்பான். அவன் பக்கமே மீளுதல் இருக்கிறது.”"},{"id":16,"translation":"இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் (மார்க்க) விஷயத்தில், - அவனை (மக்கள்) ஏற்றுக் கொண்டதன் பின்னர் - தர்க்கம் செய்கிறார்களோ அவர்களின் தர்க்கம் எல்லாம் அல்லாஹ்விடம் வீணானதே (அழிந்துபோகக்கூடியதே) ஆகும்! இன்னும், அவர்கள் மீது (அல்லாஹ்வின்) கோபம் இறங்கும். இன்னும், அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு."},{"id":17,"translation":"அல்லாஹ், உண்மையுடன் கூடிய இந்த வேதத்தையும் தராசையும் இறக்கி (நீதமாக நடக்க வேண்டும் என்பதை சட்டமாக்கி)னான். மறுமை மிக சமீபமானது என்று (நபியே!) உமக்கு யார் அறிவிப்பார்? (அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிவிக்க முடியாது.)"},{"id":18,"translation":"அதை (-மறுமையை) நம்பிக்கை கொள்ளாதவர்கள் அதை அவசரமாகத் தேடுகிறார்கள். (அதை) நம்பிக்கை கொண்டவர்கள் அதை பயப்படுகிறார்கள். இன்னும், நிச்சயமாக அது உண்மை(யாக நிகழக்கூடியது)தான் என்று அவர்கள் அறிவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக மறுமை விஷயத்தில் தர்க்கிப்பவர்கள் வெகு தூரமான வழிகேட்டில்தான் இருக்கிறார்கள்."},{"id":19,"translation":"அல்லாஹ், தன் அடியார்கள் மீது மிக கருணை(யும் தயவும்) உடையவன். அவன், தான் நாடுகிறவர்களுக்கு உணவளிக்கிறான். அவன்தான் மிக வலிமை உள்ளவன், (யாவரையும்) மிகைத்தவன்."},{"id":20,"translation":"யார் மறுமையின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அவருடைய விளைச்சலில் (-நன்மைக்குரிய கூலியில்) நாம் அதிகப்படுத்துவோம். இன்னும், யார் (தனது நல்லமல்களுக்கு) உலகத்தின் விளைச்சலை நாடுகிறவராக இருக்கிறாரோ அவருக்கு அ(வர் விரும்புகிற உலக செல்வத்)திலிருந்து நாம் கொடுப்போம். அவருக்கு மறுமையில் (அவர் செய்த நன்மையிலிருந்து) எவ்வித பங்கும் இல்லை."},{"id":21,"translation":"(அல்லாஹ்வின்) மார்க்கத்தில் அல்லாஹ் எதை கட்டளை இடவில்லையோ அதை இவர்களுக்கு சட்டமாக (-மார்க்கமாக) ஆக்கித்தருகின்ற தெய்வங்களும் இவர்களுக்கு உண்டா? (இவர்களுக்கு தண்டனை மறுமையில்தான் என்ற) தீர்ப்பின் வாக்கு மட்டும் இல்லை என்றால் அவர்களுக்கு மத்தியில் (இவ்வுலகிலேயே) தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":22,"translation":"(நபியே!) அநியாயக்காரர்களை - அவர்கள் செய்தவற்றின் (-பாவங்களின்) காரணமாக (மறுமை நாளில் அல்லாஹ்வின் தண்டனையை) - பயந்தவர்களாக நீர் பார்ப்பீர்! அ(ந்த தண்டனையான)து அவர்களுக்கு நிகழ்ந்தே தீரும். இன்னும், நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள் சொர்க்கங்களின் சோலைகளில் இருப்பார்கள். அவர்கள் நாடுகின்றவை (எல்லாம்) அவர்களின் இறைவனிடம் அவர்களுக்கு கிடைக்கும். இதுதான் மிகப் பெரிய சிறப்பாகும்."},{"id":23,"translation":"(நல்லவர்களுக்குரிய சொர்க்க இன்பமாகிய) இது எத்தகையது என்றால், நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்த தன் அடியார்களுக்கு அல்லாஹ் இதன் மூலம் நற்செய்தி) கூறுகிறான். (நபியே!) கூறுவீராக! “இதற்காக நான் உங்களிடத்தில் எந்த கூலியையும் கேட்கவில்லை, இரத்த உறவினால் உள்ள அன்பைத் தவிர.” இன்னும், யார் அழகிய அமலை செய்வாரோ அவருக்கு அதில் (மேலும்) அழகை நாம் அதிகப்படுத்துவோம். (ஒரு நன்மைக்கு பத்து நன்மைகளை கூலியாகத் தருவோம்.) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், நன்றி பாராட்டக்கூடியவன் ஆவான்."},{"id":24,"translation":"(இந்த தூதர்) அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டினார் என்று இவர்கள் கூறுகிறார்களா? ஆக, (நபியே! நீர் அப்படி பொய் கூறி இருந்தால்) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தின் மீது அவன் முத்திரையிட்டு விடுவான். (இந்த வேதத்தை நீர் மறந்துவிடுவீர்.) இன்னும், அல்லாஹ் பொய்யை அழித்து விடுவான்; தனது கட்டளைகளைக் கொண்டு சத்தியத்தை உறுதிப்படுத்துவான். நிச்சயமாக அவன் நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":25,"translation":"அவன் தனது அடியார்களிடமிருந்து (அவர்கள்) திருந்தி பாவமன்னிப்பு கோருவதை ஏற்றுக் கொள்கிறான்; இன்னும், (திருந்தியவர்களின்) பாவங்களை அவன் முற்றிலுமாக மன்னிக்கிறான்; இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்."},{"id":26,"translation":"நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களுக்கு (அவர்களில் சிலர் சிலருக்காக கேட்கின்ற துஆக்களுக்கு) அவன் பதில் அளிக்கிறான் (-அந்த துஆக்களை அங்கீகரிக்கிறான்). இன்னும், தனது அருளிலிருந்து அவர்களுக்கு (வெகுமதிகளை) அதிகப்படுத்துவான். எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு."},{"id":27,"translation":"அல்லாஹ் தனது அடியார்களுக்கு வாழ்வாதாரத்தை முற்றிலும் விசாலமாக்கினால் அவர்கள் பூமியில் எல்லை மீறி விடுவார்கள். என்றாலும், தான் எதை நாடுகிறானோ அதை ஓர் அளவுடன் இறக்குகிறான். நிச்சயமாக அவன் தன் அடியார்களை ஆழ்ந்தறிபவன், உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":28,"translation":"(மழை வராது என்று) அவர்கள் நிராசை அடைந்த பின்னர் அவன்தான் மழையை இறக்குகிறான். இன்னும், தனது அருளை (பூமியில்) பரப்புகிறான். அவன்தான் (உண்மையான) பாதுகாவலன், மகா புகழாளன்."},{"id":29,"translation":"வானங்களும் பூமியும் படைக்கப்பட்டதும் அவ்விரண்டில் உயிரினங்களில் எவற்றை அவன் (படைத்து, பல பகுதிகளில்) பரத்தி இருக்கிறானோ அவையும் அவனது அத்தாட்சிகளில் உள்ளவைதான். இன்னும், அவன் நாடும்போது அவர்களை (மறுமையில்) ஒன்று சேர்ப்பதற்கும் அவன் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":30,"translation":"சோதனைகளில் எது உங்களுக்கு ஏற்பட்டதோ அது உங்கள் கரங்கள் செய்தவற்றினால்தான் (ஏற்பட்டது). இன்னும் (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் முற்றிலும் மன்னித்து விடுகிறான். (ஆகவே, உங்களுக்கு தண்டனையை இறக்குவதில்லை.)"},{"id":31,"translation":"நீங்கள் இந்த பூமியில் (அல்லாஹ்வை பலவீனப்படுத்த முடியாது. அவனது பிடியை விட்டும்) தப்பித்துவிட முடியாது. அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை, இன்னும், உதவியாளர் எவரும் இல்லை."},{"id":32,"translation":"இன்னும், மலைகளைப் போன்று கடலில் மிதந்து செல்லக்கூடிய கப்பல்கள் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவைதான்."},{"id":33,"translation":"அவன் நாடினால் காற்றுகளை அமைதியாக்கி விடுவான். அவை (-அந்த கப்பல்கள் முன்னேறிச் செல்லாமல்) அதன் மீதே (-அந்த தண்ணீரின் மீதே) அசையாமல் நிற்கக்கூடியதாக ஆகிவிடும். பெரும் பொறுமையாளர்கள், நன்றி உள்ளவர்கள் எல்லோருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":34,"translation":"அல்லது (பாவங்களில்) அவர்கள் செய்தவற்றின் காரணமாக அவற்றை (-அந்த கப்பல்களை) அவன் அழித்து விடுவான். இன்னும், (நீங்கள் செய்த) அதிகமான தவறுகளை அவன் முற்றிலும் மன்னித்துவிடுகிறான்."},{"id":35,"translation":"நமது வசனங்களில் தர்க்கிப்பவர்களை அவன் நன்கறிவான். தப்பிக்கும் இடம் ஏதும் அவர்களுக்கு இல்லை."},{"id":36,"translation":"ஆக, நீங்கள் (உலக பொருள்களில்) எது கொடுக்கப்பட்டுள்ளீர்களோ அவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையின் இன்பமாகும். இன்னும், நம்பிக்கை கொண்டு, தங்கள் இறைவன் மீது நம்பிக்கை வை(த்து அவனையே சார்ந்திரு)ப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் (மறுமையில்) எது உள்ளதோ அதுதான் மிகச் சிறந்ததும் மிக நிரந்தரமானதும் ஆகும்."},{"id":37,"translation":"இன்னும், அவர்கள் பெரும் பாவங்களை விட்டும், மானக்கேடான விஷயங்களை விட்டும் விலகி இருப்பார்கள். அவர்கள் கோபப்படும்போது (தங்களை கோபப்படுத்தியவர்களை) மன்னித்து விடுவார்கள்."},{"id":38,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் இறைவனுக்கு பதில் அளிப்பார்கள். (அவனது அழைப்பை, கட்டளைகளை ஏற்று நடப்பார்கள்.) இன்னும், தொழுகையை நிலை நிறுத்துவார்கள். இன்னும், அவர்களது காரியம் அவர்களுக்கு மத்தியில் ஆலோசிக்கப்படும். இன்னும், அவர்களுக்கு நாம் கொடுத்தவற்றில் இருந்து அவர்கள் தர்மம் கொடுப்பார்கள்."},{"id":39,"translation":"இன்னும், அவர்கள் மீது அநியாயம் நிகழ்ந்தால் அவர்கள் (நீதமாக, எல்லை மீறாமல்) பழி வாங்குவார்கள்."},{"id":40,"translation":"தீமையின் தண்டனை அது போன்ற தீமைதான். ஆக, யார் மன்னிப்பாரோ, சமாதானம் செய்வாரோ அவரது கூலி அல்லாஹ்வின் மீது கட்டாயமாக இருக்கிறது. நிச்சயமாக அவன் அநியாயக்காரர்களை நேசிக்கமாட்டான்."},{"id":41,"translation":"யார் தனக்கு அநீதி இழைக்கப்பட்ட பின்னர் பழிவாங்குவாரோ அவர்கள் மீது எவ்வித குற்றமும் இல்லை."},{"id":42,"translation":"குற்றமெல்லாம் மக்கள் மீது (முதலில்) அநியாயம் செய்பவர்கள் மீதும், பூமியில் அநியாயமாக எல்லை மீறுகிறவர்கள் (-கலகம் செய்வதிலும் மக்களுக்கு இன்னல் செய்வதிலும் ஈடுபடுகிறவர்கள்) மீதும்தான். அத்தகையோர், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":43,"translation":"இன்னும், யார் பொறுமையாக இருப்பாரோ, மன்னிப்பாரோ நிச்சயமாக அது மிக வீரமான காரியங்களில் உள்ளதாகும்."},{"id":44,"translation":"யாரை அல்லாஹ் வழிகெடுத்தானோ அவனுக்குப் பிறகு (-அல்லாஹ் அவனை கைவிட்டதற்குப் பிறகு) அவனுக்கு பாதுகாவலர் எவரும் இல்லை. இன்னும், (மறுமையில்) அநியாயக்காரர்கள் தண்டனையைப் பார்க்கும்போது, (உலகத்திற்கு) திரும்புவதற்கு ஏதேனும் வழி உண்டா என்று அவர்கள் கூறுவதை (நபியே) நீர் பார்ப்பீர்!."},{"id":45,"translation":"(நபியே!) அதற்கு முன்பாக அவர்கள் சமர்ப்பிக்கப்படுவதை நீர் காண்பீர், அவர்கள் இழிவினால் தலை குனிந்தவர்களாக மறைவான (திருட்டுப்) பார்வையால் அவர்கள் (நரகத்தை) பார்ப்பார்கள். இன்னும், நம்பிக்கையாளர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக எவர்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமை நாளில் நஷ்டமிழைத்தார்களோ அவர்கள்தான் (உண்மையான) நஷ்டவாளிகள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அநியாயக்காரர்கள் நிலையான (நிரந்தரமான) தண்டனையில் இருப்பார்கள்.”"},{"id":46,"translation":"இன்னும், அல்லாஹ்வை அன்றி அவர்களுக்கு உதவுகின்ற பாதுகாவலர்கள் யாரும் அவர்களுக்கு இருக்க மாட்டார்கள். இன்னும், யாரை அல்லாஹ் வழிகெடுப்பானோ அவ(ர் நேர்வழி பெற அவ)ருக்கு வழிகள் ஏதும் இல்லை."},{"id":47,"translation":"அல்லாஹ்விடமிருந்து ஒரு நாள் வருவதற்கு முன்பாக உங்கள் இறைவனுக்கு (-அவன் அனுப்பிய தூதருக்கு) நீங்கள் பதில் அளியுங்கள்! (இஸ்லாமிற்குள் நுழைந்து விடுங்கள்!) அதை (-அந்த நாளை) அறவே தடுத்துவிட முடியாது. அந்நாளில் (தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) உங்களுக்கு ஒதுங்குமிடம் ஏதும் இருக்காது. இன்னும், (உங்களை விட்டும் அந்த தண்டனையை) தடுப்பவர் யாரும் உங்களுக்கு இருக்க மாட்டார். (நீங்கள் செய்த பாவங்களை உங்களால் மறுக்க முடியாது.)"},{"id":48,"translation":"அவர்கள் (உம்மையும் உமது மார்க்கத்தையும்) புறக்கணித்தால் (அதைப் பற்றி நபியே! நீர் கவலைப்படாதீர். ஏனெனில்) நாம் உம்மை அவர்கள் மீது கண்காணிப்பவராக அனுப்பவில்லை. (மார்க்கத்தை) எடுத்துரைப்பதைத் தவிர (நிர்ப்பந்திப்பது) உம்மீது கடமை இல்லை. நிச்சயமாக நாம் மனிதர்களுக்கு நம்மிடமிருந்து ஓர் அருளை சுவைக்க வைத்தால் அதனால் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்களுக்கு அவர்களின் கரங்கள் முற்படுத்திய (பாவத்)தால் ஒரு தீங்கு ஏற்பட்டால் (அவர்கள் நிராகரித்து விடுகிறார்கள்.) ஆக, நிச்சயமாக மனிதன் மிகப்பெரிய நிராகரிப்பாளனாக இருக்கிறான்."},{"id":49,"translation":"வானங்கள், பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன், தான் நாடுவதை படைக்கிறான். அவன், தான் நாடுகிறவர்களுக்கு பெண் பிள்ளைகளை வழங்குகிறான். இன்னும், அவன்தான் நாடுகிறவர்களுக்கு ஆண் பிள்ளைகளை வழங்குகிறான்."},{"id":50,"translation":"அல்லது, அவர்களுக்கு ஆண் பிள்ளைகளையும் பெண் பிள்ளைகளையும் கலந்து கொடுக்கின்றான். இன்னும், தான் நாடுகிறவரை மலடாக ஆக்கிவிடுகிறான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவன், பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":51,"translation":"ஒரு மனிதருக்கு - அவரிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசுவது தகுதியாகாது. என்றாலும், வஹ்யி - அறிவிப்பதன் மூலம் (அவரிடம் பேசுவான்); அல்லது, திரைக்குப் பின்னால் இருந்து (அவரிடம் பேசுவான்); அல்லது, ஒரு வானவ தூதரை (அவரிடம்) அனுப்பி, தனது உத்தரவின் படி (அந்த தூதருக்கு) தான் நாடுவதை வஹ்யி - அறிவித்து பேசுவான். (அப்படி இல்லாமல் அல்லாஹ் யாரிடமும் நேரடியாகப் பேசமாட்டான்). நிச்சயமாக அவன் மிக உயர்ந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":52,"translation":"இவ்வாறுதான், நாம் நமது கட்டளையினால் (நம்மிடமிருந்து இந்த குர்ஆனை எல்லோருக்கும்) அருளாக (இருக்கும்படி) உமக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்திருக்கவில்லை. எனினும், நாம் இ(ந்த வேதத்)தை ஓர் ஒளியாக ஆக்கினோம். இதன் மூலம் நமது அடியார்களில் நாம் நாடுகிறவர்களுக்கு நாம் நேர்வழி காட்டுகிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறீர்."},{"id":53,"translation":"அல்லாஹ்வின் பாதையின் பக்கம் (நீர் நேர்வழி காட்டுகிறீர்). வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியவையாகும். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பக்கமே காரியங்கள் (எல்லாம்) திரும்புகின்றன."}]},{"id":43,"verses":[{"id":1,"translation":"ஹா மீம்."},{"id":2,"translation":"(சொல்லாலும் கருத்தாலும்) தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"நிச்சயமாக நாம் இதை அரபிமொழியில் ஓதப்படுகிற குர்ஆனாக ஆக்கினோம், நீங்கள் சிந்தித்து புரிய வேண்டும் என்பதற்காக."},{"id":4,"translation":"நிச்சயமாக நம்மிடம் (இருக்கின்ற அல்லவ்ஹுல் மஹ்ஃபூள் என்ற) தாய் புத்தகத்தில் பதியப்பட்டுள்ள இ(ந்த வேதமான)து மிக உயர்ந்ததும், மகா ஞானமுடையதும் ஆகும்."},{"id":5,"translation":"ஆக, நீங்கள் எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருக்க, உங்களை விட்டும் தண்டனையை அகற்றி (உங்களை நாங்கள் தண்டிக்காமல்) விடுவோமா? (நீங்கள் இந்த குர்ஆனைக் கொண்டு நேர்வழி பெறாமல், எல்லை மீறி குற்றம் புரிகிற மக்களாக இருப்பதால் இந்த குர்ஆனை தொடர்ந்து இறக்குவதை நாம் விட்டுவிடுவோமா?)"},{"id":6,"translation":"முன்னோரில் நாம் எத்தனையோ நபிமார்களை அனுப்பினோம்."},{"id":7,"translation":"அவர்களிடம் நபி எவரும் வருவதில்லை, அவர்கள் அவரை கேலி செய்பவர்களாக இருந்தே தவிர."},{"id":8,"translation":"ஆக, (உம்மை ஏற்க மறுக்கின்ற) இவர்களைவிட வலிமையால் மிக பலமான (அ)வர்களை நாம் அழித்தோம். இன்னும், முன்னோரின் உதாரணம் (-தண்டனை இவர்களின் கண் முன்) சென்றிருக்கிறது."},{"id":9,"translation":"வானங்களையும் பூமியையும் யார் படைத்தான் என்று (நபியே!) நீர் அவர்களிடம் கேட்டால், “மிகைத்தவன், நன்கறிந்தவன் (-அல்லாஹ்) அவற்றைப் படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் (பதில்) கூறுவார்கள்:"},{"id":10,"translation":"அவன் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான். இன்னும், அதில் உங்களுக்கு பல பாதைகளை ஏற்படுத்தினான், (அவற்றின் மூலம்) நீங்கள் (உங்களுக்குத் தேவையான இடங்களுக்கு) சரியான பாதையில் (இலகுவாக) செல்வதற்காக."},{"id":11,"translation":"இன்னும், அவன் வானத்தில் இருந்து மழையை ஓர் அளவோடு இறக்கினான். ஆக, இறந்து (-காய்ந்து) போன பூமியை நாம் அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறுதான் நீங்கள் (இறந்த பின்னர் பூமியில் இருந்து மீண்டும் நீங்கள் உயிர்ப்பிக்கப்பட்டு) வெளியாக்கப்படுவீர்கள்."},{"id":12,"translation":"இன்னும், அவன் (படைப்புகளில் உள்ள) ஜோடிகள் எல்லாவற்றையும் படைத்தான் (-படைப்புகள் எல்லாவற்றையும் ஆண், பெண் என்று ஜோடி ஜோடியாகப் படைத்தான்). இன்னும், கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் எதில் பயணம் செய்வீர்களோ அதை உங்களுக்காக ஏற்படுத்திக் கொடுத்தான்."},{"id":13,"translation":"அவற்றின் முதுகுகளில் நீங்கள் ஸ்திரமாக அமர்வதற்காகவும்; பிறகு அவற்றின் மீது நீங்கள் ஸ்திரமாக அமரும்போது உங்கள் இறைவனின் அருட்கொடையை நீங்கள் நினைவு கூர்வதற்காகவும்; “இதை எங்களுக்கு வசப்படுத்தி தந்தவன் மகா தூயவன். நாங்கள் இதைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளவர்களாக இருக்கவில்லை.”"},{"id":14,"translation":"“இன்னும், நிச்சயமாக நாங்கள் (எங்கள் மரணத்திற்குப் பின்) எங்கள் இறைவனின் பக்கம் திரும்பக் கூடியவர்கள் ஆவோம்” என்று நீங்கள் கூறுவதற்காகவும் (அவன் உங்களுக்கு இந்த வாகனங்களை ஏற்படுத்திக் கொடுத்தான்)."},{"id":15,"translation":"இன்னும், அவனது அடியார்களில் சிலரை (-வானவர்களை) அவர்கள் அவனுக்கு குழந்தைகளாக ஆக்கிவிட்டனர். நிச்சயமாக மனிதன் மிகத் தெளிவான மகா நன்றி கெட்டவன் ஆவான்."},{"id":16,"translation":"அவன், தான் படைத்தவற்றில் பெண் பிள்ளைகளை (தனக்கு) எடுத்துக் கொண்டானா, உங்களுக்கு ஆண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்(துக்கொடுத்)தானா?"},{"id":17,"translation":"அவர்களில் ஒருவருக்கு - அவர் ரஹ்மானுக்கு எதை தன்மையாக விவரித்தாரோ அதைக் கொண்டு - நற்செய்தி கூறப்பட்டால் அவரது முகம் கருப்பாக மாறிவிடுகிறது. இன்னும், அவர் துக்கப்படுகிறார். (இணைவைக்கின்ற மனிதன் தனக்கு பெண் பிள்ளையை விரும்புவதில்லை. ஆனால், அல்லாஹ்விற்கு பெண் பிள்ளைகள் இருப்பதாக கற்பனை செய்கிறான்.)"},{"id":18,"translation":"யார் ஆபரணங்களில் (அவை அணிவிக்கப்பட்டு) வளர்க்கப்படுகிறாரோ, இன்னும் அவர் வாதிப்பதில் தெளிவற்றவராக இருக்கிறாரோ அவரையா அல்லாஹ் தனக்கு பிள்ளைகளாக எடுத்துக்கொள்வான்? (பலவீனமான படைப்பாகிய பெண்களையா அல்லாஹ்விற்கு பிள்ளைகள் என்று கூறுகிறீர்கள்?)"},{"id":19,"translation":"இன்னும், ரஹ்மானின் அடியார்களாகிய வானவர்களை (அல்லாஹ்வின்) பெண்(பிள்ளை)களாக இவர்கள் ஆக்கிவிட்டனர். அ(ந்த வான)வர்கள் படைக்கப்பட்டதை இவர்கள் (அங்கு பிரசன்னமாகி இருந்து) பார்த்தார்களா? (வானவர்களை பெண்கள் என்று கூறிய) இவர்களின் (இந்த) சாட்சி பதியப்படும். இன்னும், (அது பற்றி மறுமையில்) இவர்கள் விசாரிக்கப்படுவார்கள்."},{"id":20,"translation":"இவர்கள் கூறுகிறார்கள்: “ரஹ்மான் நாடியிருந்தால் நாம் அவர்களை (-அந்த சிலைகளை) வணங்கியிருக்க மாட்டோம்.” இவர்களுக்கு இதைப் பற்றி எந்த அறிவும் இல்லை. இவர்கள் கற்பனையாக பேசுகிறார்களே தவிர (உண்மை பேசுபவர்கள்) இல்லை."},{"id":21,"translation":"(இவர்களின் கூற்றுகளுக்கு ஆதாரமாக) இதற்கு முன்னர் நாம் ஒரு வேதத்தை அவர்களுக்குக் கொடுத்திருக்கிறோமா? ஆக, அவர்கள் அதை உறுதியாக பிடித்திருக்கிறார்களா? (அதன்படி செயல்படுகிறார்களா? அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க எதன் அடிப்படையில் இவர்கள் பேசுகிறார்கள்?)"},{"id":22,"translation":"மாறாக, அவர்கள் கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகள் மீதே வழி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)”"},{"id":23,"translation":"இவ்வாறு, உமக்கு முன்னர் நாம் எச்சரிப்பாளர் எவரையும் ஓர் ஊரில் அனுப்பியபோதெல்லாம், அந்த ஊரில் உள்ள (செல்வந்தர்களாகிய) சுகவாசிகள் - “நிச்சயமாக நாம் எங்கள் மூதாதைகளை ஒரு கொள்கையில் கண்டோம். நிச்சயமாக நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளை பின்பற்றி நடப்போம். (உமது மார்க்கத்தை நாங்கள் பின்பற்ற மாட்டோம்.)” என்றுதான் கூறி இருக்கிறார்கள். (ஆக, நபியே! முன்சென்ற மக்கள் தங்களது தூதர்களுக்கு கூறியதைத்தான் உமது மக்களும் கூறுகிறார்கள்.)"},{"id":24,"translation":"(நமது தூதர்) கூறினார்: “நீங்கள் உங்கள் மூதாதைகளை எதன்மீது கண்டீர்களோ அதைவிட மிகச் சிறந்த நேர்வழியை நான் உங்களிடம் கொண்டு வந்தாலுமா (நீங்கள் என்னைப் பின்பற்ற மறுப்பீர்கள்)?” அதற்கு அவர்கள் கூறினார்கள்: “நீங்கள் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டீர்களோ (அது எதுவாக இருந்தாலும் சரி) அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிப்போம்.”"},{"id":25,"translation":"ஆகவே, அவர்களிடம் நாம் பழிவாங்கினோம். ஆக, பொய்ப்பித்தவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று (நபியே!) நீர் கவனிப்பீராக!"},{"id":26,"translation":"இன்னும், (நபியே!) தனது தந்தைக்கும் தனது மக்களுக்கும் இப்ராஹீம் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக: “நீங்கள் வணங்குகின்ற அனைத்தையும் விட்டும் நிச்சயமாக நான் முற்றிலும் நீங்கியவன்,”"},{"id":27,"translation":"“என்னைப் படைத்த (இறை)வனைத் தவிர. (அவனை மட்டுமே நான் வணங்குவேன்.) ஆக, நிச்சயமாக அவன் எனக்கு நேர்வழி காட்டுவான்.”"},{"id":28,"translation":"இன்னும், இதை (-அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை என்ற தூய கொள்கையை) தனது சந்ததிகளில் நீடித்து நிற்கின்ற ஒரு (கொள்கை) வாக்கியமாக அவர் ஆக்கினார், அவர்கள் (எல்லா தவறான கொள்கையிலிருந்து விலகி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் பக்கம்) திரும்ப வேண்டும் என்பதற்காக."},{"id":29,"translation":"(இவர்களை நாம் உடனே அழிக்கவில்லை.) மாறாக, இவர்களுக்கும் இவர்களின் மூதாதைகளுக்கும் நாம் சுகமான வாழ்க்கையைக் கொடுத்தோம். இறுதியாக, உண்மையான வேதம் அவர்களிடம் வந்தது. இன்னும், தெளிவான தூதரும் அவர்களிடம் வந்தார்."},{"id":30,"translation":"இன்னும், அவர்களிடம் உண்மையான வேதம் (அல்குர்ஆன்) வந்தபோது, “இது சூனியம்” என்றும் “நிச்சயமாக நாங்கள் இதை நிராகரிக்கக் கூடியவர்கள்” என்றும் கூறினார்கள்."},{"id":31,"translation":"இன்னும், “இந்த குர்ஆன் (மக்கா இன்னும் தாயிஃப் ஆகிய) இந்த இரண்டு ஊர்களில் உள்ள (வசதி படைத்த) ஒரு பெரிய மனிதர் மீது இறக்கப்பட்டிருக்க வேண்டாமா!” என்று அவர்கள் கூறுகிறார்கள்."},{"id":32,"translation":"அவர்கள் உமது இறைவனின் அருளை (தமது விருப்பப்படி) பங்கு வைக்கின்றனரா? நாம்தான் அவர்களுக்கு மத்தியில் அவர்களது வாழ்வாதாரத்தை இவ்வுலக வாழ்க்கையில் பங்குவைத்தோம். அவர்களில் சிலரை சிலருக்கு மேலாக (செல்வத்திலும் பதவியிலும்) தகுதிகளால் உயர்த்தினோம். காரணம், அவர்களில் சிலர் சிலரை (தங்களுக்கு) பணியாளராக எடுத்துக் கொள்வதற்காக. (இப்படி நாம் ஆக்கியதால் ஒருவர் மூலமாக ஒருவர் பயன் பெறுகிறார்.) உமது இறைவனின் (சொர்க்கம் என்ற மறுமை) அருள்தான் (இவ்வுலக செல்வங்களில்) அவர்கள் எதை சேகரிக்கிறார்களோ அதைவிட மிகச் சிறந்ததாகும்."},{"id":33,"translation":"மக்கள் எல்லாம் (குஃப்ர் - நிராகரிப்பில் மாறிவிடுவார்கள், நிராகரிக்கின்ற) ஒரே ஒரு சமுதாயமாக ஆகிவிடுவார்கள் என்று இல்லையெனில் ரஹ்மானை நிராகரிப்பவர்களுக்கு - அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன முகடுகளையும் ஏணிகளையும் நாம் ஆக்கியிருப்போம். அவற்றின் மீது (-அந்த ஏணிகளின் மீது) அவர்கள் (தங்கள் வீட்டு மாடிகளுக்கு) ஏ(றி மக்கள் முன் தோன்)றுவார்கள்."},{"id":34,"translation":"இன்னும். அவர்களின் வீடுகளுக்கு வெள்ளியினால் ஆன கதவுகளையும் அவற்றின் மீது அவர்கள் சாய்ந்து படுக்கும்படியான கட்டில்களையும் நாம் ஆக்கியிருப்போம்."},{"id":35,"translation":"இன்னும், (வெள்ளி மட்டுமல்ல,) தங்கத்தையும் (நாம் அவர்களுக்கு சொந்தமாக்கி இருப்போம்.) இவை எல்லாம் உலக வாழ்க்கையின் இன்பங்களே தவிர வேறு இல்லை. உமது இறைவனிடம் உள்ள மறுமை(யின் சொர்க்க வாழ்க்கை)யோ இறையச்சமுள்ளவர்களுக்கு இருக்கிறது."},{"id":36,"translation":"யார் ரஹ்மானை நினைவு கூர்வதை(யும் அவனுடைய வேதத்தையும்) புறக்கணிப்பாரோ (-அவனது அத்தாட்சிகளைப் பார்த்து நம்பிக்கை கொள்ள மறுப்பாரோ) அவருக்கு ஒரு ஷைத்தானை நாம் சாட்டிவிடுவோம். ஆக, அவன் அவருக்கு (இணைபிரியா) நண்பனாக ஆகிவிடுவான்."},{"id":37,"translation":"நிச்சயமாக இவர்கள் (-இந்த ஷைத்தான்கள்) அவர்களை (-இணைவைப்பவர்களை நேரான) பாதையில் இருந்து தடுக்கிறார்கள். இன்னும், அ(ந்த இணைவைப்ப)வர்கள் நிச்சயமாக தாங்கள் நேர்வழி நடப்பவர்கள்தான் என்று எண்ணுகிறார்கள்."},{"id":38,"translation":"இறுதியாக, (-ரஹ்மானின் நினைவை புறக்கணித்து வாழ்ந்த) அவன் நம்மிடம் வரும்போது, (தன்னை வழிகெடுத்த ஷைத்தானை நோக்கி) எனக்கு மத்தியிலும் உனக்கு மத்தியிலும் கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடைப்பட்ட தூரம் இருக்க வேண்டுமே! என்று கூறுவான். அவன் (-ஷைத்தான்) மிகக் கெட்ட நண்பன் ஆவான்."},{"id":39,"translation":"நீங்கள் (இறைவனுக்கு இணைவைத்து) அநியாயம் செய்த காரணத்தால் நிச்சயமாக (வழிகெடுத்த) நீங்கள் (இன்னும், உங்களை பின்பற்றி வழிகெட்டவர்கள் எல்லோருமாக) தண்டனையில் இணைந்திருப்பது இன்றைய தினம் உங்களுக்கு அறவே பலனளிக்காது. (நரக தண்டனை உங்களுக்கு இடையில் பங்கிட்டுக் கொடுக்கப்படாமல், ஒவ்வொருவருக்கும் முழுமையான தண்டனை கொடுக்கப்படும்.)"},{"id":40,"translation":"ஆக, (அல்லாஹ்வின் வேத ஆதாரங்களை செவி ஏற்க முடியாமல் யாரை அல்லாஹ் செவிடர்களாகவும் அவனது அத்தாட்சிகளை பார்க்கமுடியாமல் யாரை அல்லாஹ் குருடர்களாகவும் ஆக்கிவிட்டானோ) அந்த செவிடர்களை நீர் செவி ஏற்க வைக்க முடியுமா? அல்லது அந்த குருடர்களையும் தெளிவான வழிகேட்டில் இருப்பவர்களையும் நீர் நேர்வழி செலுத்திட முடியுமா?"},{"id":41,"translation":"ஆகவே, (நபியே!) ஒன்று நிச்சயமாக உம்மை நாம் மரணிக்கச் செய்வோம். பிறகு, நிச்சயமாக நாம் அவர்களிடம் பழிவாங்குவோம்."},{"id":42,"translation":"அல்லது, நாம் அவர்களுக்கு எச்சரித்ததை (-தண்டனையை) நாம் உமக்கு (உமது வாழ்நாளிலேயே) காண்பிப்போம். ஆக, நிச்சயமாக நாம் அவர்கள் மீது முழு ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்!"},{"id":43,"translation":"ஆகவே, (நபியே!) உமக்கு வஹ்யி அறிவிக்கப்பட்ட(இந்த வேதத்)தை உறுதியாக பற்றிப்பிடிப்பீராக! நிச்சயமாக நீர் நேரான பாதையில் இருக்கிறீர்."},{"id":44,"translation":"நிச்சயமாக இ(ந்த வேதமான)து உமக்கும் உமது மக்களுக்கும் ஒரு (பெரிய) சிறப்பாகும். (இதன் படி நீங்கள் அமல் செய்தது பற்றி) உங்களிடம் விரைவில் விசாரிக்கப்படும்."},{"id":45,"translation":"(நபியே!) உமக்கு முன்னர் நாம் அனுப்பிய நமது தூதர்க(ளின் சமுதாயத்தை சேர்ந்த உண்மை நம்பிக்கையாளர்க)ளை நீர் விசாரிப்பீராக! “ரஹ்மானை அன்றி வணங்கப்படுகின்ற (வேறு) தெய்வங்களை நாம் (அவர்களுக்கு) ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோமா?” என்று."},{"id":46,"translation":"திட்டவட்டமாக நாம் மூஸாவை ஃபிர்அவ்ன் இன்னும் அவனது பிரமுகர்களிடம் நமது அத்தாட்சிகளுடன் அனுப்பினோம். ஆக, (அவர்களை நோக்கி) அவர் கூறினார்: “நிச்சயமாக நான் (உங்களுக்கு அனுப்பப்பட்ட) அகிலங்களின் இறைவனுடைய தூதர் ஆவேன்.”"},{"id":47,"translation":"ஆக, அவர்களிடம் அவர் நமது அத்தாட்சிகளுடன் வந்தபோது, அப்போது அவர்கள் அவற்றைப் பார்த்து (கேலியாக) சிரித்தார்கள்."},{"id":48,"translation":"அவர்களுக்கு நாம் ஓர் அத்தாட்சியைக் காண்பிக்க மாட்டோம், அது அதற்கு முன்பு வந்த அத்தாட்சியை விட பெரியதாக இருந்தே தவிர. இன்னும், நாம் அவர்களை தண்டனையால் பிடித்தோம், அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக."},{"id":49,"translation":"அவர்கள் கூறினார்கள்: “ஓ மந்திரவாதியே! (-ஓ அறிஞரே! உமது இறைவன்) உம்மிடம் செய்த உடன்படிக்கையை (-கேட்டு; அல்லது, இந்த தண்டனையை நீக்குமாறு) உமது இறைவனிடம் எங்களுக்காக நீர் பிரார்த்திப்பீராக! நிச்சயமாக நாங்கள் நேர்வழி பெறுவோம்.”"},{"id":50,"translation":"ஆக, அவர்களை விட்டும் நாம் தண்டனையை அகற்றும்போது அப்போது அவர்கள் (மூஸாவிற்குக் கொடுத்த வாக்கை) முறித்து விடுகிறார்கள்."},{"id":51,"translation":"இன்னும், ஃபிர்அவ்ன் தனது மக்களை அழைத்தான்: “என் மக்களே! எகிப்துடைய ஆட்சி எனக்கு சொந்தமானதாக இல்லையா? இந்த ஆறுகள் (என்னைச் சுற்றி) எனக்கு முன்னால் ஓடுகின்றன. ஆக, நீங்கள் (இவற்றை) உற்று நோக்கவில்லையா?” என்று கூறினான்."},{"id":52,"translation":"இந்த பலவீனமானவரை விட, தெளிவாக பேசமுடியாதவரை விட நான் சிறந்தவன்தானே?"},{"id":53,"translation":"ஆக, அவர் மீது தங்கத்தினால் ஆன காப்புகள் அணிவிக்கப்பட வேண்டாமா? அல்லது, வானவர்கள் அவருடன் சேர்ந்தவர்களாக (நம்மிடம்) வர வேண்டாமா!"},{"id":54,"translation":"ஆக, அவன் தனது மக்களை (மிகவும்) அற்பமாகக் கருதினான். ஆக, அவர்கள் அவனுக்கு கீழ்ப்படிந்தனர். நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்."},{"id":55,"translation":"ஆக, அவர்கள் நம்மை கோபமூட்டவே நாம் அவர்களிடம் பழிவாங்கினோம். ஆகவே, அவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்."},{"id":56,"translation":"ஆக, அவர்களை (நிராகரிப்பாளர்களுக்கு) முன்னோடிகளாகவும் மற்றவர்களுக்கு படிப்பினையாகவும் நாம் ஆக்கினோம்."},{"id":57,"translation":"மர்யமின் மகன் ஓர் உதாரணமாக விவரிக்கப்பட்டபோது, அப்போது உமது மக்கள் அதன் காரணமாக பதறிப்போய் கூச்சல் போடுகிறார்கள். (கிறித்தவர்கள் ஈஸாவை வணங்குவது போன்று முஹம்மதை நாம் வணங்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார் போலும் என்று பேச ஆரம்பித்தனர்.)"},{"id":58,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்கள் கடவுள்கள் சிறந்தவர்களா? அல்லது அவர் (முஹம்மத்) சிறந்தவரா? (எங்கள் கடவுள்களே சிறந்தவை. எனவே, நாங்கள் அவற்றையே வணங்குவோம்.)” தர்க்கம் செய்வதற்காகவே தவிர அவரை (-ஈஸாவை) அவர்கள் உமக்கு உதாரணமாக பேசவில்லை. மாறாக, அவர்கள் (எப்போதுமே) வாக்குவாதம் செய்யக்கூடிய மக்கள் ஆவர்."},{"id":59,"translation":"(ஈஸா) அவர்மீது நாம் அருள் புரிந்த ஓர் அடியாராகவே தவிர அவர் (கடவுளோ, கடவுளின் மகனோ இல்லை.) இன்னும், நாம் அவரை இஸ்ரவேலர்களுக்கு ஓர் அத்தாட்சியாக ஆக்கினோம்."},{"id":60,"translation":"இன்னும், நாம் நாடினால் (உங்களை அழித்துவிட்டு) உங்களுக்குப் பதிலாக வானவர்களை இந்த பூமியில் (ஒரு தலைமுறைக்கு பின்னர் ஒரு தலைமுறையாக) வசிப்பவர்களாக ஆக்கியிருப்போம்."},{"id":61,"translation":"(நபியே! அவர்களை நோக்கி கூறுவீராக!) “நிச்சயமாக அவர் (-ஈஸா) மறுமையின் அடையாளம் ஆவார். ஆகவே, அ(ந்த மறுமை நிகழ்வ)தில் நீங்கள் அறவே சந்தேகிக்காதீர்கள். இன்னும், என்னை பின்பற்றுங்கள்! இது, நேரான பாதையாகும்.”"},{"id":62,"translation":"“இன்னும், ஷைத்தான் (இந்த நேரான பாதையை விட்டு) உங்களை தடுத்துவிட வேண்டாம். நிச்சயமாக அவன் உங்களுக்கு தெளிவான எதிரி ஆவான்.”"},{"id":63,"translation":"தெளிவான அத்தாட்சிகளுடன் ஈஸா வந்தபோது அவர் கூறினார்: “திட்டமாக நான் உங்களிடம் ஞான(மிகுந்த வேத)த்தை கொண்டுவந்துள்ளேன். இன்னும், நீங்கள் எதில் கருத்து வேற்றுமை கொள்கிறீர்களோ அதில் (சரியான) சிலவற்றை உங்களுக்கு விவரிப்பதற்காகவும் வந்துள்ளேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், எனக்குக் கீழ்ப்படியுங்கள்!”"},{"id":64,"translation":"“நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும் உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, அவனையே வணங்குங்கள்! இது, நேரான பாதையாகும்.”"},{"id":65,"translation":"ஆக, (வழிகெட்ட) பிரிவினர்கள் தங்களுக்கு மத்தியில் (ஈஸாவின் விஷயத்தில்) தர்க்கித்தனர். ஆக, மிகவும் வலி தரக்கூடிய நாளுடைய தண்டனையினால் அநியாயக்காரர்களுக்கு நாசம் உண்டாகட்டும்."},{"id":66,"translation":"அவர்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் மறுமை அவர்களிடம் திடீரென்று வருவதைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கிறார்களா?"},{"id":67,"translation":"இறையச்சமுள்ளவர்களைத் தவிர நண்பர்கள் எல்லாம் அந்நாளில் அவர்களில் சிலர், சிலருக்கு எதிரிகளாக இருப்பார்கள்."},{"id":68,"translation":"(இறையச்சமுள்ள) என் அடியார்களே! இன்று உங்களுக்கு பயமில்லை. இன்னும் நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள்."},{"id":69,"translation":"(என் அடியார்கள்) எத்தகையோர் என்றால் அவர்கள் நமது வசனங்களை நம்பிக்கை கொண்டனர். இன்னும், அவர்கள் (நமக்கு முற்றிலும் பணிந்து நடக்கின்ற) முஸ்லிம்களாக இருந்தார்கள்."},{"id":70,"translation":"நீங்களும் உங்கள் மனைவிகளும் (ஈமான் கொண்ட உங்களைப் போன்றவர்கள் எல்லோரும்) சொர்க்கத்தில் நுழையுங்கள். (அதில்) நீங்கள் மகிழ்விக்கப்படுவீர்கள்!"},{"id":71,"translation":"தங்கத்தினால் ஆன தட்டுகளுடனும், குவளைகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும். இன்னும், அதில் (அவர்களது) மனங்கள் விரும்புகின்றவையும் கண்கள் இன்புறுகின்றவையும் அவர்களுக்கு உண்டு. (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பீர்கள்."},{"id":72,"translation":"இதுதான், நீங்கள் செய்துகொண்டிருந்த நன்மைகளின் காரணமாக உங்களுக்கு சொந்தமாக்கி வைக்கப்பட்ட சொர்க்கமாகும்."},{"id":73,"translation":"உங்களுக்கு அதில் அதிகமான (-வகை வகையான) பழங்கள் உண்டு. அவற்றில் இருந்து நீங்கள் (மனமாற) உண்பீர்கள்."},{"id":74,"translation":"நிச்சயமாக குற்றவாளிகள் நரகத்தின் தண்டனையில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":75,"translation":"அவர்களை விட்டும் தண்டனை குறைக்கப்படாது. இன்னும், அவர்கள் அ(ந்த தண்டனைகள் குறைக்கப்படும் என்ப)தில் நம்பிக்கை இழந்திருப்பார்கள்."},{"id":76,"translation":"நாம் அவர்களுக்கு அநியாயம் செய்யவில்லை. எனினும், அவர்கள்தான் முற்றிலும் அநியாயக்காரர்களாக இருந்தார்கள்."},{"id":77,"translation":"இன்னும், “மாலிக்கே! உமது இறைவன் எங்களை அழித்துவிடட்டும்!” என்று கூறி அவர்கள் (நரகத்தின் காவலாளியான மாலிக்கை) அழைப்பார்கள். அவர் (அப்போது உடனே பதில் தராமல், ஆயிரம் ஆண்டுகள் கழித்து பதில்) கூறுவார்: “நீங்கள் (இதில் நிரந்தரமாக) தங்குவீர்கள்! (உங்களுக்கு இங்கு மரணமில்லை)”"},{"id":78,"translation":"திட்டவட்டமாக நாம் உங்களிடம் உண்மையைக் கொண்டு வந்தோம். என்றாலும், உங்களில் அதிகமானவர்கள் இந்த உண்மையை வெறுக்கிறீர்கள்."},{"id":79,"translation":"(இந்த உண்மைக்கு எதிராக) ஒரு காரியத்தை அவர்கள் முடிவு செய்து விட்டார்களா? நிச்சயமாக நாங்கள்தான் (அவர்களை இழிவுபடுத்தும் காரியத்தை) முடிவு செய்யப்போகிறோம்."},{"id":80,"translation":"நாம் அவர்களின் இரகசிய பேச்சையும் அவர்கள் கூடி (ஒன்றாக)ப் பேசுவதையும் செவியுற மாட்டோம் என்று அவர்கள் எண்ணுகிறார்களா? ஏன் இல்லை, நமது (வானவத்) தூதர்கள் அவர்களிடம் இருந்தவர்களாக (அவர்கள் தனிமையில்; அல்லது, சபையில் பேசுகின்ற அனைத்தையும்) பதிவு செய்கிறார்கள்."},{"id":81,"translation":"(நபியே!) கூறுவீராக! “ரஹ்மான் – பேரருளாளனாகிய அல்லாஹ்விற்கு குழந்தை இருக்குமேயானால் (அதை) வணங்குபவர்களில் முதலாமவனாக நான் இருந்திருப்பேன்.”"},{"id":82,"translation":"வானங்கள் இன்னும் பூமியின் அதிபதி, அர்ஷுடைய அதிபதி(யாகிய அவன்) அவர்கள் வர்ணிக்கின்ற (இந்த பொய்யான) வர்ணிப்புகளை விட்டும் மிகப் பரிசுத்தமானவன்."},{"id":83,"translation":"ஆகவே, (நபியே!) அவர்களை விடுங்கள்! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கட்டும், (தங்கள் உலக வாழ்க்கையில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்படுகின்ற அவர்களது (தண்டனையின்) நாளை அவர்கள் சந்திப்பார்கள்."},{"id":84,"translation":"அவன் வானத்திலும் வணங்கப்படும் இறைவனாக, பூமியிலும் வணங்கப்படும் இறைவனாக இருக்கிறான். அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":85,"translation":"வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் ஆட்சி எவனுக்கு உரியதோ அ(ந்த இறை)வன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்தானவன் ஆவான். இன்னும், அவனிடமே மறுமையின் அறிவு இருக்கிறது. இன்னும், அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":86,"translation":"அவனை அன்றி அவர்கள் எவர்களை அழைக்கிறார்களோ அவர்கள் (அல்லாஹ்விடம் யாருக்கும்) சிபாரிசு செய்வதற்கு உரிமை பெற மாட்டார்கள். ஆனால், எவர்கள் (அல்லாஹ்தான் வணக்கத்திற்குரியவன் என்ற) உண்மைக்கு - அவர்கள் (அதை) நன்கு அறிந்தவர்களாக - சாட்சி கூறினார்களோ (-அல்லாஹ்வை மட்டும் வணங்கி அவனுக்கு எதையும் இணைவைக்காமல், சிபாரிசை அல்லாஹ்விடம் மட்டும் எதிர்பார்த்து இருந்தார்களோ) அவர்களுக்குத்தான் (வானவர்களும் நல்லவர்களும் அல்லாஹ்வின் அனுமதிகொண்டு) சிபாரிசு செய்வார்கள். (அவர்களை வணங்கியவர்களுக்கு அல்ல.)"},{"id":87,"translation":"அவர்களை யார் படைத்தான் என்று நீர் அவர்களிடம் கேட்டால், நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள்: “அல்லாஹ்” என்று. (அப்படி இருக்க) அவர்கள் (அவனை வணங்குவதில் இருந்து) அவர்கள் எப்படி திருப்பப்படுகிறார்கள்!"},{"id":88,"translation":"இன்னும், “என் இறைவா! நிச்சயமாக இவர்கள் நம்பிக்கை கொள்ளாத மக்கள் ஆவார்கள்” என்ற அவருடைய (-தூதருடைய) கூற்றின் அறிவும் அவனிடம்தான் இருக்கிறது."},{"id":89,"translation":"ஆகவே, (நபியே!) அவர்களை புறக்கணிப்பீராக! இன்னும், (அவர்களுக்கு) ஸலாம் கூறிவிடுவீராக! ஆக, அவர்கள் விரைவில் (அவர்களின் தண்டனையை) அறிவார்கள்."}]},{"id":44,"verses":[{"id":1,"translation":"ஹா மீம்."},{"id":2,"translation":"தெளிவான இந்த வேதத்தின் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"நிச்சயமாக நாம் அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய) ஓர் இரவில் இதை இறக்கினோம். நிச்சயமாக நாம் அச்சமூட்டி எச்சரிப்பவர்களாக இருந்தோம்."},{"id":4,"translation":"இதில்தான் ஞானமிக்க எல்லாக் காரியங்களும் முடிவு செய்யப்படுகின்றன,"},{"id":5,"translation":"நம்மிடமிருந்து வருகின்ற கட்டளையின்படி. நிச்சயமாக நாம் (அவரை) தூதராக அனுப்பக் கூடியவர்களாகவே இருந்தோம்,"},{"id":6,"translation":"(அவர்) உமது இறைவனின் ஓர் அருளாக இருக்கவேண்டும் என்பதற்காக. நிச்சயமாக அவன்தான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்."},{"id":7,"translation":"வானங்கள், பூமி, இன்னும் அவை இரண்டிற்கும் இடையில் உள்ளவற்றின் அதிபதி(யிடமிருந்து அவர் அருளாக அனுப்பப்பட்டு இருக்கிறார்). நீங்கள் (உண்மைகளை) உறுதியாக நம்பக் கூடியவர்களாக இருந்தால் (இதை உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்)!"},{"id":8,"translation":"அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்க வைக்கிறான்; அவன்தான் உங்கள் இறைவனும் முன்னோர்களான உங்கள் மூதாதைகளின் இறைவனும் ஆவான்."},{"id":9,"translation":"மாறாக, அவர்கள் (இந்த வேதத்தை நம்பிக்கை கொள்ளாமல்) சந்தேகத்தில் இருக்கிறார்கள்; (வீண் கேளிக்கைகளில்) விளையாடுகிறார்கள்."},{"id":10,"translation":"ஆக, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வருகின்ற நாளை எதிர்பார்ப்பீராக!"},{"id":11,"translation":"அது மக்களை சூழ்ந்துகொள்ளும். இது துன்புறுத்தும் தண்டனையாகும்."},{"id":12,"translation":"“எங்கள் இறைவா! எங்களை விட்டு தண்டனையை நீக்கி விடுவாயாக! நிச்சயமாக நாங்கள் (உன்னை நம்பிக்கை கொண்ட) நம்பிக்கையாளர்கள் ஆவோம்” (என்று அழுது பிரலாபிப்பார்கள்)."},{"id":13,"translation":"(தண்டனை வந்த பின்னர்) நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி பலன் தரும்? திட்டமாக அவர்களிடம் தெளிவான ஒரு தூதர் வந்தார்."},{"id":14,"translation":"பிறகு, அவர்கள் அவரை விட்டு விலகி சென்று விட்டனர். இன்னும், (பிற மனிதர்களால் இந்த வேதத்தை) கற்பிக்கப்பட்டவர், பைத்தியக்காரர் என்று (அவரைப் பற்றி) கூறினார்கள்."},{"id":15,"translation":"நிச்சயமாக நாம் இந்த தண்டனையை கொஞ்சம் நீக்குவோம். (ஆனால்,) நிச்சயமாக நீங்கள் (உங்கள் வழிகேட்டின் பக்கமே) திரும்புவீர்கள்."},{"id":16,"translation":"பெரிய தாக்குதலாக (அவர்களை) நாம் தாக்குகின்ற நாளில் (அவர்களிடம்) நிச்சயமாக நாம் பழி வாங்குவோம்."},{"id":17,"translation":"இவர்களுக்கு முன்னர் நாம் ஃபிர்அவ்னுடைய மக்களை திட்டவட்டமாக சோதித்தோம். இன்னும், அவர்களிடம் கண்ணியமான ஒரு தூதர் வந்தார்."},{"id":18,"translation":"(அவர் கூறினார்:) “நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள்! நிச்சயமாக நான் உங்களுக்கு (அனுப்பப்பட்ட) நம்பிக்கைக்குரிய தூதர் ஆவேன்.”"},{"id":19,"translation":"“இன்னும், நிச்சயமாக அல்லாஹ்விற்கு முன் பெருமை அடிக்காதீர்கள்! (அவனது அடியார்கள் மீது அழிச்சாட்டியம் செய்யாதீர்கள்.) நிச்சயமாக நான் உங்களிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு வருவேன்.”"},{"id":20,"translation":"“இன்னும், நிச்சயமாக நான் எனது இறைவனிடம்; இன்னும், உங்கள் இறைவனிடம் நீங்கள் என்னைக் கொல்வதில் இருந்து பாதுகாவல் தேடினேன்.”"},{"id":21,"translation":"“நீங்கள் என்னை நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் என்னை விட்டு விலகி சென்று விடுங்கள்.”"},{"id":22,"translation":"ஆக, அவர் தனது இறைவனை அழைத்தார்: “நிச்சயமாக இவர்கள் (உனக்கு எதிராக) குற்றம் செய்கின்ற மக்கள் ஆவார்கள்.”"},{"id":23,"translation":"(இறைவன் கூறினான்:) “ஆக, என் அடியார்களை இரவில் நீர் அழைத்துச் செல்வீராக. நிச்சயமாக நீங்கள் (உங்கள் எதிரிகளால்) பின்தொடரப்படுவீர்கள்.”"},{"id":24,"translation":"இன்னும், கடலை (அது) அமைதியாக (இருக்கின்ற நிலையில் அப்படியே) விட்டுவிடுங்கள்! நிச்சயமாக அவர்கள் மூழ்கடிக்கப்படுகின்ற ராணுவம் ஆவார்கள்."},{"id":25,"translation":"அவர்கள் எத்தனையோ தோட்டங்களையும் ஊற்றுகளையும் விட்டுச்சென்றார்கள்."},{"id":26,"translation":"இன்னும், விவசாய நிலங்களையும் கண்ணியமான இடங்களையும் (-மாட மாளிகைகளையும் விட்டுச்சென்றார்கள்.)"},{"id":27,"translation":"இன்னும், அவர்கள் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்த வசதிகளையும் விட்டுச்சென்றார்கள்."},{"id":28,"translation":"இப்படித்தான் (உமது இறைவனின் தண்டனை வந்தால் பாவிகளின் நிலை இருக்கும்). இன்னும், இவற்றை (எல்லாம்) வேறு மக்களுக்கு நாம் சொந்தமாக்கினோம்."},{"id":29,"translation":"ஆக, அவர்கள் மீது வானமும் பூமியும் அழவில்லை. அவர்கள் (பாவமன்னிப்பு தேடுவதற்கு) அவகாசம் கொடுக்கப்படுபவர்களாகவும் இருக்கவில்லை."},{"id":30,"translation":"இழிவுபடுத்தும் தண்டனையிலிருந்து இஸ்ரவேலர்களை திட்டவட்டமாக நாம் காப்பாற்றினோம்."},{"id":31,"translation":"ஃபிர்அவ்னிடமிருந்து (அவர்களை பாதுகாத்தோம்). நிச்சயமாக அவன் பெருமை அடிப்பவனாக (-அழிச்சாட்டியம் செய்பவனாக), வரம்புமீறிகளில் ஒருவனாக இருந்தான்."},{"id":32,"translation":"இன்னும், (-இஸ்ரவேலர்களின் தகுதியை) அறிந்தே (அக்கால) மக்களை விட அவர்களை திட்டவட்டமாக நாம் தேர்ந்தெடுத்தோம்."},{"id":33,"translation":"இன்னும், தெளிவான (பல வகையான) சோதனைகள் உள்ள அத்தாட்சிகளை அவர்களுக்கு நாம் கொடுத்தோம்."},{"id":34,"translation":"(நபியே!) நிச்சயமாக (உமது மக்களாகிய) இவர்கள் கூறுகிறார்கள்:"},{"id":35,"translation":"“இது நமது முதல் மரணமாகவே தவிர இல்லை. இன்னும், நாங்கள் (மரணித்த பின்னர் மீண்டும் உயிர்கொடுத்து) எழுப்பப்படுபவர்களாக இல்லை.”"},{"id":36,"translation":"“ஆகவே, (முஹம்மதே!) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளை (உயிர்ப்பித்து)க் கொண்டு வாருங்கள்!”"},{"id":37,"translation":"இவர்கள் சிறந்தவர்களா? அல்லது, துப்பஃ உடைய மக்களா? இன்னும், இவர்களுக்கு முன்னுள்ளவர்களா? அவர்களை (எல்லாம்) நாம் அழித்துவிட்டோம். நிச்சயமாக அவர்கள் குற்றவாளிகளாக இருந்தனர்."},{"id":38,"translation":"இன்னும், வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் இடையில் உள்ளவற்றையும் விளையாடுபவர்களாக நாம் படைக்கவில்லை."},{"id":39,"translation":"நாம் அவ்விரண்டையும் உண்மையான காரணத்திற்கே தவிர படைக்கவில்லை. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (இதை) அறியமாட்டார்கள்."},{"id":40,"translation":"நிச்சயமாக தீர்ப்பு நாள் இவர்கள் அனைவரின் (தண்டனைக்காக) நேரம் குறிக்கப்பட்ட நாளாகும்."},{"id":41,"translation":"அந்நாளில் நண்பன், நண்பனை விட்டு (உறவுக்காரன் உறவுக்காரனை விட்டு தண்டனையில்) எதையும் தடுக்க மாட்டான். இன்னும், அவர்கள் (ஆதரவு வைத்த யாராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்."},{"id":42,"translation":"அல்லாஹ் எவர்கள் மீது கருணை புரிந்தானோ அவர்களைத் தவிர. (மற்றவர் யாரும் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது). நிச்சயமாக அவன்தான் மிகைத்தவன், மகா கருணையாளன்."},{"id":43,"translation":"நிச்சயமாக ஸக்கூம் மரம்"},{"id":44,"translation":"பாவிகளின் உணவாகும்."},{"id":45,"translation":"உருக்கப்பட்ட செம்பைப் போல், வயிறுகளில் அது கொதித்துக் கொண்டிருக்கும்,"},{"id":46,"translation":"கடுமையாக கொதிக்கின்ற தண்ணீர் கொதிப்பதைப் போல்."},{"id":47,"translation":"அவனைப் பிடியுங்கள்! ஆக, நரகத்தின் நடுவில் அவனை இழுத்து வாருங்கள்!"},{"id":48,"translation":"பிறகு, அவனது தலைக்கு மேல் கொதிக்கின்ற நீரை ஊற்றுங்கள். (அதன் தண்டனை அவனை விட்டு பிரியாமல் இருக்கும்.)"},{"id":49,"translation":"நீ (இந்த தண்டனைகளை) சுவை! நிச்சயமாக நீதான் கண்ணியமானவன் மதிப்பிற்குரியவன்."},{"id":50,"translation":"நிச்சயமாக, நீங்கள் சந்தேகிப்பவர்களாக இருந்தது இதுதான்."},{"id":51,"translation":"நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் பாதுகாப்பான இடத்தில்,"},{"id":52,"translation":"சொர்க்கங்களில், ஊற்றுகளில் இருப்பார்கள்."},{"id":53,"translation":"அவர்கள் மென்மையான, தடிப்பமான பட்டு ஆடைகளை அணிவார்கள். ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்."},{"id":54,"translation":"இவ்வாறுதான் (அவர்கள் சொர்க்கத்தில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்). இன்னும், நாம் அவர்களுக்கு கண்ணழகிகளான வெண்மையான கன்னிகளை மணமுடித்து வைப்போம்."},{"id":55,"translation":"அதில் எல்லா (வகையான)ப் பழங்களையும் (அவர்கள் உண்பதற்கு அவர்களின் பணியாளர்களிடம்) கேட்பார்கள். அவர்கள் (நிம்மதியாக) பாதுகாப்புப் பெற்றவர்களாக இருப்பார்கள்."},{"id":56,"translation":"அதில் மரணத்தை அவர்கள் சுவைக்க மாட்டார்கள், (உலகத்தில் அவர்கள் மரணித்த) முதல் மரணத்தைத் தவிர. (சொர்க்கத்தில் மரணம் இருக்காது.) இன்னும், நரகத்தின் தண்டனையை விட்டும் அவன் அவர்களைப் பாதுகாத்தான்."},{"id":57,"translation":"உமது இறைவனின் அருளினால் (இவை எல்லாம் அவர்களுக்குக் கிடைக்கப் பெறும்). இதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":58,"translation":"ஆக, உமது (அரபி) மொழியில் இ(ந்த வேதத்)தை (கற்பதையும் கற்பிப்பதையும்) நாம் இலகுவாக்கி வைத்ததெல்லாம் அவர்கள் நல்லுபதேசம் பெறுவதற்காகத்தான்."},{"id":59,"translation":"ஆக, நீர் எதிர்பார்த்திருப்பீராக! நிச்சயமாக அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்."}]},{"id":45,"verses":[{"id":1,"translation":"ஹா மீம்."},{"id":2,"translation":"மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டது."},{"id":3,"translation":"நிச்சயமாக வானங்கள், இன்னும் பூமியில் பல அத்தாட்சிகள் நம்பிக்கையாளர்களுக்கு இருக்கின்றன."},{"id":4,"translation":"இன்னும், (அல்லாஹ்வின் வல்லமையை) உறுதியாக நம்பிக்கை கொள்கின்ற மக்களுக்கு உங்களைப் படைத்திருப்பதிலும் உயிரினங்களை அவன் (படைத்து பூமியின் பல பாகங்களில் அவற்றை) பரப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":5,"translation":"இன்னும், சிந்தித்துப் புரிகின்ற மக்களுக்கு இரவு, பகல் மாறி மாறி வருவதிலும்; வானத்தில் இருந்து மழையை இறக்கி அதன் மூலம் பூமியை - அது இறந்த பின்னர் – உயிர்ப்பிப்பதிலும்; காற்றுகளை (பல திசைகளில்) திருப்புவதிலும் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":6,"translation":"இவை அல்லாஹ்வின் (வல்லமைகளை விவரிக்கும்) வசனங்களாகும். இவற்றை உம்மீது உண்மையாகவே நாம் ஓதுகிறோம். ஆக, அல்லாஹ்(வுடைய செய்திக்குப் பின்னர்) இன்னும், அவனது அத்தாட்சிகளுக்குப் பின்னர் எந்த செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?"},{"id":7,"translation":"அதிகம் பொய் பேசுகின்ற பெரும் பாவிகள் ஒவ்வொருவருக்கும் நாசம்தான்."},{"id":8,"translation":"அவன், தனக்கு முன் அல்லாஹ்வின் வசனங்கள் ஓதப்படுவதை செவியுறுகிறான். பிறகு, பெருமை பிடித்தவனாக அவனோ அவற்றை செவியுறாதவனைப் போல (நிராகரிப்பிலேயே) பிடிவாதம் பிடிக்கிறான். ஆக, துன்புறுத்தும் தண்டனையைக் கொண்டு அவனுக்கு நற்செய்தி கூறுவீராக!"},{"id":9,"translation":"இன்னும், நமது வசனங்களில் எதையும் அவன் அறிந்தால் அதை கேலியாக எடுத்துக்கொள்கிறான். அவர்கள், இழிவுதரும் தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":10,"translation":"அவர்களுக்கு முன்னால் நரகம் இருக்கிறது. அவர்கள் சம்பாதித்ததும் அல்லாஹ்வை அன்றி அவர்கள் எவற்றை (தங்கள்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொண்டார்களோ அவையும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. இன்னும், பெரிய (கடுமையான) தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":11,"translation":"இது நேர்வழியாகும். எவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்தார்களோ - அவர்களுக்கு, அதிகம் வலி தருகின்ற கடுமையான தண்டனை உண்டு."},{"id":12,"translation":"அல்லாஹ் எத்தகையவன் என்றால் அவன் உங்களுக்கு கடலை, - அதில் அவனது கட்டளைப்படி கப்பல்கள் செல்வதற்காகவும், அவனுடைய அருளிலிருந்து நீங்கள் (பொருளாதாரத்தை) தேடுவதற்காகவும், நீங்கள் (அவனுக்கு) நன்றி செலுத்துவதற்காகவும் – வசப்படுத்தினான்."},{"id":13,"translation":"இன்னும், வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் - இவை அனைத்தையும் - அவன் உங்களுக்கு தன் புறத்திலிருந்து வசப்படுத்தினான். சிந்திக்கின்ற மக்களுக்கு நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் உள்ளன."},{"id":14,"translation":"(நபியே!) நம்பிக்கையாளர்களுக்குக் கூறுவீராக! “(பாவிகளை அல்லாஹ் எப்படி தண்டிப்பான் என்று) அல்லாஹ்வின் நடவடிக்கைகளை பயப்படாதவர்களை அவர்கள் மன்னிப்பார்களாக.” இறுதியாக, (அழிச்சாட்டியமும் நம்பிக்கையாளர்களுக்கு தொந்தரவும் செய்து கொண்டிருந்த) ஒரு கூட்டத்தை அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களுக்காக அவன் (தகுந்த தண்டனையால்) தண்டிப்பான்."},{"id":15,"translation":"யார் ஒரு நன்மையை செய்வாரோ அது அவருக்குத்தான் நல்லது. இன்னும், எவர் தீமை செய்வாரோ அது அவருக்குத்தான் கேடாகும். பிறகு, நீங்கள் (யாராக இருந்தாலும்) உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்."},{"id":16,"translation":"இஸ்ரவேலர்களுக்கு வேதங்களையும் ஞானத்தையும் நபித்துவத்தையும் நாம் திட்டவட்டமாகக் கொடுத்தோம். இன்னும், நல்ல உணவுகளை அவர்களுக்கு நாம் வழங்கினோம். இன்னும், (அக்கால) மக்களை விட நாம் அவர்களை மேன்மைபடுத்தினோம்."},{"id":17,"translation":"இன்னும், இந்த மார்க்கத்தின் தெளிவான சட்டங்களை நாம் அவர்களுக்குக் கொடுத்தோம். ஆக, அவர்களிடம் கல்வி வந்த பின்னர், தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் அவர்கள் (தங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) கருத்து வேறுபாடு கொண்டார்கள். நிச்சயமாக உமது இறைவன் மறுமை நாளில் அவர்களுக்கு மத்தியில் அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டிருந்தவற்றில் தீர்ப்பளிப்பான்."},{"id":18,"translation":"பிறகு, நாம் உம்மை இந்த மார்க்கத்தின் (உறுதியான) தெளிவான சட்டங்கள் மீது அமைத்தோம். ஆகவே, அதை நீர் பின்பற்றுவீராக! அறியாதவர்களின் மன விருப்பங்களை நீர் பின்பற்றாதீர்!"},{"id":19,"translation":"நிச்சயமாக அவர்கள் உம்மை விட்டு அல்லாஹ்விடமிருந்து (-அவனது தண்டனையில் இருந்து) எதையும் அறவே தடுக்க மாட்டார்கள். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களில் சிலர் சிலருக்கு நண்பர்கள் ஆவார்கள். அல்லாஹ்வோ இறையச்சமுள்ளவர்களின் நண்பன் ஆவான்."},{"id":20,"translation":"இ(ந்த வேதமான)து மக்களுக்கு தெளிவான ஆதாரங்களாகவும் நேர்வழியாகவும் (அல்லாஹ்வை) உறுதியாக நம்பிக்கை கொள்கிற மக்களுக்கு கருணையாகவும் இருக்கிறது."},{"id":21,"translation":"பாவங்களை செய்தவர்கள் எண்ணுகிறார்களா, “நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்தவர்களைப் போன்று அவர்களை நாம் ஆக்குவோம்” என்று? இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் வாழ்க்கையையும் இ(ந்த இரு கூட்டத்த)வர்களின் மரணத்தையும் நாம் சமமாக ஆக்கிவிடுவோம் என்று எண்ணுகிறார்களா? (அவ்வாறு ஆக்கவே மாட்டோம். இவ்வுலகில் முஃமினாக இருந்தவர் இறக்கும்போதும் முஃமினாக இருப்பார், மறுமையிலும் முஃமினாக இருப்பார். இவ்வுலகில் காஃபிராக இருந்தவர் மறுமையிலும் காஃபிராகத்தான் இருப்பார்.) இவர்கள் எதை தீர்ப்பளிக்கிறார்களோ அது மிகக் கெட்ட தீர்ப்பாகும்."},{"id":22,"translation":"இன்னும், அல்லாஹ் வானங்களையும் பூமியையும் - உண்மையான காரணத்திற்காக (-அவனது வல்லமையை அடியார்கள் அறிவதற்காக)வும் ஒவ்வொரு ஆன்மாவும் அது எதை செய்ததோ அதற்குக் கூலி கொடுக்கப்படுவதற்காகவும் - படைத்தான். இன்னும், அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":23,"translation":"(நபியே!) தனது மனவிருப்பத்தை தனது கடவுளாக எடுத்துக் கொண்டவனைப் பற்றி நீர் அறிவிப்பீராக! இன்னும், (அவனுக்கு நேர்வழியின்) அறிவு வந்ததன் பின்னர் (அவன் அதை பின்பற்றாமல் தனது மனவிருப்பத்தை பின்பற்றியதால்) அல்லாஹ் அவனை வழிகெடுத்தான். இன்னும், அவனது செவியிலும் அவனது உள்ளத்திலும் அவன் முத்திரையிட்டான். இன்னும், அவனது பார்வையில் திரையை அவன் ஆக்கினான். ஆகவே, அல்லாஹ்விற்குப் பின்னர் (-அல்லாஹ் அவனை கைவிட்ட பின்னர்) யார் அவனுக்கு நேர்வழி காட்டுவார்? ஆக, நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?"},{"id":24,"translation":"அவர்கள் கூறினார்கள்: “இது நமது உலக வாழ்க்கையைத் தவிர (இதற்கு பின்னர் நமக்கு வாழ்க்கை) இல்லை. நாம் (சில காலம் கழித்து) மரணித்து விடுவோம். இன்னும், நாம் (இப்போது) உயிர் வாழ்கிறோம். (-நமக்குப் பின்னர் நமது பிள்ளைகள் இவ்வுலகில் உயிர்வாழ்வார்கள். இப்படியே உலகம் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும்.) காலத்தைத் தவிர நம்மை (வேறொன்றும்) அழிக்காது.” (நபியே!) இதைப் பற்றி அறவே அறிவு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீண் எண்ணம் எண்ணுபவர்களாகவே தவிர இல்லை."},{"id":25,"translation":"அவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதப்பட்டால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் எங்கள் மூதாதைகளைக் கொண்டு வாருங்கள் என்று (உம்மை நோக்கி) அவர்கள் கூறியது தவிர அவர்களின் ஆதாரம் (வேறு ஏதும்) இருக்கவில்லை."},{"id":26,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்தான் உங்களை உயிர்ப்பிக்கிறான். பிறகு, உங்களை மரணிக்க வைப்பான். பிறகு, மறுமை நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான். அதில் அறவே சந்தேகமில்லை. என்றாலும், மக்களில் அதிகமானவர்கள் (மறுமையை) அறியமாட்டார்கள்.”"},{"id":27,"translation":"வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. மறுமை நாள் நிகழ்கின்ற நாளில் (அல்லாஹ் அல்லாதவற்றை வணங்கிய) பொய்யர்கள் எல்லோரும் அந்நாளில் நஷ்டமடைவார்கள்."},{"id":28,"translation":"இன்னும், (நபியே! அந்நாளில்) ஒவ்வொரு சமுதாயமும் முழந்தாளிட்டவர்களாக நிற்பதை நீர் பார்ப்பீர். ஒவ்வொரு சமுதாயமும் தமது பதிவு புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும். “நீங்கள் (உலகத்தில்) செய்துகொண்டிருந்த செயல்களுக்கு இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள்” (என்று அவர்களிடம் கூறப்படும்)."},{"id":29,"translation":"இதோ நமது (தாய்) பதிவேடு இருக்கிறது. அது உங்கள் முன்னால் உண்மையைப் பேசும். நிச்சயமாக நாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை எழுதிக் கொண்டிருந்தோம்."},{"id":30,"translation":"ஆக, நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்கள், அவர்களை அவர்களது இறைவன் தனது அருளில் பிரவேசிக்க செய்வான். இதுதான் மிகத் தெளிவான வெற்றியாகும்."},{"id":31,"translation":"ஆக, நிராகரித்தவர்கள் (அவர்களை நோக்கி கூறப்படும்:) “எனது வசனங்கள் உங்களுக்கு முன்னால் ஓதப்படவில்லையா? ஆக, நீங்கள் (அவற்றை ஏற்காமல்) பெருமை அடித்தீர்கள். இன்னும், நீங்கள் குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தீர்கள்.”"},{"id":32,"translation":"“நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது, மறுமை அதில் அறவே சந்தேகமில்லை” என்று (உங்களிடம்) கூறப்பட்டால் நீங்கள் கூறினீர்கள்: “மறுமை என்றால் என்ன? என்று நாங்கள் அறியமாட்டோம். (மறுமை வரலாம் என்று) நாங்கள் ஒரு சாதாரணமான எண்ணமாகவே தவிர எண்ணவில்லை. (அது வரும் என்று) உறுதிகொண்டவர்களாக நாங்கள் இல்லை.”"},{"id":33,"translation":"இன்னும், அவர்கள் செய்தவற்றின் தீமைகள் (-தண்டனைகள்) அவர்களுக்கு வெளிப்படும். இன்னும், அவர்கள் எ(ந்த நரகத்)தை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ந்த நரகமான)து அவர்களை சூழ்ந்துகொள்ளும்."},{"id":34,"translation":"இன்னும், (அவர்களை நோக்கி) கூறப்படும்: “இன்று நாங்கள் உங்களை (தண்டனையில்) விட்டுவிடுவோம், நீங்கள் உங்களது இன்றைய தினத்தின் சந்திப்பை (மறந்து அதற்கு அமல் செய்வதை) நீங்கள் விட்டுவிட்டது போன்று. உங்கள் ஒதுங்குமிடம் நரகம்தான். உதவியாளர்கள் யாரும் உங்களுக்கு இல்லை.”"},{"id":35,"translation":"இதற்குக் காரணம், நிச்சயமாக நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை கேலியாக எடுத்துக் கொண்டீர்கள். இன்னும், உலக வாழ்க்கை உங்களை மயக்கிவிட்டது. ஆகவே, இன்று அ(ந்த நரகத்)திலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள். இன்னும், அவர்கள் மன்னிப்பு கோருவதற்காக உலகத்திற்கு திரும்ப அனுப்பப்பட மாட்டார்கள்."},{"id":36,"translation":"ஆக, எல்லாப் புகழும் வானங்களின் அதிபதி, பூமியின் அதிபதி, அகிலத்தார்களின் அதிபதி அல்லாஹ்விற்கே உரியதாகும்."},{"id":37,"translation":"இன்னும், வானங்களிலும் பூமியிலும் பெருமை அவனுக்கே உரியது. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."}]},{"id":46,"verses":[{"id":1,"translation":"ஹா மீம்."},{"id":2,"translation":"மிகைத்தவன், மகா ஞானவான் அல்லாஹ்விடமிருந்து இந்த வேதம் இறக்கப்பட்டதாகும்."},{"id":3,"translation":"வானங்களையும் பூமியையும் அவை இரண்டிற்குமிடையில் உள்ளவற்றையும் உண்மையான காரணத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர நாம் படைக்கவில்லை. நிராகரிப்பவர்கள், எதைப் பற்றி எச்சரிக்கப்பட்டார்களோ அவர்கள் அதை புறக்கணிக்கிறார்கள்."},{"id":4,"translation":"(நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வை அன்றி நீங்கள் (தெய்வங்கள் என்று) அழைப்பவற்றை குறித்து நீங்கள் அறிவியுங்கள்! “அவர்கள் பூமியில் எதைப் படைத்தார்கள் என்று எனக்குக் காண்பியுங்கள்? அல்லது, வானங்க(ளையும் வானங்க)ளில் (உள்ள படைப்புகளை படைத்ததிலும்) அவர்களுக்கு ஏதும் பங்கு இருக்கிறதா? (அப்படி இருக்கிறதென்றால் அதற்கு ஆதாரமாக) இதற்கு முன்னுள்ள ஒரு வேதத்தை; அல்லது, (முன்னோரின்) கல்வியில் (அறிவு சார்ந்த ஆதாரங்களில் ஏதும்) மீதமிருப்பதை என்னிடம் கொண்டு வாருங்கள், நீங்கள் (கூறுவதில்) உண்மையாளர்களாக இருந்தால் (ஆதாரத்தைக் காட்டுங்கள்!).”"},{"id":5,"translation":"அல்லாஹ்வை அன்றி மற்றவர்களை அழைப்பவர்களை விட மிகப் பெரிய வழிகேடர்கள் யார்? அவர்களோ மறுமை நாள் வரை இவர்களுக்கு பதில் அளிக்க மாட்டார்கள். இன்னும், இவர்களின் அழைப்பை அவர்கள் அறியவும் மாட்டார்கள்."},{"id":6,"translation":"மக்கள் எழுப்பப்படும்போது அவர்கள் இவர்களுக்கு எதிரிகளாக ஆகிவிடுவார்கள். இன்னும், அவர்கள் தாங்கள் வணங்கப்பட்டதை(யும் இவர்கள் தங்களை வணங்கியதையும்) மறுப்பவர்களாக ஆகிவிடுவார்கள்."},{"id":7,"translation":"இன்னும், இவர்களுக்கு முன்னர் நமது தெளிவான வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டபோது, அவர்களிடம் உண்மை வந்தபோது அந்த உண்மைக்கு, “இது தெளிவான சூனியமாகும்” என்று நிராகரிப்பாளர்கள் கூறினார்கள்."},{"id":8,"translation":"“இவர் இதை இட்டுக்கட்டினார்” என்று கூறுகிறார்களா? (நபியே!) கூறுவீராக! “நான் இதை இட்டுக்கட்டி இருந்தால் (அதற்காக அல்லாஹ் என்னை தண்டிக்கும்போது) அல்லாஹ்விடமிருந்து எனக்காக எதையும் (-பரிந்துரை செய்யவோ அவனது தண்டனையை நீக்கவோ) நீங்கள் ஆற்றல் பெற மாட்டீர்கள். நீங்கள் எதில் ஈடுபடுகிறீர்களோ அதை அவன் மிக அறிந்தவன் ஆவான். எனக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் அவனே போதுமான சாட்சியாளனாக இருக்கிறான். அவன்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.”"},{"id":9,"translation":"(நபியே!) கூறுவீராக! “நான் தூதர்களில் புதுமையானவனாக (முதலாமவனாக) இருக்கவில்லை. இன்னும், எனக்கு என்ன செய்யப்படும், உங்களுக்கு என்ன செய்யப்படும் என்று நான் அறியமாட்டேன். எனக்கு எது வஹ்யி அறிவிக்கப்படுகிறதோ அதைத் தவிர நான் பின்பற்ற மாட்டேன். தெளிவான எச்சரிப்பாளராகவே தவிர நான் இல்லை.”"},{"id":10,"translation":"(நபியே!) கூறுவீராக! இ(ந்த வேதமான)து (உண்மையில்) அல்லாஹ்விடமிருந்து (வந்ததாக) இருக்கிறது, நீங்கள் அதை நிராகரித்துவிட்டீர்கள். ஆனால், இஸ்ரவேலர்களில் உள்ள ஒரு சாட்சியாளர் இது போன்றதற்கு (-இதில் முஹம்மத் நபியைப் பற்றி சொல்லப்பட்டிருப்பதைப் போன்று முந்திய வேதம் தவ்ராத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது என்ற உண்மைக்கு) சாட்சி கூறினார். ஆக, (அவர் இந்த நபியை) நம்பிக்கை கொண்டு விட்டார். ஆனால், நீங்களோ (அவரை ஏற்றுக் கொள்ளாமல்) பெருமை அடித்து (நிராகரித்து) விட்டீர்கள். (இதை விட பெரிய அநியாயம், பெரிய நிராகரிப்பு வேறு என்ன இருக்கும்?) நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழி காட்டமாட்டான்."},{"id":11,"translation":"நிராகரித்தவர்கள், நம்பிக்கை கொண்டவர்களை நோக்கி கூறினார்கள்: “இ(ந்த வேதமான)து சிறந்ததாக இருந்தால் (பாமர மக்களாகிய) இவர்கள் இதனளவில் நம்மை முந்தியிருக்க மாட்டார்கள். அவர்கள் இதன் மூலம் நேர்வழி பெறாமல் போனபோது, “இது பழைய பொய்யாகும்” என்று (கேலியாக) கூறுகிறார்கள்."},{"id":12,"translation":"இன்னும், இதற்கு முன்னர் மூஸாவின் வேதம் வழிகாட்டுகின்ற முன்னோடியாகவும் அருளாகவும் இருக்கிறது. (அதையும் நாம்தான் இறக்கினோம். அது இந்த வேதத்திற்கு சாட்சியாக இருக்கிறது.) இன்னும், இதுவோ (முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய, (தெளிவான) அரபி மொழியில் உள்ள வேதமாகும். அநியாயக்காரர்களை எச்சரிப்பதற்காகவும் நல்லவர்களுக்கு நற்செய்தியாக இருப்பதற்காகவும் (இது இறக்கப்பட்டது)."},{"id":13,"translation":"நிச்சயமாக, எவர்கள் “எங்கள் இறைவன் அல்லாஹ்தான்” என்று கூறி, பிறகு (தங்களது நம்பிக்கையிலும் மார்க்கத்திலும்) உறுதியாக இருந்தார்களோ அவர்கள் மீது பயமில்லை, அவர்கள் கவலைப்பட மாட்டார்கள்."},{"id":14,"translation":"அவர்கள் சொர்க்கவாசிகள், அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள், அவர்கள் செய்துகொண்டிருந்தவற்றிற்குக் கூலியாக (இந்த சொர்க்கத்தை அவர்கள் பெற்றார்கள்)."},{"id":15,"translation":"இன்னும், “தன் பெற்றோருக்கு மிகவும் நல்லமுறையில் நன்மை செய்யும்படி” மனிதனுக்கு நாம் உபதேசித்தோம். அவனது தாய் அவனை சிரமத்துடன் (வயிற்றில்) சுமந்தாள். சிரமத்துடன் அவனை ஈன்றெடுத்தாள். அவனை (அவள்) சுமந்ததும் அவனுக்கு (அவள்) பால்குடி மறக்கச் செய்ததும் முப்பது மாதங்களாகும். இறுதியாக, அவன் தனது வாலிபத்தை அடைந்து, நாற்பது வயதை அடைந்தபோது, அவன் கூறுகிறான்: “என் இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர் மீதும் அருள் புரிந்த உனது அருளுக்கு நான் நன்றி செலுத்துவதற்கும் நீ திருப்திபடுகின்ற நல்ல அமலை நான் செய்வதற்கும் எனக்கு உத்வேகத்தை ஏற்படுத்துவாயாக! என் சந்ததியில் எனக்கு சீர்திருத்தம் செய்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கம் திரும்பிவிட்டேன். நிச்சயமாக நான் முஸ்லிம்களில் (ஒருவனாக) இருக்கிறேன்.”"},{"id":16,"translation":"இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்கள் செய்த மிக அழகானதை நாம் இவர்களிடமிருந்து ஏற்றுக் கொள்வோம். இன்னும், இவர்களின் (முந்திய) தவறுகளை நாம் (தண்டிக்காமல்) புறக்கணித்து விடுவோம். இவர்கள் சொர்க்கவாசிகளில் இருப்பார்கள். இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த உண்மையான வாக்காகும் (இது.)"},{"id":17,"translation":"இன்னும், எவர் தனது பெற்றோரை நோக்கி, “உங்கள் இருவருக்கும் கேவலம் உண்டாகட்டும், நான் (இறந்த பின்னர் மண்ணறையில் இருந்து உயிருடன்) வெளியேற்றப்படுவேன் என்று என்னை எச்சரிக்கிறீர்களா? எனக்கு முன்னர் பல தலைமுறைகள் திட்டமாக சென்றுள்ளனர்” என்று கூறுகிறார். அவ்விருவருமோ (தங்களது மகனை நோக்கி) “உனக்கு என்ன கேடு! நீ நம்பிக்கை கொள்! நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்கு உண்மையானதே!” என்று கூறியவர்களாக அல்லாஹ்விடம் (அவனது நேர்வழிக்காக) உதவி தேடுகிறார்கள். ஆக, அவன் கூறுகிறான்: “இவை (-நீங்கள் கூறுவதைப் போன்று மறுமையில் எழுப்பப்படுவதும் சொர்க்கமும் நரகமும்) முன்னோரின் கதைகளே தவிர (உண்மையில் நிகழக் கூடியவை) இல்லை.”"},{"id":18,"translation":"இவர்கள் எத்தகையோர் என்றால் இவர்களுக்கு முன்னர் சென்றுவிட்ட ஜின், மற்றும் மனித சமுதாயங்களுடன் இவர்கள் மீதும் (அல்லாஹ்வுடைய தண்டனையின்) வாக்கு உறுதியாகிவிட்டது. “நிச்சயமாக இவர்கள் (நிராகரிப்பாளர்களான முன்னோர், பின்னோர் எல்லோரும்) நஷ்டவாளிகளாகவே இருக்கிறார்கள்.”"},{"id":19,"translation":"(நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இவர்கள்) எல்லோருக்கும் (மறுமையில்) அவர்கள் செய்தவற்றின் (-அவர்களுடைய செயல்களின்) அடிப்படையில் தகுதிகள் உண்டு. இன்னும், இறுதியாக அவன் அவர்களுடைய செயல்களுக்காக அவர்களுக்கு முழுமையான கூலி கொடுப்பான். இன்னும், அவர்கள் (நன்மைகள் குறைக்கப்பட்டோ குற்றங்கள் அதிகப்படுத்தப்பட்டோ) அநீதியிழைக்கப்பட மாட்டார்கள்."},{"id":20,"translation":"இன்னும், நிராகரிப்பாளர்கள் நரகத்தின் முன் சமர்ப்பிக்கப்படுகின்ற நாளில், (அவர்களுக்குக் கூறப்படும்:) “நீங்கள் உங்கள் (வாழ்க்கை) இன்பங்களை உங்கள் உலக வாழ்க்கையிலேயே முடித்துக் கொண்டீர்கள் (அவற்றை அனுபவித்து முடித்து விட்டீர்கள்). இன்னும், அவற்றின் மூலம் (உலகத்தில்) இன்பம் அடைந்தீர்கள். ஆகவே, நீங்கள் அநியாயமாக பூமியில் பெருமையடிப்பவர்களாக இருந்த காரணத்தாலும் நீங்கள் பாவம் செய்பவர்களாக இருந்த காரணத்தாலும் இன்றைய தினம் இழிவான தண்டனையை கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள்.”"},{"id":21,"translation":"(நபியே!) ஆது சமுதாயத்தின் சகோதரரை (-நபி ஹூதை) நினைவு கூர்வீராக! அவர் தனது மக்களை அஹ்காஃப் என்ற மணல் பாங்கான பிரதேசத்தில் (உள்ள அவர்களது இல்லங்களுக்கு அருகில் வைத்து) எச்சரித்த சமயத்தை நினைவு கூர்வீராக! இவருக்கு முன்னரும் எச்சரிப்பாளர்கள் திட்டமாக சென்றுள்ளனர். இவருக்குப் பின்னரும் (எச்சரிப்பாளர்கள் வந்துள்ளனர்). (அவர் எச்சரித்துக் கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர நீங்கள் யாரையும் வணங்காதீர்கள். நிச்சயமாக நான் உங்கள் மீது பெரிய (ஆபத்துகள் நிறைந்த) நாளின் தண்டனையை பயப்படுகின்றேன்.”"},{"id":22,"translation":"அவர்கள் கூறினார்கள்: “நீர் எங்களை எங்கள் தெய்வங்களை விட்டு திருப்புவதற்காக எங்களிடம் வந்தீரா? ஆக, நீர் உண்மையாளர்களில் இருந்தால் எங்களுக்கு எதை எச்சரிக்கிறீரோ அதை எங்களிடம் கொண்டு வருவீராக!”"},{"id":23,"translation":"அவர் கூறினார்: “(உங்கள் முடிவைப் பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எதைக் கொண்டு அனுப்பப்பட்டேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். என்றாலும், (அல்லாஹ்வின் தண்டனை வந்தால் உங்கள் நிலை என்னவாகும் என்பதை) நீங்கள் அறியாத மக்களாக இருக்கிறீர்கள் என்றே நான் உங்களை கருதுகிறேன்.”"},{"id":24,"translation":"ஆக, அவர்கள் (-அல்லாஹ்வின் தண்டனை) தங்களது பள்ளத்தாக்கை முன்னோக்கி வரக்கூடிய அடர்த்தியான கார் மேகமாக அதைப் பார்த்தபோது, கூறினார்கள்: “இது நமக்கு மழை பொழிவிக்கும் அடர்த்தியான கார் மேகமாகும்.” (நபி ஹூது கூறினார்: இது மழை பொழியும் மேகம் இல்லை.) மாறாக, இது நீங்கள் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதை அவசரமாகத் தேடினீர்களோ அதுவாகும். இது ஒரு காற்றாகும். துன்புறுத்தும் தண்டனை இதில் இருக்கிறது."},{"id":25,"translation":"இது தனது இறைவனின் கட்டளைப்படி எல்லாவற்றையும் (அழித்து, நாசமாக்கி) சின்னாபின்னமாக்கிவிடும். (அப்படியே நடந்தது.) ஆக, அவர்களின் வசிப்பிடங்களைத் தவிர (வேறு எதையும்) பார்க்க முடியாதபடி அவர்கள் ஆகிவிட்டனர். (அவர்கள் எல்லோரும் அழிந்துவிட்டனர். அவர்கள் வசித்த வீடுகளின் இடிபாடுகள் மட்டும் மிஞ்சி இருக்கின்றன.) இவ்வாறுதான் குற்றவாளிகளான மக்களை நாம் தண்டிப்போம்."},{"id":26,"translation":"உங்களுக்கு எதில் நாம் வசதி கொடுக்கவில்லையோ அதில் அவர்களுக்கு வசதியளித்தோம். இன்னும், அவர்களுக்கு (உங்களை விட திறமையான) செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினோம். ஆக, அவர்கள் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை மறுப்பவர்களாக இருந்தபோது அவர்களின் செவியும் அவர்களின் பார்வைகளும் அவர்களின் உள்ளங்களும் அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்கவில்லை. இன்னும், அவர்கள் எதை கேலி செய்பவர்களாக இருந்தார்களோ அ(ந்த தண்டனையான)து அவர்களை சூழ்ந்து (அழித்து) விட்டது."},{"id":27,"translation":"இன்னும், உங்களை சுற்றி உள்ள ஊர்களை நாம் திட்டவட்டமாக அழித்தோம். இன்னும், (அவர்களை அழிப்பதற்கு முன்னர்) அவர்கள் (நம் பக்கம்) திரும்புவதற்காக அத்தாட்சிகளை நாம் (அவர்களுக்கு) விவரித்தோம். (ஆனால், அவர்கள் புறக்கணித்து சென்றபோது நமது தண்டனை அவர்களுக்கு வந்தது.)"},{"id":28,"translation":"ஆக, இவர்கள் அல்லாஹ்வை அன்றி வழிபாட்டுக்காக எவர்களை தெய்வங்களாக எடுத்துக் கொண்டார்களோ அவர்கள் இவர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டாமா? மாறாக, அவர்கள் (-அந்த தெய்வங்கள், அவற்றை வணங்கிய) இவர்களை விட்டு மறைந்து விட்டனர். இ(ந்த சிலை வணக்க வழிபாடு என்ப)து இவர்களின் இட்டுக் கட்டப்பட்டப் பொய்யாகும். இன்னும், இவர்கள் (எதை) கற்பனையாக இட்டுக்கட்டிக் கொண்டிருந்தார்களோ அந்த கற்பனையுமாகும். (பல தெய்வ வழிபாடும் சிலை வழிபாடுகளும் மனிதர்கள் பொய்யாக இட்டுக்கட்டியதும் அவர்களின் கற்பனையும் ஆகும். அதற்கு உண்மையான ஆதாரம் ஏதும் இல்லை.)"},{"id":29,"translation":"இன்னும், ஜின்களின் சில நபர்களை உம் பக்கம் நாம் திருப்பிய சமயத்தை நினைவு கூர்வீராக! அவர்கள், (நீர் ஓதுகின்ற) குர்ஆனை செவியுறுகிறார்கள். அவர்கள் அந்த இடத்திற்கு வந்தபோது, “வாய்மூடி இருங்கள்!” என்று (தங்களுக்குள்) கூறினார்கள். ஆக, (குர்ஆன் ஓதி) முடிக்கப்பட்டபோது அவர்கள் தங்களது சமுதாயத்தினர் பக்கம் (அவர்களை) எச்சரிப்பவர்களாகத் திரும்பினார்கள்."},{"id":30,"translation":"(அந்த ஜின்கள்) கூறினார்கள்: “எங்கள் சமுதாயமே! மூஸாவிற்கு பின்னர் தனக்கு முந்தியவற்றை (-முந்திய வேதங்களை) உண்மைப்படுத்தக்கூடிய ஒரு வேதத்தை நாங்கள் செவியுற்றோம். அது, (அல்லாஹ்வின் பொருத்தம் எதில் இருக்குமோ அந்த) உண்மைக்கும் (இஸ்லாம் என்ற) மிக நேரான பாதைக்கும் வழிகாட்டுகிறது.”"},{"id":31,"translation":"“எங்கள் சமுதாயமே! அல்லாஹ்வின் (இறுதி தூதராகிய இந்த) அழைப்பாளருக்கு பதில் தாருங்கள்! இன்னும், அவரை நம்பிக்கை கொள்ளுங்கள்! (அவரின் அழைப்பை ஏற்று, அவருடைய மார்க்கத்தை தழுவுங்கள்!) அல்லாஹ் உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான்; வலிமிக்க தண்டனையில் இருந்து உங்களைப் பாதுகாப்பான்.”"},{"id":32,"translation":"எவர் அல்லாஹ்வின் அழைப்பாளருக்கு பதில் தரவில்லையோ (அவரது மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளவில்லையோ) அவர் பூமியில் (அல்லாஹ்வின் பிடியை விட்டு எங்கும்) தப்பித்துவிட மாட்டார். இன்னும், அவனை அன்றி அவருக்கு பாதுகாவலர்கள் இல்லை. இப்படிப்பட்டவர்கள் மிகத் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள்."},{"id":33,"translation":"நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்தவனாகிய, இன்னும் அவற்றைப் படைத்ததால் கலைப்படையாதவனுமாகிய அல்லாஹ் இறந்தவர்களை உயிர்பிப்பதற்கு ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? ஏன் இல்லை. (அவன் கண்டிப்பாக உயிர்ப்பிப்பான்,) நிச்சயமாக அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":34,"translation":"அந்நாளில், நிராகரித்தவர்கள் நரகத்தின் முன் கொண்டுவரப்படுவார்கள். (இன்னும் அவர்களுக்குக் கூறப்படும்:) “இது உண்மையாக இல்லையா?” அவர்கள் கூறுவார்கள்: “ஏன் இல்லை? எங்கள் இறைவன் மீது சத்தியமாக (இது உண்மைதான்.)” (அல்லாஹ்) கூறுவான்: “ஆக, நீங்கள் நிராகரிப்பவர்களாக இருந்த காரணத்தால் இந்த தண்டனையை சுவையுங்கள்!”"},{"id":35,"translation":"ஆக, தூதர்களில் மிகவும் வீரமிக்கவர்கள் (-மிக உறுதியுடையவர்கள்) பொறுத்தது போன்று (நபியே!) நீரும் பொறுமை காப்பீராக! (நிராகரிப்பில் இருக்கும்) அவர்களுக்காக (தண்டனையை) அவசரமாக கேட்காதீர்! அவர்கள் எச்சரிக்கப்பட்டதை அவர்கள் பார்க்கின்ற நாளில் பகலில் சில மணிநேரம் தவிர அவர்கள் (இவ்வுலகில்) தங்கவில்லை என்று அவர்களுக்குத் தோன்றும். (குர்ஆனாகிய) இது எடுத்து சொல்லப்படும் செய்தியாகும். ஆக, (அது உங்களுக்கு எடுத்து சொல்லப்பட்டுவிட்டது. அல்லாஹ்வின் தண்டனை வரும்போது) அழிக்கப்படுமா பாவிகளான மக்களைத் தவிர?"}]},{"id":47,"verses":[{"id":1,"translation":"ஹா மீம்."},{"id":2,"translation":"இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தார்களோ; இன்னும், முஹம்மத் (நபியின்) மீது இறக்கப்பட்டதை - அதுவோ அவர்களின் இறைவனிடம் இருந்து வந்த உண்மையாக இருக்கும் நிலையில் (அதை) - நம்பிக்கை கொண்டார்களோ அவர்களின் பாவங்களை அவர்களை விட்டு அல்லாஹ் போக்கி விடுவான். இன்னும், அவர்களின் காரியத்தை அவன் சீர் செய்து விடுவான்."},{"id":3,"translation":"இது ஏனெனில், நிச்சயமாக நிராகரித்தவர்கள் பொய்யனை (-ஷைத்தானையும் அவனது தீய வழிகாட்டலையும்) பின்பற்றினர். இன்னும், நிச்சயமாக நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள் இறைவனிடமிருந்து வந்த உண்மையை (-முஹம்மத் நபியையும் அவர் கொண்டு வந்த குர்ஆனையும்) பின்பற்றினார்கள். இவ்வாறுதான் அல்லாஹ் மக்களுக்கு அவர்களுக்குரிய தன்மைகளை விவரிக்கிறான்."},{"id":4,"translation":"ஆக, நீங்கள் (உங்கள் எதிரி நாட்டில் இருந்து உங்களிடம் போர் செய்ய வருகின்ற) நிராகரிப்பாளர்களை (போர்க்களத்தில்) சந்தித்தால் (அவர்களின்) பிடரிகளை வெட்டுங்கள்! இறுதியாக, நீங்கள் அவர்களை மிகைத்துவிட்டால், (அவர்களை கைது செய்து) கயிறுகளில் உறுதியாகக் கட்டுங்கள்! ஆக, அதற்குப் பின்னர் ஒன்று, (அவர்கள் மீது நீங்கள்) உபகாரம் புரியுங்கள்! அல்லது, (அவர்கள் உங்களிடம்) பிணைத்தொகை கொடு(த்து தங்களை விடுவி)க்கட்டும்! இறுதியாக, போர் அதன் சுமைகளை முடிக்கின்ற வரை (-அதாவது இறுதி காலத்தில் ஈஸா நபி இறங்கி வந்த பின்னர், நிராகரிப்பாளர்கள் எல்லோரும் இஸ்லாமை ஏற்கின்ற வரை அவர்களிடம் போர் செய்யும்போது இதே சட்டங்களை பின்பற்றுங்கள்!). இதுதான் (உண்மையாகும்). இன்னும், அல்லாஹ் நாடினால் (உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் போர் நடக்காமலேயே இவ்வுலகத்தில் விரைவான தண்டனையைக் கொண்டு) அவன் அவர்களிடம் பழிதீர்த்திருப்பான். என்றாலும், உங்களில் சிலரை சிலர் மூலமாக அவன் சோதிப்பதற்காக இவ்வாறு செய்தான். (-உங்களில் போர் செய்து, அதில் பொறுமையாக இருப்பவர்கள் யார் என்று சோதிப்பதற்கும், எதிரிகளில் கொல்லப்பட்டவர்களைக் கொண்டு எஞ்சிய நிராகரிப்பாளர்கள் படிப்பினைப் பெற்று இஸ்லாமை ஏற்கவேண்டும் என்பதற்காகவும், அல்லது உங்களுக்குப் பணிந்து, பயந்து போர் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் அல்லாஹ் இவ்வாறு செய்தான்.) இன்னும், எவர்கள் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டார்களோ அவர்களின் அமல்களை அல்லாஹ் வீணாக்கிவிட மாட்டான்."},{"id":5,"translation":"(அல்லாஹ்வின் பாதையில் போர் செய்கின்ற) அவர்களுக்கு அவன் நேர்வழி காட்டுவான்; அவர்களின் காரியத்தை(யும் நிலைமைகளையும்) சீர் செய்வான்."},{"id":6,"translation":"இன்னும், அவன் அவர்களை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான். அதை (அந்த சொர்க்கத்தில் உள்ள அவர்களின் இல்லங்களை) அவன் அவர்களுக்கு காண்பித்துக் கொடுப்பான்."},{"id":7,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால் அவன் உங்களுக்கு உதவுவான். இன்னும், உங்கள் பாதங்களை அவன் உறுதிப்படுத்துவான்."},{"id":8,"translation":"இன்னும், எவர்கள் நிராகரித்தார்களோ அவர்களுக்கு கேடு (-இழிவு, கேவலம், துர்பாக்கியம்) உண்டாகட்டும். அவர்களின் செயல்களை அவன் வழிகேட்டில் விட்டுவிடுவான்."},{"id":9,"translation":"அது ஏனெனில், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ் இறக்கிய (வேதத்தை, தூதர் கொண்டு வந்த மார்க்கத்)தை வெறுத்தார்கள். ஆகவே, அவன் அவர்களின் செயல்களை வீணாக்கிவிட்டான்."},{"id":10,"translation":"ஆக, அவர்கள் பூமியில் பயணித்து, தங்களுக்கு முன்னர் இருந்தவர்களின் முடிவு எவ்வாறு இருந்தது என்று பார்க்க வேண்டாமா? அல்லாஹ் அவர்களை அழித்துவிட்டான். இன்னும் அது போன்ற முடிவுகள்தான் (-முந்திய சமுதாயத்தவர்களுக்கு நிகழ்ந்த தண்டனைகள் போன்றுதான்) இந்த நிராகரிப்பாளர்களுக்கு நிகழும்."},{"id":11,"translation":"அது (-நம்பிக்கையாளர்கள், நிராகரிப்பாளர்கள் ஆகிய இரு சாராருக்கும் அவரவர்களுக்குத் தகுதியானதை அல்லாஹ் செய்தது) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் நம்பிக்கையாளர்களின் மவ்லா (எஜமானன், உதவியாளன், பாதுகாவலன்) ஆவான். இன்னும், நிச்சயமாக நிராகரிப்பாளர்கள் -அவர்களுக்கு அறவே எஜமானன் (உதவியாளன்) இல்லை. (அவர்கள் வணங்கிய தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விடும்.)"},{"id":12,"translation":"நிச்சயமாக நம்பிக்கை கொண்டு, நன்மைகளை செய்தவர்களை அல்லாஹ் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வான். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். இன்னும், நிராகரித்தவர்களோ (இவ்வுலகில்) சுகபோகமாக வாழ்கிறார்கள். கால்நடைகள் சாப்பிடுவது போல் சாப்பிடுகிறார்கள். நரகம்தான் அவர்களுக்கு தங்குமிடமாகும்."},{"id":13,"translation":"உம்மை வெளியேற்றிய உமது ஊரை (-உமது ஊர் மக்களை) விட பலத்தால் மிகக் கடுமையான எத்தனையோ ஊர் மக்கள் - அவர்களை நாம் அழித்தோம். ஆக, அவர்களுக்கு (அப்போது) அறவே உதவியாளர்(கள்) இருக்கவில்லை."},{"id":14,"translation":"ஆக, தமது இறைவனின் தெளிவான அத்தாட்சியில் இருப்பவர்கள், எவர்களுக்கு அவர்களது கெட்ட செயல்கள் அலங்கரிக்கப்பட்டு; இன்னும், அவர்களுடைய மன இச்சைகளை பின்பற்றினார்களோ அவர்களைப் போன்று ஆவார்களா?"},{"id":15,"translation":"இறையச்சமுள்ளவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தின் தன்மையாவது துர்வாடை வீசாத (கெட்டுப் போகாத) தண்ணீர் ஆறுகளும், அதன் ருசி மாறாத பால் ஆறுகளும், அருந்துபவர்களுக்கு ருசியாக இருக்கும் மது ஆறுகளும் தூய்மையான தேன் ஆறுகளும் அ(ந்த சொர்க்கத்)தில் இருக்கும். இன்னும், அவர்களுக்கு எல்லாவகையான கனிகளும் அதில் கிடைக்கும். இன்னும், அவர்களின் இறைவனிடமிருந்து மன்னிப்பும் அவர்களுக்கு உண்டு. இத்தகைய சொர்க்கவாசிகள், நரகத்தில் நிரந்தரமாக இருப்பவர்களை போன்று ஆகிவிடுவார்களா? (நரகத்தில் நுழைந்த) அவர்கள் கொதிக்கின்ற நீர் புகட்டப்படுவார்கள். ஆக, அது அவர்களின் குடல்களை துண்டு துண்டாக அறுத்து விடும்."},{"id":16,"translation":"அவர்களில் (-அந்த நயவஞ்சகர்களில் அலட்சியமாக) உம் பக்கம் செவி சாய்ப்பவர்களும் உள்ளனர். இறுதியில் அவர்கள் உம்மிடமிருந்து வெளியே புறப்பட்டால் (தாங்களும் கவனமாகக் கேட்டது போன்று காண்பிப்பதற்காகவும் கேலியாகவும்) கல்வி கொடுக்கப்பட்டவர்களிடம் கூறுகிறார்கள்: “இவர் (-இந்த தூதர்) சற்று நேரத்திற்கு முன்பு என்ன கூறினார் (தெரியுமா? எவ்வளவு அழகான கருத்தைக் கூறினார் தெரியுமா?)” இவர்கள் எத்தகையோர் என்றால், அல்லாஹ் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிட்டு விட்டான். இன்னும், இவர்கள் தங்கள் கெட்ட ஆசைகளைப் பின்பற்றினார்கள்."},{"id":17,"translation":"இன்னும், எவர்கள் நேர்வழி பெற்றார்களோ அவர்களுக்கு (அல்லாஹ்) நேர்வழியை அதிகப்படுத்துவான். இன்னும், அவர்களுக்கு அவர்களின் தக்வாவையும் (-உள்ளச்சத்தையும்) அவன் வழங்குவான்."},{"id":18,"translation":"ஆக, அவர்களிடம் திடீரென மறுமை வருவதைத் தவிர அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? ஆக, திட்டமாக அதன் அடையாளங்கள் வந்து விட்டன. ஆக, (அந்த மறுமை) அவர்களிடம் வரும்போது அவர்கள் நல்லறிவு பெறுவது அவர்களுக்கு எப்படி பலனளிக்கும்!"},{"id":19,"translation":"ஆக, (நபியே!) “நிச்சயமாக அல்லாஹ்வைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை” என்பதை நன்கறிந்து கொள்வீராக! இன்னும், உமது தவறுகளுக்காகவும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்காகவும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்காகவும் பாவமன்னிப்பு கோருவீராக! நீங்கள் (பகலில்) சுற்றுகிற இடங்களையும் (இரவில் தூங்குவதற்காக நீங்கள் ஒதுங்குகிற) உங்கள் தங்குமிடங்களையும் அல்லாஹ் நன்கறிவான். (உங்கள் காலை, மாலை, இரவு என எதுவும் அல்லாஹ்விற்கு மறைந்தவை அல்ல.)"},{"id":20,"translation":"(இந்த எதிரிகளிடம் போர் புரிய வேண்டும் என்ற கட்டளை அடங்கிய) ஓர் அத்தியாயம் இறக்கப்பட வேண்டாமா என்று நம்பிக்கையாளர்கள் கூறுகிறார்கள். ஆக, (சட்டங்கள்) உறுதி செய்யப்பட்ட ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டு, அதில் (எதிரிகளிடம்) போர் (செய்யுங்கள் என்ற கட்டளை) பற்றி கூறப்பட்டால் தங்கள் உள்ளங்களில் நோய் உள்ள (நய)வ(ஞ்சக)ர்கள் மயக்கமுற்றவர்கள் பார்ப்பதுபோல் மரண பயத்தால் உம் பக்கம் பார்ப்பார்கள். ஆக, அவர்களுக்குக் கேடுதான்."},{"id":21,"translation":"(போர் செய்வது அவசியமாகி விட்டால் இறைத் தூதருக்கு) கீழ்ப்படிவதும், (உங்களுடன் போருக்கு புறப்படுவோம் என்று) நேர்மையாக பேசுவதும்தான் (உங்கள் வெளிப்படையான செயலாக இருந்தது). ஆக, (போருக்கு புறப்பட வேண்டும் என்று) கட்டளை உறுதியாகிவிட்டபோது (அதை வெறுத்து போரை சிரமமாக பார்க்கிறீர்கள். அப்படி செய்யாமல்,) அவர்கள் அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்திருந்தால் அது அவர்களுக்கு சிறந்ததாக இருந்திருக்கும்."},{"id":22,"translation":"(அல்லாஹ்வின் வேதத்தை விட்டும் அதன் சட்டங்களை விட்டும்) நீங்கள் விலகிவிட்டால் பூமியில் குழப்பம் செய்வீர்கள்தானே! உங்கள் இரத்த உறவுகளை துண்டித்து விடுவீர்கள்தானே!"},{"id":23,"translation":"அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் அவர்களை சபித்தான். ஆக, அவர்களை அவன் செவிடாக்கி விட்டான்; அவர்களின் பார்வைகளை குருடாக்கி விட்டான்."},{"id":24,"translation":"ஆக, அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டாமா? அவர்களது உள்ளங்கள் மீது பூட்டுகளா போடப்பட்டுள்ளன?"},{"id":25,"translation":"(முந்திய வேதம் கொடுக்கப்பட்டவர்களில்) நிச்சயமாக எவர்கள் தங்களுக்கு நேர்வழி தெளிவானதற்குப் பின்னர் தங்களது பின் புறங்களின் மீதே திரும்பிச் சென்றார்களோ அவர்களுக்கு ஷைத்தான் (கெட்ட செயலை செய்யத் தூண்டி அதை) அலங்கரித்தான். இன்னும், அல்லாஹ் அவர்களுக்கு (சிறிது காலம் வரை இந்த உலகத்தில்) அவகாசம் கொடுத்துள்ளான்."},{"id":26,"translation":"இது ஏனெனில், நிச்சயமாக (வேதக்காரர்களாகிய) இவர்கள் அல்லாஹ் இறக்கியதை வெறுத்தவர்களிடம் (-நயவஞ்சகர்களிடம்), “சில விஷயங்களில் உங்களுக்கு நாங்கள் கீழ்ப்படிவோம்” என்று கூறினார்கள். இவர்கள் (தங்களுக்குள்) பேசுவதை அல்லாஹ் நன்கறிவான்."},{"id":27,"translation":"ஆக, அவன் எப்படி அறியாமல் இருப்பான்! வானவர்கள் அவர்களை உயிர் வாங்கும் போது அவர்களின் முகங்களிலும் அவர்களின் பின் புறங்களிலும் அடிப்பார்கள்."},{"id":28,"translation":"இ(ப்படி வானவர்கள் அடிப்ப)து ஏனெனில், நிச்சயமாக இவர்கள் அல்லாஹ்விற்கு எது கோபமூட்டுமோ அதை பின்பற்றி நடந்தார்கள். இன்னும், அவனது பொருத்த(த்திற்குரிய இஸ்லாமிய மார்க்க)த்தை வெறுத்தார்கள். ஆகவே, அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்."},{"id":29,"translation":"தங்களது உள்ளங்களில் நோய் உள்ளவர்கள் எண்ணிக் கொண்டார்களா, “அல்லாஹ் அவர்களின் (உள்ளங்களில் உள்ள) குரோதங்களை (நம்பிக்கையாளர்களுக்கு) வெளிப்படுத்தி காண்பிக்க மாட்டான்?” என்று."},{"id":30,"translation":"இன்னும், நாம் நாடினால் அவர்களை உமக்கு காண்பித்து விடுவோம். ஆக, அவர்களை அவர்களின் வெளிப்படையான அடையாளங்களினால் நீர் அறிந்து கொள்வீர். இன்னும், அவர்களின் பேச்சின் தொனியிலும் அவர்களை நிச்சயமாக நீர் அறிந்துவிடுவீர். அல்லாஹ் உங்கள் (அனைவரின்) செயல்களை நன்கறிவான்."},{"id":31,"translation":"இன்னும், உங்களிலிருந்து ஜிஹாது செய்பவர்களையும் பொறுமையாளர்களையும் நாம் (அதாவது, எனது நல்லடியார்கள்) அறிகின்ற வரை நிச்சயமாக நாம் உங்களை சோதிப்போம். உங்கள் செய்திகளை (-சொல்களையும் செயல்களையும்) நாம் சோதிப்போம் (உண்மையாளர் யார், பொய்யர் யார் என்று நம்பிக்கையாளர்களுக்கு வெளிப்படுத்துவதற்காக)."},{"id":32,"translation":"நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தார்களோ; இன்னும், நேர்வழி தங்களுக்கு தெளிவானதற்குப் பின்னர் தூதருக்கு மாறுசெய்தார்களோ அவர்கள் அல்லாஹ்விற்கு அறவே தீங்கிழைக்க முடியாது. இன்னும், அல்லாஹ் அவர்களின் (நல்ல) செயல்களை வீணாக்கி (மறுமையில் நற்கூலி அற்றதாக ஆக்கி) விடுவான்."},{"id":33,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கு (அவனது மார்க்க சட்டங்கள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! இன்னும், தூதருக்கு (அவருடைய கட்டளைகள் அனைத்திலும்) கீழ்ப்படியுங்கள்! (நிராகரிப்பினாலும் மாறு செய்வதாலும்) உங்கள் அமல்களை வீணாக்காதீர்கள்!"},{"id":34,"translation":"நிச்சயமாக எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், அல்லாஹ்வின் பாதையில் இருந்து (மக்களை) தடுத்தார்களோ; பிறகு, அவர்களோ நிராகரிப்பாளர்களாக இருக்கின்ற நிலையில் மரணித்தார்களோ அவர்களை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்."},{"id":35,"translation":"ஆக, நீங்கள் பலவீனப்பட்டு, சமாதானத்திற்கு அழைத்து விடாதீர்கள்! நீங்கள்தான் மிக உயர்வானவர்கள் - வெற்றியாளர்கள். இன்னும், அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான். அவன் உங்கள் அமல்களை (அவற்றின் வெகுமதிகளை) உங்களுக்கு குறைக்கவே மாட்டான்."},{"id":36,"translation":"உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும்தான். நீங்கள் நம்பிக்கை கொண்டு, (அல்லாஹ்வை) அஞ்சி நடந்தால் அவன் உங்கள் (நன்மைகளுக்குரிய) கூலிகளை உங்களுக்கு கொடுப்பான். உங்கள் செல்வங்களை (எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்துவிடுங்கள் என்று) அவன் உங்களிடம் கேட்கமாட்டான்."},{"id":37,"translation":"அவன் அவற்றை (-உங்கள் செல்வங்களை எல்லாம் தர்மமாக) உங்களிடம் கேட்டால், உங்களை (அதற்காக) வலியுறுத்தினால் (-உங்களை சிரமப்படுத்தினால்) நீங்கள் (அவ்வாறு தர்மம் செய்ய முடியாமல்) கருமித்தனம் செய்துவிடுவீர்கள். இன்னும், அவன் உங்கள் குரோதங்களை (செல்வங்களை நேசிப்பதில் உங்கள் உள்ளங்களில் இருக்கின்ற பேராசைகளை) வெளிப்படுத்தி காண்பித்து விடுவான்."},{"id":38,"translation":"நீங்கள்தான் அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதற்கு அழைக்கப்படுகிறீர்கள். ஆக, உங்களில் கருமித்தனம் செய்பவரும் இருக்கிறார். எவர் கருமித்தனம் செய்வாரோ அவர் கருமித்தனம் செய்வதெல்லாம் அவருடைய (கருமித்தனம் நிறைந்த) ஆன்மாவின் காரணமாகத்தான். (அவருடைய ஆன்மா கொடைத் தன்மையுடையதாக இருந்திருந்தால் அவர் கருமித்தனம் செய்திருக்க மாட்டார். மாறாக, அல்லாஹ்வின் பாதையில் தாராளமாக தர்மம் செய்திருப்பார்.) அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன், யாருடைய தேவையுமற்றவன் ஆவான். நீங்கள்தான் (எல்லா வகையிலும்) தேவையுள்ளவர்கள் (ஏழைகள்) ஆவீர்கள். இன்னும், (நமது நபி முஹம்மத் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை விட்டு) நீங்கள் விலகிச்சென்றால் நீங்கள் அல்லாத ஒரு சமுதாயத்தை அவன் மாற்றி கொண்டுவருவான். பிறகு, அவர்கள் உங்களைப் போன்று இருக்க மாட்டார்கள்."}]},{"id":48,"verses":[{"id":1,"translation":"எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும் அல்லாஹ்வின் பாதையிலிருந்து (மக்களை) தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வழிகெடுத்து விட்டான் (-வீணாக்கிவிட்டான்)."},{"id":2,"translation":"அல்லாஹ் உமது பாவத்தில் முந்தியதையும் (பழையதையும்) பிந்தியதையும் (புதியதையும்) உமக்கு மன்னிப்பதற்காகவும் அவனது அருளை உம் மீது முழுமைப்படுத்துவதற்காகவும் உமக்கு நேரான பாதையை வழி காண்பிப்பதற்காகவும்,"},{"id":3,"translation":"அல்லாஹ் உமக்கு மிக கம்பீரமான (மிகப்பெரிய) உதவியை செய்வதற்காகவும் (உமக்கு மகத்தான தெளிவான வெற்றியை அளித்தோம்)."},{"id":4,"translation":"அவன்தான் நம்பிக்கையாளர்களின் உள்ளங்களில் அமைதியை (நிம்மதியை) இறக்கினான், அவர்கள் (முன்னர் இறக்கப்பட்ட சட்டங்களை நம்பிக்கை கொண்டும் செயல்படுத்தியும் வந்த) தங்கள் நம்பிக்கையுடன் (புதிதாக இறக்கப்பட்ட சட்டங்களையும் நம்பிக்கை கொண்டு, செயல்படுத்தி) மேலும் நம்பிக்கை அதிகரிப்பதற்காக (அவன் அவர்கள் மீது நிம்மதியை இறக்கினான்). வானங்கள் இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":5,"translation":"நம்பிக்கைகொண்ட ஆண்களையும், நம்பிக்கைகொண்ட பெண்களையும் சொர்க்கங்களில் அவன் பிரவேசிக்க வைப்பதற்காகவும் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவதற்காகவும் (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவற்றின் கீழ் (அந்த சொர்க்கங்களில் உள்ள மரங்களையும் கட்டிடங்களையும் சுற்றி) நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள். இதுதான் அல்லாஹ்விடம் மகத்தான வெற்றியாக (- நற்பாக்கியமாக) இருக்கிறது."},{"id":6,"translation":"இன்னும், நயவஞ்சகம் உடைய ஆண்களையும் நயவஞ்சகம் உடைய பெண்களையும் இணைவைக்கின்ற ஆண்களையும் இணைவைக்கின்ற பெண்களையும் அல்லாஹ் தண்டிப்பதற்காக (அவன் உமக்கு மகத்தான வெற்றியை கொடுத்தான்). அவர்கள் அல்லாஹ்வின் விஷயத்தில் (அவன் தனது நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும் உதவமாட்டான் என்று) கெட்ட எண்ணம் எண்ணுகிறார்கள். அவர்கள் மீதுதான் கெட்ட சுழற்சி (சுற்ற) இருக்கிறது. (-அவர்கள்தான் தோற்கப் போகிறார்கள். நம்பிக்கையாளர்களின் கரத்தால் தண்டனையை சுவைக்க இருக்கிறார்கள்.) இன்னும், அல்லாஹ் அவர்கள் மீது கோபப்படுகிறான். அவர்களை சபிக்கிறான். அவர்களுக்கு நரகத்தை தயார் செய்திருக்கிறான். அது மிகக் கெட்ட மீளுமிடமாகும்."},{"id":7,"translation":"வானங்கள், இன்னும் பூமியின் இராணுவங்கள் அல்லாஹ்விற்கே உரியன. அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":8,"translation":"நிச்சயமாக நாம் உம்மை சாட்சியாளராகவும் நற்செய்தி கூறுபவராகவும் எச்சரிப்பவராகவும் அனுப்பினோம்,"},{"id":9,"translation":"நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வதற்காகவும் அவரை கண்ணியப்படுத்துவதற்காகவும் அவரை மதிப்பதற்காகவும் அ(ந்த இறை)வனை காலையிலும் மாலையிலும் புகழ்ந்து துதித்து வணங்குவதற்காகவும் (அவன் தனது தூதரை உங்களிடம் அனுப்பினான்)."},{"id":10,"translation":"நிச்சயமாக எவர்கள் உம்மிடம் பைஅத் (-விசுவாச உறுதிமொழி) செய்தார்களோ அவர்கள் விசுவாச உறுதி மொழி செய்வதெல்லாம் அல்லாஹ்விடம்தான். அல்லாஹ்வின் கை அவர்களின் கைகளுக்கு மேல் இருக்கிறது. ஆகவே, யார் (அந்த உறுதி மொழியை) முறிப்பாரோ அவர் முறிப்பதெல்லாம் தனக்கு எதிராகத்தான். (-அது அவருக்குத்தான் கேடாகும்.) இன்னும், யார் அல்லாஹ்விடம் எதன் மீது ஒப்பந்தம் செய்தாரோ அதை நிறைவேற்றுவாரோ அவருக்கு அவன் மகத்தான கூலியை (-சொர்க்கத்தை) கொடுப்பான்."},{"id":11,"translation":": கிராமவாசிகளில் (போருக்கு வராமல்) பின் தங்கியவர்கள் உமக்கு கூறுவார்கள்: “எங்களை எங்கள் செல்வங்களும் எங்கள் குடும்பங்களும் (போருக்கு செல்ல முடியாதபடி மற்ற அலுவல்களில்) ஈடுபடுத்திவிட்டன. (எனவேதான் போரில் நாங்கள் உங்களுடன் கலந்துகொள்ள முடியவில்லை.) ஆகவே, நீர் எங்களுக்காக (உமது இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோருவீராக!” அவர்கள் தங்கள் நாவுகளினால் தங்கள் உள்ளங்களில் இல்லாதவற்றை கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “ஆக, அல்லாஹ் உங்களுக்கு ஏதும் தீங்கை நாடினால் (அதை தடுப்பதற்கு); அல்லது, உங்களுக்கு ஏதும் நன்மையை நாடினால் (அதை நிறுத்துவதற்கு) அல்லாஹ்விடம் உங்களுக்காக சிறிதும் யார் உரிமை பெறுவார்? (யாருக்கும் அந்த சக்தி இல்லை.) மாறாக, அல்லாஹ் நீங்கள் செய்வதை (எல்லாம்) ஆழ்ந்தறிபவனாக இருக்கிறான்."},{"id":12,"translation":"மாறாக, தூதரும், நம்பிக்கையாளர்களும் தங்கள் குடும்பங்களுக்கு ஒருபோதும் திரும்பவே மாட்டார்கள் என்று நீங்கள் எண்ணினீர்கள். இ(ந்த எண்ணமான)து உங்கள் உள்ளங்களில் அலங்கரிக்கப்பட்டு விட்டது. (அல்லாஹ், தன் தூதருக்கு உதவமாட்டான் என்று அல்லாஹ்வின் மீது) நீங்கள் கெட்ட எண்ணம் எண்ணினீர்கள். (இந்த தீய எண்ணத்தால் அல்லாஹ்வின் தண்டனையில்) நீங்கள் அழிந்து நாசமாகக்கூடிய மக்களாக இருக்கின்றீர்கள்."},{"id":13,"translation":"எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ள வில்லையோ நிச்சயமாக நாம் (அத்தகைய) நிராகரிப்பாளர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரகத்தை தயார் செய்திருக்கிறோம்."},{"id":14,"translation":"வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரியது. அவன், தான் நாடுகிறவர்களை மன்னிக்கிறான்; இன்னும், தான் நாடுகிறவர்களை தண்டிக்கிறான். அல்லாஹ் மகா மன்னிப்பாளனாக, மகா கருணையாளனாக இருக்கிறான்."},{"id":15,"translation":"நீங்கள் கனீமத்துகளை (-போரில் கைப்பற்றப்பட்ட செல்வங்களை) நோக்கி அவற்றை நீங்கள் எடுப்பதற்காக சென்றால், “எங்களை விடுங்கள்! நாங்களும் உங்களைப் பின்பற்றி வருகிறோம்” என்று (போருக்கு வராமல்) பின்தங்கியவர்கள் கூறுவார்கள். அல்லாஹ்வின் பேச்சை (-வாக்கை) அவர்கள் மாற்றிவிட நாடுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் அறவே எங்களை பின்பற்ற மாட்டீர்கள். இப்படித்தான் இதற்கு முன்னரே (இதைப் பற்றி) அல்லாஹ் (எங்களுக்கு) கூறி இருக்கிறான்.” “இல்லை, நீங்கள் எங்கள் மீது பொறாமைப்படுகின்றீர்கள்” என்று அவர்கள் கூறுவார்கள். மாறாக, குறைவாகவே தவிர அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை) விளங்காதவர்களாக இருக்கிறார்கள்."},{"id":16,"translation":"கிராமவாசிகளில் பின்தங்கியவர்களை நோக்கி கூறுவீராக! “நீங்கள் கடுமையான பலமுடைய ஒரு கூட்டத்தின் பக்கம் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். அவர்களிடம் நீங்கள் சண்டை செய்ய வேண்டும். அல்லது, அவர்கள் பணிந்துவிட வேண்டும். ஆக, நீங்கள் (அந்த அழைப்புக்கு) கீழ்ப்படிந்தால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய கூலியை கொடுப்பான். இதற்கு முன்பு நீங்கள் விலகியதைப் போன்று (இப்போதும் போர் செய்யாமல்) விலகினால் அவன் வலி நிறைந்த தண்டனையால் உங்களை தண்டிப்பான்."},{"id":17,"translation":"குருடர் மீது குற்றம் இல்லை, ஊனமானவர் மீது குற்றம் இல்லை, நோயாளி மீது குற்றம் இல்லை. (அவர்கள் போருக்கு வராமல் இருப்பது அவர்கள் மீது குற்றமாகாது.) எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படி(ந்து போருக்கு அழைக்கப்படும் போது போரில் கலந்து கொள்)வாரோ அவரை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். (உடல் வலிமை இருந்தும்) எவர் (போருக்கு வராமல்) விலகுவாரோ அவரை வலி நிறைந்த தண்டனையால் அவன் தண்டிப்பான்."},{"id":18,"translation":"திட்டவட்டமாக அல்லாஹ் நம்பிக்கையாளர்களை திருப்தி அடைந்தான், அவர்கள் உம்மிடம் மரத்தின் கீழ் விசுவாச உறுதிமொழி செய்தபோது. ஆக, அவன் அவர்களின் உள்ளங்களில் உள்ளதை (-உறுதிமொழியை நிறைவேற்றும் உண்மையான எண்ணத்தை) அறிந்தான். ஆகவே, அவர்கள் மீது அமைதியை (நிம்மதியை, பொறுமையை, கண்ணியத்தை, மார்க்கத்தில் உறுதியாக இருப்பதை) இறக்கினான்; இன்னும், சமீபமான ஒரு வெற்றியையும் அவன் அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுத்தான்."},{"id":19,"translation":"இன்னும், அதிகமான கனீமத்துகளை (அவன் அவர்களுக்கு வெகுமதியாகக் கொடுப்பான்). அவர்கள் அவற்றை பெறுவார்கள். அல்லாஹ் மிகைத்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":20,"translation":"அல்லாஹ் உங்களுக்கு அதிகமான கனீமத்துகளை வாக்களித்தான். அவற்றை நீங்கள் பெறுவீர்கள். ஆக, (அவற்றில்) இதை (-கைபர் யுத்தத்தின் கனீமத் பொருட்களை) அவன் உங்களுக்கு விரைவாகக் கொடுத்தான். இன்னும், (பிற) மக்களின் கரங்களை உங்களை (விட்டும் உங்கள் குடும்பத்தை) விட்டும் அவன் தடுத்தான். (நம்பிக்கையாளர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அல்லாஹ் பாதுகாத்தது) நம்பிக்கையாளர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இருப்பதற்காகவும்; இன்னும், உங்களை நேரான பாதையில் வழி நடத்துவதற்காகவும் (அவன் உங்களை விட்டு எதிரிகளின் கரங்களை தடுத்து, உங்களை பாதுகாத்தான்)."},{"id":21,"translation":"இன்னும் (நாடுகளில்) வேறு பலவற்றையும் உங்களுக்கு வாக்களித்திருக்கிறான். (இப்போது) நீங்கள் அவற்றின் மீது (போர் தொடுத்து அவற்றை வெற்றி கொள்ள) ஆற்றல் பெறவில்லை. அல்லாஹ் அவற்றை (எல்லாம்) திட்டமாக சூழ்ந்திருக்கிறான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்."},{"id":22,"translation":"நிராகரிப்பாளர்கள் உங்களிடம் போரிட்டால் (கண்டிப்பாக) அவர்கள் புறமுதுகு காட்டி (ஓடி)யிருப்பார்கள். பிறகு, அவர்கள் (தங்களுக்கு) பாதுகாவலரையும் உதவியாளரையும் காண மாட்டார்கள்."},{"id":23,"translation":"இதற்கு முன்னர் சென்ற அல்லாஹ்வின் நடைமுறைப்படிதான் (இவர்களுடனும் அல்லாஹ் நடந்து கொண்டான்). அல்லாஹ்வின் நடைமுறையில் (எவ்வித) மாற்றத்தை(யும்) நீர் காணமாட்டீர்."},{"id":24,"translation":"அவன்தான் அவர்களின் கரங்களை உங்களை விட்டும் தடுத்தான். இன்னும், அவர்கள் மீது உங்களுக்கு வெற்றியை கொடுத்த பின்னர் உங்கள் கரங்களை அவர்களை விட்டும் மக்காவின் நடுப்பகுதியில் வைத்து தடுத்தான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்கியவனாக இருக்கிறான்."},{"id":25,"translation":"(மக்காவின் குறைஷிகளாகிய) அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்கள் (அல்லாஹ்வை பரிசுத்தமாக வணங்குவதையும் உமது தூதுத்துவத்தையும்) நிராகரித்தார்கள்; இன்னும், புனிதமான மஸ்ஜிதை விட்டு உங்களையும் வழிபாட்டுக்காக கொண்டுவரப்பட்ட பலிப் பிராணியை – அது தனது இடத்திற்கு (சென்று) சேர்வதையும் - அவர்கள் தடுத்தார்கள். இன்னும், நம்பிக்கை கொண்ட ஆண்களும் நம்பிக்கை கொண்ட பெண்களும் அங்கு (-மக்காவில்) இல்லாமல் இருந்திருந்தால் (நீங்கள் அந்த மக்காவாசிகளை தாக்கும்படி நாம் செய்திருப்போம். அப்படி செய்திருந்தால் ஹிஜ்ரத் செய்யாமல் மக்காவில் காஃபிர்களுக்கு மத்தியில் தங்கியிருந்த நம்பிக்கை கொண்ட ஆண்களையும் பெண்களையும் நீங்கள் தவறாக கொன்றிருப்பீர்கள். நீங்கள் அறியாமல் இப்படி செய்து விட்டால் உங்கள் மீது பழியும் பாவமும் வந்திருக்கும்). நீங்கள் (அவர்களை) அறியாமல் அவர்களை தாக்கிவிட, அவர்களினால் (-அவர்களைக் கொன்றுவிடுவதால்) உங்களுக்கு பழிப்பு(ம் குற்றப் பரிகாரமும்) ஏற்பட்டுவிடும். (எதிரி நாட்டில் இருந்த நம்பிக்கையாளர்களை கொன்றதால் பரிகாரம் - கஃப்பாரா செய்வது உங்கள் மீது கடமையாகிவிடும். அது உங்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிடும். ஆகவே, போர் நிகழாமல் அல்லாஹ் தடுத்தான். மேலும்,) அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தனது அருளில் (-இஸ்லாமிய மார்க்கத்தில்) நுழைப்பதற்காக(வும் மக்காவில் உங்களுக்குள் போர் நிகழ்ந்துவிடாமல் பாதுகாத்தான்). அவர்கள் (-அந்த நம்பிக்கையாளர்கள் ஹிஜ்ரத் செய்து நிராகரிப்பாளர்களை விட்டு) நீங்கி இருந்திருந்தால் அவர்களில் (-அந்த மக்கா வாசிகளில்) நிராகரித்தவர்களை துன்புறுத்தும் தண்டனையால் தண்டித்திருப்போம்."},{"id":26,"translation":"நிராகரித்தவர்கள் தங்கள் உள்ளங்களில் அறியாமைக்கால திமிரை (அகம்பாவத்தை) ஏற்படுத்திக் கொண்ட அந்த சமயத்தை நினைவு கூருங்கள்! ஆக, அல்லாஹ் தனது தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் தனது சகீனாவை (-தன் புறத்தில் இருந்து நிம்மதியையும் பொறுமையையும் கண்ணியத்தையும்) இறக்கினான். இன்னும், அவர்களுக்கு இறையச்சத்தின் வாக்கை அவசியமாக்கினான். (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற திரு கலிமாவை விரும்பி ஏற்கும்படியும் அதை உறுதியாக பற்றிப் பிடிக்கும்படியும் செய்தான்.) இன்னும், அவர்கள்தான் அதற்கு மிகத்தகுதியுடைவர்களாகவும் அதற்கு சொந்தக்காரர்களாகவும் (-உரிமை உள்ளவர்களாகவும்) இருந்தார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவனாக இருக்கிறான்."},{"id":27,"translation":"திட்டவட்டமாக அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் பார்த்த) கனவை யதார்த்தத்தில் உண்மையாக நிகழ்த்திக் கொடுத்தான். அல்லாஹ் நாடினால், - பாதுகாப்பு பெற்றவர்களாக உங்கள் தலை(முடி)களை சிரைத்தவர்களாக; இன்னும், (உங்களில் சிலர்) தலை முடியை குறைத்தவர்களாக - நிச்சயமாக நீங்கள் புனிதமான மஸ்ஜிதில் நுழைவீர்கள். (அப்போது எந்த எதிரியையும்) நீங்கள் பயப்பட மாட்டீர்கள். ஆக, (ஹுதைபிய்யா உடன்படிக்கையில் உள்ள நன்மைகளில்) நீங்கள் அறியாதவற்றை அவன் அறிவான். அதற்கு (-மக்காவில் உம்ராவிற்கு நுழைவதற்கு) முன்பாக சமீபமான (வேறு) ஒரு வெற்றியையும் (-ஹுதைபிய்யா உடன்படிக்கையையும் கைபர் வெற்றியையும் உங்களுக்கு) ஏற்படுத்தினான்."},{"id":28,"translation":"அவன்தான் தனது தூதரை நேர்வழி இன்னும் உண்மையான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அ(ந்த உண்மையான மார்க்கத்)தை மேலோங்க வைப்பதற்காக. இன்னும் சாட்சியாளனாக அல்லாஹ்வே போதுமானவன்."},{"id":29,"translation":"முஹம்மத் (அவர் மீது அல்லாஹ்வின் அருள் நிலவுக!) அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் நிராகரிப்பாளர்கள் மீது கடினமானவர்கள், தங்களுக்கு மத்தியில் கருணையாளர்கள் ஆவர். (தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். அவர்களின் தோற்றம் அவர்களின் முகங்களில் சுஜூது (-சிரம் பணிந்து வணங்குவது) உடைய அடையாளமாக இருக்கும். இது தவ்ராத்தில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாகும். இன்னும், இன்ஜீலில் கூறப்பட்ட அவர்களின் தன்மையாவது, (நெல், கோதுமை போன்ற) ஒரு விளைச்சலைப் போலாகும். அது (-அந்த விளைச்சல்) தனது (செடியின்) காம்பை வெளியாக்கியது. இன்னும், அதைப் பலப்படுத்தியது. பிறகு அது தடிப்பமாக ஆனது. அது தனது தண்டின் மீது உயர்ந்து நின்று, விவசாயிகளை கவர்கிறது. (இப்படித்தான் நம்பிக்கையாளர்களை) அவர்கள் மூலமாக நிராகரிப்பாளர்களுக்கு ரோஷமூட்டுவதற்காக (அல்லாஹ் ஓங்கி உயரச் செய்வான்). நம்பிக்கை கொண்டு நன்மைகளை செய்த அவர்களுக்கு அல்லாஹ் (தனது) மன்னிப்பையும் மகத்தான கூலியையும் வாக்களித்தான்."}]},{"id":49,"verses":[{"id":1,"translation":"(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு தெளிவான வெற்றியை வழங்கினோம்."},{"id":2,"translation":"நம்பிக்கையாளர்களே! நபியின் குரலுக்கு மேல் உங்கள் குரல்களை உயர்த்தாதீர்கள்! இன்னும், உங்களில் சிலர், சிலருக்கு முன் உரக்கப் பேசுவதைப் போல் அவருக்கு முன் பேசுவதில் உரக்கப் பேசாதீர்கள்! நீங்கள் உணராமல் இருக்கின்ற நிலையில் உங்கள் அமல்கள் பாழாகிவிடாமல் இருப்பதற்காக (அவருடன் மிக மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்!)."},{"id":3,"translation":"நிச்சயமாக எவர்கள் தங்கள் குரல்களை அல்லாஹ்வின் தூதருக்கு அருகில் தாழ்த்திக் கொள்கிறார்களோ - அவர்கள் எத்தகையோர் என்றால் அவர்களுடைய உள்ளங்களை இறையச்சத்திற்காக அல்லாஹ் சோதித்து (தேர்வு செய்து) இருக்கிறான். அவர்களுக்கு (அல்லாஹ்வின்) மன்னிப்பும் மகத்தான கூலியும் உண்டு."},{"id":4,"translation":"நிச்சயமாக (நீர் தங்கி இருக்கிற) அறைகளுக்குப் பின்னால் இருந்து உம்மை சத்தமிட்டு அழைப்பவர்கள் - அவர்களில் அதிகமானவர்கள் (உங்கள் கண்ணியத்தை) புரியமாட்டார்கள்."},{"id":5,"translation":"நீர் (அறைகளை விட்டு) வெளியேறி அவர்களிடம் வருகின்ற வரை அவர்கள் பொறுமையாக (எதிர்பார்த்து) இருந்திருந்தால் அது அவர்களுக்கு நன்றாக இருந்திருக்கும். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":6,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களிடம் பாவியான ஒருவர் (ஒரு கூட்டத்தைப் பற்றி) ஒரு செய்தியைக் கொண்டுவந்தால் (அந்த செய்தியைப் பற்றி) நன்கு தெளிவு பெறுங்கள், (-அவசரப்பட்டு முடிவு எடுக்காமல், செய்தியை உறுதிசெய்து கொள்ளுங்கள்,) ஒரு கூட்டத்திற்கு - (அவர்களைப் பற்றி சரியாக) அறியாமல் - நீங்கள் சேதமேற்படுத்திவிடாமல் இருப்பதற்காக. ஆக, (அப்படி செய்யவில்லையென்றால்) நீங்கள் செய்ததற்காக வருந்தக் கூடியவர்களாக நீங்கள் ஆகிவிடுவீர்கள்."},{"id":7,"translation":"(நபியின் தோழர்களே!) அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக உங்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார். காரியங்களில் அதிகமானவற்றில் அவர் உங்களுக்கு கட்டுப்பட்டு நடந்தால் நீங்கள் சிரமப்பட்டு விடுவீர்கள். என்றாலும், அல்லாஹ் உங்களுக்கு ஈமானை விருப்பமாக்கினான்; இன்னும், உங்கள் உள்ளங்களில் அதை அலங்கரித்தான்; இன்னும், இறை நிராகரிப்பையும் பாவத்தையும் (தூதருக்கு) மாறு செய்வதையும் உங்களுக்கு வெறுப்பாக்கினான். இத்தகையவர்கள்தான் நல்லறிவுபெற்றவர்கள் (-நேர்வழியாளர்கள்) ஆவார்கள்."},{"id":8,"translation":"அல்லாஹ்வின் புறத்தில் இருந்து அருளாகவும் கிருபையாகவும் (அவன் உங்களுக்கு ஈமானை நேசமாக்கி குஃப்ரை வெறுப்பாக்கி வைத்தான்). அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":9,"translation":"இன்னும், நம்பிக்கையாளர்களில் இரு பிரிவினர் தங்களுக்குள் சண்டையிட்டால் அவ்விருவருக்கும் மத்தியில் சமாதானம் செய்யுங்கள்! ஆக, அவ்விருவரில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் மீது எல்லை மீறினால் எல்லை மீறுகிறவர்களிடம் சண்டை செய்யுங்கள், அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின் பக்கம் திரும்புகிற வரை. ஆக, அவர்கள் திரும்பிவிட்டால் அவ்விருவர்களுக்கும் மத்தியில் நீதமாக சமாதானம் செய்யுங்கள்! இன்னும், நேர்மையாக இருங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நேர்மையாளர்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":10,"translation":"நம்பிக்கையாளர்கள் எல்லாம் சகோதரர்கள் ஆவர். ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கு மத்தியில் சமாதானம் செய்யுங்கள். இன்னும், நீங்கள் கருணை காட்டப்படுவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்."},{"id":11,"translation":"நம்பிக்கையாளர்களே! ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை கேலி செய்ய வேண்டாம், (கேலி செய்யப்படும்) அவர்கள் (கேலி செய்கிற) இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். பெண்களும் (மற்ற) பெண்களை கேலி செய்ய வேண்டாம். அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாக இருக்கலாம். உங்களை (-உங்களில் ஒருவர் ஒருவரை இழிவாக) குத்திப் பேசவேண்டாம். தீய பட்டப் பெயர்களைக் கொண்டு பட்டப்பெயர் சூட்டாதீர்கள். (நம்பிக்கையாளர்களை பாவிகள் என்றோ, இழிவான அர்த்தம் உடைய பெயர்களை கூறியோ அழைக்காதீர்கள்!) நம்பிக்கை கொண்டதன் பின்னர் பெயர்களில் மிக கெட்டது பாவிகள் (என்ற பெயர்) ஆகும். (ஆகவே, யாரையும் அப்படி அழைக்காதீர்கள்!) யார் திருந்தி (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பவில்லையோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவர்."},{"id":12,"translation":"நம்பிக்கையாளர்களே! எண்ணங்களில் அதிகமானவற்றை தவிர்த்து விடுங்கள்! நிச்சயமாக எண்ணங்களில் சில பாவமாகும். (பிறர் குறைகளை) ஆராயாதீர்கள்! உங்களில் சிலர், சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம். உங்களில் ஒருவர் - இறந்த நிலையில் உள்ள தனது சகோதரனின் மாமிசத்தை - சாப்பிட விரும்புவாரா? அதை நீங்கள் வெறுப்பீர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தவ்பாவை (பாவம் செய்தவர் திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்புவதை) அங்கீகரிப்பவன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":13,"translation":"மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். இன்னும், பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் உங்களை நாம் ஆக்கினோம், நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் மற்றவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":14,"translation":"கிராமப்புற அரபிகள், “நாங்கள் ஈமான் கொண்டோம்” என்று கூறுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “நீங்கள் ஈமான் கொள்ளவில்லை.” என்றாலும் “நாங்கள் முஸ்லிம்களாக ஆகி இருக்கிறோம்” என்று கூறுங்கள்! உங்கள் உள்ளங்களில் ஈமான் (இதுவரை) நுழையவில்லை. இன்னும், நீங்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படிந்து நடந்தால் உங்கள் (நல்ல) செயல்களில் எதையும் அவன் உங்களுக்கு குறைத்துவிட மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":15,"translation":"நம்பிக்கையாளர்கள் எல்லாம் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கைகொண்டவர்கள்தான். பிறகு அவர்கள் சந்தேகிக்கவில்லை. இன்னும், தங்கள் செல்வங்களாலும் தங்கள் உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகிறார்கள். அத்தகையவர்கள்தான் உண்மையா(ன நம்பிக்கையா)ளர்கள்."},{"id":16,"translation":"(நபியே!) கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்விற்கு உங்கள் நம்பிக்கையை அறிவிக்கிறீர்களா? அல்லாஹ்வோ வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான். இன்னும், அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":17,"translation":"அவர்கள் (-அந்த கிராம அரபிகள்) தாங்கள் முஸ்லிம்களாக ஆனதை உம்மீது உபகாரமாக கூறுகிறார்கள். நீர் கூறுவீராக! “நீங்கள் (ஈமானில்) உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் இஸ்லாமை (நீங்கள்) என் மீது (செய்த) உபகாரமாக” கூறாதீர்கள். மாறாக, அல்லாஹ்தான் - அவன் உங்களுக்கு ஈமானின் பக்கம் நேர்வழி காட்டியதை - உங்கள் மீது உபகாரமாகக் கூறுகிறான்,"},{"id":18,"translation":"நிச்சயமாக அல்லாஹ் வானங்கள், இன்னும் பூமியின் மறைவான விஷயங்களை நன்கறிவான். இன்னும், நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்."}]},{"id":50,"verses":[{"id":1,"translation":"நம்பிக்கையாளர்களே! (கருத்துக் கூறுவதில், முடிவெடுப்பதில்) அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முன்பாக நீங்கள் முந்தாதீர்கள்! (-அவசரப் படாதீர்கள்!) இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன் ஆவான்."},{"id":2,"translation":"மாறாக, அவர்களோ அவர்களில் இருந்தே (-மனித இனத்தில் இருந்தே) ஓர் எச்சரிப்பாளர் அவர்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியப்பட்டனர். ஆக, நிராகரிப்பாளர்கள், “இது ஒரு மிக ஆச்சரியமான விஷயம்” என்று கூறி (நபியை மறுத்து விட்ட)னர். (உங்கள் கெட்ட முடிவை மறுமையில் பார்ப்பீர்கள் என்று அவர்களை நபி எச்சரித்தார்கள். அதற்கு அவர்கள் கூறியதாவது:)"},{"id":3,"translation":"“நாங்கள் இறந்து, மண்ணாக ஆகிவிட்டாலுமா (-மீண்டும் உயிருடன் நாங்கள் எழுப்பப்பட்டு தண்டனை கொடுக்கப்படுவோம்)? அது (-இறந்தபின் எழுப்பப்படுவது நடப்பதற்கு சாத்தியமற்ற) மிக தூரமான மீட்சியாகும்.”"},{"id":4,"translation":"அவர்களி(ன் உடல்களி)ல் பூமி குறைப்பதை (-தின்று அழித்துவிடுவதை) திட்டமாக நாம் அறிவோம். (எழுதப்பட்ட செய்திகளை) பாதுகாக்கக்கூடிய பதிவு நூல் நம்மிடம் இருக்கிறது. (அதில் இவை எல்லாம் தெளிவாக பதியப்பட்டு மிக்க பாதுகாப்பாக இருக்கிறது.)"},{"id":5,"translation":"மாறாக, அவர்கள் உண்மையை (-இந்த குர்ஆனை) - அது அவர்களிடம் வந்தபோது - பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் குழப்பமான ஒரு விஷயத்தில் இருக்கிறார்கள்."},{"id":6,"translation":"அவர்கள் தங்களுக்கு மேல் உள்ள வானத்தை, “நாம் அதை எப்படி படைத்தோம்? இன்னும், அதை எப்படி அலங்கரித்தோம்? அதில் பிளவுகள் (-கீறல்கள், வெடிப்புகள்) இல்லை என்பதை (அவர்கள்) பார்க்கவில்லையா?”"},{"id":7,"translation":"இன்னும், பூமியை அதை நாம் விரித்தோம். அதில் பெரிய மலைகளை அமைத்தோம். இன்னும் அதில் அழகான எல்லா வகையான தாவரங்களை முளைக்க வைத்தோம்."},{"id":8,"translation":"(அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடிய எல்லா அடியார்களுக்கும் (அவர்கள் இறை அத்தாட்சிகளை) உற்று நோக்குவதற்காகவும் (அவற்றின் மூலம்) நல்லுபதேசம் பெறுவதற்காகவும் (நமது வசனங்களை நாம் விவரிக்கிறோம்)."},{"id":9,"translation":"இன்னும், அபிவிருத்தி செய்யப்பட்ட (அதிக நன்மைகளுடைய மழை) நீரை வானத்தில் இருந்து இறக்கினோம். ஆக, அதன் மூலம் தோட்டங்களையும் அறுவடை செய்யப்படும் தானியங்களையும் முளைக்க வைத்தோம்."},{"id":10,"translation":"இன்னும் உயரமான பேரீச்ச மரங்களையும் (நாம் முளைக்க வைத்தோம்). அவற்றில் அடர்த்தியான குலைகள் இருக்கின்றன."},{"id":11,"translation":"அடியார்களுக்கு உணவாக (-வாழ்வாதாரமாக) இருப்பதற்காக (இவற்றை நாம் முளைக்க வைத்தோம்). இன்னும், அதன் மூலம் (-மழைநீர் மூலம்) இறந்த பூமியை நாம் உயிர்ப்பிப்போம். இவ்வாறுதான் (மண்ணறையில் இருந்து உயிருடன் அடியார்கள்) வெளியேறுவதும் நடக்கும்."},{"id":12,"translation":"இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்களும் கிணற்றுடையவர்களும் ஸமூது சமுதாய மக்களும் (தூதர்களைப்) பொய்ப்பித்தனர்."},{"id":13,"translation":"இன்னும், ஆது சமுதாய மக்களும் ஃபிர்அவ்னும் லூத்துடைய சகோதரர்களும் (தூதர்களைப் பொய்ப்பித்தனர்.)"},{"id":14,"translation":"இன்னும், தோட்டக்காரர்களும் துப்பஃ உடைய மக்களும் (தூதர்களைப் பொய்ப்பித்தனர்.) (மேற்கூறப்பட்ட இவர்கள்) எல்லோரும் தூதர்களைப் பொய்ப்பித்தனர். ஆகவே, என் எச்சரிக்கை (-எனது தண்டனை அவர்களுக்கு வருவது) உறுதியாகிவிட்டது."},{"id":15,"translation":"ஆக, முதல் முறை படைத்ததினால் நாம் பலவீனமாக ஆகிவிட்டோமா? (இல்லையே!) மாறாக, அவர்கள் (இறந்தபின் மறுமையில்) புதிதாக படைக்கப்படுவதைப் பற்றி குழப்பத்தில் இருக்கிறார்கள்."},{"id":16,"translation":"திட்டவட்டமாக நாம் மனிதனை படைத்தோம். இன்னும் அவனது உள்ளம் அவனிடம் எதை கிசுகிசுக்கிறதோ அதை நாம் அறிவோம். நாம் அவனுக்கு (அவனுடைய) கழுத்தின் நரம்பைவிட மிக நெருக்கமானவர்கள் (அவன் மனதிற்குள் பேசுவதையும் நாம் அறிவோம், அவன் மீது நாம் முழு ஆதிக்கமுடையவர்களாக இருக்கிறோம்.)"},{"id":17,"translation":"சந்திக்கின்ற இரு வானவர்கள் சந்திக்கின்ற போது (நாம் மனிதனுக்கு மிக அருகில் இருக்கிறோம்). வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் (ஒவ்வொரு பக்கத்திலும் மனிதனை) கண்காணிப்பவர் இருப்பார்."},{"id":18,"translation":"பேச்சில் எதையும் அவன் பேச மாட்டான், கண்காணிப்பாளர், பிரசன்னமாகி இருப்பவர் (ஆகிய இரு வானவர்கள்) அவனிடம் இருந்தே தவிர."},{"id":19,"translation":"மரணத்தின் மயக்கம் (மறுமையின்) உண்மையை கொண்டு வந்துவிட்டது. அதுதான் (-அந்த மரணம் இது நாள் வரை) நீ அதை விட்டு விலகி ஓடுகிறவனாக இருந்தாய்."},{"id":20,"translation":"இன்னும், (அப்போது) எக்காளத்தில் ஊதப்படும். அதுதான் எச்சரிக்கப்பட்ட நாள் ஆகும்."},{"id":21,"translation":"இன்னும், எல்லா ஆன்மாவும் - அதனுடன் (அதை) ஓட்டிவருபவரும் (அதற்கு) சாட்சி சொல்பவரும் இருக்கின்ற நிலையில் - வரும்."},{"id":22,"translation":"திட்டவட்டமாக இதை மறந்(து அலட்சியம் செய்)த நிலையில் நீ இருந்தாய். ஆக, உன்னை விட்டும் உனது (மறதியின்) திரையை நாம் அகற்றி விட்டோம். ஆகவே, இன்றைய தினம் உனது பார்வை மிகக் கூர்மையானதாக இருக்கும்."},{"id":23,"translation":"அவனுடைய நண்பர் (-உலகில் மனிதனின் செயல்களை கண்காணித்து பதிவு செய்வதற்காக அவனுடன் நிர்ணயிக்கப்பட்ட வானவர்) கூறுவார்: “இது (-இவர் உலகில் செய்த அமல்) என்னிடம் தயாராக (பாதுகாக்கப்பட்டு) இருக்கிறது.”"},{"id":24,"translation":"(மனிதனுடன் நிர்ணயிக்கப்பட்ட இரு வானவர்களே!) நிராகரிப்பாளர், முரண்டுபிடிப்பவர் எல்லோரையும் நீங்கள் நரகத்தில் தள்ளுங்கள்!"},{"id":25,"translation":"செல்வத்தை (தர்மம் செய்யாமல்) முற்றிலும் தடுப்பவர், (மக்கள் மீது தனது சொல்லாலும் செயலாலும்) எல்லை மீறுபவர், (அல்லாஹ்வின் விஷயத்தில் அதிகம்) சந்தேகிப்பவன் எல்லோரையும் (நீங்கள் நரகத்தில் தள்ளுங்கள்!)"},{"id":26,"translation":"எவர் அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தினாரோ அவரை கடுமையான தண்டனையில் நீங்கள் தள்ளுங்கள்! (என்று அந்த இரு வானவர்களுக்கு உத்தரவிடப்படும்.)"},{"id":27,"translation":"அவனுடைய நண்பன் (-உலகத்தில் மனிதனுடன் இணைந்திருந்த ஷைத்தான்) கூறுவான்: “எங்கள் இறைவா! நான் அவனை (உனது மார்க்கத்தை) மீறச் செய்யவில்லை. (நான் அவனை வழி கெடுக்கவில்லை.) எனினும், அவன் தூரமான வழிகேட்டில் இருந்தான்.”"},{"id":28,"translation":"அல்லாஹ் கூறுவான்: “என்னிடம் தர்க்கம் செய்யாதீர்கள். நான் உங்களுக்கு திட்டமாக எச்சரிக்கையை முற்படுத்திவிட்டேன்.”"},{"id":29,"translation":"(இணைவைத்தவர்கள் விஷயத்தில்) என்னிடம் பேச்சுகள் (-எனது வாக்குகள்) மாற்றப்படாது. நான் அடியார்களுக்கு அறவே அநியாயம் செய்பவனாக இல்லை,"},{"id":30,"translation":"“நீ நிரம்பிவிட்டாயா? என்று நரகத்திடம் நாம் கூறுகின்ற (அந்த) நாளில் (முற்றிலும் நீதமாக தீர்ப்புகள் இருக்கும்).” அந்த நரகம் (பதில்) கூறும்: “(நரகத்தில் போடுவதற்கு பாவிகள்) இன்னும் அதிகம் இருக்கிறார்களா?” என்று."},{"id":31,"translation":"இன்னும், இறையச்சமுள்ளவர்களுக்காக சொர்க்கம் தூரமின்றி சமீபமாகக் கொண்டு வரப்படும்."},{"id":32,"translation":"அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய, (அல்லாஹ்வின் கட்டளைகளை) அதிகம் பேணி பாதுகாக்கக்கூடிய எல்லோருக்கும் இ(ந்த சொர்க்கமான)து வாக்களிக்கப்படுகிறது."},{"id":33,"translation":"எவர் ரஹ்மானை மறைவில் பயந்து (பாவங்களை விட்டு விலகி,) அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பிய உள்ளத்துடன் வந்தாரோ (அவருக்காக சொர்க்கம் வாக்களிக்கப்படுகிறது),"},{"id":34,"translation":"(இத்தகைய நல்லோரே!) நீங்கள் அ(ந்த சொர்க்கத்)தில் ஸலாமுடன் - பாதுகாப்புடன் நுழையுங்கள்! இதுதான் (முடிவே இல்லாத) நிரந்தர நாள் ஆகும்."},{"id":35,"translation":"அவர்கள் நாடுகின்ற எல்லாம் அதில் அவர்களுக்கு கிடைக்கும். இன்னும், நம்மிடம் அதிகமான (- முடிவில்லாத) அருட்கொடைகள் (-இன்பங்கள் அவர்களுக்கு) உண்டு."},{"id":36,"translation":"இவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை நாம் அழித்தோம், அவர்கள் இவர்களை விட முரட்டு சக்தி உடைய பலசாலிகளாக இருந்தார்கள். ஆக, அவர்கள் (தங்களுக்கு) தப்பிக்கும் இடம் ஏதும் (அவர்களுக்கு) இருக்கிறதா? என்று நகரங்களில் (மூலை முடுக்குகளில் எல்லாம்) சுற்றி வந்தார்கள்."},{"id":37,"translation":"யார் ஒருவர் அவருக்கு (சிந்திக்கின்ற உயிருள்ள) உள்ளம் (-அறிவு) இருக்கிறதோ அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது. அல்லது, யார் ஒருவர் - அவரோ (உள்ளத்தால்) பிரசன்னமாகி இருந்து, (சொல்லப்படுவதை) நன்கு புரிபவராக இருந்து, (அழிக்கப்பட்ட முற்கால மக்களைப் பற்றி நாம் கூறுகிற செய்திகளை) - செவிசாய்த்து கேட்பாரோ (அவருக்கு நிச்சயமாக இதில் நல்லுபதேசம் இருக்கிறது.)"},{"id":38,"translation":"இன்னும், திட்டவட்டமாக வானங்களையும் பூமியையும் அவை இரண்டுக்கும் மத்தியில் உள்ளவற்றையும் ஆறு நாட்களில் நாம் படைத்தோம். நமக்கு எவ்வித சோர்வும் (அசதியும், களைப்பும்) ஏற்படவில்லை."},{"id":39,"translation":"ஆக, (நபியே!) அவர்கள் பேசுகிற பேச்சுகளை சகிப்பீராக! இன்னும், சூரியன் உதிப்பதற்கு முன்னரும் மறைவதற்கு முன்னரும் உமது இறைவனை புகழ்ந்து துதித்து வணங்குவீராக!"},{"id":40,"translation":"இன்னும், இரவி(ன் எல்லா நேரங்களி)லும் (உம்மால் முடிந்தளவு) அவனை துதித்து வணங்குவீராக! இன்னும் அந்த (மஃரிப்) தொழுகைக்குப் பிறகு (சுன்னத்தான இரு ரக்அத்துகளை) தொழுவீராக!"},{"id":41,"translation":"(நபியே!) சமீபமான ஓர் இடத்தில் இருந்து அழைப்பவர் அழைக்கின்ற நாளில் (அந்த அழைப்பை) நீர் செவியுறுவீராக!"},{"id":42,"translation":"அவர்கள் உண்மையில் அந்த சப்தத்தை செவியுறுகின்ற நாளில் (தங்களது புதைக்குழியில் இருந்து அவர்கள் வெளியேறுவார்கள்). அதுதான் (படைப்புகள் அனைவரும் புதைக்குழிகளில் இருந்து) வெளியேறுகிற நாளாகும்."},{"id":43,"translation":"நிச்சயமாக நாம்தான் உயிர்ப்பிக்கிறோம்; மரணிக்க வைக்கிறோம். இன்னும், நம் பக்கமே (இறுதி) மீளுமிடம் இருக்கிறது."},{"id":44,"translation":"அவர்களை விட்டும் பூமி பிளந்து அவர்கள் (அதிலிருந்து) அதிவிரைவாக வெளியேறுகின்ற நாளில் (அவர்களின் மீளுமிடம் நம் பக்கமே இருக்கிறது). இது (-மறுமையில் படைப்புகளை உயிர்ப்பித்து ஒன்று சேர்ப்பது) நமக்கு இலகுவான ஒன்று திரட்டலாகும்."},{"id":45,"translation":"அவர்கள் கூறுவதை நாம் அதிகம் அறிந்தவர்கள் ஆவோம். (நபியே!) நீர் அவர்கள் மீது (-அவர்களை அடக்கி வைக்கக்கூடிய, கட்டாயப்படுத்தக்கூடிய) கொடுங்கோலனாக இல்லை. ஆகவே, எனது எச்சரிக்கையை பயப்படுகிறவருக்கு இந்த குர்ஆன் மூலமாக அறிவுரை வழங்குவீராக!"}]},{"id":51,"verses":[{"id":1,"translation":"காஃப். கீர்த்திமிக்க குர்ஆன் மீது சத்தியமாக! (முஹம்மத் அவர்கள், அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட உண்மையான தூதர்தான்)."},{"id":2,"translation":"(பெரும்) சுமையை சுமக்கின்ற மேகங்கள் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"மென்மையாக செல்கின்ற கப்பல்கள் மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"(அல்லாஹ்வின்) கட்டளைகளை (அவனது படைப்புகளில்) பிரிப்பவர்கள் மீது சத்தியமாக!"},{"id":5,"translation":"நீங்கள் வாக்களிக்கப்படுவதெல்லாம் உண்மைதான்."},{"id":6,"translation":"நிச்சயமாக (விசாரணையும்) கூலி கொடுக்கப்படுவது(ம்) நிகழ்ந்தே தீரும்."},{"id":7,"translation":"அழகிய தோற்றமுடைய (நட்சத்திரங்கள் செல்லும் பாதைகளை உடைய) வானத்தின் மீது சத்தியமாக!"},{"id":8,"translation":"நிச்சயமாக நீங்கள் (இந்த குர்ஆன் விஷயத்தில் ஒருவருக்கொருவர்) மாறுபட்ட பேச்சில் (-மாறுபட்ட கருத்தைக் கூறுவதில்) இருக்கிறீர்கள்."},{"id":9,"translation":"திருப்பப்படுபவர் இ(ந்த தூதரை விட்டும் இந்த வேதத்)தை விட்டும் திருப்பப்படுகிறார்."},{"id":10,"translation":"பொய்யை கற்பனை செய்பவர்கள் அழிந்து போகட்டும்."},{"id":11,"translation":"அவர்கள் (சுகபோக வாழ்க்கையின்) மயக்கத்தில் மறதியாளர்களாக (மறுமையை அலட்சியம் செய்தவர்களாக) இருக்கிறார்கள்."},{"id":12,"translation":"“கூலி கொடுக்கப்படும் நாள் எப்போது வரும்” என்று அவர்கள் (கேலியாக) கேட்கிறார்கள்."},{"id":13,"translation":"அவர்கள் நெருப்பின் மீது கிடத்தப்பட்டு தண்டனை செய்யப்படுகின்ற நாளில்,"},{"id":14,"translation":"உங்கள் தண்டனையை சுவையுங்கள்! இது(தான்), நீங்கள் அவசரமாகத் தேடிக்கொண்டிருந்ததாகும் (என்று கூறப்படும்)."},{"id":15,"translation":"நிச்சயமாக இறையச்சமுள்ளவர்கள் சொர்க்கங்களில்; இன்னும், (அவற்றில் உள்ள) நீரூற்றுகளில் இருப்பார்கள்."},{"id":16,"translation":"அவர்களின் இறைவன் அவர்களுக்கு கொடுத்ததை (மகிழ்ச்சியுடன்) பெற்றுக்கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நல்லறம் புரிபவர்களாக இருந்தார்கள்."},{"id":17,"translation":"அவர்கள் இரவில் (அல்லாஹ்வை வணங்குவதில் அதிக நேரம் கழிப்பார்கள். ஆகவே,) மிகக் குறைவாகவே தூங்குகிறவர்களாக இருந்தார்கள்."},{"id":18,"translation":"இன்னும், (நீண்ட நேரம் இரவில் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடு(வதில் ஈடுபடு)வார்கள்."},{"id":19,"translation":"இன்னும், யாசிப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் அவர்களது செல்வங்களில் உரிமை உண்டு."},{"id":20,"translation":"உறுதியாக நம்பிக்கை கொள்பவர்களுக்கு (அல்லாஹ்வின் வல்லமையை உணர்த்துகின்ற) பல அத்தாட்சிகள் பூமியில் உள்ளன."},{"id":21,"translation":"இன்னும் (மனிதர்களே!) உங்களுக்குள்ளும் (பல அத்தாட்சிகள் உள்ளன.) ஆக, நீங்கள் (எப்படி படைக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை) உற்று நோக்க மாட்டீர்களா?"},{"id":22,"translation":"இன்னும் உங்கள் உணவும் (-உங்கள் வாழ்வாதாரத்தின் மூலமாகிய மழையும் நன்மை, தீமையில்) எது உங்களுக்கு வாக்களிக்கப்படுகிறதோ அதுவும் வானத்தில்தான் (அல்லாஹ்விடம்) இருக்கிறது."},{"id":23,"translation":"ஆக, வானம், பூமியுடைய அதிபதியின் மீது சத்தியமாக! நீங்கள் (உங்கள் வாய்களால்) பேசுவது (என்பது கண்கூடாக பார்க்கப்படும் உண்மையாக இருப்பது) போன்றே நிச்சயமாக (உங்கள் இறைவன் கூறுகிற) இதுவும் உண்மைதான்."},{"id":24,"translation":"இப்ராஹீமுடைய கண்ணியமான விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?"},{"id":25,"translation":"அவர்கள் அவரிடம் (வீட்டில்) நுழைந்தபோது, “ஸலாம்” கூறினார்கள். (பதிலுக்கு) அவரும், “ஸலாம்!” (என்று கூறி, சற்று தாமதித்துவிட்டு நீங்கள் என்னிடம்) “அறியப்படாத மக்கள்” என்று கூறினார்."},{"id":26,"translation":"ஆக, தனது குடும்பத்தாரிடம் திரும்பிச் சென்று, கொழுத்த காளைக் கன்றை (அறுத்து நெருப்பில் சுட்டு) கொண்டு வந்(து அவர்கள் முன் வைத்)தார்."},{"id":27,"translation":"ஆக, அதை அவர்கள் பக்கம் நெருக்கமாக்கி வைத்தார். (அவர்கள் சாப்பிடாமல் இருக்கவே, அவர்களை நோக்கி) நீங்கள் சாப்பிட மாட்டீர்களா? என்று கூறினார்."},{"id":28,"translation":"(ஆனால், அவர்கள் சாப்பிடவில்லை.) ஆகவே, அவர்களினால் அவர் பயத்தை உணர்ந்தார். அவர்கள் கூறினார்கள்: “பயப்படாதீர்!” இன்னும், கல்வியாளரான ஓர் ஆண் குழந்தையைக் கொண்டு அவருக்கு அவர்கள் நற்செய்தி கூறினார்கள்."},{"id":29,"translation":"ஆக, (இதை செவிமடுத்த) அவருடைய மனைவி சத்தத்தோடு முன்னோக்கி வந்தார். ஆக, தனது முகத்தை அறைந்தார். இன்னும், “(நான் ஒரு) மலடியான கிழவி ஆயிற்றே” என்று கூறினாள்."},{"id":30,"translation":"“அவ்வாறுதான் உமது இறைவன் கூறினான். நிச்சயமாக அவன்தான் மகா ஞானவான், நன்கறிந்தவன்” என்று (நபி இப்ராஹீமின் மனைவிக்கு வானவர்கள் பதில்) கூறினார்கள்."},{"id":31,"translation":"(இப்ராஹீம்) கூறினார்: “(வானவத்) தூதர்களே! உங்கள் காரியம்தான் என்ன? (நீங்கள் வந்த வேலை என்ன?)”"},{"id":32,"translation":"(வானவர்கள்) கூறினார்கள்: “நிச்சயமாக நாங்கள், குற்றவாளிகளான மக்கள் பக்கம் (அவர்களை அழிக்க) அனுப்பப்பட்டுள்ளோம்.”"},{"id":33,"translation":"களிமண்ணினால் ஆன கல்லை அவர்கள் மீது எறிவதற்காக (நாங்கள் அனுப்பப்பட்டுள்ளோம்)."},{"id":34,"translation":"(எல்லை மீறிய) பாவிகளுக்காக உமது இறைவனிடம் (அந்த கல்) அடையாளமிடப்பட்டதாகும்."},{"id":35,"translation":"ஆக, அதில் நம்பிக்கையாளர்களாக இருந்தவர்களை நாம் (அந்த ஊரில் இருந்து) வெளியேற்றி விட்டோம்."},{"id":36,"translation":"ஆக, அதில் (-அந்த ஊரில்) முஸ்லிம்களுடைய ஒரு வீட்டைத் தவிர நாம் (அங்கு) காணவில்லை."},{"id":37,"translation":"துன்புறுத்தும் தண்டனையைப் பயப்படக் கூடியவர்களுக்கு அதில் ஓர் அத்தாட்சியை நாம் விட்டுவைத்துள்ளோம்."},{"id":38,"translation":"இன்னும் மூஸாவி(ன் சரித்திரத்தி)லும் - நாம் அவரை ஃபிர்அவ்னிடம் தெளிவான ஆதாரத்தைக் கொண்டு அனுப்பியபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":39,"translation":"ஆக, அவன் தனது பலத்தினால் (பெருமை கொண்டவனாக நமது அத்தாட்சிகளை) புறக்கணித்து விலகினான். இன்னும், (மூஸா, இறைவனின் தூதர் அல்ல. அவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் ஆவார் என்று அவன் கூறினான்."},{"id":40,"translation":"ஆக, அவனையும் அவனுடைய இராணுவங்களையும் நாம் (கடும் தண்டனையால்) பிடித்தோம். ஆக, அவர்களை கடலில் எறிந்தோம். அவனோ பழிப்புக்குறியவன் ஆவான்."},{"id":41,"translation":"இன்னும், ஆது சமுதாயத்தி(ன் சரித்திரத்தி)லும் - அவர்கள் மீது நாம் மலட்டுக் காற்றை (-எவ்வித நன்மையுமில்லாத, அழிவை ஏற்படுத்தும் காற்றை) அனுப்பியபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":42,"translation":"அ(ந்த காற்றான)து எதன் மீது (கடந்து) செல்கிறதோ அதை பழைய மக்கிப்போன பொருளைப் போன்று ஆக்காமல் விட்டுவிடாது."},{"id":43,"translation":"இன்னும், ஸமூது சமுதாயத்தி(ன் சரித்திரத்தி)லும் - சிறிது காலம் வரை சுகமாக இருங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டபோது - பல அத்தாட்சிகள் இருக்கின்றன."},{"id":44,"translation":"ஆக, அவர்கள் தங்கள் இறைவனின் கட்டளையை ஏற்காமல் பெருமை அடித்(து மாறு செய்)தனர். ஆக, அவர்களை இடிமுழக்கம் பிடித்தது. அவர்களோ (அந்த தண்டனையை) எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்."},{"id":45,"translation":"ஆக, (அல்லாஹ்வின் தண்டனைக்கு முன் எதிர்த்து) நிற்பதற்கு அவர்கள் ஆற்றல் பெறவில்லை. அவர்கள் (நம்மிடம்) பழிதீர்ப்பவர்களாகவும் இருக்கவில்லை."},{"id":46,"translation":"இன்னும், இதற்கு முன்னர் நூஹுடைய மக்களையும் தண்டனை பிடித்தது. நிச்சயமாக அவர்கள் பாவிகளான மக்களாக இருந்தனர்."},{"id":47,"translation":"வானத்தை - அதை (நமது மிகப் பெரிய) சக்தியினால் (முகடாக) - நாம் உயர்த்தினோம். இன்னும், நிச்சயமாக நாம் (அவ்வாறு செய்வதற்கு) மிகவும் வசதி படைத்தவர்கள் ஆவோம்."},{"id":48,"translation":"இன்னும், பூமியை, நாம் அதை விரித்தோம். விரிப்பவர்களில் நாம் மிகச் சிறந்தவர்கள்."},{"id":49,"translation":"இன்னும், ஒவ்வொன்றிலும் இரண்டு ஜோடிகளை படைத்தோம், நீங்கள் (அல்லாஹ்வின் படைப்புகளை சிந்தித்து) நல்லுணர்வு பெறுவதற்காக."},{"id":50,"translation":"ஆக, நீங்கள் அல்லாஹ்வின் பக்கம் விரண்டு ஓடுங்கள்! நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்."},{"id":51,"translation":"இன்னும், அல்லாஹ்வுடன் வேறு ஒரு கடவுளை ஏற்படுத்தாதீர்கள். நிச்சயமாக நான் அவனிடமிருந்து உங்களுக்கு (அனுப்பப்பட்ட) தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்."},{"id":52,"translation":"இவ்வாறுதான், இவர்களுக்கு முன்னர் சென்றவர்களுக்கு எந்த ஒரு தூதரும் வரவில்லை, அவர்கள் (தங்களது தூதரைப் பார்த்து இவர்) ஒரு சூனியக்காரர்; அல்லது, ஒரு பைத்தியக்காரர் என்று கூறியே தவிர."},{"id":53,"translation":"(முற்கால நிராகரிப்பாளர்கள், இக்கால நிராகரிப்பாளர்கள்) இவர்கள் (எல்லோரும்) தங்களுக்குள் இ(றைத்தூதர்களை பொய்ப்பிக்க வேண்டும் என்ற விஷயத்)தை உபதேசித்துக் கொண்டார்களா? (-முன் சென்ற நிராகரிப்பாளர்கள் இக்கால நிராகரிப்பாளர்களுக்கு ஏதும் உபதேசத்தை சொல்லிச் சென்றுள்ளார்களா, நாங்கள் நிராகரித்ததைப் போன்று நீங்களும் உங்கள் நபியை பொய்ப்பிக்க வேண்டும் என்று.) மாறாக, இவர்கள் எல்லை மீறிய மக்கள் ஆவார்கள்."},{"id":54,"translation":"ஆகவே, (நபியே!) நீர் அவர்களை விட்டு விலகுவீராக! ஆக, நீர் பழிக்கப்பட்டவர் இல்லை."},{"id":55,"translation":"இன்னும், (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்."},{"id":56,"translation":"ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை."},{"id":57,"translation":"நான் அவர்களிடம் (அவர்கள் எனது படைப்புகளுக்கு) வாழ்வாதாரம் எதையும் (கொடுக்க வேண்டுமென்று) நாடவில்லை. இன்னும், அவர்கள் என(து படைப்புகளு)க்கு உணவளிப்பதையும் நான் நாடவில்லை."},{"id":58,"translation":"நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளிப்பவன் (-எல்லோருக்கும் வாழ்வாதாரத்தையும் எல்லா தேவைகளையும் வழங்குபவன்), வலிமை உடையவன், மிக உறுதியானவன்."},{"id":59,"translation":"ஆக, நிச்சயமாக அநியாயம் செய்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனையில்) பெரிய பங்குண்டு, அவர்களின் கூட்டாளிகளுடைய பெரிய பங்கைப் போன்று. ஆகவே, அவர்கள் (தண்டனையை) அவசரமாகத் தேடவேண்டாம்."},{"id":60,"translation":"ஆக, நிராகரித்தவர்களுக்கு (அல்லாஹ்வின் தண்டனை எந்த நாளில் இறங்கும் என்று) – அவர்கள் அச்சுறுத்தப்பட்டார்களோ – அந்த அவர்களுடைய நாளில் கேடுதான்."}]},{"id":52,"verses":[{"id":1,"translation":"வேகமாக வீசக்கூடிய காற்றுகள் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"எழுதப்பட்ட புத்தகத்தின் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"(அது) விரிக்கப்பட்ட ஏடுகளில் (எழுதப்பட்டுள்ளது)."},{"id":4,"translation":"(ஏழாவது வானத்தில் உள்ள) அல்பைத்துல் மஃமூர் என்னும் செழிப்பான (இறை) ஆலயத்தின் மீது சத்தியமாக!"},{"id":5,"translation":"உயர்த்தப்பட்ட முகட்டின் மீது சத்தியமாக!"},{"id":6,"translation":"நீரால் நிரம்பிய கடல் மீது சத்தியமாக!"},{"id":7,"translation":"நிச்சயமாக உமது இறைவனின் தண்டனை நிகழ்ந்தே தீரும்."},{"id":8,"translation":"அதை தடுப்பவர் எவரும் இல்லை."},{"id":9,"translation":"வானம் குலுங்குகின்ற நாளில் (அந்த தண்டனை நிகழும்)."},{"id":10,"translation":"இன்னும், (அந்நாளில்) மலைகள் (அவற்றின் இடங்களை விட்டுப் பெயர்ந்து காற்றில்) செல்லும்."},{"id":11,"translation":"ஆகவே, (தூதரை) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்."},{"id":12,"translation":"அவர்கள் குழப்பத்தில் இருந்துகொண்டு (வீண்) விளையா(ட்)டு(களில் வாழ்க்கையை கழிக்)கிறார்கள்."},{"id":13,"translation":"அவர்கள் நரக நெருப்பின் பக்கம் (பலமாக) தள்ளப்படுகின்ற நாளில் (அவர்களுக்கு நாசம்தான்!)."},{"id":14,"translation":"இதுதான் நரகம், இதை நீங்கள் பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்கள்."},{"id":15,"translation":"இது என்ன மந்திரமா? நீங்கள் (இதை கண்கூடாக) பார்க்கவில்லையா?"},{"id":16,"translation":"இதில் எரிந்து பொசுங்குங்கள்! ஆக, பொறு(மையாக இரு)ங்கள்! அல்லது, பொறுக்காதீர்கள்! இரண்டும் உங்களுக்கு சமம்தான். நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்."},{"id":17,"translation":"நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் சொர்க்கங்களிலும் இன்பங்களிலும் இருப்பார்கள்."},{"id":18,"translation":"அவர்களின் இறைவன் அவர்களுக்கு (கணக்கின்றி) வழங்கியதால் (ருசிமிகுந்த அதிகமான) பழங்கள் அவர்களிடம் இருக்கும். இன்னும், அவர்களின் இறைவன் அவர்களை நரக தண்டனையை விட்டும் பாதுகாப்பான்."},{"id":19,"translation":"நீங்கள் செய்துகொண்டிருந்த அமல்களுக்கு பகரமாக மகிழ்ச்சியாக உண்ணுங்கள்! பருகுங்கள்!"},{"id":20,"translation":"(தலையணைகள்) வரிசையாக வைக்கப்பட்ட கட்டில்களில் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். கண்ணழகிகளான கருவிழிகளுடைய வெண்மையான பெண்களை அவர்களுக்கு நாம் மணமுடித்து வைப்போம்."},{"id":21,"translation":"இன்னும், எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ, அவர்களின் சந்ததிகளும் இறை நம்பிக்கையில் அவர்களைப் பின்பற்றினார்களோ அவர்களின் சந்ததிகளை அவர்களுடன் நாம் சேர்த்து வைப்போம். அவர்களின் அமல்களில் எதையும் அவர்களுக்கு நாம் குறைக்க மாட்டோம். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த செயலுக்காக (மட்டுமே) தடுத்து வைக்கப்பட்டிருப்பான். (ஒருவர் - மற்றவரின் குற்றத்தை சுமக்க மாட்டார்.)"},{"id":22,"translation":"இன்னும், நாம் அவர்களுக்கு பழங்களையும் அவர்கள் விரும்புகின்றவற்றின் மாமிசங்களையும் கொடுத்துக்கொண்டே இருப்போம்."},{"id":23,"translation":"அதில் குடிபானம் நிறைந்த குவளைகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வார்கள். அ(ந்த சொர்க்கத்)தில் பொய் இருக்காது, பிறரை பாவத்தில் தள்ளுகின்ற செயல்கள் இருக்காது."},{"id":24,"translation":"இன்னும், அவர்களுக்குரிய (பணியாளர்களாகிய) சிறுவர்கள் (பணிவிடை செய்வதற்காக) அவர்களை சுற்றி வருவார்கள். அ(ந்த சிறு)வர்களோ (சிப்பியில்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போன்று (அழகாக) இருப்பார்கள்."},{"id":25,"translation":"இன்னும், அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கி (சந்திக்க) வருவார்கள், - (உலகத்தில் பட்ட சிரமங்களைப் பற்றி ஒருவர் மற்றவரிடம்) விசாரித்தவர்களாக."},{"id":26,"translation":"(அப்போது) அவர்கள் கூறுவார்கள்: “நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் (உலகத்தில் வாழ்ந்தபோது) எங்கள் குடும்பங்களில் (அல்லாஹ்வின் தண்டனையை) பயந்தவர்களாகவே இருந்தோம்."},{"id":27,"translation":"ஆக, அல்லாஹ் எங்கள் மீது உபகாரம் புரிந்தான். இன்னும், எங்களை நரகத்தின் தண்டனையை விட்டும் பாதுகாத்தான்."},{"id":28,"translation":"நிச்சயமாக நாங்கள் இதற்கு முன்னர் அவனை அழைப்பவர்களாக (அவனை மட்டும் பரிசுத்தமாக வணங்குபவர்களாக) இருந்தோம். நிச்சயமாக அவன்தான் (தன் அடியார்கள் மீது) மிகவும் அருளுடையவன், மகா கருணையாளன் ஆவான்.”"},{"id":29,"translation":"ஆக, (நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஆக, உமது இறைவனின் அருட்கொடையால் நீர் குறி சொல்பவராகவோ பைத்தியக்காரராகவோ இல்லை."},{"id":30,"translation":"“(இவர்) ஒரு கவிஞர், காலத்தின் அசம்பாவிதங்கள் அவர் மீது இறங்க வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று அவர்கள் கூறுகிறார்களா?"},{"id":31,"translation":"(நபியே!) கூறுவீராக! “நீங்கள் எதிர்பாருங்கள். நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் உள்ளவன்தான்.”"},{"id":32,"translation":"அவர்களது அறிவுகள்தான் இ(ந்த கற்பனை சிலைகளை வணங்குவ)தற்கு அவர்களை ஏவுகின்றதா? அல்லது, அவர்கள் (அல்லாஹ்வின் மீதே பொய்கூறி) எல்லை மீறக்கூடிய (பாவிகளான) மக்களா?"},{"id":33,"translation":"“இ(ந்த வேதத்)தை இவரே தானாக இட்டுக்கட்டி கூறுகிறார்” என்று அவர்கள் கூறுகிறார்களா? மாறாக, (இவர்கள் பொய் கூறுகிறார்கள்.) இவர்கள் (இந்த வேதத்தை) நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்."},{"id":34,"translation":"ஆக, இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவர்களும் இது போன்ற (-இந்த குர்ஆனைப் போன்ற) ஒரு பேச்சை (-ஒரு வேதத்தை) கொண்டு வரட்டும்!"},{"id":35,"translation":"ஏதும் இன்றி (-தாய், தந்தை யாரும் இல்லாமல்) இவர்கள் படைக்கப்பட்டார்களா? அல்லது, இவர்களே (தங்களை சுயமாக) படைத்து கொண்டார்களா?"},{"id":36,"translation":"இவர்கள் வானங்களையும் பூமியையும் படைத்தார்களா? (இல்லையே! இவர்களோ படைக்கப்பட்டவர்கள், படைப்பவர்கள் அல்ல. பிறகு, ஏன் படைத்தவனின் கட்டளையை நிராகரிக்கிறார்கள்?) மாறாக, (அல்லாஹ்வின் அத்தாட்சிகளை) அவர்கள் உறுதி கொள்ள மாட்டார்கள்."},{"id":37,"translation":"இவர்களிடம் உமது இறைவனின் பொக்கிஷங்கள் இருக்கின்றனவா? அல்லது, இவர்கள் (அல்லாஹ்வை) அடக்கி கட்டுப்படுத்தி வைப்பவர்களா?"},{"id":38,"translation":"அவர்களுக்கு ஓர் ஏணி இருந்து, அதில் (-அவர்கள் ஏறிச்சென்று, அல்லாஹ்விடம் தங்களது கொள்கைதான் சரியானது என்று இறைவனின் வாக்கை நேரடியாக) அவர்கள் செவியுறுகின்றனரா? ஆக, அப்படி இருந்தால் அவர்களில் (அல்லாஹ்வின் வாக்கை) செவியுற்றவர் தெளிவான ஓர் ஆதாரத்தை கொண்டு வரட்டும்."},{"id":39,"translation":"அவனுக்கு பெண்பிள்ளைகளும் உங்களுக்கு ஆண் பிள்ளைகளுமா?"},{"id":40,"translation":"அவர்களிடம் கூலி எதையும் நீர் கேட்கிறீரா? (அதனால் ஏற்பட்ட) கடன் தொகையினால் அவர்கள் அதிகம் சுமைகளுக்கு ஆளாகி விட்டார்களா?"},{"id":41,"translation":"அவர்களிடம் மறைவானவற்றின் அறிவு இருக்கின்றதா? ஆக, அவர்கள் அதை (மக்களுக்கு) எழுதி கொடுக்கிறார்களா?"},{"id":42,"translation":"அவர்கள் (உமக்கும், உமது மார்க்கத்திற்கும்) சூழ்ச்சியை நாடுகின்றனரா? ஆக, நிராகரித்தவர்கள்தான் சூழ்ச்சி செய்யப்பட்டவர்கள். (அல்லாஹ்வின் தண்டனை அவர்களை சூழ்ந்து கொள்ளும். ஆகவே, நபியே! அல்லாஹ்வை நம்பி, உமது காரியத்தில் முன்னேறி செல்வீராக!)"},{"id":43,"translation":"அல்லாஹ்வை அன்றி கடவுள் அவர்களுக்கு உண்டா? அவர்கள் இணைவைக்கும் தெய்வங்களை விட்டும் அல்லாஹ் மிகவும் பரிசுத்தமானவன். (அவனுக்கு யாரும் இணை துணை இல்லை. அவன் ஒருவனே இறைவன், வணங்கப்படுவதற்கு தகுதியானவன்.)"},{"id":44,"translation":"(அவர்களை அழிப்பதற்காக) வானத்தில் இருந்து விழக்கூடிய (வானத்தின்) துண்டுகளை அவர்கள் பார்த்தால், “(இது) ஒன்று சேர்ந்த மேகங்கள்” என்று கூறுவார்கள். (நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.)"},{"id":45,"translation":"ஆகவே, (நபியே!) அவர்கள் அழிக்கப்படுகின்ற அவர்களுடைய (தண்டனை) நாளை அவர்கள் சந்திக்கின்ற வரை அவர்களை விட்டுவிடுங்கள்!"},{"id":46,"translation":"அந்நாளில் அவர்களின் சூழ்ச்சி அவர்களை விட்டும் (அல்லாஹ்வின் தண்டனையில்) எதையும் தடுக்காது. இன்னும், அவர்கள் (பிறரால்) உதவியும் செய்யப்பட மாட்டார்கள்."},{"id":47,"translation":"நிச்சயமாக, அநியாயம் செய்தவர்களுக்கு அ(ந்த மறுமையின் தண்டனை வருவ)தற்கு முன்னரே (உலகத்திலும்) தண்டனை உண்டு. என்றாலும், அவர்களில் அதிகமானவர்கள் (அவர்களுக்கு தண்டனை வரும் என்பதை) அறியமாட்டார்கள்."},{"id":48,"translation":"(நபியே!) உமது இறைவனின் தீர்ப்புக்காக (-அது வரும் வரை) பொறு(மையாக இரு)ப்பீராக! ஆக, நிச்சயமாக நீர் நமது கண்களுக்கு முன்னால் (-நமது பார்வையிலும் பாதுகாப்பிலும்) இருக்கிறீர். இன்னும், நீர் (முற்பகல் தூக்கத்தில் இருந்து) எழும் நேரத்தில் உமது இறைவனைப் புகழ்ந்து துதித்து தொழுவீராக (-ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளை நிறைவேற்றுவீராக)!"},{"id":49,"translation":"இன்னும், இரவில் (மக்ரிப், இஷா ஆகிய தொழுகைகள் மூலம்) அவனை துதித்து தொழுவீராக! இன்னும், (இரவின் இறுதியில்) நட்சத்திரங்கள் மறைந்த பின்னர் (அதிகாலையில் ஃபஜ்ர் தொழுகை மூலம்) அவனை துதித்து தொழுவீராக!"}]},{"id":53,"verses":[{"id":1,"translation":"தூர் மலை மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"உங்கள் தோழர் (சத்திய பாதையிலிருந்து) வழி தவறவுமில்லை, (நேரிய கொள்கையிலிருந்து) வழி கெடவுமில்லை. (அவர் நேர்வழியிலும் சரியான கொள்கையிலும்தான் இருக்கிறார்.)"},{"id":3,"translation":"இன்னும், அவர் (இந்த குர்ஆனை) மன இச்சையால் பேச மாட்டார்."},{"id":4,"translation":"இது (அவருக்கு) அறிவிக்கப்படுகின்ற வஹ்யே தவிர இல்லை."},{"id":5,"translation":"(பலவிதமான) ஆற்றல்களால் கடும் பலசாலி(யான ஜிப்ரீல்) அவருக்கு இதை கற்பித்தார்."},{"id":6,"translation":"அவர் (வலிமையும்) அழகிய தோற்றமு(ம் உ)டையவர். ஆக, அவர் (நபியை நேருக்கு நேர்) சமமாக சந்தித்தார்."},{"id":7,"translation":"(தூதரான) அவரும் (வானவரான ஜிப்ரீலும்) மிக உயர்ந்த வான உச்சியில் (நேருக்கு நேர் சமமானார்கள்)."},{"id":8,"translation":"பிறகு, அவர் (தூதருக்கு) சமீபமானார். இன்னும், மிக அதிகமாக (அவரை) நெருங்கினார்."},{"id":9,"translation":"அவர், (தூதருக்கு) இரண்டு வில்லின் அளவுக்கு அல்லது அதைவிட மிக அருகாமையில் ஆகிவிட்டார்."},{"id":10,"translation":"ஆக, அவனுடைய (-அல்லாஹ்வுடைய) அடிமை(யாகிய நபி)க்கு ஜிப்ரீல் (தமக்கு) எதை (தமது இறைவன்) வஹ்யி அறிவித்தானோ அதை (நபி அவர்களுக்கு) வஹ்யி அறிவித்தார்."},{"id":11,"translation":"(நபி) எதை (தனது கண்களால்) பார்த்தாரோ அதை (அவருடைய) உள்ளம் பொய்ப்பிக்கவில்லை. (உள்ளமும் அதை நம்பிக்கை கொண்டது.)"},{"id":12,"translation":"ஆக, அவர் பார்த்ததில் அவரிடம் நீங்கள் தர்க்கம் செய்கிறீர்களா?"},{"id":13,"translation":"திட்டவட்டமாக அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) மற்றொரு முறைப் பார்த்தார்,"},{"id":14,"translation":"“சித்ரத்துல் முன்தஹா” என்ற இடத்தில்."},{"id":15,"translation":"அங்குதான் “அல்மஃவா” சொர்க்கம் இருக்கிறது."},{"id":16,"translation":"எது சூழ்ந்து கொள்ளுமோ அது அந்த இலந்தை மரத்தை சூழ்ந்து கொள்ளும்போது (தூதர் வானவரை மற்றொரு முறை பார்த்தார்)."},{"id":17,"translation":"(நபியின்) பார்வை (அவர் பார்த்ததை விட்டும் இங்கும் அங்கும்) சாயவுமில்லை, இன்னும், (அல்லாஹ் அவருக்கு நிர்ணயித்த எல்லையை) மீறவுமில்லை."},{"id":18,"translation":"திட்டவட்டமாக அவர் தனது இறைவனின் பெரிய அத்தாட்சிகளில் (ஒன்றைப்) பார்த்தார்."},{"id":19,"translation":"லாத், உஸ்ஸா பற்றி நீங்கள் அறிவியுங்கள்!"},{"id":20,"translation":"இன்னும், மற்றொரு மூன்றாவது மனாத்தைப் பற்றி அறிவியுங்கள்! (-இவை, அல்லாஹ்வின் பெண் பிள்ளைகள் என்று எப்படி நீங்கள் கூறுகிறீர்கள்?)"},{"id":21,"translation":"உங்களுக்கு (நீங்கள் விரும்புவதைப் போல) ஆண்பிள்ளையும் அவனுக்கு (நீங்கள் உங்களுக்கு வெறுக்கிற) பெண் பிள்ளையுமா? (இப்படியா நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்)!"},{"id":22,"translation":"அப்படியென்றால் இது ஒரு அநியாயமான பங்கீடாகும்."},{"id":23,"translation":"இவை எல்லாம் (வெறும்) பெயர்களாகவே தவிர (உண்மை) இல்லை. இந்த பெயர்களை நீங்களும் உங்கள் மூதாதைகளும் (இந்த சிலைகளுக்கு) சூட்டினீர்கள். அல்லாஹ் இவற்றுக்கு ஆதாரம் எதையும் இறக்கவில்லை. வீண் எண்ணத்தையும் மனங்கள் விரும்புவதையும் தவிர இவர்கள் (உண்மையான ஆதாரத்தை) பின்பற்றுவதில்லை. அவர்களின் இறைவனிடமிருந்து (வணங்கத் தகுதியானவன் யார் என்பதை விவரிக்கும்) நேர்வழி திட்டவட்டமாக வந்திருக்கிறது."},{"id":24,"translation":"மனிதனுக்கு அவன் விரும்பியது கிடைத்துவிடுமா?"},{"id":25,"translation":"ஆக, மறுமையும் இந்த உலகமும் அல்லாஹ்விற்கே உரியது."},{"id":26,"translation":"வானங்களில் உள்ள எத்தனையோ வானவர்கள், அவர்களின் சிபாரிசு (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து) எதையும் தடுக்காது அல்லாஹ்வின் அனுமதிக்கு பின்னரே தவிர, (அதுவும்) அவன் நாடுகிற, அவன் விரும்புகிறவருக்கு (மட்டுமே பலன் தரும்)."},{"id":27,"translation":"நிச்சயமாக மறுமையை நம்பிக்கை கொள்ளாதவர்கள், வானவர்களுக்கு பெண்களின் பெயர்களை பெயர் சூட்டுகிறார்கள்."},{"id":28,"translation":"அவர்களுக்கு அ(வர்கள் செய்வ)தைப் பற்றி எவ்வித கல்வி அறிவும் இல்லை. வீண் எண்ணத்தைத் தவிர அவர்கள் (உண்மையை) பின்பற்றுவதில்லை. நிச்சயமாக வீண் எண்ணம் உண்மைக்கு பதிலாக அறவே பலன் தராது. (உண்மையின் இடத்தில், அதற்கு சமமாக வீண் எண்ணம், கற்பனை கதைகள் நிற்கமுடியாது.)"},{"id":29,"translation":"ஆகவே, நமது நினைவை விட்டு (-குர்ஆனை விட்டு) விலகியவர்களை (நபியே!) நீர் புறக்கணிப்பீராக! உலக வாழ்க்கையைத் தவிர (மறுமையை) அவர்கள் நாடவில்லை."},{"id":30,"translation":"அதுதான் அவர்களது கல்வியின் முதிர்ச்சியாகும். நிச்சயமாக உமது இறைவன், அவனுடைய பாதையை விட்டு வழிதவறியவர்களை மிக அறிந்தவன். இன்னும், அவன் நேர்வழி பெற்றவர்களையும் மிக அறிந்தவன்."},{"id":31,"translation":"வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன. இறுதியில், தீமை செய்தவர்களுக்கு அவர்கள் செய்தவற்றுக்கு (தகுந்த தண்டனையை) அவன் கூலி(யாகக்) கொடுப்பான். இன்னும், நன்மை செய்தவர்களுக்கு (மிக அழகிய) சொர்க்கத்தை அவன் கூலி(யாகக்) கொடுப்பான்."},{"id":32,"translation":"அவர்கள் எத்தகையோர் என்றால் பெரும் பாவங்கள், இன்னும் மானக்கேடான செயல்களை விட்டும் விலகி இருப்பார்கள், (மனதில் வந்துபோகும்) சிறு ஆசைகளைத் தவிர (அல்லது சிறிய தவறுகளைத் தவிர. அந்த சிறு தவறுகளை அல்லாஹ் அவர்களுக்கு மன்னித்து விடுவான்). நிச்சயமாக உமது இறைவன் விசாலமான மன்னிப்புடையவன். அவன் உங்களை பூமியில் இருந்து உருவாக்கியபோதும் (ஆதமை மண்ணிலிருந்து படைத்தபோதும், பிறகு,) நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்தபோதும் அவன் உங்களை (-யார் நல்லவர், யார் தீயவர் என்று) மிக அறிந்தவனாக இருக்கிறான். ஆகவே, (நீங்கள் தூய்மையானவர்கள் என்று) நீங்களே உங்களை உயர்வாக பேசிக்கொள்ளாதீர்கள்! இறையச்சமுள்ளவர்ளை அவன் மிக அறிந்தவன் ஆவான்."},{"id":33,"translation":"(நபியே!) நீர் அறிவிப்பீராக! ஒருவன் (இந்த மார்க்கத்தை விட்டு) புறக்கணித்தான்;"},{"id":34,"translation":"இன்னும், (தனது நண்பனுக்கு தனது செல்வத்தில் இருந்து) கொஞ்சம் கொடுத்தான். பிறகு, (அதை கருமித்தனத்தால்) நிறுத்திவிட்டான்."},{"id":35,"translation":"அவனிடம் மறைவானதின் அறிவு இருக்கிறதா? அவன் (என்ன விதியில் எழுதப்பட்ட மறைவானதைப்) பார்க்கிறானா?"},{"id":36,"translation":"மூஸாவின் ஏடுகளில் உள்ளவற்றைப் பற்றி அவனுக்கு செய்தி அறிவிக்கப்படவில்லையா?"},{"id":37,"translation":"இன்னும், (தனது தூதுத்துவத்தை) முழுமையாக நிறைவேற்றிய இப்ராஹீமுடைய ஏட்டில் உள்ளதைப் பற்றி (அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?)"},{"id":38,"translation":"அதாவது, பாவம் செய்த ஆன்மா மற்றொரு பாவியான ஆன்மாவின் பாவத்தை சுமக்காது."},{"id":39,"translation":"இன்னும், நிச்சயமாக மனிதனுக்கு இல்லை, அவன் எதை அடைய முயற்சித்தானோ அதைத் தவிர!"},{"id":40,"translation":"இன்னும், நிச்சயமாக தனது முயற்சியை (-தனது முயற்சியின் பலனை) அவன் விரைவில் காண்பான்."},{"id":41,"translation":"பிறகு, மிக பூரணமான கூலியை அதற்கு அவன் (கூலியாக) கொடுக்கப்படுவான்."},{"id":42,"translation":"இன்னும், நிச்சயமாக உமது இறைவன் பக்கம்தான் இறுதி ஒதுங்குமிடம் இருக்கிறது."},{"id":43,"translation":"இன்னும், நிச்சயமாக அவன்தான் சிரிக்க வைக்கிறான்; அழ வைக்கிறான்."},{"id":44,"translation":"இன்னும், நிச்சயமாக அவன்தான் மரணிக்க வைக்கிறான்; உயிர் கொடுக்கிறான்."},{"id":45,"translation":"இன்னும், நிச்சயமாக அவன்தான் (ஒவ்வொரு படைப்பினத்திலும்) ஜோடிகளை – ஆணையும் பெண்ணையும் – படைத்தான்."},{"id":46,"translation":"(கருவறையில்) இந்திரியமாக செலுத்தப்படுகின்ற இந்திரியத்தில் இருந்து (படைத்தான்)."},{"id":47,"translation":"இன்னும், மற்றொரு முறை (இவர்களை) உருவாக்குவதும் நிச்சயமாக அவன் மீதே கடமையாக இருக்கிறது."},{"id":48,"translation":"இன்னும், நிச்சயமாக அவன்தான் (சிலரை) செல்வந்தராக ஆக்கினான். இன்னும், (அவர்களுக்கு அவர்களது செல்வத்தில்) சேமிப்பை ஏற்படுத்தினான். (இன்னும் சிலரை பரம ஏழையாக்கினான்.)"},{"id":49,"translation":"இன்னும், நிச்சயமாக அவன்தான் ஷிஃரா (Sirius) நட்சத்திரத்தின் அதிபதி ஆவான்."},{"id":50,"translation":"இன்னும், நிச்சயமாக அவன்தான் முந்திய ஆது சமுதாயத்தை அழித்தான்."},{"id":51,"translation":"இன்னும், ஸமூது சமுதாயத்தை (அழித்தான்.) ஆக, அவன் (அழிக்கப்பட்ட அவர்களில் எவரையும்) மீதம் வைக்கவில்லை. (அவர்களை சந்ததிகள் இன்றி செய்தான்.)"},{"id":52,"translation":"இன்னும், நூஹுடைய மக்களையும் இதற்கு முன்னர் (அவன் அழித்தான்.) நிச்சயமாக இவர்கள் (எல்லோரும்) மிகப் பெரிய அநியாயக்காரர்களாக, மிகப் பெரிய எல்லை மீறி(ய குற்றவாளி)களாக இருந்தனர்."},{"id":53,"translation":"இன்னும், தலைகீழாக புரட்டப்பட்ட (-நபி லூத் உடைய) சமுதாயத்தை அவன்தான் (தலைகீழாக) கவிழ்த்(து அவர்களை அழித்)தான்."},{"id":54,"translation":"ஆக, எதைக் கொண்டு (அவர்களை) மூட வேண்டுமோ அதனால் அவன் அவர்களை மூடினான். (சுடப்பட்ட பொடிக் கற்களை அவர்கள் மீது அடை மழையாக அவன் பொழிவித்தான்.)"},{"id":55,"translation":"ஆக, (மனிதனே!) உமது இறைவனின் அத்தாட்சிகளில் எதில் நீ தர்க்கம் செய்கிறாய்?"},{"id":56,"translation":"(நபியே!) முந்திய எச்சரிப்பாளர்களில் இருந்து (அவர்களைப் போன்ற) ஓர் எச்சரிப்பாளர்தான் இவர்."},{"id":57,"translation":"நெருங்கி வரக்கூடிய (-மறுமையான)து நெருங்கிவிட்டது."},{"id":58,"translation":"அல்லாஹ்வை அன்றி அதை (-அதன் திடுக்கங்களை) வெளிப்படுத்துபவர் யாரும் அதற்கு இல்லை."},{"id":59,"translation":"ஆக, இந்த குர்ஆனினால் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? (-குர்ஆன் ஓதப்படும்போது அதை கேலி செய்கிறீர்களா?)"},{"id":60,"translation":"(அதன் எச்சரிக்கையால்) நீங்கள் (பயந்து) அழாமல், (திமிரு கொண்டு) சிரிக்கிறீர்களா?"},{"id":61,"translation":"நீங்களோ (அதை) அலட்சியம் செய்பவர்களாக (-கவனமற்றவர்களாக, புறக்கணித்தவர்களாக, பெருமைபிடித்தவர்களாக, கவிபாடியவர்களாக) இருக்கிறீர்கள்."},{"id":62,"translation":"ஆக, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அல்லாஹ்விற்கு சிரம் பணியுங்கள்! இன்னும் (அவனை) வணங்குங்கள்!"}]},{"id":54,"verses":[{"id":1,"translation":"(சுரையா) நட்சத்திரத்தின் மீது சத்தியமாக, அது (அதிகாலையில்) விழும்போது,"},{"id":2,"translation":"அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால் (அதை) புறக்கணிக்கிறார்கள்; இன்னும், (இது) இல்லாமல் போகும் மந்திரமாகும் என்றும் கூறுகிறார்கள்."},{"id":3,"translation":"இன்னும், அவர்கள் பொய்ப்பித்தனர்; தங்கள் கெட்ட ஆசைகளை பின்பற்றினார்கள். எல்லாக் காரியங்களும் (அவற்றுக்குரிய இடத்தில்) நிலையாகத் தங்கக் கூடியதுதான். (நன்மை, நல்லவர்களை சொர்க்கத்தில் தங்க வைக்கும். பாவம், பாவிகளை நரகத்தில் தங்க வைக்கும்.)"},{"id":4,"translation":"திட்டவட்டமாக எச்சரிக்கை உள்ள செய்திகள் அவர்களிடம் வந்துவிட்டன."},{"id":5,"translation":"மிக ஆழமான ஞானம் (-இந்த குர்ஆன் அவர்களிடம்) வந்திருக்கிறது. ஆக, எச்சரிப்பாளர்கள் (பலர் எச்சரித்தும் அவர்களுக்கு அவர்கள்) பலனளிக்க முடியவில்லை."},{"id":6,"translation":"ஆகவே, அவர்களை விட்டு நீர் விலகி விடுவீராக! அழைப்பாளர் மிக கடினமான ஒன்றை நோக்கி (-மறுமையின் மைதானத்தை நோக்கியும் அதன் விசாரணையை நோக்கியும்) அழைக்கின்ற நாளில்,"},{"id":7,"translation":"அவர்களது பார்வைகள் இழிவடைந்த நிலையில், (கூட்டமாக) பரவி வரக்கூடிய வெட்டுக் கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளை விட்டு (விரைந்து) வெளியேறுவார்கள்."},{"id":8,"translation":"அழைப்பாளரை நோக்கி பணிவுடன், பயத்துடன், விரைந்தவர்களாக வருவார்கள். நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்: “இது ஒரு சிரமமான நாளாகும்.”"},{"id":9,"translation":"(குறைஷிகளாகிய) இவர்களுக்கு முன்னர் நூஹுடைய மக்கள் (தூதர்களை) பொய்ப்பித்தனர். ஆக, அவர்கள் நமது அடியாரை பொய்ப்பித்தனர். (அது மட்டுமா!) அவர் ஒரு பைத்தியக்காரர் என்று(ம்) கூறினார்கள். இன்னும், அவர் (அவர்களால் கடுமையாக) எச்சரிக்கப்பட்டார்."},{"id":10,"translation":"ஆகவே, அவர் தனது இறைவனிடம், “நிச்சயமாக நான் (பலவீனமாக இருக்கிறேன்,) தோற்கடிக்கப்பட்டேன். ஆகவே, நீ (எனக்காக) பழி தீர்ப்பாயாக!” என்று பிரார்த்தித்தார்."},{"id":11,"translation":"ஆகவே, நாம் அடை மழையைக் கொண்டு மேகத்தின் வாசல்களை திறந்து விட்டோம்."},{"id":12,"translation":"இன்னும், பூமியின் ஊற்றுக் கண்களை பீறிட்டு ஓடச்செய்தோம். ஆக, (வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும்) தண்ணீர் நிர்ணயிக்கப்பட்ட ஒரு காரியத்திற்காக திட்டமாக சந்தித்தன."},{"id":13,"translation":"இன்னும், அவரை பலகைகளும் ஆணிகளுமுடைய கப்பலில் பயணிக்க வைத்தோம்."},{"id":14,"translation":"அது நமது கண்களுக்கு முன்பாக (-நமது பார்வையில் நமது கட்டளைப்படி) செல்கிறது, நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்குக் கூலி கொடுப்பதற்காக."},{"id":15,"translation":"அதை ஓர் அத்தாட்சியாக திட்டவட்டமாக நாம் விட்டுவைத்தோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?"},{"id":16,"translation":"ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?"},{"id":17,"translation":"திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?"},{"id":18,"translation":"ஆது சமுதாயம் பொய்ப்பித்தது. ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?"},{"id":19,"translation":"நிச்சயமாக நாம் அவர்கள் மீது குளிர்ந்த சூறாவளிக் காற்றை (நரகம் வரை) நீடித்து நிலையாக இருக்கும் (தண்டனை உடைய) ஒரு தீய நாளில் அனுப்பினோம்."},{"id":20,"translation":"அது மக்களை கழட்டி எறிந்தது. அவர்கள் வேரோடு சாய்ந்த பேரீட்ச மரத்தின் பின் பகுதிகளைப் போல் ஆகிவிட்டார்கள்."},{"id":21,"translation":"ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?"},{"id":22,"translation":"திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?"},{"id":23,"translation":"ஸமூது சமுதாயம் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்."},{"id":24,"translation":"ஆக, அவர்கள் கூறினார்கள்: “எங்களில் இருந்து ஒருவராக இருக்கின்ற ஒரு மனிதரையா நாங்கள் பின்பற்றுவோம்! அப்படி என்றால், நிச்சயமாக நாங்கள் வழிகேட்டிலும் சிரமத்திலும் ஆகிவிடுவோம்.”"},{"id":25,"translation":"“எங்களுக்கு மத்தியில் அவருக்கு மட்டும் இறைவேதம் இறக்கப்பட்டதா? இல்லை, அவர் பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் ஆவார்.”"},{"id":26,"translation":"“பெரும் பொய்யர், திமிறு பிடித்து பெருமை பேசுகிறவர் யார்” என்பதை நாளை அவர்கள் அறிவார்கள்,"},{"id":27,"translation":"நிச்சயமாக நாம் பெண் ஒட்டகத்தை அவர்களுக்கு சோதனையாக அனுப்புவோம். ஆக, அவர்களிடம் (அவர்களுக்கு வர இருக்கின்ற தண்டனையை) நீர் எதிர்பார்த்திருப்பீராக! இன்னும், (சகிப்புடன்) பொறுமையாக இருப்பீராக!"},{"id":28,"translation":"“(ஒட்டகம் நீர் குடிக்காத நாளில்) நிச்சயமாக தண்ணீர் அவர்களுக்கு மத்தியில் (சமமான) பங்காகும்” என்று அவர்களுக்கு அறிவிப்பீராக! தண்ணீர் குடிப்பதற்குறிய எல்லா நேரங்களிலும் அந்த நேரத்திற்குரியவர்கள் மட்டுமே வர வேண்டும்."},{"id":29,"translation":"ஆக, (அந்த ஒட்டகத்தைக் கொல்வதற்காக) அவர்கள் தங்கள் நண்பனை அழைத்தனர். ஆக, அவன் (தனது கரத்தால் அதைப்) பிடித்தான், ஆக, அவன் (அதை) அறுத்து விட்டான்."},{"id":30,"translation":"ஆக, எனது தண்டனையும் எனது எச்சரிக்கையும் எப்படி இருந்தன?"},{"id":31,"translation":"நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரே ஒரு சத்தத்தை அனுப்பினோம். ஆக, அவர்கள் (கால்நடை) தொழுவத்தின் தீணிகளைப் போல் ஆகிவிட்டனர்."},{"id":32,"translation":"திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?"},{"id":33,"translation":"லூத்துடைய மக்களும் எச்சரிக்கையை பொய்ப்பித்தனர்."},{"id":34,"translation":"நிச்சயமாக நாம் அவர்கள் மீது கல் மழையை அனுப்பினோம், லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர. அவர்களை நாம் அதிகாலையில் பாதுகாத்தோம்."},{"id":35,"translation":"நம்மிடமிருந்து (அவர்கள் மீது) அருட்கொடையாக (நாம் அவர்களை பாதுகாத்தோம்). இவ்வாறுதான் நன்றி செலுத்துபவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்."},{"id":36,"translation":"திட்டவட்டமாக நமது தண்டனையை அவர் அவர்களுக்கு எச்சரித்தார். ஆக, அவர்கள் அந்த எச்சரிக்கையை சந்தேகித்தனர்."},{"id":37,"translation":"திட்டவட்டமாக அவர்கள் அவரிடம் அவரது விருந்தினர்களிடம் தங்கள் ஆசையை தனித்துக் கொள்ள அடம்பிடித்தனர். ஆக, நாம் அவர்களின் கண்களை (அழித்து முகத்தோடு முகமாக) சமமாக்கி விட்டோம். ஆக, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்."},{"id":38,"translation":"(நரகம் வரை) தொடர்ந்து நிலைத்திருக்கக்கூடிய தண்டனையானது காலையில் (-அதிகாலை சூரியன் விடிவதற்கு முன்) அவர்களை திட்டவட்டமாக வந்தடைந்தது."},{"id":39,"translation":"ஆக, என் தண்டனையையும் என் எச்சரிக்கையையும் சுவையுங்கள்!"},{"id":40,"translation":"திட்டவட்டமாக இந்த குர்ஆனை (மக்கள்) நல்லறிவு பெறுவதற்காக நாம் எளிதாக்கினோம். ஆக, நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கிறாரா?"},{"id":41,"translation":"இன்னும், ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு (நமது) எச்சரிக்கை திட்டவட்டமாக வந்தன."},{"id":42,"translation":"அவர்கள் நமது அத்தாட்சிகளை எல்லாம் பொய்ப்பித்தனர். ஆகவே, மிகைத்தவன், மகா ஆற்றலுள்ளவன் உடைய தண்டனையால் அவர்களை தண்டித்தோம்."},{"id":43,"translation":"உங்கள் (இக்கால) நிராகரிப்பாளர்கள், (முந்திய நிராகரிப்பாளர்களாகிய) அவர்களை விட சிறந்தவர்களா? (உங்களை தண்டிக்காமல் அல்லாஹ் விட்டுவிடுவானா? நீங்கள் திருந்தவில்லை என்றால், அவர்களுக்கு வந்த தண்டனை உங்களுக்கும் வரும்.) அல்லது, (அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து பாதுகாப்பு பெறுவதற்குரிய) விடுதலை பத்திரம் உங்களுக்கு (முந்திய) வேதங்களில் (கூறப்பட்டு) இருக்கிறதா?"},{"id":44,"translation":"அல்லது, “நாங்கள் (எங்களை பிரிக்க நினைப்பவர்களிடம்) பழிதீர்த்துக் கொள்கிற ஒருங்கிணைந்த கூட்டம் ஆவோம்” என்று அவர்கள் கூறுகிறார்களா?"},{"id":45,"translation":"(அல்லாஹ்வின் தூதரை எதிர்க்கும்) இந்த கூட்டங்கள் எல்லாம் விரைவில் தோற்கடிக்கப்படுவார்கள். இன்னும், புறமுதுகு காட்டுவார்கள்."},{"id":46,"translation":"மாறாக, மறுமைதான் இவர்களின் (முழுமையான தண்டனைக்கு) வாக்களிக்கப்பட்ட நேரமாகும். மறுமையோ மிக பயங்கரமானதும் மிக கசப்பானதுமாகும்."},{"id":47,"translation":"நிச்சயமாக குற்றவாளிகள் வழிகேட்டிலும் (இணைவைத்தல், சிலைவணக்கம் என்ற) மிகப் பெரிய சிரமத்திலும் இருக்கிறார்கள்."},{"id":48,"translation":"நரகத்தில் அவர்களுடைய முகங்கள் மீது அவர்கள் இழுக்கப்படுகின்ற நாளில், “சகர் நரகத்தின் கடுமை(யான வலிகளை உடைய தண்டனை)யை சுவையுங்கள்!” (என்று அவர்களுக்குக் கூறப்படும்)."},{"id":49,"translation":"நிச்சயமாக நாம் எல்லாவற்றையும் (விதியின் தாய் புத்தகத்தில் நிர்ணயிக்கப்பட்ட) ஓர் அளவில் படைத்தோம்."},{"id":50,"translation":"(“ஆகு” என்று நாம் கூறுகின்ற) ஒற்றை வார்த்தையைத் தவிர நமது கட்டளை இல்லை, (நாம் எதை கட்டளையிட்டோமோ அது உடனே ஆகிவிடும்) கண் சிமிட்டுவதைப் போல்."},{"id":51,"translation":"(உங்களைப் போன்ற) உங்கள் சக கொள்கையுடையவர்களை (இதற்கு முன்னர்) நாம் திட்டவட்டமாக அழித்தோம். ஆக, நல்லுபதேசம் பெறுபவர் யாரும் இருக்கிறாரா?"},{"id":52,"translation":"அவர்கள் செய்த எல்லா விஷயங்களும் (வானவர்கள் எழுதிய செயல்) ஏடுகளில் (பதியப்பட்டு) உள்ளன."},{"id":53,"translation":"இன்னும், (அவர்கள் செய்த) சிறியவை, பெரியவை (என) எல்லா (செயல்களு)ம் (அதில்) எழுதப்பட்டு உள்ளது. (அதற்கேற்ப அவர்கள் கூலி கொடுக்கப்படுவார்கள்.)"},{"id":54,"translation":"நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சொர்க்கத்து தோட்டங்களிலும் நதிகளிலும் இருப்பார்கள்."},{"id":55,"translation":"(வீண் பேச்சுகள் அற்ற) உண்மையான பேச்சுகளுடைய (பொய்யும் பாவமுமற்ற) சபையில், பேராற்றலுடையவனான (மகா வல்லமைமிக்கவனான) பேரரசனுக்கு அருகில் இருப்பார்கள்."}]},{"id":55,"verses":[{"id":1,"translation":"மறுமை நெருங்கிவிட்டது. சந்திரன் பிளந்து விட்டது."},{"id":2,"translation":"குர்ஆனை (உங்களுக்கு) கற்பித்தான்;"},{"id":3,"translation":"மனிதனைப் படைத்தான்."},{"id":4,"translation":"அவனுக்கு தெளிவான விளக்கங்களை கற்பித்தான்."},{"id":5,"translation":"சூரியனும் சந்திரனும் (அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்ட) ஒரு கணக்கின் அடிப்படையில் (ஓடிக்கொண்டு) இருக்கின்றன."},{"id":6,"translation":"(தண்டுகள் இல்லாத) செடிகொடிகளும் (தடித்த தண்டுகளை உடைய) மரங்களும் (அவற்றை படைத்த இறைவனாகிய அல்லாஹ்விற்கு) சிரம் பணிகின்றன."},{"id":7,"translation":"இன்னும், வானம், அதை (பூமிக்கு மேல்) உயர்த்தினான். இன்னும், தராசை – நீதத்தை - பின்பற்றப்பட வேண்டிய கட்டாய சட்டமாக அமைத்தான்."},{"id":8,"translation":"தராசில் நீங்கள் எல்லை மீறாதீர்கள். (நீதத்தை மீறாதீர்கள்! எவர் மீதும் அநியாயம் செய்யாதீர்கள்!)"},{"id":9,"translation":"நிறுவையை (தராசின் நாக்கை சரியாக நடுவில்) நீதமாக நிறுத்துங்கள்! இன்னும், தராசில் (பொருள்களை குறைத்து மக்களுக்கு) நஷ்டத்தை ஏற்படுத்தாதீர்கள்."},{"id":10,"translation":"இன்னும், பூமி - அதை படைப்பினங்களுக்காக (-அவை வாழ்வதற்காக) அவன் அமைத்தான்."},{"id":11,"translation":"அதில் பழங்களும் குலைகளுடைய பேரீச்ச மரங்களும் இருக்கின்றன."},{"id":12,"translation":"தொலிகளையும் வைக்கோலையும் உடைய தானியங்களும் (இதர) உணவு(ப் பொருள்)களும் அதில் இருக்கின்றன."},{"id":13,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":14,"translation":"சுட்ட களிமண்ணைப் போல் உள்ள, சுடாத காய்ந்த களிமண்ணிலிருந்து மனிதனை அவன் படைத்தான்."},{"id":15,"translation":"இன்னும், நெருப்பின் (சிவப்பும் மஞ்சளும் கலந்த) நடு ஜுவாலையில் இருந்து ஜின்களைப் படைத்தான்."},{"id":16,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":17,"translation":"சூரியன் தோன்றுகிற இரு இடங்களுடைய அதிபதி; இன்னும், சூரியன் மறைகிற இரு இடங்களுடைய அதிபதி அவன்."},{"id":18,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?"},{"id":19,"translation":"(வானம், இன்னும் பூமியின்) இரு கடல்களும் சந்திப்பதற்கு அவன் விட்டுவிட்டான்."},{"id":20,"translation":"அவை இரண்டுக்கும் இடையில் தடை இருக்கிறது. அவை இரண்டும் (அல்லாஹ் நிர்ணயித்த) எல்லையை மீறாது."},{"id":21,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?"},{"id":22,"translation":"அவை இரண்டிலிருந்தும் முத்தும் பவளமும் உற்பத்தியாகின்றன."},{"id":23,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":24,"translation":"மலைகளைப் போல் கடலில் (பாய் மரத்துணிகள்) விரிக்கப்பட்ட பிரமாண்டமான கப்பல்கள் அவனுக்கே உரியன. (அவன்தான் அவற்றை மிதக்கவும் பயணிக்கவும் செய்தான்.)"},{"id":25,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்?"},{"id":26,"translation":"அதன் மீது இருக்கிற எல்லோரும் அழிந்துவிடுவார்கள்."},{"id":27,"translation":"பெரும் கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் (கொடைகளுக்கும் அருள்களுக்கும்) உரியவனான உமது இறைவனின் முகம்தான் நிலையாக நீடித்து இருக்கும்."},{"id":28,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":29,"translation":"வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அவனிடமே (தங்கள் தேவைகளைக் கேட்டு) யாசிக்கின்றன. ஒவ்வொரு நாளும் அவன் ஒரு காரியத்தில் இருக்கிறான்."},{"id":30,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":31,"translation":"மனித, ஜின் வர்க்கத்தினரே (உங்களிடம் விசாரணை செய்வதற்காக) உங்களை கவனிப்போம்."},{"id":32,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":33,"translation":"ஜின் இன்னும் மனித சமூகத்தவர்களே! (அல்லாஹ்வின் தண்டனைகளில் இருந்து தப்பிக்க) வானங்கள், இன்னும் பூமியின் ஓரங்களில் நீங்கள் விரண்டு ஓட உங்களால் முடிந்தால் ஓடுங்கள்! (அல்லாஹ்வின்) அதிகாரத்தை கொண்டே தவிர நீங்கள் ஓட முடியாது."},{"id":34,"translation":"ஆக, (ஜின் இன்னும் மனித வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":35,"translation":"நெருப்பின் ஜுவாலையும் உருக்கப்பட்ட செம்பும் உங்கள் இருவர் மீதும் அனுப்பப்படும். ஆக, நீங்கள் (அவனை) பழிவாங்க முடியாது. (நீங்கள் உங்களை பாதுகாக்கவும் முடியாது.)"},{"id":36,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":37,"translation":"ஆக, வானம் பிளந்து விட்டால், அது காய்ந்த எண்ணெயைப் போல் செந்நிறத்தில் ஆகிவிடும்."},{"id":38,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":39,"translation":"ஆக, அந்நாளில் மனிதர்களோ ஜின்களோ தத்தமது குற்றங்களைப் பற்றி விசாரிக்கப்பட மாட்டார்கள். (விசாரித்த பின்னர்தான் நல்லவர் யார், தீயவர் யார் என்பதை அறிய முடியும் என்ற அவசியம் இருக்காது.)"},{"id":40,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":41,"translation":"குற்றவாளிகள் அவர்களின் முக அடையாளத்தைக் கொண்டு அறியப்பட்டு விடுவார்கள். ஆக, உச்சிமுடிகளையும் கால் பாதங்களையும் (இறுக்கமாக) பிடிக்கப்ப(ட்டு நரகத்தில் வீசி எறியப்ப)டும்."},{"id":42,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":43,"translation":"இதுதான் அந்த குற்றவாளிகள் பொய்ப்பித்த நரகமாகும்."},{"id":44,"translation":"அ(ந்)த (நரக நெருப்பி)ற்கு மத்தியிலும் கடுமையாக கொதிக்கின்ற நீருக்கு மத்தியிலும் அவர்கள் சுற்றி வருவார்கள்."},{"id":45,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":46,"translation":"தன் இறைவனுக்கு முன் தான் நிற்பதை பயந்தவருக்கு இரண்டு சொர்க்கங்கள் உண்டு."},{"id":47,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":48,"translation":"(அந்த இரண்டு சொர்க்கங்களும்) பல நிறங்களுடையவையாகும். (பல வகையான இன்பங்களுடையவையாகும்)"},{"id":49,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":50,"translation":"அவை இரண்டிலும் (நீர் பீறிட்டு) ஓடும் இரண்டு ஊற்றுகள் உண்டு."},{"id":51,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":52,"translation":"எல்லா பழங்களிலும் (பசுமையானதும் உலர்ந்ததும் ஆகிய) இரண்டு வகைகள் அவை இரண்டிலும் உண்டு."},{"id":53,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":54,"translation":"விரிப்புகளில் சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள். அவற்றின் உள்பக்கங்கள் மொத்தமான பட்டுத் துணியால் ஆனதாக இருக்கும். இன்னும், இரண்டு சொர்க்கங்களின் கனிகளும் (அவற்றை உண்ண விரும்புபவர்களுக்கு மிக) சமீபமாக இருக்கும்."},{"id":55,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":56,"translation":"அவற்றில் (அந்த விரிப்புகளில் கணவனைத் தவிர மற்ற ஆண்களை விட்டும்) பார்வைகளை தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இவர்களுக்கு முன்னர் மனிதனோ ஜின்னோ அவர்களை தொட்டிருக்க மாட்டார்கள்."},{"id":57,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":58,"translation":"அவர்கள் (-அந்த வெள்ளை நிற கண்ணழகிகள்) மாணிக்கத்தையும் பவளத்தையும் போன்று இருப்பார்கள்."},{"id":59,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":60,"translation":"(உலகில் அல்லாஹ்வை பயந்தவர் செய்த) நல்லதுக்குக் கூலி (மறுமையில் அல்லாஹ் அவருக்கு கொடுக்கின்ற சொர்க்கம் என்ற) நல்லதைத் தவிர வேறு உண்டா?"},{"id":61,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":62,"translation":"அந்த இரண்டையும் விட தகுதியால் குறைந்த (வேறு) இரண்டு சொர்க்கங்களும் உண்டு."},{"id":63,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":64,"translation":"(அவற்றில் மிக அடர்த்தியான பச்சை பசுமையான மரங்கள் இருப்பதால்) அவை இரண்டும் (தூரத்தில் இருந்து பார்ப்பதற்கு) கருமையாக இருக்கும்."},{"id":65,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":66,"translation":"அவை இரண்டிலும் பொங்கி எழக்கூடிய இரு ஊற்றுகள் இருக்கும்."},{"id":67,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":68,"translation":"அவை இரண்டிலும் (பல வகை) பழங்களும் பேரீச்சமும் மாதுளையும் இருக்கும்."},{"id":69,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":70,"translation":"அவற்றில் (குணத்தால்) மிக சிறப்பானவர்கள், (முகத்தால்) பேரழகிகள் இருப்பார்கள்."},{"id":71,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":72,"translation":"(அந்த பெண்கள்) வெள்ளைநிற அழகிகள், (அவர்களுக்குரிய) இல்லங்களில் (அவர்களின் கணவன்மார்களுக்காக மட்டும் அவர்கள்) ஒதுக்கப்பட்டவர்கள். (கணவனைத் தவிர வேறு யாரையும் அவர்கள் நாட மாட்டார்கள்.)"},{"id":73,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":74,"translation":"இவர்களுக்கு முன்னர் மனிதனோ ஜின்னோ அவர்களைத் தொட்டிருக்க மாட்டார்கள்."},{"id":75,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":76,"translation":"(சொர்க்கவாசிகள்) பச்சை நிற (உறைகள் உடைய) தலையணைகள் மீதும், மிக அழகான (மிக நேர்த்தியான) விரிப்புகள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள்."},{"id":77,"translation":"ஆக, (மனித, ஜின் வர்க்கமே!) உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதை நீங்கள் பொய்ப்பிக்கிறீர்கள்?"},{"id":78,"translation":"கம்பீரத்திற்கும் கண்ணியத்திற்கும் (கொடைகளுக்கும் அருள்களுக்கும்) உரியவனாகிய உமது இறைவனின் பெயர் மிகுந்த பாக்கியமானதும், மிகவும் உயர்ந்ததும், மிக்க மகத்துவமானதும் ஆகும்."}]},{"id":56,"verses":[{"id":1,"translation":"பேரருளாளன் (-பெரும் கருணையும் இறக்கமும் உடையோன்),"},{"id":2,"translation":"அது நிகழ்வதை (யாராலும்) பொய்ப்பிக்க முடியாது."},{"id":3,"translation":"(அது, பாவிகளை நரகத்தில்) தாழ்த்தக்கூடியதும், (நல்லவர்களை சொர்க்கத்தில்) உயர்த்தக்கூடியதும் ஆகும்."},{"id":4,"translation":"பூமி பலமாக குலுக்கப்பட்டால்,"},{"id":5,"translation":"இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டால்,"},{"id":6,"translation":"பரவுகின்ற (சூரிய) ஒளிக் கதிர்களைப் போல் (அல்லது காற்றில் பறக்கும் காய்ந்த சருகுகளைப் போல்) அவை ஆகிவிடும்."},{"id":7,"translation":"இன்னும், நீங்கள் மூன்று வகையினர்களாக ஆகிவிடுவீர்கள்."},{"id":8,"translation":"ஆக, அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள்! அருள் மிகுந்த வலப்பக்கம் உடையவர்கள் யார்?"},{"id":9,"translation":"இன்னும், துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள்! துர்பாக்கியம் நிறைந்த இடப்பக்கம் உடையவர்கள் யார்?"},{"id":10,"translation":"இன்னும், (உலக வாழ்க்கையில் நன்மையில்) முந்தியவர்கள்தான் (மறுமையில் சொர்க்கப் பதவிகளில்) முந்தியவர்கள் ஆவர்."},{"id":11,"translation":"அவர்கள்தான் (அல்லாஹ்விற்கு) மிக சமீபமானவர்கள்."},{"id":12,"translation":"“(அவர்கள்) நயீம்” எனும் இன்பங்கள் நிறைந்த சொர்க்கங்களில் இருப்பார்கள்."},{"id":13,"translation":"முந்தியவர்களில் அதிகமானவர்கள் (அதில் நுழைவார்கள்)."},{"id":14,"translation":"இன்னும், பின்னோரில் குறைவானவர்கள் (அதில் நுழைவார்கள்)."},{"id":15,"translation":"ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்ட கட்டில்களின் மீது (அவர்கள் இருப்பார்கள்)."},{"id":16,"translation":"அவற்றின் மீது சாய்ந்தவர்களாக ஒருவரை ஒருவர் பார்த்தவர்களாக இருப்பார்கள்."},{"id":17,"translation":"நிரந்தரமான (ஒரே வயதுடைய) சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள்,"},{"id":18,"translation":"குவளைகளுடன், கூஜாக்களுடன், தூய்மையான மது நிறைந்த கிண்ணங்களுடன்."},{"id":19,"translation":"அதனால் (-அந்த மதுவினால்) அவர்கள் தலைவலிக்கும் ஆளாக மாட்டார்கள். இன்னும், அவர்கள் அறிவு தடுமாறவும் மாட்டார்கள்."},{"id":20,"translation":"இன்னும், அவர்கள் விரும்பி தேர்ந்தெடுக்கின்ற பழங்களுடனும்,"},{"id":21,"translation":"அ(ந்த நல்ல)வர்கள் மனம் விரும்புகின்ற பறவைகளின் மாமிசங்களுடனும் (சிறுவர்கள் சுற்றுவார்கள்)."},{"id":22,"translation":"இன்னும், வெள்ளை நிறமான கண்ணழகிகளான பெண்கள் (அவர்களுக்கு மனைவிகளாக இருப்பார்கள்)."},{"id":23,"translation":"(அந்த அழகிகள்) பாதுகாக்கப்பட்ட முத்துக்களைப் போல் (இருப்பார்கள்)."},{"id":24,"translation":"அவர்கள் செய்துகொண்டிருந்த அமல்களுக்குக் கூலியாக (இந்த சொர்க்க இன்பங்கள் கொடுக்கப்படுவார்கள்)."},{"id":25,"translation":"அதில் அவர்கள் வீண் பேச்சுகளையோ பாவமான பேச்சுகளையோ செவியுற மாட்டார்கள்."},{"id":26,"translation":"(உள்ளங்களை காயப்படுத்தாத) நல்ல பேச்சுகளையும் “ஸலாம்” (என்று ஒருவர் மற்றவருக்கு முகமன்) கூறுவதையும் தவிர (செவியுற மாட்டார்கள்)."},{"id":27,"translation":"இன்னும், வலது பக்கம் உடையவர்கள்! வலது பக்கம் உடையவர்கள் யார்!"},{"id":28,"translation":"அவர்கள் முட்கள் நீக்கப்பட்ட இலந்தை மரங்களின் அருகிலும்,"},{"id":29,"translation":"குலை குலையாக தொங்குகின்ற வாழை மரங்களுக்கு அருகிலும்,"},{"id":30,"translation":"நீங்காத நிழல்களிலும்,"},{"id":31,"translation":"(நிற்காமல்) ஓடிக்கொண்டே இருக்கின்ற நீருக்கு அருகிலும்,"},{"id":32,"translation":"அதிகமான பழங்களுக்கு அருகிலும்,"},{"id":33,"translation":"தீர்ந்துவிடாத, தடுக்கப்படாத (பழங்களுக்கு அருகிலும்),"},{"id":34,"translation":"உயர்வான விரிப்புகளிலும் வலது பக்கம் உடையவர்கள் இருப்பார்கள்."},{"id":35,"translation":"இன்னும் அவர்களை (-சொர்க்க கன்னிகளை) நிச்சயமாக நாம் முற்றிலும் புதிதாகவே உருவாக்குவோம்,"},{"id":36,"translation":"ஆக, அவர்களை நாம் ஆக்கி வைத்திருப்போம் (நிரந்தர) கன்னிகளாக,"},{"id":37,"translation":"கணவனை நேசிப்பவர்களாக, சம வயதுடையவர்களாக,"},{"id":38,"translation":"வலது பக்கமுடையவர்களுக்காக."},{"id":39,"translation":"(வலது பக்கமுடையவர்கள்) முன்னோரிலும் அதிகமானவர்கள்,"},{"id":40,"translation":"இன்னும், பின்னோரிலும் அதிகமானவர்கள் இருப்பார்கள்."},{"id":41,"translation":"இன்னும், இடது பக்கமுடையவர்கள்! இடது பக்கமுடையவர்கள் யார்?"},{"id":42,"translation":"கடுமையான வெப்பக் காற்றிலும் நன்கு கொதிக்கின்ற சுடு நீரிலும்,"},{"id":43,"translation":"இன்னும், கரும் புகையின் நிழலிலும் அவர்கள் இருப்பார்கள்."},{"id":44,"translation":"(இளைப்பாறுவதற்கு ஏதுவாக அந்த புகை) குளிர்ந்திருக்காது, (நுகர்வதற்குத் தோதுவாக) நறுமணம் உடையதாகவும் இருக்காது."},{"id":45,"translation":"இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் (உலகத்தில்) ஆடம்பர சுகவாசிகளாக (சரீர இச்சையில் மூழ்கியவர்களாக) இருந்தனர்."},{"id":46,"translation":"இன்னும், பெரும் பாவங்களை தொடர்ந்து பிடிவாதம் பிடித்தவர்களாக செய்துகொண்டிருந்தனர்."},{"id":47,"translation":"“நாங்கள் இறந்துவிட்டால், மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆகிவிட்டால், நிச்சயமாக நாங்கள் (இந்த நிலைக்கு மாறிய பின்னர் மீண்டும் உயிர் கொடுக்கப்பட்டு) எழுப்பப்படுவோமா?”"},{"id":48,"translation":"“இன்னும், முன்னோர்களான எங்கள் மூதாதைகளுமா (உயிர்ப்பிக்கப்பட்டு எழுப்பப்படுவார்கள்)?”"},{"id":49,"translation":"(நபியே!) நீர் கூறுவீராக! “நிச்சயமாக முன்னோரும் பின்னோரும்,"},{"id":50,"translation":"(அல்லாஹ்விடம்) அறியப்பட்ட (மறுமை) நாளின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்க்கப்படுவீர்கள்.”"},{"id":51,"translation":"பிறகு, (இந்த நபியை) பொய்ப்பித்த வழிகேடர்களே! நிச்சயமாக நீங்கள்,"},{"id":52,"translation":"“ஸக்கூம்” (-முட்கள் நிறைந்த கள்ளி) மரத்தில் இருந்துதான் சாப்பிடுவீர்கள்."},{"id":53,"translation":"ஆக, அதில் இருந்து (உங்கள்) வயிறுகளை நிரப்புவீர்கள்."},{"id":54,"translation":"அதற்கு மேலாக கடுமையாக கொதிக்கின்ற நீரை குடிப்பீர்கள்."},{"id":55,"translation":"ஆக, தாகித்த ஒட்டகங்கள் (தண்ணீர்) குடிப்பதைப் போல் குடிப்பீர்கள்."},{"id":56,"translation":"இதுதான் (செயல்களுக்குரிய விசாரணை நடைபெற்று) கூலி (கொடுக்கப்படும்) நாளில் அவர்களுக்குரிய விருந்தோம்பலாகும்."},{"id":57,"translation":"நாம்தான் உங்களைப் படைத்தோம். ஆக, நீங்கள் (இறந்த பின்னர் மீண்டும் எழுப்பப்படுவதை) உண்மை என நம்பமாட்டீர்களா?"},{"id":58,"translation":"நீங்கள் (உங்கள் மனைவிகளின் கருவறையில்) செலுத்துகின்ற இந்திரியத்தைப் பற்றி அறிவியுங்கள்!"},{"id":59,"translation":"அதை (-அந்த இந்திரியத்தையும் அதில் இருந்து உருவாகும் சிசுவையும்) நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம்தான் (அதை) படைக்கக்கூடியவர்களா?"},{"id":60,"translation":"நாம்தான் உங்களுக்கு மத்தியில் மரணத்தை (அது யாருக்கு, எப்போது வரும் என்று) நிர்ணயித்தோம். இன்னும் நாங்கள் இயலாதவர்கள் இல்லை,"},{"id":61,"translation":"உங்கள் உருவங்களை மாற்றுவதற்கும், நீங்கள் அறியாத ஒன்றில் (-புதிய ஓர் உருவத்தில்) உங்களை உருவாக்கிவிடுவதற்கும் (நாங்கள் இயலாதவர்கள் இல்லை)."},{"id":62,"translation":"(படைப்புகள்) முதல் முறையாக உருவாக்கப்பட்டதை (-அவற்றை உருவாக்கியவன் யார் என்று) நீங்கள் திட்டவட்டமாக அறிந்தீர்கள். ஆக, (அப்படி இருக்க அந்த இறைவனைத்தான் வணங்க வேண்டும் என்று) நீங்கள் நல்லுபதேசம் பெறமாட்டீர்களா?"},{"id":63,"translation":"ஆக, நீங்கள் (பூமியில்) உழு(து பயிரிடு)கிறீர்களே, அதைப் பற்றி அறிவியுங்கள்!"},{"id":64,"translation":"அதை நீங்கள் முளைக்க வைக்கிறீர்களா? அல்லது, நாம் (அதை) முளைக்க வைப்பவர்களா?"},{"id":65,"translation":"நாம் நாடினால் அதை (பயனற்ற) சருகுகளாக (பதருகளாக) ஆக்கிவிடுவோம். (உங்கள் அறுவடைகள் இந்த நிலைக்கு ஆகியதைப் பார்த்து அவை ஏன் இப்படி ஆகின என்று) நீங்கள் ஆச்சரியப்படுபவர்களாக (அல்லது, கவலைப்படுபவர்களாக) ஆகி இருப்பீர்கள்."},{"id":66,"translation":"“நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகள்” (என்றும்)"},{"id":67,"translation":"“மாறாக, நாங்கள் பெரும் இழப்புக்குள்ளானவர்கள்” (என்றும் அப்போது நீங்கள் கூறுவீர்கள்)."},{"id":68,"translation":"ஆக, நீங்கள் குடிக்கின்ற தண்ணீரைப் பற்றி அறிவியுங்கள்!"},{"id":69,"translation":"கார்மேகத்தில் இருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது, நாம் (அதை மேகத்தில் இருந்து) இறக்கக் கூடியவர்களா?"},{"id":70,"translation":"நாம் நாடினால் அதை உப்பு நீராக ஆக்கிவிடுவோம். ஆக, (இந்த மாபெரும் அருட்கொடைக்காக இறைவனுக்கு) நீங்கள் நன்றிசெலுத்த வேண்டாமா?"},{"id":71,"translation":"ஆக, நீங்கள் தீ மூட்டுகின்ற நெருப்பைப் பற்றி அறிவியுங்கள்!"},{"id":72,"translation":"அதன் மரத்தை நீங்கள் உருவாக்கினீர்களா? அல்லது, நாம் (அதை) உருவாக்கக் கூடியவர்களா?"},{"id":73,"translation":"நாம் அதை (-உலக நெருப்பை மறுமையின் நரக நெருப்பைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டுகிற) ஒரு நினைவூட்டலாகவும் பயணிகளுக்கு பலன் தரக்கூடியதாகவும் ஆக்கினோம்."},{"id":74,"translation":"ஆகவே, (நபியே!) மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!"},{"id":75,"translation":"ஆக, (தெற்கு திசையில்) நட்சத்திரங்கள் விழுகின்ற (-மறைகின்ற) இடங்கள் மீது நான் சத்தியம் செய்கிறேன்."},{"id":76,"translation":"(இது எத்தகைய சத்தியம் என்று) நீங்கள் அறிந்து கொண்டால் நிச்சயமாக இது மாபெரும் சத்தியமாக இருக்கும்."},{"id":77,"translation":"நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்,"},{"id":78,"translation":"பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது."},{"id":79,"translation":"மிகவும் பரிசுத்தமான (வான)வர்களைத் தவிர இதைத் தொடமாட்டார்கள்."},{"id":80,"translation":"(இது) அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமாகும்."},{"id":81,"translation":"ஆக, இந்த பேச்சை (-குர்ஆனை) நீங்கள் அலட்சியம் செய்(து, இதில் உள்ள உண்மை அத்தாட்சிகளை நீங்கள் பொய்ப்பிக்)கிறீர்களா?"},{"id":82,"translation":"இன்னும், நிச்சயமாக நீங்கள் (இதை) பொய்ப்பிப்பதையே (அல்லாஹ் உங்கள் மீது செய்த அருள்களுக்கு) உங்கள் நன்றியாக ஆக்கிக் கொண்டீர்களா?"},{"id":83,"translation":"ஆக, (மரணிப்பவரின் உயிர் பிரிகின்ற நிலையில்) அது தொண்டைக் குழியை அடைந்தபோது,"},{"id":84,"translation":"நீங்கள் அந்நேரத்தில் (அவருக்கு அருகில் இருந்து கொண்டு அவரது நிலையை உங்கள் கண்களால்) பார்க்கிறீர்கள். (ஆனாலும் உங்களால் அவருக்கு எவ்வித உதவியும் செய்ய முடியவில்லை.)"},{"id":85,"translation":"நாம் (-நமது வானவர்கள்) உங்களை விட அவருக்கு மிக சமீபமாக இருக்கிறோம். என்றாலும், நீங்கள் பார்க்க முடியாது. (உயிரை வாங்கும்போது வானவர்கள் அருகில் இருந்தும் அவர்களை மனிதர்களால் பார்க்க முடியாது.)"},{"id":86,"translation":"ஆக, நீங்கள் (மறுமையில் விசாரிக்கப்பட்டு) கூலி கொடுக்கப்படாதவர்களாக இருந்தால்,"},{"id":87,"translation":"(அந்த உங்கள் கூற்றில்) நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அதை (-அந்த உயிரை) நீங்கள் திரும்ப கொண்டு வந்திருக்கலாமே?"},{"id":88,"translation":"ஆக, (மரணித்தவர் அல்லாஹ்விற்கு) சமீபமான (நல்ல)வர்களில் உள்ளவராக இருந்தால்,"},{"id":89,"translation":"(அவருக்கு மறுமையில் மகத்தான) அருளும் (நல்ல) உணவும் (உயர்ந்த நறுமணமும்) “நயீம்” என்ற இன்பம் நிறைந்த சொர்க்கமும் உண்டு."},{"id":90,"translation":"ஆக, (இறந்தவர்) வலது பக்கம் உடையவர்களில் உள்ளவராக இருந்தால்,"},{"id":91,"translation":"(ஓ நல்லவரே!) வலது பக்கம் உடையவர்களில் உள்ள உமக்கு ஸலாம் (பாதுகாப்பும் ஈடேற்றமும்) உண்டாகுக!"},{"id":92,"translation":"ஆக, அவர் வழிகெட்டவர்களில், பொய்ப்பித்தவர்களில் உள்ளவர்களாக இருந்தால்,"},{"id":93,"translation":"கடுமையாக கொதிக்கின்ற சுடுநீரின் விருந்தும்,"},{"id":94,"translation":"நரகத்தில் வைத்து நெருப்பில் பொசுக்குவதும்தான் (அவருக்கு கூலியாக இருக்கும்)."},{"id":95,"translation":"நிச்சயமாக இதுதான் மிக உறுதியான உண்மையாகும்."},{"id":96,"translation":"ஆக, மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!"}]},{"id":57,"verses":[{"id":1,"translation":"நிகழக்கூடிய சம்பவம் (-மறுமை) நிகழ்ந்தால்,"},{"id":2,"translation":"வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அவன் உயிர்கொடுக்கிறான்; மரணிக்க வைக்கிறான். இன்னும், அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":3,"translation":"அவன்தான் முதலாமவன்; இறுதியானவன்; மேலோங்கியவன்; மறைந்தவன். அவன் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":4,"translation":"அவன் ஆறு நாட்களில் வானங்களையும் பூமியையும் படைத்தான். பிறகு, அர்ஷின் மீது அவன் உயர்ந்துவிட்டான். பூமியில் நுழைவதையும் அதிலிருந்து வெளியேறுவதையும் வானத்தில் இருந்து இறங்குவதையும் அதில் ஏறுவதையும் அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் எங்கு இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":5,"translation":"வானங்கள், இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்கே உரியது. அல்லாஹ்வின் பக்கமே எல்லாக் காரியங்களும் திருப்பப்படுகின்றன."},{"id":6,"translation":"அவன் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். இன்னும், நெஞ்சங்களில் உள்ளவற்றை அவன் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":7,"translation":"அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! இன்னும், அவன் எதில் உங்களை (ஒருவருக்குப் பின்னர் ஒருவரை) பிரதிநிதிகளாக ஆக்கினானோ அ(-ந்த செல்வத்)திலிருந்து தர்மம் செய்யுங்கள்! ஆக, (மனிதர்களே!) உங்களில் எவர்கள் நம்பிக்கை கொண்டார்களோ; இன்னும், தர்மம் செய்தார்களோ அவர்களுக்கு மிகப் பெரிய வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு."},{"id":8,"translation":"அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொள்ளாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? நீங்கள் உங்கள் இறைவனை நம்பிக்கை கொள்வதற்கு இந்த தூதர் உங்களை அழைக்கிறார். திட்டமாக அவன் (உங்களிடம்) உங்கள் சத்திய வாக்கை வாங்கி இருக்கிறான். நீங்கள் (ஒரு நாள்) நம்பிக்கையாளராக ஆக நாடினால் (இதுதான் சரியான நேரம், இப்போதே நம்பிக்கை கொள்ளுங்கள். மரணம் எப்போது வரும் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்)."},{"id":9,"translation":"அவன் தனது அடியார் மீது தெளிவான அத்தாட்சிகளை இறக்குகிறான், அவன் உங்களை (அதன் மூலம்) இருள்களில் இருந்து வெளிச்சத்தின் பக்கம் வெளியேற்றுவதற்காக. இன்னும், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக இரக்கமுடையவனும் கருணையாளனும் ஆவான்."},{"id":10,"translation":"அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் தர்மம் செய்யாமல் இருப்பதற்கு உங்களுக்கு என்ன ஆனது? வானங்கள் இன்னும் பூமியின் சொத்துக்கள் அல்லாஹ்விற்கே உரியன. (மக்காவின்) வெற்றிக்கு முன்னர் தர்மம் செய்து (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தவருக்கு உங்களில் எவரும் சமமாக மாட்டார். (மக்காவின் வெற்றிக்கு) பின்னர் தர்மம் செய்து போர் செய்தவர்களை விட அவர்கள்தான் மிக மகத்தான பதவி உடையவர்கள். இன்னும், (உங்கள்) எல்லோருக்கும் அல்லாஹ் சொர்க்கத்தை வாக்களித்துள்ளான். அல்லாஹ் நீங்கள் செய்வதை ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":11,"translation":"யார் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுப்பார்? அப்படி அவர் கொடுத்தால் அவன் அவருக்கு அதை பன்மடங்காக்குவான். இன்னும், அவருக்கு கண்ணியமான வெகுமதி (-சொர்க்கம்) உண்டு."},{"id":12,"translation":"(நபியே!) நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் (மறுமையில்) நீர் பார்ப்பீர், அவர்களின் ஒளி (-அவர்களின் நம்பிக்கை மற்றும் நல்ல அமல்களின் நன்மைகள்) அவர்களுக்கு முன்னர் செல்லும். இன்னும், அவர்களின் வலப்பக்கங்களில் (அவர்களின் செயலேடுகள் பறந்து கொண்டிருக்கும்). இன்று உங்கள் நற்செய்தி சொர்க்கங்களாகும். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":13,"translation":"அந்நாளில் நயவஞ்சகர்களும் நயவஞ்சகிகளும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கூறுவார்கள்: “எங்களை (கொஞ்சம்) காத்திருங்கள்! உங்கள் ஒளியிலிருந்து நாங்கள் (கொஞ்சம்) எடுத்துக் கொள்கிறோம்.” (அப்போது அவர்களுக்கு) கூறப்படும் “உங்களுக்குப் பின்னால் (வந்த வழியிலேயே) நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்! (அங்கு) ஒளியை தேடுங்கள்!” ஆக, அவர்களுக்கு மத்தியில் ஒரு சுவர் அமைக்கப்படும். அதற்கு ஒரு வாசல் இருக்கும். அதன் உள் பக்கம், அதில் அருள் இருக்கும். அதன் வெளிப்பக்கம், அதற்கு முன்னால் தண்டனை இருக்கும்."},{"id":14,"translation":"“நாங்கள் உங்களுடன் இருக்கவில்லையா?” என்று (கூறி) அவர்களை கூவி அழைப்பார்கள். அவர்கள் (-நம்பிக்கையாளர்கள்) கூறுவார்கள்: “ஏன் இல்லை. என்றாலும், நீங்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களையே அழித்துக் கொண்டீர்கள்; இன்னும், (நபிக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்) ஆபத்து நிகழ வேண்டும் என்று சமயம் பார்த்துக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், (அல்லாஹ்வின் தூதரின் கூற்றில்) சந்தேகித்தீர்கள்; இன்னும், பொய்யான ஆசைகள் உங்களை மயக்கின. இறுதியாக, அல்லாஹ்வின் கட்டளை வந்துவிட்டது. மயக்கக் கூடியவன் (-ஷைத்தான்) அல்லாஹ்வை விட்டும் உங்களை மயக்கிவிட்டான்.”"},{"id":15,"translation":"ஆக, இன்றைய தினம் உங்களிடமும் நிராகரிப்பாளர்களிடமும் எவ்வித பரிகாரம் (மீட்புத் தொகை) - வாங்கப்படாது. உங்கள் தங்குமிடம் நரகம்தான். அதுதான் உங்களுக்கு மிக ஏற்றமானது. மீளுமிடங்களில் அது மிகக் கெட்டது."},{"id":16,"translation":"அல்லாஹ்வை நினைவு கூர்வதாலும் இறங்கிய உண்மையான வேதத்(தை ஓதுவ)தினாலும் அவர்களின் உள்ளங்கள் நடுங்க நம்பிக்கையாளர்களுக்கு நேரம் வரவில்லையா? இன்னும், இதற்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் அவர்கள் ஆகிவிட வேண்டாம். ஆக, அவர்கள் (-முந்திய வேதக்காரர்கள்) மீது காலம் மிக நீண்டுவிட்டது. ஆகவே, அவர்களின் உள்ளங்கள் இறுகிவிட்டன. இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை மீறக்கூடிய) பாவிகள் ஆவார்கள்."},{"id":17,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அல்லாஹ், பூமியை, அது இறந்த பின்னர் உயிர்ப்பிக்கிறான். நீங்கள் சிந்தித்து புரிவதற்காக வசனங்களை நாம் உங்களுக்கு திட்டமாக தெளிவுபடுத்துகிறோம்."},{"id":18,"translation":"நிச்சயமாக (அல்லாஹ்வின் பாதையில்) தர்மம் செய்த ஆண்கள், தர்மம் செய்த பெண்கள், இன்னும், அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தவர்கள் அவர்களுக்கு (நற்கூலிகள்) பன்மடங்காக்கப்படும். இன்னும், அவர்களுக்கு கண்ணியமான வெகுமதி(யாகிய சொர்க்கம்) உண்டு."},{"id":19,"translation":"இன்னும், எவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர்களையும் நம்பிக்கை கொண்டார்களோ அவர்கள்தான் “ஸித்தீக்” (என்ற மிக உண்மையாளர்கள்) ஆவார்கள். இன்னும், (அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்ட) ஷுஹதா, அவர்களுக்கு அவர்களின் கூலியும் அவர்களின் ஒளியும் அவர்களின் இறைவனிடம் உண்டு. எவர்கள் நிராகரித்தார்களோ; இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரகவாசிகள் ஆவார்கள்."},{"id":20,"translation":"அறிந்து கொள்ளுங்கள்! “உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமை அடிப்பதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகத்தின் போட்டியும்தான். (இவ்வாழ்க்கை) ஒரு மழையைப் போன்றுதான், அதன் விளைச்சல் விவசாயிகளை கவர்ந்தது. பிறகு, அது காய்ந்து விடுகிறது. ஆக, அதை நீர் மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு, அது குப்பையாக ஆகிவிடுகிறது. இன்னும், மறுமையில் (நிராகரிப்பாளர்களுக்கு) கடுமையான தண்டனையும் (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பும் திருப்பொருத்தமும் உண்டு. மயக்கக்கூடிய இன்பமாகவே தவிர உலக வாழ்க்கை இல்லை.”"},{"id":21,"translation":"உங்கள் இறைவனின் மன்னிப்பு இன்னும் சொர்க்கத்தின் பக்கம் முந்துங்கள். அதன் அகலம் வானம் பூமியின் அகலத்தைப் போலாகும். அது அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது அல்லாஹ்வின் சிறப்பா(ன அருளா)கும். அவன் நாடுபவர்களுக்கு அதை அவன் கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்."},{"id":22,"translation":"பூமியிலும் உங்களிலும் ஒரு சோதனை ஏற்படுவதில்லை, நாம் (பூமியில், அல்லது உங்களில்) அதை உருவாக்குவதற்கு முன்னர் அது விதியில் (எழுதப்பட்டு) இருந்தே தவிர. நிச்சயமாக இது அல்லாஹ்விற்கு மிக எளிதானதாகும்."},{"id":23,"translation":"(இதை நாம் உங்களுக்கு அறிவித்தோம்.) ஏனெனில், உங்களுக்கு தவறிவிட்டதற்காக நீங்கள் துக்கப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு கொடுத்ததைக் கொண்டு நீங்கள் பெருமைப்படாமல் இருப்பதற்காகவும் ஆகும். இன்னும், அகம்பாவக்காரர்கள், தற்பெருமையடிப்பவர்கள் எல்லோரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்."},{"id":24,"translation":"இவர்கள் கருமித்தனம் காட்டுகிறார்கள். இன்னும், மக்களை கருமித்தனத்திற்கு ஏவுகிறார்கள் (-ஊக்குவிக்கிறார்கள், தூண்டுகிறார்கள்). யார் (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிவதை விட்டும்) விலகுவாரோ அவர் தனக்குத்தான் தீங்கிழைத்துக் கொண்டார். நிச்சயமாக அல்லாஹ்தான் மகா நிறைவானவன் (அவனுக்கு யாருடைய தேவையும் இல்லை), மகா புகழாளன். (எவரின் புறக்கணிப்பாலும் அவனது கண்ணியமும் புகழும் குறையாது.)"},{"id":25,"translation":"திட்டவட்டமாக நாம் நமது தூதர்களை தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு அனுப்பினோம். இன்னும், அவர்களுடன் வேதத்தையும் தராசையும் - மக்கள் (அதன் மூலம்) நீதத்தை நிலை நிறுத்துவதற்காக - நாம் இறக்கினோம். இன்னும், இரும்பையும் நாம் (உங்களுக்கு) உருவாக்கினோம் (-சுரங்கங்களிலிருந்து வெளியாக்கிக் கொடுத்தோம்). அதில் உறுதியான வலிமையும் மக்களுக்கு பல பலன்களும் உள்ளன. இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மறைவில் உதவி செய்பவரை (வெளிப்படையாக நீங்கள் அறியும்படி) அல்லாஹ் அறிவதற்காகவும் (அல்லாஹ் இரும்பைப் படைத்தான்). நிச்சயமாக அல்லாஹ் வலிமையாளன், மிகைத்தவன் ஆவான்."},{"id":26,"translation":"திட்டவட்டமாக நாம் நூஹையும் இப்ராஹீமையும் (நமது தூதர்களாக) அனுப்பினோம். இன்னும், அ(வ்விரு)வர்களின் சந்ததியில் நபித்துவத்தையும் வேதங்களையும் நாம் ஏற்படுத்தினோம். ஆக, அவர்க(ளுடைய சந்ததி)களில் நேர்வழி பெற்றவர்களும் உள்ளனர். இன்னும், அவர்க(ளுடைய சந்ததி)களில் அதிகமானவர்கள் பாவிகள் ஆவார்கள்."},{"id":27,"translation":"பிறகு, அவர்களின் அடிச்சுவடுகளில் (இஸ்ரவேலர்களில்) நமது தூதர்களை நாம் தொடர்ந்து அனுப்பினோம். (இறுதியாக அவர்களை தொடர்ந்து) மர்யமுடைய மகன் ஈஸாவை அனுப்பினோம். அவருக்கு இன்ஜீலை கொடுத்தோம். அவரை (உண்மையாக) பின்பற்றியவர்களின் உள்ளங்களில் இரக்கத்தையும் கருணையையும் நாம் ஏற்படுத்தினோம். அவர்கள் துறவரத்தை மார்க்கத்தில் புதுமையாக ஏற்படுத்திக் கொண்டனர். நாம் அவர்கள் மீது அதை கடமையாக்கவில்லை. அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடியே தவிர (வேறு ஒன்றுக்காக அவர்கள் அதை ஏற்படுத்தவில்லை). ஆனால், அ(ந்த துறவறத்)தை பேண வேண்டிய முறையில் அதை அவர்கள் பேணவில்லை. அவர்களில் இருந்து எவர்கள் (இந்த நபியையும் இந்த வேதத்தையும்) நம்பிக்கை கொள்வார்களோ அவர்களின் கூலியை நாம் அவர்களுக்குக் கொடுப்போம். இன்னும், அவர்களில் அதிகமானவர்கள் (அல்லாஹ்வின் கட்டளையை மீறக்கூடிய) பாவிகள் ஆவார்கள்."},{"id":28,"translation":"(முந்திய வேதங்களை நம்பிக்கை கொண்ட) நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! இன்னும், அவனது தூதரை நம்பிக்கை கொள்ளுங்கள்! அவன் உங்களுக்கு தனது கருணையிலிருந்து இரு மடங்கு பங்குகளைக் கொடுப்பான். இன்னும், உங்களுக்கு ஒளியை (நீதமான, ஒழுக்கமான, இலகுவான, நேர்வழிமிக்க சட்டங்களை உடைய அழகிய மார்க்கத்தை) ஏற்படுத்துவான். அதன் மூலம் (கண்ணியத்தோடு மக்களுக்கு மத்தியில்) நீங்கள் நடந்து செல்வீர்கள். இன்னும், அவன் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":29,"translation":"(நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் உங்களுக்கு இவ்வளவு நன்மைகளைக் கொடுத்தான்.) ஏனெனில், (இந்த தூதரை நம்பிக்கை கொள்ளாத) வேதக்காரர்கள் அல்லாஹ்வின் அருளில் எதன் மீதும் ஆற்றல் பெற மாட்டார்கள் என்பதையும்; நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கரத்தில் இருக்கிறது, அவன் நாடுகிறவர்களுக்கு அதைக் கொடுக்கிறான் என்பதையும் அவர்கள் அறிந்து கொள்வதற்காக ஆகும். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்."}]},{"id":58,"verses":[{"id":1,"translation":"வானங்களில் உள்ளவர்களும், பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":2,"translation":"உங்களில் எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்கிறார்களோ அந்த பெண்கள் அவர்களின் தாய்மார்களாக ஆகமுடியாது. அவர்களின் தாய்மார்களாக இல்லை அவர்களை எவர்கள் பெற்றெடுத்தார்களோ அவர்களைத் தவிர. (ளிஹார் செய்வதன் மூலமாக) நிச்சயமாக அவர்கள் பேச்சில் மிகத் கெட்டதையும் (மார்க்க சட்டத்தில் அறியப்படாததையும்) பொய்யானதையும் கூறுகிறார்கள். நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பிழை பொறுப்பவன், மகா மன்னிப்பாளன் ஆவான்."},{"id":3,"translation":"இன்னும், எவர்கள் தங்கள் மனைவிகளிடம் ளிஹார் செய்து, பிறகு தாங்கள் கூறியதற்கு (-தங்கள் அந்த தவறை திருத்திக்கொள்வதற்கு) மீளுகிறார்களோ அவர்கள் (-ளிஹார் செய்த அந்த கணவனும் அவருடைய மனைவியும் இல்லற உறவில்) சேர்வதற்கு முன்னர் ஓர் அடிமையை உரிமையிட வேண்டும். இதுதான் (அல்லாஹ்வின் சட்டம்), நீங்கள் அ(தை செய்வ)தற்கு உபதேசிக்கப்படுகிறீர்கள். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":4,"translation":"ஆக, எவர் (அடிமையை உரிமையிட) வசதி பெறவில்லையோ அவர் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நோன்பிருக்க வேண்டும் (ளிஹார் செய்த அந்த கணவனும் அவரது மனைவியும் இல்லற வாழ்க்கையில்) சேர்வதற்கு முன்னர். ஆக, எவர் (இதற்கு) சக்தி பெறவில்லையோ அவர் அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும். இது ஏனெனில், நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்கிறீர்கள் என்பதற்காக ஆகும். இவை அல்லாஹ்வின் சட்டங்களாகும். இன்னும், துன்புறுத்தும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு."},{"id":5,"translation":"நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறார்களோ (மாறுசெய்கிறார்களோ, அவர்களின் சட்டங்களை எதிர்க்கிறார்களோ) அவர்கள், அவர்களுக்கு முன்னுள்ளவர்கள் இழிவுபடுத்தப்பட்டது போன்று இழிவு படுத்தப்படுவார்கள். இன்னும், திட்டமாக நாம் தெளிவான அத்தாட்சிகளை இறக்கினோம். இழிவுதரும் தண்டனை நிராகரிப்பாளர்களுக்கு உண்டு."},{"id":6,"translation":"அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற நாளில் (அந்த தண்டனையை அவர்கள் அடைவார்கள்). ஆக, அவர்கள் செய்தவற்றை அவன் அவர்களுக்கு (அப்போது) அறிவிப்பான். அல்லாஹ் அவற்றை கணக்கிட்டு வைத்துள்ளான். அவர்கள் அவற்றை மறந்துவிட்டார்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கண்காணிப்பவன் (அவற்றுக்கு சாட்சியாளன்) ஆவான்."},{"id":7,"translation":"(நபியே!) நீர் அறியவில்லையா? “நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும் பூமியில் உள்ளவற்றையும் நன்கறிவான்: என்று. மூன்று நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் நான்காமவனாக இருந்தே தவிர. இன்னும், ஐந்து நபர்களின் உரையாடல் இருக்காது, அவன் அவர்களில் ஆறாவதாக இருந்தே தவிர. இன்னும், அதை விட குறைவாகவோ அதிகமாகவோ இருக்க மாட்டார்கள், அவன் அவர்களுடன் இருந்தே தவிர, அவர்கள் எங்கிருந்தாலும் சரியே! பிறகு, அவன் அவர்களுக்கு அவர்கள் செய்தவற்றை மறுமை நாளில் அறிவிப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":8,"translation":"கூடிப் பேசுவதை விட்டும் தடுக்கப்பட்டவர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? (தடுக்கப்பட்ட) பிறகும், அவர்கள் எதிலிருந்து தடுக்கப்பட்டார்களோ அதற்கே அவர்கள் திரும்புகிறார்கள். இன்னும் அவர்கள் பாவத்தையும் எல்லை மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப் பேசுகிறார்கள். அவர்கள் உம்மிடம் வந்தால் அல்லாஹ் உமக்கு எதை முகமனாகக் கூறவில்லையோ அதை முகமனாகக் கூறுகிறார்கள். தங்கள் மனதிற்குள், “நாம் சொல்வதைக் கொண்டு அல்லாஹ் நம்மை தண்டனை செய்யாமல் இருக்க வேண்டுமே!” என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு நரகமே போதும். அதில் அவர்கள் எரிந்து பொசுங்குவார்கள். ஆக, மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்."},{"id":9,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் கூடிப்பேசினால் பாவ(மான காரிய)த்தையும் (மார்க்க சட்டங்களை) மீறுவதையும் தூதருக்கு மாறுசெய்வதையும் கூடிப்பேசாதீர்கள். இன்னும், நன்மையான விஷயத்தையும் இறையச்சம் மிகுந்த விஷயத்தையும் கூடிப் பேசுங்கள்! இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அவனிடம்தான் நீங்கள் ஒன்று திரட்டப்படுவீர்கள்."},{"id":10,"translation":"(சந்தேகத்திற்கிடமாக) கூடிப்பேசுவது ஷைத்தான் புறத்திலிருந்து (உங்களுக்கு) தூண்டப்படுகிறது, (ஏனெனில்,) நம்பிக்கை கொண்டவர்களை கவலைப்படுத்துவதற்காக. ஆனால், அது அவர்களுக்கு அறவே தீங்கு செய்வதாக இல்லை, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். இன்னும், நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வை(த்து அவனை மட்டுமே சார்ந்து இரு)க்கவும்."},{"id":11,"translation":"நம்பிக்கையாளர்களே! (உங்கள் சபைகளுக்குள் நுழைந்த உங்கள் சகோதரர்களுக்காக) “சபைகளில் (கொஞ்சம்) இடம் கொடுங்கள்!” என்று உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் இடம் கொடுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு (இடத்தில்) விசாலத்தை ஏற்படுத்துவான். இன்னும், (சபைகளில் இருந்து) நீங்கள் புறப்படுங்கள் என்று கூறப்பட்டால் நீங்கள் புறப்பட்டு விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டவர்களை அல்லாஹ் உயர்த்துவான். இன்னும் கல்வி கொடுக்கப்பட்டவர்களை பல தகுதிகள் அவன் உயர்த்துவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":12,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் தூதரிடம் கூடிப்பேசினால் நீங்கள் கூடிப் பேசுவதற்கு முன்னர் (ஏழைகளுக்கு) தர்மம் செய்யுங்கள்! அது உங்களுக்கு மிகச் சிறந்ததும் மிக பரிசுத்தமானதும் ஆகும். நீங்கள் (எதையும் தர்மம் செய்ய) வசதி பெறவில்லை என்றால் (அல்லாஹ் உங்களை மன்னித்து விடுவான். ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்."},{"id":13,"translation":"உங்கள் உரையாடலுக்கு முன்னர் தர்மங்கள் செய்வதை (-அப்படி செய்தால் வறுமை வந்துவிடுமோ என) நீங்கள் பயப்படுகிறீர்களா? நீங்கள் அப்படி செய்யவில்லை என்றால், அல்லாஹ்வும் உங்களை மன்னித்துவிட்டதால் (உங்கள் மீது குற்றமில்லை.) ஆகவே, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்! இன்னும், ஸகாத்தை கொடுங்கள்! இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்! அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":14,"translation":"அல்லாஹ் கோபித்த மக்(களாகிய யூதர்)களை நண்பர்களாக எடுத்துக் கொண்ட (நய)வ(ஞ்சக)ர்களை (நபியே!) நீர் பார்க்கவில்லையா? அவர்கள் (-நயவஞ்சகர்கள்) உங்களை சேர்ந்தவர்கள் இல்லை. அவர்கள் அவர்களை (-யூதர்களை) சேர்ந்தவர்களும் இல்லை. அவர்கள் அறிந்து கொண்டே (உங்களுக்கு முன்னர்) பொய்யான விஷயத்தின் மீது சத்தியம் செய்கிறார்கள்."},{"id":15,"translation":".. அல்லாஹ், அவர்களுக்கு கடுமையான தண்டனையை ஏற்படுத்தி இருக்கிறான். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை (அனைத்தும்) மிகக் கெட்டவையாகும்."},{"id":16,"translation":"அவர்கள் தங்கள் சத்தியங்களை (தாங்கள் தப்பிப்பதற்கு) ஒரு கேடயமாக எடுத்துக் கொண்டனர். ஆக, அல்லாஹ்வின் மார்க்கத்தை விட்டும் (பாமர மக்களை) தடுக்கிறார்கள். ஆகவே, இழிவுதரக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":17,"translation":"அல்லாஹ்விடம் (அவனது தண்டனையிலிருந்து) எதையும் அவர்களின் செல்வங்களோ அவர்களின் பிள்ளைகளோ அவர்களை விட்டும் அறவே தடுக்க மாட்டார்கள். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்,"},{"id":18,"translation":"அல்லாஹ் அவர்கள் அனைவரையும் எழுப்பும் நாளில் (அந்த நரகத்தில் அவர்கள் நுழைவார்கள்). ஆக, அவர்கள் அவனுக்கு முன் சத்தியம் செய்வார்கள், உங்களுக்கு முன் அவர்கள் சத்தியம் செய்வது போன்று. (இந்த சத்தியத்தின் மூலம்) அவர்கள் (புத்தி கூர்மையான) ஒரு செயல் மீது நிச்சயமாக தாங்கள் இருப்பதாக எண்ணுவார்கள். அறிந்து கொள்ளுங்கள்! நிச்சயமாக அவர்கள்தான் பொய்யர்கள்!"},{"id":19,"translation":"ஷைத்தான் அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்றான். ஆகவே, அல்லாஹ்வின் நினைவை அவர்களுக்கு மறக்கவைத்து விட்டான். அவர்கள்தான் ஷைத்தானின் கட்சியினர் ஆவார்கள். அறிந்துகொள்ளுங்கள்! நிச்சயமாக ஷைத்தானின் கட்சியினர்தான் நஷ்டவாளிகள் ஆவார்கள்."},{"id":20,"translation":"நிச்சயமாக அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுகிறவர்கள், அவர்கள் (தோற்கடிக்கப்பட்ட) மிக இழிவானவர்களில் சேர்ந்துவிடுவார்கள்."},{"id":21,"translation":"“நிச்சயமாக நானும் எனது தூதர்களும்தான் வெல்வோம்” என்று அல்லாஹ் விதித்துவிட்டான். நிச்சயமாக அல்லாஹ் மிக வலிமை உள்ளவன், மிகைத்தவன் ஆவான்."},{"id":22,"translation":"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொள்கிற மக்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முரண்படுபவர்களை (மார்க்க சட்டங்களை எதிர்ப்பவர்களை) நேசிப்பவர்களாக இருப்பதை நீர் காணமாட்டீர். (மார்க்க சட்டத்தை எதிர்க்கிற) அவர்கள் தங்கள் தந்தைகளாக; அல்லது, தங்கள் பிள்ளைகளாக; அல்லது, தங்கள் சகோதரர்களாக; அல்லது, தங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரியே! இத்தகையவர்கள்தான் - இவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் ஈமானை உறுதிபடுத்திவிட்டான். இன்னும் அவர்களை தன் புறத்திலிருந்து உதவியைக் கொண்டு பலப்படுத்தினான். இன்னும், அவன் அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக தங்குவார்கள். அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வான். (அவர்களினால் மகிழ்ச்சி அடைவான்.) அவர்களும் அவனை பொருந்திக் கொள்வார்கள். (அவர்களும் அவனால் மகிழ்ச்சி அடைவார்கள்.) அவர்கள்தான் அல்லாஹ்வின் கட்சியினர். அறிந்து கொள்ளுங்கள்! “நிச்சயமாக அல்லாஹ்வின் கட்சியினர்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்.”"}]},{"id":59,"verses":[{"id":1,"translation":"(நபியே!) உம்மிடம் தனது கணவரின் விஷயத்தில் விவாதிக்கின்றவளின் பேச்சை திட்டமாக அல்லாஹ் செவியுற்றான். இன்னும், அவள் (தனது கவலையை) அல்லாஹ்விடம் முறையி(ட்டு அதற்கான தீர்வை மன்றா)டுகிறாள். அல்லாஹ் உங்கள் இருவரின் உரையாடலை செவியுறுகிறான். நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுபவன், உற்று நோக்குபவன்."},{"id":2,"translation":"அவன்தான் வேதக்காரர்களில் (இந்த நபியை) நிராகரித்தவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து முதல் முறை (ஷாம் தேசத்தில் அவர்களை) ஒன்று திரட்டுவதற்காக வெளியாக்கினான். அவர்கள் (மதீனாவை விட்டு) வெளியேறுவார்கள் என்று (முஃமின்களே!) நீங்கள் நினைத்துப்பார்க்கவில்லை. தங்களது கோட்டைகள் தங்களை அல்லாஹ்விடமிருந்து பாதுகாக்கும் என நிச்சயமாக அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அல்லாஹ், (தனது தண்டனையை) அவர்கள் கணித்துப் பார்க்காத விதத்தில் அவர்களிடம் (கொண்டு) வந்தான். அவர்களின் உள்ளங்களில் அவன் திகிலைப் போட்டான். அவர்களுடைய வீடுகளை அவர்களின் கரங்களினால்; இன்னும், (முஃமின்களுக்கு அவர்கள் பணியாததால்) முஃமின்களின் கரங்களினால் நாசப்படுத்திக் கொண்டனர். ஆகவே, பார்வை உடையவர்களே! படிப்பினை பெறுங்கள்!"},{"id":3,"translation":"(அவர்களின் இல்லங்களில் இருந்து) வெளியேறுவதை அல்லாஹ் அவர்கள் மீது விதித்திருக்கவில்லை என்றால் இவ்வுலகிலேயே அவர்களை அவன் கண்டிப்பாக (கடுமையான தண்டனையால்) தண்டித்திருப்பான். இன்னும், அவர்களுக்கு மறுமையில் நரக தண்டனை உண்டு."},{"id":4,"translation":"அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் முற்றிலும் முரண்பட்டு மாறுசெய்தார்கள். யார் அல்லாஹ்விற்கு முற்றிலும் முரண்பட்டு மாறுசெய்வாரோ (அவருக்கு கடுமையான தண்டனை உண்டு. ஏனெனில்,) நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு மாறு செய்பவர்களை) தண்டிப்பதில் கடுமையானவன்."},{"id":5,"translation":"நீங்கள் பேரீச்ச மரங்களை வெட்டினாலும்; அல்லது, அவற்றின் வேர்களில் நிற்பவையாக அவற்றை நீங்கள் விட்டுவிட்டாலும் (அவை இரண்டும்) அல்லாஹ்வின் உத்தரவின்படிதான் நடந்தன. இன்னும், (அல்லாஹ்விற்கு கீழ்ப்படிய மறுக்கிற) பாவிகளை இழிவுபடுத்துவதற்காக நடந்தன."},{"id":6,"translation":"இன்னும், அல்லாஹ் தனது தூதருக்கு அவர்களிடமிருந்து (அவர்களின் செல்வங்களில்) எதை (சண்டையின்றி) உரிமையாக்கிக் கொடுத்தானோ அவற்றை அடைவதற்காக நீங்கள் (உங்கள்) குதிரைகளையோ ஒட்டகங்களையோ ஓட்டவில்லை. (உங்கள் முயற்சியால் தூதருக்கு இந்த செல்வம் கிடைக்கவில்லை.) என்றாலும், அல்லாஹ் தனது தூதர்களை, தான் நாடுகிறவர்கள் மீது சாட்டுகிறான். (ஆகவே, அந்த எதிரிகள் சண்டையின்றியே பணிந்துவிடுவார்கள்.) அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":7,"translation":"அல்லாஹ் தனது தூதருக்கு (சுற்றி உள்ள) ஊர்களில் உள்ளவர்களிடமிருந்து எதை சண்டையின்றி உரிமையாக்கிக் கொடுத்தானோ அது அல்லாஹ்விற்கும் தூதருக்கும் (அதாவது, தூதர் மற்றும் தூதரின்) உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும். ஏனெனில், செல்வம் உங்களில் உள்ள செல்வந்தர்களுக்கு மத்தியில் மட்டும் சுற்றக்கூடிய பொருளாக ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக. இன்னும், தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ அதை உறுதியாக பற்றிப் பிடியுங்கள். அவர் எதை உங்களுக்குத் தடுத்தாரோ அதை விட்டும் விலகிவிடுங்கள். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் ஆவான்."},{"id":8,"translation":"(இன்னும் அந்த செல்வங்கள் யாருக்கு கொடுக்கப்பட வேண்டுமென்றால்) தங்கள் இல்லங்களை விட்டும் தங்கள் செல்வங்களை விட்டும் வெளியேற்றப்பட்ட ஏழை முஹாஜிர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் தேடுகிறார்கள். இன்னும், அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் உதவுகிறார்கள். அவர்கள்தான் உண்மையாளர்கள்."},{"id":9,"translation":"இன்னும், எவர்கள் (மதீனாவில்) வீடுகளை அமைத்துக் கொண்டார்களோ; அவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு) முன்னதாக ஈமானை ஏற்றுக்கொண்டார்களோ அவர்கள் தங்களிடம் ஹிஜ்ரத் செய்து வந்தவர்களை நேசிக்கிறார்கள். இன்னும், தங்களுக்கு கொடுக்கப்பட்டவற்றில் தங்கள் நெஞ்சங்களில் (தங்களுக்கு என்று முன்னுரிமைப்படுத்தப்படும்) எந்தத் தேவையையும் அவர்கள் காணமாட்டார்கள். தங்களுக்கு (வறுமையும்) கடுமையான தேவை(யும்) இருந்தாலும் தங்களை விட (முஹாஜிர்களைத்தான்) தேர்ந்தெடுப்பார்கள். (-அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள்.) யார் தனது உள்ளத்தின் கருமித்தனத்தை விட்டும் பாதுகாக்கப்படுவாரோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்."},{"id":10,"translation":"(-முஹாஜிர்கள், அன்ஸாரிகள் ஆகிய) இ(ந்த இரு)வர்களுக்கும் பின்னர் வந்தவர்கள் கூறுவார்கள்: “எங்கள் இறைவா! எங்களையும் ஈமானில் எங்களை முந்திய எங்கள் (முஹாஜிர், அன்ஸாரி) சகோதரர்களையும் மன்னிப்பாயாக! நம்பிக்கை கொண்டவர்கள் மீது குரோதத்தை (-பொறாமையை) எங்கள் உள்ளங்களில் ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீதான் மகா இரக்கமுள்ளவன், மகா கருணையாளன்.”"},{"id":11,"translation":"நயவஞ்சகர்களை நீர் பார்க்கவில்லையா? வேதக்காரர்களில் (இந்த நபியை) நிராகரித்த தங்கள் சகோதரர்களுக்கு அவர்கள் கூறுகிறார்கள்: “நீங்கள் (உங்கள் இல்லங்களில் இருந்து) வெளியேற்றப்பட்டால் (உங்களுக்கு உதவுவதற்கு) நிச்சயமாக நாங்களும் வெளியேறி உங்களுடன் வருவோம். உங்கள் விஷயத்தில் யாருக்கும் எப்போதும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம். இன்னும், உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் நிச்சயமாக நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.” அல்லாஹ் சாட்சி சொல்கிறான், “நிச்சயமாக இவர்கள் (-இந்த நயவஞ்சகர்கள்) பொய்யர்கள்தான்!”"},{"id":12,"translation":"அவர்கள் (-நிராகரித்த வேதக்காரர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து) வெளியேற்றப்பட்டால் இவர்கள் அவர்களுடன் வெளியேற மாட்டார்கள். இன்னும், அவர்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் இவர்கள் அவர்களுக்கு உதவ மாட்டார்கள். (அப்படியே) இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் இவர்களும் கண்டிப்பாக புறமுதுகு காட்டி ஓடுவார்கள். பிறகு, (ஒருக்காலும்) இவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள். (நிராகரித்தவர்களுக்கு உதவிய இந்த நயவஞ்சகர்களும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்.)"},{"id":13,"translation":"(முஃமின்களே!) நீங்கள் அவர்களின் நெஞ்சங்களில் அல்லாஹ்வை விட கடுமையான பயத்திற்குரியவர்கள். (-அவர்கள் அல்லாஹ்வை பயப்படுவதை விட உங்களை அதிகம் பயப்படுகிறார்கள்.) அதற்கு காரணம் நிச்சயமாக அவர்கள் (அல்லாஹ்வின் வல்லமையை) புரியாத மக்கள் ஆவார்கள்."},{"id":14,"translation":"அவர்கள் (-அந்த யூதர்கள்) பாதுகாப்பான ஊர்களில்; அல்லது, சுவர்களுக்கு பின்னால் இருந்தே தவிர, அவர்கள் எல்லோரும் சேர்ந்து (நேரடியாக) உங்களிடம் போர் புரிய மாட்டார்கள். அவர்களின் பகைமை அவர்களுக்கு மத்தியில் கடுமையாக இருக்கிறது. நீர் அவர்களை ஒன்று சேர்ந்தவர்களாக எண்ணுகிறீர். ஆனால், அவர்களின் உள்ளங்களோ பலதரப்பட்டதாக (பிரிந்து) இருக்கின்றன. அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் சிந்தித்துப் புரியாத மக்கள் ஆவார்கள்."},{"id":15,"translation":"(இந்த யூதர்களுக்கு உதாரணம்) இவர்களுக்கு சற்று முன்னர் தங்கள் (தீய) காரியத்தின் கெடுதியை (பத்ர் போரில்) அனுபவித்தார்களே அவர்களின் உதாரணத்தைப் போன்றுதான். இன்னும் (இதை விட) துன்புறுத்தும் தண்டனை (மறுமையில்) இவர்களுக்கு உண்டு."},{"id":16,"translation":"(நபிக்கு எதிராக யூதர்களைத் தூண்டிய நயவஞ்சகர்களின் உதாரணம்) அந்த ஷைத்தானின் உதாரணத்தைப் போன்றுதான். அவன் மனிதனுக்கு, “நீ நிராகரித்து விடு” என்று கூறினான். அந்த மனிதன் நிராகரித்துவிடவே, “உன்னை விட்டு நிச்சயமாக நான் நீங்கியவன், நிச்சயமாக அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வை நான் பயப்படுகிறேன்” என்று கூறி (அந்த மனிதனை விட்டும் அவன் விலகி) விடுகிறான்."},{"id":17,"translation":"ஆக, அவ்விருவரின் முடிவானது, “நிச்சயமாக அவ்விருவரும் நரகத்தில் இருப்பார்கள், அதில் நிரந்தரமாகத் தங்குவார்கள்” என்பதாக ஆகிவிடும். இதுதான் அநியாயக்காரர்களின் கூலியாகும்."},{"id":18,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! ஓர் ஆன்மா, அது (தனது) மறுமைக்காக எதை முற்படுத்தி இருக்கிறது என்று பார்த்துக் கொள்ளட்டும். இன்னும், அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்பவற்றை நிச்சயமாக அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":19,"translation":"அல்லாஹ்வை மறந்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். அதனால் அவர்களுக்கு அவர்களையே அவன் மறக்கச் செய்துவிட்டான். அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள்."},{"id":20,"translation":"நரக வாசிகளும் சொர்க்க வாசிகளும் சமமாக மாட்டார்கள். சொர்க்க வாசிகள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்."},{"id":21,"translation":"இந்த குர்ஆனை நாம் ஒரு மலையின் மீது இறக்கி இருந்தால் அது அல்லாஹ்வின் அச்சத்தால் முற்றிலும் பணிந்ததாகவும் பிளந்து விடக்கூடியதாகவும் அதை நீர் கண்டிருப்பீர். இந்த உதாரணங்கள், இவற்றை மக்களுக்கு நாம் விவரிக்கிறோம், அவர்கள் சிந்திப்பதற்காக."},{"id":22,"translation":"அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன். அவன்தான் பேரருளாளன், பேரன்பாளன் (மகா கருணையும் விசாலமான இரக்கமும் உடையவன்)."},{"id":23,"translation":"அவன்தான் அல்லாஹ். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (அவன்தான்) உண்மையான அரசன், மகா தூயவன், ஈடேற்றம் அளிப்பவன், அபயமளிப்பவன், பாதுகாப்பவன், மிகைத்தவன், அடக்கி ஆள்பவன், பெருமைக்குரியவன் ஆவான். அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் அல்லாஹ் மகா பரிசுத்தமானவன்."},{"id":24,"translation":"அவன்தான் அல்லாஹ். படைப்பவன், உருவாக்குபவன், உருவம் அமைப்பவன். மிக அழகிய பெயர்கள் அவனுக்கே உரியன. வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவை அவனையே துதித்து தொழுகின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."}]},{"id":60,"verses":[{"id":1,"translation":"வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதித்து தொழுகின்றன. அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":2,"translation":"அவர்கள் உங்களை வசமாகப் பெற்றுக்கொண்டால் உங்களுக்கு எதிரிகளாக அவர்கள் ஆகிவிடுவார்கள். இன்னும், தங்கள் கரங்களையும் தங்கள் நாவுகளையும் உங்கள் பக்கம் (உங்களுக்கு) தீங்கிழைக்க நீட்டுவார்கள். இன்னும், நீங்கள் நிராகரிக்க வேண்டும் என்பதை அவர்கள் விரும்புகிறார்கள்."},{"id":3,"translation":"உங்கள் இரத்த உறவுகளும் உங்கள் பிள்ளைகளும் (அல்லாஹ்விடம்) உங்களுக்கு அறவே பலன் தரமாட்டார்கள். மறுமை நாளில் உங்களுக்கு மத்தியில் அவன் பிரித்து விடுவான். இன்னும், அல்லாஹ் நீங்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":4,"translation":"இப்ராஹீமிடத்திலும் அவர்களுடன் இருந்தவர்களிடத்திலும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி திட்டமாக இருக்கிறது. “நிச்சயமாக நாங்கள் உங்களை விட்டும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்குகின்றவற்றை விட்டும் விலகியவர்கள் ஆவோம். உங்களை(யும் நீங்கள் செய்கிற செயல்களையும்) நாங்கள் மறுத்துவிட்டோம். எங்களுக்கு மத்தியிலும் உங்களுக்கு மத்தியிலும் பகைமையும் குரோதமும் எப்போதும் வெளிப்பட்டுவிட்டன, நீங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டும் நம்பிக்கை கொள்கிற வரை (நாங்கள் உங்களுடன் சேர முடியாது)” என்று அவர்கள் (-இப்ராஹீமும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும்) தங்கள் மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூருங்கள்! எனினும், இப்ராஹீம் தனது தந்தைக்கு, “நிச்சயமாக நான் உமக்காக பாவமன்னிப்பு கேட்பேன், ஆனால், அல்லாஹ்விடம் உமக்கு நான் எதையும் செய்ய உரிமை பெறமாட்டேன்” என்று கூறியதைத் தவிர. (இது அவர் இறைவனின் சட்டம் தெரிவதற்கு முன்னர் கூறியதாகும். இணைவைப்பவர்களுக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது என்று தெரிந்தவுடன் அவர் தனது தந்தைக்கு மன்னிப்பு கேட்பதை விட்டு விலகிவிட்டார். எனவே, இதுதவிர மற்ற எல்லா விஷயங்களிலும் இப்ராஹீமிடம் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. மேலும் இப்ராஹீம் கூறினார்:) “எங்கள் இறைவா! உன் மீது நாங்கள் நம்பிக்கை வைத்தோம். உன் பக்கமே நாங்கள் பணிவுடன் திரும்பிவிட்டோம். உன் பக்கமே (எங்கள் அனைவரின்) மீட்சி இருக்கிறது.”"},{"id":5,"translation":"“எங்கள் இறைவா! நிராகரித்தவர்களுக்கு எங்களை ஒரு சோதனையாக ஆக்கிவிடாதே! (அவர்கள் மூலம் எங்களை தண்டித்துவிடாதே! அவர்களை எங்கள் மீது சாட்டிவிடாதே! அவர்கள் எங்கள் மார்க்கத்தை விட்டு எங்களை திருப்பிவிடுவார்கள்!) இன்னும், எங்கள் இறைவா! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீதான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவாய்.” (என்றும் அவர்கள் பிரார்த்தித்தார்கள்.)"},{"id":6,"translation":"உங்களுக்கு - (அதாவது,) அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆசைவைப்பவராக (அஞ்சுகிறவர்களாக) இருப்பவர்களுக்கு - அவர்களிடம் (-இப்ராஹீம் இன்னும் அவரை பின்பற்றியவர்களிடம்) திட்டவட்டமாக அழகிய முன்மாதிரி இருக்கிறது. இன்னும், யார் (நபிமார்களை பின்பற்றுவதை விட்டும்) விலகுவாரோ (அத்தகையவர்களை விட்டும்) நிச்சயமாக அல்லாஹ் முற்றிலும் தேவையற்றவன், நிறைவானவன், மகா புகழுக்குரியவன் ஆவான்."},{"id":7,"translation":"உங்களுக்கு மத்தியிலும் அவர்களில் (-இணைவைப்பவர்களில்) நீங்கள் பகைத்துக் கொண்டவர்களுக்கு மத்தியிலும் அல்லாஹ் அன்பை ஏற்படுத்தலாம் (அவர்களுக்கு நேர்வழி காட்டுவதன் மூலம்). அல்லாஹ் பேராற்றலுடையவன் ஆவான். இன்னும், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":8,"translation":"எவர்கள் உங்களுடன் மார்க்கத்தில் போர் செய்யவில்லையோ, இன்னும், உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றவில்லையோ அவர்களை விட்டும் (அதாவது,) அவர்களுக்கு நல்லது செய்வதை விட்டும், அவர்களுடன் நீங்கள் நீதமாக நடப்பதை விட்டும் அல்லாஹ் உங்களை தடுக்க மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் நீதவான்கள் மீது அன்பு வைக்கிறான்."},{"id":9,"translation":"நிச்சயமாக அல்லாஹ் உங்களை தடுப்பதெல்லாம் எவர்கள் மார்க்கத்தில் உங்களிடம் போர் செய்தார்களோ, உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றினார்களோ, உங்களை வெளியேற்றுவதற்கு (உங்கள் எதிரிகளுக்கு) உதவினார்களோ அவர்களை விட்டும்தான். அதாவது, அவர்களை நீங்கள் நேசிப்பதை விட்டும்தான் (அவர்களுக்கு துணைபோவதை விட்டும்தான் அல்லாஹ் உங்களை தடுக்கிறான்). அவர்களை யார் நேசிக்கிறார்களோ அவர்கள்தான் அநியாயக்காரர்கள் ஆவார்கள்."},{"id":10,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களிடம் முஃமினான (–நம்பிக்கை கொண்ட) பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தால் அவர்களை சோதியுங்கள்! அல்லாஹ் அவர்களின் ஈமானை (-இறைநம்பிக்கையை) மிக அறிந்தவன் ஆவான். நீங்கள் அவர்களை நம்பிக்கை கொண்ட முஃமினான பெண்களாக அறிந்தால் அவர்களை (-அந்த பெண்களை) நிராகரிப்பாளர்களிடம் திரும்ப அனுப்பாதீர்கள். அவர்கள் (-அப்பெண்கள்) அவர்களுக்கு (-நிராகரிப்பாளர்களுக்கு) ஆகுமானவர்கள் அல்ல. அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) அவர்களுக்கு (-அப்பெண்களுக்கு) ஆகுமாக மாட்டார்கள். அவர்கள் (-நிராகரிப்பாளர்கள்) செலவு செய்ததை அவர்களுக்கு கொடுத்துவிடுங்கள்! அவர்களின் (-அப்பெண்களின்) மஹ்ர்களை நீங்கள் அவர்களுக்கு கொடுத்தால் நீங்கள் அவர்களை மணமுடிப்பது உங்கள் மீது அறவே குற்றம் இல்லை. (உங்கள் முந்திய மனைவிகளில்) நிராகரிக்கின்ற பெண்களின் திருமண உறவை நீங்கள் (உங்கள் உரிமையில்) தடுத்து வைக்காதீர்கள். நீங்கள் (அப்பெண்களுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (அவர்களிடம் - அப்பெண்களின் பொறுப்பாளர்களிடம்) கேளுங்கள்! அவர்கள் (-அந்த நிராகரிப்பாளர்கள் இஸ்லாமை ஏற்று ஹிஜ்ரத் சென்றுவிட்ட தங்கள் மனைவிகளுக்கு மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததை (உங்களிடம்) கேட்கட்டும். (நீங்கள் அதை கொடுத்து விடுங்கள்!) இது அல்லாஹ்வின் சட்டமாகும். (அல்லாஹ்) உங்களுக்கு மத்தியில் (தனது நீதமான சட்டங்களைக் கொண்டு) தீர்ப்பளிக்கிறான். அல்லாஹ் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":11,"translation":"உங்கள் மனைவிமார்களில் யாராவது (மதம் மாறி) நிராகரிப்பாளர்களிடம் தப்பிச் சென்றுவிட்டால், (அந்த நிராகரிப்பாளர்களை) நீங்கள் (போரில்) தண்டித்தால் (-அவர்கள் மீது நீங்கள் வெற்றி பெற்றால்) எவர்களுடைய மனைவிமார்கள் சென்றுவிட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் (தங்கள் மனைவிமார்களின் மஹ்ர் விஷயத்தில்) செலவு செய்ததைப் போன்று (கனீமத்தில் இருந்து) கொடுத்து விடுங்கள்! நீங்கள் எந்த அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்!"},{"id":12,"translation":"நபியே! நம்பிக்கைக் கொண்ட (முஃமினான) பெண்கள், “அவர்கள் அல்லாஹ்விற்கு எதையும் இணைவைக்க மாட்டார்கள்; திருட மாட்டார்கள்: விபச்சாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளை கொலை செய்ய மாட்டார்கள்; தங்கள் கைகள், இன்னும் தங்கள் கால்களுக்கு முன்னர் தாங்கள் இட்டுக்கட்டுகின்ற ஒரு பொய்யை கொண்டுவர மாட்டார்கள்; (-அதாவது தங்கள் கணவனுக்கு பிறக்காத குழந்தையை தங்கள் கணவனின் குழந்தையாகக் கூறமாட்டார்கள்;) நல்ல காரியங்களில் உமக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள்” என்று உம்மிடம் அவர்கள் சத்திய வாக்குப் பிரமாணம் செய்பவர்களாக உம்மிடம் வந்தால் நீங்கள் அவர்களிடம் சத்திய வாக்குப் பிரமாணம் வாங்குவீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":13,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ் கோபித்த மக்களை நீங்கள் நேசி(த்து உங்கள் நண்பர்களாக ஆ)க்காதீர்கள். அவர்கள் மறுமை விஷயத்தில் திட்டமாக நம்பிக்கை இழந்தார்கள், புதைக்குழிகளில் சென்ற நிராகரிப்பாளர்கள் (அல்லாஹ்வின் அருளில் இருந்து) நம்பிக்கை இழந்ததைப் போல்."}]},{"id":61,"verses":[{"id":1,"translation":"நம்பிக்கையாளர்களே! எனது எதிரிகளையும் உங்கள் எதிரிகளையும் அவர்களிடம் அன்பை வெளிப்படுத்துகின்ற (உங்கள்) உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், நீங்கள் எனது பாதையில் ஜிஹாது செய்வதற்காகவும் என் பொருத்தத்தை தேடியும் வெளியேறி இருந்தால் (அவர்களை நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள்!). அவர்களோ உங்களிடம் வந்த சத்தியத்தை திட்டமாக நிராகரித்தனர். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை நீங்கள் நம்பிக்கை கொண்டதனால் தூதரையும் உங்களையும் (உங்கள் இல்லங்களிலிருந்து) அவர்கள் வெளியேற்றுகிறார்கள். அவர்களிடம் இரகசியமாக அன்பை காட்டுகிறீர்களா? நீங்கள் மறைப்பதையும் நீங்கள் பகிரங்கப்படுத்துவதையும் நான் நன்கறிவேன். உங்களில் யார் அதைச் செய்வாரோ (-அல்லாஹ்வின் எதிரிகளை தனது நண்பர்களாக எடுத்துக் கொள்வாரோ) திட்டமாக அவர் நேரான பாதையை விட்டு வழி கெட்டுவிட்டார்."},{"id":2,"translation":"நம்பிக்கையாளர்களே! நீங்கள் செய்யாதவற்றை (செய்ததாக) ஏன் கூறுகிறீர்கள்?"},{"id":3,"translation":"நீங்கள் செய்யாதவற்றை நீங்கள் (செய்ததாகக்) கூறுவது அல்லாஹ்விடம் பெரும் கோபத்திற்குரியதாக இருக்கிறது."},{"id":4,"translation":"நிச்சயமாக அல்லாஹ், அவனுடைய பாதையில் வரிசையாக நின்று போர் புரிபவர்களை விரும்புகிறான். அவர்களோ, (கற்கள் ஒன்றோடு ஒன்று மிக நெருக்கமாக வைத்து கட்டப்பட்ட) உறுதியான கட்டிடத்தைப் போல் இருக்கிறார்கள்."},{"id":5,"translation":"இன்னும், மூஸா தனது மக்களுக்கு கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் மக்களே! எனக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்? நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதராவேன் என்பதை திட்டமாக நீங்கள் அறிவீர்கள்.” அவர்கள் (நேர்வழியில் இருந்து) விலகி வழிகேட்டில் சென்றபோது அல்லாஹ்வும் அவர்களின் உள்ளங்களை (நேர்வழியில் இருந்து) திருப்பி வழிகேட்டில் விட்டுவிட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்தமாட்டான்."},{"id":6,"translation":"இன்னும், மர்யமின் மகன் ஈஸா கூறியதை நினைவு கூர்வீராக! “இஸ்ரவேலர்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் ஆவேன். எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை நான் உண்மைப்படுத்துகிறேன். எனக்குப் பின் வருகின்ற ஒரு தூதரை நான் (உங்களுக்கு) நற்செய்தி கூறுகிறேன். அவரது பெயர் அஹ்மத் ஆகும்.” ஆக, அவர் (-ஈஸா) தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களிடம் வந்தபோது, “இ(வர் கொண்டு வந்த இந்த அத்தாட்சிகளாவ)து தெளிவான சூனியமாகும்” என்று அவர்கள் (-இஸ்ரவேலர்கள்) கூறினார்கள்."},{"id":7,"translation":"அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டுபவரை விட பெரிய அநியாயக்காரர் யார்? அவரோ அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப்படுகிறார். (ஆனால், அதை அவர் ஏற்காமல் அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்.) அநியாயக்கார மக்களை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":8,"translation":"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தங்களது வாய்களினால் (ஊதி) அணைத்துவிட நாடுகிறார்கள். அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துவான், நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!"},{"id":9,"translation":"அவன்தான் தனது தூதரை நேர்வழியைக் கொண்டும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பினான், எல்லா மார்க்கங்களை விட அ(ந்த சத்திய மார்க்கத்)தை மேலோங்க வைப்பதற்காக. இணைவைப்பவர்கள் வெறுத்தாலும் சரியே (அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்கியே தீரும்)!"},{"id":10,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு ஒரு வியாபாரத்தை நான் அறிவிக்கட்டுமா? துன்புறுத்தும் தண்டனையை விட்டும் அது உங்களை பாதுகாக்கும்."},{"id":11,"translation":"(அந்த வியாபாரமாவது:) நீங்கள் அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்ள வேண்டும். இன்னும், அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களாலும் உங்கள் உயிர்களாலும் ஜிஹாது செய்ய வேண்டும்! அதுதான் உங்களுக்கு சிறந்தது நீங்கள் (அதன் நன்மைகளை) அறிகிறவர்களாக இருந்தால்."},{"id":12,"translation":"(நீங்கள் அதை செய்தால்) அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; இன்னும், உங்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். இன்னும் “அத்ன்” சொர்க்கங்களில் உயர்ந்த தங்குமிடங்களில் உங்களை பிரவேசிக்க வைப்பான். இதுதான் மகத்தான வெற்றியாகும்."},{"id":13,"translation":"(இறை அருள்களில்) வேறு ஒன்றும் (உங்களுக்கு) உண்டு. அதை நீங்கள் விரும்புவீர்கள். (அதுதான்) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து (உங்களுக்கு) உதவியும் வெகு விரைவில் கிடைக்க இருக்கும் வெற்றியும் ஆகும். (நபியே!) நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!"},{"id":14,"translation":"நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் உதவியாளர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள், மர்யமின் மகன் ஈஸா, (தனது) உற்ற தோழர்களை நோக்கி அல்லாஹ்விற்காக எனது உதவியாளர்கள் யார் என்று கூறியபோது, அந்த உற்ற தோழர்கள் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்விற்(காக உமக்)கு உதவக் கூடியவர்கள் ஆவோம்.” ஆக, இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவு (ஈஸா நபியை) நம்பிக்கை கொண்டது. இன்னொரு பிரிவு (அவர்களை) நிராகரித்தது. ஆக, நம்பிக்கை கொண்டவர்களை அவர்களின் பகைவர்களுக்கு எதிராக நாம் பலப்படுத்தினோம். ஆகவே, அவர்கள் வெற்றியாளர்களாக (-மிகைத்தவர்களாக) ஆகிவிட்டார்கள்."}]},{"id":62,"verses":[{"id":1,"translation":"வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":2,"translation":"அவன்தான் உம்மிய்யீன் (-எழுதப் படிக்கக் கற்காத அரபு வமிசத்தை சேர்ந்த) மக்களில் அவர்களில் இருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர் அவனது வசனங்களை அவர்களுக்கு முன் ஓதுகிறார்; அவர்களை பரிசுத்தப்படுத்துகிறார்; அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்பிக்கிறார். இதற்கு முன்னர் நிச்சயமாக அவர்கள் தெளிவான வழிகேட்டில்தான் இருந்தனர்."},{"id":3,"translation":"இன்னும், அவர்களில் வேறு மக்களுக்காகவும் (அவன் அந்த நபியை அனுப்பினான்). அவர்கள் இவர்களுடன் (இப்போது) வந்து சேரவில்லை. (ஆனால், அவர்கள் இந்த நபித்தோழர்களுக்கு பின்னர் வருகிற அடுத்த தலைமுறையினர் ஆவார்கள்.) அவன்தான் மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":4,"translation":"இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் நாடுகிறவர்களுக்கு அதை கொடுக்கிறான். அல்லாஹ் மகத்தான அருளுடையவன் ஆவான்."},{"id":5,"translation":"தவ்ராத்தின் படி அமல் செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டு பிறகு, அதன்படி அமல் செய்யாதவர்களின் உதாரணம் கழுதையின் உதாரணத்தைப் போலாகும். அது பல நூல்களை (தன் முதுகின் மீது) சுமக்கிறது. (ஆனால் அவற்றின் மூலம் அதற்கு எந்த நன்மையும் இல்லை. அவ்வாறே தவ்ராத் இவர்களுக்கு கொடுக்கப்பட்டும் அதன்படி இவர்கள் அமல் செய்யாததால் இவர்களும் எந்த நன்மையும் அடைய மாட்டார்கள்.) அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பித்த மக்களின் உதாரணம் மிகக் கெட்டது. இன்னும், அல்லாஹ் அநியாயக்கார மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":6,"translation":"(நபியே!) கூறுவீராக! “யூதர்களே! நிச்சயமாக நீங்கள்தான் அல்லாஹ்வின் நண்பர்கள், மற்ற மக்கள் அல்ல, என்று நீங்கள் பிதற்றினால், நீங்கள் (உங்களது இந்த கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை ஆசைப்ப(ட்டு காட்)டுங்கள்!”"},{"id":7,"translation":"அவர்களின் கரங்கள் முற்படுத்தியவற்றின் காரணமாக ஒரு போதும் அவர்கள் அதை ஆசைப்பட மாட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":8,"translation":"(நபியே!) கூறுவீராக! “நிச்சயமாக நீங்கள் அதிலிருந்து விரண்டு ஓடுகின்ற அந்த மரணம் உறுதியாக அது உங்களை சந்திக்கும். பிறகு, நீங்கள் மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் அறிந்தவன் பக்கம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான்."},{"id":9,"translation":"நம்பிக்கையாளர்களே! ஜுமுஆ தினத்தன்று தொழுகைக்காக அழைக்கப்பட்டால் அல்லாஹ்வின் நினைவின் பக்கம் (வெள்ளிக் கிழமை பிரசங்கத்தை செவியுறுவதன் பக்கம்) நீங்கள் விரையுங்கள்! இன்னும், வியாபாரத்தை விட்டுவிடுங்கள்! நீங்கள் (அதன் நன்மையை) அறிகிறவர்களாக இருந்தால் அதுதான் உங்களுக்கு மிகச் சிறந்ததாகும்."},{"id":10,"translation":"ஆக, தொழுகை முடிந்துவிட்டால் பூமியில் பரவி செல்லுங்கள்! அல்லாஹ்வின் (இரண) அருளைத் தேடுங்கள்! நீங்கள் வெற்றி அடைவதற்காக நீங்கள் அல்லாஹ்வை அதிகம் (புகழ்ந்தும் அவனுக்கு அதிகம் நன்றி செலுத்தியும்) நினைவு கூருங்கள்!"},{"id":11,"translation":"இன்னும், (முஸ்லிம்களில் சிலர் இருக்கிறார்கள்) அவர்கள் ஒரு வர்த்தகத்தையோ ஒரு வேடிக்கையையோ பார்த்தால் அதன் பக்கம் அவர்கள் பிரிந்து சென்று விடுகிறார்கள், உம்மை (நீர் மிம்பரில்) நின்றவராக (இருந்து பிரசங்கம் நிகழ்த்துகின்ற நிலையிலேயே) விட்டு(விட்டு ஓடி) விடுகிறார்கள். (நபியே!) கூறுவீராக! “அல்லாஹ்விடம் உள்ளதுதான் (உலகத்தின்) வேடிக்கையை விடவும் வர்த்தகத்தை விடவும் மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்தான் உணவளிப்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.”"}]},{"id":63,"verses":[{"id":1,"translation":"வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் பேரரசனாகிய, மிக பரிசுத்தவனாகிய, மிகைத்தவனாகிய, மகா ஞானவானாகிய அல்லாஹ்வை துதித்து தொழுகின்றன."},{"id":2,"translation":"அவர்கள் தங்கள் (பொய்) சத்தியங்களை (அல்லாஹ்வின் உலக தண்டனையில் இருந்து தப்பிப்பதற்கு) கேடயமாக ஆக்கிக்கொண்டனர். ஆகவே (அதைக் கொண்டு) அல்லாஹ்வின் பாதையை விட்டு (மக்களை) தடுத்தனர். நிச்சயமாக அவர்கள் செய்துகொண்டிருந்தவை மிகக் கெட்டுவிட்டன."},{"id":3,"translation":"அதற்கு காரணம், நிச்சயமாக அவர்கள் (முதலில் வெளிப்படையாக) நம்பிக்கை கொண்டனர், (ஆனால்) பிறகு, (உள்ளுக்குள்) நிராகரித்தனர். ஆகவே, அவர்களின் உள்ளங்கள் மீது முத்திரை இடப்பட்டுவிட்டது. ஆகவே, அவர்கள் (தங்களுக்குரிய சீர்திருத்தத்தை, நன்மையை) புரிய மாட்டார்கள்."},{"id":4,"translation":"இன்னும், (நபியே!) நீர் அவர்களைப் பார்த்தால் அவர்களின் உடல்கள் (-வெளித் தோற்றங்கள்) உம்மைக் கவரும். அவர்கள் (உம்மிடம் ஏதும்) கூறினால் அவர்களின் கூற்றை நீர் செவியுறுவீர். (அவர்களின் பேச்சு அந்தளவு கவர்ச்சியாக, ஈர்ப்புடையதாக இருக்கும். அவர்களின் உள்ளங்களும் அறிவுகளும் பயனற்றவையாக இருப்பதால் அவர்களின் வெறும் உடல் தோற்றம் மட்டும்தான் பிரமிக்க வைக்கக்கூடியதாக இருக்கும். எனவே,) அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரப்பலகைகளைப் போல் இருப்பார்கள். ஒவ்வொரு சத்தத்தையும் தங்களுக்கு பாதகமாகவே எண்ணுவார்கள். அவர்கள்தான் (உங்களுக்கு மோசமான) எதிரிகள். ஆகவே, அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அல்லாஹ் அவர்களை அழிப்பான். (நேர்வழியில் இருந்து) அவர்கள் எவ்வாறு திருப்பப்படுகிறார்கள்!"},{"id":5,"translation":"(உங்கள் செயல்களுக்காக வருந்தி, திருந்தி) வாருங்கள், அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காக (அல்லாஹ்விடம் பாவ)மன்னிப்புத் தேடுவார் என்று அவர்களிடம் கூறப்பட்டால், தங்கள் தலைகளை (இங்கும் அங்கும்) வேகமாக அசைக்கிறார்கள். இன்னும், (உம்மை) புறக்கணிப்பவர்களாகவே அவர்களை நீர் காண்பீர். அவர்களோ (அல்லாஹ்வின் கட்டளைக்கு கீழ்ப்படியாமல்) பெருமையடிப்பவர்கள் ஆவார்கள்."},{"id":6,"translation":"நீர் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடினாலும், அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடவில்லை என்றாலும் (இரண்டும்) அவர்களுக்கு சமம்தான். அல்லாஹ் அவர்களை மன்னிக்கவே மாட்டான். நிச்சயமாக அல்லாஹ் (தனக்கு கீழ்ப்படிய மறுக்கிற) பாவிகளான மக்களை நேர்வழி செலுத்த மாட்டான்."},{"id":7,"translation":"“அல்லாஹ்வின் தூதரிடம் இருப்பவர்கள் மீது தர்மம் செய்யாதீர்கள், இறுதியாக அவர்கள் (நபியை விட்டும்) பிரிந்து விடுவார்கள்” என்று இவர்கள் கூறுகிறார்கள். வானங்கள் இன்னும் பூமியின் பொக்கிஷங்கள் எல்லாம் அல்லாஹ்விற்கே உரியன. என்றாலும் நயவஞ்சகர்கள் புரிய மாட்டார்கள்."},{"id":8,"translation":"“நாம் மதீனாவிற்கு திரும்பினால் கண்ணியவான்கள் (ஆகிய நாம்) தாழ்ந்தவர்(களாகிய முஹாஜிர்)களை அதிலிருந்து நிச்சயமாக வெளியேற்ற வேண்டும்” என்று அவர்கள் கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் நம்பிக்கையாளர்களுக்கும்தான் கண்ணியம் உரியது. என்றாலும், நயவஞ்சகர்கள் (இதை) அறியமாட்டார்கள்."},{"id":9,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்பி (உலகக் காரியங்களில் ஈடுபடுத்தி) விடவேண்டாம். ஆக, அத்தகையவர்கள்தான் நஷ்டவாளிகள்."},{"id":10,"translation":"இன்னும், உங்களில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன்னர் நாம் உங்களுக்கு கொடுத்தவற்றில் இருந்து (நல்ல வழிகளில்) தர்மம் செய்யுங்கள். ஆக, (ஒருவருக்கு மரணம் வந்துவிட்டால்) அவர் கூறுவார்: “என் இறைவா! நீ என்னை (-என் மரணத்தை) கொஞ்சம் சமீபமான தவணை வரை (இவ்வுலகில்) பிற்படுத்தி வைக்கமாட்டாயா! (இன்னும் சிறிது காலம் வாழவைக்க மாட்டாயா!). நான் தர்மம் செய்வேனே, நல்லவர்களில் ஆகிவிடுவேனே.”"},{"id":11,"translation":"ஓர் உயிரை (வாங்குவதை) அல்லாஹ் தாமதப்படுத்தவே மாட்டான், அதற்குரிய தவணை வந்துவிட்டால். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்."}]},{"id":64,"verses":[{"id":1,"translation":"நயவஞ்சகர்கள் உம்மிடம் வந்தால், “நிச்சயமாக நீர் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் சாட்சி பகருகிறோம்” என்று கூறுவார்கள். நிச்சயமாக நீர் அவனது தூதர்தான் என்று அல்லாஹ் நன்கறிவான். நிச்சயமாக நயவஞ்சகர்கள் பொய்யர்கள்தான் என்று அல்லாஹ் சாட்சி பகருகிறான்."},{"id":2,"translation":"அவன்தான் உங்களைப் படைத்தான். ஆக, உங்களில் நிராகரிப்பாளரும் இருக்கிறார். உங்களில் நம்பிக்கையாளரும் இருக்கிறார். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":3,"translation":"வானங்களையும் பூமியையும் உண்மையான காரணத்திற்காக அவன் படைத்தான். இன்னும், அவன் உங்களை உருவமைத்தான். ஆக, உங்கள் உருவங்களை அழகாக்கினான். அவன் பக்கமே (உங்கள்) மீட்சி இருக்கிறது."},{"id":4,"translation":"வானங்கள், இன்னும் பூமியில் உள்ளவற்றை அவன் நன்கறிவான். இன்னும், நீங்கள் மறைப்பதையும் நீங்கள் வெளிப்படுத்துவதையும் அவன் நன்கறிவான். (மனிதர்களின்) நெஞ்சங்களில் உள்ளவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":5,"translation":"இதற்கு முன்னர் நிராகரித்தவர்களின் செய்தி உங்களுக்கு வரவில்லையா? ஆக, அவர்களோ தங்களது (பாவமான) காரியத்தின் தீய முடிவை (இவ்வுலகில்) சுவைத்தனர். இன்னும், (மறுமையில்) துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு."},{"id":6,"translation":"அதற்கு காரணம், நிச்சயமாக அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளுடன் வந்து கொண்டிருந்தனர். ஆக, “மனிதர்களா எங்களுக்கு நேர்வழி காட்டுவார்கள்?” என்று அவர்கள் (ஏளனமாக) கூறினார்கள். ஆகவே, அவர்கள் நிராகரித்தனர். இன்னும் (நேர்வழியை விட்டும்) விலகினார்கள். அல்லாஹ்வும் அவர்களை விட்டு தேவையற்றவனாக இருக்கிறான். அல்லாஹ் முற்றிலும் நிறைவானவன் (படைப்புகளிடம் எவ்வித தேவையும் அற்றவன்), மகா புகழுக்குரியவன் ஆவான்."},{"id":7,"translation":"“அவர்கள் (மீண்டும் உயிர்கொடுத்து) அறவே எழுப்பப்பட மாட்டார்கள்” என்று நிராகரித்தவர்கள் பிதற்றுகிறார்கள். (நபியே!) நீர் கூறுவீராக! “ஏன் இல்லை! என் இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள். பிறகு, நீங்கள் செய்தவற்றை நிச்சயமாக நீங்கள் அறிவித்துக் கொடுக்கப்படுவீர்கள். அது அல்லாஹ்விற்கு மிக எளிதானதே!”"},{"id":8,"translation":"ஆகவே, அல்லாஹ்வையும் அவனது தூதரையும் (குர்ஆன் எனும்) நாம் இறக்கிய ஒளியையும் நம்பிக்கை கொள்ளுங்கள்! நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":9,"translation":"ஒன்று சேர்க்கப்படும் நாளுக்காக அவன் உங்களை ஒன்று சேர்க்கும் நாளை நினைவு கூருங்கள்! அதுதான் (சிலைகளை வணங்கிய மக்களும் இஸ்லாமை நிராகரித்த மக்களும்) ஏமாறுகின்ற நாளாகும். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நன்மையை செய்வார்களோ அவன் அவர்களை விட்டும் அவர்களின் பாவங்களை போக்கிவிடுவான். இன்னும், அவர்களை சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் நிரந்தரமாக எப்போதும் (தங்கி) இருப்பார்கள். இதுதான் மகத்தான (பாக்கியமிக்க) வெற்றியாகும்."},{"id":10,"translation":"எவர்கள் நிராகரித்தார்களோ, இன்னும், நமது வசனங்களை பொய்ப்பித்தார்களோ அவர்கள்தான் நரக வாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாகத் தங்கி இருப்பார்கள். மீளுமிடங்களில் அது மிகக் கெட்டதாகும்."},{"id":11,"translation":"எந்த சோதனையும் (யாருக்கும்) ஏற்படாது, அல்லாஹ்வின் அனுமதி இல்லாமல். யார் அல்லாஹ்வை நம்பிக்கை கொள்வாரோ அவரின் உள்ளத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிந்தவன் ஆவான்."},{"id":12,"translation":"அல்லாஹ்விற்கு கீழ்ப்படியுங்கள்! இன்னும், தூதருக்கு கீழ்ப்படியுங்கள்! ஆக, நீங்கள் புறக்கணித்து விலகினால் (நமது தூதருக்கு நஷ்டமில்லை. ஏனெனில்,) நமது தூதர் மீதுள்ள கடமை எல்லாம் (உங்களுக்கு அல்லாஹ்வின் கட்டளையை) தெளிவாக எடுத்துரைப்பதுதான்."},{"id":13,"translation":"அல்லாஹ் - அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. (ஈமான் கொண்ட) நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்."},{"id":14,"translation":"நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக, உங்கள் மனைவிகளிலும் உங்கள் பிள்ளைகளிலும் உங்களுக்கு எதிரிகள் இருக்கிறார்கள். ஆகவே, அவர்களிடம் நீங்கள் கவனமாக (உஷாராக, எச்சரிக்கையாக) இருங்கள். இன்னும், நீங்கள் பிழை பொறுத்தால், (அவர்களின் தவறுகளை) புறக்கணித்தால், (அவர்களை) மன்னித்தால் (அது மிகச் சிறந்தது. ஏனெனில்) நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":15,"translation":"உங்கள் செல்வங்கள் இன்னும் உங்கள் பிள்ளைகள் எல்லாம் (உங்களுக்கு) சோதனைதான். அல்லாஹ், - அவனிடம்தான் (உங்களுக்கு சொர்க்கம் எனும்) மகத்தான வெகுமதி இருக்கிறது."},{"id":16,"translation":"ஆக, உங்களுக்கு முடிந்தளவு அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (அவனுக்கும் தூதருக்கும்) செவி தாழ்த்துங்கள்! கீழ்ப்படியுங்கள்! உங்கள் ஆன்மாக்களின் நன்மைக்காக செல்வத்தை தர்மம் செய்யுங்கள்! எவர்கள் தமது ஆன்மாக்களின் கஞ்சத்தனத்தில் இருந்து பாதுகாக்கப்படுவார்களோ அவர்கள்தான் வெற்றியாளர்கள் ஆவார்கள்."},{"id":17,"translation":"நீங்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடனாக கடன் கொடுத்தால் (-ஏழைகளுக்கு தர்மம் செய்தால்) அவன் உங்களுக்கு அதை பன்மடங்காகப் பெருக்குவான். இன்னும், உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மிகவும் நன்றி பாராட்டுபவன், மகா சகிப்பாளன் ஆவான்."},{"id":18,"translation":"(அவன்) மறைவானவற்றையும் வெளிப்படையானவற்றையும் நன்கறிந்தவன், மிகைத்தவன், மகா ஞானவான் ஆவான்."}]},{"id":65,"verses":[{"id":1,"translation":"வானங்களில் உள்ளவர்களும் பூமியில் உள்ளவர்களும் அல்லாஹ்வை துதித்து தொழுகிறார்கள். அவனுக்கே ஆட்சிகள் அனைத்தும் உரியன. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியன. அவன்தான் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவான்."},{"id":2,"translation":"ஆக, அவர்கள் (-அப்பெண்கள் இத்தாவை முடித்து, இத்தாவில் இருந்து வெளியேற வேண்டிய) தங்கள் தவணையை அடைய நெருங்கிவிட்டால் அவர்களை (-அப்பெண்களை) நல்ல முறையில் (உங்கள் திருமணத்திலேயே) தடுத்து வையுங்கள். அல்லது, நல்ல முறையில் அவர்களை நீங்கள் பிரிந்து விடுங்கள். (தடுத்து வைக்கும் போதும் அல்லது பிரியும் போதும்) உங்களில் நீதமான இருவரை சாட்சியாக்குங்கள்! அல்லாஹ்விற்காக சாட்சியத்தை நிலை நிறுத்துங்கள்! இவை (-இந்த சட்டங்கள்), எவர் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பாரோ அவர் இவற்றின் மூலம் உபதேசிக்கப்படுகிறார். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அல்லாஹ் ஒரு (நல்ல) தீர்வை ஏற்படுத்துவான்."},{"id":3,"translation":"இன்னும், அவர் நினைத்துப் பார்க்காத விதத்திலிருந்து அவருக்கு உணவளிப்பான் (வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவான்). எவர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பாரோ அவருக்கு அவனே போதுமானவன் ஆவான். நிச்சயமாக அல்லாஹ் தனது காரியத்தை நிறைவேற்றுவான். (யாரும் அவனை தடுக்க முடியாது, எதுவும் அவனை விட்டு தப்ப முடியாது.) திட்டமாக அல்லாஹ் ஒவ்வொன்றுக்கும் ஓர் அளவை ஏற்படுத்தி இருக்கிறான்."},{"id":4,"translation":"உங்கள் பெண்களில் எவர்கள் மாதவிடாயிலிருந்து நிராசை அடைந்து விட்டனரோ (அவர்களின் இத்தா விஷயத்தில்) நீங்கள் சந்தேகித்தால் அவர்களின் இத்தா மூன்று மாதங்களாகும். இன்னும் (இது வரை) மாதவிடாய் வராத பெண்களுக்கும் (இத்தா மூன்று மாதங்களாகும்). கர்ப்பமுடைய பெண்கள் அவர்களின் (இத்தா) தவணையாவது அவர்கள் தங்கள் கர்ப்பத்தை பெற்றெடுப்பதாகும். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவருக்கு அவரின் காரியத்தில் இலகுவை அவன் ஏற்படுத்துவான்."},{"id":5,"translation":"இது அல்லாஹ்வின் கட்டளையாகும். அவன் இதை உங்களுக்கு இறக்கி இருக்கிறான். எவர் அல்லாஹ்வை அஞ்சுவாரோ அவரை விட்டும் அவரின் பாவங்களை அவன் போக்குவான். இன்னும், அவருக்கு வெகுமதியை பெரிதாக்குவான்."},{"id":6,"translation":"உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் தங்கும் இடத்தில் அவர்களை தங்க வையுங்கள்! (தங்குமிடத்தில்) அவர்கள் மீது நீங்கள் நெருக்கடியை ஏற்படுத்துவதற்காக (-அவர்களை வெளியேற்றுவதற்காக) அவர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள். அவர்கள் கர்ப்பம் உள்ள பெண்களாக இருந்தால் அவர்கள் தங்கள் கர்ப்பத்தை ஈன்றெடுக்கின்ற வரை அவர்களுக்கு செலவு செய்யுங்கள்! அவர்கள் உங்களுக்காக (உங்கள் பிள்ளைகளுக்கு) பாலூட்டினால் அவர்களின் ஊதியங்களை அவர்களுக்குக் கொடுங்கள்! உங்களுக்கு மத்தியில் நல்லதை ஒருவருக்கொருவர் ஏற்றுக் கொள்ளுங்கள்! (ஒருவர் கூறுகின்ற நல்லதை மற்றொருவர் ஏற்றுக்கொள்ளட்டும்.) நீங்கள் (கணவன், மனைவி இருவரும்) சிரமமாகக் கருதினால் அவருக்காக (கணவருக்காக அவரின் குழந்தைக்கு) வேறு ஒரு பெண் பாலூட்டுவாள்."},{"id":7,"translation":"வசதியுடையவர் தனது வசதியிலிருந்து செலவு செய்யட்டும். எவர் ஒருவர் அவர் மீது அவருடைய வாழ்வாதாரம் நெருக்கடியாக இருக்கிறதோ அவர் தனக்கு அல்லாஹ் கொடுத்ததில் இருந்து செலவு செய்யட்டும். அல்லாஹ் ஓர் ஆன்மாவிற்கு சிரமம் கொடுக்க மாட்டான், அவன் அதற்கு கொடுத்ததற்கே தவிர (அவன் அதற்கு கொடுத்த சக்திக்கு உட்பட்டே தவிர). சிரமத்திற்கு பின்னர் (-பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்) அல்லாஹ் இலகுவை (செல்வ விசாலத்தை) ஏற்படுத்துவான்."},{"id":8,"translation":"எத்தனையோ ஊர்கள், அவற்றின் இறைவனின் கட்டளையையும் அவற்றின் தூதரின் கட்டளையையும் மீறி (பாவம் செய்த)ன. நாம் அவற்றை கடுமையான விசாரணையால் விசாரித்தோம். இன்னும், அவற்றை மோசமான தண்டனையால் தண்டித்தோம்."},{"id":9,"translation":"ஆக, (அந்த ஊர்கள்) தமது காரியத்தின் கெட்ட முடிவை சுவைத்தன. அவற்றுடைய காரியத்தின் (-அந்த ஊரார்களின் செயல்களின்) முடிவு மிக நஷ்டமாகவே ஆகிவிட்டது."},{"id":10,"translation":"அல்லாஹ் அவர்களுக்கு (-அவ்வூர்வாசிகளுக்கு) கடுமையான தண்டனையை தயார் செய்துள்ளான். ஆகவே, நம்பிக்கை கொண்ட நிறைவான அறிவுடையவர்களே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு திட்டமாக நல்லுபதேசத்தை இறக்கினான்."},{"id":11,"translation":"(இன்னும்) ஒரு தூதரை அனுப்பி இருக்கிறான். அவர் உங்களுக்கு அல்லாஹ்வின் தெளிவான வசனங்களை ஓதிக் காண்பிக்கிறார். ஏனெனில், நம்பிக்கை கொண்டு, நன்மைகள் செய்தவர்களை இருள்களில் இருந்து ஒளியின் பக்கம் அவன் வெளியேற்றுவதற்காக (தூதரை அனுப்பினான்). எவர்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, நன்மையை செய்வார்களோ அவர்களை அவன் சொர்க்கங்களில் பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அவர்கள் அவற்றில் எப்போதும் நிரந்தரமாகத் தங்குவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு (அங்கு) வாழ்வாதாரத்தை (உணவு, குடிபானம், இன்னும் எல்லாத் தேவைகளையும்) மிக அழகாக (விசாலமாக, குறைவின்றி, முடிவில்லாமல்) ஆக்கி வைத்திருக்கிறான்."},{"id":12,"translation":"அல்லாஹ்தான் ஏழு வானங்களை படைத்தான். இன்னும், பூமியில் அவற்றைப் போன்று (-ஏழு பூமிகளை) படைத்தான். அவற்றுக்கு மத்தியில் (அவனுடைய) கட்டளைகள் இறங்குகின்றன. “நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன், நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிவு ஞானத்தால் சூழ்ந்துள்ளான்” என்பதை நீங்கள் அறிவதற்காக (இவற்றை அவன் உங்களுக்கு விவரிக்கிறான்)."}]},{"id":66,"verses":[{"id":1,"translation":"நபியே! (நபியின் சமுதாய மக்களே!) நீங்கள் பெண்களை விவாகரத்து செய்தால் அவர்களை அவர்கள் இத்தா இருக்க வேண்டியதை கணக்கிட்டு (-உடலுறவு கொள்ளாத சுத்தமான காலத்தில்) விவாகரத்து செய்யுங்கள். இன்னும், இத்தாவை (விவாகரத்து செய்யப்பட்ட சுத்த காலத்திற்குப் பின்னர் மூன்று ஹைழ்கள் - சுத்தமில்லாத காலங்கள் – வரும் வரை) சரியாகக் கணக்கிடுங்கள். உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். (விவாகரத்து செய்த பின்னர்) அவர்களை அவர்களின் இல்லங்களில் இருந்து வெளியேற்றாதீர்கள். அவர்களும் (தாமாக) வெளியேற வேண்டாம், (விபச்சாரம் என்ற) தெளிவான தீயசெயலை அவர்கள் செய்தாலே தவிர. (அப்போது நீங்கள் அவர்களை வெளியேற்றலாம்.) இவை, அல்லாஹ்வின் சட்டங்களாகும். எவர் அல்லாஹ்வின் சட்டங்களை மீறுவாரோ திட்டமாக அவர் தனக்குத்தானே அநீதி இழைத்துக் கொண்டார். இதற்குப் பின்னர் அல்லாஹ் ஒரு காரியத்தை ஏற்படுத்தலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (விவாகரத்திற்குப் பின்னர் இருவருக்கும் இடையில் மீண்டும் அன்பு ஏற்படலாம். இருவரும் மீண்டும் இணைய விரும்பலாம். ஆகவே, ஒரு முறை மட்டும் தலாக் கொடுங்கள்! அப்போது இத்தா முடிந்து விட்டாலும் அவர்கள் மீண்டும் திருமண ஒப்பந்தம் செய்து மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.)"},{"id":2,"translation":"(இது போன்ற) உங்கள் சத்தியங்களை முறிப்பதை(யும் அதற்கு பரிகாரம் செய்வதையும்) அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியுள்ளான். அல்லாஹ்தான் உங்கள் எஜமானன். அவன்தான் நன்கறிந்தவன், மகா ஞானவான் ஆவான்."},{"id":3,"translation":"இன்னும், நபி தனது மனைவிமார்களில் சிலரிடம் ஒரு பேச்சை இரகசியமாக பேசியபோது, ஆக, அவள் அதை (மற்றொரு மனைவியிடம்) அறிவித்தாள். ஆனால், அல்லாஹ் அவருக்கு (-தனது நபிக்கு) அதை வெளிப்படுத்தியபோது அதில் (-அந்த பேச்சில்) சிலவற்றை அவர் (அவளுக்கு) அறிவித்தார்; சிலவற்றை (அறிவிக்காமல்) புறக்கணித்துவிட்டார். ஆக, அவர் அவளுக்கு அதை (-அந்த சிலவற்றை) அறிவித்தபோது, “யார் உமக்கு இதை அறிவித்தார்” என்று அவள் கூறினாள். “நன்கறிபவன், ஆழ்ந்தறிபவன் (ஆகிய அல்லாஹ்) எனக்கு அறிவித்தான்” என்று அவர் கூறினார்."},{"id":4,"translation":"நீங்கள் இருவரும் (பாவமன்னிப்புக் கேட்டு திருந்தி,) அல்லாஹ்வின் பக்கம் திரும்பிவிட்டால் அதுதான் நல்லது. ஏனெனில், திட்டமாக உங்கள் இருவரின் உள்ளங்களும் (நபிக்குப் பிடிக்காத ஒன்றின் பக்கம்) சாய்ந்து விட்டன. நீங்கள் இருவரும் அவருக்கு எதிராக (உங்களுக்குள் ஒருவர் மற்றவருக்கு) உதவினால் (அதனால் நபிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.) ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ்தான் அவருக்குப் பாதுகாவலன் (உதவியாளன் - நண்பன்) ஆவான். இன்னும், ஜிப்ரீலும் நல்ல முஃமின்களும் வானவர்களும் இதற்குப் பின்னர் (-அல்லாஹ்வின் உதவிக்குப் பின்னர் அவருக்கு) உதவியாளர்கள் ஆவார்கள்."},{"id":5,"translation":"(நபியின் மனைவிமார்களே!) அவர் உங்களை விவாகரத்து (-தலாக்) செய்துவிட்டால் உங்களை விட சிறந்தவர்களான மனைவிகளை - (அல்லாஹ்விற்கும் நபிக்கும்) முற்றிலும் பணியக்கூடிய, (அல்லாஹ்வையும் நபியையும்) நம்பிக்கை கொள்ளக்கூடிய, கீழ்ப்படியக்கூடிய, அல்லாஹ்வின் பக்கம் முற்றிலும் திரும்பக்கூடிய, வணக்க வழிபாடு செய்யக்கூடிய, நோன்பு நோற்கக்கூடிய பெண்களை அவருக்கு அவன் (உங்களுக்கு) பகரமாக வழங்குவான். அவர்களில் கன்னி கழிந்தவர்களும் இருப்பார்கள், கன்னிகளும் இருப்பார்கள்."},{"id":6,"translation":"நம்பிக்கையாளர்களே! உங்களையும் உங்கள் குடும்பத்தார்களையும் நரகத்தை விட்டு பாதுகாத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மக்களும் கற்களும் ஆவார்கள். கடுமையானவர்களான மிகவும் வலிமைமிக்கவர்களான வானவர்கள் அவற்றின் மீது இருப்பார்கள். அல்லாஹ்விற்கு அவன் அவர்களுக்கு ஏவியதில் அவர்கள் மாறுசெய்ய மாட்டார்கள். அவர்கள் எதை ஏவப்பட்டார்களோ அதையே செய்வார்கள்."},{"id":7,"translation":"நிராகரித்தவர்களே! இன்று நீங்கள் (உங்கள் பாவங்களுக்கு) காரணம் கூறாதீர்கள். (வருத்தம் தெரிவிக்காதீர்கள்!) நீங்கள் கூலி கொடுக்கப்படுவதெல்லாம் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்குத்தான்."},{"id":8,"translation":"நம்பிக்கையாளர்களே! உண்மையாக பாவமன்னிப்புக் கேட்டு (திருந்தி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்! உங்கள் இறைவன் உங்களை விட்டும் உங்கள் பாவங்களை போக்கிவிடுவான். சொர்க்கங்களில் உங்களை பிரவேசிக்க வைப்பான். அவற்றின் கீழ் நதிகள் ஓடும். அந்நாளில் அல்லாஹ் நபியையும் அவருடன் நம்பிக்கை கொண்டவர்களையும் கேவலப்படுத்த மாட்டான். (கைவிட்டு விடமாட்டன். மாறாக, அவர்களை உயர்த்துவான்.) அவர்களின் ஒளி அவர்களுக்கு முன்னும் அவர்களின் வலப்பக்கங்களிலும் விரைந்து வரும். “எங்கள் இறைவா! எங்கள் ஒளியை (சொர்க்கம் வரை) எங்களுக்கு முழுமையாக்கு! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருள்கள் மீதும் பேராற்றலுடையவன் ஆவாய்” என்று அவர்கள் (பிரார்த்தித்து) கூறுவார்கள்."},{"id":9,"translation":"நபியே! நிராகரிப்பாளர்களிடமும், நயவஞ்சகர்களிடமும் ஜிஹாது செய்வீராக! அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வீராக! அவர்களின் தங்குமிடம் நரகம்தான். மீளுமிடங்களில் (நரகம்) மிகக் கெட்டதாகும்."},{"id":10,"translation":"நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் நிராகரித்தவர்களுக்கு உதாரணமாக அல்லாஹ் விவரிக்கிறான். அவர்கள் இருவரும் நமது அடியார்களில் இரு நல்ல அடியார்களுக்கு கீழ் இருந்தனர். அவ்விருவரும் அவ்விருவருக்கும் (-இரு நபிமார்களுக்கும் மார்க்கத்தில்) துரோகம் செய்தனர். ஆகவே, அவ்விருவரும் அவ்விருவரை விட்டும் அல்லாஹ்விடம் (உள்ள தண்டனையில் இருந்து) எதையும் தடுக்க (முடிய)வில்லை. இன்னும், (அவ்விரு பெண்களுக்கும்) கூறப்பட்டது: “(நரகத்தில்) நுழைபவர்களுடன் நீங்கள் இருவரும் நரகத்தில் நுழையுங்கள்!”"},{"id":11,"translation":"இன்னும், நம்பிக்கையாளர்களுக்கு ஃபிர்அவ்னின் மனைவியை அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான். அவள் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக! “என் இறைவா! உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை எனக்கு அமைத்துத் தா! இன்னும், ஃபிர்அவ்னை விட்டும் அவனது செயல்களை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள்! இன்னும், அநியாயக்கார மக்களை விட்டும் என்னை பாதுகாத்துக் கொள்!”"},{"id":12,"translation":"இன்னும், இம்ரானின் மகள் மர்யமை (அல்லாஹ் உதாரணமாக விவரிக்கிறான்). அவள் தனது மறைவிடத்தை பேணி பாதுகாத்துக்கொண்டாள். ஆகவே, நாம் அதில் (-அவளுடைய மேல் சட்டையின் முன் புறத்தில்) நாம் படைத்த உயிரிலிருந்து ஊதினோம். இன்னும், அவள் தனது இறைவனின் வாக்கியங்களையும் அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினாள். இன்னும், அவள் மிகவும் பணிந்தவர்களில் உள்ளவளாக இருந்தாள்."}]},{"id":67,"verses":[{"id":1,"translation":"நபியே! உமது மனைவிகளின் பொருத்தத்தை நாடியவராக, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கியதை நீர் ஏன் (உமக்கு) விலக்கிக் கொள்கிறீர்? அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."},{"id":2,"translation":"அவன்தான் மரணத்தையும் வாழ்க்கையையும் படைத்தான் - உங்களில் செயலால் மிக அழகானவர் யார் என்று உங்களை அவன் சோதிப்பதற்காக. அவன்தான் மிகைத்தவன், மகா மன்னிப்பாளன் ஆவான்."},{"id":3,"translation":"அவன் ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். ரஹ்மானின் படைப்பில் எவ்வித ஏற்றத் தாழ்வையும் நீர் பார்ப்பதில்லை. ஆக, பார்வையை நீர் மீண்டும் திருப்புவீராக! ஏதாவது பிளவுகளை (விரிசல்களை) நீர் (வானத்தில்) பார்க்கிறீரா?"},{"id":4,"translation":"பிறகு, மீண்டும் பார்வையை இரு முறை திருப்புவீராக! அந்தப் பார்வை இழிவடைந்ததாக உம் பக்கம் திரும்பிவிடும். இன்னும், அது களைத்துவிடும்."},{"id":5,"translation":"திட்டவட்டமாக கீழ் வானத்தை (நட்சத்திரம் எனும்) விளக்குகளால் நாம் அலங்கரித்தோம். இன்னும், (வானவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்கிற) ஷைத்தான்களை எறிவதற்காக அவற்றை (-நட்சத்திரங்களை) ஏற்படுத்தினோம். இன்னும், அவர்களுக்கு கொழுந்து விட்டெரியும் நரக நெருப்பின் தண்டனையை தயார் செய்துள்ளோம்."},{"id":6,"translation":"தங்கள் இறைவனை நிராகரிப்பவர்களுக்கு நரகத்தின் தண்டனை உண்டு. அது மீளுமிடங்களில் மிகக் கெட்டது."},{"id":7,"translation":"அவர்கள் அ(ந்த நரகத்)தில் எறியப்பட்டால், - அதுவுமோ கொதித்துக் கொண்டிருக்க - அதில் (ஒரு) கடுமையான சத்தத்தை செவியுறுவார்கள்."},{"id":8,"translation":"அ(ந்த நரகமான)து (நிராகரிப்பாளர்கள் மீதுள்ள) கோபத்தால் (தனித் தனியாக பிரிந்து) தெரித்துவிட நெருங்கிவிடும். அதில் (பாவிகளின்) ஒரு கூட்டம் எறியப்படும் போதெல்லாம், “உங்களிடம் ஓர் எச்சரிப்பாளர் வரவில்லையா?” என்று அதன் காவலாளிகள் அவர்களிடம் கேட்பார்கள்."},{"id":9,"translation":"அவர்கள் கூறுவார்கள்: “ஏன் வரவில்லை, திட்டமாக எங்களிடம் எச்சரிப்பாளர் வந்தார். ஆனால், நாங்கள் (அவரை) பொய்ப்பித்தோம். அல்லாஹ் எதையும் இறக்கவில்லை. (தூதர்களே!) நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே தவிர (நேர்வழியில்) இல்லை என்று நாங்கள் கூறினோம்.”"},{"id":10,"translation":"இன்னும், அவர்கள் கூறுவார்கள்: “நாங்கள் செவி ஏற்பவர்களாக; அல்லது, சிந்தித்து புரிபவர்களாக இருந்திருந்தால் (இன்று) நரகவாசிகளில் ஆகி இருக்க மாட்டோம்.”"},{"id":11,"translation":"ஆக, அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்வார்கள். ஆகவே, நரகவாசிகளுக்குக் கேடுதான்!"},{"id":12,"translation":"நிச்சயமாக எவர்கள் மறைவில் தங்கள் இறைவனை பயப்படுவார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் பெரிய கூலியும் உண்டு."},{"id":13,"translation":"உங்கள் பேச்சை நீங்கள் இரகசியமாகப் பேசுங்கள்! அல்லது, அதை உரக்கப் பேசுங்கள்! நிச்சயமாக அவன் (உங்கள்) நெஞ்சங்களில் உள்ளதை நன்கறிந்தவன் ஆவான்."},{"id":14,"translation":"எவன் படைத்தானோ அவன் அறியமாட்டானா? அவன்தான் மிக நுட்பமானவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்."},{"id":15,"translation":"அவன்தான் பூமியை உங்களுக்கு (நீங்கள் வசிப்பதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும்) இலகுவாக ஆக்கினான். ஆகவே, (உங்கள் வாழ்வாதாரத்தைத் தேடி) நீங்கள் அதன் பல பகுதிகளில் செல்லுங்கள்! அவன் வழங்கிய உணவில் இருந்து உண்ணுங்கள்! அவன் பக்கம்தான் (மறுமையில் நீங்கள்) எழுப்பப்படுவது இருக்கிறது."},{"id":16,"translation":"வானத்தின் மேல் உள்ளவன் உங்களை பூமியில் சொருகிவிடுவதை நீங்கள் பயமற்று இருக்கிறீர்களா? அப்போது அது (-பூமி) குலுங்கும். (நீங்கள் அழிந்துவிடுவீர்கள்.)"},{"id":17,"translation":"அல்லது, வானத்தின் மேல் உள்ளவன் உங்கள் மீது கல் மழையை அனுப்புவதை நீங்கள் பயமற்று இருக்கிறீர்களா? (நீங்கள் எனது தண்டனையை கண்கூடாக பார்க்கும் போது) என் எச்சரிக்கை எப்படி இருந்தது என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்!"},{"id":18,"translation":"இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் திட்டவட்டமாக பொய்ப்பித்தனர். ஆக, எனது மறுப்பு(ம் மாற்றமும்) எப்படி இருந்தது? (என்று சிந்தித்து பாருங்கள்!)"},{"id":19,"translation":"அவர்கள் தங்களுக்கு மேல் பறவைகள் (இறக்கைகளை) விரித்தவைகளாகவும் (சில நேரம் அவற்றை தம் விலாக்களுடன்) மடக்கியவைகளாகவும் பறப்பதை அவர்கள் பார்க்கவில்லையா? (அவை கீழே விழாமல் ஆகாயத்தில் யாரும்) அவற்றை நிறுத்தவில்லை, ரஹ்மானைத் தவிர. நிச்சயமாக அவன் எல்லாப் பொருளையும் உற்று நோக்குபவன் ஆவான்."},{"id":20,"translation":"மாறாக, ரஹ்மான் அல்லாமல் உங்களுக்கு உதவுகிற உங்கள் இராணுவமாக இருக்கிற இவர் யார்? (நீங்கள் அல்லாஹ்வை அன்றி தெய்வமாக யாரை நம்பி இருக்கிறீர்களோ அது உங்களுக்கு உதவ முன்வருமா?) நிராகரிப்பாளர்கள் (பெரும்) ஏமாற்றத்தில் தவிர இல்லை."},{"id":21,"translation":"மாறாக, அவன் (-அல்லாஹ் உங்களுக்கு வழங்கி வந்த) தனது உணவை (உங்களை விட்டும்) தடுத்து விட்டால் உங்களுக்கு உணவளிக்கிற இவர் யார்? (அல்லாஹ்வை அன்றி உங்களுக்கு உணவளிப்பதற்கு யாரும் இருக்கிறார்களா?) மாறாக, அவர்கள் (உங்களுக்கு தொந்தரவு தருவதில்) எல்லை மீறுவதிலும் (சத்தியத்தை விட்டு) விலகி செல்வதிலும்தான் பிடிவாதம் பிடித்தனர்."},{"id":22,"translation":"ஆக, தனது முகத்தின் மீது கவிழ்ந்தவனாக நடப்பவன் நேர்வழி பெற்றவனா? (-அவன் தன் இலக்கை நோக்கி செல்ல முடியுமா?) அல்லது, நேரான பாதையில் சரியாக நடப்பவனா?"},{"id":23,"translation":"(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை உருவாக்கினான். இன்னும், உங்களுக்கு செவியையும் பார்வைகளையும் உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் (அவனுக்கு) மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்!"},{"id":24,"translation":"(நபியே!) கூறுவீராக! அவன்தான் உங்களை பூமியில் (பல ஊர்களில், பல நாடுகளில்) பரப்பினான். இன்னும், அவன் பக்கமே நீங்கள் (மறுமையில்) ஒன்று திரட்டப்படுவீர்கள்."},{"id":25,"translation":"“நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் (மறுமையில் அல்லாஹ்விடம் நாங்கள் எழுப்பப்படுவோம் என்ற) இந்த வாக்கு எப்பொழுது நிகழும் (என்று எங்களுக்கு அறிவியுங்கள்!)” என அவர்கள் கூறுகிறார்கள்."},{"id":26,"translation":"(நபியே!) கூறுவீராக! (அது பற்றிய) அறிவெல்லாம் அல்லாஹ்விடம்தான் இருக்கிறது. நான் எல்லாம் தெளிவான எச்சரிப்பாளர்தான்."},{"id":27,"translation":"ஆக, அவர்கள் அ(ந்த மறுமை நிகழ்வ)தை மிக சமீபமாக பார்க்கிறபோது நிராகரித்தவர்களின் முகங்கள் இழிவுக்குள்ளாகி விடும். இன்னும், நீங்கள் எதை தேடி கொண்டிருந்தீர்களோ அ(ந்த மறுமை நாளான)து இதுதான் என்று அவர்களுக்கு கூறப்படும்."},{"id":28,"translation":"(நபியே!) கூறுவீராக! “அல்லாஹ் என்னையும் என்னுடன் இருப்பவர்களையும் மரணிக்க செய்து விட்டால்; அல்லது, அவன் எங்கள் மீது கருணை புரிந்(து இன்னும் சில காலம் உயிரோடு வாழவைத்)தால், (அது அவனது திட்டத்தின் படி அவன் செய்வதாகும்.) ஆக, துன்புறுத்தும் தண்டனையில் இருந்து நிராகரிப்பாளர்களை யார் காப்பாற்றுவார்? (நாங்கள் வாழ்வதும் மரணிப்பதும் உங்களை அல்லாஹ்வின் நரக தண்டனையிலிருந்து காப்பாற்றிவிடுமா?)” என்று அறிவியுங்கள்."},{"id":29,"translation":"(நபியே!) கூறுவீராக! “அவன்தான் ரஹ்மான் (-அளவற்ற அருளாளன், மகா கருணையாளன்). அவனை நாங்கள் நம்பிக்கை கொண்டோம். இன்னும், அவன் மீதே நாங்கள் நம்பிக்கை வைத்தோம். ஆக, தெளிவான வழிகேட்டில் யார் இருக்கிறார் என்பதை நீங்கள் விரைவில் அறிவீர்கள்."},{"id":30,"translation":"(நபியே!) கூறுவீராக! “உங்கள் தண்ணீர் (அதை நீங்கள் எடுக்க முடியாத அளவிற்கு) ஆழத்தில் சென்றுவிட்டால் யார் உங்களுக்கு மதுரமான தண்ணீரைக் கொண்டு வருவார்? என்பதை (எங்களுக்கு) அறிவியுங்கள்.”"}]},{"id":68,"verses":[{"id":1,"translation":"எ(ந்த இறை)வனுடைய கரத்தில் (எல்லாப் படைப்புகளின்) ஆட்சி இருக்கிறதோ அவன் மிகுந்த பாக்கியவான், மிகவும் உயர்ந்தவன், மிக்க மகத்துவமானவன் ஆவான். அவன் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் உடையவன் ஆவான்."},{"id":2,"translation":"(நபியே!) உமது இறைவனின் அருளால் நீர் பைத்தியக்காரராக இல்லை."},{"id":3,"translation":"நிச்சயமாக உமக்கு முடிவில்லாத நற்கூலி உண்டு."},{"id":4,"translation":"நிச்சயமாக நீர் மகத்தான நற்குணத்தில் இருக்கிறீர்."},{"id":5,"translation":"ஆக, விரைவில் நீர் காண்பீர், அவர்களும் காண்பார்கள்,"},{"id":6,"translation":"உங்களில் யாருக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று."},{"id":7,"translation":"நிச்சயமாக உமது இறைவன், அவனது பாதையில் இருந்து யார் வழிதவறினானோ அவனை மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழி பெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான்."},{"id":8,"translation":"ஆக, (நபியே! உம்மையும் உமது மார்க்கத்தையும்) பொய்ப்பிப்பவர்களுக்கு நீர் கீழ்ப்படியாதீர்!"},{"id":9,"translation":"நீர் (அவர்களுடன்) அனுசரித்து மென்மையாக போகவேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அப்படியென்றால் அவர்களும் (உம்மை) அனுசரித்து மென்மையாக நடப்பார்கள்."},{"id":10,"translation":"அதிகம் சத்தியம் செய்பவன், அற்பமானவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!"},{"id":11,"translation":"அதிகம் புறம் பேசுபவன், அதிகம் கோல் சொல்பவன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!"},{"id":12,"translation":"நன்மையை அதிகம் தடுப்பவன், எல்லை மீறுபவன், பெரும்பாவி ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!"},{"id":13,"translation":"அசிங்கமானவன், இதற்குப் பிறகு (-இத்தகைய தன்மைகள் அவனுக்கு இருப்பதுடன் அவன் ஓர்) ஈனன் ஒவ்வொருவனுக்கும் கீழ்ப்படியாதீர்!"},{"id":14,"translation":"செல்வமும் ஆண் பிள்ளைகளும் உடையவனாக அவன் இருந்த காரணத்தால் (அவன் பெருமை அடித்தான்)."},{"id":15,"translation":"அவனுக்கு முன் நமது வசனங்கள் ஓதப்பட்டால் (இவை) முன்னோரின் கட்டுக்கதைகள் என்று கூறுகிறான்."},{"id":16,"translation":"(அவனுடைய) மூக்கின் மீது நாம் விரைவில் அவனுக்கு அடையாளமிடுவோம்."},{"id":17,"translation":"நிச்சயமாக நாம் அவர்களை சோதித்தோம், தோட்டமுடையவர்களை நாம் சோதித்தது போல். “அதிகாலை பொழுதை அவர்கள் அடையும்போது நிச்சயமாக அவர்கள் அதை அறுவடை செய்ய வேண்டும்” என்று அவர்கள் சத்தியம் செய்த சமயத்தை நினைவு கூருங்கள்!"},{"id":18,"translation":"“அல்லாஹ் நாடினால் (நாங்கள் அறுவடை செய்வோம்)” என்று அவர்கள் கூறவில்லை."},{"id":19,"translation":"ஆக, அவர்கள் தூங்கியவர்களாக இருந்தபோது உமது இறைவனிடமிருந்து ஒரு கட்டளை(யின் படி நெருப்பு) இரவில் அதன் மீது (-அந்த தோட்டத்தின் மீது) சுற்றியது (-சூழ்ந்து கொண்டது)."},{"id":20,"translation":"அ(ந்த தோட்டமான)து கடுமையான இருள் நிறைந்த இரவைப் போன்று (எரிந்து கருமையாக) ஆகிவிட்டது."},{"id":21,"translation":"ஆக, அவர்கள் அதிகாலைபொழுதை அடைந்தபோது ஒருவரை ஒருவர் அழைத்தனர்."},{"id":22,"translation":"அதாவது, நீங்கள் உங்கள் விவசாய நிலத்திற்கு காலையில் செல்லுங்கள், நீங்கள் (உங்கள் தோட்டத்தின் கனிகளை) அறுவடை செய்பவர்களாக இருந்தால் (என்று அவர்கள் தங்களுக்குள் கூறிக் கொண்டனர்)."},{"id":23,"translation":"ஆக, அவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் பேசியவர்களாக புறப்பட்டு சென்றனர்,"},{"id":24,"translation":"அதாவது, இன்றைய தினம் உங்களிடம் ஏழை ஒருவரும் அ(ந்த தோட்டத்)தில் நுழைந்து விடக்கூடாது என்று."},{"id":25,"translation":"அவர்கள் ஒரு கெட்ட எண்ணத்துடன் (தாங்கள் நாடியதை செய்வதற்கு) சக்தி உள்ளவர்களாக காலையில் புறப்பட்டனர்."},{"id":26,"translation":"ஆக, அவர்கள் அ(ந்த தோட்டத்)தைப் பார்த்தபோது, “நிச்சயமாக நாங்கள் வழிதவறி விட்டோம்” என்று கூறினார்கள்."},{"id":27,"translation":"“இல்லை, மாறாக நாங்கள் இழப்பிற்குள்ளாகி விட்டோம்” (என்றும் கூறினார்கள்)."},{"id":28,"translation":"அவர்களில் நீதவான் கூறினார்: (நீங்கள் இன் ஷா அல்லாஹ் என்று கூற வேண்டும் என்று) நான் கூறவில்லையா? (அதன்படி) நீங்கள் இன் ஷா அல்லாஹ் சொல்லி இருக்க வேண்டாமா!"},{"id":29,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்கள் இறைவன் மிகப் பரிசுத்தமானவன். நிச்சயமாக நாங்கள் அநியாயக்காரர்களாக ஆகிவிட்டோம்.”"},{"id":30,"translation":"ஆக, அவர்களுக்குள் பழித்தவர்களாக அவர்களில் சிலர் சிலரை முன்னோக்கினர்."},{"id":31,"translation":"அவர்கள் கூறினார்கள்: “எங்களின் நாசமே! நிச்சயமாக நாங்கள் எல்லை மீறியவர்களாக (அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி கெட்டவர்களாக) இருந்தோம்.”"},{"id":32,"translation":"“எங்கள் இறைவன் எங்களுக்கு அதை விட சிறந்த (தோட்டத்)தை பகரமாக தரக்கூடும். நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவன் பக்கம் ஆசை(யும் நம்பிக்கையும்) உள்ளவர்கள்.”"},{"id":33,"translation":"இவ்வாறுதான் (நமது) தண்டனை இருக்கும். இன்னும், மறுமையின் தண்டனை (இதை விட) மிகப் பெரியதாகும். அவர்கள் (இதை) அறிந்தவர்களாக இருக்க வேண்டுமே!"},{"id":34,"translation":"நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்களுக்கு தங்கள் இறைவனிடம் இன்பம் நிறைந்த “நயீம்” சொர்க்கங்கள் உள்ளன."},{"id":35,"translation":"ஆக, (நமது கட்டளைக்கு) முற்றிலும் பணிந்தவர்க(ளாகிய முஸ்லிம்க)ளை, (நமது கட்டளையை மீறுகின்ற நிராகரிப்பாளர்களாகிய) குற்றவாளிகளைப் போல் ஆக்குவோமா?"},{"id":36,"translation":"உங்களுக்கு என்ன ஆனது, எப்படி நீங்கள் தீர்ப்பளிக்கிறீர்கள்?"},{"id":37,"translation":"(நல்லவர்களையும் பாவிகளையும் ஒரு சமமாக நீங்கள் கருதுவதற்கு ஆதாரமாக) உங்களுக்கு (இறைவனின்) வேதம் ஏதும் இருக்கிறதா? அதில் நீங்கள் (இப்படித்தான்) படிக்கிறீர்களா?"},{"id":38,"translation":"(அப்படியென்றால்,) “நிச்சயமாக உங்களுக்கு அதில் நீங்கள் விரும்புவதெல்லாம் உண்டா?”"},{"id":39,"translation":"நிச்சயமாக நீங்கள் (விரும்பியபடி) தீர்ப்பளிப்பதெல்லாம் உங்களுக்கு கிடைத்துவிடும் என்பதற்கு மறுமை நாள் வரை நீடித்து இருக்கின்ற உறுதியான ஒப்பந்தங்கள் (ஏதும்) உங்களுக்கு நம்மிடம் உண்டா? (உங்களுக்கும் நமக்கும் மத்தியில் அப்படி ஏதாவது ஒப்பந்தம் இருக்கிறதா?)"},{"id":40,"translation":"(நபியே!) அவர்களிடம் கேட்பீராக! “அவர்களில் யார் இதற்கு பொறுப்பாளர் ஆவார்?”"},{"id":41,"translation":"(இவர்களின் கூற்றைப் போன்றே கூறுகின்ற) கூட்டாளிகள் (வேறு யாரும்) இவர்களுக்கு உண்டா? ஆக, அவர்கள் (தங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால் அவர்களின் (அந்த) கூட்டாளிகளை (தங்கள் சாட்சிகளாக நம்மிடம்) கொண்டு வரட்டும்."},{"id":42,"translation":"கெண்டைக்கால் காண்பிக்கப்படுகிற நாளில் (தங்கள் கூட்டாளிகளை அவர்கள் கொண்டு வரட்டும்). இன்னும், அவர்கள் சிரம்பணிவதற்கு அழைக்கப்படுவார்கள். ஆக, அவர்கள் (சிரம் பணிவதற்கு) சக்தி பெற மாட்டார்கள்."},{"id":43,"translation":"அவர்களின் பார்வைகள் தாழ்ந்தவையாக இருக்கும். அவர்களை இழிவு சூழும். அவர்கள் (உலக வாழ்க்கையில்,) சுகமானவர்களாக இருந்தபோது தொழுகைக்கு அழைக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். (ஆனால் அப்போது அவர்கள் தொழவில்லை, அல்லது பிறருக்கு காண்பிப்பதற்காக மட்டும் தொழுதார்கள்.)"},{"id":44,"translation":"ஆக, என்னையும் இந்த வேதத்தை பொய்ப்பிப்பவர்களையும் விட்டுவிடுவீராக! நாம் அவர்கள் அறியாத விதத்தில் அவர்களுக்கு சூழ்ச்சி செய்வோம் (-கொஞ்சம் சுகம் கொடுத்து திடீரென தண்டிப்போம்)."},{"id":45,"translation":"இன்னும், அவர்களுக்கு நாம் தவணை அளிப்போம். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக உறுதியானது."},{"id":46,"translation":"(நபியே!) இவர்களிடம் கூலி ஏதும் நீர் கேட்கிறீரா? (அதனுடைய) கடனால் அவர்கள் சிரமப்படுகிறார்களா?"},{"id":47,"translation":"அவர்களிடம் மறைவானவை இருக்கிறதா? (அதிலிருந்து தங்களுக்கு விருப்பமானதை, அதாவது, முஃமின்களை விட நிராகரிப்பாளர்கள்தான் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணுவது போல) அவர்கள் (அதில்) எழுதுகிறார்களா?"},{"id":48,"translation":"ஆக, (நபியே!) உமது இறைவனின் தீர்ப்பிற்காக நீர் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் போன்று நீர் (அவசரக்காரராக) ஆகிவிடாதீர் - அவரோ கடும் துயரத்தில் மூழ்கியவராக இருக்கும் நிலையில் (தனது இறைவனை) அழைத்த நேரத்தில் (அவர் அவசரப்பட்டது போன்று அவசரப்பட்டு விடாதீர்! அவர் கோபப்பட்டது போன்று கோபப்பட்டு விடாதீர்)!"},{"id":49,"translation":"அவருடைய இறைவனிடமிருந்து அருள் அவரை அடைந்திருக்காவிட்டால் (பயங்கரமான, ஆபத்தான) ஒரு பெருவெளியில் அவர் எறியப்பட்டிருப்பார். அவர் (தனது செயலினால்) பழிப்பிற்குரியவராக இருந்தார்."},{"id":50,"translation":"ஆக, அவரை அவரது இறைவன் தேர்ந்தெடுத்தான். ஆக, அவரை நல்லவர்களில் ஆக்கினான்."},{"id":51,"translation":"நிச்சயமாக நிராகரித்தவர்கள் தங்கள் (தீய) பார்வைகளால் உம்மை (உமது இடத்தில் இருந்து) நீக்கிவிட நெருங்கினார்கள், (இந்த வேத) அறிவுரையை (உம்மிடமிருந்து அவர்கள்) செவியுற்றபோது. இன்னும், அவர்கள் கூறினார்கள்: “நிச்சயமாக அவர் ஒரு பைத்தியக்காரர்தான்” என்று."},{"id":52,"translation":"(குர்ஆனாகிய) இது, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையே தவிர இல்லை."}]},{"id":69,"verses":[{"id":1,"translation":"நூன். எழுதுகோல் மீதும் அவர்கள் எழுதுகின்றவற்றின் மீதும் சத்தியமாக!"},{"id":2,"translation":"உண்மையான நிகழ்வு என்றால் என்ன?"},{"id":3,"translation":"உண்மையான நிகழ்வு என்றால் என்ன என்று உமக்கு எது அறிவித்தது!?"},{"id":4,"translation":"ஸமூது சமுதாயமும் ஆது சமுதாயமும் (உள்ளங்களை) தட்டக்கூடிய (திடுக்கிட செய்கின்ற) மறுமை நாளை பொய்ப்பித்தனர்."},{"id":5,"translation":"ஆக, ஸமூது சமுதாயம் அளவு கடந்த சப்தத்தைக் கொண்டு அழிக்கப்பட்டனர்."},{"id":6,"translation":"ஆக, ஆது சமுதாயம் கடுமையான குளிருடன் வீசக்கூடிய அதி வேகமான (கட்டுக்கடங்காத) ஒரு காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்."},{"id":7,"translation":"அவன், அதை (-அந்த காற்றை) ஏழு இரவுகளும் எட்டு பகல்களும் அவர்கள் மீது தொடர்ச்சியாக (வீசக்கூடிய நிலையில்) கட்டுப்படுத்தி வைத்திருந்தான். ஆக, அதில் மக்களை செத்து மடிந்தவர்களாக நீர் பார்ப்பீர். அவர்களோ (கரையான் தின்று) அழிந்துபோன பேரீச்ச மரத்தின் அடிப்பகுதிகளைப் போல் இருந்தனர்."},{"id":8,"translation":"ஆக, அவர்களில் உயிரோடு மீதம் இருப்பவர் யாரையும் நீர் பார்க்கிறீரா?"},{"id":9,"translation":"ஃபிர்அவ்னும், அவனுக்கு முன்னுள்ளவர்களும், தலைகீழாக புரட்டப்பட்ட ஊரார்களும் தீய செயல்களை செய்தனர்."},{"id":10,"translation":"ஆக, அவர்கள் தங்கள் இறைவனின் தூதருக்கு மாறுசெய்தனர். ஆகவே, கடுமையான பிடியால் (-தண்டனையால்) அவன் அவர்களைப் பிடித்தான் (-தண்டித்தான்)."},{"id":11,"translation":"தண்ணீர் மிக அதிகமானபோது நிச்சயமாக நாம் உங்க(ள் முன்னோர்களான நூஹுடன் நம்பிக்கை கொண்டவர்க)ளை கப்பலில் ஏற்றினோம்."},{"id":12,"translation":"(நம்பிக்கையாளர்கள் பாதுகாக்கப்பட்டு பாவிகள் மூழ்கடிக்கப்பட்ட) அ(ந்த சம்பவத்)தை உங்களுக்கு ஓர் உபதேசமாக ஆக்குவதற்காகவும் கவனித்து செவியுறுகிற செவிகள் அவற்றை கவனித்து புரிந்து கொள்வதற்காகவும் (நாம் உங்கள் முன்னோரை கப்பலில் ஏற்றி பாதுகாத்தோம். அப்படித்தான் உங்களையும் இந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து பாதுகாப்போம்)."},{"id":13,"translation":"ஆக, எக்காளத்தில் ஒரு முறை ஊதப்பட்டால்,"},{"id":14,"translation":"பூமியும் மலைகளும் (காற்றில்) சுமக்கப்பட்டு இரண்டும் ஒரே அடியாக (ஒன்றோடொன்று) அடித்து நொறுக்கப்பட்டால்,"},{"id":15,"translation":"ஆக, அந்நாளில்தான் நிகழக்கூடிய (மறுமை நாளான)து நிகழும்."},{"id":16,"translation":"இன்னும், வானம் (பல பிளவுகளாக) பிளந்து விடும். ஆக, அந்நாளில் அது பலவீனமடைந்திருக்கும்."},{"id":17,"translation":"இன்னும், வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் உமது இறைவனின் அர்ஷை எட்டு வானவர்கள் அவர்களுக்கு மேல் சுமப்பார்கள்."},{"id":18,"translation":"அந்நாளில் நீங்கள் (உங்கள் இறைவன் முன்) சமர்ப்பிக்கப்படுவீர்கள். உங்களி(ல் ரகசியங்களி)ல் இருந்து மறையக்கூடியது எதுவும் (இறைவனுக்கு முன்னால்) மறைந்துவிடாது."},{"id":19,"translation":"ஆக, யார் தனது செயலேடு தனது வலது கரத்தில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “வாருங்கள்! (இதோ) எனது செயலேட்டை (எடுத்து)ப் படியுங்கள்!”"},{"id":20,"translation":"“நிச்சயமாக நான் எனது விசாரணையை சந்திப்பேன் என்று நம்பினேன்.”"},{"id":21,"translation":"ஆக, அவர் மகிழ்ச்சியான வாழ்க்கையில்,"},{"id":22,"translation":"உயர்ந்த சொர்க்கத்தில் இருப்பார்."},{"id":23,"translation":"அதன் கனிகள் மிக சமீபமாக இருக்கும்."},{"id":24,"translation":"நீங்கள் (உலகத்தில் வாழ்ந்த அந்த) முடிந்துபோன நாள்களில் (உங்கள் மறுமை வாழ்க்கைக்காக) முற்படுத்திய (நல்ல) செயல்களின் காரணமாக (இந்த சொர்க்கத்தில்) இன்பமாக உண்ணுங்கள்! பருகுங்கள்!"},{"id":25,"translation":"ஆக, யார் தனது செயலேடு தனது இடது கையில் கொடுக்கப்பட்டாரோ அவர் கூறுவார்: “எனது செயலேடு எனக்கு கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதே!”"},{"id":26,"translation":"“எனது கூலி என்னவாக இருக்கும் என்று நான் அறியமாட்டேன்.”"},{"id":27,"translation":"“(உலகத்தில் எனக்கு நிகழ்ந்த எனது மரணம்,) அதுவே (எனது காரியத்தை) முடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டுமே! (இந்த மறுமைக்கு நான் வராமல் இருந்திருக்க வேண்டுமே!)”"},{"id":28,"translation":"“எனது செல்வம் எனக்கு பலனளிக்கவில்லை!”"},{"id":29,"translation":"“எனது ஆட்சி அதிகாரம் (-மறுமையை மறுக்க நான் கூறிய எனது ஆதாரம்) என்னை விட்டு அழித்துவிட்டதே.”"},{"id":30,"translation":"(அல்லாஹ், வானவர்களுக்கு கூறுவான்:) “அவனைப் பிடியுங்கள்! இன்னும், அவனை விலங்கிடுங்கள்!”"},{"id":31,"translation":"“பிறகு, நரகத்தில் அவனை எரித்துப் பொசுக்குங்கள்!”"},{"id":32,"translation":"“பிறகு, ஒரு சங்கிலியில், - அதன் முழம் எழுபது முழங்களாகும் - அவனைப் புகுத்துங்கள்!” (நரக சங்கிலி அவனது பித்தட்டின் வழியாக புகுத்தப்பட்டு மூக்கின் வழியாக வெளியே கொண்டு வரப்படும்.)"},{"id":33,"translation":"நிச்சயமாக அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளாதவனாக இருந்தான்."},{"id":34,"translation":"இன்னும், ஏழைகளின் உணவிற்கு (-வாழ்வாதாரத்திற்கு பிறரை) தூண்டாதவனாக இருந்தான்."},{"id":35,"translation":"ஆகவே, இன்று அவனுக்கு இங்கு (உதவி செய்கிற) நெருக்கமான நண்பர் (யாரும்) இருக்க மாட்டார்."},{"id":36,"translation":"இன்னும், (அவனுக்கு) உணவும் இருக்காது, சீழ் சலங்களைத் தவிர."},{"id":37,"translation":"அதை சாப்பிட மாட்டார்கள், பாவிகளைத் தவிர!"},{"id":38,"translation":"(இறை வேதத்தை பொய்ப்பிக்கின்ற பாவிகளே!) நீங்கள் எதை பார்க்கிறீர்களோ அதன் மீது நான் சத்தியம் செய்கிறேன்!"},{"id":39,"translation":"இன்னும், நீங்கள் எதை பார்க்க மாட்டீர்களோ அதன் மீதும் (சத்தியம் செய்கிறேன்)!"},{"id":40,"translation":"நிச்சயமாக (இறைவனின் வேதமான) இது (முஹம்மது ஆகிய நமது) கண்ணியமான தூதர் மூலமாக ஓதப்படுகிற வசனங்களாகும்."},{"id":41,"translation":"இது, கவிஞரின் பேச்சல்ல. நீங்கள் மிகக் குறைவாகவே நம்பிக்கை கொள்கிறீர்கள்."},{"id":42,"translation":"இன்னும், இது ஜோசியக்காரனின் பேச்சுமல்ல. மிகக் குறைவாகவே நீங்கள் நல்லுபதேசம் பெறுகிறீர்கள்."},{"id":43,"translation":"இது, அகிலங்களின் இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதம் ஆகும்."},{"id":44,"translation":"அவர் நம்மீது (நாம் சொல்லாத) சில பேச்சுகளை இட்டுக்கட்டி பேசினால்,"},{"id":45,"translation":"நாம் அவரை பலமாக பிடித்திருப்போம்."},{"id":46,"translation":"பிறகு, அவரின் நாடி நரம்பை நாம் வெட்டி இருப்போம்."},{"id":47,"translation":"ஆக, உங்களில் இருந்து எவரும் அவரை விட்டும் (நமது பிடியை) தடுப்பவர்கள் இல்லை."},{"id":48,"translation":"நிச்சயமாக இது இறையச்சமுள்ளவர்களுக்கு ஓர் அறிவுரையாகும்."},{"id":49,"translation":"நிச்சயமாக உங்களில் (இந்த வேதத்தை) பொய்ப்பிப்பவர்கள் உள்ளனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்."},{"id":50,"translation":"நிச்சயமாக இது நிராகரிப்பாளர்களுக்கு மிகத் துக்கமானதாகும்."},{"id":51,"translation":"நிச்சயமாக இது மிக உறுதியான உண்மையாகும்."},{"id":52,"translation":"ஆக, மிக மகத்தான உமது இறைவனின் பெயரை துதித்து தொழுவீராக!"}]},{"id":70,"verses":[{"id":1,"translation":"உண்மையான நிகழ்வு!"},{"id":2,"translation":"நிராகரிப்பாளர்களுக்கு (அந்த தண்டனை நிகழும்). அதை தடுப்பவர் ஒருவரும் இல்லை."},{"id":3,"translation":"உயர்வுகளும் மேன்மைகளும் உடைய அல்லாஹ்விடமிருந்து (அது நிகழும்)."},{"id":4,"translation":"வானவர்களும் ஜிப்ரீலும் அவன் பக்கம் ஒரு நாளில் ஏறுகிறார்கள். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது."},{"id":5,"translation":"ஆகவே, அழகிய பொறுமையாக நீர் பொறுப்பீராக!"},{"id":6,"translation":"நிச்சயமாக இவர்கள் அதை தூரமாக பார்க்கிறார்கள்."},{"id":7,"translation":"நாம் அதை சமீபமாக பார்க்கிறோம்."},{"id":8,"translation":"வானம் எண்ணெயின் அடி மண்டியைப் போல் ஆகிவிடுகிற நாளில்,"},{"id":9,"translation":"இன்னும், மலைகள் முடிகளைப் போல் ஆகிவிடுகிற நாளில் (அந்த தண்டனை நிகழும்.)"},{"id":10,"translation":"ஒரு நண்பன் (தனது) நண்பனைப் பற்றி விசாரிக்க மாட்டான்."},{"id":11,"translation":"அவர்கள் அவர்களை (நண்பர்கள் நண்பர்களை) காண்பிக்கப்படுவார்கள். அந்நாளின் தண்டனையிலிருந்து (விடுதலை பெற) தன் பிள்ளைகளை ஈடாக கொடுக்க வேண்டுமே என்று குற்றவாளி ஆசைப்படுவான்."},{"id":12,"translation":"இன்னும், தன் மனைவியையும் தன் சகோதரனையும்,"},{"id":13,"translation":"இன்னும், தன்னை அரவணைக்கின்ற தன் குடும்பத்தையும்,"},{"id":14,"translation":"இன்னும், பூமியில் உள்ளவர்கள் அனைவரையும் (ஈடாக கொடுக்க வேண்டுமே என்று ஆசைப்படுவான்). பிறகு, அது அவனை பாதுகாக்க வேண்டும் (என்றும் அந்த குற்றவாளி ஆசைப்படுவான்)."},{"id":15,"translation":"அவ்வாறல்ல. நிச்சயமாக அது கொழுந்து விட்டெரியும் நெருப்பாகும்."},{"id":16,"translation":"(அந்த நெருப்பானது, தலை இன்னும் உடலின்) தோலை கழட்டிவிடக்கூடியதாக இருக்கும்."},{"id":17,"translation":"அ(ந்த நெருப்பான)து (அல்லாஹ்வின் மார்க்கத்தை) புறக்கணித்து, விலகி சென்றவர்களை அழைக்கும்."},{"id":18,"translation":"இன்னும், (செல்வங்களை) சேகரித்து, (அவற்றை) பாதுகாத்து வைத்தவனை (அது அழைக்கும்)."},{"id":19,"translation":"நிச்சயமாக மனிதன் பேராசைக்காரனாக படைக்கப்பட்டான்."},{"id":20,"translation":"அவனுக்கு தீங்கு ஏற்பட்டால் மிக பதட்டக்காரனாக,"},{"id":21,"translation":"அவனுக்கு வசதி ஏற்பட்டால் (பிறருக்கு தனது செல்வத்தை கொடுக்காமல்) முற்றிலும் தடுப்பவனாக (படைக்கப்பட்டான்)."},{"id":22,"translation":"(ஆனால்,) தொழுகையாளிகளைத் தவிர."},{"id":23,"translation":"அவர்கள் தங்கள் தொழுகையில் நிரந்தரமாக இருப்பார்கள்."},{"id":24,"translation":"இன்னும், அவர்களுடைய செல்வங்களில் குறிப்பிட்ட உரிமை உண்டு,"},{"id":25,"translation":"யாசிப்பவருக்கும், இல்லாதவருக்கும்."},{"id":26,"translation":"இன்னும், அவர்கள் (தீர்ப்பு கொடுக்கப்படும்) கூலி நாளை உண்மைப்படுத்துவார்கள்."},{"id":27,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் இறைவனின் தண்டனையைப் பயப்படுவார்கள்."},{"id":28,"translation":"நிச்சயமாக அவர்களுடைய இறைவனின் தண்டனை பயமற்று இருக்கக் கூடியது அல்ல."},{"id":29,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் மர்மஸ்தானங்களை பாதுகாப்பார்கள்."},{"id":30,"translation":"தங்கள் மனைவிகள்; அல்லது, தங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடம் தவிர. நிச்சயமாக இவர்கள் பழிக்கப்பட மாட்டார்கள்."},{"id":31,"translation":"ஆக, யார் இவர்களுக்குப் பின் (தவறான வழியை) தேடுவார்களோ அவர்கள்தான் எல்லை மீறி(ய பாவி)கள் ஆவர்."},{"id":32,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் பொறுப்புகளையும் தங்கள் உடன்படிக்கையையும் கவனமாக பேணி பாதுகாப்பார்கள்."},{"id":33,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் சாட்சியங்களை நிறைவேற்றுவார்கள்."},{"id":34,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் தொழுகையை கவனமாக கடைப்பிடிப்பார்கள்."},{"id":35,"translation":"அ(த்தகைய)வர்கள் (அனைவரும்) சொர்க்கங்களில் கண்ணியப்படுத்தப்படுவார்கள்."},{"id":36,"translation":"ஆக, நிராகரித்தவர்களுக்கு என்ன ஆனது? அவர்கள் (ஏன்) உம் பக்கம் விரைந்து வருகிறார்கள்,"},{"id":37,"translation":"வலது புறத்தில் இருந்தும் இடது புறத்தில் இருந்தும் பல கூட்டங்களாக."},{"id":38,"translation":"அவர்களில் ஒவ்வொரு மனிதனும் - (நம்பிக்கையாளர்களுடன் சேர்ந்து) தாமும் “நயீம்” (-இன்பம் நிறைந்த) சொர்க்கத்தில் நுழைக்கப்பட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களா?"},{"id":39,"translation":"அவ்வாறல்ல. நிச்சயமாக நாம் அவர்களை அவர்கள் அறிந்திருக்கின்ற ஒன்றிலிருந்துதான் (-அற்பமான இந்திரிய துளியிலிருந்துதான்) படைத்தோம்."},{"id":40,"translation":"ஆக, கிழக்குகள், இன்னும் மேற்குகளுடைய இறைவன் மீது சத்தியம் செய்கிறேன்! நிச்சயம் நாம் ஆற்றல் உள்ளவர்கள்,"},{"id":41,"translation":"இவர்களை விட சிறந்தவர்களை மாற்றிக் கொண்டு வருவதற்கு (நாம் ஆற்றல் உள்ளவர்கள் ஆவோம்). நாம் பலவீனமானவர்கள் அல்ல."},{"id":42,"translation":"ஆக, அவர்களை விட்டுவிடுவீராக! அவர்கள் (தங்கள் பொய்களில்) மூழ்கி இருக்கட்டும்! (தங்கள் உலக காரியங்களில், வீண் விளையாட்டுகளில், வேடிக்கைகளில்) விளையாடட்டும்! இறுதியாக, அவர்கள் எச்சரிக்கப்பட்ட அவர்களது (தண்டனைக்குரிய) நாளை அவர்கள் சந்திப்பார்கள்!"},{"id":43,"translation":"அவர்கள் புதைக்குழிகளில் இருந்து விரைவாக வெளியேறுகிற நாளில், அவர்களோ (நிறுத்திவைக்கப்பட்டுள்ள) கம்பத்தின் பக்கம் விரைந்து ஓடுகிறவர்கள் போல் (விரைந்து ஓடி வருவார்கள்)."},{"id":44,"translation":"அவர்களின் பார்வைகள் (இழிவால்) கீழ்நோக்கி இருக்கும். அவர்களை இழிவு சூழ்ந்து கொள்ளும். இதுதான் இவர்கள் வாக்களிக்கப்பட்டுக் கொண்டிருந்த (மறுமை) நாளாகும்."}]},{"id":71,"verses":[{"id":1,"translation":"(நிராகரிப்பாளர்களுக்கு) நிகழக்கூடிய தண்டனையை (அது உடனே இறங்கட்டும் என்று) கேட்பவர் கேட்டார்."},{"id":2,"translation":"அவர் கூறினார்: “என் மக்களே! நிச்சயமாக நான் உங்களுக்கு தெளிவான எச்சரிப்பாளர் ஆவேன்.”"},{"id":3,"translation":"“அதாவது, நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனை அஞ்சுங்கள்! இன்னும், எனக்கு கீழ்ப்படியுங்கள்!"},{"id":4,"translation":"அவன் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்; இன்னும், குறிப்பிட்ட தவணை வரை அவன் உங்களுக்கு அவகாசம் அளிப்பான். நிச்சயமாக அல்லாஹ்வின் தவணை வந்துவிட்டால் அது பிற்படுத்தப்படாது. நீங்கள் (இதை) அறிபவர்களாக இருக்க வேண்டுமே!”"},{"id":5,"translation":"அவர் கூறினார்: என் இறைவா! நிச்சயமாக நான் எனது மக்களை இரவிலும் பகலிலும் அழைத்தேன்."},{"id":6,"translation":"ஆனால், எனது அழைப்பு அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை, (அவர்கள் எனது அழைப்பிலிருந்து) விரண்டு ஓடுவதைத் தவிர."},{"id":7,"translation":"நீ அவர்களை மன்னிப்பதற்காக நிச்சயமாக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் அவர்கள் தங்கள் விரல்களை தங்கள் காதுகளில் ஆக்கிக் கொண்டனர். (என்னை அவர்கள் பார்க்காமல் இருப்பதற்காக தங்களை) தங்கள் ஆடைகளால் மூடிக்கொண்டனர். இன்னும், (நிராகரிப்பில்) பிடிவாதம் பிடித்தனர். பெருமையடித்தனர்."},{"id":8,"translation":"பிறகு, நிச்சயமாக நான் அவர்களை பகிரங்கமாக அழைத்தேன்."},{"id":9,"translation":"பிறகு, நிச்சயமாக நான் அவர்களிடம் (பொது இடத்தில்) வெளிப்படையாகப் பேசினேன். இன்னும் அவர்களிடம் தனியாக இரகசியமாகப் பேசினேன்."},{"id":10,"translation":"ஆக, நான் கூறினேன்: நீங்கள் உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புக் கேளுங்கள்! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக இருக்கிறான்."},{"id":11,"translation":"அவன் உங்களுக்கு மழையை தாரை தாரையாக அனுப்புவான்."},{"id":12,"translation":"இன்னும், உங்களுக்கு செல்வங்களாலும் ஆண் பிள்ளைகளாலும் உதவுவான். இன்னும், உங்களுக்கு தோட்டங்களை ஏற்படுத்துவான். இன்னும், நதிகளை உங்களுக்கு ஏற்படுத்துவான்."},{"id":13,"translation":"உங்களுக்கு என்ன ஆனது அல்லாஹ்வின் கண்ணியத்தை (மகத்துவத்தை) நீங்கள் பயப்படுவதில்லை?"},{"id":14,"translation":"திட்டமாக அவன் உங்களை பல நிலைகளாக (பல கட்டங்களாக -இந்திரியம், இரத்தக்கட்டி, சதைத்துண்டு இப்படியாக ஒரு நிலைக்குப் பின் ஒரு நிலையாக இறுதியில் முழு மனிதனாக) படைத்(து முடித்)தான்."},{"id":15,"translation":"ஏழு வானங்களை அடுக்கடுக்காக அல்லாஹ் எப்படி படைத்தான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா?"},{"id":16,"translation":"இன்னும் அவற்றில் சந்திரனை ஒளியாக அவன் ஆக்கினான். இன்னும், சூரியனை விளக்காக ஆக்கினான்."},{"id":17,"translation":"இன்னும், அல்லாஹ்தான் உங்களை பூமியில் இருந்து முளைக்க வைத்தான். (முதல் மனிதனை மண்ணிலிருந்து உருவாக்கினான். இன்னும் உங்கள் மூல சத்தை மண்ணிலிருந்து உருவாக்குகிறான்.)"},{"id":18,"translation":"பிறகு, அவன் உங்களை அதில்தான் மீட்பான். இன்னும், (அதிலிருந்து) அவன் உங்களை (பூமியிலிருந்து) வெளியேற்றுவான்."},{"id":19,"translation":"இன்னும், அல்லாஹ் உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்,"},{"id":20,"translation":"அதில் நீங்கள் விசாலமான பல பாதைகளில் செல்வதற்காக."},{"id":21,"translation":"நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்தனர். இன்னும் எவனுடைய செல்வமும் பிள்ளையும் நஷ்டத்தைத் தவிர (நன்மையை) அவனுக்கு அதிகப்படுத்தவில்லையோ அவனையே இவர்கள் பின்பற்றினர்.” (அவர்கள் தாமும் வழிகெட்டு, பிறரையும் வழிகெடுக்கிற வசதிபடைத்த தலைவர்களைத்தான் பின்பற்றினார்கள்.)"},{"id":22,"translation":"இன்னும், (இந்த மார்க்கத்தை எதிர்ப்பதற்கு) மிகப் பெரிய சூழ்ச்சி செய்தார்கள்."},{"id":23,"translation":"இன்னும், (தங்கள் மக்களை நோக்கி) கூறினார்கள்: நீங்கள் நிச்சயமாக உங்கள் தெய்வங்களை விட்டுவிடாதீர்கள். இன்னும் வத்து, சுவாஃ, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகிய தெய்வங்களை விட்டு விடாதீர்கள்."},{"id":24,"translation":"அவர்கள் பலரை வழி கெடுத்தனர். ஆகவே, (என் இறைவா!) அநியாயக்காரர்களுக்கு நீ அதிகப்படுத்தாதே, வழிகேட்டைத் தவிர!"},{"id":25,"translation":"அவர்களுடைய பாவங்களால் அவர்கள் (வெள்ளப் பிரளயத்தில்) மூழ்கடிக்கப்பட்டார்கள். உடனே நரகத்தில் நுழைக்கப்பட்டார்கள். ஆக, அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு உதவியாளர்களை காணவில்லை."},{"id":26,"translation":"இன்னும், நூஹ் கூறினார்: என் இறைவா! நிராகரிப்பாளர்களிலிருந்து பூமியில் வசிப்பவராக எவரையும் நீ விட்டுவிடாதே!"},{"id":27,"translation":"நிச்சயமாக நீ அவர்களை (உயிருடன்) விட்டுவிட்டால் (நம்பிக்கை கொண்ட) உனது அடியார்களை அவர்கள் வழிகெடுத்து விடுவார்கள். பாவியை, மிகப் பெரிய நிராகரிப்பாளனைத் தவிர (நல்லவர்களை, நம்பிக்கையாளர்களை) அவர்கள் பெற்றெடுக்க மாட்டார்கள். (அவர்களும் வழிகெட்டு, தாங்கள் பிள்ளைகளையும் வழிகெடுப்பார்கள்.)"},{"id":28,"translation":"என் இறைவா! என்னையும் என் பெற்றோரையும் நம்பிக்கையாளராக என் வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் மன்னிப்பாயாக! அநியாயக்காரர்களுக்கு அதிகப்படுத்தாதே, அழிவைத் தவிர!"}]},{"id":72,"verses":[{"id":1,"translation":"நிச்சயமாக நாம் நூஹை - அவருடைய மக்களின் பக்கம் (தூதராக) - அனுப்பினோம். ஏனெனில், நீர் உமது மக்களை - துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு வருவதற்கு முன்னர் - எச்சரிப்பீராக!"},{"id":2,"translation":"அது, நேர்வழிக்கு வழிகாட்டுகிறது. ஆகவே, நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம்; இன்னும், எங்கள் இறைவனுக்கு ஒருவரையும் நாங்கள் இணையாக்க மாட்டோம்."},{"id":3,"translation":"நிச்சயமாக விஷயமாவது, எங்கள் இறைவனின் மதிப்பு மிக உயர்ந்தது. அவன் (தனக்கு) மனைவியையும் பிள்ளைகளையும் எடுத்துக் கொள்ளவில்லை."},{"id":4,"translation":"இன்னும் நிச்சயமாக விஷயமாவது, எங்களில் உள்ள (-இப்லீஸ் ஆகிய) மூடன் அல்லாஹ்வின் மீது அநியாயமான (-உண்மைக்கு புறம்பான விஷயத்)தை கூறுபவனாக இருந்தான்."},{"id":5,"translation":"இன்னும், “மனிதர்களும் ஜின்களும் அல்லாஹ்வின் மீது பொய் சொல்ல மாட்டார்கள் என்று நிச்சயமாக நாங்கள் நம்பினோம்."},{"id":6,"translation":"இன்னும் நிச்சயமாக விஷயமாவது, மனிதர்களில் உள்ள ஆண்கள் சிலர் ஜின்களில் உள்ள ஆண்கள் சிலரிடம் பாதுகாவல் தேடினர். எனவே அவர்கள் (-ஆண் ஜின்கள்) அவர்களுக்கு (மனித ஆண்களுக்கு) பயத்தை (திகிலை) அதிகப்படுத்தினர்."},{"id":7,"translation":"இன்னும் நிச்சயமாக விஷயமாவது, அவர்கள் (-ஜின்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) நீங்கள் (-மனிதர்களில் உள்ள நிராகரிப்பாளர்கள்) எண்ணுவது போன்றுதான் அல்லாஹ் ஒருவரையும் (அவர் மரணித்த பின்னர் மறுமையில்) அறவே எழுப்ப மாட்டான் என்று எண்ணினர்."},{"id":8,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள் வானத்தை (சென்றடைய)த் தேடினோம். ஆக, அது கடுமையான காவல்களாலும் எரி நட்சத்திரங்களாலும் நிரப்பப்பட்டிருப்பதாக அதை நாங்கள் கண்டோம்."},{"id":9,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள் அ(ந்த வானத்)தில் பல இடங்களில் (வானவர்கள் பேசுகின்ற செய்தியை) ஒட்டுக்கேட்க உட்காருபவர்களாக இருந்தோம். ஆக, இப்போது யார் ஒட்டுக் கேட்பாரோ அவரை (எரிக்க) எதிர்பார்த்திருக்கின்ற எரி நட்சத்திரத்தை காண்பார்."},{"id":10,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள் அறியமாட்டோம், “பூமியில் உள்ளவர்களுக்கு தீமை ஏதும் நாடப்பட்டதா? அல்லது, அவர்களின் இறைவன் அவர்களுக்கு நேர்வழியை நாடினானா?” என்று."},{"id":11,"translation":"இன்னும் நிச்சயமாக எங்களில் நல்லவர்களும் உள்ளனர். இன்னும், எங்களில் அவர்கள் அல்லாத மற்ற (தீய)வர்களும் உள்ளனர். நாங்கள் பலதரப்பட்ட பிரிவுகளாக இருந்தோம்."},{"id":12,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள் அறிந்தோம், அதாவது “நாங்கள் பூமியில் அல்லாஹ்வை இயலாமல் ஆக்க அறவே முடியாது; இன்னும் நாங்கள் (அவனை விட்டும்) ஓடி (ஒளிந்து) அவனை இயலாமல் ஆக்கிவிட முடியாது (அவனை விட்டும் நாங்கள் எங்கும் தப்பிக்க முடியாது)” என்று."},{"id":13,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள் நேர்வழியை செவியுற்றபோது நாங்கள் அதை நம்பிக்கை கொண்டோம். ஆக, எவர் தன் இறைவனை நம்பிக்கை கொள்வாரோ அவர் (தனது நன்மைக்குரிய கூலி) குறைவதையும் (தான் செய்யாத குற்றத்தை தன் மீது சுமத்தப்படுகின்ற) அநியாயத்தையும் பயப்படமாட்டார்."},{"id":14,"translation":"இன்னும், நிச்சயமாக நாங்கள் எங்களில் முஸ்லிம்களும் உள்ளனர். இன்னும், எங்களில் (அல்லாஹ்வை நிராகரிக்கின்ற) அநியாயக்காரர்களும் உள்ளனர். ஆக, எவர் இஸ்லாமை ஏற்றாரோ அத்தகையவர்கள்தான் நேர்வழியை நன்கு ஆராய்ந்து தேடிப் பெற்றார்கள்."},{"id":15,"translation":"ஆக, அநியாயக்காரர்கள் நரகத்தின் எரி கொல்லிகளாக இருக்கிறார்கள்."},{"id":16,"translation":"இன்னும், நிச்சயமாக விஷயமாவது, அவர்கள் நேரான (இஸ்லாமிய) மார்க்கத்தில் இணைந்து உறுதியாக இருந்திருந்தால் நாம் (அவர்களுக்கு தேவையான) பலன் தரக்கூடிய அதிகமான சுத்தமான நீரை நாம் அவர்களுக்கு புகட்டி இருப்போம் (-அவர்களுக்கு வாழ்வாதாரத்தை விசாலமாக ஆக்கி இருப்போம்)."},{"id":17,"translation":"(அவர்களுக்கு வாழ்க்கை வசதியை நாம் கொடுப்பதாவது, அவர்கள் நமக்கு நன்றி செலுத்துகின்றார்களா என்று) அதன்மூலம் அவர்களை நாம் சோதிப்பதற்காக ஆகும். இன்னும், எவர் தன் இறைவனின் அறிவுரையை புறக்கணிப்பாரோ அவரை மிகக் கடினமான சிரமமான தண்டனையில் அவன் புகுத்துவான்."},{"id":18,"translation":"இன்னும் நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு உரியன. ஆகவே, அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்காதீர்கள்!"},{"id":19,"translation":"இன்னும், நிச்சயமாக விஷயமாவது, அல்லாஹ்வின் அடியார் (முஹம்மத்) அவனை வணங்குவதற்காக நின்றபோது அவர்கள் (-அரேபியர்கள்) எல்லோரும் ஒன்று சேர்ந்து அவருக்கு எதிராக ஆகிவிட முயற்சித்தனர்."},{"id":20,"translation":"(நபியே!) கூறுவீராக! நான் வணங்குவதெல்லாம் என் இறைவனை (மட்டும்)தான். ஒருவரையும் அவனுக்கு நான் இணையாக்க மாட்டேன்."},{"id":21,"translation":"(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் உங்களுக்கு கெடுதிக்கோ (-உங்களை விட்டும் அதை அகற்றுவதற்கும்) நல்லதுக்கோ (-உங்களுக்கு அதை செய்து தருவதற்கோ) சக்தி பெறமாட்டேன்."},{"id":22,"translation":"(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக நான் (அவனுக்கு மாறுசெய்தால்) என்னை அல்லாஹ்விடமிருந்து ஒருவரும் அறவே காப்பாற்ற மாட்டார். அவனை அன்றி நான் (வேறு ஓர்) ஒதுங்குமிடத்தை (எனக்கு) அறவே காணமாட்டேன்."},{"id":23,"translation":"(எனினும்,) அல்லாஹ்விடமிருந்து (செய்திகளை) எடுத்துரைப்பதற்கும் அவனுடைய தூதுத்துவ செய்திகளுக்கும் தவிர (வேறு எதற்கும் நான் உரிமை பெற மாட்டேன்). எவர் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் மாறு செய்வாரோ நிச்சயமாக அவருக்கு நரக நெருப்புதான் உண்டு. அதில் அவர்கள் எப்போதும் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள்."},{"id":24,"translation":"இறுதியாக, அவர்கள் தாங்கள் எச்சரிக்கப்பட்டதை (கண்கூடாக) பார்த்தால் அவர்கள் அறிந்து கொள்வார்கள், “எவர் உதவியாளரால் மிக பலவீனமானவர், எண்ணிக்கையால் மிக குறைவானவர்” என்று."},{"id":25,"translation":"(நபியே!) கூறுவீராக! “நீங்கள் எதை எச்சரிக்கப்படுகிறீர்களோ அது சமீபமாக உள்ளதா? அல்லது, அதற்கு என் இறைவன் ஒரு அவகாசத்தை ஆக்கி இருக்கின்றானா? என்று நான் அறியமாட்டேன்.”"},{"id":26,"translation":"(அவன்தான்) மறைவான விஷயங்களை நன்கறிந்தவன். ஆக, அவன், தனது மறைவான விஷயங்களை ஒருவருக்கும் வெளிப்படுத்த மாட்டான்."},{"id":27,"translation":"எனினும், அவன் (தனது) தூதர்களில் எவர்களை திருப்திகொண்டானோ அவர்களைத் தவிர. ஆக, (அவர்களுக்கு மட்டும் மறைவான விஷயங்களில் சிலவற்றை வெளிப்படுத்துவான்.) நிச்சயமாக அவன் அவர்களுக்கு முன்னாலிருந்தும் அவர்களுக்குப் பின்னாலிருந்தும் (கண்காணிக்கின்ற) பாதுகாவலர்களை அனுப்புவான்."},{"id":28,"translation":"அவர்கள் (-முந்திய தூதர்கள் எல்லோரும்) தங்கள் இறைவனின் தூதுத்துவ செய்திகளை திட்டமாக எடுத்துரைத்தார்கள் என்று அவர் (-முஹம்மத் நபி) அறிவதற்காக (அவன் தூதர்களுக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் பாதுகாவலர்களை அனுப்பி வைத்தான்). இன்னும், அவன் அவர்களிடம் உள்ளவற்றை சூழ்ந்தறிவான். இன்னும், எல்லா பொருள்களையும் அவன் எண்ணிக்கையால் (அவை என்னென்ன, எத்தனை என துல்லியமாக) கணக்கிட்டுள்ளான்."}]},{"id":73,"verses":[{"id":1,"translation":"(நபியே!) கூறுவீராக! நிச்சயமாக ஜின்களில் சில நபர்கள் (நான் குர்ஆன் ஓதுவதை) செவியுற்றனர் என்று எனக்கு வஹ்யி அறிவிக்கப்பட்டது. மேலும், அவர்கள் கூறினார்கள்: நிச்சயமாக நாங்கள் அதிசயமான குர்ஆனை செவியுற்றோம்."},{"id":2,"translation":"(வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!)"},{"id":3,"translation":"அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!)"},{"id":4,"translation":"அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக!"},{"id":5,"translation":"நிச்சயமாக நாம் உம்மீது மிக கனமான (சட்டங்களை உடைய) வேதத்தை இறக்குவோம்."},{"id":6,"translation":"நிச்சயமாக இரவு (நேர) வணக்கம் அதுதான் மிகவும் வலுவான தாக்கமுடையதும் அறிவுரையால் (அறிவுரையின் மூலம் படிப்பினை பெறுவதற்கு) மிகத் தெளிவானதும் (-மிகப் பொருத்தமானதும்) ஆகும்."},{"id":7,"translation":"நிச்சயமாக பகலில் உமக்கு நீண்ட ஓய்வு இருக்கிறது. (அதில் உமது உலகத் தேவைகளையும் உறக்கத்தையும் நீர் நிறைவேற்றலாம்.)"},{"id":8,"translation":"உமது இறைவனின் பெயரை நினைவு கூர்(ந்து அவனை அழைத்து, பிரார்த்தித்து வணங்கு)வீராக! இன்னும், அவன் பக்கம் முற்றிலும் நீர் ஒதுங்கிவிடுவீராக!"},{"id":9,"translation":"அவன்தான் கிழக்கு இன்னும் மேற்கின் இறைவன் ஆவான். அவனைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, அவனையே (உமக்கு) பொறுப்பாளனாக ஆக்கிக் கொள்வீராக!"},{"id":10,"translation":"இன்னும், அவர்கள் பேசுவதை சகிப்பீராக! இன்னும், அழகிய விதத்தில் அவர்களை விட்டு வி(லகி வி)டுவீராக!"},{"id":11,"translation":"இன்னும், என்னையும் சுகவாசிகளான பொய்ப்பித்தவர்களையும் விட்டுவிடுவீராக! (நான் அவர்களை கவனித்துக் கொள்கிறேன்.) இன்னும், அவர்களுக்கு கொஞ்ச (கால)ம் அவகாசம் தருவீராக!"},{"id":12,"translation":"நிச்சயமாக (கை, கால்களில் போடப்படுகிற) விலங்குகளும் சுட்டெரிக்கிற நரகமும் நம்மிடம் (அவர்களுக்காக) உண்டு."},{"id":13,"translation":"இன்னும், தொண்டையில் சிக்கிக் கொள்கிற உணவும் வலிமிகுந்த தண்டனையும் உண்டு."},{"id":14,"translation":"பூமியும் மலைகளும் குலுங்குகிற நாளில் (அவர்களுக்கு அந்த தண்டனைகள் கொடுக்கப்படும்.) இன்னும், (அந்நாளில்) மலைகள் தூவப்படுகிற மணலாக ஆகிவிடும்."},{"id":15,"translation":"நிச்சயமாக நாம் (உங்களில் யார் நம்பிக்கை கொண்டார், யார் நிராகரித்தார் என்று என்னிடம்) உங்களைப் பற்றி சாட்சி கூறுகின்ற ஒரு தூதரை உங்களிடம் அனுப்பினோம், ஃபிர்அவ்னுக்கு ஒரு தூதரை நாம் அனுப்பியது போன்று."},{"id":16,"translation":"ஆக, ஃபிர்அவ்ன் அந்த தூதருக்கு மாறுசெய்தான். ஆகவே, மிகக் கடுமையாக நாம் அவனை பிடித்தோம். (-அவனை கடுமையான தண்டனையைக் கொண்டு தண்டித்து அழித்தோம்.)"},{"id":17,"translation":"ஆக, நீங்கள் (அல்லாஹ்வை) நிராகரித்தால், பிள்ளைகளை வயோதிகர்களாக ஆக்கிவிடுகிற ஒரு நாளை எப்படி பயப்படுவீர்கள்?"},{"id":18,"translation":"வானம் அ(ன்றைய தினத்)தில் (துண்டு துண்டாக தெரித்து) பிளந்து விடும். அவனது வாக்கு கண்டிப்பாக நிறைவேறக்கூடியதாக இருக்கிறது."},{"id":19,"translation":"நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆகவே, யார் (மறுமையின் வெற்றியை) நாடுவாரோ அவர் தன் இறைவன் (உடைய மன்னிப்பு இன்னும் பொருத்தத்தின்) பக்கம் (சேர்த்துவைக்கிற நல்லறங்கள் உடைய) ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்."},{"id":20,"translation":"நிச்சயமாக உமது இறைவன் அறிவான், “நிச்சயமாக நீர் இரவின் மூன்றில் இரண்டு பகுதிகளை விட குறைவாக, இன்னும் அதன் பாதி, இன்னும் அதன் மூன்றில் ஒரு பகுதி நின்று வணங்குகிறீர்; இன்னும், உம்முடன் இருப்பவர்களில் ஒரு கூட்டமும் நின்று வணங்குகிறார்கள்.” அல்லாஹ்தான் இரவையும் பகலையும் (அவ்விரண்டிற்குரிய நேரங்களை) நிர்ணயிக்கிறான். நீங்கள் அதற்கு (-இரவு முழுக்க வணங்குவதற்கு) சக்திபெறவே மாட்டீர்கள் என்று அவன் நன்கறிவான். ஆகவே, அவன் உங்களை மன்னித்தான். ஆக, குர்ஆனில் (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! “உங்களில் நோயாளிகள் இருப்பார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் அருளை தேடியவர்களாக பூமியில் பயணம் செய்வார்கள்; இன்னும், மற்றும் சிலர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவார்கள்” என்று அல்லாஹ் அறிவான். ஆகவே, அ(ல்லாஹ்வின் வேதத்)திலிருந்து (உங்களுக்கு) இலகுவானதை (தொழுகையில்) ஓதுங்கள்! தொழுகையை நிலை நிறுத்துங்கள்! ஸகாத்தை கொடுங்கள்! அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்."}]},{"id":74,"verses":[{"id":1,"translation":"போர்வை போர்த்தியவரே!"},{"id":2,"translation":"எழுவீராக! எச்சரிப்பீராக!"},{"id":3,"translation":"உமது இறைவனை பெருமைப்படுத்துவீராக!"},{"id":4,"translation":"இன்னும், உமது ஆடையை (-உம்மை பாவங்களை விட்டு) சுத்தப்படுத்துவீராக!"},{"id":5,"translation":"சிலைகளை விட்டும் (அவற்றை வழிபடுவதை விட்டும்) விலகுவீராக!"},{"id":6,"translation":"(உமது அமல்களை) நீர் பெரிதாக கருதியவராக, (உமது இறைவனுக்கு முன்னால் உமது அமல்களை) சொல்லிக் காண்பிக்காதீர்!"},{"id":7,"translation":"இன்னும், உமது இறைவனுக்காக நீர் பொறுமையாக இருப்பீராக!"},{"id":8,"translation":"ஆக, எக்காளத்தில் ஊதப்பட்டால்,"},{"id":9,"translation":"அதுதான் அந்நாளில் மிக சிரமமான ஒரு நாள் ஆகும்."},{"id":10,"translation":"அது, நிராகரிப்பாளர்களுக்கு இலகுவானதல்ல."},{"id":11,"translation":"என்னையும் நான் எவனை தனியாக (-அவனுக்கு எவ்வித செல்வமும் சந்ததியும் இல்லாதவனாக அவனது தாய் வயிற்றிலிருந்து வெளியேறும்போது) படைத்தேனோ அவனையும் விட்டுவிடுவீராக!"},{"id":12,"translation":"இன்னும், (அவன் பிறந்து ஆளான பிறகு) அவனுக்கு நான் விசாலமான செல்வத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்."},{"id":13,"translation":"இன்னும், (அவனுடன் எப்போதும்) ஆஜராகி இருக்கக்கூடிய ஆண் பிள்ளைகளை (நான் அவனுக்கு கொடுத்தேன்)."},{"id":14,"translation":"இன்னும், அவனுக்கு அதிகமான வசதிகளை செய்து கொடுத்தேன்."},{"id":15,"translation":"பிறகு, (அவனுக்கு இன்னும் பல வசதிகளை) நான் அதிகப்படுத்த வேண்டுமென்று அவன் ஆசைப்படுகிறான்."},{"id":16,"translation":"அவ்வாறல்ல. நிச்சயமாக அவன் நமது வசனங்களுக்கு முரண்படக் கூடியவனாக (அவற்றை மறுப்பவனாக, அவற்றை மீறுபவனாக, நிராகரிப்பதில் பிடிவாதம் பிடித்தவனாக) இருந்தான்."},{"id":17,"translation":"விரைவில் அவனை மிகப் பெரிய சிரமத்திற்கு நான் நிர்ப்பந்தித்து விடுவேன்."},{"id":18,"translation":"நிச்சயமாக அவன் யோசித்தான். இன்னும், திட்டமிட்டான்."},{"id":19,"translation":"ஆக, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும்."},{"id":20,"translation":"பிறகு, அவன் எப்படி திட்டமிட்டாலும் அவன் அழியட்டும்."},{"id":21,"translation":"பிறகு, அவன் தாமதித்தான்."},{"id":22,"translation":"பிறகு, முகம் சுளித்தான். இன்னும், கடுகடுத்தான்."},{"id":23,"translation":"பிறகு, அவன் புறக்கணித்தான். இன்னும், பெருமையடித்தான்."},{"id":24,"translation":"ஆக, அவன் கூறினான்: இது, (சூனியக்காரர்களிடமிருந்து) கற்றுக்கொள்ளப்பட்ட சூனியமாகவே தவிர இல்லை."},{"id":25,"translation":"இது மனிதர்களின் சொல்லாகவே தவிர இல்லை."},{"id":26,"translation":"“சகர்” நரகத்தில் அவனை நான் விரைவில் பொசுக்குவேன்."},{"id":27,"translation":"“சகர்” என்றால் என்ன என்று உமக்குத் தெரியுமா?"},{"id":28,"translation":"அது (தன்னில் யாரையும்) வாழ வைக்காது! இன்னும், (செத்து அழிந்து விடுவதற்கு யாரையும்) விட்டுவிடாது."},{"id":29,"translation":"அது தோல்களை எரித்துவிடும்."},{"id":30,"translation":"அதன் மீது பத்தொன்பது வானவர்கள் (காவலுக்கு) இருப்பார்கள்."},{"id":31,"translation":"நரகத்தின் காவலாளிகளை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. நிராகரித்தவர்களுக்கு ஒரு குழப்பமாகவே தவிர அவர்களின் எண்ணிக்கையை நாம் ஆக்கவில்லை. வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதை) உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும் என்பதற்காகவும், நம்பிக்கை கொண்டவர்கள் நம்பிக்கையால் அதிகரிப்பதற்காகவும் வேதம் கொடுக்கப்பட்டவர்களும் நம்பிக்கையாளர்களும் சந்தேகிக்காமல் இருப்பதற்காகவும் தங்கள் உள்ளங்களில் நோயுள்ளவர்களும் நிராகரிப்பாளர்களும் இதன் மூலம் அல்லாஹ் என்ன உதாரணத்தை நாடுகிறான் என்று கூறுவதற்காகவும் (அவர்களின் எண்ணிக்கையை நாம் பத்தொன்பதாக ஆக்கினோம்). இவ்வாறுதான், அல்லாஹ் தான் நாடுகிறவர்களை வழிகெடுக்கிறான்; இன்னும், தான் நாடுகிறவர்களை நேர்வழி செலுத்துகிறான். உமது இறைவனின் இராணுவங்களை அவனைத் தவிர (யாரும்) அறிய மாட்டார்கள். இ(ந்த நரகமான)து இல்லை, மனிதர்களுக்கு நல்லுபதேசமாகவே தவிர!"},{"id":32,"translation":"அவ்வாறல்ல. சந்திரன் மீது சத்தியமாக!"},{"id":33,"translation":"இரவின் மீது சத்தியமாக, அது முடியும் போது!"},{"id":34,"translation":"அதிகாலை மீது சத்தியமாக, அது ஒளி வீசும் போது!"},{"id":35,"translation":"நிச்சயமாக அ(ந்த நரகமான)து மிகப் பெரிய விஷயங்களில் ஒன்றாகும்."},{"id":36,"translation":"அ(ந்த நரகமான)து மனிதர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கிறது."},{"id":37,"translation":"உங்களில் யார் (வழிபாட்டில்) முன்னேறுவதற்கு நாடினாரோ அவருக்கு, அல்லது (நன்மையில்) பின் தங்கி (பாவத்தில் இருந்து) விடுவதற்கு நாடினாரோ அவருக்கு (இந்த நரகம் எச்சரிக்கையாக இருக்கிறது)."},{"id":38,"translation":"ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்ததற்காக பிடிக்கப்படும். (-விசாரிக்கப்பட்டு அதன் செயலுக்கு தகுந்த கூலி அதற்கு கொடுக்கப்படும்)"},{"id":39,"translation":"வலது பக்கம் உள்ளவர்களைத் தவிர. (அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள்.)"},{"id":40,"translation":"அவர்கள் சொர்க்கங்களில் தங்களுக்குள் கேட்டுக் கொள்வார்கள்,"},{"id":41,"translation":"பாவிகளைப் பற்றி."},{"id":42,"translation":"(நிராகரிப்பாளர்களே!) உங்களை சகர் நரகத்தில் நுழைத்தது எது?"},{"id":43,"translation":"அவர்கள் (-பாவிகள்) கூறுவார்கள்: தொழுகையாளிகளில் நாங்கள் இருக்கவில்லை."},{"id":44,"translation":"இன்னும், ஏழைகளுக்கு உணவளிப்பவர்களாக நாங்கள் இருக்கவில்லை."},{"id":45,"translation":"இன்னும், வீணான காரியங்களில் ஈடுபடுவோருடன் சேர்ந்து நாங்கள் வீணான காரியங்களில் ஈடுபடுபவர்களாக இருந்தோம்."},{"id":46,"translation":"இன்னும், கூலி (கொடுக்கப்படும் மறுமை) நாளை பொய்ப்பிப்பவர்களாக நாங்கள் இருந்தோம்."},{"id":47,"translation":"இறுதியாக, எங்களுக்கு மரணம் வந்தது."},{"id":48,"translation":"ஆக, பரிந்துரை செய்பவர்களின் பரிந்துரை (இப்போது) அவர்களுக்கு பலனளிக்காது."},{"id":49,"translation":"ஆக, அவர்களுக்கு என்ன ஆனது, இந்த அறிவுரையை விட்டு புறக்கணித்து செல்கிறார்கள்?"},{"id":50,"translation":"தப்பித்து ஓடுகிற பயந்துபோன கழுதைகளைப் போல் அவர்கள் இருக்கிறார்கள்,"},{"id":51,"translation":"அவை வேட்டையாடுகிற, பாய்ந்து வருகிற சிங்கத்தைப் பார்த்து விரண்டோடுகின்றன."},{"id":52,"translation":"மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும் விரிக்கப்பட்ட (வேத) ஏடுகள் தனக்கு தரப்பட வேண்டும் என்று நாடுகிறார்கள்."},{"id":53,"translation":"அவ்வாறல்ல. (-அவ்வாறு கொடுக்கப்பட்டாலும் அவர்கள் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள்.) மாறாக, அவர்கள் மறுமையை பயப்படுவதில்லை. (ஆகவேதான், அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை.)"},{"id":54,"translation":"அவ்வாறல்ல. (-இந்த குர்ஆன் சூனியமும் அல்ல, மனிதர்களின் கூற்றும் அல்ல. மாறாக,) நிச்சயமாக இது ஒரு நல்லுபதேசமாகும்."},{"id":55,"translation":"ஆக, யார் நாடுவாரோ இதன் மூலம் அவர் உபதேசம் பெறுவார்."},{"id":56,"translation":"அல்லாஹ் நாடினால் தவிர அவர்கள் உபதேசம் பெறமாட்டார்கள். அவன்தான் (நமது) அச்சத்திற்கும் மன்னிப்புக்கும் மிகத் தகுதியானவன்."}]},{"id":75,"verses":[{"id":1,"translation":"போர்வை போர்த்தியவரே!"},{"id":2,"translation":"இன்னும், பழிக்கிற ஆன்மாவின் மீது சத்தியம் செய்கிறேன்!"},{"id":3,"translation":"மனிதன் எண்ணுகிறானா, அவனுடைய எலும்புகளை - (அவை உக்கிப்போன பின்னர்) - அறவே நாம் ஒன்று சேர்க்க மாட்டோம் (-அது நமக்கு முடியாது) என்று?"},{"id":4,"translation":"ஏன் முடியாது! அவனுடைய விரல்களை (அவை பிரிந்தில்லாமல், ஒட்டகத்தின் குலம்பைப் போல் ஒன்றோடு ஒன்று சேர்ந்த நிலையில்) சமமாக ஆக்கிவிடுவதற்கு நாம் ஆற்றலுடையவர்களாக இருக்கிறோம்."},{"id":5,"translation":"மாறாக, மனிதன் தனது வருங்காலத்திலும் பாவம் செய்வதற்கே நாடுகிறான்."},{"id":6,"translation":"மறுமை நாள் எப்போது வரும் என்று கேட்கிறான்."},{"id":7,"translation":"ஆக, பார்வை (திடுக்கிட்டு) திகைத்துவிட்டால்,"},{"id":8,"translation":"இன்னும், சந்திரன் ஒளி இழந்து விட்டால்,"},{"id":9,"translation":"இன்னும், சூரியனும் சந்திரனும் (ஒளி இல்லாமல்) ஒன்று சேர்க்கப்ப(ட்டு பூமியில் எறியப்ப)ட்டால்,"},{"id":10,"translation":"அந்நாளில் மனிதன் கூறுவான்: “தப்பிக்குமிடம் எங்கே?”"},{"id":11,"translation":"அவ்வாறல்ல! தப்பித்து ஓட அறவே முடியாது (-பாவிகளுக்கு அடைக்கலம் கொடுக்க பாதுகாப்பான இடம் ஏதும் இருக்காது)."},{"id":12,"translation":"அந்நாளில் உமது இறைவன் பக்கம்தான் இறுதியாக நிலையான தங்குமிடம் இருக்கிறது."},{"id":13,"translation":"மனிதன் அந்நாளில், தான் முந்தி செய்ததையும் பிந்தி செய்ததையும் (பழைய, புதிய செயல்கள் அனைத்தையும்) அறிவிக்கப்படுவான்."},{"id":14,"translation":"மாறாக, மனிதன் அவனுக்கே சாட்சியாக இருப்பான். (அவன் செய்த செயல்களுக்கு அவனது உறுப்புகளே அவனுக்கு எதிராக சாட்சி கூறும்.)"},{"id":15,"translation":"அவன் தனது வருத்தங்களை (சாக்கு போக்குகளை எல்லாம்) கூறினாலும் (அவனிடமிருந்து அவை ஏற்கப்படாது)."},{"id":16,"translation":"(நபியே!) இதை நீர் அவசரமாக (மனனம்) செய்வதற்காக இ(தை ஓதுவ)தற்கு உமது நாவை அசைக்காதீர்."},{"id":17,"translation":"நிச்சயமாக அதை (உமது உள்ளத்தில்) ஒன்று சேர்ப்பதும் (பிறகு) அதை (நீர்) ஓதும்படி செய்வதும் நம்மீது கடமையாகும்."},{"id":18,"translation":"ஆக, இதை நாம் ஓதினால் அது ஓதப்படுவதை நீர் பின்தொடர்வீராக! (-செவிதாழ்த்தி கேட்பீராக!)"},{"id":19,"translation":"பிறகு, நிச்சயமாக அதை விவரிப்பது நம்மீது கடமையாகும்."},{"id":20,"translation":"அவ்வாறல்ல! (-மறுமையில் நீங்கள் எழுப்பப்பட மாட்டீர்கள், உங்கள் செயல்களுக்கு உங்களுக்கு கேள்வி கணக்கு இல்லை என்று நீங்கள் கூறுவது போல் அல்ல உண்மை நிலவரம்.) மாறாக, நீங்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறீர்கள்."},{"id":21,"translation":"இன்னும் மறுமையை விட்டுவிடுகிறீர்கள்."},{"id":22,"translation":"அந்நாளில் சில முகங்கள் செழிப்பாக (பிரகாசமாக, அழகாக) இருக்கும்."},{"id":23,"translation":"தமது இறைவனை பார்த்துக் கொண்டிருக்கும்."},{"id":24,"translation":"இன்னும், அந்நாளில் சில முகங்கள் கருத்து காய்ந்துபோய் (விகாரமாக) இருக்கும்."},{"id":25,"translation":"அதற்கு கடுமையான ஒரு பிரச்சனை நிகழப்போகிறது என்று அது அறிந்துகொள்ளும்."},{"id":26,"translation":"அவ்வாறல்ல! (-அவர்கள் தங்களது இணைவைத்தலுக்காகவும் பாவங்களுக்காகவும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று நினைப்பது போல் அல்ல. பாவிகளின்) உயிர் (பிரிகின்ற நேரத்தில் அது) தொண்டைக் குழியை அடைந்தால்,"},{"id":27,"translation":"இன்னும், ஓதிப்பார்ப்பவர் யாரும் இருக்கிறாரா என்று கேட்கப்பட்டால்,"},{"id":28,"translation":"இன்னும், நிச்சயமாக இது (உலகை விட்டு போவதற்குரிய) பிரிவுதான் என்பதை அவன் அறிந்துகொண்டால்,"},{"id":29,"translation":"இன்னும், (மறுமை எனும்) கெண்டைக் காலுடன் (உலகம் எனும்) கெண்டைக் கால் பின்னிக்கொண்டால், (உலகத்தின் கடுமையான இறுதி நிலையும் மறுமையின் பயங்கரமான முதல் நிலையும் மனிதனுக்குள் அப்போது ஒன்று சேரும்.)"},{"id":30,"translation":"அந்நாளில், உமது இறைவனிடமே (உயிர்கள்) ஓட்டிக்கொண்டு வரப்படுகின்ற இடம் இருக்கிறது. (அப்போது அந்தப் பாவி தனது தண்டனையை அறிந்து கொள்வான்.)"},{"id":31,"translation":"ஆக, அவன் (இறை வேதத்தை) உண்மைப்படுத்தவில்லை. தொழவும் இல்லை."},{"id":32,"translation":"எனினும், அவன் பொய்ப்பித்தான்; விலகிச் சென்றான்."},{"id":33,"translation":"பிறகு, அவன் தனது குடும்பத்தாரிடம் கர்வம் கொண்டவனாக (திரும்பி) சென்றான்."},{"id":34,"translation":"உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்."},{"id":35,"translation":"பிறகு, உனக்குக் கேடுதான், ஆக, (உனக்கு) கேடுதான்."},{"id":36,"translation":"மனிதன், எண்ணுகிறானா, தான் கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படுவான் என்று?"},{"id":37,"translation":"அவன் (கருவறையில்) செலுத்தப்படுகின்ற இந்திரியத்தின் ஒரு துளி விந்தாக இருக்கவில்லையா?"},{"id":38,"translation":"பிறகு, (அந்த மனிதன்) கருவாக (இரத்தக்கட்டியாக) இருந்தான். ஆக, (அவனை இறைவன்) படைத்தான். இன்னும், (அவனை முழு மனிதனாக பார்ப்பவனாக செவியுறுபவனாக பேசுபவனாக) சரிப்படுத்தினான்."},{"id":39,"translation":"ஆக, அவனிலிருந்து ஆண், பெண் இனத்தவர்களை அவன் படைக்கிறான்."},{"id":40,"translation":"இ(த்தகைய பேராற்றல் உள்ள இறை)வன் இறந்தவர்களை உயிர்ப்பிப்பதற்கு ஆற்றலுடையவனாக இல்லையா?"}]},{"id":76,"verses":[{"id":1,"translation":"மறுமை நாளின் மீது சத்தியம் செய்கிறேன்!"},{"id":2,"translation":"நிச்சயமாக நாம் மனிதனை (ஆண், பெண்ணுடைய இந்திரியத்தில் இருந்து) கலக்கப்பட்ட விந்துத் துளியிலிருந்து படைத்தோம். அவனை நாம் சோதிக்கிறோம். ஆக, செவியுறுபவனாக, பார்ப்பவனாக அவனை ஆக்கினோம்."},{"id":3,"translation":"நிச்சயமாக நாம் அவனுக்கு (நேரான) பாதையை வழிகாட்டினோம், ஒன்று, அவன் நன்றி உள்ளவனாக இருப்பதற்கு; அல்லது, நன்றி கெட்டவனாக இருப்பதற்கு."},{"id":4,"translation":"நிச்சயமாக நாம் நிராகரிப்பாளர்களுக்கு (அவர்களின் கை, கால்களை கட்டுவதற்கு) சங்கிலிகளையும் விலங்குகளையும் கொழுந்து விட்டெரியக்கூடிய நெருப்பையும் தயார் செய்துள்ளோம்."},{"id":5,"translation":"நிச்சயமாக நல்லவர்கள் மது குவளையிலிருந்து பருகுவார்கள், அதன் கலப்பு காஃபூர் நறுமணத்தால் இருக்கும்."},{"id":6,"translation":"அ(ந்த நறுமணமான)து, ஓர் ஊற்றாகும். அதில் இருந்து அல்லாஹ்வின் அடியார்கள் அருந்துவார்கள். அதை அவர்கள் (விரும்பிய இடங்களுக்கெல்லாம்) ஓட வைப்பார்கள்."},{"id":7,"translation":"அவர்கள் நேர்ச்சையை (-தங்கள் மீதுள்ள கடமையான வணக்கங்களை) நிறைவேற்றுவார்கள். இன்னும், ஒரு நாளை பயப்படுவார்கள், அதன் தீமை (அல்லாஹ் கருணை புரிந்தவர்களைத் தவிர மற்ற எல்லோரையும்) சூழ்ந்ததாக, (அவர்கள் மீது) பரவியதாக, கடுமையானதாக இருக்கும்."},{"id":8,"translation":"இன்னும், அவர்கள் உணவை - அதன் பிரியம் (-அதன் தேவை தங்களுக்கு) இருப்பதுடன் - ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் கைதிகளுக்கும் உணவளிப்பார்கள்."},{"id":9,"translation":"“நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் (இதற்கு) கூலியையும் நன்றியையும் நாங்கள் நாடவில்லை."},{"id":10,"translation":"நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் (பாவிகளின் முகங்கள்) கடுகடுக்கின்ற (குற்றவாளிகளின் நெற்றிகள்) சுருங்கிவிடுகின்ற ஒரு நாளை பயப்படுகின்றோம்.”"},{"id":11,"translation":"ஆக, அந்நாளின் தீமையில் இருந்து அல்லாஹ் அவர்களை பாதுகாப்பான். இன்னும், அவன் அவர்களுக்கு முக செழிப்பையும் (பிரகாசத்தையும் அழகையும்) மன மகிழ்ச்சியையும் கொடுப்பான்."},{"id":12,"translation":"இன்னும், அவர்கள் (வணக்க வழிபாட்டில், பாவங்களை விட்டு விலகி இருப்பதில், சோதனைகளை தாங்கிக் கொள்வதில்) பொறுமையாக இருந்ததால் அவன் அவர்களுக்கு சொர்க்கத்தையும் பட்டையும் (-பட்டாடைகளையும்) கூலியாகக் கொடுப்பான்."},{"id":13,"translation":"அவர்கள் அதில் கட்டில்களில் சாய்ந்தவர்களாக (சொர்க்க இன்பங்களை அனுபவிப்பவர்களாக) இருப்பார்கள். அதில் சூரியனையோ குளிரையோ காண மாட்டார்கள். (அங்கு உஷ்ணமும் இருக்காது, கடும் குளிரும் இருக்காது.)"},{"id":14,"translation":"இன்னும், அதன் (மரங்களின்) நிழல்கள் அவர்களுக்கு அருகில் இருக்கும். அவற்றின் கனிகள் மிக தாழ்வாக (பறித்து புசிப்பதற்கு இலகுவாக) ஆக்கப்பட்டிருக்கும்."},{"id":15,"translation":"இன்னும், வெள்ளியினால் செய்யப்பட்ட பாத்திரங்களுடனும் கண்ணாடிகளாக இருக்கிற கெண்டிகளுடனும் அவர்களை சுற்றி வரப்படும்."},{"id":16,"translation":"அவை வெள்ளி கலந்த கண்ணாடிகளாகும். அவற்றை (-அவற்றின் அளவையும் அழகையும்) அவர்கள் (-சொர்க்கவாசிகளுக்கு பானம் புகட்டுகின்ற பணியாளர்கள்) துல்லியமாக நிர்ணயிப்பார்கள்."},{"id":17,"translation":"இன்னும் அதில் (-சொர்க்கத்தில்) மதுக் குவளையில் இருந்து அவர்களுக்கு (மது) புகட்டப்படும். அதன் கலவை இஞ்சியாக இருக்கும்."},{"id":18,"translation":"அதில் உள்ள ஓர் ஊற்றாகும் அது. அதற்கு சல்சபீல் என்று பெயர் கூறப்படும்."},{"id":19,"translation":"இன்னும் (சிறுவர்களாகவே) நிரந்தரமாக இருக்கும் சிறுவர்கள் அவர்களை சுற்றி வருவார்கள். நீர் அ(ந்த சிறு)வர்களைப் பார்த்தால் பரப்பி வைக்கப்பட்ட முத்துக்களாக அவர்களை நினைப்பீர்."},{"id":20,"translation":"இன்னும் (சொர்க்கத்தில்) நீர் எந்த இடத்தைப் பார்த்தாலும் பேரின்பத்தையும் பேராட்சியையும் நீர் பார்ப்பீர்."},{"id":21,"translation":"அவர்களுக்கு மேல் (உள் புறம்) பச்சை நிற மென்மையான பட்டும் (வெளிப் புறம்) தடிப்பான பட்டு ஆடைகளும் இருக்கும். இன்னும் வெள்ளியினால் செய்யப்பட்ட காப்புகளால் அலங்கரிக்கப்படுவார்கள். இன்னும், அவர்களின் இறைவன் அவர்களுக்கு மிகத் தூய்மையான பானத்தை புகட்டுவான்."},{"id":22,"translation":"நிச்சயமாக இவை (அனைத்தும்) உங்களுக்கு (-நீங்கள் செய்த நன்மைகளுக்கு) கூலியாக இருக்கும். உங்கள் (-சொர்க்கத்தைப் பெறுவதற்காக நீங்கள் செய்த) உழைப்பு நன்றி அறியப்பட்டதாக (பாராட்டுக்குரியதாக, நற்கூலிகளுக்கு தகுந்ததாக) இருக்கும்."},{"id":23,"translation":"நிச்சயமாக நாம்தான் உம்மீது இந்த குர்ஆனை கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினோம்."},{"id":24,"translation":"ஆக, உமது இறைவனின் கட்டளைக்காக (-அவன் உம்மீது கட்டாயமாக்கிய கடமைகளையும் சுமத்திய பொறுப்புகளையும் நிறைவேற்றுவதில்) நீர் பொறுமையாக இருப்பீராக! அவர்களில் (எந்த ஒரு) பாவிக்கும் அல்லது நிராகரிப்பாளருக்கும் நீர் கீழ்ப்படியாதீர்!"},{"id":25,"translation":"இன்னும், உமது இறைவனின் பெயரை காலையி(ல் ஃபஜ்ர் தொழுகையி)லும் மாலையி(ல் ளுஹ்ர், அஸ்ர் தொழுகைகளி)லும் நினைவு கூர்வீராக!"},{"id":26,"translation":"இன்னும், இரவில் அவனுக்காக சிரம் பணிந்து (மஃரிபு இன்னும் இஷா தொழுகைகளை) தொழுவீராக! இன்னும், நீண்ட நேரம் (உபரியான தொழுகைகள் மூலம்) அவனை தொழுது வணங்குவீராக!"},{"id":27,"translation":"நிச்சயமாக இவர்கள் (அவசரமான) உலக வாழ்க்கையை விரும்புகிறார்கள். இன்னும், அவர்களுக்கு முன்னர் இருக்கின்ற மிக கனமான ஒரு நாளை (-அந்நாளுக்காக நன்மைகளை சேகரிப்பதை) விட்டுவிடுகிறார்கள்."},{"id":28,"translation":"நாம்தான் அவர்களை படைத்தோம், அவர்களின் படைப்பை (-உடல் உறுப்புகளை, மூட்டுகளை) உறுதிப்படுத்தினோம். நாம் நாடினால் (படைப்பால்) அவர்கள் போன்ற மனிதர்களை (ஆனால், அமல்களால் அவர்களுக்கு மாற்றமானவர்களை அவர்களுக்கு) பதிலாக நாம் கொண்டு வருவோம்."},{"id":29,"translation":"நிச்சயமாக இது ஓர் அறிவுரையாகும். ஆக, யார் (வெற்றி பெற) நாடுகிறாரோ அவர் தனது இறைவனின் பக்கம் ஒரு பாதையை ஏற்படுத்திக் கொள்ளட்டும்."},{"id":30,"translation":"அல்லாஹ் நாடினால் தவிர நீங்கள் நாடமுடியாது. நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவனாக, மகா ஞானவானாக இருக்கிறான்."},{"id":31,"translation":"அவன் யாரை நாடுகிறானோ அவரை தனது அருளில் அவன் பிரவேசிக்க வைக்கிறான். அநியாயக்காரர்கள் - துன்புறுத்தும் தண்டனையை அவர்களுக்காக அவன் தயார்செய்து வைத்துள்ளான்."}]},{"id":77,"verses":[{"id":1,"translation":"காலத்தில் ஒரு பகுதி நேரம் மனிதனுக்கு (இப்படி) வரவில்லையா, (அந்த நேரத்தில்) நினைவு கூறப்படுகின்ற (-பேசப்படுகின்ற) ஒரு பொருளாக அவன் இருக்கவில்லை?"},{"id":2,"translation":"அதிவேகமாக வீசுகிற புயல்காற்றுகள் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"(மேகங்களை பல திசைகளில்) பரப்புகின்ற காற்றுகள் மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"(உண்மைக்கும் பொய்யுக்கும் இடையில்) தெளிவாக பிரித்துவிடக் கூடிய அத்தாட்சிகள் மீது சத்தியமாக!"},{"id":5,"translation":"(நபிமார்கள் மீது வேதங்களை) இறக்குகிற (வான)வர்கள் மீது சத்தியமாக!"},{"id":6,"translation":"(அல்லாஹ்வின் புறத்திலிருந்து அடியார்கள் மீது) ஆதாரமாக இருப்பதற்காக, அல்லது (அவர்களுக்கு) எச்சரிக்கையாக இருப்பதற்காக (வேதங்கள் இறக்கப்படுகின்றன)!"},{"id":7,"translation":"நிச்சயமாக நீங்கள் எச்சரிக்கப்படுவது நிகழ்ந்தே தீரும்."},{"id":8,"translation":"ஆக, நட்சத்திரங்கள் ஒளி மங்கிவிடும்போது,"},{"id":9,"translation":"இன்னும், வானம் பிளக்கப்படும்போது,"},{"id":10,"translation":"இன்னும், மலைகள் சுக்கு நூறாக பொசுக்கப்படும்போது,"},{"id":11,"translation":"இன்னும், தூதர்கள் (மறுமையில் அவர்களுக்கான குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று சேர்வதற்காக) நேரம் குறிக்கப்படும்போது,"},{"id":12,"translation":"எந்த நாளுக்காக அவர்கள் நேரம் குறிக்கப்பட்டு இருக்கிறார்கள்!?"},{"id":13,"translation":"(ஆம், மறுமையின்) தீர்ப்பு நாளுக்காக (அவர்கள் நேரம் குறிக்கப்பட்டுள்ளார்கள்)."},{"id":14,"translation":"தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":15,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":16,"translation":"(நிராகரித்த) முன்னோர்களை நாம் அழிக்கவில்லையா?"},{"id":17,"translation":"பிறகு, (அவர்களுக்கு பின்னர் வந்த நிராகரிப்பாளர்களான) பின்னோர்கள் (நிராகரிப்பிலும் பிறகு தண்டனை அனுபவிப்பதிலும்) அவர்(களின் முன்னோர்)களை பின்தொடரும்படி செய்தோம்."},{"id":18,"translation":"இவ்வாறுதான் குற்றவாளிகளுக்கு நாம் செய்வோம்."},{"id":19,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":20,"translation":"பலவீனமான ஒரு நீரிலிருந்து நாம் உங்களை படைக்கவில்லையா?"},{"id":21,"translation":"ஆக, உறுதியான ஓர் இடத்தில் நாம் அதை வைத்தோம்,"},{"id":22,"translation":"குறிப்பிட்ட ஒரு தவணை வரை."},{"id":23,"translation":"ஆக, நாம் திட்டமிட்டோம். நாமே சிறந்த திட்டமிடுபவர்கள்."},{"id":24,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":25,"translation":"பூமியை (அது தனக்குள்) ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா,"},{"id":26,"translation":"(அது தன் முதுகின் மேல்) உயிருள்ளவர்களையும் (தன் வயிற்றுக்குள்) இறந்தவர்களையும் (சுமக்கக்கூடிய ஒரு பாத்திரமாக நாம் ஆக்கவில்லையா)?"},{"id":27,"translation":"இன்னும், அதில் மிக உயரமான (பெரிய) மலைகளை நாம் ஆக்கினோம். இன்னும், உங்களுக்கு மதுரமான நீரை நாம் புகட்டினோம்."},{"id":28,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":29,"translation":"நீங்கள் எதை பொய்ப்பிப்பவர்களாக இருந்தீர்களோ அதன் பக்கம் (இன்று) செல்லுங்கள்!"},{"id":30,"translation":"மூன்று கிளைகளை உடைய (நெருப்பு) புகையின் பக்கம் நீங்கள் செல்லுங்கள்!"},{"id":31,"translation":"அது நிழல்தரக்கூடியது அல்ல. இன்னும், அது (நெருப்பின்) ஜுவாலையிலிருந்து தடுக்காது."},{"id":32,"translation":"நிச்சயமாக அ(ந்த நரகமான)து மாளிகையைப் போல் உள்ள நெருப்பு கங்குகளை எறியும்!"},{"id":33,"translation":"அவையோ கரு மஞ்சள் நிற ஒட்டகைகளைப் போல் இருக்கும்!"},{"id":34,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":35,"translation":"இது அவர்கள் பேசாத நாளாகும்."},{"id":36,"translation":"இன்னும், அவர்களுக்கு அனுமதி தரப்படாது. (அனுமதி கொடுத்தால்தானே) அவர்கள் சாக்குபோக்குகள் கூறுவதற்கு."},{"id":37,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":38,"translation":"இது தீர்ப்பு நாளாகும். உங்களையும் (உங்கள்) முன்னோரையும் (ஒரே மைதானத்தில்) நாம் ஒன்று சேர்த்துள்ளோம்."},{"id":39,"translation":"ஆக, உங்களிடம் (எனக்கு எதிராக தீங்கு செய்வதற்கு; அல்லது, நீங்கள் எனது தண்டனையிலிருந்து தப்பிப்பதற்கு) ஒரு சூழ்ச்சி இருந்தால், எனக்கு (அந்த) சூழ்ச்சி(யை) செய்யுங்கள்."},{"id":40,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":41,"translation":"நிச்சயமாக இறையச்சம் உள்ளவர்கள் (அடர்த்தியான மரங்களின்) நிழல்களிலும் ஊற்றுகளிலும்,"},{"id":42,"translation":"அவர்கள் விரும்புகின்ற பழங்களிலும் (-அவற்றைப் புசிப்பதிலும்) இருப்பார்கள். (-அவற்றை முழுமையாக அனுபவிப்பார்கள்.)"},{"id":43,"translation":"நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றுக்கு (-உங்கள் நல்ல அமல்களுக்கு) பகரமாக இன்பமாக (இவற்றை) உண்ணுங்கள்! பருகுங்கள்!"},{"id":44,"translation":"நிச்சயமாக நாம் நல்லறம் புரிபவர்களுக்கு இவ்வாறுதான் கூலி கொடுப்போம்."},{"id":45,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":46,"translation":"(இவ்வுலகில்) சிறிது காலம் உண்ணுங்கள்! சுகம் அனுபவியுங்கள்! நிச்சயமாக நீங்கள் குற்றவாளிகள் ஆவீர்கள்!"},{"id":47,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":48,"translation":"தொழுங்கள் என்று அவர்களுக்கு சொல்லப்பட்டால் அவர்கள் தொழ மாட்டார்கள்."},{"id":49,"translation":"பொய்ப்பித்தவர்களுக்கு அந்நாளில் நாசம்தான்!"},{"id":50,"translation":"ஆக, (இந்த குர்ஆனை இவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை என்றால்) இதற்கு பின்னர் வேறு எந்த (வேத) செய்தியை இவர்கள் நம்பிக்கை கொள்வார்கள்?"}]},{"id":78,"verses":[{"id":1,"translation":"தொடர்ச்சியாக வீசுகிற காற்றுகள் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"மகத்தான செய்தியைப் பற்றியா?"},{"id":3,"translation":"அதில் அவர்கள் (தங்களுக்குள்) கருத்து வேறுபாடு கொள்கிறார்கள். (அவர்களில் ஒருவர் மறுமை உண்டு என்றும்; இன்னொருவர் மறுமை இல்லை என்றும் கூறுகிறார்.)"},{"id":4,"translation":"அவ்வாறல்ல! (அவர்கள் அதை) விரைவில் அறிவார்கள்."},{"id":5,"translation":"பிறகு(ம் கூறுகிறேன்), அவ்வாறல்ல. (உண்மையை) விரைவில் அறிவார்கள்."},{"id":6,"translation":"பூமியை விரிப்பாக நாம் ஆக்கவில்லையா?"},{"id":7,"translation":"இன்னும், மலைகளை - (பூமி ஆடாமல் இருக்க அதை ஸ்திரப்படுத்தும்) முளைக்கோல்களாக நாம் ஆக்கவில்லையா?"},{"id":8,"translation":"இன்னும், உங்களை ஜோடிகளாகப் படைத்தோம். (எல்லாவற்றிலும் ஆண், பெண், நல்லது, கெட்டது, வானம், பூமி, நீர், நெருப்பு என இரு வகைகளை படைத்தோம்.)"},{"id":9,"translation":"இன்னும், உங்கள் நித்திரையை (உங்களுக்கு) ஓய்வாக ஆக்கினோம்."},{"id":10,"translation":"இன்னும், இரவை (உங்களை மூடிக்கொள்கிற) ஆடையாக ஆக்கினோம்."},{"id":11,"translation":"இன்னும், பகலை வாழ்வா(தாரத்தை தேடுவதற்கான நேரமா)க ஆக்கினோம்."},{"id":12,"translation":"இன்னும், உங்களுக்கு மேல் பலமான ஏழு வானங்களை அமைத்தோம்."},{"id":13,"translation":"இன்னும், பிரகாசிக்கக்கூடிய விளக்கை (முதல் வானத்தில்) ஆக்கினோம்."},{"id":14,"translation":"இன்னும், கார்மேகங்களிலிருந்து தொடர்ச்சியாக பொழியக்கூடிய (மழை) நீரை இறக்கினோம்."},{"id":15,"translation":"அதன் மூலம் தானியத்தையும் தாவரத்தையும் நாம் உற்பத்தி செய்வதற்காக (மழையை இறக்கினோம்)."},{"id":16,"translation":"இன்னும், (பழங்கள் நிறைந்த, கிளைகள்) அடர்த்தியான தோட்டங்களையும் (நாம் உற்பத்தி செய்வதற்காக மழையை இறக்கினோம்)."},{"id":17,"translation":"நிச்சயமாக தீர்ப்பு நாள் குறிப்பிடப்பட்ட காலமாக இருக்கிறது."},{"id":18,"translation":"எக்காளத்தில் ஊதப்படுகிற நாளில் (அது நிகழும்). ஆக, (அந்த நாளில் நீங்கள் பல) கூட்டங்களாக வருவீர்கள்."},{"id":19,"translation":"இன்னும், வானம் திறக்கப்படும். ஆக, அது, (பல) வழிகளுடையதாக மாறிவிடும்."},{"id":20,"translation":"இன்னும், மலைகள் அகற்றப்பட்டுவிடும். ஆக, (பார்ப்பவர்களுக்கு) அது கானல் நீராக மாறிவிடும்."},{"id":21,"translation":"நிச்சயமாக நரகம் எதிர்பார்க்கக்கூடியதாக இருக்கிறது."},{"id":22,"translation":"எல்லை மீறிகளுக்கு (-பெரும் பாவிகளுக்கு) தங்குமிடமாக இருக்கும்."},{"id":23,"translation":"அதில் (அவர்கள்) நீண்ட காலங்கள் தங்கக் கூடியவர்களாக (இருப்பார்கள்)."},{"id":24,"translation":"(உடல்கள் மீது நரக நெருப்பின் சூட்டை தனிக்கிற) குளிர்ச்சியையோ (குடிப்பதற்கும் தாகம் தீர்ப்பதற்கும் நல்ல) ஒரு பானத்தையோ அதில் அவர்கள் சுவைக்க மாட்டார்கள்,"},{"id":25,"translation":"கொதி நீரையும், சீழ் சலத்தையும் தவிர. (இவைதான் அவர்களின் குடிபானங்களாக இருக்கும்.)"},{"id":26,"translation":"(அவர்களின் செயல்களுக்குத்) தகுந்த கூலியாக (கூலி கொடுக்கப்படுவார்கள்.)"},{"id":27,"translation":"நிச்சயமாக அவர்கள் (மறுமையில் தங்களது செயல்கள்) விசாரிக்கப்படுவதை பயப்படாதவர்களாக இருந்தார்கள்."},{"id":28,"translation":"இன்னும், நம் வசனங்களை பிடிவாதமாக பொய்ப்பித்தார்கள்."},{"id":29,"translation":"(அவர்களின் செயல்கள்) எல்லாவற்றையும் எழுதி அவற்றைப் பதிவு செய்தோம்."},{"id":30,"translation":"ஆகவே, (இன்றைய தினம் நரக தண்டனையை) சுவையுங்கள்! ஆக, உங்களுக்கு அதிகப்படுத்தவே மாட்டோம், தண்டனையைத் தவிர!"},{"id":31,"translation":"அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி (-நற்பாக்கியம்) உண்டு."},{"id":32,"translation":"தோட்டங்களும் திராட்சைகளும் (அவர்களுக்கு) உண்டு."},{"id":33,"translation":"இன்னும், சம வயதுடைய, வாலிபமான கன்னிகளும் உண்டு."},{"id":34,"translation":"இன்னும், (மதுவால்) நிரம்பிய கிண்ணமும் (அவர்களுக்கு) உண்டு."},{"id":35,"translation":"அதில் வீண் பேச்சையும், (ஒருவர் மற்றவரைப்) பொய்ப்பிப்பதையும் செவியுற மாட்டார்கள்."},{"id":36,"translation":"உம் இறைவனிடமிருந்து கூலியாக, கணக்கிடப்பட்ட (போதுமான) அருட்கொடையாக (இவற்றை வழங்கப்படுவார்கள்)."},{"id":37,"translation":"(அவன்,) வானங்கள், பூமி, இன்னும் அவ்விரண்டிற்கும் மத்தியிலுள்ளவற்றின் அதிபதி, பேரருளாளன் (ஆவான்). அவனிடம் பேசுவதற்கு உரிமை பெறமாட்டார்கள்,"},{"id":38,"translation":"ஜிப்ரீலும், மலக்குகளும் வரிசையாக நிற்கிற நாளில். பேரருளாளன் (அல்லாஹ்) எவருக்கு அனுமதித்தானோ அவரைத் தவிர பேசமாட்டார்கள். இன்னும், (பேசுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட) அவர் சரியானதையே கூறுவார்."},{"id":39,"translation":"அதுதான் உண்மையான நாள். (அது நிகழ்ந்தே தீரும்.) ஆக, யார் (நற்பாக்கியத்தை) நாடுவாரோ (அவர்) தம் இறைவனருகில் (தனக்கு) மீளுமிடத்தை (-தங்குமிடத்தை) ஆக்கிக்கொள்வார்."},{"id":40,"translation":"மனிதன் தனது இரு கரங்கள் முற்படுத்தியவற்றைப் பார்க்கிற நாளில் (நிகழ இருக்கிற) சமீபமான ஒரு தண்டனையைப் பற்றி நிச்சயமாக நாம் உங்களை எச்சரித்தோம். இன்னும் (அந்நாளில்) நிராகரிப்பாளன் கூறுவான்: “நான் மண்ணாக ஆகிவிடவேண்டுமே” என்று."}]},{"id":79,"verses":[{"id":1,"translation":"எதைப் பற்றி அவர்கள் (தங்களுக்குள்) விசாரித்துக் கொள்கிறார்கள்?"},{"id":2,"translation":"(நல்லோரின் உயிர்களை) மென்மையாக கைப்பற்றுவோர் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"நீந்துவோர் மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"(இறைக் கட்டளையை நிறைவேற்ற) முந்துவோர் மீது சத்தியமாக!"},{"id":5,"translation":"காரியத்தை நிர்வகிப்போர் மீது சத்தியமாக! (நீங்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப் படுவீர்கள்,)"},{"id":6,"translation":"பூமி(யும் மலையும் பலமாக) அதிருகின்ற நாளில்."},{"id":7,"translation":"பின்தொடரக்கூடியது (-மக்கள் எழுப்பப்படுவதற்காக இரண்டாவது முறையாக எக்காளம் ஊதப்படுதல்) அதை பின்தொடரும்."},{"id":8,"translation":"அந்நாளில், (சில) உள்ளங்கள் பயந்து நடுங்கும்."},{"id":9,"translation":"அவற்றின் பார்வைகள் (பயத்தால்) கீழ் நோக்கியவையாக இழிவுற்றதாக இருக்கும்."},{"id":10,"translation":"(நிராகரிப்போர்) கூறுகிறார்கள்: “நிச்சயமாக நாம் (இறந்துவிட்டால் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோமா?’’"},{"id":11,"translation":"(அதுவும்) உக்கிப்போன எலும்புகளாக நாம் மாறி இருந்தாலுமா?"},{"id":12,"translation":"அவ்வாறாயின், அது (நமக்கு) நஷ்டமான திரும்புதல்தான் என்று (கேலியாகக்) கூறுகிறார்கள். (-நாம் மறுமையை நம்பிக்கை கொள்ளாமல் இருக்கும் நிலையில் நாம் மீண்டும் உயிர்ப்பிக்கப்பட்டால் நமக்கு நரகம்தான். அது நமக்கு நஷ்டமாயிற்றே என்று கேலியாக பேசுகிறார்கள்.)"},{"id":13,"translation":"(மறுமையாகிய) அதுவெல்லாம் ஒரே ஓர் அதட்டல் சத்தம்தான். (ஒரு முறை ஊதப்பட்டவுடன் மறுமை நிகழ்ந்து விடும்.)"},{"id":14,"translation":"அப்போது அவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) பூமியின் மேற்பரப்பில் (ஒன்று சேர்க்கப்பட்டு) இருப்பார்கள்."},{"id":15,"translation":"(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?"},{"id":16,"translation":"“துவா” (எனும்) பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்த சமயத்தை நினைவு கூருங்கள்."},{"id":17,"translation":"ஃபிர்அவ்னிடம் செல்வீராக! நிச்சயமாக அவன் எல்லை மீறினான்."},{"id":18,"translation":"ஆக, (மூஸாவே!) நீர் (அவனிடம்) கூறுவீராக! “(ஃபிர்அவ்னே!) நீ (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடைவதற்கு உனக்கு விருப்பமா?”"},{"id":19,"translation":"“இன்னும், உன் இறைவனின் பக்கம் உனக்கு நான் நேர்வழி காட்டுவதற்கும், நீ (அவனைப்) பயந்து கொள்வதற்கும் உனக்கு விருப்பமா?”"},{"id":20,"translation":"ஆக, (மூஸா) மிகப்பெரிய அத்தாட்சியை அவனுக்குக் காண்பித்தார்."},{"id":21,"translation":"ஆனால், அவன் பொய்ப்பித்தான், இன்னும் மாறுசெய்தான்."},{"id":22,"translation":"பிறகு (நிராகரிப்பில்) முயன்றவனாக (மூஸாவை விட்டு) விலகினான்."},{"id":23,"translation":"இன்னும், (மக்களை) ஒன்று திரட்டினான்; கூவி அழைத்தான்."},{"id":24,"translation":"இன்னும், நான்தான் மிக உயர்வான உங்கள் இறைவன் எனக் கூறினான்."},{"id":25,"translation":"ஆகவே, இம்மை, மறுமையின் தண்டனையைக் கொண்டு அல்லாஹ் அவனைப் பிடித்தான் (-தண்டித்தான்)."},{"id":26,"translation":"(அல்லாஹ்வைப்) பயப்படுகிறவருக்கு நிச்சயமாக இதில் ஒரு படிப்பினை இருக்கிறது."},{"id":27,"translation":"(மனிதர்களே!) படைப்பால் நீங்கள் மிகப் பலமானவர்களா? அல்லது வானமா? (அல்லாஹ்தான்) அ(ந்த வானத்)தை அமைத்தான்."},{"id":28,"translation":"அதன் முகட்டை அவன் உயர்த்தினான், இன்னும் (அதில் மேடு பள்ளம் இல்லாமல்) அதை சமப்படுத்தினான். (-ஒழுங்குபடுத்தினான்.)"},{"id":29,"translation":"இன்னும், (சூரியனை மறைய வைத்து) அதன் இரவை இருளாக்கினான், இன்னும், (சூரியனை உதிக்க வைத்து) அதன் பகலை (ஒளியுடன்) வெளியாக்கினான்."},{"id":30,"translation":"இன்னும், அதன் பின்னர், பூமியை விரித்(து அதனுள் மனிதனுக்கு தேவையானவற்றை வைத்)தான்."},{"id":31,"translation":"அதிலிருந்து அதன் நீரையும், அதன் மேய்ச்சலையும் வெளியாக்கினான்."},{"id":32,"translation":"இன்னும், மலைகளை (அதில்) ஆழமாக ஊன்றினான்."},{"id":33,"translation":"உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலன் தருவதற்காக (இவற்றை எல்லாம் இறைவன் படைத்தான்)."},{"id":34,"translation":"ஆக, (-எக்காளத்தில் முதல் ஊதுதல் ஊதப்பட்டு மறுமையின்) மிகப்பெரிய பயங்கரமான அழிவு வந்தால்,"},{"id":35,"translation":"மனிதன், தான் செய்ததை நினைத்துப் பார்க்கிற நாளில் (அந்த அழிவு நிகழும்)."},{"id":36,"translation":"இன்னும், (அந்நாளில்) பார்ப்பவருக்கு நரகம் வெளியாக்கப்படும். (எல்லோரும் அதை பார்ப்பார்கள்.)"},{"id":37,"translation":"ஆகவே, யார் (தனது இறைவனுக்கு மாறு செய்து பெருமையடித்து) எல்லை மீறினானோ,"},{"id":38,"translation":"இன்னும் (அற்பமான) உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்தானோ,"},{"id":39,"translation":"(அவனுக்கு) நிச்சயமாக நரகம்தான் தங்குமிடம் ஆகும்."},{"id":40,"translation":"ஆக, யார் தன் இறைவனுக்கு முன் (தான்) நிற்கின்ற நாளைப் பயந்து, (தனது) மன இச்சையை விட்டு ஆன்மாவைத் தடுத்தானோ,"},{"id":41,"translation":"(அவனுக்கு) நிச்சயமாக சொர்க்கம்தான் தங்குமிடம் ஆகும்."},{"id":42,"translation":"(நபியே!) மறுமையைப் பற்றி, எப்போது அது நிகழும் என உம்மிடம் கேட்கிறார்கள்."},{"id":43,"translation":"(எப்போது நிகழுமென) அதைக் கூறுவதற்கு எதில் நீர் இருக்கிறீர்? (உமக்கு அது பற்றி ஞானம் இல்லையே!)"},{"id":44,"translation":"உம் இறைவன் பக்கம்தான் அதன் முடிவு இருக்கிறது."},{"id":45,"translation":"(நபியே!) நீரெல்லாம் அதைப் பயப்படுவோரை (அச்சமூட்டி) எச்சரிப்பவரே. (தவிர, அது நிகழப்போகும் காலத்தை அறிவிப்பவரல்ல.)"},{"id":46,"translation":"அதை அவர்கள் (கண்ணால்) பார்க்கிற நாளில், நிச்சயமாக ஒரு (நாளின்) மாலை அல்லது அதன் முற்பகலைத் தவிர (இவ்வுலகில்) அவர்கள் தங்கவில்லை (என்பது) போன்றே (அவர்களுக்குத்) தோன்றும்."}]},{"id":80,"verses":[{"id":1,"translation":"(தீயோரின் உயிர்களைக்) கடுமையாகப் பறிப்பவர்கள் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"அவரிடம் பார்வையற்றவர் வந்ததற்காக."},{"id":3,"translation":"(நபியே!) நீர் எப்படி அறிவீர், (உம்மிடம் வந்த) அ(ந்த கண்தெரியாத)வர் பரிசுத்தமடையலாம் அல்லவா?"},{"id":4,"translation":"அல்லது (உம்மிடம்) அவர் அறிவுரை பெறுவார். ஆக, (அந்த) அறிவுரை அவருக்குப் பலனளிக்கலாம் அல்லவா? (அப்படி இருக்க நீர் அவரை விட்டு எப்படி முகம் திருப்பினீர்?)"},{"id":5,"translation":"ஆக, எவன் (தன்னை அல்லாஹ்வின் அருளை விட்டுத்) தேவையற்றவனாகக் கருதினானோ,"},{"id":6,"translation":"நீர் அவனை (வரவேற்க) முன்னோக்குகிறீர்."},{"id":7,"translation":"அவன் (இஸ்லாமை ஏற்று) பரிசுத்தமடையாமல் இருப்பது உம்மீது (குற்றம்) இல்லை."},{"id":8,"translation":"ஆக, எவர் உம்மிடம் (மறுமை மீது ஆசைப்பட்டு கல்வி கற்பதில்) விரைந்தவராக வந்தாரோ,"},{"id":9,"translation":"அவரோ (அல்லாஹ்வைப்) பயப்படுகிறவராக,"},{"id":10,"translation":"ஆக, அவரை நீர் அலட்சியப்படுத்துகிறீர்."},{"id":11,"translation":"அவ்வாறல்ல! நிச்சயமாக இ(ந்த அத்தியாயமான)து ஓர் அறிவுரை ஆகும்."},{"id":12,"translation":"ஆகவே, யார் (நேர்வழி பெற) நாடுகிறாரோ (அவர்) இதன் மூலம் நல்லுபதேசம் பெறுவார்."},{"id":13,"translation":"(இந்த வேதம்) கண்ணியமான ஏடுகளில்,"},{"id":14,"translation":"உயர்வான, தூய்மையான ஏடுகளில் இருக்கிறது."},{"id":15,"translation":"அது (வானவர்களில்) எழுதுபவர்களின் கைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளது."},{"id":16,"translation":"அவர்கள் கண்ணியவான்கள், நல்லவர்கள்."},{"id":17,"translation":"(ஏக இறைவனை நிராகரிக்கும்) மனிதன் அழியட்டும்! அவன் எவ்வளவு நன்றி கெட்டவனாக இருக்கிறான்."},{"id":18,"translation":"எந்தப் பொருளிலிருந்து அல்லாஹ் அவனைப் படைத்தான்?"},{"id":19,"translation":"விந்திலிருந்து அவனைப் படைத்தான். இன்னும் (பல நிலைகளில்) அவனை அமைத்தான்."},{"id":20,"translation":"பிறகு, (அவன் தாயின் வயிற்றிலிருந்து வெளியேறுவதற்குரிய) பாதையை எளிதாக்கினான்."},{"id":21,"translation":"பிறகு, அவனை மரணிக்கச் செய்தான்; அவனைப் புதைக் குழியில் தள்ளினான்."},{"id":22,"translation":"பிறகு, அவன் நாடியபோது அவனை உயிர்ப்பிப்பான்."},{"id":23,"translation":"அவ்வாறல்ல! அல்லாஹ் அவனுக்குக் கட்டளையிட்டதை அவன் நிறைவேற்றவில்லை."},{"id":24,"translation":"ஆகவே, மனிதன் தன் உணவின் பக்கம் (சிந்தித்துப்) பார்க்கட்டும்!"},{"id":25,"translation":"நிச்சயமாக நாம் (பூமியின் மீது) மழை நீரை பொழிந்தோம்."},{"id":26,"translation":"பிறகு, பூமியைப் பிளந்தோம்."},{"id":27,"translation":"ஆக, அதில் தானியத்தை முளைக்க வைத்தோம்."},{"id":28,"translation":"இன்னும் திராட்சையையும், (பசுமையான) காய்கறிகளையும்,"},{"id":29,"translation":"ஆலிவ் மரத்தையும், பேரீச்சை மரத்தையும்,"},{"id":30,"translation":"அடர்ந்த தோட்டங்களையும்,"},{"id":31,"translation":"பழங்களையும், புற்பூண்டுகளையும்,"},{"id":32,"translation":"உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் பலனுள்ளவையாக இருப்பதற்காக (இந்த உணவுகளை எல்லாம் நாம் முளைக்க வைத்ததை மனிதன் சிந்திக்க வேண்டாமா)?"},{"id":33,"translation":"ஆக, (செவிகளை) செவிடாக்கக்கூடிய சத்தம் வந்தால்,"},{"id":34,"translation":"அந்நாளில் மனிதன் தனது சகோதரனை விட்டு விரண்டோடுவான்."},{"id":35,"translation":"இன்னும், தனது தாயை விட்டும், தனது தந்தையை விட்டும்,"},{"id":36,"translation":"இன்னும், தனது மனைவியை விட்டும், தனது பிள்ளைகளை விட்டும் (மனிதன் விரண்டோடுவான்)."},{"id":37,"translation":"அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், (மற்றவர்களை விட்டு) அவனைத் திருப்பிவிடுகின்ற (-அவனை கவனமற்றவனாக ஆக்கிவிடுகிற) காரியம் இருக்கும்."},{"id":38,"translation":"அந்நாளில் (நல்லோரின்) முகங்கள் ஒளிரக்கூடியதாக,"},{"id":39,"translation":"சிரித்தவையாக, நற்செய்தி பெற்றவையாக இருக்கும்."},{"id":40,"translation":"இன்னும், அந்நாளில் (பாவிகளின்) முகங்கள், அவற்றின் மீது புழுதி(கள் - அழுக்குகள்) இருக்கும்."},{"id":41,"translation":"தூசி(கள் இருள்கள், இழிவுகள்) அவற்றை மூடிக்கொள்ளும்."},{"id":42,"translation":"இவர்கள்தான் பெரும் பாவிகளான நிராகரிப்பாளர்கள் ஆவார்கள்."}]},{"id":81,"verses":[{"id":1,"translation":"(நபி முகம் சுளித்து) கடுகடுத்தார், இன்னும் புறக்கணித்தார்,"},{"id":2,"translation":"இன்னும், நட்சத்திரங்கள் உதிர்ந்து விழுந்துவிடும்போது,"},{"id":3,"translation":"இன்னும், மலைகள் அகற்றப்படும்போது,"},{"id":4,"translation":"இன்னும், நிறைமாத ஒட்டகங்கள் கவனிப்பற்று விடப்படும்போது,"},{"id":5,"translation":"இன்னும், காட்டு மிருகங்கள் ஒன்று திரட்டப்ப(ட்டு அவை எல்லாம் மரணிக்க வைக்கப்ப)டும்போது,"},{"id":6,"translation":"இன்னும், கடல்கள் நிரம்பி வழிந்து பெருக்கெடுத்து ஓடும்போது (இவ்வுலகம் முடிவுறும்)."},{"id":7,"translation":"இன்னும், ஆன்மாக்கள் (நல்லோர் நல்லோருடன் சொர்க்கத்திலும், பாவிகள் பாவிகளுடன் நரகத்திலும்) ஜோடி சேர்க்கப்படும்போது,"},{"id":8,"translation":"இன்னும், (உயிருடன்) புதைக்கப்பட்ட பெண் குழந்தை விசாரிக்கப்படும்போது,"},{"id":9,"translation":"அவள் எந்தக் குற்றத்திற்காக கொல்லப்பட்டாள்? என்று."},{"id":10,"translation":"இன்னும், (செயல்கள் எழுதப்பட்ட) ஏடுகள் விரிக்கப்படும்போது,"},{"id":11,"translation":"இன்னும், வானம் கழட்டப்பட்டு, பிடுங்கப்பட்டு, பிறகு சுருட்டப்படும்போது,"},{"id":12,"translation":"இன்னும், நரகம் கடுமையாக எரிக்கப்படும் போது,"},{"id":13,"translation":"இன்னும், சொர்க்கம் சமீபமாக்கப்படும் போது,"},{"id":14,"translation":"ஒவ்வொரு ஆன்மாவும் (நல்லது அல்லது கெட்டதில்) தான் எதைக் கொண்டு வந்ததோ அதை அறிந்து கொள்ளும்."},{"id":15,"translation":"ஆக, (பகலில்) மறைந்துவிடுபவை மீது சத்தியம் செய்கிறேன்!"},{"id":16,"translation":"விரைந்து வேகமாகச் செல்கின்றவை, பிறகு, சென்ற பாதையில் அப்படியே திரும்பிவருகின்றவை (மீது சத்தியமாக!)"},{"id":17,"translation":"இரவின் மீது சத்தியமாக! அது பின்னோக்கி செல்லும்போது,"},{"id":18,"translation":"பகலின் வெளிச்சத்தின் மீது சத்தியமாக! அது தெளிவாகி விடும்போது,"},{"id":19,"translation":"நிச்சயமாக இது (-இந்த குர்ஆன்) கண்ணியத்திற்குரியவரான தூதர் (ஜிப்ரீல்) உடைய கூற்றாகும் (-அவர் மூலம் இறக்கப்பட்ட இறை வேதமாகும்)."},{"id":20,"translation":"(அவர்) பலமுடையவர், அர்ஷுடையவனிடம் பதவி உடையவர்."},{"id":21,"translation":"அங்கு (வானவர்களின்) கீழ்ப்படிதலுக்கு உரியவர், (அல்லாஹ்விடம்) நம்பிக்கைக்குரியவர். (அத்தகைய வானவத் தூதர் ஜிப்ரீல் வாயிலாக இறக்கப்பட்ட கூற்றாகும் இந்த குர்ஆன்.)"},{"id":22,"translation":"உங்கள் தோழர் (-நபி முஹம்மத்) பைத்தியக்காரராக இல்லை."},{"id":23,"translation":"இன்னும், திட்டவட்டமாக தெளிவான அடிவானத்தில் அவர் (-நபி முஹம்மத்) அவரை (-ஜிப்ரீலை) கண்டார்."},{"id":24,"translation":"மறைவானவற்றில் (-அல்லாஹ் இறக்கிய வேதத்தை மக்களுக்கு கற்பிப்பதில்) அவர் கஞ்சனாக (-குறைவு செய்பவராக, மறைப்பவராக) இல்லை."},{"id":25,"translation":"இன்னும், அது (-அந்த குர்ஆன், அல்லாஹ்வின் கருணையிலிருந்து) தூக்கி எறியப்பட்ட ஷைத்தானின் கூற்றாக இல்லை."},{"id":26,"translation":"ஆக, (இதனை விட்டு) நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?"},{"id":27,"translation":"இது இல்லை, அகிலத்தார்களுக்கு ஓர் அறிவுரையாகவே தவிர!"},{"id":28,"translation":"உங்களில் நேர்வழி நடக்க நாடியவருக்கு (அது அறிவுரையாகும். அவர் அதன் மூலம் நல்லறிவு பெறுவார்)."},{"id":29,"translation":"அகிலத்தார்களின் இறைவனான அல்லாஹ் நாடினால் தவிர, (நீங்கள் நல்லறிவு பெற) நாடமாட்டீர்கள்."}]},{"id":82,"verses":[{"id":1,"translation":"(உலக முடிவுக்காக) சூரியன் (ஒளி) மங்கவைக்கப்படும்போது,"},{"id":2,"translation":"இன்னும், நட்சத்திரங்கள் விழுந்து சிதறும் போது,"},{"id":3,"translation":"இன்னும், கடல்கள் பிளக்கப்பட்டு ஒன்றோடு ஒன்று கலக்கப்பட்டு பெருக்கெடுத்து ஓடும்போது,"},{"id":4,"translation":"இன்னும், சமாதிகள் (அவற்றில் உள்ளவர்கள் எழுப்பப்படுவதற்காக) புரட்டப்படும்போது,"},{"id":5,"translation":"(அந்நாளில்) ஒவ்வோர் ஆன்மாவும், அது முற்படுத்தியதையும், அது பிற்படுத்தியதையும் அறிந்து கொள்ளும். (-ஒவ்வோர் ஆன்மாவும் தான் செய்த நன்மையையும் தீமையையும், அவ்வாறே தனக்கு பின்னர் வருவோர் தன்னை பின்பற்றும்படி வழிகாட்டிவிட்டு வந்த நல்ல காரியத்தை; அல்லது, தீய காரியத்தை அறிந்து கொள்ளும்.)"},{"id":6,"translation":"மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது?"},{"id":7,"translation":"அவன்தான் உன்னைப் படைத்தான். இன்னும், அவன் உன்னை (தோற்றத்திலும் உறுப்புகளிலும்) சமமாக்கினான் (-ஒவ்வொரு உறுப்பையும் சீராக, ஒரு ஒழுங்குடன் படைத்தான்). இன்னும், உன்னை (அவன் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்."},{"id":8,"translation":"எந்த உருவத்தில் (உன்னை படைக்க வேண்டும் என்று) நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்."},{"id":9,"translation":"அவ்வாறல்ல! மாறாக, (நீங்கள் மறுமையில் விசாரிக்கப்படுவதையும்) கூலி கொடுக்கப்படுவதை(யும்) பொய்ப்பிக்கிறீர்கள்."},{"id":10,"translation":"நிச்சயமாக (உங்கள் செயல்களை கண்காணித்து பதிவு செய்கிற வானவக்) காவலர்கள் உங்களிடம் இருக்கிறார்கள்."},{"id":11,"translation":"(அவர்கள்,) கண்ணியமானவர்கள், எழுதுபவர்கள்."},{"id":12,"translation":"நீங்கள் செய்வதை அவர்கள் அறிகிறார்கள். (பிறகு, அதைப் பதிவு செய்து கொள்கிறார்கள்.)"},{"id":13,"translation":"நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள்."},{"id":14,"translation":"இன்னும், நிச்சயமாகத் தீயோர் ஜஹீம் என்ற நரகத்தில் இருப்பார்கள்."},{"id":15,"translation":"(அந்த பாவிகள்,) கூலி (வழங்கப்படும்) நாளில் அ(ந்த நரகத்)தில் எரிவார்கள்."},{"id":16,"translation":"இன்னும், அவர்கள் அ(ந்த நரகத்)திலிருந்து மறைபவர்களாக (வெளியேறி தப்பிக்கக் கூடியவர்களாக) இல்லை."},{"id":17,"translation":"இன்னும், (நபியே!) கூலி நாள் (விசாரணை நாள், தீர்ப்பு நாள்) என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":18,"translation":"பிறகு, கூலி நாள் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":19,"translation":"(அது) ஓர் ஆன்மா, (வேறு) ஓர் ஆன்மாவுக்கு எதையும் (செய்வதற்கு) உரிமை பெறாத நாள். அதிகாரம் அந்நாளில் அல்லாஹ்விற்கே உரியதாக இருக்கும்!"}]},{"id":83,"verses":[{"id":1,"translation":"மோசடிக்காரர்களுக்கு நாசம்தான்."},{"id":2,"translation":"அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது, (பொருளை) நிறைவாக (அளந்து) வாங்குகிறார்கள்."},{"id":3,"translation":"இன்னும், அவர்களுக்கு (இவர்கள்) அளந்து கொடுக்கும்போது; அல்லது, அவர்களுக்கு நிறுத்துக் கொடுக்கும்போது (அளவையிலும் நிறுவையிலும்) குறைத்துக் கொடுக்கிறார்கள் (-நஷ்டப்படுத்துகிறார்கள்)."},{"id":4,"translation":"“நிச்சயமாக அவர்கள் (மறுமை நாளில் உயிர் கொடுத்து) எழுப்பப்படுவார்கள் என்பதை அவர்கள்” நம்பவில்லையா?"},{"id":5,"translation":"மகத்தான ஒரு நாளில் (எழுப்பப்படுவார்கள்)."},{"id":6,"translation":"அகிலத்தார்களின் இறைவனுக்கு முன் அந்நாளில் மக்கள் நிற்பார்கள்."},{"id":7,"translation":"அவ்வாறல்ல! நிச்சயமாக தீயவர்களின் பதிவேடு சிஜ்ஜீனில்தான் இருக்கும்."},{"id":8,"translation":"இன்னும், சிஜ்ஜீன் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":9,"translation":"(அது பாவிகளின் விவரங்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும்."},{"id":10,"translation":"பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்."},{"id":11,"translation":"அவர்கள் கூலி (கொடுக்கப்படும்) நாளைப் பொய்ப்பிக்கிறார்கள்."},{"id":12,"translation":"அதைப் பொய்ப்பிக்க மாட்டார், ஒவ்வொரு பெரும் பாவியும் எல்லை மீறுகிறவனும் தவிர!"},{"id":13,"translation":"அவனுக்கு முன்னர் நம் வசனங்கள் ஓதப்பட்டால், (அவை) முன்னோரின் கட்டுக் கதைகள் எனக் கூறுகிறான்."},{"id":14,"translation":"அவ்வாறல்ல! மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது கறையாகப் படிந்து மூடிவிட்டன."},{"id":15,"translation":"அவ்வாறல்ல! நிச்சயமாக அவர்கள் அந்நாளில் அவர்களுடைய இறைவனை விட்டுத் திட்டமாக தடுக்கப்படுவார்கள். (ஆகவே, அவர்கள் அல்லாஹ்வைக் காணவே மாட்டார்கள்.)"},{"id":16,"translation":"பிறகு, நிச்சயமாக அவர்கள் ஜஹீம் என்ற நரகத்தில் (தீயில் நிரந்தரமாக) எரியக் கூடியவர்கள்தான்."},{"id":17,"translation":"பிறகு, “நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டிருந்த (நாளான)து இதுதான்’’ என்று (அவர்களுக்கு) கூறப்படும்."},{"id":18,"translation":"அவ்வாறல்ல! நிச்சயமாக நல்லோரின் பதிவேடு திட்டமாக இல்லிய்யூனில் இருக்கும்."},{"id":19,"translation":"(நபியே!) ‘இல்லிய்யூன்’ என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":20,"translation":"அது (நல்லோரின் செயல்கள்) எழுதப்பட்ட ஒரு பதிவேடாகும்."},{"id":21,"translation":"(அல்லாஹ்வின்) நெருக்கம் பெற்ற (வான)வர்கள் அதற்கு சாட்சியாக இருக்கிறார்கள்."},{"id":22,"translation":"நிச்சயமாக நல்லோர் நயீம் என்ற சொர்க்கத்தில் இருப்பார்கள்."},{"id":23,"translation":"கட்டில்கள் மீது (சாய்ந்தவர்களாக சொர்க்கத்தின் அருட்கொடைகளை) கண்டுகளிப்பார்கள்."},{"id":24,"translation":"அவர்களின் முகங்களில் இன்பத்தின் செழிப்பை (பிரகாசத்தை, அழகை நபியே! நீர்) அறிவீர்."},{"id":25,"translation":"முத்திரையிடப்பட்ட மதுவிலிருந்து (அவர்கள் விரும்பியதை, விரும்பிய அளவு) புகட்டப்படுவார்கள்."},{"id":26,"translation":"அதன் முத்திரை கஸ்தூரியாகும். ஆகவே, ஆசை வைப்போர் அதில் ஆசை வைக்கவும்."},{"id":27,"translation":"இன்னும் அதன் கலவை தஸ்னீமிலிருந்து இருக்கும்."},{"id":28,"translation":"(தஸ்னீம் அது) ஒரு நீரூற்றாகும், (அல்லாஹ்வின்) நெருக்கம் பெற்ற (நல்ல)வர்கள் அதில் பருகுவார்கள்."},{"id":29,"translation":"நிச்சயமாக குற்றவாளிகள் நம்பிக்கையாளர்களைப் பார்த்து (கேலி செய்து) சிரிப்பவர்களாக இருந்தார்கள்."},{"id":30,"translation":"இன்னும், அவர்கள், இவர்களைக் கடந்து செல்லும்போது, (ஒருவருக்கொருவர்) கேலியாக கண் சாடை செய்கிறார்கள்."},{"id":31,"translation":"இன்னும், அவர்கள் தங்கள் குடும்பத்தாரிடம் திரும்பும்போது (நம்பிக்கையாளர்களை கேலி செய்தது பற்றி) மகிழ்ச்சியடைந்தவர்களாகத் திரும்புகிறார்கள்."},{"id":32,"translation":"இன்னும், அவர்கள் இவர்களைப் பார்க்கும்போது “நிச்சயமாக இவர்கள் வழிதவறியவர்கள்’’ எனக் கூறுகிறார்கள்."},{"id":33,"translation":"(இக்குற்றவாளிகளுக்கு அவர்களைப் பற்றி ஏன் இவ்வளவு கவலை?) அவர்கள் மீது கண்காணிப்பவர்களாக இவர்கள் அனுப்பப்படவில்லையே!"},{"id":34,"translation":"ஆக, (மறுமை நாளாகிய) இன்று நம்பிக்கையாளர்கள் நிராகரிப்பாளர்களைப் பார்த்து சிரிப்பார்கள்."},{"id":35,"translation":"கட்டில்கள் மீது அமர்ந்தவர்களாக (அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை) பார்ப்பார்கள்."},{"id":36,"translation":"நிராகரிப்பாளர்கள் தாங்கள் செய்து கொண்டிருந்ததற்கு கூலி கொடுக்கப்பட்டார்களா (இல்லையா)?"}]},{"id":84,"verses":[{"id":1,"translation":"மோசடிக்காரர்களுக்கு நாசம்தான்."},{"id":2,"translation":"இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது; இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படிந்துவிடும்போது;"},{"id":3,"translation":"இன்னும், பூமி விரிக்கப்படும்போது,"},{"id":4,"translation":"இன்னும், அது தன்னில் உள்ளவற்றை (வெளியே) எறிந்து, காலியாகி விடும்போது,"},{"id":5,"translation":"இன்னும், அது தன் இறைவனுக்குச் செவிசாய்த்துவிடும்போது, இன்னும், அது (அவனுக்கு) கீழ்ப்படியும்போது (மனிதனே நீ செய்த நன்மை, தீமையின் பலனை பார்ப்பாய்)!"},{"id":6,"translation":"மனிதனே! நிச்சயமாக நீ உன் இறைவன் பக்கம் (சேருகிற வரை நல்லதை செய்வதில் அல்லது தீமை செய்வதில்) சிரமத்தோடு முயற்சிப்பவனாக இருக்கிறாய். ஆக, நீ அவனை (மறுமையில்) சந்திப்பாய். (அவன் உனது செயல்களுக்கு ஏற்ப உனக்குக் கூலி கொடுப்பான்.)"},{"id":7,"translation":"ஆக, யார் தன் வலக்கரத்தில் தன் பதிவேடு கொடுக்கப்பட்டாரோ (அவர்),"},{"id":8,"translation":"அவர் இலகுவாகவே கணக்குக் கேட்கப்படுவார். (அவருடைய அமல்கள் பற்றி இலகுவான கேள்விகள் கேட்கப்படுவார்.)"},{"id":9,"translation":"இன்னும், மகிழ்ச்சியானவராகத் தன் குடும்பத்தார் பக்கம் திரும்புவார்."},{"id":10,"translation":"ஆக, யார் தன் பதிவேடு தன் முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டானோ,"},{"id":11,"translation":"(எனது அழிவே என தனது) அழிவை அவன் அழைப்பான்."},{"id":12,"translation":"இன்னும் சயீர் எனும் கொழுந்துவிட்டு எரிகிற நரகத்தில் நுழைந்து அவன் தீயில் எரிவான்."},{"id":13,"translation":"நிச்சயமாக அவன் (உலகத்தில்) தன் குடும்பத்தில் மகிழ்ச்சியானவனாக இருந்தான்."},{"id":14,"translation":"நிச்சயமாக அவன், (தன் இறைவனிடம்) திரும்பிவரவே மாட்டான் என எண்ணினான்."},{"id":15,"translation":"ஏனில்லை! (அவன் கண்டிப்பாக இறைவனிடம் வருவான்.) நிச்சயமாக அவனுடைய இறைவன் அவனை உற்று நோக்குபவனாக இருக்கிறான்."},{"id":16,"translation":"ஆக, செம்மேகத்தின் மேல் சத்தியமிடுகிறேன்!"},{"id":17,"translation":"இரவின் மீது சத்தியமாக! அது (தனக்குள்) ஒன்று சேர்த்தவை மீது சத்தியமாக!"},{"id":18,"translation":"சந்திரன் மீது சத்தியமாக! அது (பூரண நிலவாக) முழுமையடையும்போது,"},{"id":19,"translation":"நீங்கள் கடினமான ஒரு நிலையிலிருந்து கடினமான இன்னொரு நிலைக்கு நிச்சயமாகப் பயணிப்பீர்கள்."},{"id":20,"translation":"ஆக, அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் நம்பிக்கை கொள்வதில்லை."},{"id":21,"translation":"இன்னும், (அவர்களுக்கு என்ன நேர்ந்தது?) அவர்களுக்கு முன்னர் அல்குர்ஆன் ஓதப்பட்டால், அவர்கள் (இறைவனுக்கு) சிரம் பணிவதில்லை!"},{"id":22,"translation":"மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்த குர்ஆனை) பொய்ப்பிக்கிறார்கள்."},{"id":23,"translation":"அவர்கள் (தங்கள் உள்ளங்களில்) சேகரிப்பதை (-மறைப்பதை) அல்லாஹ் மிக அறிந்தவன்."},{"id":24,"translation":"ஆக, துன்புறுத்துகிற தண்டனையைக் கொண்டு அவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக!"},{"id":25,"translation":"(அவர்களில்) நம்பிக்கை கொண்டு, நற்செயல்கள் செய்தவர்களைத் தவிர, அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு."}]},{"id":85,"verses":[{"id":1,"translation":"வானம் பிளந்துவிடும் போது,"},{"id":2,"translation":"வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"சாட்சியாளர் (-வெள்ளிக்கிழமை) மீது சத்தியமாக! சாட்சியளிக்கப்பட்டவர் (-அரஃபா நாள்) மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"அகழ்க்காரர்கள் அழிக்கப்பட்டார்கள்."},{"id":5,"translation":"விறகுகளால் நெருப்பு மூட்டியவர்கள் (அழிக்கப்பட்டார்கள்)."},{"id":6,"translation":"அதனருகில் அவர்கள் உட்கார்ந்திருந்தபோது,"},{"id":7,"translation":"அவர்களோ நம்பிக்கையாளர்களுக்கு எதை செய்ய இருந்தார்களோ அதற்காக (அங்கு) ஆஜராகி (சாட்சிகளாக) இருந்தார்கள்."},{"id":8,"translation":"மிகைத்தவனாகிய, புகழாளனாகிய, அல்லாஹ்வை (முஃமின்கள்) நம்பிக்கை கொண்டதற்காகவே தவிர அவர்களை (இந்த அகழ்க்காரர்கள்) தண்டிக்கவில்லை."},{"id":9,"translation":"வானங்கள் இன்னும் பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! இன்னும், அல்லாஹ் எல்லாப் பொருள் மீதும் சாட்சியாளன் ஆவான்."},{"id":10,"translation":"நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும் நம்பிக்கை கொண்ட பெண்களையும் துன்புறுத்தினார்களோ, பிறகு, அவர்கள் (அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரி, வருந்தி, தங்கள் நிராகரிப்பை விட்டு) திருந்தவில்லையோ, அவர்களுக்கு ஜஹன்னம் எனும் நரகத்தின் தண்டனை உண்டு. இன்னும், எரித்து பொசுக்கக்கூடிய தண்டனையும் அவர்களுக்கு உண்டு."},{"id":11,"translation":"நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்களுக்கு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் கீழிருந்து நதிகள் ஓடும். அதுதான் பெரும் வெற்றியாகும்."},{"id":12,"translation":"நிச்சயமாக உம் இறைவனின் பிடி கடுமையானதாகும்."},{"id":13,"translation":"நிச்சயமாக அவன்தான் (படைப்பை புதிதாக) உற்பத்தி செய்கிறான். இன்னும், (அவை இறந்த பின்னர் அவற்றை) மீட்கிறான் (-மீண்டும் உருவாக்குவான்)."},{"id":14,"translation":"அவன்தான் மகா மன்னிப்பாளன்; மகா அன்பாளன்."},{"id":15,"translation":"(அவன்தான்) அர்ஷுடையவன், பெரும் மதிப்பிற்குரியவன்."},{"id":16,"translation":"அவன், தான் நாடுவதைச் செய்து முடிப்பவன்."},{"id":17,"translation":"(நபியே! நபிமார்களை நிராகரித்த) ராணுவங்களின் செய்தி உமக்கு வந்ததா?"},{"id":18,"translation":"ஃபிர்அவ்ன், இன்னும் ஸமூது (உடைய செய்தி உமக்கு வந்ததா)?"},{"id":19,"translation":"மாறாக, நிராகரிப்பாளர்கள் (இந்தக் குர்ஆனைப்) பொய்ப்பிப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள்."},{"id":20,"translation":"அல்லாஹ், அவர்களுக்குப் பின்னாலிருந்து சூழ்ந்திருக்கிறான்."},{"id":21,"translation":"மாறாக! இது பெரும் மதிப்பிற்குரிய குர்ஆனாகும்."},{"id":22,"translation":"(அது) பாதுகாக்கப்பட்ட பலகையில் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது."}]},{"id":86,"verses":[{"id":1,"translation":"கோள்களை உடைய வானத்தின் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"(நபியே!) தாரிக் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":3,"translation":"(அது) மின்னக்கூடிய பிரகாசிக்கக்கூடிய நட்சத்திரமாகும்."},{"id":4,"translation":"ஒவ்வோர் ஆன்மாவும் இல்லை, அதன் மீது (அதன் செயலை கண்காணிக்கிற) ஒரு காவலர் இருந்தே தவிர."},{"id":5,"translation":"ஆக, மனிதன், அவன் எதிலிருந்து படைக்கப்பட்டான் எனப் பார்க்கட்டும்."},{"id":6,"translation":"வேகமாக ஊற்றப்படக்கூடிய (இந்திரியம் எனும்) தண்ணீரிலிருந்து படைக்கப்பட்டான்."},{"id":7,"translation":"அது முதுகந்தண்டுக்கும் நெஞ்செலும்புகளுக்கும் மத்தியிலிருந்து வெளியேறுகிறது."},{"id":8,"translation":"நிச்சயமாக அவன், அவனை மீண்டும் படைப்பதற்கு ஆற்றல்மிக்கவன் ஆவான்,"},{"id":9,"translation":"இரகசியங்கள் சோதிக்கப்படுகிற (பகிரங்கப்படுத்தப்படுகிற) நாளில்."},{"id":10,"translation":"ஆக, அவனுக்கு (-மனிதனுக்கு) சக்தி ஏதும் இருக்காது; உதவியாளர் யாரும் இருக்க மாட்டார்."},{"id":11,"translation":"(மீண்டும் மீண்டும்) மழையை பொழியக்கூடிய வானத்தின் மீது சத்தியமாக!"},{"id":12,"translation":"தாவரங்களை முளைக்க செய்கிற பூமியின் மீது சத்தியமாக!"},{"id":13,"translation":"நிச்சயமாக இது (நன்மை தீமையைப்) பிரித்தறிவிக்கக்கூடிய வேதமாகும்."},{"id":14,"translation":"இது, விளையாட்டு அல்ல. (-பொய்யான, கேலியான பேச்சல்ல)."},{"id":15,"translation":"நிச்சயமாக அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்."},{"id":16,"translation":"நானும் சூழ்ச்சி செய்கிறேன்."},{"id":17,"translation":"ஆக, நிராகரிப்பாளர்களுக்கு அவகாசமளிப்பீராக! அவர்களுக்கு சிறிது காலம் அவகாசமளிப்பீராக!"}]},{"id":87,"verses":[{"id":1,"translation":"வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் (-இரவில் தோன்றி பகலில் மறையும் நட்சத்திரங்கள்) மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"அவன் படைத்தான்; இன்னும், (தனது படைப்புகளை) ஒழுங்கு படுத்தினான்."},{"id":3,"translation":"இன்னும், அவன் நிர்ணயம் செய்தான் (-அளவிட்டான், திட்டமிட்டான்); இன்னும், (படைப்புகள், தங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் அடைந்துகொள்ள தேவையான வழிகளை) வழிகாட்டினான்."},{"id":4,"translation":"இன்னும், அவன் பசுமையான புல்லை (பூமியில்) வெளியாக்கினான் (உற்பத்தி செய்தான்)."},{"id":5,"translation":"பிறகு, அதைக் (காய்ந்து) கருத்துப்போன சருகாக ஆக்கினான்."},{"id":6,"translation":"(நபியே! அல் குர்ஆனை) உமக்குக் கற்பிப்போம். ஆக, (அதிலிருந்து எதையும்) நீர் மறக்க மாட்டீர்,"},{"id":7,"translation":"அல்லாஹ் நாடியதைத் தவிர. நிச்சயமாக அவன் வெளிப்படையானதையும் மறைந்திருப்பதையும் நன்கறிவான்."},{"id":8,"translation":"இன்னும், சொர்க்கப் பாதையை உமக்கு இலகுவாக்குவோம்."},{"id":9,"translation":"ஆகவே, (யாருக்காவது) அறிவுரை பலனளிக்கும் என்றால் (அவர்களுக்கு) அறிவுரை கூறுவீராக!"},{"id":10,"translation":"(அல்லாஹ்வை) பயப்படுகிறவர் (அதன் மூலம்) அறிவுரை பெறுவார்."},{"id":11,"translation":"இன்னும், பெரும் துர்ப்பாக்கியவான் (கெட்ட மனிதன்) அதை தவிர்த்துவிடுவான்."},{"id":12,"translation":"(அவன்) மாபெரும் நரக நெருப்பில் பற்றி எரிவான்."},{"id":13,"translation":"பிறகு, அதில் மரணிக்கவும் மாட்டான்; இன்னும், வாழவும் மாட்டான்."},{"id":14,"translation":"(இஸ்லாமை ஏற்று பாவங்களை விட்டு) பரிசுத்தமடைந்தவர் திட்டமாக வெற்றி பெற்றார்."},{"id":15,"translation":"இன்னும், அவர் தன் இறைவனின் பெயரை நினைவு கூர்வார்; இன்னும், (ஐவேளை தொழுகைகளை) தொழுவார்."},{"id":16,"translation":"மாறாக, (அற்ப) உலக வாழ்வைத் தேர்ந்தெடுக்கிறீர்கள்."},{"id":17,"translation":"மறுமையோ மிகச் சிறந்ததும் என்றும் நிலையானதுமாகும்."},{"id":18,"translation":"முந்திய வேதங்களில் நிச்சயமாக இது (கூறப்பட்டு) இருக்கிறது,"},{"id":19,"translation":"இப்ராஹீம் உடைய இன்னும் மூஸா உடைய வேதங்களில் (கூறப்பட்டிருக்கிறது)."}]},{"id":88,"verses":[{"id":1,"translation":"(நபியே!) மிக உயர்ந்தவனாகிய உம் இறைவனின் பெயரைத் துதித்து தூய்மைப்படுத்தி தொழுவீராக!"},{"id":2,"translation":"(நிராகரிப்போரின்) முகங்கள் அந்நாளில் இழிவடையும்."},{"id":3,"translation":"(அவை தண்டனையை) அனுபவிக்கும்; (தண்டனையால் சிரமப்பட்டு) களைப்படையும்; (அவை உலகத்தில் வாழும்போது நன்மையென கருதி பாவங்களை செய்தன; அவற்றில் உறுதியாக இருந்தன; அவற்றைச் செய்வதில் களைப்படைந்தன.)"},{"id":4,"translation":"(அவை) கடுமையாக எரியக்கூடிய நெருப்பில் எரிந்துகொண்டே இருக்கும்."},{"id":5,"translation":"கொதிக்கக்கூடிய சுடு நீரின் ஊற்றிலிருந்து அவற்றுக்கு நீர் புகட்டப்படும்."},{"id":6,"translation":"அவர்களுக்கு உணவு இல்லை, முட்களை உடைய விஷச் செடியிலிருந்தே தவிர."},{"id":7,"translation":"(அது அவர்களைக்) கொழுக்க வைக்காது. (அவர்களின்) பசியைப் போக்(கி பலனளிக்)காது."},{"id":8,"translation":"(நம்பிக்கையாளர்களின்) முகங்கள் அந்நாளில் இன்புற்றிருக்கும்;"},{"id":9,"translation":"அவை தமது செயலுக்காக திருப்தியடைந்திருக்கும்."},{"id":10,"translation":"(அவை) உயர்வான சொர்க்கத்தில் இருக்கும்."},{"id":11,"translation":"அதில் வீண் பேச்சை அவை செவியுறாது."},{"id":12,"translation":"அதில் (தொடர்ந்து) ஓடக்கூடிய ஊற்று(கள்) இருக்கும்."},{"id":13,"translation":"அதில் உயரமான கட்டில்கள் இருக்கும்."},{"id":14,"translation":"இன்னும், (நதிகளுக்கு அருகில் நிரப்பி) வைக்கப்பட்ட குவளைகள் இருக்கும்."},{"id":15,"translation":"இன்னும், (சாய்வதற்கு) வரிசையாக வைக்கப்பட்ட தலையணைகள் இருக்கும்."},{"id":16,"translation":"இன்னும், விரிக்கப்பட்ட உயர்ரக விரிப்புகள் இருக்கும்."},{"id":17,"translation":"ஆக, அவர்கள் ஒட்டகத்தின் பக்கம், அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?"},{"id":18,"translation":"இன்னும், வானத்தின் பக்கம், அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?"},{"id":19,"translation":"இன்னும், மலைகளின் பக்கம், அது எவ்வாறு நிறுவப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?"},{"id":20,"translation":"இன்னும், பூமியின் பக்கம், அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்று பார்க்க மாட்டார்களா?"},{"id":21,"translation":"ஆகவே, அறிவுரை கூறுவீராக! நீரெல்லாம் அறிவுரை கூறுபவர்தான்."},{"id":22,"translation":"அவர்களை நிர்ப்பந்திப்பவராக (கட்டுப்படுத்தக் கூடியவராக) நீர் இல்லை."},{"id":23,"translation":"எனினும், யார் (அறிவுரையை விட்டு) விலகினாரோ, இன்னும் நிராகரித்தாரோ,"},{"id":24,"translation":"ஆக, அவரை அல்லாஹ் மிகப் பெரும் தண்டனையால் தண்டிப்பான்."},{"id":25,"translation":"நிச்சயமாக அவர்களின் திரும்புதல் நம் பக்கம்தான் இருக்கிறது."},{"id":26,"translation":"பிறகு, நிச்சயமாக அவர்களை விசாரிப்பது நம் மீதே பொறுப்பாக இருக்கிறது. (ஆகவே, அவர்களின் செயல்களைக் கணக்கிட்டு அதற்குத் தகுந்த கூலி கொடுப்போம்.)"}]},{"id":89,"verses":[{"id":1,"translation":"(நபியே! மனிதர்களை தனது திடுக்கத்தால்) சூழக்கூடிய (மறுமை தினத்)தின் செய்தி உமக்கு வந்ததா?"},{"id":2,"translation":"பத்து இரவுகள் மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"இரட்டைப்படை மீது சத்தியமாக! ஒற்றைப்படை மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"இரவின் மீது சத்தியமாக! அது செல்லும் போது, (மறுமை வந்தே தீரும்)."},{"id":5,"translation":"இதில் அறிவுடையவருக்கு (பலன் தரும்) சத்தியம் இருக்கிறதா?"},{"id":6,"translation":"ஆது சமுதாயத்துடன் உம் இறைவன் எவ்வாறு நடந்துகொண்டான் (என்பதை நபியே!) நீர் கவனிக்கவில்லையா?"},{"id":7,"translation":"(உயரமான) தூண்களுடைய இரம் (என்கிற ஆது சமுதாயம்)."},{"id":8,"translation":"அவர்கள் போன்று (பலசாலியான சமுதாயம் உலக) நகரங்களில் (வேறு எங்கும்) படைக்கப்படவில்லை."},{"id":9,"translation":"இன்னும், பள்ளத்தாக்கில் பாறையைக் குடைந்(து வீடுகள் கட்டி வசித்)த ஸமூது சமுதாயத்துடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)"},{"id":10,"translation":"இன்னும், பெரும் ஆணிகளுடைய ஃபிர்அவ்னுடன் (அல்லாஹ் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?)"},{"id":11,"translation":"அவர்கள் நகரங்களில் (பாவம் செய்வதில்) எல்லை மீறினார்கள்."},{"id":12,"translation":"ஆக, அவர்கள் அவற்றில் விஷமத்தை (-மக்கள் மீது அநீதி செய்வதை) அதிகப்படுத்தினர்."},{"id":13,"translation":"ஆகவே, உம் இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான்."},{"id":14,"translation":"நிச்சயமாக உம் இறைவன் எதிர்பார்க்குமிடத்தில் இருக்கிறான்."},{"id":15,"translation":"ஆக மனிதன், அவனுடைய இறைவன் அவனைச் சோதித்து, அவனைக் கண்ணியப்படுத்தி அவனுக்கு அருட்கொடை புரியும்போது, “என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான்’’ எனக் கூறுகிறான்."},{"id":16,"translation":"ஆக (இறைவன்), அவனைச் சோதித்து அவனுடைய வாழ்வாதாரத்தை அவன் மீது சுருக்கும்போது, “என் இறைவன் என்னை இழிவுபடுத்திவிட்டான்’’ எனக் கூறுகிறான்."},{"id":17,"translation":"அவ்வாறல்ல! மாறாக, நீங்கள் அனாதையைக் கண்ணியப்படுத்துவதில்லை. (அனாதைகளை கண்ணியமாக பராமரிப்பதில்லை)."},{"id":18,"translation":"இன்னும், ஏழையின் உணவுக்கு (நீங்கள் ஒருவர் மற்றவரை)த் தூண்டுவதில்லை."},{"id":19,"translation":"இன்னும், பிறருடைய சொத்தை சேர்த்துப் புசிக்கிறீர்கள். (பெண்கள், அனாதைகள் உடைய செல்வங்களை உரிமையின்றி உங்கள் செல்வத்தோடு சுருட்டிக் கொள்கிறீர்கள்.)"},{"id":20,"translation":"இன்னும், செல்வத்தை மிக அதிகமாக நேசிக்கிறீர்கள்."},{"id":21,"translation":"அவ்வாறல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது,"},{"id":22,"translation":"இன்னும், உம் இறைவன் வருவான், மலக்குகளோ அணி அணியாக நிற்கும் நிலையில்."},{"id":23,"translation":"இன்னும், அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் மனிதன் நல்லறிவு பெறுவான். (அப்போது) நல்லறிவு அவனுக்கு எப்படி பலன் தரும்?"},{"id":24,"translation":"“என் (மறுமை) வாழ்வுக்காக நான் (நன்மைகளை) முற்படுத்தியிருக்க வேண்டுமே!’’ எனக் கூறுவான்,"},{"id":25,"translation":"ஆக, அந்நாளில் அவனுடைய (-அல்லாஹ்வுடைய) தண்டனையை(ப் போன்று) ஒருவனும் தண்டிக்க முடியாது. (அல்லாஹ் பாவிகளை அவ்வளவு பயங்கரமாக தண்டிப்பான்.)"},{"id":26,"translation":"இன்னும், அவனுடைய (-அல்லாஹ்வுடைய) கட்டுதலை(ப் போன்று) ஒருவனும் கட்ட மாட்டான். (பழுக்க சூடுகாட்டப்பட்ட சங்கிலிகளில் பாவிகளுடைய கைகள், கால்கள், கழுத்துகள் மிகக் கடுமையாகக் கட்டப்படும்.)"},{"id":27,"translation":"நிம்மதியடைந்த ஆன்மாவே!"},{"id":28,"translation":"திருப்தி பெற்றதாக, திருப்தி கொள்ளப்பட்டதாக உன் இறைவன் பக்கம் திரும்பு!"},{"id":29,"translation":"ஆக, என் அடியார்களில் சேர்ந்து விடு!"},{"id":30,"translation":"இன்னும், என் சொர்க்கத்தில் நுழைந்து விடு!"}]},{"id":90,"verses":[{"id":1,"translation":"விடியற் காலையின் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"இன்னும், (நபியே!) நீர் இந்த நகரத்தில் (எதிரிகளைத் தண்டிப்பதற்கு) அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்."},{"id":3,"translation":"தந்தை மீதும், அவர் பெற்றெடுத்தவர்கள் மீதும் சத்தியமாக!"},{"id":4,"translation":"திட்டவட்டமாக, மனிதனை சிரமத்தில் (சிக்கிக் கொள்பவனாகவே) படைத்தோம்."},{"id":5,"translation":"தன்மீது ஒருவனும் ஆற்றல் பெறவே மாட்டான் என்று (அவன்) எண்ணுகிறானா?"},{"id":6,"translation":"அதிகமான செல்வத்தை நான் அழித்தேன் என்று (அவன் பெருமையாக) கூறுகிறான்."},{"id":7,"translation":"அவனை ஒருவனும் பார்க்கவில்லை என்று எண்ணுகிறானா?"},{"id":8,"translation":"இரு கண்களை அவனுக்கு நாம் ஆக்கவில்லையா?"},{"id":9,"translation":"இன்னும், ஒரு நாவையும், இரு உதடுகளையும் (அவனுக்கு நாம் படைக்கவில்லையா?)"},{"id":10,"translation":"இன்னும், இரு பாதைகளை அவனுக்கு வழிகாட்டினோம்."},{"id":11,"translation":"ஆக, அவன் அகபாவைக் கடக்கவில்லை."},{"id":12,"translation":"(நபியே!) அகபா என்றால் என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":13,"translation":"(அது,) ஓர் அடிமையை விடுதலை செய்தல்,"},{"id":14,"translation":"அல்லது, கடுமையான பசியுடைய நாளில் உணவளித்தல்,"},{"id":15,"translation":"(யாருக்கு என்றால்) உறவினரான ஓர் அனாதைக்கு,"},{"id":16,"translation":"அல்லது, மிக வறியவரான ஓர் ஏழைக்கு உணவளித்தல் (அகபாவை கடப்பதாகும்)."},{"id":17,"translation":"(இத்தகைய புண்ணியத்தை செய்த) பிறகு, (அத்துடன்) அவர் நம்பிக்கையைக் கொண்டவர்களிலும், பொறுமையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும், கருணையைக் கொண்டு உபதேசித்துக் கொண்டவர்களிலும் ஆகிவிட வேண்டும்."},{"id":18,"translation":"இ(த்தகைய நன்மைகளை செய்த)வர்கள் வலப்பக்கமுடையவர்கள் (-சொர்க்க வாசிகள்) ஆவார்கள்,"},{"id":19,"translation":"இன்னும், எவர்கள் நம் வசனங்களை நிராகரித்தார்களோ அவர்கள் இடப்பக்கமுடையவர்கள் (நரகவாசிகள்) ஆவார்கள்."},{"id":20,"translation":"(அவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டப்பின் அந்த) நரகம் அவர்கள் மீது மூடப்படும். (அதற்கு வாசல்களோ ஜன்னல்களோ இருக்காது.)"}]},{"id":91,"verses":[{"id":1,"translation":"இந்த (மக்கா) நகரத்தின் மீது சத்தியம் செய்கிறேன்."},{"id":2,"translation":"சந்திரன் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது பின்தொடரும்போது!"},{"id":3,"translation":"பகலின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது வெளிப்படுத்தும்போது (வெளிச்சப்படுத்தும் போது)!"},{"id":4,"translation":"இரவின் மீது சத்தியமாக, அதை (-சூரியனை) அது மூடும்போது!"},{"id":5,"translation":"வானத்தின் மீது சத்தியமாக! அதை அமைத்தவன் மீது சத்தியமாக!"},{"id":6,"translation":"பூமியின் மீது சத்தியமாக! அதை விரித்தவன் மீது சத்தியமாக!"},{"id":7,"translation":"ஆன்மாவின் மீது சத்தியமாக! அதை சீர்படுத்தியவன் மீது சத்தியமாக!"},{"id":8,"translation":"ஆக, அவன் அதன் தீமையையும் அதன் நன்மையையும் அதற்கு அறிவித்தான்."},{"id":9,"translation":"(நிராகரிப்பிலிருந்தும் பாவங்களிலிருந்தும் பாதுகாத்து, நல்லமல்களை கொண்டு) யாரை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தினானோ அவர் திட்டமாக வெற்றிபெற்றார்."},{"id":10,"translation":"யாருக்கு அதை (-அவரது ஆன்மாவை பாவத்தில்) அல்லாஹ் மறைத்துவிட்டானோ (-வழிகேட்டில், பாவத்தில் விட்டுவிட்டானோ) அவர் திட்டமாக நஷ்டமடைந்தார்."},{"id":11,"translation":"ஸமூது சமுதாயம் தன் அழிச்சாட்டியத்தால் (தூதரைப்) பொய்ப்பித்தது."},{"id":12,"translation":"அதன் தீயவன் புறப்பட்டபோது,"},{"id":13,"translation":"ஆக, அல்லாஹ்வின் தூதர் (-ஸாலிஹ்) அவர்களுக்குக் கூறினார்: “அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகத்தையும் அது நீர் பருகுவதையும் தடை செய்யாதீர்!’’"},{"id":14,"translation":"ஆக, அவர்கள் அவரைப் பொய்ப்பித்தார்கள். இன்னும் அ(ந்த ஒட்டகத்)தை (அறுத்து) கொன்றுவிட்டார்கள். ஆகவே, அவர்களின் பாவத்தினால் அவர்களுடைய இறைவன் அவர்கள் மீது கடுமையான தண்டனையை இறக்கினான். அ(ந்த சமுதாயத்)தை (அதில் உள்ள அனைவரையும் தண்டனையில்) சமமாக்கினான். (ஒட்டகத்தை கொன்றவன் ஒருவனாக இருந்தாலும் அதை எல்லோரும் பொருந்திக் கொண்டதால் அந்த சமுதாயத்தில் இருந்த எல்லோருக்கும் அதே தண்டனையை கொடுத்து அழித்துவிட்டான்.)"},{"id":15,"translation":"இன்னும், அவன் அதன் முடிவைப் பயப்பட மாட்டான்."}]},{"id":92,"verses":[{"id":1,"translation":"சூரியன் மீது சத்தியமாக! அதன் பகல் மீது சத்தியமாக! (ழுஹா: பகல், முற்பகல், வெளிச்சம்)"},{"id":2,"translation":"பகல் மீது சத்தியமாக, (வெளிச்சத்துடன்) அது வெளிப்படும் போது!"},{"id":3,"translation":"ஆணையும் பெண்ணையும் படைத்தவன் மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"(மனிதர்களே!) நிச்சயமாக உங்கள் முயற்சி (-உழைப்பு) பலதரப்பட்டதாக இருக்கிறது."},{"id":5,"translation":"ஆக, யார் தர்மம் புரிந்தாரோ, இன்னும், அல்லாஹ்வை அஞ்சினாரோ,"},{"id":6,"translation":"இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை உண்மைப்படுத்தினாரோ,"},{"id":7,"translation":"அவருக்கு சொர்க்கப் பாதையை நாம் இலகுவாக்குவோம்."},{"id":8,"translation":"ஆக, யார் கஞ்சத்தனம் செய்தாரோ, (அல்லாஹ்வின் அருளை விட்டுத் தன்னை) தேவையற்றவனாகக் கருதினாரோ,"},{"id":9,"translation":"இன்னும், (இஸ்லாம் எனும்) மிக அழகிய (மார்க்கத்)தை பொய்ப்பித்தாரோ,"},{"id":10,"translation":"அவருக்கு நரகத்தின் பாதையை இலகுவாக்குவோம்."},{"id":11,"translation":"அவர் (நரகத்தில்) விழும்போது, அவனுடைய செல்வம் அவனுக்குப் பலனளிக்காது (-அவனை விட்டும் அல்லாஹ்வின் தண்டனையை தடுக்காது)."},{"id":12,"translation":"நிச்சயமாக (நன்மையை, தீமையை பிரித்தறிவித்து) வழிகாட்டுதல் நம்மீது கடமை ஆகும்."},{"id":13,"translation":"நிச்சயமாக மறுவுலக வாழ்க்கையும் இந்த உலக வாழ்க்கையும் நமக்கே உரியது!"},{"id":14,"translation":"ஆக, கொழுந்துவிட்டெரிகிற நெருப்பை உங்களுக்கு அச்சமூட்டி எச்சரித்தேன்."},{"id":15,"translation":"அதில் எரிய மாட்டான், பெரிய தீயவனைத் தவிர."},{"id":16,"translation":"அவன் (நம் மார்க்கத்தை) பொய்ப்பித்தான்; இன்னும், புறக்கணித்தான்."},{"id":17,"translation":"இன்னும், அல்லாஹ்வை அதிகம் அஞ்சுகிறவர் அதிலிருந்து தூரமாக்கப்படுவார்."},{"id":18,"translation":"அவர் மனத்தூய்மையை (அல்லாஹ்விடம் நன்மையை) நாடியவராக தன் செல்வத்தை (தர்மம்) கொடுக்கிறார்."},{"id":19,"translation":"யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது."},{"id":20,"translation":"எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார்."},{"id":21,"translation":"இன்னும், (அல்லாஹ்வின் வெகுமதியால்) திட்டமாக அவர் திருப்தியடைவார்."}]},{"id":93,"verses":[{"id":1,"translation":"இரவின் மீது சத்தியமாக, அது மூடும்போது!"},{"id":2,"translation":"இரவின் மீது சத்தியமாக! அது இருள் சூழ்ந்து நிசப்தமாகும்போது,"},{"id":3,"translation":"(நபியே!) உம் இறைவன் உம்மை விட்டுவிடவில்லை. இன்னும், அவன் (உம்மை) வெறுக்கவில்லை."},{"id":4,"translation":"இந்த உலக வாழ்க்கையை விட மறுமை வாழ்க்கைதான் உமக்கு மிகச் சிறந்தது."},{"id":5,"translation":"திட்டமாக, உம் இறைவன் (தன் அருளை) உமக்குக் கொடுப்பான். ஆக, நீர் திருப்தியடைவீர்."},{"id":6,"translation":"உம்மை அனாதையாக அவன் காணவில்லையா? ஆக, (உம்மை) அவன் ஆதரித்தான் (-உமக்கு அடைக்கலம் கொடுத்தான்)."},{"id":7,"translation":"இன்னும், அவன் உம்மை வழி அறியாதவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) நேர்வழி செலுத்தினான்."},{"id":8,"translation":"இன்னும், அவன் உம்மை வறியவராகக் கண்டான். ஆக, அவன் (உம்மை) செல்வந்தராக்கினான்."},{"id":9,"translation":"ஆக, அனாதைக்கு அநீதி செய்யாதீர்!"},{"id":10,"translation":"ஆக, யாசகரைக் கடிந்து கொள்ளாதீர்!"},{"id":11,"translation":"ஆக, உம் இறைவனின் அருளை (பிறமக்களுக்கு) அறிவிப்பீராக!"}]},{"id":94,"verses":[{"id":1,"translation":"(முற்)பகல் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"இன்னும், உம் சுமையை உம்மை விட்டு அகற்றினோம்."},{"id":3,"translation":"அது, உம் முதுகை முறித்தது."},{"id":4,"translation":"இன்னும், உமது நினைவை (உமது நற்பெயரை, உமது சிறப்பை) உமக்கு உயர்த்தினோம்."},{"id":5,"translation":"ஆக, நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது."},{"id":6,"translation":"நிச்சயமாக சிரமத்துடன் இலகு இருக்கிறது."},{"id":7,"translation":"ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!"},{"id":8,"translation":"இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!"}]},{"id":95,"verses":[{"id":1,"translation":"(நபியே!) உம் நெஞ்சத்தை உமக்கு நாம் விரிவாக்கவில்லையா?"},{"id":2,"translation":"சினாய் மலை மீது சத்தியமாக!"},{"id":3,"translation":"அபயமளிக்கக்கூடிய இந்த நகரத்தின் மீது சத்தியமாக!"},{"id":4,"translation":"திட்டவட்டமாக, மனிதனை மிக அழகிய அமைப்பில் படைத்தோம்."},{"id":5,"translation":"பிறகு, தாழ்ந்தோரில் மிகத் தாழ்ந்தவனாக (முற்றிலும் பலவீனம் ஏற்படுகிற தள்ளாடும் வயதிற்கு) அவனைத் திருப்பினோம்."},{"id":6,"translation":"எனினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு நற்செயல்களைச் செய்தார்களோ (அவர்கள் தள்ளாடும் வயதை அடைந்து நல்லமல் செய்ய முடியாமல் ஆகிவிட்டாலும்) அவர்களுக்கு முடிவுறாத (கணக்கற்ற, குறையாத) நன்மை உண்டு."},{"id":7,"translation":"ஆக, இ(த்தனை சான்றுகளை விவரித்த)தற்குப் பின்னர், (அடியார்களின் அமல்களை அல்லாஹ் விசாரிப்பதில், இன்னும் அவர்களுக்கு) கூலி கொடுப்பதில் உம்மை யார் பொய்ப்பிப்பார்?"},{"id":8,"translation":"தீர்ப்பளிப்பவர்களில் மிக மேலான தீர்ப்பளிப்பவனாக அல்லாஹ் இல்லையா?"}]},{"id":96,"verses":[{"id":1,"translation":"அத்தி மரத்தின் மீது சத்தியமாக! ஆலிவ் மரத்தின் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"அவன் மனிதர்களை (கற்பப் பையில்) ஒட்டியிருக்கும் இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்."},{"id":3,"translation":"படிப்பீராக! இன்னும், உம் இறைவன் பெரும் கண்ணியவான் (பெரும் கொடையாளன்) ஆவான்."},{"id":4,"translation":"அவன் எழுதுகோல் மூலம் (எழுதுவதைக்) கற்பித்தான்."},{"id":5,"translation":"மனிதன் அறியாமல் இருந்ததை அவன் மனிதனுக்குக் கற்பித்தான்."},{"id":6,"translation":"அவ்வாறல்ல! நிச்சயமாக மனிதன் (நிராகரிப்பிலும் பாவத்திலும்) எல்லை மீறுகிறான்,"},{"id":7,"translation":"(காரணம், இறையருளை விட்டுத்) தன்னைத் தேவையற்றவனாக எண்ணியதால்."},{"id":8,"translation":"நிச்சயமாக மீட்சி உம் இறைவன் பக்கம்தான் இருக்கிறது."},{"id":9,"translation":"(நபியே!) தடுப்பவனைப் பற்றி அறிவிப்பீராக!"},{"id":10,"translation":"ஓர் அடியாரை அவர் தொழும்போது அவன் தடுக்கிறான்?"},{"id":11,"translation":"நீர் அறிவிப்பீராக! அவர் நேர்வழியில் இருந்தாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?"},{"id":12,"translation":"அல்லது, அவர் நன்மையை ஏவினாலுமா (அவன் அவரைத் தடுப்பான்)?"},{"id":13,"translation":"நீர் அறிவிப்பீராக! அவன் பொய்ப்பித்தால், இன்னும் புறக்கணித்தால்,"},{"id":14,"translation":"நிச்சயமாக அல்லாஹ் (அவனைப்) பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?"},{"id":15,"translation":"அவ்வாறல்ல! (அவன் தனது தீய செயல்களிலிருந்து) விலகவில்லையெனில் நெற்றி முடியைக் கடுமையாகப் பிடிப்போம். (பின்னர், அவனை நரகத்தில் வீசி எறிவோம்)."},{"id":16,"translation":"பொய் கூறுகின்ற, குற்றம் புரிகின்ற (அவனுடைய) நெற்றி முடியை (பிடித்து நரகத்தில் எறிவோம்)."},{"id":17,"translation":"ஆக, அவன் தன் சபையோரை அழைக்கட்டும்."},{"id":18,"translation":"நரகத்தின் காவலாளிகளை நாம் அழைப்போம்."},{"id":19,"translation":"அவ்வாறல்ல! அவனுக்குக் கீழ்ப்படியாதீர்! (உம் இறைவனுக்குச்) சிரம் பணிவீராக! (வணக்க வழிபாடுகள் மூலம் அவன் பக்கம்) நெருங்குவீராக!"}]},{"id":97,"verses":[{"id":1,"translation":"(நபியே! இப்பிரபஞ்சத்தை) படைத்த உம் இறைவனின் பெயரால் படிப்பீராக!"},{"id":2,"translation":"(நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":3,"translation":"‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது."},{"id":4,"translation":"அதில் வானவர்களும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு (அந்த ஆண்டுக்குரிய அல்லாஹ்வின்) எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள்."},{"id":5,"translation":"ஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது)."}]},{"id":98,"verses":[{"id":1,"translation":"நிச்சயமாக நாம் இதை ‘கத்ர்’ இரவில் இறக்கினோம்."},{"id":2,"translation":"(அந்தச் சான்று) பரிசுத்தமான ஏடுகளை ஓதுகின்ற அல்லாஹ்விடமிருந்து (அனுப்பப்பட்டுள்ள முஹம்மத் எனும்) தூதர் ஆவார்."},{"id":3,"translation":"அவற்றில் (-அந்த வேத ஏடுகளில்) நேரான (சரியான, நீதியான) சட்டங்கள் உள்ளன."},{"id":4,"translation":"வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களிடம் தெளிவான சான்று வந்த பின்னர் தவிர (நபியைப் பின்பற்றுவோம் என்ற தங்கள் கொள்கையிலிருந்து) பிரியவில்லை."},{"id":5,"translation":"அவர்கள் வழிபாட்டை அவனுக்கு மட்டும் தூய்மைப்படுத்தியவர்களாக, இணைவைப்பை விட்டு விலகியவர்களாக இருக்கும் நிலையில் அல்லாஹ்வை வணங்குவதற்கும், தொழுகையை நிலைநிறுத்துவதற்கும் ஸகாத்தைக் கொடுப்பதற்கும் தவிர ஏவப்படவில்லை. இன்னும், இதுதான் நேரான (நீதியான, சரியான சட்டங்களுடைய) மார்க்கமாகும்."},{"id":6,"translation":"நிச்சயமாக வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்போர் ஆகிய நிராகரிப்பாளர்கள் ஜஹன்னம் எனும் நரக நெருப்பில் - அதில் நிரந்தரமானவர்களாக இருப்பார்கள். இவர்கள்தான் படைப்புகளில் மகா தீயோர் ஆவார்கள்."},{"id":7,"translation":"நிச்சயமாக எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களை செய்தார்களோ அவர்கள்தான் படைப்புகளில் மிகச் சிறந்தோர் ஆவார்கள்."},{"id":8,"translation":"அவர்களுடைய கூலி அவர்களின் இறைவனிடம் அத்ன் எனும் சொர்க்கங்களாகும். அவற்றின் கீழே நதிகள் ஓடுகின்றன. அவற்றில் எப்போதும் நிரந்தரமானவர்களாக அவர்கள் இருப்பார்கள். அல்லாஹ், அவர்களைப் பற்றி திருப்தி அடைவான். அவர்களும் அவனைப் பற்றி திருப்தி அடைவார்கள். இது, தன் இறைவனைப் பயந்தவருக்கு (கிடைக்கும் நற்பாக்கியமாகும்)."}]},{"id":99,"verses":[{"id":1,"translation":"வேதக்காரர்கள்; இன்னும், இணைவைப்பவர்கள் ஆகிய நிராகரிப்பாளர்கள் தங்களிடம் தெளிவான அத்தாட்சி வருகின்ற வரை (இறைவனின் தூதர் வந்தால், அவரைப் பின்பற்றுவோம் என்ற கொள்கையிலிருந்து) விலகியவர்களாக இருக்கவில்லை."},{"id":2,"translation":"இன்னும், அந்த பூமி அதன் சுமைகளை எறிந்துவிடும்போது,"},{"id":3,"translation":"இன்னும், மனிதன் இதற்கென்ன நேர்ந்தது எனக் கூறுவான்."},{"id":4,"translation":"அந்நாளில் அ(ந்த பூமியான)து தனது செய்திகளை அறிவிக்கும்."},{"id":5,"translation":"அதாவது, உம் இறைவன் அதற்கு (இவ்வாறு) கட்டளையிட்டான் என்று."},{"id":6,"translation":"அந்நாளில் மக்கள் பல பிரிவுகளாக பிரிந்து புறப்பட்டு வருவார்கள். அவர்களின் செயல்களை அவர்கள் காண்பிக்கப்படுவதற்காக."},{"id":7,"translation":"ஆக, யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) நன்மை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்."},{"id":8,"translation":"இன்னும், யார் ஓர் அணுவளவு (ஒரு சிறிய எறும்பின் அளவு) தீமை செய்வாரோ, அவர் (அங்கு) அதைப் பார்ப்பார்."}]},{"id":100,"verses":[{"id":1,"translation":"பூமி அதன் நிலநடுக்கத்தால் கடுமையாக குலுக்கப்படும்போது,"},{"id":2,"translation":"இன்னும், (விரைந்து ஓடும்போது தமது லாடங்களால்) தீப்பொறிகளை மூட்டுகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,"},{"id":3,"translation":"இன்னும், அதிகாலையில் (எதிரிகள் மீது) பாய்ந்து தாக்குகின்ற குதிரைகள் மீது சத்தியமாக,"},{"id":4,"translation":"ஆக, அவை அதி(காலையி)ல் புழுதியைக் கிளப்பின."},{"id":5,"translation":"ஆக, அதி(காலையி)ல் (எதிரிகளின்) கூட்டத்திற்கு நடுவில் நுழைந்தன."},{"id":6,"translation":"நிச்சயமாக மனிதன் தன் இறைவனுக்கு நன்றி கெட்டவன் ஆவான்."},{"id":7,"translation":"இன்னும், நிச்சயமாக அவன் அதற்கு சாட்சியாக இருக்கிறான்."},{"id":8,"translation":"நிச்சயமாக அவன் செல்வத்தை நேசிப்பதில் கடினமானவன் ஆவான்."},{"id":9,"translation":"புதைகுழிகளில் உள்ளவர்கள் எழுப்பப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?"},{"id":10,"translation":"இன்னும், நெஞ்சங்களில் உள்ளவை பிரித்தறியப்படும்போது (தன் நிலைமை என்னவாகும் என்பதை மனிதன்) அறியவேண்டாமா?"},{"id":11,"translation":"நிச்சயமாக அவர்களுடைய இறைவன் அந்நாளில் அவர்களை ஆழ்ந்தறிபவன் ஆவான்."}]},{"id":101,"verses":[{"id":1,"translation":"மூச்சிரைக்க அதிவேகமாக ஓடும் குதிரைகள் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"எது திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது?"},{"id":3,"translation":"(நபியே!) திடுக்கத்தில் ஆழ்த்தக்கூடியது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":4,"translation":"அந்நாளில் மக்கள் பரப்பப்பட்ட ஈசல்களைப் போன்று இருப்பார்கள்."},{"id":5,"translation":"இன்னும், (அந்நாளில்) மிகவும் மென்மையாக்கப்பட்ட (காற்றில்) பரப்பப்பட்ட கம்பளி ரோமத்தைப் போல் மலைகள் ஆகிவிடும்."},{"id":6,"translation":"ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் கனத்தனவோ,"},{"id":7,"translation":"அவர் திருப்தியான (சொர்க்க) வாழ்க்கையில் இருப்பார்."},{"id":8,"translation":"ஆக, யாருடைய (நன்மைகளின்) நிறுவைகள் இலேசாகி விட்டனவோ,"},{"id":9,"translation":"அவருடைய தங்குமிடம் ஹாவியா எனும் நரகம்தான்."},{"id":10,"translation":"(நபியே!) அது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?"},{"id":11,"translation":"(அது) கடுமையான உஷ்ணமுடைய நெருப்பாகும்."}]},{"id":102,"verses":[{"id":1,"translation":"(உள்ளங்களை) திடுக்கத்தில் ஆழ்த்தக் கூடியது."},{"id":2,"translation":"இறுதியாக, நீங்கள் புதைகுழிகளைச் சந்தித்துவிட்டீர்கள்."},{"id":3,"translation":"அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்."},{"id":4,"translation":"பிறகு, அவ்வாறல்ல! விரைவில் (உங்கள் முடிவை) அறிவீர்கள்."},{"id":5,"translation":"அவ்வாறல்ல! நீங்கள் (மறுமையை) மிக உறுதியாக அறிந்தால், (அதற்கான தயாரிப்பை மறக்க மாட்டீர்கள்)."},{"id":6,"translation":"நிச்சயமாக ஜஹீம் நரகத்தைப் பார்ப்பீர்கள்."},{"id":7,"translation":"பிறகு, நிச்சயமாக அதைக் கண்கூடாகப் பார்ப்பீர்கள்."},{"id":8,"translation":"பிறகு, அந்நாளில் (இறை) அருட்கொடையைப் பற்றி நிச்சயமாக விசாரிக்கப்படுவீர்கள்."}]},{"id":103,"verses":[{"id":1,"translation":"(செல்வம், சொத்து, பதவியில்) அதிகத்தைக் கொண்டு பெருமையடித்தல் (இன்னும், அவற்றை அடைவதில் போட்டிப்போடுவது அல்லாஹ்வை வணங்குவதை விட்டும் மறுமையை விட்டும்) உங்களை ஈடுபடுத்தியது."},{"id":2,"translation":"நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில்தான் இருக்கிறான்."},{"id":3,"translation":"எவர்கள் நம்பிக்கைக் கொண்டு; நற்செயல்களைச் செய்து; உண்மையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டு, இன்னும் பொறுமையை (தங்களுக்குள்) உபதேசித்துக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. (அவர்கள் நஷ்டவாளிகள் இல்லை.)"}]},{"id":104,"verses":[{"id":1,"translation":"காலத்தின் மீது சத்தியமாக!"},{"id":2,"translation":"எவன் செல்வத்தைச் சேகரித்து, அதை எண்ணி எண்ணிப் பார்த்தானோ,"},{"id":3,"translation":"“நிச்சயமாக தன் செல்வம் தன்னை (உலகத்தில்) நிரந்தரமாக்கும்” என அவன் கருதுகிறான்."},{"id":4,"translation":"அவ்வாறல்ல! நிச்சயமாக அவன் ஹுதமா நரகத்தில் எறியப்படுவான்."},{"id":5,"translation":"(நபியே!) ஹுதமா என்றால் என்னவென்று உமக்கு எது அறிவித்தது?"},{"id":6,"translation":"அதுதான் அல்லாஹ்வுடைய (கட்டளையால்) எரிக்கப்பட்ட நெருப்பாகும்."},{"id":7,"translation":"அது (உடல்களில் பட்டவுடன்) உள்ளங்களில் எட்டிப் பார்க்கும்."},{"id":8,"translation":"நிச்சயமாக அ(ந்த நரகமான)து அவர்கள் மீது மூடப்பட்டுவிடும். (அதிலிருந்து அவர்கள் வெளியேறவே முடியாது.)"},{"id":9,"translation":"உயரமான தூண்களில் (அவர்கள் கட்டப்படுவார்கள்)."}]},{"id":105,"verses":[{"id":1,"translation":"புறம் பேசுபவர், குறை கூறுபவர் எல்லோருக்கும் கேடுதான்."},{"id":2,"translation":"அவர்களுடைய சூழ்ச்சியை (அவன்) வீணாக ஆக்கவில்லையா?"},{"id":3,"translation":"இன்னும், அவர்கள் மீது பறவைகளை பல கூட்டங்களாக அனுப்பினான்."},{"id":4,"translation":"அவர்களை சுடப்பட்ட களிமண்ணின் கல்லைக் கொண்டு அவை எறிந்தன."},{"id":5,"translation":"ஆக, திண்ணப்படும் வைக்கோலைப் போன்று உமது இறைவன் அவர்களை ஆக்கினான்."}]},{"id":106,"verses":[{"id":1,"translation":"(நபியே!) யானைப் படைகளுடன் உமது இறைவன் எப்படி நடந்து கொண்டான் என்பதை நீர் பார்க்கவில்லையா?"},{"id":2,"translation":"குளிர்காலப் பயணத்தையும், கோடைகாலப் பயணத்தையும் பழக்கப்படுத்திக் கொண்(டு அல்லாஹ்வை வணங்குவதை விட்டுவிட்)டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!"},{"id":3,"translation":"ஆக, இந்த கஅபாவின் அதிபதியை அவர்கள் வணங்கவும்."},{"id":4,"translation":"அவன் (அவர்களை) பசியிலிருந்து பாதுகாத்து அவர்களுக்கு உணவளித்தான். இன்னும், (எதிரிகளின்) பயத்திலிருந்து அவர்களை பாதுகாத்தான்."}]},{"id":107,"verses":[{"id":1,"translation":"குறைஷிகள் பழக்கப்படுத்திக் கொண்டதைப் பார்த்து ஆச்சரியப்படுங்கள்!"},{"id":2,"translation":"ஆக, அவன் அனாதையை விரட்டுகிறான். (அனாதைக்கு அநீதி இழைக்கிறான்.)"},{"id":3,"translation":"இன்னும், ஏழைக்கு உணவளிக்க (பிறரைத்) தூண்ட மாட்டான்."},{"id":4,"translation":"ஆக, அந்த தொழுகையாளிகளுக்குக் கேடுதான்,"},{"id":5,"translation":"அவர்கள் தங்கள் தொழுகையை (அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதை) விட்டு மறந்தவர்களாக இருக்கிறார்கள்."},{"id":6,"translation":"அவர்கள் (நற்காரியங்களை) பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்."},{"id":7,"translation":"இன்னும், அற்ப பொருளை(யும் பிறருக்கு தானமாக அல்லது இரவலாகக் கொடுக்காது) தடுக்கிறார்கள்."}]},{"id":108,"verses":[{"id":1,"translation":"(நபியே! மறுமையில்) கூலி கொடுக்கப்படுவதை பொய்ப்பிப்பவனைப் பார்த்தீரா?"},{"id":2,"translation":"ஆகவே, உம் இறைவனுக்காகத் தொழுவீராக. இன்னும், (அவனுக்காகவே) அறுத்துப் பலியிடுவீராக!"},{"id":3,"translation":"நிச்சயமாக உம் பகைவன்தான் நன்மையற்றவன் (-சந்ததியற்றவன்)."}]},{"id":109,"verses":[{"id":1,"translation":"(நபியே!) நிச்சயமாக நாம் (சொர்க்கத்தின் நதியாகிய) ‘கவ்ஸர்’ஐ உமக்குக் கொடுத்தோம்."},{"id":2,"translation":"நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன்."},{"id":3,"translation":"இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை."},{"id":4,"translation":"இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை."},{"id":5,"translation":"இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை."},{"id":6,"translation":"உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும்."}]},{"id":110,"verses":[{"id":1,"translation":"(நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!"},{"id":2,"translation":"இன்னும், மக்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்த்தால்,"},{"id":3,"translation":"ஆக, உம் இறைவனின் புகழைத் துதித்து தூய்மைப்படுத்துவீராக! இன்னும், அவனிடம் மன்னிப்புக் கோருவீராக! நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளனாக, தவ்பாவை அங்கீகரிப்பவனாக இருக்கிறான்."}]},{"id":111,"verses":[{"id":1,"translation":"(நபியே!) அல்லாஹ்வுடைய உதவியும் வெற்றியும் வந்தால்,"},{"id":2,"translation":"அவனுடைய செல்வமும் அவன் சம்பாதித்ததும் அவனுக்குப் பலனளிக்கவில்லை. (அல்லாஹ்வின் தண்டனையை அவனை விட்டும் தடுக்கவில்லை.)"},{"id":3,"translation":"அவன் ஜுவாலையுடைய நெருப்பில் விரைவில் எரிவான்."},{"id":4,"translation":"இன்னும், (விறகு) சுள்ளிகளைச் சுமப்பவளான அவனுடைய மனைவியும் (நரக நெருப்பில் எரிவாள்)."},{"id":5,"translation":"அவளுடைய கழுத்தில் ஈச்சம் பாளையின் கயிறுதான் இருக்கும்."}]},{"id":112,"verses":[{"id":1,"translation":"அபூ லஹபின் இரு கரங்கள் அழியட்டும். இன்னும், அவனும் அழியட்டும்."},{"id":2,"translation":"அல்லாஹ்தான் நிறைவான தலைவன் (-எல்லா உயர் தகுதிகளையும் உடையவன், எக்குறையுமற்றவன், எல்லாப் படைப்புகளின் தேவைகளையும் நிறைவேற்றுகிறவன், எத்தேவையுமற்றவன், உண்மையானவன், நிறைவானவன்)."},{"id":3,"translation":"(அவன் யாரையும்) பெற்றெடுக்கவில்லை. இன்னும், அவன் (யாராலும்) பெற்றெடுக்கப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்கு குழந்தையுமில்லை, தந்தையுமில்லை.)"},{"id":4,"translation":"இன்னும், அவனுக்கு நிகராக ஒருவருமில்லை."}]},{"id":113,"verses":[{"id":1,"translation":"(நபியே!) கூறுவீராக! (வணங்கத் தகுதியான இறைவனாகிய) அல்லாஹ் ஒருவன்தான்."},{"id":2,"translation":"அவன் படைத்தவற்றின் தீங்கைவிட்டும்."},{"id":3,"translation":"இன்னும், காரிருள் படரும்போது இரவின் தீங்கை விட்டும்,"},{"id":4,"translation":"இன்னும், முடிச்சுகளில் ஊதுகிற சூனியக்காரிகளின் தீங்கை விட்டும்,"},{"id":5,"translation":"பொறாமைக்காரன் பொறாமைப்படும்போது, (அந்த) பொறாமைக்காரனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்)."}]},{"id":114,"verses":[{"id":1,"translation":"(நபியே!) கூறுவீராக! அதிகாலையின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்,"},{"id":2,"translation":"மக்களின் அரசன்,"},{"id":3,"translation":"மக்களின் வணக்கத்திற்குரியவன்,"},{"id":4,"translation":"வீணான மனக்குழப்பங்களை, சந்தேகங்களை ஏற்படுத்தக்கூடியவன், (அல்லாஹ்வின் பெயரைக் கூறும்போது) மறைந்துவிடக் கூடியவனின் தீங்கை விட்டும் (பாதுகாப்புத் தேடுகிறேன்)."},{"id":5,"translation":"அவன் மக்களுடைய நெஞ்சங்களில் வீண் எண்ணங்களை ஏற்படுத்துகிறான்."},{"id":6,"translation":"(குழப்பங்களை ஏற்படுத்துகிற அவன்) ஜின் இனத்திலும் இருக்கிறான். இன்னும், மனித இனத்திலும் இருக்கிறான்."}]}]
